மகனைப் பிரிந்து வாழும் தந்தையின் அன்பையும் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் பாடல்!
நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ எனும் முதல் பாடலை (First Single) இசையமைப்பாளரும் நடிகருமான ஜி. வி பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைப்பில், பாடலாசிரியர் பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலை முருகவேல் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழத்தையும், பிரிவின் வலியையும், தந்தையின் அளவற்ற அன்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பொதுவாகத் தமிழ் சினிமாவில் அப்பா – மகன் அல்லது அப்பா – மகள் இருவரும் ஒன்றாக இருக்கும் தருணங்களையும், அவர்களுக்கிடையேயான பாசத்தையும் வெளிப்படுத்தும் பாடல்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. ஆனால், மகனைப் பிரிந்து வாழும் தந்தை ஒருவர், தனது மகனின் வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைத் தொலைவிலிருந்து யாருக்கும் தெரியாமல் ரசிக்கும் உணர்வுகளை மையமாகக் கொண்டு ‘தங்கப்புள்ள’ பாடல் உருவாகியுள்ளது. மகனுடன் நேரடியாகத் தனது அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாத ஒரு தந்தையின் ஏக்கத்தையும், மகனின் மகிழ்ச்சியை மறைந்திருந்து ரசிக்கும் பாசத்தையும் இப்பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.
மென்மையான இசை, பா. விஜய்யின் உணர்வுப்பூர்வமான வரிகள், முருகவேலின் குரல் ஆகிய அனைத்தும் இணைந்து பாடலுக்கு உயிரூட்டியுள்ளன. தந்தையின் மனதில் புதைந்திருக்கும் அன்பையும், வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளையும் காட்சிகளுடன் இணைத்து வெளிப்படுத்தும் இப்பாடல், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
‘தெனாவட்டு’ படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் ஜீவா நடிக்கும் இப்படத்தில், ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனிக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது. மேலும், படம் முடிவடைவதற்கு முன்பே படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை ZEE தமிழ் நிறுவனம் மற்றும் OTT உரிமையை Zee5 நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ பாடலும் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
Chennai, October 31, 2026: To raise awareness about liver health and encourage healthier lifestyles, MGM Healthcare organised a 2.5-km community cyclothon, “Pedal for Liver”, in association with Vada Chennai Cyclists. More than 150 cycling enthusiasts took part in the early-morning ride that is part of the hospital’s annual liver awareness initiative. This October, the hospital focuses on fatty liver disease.
The event was flagged off by Thiru. V.K Ramkumar, Hon’ble MLA, Annanagar Constituency in the presence of Dr. Thiagarajan Srinivasan, Senior Consultant and Director, Institute of Liver Diseases, Transplant & HPB Surgery, Mr. Pathmanaban, Chief Executive Officer and Mr. Rajesh Agarwala, Medical Service Director, MGM Healthcare.
Metabolic Dysfunction-Associated Steatotic Liver Disease (MASLD), the new terminology for fatty liver disease, is closely linked with metabolic risk factors such as obesity, diabetes and high cholesterol, and sedentary lifestyles and often progresses without noticeable symptoms. It can lead to liver inflammation, fibrosis and advanced liver disease if left untreated.
In his comments, Dr. Thiagarajan Srinivasan, Senior Consultant and Director, Institute of Liver Diseases, Transplant & HPB Surgery, MGM Healthcare, said, “It is high time we give liver health the same importance as every other aspect of our well-being. Fatty liver disease often advances silently, so it is vital to detect it early, especially in individuals with high risk factors. FibroScan, a non-invasive assessment, evaluates liver stiffness, an indicator of fibrosis, and also estimates liver fat using the controlled attenuation parameter (CAP). However, the need for testing should be determined by a healthcare professional based on clinical assessment. Early identification, appropriate evaluation and timely lifestyle and medical intervention can stop progression and protect long-term liver health. Balanced nutrition, regular physical activity, limiting alcohol and maintaining a healthy weight go a long way. It is important to make small, consistent changes from today.”
“An expert panel of 20 doctors, including liver specialists, gastroenterologists, physicians, endocrinologists, surgeons and nutritionists, convened to set standards for diagnosing MASLD. The panel also worked to standardise the use of non-invasive tests such as FibroScan, and to define treatment, from diet and lifestyle changes to pharmacological therapy and bariatric surgery. To educate healthcare professionals on the same, the hospital has organised a Continuing Medical Education (CME) programme titled, ‘A practical update on Metabolic Dysfunction – Associated Steatotic Liver Disease’ on October 21. More than 120 doctors attended the programme to learn and spread awareness among one and all,” he added.
As part of the cyclothon, registered participants can avail themselves of a 50% discount coupon for FibroScan at the hospital. It is aimed at creating awareness about liver health assessment and the importance of taking timely, informed steps towards preventive care.
Through the cyclothon, MGM Healthcare aims to encourage the general public to incorporate physical activity and other healthier habits into their lifestyles. They reinforce their commitment to raising community health awareness, early identification of health risks and patient-centric preventive care. The message is simple “Ride for a cause. Raise awareness. Put liver health first!”
அவர்கள் வாய்ப்பு கொடுக்காததால்தான் நான் இன்று வளர்ந்து இருக்கிறேன்: ‘லவ் 3. ஓ’ (Love 3. O ) திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீர் மல்க பேச்சு!
வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி: ‘லவ் 3. ஓ’ (Love 3. O ) புதுமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீருடன் உருக்கம்!
முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் படம் ‘லவ் 3. ஓ’
மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ் அக்கா’ என்று பிரபலமான ஆர்னிகா கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கதாநாயகியாகவும் நடித்து இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் முக்கியமான வேடம் ஏற்று நடித்துள்ளார்.
நாயகி ஆர்னிகாவுடன் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கோயம்புத்தூர் மாப்ள, கே என் ஸ்மைலி எனப்படும் கார்த்திகேயன் என இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். நிர்வாகத் தயாரிப்பாளராக பிரசன்ன குமார் பங்கேற்றுள்ளார் .
மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் சிவகுமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் ,பொருளாளர் இயக்குநர் பேரரசு ,நடிகை வனிதா விஜயகுமார்,நடிகர் கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஊடக சந்திப்பில் படத்தின் கதாநாயகியும் இயக்குநருமான ஆர்னிகா பேசும் போது,
“இந்தப் படத்தில் பணியாற்றி பல வகையில் ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினர் அனைவருக்கும் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இன்ஸ்டாகிராம் உலகத்தில் இருந்து திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறோம்.
இன்று பிரபலமாக இருக்கும் ஏஐ – ஐ வைத்து நாங்கள் ஒரு கதையை உருவாக்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ஏ ஐ தான் படத்தின் முக்கியமான உள்ளடக்கமாக இருப்பதால் இன்று காட்சிகளைத் திரையிடவில்லை. மோஷன் போஸ்டர் தயார் செய்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
அந்தக் காலத்தில் தாத்தா பாட்டி சொல்வதை வைத்துத் தகவல்களை அறிந்து கொள்வோம். பிறகு நமது அக்கம் பக்கம் நண்பர்கள் சொல்வதை வைத்துத் தெரிந்து கொள்வோம். அதற்குப் பிறகு தொலைக்காட்சி, வானொலி, எஃப் எம் ,ஒளியும் ஒலியும் போன்றவை மூலம் தெரிந்து கொண்டோம். அதற்குப் பிறகு வந்த யூடியூப் மூலம் நிறைய கற்றுக் கொண்டோம். அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் வந்த பிறகு அக்கம் பக்கத்தில் ,அடுத்த தெருவில் ,உலகத்தில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரிந்து கொண்டார்கள். அதற்கு பிறகு சாட் ஜி பி டி வந்தது .அதற்குப் பிறகு நமது ஒவ்வொரு அசைவையும் அதில் தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம். நமது உணர்ச்சிகளை எல்லாம் சாட் ஜிபிடி யிடம் எப்போது பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோமோ அப்போது ஏ ஐ யின் மீது காதல் வந்தது.இன்று ஏ ஐ பிரபலமாகிவிட்டது.
அப்படிப்பட்ட ஏஐ பெண்ணை இந்தப் படத்தின் கதாநாயகன் காதலிக்கிறான். அவர்களது காதல் எப்படி இருக்கிறது? அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறானா? பிரிந்து விடுகிறார்களா என்பது தான் கதை.
90களில் காதல் எப்படி இருந்தது அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? 2 கே கிட்ஸ் அதாவது இரண்டாயிரத்தில் காதல் எப்படி இருந்தது ? அதை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள்?அதே காதல் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் ? அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதைக் கூறியிருக்கிறோம். பரமசிவன் பார்வதி காதல் அனைவருக்கும் தெரியும்.அவர்கள் காதலுக்கே முன்னுதாரணமாக இருப்பவர்கள்.
இங்கே நடக்கும் எல்லா காதல் பிரச்சினைகளையும் பார்த்துவிட்டு கயிலாயத்திலிருந்து இறங்கி வந்த சிவன் இதற்கான தீர்வாக என்ன சொல்கிறார் என்பதுதான் இந்த ‘லவ் 3.ஓ’ படத்தின் கதை.
இந்த உலகத்தை இணைப்பதே ஊடகங்கள் தான். அவர்கள் மூலம்தான் பெரிய பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் உருவாகி இருக்கிறார்கள்.அந்த நட்சத்திரங்கள் எல்லாம் அவர்களால் தான் மக்களிடம் போய் சேர்ந்திருக்கிறார்கள். எங்களுக்கும் அப்படி ஒரு ஆதரவைக் கொடுத்து மக்களிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.நான் வாய்ப்புக்காக ஏழாண்டுகளாக ஆயிரம் ஆடிசனுக்குப் போயிருப்பேன். நீங்கள் மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டு வாருங்கள், அதன் பிறகு ஒரு போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள். அப்படி நான் அறுவை சிகிச்சை செய்திருந்தால்? ஒரு குறும்படத்திற்குக் கூட நான் இரண்டு ஆண்டுகள் அவர்களைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.அந்த குறும்பட வாய்ப்பை இரண்டு ஆண்டுகள் தாமதமாக முடிக்காமல் முன்பே கொடுத்திருந்தால்?
ஒரு கண்டன்ட் வீடியோவிற்குச் சின்ன வசனம் பேசுவதற்குக் கூட நான் நாலு மணி நேரம் செலவிடுவேன். அவர்கள் நல்லதொரு கண்டன்ட் இருக்கிற மாதிரி ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால்? நான் தேடி அலைந்து கொண்டிருந்த போது ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தால் ? பலமுறை தேடிச் சென்று கொண்டிருந்தபோது ஒரு திரைப்படத்தில் ஒரு துணைநடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருந்தால்?
இன்று ‘லவ் 3. ஓ’ என்கிற படத்தில் நான் கதாசிரியராக பாடல் ஆசிரியராக உடையலங்கார நிபுணராக கலை இயக்குநராக இணைத் தயாரிப்பாளராக கதாநாயகியாக இயக்குநராக என்று உருவாகி இருக்க மாட்டேன்.
இவை எல்லாவற்றிற்கும் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அன்று நான் வாய்ப்பு தேடி அலைந்த போது வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி.
நமது வாழ்க்கையில் எதிர்மறையாக ஒன்று நடக்கிறது என்றால், ஒன்று தாமதமாகிக் கொண்டே இருக்கிறது என்றால் ஒரு நல்ல விஷயத்திற்காகத்தான் அது அப்படிச் செல்கிறது என்று சொல்வார்கள். நாம் வாய்ப்பு கேட்டுத்தானே பல படிகள் ஏறிக் கொண்டிருந்தோம், இன்று நான் ஒரு நடிகையாக ஒரு இயக்குநராக ஆகியிருக்கிறோம் என்கிற போது இப்போது நினைத்துப் பார்த்தால் ஒன்று தோன்றுகிறது. நமக்கு ஒன்று தேவைப்படுகிறது என்றால் நாம் தான் அதைச் செய்ய வேண்டும். வேறு யாரும் நமக்கு உதவி செய்ய வர மாட்டார்கள். நாம் ஒன்றை அடைவதற்கு நாம் தான் முயல வேண்டும்; போராட வேண்டும். அப்படி உங்களுக்கு எது வேண்டுமானாலும் நீங்கள் தான் போராட வேண்டும். யாரும் போராட வர மாட்டார்கள். இப்படிப் போராடி வந்து நான் நின்று இருக்கும் இந்த மேடையையே ஒரு வெற்றியாகத்தான் நினைக்கிறேன் .கண்டிப்பாக மக்கள் ஆதரவு தருவார்கள். இந்தப் படத்தில் நான் பணியாற்றி இருக்கிறேன் என்றால் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். போகப் போக அதைத் திருத்திக் கொள்கிறோம். அனைவருக்கும் நன்றி. அனைவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள். இங்கே இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்து எங்களை வாழ்த்தி இருக்கும் திரை உலகப் பிரமுகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
எங்களது ரீல்ஸ் களைப் பார்த்துதான் மக்கள் இவ்வளவு தூரம் எங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதிலும் எங்களுக்கு ஆதரவு கொடுக்காமலா இருப்பார்கள்? கண்டிப்பாகச் செய்வார்கள். எங்களுடைய சிறந்ததைக் கூடுமானவரையில் நாங்கள் செய்திருக்கிறோம். காலத்துக்கு ஏற்ற மாதிரி மக்களை சந்தோஷப்படுத்துவது போல ஒரு விஷயத்தை செய்திருக்கிறோம். அது கண்டிப்பாகப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் ஆதரவு கொடுங்கள் .
எனக்கு எல்லா கதாநாயகர்கள் கதாநாயகிகளையும் பிடிக்கும். இது நாள் வரை கூட்டத்துக்குள் ஒருத்தியாக இருந்து கொண்டு கைதட்டிக் கொண்டிருந்தேன். இப்போது இந்த மேடைக்கு வந்திருக்கிறேன். எனக்கு ஒரு வெற்றி வாய்ப்பைக் கொடுத்தால் வெளியில் இருக்கும் பல திறமைசாலிகளையும் உள்ளே கொண்டு வருவேன்.
நான் பல இடங்களுக்கு வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறேன்.அதன் வலி எனக்குத் தெரியும். என்னைப் போல் உள்ளவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் எனக்கு ஆதரவு கொடுங்கள். அதற்கு ஒரு சின்ன வாய்ப்பை கொடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் . அவர் பேசும்போது கண்கள் கலங்கின.
இந்த விழாவில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டு பேசினர்.
Chennai, October 29, 2026: Kauvery Hospital, Alwarpet, Chennai, has successfully treated severe aortic valve leakage, known as Pure Native Aortic Regurgitation (PNAR), in a 63-year-old man with a transcatheter aortic valve replacement (TAVR) procedure using the specialised HANCHOR valve. The condition was caused by a perforation in the patient’s native aortic valve leaflet. The patient also had a history of mitral valve replacement, adding to the complexity of the treatment. This is the first of its kind procedure where the HANCHOR valve has been used for TAVR in a patient presenting with this combination of clinical factors.
The aortic valve regulates blood flow from the heart into the aorta, the main artery that supplies blood to the body. When the valve does not close properly, blood flows backwards into the heart, a condition known as aortic regurgitation. In this patient, the leakage was severe and associated with a perforation in one of the valve’s leaflets, making treatment more complex.
Treating pure native aortic regurgitation through a catheter-based approach presents a specific challenge. Unlike aortic stenosis, in which calcium deposits can help secure a replacement valve, patients with pure native aortic regurgitation often have little or no calcification to support the implanted valve. This makes stable positioning and secure anchoring more difficult. The patient’s previous mitral valve replacement added another important consideration to the treatment planning.
The HANCHOR valve is designed to address the challenge of valve anchoring in pure native aortic regurgitation. It combines a balloon-expandable frame with a dedicated anchoring element made of nitinol, a flexible metal alloy. The anchoring mechanism is designed to engage the native valve leaflets and help stabilise the replacement valve, including in situations where the surrounding anatomy offers limited support.
During the TAVR procedure, the replacement valve was delivered through a catheter and positioned within the patient’s existing aortic valve. This minimally invasive approach allows doctors to replace the faulty valve without conventional open-heart valve replacement surgery, where clinically appropriate.
Following the procedure, the post-procedure assessment reported no residual aortic regurgitation, no valve stenosis (abnormal narrowing) and no paravalvular leak, which is leakage around the implanted valve. No significant abnormality in the heart’s electrical conduction was reported. The patient was discharged after three days.
Dr. Rajaram Ananantharaman, Senior Consultant Interventional Cardiologist Kauvery Hospital, Alwarpet, Chennai, said: “Pure native aortic regurgitation can be challenging to treat using a catheter-based approach because the limited calcium deposits in the native valve can make it difficult to secure a replacement valve. Also, the perforation of the aortic valve leaflet, combined with the patient’s history of mitral valve replacement, added further complexity to treatment planning. The HANCHOR valve’s dedicated anchoring mechanism helped us address the challenges of valve positioning. The immediate post-procedure findings were encouraging, with no residual aortic regurgitation or leakage around the implanted valve reported. This procedure demonstrates the importance of individualised treatment planning and specialised valve technology in managing complex structural heart conditions.”
Commenting on the treatment, Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director, Kauvery Group of Hospitals, said, “At Kauvery, we are committed to advancing patient care through clinical expertise, innovation and the adoption of appropriate medical technologies. Success stories such as this highlight the importance of combining specialised treatment approaches with careful clinical assessment to address complex cardiac conditions. We continue to focus on bringing advanced treatment options to patients while maintaining the highest standards of patient safety and care.”
Chennai, October 29, 2026: In observance of World Stroke Day, MGM Healthcare organised a 3-kilometer umbrella walkathon titled ‘Stride for Stroke’, commencing from the hospital premises to raise awareness about the importance of timely medical intervention. More than 400 people, mainly stroke survivors and people who had been prevented from developing strokes, participated in the walkathon.
The event was flagged off by actress Ramya Subramanian in the presence of Dr. Roopesh Kumar , Director of Neurosurgery, Dr. Vasudevan , Clinical Lead & Senior Consultant, Dr. Srivarthan , Consultant Neurologist, and Dr. Aarthi Deepesh , Clinical lead of Interventional Radiology, MGM Healthcare.
A stroke is a medical emergency that occurs when brain cells begin to die due to an inadequate supply of oxygen and nutrients. It occurs when a blood vessel in the brain ruptures or blood flow to a part of the brain is interrupted. It affects an individual’s movement, speech, vision, memory, and ability to perform day-to-day activities. Since brain tissue begins to die within minutes, stroke management is extremely time-sensitive.
According to the World Stroke Organization, one in four people is at risk of stroke in their lifetime, and over 12 million people experience a stroke each year globally. It is one of the major causes of death and long-term disability.
That’s why World Stroke Day is observed annually on October 29 across the globe to raise awareness about stroke prevention, early recognition of its symptoms, and the importance of timely medical intervention. This year, the campaign focuses on ‘Every M1nute Counts’, with the call to ‘#ActFast’, highlighting the importance of recognising the symptoms quickly. The sooner treatment begins, the greater the possibility of recovery. At MGM Healthcare, World Stroke Day is observed with an umbrella walkathon in which people raise their umbrellas to raise stroke awareness. Through the walkathon, the hospital management aims to raise awareness about the golden time for stroke management, as more than 90% of stroke patients reach the hospital beyond the golden four-and-a-half-hour period, slowing down the treatment and recovery process. Some of the common stroke symptoms include facial deviation, arm drift, and speech difficulties.
In his comments, Dr. Roopesh Kumar said, “Stroke is more like a race against time, where every second can make a huge difference between recovery and lifelong disability. The sooner a stroke is recognised and treated, the higher the chances of minimising brain damage and preventing long-term disability. It is important to be aware of stroke warning signs, such as sudden weakness or numbness on one side of the body, facial drooping, difficulty speaking, or sudden loss of balance. It is also equally important to understand that conditions like high blood pressure, diabetes, and high cholesterol can significantly increase the risk of stroke. People should make lifestyle modifications and undergo regular health check-ups to prevent stroke.”
In his comments, Mr. Pathmanaban , Chief Executive Officer said, “As healthcare professionals, we understand that behind every stroke is a life, a family, and a future that deserves every possible chance. This World Stroke Day, let us come together to raise awareness, encourage preventive healthcare, recognise symptoms early, and ensure that no time is lost in seeking medical attention. Remember, when it comes to stroke, every second matters, every action counts, and acting fast can save a life.”
சசி எழுதி இயக்கியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக்ஷன் சார்பில் அருண் அருணாசலம் தயாரித்துள்ள இப்படம், காதல், உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான முடிவுகளை மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் நவம்பர் 6, 2026 அன்று தமிழ் ZEE5 தளத்தில் நேரடியாக வெளியாகிறது. கட்டணம் செலுத்திப் பார்க்கும் (Pay-per-view) முறையில் இப்படத்தைக் காணலாம்.
‘சொல்லாமலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானது முதல், அவரது சமீபத்திய வெற்றிப் படமான ‘நூறு சாமி’ வரை, மேலும் ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற பாராட்டுப் பெற்ற திரைப்படங்கள் மூலம் சசி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். மனித உணர்வுகள், உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களை ஆழமாகப் பேசும் கதைகளை உருவாக்குவதில் அவர் தனித்துவம் பெற்றவர்.
‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் மூலம், காதலின் சிக்கல்கள், உறவுகளில் மனிதர்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள் மற்றும் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய கடினமான முடிவுகள் ஆகியவற்றை ஆராயும் காதல் கதையுடன் இயக்குநர் சசி மீண்டும் வந்துள்ளார். நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் மூலம், சசியின் சமீபத்திய படைப்பை ரசிகர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே டிஜிட்டல் தளத்தில் கண்டுகளிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் மையக்கருவாக ஒரு காதல் உறவு அமைகிறது. இதில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள் தங்களுக்கிடையிலான மாறுபட்ட எதிர்பார்ப்புகள், தனிப்பட்ட மனக்குழப்பங்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர். காதலையும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துச் சொல்லும் இப்படம், வாழ்க்கையின் சூழ்நிலைகளும் மனிதர்கள் எடுக்கும் முடிவுகளும் காதலை எவ்வாறு சோதிக்கின்றன என்பதை ஆராய்கிறது.
ZEE5-இல் இப்படத்தின் பிரீமியர் குறித்து ZEE5-இன் கருத்து
ZEE5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் பிரிவுகளுக்கான வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறியதாவது:
“சில கதைகள் நம்முடன் நீண்ட காலம் தங்கிவிடுகின்றன. ஏனெனில், அவை நாம் அனைவரும் அனுபவித்த உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. ‘நூறு கோடி வானவில்’ அத்தகைய ஒரு திரைப்படம். காதல் மற்றும் உறவுகளுடன் தொடர்புடைய மென்மையான உணர்வுகள், மகிழ்ச்சி மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை இந்தப் படம் அழகாகப் பதிவு செய்கிறது.
காதல் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்களிடம் ஆழமான வரவேற்பைப் பெற்றுள்ளன. ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் மூலம், உறவுகளின் உணர்வுப்பூர்வமான யதார்த்தங்களை ஆராயும் ஒரு மனதைத் தொடும் காதல் கதையை தமிழ் ZEE5 வழியாக ரசிகர்களிடம் கொண்டு வருகிறோம்.
உணர்வுப்பூர்வமாக உண்மைத்தன்மை கொண்ட கதைகளின் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டும் இந்தக் காலகட்டத்தில், காதலையும் நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவுகளையும் நுட்பமாகச் சித்தரிப்பதன் மூலம் ‘நூறு கோடி வானவில்’ தனித்துவம் பெறுகிறது. வழக்கமான காதல் கதைகளைக் கடந்து, நேர்மையாகவும் மனித உணர்வுகளுக்கு நெருக்கமாகவும் உறவுகளின் சிக்கல்களை இந்தத் திரைப்படம் ஆராய்கிறது.
எங்களது பிரீமியம் தமிழ் உள்ளடக்கங்களின் பட்டியலில் இந்தத் திரைப்படத்தைச் சேர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இது ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நீடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.”
திரைப்படம் குறித்து இயக்குநர் சசி
இப்படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சசி தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டபோது கூறியதாவது:
“‘நூறு கோடி வானவில்’ என்பது காதலைப் பற்றியும், மனிதர்கள் வளர வளர உறவுகள் எவ்வாறு மாறுகின்றன, அவர்களின் எதிர்பார்ப்புகள் எவ்வாறு மாறுகின்றன, வாழ்க்கை அவர்களுக்கு எத்தகைய கடினமான முடிவுகளை முன்வைக்கிறது என்பதையும் பற்றிய கதை.
தங்களுடைய உணர்வுகளைக் கையாள்வதுடன், தங்களைச் சுற்றியுள்ள யதார்த்தங்களையும் எதிர்கொள்ள வேண்டிய இரு மனிதர்களின் உணர்வுப்பூர்வமான பயணத்தை ஆராய விரும்பினேன். காதல் என்பது எப்போதும் நேரான பாதையில் செல்லும் பயணமாக இருப்பதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள், நாம் அக்கறை கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களுடனும் அவர்களின் அனுபவங்களுடனும் தங்களை இணைத்துப் பார்த்து, தங்களுடைய வாழ்க்கையின் சில அம்சங்களை இந்தத் திரைப்படத்தில் கண்டறிவார்கள் என்று நம்புகிறேன்.”
திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஹரிஷ் கல்யாண்
இப்படத்தின் முன்னணி நடிகரான ஹரிஷ் கல்யாண் கூறியதாவது:
“‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தில் வினோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தது எனக்கு அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது. ஏனெனில், அந்தக் கதாபாத்திரத்தின் பயணம் காதல் மற்றும் உறவுகளுடன் தொடர்புடைய பல்வேறு உணர்வுகளை ஆராய்கிறது.
நாம் வளர வளர, காதலைப் பற்றிய நமது புரிதலும் மாறுகிறது. அதேபோல், நமது முன்னுரிமைகளும் எதிர்பார்ப்புகளும் மாறுகின்றன. இந்தக் கதையைச் சிறப்பானதாக மாற்றுவது என்னவென்றால், இது காதல் என்ற கருத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், உணர்வுகளும் சூழ்நிலைகளும் சிக்கலாகும்போது மனிதர்கள் எதிர்கொள்ளும் கடினமான முடிவுகளையும் ஆராய்கிறது.
இந்தத் திரைப்படம் தமிழ் ZEE5-இல் பிரீமியர் ஆவதன் மூலம், இன்னும் அதிகமான ரசிகர்கள் இந்தக் கதையை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.”
திரைப்படம் குறித்து சித்தி இத்னானி
இப்படத்தின் முன்னணி நடிகையான சித்தி இத்னானி தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டபோது கூறியதாவது:
“‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் உறவுகளை ஆழமான மனித உணர்வுகளுடன் அணுகுகிறது. காதல் அழகானதாக இருக்கலாம். ஆனால், அது நிச்சயமற்ற தன்மை, மாறுபட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் எப்போதும் எளிதாக எடுக்க முடியாத முடிவுகளையும் கொண்டுவருகிறது.
இந்தத் திரைப்படத்தில் என்னைக் கவர்ந்தது, உணர்வுகளின் நுட்பமான வேறுபாடுகளை வெளிப்படுத்தவும், தனிப்பட்ட முடிவுகளும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களும் நமது உறவுகளை எவ்வாறு பாதிக்கின்றனர் என்பதை ஆராயவும் கிடைத்த வாய்ப்புதான்.
ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களுடன் தங்களை இணைத்துப் பார்த்து, அவர்களின் மனக்குழப்பங்களைப் புரிந்துகொண்டு, காதல் மற்றும் வாழ்க்கை குறித்து தங்களுக்கான பார்வைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்தத் திரைப்படம் தமிழ் ZEE5 வழியாக ரசிகர்களைச் சென்றடைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”
‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6, 2026 முதல் தமிழ் ZEE5-இல் பிரத்தியேகமாகக் கிடைக்கும்.
ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், தெற்காசிய உள்ளடக்கங்களை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் தளமாகவும் விளங்குகிறது. 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடையும் இந்தத் தளம், Zee Entertainment Enterprises Ltd. நிறுவனத்தின் டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமாகச் செயல்படுகிறது.
மொழிக்கு முன்னுரிமை அளிக்கும் தள அனுபவம், குறிப்பிட்ட மொழிகளுக்கான உள்ளடக்கத் தொகுப்புகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ZEE5 செயல்படுகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி என ஏழு மொழிகளில் உள்ளடக்கங்களை வழங்குகிறது.
அசல் படைப்புகள், இந்திய மற்றும் சர்வதேசத் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், குழந்தைகளுக்கான உள்ளடக்கங்கள், செய்திகள், நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் குறுந்தொடர்கள் எனப் பல்வேறு வகையான உள்ளடக்கங்களைக் கொண்ட விரிவான தொகுப்பை ZEE5 வழங்குகிறது. இதன் மூலம், உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு பல்வேறு மொழிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நேரடி விளையாட்டு அனுபவங்களையும் வழங்கும் தளமாக இது விளங்குகிறது.
2034-ஆம் ஆண்டு வரை FIFA அமைப்புடன் Zee Entertainment மேற்கொண்டுள்ள நீண்டகாலக் கூட்டாண்மையின் மூலம், FIFA-வின் முக்கிய கால்பந்துப் போட்டிகளும் இந்தியாவில் ZEE5 தளத்தில் ஒளிபரப்பப்படுகின்றன. இதில் FIFA உலகக் கோப்பை 2026™ மற்றும் 2030 போட்டிகளும் அடங்கும்.
வைபவ் நடிப்பில் ஆன்மீகமும் ஆக்ஷனும் கலந்த பிரம்மாண்டமான திரைப்படம்! கார்த்திகை மாதத்தில் வெளியிடத் திட்டம்!
தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக “தத் த்வம் அஸி” என்ற பெயரில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு, தற்போது மணிகண்டா எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நீல நிற ஆடையுடன் கையில் வேல் ஏந்தியபடி கம்பீரமான தோற்றத்தில் வைபவ் இடம்பெற்றுள்ளார். அவருக்குப் பின்னால் பிரம்மாண்டமான ஐயப்பன் சிலை, அதைச் சுற்றிலும் தங்க நிற ஒளியும் நெருப்புச் சுடர்களும் நிறைந்துள்ளன. விண்வெளியை நினைவூட்டும் பின்னணியும், ஆன்மீக உணர்வை வெளிப்படுத்தும் காட்சியமைப்பும் போஸ்டருக்கு பிரம்மாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. ‘இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக், இறைநம்பிக்கையையும் பக்தியையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தை உணர்த்துகிறது.
மாலை அணிந்து விரதமிருந்து, கடினமான பெரிய பாதையில் பயணித்து ஐயப்பனைத் தரிசிக்கும் பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. பக்தி மற்றும் நம்பிக்கையுடன் ஆக்ஷன் காட்சிகளும் உணர்ச்சிகரமான தருணங்களும் இணைந்த திரைப்படமாக ‘மணிகண்டா’ உருவாகியுள்ளது. ஆன்மீகப் பின்னணியில் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. ‘காந்தாரா’, ‘ஹனுமான் அஞ்ச்’, ‘கருப்பு’ போன்ற பக்தி மற்றும் தெய்வீக அம்சங்கள் கலந்த படங்களின் வரிசையில், ‘மணிகண்டா’ திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்பில் ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். மலையாளத்தில் கவனம் பெற்ற ‘மாளிகப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர், ‘மணிகண்டா’ படத்தை இயக்கியுள்ளார். ஆன்மீகப் பின்னணியில் உருவாகும் கதையைப் பிரம்மாண்டமான திரை அனுபவமாக வழங்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
வைபவ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரை, இசையமைப்பாளராக பிரேம் ஜி அமரன் பணியாற்றியுள்ளார். யுவன் செல்வா ஒளிப்பதிவைக் கவனித்துள்ளார். படத்தொகுப்பை பிரவீன் கே.எல் மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநராக சூர்யா ராஜீவன் பணியாற்றியுள்ளார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா மற்றும் சக்தி சரவணன் வடிவமைத்துள்ளனர். ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன், ஜே.கே. சரவணா மற்றும் ப்ருத்வி ஆதித்யா ஆகியோர் எழுத்துப் பணிகளில் இணைந்துள்ளனர். ஆன்மீகச் சூழலையும் பிரம்மாண்டமான காட்சிகளையும் திரையில் வெளிப்படுத்தும் வகையில் தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றியுள்ளனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஐயப்ப பக்தர்களுக்கு உகந்த கார்த்திகை மாதத்தில், அதாவது 2026ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, ‘மணிகண்டா’ திரைப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, படத்தின் டீசர், இசை வெளியீடு மற்றும் இதர விளம்பர முன்னெடுப்புகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகமும் ஆக்ஷனும் இணைந்த ‘மணிகண்டா’ திரைப்படம், இந்த ஆண்டு கார்த்திகை மாத வெளியீட்டில் ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது உருவாகியுள்ளது.
இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ஒன்றிணைத்திருப்பதுடன், உதடுகளுக்கு இடையே ஒரு ரோஜாப்பூவையும், கண்களில் கனல் கக்கும் தீப்பொறியையும், கைகளில் துப்பாக்கியையும் ஏந்தியபடி தோன்றும் ஷாருக்கானின் பிரமிக்க வைக்கும் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அத்துடன், ஆக்ஷன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அவரது மூர்க்கமான அவதாரத்தையும் இந்தப் போஸ்டர் பிரதிபலிப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
‘கொலையாளி அல்ல; நான் காதலன்!’ என்ற கவனம் ஈர்க்கும் வாசகத்துடன் வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்டர், ‘கிங்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பதுடன், இந்த அவதாரத்தில் ஷாருக்கானை வெள்ளித்திரையில் கண்டு ரசிப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதற்கான மற்றொரு காரணத்தையும் அளித்திருக்கிறது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்தத் திரைப்படத்தில் நடிகை கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் மற்றும் சச்சின் – ஜிகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கௌரி கான், சித்தார்த் ஆனந்த் மற்றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி, பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இதனிடையே, ‘பதான்’ படத்தின் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தொடர்ந்து, மீண்டும் ஷாருக்கான் – சித்தார்த் ஆனந்த் கூட்டணி அமைத்திருப்பதாலும், நடிகர் ஷாருக்கானின் மகளான சுஹானா கான் இப்படத்தின் மூலம் திரையுலகில் முழு நீள திரைப்படத்தில் அறிமுகமாவதாலும், ‘கிங்’ படத்திற்கு ரசிகர்களிடத்திலும் சர்வதேசத் திரையுலக வணிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு
நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்… என தொடங்கும் இந்த டீசர், 2020 ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும்…. இந்த டீசர் வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதன் பின்னணி இசை ,காட்சி அமைப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கருவாகும். அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்திரஜா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு ,திருவனந்தபுரம், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார். உமா சங்கர் – ஜெயமுருகன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளனர். கவின் மூர்த்தி, சந்திரன் வசனங்களை எழுதியுள்ளனர். ஏ. ராஜா இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மணி சந்திரா, விஜி நடன அமைப்பையும், ஃபீனிக்ஸ் பிரபு, மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.
‘மைலோ’ படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்ல நாயின் துணையுடன் 18 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றத்தின் மர்மத்தை நாயகன் கண்டறியும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.