Breaking
September 16, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

ஆணட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த சீரிஸை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு  ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக வதந்தி சீசன் 2 உருவாகியுள்ளது. 

மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

CHENNAI,India—July 27, 2026   —  ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. 

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ஸ்ட்ரீமிங் தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் சீரிஸான ‘வதந்தி’ சீரிஸின் இரண்டாவது சீசனான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட சீரிஸை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். இதில் எம். சசிகுமார், எஸ்.ஐ. மூசா ரஸா என்ற நேர்மையான, உண்மையைத் தேடி விடாமுயற்சியுடன் செயல்படும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மதுரையின் கலாச்சாரப் பின்னணியையும், உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவின் துடிப்பையும் கதையுடன் இயல்பாக இணைக்கும் இந்த சீசன், வதந்தி தொடரின் அடையாளமான ‘வதந்தி Vs உண்மை’ என்ற மையக்கருவை மேலும் ஆழமாக ஆராய்கிறது. பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை, சிக்கலான கதாபாத்திரங்கள், உணர்வுபூர்வமான உறவுகள் ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை இறுதி வரை பரபரப்பில் வைத்திருக்கும் வகையில் கதை நகர்கிறது. 

நெடுஞ்சாலை திட்டத்தின் தொடக்க விழாவின்போது எலும்புக்கூடு எச்சங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அந்த விசாரணையை மேற்கொள்ளும் எஸ்.ஐ. மூசா ரஸா, ‘மணி’ என்ற மர்மமான கைதியை நோக்கி செல்லும் எதிர்பாராத தடயங்களை கண்டுபிடிக்கிறார். அரசியல் அழுத்தம், ஊடக பரபரப்பு மற்றும் மனித மனங்களின் பலவீனங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் உண்மையை வெளிக்கொணர அவர் மேற்கொள்ளும் போராட்டமே இந்த சீசனின் மையக்கதை. 

பிரைம் வீடியோ இந்தியா – ஒரிஜினல்ஸ் பிரிவு இயக்குநரும், தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில், 

“தென்னிந்திய கதைகள் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘வதந்தி’ எங்களுக்கு மிகவும் பெருமை சேர்த்த தொடர்களில் ஒன்று. முதல் சீசன், வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான எல்லையை மிகவும் வித்தியாசமாக சித்தரித்து, சஸ்பென்ஸ் குற்ற திரில்லர் வகையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது. இப்போது இரண்டாவது சீசனை உலகம் முழுவதும் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் மகிழ்ச்சி எங்களுக்கு உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இயக்குநராக இணைந்திருப்பதும், மதுரையின் கலாச்சாரப் பின்னணியில் நகரும் இந்த பரபரப்பான கதை தொடரை மேலும் உயர்த்தியுள்ளது. புஷ்கர் – காயத்ரியுடன் எங்கள் கூட்டணி தொடர்வது பெருமைக்குரியது. கலாச்சார வேர்களை இழக்காமல் உலகளாவிய ரசிகர்களை கவரும் கதைகளை உருவாக்கும் அவர்களின் திறமை அபாரமானது. இந்த சீசனும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார். 

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி கூறுகையில்,

“சஸ்பென்ஸ், உண்மை மற்றும் மனிதர்களின் பார்வை ஆகியவற்றின் தனித்துவமான கலவையைத் தக்கவைத்துக் கொண்டே, உணர்வுபூர்வமாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும் ஒரு கதையை இந்த இரண்டாவது சீசன் சொல்கிறது. ஆண்ட்ரூ லூயிஸ் மீண்டும் இந்தக் கதையை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளார். தொடரின் அடையாளத்தைப் பாதுகாத்தபடியே, அதை புதிய திசையில் கொண்டு சென்றுள்ளார். சசிகுமார் மற்றும் முழு நடிகர் குழுவும் கதைக்கு மிகுந்த ஆழத்தை அளிக்கும் வகையில் அசாதாரணமான நடிப்பை வழங்கியுள்ளனர். கலாச்சார வேர்களைக் கொண்ட கதைகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரைம் வீடியோவுக்கு நன்றி. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’யை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தனர்

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?”
சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள்! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதை படம் அழகாக எடுத்துரைக்கிறது.

இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் இளன், தனது வழக்கமான நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட கதை சொல்லும் பாணியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் இளன்,  சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைகிறது.

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறியதாவது ..

“மிகவும் சுவாரஸ்யமான காதல் கதைகள் என்பது விதிகளைப் பின்பற்றுபவை அல்ல; அவற்றைத் துணிச்சலாக மறுபடியும் எழுதுபவை. “பியார் பிரேமா கல்யாணம்” ஒரு எளிமையான ஆனால் துணிச்சலான கேள்வியுடன் தொடங்குகிறது: திருமணத்திற்குப் பிறகு, மணமகன் மணமகள் வீட்டிற்கே குடிபெயர்ந்தால் என்ன ஆகும்? அந்த ஒரு சிந்தனையே, நவீன உறவுகள், குடும்பம் மற்றும் தங்களுக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் தைரியத்தை கொண்டாடும், புத்துணர்ச்சியூட்டும் நகைச்சுவை, மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு கதையாக விரிகிறது.

இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமாகும் இளன், இந்தப் படத்திற்கு புதியதொரு படைப்பாற்றல்மிக்க பார்வையை கொண்டு வந்துள்ளார். அவருடன் இணைந்திருக்கும் அற்புதமான நட்சத்திரக் குழுவும் ஒவ்வொரு தருணத்திலும் உணர்வுப்பூர்வமான நடிப்பையும், நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பையும் தந்து நம்மை ஈர்க்கின்றனர்.

Made in Korea திரைப்படத்திற்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்ரீநிதி சாகர் மற்றும் Rise East Entertainment குழுவுடன் எங்களது கூட்டணியைத் தொடர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த மகிழ்ச்சிகரமான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டுகளிப்பதற்காக நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

படம் பற்றி தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் கூறுகையில்..,

”‘மேட் இன் கொரியா’ திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பு, உண்மையான தமிழ் கதைகளும் உலகளாவிய ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை நிரூபித்தது. அதுபோன்ற இதயப்பூர்வமான, நகைச்சுவை நிறைந்த மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய இன்னொரு கதையை தேடிக் கொண்டிருந்தபோது, ‘ பியார் பிரேமா கல்யாணம்’ எங்களை உடனே கவர்ந்தது. நவீன உறவுகளின் சவால்களை, தமிழ் குடும்ப மதிப்புகளுடன் இணைத்து சொல்லும் இந்தப் படம் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் சார்பில், இந்தப் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ஆகஸ்ட் 21 முதல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.”

படத்திற்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, தனது மனதை வருடும் இசையின் மூலம் காதல், குடும்பம், தனித்துவம் மற்றும் வாழ்க்கையின் மகிழ்ச்சியை மேலும் அழகாக உணர வைக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான ஆச்சரியங்கள் தொடங்குகின்றன என்பதை நகைச்சுவையுடனும், மனதைத் தொடும் தருணங்களுடனும் சொல்ல வரும் ‘ப்யார் பிரேமா கல்யாணம்’, ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!

சூர்யா குரலில் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியீடு! “விஸ்வநாத் & சன்ஸ்” கொண்டாட்டம் தொடங்கியது!

“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான  திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாக, நடிகர் சூர்யா தானே தனது குரலில் பாடியிருப்பது ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவரது குரலும், திரையில் வெளிப்படும் உற்சாகமான நடிப்பும் இணைந்து பாடலுக்கு கூடுதல் உயிர் கொடுத்துள்ளன.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒருமுறை தனது துள்ளலான மற்றும் கொண்டாட்ட மனநிலையை பிரதிபலிக்கும் இசையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். பாடலாசிரியர் கென் கருணாஸ் எழுதிய வரிகள், திருமண விழாவின் மகிழ்ச்சியையும் குடும்ப உறவுகளின் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.

ஏற்கனவே “பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “தி வெட்டிங் சாங்” பாடலும் அதே வரிசையில் ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப் பாடல்கள் வெளியாகியுள்ளதால், “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர்சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர்  ( Fortune Four Cinemas )   சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் நிறுவனம் படத்தை வழங்குகிறது.

இந்தியா முழுவதும் சுதந்திர தின வார இறுதி கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5 தமிழ் தனது அடுத்த பெரிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ‘நூறு சாமி’யை அறிவித்துள்ளது

‘பரிமளா & கோ’வின் அபார வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆகஸ்டில் குடும்பங்கள் ரசிக்க இன்னொரு திரைப்படத்தை கொண்டு வருகிறது ZEE5 தமிழ்

சென்னை, ஜூலை 24, 2026: விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, இதயத்தைத் தொடும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நூறு சாமி’ இந்த ஆகஸ்டில் ZEE5 தளத்தில் OTT-யில் பிரீமியராக வெளியாகவுள்ளதாக ZEE5 தமிழ் அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த அறிவிப்பு ZEE5 தமிழுக்கு மிகவும் உற்சாகமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் OTT-யில் வெளியான ‘பரிமளா & கோ’ குடும்ப பார்வையாளர்களின் விருப்பமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம், தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள் மூலம் எதிர்பார்ப்புகளை மீறிய வெற்றியைப் பெற்றது. குடும்ப பார்வையாளர்கள் மட்டுமின்றி நகைச்சுவையை விரும்பும் ரசிகர்களிடமும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று, ZEE5 தளத்தில் பிரபலமான திரைப்படமாக மாறியது. இந்த வெற்றி, மண்ணின் மணம் மிக்க, நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும், முழு குடும்பமும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படங்களை வழங்க வேண்டும் என்ற ZEE5 தமிழின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.

அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ZEE5 தமிழ் தற்போது ‘நூறு சாமி’ திரைப்படத்தை கொண்டு வருகிறது. முழு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் திறன் கொண்ட இப்படம், முற்றிலும் மாறுபட்ட உணர்வுப்பூர்வமான மையக்கருவை கொண்டுள்ளது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘நூறு சாமி’, தனது மகனையும் குடும்பத்தையும் முன்னிலைப்படுத்தி, பல ஆண்டுகளாக தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்த ஒரு விதவை தாயின் கதையைச் சொல்கிறது. தனது 40-களின் நடுப்பகுதியில், மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கைத்துணையைத் தேட வேண்டும் என்று முடிவு செய்யும் போது, உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் ஒரு தாயின் வாழ்க்கை எப்போதும் குடும்பத்தை மட்டுமே சுற்றி இருக்க வேண்டும் என்று நம்பும் சமூகத்தின் எதிர்ப்பை அவர் சந்திக்கிறார்.

இந்தக் கதையின் மையத்தில், ஒரு தாய்க்கும் அவரது மகனுக்கும் இடையேயான அழகான, ஆழமான, மனதை நெகிழச் செய்யும் உறவு இருக்கிறது. விஜய் ஆண்டனியின் முந்தைய திரைப்படங்களில் பாராட்டப்பட்ட தாய்-மகன் உறவுகளைப் போலவே, இந்தப் படமும் ஒரு தாய் தனது வாழ்நாள் முழுவதும் செய்யும் எண்ணற்ற தியாகங்களை வெளிப்படுத்துகிறது. ஆனால், இந்த திரைப்படத்தை தனித்துவமாக்குவது என்னவென்றால், மகன் தனது தாயின் கஷ்டங்களையும் தியாகங்களையும் பார்த்து புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தனது தாயின் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்க அவர் ஊக்குவிப்பதும்தான். இந்த புத்துணர்ச்சியூட்டும் உறவுமுறை, கதையின் உணர்வுப்பூர்வமான மையத்தை மேலும் உயர்த்தி, தாயின் தியாகத்தை மட்டும் சித்தரிக்கும் வழக்கமான அணுகுமுறையைத் தாண்டி, திரையில் இதுவரை காணப்பட்ட மிகவும் மனதைத் தொடும் தாய்-மகன் உறவுகளில் ஒன்றாக இதை மாற்றுகிறது.

‘நூறு சாமி’ ஒரு தனித்தாய் பற்றிய கதையைச் சொன்னாலும், அதன் உணர்வுகள் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தைத் தாண்டி செல்கின்றன. திருமணம், தாய்மை, தியாகம், துணை வாழ்க்கை மற்றும் பெண்கள்மீது சமூகம் வைக்கும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை இப்படம் ஆராய்கிறது. இதனால், பல தலைமுறைகளைச் சேர்ந்த தாய்மார்களும், திருமணமான பெண்களும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதையாக இது அமைந்துள்ளது.

திரையரங்குகளிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆரம்பத்தில் சுமாரான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், நேர்மறையான வாய்மொழி பாராட்டுகளால் இரண்டாவது வாரத்தில் இப்படத்தின் வரவேற்பு அதிகரித்து, மூன்றாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடியது. அதன் உணர்வுப்பூர்வமான கதை மற்றும் சிறப்பான நடிப்புகள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.

இதுகுறித்து தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ் & மலையாள வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் பேசியதாவது:

“இன்றைய பார்வையாளர்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டுமல்லாமல், சமூகத்தில் உருவாகி வரும் மாற்றங்களை பிரதிபலிக்கும், சிந்திக்க வைக்கும் கதைகளையும் எதிர்பார்க்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ‘நூறு சாமி’ அப்படிப்பட்ட திரைப்படமாகும். ஆழமான பிராந்திய பின்னணியைக் கொண்ட கதையை, முன்னோக்கிய சிந்தனையுடன் கூடிய கருத்துகளோடு இணைத்து, உணர்வுப்பூர்வமாகவும், அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய வகையிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. ‘பரிமளா & கோ’ திரைப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு, உண்மையான மற்றும் நம் வாழ்க்கையோடு இணையும் கதைகளுக்கான பார்வையாளர்களின் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அந்தப் பயணத்தில், ‘நூறு சாமி’ மற்றொரு வலுவான அத்தியாயத்தை சேர்க்கிறது. பல மொழிகளில் குடும்ப பொழுதுபோக்கிற்கான முதன்மை தளமாக ZEE5-இன் நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், பல்வகை உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்கி வரும் நிலையில், இந்த மனதைத் தொடும் கதையை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் குடும்பங்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,” எனத் தெரிவித்தார்.

‘பரிமளா & கோ’ வழங்கிய சிரிப்பும், கலகலப்பும் நிறைந்த அனுபவத்திற்குப் பிறகு, இப்போது மனதை வருடும் ஒரு கதையை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது.

‘நூறு சாமி’ இந்த ஆகஸ்டில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொள்ள பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டிருக்கிறார்.

ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால்.. இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ கன்னக் குழியா..’ என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி, ஏறத்தாழ மூன்று மில்லியன் டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்த நிலையில்.. தற்போது ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடலை படத்தின் இயக்குனர் விஷ்ணு எடவன் எழுத அனிருத் பாடியிருக்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை பிருந்தா மாஸ்டர் வடிவமைத்திருக்கிறார். ஜென் மார்ட்டினின் மெலோடியான மெட்டு- ‘ரசகுல்லா’ என்ற இனிப்பான சொல்- கலர்ஃபுல்லான நயன்தாரா – கம்பீரமான கவின்- இருவரது ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி- பிருந்தா மாஸ்டரின் நேர்த்தியான கலாச்சார நடன பின்னணி- ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் இடம் பிடித்திருப்பதால், இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது

Turkish Airlines Signs Multi-Year Agreement with CAE

Turkish Airlines, the airline that flies to more countries than any other airline, has signed a contract with CAE, a global leader in aviation training technologies, at the Farnborough Airshow for the delivery of five full-flight simulators (FFS), two flight training devices (FTD) with an option for two additional FFSs.

The agreement further supports Turkish Airlines’ strategy to expand pilot training capacity and strengthen its training infrastructure with the latest technologies, in line with the airline’s fleet growth under its 10-year flight training investment plan. It will also contribute to the airline’s new, state-of-the-art Flight Training Center, which broke ground this past January. The new facility’s simulator hangars are scheduled to become operational in 2027, with the full center set to be completed and fully operational in 2028.

Commenting on the agreement, Turkish Airlines Chairman of the Board and the Executive Committee Prof. Murat Şeker said: “As we continue to expand our fleet and global network, further strengthening our pilot training infrastructure is essential to supporting our long-term growth strategy. Building on our long-standing collaboration with CAE, the addition of these advanced training devices will enhance our ability to prepare pilots across multiple fleet types with the highest levels of safety, consistency, and operational excellence. This agreement will help ensure we continue meeting the growing training demands of our expanding operations while maintaining the world-class standards our passengers expect from Turkish Airlines.”

Matthew Bromberg, President and Chief Executive Officer at CAE added: “This agreement is a testament to our longstanding relationship with Turkish Airlines and to the trust it continues to place in CAE as a strategic partner in advancing its pilot training capabilities. For more than 20 years, we have worked together to support the airline’s growth and evolving training needs. Through this comprehensive fleet of Airbus and Boeing training devices, we will continue to deliver advanced, high-fidelity simulation solutions that help Turkish Airlines build pilot capacity, maintain the highest safety standards, and support its long-term ambitions.”

Under the contract, CAE will deliver the following devices to Turkish Airlines across Airbus and Boeing aircraft types:

  • Two A321neo Full Flight Simulators (FFS)
  • Two B787 Full Flight Simulators (FFS)
  • One A350 Full Flight Simulator (FFS)
  • Two A350 Level-1 Flight Training Devices (FTD)
  • One A350 Full Flight Simulator (FFS) – optional
  • One B787 Full Flight Simulator (FFS) – optional

These next-generation simulators and training devices will expand Turkish Airlines’ pilot training capacity across both narrowbody and widebody aircraft types, offering a long-term solution to the airline’s growing operational needs on a global scale. With this new agreement, Turkish Airlines reinforces its long-standing collaboration with CAE, continuing to embrace a technology-driven, sustainable, and scalable approach to pilot training.

Chennai Surgeon Crosses 300 Evolution® Medial-Pivot Knee Replacements in Under a Year, Championing Personalised Knee Replacement

Chennai, 23rd July 2026 – Knee replacement surgery is entering a new era where restoring natural knee mechanics is becoming as important as relieving pain. Reflecting this shift, Dr. Vetri Kumar, Senior Consultant Orthopaedic Surgeon at Parvathy Hospital, Chennai, has become the first surgeon in South Asia to complete more than 300 Total Knee Replacement procedures using the Evolution® Medial-Pivot Knee System in less than a year, establishing himself as a leading advocate of personalised knee replacement and kinematic alignment.
This milestone reflects growing confidence in an approach that prioritises restoring native knee kinematics rather than simply implanting a prosthesis.
Widely recognised for advancing evidence-based practices, Dr. Vetri believes every patient deserves an implant that respects individual anatomy instead of a one-size-fits-all approach. The patented Evolution® True Medial-Pivot philosophy is designed to recreate the stability and biomechanics of the native knee, enabling patients to return to active lifestyles and, in many cases, almost forget they have undergone knee replacement surgery—an outcome reflected in the increasingly recognised ‘Forgotten Joint Score’.
Unlike conventional knee designs that focus primarily on mechanical alignment, the Evolution® Medial-Pivot Knee reproduces native knee biomechanics by preserving physiologic medial stability while allowing natural rotational movement, supporting improved function, range of motion and long-term implant performance.
“Modern knee replacement is about far more than pain relief. Every knee is unique, and respecting that individuality helps deliver outcomes that feel natural and stable. With nearly 60 million Indians affected by osteoarthritis, many patients seek treatment only after years of pain. Our aim is to help them walk confidently, return to the activities they love and eventually forget they ever had a knee replacement,” said Dr. Vetri Kumar.
Dr. Mukesh Parmar, Managing Director & Senior General Manager – India and South Asia, MicroPort Orthopedics, said, “These 300 procedures represent 300 lives transformed through personalised arthroplasty. Dr. Vetri has demonstrated how innovation, backed by sound clinical philosophy, can restore natural knee function and improve quality of life. We are proud to partner with accomplished surgeons like Dr. Vetri, whose commitment to improving patient outcomes is helping shape the future of knee replacement in India.”

Dr. Vetri is also a Founding Member of the Personalised Arthroplasty Society (PAS) in India and an active member of its international community, mentoring surgeons and promoting globally proven techniques. He is now preparing to launch a dedicated Knee & Joint Replacement Centre in Chennai to expand access to advanced joint reconstruction and patient care.
As personalised knee replacement gains momentum worldwide, milestones like this reinforce India’s growing leadership in advanced joint replacement, benefiting both patients and the orthopaedic community.

EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola

Chennai, 23nd July 2026: The Events and Entertainment Management Association (EEMA) today unveiled its Vision 2030 roadmap at a press conference in Chennai, ahead of EEMAGINE 2026, the association’s flagship annual convention. The roadmap comes at a time when India’s experience economy is emerging as one of the country’s fastest-growing sectors, driven by rising demand for live entertainment, destination weddings, business events, exhibitions and cultural tourism.

 “Our mission is simple, to position India as the Experience Capital of the World,” said Samit Garg, President, EEMA. “India has always been a land of stories, celebrations and unforgettable experiences. Today, those strengths have evolved into a powerful economic opportunity. The experience economy is no longer just about entertainment, it is driving tourism, entrepreneurship, employment and destination development. Despite representing nearly 18 per cent of the world’s population, India accounts for only 2–4 per cent of the global experience economy, highlighting the scale of opportunity before us. ”

EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola, and the choice of host city is itself part of the Vision 2030 story. According to the association, it was selected not simply as a venue, but because Tamil Nadu already demonstrates, at a state level, the exact transformation Vision 2030 is proposing nationally.

Commenting on Chennai hosting EEMAGINE 2026, Vinod Gopal, Vice President – South, EEMA, said “Hosting EEMAGINE in Chennai for the first time is an important milestone for the region’s events ecosystem. Tamil Nadu has the infrastructure, creative talent and cultural depth to host world-class events. By bringing over 800 event professionals, industry leaders and decision-makers to the city, we hope to showcase Chennai’s capabilities, foster new collaborations and create long-term opportunities for local businesses and event professionals.

Speaking about this year’s convention, Siddharth Ganeriwala, Founding Member, EEMA said, “EEMAGINE 2026 has been curated as a platform where industry leaders, policymakers and global experts can collectively shape the future of India’s experience economy. The convention will focus on business growth, policy, technology, AI, sustainability, talent development and global best practices, while enabling meaningful dialogue on how the industry can scale responsibly and contribute more significantly to India’s economic growth.”

Kauvery Hospital Brings Multi-Speciality Robotic Surgery Under One Integrated Programme Across Its Chennai Hospitals

Chennai, July 22, 2026: Kauvery Hospital launched ‘Kauvery 3X Chennai’, an integrated robotic surgery programme that brings together advanced robotic technology, comprehensive surgical expertise, and highly skilled multidisciplinary teams across all its three Chennai hospitals under uniform standards of care.

The robotic programmes will be offered based on the 4th generation da Vinci Robotic Surgical System, one of the most advanced technologies available in the world. The programme spans multiple disciplines including gastroenterology, oncology, urology, gynaecology and nephrology.

The hospital will leverage its expertise in robotic surgery for a wide spectrum of complex conditions including GI cancers, colorectal cancers, gynaecological cancers, breast cancers, urological cancers, fibroid surgery, hysterectomy, endometriosis treatment, ovarian procedures, prostate surgery, kidney surgery, kidney transplant, bladder procedures, reconstructive urological surgeries, thyroidectomy, hernia repair, gallbladder surgery, colorectal surgery and advanced upper gastrointestinal procedures.

One of the program’s key highlights is Kauvery Hospital’s expertise in robotic kidney transplantation, reflecting the institution’s commitment to pushing the boundaries of minimally invasive surgery and offering advanced solutions for some of the most complex surgical procedures.

Speaking on the occasion, Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director, Kauvery Group of Hospitals, said: “With ‘Kauvery 3X Chennai’, we are creating an integrated robotic surgery ecosystem that brings together advanced technology, multidisciplinary expertise, and uniform standards of care across our three Chennai hospitals. Patients can now access comprehensive robotic care across multiple specialities closer to home and with the qualidefines consistency that define Kauvery.

This initiative reflects years of investment in clinical excellence, surgical innovation, and collaborative care. For us, advanced healthcare is not measured by the technology we own, but by how meaningfully it improves patient outcomes, enhances recovery, and expands treatment possibilities. ‘Kauvery 3X Chennai’ is a significant step towards making world-class robotic surgery more accessible to the communities we serve.”

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர் .

‘தபாஹி- Tabaahi ‘பாடலின் அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations) – கே வி என் புரொடக்ஷன்ஸ் ( K V N Productions) மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ( Zee Music Company) ஆகியவை இணைந்து, யாஷ் மற்றும் தாரா சுதாரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை வழங்குகின்றன.

‘தபாஹி’ பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவிலான வரவேற்பை தொடர்ந்து, டாக்ஸிக் எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ( Toxic: A Fairy Tale for Grown -Ups) திரைப்படத்தில் இடம்பெறும் ‘தடுமாறுதே’ எனும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் பாடல் காதலின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. ‘தபாஹி’ பாடல் – தீவிரமான காதலின் பரவசத்தை கொண்டாடிய நிலையில்… ‘தடுமாறுதே’ பாடல்- மென்மையான உணர்வுகள்- ஏக்கம்- சொல்லப்படாத விசயங்கள் – என மனதின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் உணர்வு பூர்வமான தளத்தை விவரிக்கும் இந்த பாடல்- ஒவ்வொரு காதல் கதையும் பல லேயர்களை கொண்டது என்பதையும், அதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலின் வெவ்வேறு முகங்களை வெளிப்படுத்துகிறது என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது.

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா இணைந்து நடித்துள்ள ‘தடுமாறுதே’ பாடல் – ராயா மற்றும் ரெபெக்காவின் உறவை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் இணக்கமான நடிப்பில் ஒருவித விளையாட்டுத்தனம் மிகுந்த இயல்பு வெளிப்பட்டாலும்… அதற்குள் உணர்வுபூர்வமான முரண்பாடுகளும், பகிர்ந்து கொள்ளப்படாத ஏக்கமும் மறைந்திருக்கின்றன.

‘தபாஹி’ பாடலில் ரசிகர்கள் பார்த்த அதே ராயாவாக அவர் தொடர்ந்தாலும்… ரெபெக்காவை அவர் நேசிக்கும் விதம், அவரது மென்மையான மற்றும் கவலையற்ற பக்கங்களை வெளிப்படுத்துகிறது. அதே தருணத்தில் தனக்குள் அவர் சுமந்து கொண்டிருக்கும் குழப்பத்தையும் உணர்த்துகிறது.

தனிஷ்க் பாக்சி- அர்ஸ்லான் நிஜாமி- ஃபஹீம் அப்துல்லா ஆகிய புகழ்பெற்ற மூவர் கூட்டணியால் இசையமைக்கப்பட்டுள்ள இந்த காதல் பாடல் – சித்தார்த் பஸ்ரூரின் உணர்வுபூர்வமான குரலில் உயிர் பெற்றுள்ளது. இவர் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் தனது குரலில் பாடியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் வெளியாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல்.. ‘மதோஷ்’ (இந்தி), ‘மனமோஹகா’ (கன்னடம்), ‘மனசகதே’ (தெலுங்கு), ‘தடுமாறுதே’ (தமிழ்), ‘மதுமோஹினி (மலையாளம்) ஆகிய பெயரில் வெளியாகி உள்ளது. பாடலுக்கான வரிகளை பிரபல எழுத்தாளர்களான பிரமோ மரவந்தே ( கன்னடம் ) அர்ஸ்லான் நிஜாமி – சையத் முராத் கிலானி (இந்தி), ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு) விக்னேஷ் சிவன் (தமிழ்), ராஜீவ் கோவிந்தன் (மலையாளம்) ஆகியோர் எழுதியுள்ளனர்.

யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி ஆகியோர் நடிக்கும் ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் திரைப்படம் -மிகச்சிறந்த நட்சத்திரக் கூட்டணியை கொண்டிருக்கிறது.

இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சி பேசுகையில்,

”அர்ஸ்லான் நிஜாமி – ஃபஹீம் ஆகியோருடன் நான் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளதால் ‘தடுமாறுதே’ பாடல் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. அதிலும் ‘டாக்ஸிக்’ போன்ற பிரம்மாண்டமான திரைப்படத்திற்காக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பானதாக அமைகிறது. மிகுந்த திறமைசாலியான சித்தார்த் பஸ்ரூருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர் இப்பாடலுக்கு மிகுந்த ஆழத்தை வழங்கியுள்ளார். ராயா மற்றும் ரெபெக்கா ஆகிய கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான பயணத்தை இப்பாடல் அழகாக காட்சிப்படுத்துகிறது. காதல்- ஏக்கம் மற்றும் காதலின் விளையாட்டுத் தனமான உணர்வுகள் இதில் வெளிப்பட்டுள்ளன. நாங்கள் இந்தப் பாடலை உருவாக்கிய போது எவ்வளவு ரசித்தோமோ… அதே அளவு உணர்வுபூர்வமாக பார்வையாளர்களும் இதனுடன் ஒன்றிணைவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

இந்த பாடல் குறித்து பின்னணி பாடகர் சித்தார்த் பஸ்ரூர் பேசுகையில்,

”தடுமாறுதே ..என்பது சாதாரணமாக காதலில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது பிரிவை பற்றியது மட்டுமல்ல. இருவருக்கும் இடையே சொல்லப்படாமல் இருக்கும் உணர்வுகளை பற்றியது. இப்பாடல் முழுவதும் ஏக்கமும்… மென்மையான உணர்வுகளும்… இழையோடுகின்றன. வலியை மட்டும் வெளிப்படுத்தாமல்.. அந்த உண்மையான உணர்வுகளை எனது குரல் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். இது உணர்வுபூர்வமானது என்றாலும் .. இதில் படிப்படியாக அதிகரிக்கும் ஒரு தீவிர தன்மையும் உள்ளது. அதுவே எனக்கு இப்பாடலை மிகவும் சிறப்பானதாக மாற்றுகிறது” என்றார்.

யாஷ் & கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன் -அப்ஸ் ‘ (Toxic A Fairy Tale for Grown -Ups) திரைப்படம் – கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது.

கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது