நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா – நடிகர் கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள.. கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில்… இப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான பிரத்யேக காணொளியை படக் குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14- ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஹாய் திரைப்படம்- பெயருக்கு ஏற்றபடி எளிமையான… இனிமையான…. திரைப்படம். ரசிகர்கள் தங்களுடைய குடும்பத்துடன் இரண்டே கால் மணி நேரம் ஜாலியாக பார்த்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது. சென்னை- கோயம்புத்தூர்- பொள்ளாச்சி- ஆகிய மூன்று இடங்களில் ‘ஹாய்’ படத்தின் கதை நிகழ்கிறது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ – ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ – ‘யாரடி நீ மோகினி’ படங்களைப் போல் வில்லன்களே இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகி இருக்கிறது” என்றார்.
இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி இருப்பதாலும்…. நயன்தாரா – கவின்- கே. பாக்யராஜ் – பிரபு – ராதிகா சரத்குமார்- உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் …’ஹாய்’ திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடம் மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ படப்பிடிப்பை இன்று பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.
மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பூஜையில் படக்குழுவினரோடு திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்தப் புதிய கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கிறார். விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்தின் கதை, திரைக்கதை இயக்கத்தை மேற்கொள்கிறார்.
மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா – மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகிறது. குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
K. குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஒளிப்பதிவை M. சுகுமார் கவனிக்கிறார். படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை K.B.நந்தபாலன், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் கவனிக்கின்றனர். ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்ள, புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் படத்தின் பணிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
வலுவான கதை, திறமையான நடிகர்கள், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாகவும், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குடும்ப உணர்வுப் படமாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது..,
முதலில் ஹரிஷ் ப்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் அவருடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்று இந்தப் படத்தின் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஹரிஷ் ப்ரோவுக்கு மிகப்பெரிய விஷன் இருக்கிறது. இது அவருடைய தொடக்கம் மட்டுமே. அவர் நினைத்த உயரத்தை நிச்சயமாக அடைவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆரம்பத்தில் அவர் என்ன சொன்னாரோ, அதே இலக்கில் இன்று வரை முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார். அதனால்தான் இன்று இந்த வெற்றி விழாவை கொண்டாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அர்ஜுன் ப்ரோவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. மிகவும் பிஸியான ஷெட்யூலுக்கு மத்தியிலும், கிடைத்த சிறிய இடைவெளிகளில்கூட நடன ஒத்திகையில் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு எங்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார். அதற்காக அவருக்கு பெரிய நன்றி.
வடிவுக்கரசி அம்மாவுக்கும் நன்றி. இந்த வயதிலும் அசராத உற்சாகத்துடன், எந்தக் காட்சிக்கும் உடனடியாக தயாராகி நடித்தது எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அவருடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஒரு முன்மாதிரி.
ஆர்.சி. ப்ரோவுக்கும் மனமார்ந்த நன்றி. படத்தின் ஒவ்வொரு பணியிலும் மிகுந்த ஒத்துழைப்புடன் இருந்து, அனைத்து விஷயங்களையும் விரைவாக செய்து கொடுத்தார்.
எடிட்டர் அருள் ப்ரோவுக்கும் சிறப்பு நன்றி. பாடல்கள் உள்ளிட்ட பல வேலைகளில் எவ்வளவு முறை மாற்றங்கள் செய்தாலும் சலிக்காமல் முழு ஒத்துழைப்புடன் இருந்தார். நாங்கள் ஒரு வருடம் உழைத்தோம்; அதன் பிறகு ஹரிஷ் ப்ரோவும் தொடர்ந்து ஒரு வருடம் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்தப் படம் எங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கியுள்ளது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எடிட்டர் அருள் மோசஸ் பேசியதாவது..,
“கான் சிட்டி” திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பையும், மக்களிடையே மிகப்பெரிய ரீச்சையும் கிடைக்கச் செய்தது ரசிகர்களும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களும்தான். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, இந்தப் படம் வேர்ட் ஆஃப் மவுத் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றிக்கான மிக முக்கியமான காரணம் ரசிகர்கள்தான். படத்தைப் பார்த்து நல்ல கருத்துகளைப் பகிர்ந்து, மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைத்த ஒவ்வொரு பார்வையாளருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். அதேபோல், என்னுடைய உதவியாளர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் அளவுகடந்த உழைப்பை இந்தப் படத்திற்காக வழங்கினர். குறிப்பாக, இறுதிக்கட்டப் பணிகளில் சிறந்த வெளியீட்டை உருவாக்கும் நேரத்தில் அவர்கள் அளித்த ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக, இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. விநியோகஸ்தர் ஐயப்பன் பேசியதாவது.., படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது. அதற்காக இயக்குநர் ஹரிஷ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் பாராட்டுகள்.
அர்ஜுன் தாஸிடம் ஒரு வேண்டுகோள். இதுபோன்ற நல்ல கதைகளோடு சேர்த்து, இனிமேலும் குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் அதிகமான குடும்பப் படங்களிலும் நீங்கள் நடிக்க வேண்டும். அப்படிப்பட்ட படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் கல்கி ராஜா பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். முதலில், இந்தப் படத்தில் எனக்கு சிறப்பான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்புக்காக அவருக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்ல வேண்டும்.
அதேபோல், தயாரிப்பாளர் அஜந்தா சார் அவர்களுக்கும் என் நன்றிகள். ஏற்கனவே அவருடைய “கைதி” திரைப்படத்தில் பணியாற்றியிருந்தேன். தற்போது “கான் சிட்டி” போன்ற வெற்றிப் படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது.
மேலும், வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அவருடன் திரையைப் பகிர்ந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
அதேபோல், எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் பரத் சார், படப்பிடிப்பு முழுவதும் எங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் சரியான வழிகாட்டுதலையும் வழங்கி உறுதுணையாக இருந்தார். அவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் ரகு பேசியதாவது..,
“கான் சிட்டி” திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் சென்றது.
அர்ஜுன் தாஸ் ப்ரோ, வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு அண்ணா உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் ஜாலியான அனுபவமாக இருந்தது. அதேபோல் அகிலனுடனும் பணியாற்றியது மறக்க முடியாதது. அவர் ஒரு முறை, “நீங்கள் என் கனவில் வந்து என்னைத் துரத்திக் கொண்டு வருகிறீர்கள்” என்று நகைச்சுவையாக சொன்னார். அந்த சம்பவம் இன்னும் நினைவில் இருக்கிறது.
இந்தப் படத்தின் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். குறிப்பாக எடிட்டர் அருள் மோசஸ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர், மோகன்ராஜா உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் எடிட்டிங் என்பது மிகவும் சவாலான வேலை. இயக்குநர் ஹரிஷ் ப்ரோ படத்திற்காக ஏராளமான காட்சிகளைப் படமாக்கியிருந்தார். திரையில் நாம் பார்க்கும் படம் இரண்டு மணி நேரம் மட்டுமே என்றாலும், அதற்காக ஆறு மணி நேரத்திற்கும் அதிகமான காட்சிகளை அவர் பதிவு செய்திருந்தார். அவற்றை ஒருங்கிணைத்து சிறந்த வடிவத்தில் கொண்டு வருவது மிகவும் கடினமான பணி. மேலும், ஒரே நாளில் இவ்வளவு காட்சிகளைப் படமாக்கிய இயக்குநரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தது.
இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் மட்டுமே நடித்த சில கதாபாத்திரங்கள்கூட படம் முழுவதும் மனதில் நிற்கும் வகையில் அமைந்திருந்தது. அதுவே இந்தக் குழுவின் மிகப்பெரிய பலம். இவ்வளவு அருமையான குழுவுடன் பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன். “கான் சிட்டி” படத்தின் இந்த வெற்றி, படக்குழுவின் அடுத்தடுத்த படைப்புகளிலும் தொடர்ந்து அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.
நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது..,
முதலில் இயக்குநர் ஹரிஷ் ப்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பெரிய வெற்றியை அடைவதற்கு அவர் கடந்துவந்த பயணம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அந்த உழைப்புக்கான பலனாக இன்று இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
அடுத்ததாக அர்ஜுன் தாஸ் ப்ரோவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வில்லனாக அறிமுகமான நீங்கள், இன்று கதாநாயகனாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் மிகப் பெரிய உயரங்களை அடைவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்குக் காரணம் உங்கள் நல்ல மனசு. ஒரு போஸ்டரில் படத்தில் நடித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் ஹீரோக்கள் மிகவும் அரிது. அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு என அனைவரின் பெயர்களும் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று நினைக்கும் உங்கள் பண்பு மிகவும் பாராட்டத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வில்லனாகத் தொடங்கி உச்சத்தை அடைந்தது போல, நீங்களும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இறுதியாக, இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இதேபோல் தொடர்ந்து நல்ல படங்களுக்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடிகர் இமான் அண்ணாச்சி பேசியதாவது..,
“கான் சிட்டி” திரைப்படம் 25-வது நாளை எட்டி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் இதில் பணியாற்றிய ஒவ்வொருவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும்தான். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரின் திறமையையும் வெளிக்கொண்டு வந்து, ஒவ்வொருவருக்கும் பொருத்தமான கதாபாத்திரங்களை வழங்கி, சிறந்த படைப்பாக உருவாக்கிய இயக்குநர் ஹரிஷ் அவர்களுக்கே முதலில் நன்றியைச் சொல்ல வேண்டும். இன்று இந்த 25-வது நாள் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் இது ஆரம்பம் மட்டும்தான். இனி இதைவிட மிகப் பெரிய வெற்றிகள் இயக்குநர் ஹரிஷ் மற்றும் இந்தப் படக்குழுவினரை தேடி வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
அதேபோல், நம்முடைய கதாநாயகர் அர்ஜுன் தாஸ் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அவருக்கு இனி இன்னும் நிறைய வெற்றிகள் காத்திருக்கின்றன. அவர் தொடர்ந்து உயர்ந்த இடத்தை அடைவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகப் பெரிய நட்சத்திரமாக அவர் உருவெடுக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.
நடிகர் சதா பேசியதாவது..,
இது என்னுடைய முதல் திரைப்படம். இந்த ஒரு படத்திற்கே எனக்கு கிடைத்த வரவேற்பும், அங்கீகாரமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது.படம் வெளியான பிறகு சென்னை, சேலம், மதுரை, திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர் என பல நகரங்களுக்கு திரையரங்கு வருகை சென்றோம். ஒவ்வொரு இடத்திலும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மிகவும் வித்தியாசமாகவும், மனதை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. ஒரு அம்மா வந்து என் நெற்றியில் திருநீறு வைத்து, “நீ நல்லா இருக்கணும்” என்று ஆசீர்வதித்தார். என் குடும்பத்தைத் தவிர வேறு யாரும் எனக்காக அப்படி செய்ததில்லை. அந்த அன்பு என்னை மிகவும் நெகிழ வைத்தது.எங்கு சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு வந்து பேசுகிறார்கள். ஐந்து நிமிடம், பத்து நிமிடம் என நின்று தங்களுடைய பாராட்டுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த அன்பை உணரும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசியதை விட, இன்று இந்த வெற்றி விழாவில் பேசுவது எனக்கு இன்னும் கடினமாக இருக்கிறது.
இந்தப் படத்தின் ஒவ்வொரு துறையுடனும் நான் நெருக்கமாக பயணித்தேன். இது என்னுடைய முதல் படம் என்பதால், என்னை நம்பி கொடுத்த இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதனால், எனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில்கூட அனைத்து துறைகளுடனும் இணைந்து அவர்களின் பணியை கவனித்தேன். ஒளிப்பதிவாளருடன் இருந்து காட்சிகள் எப்படி அமைக்கப்படுகின்றன, ஒளி எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்த்தேன். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் இசை அமர்வுகளில் கலந்து கொண்டேன். டப்பிங், சவுண்ட் இன்ஜினியரிங், சவுண்ட் மிக்சிங் என ஒவ்வொரு கட்டத்திலும் உடன் இருந்து கற்றுக்கொண்டேன். திரைப்படம் எப்படி உருவாகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்தான் அதற்குக் காரணம்.
அதன் பலனாக இருக்கலாம், ஏற்கனவே எனக்கு அடுத்த இரண்டு, மூன்று படங்களுக்கான வாய்ப்புகள் வந்துள்ளன. அதற்காக மிகவும் மகிழ்ச்சியாகவும், நன்றியுடனும் இருக்கிறேன்.
குழந்தை நட்சத்திரம் நடிகர் அகிலன் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அகிலன். “கான் சிட்டி” திரைப்படத்தில் நடிக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அங்கிளுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர் அங்கிளுக்கும், என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனக்கு இவ்வளவு அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி.
பாடலாசிரியர் மோகன் ராஜ் பேசியதாவது..,
முதலில், இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றிய பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. எந்தப் படமாக இருந்தாலும் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை. அந்தப் பொறுப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதன் பலனை இன்று நாங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறோம்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனும் நானும் இணைந்தால் அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று அனைவரும் சொல்வார்கள். அந்த நம்பிக்கையை மீண்டும் இந்தப் படம் நிரூபித்துள்ளது. அதற்காக அவருக்கும் என் நன்றிகள்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் என் நண்பர். இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் இன்று இந்த வெற்றி மேடை வரை அவர் கடந்த பயணம் எனக்கு நன்றாகத் தெரியும். ஹரிஷ், நீ ஒரு ஆலமரம் போல வளரப் போகிறாய். இது உன் முதல் வெற்றிப்படி மட்டுமே. இன்னும் பல உயரங்களை நீ அடைவாய் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்தப் படத்தில் இரண்டு தத்துவப் பாடல்களை எழுதும் வாய்ப்பை ஹரிஷ் எனக்கு வழங்கினார். அதற்காக நான் எப்போதும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்பேன். அந்தப் பாடல்கள் தாமதமாக ரசிகர்களிடம் சென்றாலும், காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
“ஏமாற்றாதே… ஏமாறாதே…” என்ற பாடலும், “கண்ணா ப்ரோ…” பாடலில் இடம்பெற்ற,
“வெற்றி பெற்ற செடியும் இங்கு விழுந்து வீழும் காலம் உண்டு… தோற்று தோற்று நின்றவரும் வாழும் காலம் உண்டு…”
என்ற வரிகளும் வாழ்க்கைக்கு நம்பிக்கை தரும் வரிகள். அவற்றை எழுத வாய்ப்பு அளித்த ஹரிஷுக்கு மீண்டும் என் நன்றிகள்.
அதேநேரத்தில், ரசிகர்களிடம் ஒரு மன்னிப்பையும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். “ஃப்ராடு பையலே” பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. அது நேரக் குறைவு காரணமாக நீக்கப்பட்ட பாடல் அல்ல. ஆரம்பத்திலேயே அந்தப் பாடல் படத்தில் இடம்பெறாது என்று திட்டமிட்டே உருவாக்கப்பட்டது. இருந்தாலும், சமூக வலைதளங்களில் அந்தப் பாடலுக்காகவே பலர் படத்தைப் பார்க்க வந்ததாகக் கூறிய பதிவுகளைப் பார்த்தபோது, அதை படத்தில் சேர்த்திருக்கலாமோ என்ற எண்ணம் எனக்கும் தோன்றியது. அந்தப் பாடலை நேசித்த அனைத்து ரசிகர்களிடமும் படக்குழு சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அர்ஜுன் தாஸ் சார் குறித்து ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இந்தப் படத்தின் மூலமாகவும், பாடல்களின் மூலமாகவும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். குறிப்பாக பெண் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. ஆக்ஷன் மட்டுமல்லாமல் காதல் கதைகளிலும் அவர் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவரை ஒரு முழுமையான காதல் நாயகனாக ரசிகர்கள் பார்க்கும் நாள் நிச்சயம் வரும். அதற்கான பாடல்களை எழுதுவதில் நானும், ஷான் ரோல்டனும் தொடர்ந்து இருப்போம்.
ஷான் ரோல்டனுடன் பணியாற்றுவது ஒரு வேலை மட்டுமல்ல; அது ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு முறையும் அந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் நாங்கள் பணியாற்றுகிறோம். அவருடைய இசையும், எங்களுடைய முயற்சியும் சேர்ந்ததுதான் இந்த வெற்றிக் கூட்டணி. அது இன்னும் நீண்ட காலம் தொடரும் என்று நம்புகிறேன்.
சதா, கல்கி ராஜா, ஆதித்யா கதிர், ரகு, அகிலன் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். குறிப்பாக அகிலனின் இறுதிக்காட்சி திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்று ஹரிஷ் முன்கூட்டியே சொன்னார். அதேபோலவே அது ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இமான் அண்ணாச்சி, உங்களுடைய சிறிய சிறிய காட்சிகளும், வசன உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆக்ஷன் சந்தோஷ் மாஸ்டர், அருள் மோசஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இறுதியாக, Power House Pictures நிறுவனத்திலிருந்து இன்னும் பல தரமான படங்கள் வர வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். ஹரிஷின் பார்வை மிகப் பெரியது. அந்தக் கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இன்று ஒரு சிறந்த கலைஞன் எந்தப் பகுதியிலிருந்தும் உருவாக முடியும் என்பதை நிரூபிக்கும் நாளாக இருக்கிறது. அந்த வாய்ப்புகளுக்கான கதவைத் திறக்கும் சாவியாக இன்று நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள். அதற்காக ஹரிஷின் சார்பிலும், அவரது சகோதரனாகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“கான் சிட்டி” திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்திற்கு நான் இன்னும் அதிகமான வரவேற்பை எதிர்பார்த்திருந்தேன். இந்தப் படத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பணியாற்றினேன். இருந்தாலும், ஹரிஷின் முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது எனக்கு அளவில்லா சந்தோஷத்தைத் தருகிறது. இது அவருடைய பல வெற்றிகளில் முதல் வெற்றி மட்டுமே.
ஹரிஷ் மிகவும் கூர்மையான சிந்தனை கொண்ட இயக்குநர். அவருடைய அறிவும், கதையை அணுகும் விதமும் தனித்துவமானது. ஒரு சிறிய விஷயத்தைக்கூட பெரிய தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சொல்லும் திறமை அவருக்கு இருக்கிறது. அவர் முதன்முதலில் கதையைச் சொன்னபோது, இவ்வளவு கதாபாத்திரங்களையும், இவ்வளவு நிகழ்வுகளையும் இரண்டு மணி நேர திரைப்படமாக எப்படி வடிவமைப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அதை மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
பொதுவாக அதிக கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் எல்லோரும் ரசிகர்களின் மனதில் நிற்பதில்லை. ஆனால் “கான் சிட்டி” திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம் வரை அனைவருக்கும் நினைவில் நிற்கும் தருணங்கள் இருந்தன. ஒவ்வொரு நடிகருக்கும் திரையரங்கில் கைதட்டல்களும் வரவேற்பும் கிடைத்தது. ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வெற்றி அதுதான். இது எதிர்காலத்தில் மிகப் பெரிய படங்களை உருவாக்கப் போகும் இயக்குநரின் அடையாளம். பான் இந்தியா, பான் வேர்ல்ட் அளவிலான படைப்புகளை ஹரிஷ் நிச்சயமாக உருவாக்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நான் எப்போதும் ஹரிஷிடம் சொல்வது ஒன்று தான். இது அவருடைய பயணத்தின் தொடக்கம் மட்டுமே. இது வெறும் வார்ம்-அப். இன்னும் அவர் செய்யப் போகும் சிறந்த படைப்புகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். அந்த வெற்றிகளைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எடிட்டர் அருள் மோசஸைப் பற்றியும் சொல்ல வேண்டும். பின்னணி இசை அமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு காட்சியின் தொடக்கம், முடிவு, இசைக்கான இடைவெளி என அனைத்தையும் மிகத் துல்லியமாக அமைத்துக் கொடுத்தார். இசையமைப்பாளர்களின் பணியை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஒத்துழைக்கும் மிகச் சிறந்த, உணர்வுப்பூர்வமான எடிட்டர் அவர். தொழில்துறையில் அவருக்கு இருக்கும் நல்ல பெயருக்கு காரணம் அவருடைய உழைப்புதான். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டருக்கும் என் நன்றிகள். முதன்முதலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு மறக்க முடியாதது. என்னால் செய்ய முடியும் என்று நான் நினைக்காத விஷயங்களைக்கூட என்னிடம் இருந்து சிறப்பாக வெளிக்கொண்டு வந்தவர் அவர். திரையில் நான் ஆடியதைப் பார்த்தபோது, அதை உண்மையிலேயே நான்தானா செய்தேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்கெல்லாம் முழுக் காரணம் சந்தோஷ் மாஸ்டரின் அர்ப்பணிப்பும் திறமையும் தான்.
குறிப்பாக குழந்தைகளுடன் அவர் பணியாற்றிய விதம், பாடல்களின் நடன அமைப்பு, படத்தின் பல முக்கிய தருணங்களை மேலும் சிறப்பாக்கிய விதம் ஆகியவை இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் படத்தில் நடித்த அனைத்து குணச்சித்திர நடிகர்களும் அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒரு கதையின் வெற்றிக்கு தரமான துணைக் கதாபாத்திரங்கள் மிகவும் அவசியம். திரையில் அவர்கள் எவ்வளவு நேரம் தோன்றுகிறார்கள் என்பது முக்கியமல்ல; அவர்கள் அந்தக் கதாபாத்திரமாக ரசிகர்களை நம்ப வைக்கிறார்களா என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இந்தப் படத்தின் அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
குறிப்பாக சதாவின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் நான் சொன்னேன், நீங்கள் மிகவும் அழகாகவும் திரைப்பரிமாணம் கொண்டவராகவும் இருக்கிறீர்கள்; எதிர்காலத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகளும் நிச்சயம் வரும். அதற்கான எல்லா தகுதிகளும் உங்களிடம் இருக்கின்றன. உங்கள் வெற்றிக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாடலாசிரியர் மோகன்ராஜனுடன் உருவான பந்தம் இயல்பானது அதற்கு இறைவனுக்கு நன்றி.
இந்தப்படம் மீண்டும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும். இந்தப்படத்தில் என் டீமில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடகங்களுக்கு நன்றி.
நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,
முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படத்தின் முதல் காட்சி முடிந்தபிறகு வெளியே நின்றிருந்த அந்த சில நிமிடங்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரின் பதற்றத்தைப் போலவே இருந்தது. படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும். படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். அங்கு குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை ரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்த வெற்றிக்கான முழு பாராட்டும் இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கே சேரும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும்போதே இந்தப் படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது நிஜமாகியிருக்கிறது. இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன். எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அகில்… இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை “அப்பா” என்று அழைத்தபோது ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது. உன்னுடன் பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவம். இந்தப் படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை “அப்பா” கதாபாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஹரிஷ் நகைச்சுவையாக சொல்வார். எதிர்காலத்திலும் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சதாவுக்கும் என் வாழ்த்துகள். படப்பிடிப்பின் போதே அவரிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். படம் வெளியாகும் வரை வேறு எந்த வாய்ப்பையும் ஏற்க வேண்டாம். இந்தப் படம் வெளியான பிறகு உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என்று. இன்று அது நிஜமாகியிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மோகன் ராஜன் சார், நம்முடைய பயணம் நீண்டது. உங்களுடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. இன்னும் பல படங்களில் நாம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஷான் ரோல்டன் அண்ணா பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் பேசிய பிறகு எனக்கு வார்த்தைகள் இல்லை. இந்தத் துறையில் நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் நீங்கள். உங்களுடன் இந்தப் பயணம் தொடர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
யோகி பாபு சார் இன்று இங்கு இல்லை. ஆனால் அவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய அனுபவம். எந்தக் காட்சியாக இருந்தாலும், ஒரு நகைச்சுவை வசனம் மூலம் படப்பிடிப்பு தளத்தையே சிரிப்பால் நிரப்பிவிடுவார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வடிவுக்கரசி அம்மாவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் அவருடன் இணைந்து பயணித்தபோது, அவருடைய உற்சாகத்தையும், எளிமையையும் இன்னும் நெருக்கமாக உணர முடிந்தது. படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியையும் ஒரே டேக்கில் செய்து முடிக்கும் அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
படம் வெளியான பிறகு ரசிகர்கள், குறிப்பாக இளைஞர்கள், சமூக வலைதளங்களில் அவருடைய நடிப்பைப் பாராட்டிய விதத்தை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். அந்த மகிழ்ச்சி அவருடைய முகத்தில் தெரிந்தது. இந்தப் படத்தின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் வடிவுக்கரசி அம்மாதான் என்று நான் நம்புகிறேன். அவருடைய நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்று. அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவம்.
பரத், ஐயப்பன் சார், முத்துக்குமார் சார் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தை உலகம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிட நீங்கள் எடுத்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. பல திரையரங்குகளுக்கு நேரில் வந்து, படத்திற்கு கிடைத்த வரவேற்பை மகிழ்ச்சியுடன் ரசித்ததைப் பார்த்ததும் எனக்கும் பெருமையாக இருந்தது.
லல்லு, “கைதி” திரைப்படத்திலிருந்து நம்முடைய பயணம் தொடர்ந்து வருகிறது. இந்தப் படத்திலும் இணைந்ததற்கு நன்றி. அதேபோல் அம்சா நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெளியீட்டை வழங்கியது எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது.
இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள், குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். திரையரங்குகளில் குழந்தைகள் வந்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதும், குடும்ப ரசிகர்கள் இந்தப் படத்தை மனதார பாராட்டியதும் என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது.
இந்த அன்பும் ஆதரவும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்ற பொறுப்பை எனக்கு அளித்துள்ளது. தொடர்ந்து நல்ல படங்களை உங்களுக்காக வழங்குவேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகள். நடிகை வடிவுக்கரசி பேசியதாவது..,
நான் இன்று உங்கள் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்ததுபோல. அதற்குக் காரணமான அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விஷயம் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் இதை பகிர்கிறேன். எனக்கு மறுவாழ்வு கிடைக்க உதவியவர்கள் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, மணிரத்னம் சார், கார்த்திக், சூர்யா, ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார், ஏ.சி.எஸ். சண்முகம், சரத்குமார் சார், ராதிகா உள்ளிட்ட பலர். அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து எனக்கு மீண்டும் வாழ்க்கை அளித்தார்கள். இன்று நான் உங்கள் முன்னால் நின்று பேசுவதற்கே அவர்கள்தான் காரணம். அந்த அன்பை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
இன்று “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டன. இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் ரசிகர்களும், ஊடக நண்பர்களும் தான். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நான் அதிகமாக யூடியூப் பார்ப்பதில்லை. ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு பல விமர்சனங்களையும், ரசிகர்களின் கருத்துகளையும் பார்த்தேன். டிரெய்லரை பார்த்துவிட்டு, “படம் நன்றாக இருந்தால் பார்ப்போம்” என்று நினைத்தவர்கள், படம் பார்த்த பிறகு “ஒரு நிமிடம்கூட சலிக்காமல் முழுப் படத்தையும் ரசித்தோம்” என்று கூறியதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, “வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்தப் பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன. ஆனால், ஊடக நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. “வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்” என்று மட்டும் எழுதாமல், “இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என்றும் எழுதுங்கள். அந்த ஒரு வரிதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத் தரும். இந்தப் படத்தின் மூலம் என்னை வேறு கோணத்தில் காட்டிய இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் அவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். “வடிவுக்கரசி ரஃபாக மட்டுமே பேசுவார்” என்ற எண்ணத்தை உடைத்து, எனக்கு நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்து, ரசிகர்களிடம் புதிய வரவேற்பைப் பெற்றுத் தந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த மேடை வெறும் நன்றி சொல்லும் மேடை மட்டுமல்ல; இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அன்பு எனக்கு இன்னும் நிறைய நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். நன்றி. வணக்கம்.
நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது..,
முதலில் “கான் சிட்டி” திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் வெற்றி பெற்ற பிறகு இயக்குநர் என்னை அழைத்து சந்தித்தார். படம் வெற்றி பெற்றால் ஒரு சிறப்பு பரிசு தருவதாக முன்பே சொல்லியிருந்தார். அந்த வாக்குறுதியை மறக்காமல், ஒரு ஐஃபோனை பரிசாக வழங்கினார். அந்த நேர்மைக்கும், நன்றியுணர்வுக்கும் அவருக்கு என் பாராட்டுகள்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், ஆரம்பத்தில் இந்தப் படத்தை ஒரு சிறிய படம் என்று நினைத்தேன். ஆனால் படத்தின் பின்னணியில் நடந்த திட்டமிடல், தயாரிப்பு, விநியோகம், ஓடிடி ஒப்பந்தம் என அனைத்தையும் பார்த்தபிறகுதான் ஹரிஷின் சிந்தனையும் திறமையும் எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன். அதற்காக அவரிடம் நான் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
ஹரிஷ் ஒரு இயக்குநர் மட்டுமல்ல; தயாரிப்பு, திரைக்கதை, திட்டமிடல் என திரைப்படத்தின் ஒவ்வொரு துறையையும் நன்றாகப் புரிந்துகொண்ட திறமையான படைப்பாளர். அந்தப் பல்துறை திறமையே இந்த வெற்றிக்குக் காரணம்.
இன்றைய சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துவிட்டது என்ற பேச்சு பரவலாக இருக்கிறது. அதுபோன்ற காலகட்டத்திலும் “கான் சிட்டி” திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய சாதனை. அந்த வெற்றி, நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் இன்னும் திரையரங்கிற்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கிறது.
ஒரு படம் நல்ல வசூல் பெறும்போது, அது அந்தப் படக்குழுவுக்கு மட்டுமல்ல, மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கும் புதிய உற்சாகத்தை அளிக்கிறது. இன்னும் நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கினாலும், அது ரசிகர்களிடம் சென்று சேர்ந்து வெற்றி பெறும் தருணத்தை விட பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. “கான் சிட்டி” படத்தின் வெற்றியும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனைவருக்கும் கொடுத்திருக்கிறது.
ஹரிஷின் அடுத்த திரைப்படம் எப்போது தொடங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே உருவாகிவிட்டது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது..,
முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விஷயம். குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகையால், சிறிய படங்களை மக்கள் திரையரங்கிற்கு வரவழைப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது. ஆனால் நல்ல உள்ளடக்கம் கொண்ட திரைப்படங்களை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும்போது, அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதற்காகவே இந்த நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தோம். இப்போது பெரும்பாலான திரைப்படங்கள் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை. சில நாட்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகின்றன. அதனால், “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்திற்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கும், பாராட்டுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.
என்னுடைய முதல் நன்றி குணா (Post Office) மற்றும் விஜய் (Silver Tree) ஆகியோருக்கே. திரைக்கதை உருவான நாளிலிருந்து இன்று வரை அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இந்தப் பயணம் சாத்தியமாகியிருக்காது. இந்தப் படத்திற்கு நிதி உதவி செய்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். MRP Entertainment நிறுவனத்தின் மகேஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த் மேம், மணிகண்டன் சார், PTG Studios, வெண்ணி, ஜென்னி, என் குடும்பத்தினர், உறவினர்கள் என இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
என்னுடைய இணை தயாரிப்பாளர் சித்து குறித்து குறிப்பாக சொல்ல வேண்டும். அவர் ஒரு நாள் வந்து கதையை கேட்டார். “கதை பிடித்திருந்தால் முதலீடு செய்யுங்கள். படத்தை முழுமையாக முடித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்று நான் சொன்னேன். மறுநாளே எந்த தயக்கமும் இல்லாமல் பணத்தை அனுப்பிவைத்தார். அந்த நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
அதேபோல் மற்றொரு இணை தயாரிப்பாளரான Cloud Studios நிறுவனத்தின் அருண் அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். எந்தக் கேள்வியும் கேட்காமல், “தம்பி, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற ஒரு வார்த்தையோடு இந்தப் படத்தில் முதலீடு செய்தார். அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. என்னுடைய தயாரிப்பாளர் மற்றும் இணை தயாரிப்பாளரான விஜய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வெளிநாட்டு வெளியீட்டை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்த T-Series உள்ளிட்ட என் வணிகக் கூட்டாளர்களுக்கும் நன்றி. ஒரு உள்ளடக்கமிக்க திரைப்படத்தை உலகம் முழுவதும் சுமார் 300 திரைகளில் வெளியிட உதவியது மிகப்பெரிய ஆதரவாக அமைந்தது. இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற Netflix நிறுவனத்திற்கும் என் நன்றிகள். எங்கள் விநியோகஸ்தரான Delta Studios நிறுவனத்தின் ஐயப்பன் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படம் பார்த்த முதல் நாளிலிருந்தே அவர் இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கண்காணித்து, ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடன் என்னுடன் பகிர்ந்து கொண்டார். நடிகரின் சந்தை மதிப்பையோ, முந்தைய படங்களையோ மட்டும் பார்த்து முடிவு செய்யாமல், படத்தின் உள்ளடக்கத்தை நம்பி எங்களுடன் இணைந்தது அவருடைய திரைப்படப் பற்றைக் காட்டுகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். 55 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற இந்தப் படம், மொத்தம் சுமார் 95 கால்ஷீட்களில் உருவானது. அந்த நீண்ட பயணத்தில் என்னுடன் இணைந்து உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் அளவிட முடியாதது.
ஆக்ஷன் சந்தோஷ் மாஸ்டர், மிக்ஸிங் இன்ஜினியர் உதய் சார், கடந்த ஏழு ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் மிகப்பெரிய ஆதரவாளர். எந்த தயக்கமும் இல்லாமல் இந்தப் படத்தில் பணியாற்றி என்னுடன் இருந்தார். அவருக்கு என் நன்றிகள். ஒலிப்பதிவு வடிவமைப்பாளர் சச்சின், சிறப்பு மேக்கப் கலைஞர் அப்துல், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜ்கமல், எடிட்டர் அருள் மோசஸ் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக எடிட்டர் அருள் மோசஸ், படத்தின் இறுதி நாள் வரை, மிக்ஸிங், இறுதிச் சரிபார்ப்பு உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்து இந்தப் படத்தை முழுமையாக்கினார். அவருடைய அர்ப்பணிப்பு இந்தப் படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாகும்.
இந்தப் படத்தில் நடித்த அனைவரையும் பற்றி பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக வடிவுக்கரசி அம்மாவைப் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு மூத்த கலைஞர், இன்றும் “எனக்கு வேலை வாங்கிக் கொடுங்கள், நான் இன்னும் நடிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொல்லுவது எவ்வளவு பெரிய விஷயம் என்று நீங்கள் யோசித்துப் பாருங்கள். நாங்கள் சில படங்கள் நடித்துவிட்டாலே திருப்தி அடைந்து விடுகிறோம். ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஒரு கலைஞர் இன்னும் அதே ஆர்வத்துடனும், அதே பசியுடனும் வாய்ப்புகளை எதிர்பார்த்து நிற்பது எனக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் என்னிடம் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் என் மனதில் இருக்கிறது. “நான் இறந்தாலும், படப்பிடிப்பு தளத்தில்தான் இறக்க வேண்டும்.”
அந்த வார்த்தையைக் கேட்டபோது எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. சினிமா மீது இவ்வளவு காதலும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு கலைஞருடன் பணியாற்றியது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. படப்பிடிப்பு முடிந்த நாளிலேயே நான் அவரிடம் சொன்னேன், “இந்தப் படம் வெளியான பிறகு அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசுவார்கள்” என்று. இன்று அது உண்மையாகி இருப்பதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து அன்னாபென் கதாபாத்திரம் இந்தப் படத்தில் மிகவும் முக்கியமானது. ஒரு மகனின் தாயாக, வாழ்க்கையின் பல வேதனைகளை சுமந்து செல்லும் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தை மிகையாக இல்லாமல், மிகவும் இயல்பாகவும் அடக்கமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
ஒரு கட்டத்தில், “இந்தக் காட்சியில் நீங்கள் இன்னும் அதிகமாக உணர்ச்சியை வெளிப்படுத்தலாம்” என்று சொன்னபோதும், “இல்லை, என் மகன் காணாமல் போன நிலையில் இருக்கும் இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் அமைதியாக இருப்பாள். நான் இதை மிகைப்படுத்தக் கூடாது” என்று அவர் கூறினார். அந்த முதிர்ச்சியும், கதாபாத்திரத்தின் மீது அவர் கொண்டிருந்த புரிதலும் என்னை மிகவும் கவர்ந்தது.
இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று மித்ரா கதாபாத்திரம். இன்றைய சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துகள், தவறான உறவுகள் போன்ற விஷயங்களை எந்தப் போதனையும் இல்லாமல், மிக இயல்பாக அந்தக் கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம். அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த அன்னாபென் மேடம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இந்தப் படத்தில் இணைந்த பிறகுதான் இந்தப் படத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்தது. யோகி பாபு அண்ணாவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நேற்றுகூட அவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தபடியே என்னுடன் பேசினார். இந்தப் படத்திற்கு அவர் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். முக்கியமாக, வடிவுக்கரசி அம்மா இந்தப் படத்தில் சிறப்பாக ஜொலிக்க வேண்டும் என்பதில் அவர் முழு மனதுடன் ஒத்துழைத்தார். திரைக்கதையிலேயே அந்த இடம் இருந்தாலும், ஒரு நடிகராக அந்த இடத்தை மற்றொரு கலைஞருக்காக விட்டுக்கொடுப்பது மிகப்பெரிய மனப்பான்மை. படம் முழுவதும் அவர் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், யோகி பாபு சார் இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இருந்தாலும், என் மீது வைத்திருந்த அன்பிற்காகவும் நம்பிக்கைக்காகவும் இந்தப் படத்தில் நடித்தார். அதற்காக அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். அதேபோல் அர்ஜுன் தாஸ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்தப் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருக்கின்றன. சிறிய கதாபாத்திரம் முதல் முக்கிய கதாபாத்திரம் வரை அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. ஒரு நடிகராக, மற்ற கதாபாத்திரங்களும் சமமான முக்கியத்துவத்துடன் திரையில் வருவதை ஏற்றுக்கொள்வது பெரிய விஷயம். அர்ஜுன் தாஸ் சார் அந்த மனப்பான்மையுடன் இந்தப் படத்தில் நடித்தார். அதனால்தான் இந்தப் படம் இவ்வளவு முழுமையானதாக உருவானது. அதுமட்டுமல்லாமல், போஸ்டர்களில் என் பெயருடன் அனைத்து கலைஞர்களின் பெயர்களும் இடம்பெற வேண்டும் என்று முதலில் சொன்னவரும் அவர்தான். அந்த பெருந்தன்மைக்கும், ஆதரவுக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.
இறுதியாக, என் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அண்ணி, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்தப் பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். இந்தப் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருந்த “கான் சிட்டி”, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில், இந்தியாவின் துணிச்சலான, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், மனதை கவரும் கதைகளை ஒரே தளத்தில் வழங்கும் ZEE5
பொழுதுபோக்கு உலகம் என்பது டிரெண்டிங்கை பின்பற்றுவதால் வளர்வதில்லை; புதிய டிரெண்டிங்கை உருவாக்குவதன் மூலமே வளர்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் (Content Slate) பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என விரிவான பொழுதுபோக்கு உலகத்தை ஒரே தளத்தில் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
துணிச்சலான, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், மறக்க முடியாத கதைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த புதிய உள்ளடக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் பொழுதுபோக்கைத் தாண்டி, சமூகத்தில் உரையாடல்களை உருவாக்கும், கலாச்சார தாக்கத்தை ஏற்படுத்தும், மொழிகளையும் எல்லைகளையும் தாண்டி பயணிக்கும் கதைகளை உருவாக்குவதே ZEE5-ன் நீண்டகால நோக்கமாகும்.
இந்த புதிய முயற்சியில் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குநர்கள் மற்றும் படைப்பாளர்கள் இணைந்துள்ளனர். இந்தியில் Jio Studios, Maddock Films, AAZ Films, 200 NOTOUT CINEMAS, DICE Media, Collective Studios Historyverse, Tips Films, Pen Studios, Ellipsis Entertainment, Reliance Entertainment, Jar Pictures ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.
பிராந்திய மொழிகளிலும் ZEE5 தனது முதலீட்டை விரிவுபடுத்தியுள்ளது. மலையாளத்தில் Thespian Films, தெலுங்கில் Annapurna Studios, Sri Venkateswara Creations, Sitara Entertainments, Sri Venkateswara Cine Chitra, தமிழில் Passion Studios, Vriddhi Cinemas, கன்னடத்தில் KVN Productions, மராத்தியில் Bahawa Entertainment, Pratisaad Productions, Kyra Kumar Kreations, வங்காளத்தில் Acropolis Entertainment, Anjan Dutt Productions, Why So Serious Films, Surinder Films உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து புதிய படைப்புகளை வழங்குகிறது.
இந்தி உள்ளடக்கங்கள்
இந்தி பிரிவில் Kambli, The Scam: Leaked, Coffee King, Jeena Isi Ka Naam Hai 2.0 (R. மாதவன் தொகுப்பில்), Zee Horror Show, Rangbaaz Season 4, Janaawar 2, Bakaiti Season 2 உள்ளிட்ட தொடர்கள் இடம்பெறுகின்றன.
திரைப்படங்களில் Hai Jawani Toh Ishq Hona Hai (வருண் தவான், பூஜா ஹெக்டே, மௌனி ராய்), Bandar, Bharat Bhagya Vidhata, Pooja Meri Jaan, Sarvgunn Sampann, Ghamasaan, Ikroop, Dalimb உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.
தமிழ் ரசிகர்களுக்கான சிறப்பு
தமிழில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் Koose Munisamy Veerappan, Thadayam ஆகிய சீரிஸ்களின் புதிய பகுதிகள் வெளியாகின்றன.
மேலும் Ananthakaalam, Thee Kural (இந்தியாவின் முதல் சுயாதீன ராப் பேட்டில் நிகழ்ச்சி) ஆகிய புதிய ஒரிஜினல்கள் அறிமுகமாகின்றன.
தமிழ் திரைப்பட வரிசையில் Demonte Colony 3, நயன்தாரா, கவின் நடிப்பில் Hi! மற்றும் Raawadi ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
தெலுங்கு
Shrimathi, Objection Mylord உள்ளிட்ட ஒரிஜினல்கள், Jayammu Nishchayammu Ra டாக் ஷோவின் புதிய சீசன், Venky Anil 5, NBK111, Vrushakarma உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன.
கன்னடம்
Ayyana Mane புதிய சீசன், Bitcoin Scam, Operation Bangara ஆகிய சீரிஸ்களுடன் Karavali திரைப்படமும் வெளியாகிறது.
மலையாளம்
A Queen, Malabar Cup, Kerala Underground (சுயாதீன ராப் பேட்டில் நிகழ்ச்சி), Balan The Boy ஆகியவை இடம்பெறுகின்றன.
மராத்தி
Hey Kay Navin? புதிய சீசன், Aga Aai, Aaho Aai தொடர் மற்றும் Tumbadchi Manjula, Bhootam Bhayam திரைப்படங்கள் வெளியாகின்றன.
வங்காளம்
Shwetkali, Lalbazaar ஆகிய தொடர்களின் புதிய சீசன்களுடன் Aloor Dosh, Priyo Bondhu ஆகிய புதிய ஒரிஜினல்களும் அறிமுகமாகின்றன.
ZEE5 இந்தியா – வணிகத் தலைவர் தேஜ்கரண் சிங் பஜாஜ் கூறியதாவது:
“பொழுதுபோக்கு துறையின் மாற்றங்களை பின்பற்றுவது மட்டுமல்ல, அதை உருவாக்குவதே ZEE5-ன் நோக்கம். இந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்கள் ஆகியோரை ஒரே தளத்தில் இணைத்து, திரைப்படங்கள், தொடர்கள், நேரடி விளையாட்டுகள், AI, அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான உள்ளடக்கங்களை ஏழு மொழிகளில் வழங்கும் எங்கள் மிகப்பெரிய முயற்சி இதுவாகும். மேலும், மேம்பட்ட தொழில்நுட்பம், சிறந்த பயனர் அனுபவம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மூலம் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் உள்நாட்டு பொழுதுபோக்கு தளமாக உருவாகும் பயணத்தை தொடர்கிறோம்.”
ZEE-யின் தலைமை படைப்பு அலுவலர் (Chief Content Officer) ராகவேந்திர ஹுன்சூர் கூறியதாவது:
“எங்கள் பட்டியலில் இடம்பெறும் ஒவ்வொரு படைப்பும் தெளிவான நோக்கத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான உள்ளடக்கங்களை உருவாக்குவதைவிட, மக்களின் மனதைத் தொடும் தரமான கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இன்று இந்திய பார்வையாளர்கள் மொழி, வகை, வடிவம் ஆகிய எல்லைகளைத் தாண்டி உள்ளடக்கங்களை ரசிக்கிறார்கள். அதற்கேற்ப துணிச்சலான, வித்தியாசமான, சக்திவாய்ந்த கதைகளை வழங்குவதே எங்கள் நோக்கம்.”
விளையாட்டு, AI மற்றும் குழந்தைகளுக்கான உலகம்
திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களைத் தாண்டி, FIFA®️, Bundesliga, ILT Season 5, Tamil Nadu Kabaddi போன்ற நேரடி விளையாட்டு ஒளிபரப்புகளையும் ZEE5 வழங்குகிறது.
AI மற்றும் அனிமேஷன் பிரிவில் Garud – Ek Yodha Ki Gatha, Narmada Manasa Sundari, Vikram Betal, Shiv Sati – Ek Anant Prem Kahani, Param Sundari Chandrakanta, Tirupati Balaji, Ram Anjaney Yuddh, Aiyappan ஆகிய டைட்டில்கள் இடம்பெறுகின்றன.
குழந்தைகளுக்காக Shivlok Ke Kundakka Mandakka, Smart KidZ, Tales of Krishna, Bandbudh and Budbak 2.0 போன்ற நிகழ்ச்சிகளும் வெளியாகின்றன.
இந்த புதிய மல்டிலிங்குவல் உள்ளடக்க அறிவிப்பின் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய, பல மொழிகளில் தரமான பொழுதுபோக்கை வழங்கும் தளமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது ZEE5. இந்தியாவின் முன்னணி படைப்பாளர்கள், பிரபலமான திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் புதிய ஒரிஜினல்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் இந்த முயற்சி, ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமாகவும் விளங்குகிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் ZEE5, Zee Entertainment Enterprises Ltd. நிறுவனத்தின் டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவையாக செயல்படுகிறது.
மொழி-முன்னுரிமை (Language-first) அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் (Hyper-local) உள்ளடக்கங்கள், மொழிவாரியான சந்தா திட்டங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பார்வை அனுபவங்களை இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில் ZEE5 வழங்குகிறது.
இந்தியாவின் துணிச்சலான கதைகள், தனித்துவமான படைப்பாளர்கள், புகழ்பெற்ற ஃபிராஞ்சைஸ்கள் மற்றும் பல்வேறு மொழிகள், வகைகளில் உருவாகும் வித்தியாசமான கதை சொல்லல்களை ஒரே தளத்தில் இணைக்கும் முக்கிய பொழுதுபோக்கு தளமாகவும் ZEE5 திகழ்கிறது.
திரைப்படங்கள், வெப் தொடர்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கதை சொல்லல், அனிமேஷன் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் என விரிவான உள்ளடக்கங்களைக் கொண்ட ZEE5, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கான பல்மொழி பொழுதுபோக்கு மற்றும் நேரடி விளையாட்டு அனுபவங்களின் முக்கிய தளமாக உள்ளது.
மேலும், 2034 ஆம் ஆண்டு வரை FIFA உடன் Zee Entertainment மேற்கொண்டுள்ள நீண்டகால கூட்டாண்மையின் மூலம், இந்தியாவில் நடைபெறும் FIFA-வின் முக்கிய கால்பந்து போட்டிகளின் டிஜிட்டல் ஒளிபரப்பையும் ZEE5 வழங்குகிறது. இதில் FIFA World Cup 2026™️ மற்றும் FIFA World Cup 2030™️ போட்டிகளும் அடங்கும்.
Chennai, July 22, 2026: In a heart-touching tale, a 40-year-old man from Chennai met his stem cell donor who had saved him from a rare and life-threatening blood disease for the first time, almost two years after the transplantation.
DKMS Foundation India, a non-profit organisation dedicated to the fight against blood cancer and other blood disorders, such as thalassemia and aplastic anaemia, helped the donor.
The survivor, Samnu John, a marketing manager by profession, has been suffering from unexplained high fevers, swelling, rashes, and crushing fatigue since 2017. The exact reason for the suffering was not determined for several years despite multiple hospital visits. When his blood platelet count fell dangerously low in January 2022, he was rushed to Rajiv Gandhi Government General Hospital (RGGGH). He was then diagnosed with severe aplastic anaemia, a condition in which the bone marrow stops producing sufficient platelets, red blood cells, and white blood cells.
Since stem cell transplantation is the ideal solution to save the patient, without which the patient might die, the medical team started searching for a suitable donor. No one in his family and friends circle was the right match. After 18 long months, an ideal match was found with 25-year-old Paritosh, a resident of New Delhi. Subsequently, a team headed by Dr Aruna Rajendran, Haemato-Oncologist and Bone Marrow Transplant Physician at Madras Medical College/RGGGH, performed the transplantation to restore normal blood cell production.
Samnu has since made a full recovery and resumed his work as a marketing manager.
In her comments, Dr Aruna said, “Aplastic anaemia is a rare and life-threatening blood disease which can lead to bone marrow failure. It will leave patients vulnerable to infections, uncontrolled bleeding, and exhaustion. A stem cell transplant is the only curative option for these patients. It had taken us almost 18 months to find the exact match for him. I am glad to see him fully recovered from his condition. There are several other patients who are still struggling to find a suitable match. Along with science, we also need a proper system and awareness to make stem cell transplantation possible.”
Recalling the ordeals he went through for years, Samnu said, “I had to quit two of my jobs because of my severe symptoms. Survival itself was difficult both before and after diagnosis. I was scared both for myself and my family. I was tired of waiting for my donor. It was during those darkest days that we managed to find the right match through the DKMS Foundation.”
Paritosh, a long-time blood donor, had signed up with DKMS Foundation India years earlier after hearing about a family desperately searching for a donor for their own loved one. He least expected that he would receive a call requesting him to donate stem cells.
Paritosh said: “I felt a deep sense of responsibility when I got the call. Just like everyone else, even I thought stem cell donation required an open surgery and long recovery. But that’s not the case. Stem cells are collected from our arms. I hope this meeting debunks the myths around stem cell donation.”
Paritosh, who had flown from New Delhi for the meeting, said, “I have thought about him every day since I got that call. Seeing him healthy, working, and living his life with his children is all I ever hoped for.”
Patrick Paul, Executive Chairman, DKMS Foundation India, said, “Patients in Tamil Nadu face distinct genetic and socio-economic barriers in finding a match. When more people from Tamil Nadu register as potential stem cell donors, especially from under-represented communities, we don’t just improve match probabilities on a registry spreadsheet but also change the odds for every child and adult waiting for a transplant.”
Through Samnu and Paritosh’s story, DKMS Foundation India hopes to raise awareness of severe aplastic anaemia and encourage more people to register as blood stem cell donors, a simple process that can one day give someone a second chance at life.
Since matched sibling donors are very scarce, many rely on unrelated donor registries like the one maintained by DKMS Foundation India to find a genetic match. Individuals aged between 18 and 55 years who are in good general health, have a BMI below 40, and are not already registered are eligible to sign up as potential blood stem cell donors. Register at https://www.dkms-india.org/register-now
Chennai, July 21, 2026: Rela Hospital successfully restored shoulder function and relieved pain in a 97-year-old male with a massive and irreparable rotator cuff tear by performing a keyhole (arthroscopic) procedure to implant a fully biodegradable balloon spacer. The patient had sustained the injury following a fall at home. Considering his advanced age and frail cardiac condition, the surgical team avoided general anaesthesia and performed the procedure under a regional nerve block, with the patient remaining fully awake throughout the surgery.
Thanks to the minimally invasive nature of the surgery, the nanogenarian walked out of the hospital within two days of the procedure, following a routine post-operative stay in the general ward, early arm support, and a series of physiotherapy sessions.
A rotator cuff is a group of four muscles and their tendons that surround the shoulder joint, much like a cuff around the wrist. These structures keep the ball of the shoulder securely within its socket and facilitate movements such as lifting and rotating the arm. The senior citizen had sustained a tear in the rotator cuff of his left shoulder following the fall and continued to experience persistent pain for nearly a month. He was unable to lift or use his left arm, and despite rest and conservative treatment, the pain and weakness progressively worsened.
The Arthroscopy and Sports Medicine specialists at the hospital performed the procedure using the InSpace™ biodegradable subacromial balloon spacer, the only minimally invasive, dissolvable spacer specifically designed for patients with massive irreparable rotator cuff tears. In this procedure, a small, deflated balloon is inserted, through tiny holes, into the space beneath the shoulder bone and gently inflated with sterile saline. The balloon acts as a smooth cushion, keeping the ball of the shoulder properly centred within its socket, thereby restoring the joint’s natural spacing and gliding mechanism. This enables the patient to lift and move the arm without the painful bone-on-bone friction. Over several months, the balloon gradually and harmlessly dissolves on its own, by which time the shoulder adapts to a more comfortable and balanced pattern of movement. No permanent implants, screws or anchors are left behind.
In his comments, Dr. Ashok S. Gavaskar, Clinical Lead, Orthopaedics and Head of Joint Replacement Services, Rela Hospital, said, “In this patient, the rotator cuff tear was massive. A large portion of the tendon had torn away from the bone. Because the tear was extensive and the weakened tissues had retracted, a conventional tendon repair was not feasible. Managing such a massive tear in a 97-year-old patient is both uncommon and challenging. Shoulder arthroscopy is usually performed under general anaesthesia. But the patient’s advanced age and underlying cardiac condition made this approach potentially risky. We therefore carried out the entire procedure with the patient fully awake under an interscalene nerve block, a targeted regional anaesthetic technique that completely numbs the shoulder while keeping the patient comfortable and conscious throughout the surgery. This enabled us to avoid the risks associated with general anaesthesia in a nonagenarian and facilitate a faster and safer recovery.”
Dr. Prakash Ayyadurai, Consultant – Orthopaedics Arthroscopy & Sports Medicine, Rela Hospital who headed the surgical team, said, “rotator cuff tears are among the most common shoulder disorders and become increasingly prevalent with advancing age. They represent a significant and growing healthcare burden in India’s ageing population. Studies from India suggest that approximately one in five adults over the age of 40 has some degree of rotator cuff tear, with the prevalence rising sharply with each advancing decade. Full-thickness tears are seen in nearly 10-11% of this population.”
“Age remains the single most important risk factor, as the tendons naturally weaken and undergo degenerative changes over time. Against this background of age-related wear and tear, even a seemingly minor fall can be sufficient to cause a major tear. Other factors that increase the risk include diabetes, hypertension, smoking and a lifetime of repetitive overhead activities,” he added.
In his comments, Prof. Mohammed Rela, Chairman, Rela Hospital, said, “Performing this procedure while the patient remained fully awake at the age of 97 is a notable achievement. It exemplifies personalised, age-appropriate surgical care. This case reflects the modern, tissue-sparing direction of shoulder surgery, where an irreparable rotator cuff tear can be effectively treated using a biodegradable balloon spacer rather than major open reconstruction or joint replacement.
Importantly, this case demonstrates that persistent shoulder pain and a ‘dead arm’ are not conditions that elderly patients simply have to live with. Advanced age and underlying cardiac concerns need not be barriers to effective, life-improving treatment when the right minimally invasive technique is matched to the right patient. Modern keyhole surgical techniques, combined with tailored anaesthetic approaches, now enable even patients in their 90s to undergo surgery safely and benefit significantly. We encourage patients not to delay seeking specialist advice. An early and honest assessment can help determine the most appropriate treatment options and what can realistically be achieved.”
ஆன்மிகம், குடும்ப உணர்வு மற்றும் சஸ்பென்ஸ் அம்சங்களை ஒன்றாக இணைத்து உருவாகியுள்ள ‘அருள்வான்’, வித்தியாசமான கதைக்களத்துடன் தொடங்கினாலும், இறுதிவரை அதே விறுவிறுப்பை தக்க வைத்துக் கொள்வதில் தடுமாறுகிறது.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் கதையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. மர்மமான சம்பவங்களும், கதாபாத்திரங்களைச் சுற்றி உருவாகும் பதற்றமும் பார்வையாளர்களை கதைக்குள் இழுக்கின்றன. ஆனால் இடைவேளைக்குப் பிறகு திரைக்கதை சற்று மெதுவாக நகர்வதால், ஆரம்பத்தில் இருந்த வேகம் குறைந்து விடுகிறது.
நாயகன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும், ஆக்ஷன் தருணங்களிலும் தனது பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார். துணை நடிகர்களும் கதைக்கு தேவையான அளவு ஆதரவு அளித்துள்ளனர். இருப்பினும், சில கதாபாத்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் போனது ஏமாற்றமளிக்கிறது.
இயக்குநர் ஆன்மிக நம்பிக்கையையும் மனித உணர்வுகளையும் இணைத்து சொல்ல முயன்ற விதம் பாராட்டுக்குரியது. ஆனால் திரைக்கதையில் கூடுதல் இறுக்கமும், சில காட்சிகளில் தெளிவும் இருந்திருந்தால் படம் இன்னும் வலுவாக அமைந்திருக்கும். கிளைமாக்ஸ் ஓரளவு திருப்தியை அளித்தாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் தவறுகிறது.
ஒளிப்பதிவு படத்தின் சூழலுக்கு ஏற்ற காட்சிகளை வழங்குகிறது. பின்னணி இசை பல இடங்களில் பதற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பாடல்கள் கதையின் ஓட்டத்துக்கு பெரிய தடையாக இல்லாமல் பயணிக்கின்றன. எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் படத்தின் வேகம் மேம்பட்டிருக்கும்.
படத்தின் பலம் அதன் வித்தியாசமான கதைக் கருவும், சில சுவாரஸ்யமான திருப்பங்களும்தான். அதே நேரத்தில், நீளமான காட்சிகள் மற்றும் கணிக்கக்கூடிய சில சம்பவங்கள் படத்தின் தாக்கத்தை குறைக்கின்றன.
மொத்தத்தில், ‘அருள்வான்’ வித்தியாசமான கதைக்களத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ஒருமுறை பார்க்கக்கூடிய திரைப்படமாக அமைகிறது. திரைக்கதையில் இன்னும் வலிமை இருந்திருந்தால், இது சிறந்த அனுபவமாக மாறியிருக்கும்.
காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையின் உணர்வுபூர்வமான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, நல்ல கருத்தை கையில் எடுத்திருந்தாலும், அதை வலுவான திரைக்கதையாக மாற்றுவதில் முழுமையாக வெற்றி பெறவில்லை.
படத்தின் தொடக்கத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகமும், அவர்களின் உறவுகளும் ஓரளவு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் கதை முன்னேறிய பிறகு திரைக்கதை மெதுவாக நகர்வதால் அந்த ஈர்ப்பு குறைந்து விடுகிறது. பல காட்சிகள் தேவையற்ற நீளத்துடன் அமைந்திருப்பதால், படத்தின் ஓட்டம் இடையிடையே தடைபடுகிறது.
நாயகன், நாயகி இருவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர்களுக்கிடையேயான உணர்ச்சி ரீதியான இணைப்பு முழுமையாக பார்வையாளர்களை சென்றடைவதில்லை. சில உணர்ச்சிகரமான காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை நீண்ட நேரம் மனதில் நிற்கும் வகையில் இல்லை. துணை நடிகர்களின் பங்களிப்பும் வழக்கமான அளவிலேயே உள்ளது.
இயக்குநர் காதலின் வலி, பிரிவு மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேச முயற்சித்திருந்தாலும், திரைக்கதையில் புதுமை இல்லாததால் பல காட்சிகள் ஏற்கனவே பார்த்த படங்களை நினைவுபடுத்துகின்றன. கிளைமாக்ஸும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், எதிர்பார்க்கக்கூடிய வகையிலேயே முடிவடைகிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு அழகிய காட்சிகளை வழங்குகிறது. சில பாடல்கள் கேட்கும் வகையில் இருந்தாலும், பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் உணர்வை உயர்த்தத் தவறுகிறது. எடிட்டிங்கில் இன்னும் இறுக்கம் இருந்திருந்தால் படத்தின் வேகம் மேம்பட்டிருக்கும்.
படத்தின் மிகப்பெரிய குறை அதன் பலவீனமான திரைக்கதை மற்றும் மெதுவான நகர்வு. கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் அவர்களின் உணர்வுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படம் இன்னும் வலுவாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘அன்பே டயானா’ நல்ல நோக்கத்துடன் உருவான காதல் திரைப்படமாக இருந்தாலும், சுவாரஸ்யம் குறைந்த திரைக்கதை, கணிக்கக்கூடிய காட்சிகள் மற்றும் தாக்கம் இல்லாத கிளைமாக்ஸால் சராசரி அனுபவமாகவே முடிகிறது. காதல் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு ஓரளவு ரசிக்கும்படி இருந்தாலும், வித்தியாசமான அனுபவத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம்.
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது.
இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்
சின்னி ஜெயந்த் பேசியதாவது..,
“முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குநன்றி சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறையில் பலரும் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த பழைய உணர்வுகளையும் நினைவுகளையும் அழகாக மீட்டெடுத்து திரையில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கே சேரும்.
அதர்வாவுடன் இது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். அவரது தந்தை முரளியுடன் இணைந்து நடித்தபோது இருந்த அதே உணர்வை, அதர்வாவுடன் நடித்தபோதும் நான் உணர்ந்தேன். அதனால்தான் இந்தப் படத்தில் என்னை இணைத்ததற்காகஇயக்குநருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அவர் மிகுந்த அக்கறையுடனும்அழகிய ரசனையுடனும் உருவாக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். குறிப்பாக கதாநாயகி சிறப்பாக நடித்துள்ளார். மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையும் தனது பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருந்தார்.இசையமைப்பாளராகமட்டுமல்ல, நடிகராகவும் திறமையை நிரூபித்த தமனுக்கும் என் பாராட்டுகள். அதேபோல் ‘டேலண்ட் அண்ட்’ நிகழ்ச்சியில் நான் பாராட்டிய சுதாகர் இன்று சிறந்த நடிகராக உயர்ந்திருப்பதுமிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படத்தில் மூத்த கலைஞர்கள், புதிய கலைஞர்கள், யூடியூப்இன்ஃப்ளூயன்சர்கள் என அனைவரையும் ஒரே படத்தில்இணைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனின் முயற்சி பாராட்டுக்குரியது. படம் பார்த்தபோது ஒரு தரமான இந்திப் படத்தைப் பார்த்த உணர்வு ஏற்பட்டது. இதே கூட்டணி தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட தரமான படங்கள் தமிழ்சினிமாவுக்கு கலைரீதியாகமட்டுமல்ல, வணிக ரீதியிலும் பெரிய பலனைத் தரும். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் கிருஷ்ணா பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படம் எங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வருட பயணமாக இருந்தது. ஒரு படத்தை இயக்குவதும், தயாரிப்பதும் தனித்தனியாகவே பெரிய சவால். ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு முதலில் என் வாழ்த்துகள். இந்தப் படம் பலருக்கும் நாஸ்டால்ஜியா உணர்வைக்கொடுத்ததற்கு காரணம், இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்து ரசித்த சிறிய சிறிய விஷயங்களைக் கூட மிக நுணுக்கமாகதிரையில் பதிவு செய்ததுதான். ஒரு கேசட், ஒரு கோக் கேன்போன்ற பொருட்களைக் கூட எந்த இடத்தில் வைக்க வேண்டும், எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய மைக்ரோ டீட்டெய்லிங் இந்தப் படத்தின் பெரிய பலம். அந்த காட்சிகளை அழகாக திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் சார், சாய் சார் ஆகியோரின்பங்களிப்பு மிக முக்கியமானது. அதேபோல், தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் தனது பிஸியான வேலையிலும்இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்.
இசையமைப்பாளர் தமன் சார் பெரும்பாலும் மாஸ் படங்களுக்குஇசையமைப்பவர். ஆனால் ‘ஈரம்’, ‘ஆளவந்தான்’ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களைப் போலவே ‘இதயம் முரளி’ போன்ற படங்களுக்கும் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
அதர்வா சார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த 15ஆண்டுகளாக அவருடைய தோற்றம், உடற்தகுதி, நடிப்பு என அனைத்தையும் ஒரே ஒழுக்கத்துடன் பராமரித்து வருகிறார். அது எங்கள் குழுவினருக்கும் ஒரு பெரிய உத்வேகமாக இருக்கிறது.நட்டி சார் உடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறிய அவரது பயணம் குறித்து அவர் பகிர்ந்த அனுபவங்கள் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தன.
ரக்ஷன், ஏஞ்சல், டிராவிட், சுதாகர் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு தளத்தை ஒரு கல்லூரி வளாகம் போல கலகலப்பாகமாற்றிவிட்டார்கள். படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பின்‘ப்ளூப்பர்ஸ்’ வீடியோவையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், எடிட்டர் பிரதீப் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக சுதாகர் திரையரங்குகளில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான இடத்தை அவர் நிச்சயம் நிரப்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
இந்தப் படத்தை மக்களிடம் இயல்பாகவும் நேர்மையாகவும்கொண்டு சென்ற பத்திரிகை, மீடியா, நியூ மீடியா நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எங்கள் தொழில்நுட்பக் குழு, விநியோகஸ்தர்கள், Think Music, Netflix, போஸ்ட் புரொடக்ஷன் குழு, உதவி இயக்குநர்கள், மேலாண்மை குழு என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப்படமாகமாற்றிய ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.”
திங் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்துடன்இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு‘முரளி ரீயூனியன்’ என்ற டேக்லைன் வைத்திருப்பதும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை முதன்முதலாக சந்தித்தபோது, இந்தப் படத்தின் பாடல்களின் ஸ்கிராட்ச் டிராக்குகளை மட்டும் கேட்க வைத்தார். அப்போது இசையமைப்பாளர் யார் என்பதைக் கூட சொல்லவில்லை. ஆனால் அந்த ட்யூன்கள் மிகவும் புத்துணர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. பின்னர் இசையமைப்பாளர் தமன் என்று தெரிந்தவுடன் எனக்கு ஒரு இனிய நாஸ்டால்ஜிக் உணர்வு ஏற்பட்டது. ஏனெனில் தமனின் முதல் படத்தை திங் மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.
இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது பல படங்களில் அறிவிக்கப்படும் அனைத்து பாடல்களும் இறுதியில் படத்தில் இடம்பெறுவதில்லை. ஆனால் இயக்குநர் ஆகாஷ் ஆரம்பத்திலேயே கொடுத்த வாக்குறுதியின்படிஏழு பாடல்களையும் முழுமையாக படத்தில்பயன்படுத்தியிருக்கிறார். அதையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பது இந்த ஆல்பத்தின் பெரிய பலம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான இசை ஆல்பத்தை‘இதயம் முரளி’ மூலம் பார்க்கிறோம். இந்த ஆண்டு அதிகம் ஸ்ட்ரீம்செய்யப்படும் தமிழ் திரைப்பட இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இசையமைப்பாளர் தமன் இந்த ஆல்பத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். படம் தொடங்குவதற்கு முன்பே ஸ்கிராட்ச் டிராக்குகளில் இருந்து பல மாதங்கள் உழைத்து இந்த இசையை உருவாக்கியிருக்கிறார். அதேபோல் பாடலாசிரியர் விவேக் மற்றும் ஆதேஷ் கிருஷ்ணா ஆகியோரும்சிறப்பான வரிகளை எழுதியுள்ளனர். இந்த ஆல்பம் ஒரு முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.
திங் மியூசிக் நிறுவனம் பல அறிமுக இயக்குநர்களின் முதல் படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த வரிசையில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் அறிமுகப் படமும்இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதர்வாவுடனும் இது ஒரு இனிய நினைவு. அவரது முதல் திரைப்படமான ‘பாணா காத்தாடி’யின் இசையையும் திங்மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதனால் இந்தப் படம் எங்களுக்கு உண்மையிலேயே ஒரு ‘ரீயூனியன்’ உணர்வைக்கொடுக்கிறது.
நட்டி சார் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அதேபோல் அதர்வாவின் நண்பர்களாக நடித்த ரக்ஷன், டிராவிட், ஏஞ்சல் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
எழுத்தாளர் ரமணகிரிவாசன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். முதலில் மயிலந்திரனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அவர்தான் என்னை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனிடம் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆகாஷுக்கும் என் நன்றி. அதைவிட முக்கியமாக, இந்தப்படத்தில் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக மிக நெருக்கமாக பணியாற்றிய பிரவீனுக்கு நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். இந்த ஒன்றரை ஆண்டு பயணத்தில், வசனங்கள் குறித்து பிரவீன்என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். பொதுவாக பெரிய படங்களில் பக்கக்கணக்கில் வசனங்கள்எழுதுவோம். ஆனால் இந்தப் படத்தில் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் எழுதினாலும், அதிலிருந்து ஐந்து வார்த்தைகள் மட்டும் திரையில் வந்தால்கூட அது கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவாக இருந்தார்.
நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோதே தொடர்ந்து விவாதிக்கப்பட்ட ஒரு கேள்வி, ‘நாயகன் ஏன் தனது காதலை சொல்லவில்லை?’ என்பதுதான். ஒன்றரை ஆண்டுகளாக அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிக்கொண்டே இருந்தோம். படம் வெளியாகும் தருவாயில், குறைந்தபட்சம் டிரெய்லரிலாவதுஅதற்கான காரணம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, இறுதியில் ஆகாஷ்ஏற்றுக்கொண்ட வசனம், ‘காதலை சொல்ல முடியவில்லை… அதை ஏன் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தையும் சொல்ல முடியவில்லை’ என்பதுதான். அந்த ஒரு வசனமே இந்தக்கதையின் உணர்வையும், ‘இதயம் முரளி’ என்ற தலைப்பின்சாரத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த மிகப் பெரிய காரணம், படக்குழுவின் ஒற்றுமையும் நட்பும்தான். ஒரே வகுப்பில் படித்த நான்கு நண்பர்கள்—இயக்குநர், ஒளிப்பதிவாளர், இணை இயக்குநர், இணை எழுத்தாளர்—அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு தளத்திலும், கதை விவாதங்களிலும் ஒரு அற்புதமான பாஸிடிவ் ஆற்றல் இருந்தது.
ஆகாஷுடன் பல விஷயங்களில் வாதிட்டிருக்கிறோம், திறந்த மனதுடன் விவாதித்திருக்கிறோம். ஆனால் அந்த எல்லா விவாதங்களும் இறுதியில் இந்தப் படத்தின் வெற்றிக்கேவழிவகுத்துள்ளன. இன்று இந்த வெற்றியைப் பார்க்கும்போது, உங்களைப் போல நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து நீடிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.”
பாடலாசிரியர் ஆதேஷ் கிருஷ்ணா பேசியதவது.., ‘இதயம் முரளி’ போன்ற அழகான திரைப்படத்திலும், அதில் இடம்பெற்ற அற்புதமான பாடலிலும் எனக்கு வாய்ப்பு வழங்கியஇயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்தப்பயணத்தில் எப்போதும் உறுதுணையாக இருந்த திங் மியூசிக்நிறுவனத்திற்கும், மகேசன் மற்றும் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி.
இசையமைப்பாளர் தமன் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் இனிமையான அனுபவம். அவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல, மிகவும் ஜாலியாக அண்ணன் போல பழகுபவர். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக ‘வாமா வாமா’ பாடலுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இதேபோல் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் முழு நடிகர், தொழில்நுட்பக்குழுவினருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.”
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாபேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். நாங்கள் எல்லோரும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை நகைச்சுவையாக ‘ஹெட்மாஸ்டர்’ என்று அழைப்போம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2018-ம்ஆண்டிலிருந்தே இந்தக் கதையை நான் அறிவேன். அன்றிலிருந்து இன்று வரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். ஆகாஷ் மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். அந்த அளவுக்கு வெகுளியானவர் என்றாலும், தனது கனவை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல், இறுதியில் தானே தயாரிப்பாளராக மாறி இந்தப் படத்தை உருவாக்கினார். 2018-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ‘ஒரு நல்ல தயாரிப்பாளர், ஒரு சரியான இசையமைப்பாளர் கிடைத்தால் இந்தப் படத்தை ஆரம்பிப்போம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பல ஆண்டுகள் காத்திருந்தோம். இன்று இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், முன்பு தவறவிட்டவர்கள் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
ஒரு நல்ல இசையமைப்பாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்ந்தோம். தமன் இந்தத்திரைப்படத்தில் இணைந்த பிறகுதான் அனைத்தும் வேகமாக முன்னேறியது. அவரிடம் இசை பெறுவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கில் அவர் அவ்வளவு பிஸி. ஆனால் அவர் இணைந்தது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக தமன் இசையமைத்த பாடல்கள்திரையரங்குகளில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றுள்ளன.
இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்க வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அமெரிக்காவில் புரொமோஷூட் எடுத்தபோது, பெரிய நிறுவனங்களுடன் பணிபுரிந்தஅனுபவத்தில் ஒரு காதல் கதைக்கு அவர்கள் கொடுத்த முன்னுரிமை மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, ‘நீங்களே தயாரிப்பாளராக இருந்தால்தான் நினைத்தபடி படத்தைஉருவாக்க முடியும்’ என்று அவரிடம் கூறினேன். அந்த முடிவுதான்இன்று இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
இன்று திரைப்படத் தயாரிப்பில் பெரும்பாலான பட்ஜெட் நடிகர்களின் சம்பளத்திற்கே செல்கிறது. ஆனால் ஒரு நல்ல கதைக்கு தேவையான தயாரிப்பு தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவை ஆகாஷ் எடுத்தார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். புதிய தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகஇருக்கும். இந்தப் படத்திற்காக பல இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகள் சில நிமிடங்களே திரையில் வந்தாலும், அதற்காக எந்த சமரசமும்செய்யாமல் செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்கள் அதிகம் வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
அதர்வாவுடன் இதற்கு முன்பும் ஒரு இசை ஆல்பத்தில்பணியாற்றியிருக்கிறேன். அப்போதே அவர் போன்ற திறமையான நடிகருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று ‘இதயம் முரளி’ அந்த வெற்றியை அவருக்கு கொடுத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி அவருக்குக் கிடைக்க வேண்டியதுதான்.
படத்தின் நாயகிகள் இருவரும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வேறு படங்களிலும் வளர்ச்சி பெற்றாலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். திரையில்அவர்களுடைய நடிப்பு, தோற்றம், நாயகனுடனான கெமிஸ்ட்ரிஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
நண்பர்கள் கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருந்தனர். நட்டி சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினர். தொழில்நுட்பக் குழு, தயாரிப்புக் குழு என அனைவருடனும்பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்கும் உணர்வோடு இந்த வெற்றியை கொண்டாடுகிறோம். இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
இசையமைப்பாளர் எஸ். தமன்பேசியதாவது..,
“சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும். ‘இதயம் முரளி’ அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு.
மனோஜ் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார் என்று நான் நினைத்ததே இல்லை. ‘ஈரம்’ படத்தில் இருந்து எங்களுடைய பயணம் தொடங்கியது. அந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட்டைஷங்கர் சாரிடம் காட்டியபோது, ‘தண்ணீரே வில்லன்’ என்ற கதையை பலரும் நம்பவில்லை. ஆனால் அந்த உலகத்தை நம்ப வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தியவர் மனோஜ். அந்தப் பயணம்தான் இன்று ‘இதயம் முரளி’ வரை எங்களை கொண்டு வந்திருக்கிறது. அதற்காக மனோஜுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தின் கதை என்னிடம் வந்தது ஒரு சிறிய டிரெய்லர்மூலம்தான். என் நண்பர் தீபன், இயக்குநர் ஆகாஷ் உருவாக்கிய அந்த கான்செப்ட் டிரெய்லரை அனுப்பி வைத்தார். CGI, 2D காட்சிகள் என மிக அழகாக உருவாக்கப்பட்டிருந்த அந்த டிரெய்லரை பார்த்தவுடன், இந்தப் படத்திற்கு நான் கண்டிப்பாகஇசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் வேறு ஒரு இசையமைப்பாளரைப் பற்றி யோசிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கதையின் மீது இருந்த ஈர்ப்பால் நானே ஆகாஷிடம், ‘நான் இசையமைத்தால் இந்தப்படத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னேன். இவ்வளவு அழகான காதல் கதையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த முடிவுக்குப்பிறகு உருவான முதல் பாடல் ‘தங்கமே’. அங்கிருந்துதான் இந்த இசைப் பயணம் தொடங்கியது. அதன் பிறகு முழு ஆல்பமும் மிக அழகாக உருவானது.
உண்மையைச் சொன்னால், நான் நடிகராக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. மனோஜ் வற்புறுத்தவில்லை என்றால் நிச்சயமாக நடித்திருக்க மாட்டேன். நான் எப்போதும் செட்டுக்குஇசையமைப்பாளராகத்தான் வருவேன்; நடிகராக வர வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் ஆகாஷ் என்னை சம்மதிக்க வைத்தார். இந்தப் படத்தில் ப்ரீத்தி, கயாது, நிஹாரிகா, ஏஞ்சல்உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. அவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தார்கள்.
நட்டி சாருடன் மீண்டும் இணைந்ததும் மகிழ்ச்சி அளித்தது. அவருடன் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் இருந்ததால், இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில், ரக்ஷன் மற்றும் டிராவிட்(நகைச்சுவையாக) எங்களுக்கு நிறைய ‘டார்ச்சர்’ கொடுத்தார்கள். குறிப்பாக டப்பிங் செய்யும்போது தேவைக்கு அதிகமாகப் பேசி, படத்தின் இறுதிப்பணிகளையேதாமதப்படுத்திவிட்டார்கள். ஆனால் அதுவும் செட்டில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்றுதான்.
அதர்வா மிகவும் அருமையான மனிதர். அவருடன் பணியாற்றியதுமிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எப்போதும் நேர்மறை ஆற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் அனைவரையும்உற்சாகப்படுத்தும் மனிதர் அவர்.” இந்தப் படத்தின் முழுக்குழுவுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகஇருந்தது. ஒவ்வொருவரும் இந்தப் படத்தை தங்களுடைய படமாக நினைத்து உழைத்தார்கள். அந்த அர்ப்பணிப்புதான்இன்று இந்த வெற்றியாக மாறியுள்ளது.
இந்தப் படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும்ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு இசையமைப்பாளராக இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இல்லை. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளர் குழு, நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் அன்பாலும், நம்பிக்கையாலும் உருவான திரைப்படம். அந்த அன்பை இதேபோல் தொடர்ந்து கொடுத்து, நல்ல சினிமாவை ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் மதன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்தப் படத்தின்தலைப்பே இதில் நடிக்க வேண்டும் என்ற பெரிய ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது. ஏனெனில் முரளி சார் நடித்த ‘இதயம்’ திரைப்படம் இன்றும் அனைவரின் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கிளாசிக் படம். குறிப்பாக 80-களில்வளர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்தமானது. அந்த உணர்வை நினைவூட்டும் தலைப்பைக்கொண்ட இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல் ஒளிப்பதிவாளர், அதர்வா சார் மற்றும் படக்குழுவில் இருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
நடிகர் நட்டி பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று – நன்றி. முதலில், இந்த வாய்ப்பைவழங்கிய இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரனுக்குஎன் மனமார்ந்த நன்றி. அதேபோல் மனோஜ் சார், அதர்வா சார், ப்ரீத்தி முகுந்தன், கயாது, ஏஞ்சல், ரக்ஷன், சுதாகர், டிராவிட்உள்ளிட்ட படத்தின் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டகதாபாத்திரத்தை அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார்கள். அதனால்தான் படம் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. தயாரிப்புக் குழுவில் கிருஷ்ணா சார், ஜோஜோசார் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு முழுவதும் மிகவும் உதவிகரமாக இருந்தார்கள். அவர்களின் ஒத்துழைப்பை மறக்க முடியாது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், முழுக் குழுவும் ஒரே உற்சாகத்துடனும், நேர்மறை ஆற்றலுடனும்பணியாற்றியதுதான். அந்தச் சூழல்தான் படத்திலும்பிரதிபலித்துள்ளது. எனவே, இந்த வெற்றிக்குப் பின்னால் உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.”
மாதம்பட்டி ரங்கராஜ் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளரும்இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரனுடன்எனக்கு இருக்கும் நட்புதான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது. அவரது திருமண விருந்தாக இருந்தாலும், ‘இதயம் முரளி’ படத்தில் இடம்பெற்றதிருமண விருந்தாக இருந்தாலும், இன்றைய நன்றி அறிவிப்பு விழாவின் விருந்தாகஇருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்னை நினைவில் வைத்திருப்பது அந்த நட்பின்வெளிப்பாடுதான். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.
‘இதயம் முரளி’ மிகவும் அழகான திரைப்படம். அறிமுக இயக்குநராகவே ஆகாஷ் தனது திறமையை சிறப்பாக நிரூபித்திருக்கிறார். இதுபோன்ற தரமான படங்களை தொடர்ந்து இயக்கி, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப்பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படம் எனக்கு பல நல்ல நண்பர்களையும் கொடுத்திருக்கிறது. அதர்வாபிரதருக்கு இன்னும் பல சிறந்த படங்கள் அமைய வேண்டும். அவர் மேலும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
நட்டி அண்ணா மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ராகுல், ரக்ஷன், ஏஞ்சலின், சுதாகர் உள்ளிட்ட அனைவருடனும் ஒரு சிறிய பங்காக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
நடிகை எஸ்.எஸ்.வி பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். இந்த மேடையில் பேசுவதில்கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இருந்தாலும், இந்த வாய்ப்பைபயன்படுத்தி அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். முதலில், ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கிய இயக்குநரும்தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் டான் பிக்சர்ஸ்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் அதர்வா, ப்ரீத்தி, டிராவிட், ரக்ஷன், சுதாகர் உள்ளிட்ட அனைவருடனும்திரையைப் பகிர்ந்து நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும், அதற்கு ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் என் மனமார்ந்த நன்றி.”
நடிகை மோனிஷா பேசியதாவது..,
“அனைவருக்கும் நன்றி. ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியிருப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கு என் மனமார்ந்த நன்றி. தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தப் படத்தின் முழு நடிகர், தொழில்நுட்பக் குழுவினருக்கும்என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இதுவரை பணியாற்றிய சிறந்த குழுக்களில் இதுவும் ஒன்று.
அதர்வா, ப்ரீத்தி, கயாது, ஏஞ்சலின், டிராவிட், ரக்ஷன், நட்டி சார் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. எனக்கு அவர்களுடன் இணைந்து நடித்த காட்சிகள் இருந்தன. படத்தில் நடித்தஅனைவரும் மிகவும் அன்பாகவும் ஒத்துழைப்பாகவும் இருந்தனர். இதுபோன்ற ஒரு அருமையான குழுவுடன் மீண்டும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கனவே ‘இதயம் முரளி’ திரைப்படத்தை ஒருமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் ஒருமுறை திரையரங்கில் சென்று பாருங்கள். இது அனைவரும் ரசிக்கக்கூடிய அழகான திரைப்படம். இந்தப் படத்திற்கு நீங்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.”
நடிகர், உதவி இயக்குநர் மற்றும் வசனஎழுத்தாளர் டிராவிட் பேசியதாவது..,
“அனைவருக்கும் என் வணக்கம். முதன்முறையாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரடியாக இந்த மேடையில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு காரணமான ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும், இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும்என் மனமார்ந்த நன்றி.
இந்தக் கதையில் நடிக்க வந்தபோது, இந்தக் கதாபாத்திரம்எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. என்னுடைய முதல் வெளியான திரைப்படமான ‘டியூட்’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில் ‘இதயம் முரளி’ படமும் தொடங்கியது. யூடியூப்பில் மட்டும் இயங்கி வந்த எனக்கு, சினிமாவில் ஒரு இடம் வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தை ‘டியூட்’ மற்றும் ‘இதயம் முரளி’ போன்ற படங்கள்நிறைவேற்றின. இன்று என் வாழ்க்கையை ‘இதயம் முரளிக்கு முன், இதயம் முரளிக்கு பின்’ என்று கூட பிரித்துப் பார்க்கலாம். முன்பு ஒரு யூடியூபராக இருந்த நான், இன்று சினிமாக்காரன் என்று அழைக்கப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தப் படத்தில் நாங்கள் நண்பர்களாக நடித்தோம். ஆனால் உண்மையில் யாரும் நடித்ததாக எனக்குத் தோன்றவில்லை. அனைவரும் நிஜ வாழ்க்கை நண்பர்களாகவே வாழ்ந்தோம். அதர்வா முதல் நாளிலிருந்தே எங்களுக்கு அந்த நெருக்கத்தையும்சுதந்திரத்தையும் கொடுத்தார். ப்ரீத்தி, கயாது, ஏஞ்சல், ரக்ஷன், சுதாகர் என அனைவரும் ஒரு குடும்பமாகவே இருந்தோம்.
நட்டி சார் வந்தாலே எங்களை கலாய்ப்பார். மனோஜ் சார்தான்எங்களுக்கு உண்மையான ‘ஹெட்மாஸ்டர்’. அவர் வந்தாலே எல்லாரும் ஒழுங்காக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவோம். அதே நேரத்தில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். எங்களை குழந்தைகளைப் போல கவனித்துக்கொண்டதற்கு அவருக்கு என் நன்றி.
சாய் பிரதரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். தமன்அண்ணாவுடன் பணியாற்றியதும் மறக்க முடியாத அனுபவம். அவர் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய உயரத்தை கொடுத்திருக்கிறார். இவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் பழகும் மனிதர். எந்த சூழ்நிலையிலும் பதற்றப்படாமல், ‘பண்ணிடலாம்’ என்று நம்பிக்கை கொடுப்பார். அவருடைய அந்த இயல்பே இந்தப்படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்திலும் பிரதிபலித்துள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் சார் சிறிய கதாபாத்திரத்தில்நடித்திருந்தாலும், அது மிகவும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல் பகத் சார் சிறிய தோற்றத்தில் கூட எப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார்.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் என்னை நடிகராக மட்டுமல்லாமல், உதவி இயக்குநராகவும், வசன எழுத்தாளராகவும் நம்பி பொறுப்பு கொடுத்தார். சில காட்சிகளில் எனக்கு முழு சுதந்திரத்தையும் வழங்கினார். அந்த நம்பிக்கையை எப்போதும் மறக்க மாட்டேன்.
இந்தப் படத்தின் முதன்மை வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன்சார், இணை இயக்குநர் பிரவீன், இணை இயக்குநர் செந்தில் அண்ணா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என்னை இந்தப் படத்தில் உதவி இயக்குநராக இணைத்து, நடிகராக அறிமுகப்படுத்தி, வசன எழுத்திலும் பங்களிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்தப் பயணம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
நடிகர் ரக்ஷன் பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் தொகுப்பாளராகமேடையில் நிறைய பேசியிருக்கிறேன். ஆனால் இப்படி விருந்தினராக வந்து பேசும்போது கொஞ்சம் பதற்றமாகத்தான்இருக்கும்.
‘இதயம் முரளி’ பற்றி சொல்ல வேண்டுமென்றால், நெருங்கிய நண்பர்கள் ஒன்றாக இணைந்து ஒரு படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று பலர் நினைப்பார்கள். ஆனால் இந்தப் படம் அதற்கு நேர்மாறானது. இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் நாங்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்.
நான் மனிதர்களை மிகவும் மதிப்பவன். அந்த வகையில், இந்தப்படம் எனக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு இந்த அழகான நட்புகள்தான். முதலில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நன்றி. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய இரவுதான் அவர் என்னை தொடர்புகொண்டு பேசினார். அடுத்த நாள் காலை நேராக படப்பிடிப்பில் இணைந்தேன். ஆரம்பத்தில் குழு எப்படி இருக்கும் என்ற பதற்றம் இருந்தது. ஆனால் முழுக் குழுவும் மிகவும் ஜாலியாகவும், அன்பாகவும் பழகியதால் அந்த பயம் உடனே மறைந்துவிட்டது.
அதர்வா பிரதருடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. ப்ரீத்தி, காயத்ரி உள்ளிட்ட அனைவருடனும்பணியாற்றிய அனுபவம் மிகவும் இனிமையானது. இந்தப் படத்தில்தொடர்ந்து புதிய நடிகர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். அதுபோல படப்பிடிப்பு தளமும் எப்போதும் உற்சாகமாக இருந்தது. நிஹாரிகா, ஜுனைதா மேம், ஏஞ்சல் என அனைவரும் அந்த மகிழ்ச்சியான சூழலின் ஒரு பகுதியாக இருந்தார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் சார் எடுத்த ஃபிரேமில் ஒரு மூலையிலாவது நான் இடம்பெற்றிருப்பதே எனக்கு பெரிய சந்தோஷம். அதற்காக அவருக்கு நன்றி.
இணை இயக்குநர்கள் செந்தில் சார், பிரவீன் சார், கிரிஷ், மேடிமற்றும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் என் நன்றி. தயாரிப்புக் குழுவினருக்கும், பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் அனைத்து துறைகளிலும் வேலை செய்த அனுபவம் எனக்கு கிடைத்தது.
இயக்குநர் ஆகாஷ் மிகவும் அமைதியாகவும் நம்பிக்கையுடனும்படப்பிடிப்பை வழிநடத்தினார். ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல எங்களை சுதந்திரமாக நடிக்கவிட்டு, பின்னர் எடிட்டிங்கில்அனைத்தையும் அழகாக ஒருங்கிணைத்திருந்தார். தமன் சார் இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அவருடைய இசை படத்திற்கு தனி ஆற்றலைக் கொடுத்திருக்கிறது. நான் திரையில்கொஞ்சம் குறைவாகப் பேசியிருந்தால், அல்லது செட்டில்அதிகமாகப் பேசியிருந்தால், அதற்கும் தமன் சார்தான் காரணம். அவர் எப்போதும் உற்சாகமாக இருந்தார்.
இறுதியாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் சிறிய விஷயங்களைக்கூட கவனித்து, ஆதரவு அளித்து, என்னை மக்களிடம் கொண்டு சென்றது நீங்கள் தான். ‘இதயம் முரளி’ திரைப்படத்திற்கும் அதே ஆதரவை வழங்கியதற்கு நன்றி. இந்தப்படக்குழுவினரையும், ‘இதயம் முரளி’ திரைப்படத்தையும் நான் எப்போதும் மனதார நேசிப்பேன். அனைவருக்கும் நன்றி.”
நடிகர் அதர்வா முரளி பேசியதாவது..,
“அனைவருக்கும் வணக்கம். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், பள்ளி வாழ்க்கை முடிந்து, கடைசி நாளில் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சியில் நிற்பது போன்ற உணர்வுதான் இப்போது எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தப் படக்குழுவுடன் ஒரு அழகான பயணத்தை பகிர்ந்திருக்கிறோம்.
‘இதயம் முரளி’ திரைப்படத்தின் பயணம் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை அப்போது முதன்முதலாக ஒரு இயக்குநராகவே சந்தித்தேன். அந்தச் சந்திப்பிலேயே இந்தப் படத்தின் தலைப்பு, தோற்றம், உணர்வு என அனைத்தையும் பற்றி அவர் பகிர்ந்துகொண்டார். இன்று அந்தக் கனவை நாங்கள் நினைத்தபடியே திரையில் கொண்டு வந்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.
முதலில், இந்தப் படத்தை இவ்வளவு பெரிய வெற்றியாக மாற்றிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமான காரணம்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், விக்ரம் மற்றும் முழு தயாரிப்புக் குழுவிற்கும் என் நன்றி. இன்றைய காலத்தில் இவ்வளவு வண்ணமயமான, மனதை வருடும், இலகுவான காதல் கதையை தயாரிக்க முன்வருவது மிகப்பெரிய விஷயம். அதற்காக அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இந்தப் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்ற ரெட் ஜெயன்ட் மூவீஸுக்கும் என் நன்றி.
இப்படிப்பட்ட காதல் கதைக்கு ஒளிப்பதிவாளரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆகாஷிடம் ‘இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் யார்?’ என்று கேட்டபோது, ‘மனோஜ் பரமஹம்சா சார் தான்’ என்று சொன்னார். அதை கேட்டவுடனே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏற்கனவே ஒரு பாடலில் அவருடன் பணியாற்றிய அனுபவம் இருந்தது. ஆனால் முழு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ‘எல்லோரையும் லட்டு மாதிரி அழகாகக் காட்டுகிறேன்’ என்று அவர் சொன்னது போலவே, திரையில் அனைவரையும் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். அவருக்கும் சாய் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. சில படங்களில் ஒவ்வொரு காட்சிக்கும் முன்கூட்டியே தயாராகச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி இல்லை. காலியான மனதோடு செட்டுக்கு செல்வோம். அங்கேயே காட்சிகள் பற்றி பேசுவோம். சில சமயங்களில் வசனங்களையே மாற்றி, புதிதாக யோசித்து நடித்திருக்கிறோம். நடிகர்கள் அனைவரும் பல இடங்களில் தன்னிச்சையாகச் செய்த விஷயங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த அளவுக்கு அதிகமான காட்சிகளை இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிட திரைப்படமாக அழகாக வடிவமைத்தவர் எடிட்டர் பிரதீப். உண்மையாகவே இந்தப் படம் எடிட்டிங் மேசையில்தான் முழுமையான திரைப்படமாக உருவானது என்று நான் நம்புகிறேன். நாங்கள் டப்பிங் செய்த காட்சிகள் மட்டும் நான்கு மணி நேரத்திற்கு மேல் இருந்தன. அதை அழகாகத் தொகுத்ததற்காக பிரதீப்புக்கு என் மனமார்ந்த நன்றி.
வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எழுதிய ஒவ்வொரு வசனமும் மிகச் சிறப்பாக இருந்தது. டிரெய்லரில் ரசிகர்களை கவர்ந்த பல வசனங்களும் அவருடைய எழுத்துதான்.
திங்க் மியூசிக் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி. ஒரு நல்ல படத்தை சரியான இடத்திற்கு கொண்டு செல்லும் திறமை அவருக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் இசைப் பயணத்திலும் அவர் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் படப்பிடிப்பு முன்னேறியபோது ஆறாவது, ஏழாவது, எட்டாவது பாடல்களும் இணைந்தன. முதலில் ‘இதயா’ பாடலைக் கேட்டபோது, அதுதான் இந்தப் படத்தின் சிறந்த பாடல் என்று நான் நினைத்தேன். ஆனால் பின்னர் ‘இதயமே இதயமே’ பாடல் வந்தபோது அது எனக்கு மிகவும் பிடித்த பாடலாக மாறிவிட்டது.
தமன் சார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்று தெரிந்தபோது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் அவர் இந்தப் படத்தில் நடித்தும் இருந்தார். இவ்வளவு பிஸியான இசையமைப்பாளராக இருந்தும், படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் மிகவும் ஜாலியாக இருப்பார்.
இரண்டு ஆண்டுகள் நடந்த இந்தப் படப்பிடிப்புக் காலத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு படங்களிலும் நடித்து வந்தோம். ஆனால் எப்போது இந்தப் படம் குறித்து சந்தேகம் வந்தாலும் நான் தமன் சாரிடமே சென்று கேட்பேன். அவர் ஒரே ஒரு வார்த்தைதான் சொல்வார் – ‘ப்ளாக்பஸ்டர்… ப்ளாக்பஸ்டர்!’ என்று. ஒரு கட்டத்தில் அவருடைய அந்த நம்பிக்கையைத்தான் நாங்களும் நம்ப ஆரம்பித்தோம். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் மீது அவர் மிகப்பெரிய நம்பிக்கையையும் ஆதரவையும் கொடுத்தார். அதற்காக தமன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி.”
“இந்தப் படத்தில் பணியாற்றிய முழு இயக்குநர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. கிரிஷ், பிரவீன் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.ஒரு படம் முடிந்த பிறகு, ‘இவ்வளவு சீக்கிரம் இந்தப் பயணம் முடிந்துவிட்டதே’ என்ற ஒரு வெறுமை உணர்வு எல்லோருக்கும் இருக்கும். ‘இதயம் முரளி’ முடிந்தபோது அந்த உணர்வு இந்தப் படக்குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும்.
எங்களுக்காக ‘இதயம் முரளி’ என்று ஒரு வாட்ஸ்அப் குழு இருக்கிறது. அதில் ஆகாஷ் ஒரு நாள், ‘படத்தில் இதயாவும் ஜுஜ்ஜுவும் பேசுவது போல, மாலை ஐந்து மணிக்குப் பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை; இதயம் முரளி முடிந்துவிட்டதே’ என்று ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அந்த உணர்வை நாங்கள் அனைவரும் பகிர்ந்துகொண்டோம்.
இன்று இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் கடைசி நாள். அதனால் இந்தக் குழுவை இனிமேல் இப்படி அடிக்கடி சந்திக்க முடியாது என்ற எண்ணமே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. எதிர்காலத்தில் மீண்டும் ஒன்றாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நண்பர்கள் குழு கிடைத்தது. டிராவிட், சுதாகர், ரக்ஷன், ஏஞ்சலின், கயாது, ப்ரீத்தி, நிஹாரிகா என அனைவரும் ஒரு குடும்பமாக மாறிவிட்டோம். ஒரு கட்டத்தில் எங்களுக்குள் தனியாக ஒரு ‘பாய்ஸ் குரூப்’ கூட உருவானது. சில நேரங்களில் அவர்களுக்கு படப்பிடிப்பே இருக்காது. இருந்தாலும் செட்டுக்கு வந்துவிடுவார்கள். ரக்ஷனிடம் ஒருநாள், ‘இன்று உங்களுக்கு காட்சி இல்லையே?’ என்று கேட்டபோது, ‘லஞ்ச் சாப்பிடத்தான் வந்தேன்’ என்று சொன்னார். அந்த அளவுக்கு இந்தப் படப்பிடிப்பு தளம் அனைவருக்கும் சொந்த வீட்டைப் போல மாறிவிட்டது. பல படங்களில் இப்படிப்பட்ட சூழல் அமைவதில்லை. ஆனால் இந்தப் படத்தில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தினமும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவோம். ஆரம்பத்தில் அது ஒரு கட்டாயம் போலத் தோன்றினாலும், போகப் போக அது ஒரு குடும்ப உணர்வாக மாறிவிட்டது. திரையில் தெரியும் அந்த நட்புக்கு காரணம், படப்பிடிப்பு தளத்தில் நடந்த அந்தச் சிறிய சிறிய தருணங்கள்தான். இந்தப் படம் எனக்கு பல அழகான நினைவுகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக ‘இதயம் முரளி’ என்ற தலைப்பு என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது. முதலில் இந்தத் தலைப்பை கேட்டபோது, ‘இது சரியாக அமையுமா?’ என்று ஆகாஷிடம் நான் பலமுறை கேட்டேன். ஏனெனில் ‘இதயம்’ என்றால் அனைவருக்கும் ஒரு ஆழமான காதல் கதைதான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் ஒரு இலகுவான காதல் கதையைச் சொல்கிறோம். அது பொருந்துமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் ஆகாஷ் ஒரே ஒரு விஷயம்தான் சொன்னார். ‘என்னை நம்புங்கள் பிரதர்… இது நல்ல படமாக வரும்’ என்றார். இன்று அவர் சொன்னதை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்ததால்தான் எங்களுடைய கனவு நனவாகியுள்ளது. இந்தத் தலைப்பின் மூலம் என் அப்பா முரளிக்கு ஒரு சிறிய மரியாதை செலுத்த வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு நண்பராக ஆகாஷ் அதை மிகவும் அழகாக செய்து காட்டியிருக்கிறார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்ல, இயக்குநராக தனது கனவுக்காக எண்ணற்ற தூக்கமில்லா இரவுகளையும், பல சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இன்று அந்த முயற்சி வெற்றிபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, அதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப் படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது..,
“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். நல்ல விமர்சனங்களையும் ஆதரவையும் வழங்கினீர்கள். அதற்காக மனதார நன்றி. அதேபோல், ரசிகர்களுக்கும் என் நன்றி. படம் வெளியான பிறகு பலர் எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்பி, ‘இந்தப் படம் எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது’ என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.
அதர்வா சார் முதல் நாளிலிருந்தே இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நண்பராகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சார் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் முழு ஆதரவாக இருந்தார். இவ்வளவு பெரிய படங்களில் பணியாற்றியிருந்தாலும், எங்கள் சிறிய படத்திற்கும் அதே அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.
தமன் சார் இந்தப் படத்தின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. எங்கு சென்றாலும் இந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஹைதராபாத் சென்றாலும், மும்பை சென்றாலும் ‘இதயம் முரளி’ பற்றிய பேச்சுதான். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அவருக்கு என் நன்றி.
சாய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பு நிர்வாகி, எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர், உதவி இயக்குநர் என பல பொறுப்புகளை ஏற்றார். சில நேரங்களில் நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்கி தருவது வரை எல்லாவற்றையும் கவனித்தார். குறிப்பாக கயாது லோகரின் கால்ஷீட்டுகளை ஒருங்கிணைக்க அவர் மிகவும் உதவினார். அவர் எனது மிக நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.
எடிட்டர் பிரதீப்புடன் ஆரம்பத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. ஆனால் இறுதி மூன்று மாதங்கள் தொடர்ந்து அவருடன் அமர்ந்து பணியாற்றியதால்தான் படம் இவ்வளவு கச்சிதமாக உருவானது. அவருடைய அனுபவம் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் உருவாக்கிய செட்கள் இந்தப் படத்தின் அழகை மேலும் உயர்த்தின. மொட்டைமாடி, டெரஸ் உள்ளிட்ட பல முக்கியமான இடங்கள் அனைத்தும் அவருடைய உழைப்பின் விளைவு.
உடை வடிவமைப்பாளர் பல்லவி மேம், மீனாட்சி மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் என் நன்றி. பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி வந்த நேரத்திலும், எங்கள் படத்திற்காக முழு அக்கறையுடன் உழைத்தார்கள்.
என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பணியாற்றி வரும் போஸ்டர் வடிவமைப்பாளர் கபிலனுக்கும் நன்றி. அதேபோல், இறுதிக் கட்ட ஒலிக்கலவையை சிறப்பாகச் செய்து கொடுத்த சுரேன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எனக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் விரிவாக விவாதிப்போம். அவர் ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொடுப்பார். அதை வைத்து நாங்கள் மேலும் மெருகேற்றுவோம். இந்தப் படத்தின் வசனங்களில் அவருடைய பங்கு மிக முக்கியமானது.
இந்தப் படத்தின் மூலம் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கயாது லோகரை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு நடத்தினோம். அப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இன்று பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நிஹாரிகாவுக்கும் இதுவே முதல் படம். இன்று பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனும் அப்போது சினிமாவில் அதிகமாக அறிமுகமாகாத நிலையில் இருந்தார். இன்று அவர் சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்.
மோனிஷா, ஏஞ்சலின் ஆகியோருக்கும் இந்தப் படம் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அவர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். டிராவிட்டை முதலில் நடிகராகத்தான் அழைத்தோம். பின்னர் அவர் உதவி இயக்குநராகவும், வசன எழுத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய திறமை இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.”
இந்தப்படத்தில் உழைத்த என் உதவி இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான இசை மொழிக்காக மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இந்த விருதுகள் அறிவிப்பில் ‘சுழல் – சீசன் 2’ சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. Winner of Best Series (Regional) – சுழல் – 2, சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack – Regional) – சாம் சி எஸ், Best Actor – Series (Female) Critics, Regional – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று, இந்த சீரிஸ் தனது தரமான படைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சாம் சி எஸ் இசையில் பின்னணி இசைக்கு எப்போதுமே தனி அடையாளம் உண்டு. ஒரு காட்சியின் பதற்றம், உணர்வு, மர்மம், வலி அல்லது உற்சாகத்தை வெறும் இசையின் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் அவரை சமகால இந்திய இசையமைப்பாளர்களில் தனித்துவமாக நிறுத்துகிறது. குறிப்பாக த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் இன்வெஸ்டிகேஷன் கதைகளுக்கு அவர் அமைக்கும் இசை, கதையின் முக்கிய கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறது.
‘சுழல் 2’ சீரிஸில் கிராமத்து பின்னணி, மர்மம், குடும்ப உறவுகள் மற்றும் குற்ற விசாரணை ஆகிய அனைத்தையும் இணைக்கும் வகையில் சாம் சி எஸ் அமைத்த இசை, அந்த சீரிஸின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. ஒவ்வொரு காட்சிக்கும் ஏற்ற இசை வடிவமைப்பு, பார்வையாளர்களை கதைக்குள் முழுமையாக இழுத்துச் சென்றது. அதற்கான அங்கீகாரமாகவே இந்த தேசிய விருது பார்க்கப்படுகிறது.
திரைப்படங்களோ, வெப் சீரிஸ்களோ என எந்த வடிவமாக இருந்தாலும், கதைக்கு ஏற்ற இசையை வழங்குவதே தனது பாணி என்பதை சாம் சி எஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வணிக ரீதியிலான இசையையும், கலைநயமிக்க பின்னணி இசையையும் சமநிலையுடன் வழங்கும் அவரது திறமை, அவரை இயக்குநர்களின் விருப்பமான இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராம் போதினேனியின் முதல் இயக்குநர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.
தொடர்ச்சியாக தேசிய அளவிலான அங்கீகாரங்களையும், மொழிகளைத் தாண்டிய படைப்புகளையும், வித்தியாசமான இசை முயற்சிகளையும் பதிவு செய்து வரும் சாம் சி எஸ், இந்திய திரையுலகின் மிகவும் பிஸியான மற்றும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக தொடர்ந்து தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறார். ‘சுழல் 2’ சீரிஸிற்காக கிடைத்துள்ள இந்த விருது, அவரது இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிக்க அத்தியாயமாக அமைந்துள்ளது.