Chennai, October 12th, 2023: REFCOLD India, 2023, South Asia’s leading exhibition and conference dedicated to refrigeration and cold-chain technologies, commenced today at the Chennai Trade Centre, Chennai. Organised in collaboration between the Indian Society of Heating, Refrigerating and Air Conditioning Engineers (ISHRAE) and Informa Markets, REFCOLD India 2023 is set to redefine the industry landscape. This well-reputed event represents a significant step forward in the refrigeration and cold-chain sector, unveiling a vast potential cold-chain market of around INR 4.3 trillion by 2027.
The event’s grand inauguration was spearheaded by a rich array of dignitaries including Guest of Honour – Dr. R Velraj, Vice Chancellor, Anna University; Mr. Raja M Sriraam, Chairman, RECFOLD Chennai, ISHRAE; Mr. Yogesh Thakkar, National President, ISHRAE, Mr. Anoop Ballaney, National President Elect, ISHRAE and Mr Yogesh Mudras, Managing Director, Informa Markets in India.
The 6th gala edition of REFCOLD India brought together top experts, businesses, and thought leaders who are driving the industry’s transformation with over 200 exhibitors, including an impressive lineup of industry giants such as BlueStar, Copeland, Rinac India, Tecumseh, Daikin, K-Flex, Yaskawa, and Danfoss, among others. The show anticipates more than 10,000 visitors, industry leaders, and professionals, for dynamic business opportunities, knowledge-sharing sessions, and networking.
Speaking on the occasion, Mr Yogesh Thakkar, National President ISHRAE said, “The adoption of integrated cold chain solutions has the potential to significantly revolutionize the traditional perishables sector, bringing about substantial changes in the market landscape and overall growth. This is especially important in a country where agriculture employs 60% of the population. To harness the potential of integrated cold chain solutions, there is a need to optimise logistics, enhance value addition facilities, adopt green refrigeration practices, and adopt energy-efficient cooling systems and natural refrigerants ultimately improving efficiency across the supply chain. Similarly, the Indian organized food industry is a vast arena with significant potential. This underscores the substantial room for growth in the food delivery sector, which, when integrated with advanced refrigeration and cold chain solutions, can further enhance food quality, safety, and delivery efficiency.”
“The pandemic acted as a catalyst, propelling India’s online food delivery market to reach approximately $21 billion by 2026, with a remarkable compound annual growth rate (CAGR) of nearly 30%”, he further added.
With the valuable support of MOFPI (Ministry of Food Processing Industries Government of India), other esteemed associations like IIR (International Institute of Refrigeration), NCCD (National Centre for Cold-chain Development), IDA (Indian Dairy Association), IIAR (International Institute of Ammonia Refrigeration) and more, the event successfully bridged the gap between suppliers and buyers.
REFCOLD India offers an enriching programme of Conferences and exhibitions by technical experts of the industry focusing on Industrial Refrigeration along with Cold Chain and Reefer Transportation, Seminars and workshops on pharma, dairy, fishery and hospitality encouraging continuous learning and skill advancement. The expo covered important topics on Heat pump integrated thermal storage for dairy applications, Natural Refrigerants, Innovative Design or Technology for Net Zero Cold Storage Plants, Challenges on Dairy Processing and Storage, Safety Standards and Trouble Shooting of Refrigeration Plants, to name a few.
Commenting on the significance of REFCOLD India 2023, Mr Yogesh Mudras Managing Director, Informa Markets in India said “REFCOLD India provides a transformative journey that unlocks opportunities for fresh horizons and valuable collaborations. The expo offers a plethora of opportunities to connect with industry experts and learn about cutting-edge technologies. Furthermore, the government is also taking proactive steps to boost the refrigeration and cold chain industry by establishing extensive cold storage facilities nationwide. This initiative aims to minimize food wastage, encouraging eco-friendly refrigeration practices, while simultaneously stimulating economic growth. The added attractions including our content-rich conference that aligns with the theme of ‘Preserve through Innovation for a Better Future’ will gather experts, stalwarts, and key organizations and provide the momentum the market truly deserves!”
Distinguished speakers that graced the event included notable figures like Mr. Arvind Surange, Chairman and Managing Director of ACR Project Consultants Pvt Ltd; Dr. Lambert Kuijpers, an Environmental Consultant hailing from Venlo, Netherlands; Mr. C.P. Charles, a Central Executive Committee Member at the Indian Dairy Association; Dr. Alex Pachai, representing Global Consultancy, ApS in Denmark; Dr. Omar Abdulaziz, a Mechanical Engineer affiliated with The American University in Cairo, Egypt; and Mr. Jiju Nair, who holds the position of National Marketing Manager at Honeywell, among others.
Insights on India’s Cold Storage and Refrigeration Technology Market:
Advancements in refrigeration technology have led to energy-efficient systems, particularly beneficial in high-energy industries like chemical manufacturing. These optimized systems and eco-friendly refrigerants not only lower carbon footprints but also reduce emissions and water waste compared to traditional cooling methods like cooling water towers.
Additionally, in India, where agricultural production is vast, but access is limited, the cold chain sector plays a vital role, further driven by the growth of organized food delivery and e-commerce segments.
REFCOLD India gathers experts from the global and Indian refrigeration sectors to drive innovation and combat food waste. It highlights the importance of cold chain management,
Mr. Madhur Sehgal, Head Climate Solutions, Danfoss said, “We are bringing an exciting opportunity to all of you to have an exclusive visit to our lead Platinum Campus on 13th October 2023. This is a unique opportunity to witness the state-of-the-art campus with next-generation R & D and production facilities, an application development center, and a customer experience center showcasing the live working performance of our products in diverse industry applications. We will also be pleased to showcase the use of the latest technologies and specific actions on our campus on HVAC, Renewable Energy, Water, and waste management, leading to faster progress toward our Net Zero Emission goals. Please join us for this exclusive event on 13th October and discover how Danfoss can help you achieve your goals of clean growth and development.”
Mr. M Srinivas Reddy, Vice President, Commercial Refrigeration Business Group, Blue Star stated, “We, at Blue Star, recognise REFCOLD as the perfect platform to showcase various refrigeration solutions. We are confident that it will help us reach our target audience well and we wish REFCOLD a huge success.”
On the sidelines of the expo, Informa Markets in India launched its 4th edition of the Festivity of Business campaign for this year’s high season. As the autumn season blankets India with its diverse array of festivals, the initiative will be a vibrant tribute to India’s economic triumphs and its burgeoning global influence. This year, Informa Markets in India’s initiative encompasses a rich tapestry of over 40 events till year-end, including ten signature Expos, along with distinctive Conferences, Industry Awards, Buyer-Seller Meets, and Training programmes in influential sectors. All these are poised to elevate the nation to new heights.
சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் சிறப்பாக நடைபெற்றது
இந்த வேலை வாய்ப்பு முகமானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்,தமிழ்நாடு சி.ஐ.ஐ மற்றும் இசட் எப் ஆகியவை இணைந்து நடத்தினர்
நிதி மற்றும் தொழில்நுட்ப துறை என சுமார் 140 நிறுவனங்களில் இருந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை பணியமர்த்த மாணவ மாணவியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தினர் இதில் சுமார் 15,000 மாணவ மாணவிகள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்
புது புது கதைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் என ரசிகர்களுக்கு தொடர்ந்து entertainment கொடுத்து வரும் ZEE Tamizh, இந்த weekend-ஐ இன்னும் special-ஆ மாற்ற இரண்டு புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கியிருக்கிறது.
ஒருபக்கம், இசை ரசிகர்களின் மனசுல தனக்கென ஒரு இடத்தை பிடிச்சிருக்கிற ‘சரிகமப’-வோட புதிய சீசன். இன்னொரு பக்கம், Mass-க்கும் Class-க்கும் இடையே நடக்கப்போகும் செம கலகலப்பான போட்டியை மையமாக வைத்து உருவாகியிருக்கிற ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் பிரம்மாண்ட தொடக்கத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சரிகமப’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா, மேலும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியுடன் நடுவர்களாக இணைந்துள்ள ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் கலந்துகொண்டு, நிகழ்ச்சிகள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
10 சீசன்களை கடந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ‘சரிகமப’!
வெறும் ஒரு singing reality show-வாக இல்லாமல், பல திறமையான பாடகர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுடைய இசைப் பயணத்துக்கு ஒரு நல்ல platform-ஆக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.
சமீபத்தில் ‘சரிகமப’ 500 எபிசோட்களை கடந்ததை முன்னிட்டு, கோவையில் பிரம்மாண்டமான வெற்றி கொண்டாட்டமும் நடைபெற்றது.
ஒவ்வொரு சீசனிலும் புதுசு புதுசான குரல்கள், அசத்தலான performances மற்றும் மனதைத் தொடும் பல தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் ‘சரிகமப’, இந்த புதிய சீசனிலும் இன்னும் பல திறமையான போட்டியாளர்களுடன் இசை விருந்தை கொடுக்க தயாராக இருக்கிறது.
இந்த புதிய சீசனில், இசை உலகின் அனுபவமிக்க மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக இணைந்துள்ளனர். இவர்களுடன் அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
ஒவ்வொரு குரலுக்கும் ஒரு தனி அழகு உண்டு… ஒவ்வொரு performance-க்கும் ஒரு தனி எமோஷன் உண்டு… அந்த வகையில் இந்த புதிய சீசன் ரசிகர்களுக்கு ஒரு அழகான இசை அனுபவமாக இருக்கப்போகிறது.
இசையிலிருந்து அப்படியே ஒரு energetic zone-க்கு ரசிகர்களை அழைத்துச் செல்லும் புதிய show தான் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’.
ஒரு பக்கம் மாஸ் பசங்க… இன்னொரு பக்கம் கிளாஸ் பொண்ணுங்க…
இரண்டு அணிகளிலும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த celebrity contestants பங்கேற்கிறார்கள். ஒவ்வொருத்தரும் தங்களோட style, attitude, personality, talent என தங்களுக்கே உரிய விதத்தில் இந்த போட்டியில் களமிறங்கப் போறாங்க.
இந்த நிகழ்ச்சியை கிகி விஜய் மற்றும் அசார் இருவரும் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர். இருவருடைய கலகலப்பான hosting-ம், போட்டியாளர்களுடன் அவர்கள் உருவாக்கும் fun moments-ம் நிகழ்ச்சிக்கு இன்னும் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கப்போகிறது.
இது வெறும் போட்டி மட்டும் கிடையாது. Competition-க்கு நடுவுல fun இருக்கும், friendship இருக்கும், challenges இருக்கும். அதோடு யாருமே எதிர்பார்க்காத பல unexpected moments-ம் இந்த show-ல நடக்கப்போகுது. two expreme எனெர்ஜிஸ் இந்த நிகழ்ச்சியில் மோதிக்கொள்ள போறாங்க.
Srinivas – Judge, Sa Re Ga Ma Pa
பத்து வருஷமா இந்த ஷோல ஒரு பகுதியா இருக்கேன். அது எனக்கு ரொம்ப சந்தோஷம். சாமானியர்களை சாதனையாளராக மாற்றும் மேடை தான் இந்த சரிகமப. கிராமங்களில் இருந்து வரவங்க அவங்க ஜெயிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கும். எத்தனையோ ஷோவில் நடுவராக இருந்திருக்கேன். ஆனால் இப்படி ஒரு பிரம்மாண்டத்தை பார்த்ததில்லை அந்த அளவுக்கு இந்த சீசன் மிகப் பிரமாண்டமாக இருக்கு என்றார்.
Vijay Prakash – Judge :
பல வருடங்களுக்கு முன்னாடி இதே சரிகமப show-ல் ஒரு contestant-ஆக வந்த நான், இன்று நடுவராக இந்த show-ன் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.
மேலும் இந்த show நிறைய பேருக்கு ஒரு career-ஐயும், ஒரு வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறது. இங்கிருந்து வந்த contestants இன்று உலகம் முழுவதும் perform பண்ணிட்டு இருக்காங்க. அதுதான் Sa Re Ga Ma Pa-வோட reach.
இந்த season-ன் stage, visuals, production எல்லாமே மிகப்பெரிய scale-ல இருக்கு. எப்போதும் show-வோட soul மட்டும் எப்போதும் மாறாமல் இருப்பது தான் இதன் சிறப்பு.
Shwetha Mohan – Judge, Saregamapa:
இந்த season-ல் முதல் முறையாக ஒரு 360-degree set-ல் Sa Re Ga Ma Pa-வை பார்க்கப்போறோம். எங்க திரும்பினாலும் music-ஐ feel பண்ணக்கூடிய அளவுக்கு set ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு. எனக்கு Sa Re Ga Ma Pa குடும்பம் ஒரு கூட்டில் வாழும் கிளிகள் மாதிரி தான். Contestants-க்கு நாங்க நடுவர்களாக மட்டும் இல்லாமல், mentors, friends, guides-ஆவும் இருக்கிறோம். மக்கள் இந்த show-க்கும், contestants-க்கும் கொடுக்கிற அன்பு எங்களுக்கு மிகப்பெரிய பலம் என்றார்.
சரிகமப நிகழ்ச்சி குறித்து நடுவர்கள் பேசி முடித்ததை தொடர்ந்து மாஸ் பசங்க vs கிளாஸ் பொண்ணுங்க நிகழ்ச்சி குறித்து பேச தொடங்கினர்.
“இது 100 percent out-and-out fun & entertainment guaranteed show!” – ஆர்யா
நிகழ்ச்சி குறித்து ஆர்யா பேசும்போது,
இது 100 percent out-and-out fun and entertainment guaranteed show.
இது வெறும் competition மட்டும் கிடையாது. Fun, friendship, ஜாலியான moments-னு நிறைய விஷயங்கள் இந்த show-ல இருக்கும் என்றார்.
“ஆர்யாதான் இந்த title வைக்க சொல்லியிருப்பாரோன்னு எனக்கு ஒரு doubt இருக்கு!” – ரெஜினா கசாண்ட்ரா
நிகழ்ச்சி குறித்து ரெஜினா கசாண்ட்ரா பேசும்போது,
ஆர்யா சொன்ன மாதிரி, எனக்கும் இந்த title கேட்ட போதே ஒரு curiosity இருந்துச்சு. கூடவே ஒரு doubt-ம் இருந்துச்சு.
இந்த show-க்கு ஏன் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’னு title வச்சாங்க? ஏன் ‘கிளாஸ் பொண்ணுங்க Vs மாஸ் பசங்க’னு வைக்கலாமே?
ஆர்யாதான் இப்படித் title வைக்க சொல்லியிருப்பாரோன்னு ஒரே சந்தேகம் இருக்கு!”
என சிரித்தபடி குறிப்பிட்டார்.
ZEE தமிழ்ல இப்படியொரு fresh concept-ல ஒரு show வர்றதுல எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி.
‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ – competition எப்படி இருந்தாலும், entertainment-க்கு பஞ்சமே இருக்காது என்றார்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிய ZEE தமிழ் Chief Channel Officer திரு. வி.எஸ். ராகவன்,
ZEE Tamizh தொடர்ந்து புதிய, வித்தியாசமான நிகழ்ச்சிகளை audience-க்கு கொடுத்துக்கிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்று Sa Re Ga Ma Pa மற்றும் Mass Pasanga Vs Class Ponnunga என்ற இரண்டு புதிய shows-ஐ launch பண்ணுகிறோம்.
Sa Re Ga Ma Pa வெறும் singing show கிடையாது; பல பேருடைய talent மற்றும் கனவுகளுக்கு ஒரு பெரிய platform.இந்த புதிய season இன்னும் பிரம்மாண்டமாகவும், music, emotion, entertainment நிறைந்ததாகவும் இருக்கும்.
இந்த journey-க்கு நம்ம judges Vijay prakash, Srinivas மற்றும் Shweta Mohan-ன் support மிகப்பெரிய strength. அதேபோல், Sa Re Ga Ma Pa மூலமாக entertainment-ஐ தாண்டி பல சமூக மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கிறோம் என்பதில் என்றும் பெருமை கொள்கிறோம்.
Mass Pasanga Vs Class Ponnunga ஒரு fun-filled entertainment show மட்டுமல்ல; ஆண், பெண் இருவருடைய differences-ஐ புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் appreciate பண்ணிக்கொள்ளும் ஒரு புதிய experience.
இந்த show-க்கு Arya மற்றும் Regena mentor மற்றும் role model-ஆக இணைந்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்த இரண்டு shows-ம் audience-க்கு புதிய experience-ஐ கொடுக்கும் என்று நம்புகிறோம்.
Kaushik Narasimhan – Programming Head பேசியதாவது
இந்த இரண்டு shows-ம் இதுவரை நீங்கள் பார்த்திராத அளவுக்கு ஒரு பெரிய scale-ல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Sa Re Ga Ma Pa இன்று ZEE Tamizh-ன் ஒரு முக்கியமான அடையாளமாக மாறியிருக்கிறது. இந்த புதிய season இன்னும் பிரம்மாண்டமாகவும், audience எல்லாரும் ரசிக்கிற மாதிரியும் இருக்கும்.
அதேபோல், Mass Pasanga Vs Class Ponnunga முழுக்க முழுக்க fun, energy மற்றும் entertainment நிறைந்த ஒரு புதிய experience-ஆக இருக்கும் என்றார்.
ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் நடுவர்களாகவும், அர்ச்சனா தொகுப்பாளராகவும் இணைந்து வழங்கும் சரிகமப நிகழ்ச்சி சனி & ஞாயிறு இரவு 7.00 மணிக்கு ZEE தமிழில் ஒளிபரப்பாகிறது.
மாஸ்-ஐ கொண்டாடவும், கிளாஸை ரசிக்கவும் ஆர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இணையும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’…
கிகி விஜய் மற்றும் அசார் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு ZEE தமிழில் ஒளிபரப்பாகிறது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ZEE தமிழில் பார்க்க மறக்காதீங்க!
விஜய் சேதுபதி – திரிஷாவின் ‘ராம் – ஜானு’ காதல் மீண்டும் திரையரங்குகளில்
சென்னை: விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த ‘96’ திரைப்படம், வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார். பள்ளிப் பருவத்தில் உருவான காதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் இருவரின் நினைவுகள் மற்றும் அந்த சந்திப்பின்போது வெளிப்படும் உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதி – ராம் கதாபாத்திரத்திலும், திரிஷா – ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இயக்குநர் சி. பிரேம்குமார் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை கவனித்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜு மற்றும் என். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
‘காதலே காதலே’, ‘தி லைஃப் ஆஃப் ராம்’, ‘அந்தாதி’, ‘இரவிங்கு தீவாய்’ உள்ளிட்ட பாடல்கள் படத்தின் உணர்வுகளோடு இணைந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
Madras Enterprises நிறுவனத்தின் சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்துள்ள இப்படம், வெளியான காலகட்டத்திலேயே இளைஞர்கள் முதல் அனைத்து தரப்பு ரசிகர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் நடிப்பில் உருவான ராம் – ஜானு கதாபாத்திரங்கள் ரசிகர்களின் நினைவில் நீங்காத இடத்தைப் பிடித்தன. காதல், பிரிவு, நட்பு, பள்ளிப் பருவ நினைவுகள் மற்றும் நிறைவேறாத காதலின் உணர்வுகளை இயல்பான திரைக்கதை மூலம் பதிவு செய்த ‘96’, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க காதல் திரைப்படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், ‘96’ திரைப்படம் வரும் அக்டோபர் 9, 2026 அன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதன் மூலம் ஏற்கனவே படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் மீண்டும் ‘96’ படத்தின் அனுபவத்தை பெரிய திரையில் கொண்டாடும் வாய்ப்பையும், திரையரங்கில் இப்படத்தைப் பார்க்கத் தவறிய புதிய தலைமுறை ரசிகர்கள் முதன்முறையாக பெரிய திரையில் ‘96’ திரைப்படத்தை ரசிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
ராம் – ஜானுவின் நினைவுகள் மீண்டும் பெரிய திரையில்…
மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே திட்டமிட்டபடி முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, அவரது இணை இயக்குநர் எஸ். பி. அரவிந்த் எழுதி இயக்குகிறார். நடிகர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதற்கட்டப் படப்பிடிப்பு, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினை ஒன்றை அழுத்தமாகப் பேசும் இப்படம், மனித உறவுகளின் ஆழத்தையும் அவற்றுக்குள் இருக்கும் உணர்வுப் போராட்டங்களையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளதுடன், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பாளராக செல்வா RK, இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். கலை இயக்கத்தை ராமு தங்கராஜும், சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயனும் கவனிக்கின்றனர்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டப் படப்பிடிப்புக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பில் வேகம் காட்டி வரும் ‘மாகாளி’, தற்போது பரபரப்பாகத் தயாராகி வருகிறது.
ப்ளாக் ஹோல், சூனியக்காரி, தேவதை எனக் காமெடியும் மாயாஜாலமும் கலந்த வித்தியாசமான உலகம்!
GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபேண்டஸி திரைப்படம் ‘டிரோன்ஸ்’ (Drones). சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
ப்ளாக் ஹோல் எனும் மர்மமான இடத்துக்குள் நுழையும் மூவர், அந்த இடம் குறித்து விசாரணை நடத்தும் காவல் அதிகாரி, சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையே நடக்கும் மோதல் எனப் பல வித்தியாசமான அம்சங்களுடன் ஒரு ஃபேண்டஸி உலகத்தை நம் கண்முன்னே விரிக்கிறது ‘டிரோன்ஸ்’ டிரெய்லர். ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் ஆகிய அம்சங்களுடன் காமெடியும் கலந்து வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான விருந்தாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற ஆடையில் சூனியக்காரி போன்ற தோற்றத்தில் ஒரு பெண்ணும், வெள்ளை நிற ஆடையில் தேவதை போன்ற தோற்றத்தில் மற்றொரு பெண்ணும் நேருக்கு நேர் மோதும் வகையில் இந்தப் போஸ்டர் அமைந்துள்ளது. இருவருக்கும் இடையே உருவாகும் மாயாஜால சக்திகளும், ‘விட்ச் Vs ஏஞ்சல்’ என்ற மோதலும் படத்தின் கற்பனை உலகத்தை வெளிப்படுத்துகின்றன. ஏற்கெனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும் புதிய போஸ்டரும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளன.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை R. ராகவ் மிர்தாத் கவனித்துள்ளார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி S.R. இசையமைத்துள்ளார். சதீஷ் சூர்யா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கற்பனையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மர்மமான கதாபாத்திரங்கள், மாயாஜாலக் காட்சிகள், விறுவிறுப்பான சம்பவங்கள் எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘டிரோன்ஸ்’, வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் இப்படம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் ஃபேண்டஸி, ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி அம்சங்களை ஒன்றிணைத்துள்ளது. குறிப்பாக, வித்தியாசமான கற்பனை உலகங்களையும் மாயாஜாலக் கதைகளையும் விரும்பும் ரசிகர்களுக்கு ‘டிரோன்ஸ்’ புதிய அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GM Morgan Films தயாரிக்கும் இப்படத்தை, ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் K. செந்தில் வெளியிடுகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் ZEE5-ன் பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ புதிய சீசனுடன், சக்திவாய்ந்த கதைக்களத்துடன் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகிறது
சரவணன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் நீதிக்கான மற்றொரு வலுவான போராட்டத்துடன் தொடர் மீண்டும் வருகிறது
நேஷனல், 7 அக்டோபர் 2026: தமிழ் ZEE5 தனது பாராட்டைப் பெற்ற சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசனை அறிவித்துள்ளது. பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ் சசிகலா பிரபாகரன் தயாரித்துள்ள இந்தத் தொடர், முற்றிலும் புதிய வழக்கு, அதிகரிக்கும் சவால்கள் மற்றும் ஆழமான தார்மீகக் குழப்பங்களுடன், நீதித்துறை அமைப்பை மையமாகக் கொண்ட தனது விறுவிறுப்பான கதையாடலை புதிய அத்தியாயத்துடன் தொடர்கிறது. இந்த புதிய சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். அவரது வலுவான திரை ஆளுமை கதைக்களத்திற்கு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. அதேசமயம், கதையின் மையத்தில் இருக்கும் தனது கதாபாத்திரத்தைத் தொடர்ந்து ஏற்று சரவணனும் நடிக்கிறார்.
முதல் சீசனில், தனது மகள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு தந்தை தீக்குளித்த சம்பவத்தால் உருவான அதிர்ச்சிகரமான வழக்கை சரவணன் எதிர்கொண்டார். ஆரம்பத்தில் எளிமையான விசாரணையாகத் தோன்றிய இந்த வழக்கு, படிப்படியாக அதிகாரம், செல்வாக்கு மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் பின்னிப் பிணைந்த சிக்கலான வலையாக மாறியது. நீதியை நிலைநாட்டுவதற்கான தனது முயற்சியில் அவரது உறுதியையும் சோதித்தது.
முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2, நீதியின் சாம்பல் நிறப் பகுதிகளை மேலும் ஆழமாக ஆராயும் முற்றிலும் புதிய வழக்குடன் அதன் அடுத்த கட்டத்தை எட்டுகிறது. நீதிமன்றத் தீர்ப்புகளைத் தாண்டி, அதிகாரம், சலுகை மற்றும் தனிப்பட்ட முடிவுகள் எவ்வாறு உண்மையை நோக்கிய பாதையை அடிக்கடி தீர்மானிக்கின்றன என்பதை இந்தத் தொடர் ஆராய்கிறது. புதிய சவால்கள் உருவாகி, சவால்கள் அதிகரிக்கும் நிலையில், நீதியைத் தேடும் முயற்சியில் தனிநபர்கள் செலுத்தத் தயாராக இருக்கும் விலையை இந்த சீசன் ஆராய்கிறது. அதே நேரத்தில், உணர்வுப்பூர்வமாகவும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் ஒரு விறுவிறுப்பான சட்ட நாடகத்தை வழங்குகிறது. முதல் சீசனை வரையறுத்த நேர்மையான மற்றும் யதார்த்தமான கதையாடலைத் தொடர்ந்து, இந்த புதிய அத்தியாயம் மேலும் தீவிரமான, பல அடுக்குகளைக் கொண்ட மற்றும் பரபரப்பான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘சட்டமும் நீதியும்’ சீசன் 2-ஐ விரைவில் தமிழ் ZEE5-ல் காணுங்கள்.
ZEE5 பற்றி:
ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டில் உருவான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கத்திற்கான உலகளாவிய தளமாகவும் விளங்குகிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் ZEE5, Zee Entertainment Enterprises Ltd.-ன் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமாக செயல்படுகிறது. மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் தள அனுபவம், உள்ளூர் தேவைகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட உள்ளடக்கம், மொழி சார்ந்த தொகுப்புகள் மற்றும் ஏழு மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களை வழங்கும் கொள்கையின் அடிப்படையில் ZEE5 செயல்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி ஆகிய ஏழு மொழிகளில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. Originals, இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரடி விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கம், செய்திகள், நேரலை தொலைக்காட்சி மற்றும் மைக்ரோ டிராமாக்கள் என பரந்த அளவிலான உள்ளடக்கங்களை உள்ளடக்கிய ZEE5, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கான பல்வேறு மொழி பொழுதுபோக்கு மற்றும் நேரடி விளையாட்டு அனுபவங்களுக்கான தளமாக திகழ்கிறது. FIFA உடனான Zee Entertainment நிறுவனத்தின் 2034-ம் ஆண்டு வரை நீடிக்கும் நீண்டகால கூட்டாண்மையின் மூலம், இந்தியாவில் FIFA-வின் முக்கிய கால்பந்து போட்டிகளுக்கான தளமாகவும் ZEE5 விளங்குகிறது. இதில் FIFA World Cup 2026™ மற்றும் 2030 ஆகியவையும் அடங்கும்.
The Indian plastics industry will converge at Plastivision India 2027, the International Plastics Exhibition & Conference, from 21–25 January 2027 at the Bombay Exhibition Centre, Mumbai. Organised by The All India Plastics Manufacturers’ Association (AIPMA), Plastivision India 2027 is positioned as the #2 plastic trade show worldwide in 2027. It will bring together the entire plastics value chain—from raw materials and machinery to moulds, processing technology, finished products and services. India’s plastics industry comprises ~ 94,000 processors, with production of ~ ₹9 lakh crore (US$97 billion) and generates 5 million jobs. With India’s per-capita plastic consumption at just 16 kg, compared with international average of 50 kg, the industry has significant potential for further growth. Plastivision India 2027 will feature 21 concurrent events and programmes, ensuring visitors gain value beyond the exhibition floor through technology discovery, knowledge-sharing, networking and business opportunities. Key themes include Sustainability & Recycling, Automation & Industry 4.0, Startups, MSMEs and International B2B engagement. 12th edition in Decembe 2023 recorded 1,238 exhibitors from 20 countries and 234,000 business visitor footfalls from 400 towns and 84 countries, along with hosted buyers from 26 countries. Mr. Jayesh Khimji Rambhia, Hon. Chairman, Plastivision India 2027, said: “Plastivision is not just a trade show; it is the #1 growth partner for the Indian plastics industry—connecting Indian businesses to global technology, markets and opportunities, and helping them innovate, compete and grow on the world stage.” The exhibition is being promoted extensively in India and overseas, including participation at 100+ leading international trade shows, to bring global technology providers, buyers and business opportunities closer to the Indian plastics industry. Plastivision India 2027 21–25 January 2027 | Bombay Exhibition Centre, Mumbai Organised by: The All India Plastics Manufacturers’ Association (AIPMA) www.plastivision.org
ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International) மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு ஆதரவளித்ததற்கும் ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்த்ததற்கும் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு,மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிநயா செல்வம் பேசியதாவது:
‘அன்பில் அவன்’ படத்துக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கொடுத்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. படம் வெளியான முதல் நாளிலிருந்து வார இறுதி நாட்களில் கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. உங்கள் ஆதரவுதான் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்த அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர், மகா, ஆகாஷ், பிரவீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எழுத்தாளர் விக்னேஷ், இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, எடிட்டர் செல்வா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் உருவாக்கத்தில் துணை நின்ற நிர்வாகத் தயாரிப்பாளர் சேது, PRO யுவராஜ், விளம்பர மற்றும் டிஜிட்டல் குழுவினர், விநியோகஸ்தர்களான ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் மற்றும் திருமுருகன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரையரங்கு உரிமையாளர்களின் ஆதரவும் இந்தப் படத்தின் பயணத்தில் முக்கியமானது.
‘அன்பில் அவன்’ படத்தைப் பற்றிய நல்ல கருத்துகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன; தெலுங்கிலும் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். எங்கள் படத்துக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர் ஆப் ப்ரமோஷன்ஸ் கவிதா பேசியதாவது:
பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் தயாரிப்புக் குழு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு விளம்பரப் பணிகளும் மிகவும் முக்கியமானவை.
‘அன்பில் அவன்’ திரைப்படம் வெளியானதிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு நாளும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவும், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் படத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட விமர்சனங்கள், செய்திகள் மற்றும் தகவல்களும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளன. குறிப்பாக, சனிக்கிழமைக்குப் பிறகு படத்தைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வரத் தொடங்கியதும் எங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது.
இந்தப் படத்தை இன்னும் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். என்னுடன் இணைந்து பணியாற்றிய மங்க்,சித் உள்ளிட்ட விளம்பரக் குழுவினர், வெளிப்புற விளம்பரப் பணிகளை மேற்கொண்டவர்கள், செய்தித்தாள்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை உருவாக்கியவர்கள் என அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொரு பணியையும் சிறப்பாகச் செய்வதற்காக அனைவரும் இணைந்து செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தப் பயணத்தில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளியுங்கள். நன்றி.
கலை இயக்குநர் மணிகண்டன் பேசியதாவது:
“இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. ஏற்கெனவே மூன்று படங்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும், இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. ஆரம்பத்தில் வேறொரு ஆர்ட் டைரக்டர் இந்தப் படத்தில் பணியாற்றினார். அவர் உடல்நலக் குறைவு காரணமாகத் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அசோக் சார் என்னைத் தொடர்பு கொண்டு இந்தப் படத்தில் பணியாற்றச் சொன்னார்.
இப்படத்தில் எனக்கு நல்ல பணிச்சூழல் அமைந்தது. மூணாறில் படமாக்க வேண்டிய பல செட்களை சென்னையிலேயே அமைத்து, செலவுகளையும் குறைத்தோம். இந்தப் படத்திற்காகப் பல செட்களை உருவாக்கியிருந்தோம். கேமராமேன் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். நான் உருவாக்கிய செட்களை அழகாகப் படமாக்கியிருந்தார். இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு நல்ல பணிச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அனைவருக்கும் மிக்க நன்றி” என்றார்.
காஸ்ட்யூம் டிசைனர் பெனிடா பேசியதாவது:
“இந்தப் படம் தான் என்னுடைய முதல் படம். இதில் பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. அனைவரும் இணைந்து பணியாற்றிய விதம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சார், அசோக், ப்ரீத்தி ஆகியோருக்கு நன்றி. அவர்கள் அனைவரும் மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றக்கூடிய நடிகர்கள். அவர்களுக்கான ஆடைகளை வடிவமைத்தது எனக்கு அருமையான அனுபவமாக இருந்தது. படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் நன்றி.
எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், அபி மேடத்திற்கும் நன்றி. தயாரிப்பு வடிவமைப்பாளர் மணி அண்ணா மற்றும் ஒளிப்பதிவாளர் கௌதம் ஆகியோர் படத்தின் தொடக்கம் முதல் எனக்குப் பெரிய ஆதரவாக இருந்தார்கள். இந்தப் படத்தின் மூலம் பல நல்ல நண்பர்களையும் பெற்றிருக்கிறேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அனைவருக்கும் மிக்க நன்றி” என்றார்.
ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மகன் கிரண் ஹெய்ன் பேசியதாவது:
“இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சியில் இப்படிப் பேசுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பத்திரிகையாளர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவளிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல், எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இங்கு வந்து படத்திற்கு ஆதரவு அளிப்பதும் சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் இருவரும் கொஞ்சம் கூச்ச சுபாவம் கொண்டவர்கள் என்பதால், இதற்காகத் தயாராகி வரவில்லை.
இந்தப் படக்குழுவினர் அனைவரும் இவ்வளவு அன்புக்கும் பாராட்டுக்கும் தகுதியானவர்கள். ஒவ்வொருவரும் இந்தப் படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பை மக்கள் பாராட்டுவதையும் ஆதரவு அளிப்பதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பத்திரிகையாளர்கள் இந்தப் படத்தைப் பற்றி மக்களிடம் கொண்டு சேர்த்து, இன்னும் அதிகமான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்க்க உதவ வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி” என்றார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் ஆப்ரஹாம் பேசியதாவது:
“இப்படம் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து எங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி வருகிறார்கள். இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான செய்திகள் எங்களுக்கு தினமும் கிடைத்து வருகின்றன.
ஹேப்பை ஹை பிக்சர்ஸ் ஆரம்பித்தபோது அசோக்கும் அபியும் மகிழ்ச்சியுடன் இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்தார்கள். திரையரங்கில் படம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் அதை மறந்துவிடக் கூடாது, வீட்டிற்குச் சென்ற பிறகும் படத்தைப் பற்றி யோசிக்க வேண்டும், பேச வேண்டும், ஏதோ ஒரு வகையில் அந்தப் படத்தைத் தங்களுடைய வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதுதான் தயாரிப்பில் எங்களுடைய நோக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் படத்தை உருவாக்குவதற்காகப் பல சவால்களைச் சந்தித்தோம். இருந்தாலும், அசோக்கும் அபியும் இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, அனைத்தையும் பணயம் வைத்து எங்களுடன் நின்றார்கள். எனக்குத் தனிப்பட்ட முறையில், ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் இதுபோன்ற உணர்வுபூர்வமான செய்திகள் தான் மிகப்பெரிய வெற்றி. அன்பையும் மரியாதையையும் விலைக்கு வாங்க முடியாது; அதை நம்முடைய உழைப்பால் சம்பாதிக்க வேண்டும். அந்த வகையில், ரசிகர்கள் எங்கள் மீது காட்டும் அன்பும் ஆதரவும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
திரையரங்குகளின் எண்ணிக்கையும் காட்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் மூலம் படத்தின் வருவாயும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். ஆனால், ‘அன்பில் அவன்’ படத்தின் வெற்றியை வெறும் வருவாயுடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. சினிமாவையும் வசூல், மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஒரு திரைப்படம் மனிதர்களிடையே ஏற்படுத்தும் தாக்கமும், கலாச்சார ரீதியாக உருவாக்கும் உரையாடல்களும் மிகவும் முக்கியமானவை. ‘மண்டாடி’, ‘பத்தா’, ‘மீசைய முறுக்கு 2’, ‘ஏழு கடல் ஏழு மலை’ உள்ளிட்ட நல்ல படங்களுடன் இணைந்து திரையரங்குகளில் எங்கள் படமும் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்துகின்றன. எங்களுடைய முதல் தயாரிப்பில் உருவான திரைப்படத்தை மக்கள் இன்றும் நினைவுகூர்வதைப் போல, காதல் மற்றும் திருமணம் குறித்துப் பேசும்போதெல்லாம் ‘அன்பில் அவன்’ படமும் நினைவுகூரப்படும் என்று நம்புகிறேன்.
காதலிப்பவர்கள், காதலிக்க விரும்புபவர்கள், காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்கள், திருமணத்திற்குப் பிறகும் காதலைப் பாதுகாக்க நினைப்பவர்கள் என அனைவருக்குமான படம் இது. அதேபோல், தங்களுடைய கனவுகளுக்காகக் காதலை இழந்துவிடக் கூடாது என்றும், காதலுக்காகத் தங்களுடைய கனவுகளைத் தொலைத்துவிடக் கூடாது என்றும் நினைப்பவர்களும் இந்தப் படத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘அன்பில் அவன்’ படத்தை அனைவரும் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். படம் உங்களைச் சிரிக்க வைக்கும், அழ வைக்கும்; சில விஷயங்களில் உடன்பட வைக்கும், சிலவற்றில் மாறுபடவும் வைக்கும். ஆனால், படம் முடிந்து வெளியே வரும்போது அந்தப் படத்தை உங்களுடன் வீட்டிற்குக் கொண்டு செல்வீர்கள். இந்தப் படத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நன்றி” என்றார்.
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சேது பேசியதாவது..,
“இந்தப் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும், படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள்”.
இயக்குநர் கார்த்திகேயன் பேசியதாவது..,
ஆரம்பத்திலிருந்து எங்களுக்கு ஆதரவளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ரசிகர்கள் படத்துடன் உணர்வுபூர்வமாகத் தொடர்புபடுத்திக்கொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதுடன், நாம் உருவாக்கிய படம் மக்களிடம் சரியாகச் சென்றடைவதும் முக்கியம். ‘அன்பில் அவன்’ படத்தைப் பொறுத்தவரை இந்த இரண்டு விஷயங்களும் நடந்திருக்கின்றன. குறிப்பாக, குடும்பத்தை நேசிக்கும் ஆண்களைப் பற்றியும் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் ரசிகர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகள் எங்களை நெகிழச் செய்கின்றன.
இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் குழுவினர், ஆர்ட் டைரக்டர் மணிகண்டன் ஸ்ரீனிவாசன், காஸ்ட்யூம் டிசைனர் பினிட்டா ராமநாதன், மக்கள் தொடர்பாளர் யுவராஜ், விளம்பரக் குழுவினர் என அனைவருக்கும் நன்றி. திங்க் மியூசிக் நிறுவனத்தினரும் இந்தப் படத்திற்குத் தொடர்ந்து ஆதரவளித்தனர். நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக, ப்ரீத்தியின் நடிப்பும் இறுதிக்காட்சிகளில் அவர் வெளிப்படுத்திய உணர்வுகளும் பாராட்டுக்குரியவை.
அசோக் அண்ணா இந்தப் படத்தை என்னிடம் ஒப்படைத்தபோது மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்தேன். விக்னேஷ் ராஜ் எழுதிய கதையைத் திரைக்கதையாகச் செம்மைப்படுத்துவதற்கும், அதைத் திரையில் சிறப்பாகக் கொண்டுவருவதற்கும் உதவிய அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு புதிய இயக்குநர்களுக்கு மிகவும் முக்கியம். இந்தப் படத்தின் திரைக்கதையைப் பலரும் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. பல இயக்குநர்கள் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதும் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.
என் வாழ்க்கையில் என் தந்தை எனக்கு வழிகாட்டியதைப் போல, சினிமாவில் அசோக் அண்ணா எனக்கு வழிகாட்டியிருக்கிறார். நான் எழுதிய முதல் திரைக்கதையை அவரிடம் கொடுத்தபோது, அதை வாசித்துவிட்டு மறுநாளே மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். அது எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்கள் பயணிப்பதற்கான பாதையை உருவாக்கித் தருகிறார். நான் கேட்டதைவிட அதிகமாகவே இந்தப் படத்திற்காகச் செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியதையும், அவருடைய வெற்றிப் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததையும் பெருமையாகக் கருதுகிறேன்.
மஹா டெல்லி கணேஷ் பேசியதாவது…
“முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அசோக், உங்களுக்கு மிகப் பெரிய நன்றி. இந்தப் படம் என் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது, எனக்கு எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது என் குடும்பத்தினருக்குத்தான் தெரியும். அதற்கு முக்கியக் காரணமாக இருந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இயக்குநருக்கும் மிகப் பெரிய நன்றி. உங்களிடம் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். உங்களைப் பற்றி இன்னும் நிறையப் பேச வேண்டும். ஆனால், நேரம் கருதி சுருக்கமாக முடித்துக்கொள்கிறேன். ப்ரீத்தி, நீங்கள் எனக்குக் கொடுத்த ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். நீங்கள் அளித்த ஒத்துழைப்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
அபி, உங்களுக்கும் மிகப் பெரிய நன்றி. நீங்கள் நடிகர்கள் அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்வதுடன், தொடர்ந்து எங்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறீர்கள். எங்கள் அனைவருக்கும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. படக்குழுவில் உள்ள மற்ற அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடன் பணியாற்றிய பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நீங்கள் உருவாக்கும் படங்கள் அனைத்தும் பெரிய வெற்றிப் படங்களாக மாற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இறுதியாக, இங்கு வந்திருக்கும் எனது அம்மாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”
நடிகர் கதிர் பாலு பேசியதாவது..,
முதலில் என் பெற்றோருக்கும் வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. என் குரு பி. வாசு சாருக்கும், வழிகாட்டி ராதாரவி அண்ணனுக்கும், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. ‘அன்பில் அவன்’ என் வாழ்க்கையிலும் திரைப்பயணத்திலும் முக்கியமான படம். என் அப்பாவைப் போல இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்கு வந்தேன். இன்றும் அந்தக் கனவு என்னுள் இருக்கிறது. இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அன்பில் அவனுக்கு நன்றி.
இயக்குநர் கார்த்திகேயன், மகேஷ் உள்ளிட்டவர்கள் என்னுடைய நடிப்பில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர உதவியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பில் அவர்கள் காட்டிய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நேரில் பார்த்திருக்கிறேன்.
இதுவரை பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தை வெறுமனே கத்திப் பேசாமல், நடிப்பின் மூலம் எப்படிக் கொண்டு செல்லலாம் என்பதை இந்தப் படம் கற்றுக்கொடுத்தது. வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அசோக் செல்வன் சார் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். திறமை இருந்தும் வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு அவர் ஆதரவளிப்பது பாராட்டுக்குரியது.
மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும் மறக்க முடியாது. இரவு முதல் மறுநாள் காலை வரை குளிரில் சண்டைக் காட்சிகளில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பில் அசோக் சார் எனக்கு உதவியாக இருந்தார். இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அனுபவமும் அங்கீகாரமும் மகிழ்ச்சியளிக்கின்றன. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அசோக் செல்வன், இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நடிகர் ஆகாஷ் பேசியதாவது..,
“முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது அசோக் சாருக்குத்தான். என்னுடைய ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் நாகராஜ் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று முதலில் முடிவு செய்தவர் அவர்தான். அடுத்ததாக, என்னுடைய இயக்குநர் கார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. என் பெயர் ஆகாஷ் முருகன். ‘அன்பில் அவன்’ படத்தில் நாகராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது:
“இந்தப் படத்தைப் பற்றி நாங்கள் கடைசியாக மேடையில் பேசுகிறோம் என்று நினைக்கும்போது மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது. படக்குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் ஏற்கெனவே நன்றி தெரிவித்துவிட்டேன். இப்போது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். படத்தைப் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் படித்தேன். படம் எப்படி இருக்கிறது என்பதைத் தாண்டி, அதன் பின்னால் இருக்கும் உழைப்பையும் ஆர்வத்தையும் கவனித்து மிகவும் அழகாக விமர்சனங்களை எழுதியிருந்தீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
படம் வெளியானதிலிருந்து ரசிகர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாகப் பெண்களும் இளம் பெண்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டு, அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்றால், அதுவே மிகப்பெரிய விஷயம். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் என் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல, நாங்கள் உருவாக்கிய ஒரு படம் மற்றவர்களின் மனதிலும் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதை ஒரு வரமாகத்தான் பார்க்கிறேன். படத்தைத் திரையரங்கில் பார்த்து, எங்களுடைய உழைப்பைப் பாராட்டி, தங்களுடைய அன்பையும் ஆதரவையும் பகிர்ந்துகொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.
இந்தப் படத்தை முதன்முதலில் பார்த்த அனுபவம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட பதற்றத்தால், படத்தைத் தொடக்கத்திலிருந்து திரையரங்கில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. படம் ஓடிக்கொண்டிருந்தபோது உள்ளே சென்று, பக்கவாட்டுப் படிக்கட்டில் நின்றபடியே பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் கார்த்திக், அசோக் உள்ளிட்ட படக்குழுவினரும் அப்போது என்னுடன் இருந்தார்கள். அப்படியே சுமார் ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டே முழுப் படத்தையும் பார்த்தேன். அப்போது கண்களில் கண்ணீர் வந்தது. படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைத் தாண்டி, நாங்கள் உருவாக்கிய படத்தைப் பார்த்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அழகாகவும் படம் அமைந்திருந்தது. ஒரு நடிகையாக இப்படிப்பட்ட திரைப்படத்தில் நடிப்பது உண்மையிலேயே ஒரு வரம். எதிர்காலத்தில் இந்தப் படத்தைத் திரும்பிப் பார்க்கும்போதும், இதில் நடித்ததற்காகப் பெருமைப்படுவேன்.
இந்தப் படத்தின் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் மிகவும் அழகாக இருந்தன. ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் பரபரப்பு, உணர்வுகள், காதல் என அனைத்தையும் திரையரங்கில் அமர்ந்து உணர முடிந்தது. ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்காக இயக்குநர் கார்த்திக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கு நடிப்பதற்கு நிறைய இடம் கொடுத்து, என்னுடைய கதாபாத்திரத்தையும் அழகாக எழுதியிருந்தார். குறிப்பாக, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்துடன் எனக்கு வரும் காட்சிகளைப் பலரும் பாராட்டினார்கள். அந்தக் காட்சிகளைப் பற்றிப் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படம் உண்மையிலேயே மனதைத் தொடும் அழகான சினிமா அனுபவம். எனவே, அனைவரும் திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். மக்கள் படத்தை ரசித்துப் பாராட்டுவதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் மீண்டும் நன்றி.”
“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு முதலில் நன்றி. ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் எனக்கு மிகப்பெரிய பலம். அந்த வரிசையில் ‘அன்பில் அவன்’ படத்தையும் பார்க்கிறேன். காதல் கதையாகத் தொடங்கி, த்ரில்லர், ஆக்ஷன் எனப் பல ஜானர்களில் பயணிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்துப் பலர் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இதன் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்.
படம் வெளியானது முதல் பத்திரிகை, ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் வெளியானாலும், படம் தொடர்ந்து வளர்ந்து தற்போது லாபகரமான நிலையை எட்டியிருக்கிறது. இன்னும் பலர் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்களின் விமர்சனங்களை மட்டும் நம்பாமல், படத்தைப் பார்த்து உங்களுடைய கருத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் படம் பின்னாளில் இன்னும் அதிகமாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் கார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் கௌதம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்துக்காக அனைவரும் முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறோம். எனது பெற்றோர், மனைவி மற்றும் குடும்பத்தினர் அளித்த ஆதரவும் முக்கியமானது. அபி உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினர், நண்பர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க முடிந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நானும் சினிமாவுக்கு வருவதற்காகப் பல ஆடிஷன்களில் பங்கேற்றிருக்கிறேன். அதனால் திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது. மஹா, கதிர், ஆகாஷ், பிரவீன், தீபன் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் நல்ல அடையாளத்தைத் தந்திருப்பதாக நம்புகிறேன். காதலின் ஆழத்தையும் உணர்வுகளையும் பேசும் இந்தப் படம், காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் எனப் பலருக்கும் நெருக்கமான அனுபவமாக இருக்கும். இன்னும் திரையரங்கில் பார்க்காதவர்கள் அவசியம் பார்த்து ஆதரவு தர வேண்டும்.” என்றார்.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம், காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
The Madras Management Association (MMA), in association with TimeLinks and Konrad-Adenauer-Stiftung, organised a special programme titled “Beyond the Hurdles – The Champion’s Mindset for Leadership Excellence” at the MMA Management Center, Chennai, celebrating the outstanding achievements of Indian Olympian and Asian Games medallist Ms Vithya Ramraj.
The highlight of the evening was an engaging conversation between Ms Vithya Ramraj and Indian table tennis legend and Padma Shri awardee Mr Achanta Sharath Kamal, who explored the mindset, discipline and resilience behind sustained excellence in competitive sport. The programme sought to draw meaningful parallels between sporting excellence and leadership in business and management.
At the recently concluded Asian Games in Nagoya, Vithya created history by clocking 54.75 seconds in the women’s 400m hurdles, setting a new Indian national record and surpassing the iconic benchmark established by P. T. Usha at the 1984 Los Angeles Olympics. She also won Gold in the women’s 4×400m relay, Silver in the mixed 4×400m relay and Bronze in the 400m hurdles.
During the conversation, Vithya spoke about the years of disciplined preparation, family support, coaching, setbacks and incremental improvement that contributed to her record-breaking performance. She emphasised that success at the highest level is rarely the result of one extraordinary moment, but the outcome of consistency, perseverance and the determination to keep improving.
Drawing from his own distinguished sporting career, Mr Achanta Sharath Kamal observed that champions are defined not merely by medals, but by their ability to remain focused through setbacks, continuously raise their own benchmarks and perform under pressure. He highlighted the importance of preparation, mental strength, adaptability and the constant pursuit of improvement—qualities equally relevant to leaders and organisations.
Welcoming the gathering, Mr A R Unnikrishnan, President, MMA and Managing Director, Saint-Gobain India Pvt Ltd – Glass Business, said that Vithya Ramraj’s journey offered powerful lessons for the management community. He noted that leadership, like high-performance sport, demands discipline, resilience, teamwork and the ability to stay committed to long-term goals even when immediate results are not visible.
-2-
In her opening remarks, Ms Chitra Sivakumar, Managing Partner, TimeLinks, highlighted the importance of recognising not only sporting achievement but also the ecosystem that enables excellence. She observed that Vithya’s journey demonstrated the significant role played by family, coaches, mentors and support systems in nurturing talent and enabling individuals to realise their potential.
The discussion also touched upon marginal gains, performance under pressure, the role of data and coaching, balancing individual excellence with team responsibility, and the importance of setting fresh goals even after achieving major milestones.
Gp Capt R Vijayakumar (Retd), VSM, Executive Director, MMA, added, “MMA is privileged to host this special event honouring the outstanding achievements of Ms Vithya Ramraj. Her journey from modest beginnings in Coimbatore to representing India on the international stage exemplifies the power of perseverance, discipline and collective effort. Supported by her family, twin sister Nithya and her coaches, her remarkable sporting journey reinforces the enduring lesson that excellence is built through sustained effort, resilience and a strong support system.”
The programme concluded with an interactive session with MMA members and a felicitation of Ms Vithya Ramraj in recognition of her outstanding contribution to Indian athletics.
Photo Caption:
Indian Olympian and Asian Games medallist Ms Vithya Ramraj with Indian table tennis legend and Padma Shri awardee Mr Achanta Sharath Kamal, Mr A R Unnikrishnan, President, Madras Management Association, Ms Chitra Sivakumar, Managing Partner, TimeLinks, and other dignitaries at the MMA programme “Beyond the Hurdles – The Champion’s Mindset for Leadership Excellence” held in Chennai.
For more details about Madras Management Association, please visit: www.mmachennai.org
CARVED IN STRENGTH celebrates artisans preserving generations of craftsmanship while adapting traditional woodcraft for a changing world
Chennai, October 07, 2026
SharonPly honoured five master woodcraft artisans at the seventh edition of its annual I AM STRONGEST Awards, recognising their exceptional craftsmanship, dedication and contribution to preserving India’s rich woodcraft traditions.
The 2026 edition, themed “CARVED IN STRENGTH: Honouring Generations of Craftsmanship & Innovation,” celebrated the people behind some of the country’s most intricate wooden creations. From temple chariots and sacred sculptures to monumental doors and architectural woodwork, the awardees represent generations of knowledge, skill and perseverance that continue to keep traditional craftsmanship alive.
The five awardees were Perunthachar Appar Lakshmanan, Dr. R. Rangachari Sthapathi, Thiru. S. Maasanam Achari, Thiru. S. Thirunavukkarasu Sthapathi, and Thiru. Kumarasamy Ramesh Sthapathi. Their work spans temple and heritage projects across India and overseas, while their contributions extend beyond craftsmanship to training, knowledge-sharing and supporting the wider artisan community.
Perunthachar Appar Lakshmanan was recognised for his innovative approach to traditional carpentry, including his distinctive wooden car, bike and household creations. A master carpenter from the Thiruvallur region, he has created temple chariots at several locations across Tamil Nadu, including the Tamil Ther at Chennai International Airport. A recipient of the Poompuhar State Award for 2011–2012, he has also authored ten books on carpentry and trained students in wood sculpture.
Dr. R. Rangachari Sthapathi was honoured for carrying forward a 13-generation legacy of temple chariot making and traditional wood sculpture. Through Rangachari Traditional Wood Sculptures, he creates hand-carved sculptures, decorative panels and architectural woodwork rooted in Tamil Nadu’s craft traditions. His work reflects both the intricate detailing of traditional sculpture and his commitment to passing this knowledge on to future generations.
Thiru. S. Maasanam Achari was recognised for his mastery of large-scale wood carving using traditional hand tools. Based in Madurai, he continues a family craft tradition spanning for about 55 years, working with his brothers to create deity figures, Chettinad-style doors and pooja mandapams. His family workshop has contributed wooden structural components to the Meenakshi Amman Temple’s Velli Ambalam silver mandapam and supplied carved pillars and deity sculptures to Malaysia.
Thiru. S. Thirunavukkarasu Sthapathi was honoured for his extensive contribution to crafting temple vahanams and preserving the intricate sculptural traditions associated with sacred processional works. A graduate of the Government College of Sculpture and Architecture, Mamallapuram, he carries forward his traditional practice through MARABU in Andipandal. His major works include a 62-foot chariot for the Sri Pandurangan–Rukmini Temple at Govindapuram and the 32-foot Athi Vinayagar sculpture, carved from athi wood, installed in Nagapattinam.
Thiru. Kumarasamy Ramesh Sthapathi was recognised for combining craftsmanship with a strong commitment to the welfare of fellow artisans. With more than two decades of experience, he leads Manasa Wood Creations, specialising in traditional woodcraft and large temple timber structures. Among his major projects are the 90 doors created for Ayodhya’s Shri Ram Janmabhoomi Mandir, handed over in November 2025, along with temple projects undertaken in India and overseas.
Speaking on the occasion, Mr Vishnu Khemani, Founder and Managing Director, SharonPly, said, “A finished creation reflects not just skill, but years of learning, discipline and experience. Through this year’s I AM STRONGEST Awards, we place the maker at the centre, celebrating artisans whose expertise preserves traditional knowledge while evolving with contemporary needs. CARVED IN STRENGTH reflects SharonPly’s long standing association with wood and our respect for the craftsmanship that transforms it into functional, architectural and cultural creations. By honouring these masters of woodcraft, we hope to inspire greater appreciation for skilled craftsmanship and encourage the transfer of knowledge across generations. I AM STRONGEST continues to spotlight individuals whose achievements and contributions inspire others”.
I AM STRONGEST: Celebrating Strength in Every Form
Launched in 2019, the SharonPly I AM STRONGEST Awards celebrates individuals whose actions demonstrate strength, resilience and service to society. Its first edition honoured wheelchair basketball player Malathi and social change maker Logammal. In 2020, the Awards paid tribute to frontline workers who lost their lives during the COVID-19 pandemic, while the 2021 edition recognised everyday heroes who supported communities during the pandemic’s second wave. Both editions were held online. In 2022, the platform turned its attention to animal welfare, celebrating individuals whose work extended to birds, elephants and other animals. The 2024 edition honoured Tamil Nadu’s Olympic hockey legends, while the 2025 edition recognised retired senior Army officers who continue to contribute to public understanding as defence analysts.
With each edition, I AM STRONGEST has sought to make a different form of strength visible. In 2026, the spotlight turned to artisans whose names may be less familiar than the remarkable works they have created—recognising the skill, experience and dedication behind generations of craftsmanship.
மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா இயக்கி நடிக்கும் ‘செய் செய்யாதே’ (Do’s and Don’ts) திரைப்படம் 30 அக்டோபர் 2026ல் திரைக்கு வருகிறது
திரைப்படத் துறையை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் சமூக விழிப்புணர்வையும் புதிய திறமைகளுக்கான வாய்ப்புகளையும் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்வாதாரத்தையும் இணைக்கும் உயரிய நோக்குடன் உருவெடுத்துள்ளது ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்’ (Harini Subbu Cine Creations).
ஒரு குடும்ப உரையாடலில் உதித்த சமூகக் கனவு
கடந்த 2023ம் ஆண்டு மக்களிடையே நேர்மறை சிந்தனைகளையும் பயனுள்ள கருத்துகளையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் கணவன்-மனைவி இடையே நடந்த ஒரு உரையாடலே இந்நிறுவனத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது. தனது நீண்டகால மருத்துவ அனுபவத்தில் தான் கண்ட மனிதர்களின் உணர்வுகளையும் சிக்கல்களையும், கலை வடிவமான திரைப்படங்கள் மூலம் வெளிப்படுத்த மருத்துவர் டாக்டர் எஸ். ராஜா அவர்கள் முடிவெடுத்தார்.
நிறுவனர்கள் & தயாரிப்புப் பின்னணி
டாக்டர் எஸ். ராஜா, எம்.டி.: நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர். இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை மற்றும் இயக்கப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.
சுபலட்சுமி ஜெயராம், B.Sc. (California, USA): நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராகச் செயல்பட்டு படைப்புக்கான முழுத் தயாரிப்புத் துணையையும் வழங்குகிறார்.
” மனிதநேயம் எங்கள் அடித்தளம் திறமை வளர்ப்பு எங்கள் பொறுப்பு தன்னிறைவு வாழ்க்கை எங்கள் இலக்கு” என்பதே இந்நிறுவனத்தின் முதன்மை கொள்கையாகும்.
அக்டோபர் 2026-இல் ‘செய் செய்யாதே (Do’s and Don’ts)’ திரையரங்க வெளியீடு
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ்த் திரைப்படமான ‘செய் செய்யாதே’ (Do’s and Don’ts) சென்சார் தணிக்கை நிறைவு பெற்று திரையரங்க வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இத்திரைப்படம் வரும் 30 அக்டோபர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள்: நடிப்பு: எச். ராஜா, குரு, தர்ஷினி ரெட்டி பாடல்: ஹரிணி படத்தொகுப்பு: ராஜா முகமது ஒளிப்பதிவு: இராமநாத் வாசு மக்கள் தொடர்பு : பா. சிவக்குமார்
கிராமத்திலிருந்து சர்வதேச தளம் வரை:
டாக்டர் ராஜாவின் பின்னணி பேருந்து வசதி கூட இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்த டாக்டர் ராஜா. சிறுவயதிலேயே உழைப்பையும் குடும்பப் பாசத்தையும் கற்றுக்கொண்டவர். தேவகோட்டையில் பள்ளிப் படிப்பையும், மதுரையில் மருத்துவப் படிப்பையும் முடித்த இவர். மாணவர் பருவத்திலிருந்தே சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு 18 கிராமங்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவராகத் திகழ்ந்தார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ (Trinidad and Tobago) மற்றும் அமெரிக்கா என உலகளவில் தனது மருத்துவப் பணியை விரிவுபடுத்திய இவர். மருத்துவம், நிர்வாகம் மற்றும் குழந்தை மருத்துவத்துடன் திரைப்பட இயக்கத்திலும் தேர்ச்சி பெற்றார். சுமார் 25 திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்த அனுபவமும், 2018ல் ஹாலிவுட்டில் பெற்ற இயக்கப் பயிற்சியும் இவரது திரைப்பட உருவாக்கத்திற்கு உறுதுணையாக அமைந்தன.
வசதியற்ற மக்களுக்கு இலவச மருத்துவச் சேவைகளை வழங்கியதோடு விளம்பரமின்றி பல எளிய குடும்பங்களுக்கு உதவிய பெருமை இவருக்கு உண்டு.
சமூக நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்
புதிய திறமைகளுக்கான மேடை:
தன் முதல் திரைப்படத்திலேயே பெரும்பாலான புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் சுமார் 10 கதைகள் தயார்நிலையில் உள்ளன.
ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 25 ஏக்கர் வாழ்வாதார வளாகம்:
திரைப்படம் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் சிறப்பு வளாகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த வளாகத்தில் கல்வி, சிகிச்சை, உணர்வுசார் ஆதரவு, தொழிற்பயிற்சி, உற்பத்தி அலகுகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.
சமூகத்திற்கான திரைப்பட வருவாய்:
திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை நிறுவனர்களின் சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தாமல் முழுமையாக இச்சமூக மேம்பாட்டுத் திட்டத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கும் மட்டுமே பயன்படுத்தவுள்ளனர்.
திரைப்பட ரசிகர்களின் ஆதரவு, புதிய கலைஞர்களின் வளர்ச்சிக்கும், சிறப்புப் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் பெரும் துணையாக இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.