Breaking
April 26, 2025

மாஸ்டர் சித்தார்த் பன்னீர் ஐந்து மொழிகளில் பாடி, ஆடி நடித்த ‘மிஸ் மேல கிரஷ் ‘ வீடியோ ஆல்பம் வெளியீடு

நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், திரு. கடம்பூர் ராஜா, திரு. ரத்தினம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு. கருப்பையா பன்னீர்செல்வம் வரவேற்றார்.

இயக்குநர் – இசையமைப்பாளர் அஸ்வமித்ரா பேசுகையில், ” மாஸ்டர் சித்தார்த்தை முதலில் வேறு ஒரு பாடலுக்காக தான் அணுகினேன். பெப்பியான அந்த பாடலை பாட மாட்டேன் என சொல்லி விட்டார். அதன் பிறகு ஒரு பாடலை உருவாக்கி கொண்டிருந்தபோது என் பின்னால் நின்று கொண்டு ஒரு பாடலை ‘ஹம்’ செய்தான். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக பாடுகிறாயா? என கேட்டேன். சொல்லிக் கொடுத்தால் பாடுவேன் என்றான் நம்பிக்கையுடன். அதன் பிறகு தான் இந்த பாடலை உருவாக்கினோம். சித்தார்த் திறமைசாலி. எதை சொல்லிக் கொடுத்தாலும் அதனை உடனடியாக கற்றுக் கொண்டு விடுவான். அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரே இந்த பாடலை பாடியிருக்கிறார்.
இந்த வீடியோ ஆல்பத்தை தொடர்ந்து மூன்று பாடல்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதில் சிலம்பம் தொடர்பான பாடலும் உண்டு. சிலம்ப வித்தையில் மாஸ்டர் சித்தார்த் நேஷனல் சாம்பியன். அவர் சிலம்பத்தில் தேசிய விருதினை வென்றவுடன் அது தொடர்பான பாடலையும் உருவாக்கி இருக்கிறோம். அந்தப் பாடலும் விரைவில் வெளியாகும்.‌ இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், இந்த வீடியோ ஆல்பத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் – நடிகர் தம்பி ராமையா பேசுகையில், ” எம் மண்ணின் மைந்தன் சித்தார்த்திற்கு வாழ்த்துகள். புதுக்கோட்டை என்பது கலைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் சிறந்த மண்.‌ தமிழ் திரை உலகத்திற்கு இரண்டு சூப்பர் ஸ்டார்களை கொடுத்தது இந்த மண். இந்நிகழ்வில் நான் தாய் மாமன் எனும் உறவினையும், அதன் மேன்மையையும் காண்கிறேன். சத்யா கரிகாலன் ஆகிய சகோதர சகோதரிகளை பார்த்து வியக்கிறேன். அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் வீட்டிற்கு ஒரு முறை விஜயம் செய்த போது சித்தார்த்தை பார்த்தவுடன் மலைக்கள்ளன் எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் இருந்தது. வியந்தேன். சித்தார்த்தின் தாய் சத்யா அவர்கள் சித்தார்த்தை கைபிடித்து உயரத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்த குழந்தையை கொண்டாடுவதற்காக இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பூரின் அடையாளமாக திகழும் தொழிலதிபர் ஒருவரை சந்தித்து உரையாடிய போது, ‘குழந்தையை பெற்றெடுப்பது எளிது அதனை வளர்த்து ஆளாக்குவது என்பது தான் கடினம்’ என்றார். அந்த வகையில் சத்யா கரிகாலன் குழந்தையை நல்ல திறமைசாலியாக வளர்த்து ஆளாக்குகிறார். சித்தார்த் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

சரீரம், சாரீரம் என இரண்டு விசயங்கள் இருக்கிறது. உடலுக்கு மட்டும் ஊட்டச்சத்து போதாது. மனதிற்கும் ஊட்டச்சத்து வேண்டும். யார் ஒருவர் தனது உடலையும் , குரலையும் காதலிக்கிறார்களோ… அவர்கள் சாதனையாளர்கள். அவரை சமுதாயத்தால் சீரழிக்கவே இயலாது. அந்த வகையில் சித்தார்த் அற்புதமாக பாடுகிறார். அதிலும் ஐந்து மொழிகளில் பாடியிருக்கிறார். அவரிடம் ஞானம் இருக்கிறது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சித்தார்த் எதிர்காலத்தில் மிகப்பெரிய உயரத்தை தொடுவார் என வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் – அரசியல்வாதி கருணாஸ் பேசுகையில், ” இந்த வரலாற்று சிறப்புமிக்க அரங்கத்தில் ஆறு வயது மதிக்கத்தக்க குழந்தையின் பாடும் திறமையையும், நடனமாடும் திறமையையும் கண்டோம். அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் இந்த சித்தார்த்திடம் திறமை இருக்கிறது என்று முதலில் கண்டறிந்தவன் நான். இந்தப் பிள்ளையை நான் தான் முதன் முதலில் நடனமாட வைத்தேன். அந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும். அந்த பாடலும் அவனின் நடனமும் நிச்சயம் பேசப்படும்.‌ இவனுடைய மாஸ்டரை அவருடைய தாயாருக்கு அறிமுகப்படுத்தியதும் நான்தான். அந்த மாஸ்டரை ஒரு வீடியோ ஆல்பத்தில் நடன இயக்குநராக அறிமுகப்படுத்தியதும் நான்தான். அந்த வகையில் இந்த இடம் மிகவும் ராசியானது. அனைத்தும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இவருடைய திறமையை மேலும் வளர்த்து இறைவனின் ஆசியால் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

ரோபோ சங்கர் பேசுகையில், ” குழந்தை நட்சத்திரம் சித்தார்த்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேடையில் நடனம் ஆடும் போது ‘நானே மாஸ்டர்’ என சமயோசிதமாக பேசியது என்னை வியக்க வைத்தது. எனக்கும் சின்ன வயசுல மிஸ் மேல் கிரஷ் இருந்தது. அதனை இன்று வரை கண்ணியம் மிக்க மரியாதையுடன் தொடர்கிறேன்.
சின்ன வயதில் நான் நிறைய போட்டோக்களை வெட்டி, ஒட்டி நிறைய ஆல்பங்களை உருவாக்கி இருக்கிறேன். குழந்தைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ” என்றார்.

நடிகர்- இயக்குநர் போஸ் வெங்கட் பேசுகையில், ” சித்தார்த்தின் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். இவனுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரும் மிகுந்த திறமைசாலி. இருவருமே திறமை மிக்கவர்கள். சகோதரி சத்யா அவர்கள் குழந்தையின் நடனத்தை ஃபோனில் காண்பித்த போது சித்தார்த்தின் நடனத் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.‌ ஆனால் ஐந்து மொழிகளில் பாடி, அதனை ஒரு வீடியோ ஆல்பமாக வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனை சித்தார்த் நேர்த்தியாக செய்திருக்கிறார். சித்தார்த்தை விரைவில் நாம் நடிகராகவும் பார்ப்போம். அது இன்னும் அதிகமான நபர்களை ஆச்சரியப்படுத்தும் என நான் நம்புகிறேன். சித்தார்த்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன். மேலும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கதாநாயகனாக அவர் வருவார் என்றும் நான் உறுதியாக கூறுகிறேன். ” என்றார்.

இயக்குநர் இரா. சரவணன் பேசுகையில், ” சித்தார்த் ஆடி பாடி நடித்திருக்கும் இந்த ஆல்பத்தை நடிகர்கள் சசிகுமார் -சூரி- ஆகியோர் பார்த்தார்கள். இதில் சசிகுமார் – இந்த ஆல்பம் ஹிட் ஆவதற்கு முன்பே இவனிடம் கால்ஷிட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த அளவிற்கு அவருக்கு இந்த ஆல்பம் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி என்னிடம் இந்த ஆல்பத்தை பார்த்த பிறகு, ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த குழந்தையை பற்றி எனக்குத் தெரிந்திருந்தால் ‘மாமன்’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்திருப்பேன் என்றார். அந்த அளவிற்கு சித்தார்த்திடம் ஒரு எனர்ஜிடிக்கான டேலண்ட் இருக்கிறது. இந்த ஆல்பத்தை பார்த்தவுடன் சித்தார்த் மீது ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற பாச பிணைப்பு ஏற்படுகிறது.
நாமெல்லாம் இரு மொழி… மும்மொழி… என பேசிக் கொண்டிருக்கும்போது.. சித்தார்த் ஐந்து மொழியில் பாடி ஆடி அசத்தியிருக்கிறார். இதனால் சித்தார்த் புதுக்கோட்டை மண்ணிலிருந்து பாலிவுட் வரை உயர்வர் என உறுதியாக சொல்ல முடியும். இதற்கு இங்கு வருகை தந்திருக்கும் எல்லோரும் சித்தார்த்தை ஆசீர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் சற்குணம் பேசுகையில், ” ஒரு தேர்ந்த நடன கலைஞராகவும் பாடகராகவும் நடிகராகவும் சித்தார்த் இந்த ஆல்பத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் ஐந்து மொழியில் அவர் பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆல்பத்தில் நடனமாடி இருப்பதைவிட அதனை மேடையில் எந்தவித தவறும் இல்லாமல் ஆடுவது தான் தனி சிறப்பு. நடன கலைஞர்கள் நடனமாடும் போது அவர்களது முகத்தை உற்சாகம் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவது தான் தனித்துவம் என்பார்கள். அது சித்தார்த்திடம் இயல்பாகவே இருக்கிறது. சித்தார்த்தை தமிழ் சினிமா சார்பாக பாராட்டுகிறேன். தமிழ் சினிமாவின் உச்சம் தொட வாழ்த்துகிறேன்” என்றார்.

காயத்ரி ரகுராம் பேசுகையில், ” நடிகர் சிலம்பரசன் சின்ன வயதில் என்னுடன் தான் பாட்டு நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார். அத்துடன்
நடிப்பு ,சண்டை பயிற்சி, உடற்பயிற்சி, இசை கருவி வாசிப்பு ஆகியவற்றையும் கற்றுக் கொள்வார். அவர் சின்ன வயதில் கற்றுக்கொண்ட அனைத்து திறமையும் இந்த சித்தார்த்திடமும் இருப்பதை நான் பார்க்கிறேன். கமல் சாரும் இன்று அனைத்து துறையிலும் திறமை மிக்கவர். அந்த வரிசையில் அவர்களை தொடர்ந்து தனுஷ் -பிரசாந்த் – ஆகியோர்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வரிசையில் நான் சித்தார்த்தையும் பார்க்கிறேன். சித்தார்த்திற்கு கற்றுக் கொடுப்பதற்கு மாஸ்டர்கள் தயாராக இருந்தாலும்.. பெற்றோர்களின் ஊக்கமும் , ஆர்வமும் என்பது முக்கியம். அதனால் அவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த காமராஜர் அரங்க மேடையில் தான் நான், தொகுப்பாளினி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடனமாடி பிரபலமாகி இருக்கிறோம். அந்த அளவிற்கு இந்த மேடை ராசியானது. அந்த வகையில் சித்தார்த்தும் ஆண்டவனின் ஆசியுடன் பெரும் புகழை பெறுவார்” என்றார்.

Kauvery Hospital releases data on the Diabetes Prevalence in Chennai through a cross sectional study

  • 21% of study population with no prior history of Type 2 Diabetes were unaware of their abnormality in blood sugar levels

Chennai, April 16th 2025: – Kauvery Hospital Alwarpet, a unit of Kauvery Group of Hospitals a multispeciality healthcare chain in Tamil Nadu, has released key findings from a comprehensive study conducted across the Chennai population, shedding light on the urgent need for improved diabetes awareness and prevention strategies.

As part of its commitment to community health, the hospital launched the Diabetes on Wheels initiative in 2024, a cross-sectional screening study where a dedicated medical team conducted a free diabetes screening program across Chennai over 100 days. This program was carried out at various locations throughout the city, screening 3,971 individuals.  The initiative revealed critical gaps in early detection and identified significant risk factors (obesity, eating patterns) contributing to the rising prevalence of Type 2 Diabetes Mellitus (T2DM).

Key findings from the study include:

  • 21% of individuals with no prior history of Type 2 Diabetes were unaware of their abnormality in blood sugar levels (dysglycemia), indicating a substantial gap in early diagnosis and awareness.
  • 55.1% of women with a history of Gestational Diabetes Mellitus (GDM) (high blood sugar levels during pregnancy)  developed Type 2 Diabetes, highlighting the importance of post-pregnancy diabetes screening and preventive interventions.

3.4% of women had history of GDM (Gestational Diabetes Mellitus)

55.1% of women with GDM went on to develop T2DM (Type 2 Diabetes)

  • The prevalence of obesity is significantly higher in individuals with a history of Type 2 Diabetes, (67.6%) and in individuals who were not aware of their dysglycemia (64.7%) reinforcing the strong link between obesity and diabetes.

The prevalence of obesity is higher in individuals with a T2DM (Type 2 Diabetes) history and in individuals who were not aware of their dysglycemia

  • Carbohydrate intake was notably higher in individuals unaware of their dysglycemia 88.5%, suggesting that dietary habits play a crucial role in undiagnosed blood sugar irregularities.

Dr. Baraneedharan K, Senior Consultant Diabetologist at Kauvery Hospital, highlighted the purpose and significance of the study, stating, These findings emphasize the urgent need for proactive screening programs, lifestyle modifications, and public health initiatives to combat diabetes effectively. Furthermore, healthcare policies and government initiatives can play a crucial role in creating a more supportive environment for diabetes prevention and management, ensuring that resources reach the most vulnerable populations. I urge the public to begin prioritizing their health by spending 45 minutes everyday for physical exercise , follow mindful eating to prevent obesity and take care of mental well being . Regular screenings can also help detect non communicable diseases such as Diabetes, Hypertension, and heart diseases.”

“The prevalence of Diabetes has been increasing worldwide, and there are several factors that contribute to the same. As responsible healthcare providers, we not only focus on treating , but the prevention. Through regular screenings and awareness programs among the community, we aim to reduce the burden of Diabetes in the region. I appreciate Dr Baraneedharan and team for this initiative which will create a significant impact among the people,” said Dr Aravindan Selvaraj Co-Founder and Executive Director Kauvery Group of Hospitals.

Britannia 50-50 Brings Season 2 of 4th Umpire, Where Every Fan Gets to be the Umpire

~The interactive cricket prediction game returns with bigger rewards and a dedicated digital playground, 5050Cricket.in, where fans can play, predict, and win all season long~

TVC 1: https://www.youtube.com/watch?v=toyr2rMhY0s

TVC 2: https://www.youtube.com/watch?v=IQKLPy6JN0A

National, 15 April 2025: Cricket in India is more than just a sport, it’s a feeling that brings people together in every street, living room, and tea stall. From predicting what will happen next to debating umpiring decisions, every Indian sees themselves as an expert. Tapping into this passion, Britannia 5050 is back with Season 2 of its much-loved 5050 4th Umpire campaign. This time, the action moves to a brand-new digital home – 5050Cricket.in, an exciting platform where fans can enjoy cricket entertainment and put their instincts to the test.

Conceptualized by Schbang, the Britannia 5050 4th Umpire lets fans step into the shoes of an umpire, as they watch unique match situations and predict what happens next. Correct predictions unlock exciting rewards like match tickets, cashback and more. The campaign’s new TVCs bring this idea to life with a fun twist — showing everyday people making umpiring decisions in places like train compartments or even deciding who got the kite first in a neighbourhood squabble – because “Ab India Mein Har Koi Banega Umpire.” After all, in a country where everyone has an opinion on the game, the umpire isn’t just on the pitch, it’s in all of us.

Siddharth Gupta, General Manager, Marketing, Britannia, said: Cricket has always been an emotion in India, and every fan has an opinion, a prediction, a point of view. With Britannia 5050 4th Umpire, we’re giving fans the chance to be an umpire, asking them to predict the outcome of unique match situations. It’s our way of recognising the expert in every Indian and giving them a fun, interactive way to engage with the game they love. For us, it’s about creating moments of connection, joy, and playfulness that resonate long after the snack break is over.”

Umma Saini, CCO, Schbang said, “Anything can happen during the peak T20 season and while watching the match, we are all umpires! As are we often in life as people. We are quite engaged as a community and that’s part of our beauty. We brought a human insight, our love for cricket and the brand’s positioning, together with the digital insight of initiating second screen engagement during this cricket season – to bring alive the Britannia 5050 4th Umpire Digital Game and campaign. A Kite or a catch, ab India me har koi banega umpire.”

Steps to play the game:

  • Scan a Britannia 5050 pack
  • Play 4th Umpire – Watch the match scenarios, make your calls
  • Stand a chance to win match passes, cashback and more*

So grab your pack, trust your gut, and get ready to make the call because, with Britannia 5050, every fan gets to be the 4th Umpire.

MARRIOTT INTERNATIONAL SIGNS AGREEMENT WITH THE BALWA GROUP TO DEBUT LE MERIDIEN IN MUMBAI

Anticipated to debut in January 2029, Le Méridien Mumbai International Airport is set to be a hub for travellers to explore Mumbai in style

CHENNAI, 10th April 2025– Marriott International, Inc. announced a signed agreement with The Balwa Group to introduce Le Méridien Hotels & Resorts to Mumbai, a dynamic metropolis where tradition and modernity intertwine. To support the growing demand for premium hospitality accommodations, Le Méridien Mumbai International Airport will invite travelers to savor the moment and connect with Mumbai’s kaleidoscope of creativity, culture and dynamic culinary scene through the brand’s timeless perspective on modern travel. Located at a convenient two kilometers from the Mumbai International Airport, the hotel is anticipated to open in January 2029.

“Le Méridien has always inspired travelers to explore the world in style and savor the good life through the lens of its creative-minded spirit, and what better city to continue this journey than in the lively, ever-evolving city of Mumbai”, said Ranju Alex, Regional Vice President, South Asia, Marriott International. “The brand’s mid-century design, captivating spaces and chic, signature programming will offer a distinct stay experience to world travelers visiting the city. This signing marks a strategic step in expanding Marriott International’s lifestyle portfolio across the region, and we are excited to once again collaborate with The Balwa Group, ensuring delivery of the highest standards of hospitality, in line with our values.”

We are thrilled to continue our relationship with Marriott International through the signing of Le Méridien Mumbai International Airport said – Mr. Rafiq Balwa, Director and Vice President of The Balwa Group. This marks the third hotel collaboration between the two groups, following the success of Fairfield by Marriott Mumbai International Airport and the soon-to-open The Ballard – A Tribute Portfolio Hotel. This hotel will be a landmark in our portfolio – combining global design sensibilities with the cultural richness of Mumbai. Le Méridien, a brand known for unlocking the charm of each destination through curated experiences and timeless style, will bring a fresh perspective to Mumbai’s hospitality scene. As we continue to expand our hospitality footprint, we are committed to creating iconic destinations that offer exceptional experiences and reflect our unwavering passion for excellence.”

Anticipated to feature 161 contemporary guest rooms and suites, Le Méridien Mumbai International Airport will inspire travelers to explore Mumbai in style and enjoy experiences that enrichen and broaden horizons. Plans for the property include a specialty restaurant, a patisserie and the brand’s signature – Le Méridien Hub – a modern reinterpretation of the traditional hotel lobby that offers an array of opportunities for guests to gather, connect, and savor the moment, serving custom-brewed, barista-crafted coffee during the day and beverages in the evening at the signature Latitude/Longitude Bar.

Recreational facilities expect to feature a fitness center, an open-air swimming pool and a spa. Plans for the hotel also include a 1,357 sq meters of banquet space with expansive outdoor lawns and an open-air terrace, ideal for both large and intimate gatherings, as well as business meets.

Mobil 1™ and Red Bull bring the spirit of high-performance motorsports to the streets

  • Mobil 1™, the world’s leading synthetic engine oil brand, showcases its advanced lubrication technology—engineered to keep engines running like new—at Red Bull Moto Jam 2025 in Chennai

Chennai, April 12, 2025 – Mobil 1™ has partnered with Red Bull for Red Bull Moto Jam, one of India’s biggest motorsports festivals, taking place today at Island Grounds, Chennai. This first-of-its-kind event promises an immersive experience for fans, bringing the thrill of motorsports to life through exciting showcases, international athletes, and non-stop action on wheels.

Leading the lineup was Red Bull Athlete Abdo Feghali, a Lebanese rally champion and Guinness World Record holder for the longest drift. Known for his skill and precision, Feghali took centre stage in his BMW M4 and showcased the thrill of drifting at the Mobil 1 Drift Clinic. Designed especially for India’s drifting community, the clinic offered expert tips and hands-on training to help participants sharpen their skills and learn from one of the best in the sport.

For the past five decades, the Mobil 1brand has been at the forefront of engine protection for petrol-engine vehicles and more recently, hybrid and electric cars delivering unmatched quality and performance. Today, Mobil 1™ is the world’s leading synthetic engine oil brand with an unwavering commitment to innovation, collaboration and customers.

“Building on our global partnership with Red Bull Racing, it was a natural step to extend this collaboration to support the growing motorsports culture in India. We’re excited to be part of Red Bull Moto Jam and support the incredible athletes coming to the country. It’s a great opportunity to connect with Indian motorsports fans and highlight the cutting-edge technology behind our Mobil 1™ products,” said Charlene Pereira, Managing Director, ExxonMobil Lubricants Private Limited.

“Using the right engine oil makes a difference. We put our Mobil 1™ engine oils to the test—in the lab, on the road, and on the track— duplicating some of the toughest, most extreme real-world conditions. Our Mobil 1™ products are proven to keep your engine running like new,” she added.

At the event, racing enthusiasts got an opportunity to experience Mobil 1™ technology firsthand through interactive exhibits, product showcases, and on-ground engagements. They witnessed the thrill of motorsports and discovered how Mobil 1™ brought track-tested technology to everyday drives.

For more information, visit:

About ExxonMobil in India

ExxonMobil has been powering India’s growth for three decades.

The Company brought the first supplies of liquefied natural gas (LNG) to India in the early 2000s and is now a major LNG supplier to the country, helping to advance its transition to a gas-based economy.

ExxonMobil’s cutting-edge product solutions such as Mobil lubricants are driving productivity and energy efficiency in India’s automotive and industrial sectors, helping individual consumers and businesses achieve more with less. The Company’s chemical products are enabling Indian manufacturers to make high-quality products and deliver sustainability benefits across sectors including food processing, consumer durables, agriculture, water treatment, pharmaceuticals, and construction.

ExxonMobil’s business and technology centers in Bengaluru provide critical support to the Company’s global operations. The technology centers help develop strategies to reduce global emissions and collaborate with homegrown manufacturers to enhance the global competitiveness of made-in-India products.

To learn more about ExxonMobil lubricants in India, visit https://www.mobil.co.in/en-in.

நடிகர் சூரியின் “மாமன்” திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி வெளியாகிறது !!

Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சூரி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் லப்பர் பந்து புகழ் ஸ்வஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், திருச்சி பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்குகிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து, இயக்கம் – பிரசாந்த் பாண்டியராஜ்
தயாரிப்பு – K குமார்
தயாரிப்பு நிறுவனம் – Lark Studios
இசை – ஹேசம் அப்துல் வஹாப்
ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்
கலை இயக்கம் – G துரை ராஜ்
படத்தொகுப்பு – கணேஷ் சிவா
சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

மூன்றாவது ஆண்டை நிறைவு செய்த கேஜிஎஃப் சேப்டர் 2 !!

இன்று கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாள். இந்த திரைப்படம் வெளியான போது, மிகப்பெரிய சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், இந்திய ஆக்‌ஷன் சினிமாவின் வரலாற்றைவே மாற்றியது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம் அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க, மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்தார்.

மிக அழுத்தமான கதையுடன், உலகத் தரமான ஆக்‌ஷன் காட்சிகள், கண்ணுக்கு விருந்து படைக்கும் காட்சி அமைப்புகள் என — கேஜிஎஃப் சேப்டர் 2 இந்திய சினிமாவில் ஒரு கலாச்சார வெற்றியாக மாறியது. ரவி பஸ்ரூர் இசையமைத்த பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்து வருகின்றன.

சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்த இந்த படம், மொழிகளை கடந்து இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் புவன் கவுடா, படம் முழுவதிலும் எமோஷன் மற்றும் ஆக்சன் விஸ்வரூபத்துக்கு இடையே ஒரு சமநிலையை படம்பிடித்திருந்தார். கலை இயக்குநர் சிவகுமார் ஜி, கேஜிஎஃப் உலகத்தை தத்ரூபமாக உருவாக்குதில் முக்கிய பங்கு வகித்தார்.

இன்றும் உலகம் முழுவதும் ரசிகர்கள் கேஜிஎஃப் உலகை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள், கேஜிஎஃப் சேப்டர் 3- மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. ராக்கி பாயின் வரலாறு தொடர… அடுத்த அத்தியாயத்திற்காக உலகம் காத்திருக்கிறது.

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘மைனே பியார் கியா’

அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்கும் ‘மைனே பியார் கியா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி ,மிதுன், அர்ஜு , ஜெகதீஷ், முஸ்தபா மற்றும் ஜெரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மந்தாகினி’ எனும் படத்தை தொடர்ந்து ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.

‘முரா’ எனும் வெற்றி படத்தினை தொடர்ந்து நடிகர் ஹிர்து ஹாரூன் ‘மைனே பியார் கியா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஸ்டார்’ எனும் தமிழ் படத்திலும், ‘ஆசை கூடை’ எனும் சூப்பர் ஹிட்டான வீடியோ ஆல்பத்திலும் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் வெட்டியார், ரெடின் கிங்ஸ்லி, பாபின் பெரும்பில்லி, திரி கண்ணன், மைம் கோபி, குத்து சண்டை வீரர் தீனா, ஜனார்த்தனன் , ஜெகதீஷ், ஜிவி ரேக்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் பைசல், பில்கெஃப்சல் என்பருடன் இணைந்து எழுதி இருக்கிறார். இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.

டான் பால். பி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எலக்ட்ரானிக் கிளி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கண்ணன் மோகன் கவனிக்க , கலை இயக்கத்தை சுனில் குமரன் மேற்கொண்டிருக்கிறார். எஸ்கியூடிவ் புரொடியூசராக பினு நாயர் – புரொடக்ஷன் கண்ட்ரோலராக சிஹாப் வெண்ணிலா ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

அருண் விஜய்யின் “ரெட்ட தல” படத்தில் பாடல் பாடிய தனுஷ்

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், “ரெட்ட தல” படத்திற்காக முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் ஒரு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

முன்னதாக நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க, இருவர் கூட்டணியில் உருவாகும் “இட்லி கடை” படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் ரெட்ட தல படத்தில் இணைந்துள்ளது, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழித்தியுள்ளது.

இசையமைப்பாளர் சாம் CS இசையில் உருவாகியுள்ள இந்த அழகான பாடலை தனுஷ் பாடியுள்ளார். இப்பாடலுக்கான படப்பிடிப்பு படக்குழு வெளிநாட்டில் பல இடங்களில் மிகபிரம்மாண்டமாக படமாக்கியுள்ளனர். விரைவில் இப்பாடல் லிரிகல் வீடியோ வடிவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் எந்த வித ஈகோவும் இல்லாமல், இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.
தமிழ் திரையுலகில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M. மனோஜ் பெனோ, தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று திரைப்படங்களின் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு நிறுவனம் – BTG Universal
தயாரிப்பாளர் – பாபி பாலசந்திரன்
தலைமை நிர்வாக இயக்குனர் – டாக்டர் M. மனோஜ் பெனோ
இயக்கம் – கிரிஷ் திருக்குமரன்
இசை – சாம் CS
ஒளிப்பதிவு – டிஜோ டாமி
எடிட்டர் – ஆண்டனி
ஸ்டண்ட் – PC ஸ்டண்ட்ஸ்
கலை இயக்கம் – அருண்சங்கர் துரை
உடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர்
பப்ளிசிட்டி டிசைனிங் – பிரதூல் NT
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)

Production banner: BTG Universal
Producer: Bobby Balachandran
Head of strategy: Dr. M. Manoj Beno
Director: Kirish Thirukumaran
Music Director: Sam CS
Cinematographer: Tijo Tommy
Editor: Antony
Stunts: PC Stunts
Art Director: Arunshankar Durai
Costume Designer: Kiruthika Sekar
Publicity Designer: Prathool NT
PRO: Sathish, Siva (AIM)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் 09.04. 2025 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை பற்றி மீண்டும் அவதூறாக பேசியுள்ளார் அது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக தாய் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்க வேண்டியும் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாகவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக நிற்கும்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது ஒரு தனிமைப்பு அதேபோல் தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது ஒரு தனி அமைப்பு என்ற அர்த்தத்தில் தான் நாங்கள் கூறினோம் என்பதை ஆர்கே செல்வமணி அவர்கள் நன்கு புரிந்து இருந்தும் அது தவறாக புரிந்து கொண்ட மாதிரி வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டமைப்பு பற்றி தரம் தாழ்ந்து சொல்லி இருப்பது அனைத்து தொழிலாளர்களையும் அவமதிக்கும் செயலாகும். எத்தனையோ சங்கங்கள் தமிழ்நாட்டில் உள்ள போதும் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை பற்றி திரு செல்வமணி ஏன் பேச வேண்டும் இந்த கூட்டமைப்பை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் ஒரு டுபாக்கூர் சங்கம் என்றால் அதனை பற்றி மீடியாக்களில் ஏன் திரும்பத் திரும்ப பேசி பெரிதாக வேண்டும். அவரது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளார். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதனை ஆர்.கே. செல்வமணி அவர்கள் தற்போது தயாரிப்பாளர்களை இரண்டு பிரிவாக பிரித்து தன் பதவியை வைத்து தொழிலாளருக்கு துரோகம் இழைத்து வருகிறார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் தான் காலம் காலமாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டு வருகிறது. அந்த வகையில் ஆர் கே செல்வமணி அவர்கள் கடந்த மூன்று முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஊதிய உயர்வையும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தான் வாங்கிக்கொண்டு, தற்போது எதுவுமே செய்யவில்லை என்று கூறுகிறார். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து சென்ற நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள சில சுயநலமிக்க நிர்வாகிகளுடன் கைகோர்த்துக்கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் இனி நடப்பு தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பரிந்துரை கடிதம் பெற்று வந்தால் தான் படப்பிடிப்புக்கு வருவோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? முதல் போடும் ஒரு தயாரிப்பாளர் தொழிலாளர்கள் சங்கத்தில் சென்று கடிதம் அளிக்க வேண்டிய சூழ்நிலையை ஆர்.கே.செல்வமணியும், நடப்பு சங்க செயலாளர் டி. சிவா உட்பட அனைத்து நிர்வாகிகளும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

தங்களுக்கு பதவி வேண்டும் என்பதற்காக தாய் சங்கத்திலிருந்து பிரிந்து சென்று ஆரம்பிக்கப்பட்ட சங்கம் தான் தமிழ் திரைப்படம் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அத்தைய சங்கத்தில் ஆர்கே செல்வமணி அவர்கள் தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற சுயநலத்திற்காக பெப்சியில் உள்ள 23 சங்கங்களில் இருக்கும் 25 ஆயிரம் தொழிலாளர்களையும் அடமானம் வைத்துள்ளார். அதேபோல தயாரிப்பாளர்களையும் திரு சிவா அவர்கள் அவருடைய சுயநலத்திற்காக தொழிலாளர்கள் சம்மேளனத்தி ல் அடமானம் வைப்பதற்காக இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் சூழ்ச்சியே இத்தனை பிரச்சனைக்கு முழுமுதற் காரணம் என்பதை ஒட்டுமொத்த தயாரிப்பாளர்கள் தொழிலாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு பெரிய திரைப்படங்கள் தயாரிப்பது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் என்று டி சிவா அவர்களும் மற்ற நிர்வாகிகளும் திரு செல்வமணி அவர்களும் சேர்ந்து ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள். இதனால் பாதிக்கப்பட போவது தொழிலாளர்கள் மட்டுமே ஏனெனில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் வெளி மாநிலங்களில் மட்டுமே படமாக்கப்படுகிறது. அதனால் நம் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் குறைந்த அளவே கிடைக்கிறது இதனை புரிந்து கொள்ளாமல் தொழிலாளர்கள் திரு செல்வமணி அவர்களின் பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரடெக்ஷன் பணிகளை நிறுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்பது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பாகும். தமிழ்த்துறை உலகின் தாய் சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களை அரவணைத்தே செயல்படும் என்பதற்கு சாட்சியை இந்த தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகும். ஆகவே உண்மைக்கு புறம்பாகவே மீடியாக்களில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும் திரு செல்வமணி அவர்களின் எண்ணங்களும் செயல்களும் என்றைக்கும் ஈடெராது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் சம்மேளனத்தில் கடிதம் கொடுத்து படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார். அதுவும் உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியாகும். திரு ஆர் கே செல்வமணி அவர்கள் தலைமையில் உள்ள தற்போதைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகம் தான் படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ள தயாரிப்பாளர்களிடம் அவர்களுடைய புரொடக்ஷன் மேனேஜர்களை வைத்து வலுக்கட்டாயமாக கடிதங்கள் வாங்கி உள்ளார்கள். புரடக்ஷன் மேனேஜர்கள் என்பவர்கள் தயாரிப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து பணிகளை கவனிக்க வேண்டியவர்கள். ஆனால் அவர்கள் ஆர்கே செல்வமணி யின் கைப்பாவையாக இருக்கிறார்கள் என்பதை மிகவும் வேதனைக்குரியது.

மேற்படி பிரச்சனை குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களையும் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் விளக்கமாக கூறியதின் அடிப்படையில் காவல்துறை சார்பாக உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்கள் உத்திரவாதம் அளித்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.