October 6, 2026

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘பவர்ஹவுஸ்’!

அட்டகாசமான வீடியோவுடன் தலைப்பை அறிவித்த படக்குழு – கமர்ஷியல் ஆக்ஷன் விருந்துக்கு தயாராகும் படம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தனது புதிய படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’ என தலைப்பிட்டுள்ளது. இதுவரை ‘சீயான் 63’ என்ற தற்காலிகப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை, ரசிகர்களை கவரும் வகையிலான அட்டகாசமான வீடியோ மூலம் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

சீயான் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில் வெளியான ‘இருமுகன்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சுமார் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ஒரு அழகான குடும்பத்தின் அன்றாட வாழ்க்கையை அறிமுகப்படுத்தும் வகையில் தொடங்குகிறது. கல்யாண ஆர்டர் ஒன்றுக்காக சமையல் நடைபெறும் அழகான வீட்டிற்குள் விக்ரம் நுழைவதில் இருந்து காட்சிகள் நகர்கின்றன. தொடர்ந்து அந்த வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்படுகின்றனர். சம்யுக்தா ஹெக்டே, வி.டி.வி. கணேஷ், ஊர்வசி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெறும் அந்தப் பகுதி, ஒரு அமைதியான, மகிழ்ச்சியான குடும்பத்தின் சூழலை அழகாக வெளிப்படுத்துகிறது.

ஆனால், வீடியோவின் அடுத்த நொடியிலேயே மொத்த சூழலும் தலைகீழாக மாறுகிறது. குடும்பப் பின்னணியில் இருந்து அதிரடியான ஆக்ஷன் உலகத்திற்குள் காட்சிகள் திடீரென பயணிக்கின்றன. விக்ரம் ஒரு பூட்டிய அறையைத் திறந்து உள்ளே செல்வதும், அங்கு அடிபட்டு கிடக்கும் அடியாட்களுடன் அவர் பேசும் காட்சிகளும் இடம்பெறுகின்றன. இதன் மூலம் ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் விக்ரமின் கதாபாத்திரத்தின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தும் விதமாக வீடியோ அமைந்துள்ளது. குடும்ப உணர்வுகளும் கமர்ஷியல் ஆக்ஷனும் இணைந்த இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

‘பவர்ஹவுஸ்’ அனைவரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஐடியாலஜி செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களைக் கவரும் உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இணைந்த படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி. சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, நடன அமைப்பாளராக பிருந்தா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி, விளம்பர வடிவமைப்பாளராக கோபி பிரசன்னா மற்றும் ஸ்டில்ஸ் புகைப்படக் கலைஞராக தேனி முருகன் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சீயான் விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடும்பப் பின்னணியில் தொடங்கி அதிரடியான ஆக்ஷன் காட்சிகளாக மாறும் வீடியோவும், ‘பவர்ஹவுஸ்’ என்ற தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிச்செழியன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் கனவுகளுக்கான போராட்டத்தையும் அழுத்தமாகப் பேசும் படைப்பை உருவாக்கியுள்ளார்.

தூய்மை பணியாளராக வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு தாய், தனது மகன் செஸ் விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. வழக்கமான கமர்ஷியல் பாதையிலிருந்து விலகி, சமூகத்தின் மற்றொரு பக்கத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், சதுரங்க கட்டங்கள் நிறைந்த பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். செஸ் காயை கையில் ஏந்தியபடி சிறுவன் நம்பிக்கையுடன் மேல்நோக்கிப் பார்க்க, மறுபுறம் தாய் கவலையும் வலியும் கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். அவர்களைச் சுற்றிலும் நகரும் செஸ் காய்கள், கீழ்ப்பகுதியில் தாய் தனது மகனுடன் சைக்கிளில் பயணிக்கும் காட்சி என போஸ்டர் முழுவதும் கதையின் போராட்டத்தையும் கனவையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அர்ஜுன் ரவி – ஞானசேகர் ஆர்.எஸ். ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

திண்டுக்கல், மதுரை, தடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமுத்திரக்கனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘ஸ்கூல் பஸ்’ – நண்பர்களின் வெற்றிப் பயணம் தொடர்கிறது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ திரைப்படத்திற்காக நடிகர் சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார்.

நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமாரும் சமுத்திரக்கனியும், ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் தனது இயல்பான மற்றும் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சமுத்திரக்கனி, ‘காந்தா’ திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த விருதை வென்றுள்ளார்.

ஒரு கதாபாத்திரத்தை வெறுமனே நடித்துக் காட்டாமல், அதன் உணர்வுகளையும் தன்மையையும் உள்வாங்கி இயல்பாக வெளிப்படுத்துவது சமுத்திரக்கனியின் தனிச்சிறப்பு. கதாபாத்திரங்களும் மொழிகளும் மாறினாலும், அவரது நடிப்பின் தனித்துவம் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.

இந்த அங்கீகாரத்தை வழங்கிய SIIMA குழுவினருக்கும், நடுவர் குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

நடிப்பில் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பயணித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, மற்றும் ராஜன் வகையறா , முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, மன்சு மனோஜ் உடன் டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மேலும், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் அதேபோல், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் ‘மகாகாளி’ திரைப்படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படத்தில் சசிகுமார்,கிச்சா சுதீப் , மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழிலும் ‘School Bus’ திரைப்படம் குறித்த பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

‘பத்தா’ படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ – மனதை வருடும் அழகான மெலடி!

“மகளே” – சாய் அப்யங்கரின் மெலடி இசையில் மனதை மயக்கும் ‘பத்தா’ முதல் சிங்கிள்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18,(Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘மகளே’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சாய் அப்யங்கர் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலுக்கு கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார்.

இன்றைய தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்படும் சாய் அப்யங்கர், துள்ளலான பாடல்களால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், ‘மகளே’ பாடலில் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியை கையாண்டுள்ளார். அவரது இசையில் இதுவரை கேட்டிராத வித்தியாசமான இசை அனுபவமாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

80-களின் இசை உலகை கண்முன் கொண்டு வரும் வீடியோ

80-களின் புகைப்படங்களும், அக்காலகட்ட இசையும் மீண்டும் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில், ‘மகளே’ பாடலின் வீடியோவும் 80-களின் இசை உலகை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவின் தொடக்கமே 80-களில் ஒரு திரைப்படப் பாடல் ரெக்கார்டிங் எப்படி நடைபெற்றிருக்குமோ, அதனை அப்படியே கண்முன் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய கால இசைக்கூடம், அக்கால ரெக்கார்டிங் முறைகள் என அந்தக் காலகட்டத்தின் சூழலை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அதேநேரத்தில் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இரட்டை வேடத்தில் தோன்றியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பைப் பெற்று வருகிறது.

மகளை கொண்டாடும் அழகான பாடல்

ஒரு தந்தை தனது மகளைப் பார்த்து அன்புடன் பேசுவது போன்ற உணர்வில் உருவாகியுள்ள இந்தப் பாடல், மகளின் மீதான பாசத்தையும் அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கார்த்திக் நேதாவின் வரிகள் கவிதையைப் போல அமைந்து, பாடலின் உணர்வை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.

சாய் அப்யங்கரின் மென்மையான இசையும், அவரது குரலும், கார்த்திக் நேதாவின் கவித்துவமான வரிகளும் இணைந்து ‘மகளே’ பாடலை, ரசிக்க வைக்கும் அனுபவமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, வழக்கமான இளமைத் துள்ளல் இசையிலிருந்து விலகி, மனதை வருடும் மெலடி பாணியில் சாய் அப்யங்கர் இந்தப் பாடலை உருவாக்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வித்தியாசமான கூட்டணியில், வித்தியாசமான களத்தில் வெளியாகியுள்ள ‘மகளே’ பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான Star Studio18, A for Apple Studios  மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது என, பல்வேறு எதிர்பார்ப்புகளை ஒன்றிணைத்துள்ள ‘பத்தா’, வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அரசியலிலும் திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்த ஆர்.எம்.வீரப்பன் – நூற்றாண்டு விழாவில் புகழஞ்சலி

தமிழக அரசியல் மற்றும் தமிழ் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு விழா, சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. அவரது குடும்பத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் அரசியல், திரைத்துறை, கல்வி, நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, ஆர்.எம்.வீரப்பனின் வாழ்க்கை, அரசியல் பயணம் மற்றும் திரைத்துறைக்கான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்தினர்.

பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர் ஆர்.எம்.வீரப்பன். பின்னர் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முன்னாள் முதல்வர்களின் அமைச்சரவைகளிலும் பணியாற்றிய அவர், 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் ஐந்து முறை தமிழக அமைச்சராக பதவி வகித்துள்ளார். மேலும், மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் ஆர். எம். வீரப்பன் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்ததுடன், 20-க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிதயாரித்தும் உள்ளார். இவர் திரைக்கதை சித்தர் என்றும் திரையுலகில் அன்போடு அழைக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆர். அவர்களின் காலம் தொடங்கி, தமிழ் சினிமாவின் பல்வேறு தலைமுறைகளிலும் தனது தயாரிப்புகளின் மூலம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் ஆர். எம். வீரப்பன் அவர்கள். ‘ரிக்ஷாக்காரன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘தெய்வத் தாய்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்து, எம்.ஜி.ஆர். அவர்களின் திரைவாழ்க்கையில் பெரும் உறுதுணையாக விளங்கினார். குறிப்பாக, ரஜினிகாந்த் நடித்த ‘மூன்று முகம்’, ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அரசியல் மற்றும் திரைத்துறை என இரு வெவ்வேறு களங்களிலும் தனக்கென ஒரு வரலாற்றை உருவாக்கிய ஆளுமையாக ஆர். எம். வீரப்பன் அவர்கள் விளங்கினார்.

ஆர்.எம்.வீரப்பனின் மருமகனான டி.ஜி.தியாகராஜன், தமிழ் திரையுலகில் பல தலைமுறைகளாகப் பயணித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர். காலம் தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களைத் தயாரித்து, வணிக வெற்றியுடன் தரமான படைப்புகளையும் வழங்கிய முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் திகழ்கிறது. அந்த வகையில், திரைத்துறையில் ஆர்.எம்.வீரப்பன் விட்டுச் சென்ற பாரம்பரியத்துடன் நெருங்கிய தொடர்புடையவராக டி.ஜி.தியாகராஜனும் தனது தயாரிப்புப் பயணத்தை முன்னெடுத்து வருகிறார்.

இந்தப் பின்னணியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவை டி.ஜி.தியாகராஜன் முன்னின்று ஒருங்கிணைத்தார். விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்று அவர் உரையாற்றினார். ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் பயணம், திரைத்துறைப் பங்களிப்பு, அவருடைய தனிப்பட்ட பண்புகள் மற்றும் வாழ்க்கை நெறிகளை நினைவுகூரும் வகையில் விழா அமைந்தது.

விழாவில் சென்னை கம்பன் கழகத் தலைவரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் பேசுகையில், “அரசியலில் ஆர்.எம்.வீ. போல் தூய்மையானவரைப் பார்க்க முடியாது. மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அவருடைய நினைவுகளைப் பகிரும்போதும், அவர் நம்மிடையே இல்லையே என்ற குறை உள்ளது” என்றார்.

டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம் பேசும்போது, ஆர்.எம்.வீரப்பனுக்கு ‘அரசியல் சாணக்கியர்’ என்ற பெயர் இருந்ததாகவும், அதைக் கடந்து ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார் பேசுகையில், இன்றைய தலைமுறையினர் தியாகம், அன்பு, தனிமனித ஒழுக்கம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அறியாமல் இருப்பதாகவும், ஆனால் ஆர்.எம்.வீரப்பன் இவை அனைத்திலும் சிறந்து விளங்கியவர் என்றும் தெரிவித்தார். அவருடன் இருந்தவர்களையும் ஒழுக்கசீலர்களாக உருவாக்கிய பெருமை அவரையே சேரும் என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு, ஆர்.எம்.வீரப்பன் வாழ்ந்த சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், “இன்று அரசியலில் என்னென்னவோ நடக்கிறது. ஆனால் அரசியலையும் நாகரிகமாக நடத்தியவர் ஆர்.எம்.வீ. அவரைப் போன்ற அரசியல்வாதியை உருவாக்க வேண்டும் என்பதே இவ்விழாவின் நோக்கம்” என்றார்.

இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் முத்துலிங்கம், எம்.ஜி.ஆர். கழக பொதுச்செயலாளர் ராமலிங்கம், திரைப்பட இயக்குநர் பி.வாசு, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் சண்முகம், சென்னை கம்பன் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அரசியலில் தூய்மை, நாகரிகம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்தவர்; திரைத்துறையில் பல வெற்றிப் படங்களை வழங்கியவர்; தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஆர்.எம்.வீரப்பனின் நூற்றாண்டு விழா, அவரது நினைவுகளைப் போற்றும் நிகழ்வாக மட்டுமின்றி, அவரது வாழ்வியல் மதிப்புகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வாகவும் அமைந்தது.

DAC Developers Launches Balmandaisa

  • An Ultra-Luxury Residence On Porur – Poonamallee Main Road!

Chennai, September 11, 2026:

DAC Developers launched BALMANDAISA, its latest ultra-luxury residential development on Porur–Poonamallee Main Road, with a grand launch and logo reveal held at the BalmandaIsa Office on September 11, 2026.

The event was graced by Mr. Sathish Kumar Santhanam, Founder & Managing Director, DAC Developers, along with Mr. Kumar Vembu, Founder & CEO, Mudhal Partners Pvt. Ltd. and Co-Founder, Zoho; Mr. Hari Vignesh R, Senior Relationship Manager – Construction Finance, Aditya Birla Housing Finance Ltd.; and Mr. Manjunath Selvamani, Regional Sales Manager – Prime Home Loans, Aditya Birla Housing Finance Ltd.

Positioned as an address for those who value space, sophistication and an elevated lifestyle, BALMANDAISA brings together expansive residences, premium amenities and strategic connectivity in one distinctive development.

Situated on Porur–Poonamallee Main Road and within walking distance from the metro station, BALMANDAISA offers seamless connectivity to key parts of Chennai while placing everyday conveniences and important destinations within easy reach. Its strategic location also adds to the project’s appeal as a strong long-term investment opportunity.

BALMANDAISA comprises 194 exclusive residences, offering a thoughtfully planned mix of 2 and 3 BHK apartments and expansive 4 and 5 BHK duplex residences. Designed for larger, more comfortable living, the homes are complemented by private terraces, adding an enhanced sense of openness and exclusivity.

The residences are complemented by a standalone G+3 clubhouse spanning 10,000 sq. ft., thoughtfully designed to offer a host of 40+ premium lifestyle amenities. The clubhouse, aptly named “The Meridian,” serves as an exclusive recreational and social hub for residents. These have been curated across wellness, recreation, social and leisure spaces, including a podium swimming pool, indoor games room, multipurpose hall, coworking space, mini theatre, rooftop party area, yoga zone and more.

The project comprises two basement levels, stilt and 13 residential floors, creating a well-integrated residential community.

With homes starting from ₹1.19 crore, BALMANDAISA brings together a strategic location, generous spaces, private terraces, premium amenities and investment potential for discerning homebuyers.

The grand launch and logo reveal marked an important milestone for DAC Developers, introducing BALMANDAISA as a new benchmark in ultra-luxury living on the Porur–Poonamallee corridor.

Addressing the gathering and customers, Mr. Sathish Kumar Santhanam, Founder & Managing Director, DAC Developers, said that BALMANDAISA is one of the landmark projects in the company’s journey. He further shared that DAC Developers has completed over 150 projects and has expanded its presence to Sivaganga and Coimbatore, with an international presence through offices in Dubai and Singapore.

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !

முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இப்படம் காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.

இப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

வரும் செப்டம்பர் 25ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் காதல் கொண்டாட்டத்தை ரசிகர்கள் கொண்டாடலாம்.

Yamaha Strengthens Presence in Chennai with Three New Blue Square Dealerships


New dealerships offer sales, service and genuine spares support under Yamaha’s
premium Blue Square Showrooms

 India Yamaha Motor (IYM) announces the opening of three new Blue Square dealerships in Chennai: AVI Motors – Redhills, Walters Motohub – Old Washermenpet, and SKY Motors – Thoraipakkam, OMR. The expansion reinforces Yamaha’s commitment to enhancing customer accessibility and strengthening its presence in one of India’s top-priority two-wheeler markets.

Strategically located across key parts of the city, the new dealerships offer Yamaha’s premium range of motorcycles and scooters, along with dedicated service and spares facilities under the Blue Square retail concept. The expansion marks a major boost to Yamaha’s after-sales network in Chennai. With enhanced service infrastructure across the three dealerships, customers can now enjoy faster, more convenient, and more reliable service support throughout their ownership journey. With the inauguration of these three new dealerships, Yamaha now has 28 premium Blue Square showrooms in the Chennai region taking the total network count to 37 touchpoints.

Chennai and the entire Tamil Nadu continue to be a key market for Yamaha, supported by a strong riding culture and growing demand for premium two-wheelers. Yamaha has witnessed consistent growth in the region over the years, and the opening of these three dealerships marks another important step in strengthening its network to support future growth, enhance customer accessibility, and deliver an elevated ownership experience across the market.

Designed to embody Yamaha’s global racing heritage and premium brand values, the Blue Square network continues to serve as a platform for deeper engagement with customers and riding enthusiasts. Through this expansion in Chennai, Yamaha aims to strengthen its relationship with customers in Tamil Nadu while delivering exceptional service, convenience, and world-class customer experiences.

***

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு அனுபவம், பிரீமியம் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்பு மற்றும் புதுப்பிக்கப்பட்ட AvoD சேவையான – Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறது

தேசியம், செப்டம்பர் 9, 2026: பார்வையாளர்கள் முன்பைவிட அதிகமான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அணுகும் நிலையில், அவர்கள் பொழுதுபோக்கைத் தேடும் மற்றும் அனுபவிக்கும் விதத்தை Zee 5 மறுவரையறை செய்கிறது. விரிவுபடுத்தப்பட்ட உள்ளடக்கத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, மொபைல் மற்றும் Connected TV தளங்களில், ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI அடிப்படையிலான உள்ளடக்கத் தேடல், மேம்பட்ட காட்சி வழிசெலுத்தல் மற்றும் தடையற்ற பல்திரை அனுபவம் ஆகியவற்றால் இயக்கப்படும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. பார்வையாளர்களின் பார்வை பழக்கத்தை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Zee 5, Premium Entertainment, Free 5, KidZ, TV மற்றும் Sports என ஐந்து தனித்துவமான உலகங்களுக்கான கதவுகளைத் திறக்கிறது. இதன் மூலம் உள்ளடக்கத்தைத் தேடுவது இயல்பாகவே எளிமையானதாகவும், ஆழமான அனுபவமாகவும், தடையற்றதாகவும் மாறுகிறது. ஏனெனில் இந்தியாவின் பொழுதுபோக்கு பார்வை முறை மாறி வருவதற்கேற்ப, பொழுதுபோக்கைத் தேடும் அனுபவமும் மாறுகிறது.

தனிப்பயனாக்கம் என்பது புதிய அனுபவத்தின் மையமாக உள்ளது. இது பார்வையாளர்களின் ஆர்வங்களுக்கு மிகவும் பொருத்தமான உள்ளடக்கங்களை அவர்கள் கண்டறிய உதவுகிறது. அதேவேளையில், AI அம்சம் Zee 5 தளத்தில் மேலும் புத்திசாலித்தனமான உள்ளடக்கத் தேடலையும், மென்மையான தொடர்பு அனுபவத்தையும் வழங்குகிறது. மொபைல் சாதனங்களுடன் இணைந்த சாதனங்களிலும் பார்வையாளர்கள் அதிகளவில் பொழுதுபோக்கை அனுபவித்து வரும் நிலையில், புதிய அனுபவம் சிறிய திரையிலிருந்து பெரிய திரைக்கு தடையின்றி மாறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் எளிதாக்கும் வகையில், அடுத்த தலைமுறை AI தொழில்நுட்பத்தில் இயங்கும் வாடிக்கையாளர் ஆதரவு உதவியாளர் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சந்தாக்கள், பிளேபேக், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சாதனங்கள் தொடர்பான கேள்விகளுக்கு புத்திசாலித்தனமான, கிட்டத்தட்ட உடனடி தீர்வுகளை வழங்குகிறது. இவ்வம்சங்களுடன், தரவு தனியுரிமையை மேலும் வலுப்படுத்தும் வகையில் Zee 5 மேம்பட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக சிறந்த மற்றும் துறையில் முன்னணியில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து, வேகமான, புத்திசாலித்தனமான மற்றும் மிகவும் எளிமையான பொழுதுபோக்கு அனுபவத்திற்கான புதிய அளவுகோலை உருவாக்குகின்றன.

புதிய அனுபவத்தை உருவாக்குவதற்காக, இந்தியா முழுவதும் பார்வையாளர்கள் எவ்வாறு பொழுதுபோக்கை பார்க்கிறார்கள், தேடுகிறார்கள் மற்றும் அதனுடன் ஈடுபடுகிறார்கள் என்பதை Zee 5 ஆழமாகப் புரிந்துகொண்டது. ஏற்கனவே கிடைத்திருந்த செயலி கருத்துகள், பல்வேறு சந்தைகளில் நடத்தப்பட்ட நுகர்வோர் ஆய்வுகள் மற்றும் Focus Group Discussions ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மொபைல் மற்றும் Connected TV தளங்களில் பார்வையாளர்களின் பயணத்தை இந்த தளம் ஆய்வு செய்தது. பெரிய திரை அனுபவத்தின் வளத்தையும் ஆழத்தையும் பாதிக்காமல், மேலும் எளிமையான மற்றும் உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய அனுபவம் தேவை என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் மறுவடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலும், வெளியீட்டிற்கு முன் தளத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் கடுமையாகச் சோதித்து, மேம்படுத்தி, நுணுக்கமாகச் செம்மைப்படுத்தும் வகையில், Product, Engineering, Quality Assurance மற்றும் Design துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைத்து தீவிர Bugathons நடத்தப்பட்டன.

கடந்த காலாண்டில், Zee 5 தனது பல்வேறு வகையான உள்ளடக்கத் தொகுப்பை குறிப்பிடத்தக்க அளவில் விரிவுபடுத்தியுள்ளது. முதலில், உலகளாவிய விளையாட்டு நிகழ்வான FIFA World Cup 2026™ மற்றும் 2030-க்கான ஒளிபரப்பு உரிமைகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஏழு மொழிகளில் தனது உள்ளடக்கத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, இதுவரை இல்லாத அளவிலான பிரீமியம் ஆங்கில பொழுதுபோக்கு உள்ளடக்கத் தொகுப்பை Zee 5 தற்போது அறிமுகப்படுத்துகிறது. இதில் உலகளாவிய திரைப்படங்களும், ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இந்திய பார்வையாளர்களுக்காக இடம்பெறுகின்றனர். PVR INOX PICTURES மற்றும் LIONSGATE PLAY ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள மூலோபாய கூட்டணிகளின் மூலம், இந்த பிரம்மாண்டமான உள்ளடக்கத் தொகுப்பில் Normal திரைப்படம் இடம்பெறுகிறது. இதில் Bob Odenkirk, Henry Winkler மற்றும் Lena Headey நடித்துள்ளனர்; The Invite திரைப்படத்தில் Seth Rogen, Penélope Cruz, Edward Norton மற்றும் Olivia Wilde நடித்துள்ளனர்; Anxious People திரைப்படத்தில் Angelina Jolie மற்றும் Jason Segel நடித்துள்ளனர்; Babies திரைப்படத்தில் Seth Rogen மற்றும் Anna Kendrick நடித்துள்ளனர்; The Wizard of the Kremlin திரைப்படத்தில் Jude Law நடித்துள்ளார்; How to Make a Killing திரைப்படத்தில் Glen Powell மற்றும் Margaret Qualley நடித்துள்ளனர்; Tony திரைப்படத்தில் Dominic Sessa இடம்பெறுகிறார்; மேலும் Paper Tiger திரைப்படத்தில் Adam Driver, Scarlett Johansson மற்றும் Miles Teller நடித்துள்ளனர். முன்னணி நட்சத்திரங்கள், உலகளாவிய கதைகள் மற்றும் பிரீமியம் சினிமா ஆகியவற்றின் இதுவரை இல்லாத அளவிலான தொகுப்புடன், இந்த புதிய உள்ளடக்கத் தொகுப்பு Zee 5-ன் ஆங்கில பொழுதுபோக்கு பிரிவில் ஒரு புதிய, துணிச்சலான அத்தியாயத்தைத் தொடங்குகிறது.

அதே நேரத்தில், Free 5 தனது விரிவான பொழுதுபோக்கு அனுபவங்களில் ஒன்றாக, புதிய துணிச்சலான அடையாளத்துடன் மறுவடிவமைக்கப்படுகிறது. முற்றிலும் புதிய Free 5, Series, Movies, Korean மற்றும் Chinese dramas, anime, news, micro dramas மற்றும் துடிப்பான creator ecosystem என பரந்த அளவிலான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை ஒருங்கிணைக்கிறது. இதுவரை இல்லாத அளவில் அதிகமான மொழிகள், வகைகள், வடிவங்கள் மற்றும் குரல்களுடன், புதுப்பிக்கப்பட்ட Free 5 பார்வையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக, எந்தவித சந்தாவும் தேவையின்றி, விரிவான பொழுதுபோக்கு உலகத்தைத் தேடி, ஆராய்ந்து, ரசிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த விரிவுபடுத்தப்பட்ட அனுபவம், Zee 5-ல் பல்வேறு வகையான பார்வையாளர்களை அணுகவும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப விளம்பரங்களை வழங்கவும் விளம்பரதாரர்களுக்கு குறிப்பிடத்தக்க புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

Tejkarran Singh Bajaj, Business Head – Zee 5 India and AI & Innovation கூறுகையில்,
“Zee 5-ன் அடுத்த கட்டம் என்பது பொழுதுபோக்கை எளிதாகக் கண்டறியக்கூடியதாகவும், மிகவும் பொருத்தமானதாகவும், மேலும் திருப்திகரமானதாகவும் மாற்றுவதாகும். ஸ்மார்ட்டான தனிப்பயனாக்கம், AI-ன் ஆழமான பயன்பாடு மற்றும் மேலும் உள்ளுணர்வுடன் கூடிய உள்ளடக்கத் தேடல் ஆகியவற்றுடன், மொபைல் மற்றும் Connected TV தளங்களில் தயாரிப்பு அனுபவத்தை நாங்கள் மறுவடிவமைத்துள்ளோம். ஏழு மொழிகளில் பிரீமியம் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள், வளமான தொலைக்காட்சி உள்ளடக்கம், விளையாட்டுகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு, Live TV மற்றும் செய்திகள் ஆகியவற்றை ஏற்கனவே வழங்கி வரும் நிலையில், உலகளாவிய சினிமாவை இந்திய பார்வையாளர்களிடம் கொண்டு வரும் ஆங்கில உள்ளடக்கத் தொகுப்புடன் உள்ளடக்கத்தின் ஆழத்தை மேலும் விரிவுபடுத்துகிறோம். அதேபோல், அதிக மொழிகள், வகைகள் மற்றும் creator ecosystem-ஐ உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட Free 5-ஐ அறிமுகப்படுத்துகிறோம். விளம்பரதாரர்களைப் பொறுத்தவரை, இந்த விரிவான உள்ளடக்கத் தொகுப்பு, மொழிகள், உள்ளடக்க வகைகள் மற்றும் பார்வை நேரங்களின் அடிப்படையில் தனித்துவமான பார்வையாளர் குழுக்களுடன் தொடர்பு கொள்ள வளமான தளத்தை உருவாக்குகிறது. தயாரிப்பு மற்றும் உள்ளடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பரிணாமம், பார்வையாளர்களுக்கு அதிக தேர்வுகள், அதிக ஆழம் மற்றும் அவர்கள் விரும்புவதை எளிதாகக் கண்டறியும் வழியை வழங்குகிறது.”

Pramod Prakash, Chief Technology Officer, Zee Entertainment Enterprises Ltd., கூறுகையில்,
“ஒரு ஸ்ட்ரீமிங் தளம் நூற்றுக்கணக்கான சிறிய தொடர்புகளின் மூலம் அனுபவிக்கப்படுகிறது. அந்த ஒவ்வொரு தொடர்பும் பார்வையாளர்கள் சேவையைப் பற்றி உணரும் விதத்தை உருவாக்குகிறது. எனவே, தனித்தனி அம்சங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முழுமையான அனுபவத்தையும் மறுபரிசீலனை செய்வதே எங்களின் நோக்கமாக இருந்தது. பயணத்தின் எந்த இடங்களில் பயனருக்கு அனுபவம் மேலும் இயல்பாகவும், விரைவாகச் செயல்படக்கூடியதாகவும், குறைந்த சிரமத்துடனும் இருக்க முடியும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் மையத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறையினரும் தாங்கள் விரும்பும் பொழுதுபோக்கை எளிதாக அணுகக்கூடிய உள்ளுணர்வுடன் பயன்படுத்தக்கூடிய செயலி உள்ளது. தொழில்நுட்பம் பயனருக்கான சிரமங்களை அமைதியாக நீக்கி, பொழுதுபோக்கை மையமாக்க வேண்டும் என்பதே இந்த மறுவடிவமைப்பின் எளிய தயாரிப்பு தத்துவமாகும். பல்வேறு சாதனங்கள், வடிவங்கள் மற்றும் சூழல்களில் பார்வை அனுபவம் தொடர்ந்து பரவி வரும் நிலையில், எதிர்காலத்தில் பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்திற்கு ஏற்ப மேலும் தகவமைத்துக்கொள்ளக்கூடிய, நம்பகமான மற்றும் தயாராக இருக்கும் வகையில் Zee 5-ஐ உருவாக்கி வருகிறோம்.”

Zee 5 பற்றி:

Zee 5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களுக்கான உலகளாவிய சாளரமாகவும் திகழ்கிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை இது சென்றடைகிறது. Zee Entertainment Enterprises Ltd.-ன் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான Zee 5, மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் தள அனுபவம், hyper-local உள்ளடக்கம், மொழி சார்ந்த தொகுப்புகள் மற்றும் ஏழு மொழிகளில் ஆழமான தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள் என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது. அவை Hindi, Tamil, Telugu, Bengali, Malayalam, Kannada மற்றும் Marathi ஆகிய மொழிகளாகும். மேலும், பல்வேறு மொழிகள் மற்றும் வகைகளில் துணிச்சலான கதைகள், தனித்துவமான படைப்பாளர்களின் குரல்கள், பிரபலமான Franchise-கள் மற்றும் தனித்துவமான கதைசொல்லல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்தியாவின் துணிச்சலான கதைகளுக்கான தளமாக Zee 5 விளங்குகிறது.

Movies, Series, Live Sports, AI-powered storytelling, Animation மற்றும் Kids’ Entertainment என விரிவான உள்ளடக்க நூலகத்துடன், Zee 5 பல்வேறு மொழிகளில் அமைந்த பொழுதுபோக்கு மற்றும் FIFA World Cup 2026™ மற்றும் 2030, Bundesliga, Serie A மற்றும் Coppa Italia போன்ற நேரடி விளையாட்டு அனுபவங்களுக்கான தளமாகத் திகழ்கிறது.

விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்”

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”. இப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மேட் சயின்டிஸ்ட், டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் போஸ்டரில், அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது போஸ்டரில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது. மூன்றாவது போஸ்டரில், எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது. மூன்று போஸ்டர்களிலும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் பல அடுக்குகளையும் காட்சிப்படுத்தி படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

இப்படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை ஜெயந்த் சேது மாதவன் மேற்கொண்டுள்ளார். ஹரி S.R. இசையமைக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கவனித்துள்ளார். R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ரமேஷ் ஆடை வடிவமைப்பையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகளுடன் படம் உருவாகி வருகிறது.

இதற்கிடையில், முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் செந்தில், “ட்ரோன்ஸ்” திரைப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து மிகவும் ரசித்ததையடுத்து, உடனடியாக இப்படத்தின் முழு உரிமையை வாங்கியுள்ளார். இதன்மூலம் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் இப்படத்தை இந்தியாவெங்கும் பல மொழிகளில் வெளியிடுகிறார். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இப்படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் இப்படம், வித்தியாசமான திரையனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.