Breaking
September 16, 2026

Rare & Complex Shoulder Reconstruction at SRM Prime Hospital Restores Arm Movement in 52-Year-Old with an Untreated Shoulder Fracture-Dislocation

Chennai, August 11, 2026: In a rare and complex reconstructive surgery, SRM Prime Hospital relieved pain and restored movement in the left upper arm of a 52-year-old man, from Jharkhand, who had neglected a fracture-dislocation of his left shoulder for nearly six months. Over time, the untreated injury progressed to a chronic dislocation, leading to extensive soft-tissue scarring, formation of a pseudo-joint elsewhere, and compression of the brachial plexus, the network of nerves that controls movement and sensation in the shoulder, arm and hand.

Using advanced surgical techniques and a multidisciplinary approach, the surgical team successfully restored the shoulder to its anatomical position while carefully protecting and decompressing the major nerves and blood vessels nearby. The procedure also restored the shoulder’s normal contour. The patient was discharged after five days in the hospital with significant pain relief and encouraging improvement in the movement of his left upper arm. He is currently undergoing a structured rehabilitation program under the guidance of the Physiotherapy and Rehabilitation team and is making steady progress toward regaining strength, mobility and functional independence.

As the shoulder remained dislocated for nearly six months, the head of the upper arm bone (humeral head) had shifted far from its normal position and became trapped within dense scar tissue. The surgical team placed the displaced bone back into its normal position. They then released the tightened joint capsule and removed scar tissue that had formed around the joint to free the shoulder and restore its normal movement.

To improve the long-term stability of the shoulder, the surgeons performed a Latarjet procedure, a specialised operation in which a small piece of bone called the coracoid was transferred to the front of the shoulder socket. This bone transfer acts as an additional support, significantly reducing the risk of the shoulder dislocating again.

As the prolonged dislocation had caused scar tissue to compress the brachial plexus, the Plastic Surgery team simultaneously carried out brachial plexus neurolysis, a delicate procedure to free the nerves from surrounding scar tissue and adhesions. This relieved pressure on the nerves, protected them during the reconstruction and maximised the chances of restoring strength, movement and sensation in the affected arm.

The combination of these advanced, and a few other specialised, procedures enabled the surgical team not only to restore the shoulder to its normal anatomical position but also to relieve pain, improve stability, protect the nerves and optimise the patient’s long-term functional recovery.

The surgery was carried out by a multidisciplinary team comprising Dr. Nikhil Jawaharlal Nahar, Consultant – Shoulder & Orthopaedic Surgeon; Dr. Lokesh Suryanarayanan, Consultant – Plastic Surgery along with Dr. Subashini, Senior Consultant – Plastic Surgery; Dr. K Partheeban, Clinical Lead & Senior Consultant – Anaesthesia. The orthopaedics team performed the complex shoulder reconstruction, including the Latarjet procedure. Dr. Lokesh and the Plastic Surgery team freed the nerves from scar tissue and adhesions to relieve compression and preserve nerve function. Intraoperative electrodiagnostic study of the nerves was done. Post-operatively, the patient has been recovering steadily and is undergoing a structured rehabilitation program under the guidance of the Physiotherapy and Rehabilitation team, with encouraging progress toward regaining function and mobility.

In his comments, Dr. Nikhil Jawaharlal Nahar, said, “This was one of the most challenging shoulder reconstructions because the injury had been neglected for nearly six months. By the time the patient reached us, the shoulder had become chronically dislocated, with extensive scar tissue and compression of the brachial plexus. The displaced humeral head was also lying dangerously close to the axillary artery, the main blood vessel supplying the arm, making the surgery particularly demanding. Our priority was to restore the shoulder to its normal anatomical position while carefully protecting the nerves and blood vessels. This required meticulous planning, advanced imaging, intraoperative nerve monitoring and close collaboration between orthopedics, plastic surgery, anaesthesia and rehabilitation teams. After an eight-hour surgery, the patient experienced significant pain relief and regained movement in his arm, giving him the opportunity to return to his normal life and livelihood.”

Mr. Siva, CEO, SRM Prime Hospital, said, “This case reflects the level of expertise and multidisciplinary collaboration required to manage some of the most complex orthopedic conditions. Even after six months of neglect of the fracture-dislocation, our teams were able to successfully reconstruct the shoulder using internationally accepted advanced surgical techniques, meticulous planning and seamless coordination across multiple specialties. Such cases demand not only surgical precision but also careful execution to restore function while preventing further injury to critical nerves and blood vessels. At SRM Prime Hospital, we are committed to delivering world-class, evidence-based care for highly complex conditions, enabling patients to regain mobility, independence and a better quality of life.”

The surgical team emphasised that shoulder fractures and dislocations should never be ignored – especially if there is persistent pain, visible deformity, inability to move the arm, weakness or numbness after an injury. Early evaluation and appropriate imaging following a significant shoulder injury are crucial to prevent chronic deformity, nerve and blood vessel compression, and permanent loss of function.

மணிகண்டனின் அடுத்த படமாக “மக்கள் காவலன்”

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்”  படத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான, சமூக வேர்களைக் கொண்ட, தனித்துவமான திரைப்படங்களை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும் ஒன்றிணைக்கிறது.

குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களின் வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள கே. மணிகண்டனின் அடுத்த படமாகவும் மக்கள் காவலன் அமைகிறது. மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக முழுநீள ஆக்‌ஷன் டிராமாவில் கதாநாயகனாக அவர் நடிக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள “மக்கள் காவலன்”, கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது. ஒருவரின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தப் பயணம், அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் அளவுக்கு வளர்கிறது. போராட்டம் தீவிரமடையும்போது அதன் விலையும் அதிகரிக்கிறது. இறுதியில், ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையேயான எல்லை மெதுவாக மறைந்து விடுகிறது.

இந்தப் படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் கே. மணிகண்டன் நடிக்கிறார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பிரதீபன் செல்வரத்தினம், படத்தொகுப்பு – அருள் மோசஸ், கலை இயக்கம் – பாப்பநாடு சி. உதயகுமார், சண்டைப் பயிற்சி – டான் அசோக், ஒலியமைப்பு – ஆண்டனி ஜெயரூபன், ஆடை வடிவமைப்பு – சுரேஷ்குமார், ஒப்பனை – ராமச்சந்திரன் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

பைசன் காளமாடன் திரைப்படத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக தொடரும் இந்தக் கூட்டணியில் உருவாகும் “மக்கள் காவலன்” திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

பிர்லா ஸ்டுடியோஸின் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி கூறியதாவது:

“பைசன் காளமாடன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மக்கள் காவலன் மூலம் நீலம் ஸ்டுடியோஸுடன் எங்களது கூட்டணியின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வலுவான, தனித்துவமான குரல் கொண்ட படைப்பாளிகளையும், ரசிகர்களுடன் ஆழமாக இணையும் கதைகளையும் தொடர்ந்து வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தனது முதல் முழுநீள திரைப்படத்திலேயே இயக்குநர் சந்தோஷ் குமார் அந்தப் பார்வையை மிகத் தெளிவாக கொண்டு வந்துள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான கே. மணிகண்டன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பது எங்களுக்கு பெருமை. மக்கள் காவலன் வலிமையான, பொழுதுபோக்கான, அதே நேரத்தில் ஆழமான உணர்வுகளைத் தாங்கிய திரைப்படம். இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம்.”

நீலம் ஸ்டுடியோஸின் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் கூறியதாவது:

“மக்கள் காவலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மிகத் திறமையான இளம் எழுத்தாளர்-இயக்குநர்களில் ஒருவரான சந்தோஷ் குமாரை ரசிகர்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு கிடைத்த மிகவும் உற்சாகமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மணிகண்டனின் அற்புதமான நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். அதேபோல், இயக்குநர்களின் பார்வையை மையமாகக் கொண்ட, பெரிய அளவில் உருவாகும் திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என்ற எங்களது நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பிர்லா ஸ்டுடியோஸுடன் மீண்டும் இணைவதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.”

நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது:

“மக்கள் காவலன் என்பது கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா. இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.”

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் குமார் கூறியதாவது:

“மக்கள் காவலன் எனது முதல் முழுநீள திரைப்படம். நான் சந்தித்த மனிதர்கள், நான் வாழ்ந்த அனுபவங்கள், நான் நேரில் கண்ட உண்மைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தே இந்தக் கதை உருவானது. அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும் இந்தப் படம் பேசுகிறது. அதே நேரத்தில், அந்த அமைப்புக்குள் தனது நேர்மையை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனின் கதையையும் இது சொல்கிறது. இந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான நேர்மையையும் தீவிரத்தையும் மணிகண்டன் மிகச் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். இந்தக் கதையை நம்பி, என் முதல் முழுநீள திரைப்படத்திற்கு வாய்ப்பு வழங்கிய பிர்லா ஸ்டுடியோஸுக்கும் நீலம் ஸ்டுடியோஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

‘பட்டாம்பூச்சி’, ‘தி வெட்டிங் சாங்’ என இரண்டு தொடர்ச்சியான வெற்றி பாடல்களை கொடுத்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படக்குழுவினர் – தற்போது மற்றொரு புதிய பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுடன் மீண்டும் வருகை தந்துள்ளனர். இப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடல் பிளே லிஸ்ட்களை ஆக்கிரமிக்கும் சமீபத்திய பாடலாகவும் மாறி உள்ளது.

கவர்ச்சியான இசை- கிளர்ச்சியூட்டும் அதிர்வுகளால் நிரம்பிய.. துடிப்பான- அதிக ஆற்றலுடைய பாடலாக ‘தி ஒன் ரூல்’ உருவாகியுள்ளது. இந்தப் பாடல் உற்சாகத்தையும்… கம்பீரத்தையும்… கச்சிதமாக படம் பிடித்துள்ளது. இந்தப் பாடல் – சூர்யாவை ஒரு புத்தம் புதிய சக்தி மிக்க அவதாரத்தில் காட்சிப்படுத்துகிறது. அத்துடன் உடனடியாக கூட்டத்தின் ஒட்டுமொத்த கவனத்தை காந்தம் போல் ஈர்க்கும் ஒரு பாடலாகவும்.. தீப்பற்ற வைக்கும்… பொறி பறக்கும் …பாடலாகவும் அமைந்திருக்கிறது.

இந்தப் பாடலுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அவரது தாளம் போட வைக்கும் இசையில் உருவான மற்றொரு வெற்றி பாடலாக இருக்கிறது. இந்தப் பாடலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பாடலாசிரியர் & பாடகர் கானா காதர் இப்பாடலை எழுதி, பாடியிருக்கிறார். இவரது குரலும் இந்தப் பாடலுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அளித்து, உடனடியாக வசீகரிக்கும் தன்மையையும் கொடுத்திருக்கிறது.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திலிருந்து தொடர்ச்சியாக மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும்… இந்தத் திரைப்படத்திற்கு.. திரையரங்க வெளியீட்டிற்கு முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை தொடர்ந்து உண்டாக்கி வருகிறது. மேலும் இப்படத்தைப் பற்றிய ஒவ்வொரு புதிய தகவலும் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கிறது.‌

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சிதாரா என்டர்டெயின்மென்ட் (Sithara Entertainments) – ஃபார்ச்சூன் ஃபோர் (Fortune Four Cinemas) ஆகிய நிறுவனங்களின் சார்பில் சூர்யதேவர நாக வம்ஷீ- சாயி சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்து, ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம்- சுதந்திர தின வார இறுதியில்… ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல் உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர், இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர் மற்றும் “இந்திரா”, “வா கண்ணம்மா” பாடல்கள், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் கூட்டணி, சோனா ஒலிக்கலின் முக்கிய கதாபாத்திரம், ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’, வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

வரவேற்பைப் பெறும் ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக்… 50% படப்பிடிப்பு நிறைவு !

நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.

படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு, படக்குழுவினரை நேரில் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தெனாவட்டு ’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. ஜீவாவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான மற்றும் வித்தியாசமான படைப்பாக இப்படம் அமையும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையுடன் கூடிய கதையில் நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படத்திற்கு, அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் ( Marshall Robinson) இசையமைக்கிறார். அவரது இசை இப்படத்தின் உணர்வுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர். புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

வலுவான கதைக்களம், திறமையான நடிகர்கள், அனுபவமிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகி வரும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் படமாக மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவில் பேசப்படும் குடும்ப உணர்வுப் படங்களில் ஒன்றாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ‘தகப்பன்’ திரைப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

நகைச்சுவை,ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன் நிற்கிறார்கள். சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்பக் கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.

தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.

தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம், தயாரிப்பு: செ. ஹரி உத்ரா
வசனம் : செ. ஹரி உத்ரா, P. ரஞ்சித் குமார்
ஒளிப்பதிவு: K.S. பழனி
இசை: A.J. அலி மிர்சாக்
படத்தொகுப்பு: பிரசாந்த், S.B. ராஜா
கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி
சண்டைப்பயிற்சி: கனல் V. கண்ணன், கனல் S. குகன்
நடனம்: I. ராதிகா, ராஜேஷ் கிறிஸ்டி
பாடல் வரிகள் : மோகன் ராஜன், கவிஞர் சாரதி
நிர்வாக தயாரிப்பாளர்கள்: மனோவ் செல்வராஜ், தனகோபால், M. விஸ்வநாதன், சேட்டு K
இணை தயாரிப்பாளர்கள்: பாலகங்காதரன், திவ்யா ஜகத், ஜனார்த்தனன் V.
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின்

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘ஷம்பாலா’ திரைப்படத்தின் மூலம் தனித்துவமான கற்பனை உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது இன்னும் பிரம்மாண்டமான படைப்பான ‘கரிகாலா’ மூலம் ரசிகர்களை புதிய மாய உலகிற்கு அழைத்துச் செல்ல தயாராகியுள்ளார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

‘கரிகாலா’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களை ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. அடர்ந்த மர்மக் காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் கம்பீரமான சிங்கமும் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியமைப்பு, இந்திய நாட்டுப்புறக் கதைகள், சாகசம் மற்றும் கற்பனை உலகம் ஆகியவற்றை இணைக்கும் பிரம்மாண்டமான திரைப்பட அனுபவத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் ‘கரிகாலா’, தலைமுறைகளை கவர்ந்த சந்தமாமா கதைகளின் மாய உலகில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகியுள்ளது. மந்திர சக்திகள், மறக்கப்பட்ட ராஜ்ஜியங்கள், வீரர்கள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராண மரபுகள் நிறைந்த இந்த உலகம், இந்திய நாட்டுப்புறக் கதைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து திரையில் உயிர்ப்பிக்கவுள்ளது.

இந்தப் படத்திற்காக சந்தீப் கிஷன் தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரம், புதிய தோற்றம் மற்றும் முற்றிலும் மாறுபட்ட உடல் மொழியுடன் சக்திவாய்ந்த போர்வீரராக அவர் திரையில் தோன்றுகிறார். அவரது இந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

‘கரிகாலா’ இரண்டு அத்தியாயங்களாக வெளியாகவுள்ளது. முதல் அத்தியாயம் 2027 ஜூலை 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் அத்தியாயம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஷம்பாலா படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் யுகேந்தர் முனி இந்தப் படத்தை இன்னும் பெரிய அளவில் உருவாக்கி வருகிறார். விரிவான உலகக் கட்டமைப்பு, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு, விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்துடன் உருவாகி வரும் ‘கரிகாலா’, இந்திய சினிமாவில் சோஷியோ ஃபேண்டஸி வகைக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்டமான தலைப்பு அறிவிப்பும், மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில், ‘கரிகாலா’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொழில்நுட்பக் குழு:

இயக்கம் : யுகேந்தர் முனி

ஒளிப்பதிவு : பிரவீன் பங்காரி

இசை : ஸ்ரீசரண் பாகலா

படத்தொகுப்பு : ஸ்ரவண் கட்டிகனேனி

தயாரிப்பு வடிவமைப்பு : ராம்சரண் தேஜ் லபானி

ஆக்‌ஷன் : ராஜ்குமார் சிந்தலா

ஆடை வடிவமைப்பு : ஆயிஷா மரியம்

தயாரிப்பாளர்கள் : ராஜசேகர் அன்னபிமோஜு, மகிதர் ரெட்டி

தயாரிப்பு நிறுவனம் : ஷைனிங் பிக்சர்ஸ்

படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ‘கரிகாலா’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான உலகம் தொடர்பான மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இயக்குநர் சசியின் மனதைத் தொடும் குடும்ப நாடகம், தாய்மை, இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவின் நிலைத்த பிணைப்பை ஆராய்கிறது

தேசியம், ஆகஸ்ட் 4, 2026: இயக்குநர் சசி எழுதி இயக்கிய உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி, ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தற்போது தமிழ் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.

நூறு சாமி திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம், உணர்வுபூர்வமான கதையாடல், சக்திவாய்ந்த நடிப்புகள் மற்றும் சமகால சமூகக் கருத்துக்களை நுணுக்கமாக கையாள்ந்த விதத்திற்காக பாராட்டுகளைப் பெற்றது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், தனது குடும்பத்தை வளர்ப்பதற்காக வாழ்நாளை அர்ப்பணித்த விதவைத் தாயான செல்வியைப் பற்றியது. வாழ்க்கையின் பின்னர் கட்டத்தில் அவர் துணையைத் தேட முடிவு செய்யும்போது, ஆழமாக வேரூன்றிய சமூக நெறிமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சுற்றியுள்ளவர்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் செல்வியின் வாழ்க்கையின் மூலம், நூறு சாமி தாய்மை, கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகளை மீறி மகிழ்ச்சியைத் தழுவிக் கொள்ளும் துணிச்சலைப் பேசும் மனதை நெகிழ வைக்கும் கதையாக விரிகிறது.

இந்தக் கதையின் மையமாக, வழக்கமான பார்வைகளை தலைகீழாக மாற்றும் ஒரு புத்துணர்ச்சியான தாய்-மகன் உறவு அமைந்துள்ளது. ஒரு தாயின் தியாகங்களை மட்டும் கொண்டாடுவதற்குப் பதிலாக, தனது தாயின் மகிழ்ச்சிக்காக அவளுக்கு துணையாக நின்று, அவள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் மகனின் பாசத்தை நூறு சாமி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மனதைத் தொடும் உணர்வுகளையும், அர்த்தமுள்ள சமூகக் கருத்துக்களையும் இணைத்து, தலைமுறைகளைத் தாண்டி அனைவருடனும் ஒத்திசைவாக இணையும் ஒரு கதையை இந்த திரைப்படம் வழங்குகிறது. அதே நேரத்தில் கருணை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளின் முக்கியத்துவத்தையும் கொண்டாடுகிறது.

திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து இயக்குநர் சசி கூறுகையில், “நூறு சாமி என்பது உண்மையான உணர்வுகளிலிருந்தும், உண்மையான வாழ்க்கைகளிலிருந்தும் பிறந்த கதை. வயது அல்லது சமூக எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும், அன்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் ஒரு கதையை சொல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். திரையரங்குகளில் இந்த திரைப்படம் ரசிகர்களுடன் இணைந்ததற்கு நான் நன்றியுள்ளவன். இப்போது தமிழ் ZEE5 மூலம் இன்னும் பல வீடுகளுக்குச் செல்லவிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

விஜய் ஆண்டனி கூறுகையில், “ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் நூறு சாமி அதன் உணர்வுகளால் எனக்கு தனித்துவமானதாகத் தெரிகிறது. இந்தக் கதையின் மையத்தில் தாய் மற்றும் மகனின் உறவு இருக்கிறது. அதன் செய்தியுடன் ரசிகர்கள் ஆழமாக இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது பல மொழிகளில் உள்ள குடும்பங்கள் இந்த திரைப்படத்தை ஒன்றாக தமிழ் ZEE5-ல் பார்க்க முடிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

நூறு சாமி திரைப்படத்தை ஆகஸ்ட் 7 முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில், தமிழ் ZEE5-ல் பிரத்தியேகமாகக் காணத் தவறாதீர்கள்.

FRAI தமிழ்நாடு அத்தியாயம் இந்தியாவின் ஆன்லைன் சில்லறை சுற்றுச்சூழல் அமைப்பில் வளர்ந்து வரும் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் சந்தை சிதைவுக்கு எதிராக எச்சரிக்கிறது

சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோரைப் பாதுகாப்பதற்கும் மில்லியன் கணக்கான சிறு சில்லறை விற்பனையாளர்களைப் பாதுகாப்பதற்கும் வலுவான அமலாக்க மற்றும் நியாயமான சந்தை நடைமுறைகளை வலியுறுத்துகின்றனர்

Chennai 4th August 2026: இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (FRAI) தமிழ்நாடு மாநில பிரிவு இன்று சென்னையில் “நவீன சந்தைகளில் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்கொள்வது” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது, அங்கு சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தக சங்கங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து இந்தியாவின் சில்லறை சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கும் இரண்டு வேகமாக வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்தனர்-சட்டவிரோத வர்த்தகத்தின் ஆபத்தான உயர்வு மற்றும் நியாயமற்ற சந்தை நடைமுறைகள் அதிகரித்து வருகின்றன. போலி பொருட்கள், சட்டவிரோத விநியோக வழிகள் மற்றும் சந்தைகள் முழுவதும் இணங்காத பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து பங்கேற்பாளர்கள் கடுமையான கவலையை வெளிப்படுத்தினர், அதே நேரத்தில் கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம், ஆழ்ந்த தள்ளுபடி மற்றும் சில விரைவான வர்த்தகம் மற்றும் இ-காமர்ஸ் மாதிரிகளின் கட்டுப்பாடற்ற விரிவாக்கம் ஆகியவை சிறு சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பாரம்பரிய வணிகங்களுக்கு கடுமையான ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் எடுத்துரைத்தது.

சட்டவிரோத வர்த்தகம் மற்றும் நியாயமற்ற சந்தை நடைமுறைகள் இரண்டும் உண்மையான வணிகங்கள், அரசாங்க வருவாய், நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிறு வணிகர்களின் வாழ்வாதாரங்களை மோசமாக பாதிக்கின்றன என்று கருத்தரங்கு எடுத்துரைத்தது.

இந்நிகழ்ச்சியில் திரு M.L. விஜயப்பிரபு, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர், மாதவரம், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். ஹரிஷ், உதவி காவல் ஆணையர் திரு. ஐ. இராஜபால், தமிழ்நாடு வனிகர் சங்கத்தின் செயலாளர் திரு. மேஸ்மூர் காந்தன் வெள்ளையன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆர். தில்லிபாபு எஸ்.மதன் குமார் ஆலந்தூர் தெற்கு செயலாளர் தவெக ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய FRAI தமிழ்நாடு பிரிவின் தலைவர் சி. செல்லதுரை, “சட்டவிரோத வர்த்தகம் இனி வெறுமனே ஒரு வணிகப் பிரச்சினை அல்ல, இது நுகர்வோர் பாதுகாப்பு, நியாயமான போட்டி மற்றும் மில்லியன் கணக்கான நேர்மையான சில்லறை விற்பனையாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கள்ள மற்றும் சட்டவிரோதமாக பெறப்பட்ட தயாரிப்புகள் தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற பொருட்களுக்கு நுகர்வோரை அம்பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சட்டத்திற்குள் செயல்படும் முறையான வணிகங்களின் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கும், நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், உண்மையான வணிகங்கள் செழிக்கக்கூடிய ஒரு வெளிப்படையான சில்லறை சூழலை உருவாக்குவதற்கும் அரசு, சட்ட அமலாக்க முகவர் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடன் நெருக்கமாக பணியாற்ற FRAI தமிழ்நாடு பிரிவு உறுதிபூண்டுள்ளது “.

விரைவான வர்த்தகம் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் சில்லறை நிலப்பரப்பை விரைவாக மாற்றியமைத்து, தயாரிப்புகளை நுகர்வோருக்கு உடனடியாக அணுகக்கூடியதாக மாற்றுகையில், அதே சுற்றுச்சூழல் அமைப்பு சட்டவிரோத வர்த்தகம் மற்றும் கள்ள தயாரிப்புகளின் விரைவான பரவலைச் சுற்றி கடுமையான கவலைகளை உருவாக்குகிறது என்று சில்லறை விற்பனையாளர்கள் மேலும் எடுத்துரைத்தனர். ஃபிளாஷ் விற்பனை, நம்பத்தகாத தள்ளுபடி, தீவிரமான விலை உத்திகள் மற்றும் அதிவேக விநியோகத்திற்கான தொடர்ச்சியான உந்துதல் ஆகியவை நுகர்வோர் பெரும்பாலும் உண்மையான மற்றும் போலி தயாரிப்புகளை வேறுபடுத்திப் பார்க்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளன என்று பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

இன்று உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் முதல் தோல் பராமரிப்பு பொருட்கள், மின்னணுவியல் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிரீமியம் மொபைல் போன்கள் வரை அனைத்தும் விரைவான வர்த்தகம் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் சில நிமிடங்களில் வழங்கப்படுகின்றன என்று பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், இந்த தீவிர அணுகல் மற்றும் மலிவான விலைகளுக்கான இனம் ஆகியவை தடைசெய்யப்பட்ட, சட்டவிரோதமான மற்றும் கள்ள தயாரிப்புகளுக்கு முன்னோடியில்லாத அளவில் சந்தையில் ஊடுருவ ஆபத்தான நுழைவு புள்ளிகளைத் திறக்கின்றன.

சில்லறை விற்பனையாளர்களின் கூற்றுப்படி, சட்டவிரோத வர்த்தகர்கள் மற்றும் நெறிமுறையற்ற விற்பனையாளர்கள் விரைவாக விரிவடைந்து வரும் இந்த டிஜிட்டல் தளங்களை அதிகளவில் பயன்படுத்தி கள்ள மற்றும் இணக்கமற்ற தயாரிப்புகளை சந்தைக்குள் தள்ளுகின்றனர், பலவீனமான கண்காணிப்பு வழிமுறைகள் மற்றும் ஆழ்ந்த தள்ளுபடிகள் மற்றும் உடனடி கிடைக்கும் தன்மை ஆகியவற்றுடன் வளர்ந்து வரும் நுகர்வோர் ஆர்வத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சில்லறை விற்பனையாளர்கள் நுகர்வோர் படிப்படியாக தரம்-உணர்வைக் காட்டிலும் விலை-உணர்திறன் கொண்டவர்களாக மாறி வருவதாகவும், டிஜிட்டல் வர்த்தக சேனல்களில் கட்டுப்பாடில்லாமல் சட்டவிரோத வர்த்தகம் செழிக்க வளமான நிலத்தை உருவாக்குவதாகவும் எச்சரித்தனர்.

இத்தகைய தளங்களின் விரைவான எழுச்சி குறைந்த தரமான மற்றும் பாதுகாப்பற்ற தயாரிப்புகளின் புழக்கத்தின் மூலம் நுகர்வோரை மோசமாக பாதிக்கும் அதே வேளையில், நம்பிக்கையை வளர்ப்பதற்கும், தயாரிப்பு நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும், தங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் பல ஆண்டுகளாக செலவழிக்கும் உண்மையான ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு இது சமமாக அழிவுகரமானது என்றும் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். சில்லறை விற்பனையாளர்கள் நியாயமற்ற சந்தை நடைமுறைகள், சீரற்ற போட்டி மற்றும் ஆக்கிரமிப்பு விலை கட்டமைப்புகள் ஆகியவை பாரம்பரிய வர்த்தகர்கள் தங்கள் வணிகங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்கும், தங்கள் குடும்பங்களை ஆதரிப்பதற்கும் ஒவ்வொரு நாளும் 14 முதல் 18 மணி நேரம் அயராது உழைத்த போதிலும் உயிர்வாழ்வது பெருகிய முறையில் கடினமாகி வருவதாக வலியுறுத்தினர். இது வெறுமனே ஒரு வணிகப் பிரச்சினை மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான நேர்மையான சிறு சில்லறை விற்பனையாளர்களை பாதிக்கும் தீவிரமான சமூக மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை என்று பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.

கருத்தரங்கின் போது, மேடையில் இயக்கப்படும் சில்லறை மாதிரிகளின் விரைவான விரிவாக்கம் மற்றும் கள்ள மற்றும் இணக்கமற்ற பொருட்களின் வளர்ந்து வரும் புழக்கம் பாரம்பரிய வணிகங்களுக்கு கடுமையான சவால்களை உருவாக்குகின்றன என்று பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்தனர். சில்லறை விற்பனையாளர்கள் கூறுகையில், சிறு வர்த்தகர்கள் குறைந்த விளிம்புடனும் அதிக பொறுப்புடனும் செயல்படுகையில், பல பெரிய தளங்கள் தீவிரமான தள்ளுபடி மற்றும் விரைவான விரிவாக்க உத்திகள் மூலம் சந்தைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன. சட்டவிரோத வர்த்தகம் மற்றும் கள்ளப் பொருட்கள் உண்மையான வணிகங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நுகர்வோர் நம்பிக்கையை பலவீனப்படுத்துவதாகவும், நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சிறு சில்லறை விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மோசமாக பாதிக்கும் என்றும் பங்கேற்பாளர்கள் எச்சரித்தனர். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்ட அவர்கள், சில்லறை வர்த்தகத்தின் வளர்ச்சி நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த சங்கம் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர சில்லறை விற்பனையாளர்களைக் கொண்ட அமைப்பாகும். இது 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவதில் பெயர் பெற்றது.

பங்கேற்பாளர்கள் கூட்டாக வலுவான ஒழுங்குமுறை மேற்பார்வை, நியாயமான போட்டிக் கொள்கைகள் மற்றும் சிறு சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒரு சமமான களம் ஆகியவற்றிற்கு அழைப்பு விடுத்தனர். ஆன்லைன் சில்லறை சூழல் அமைப்பில் சட்டவிரோத மற்றும் சட்டவிரோத தயாரிப்புகளை முற்றிலுமாக ஒழிப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு கொள்கை வகுப்பாளர்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

சிறு சில்லறை விற்பனையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்ளூர் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவின் பாரம்பரிய தொழில்முனைவோர் சூழலைப் பாதுகாக்கவும் அரசு, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுக்கு கூட்டு வேண்டுகோளுடன் கருத்தரங்கு நிறைவடைந்தது.

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

டி. இமான் இசையில், பலராம் கிருஷ்ணா இயக்கிய ‘நிறம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது!

K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் வெளியிடப்பட்ட டிரெய்லர், பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

டி. இமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், “Inspired from True Incidents” என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட பரபரப்பான கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது.

இந்நிகழ்வினில்

பாடகி ஸ்ரீநிஷா பேசியதாவது

அனைவருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இமான் சார் இசையில் ஏற்கனவே பல பாடல்கள் பாடியிருந்தாலும், “நூதனா” பாடல் எனக்கு மிகவும் பிடித்த மெலடி. இந்தப் பாடலை கபிலனுடன் இணைந்து பாடியது ஒரு அருமையான அனுபவம். இமான் சார் மிகவும் வேகமாகவும், பாடகர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் பதிவு நடத்துவார். இயக்குநர் பலராம் கிருஷ்ணா மிகவும் அன்பாகவும், குடும்ப உறுப்பினர் போலவும் எங்களை கவனித்துக் கொண்டார். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நடன அமைப்பாளர் சாய் பாரதி பேசியதாவது

அனைவருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தில் “நூதனா” பாடலுக்கு நடன அமைக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பலராம் கிருஷ்ணா, தயாரிப்பாளர் மற்றும் இமான் சாருக்கு என் நன்றிகள். முகன் மற்றும் ப்ரீத்தி இருவரும் மிகவும் ஒத்துழைப்புடன் பணியாற்றினார்கள். குறிப்பாக கொடைக்கானலில் நடைபெற்ற படப்பிடிப்பு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக உருவாக்கியதால், பாடல் இன்னும் சிறப்பாக வந்துள்ளது. முழு படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்.

நடிகை தான்யா ஹோப் பேசியதாவது

எல்லோருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த அழகான வாய்ப்பை அளித்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கும், என்னை இந்த படத்தில் இணைத்த நிதின் சத்யாவுக்கும் என் மனமார்ந்த நன்றி. சங்கர் மாஸ்டரின் நடன அமைப்பு இந்த பாடலை இன்னும் அழகாக்கியுள்ளது. முழு படக்குழுவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் என் வாழ்த்துகளும் நன்றிகளும்.

பாடகி பிரவஸ்தி பேசியதாவது

எல்லோருக்கும் வணக்கம். நான் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரவஸ்தி. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படப் பாடல் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அருமையான வாய்ப்பை அளித்த இசையமைப்பாளர் டி. இமான் சார் மற்றும் இயக்குநர் பலராம் கிருஷ்ணா சாருக்கு என் மனமார்ந்த நன்றி. சிறு வயதில் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடியிருந்தாலும், ஒரு தமிழ் திரைப்படத்தில் பாடுவது எனக்கு ஒரு கனவு. அந்த கனவை நிறைவேற்றிய அனைவருக்கும் என் நன்றிகள். “நிறம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நடிகை ப்ரீந்து மாதவி பேசியதாவது

அனைவருக்கும் வணக்கம். இன்று முழு “நிறம்” படக்குழுவுடன் இந்த மேடையில் இருப்பதில் மகிழ்ச்சி. இங்கு வந்துள்ள அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த திரைப்படத்தை பார்வையாளர்கள் பார்க்க நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அனைவரும் திரையரங்கில் சென்று “நிறம்” திரைப்படத்தை பார்த்து ரசித்து, உங்கள் ஆதரவை வழங்குங்கள். நன்றி.

நடிகர் நிதின் சத்யா பேசியதாவது

எல்லோருக்கும் வணக்கம். “நிறம்” திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த படம் ஒரு நட்பின் அடிப்படையில் உருவானது. இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுடன் எனக்கு பல வருடங்களாக நட்பு உள்ளது. அதனால் இந்த படத்தில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், பல விஷயங்களில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தேன். படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இமான் சார் இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் இசையமைத்துள்ளார். இயக்குநரின் அர்ப்பணிப்பும், தயாரிப்பாளரின் நம்பிக்கையும் இந்த படத்தின் பலம். முதல் படம் என்ற எண்ணமே வராத அளவுக்கு பலராம் கிருஷ்ணா சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்த நல்ல படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது ஊடக நண்பர்களின் கையில்தான் இருக்கிறது. அனைவரும் படம் பார்த்து மனதார ஆதரித்து, நேர்மையான கருத்துக்களை பகிர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசியதாவது

“நிறம்” திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தின் கதையை கேட்டவுடனேயே இதில் ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் இருப்பதை உணர்ந்தேன். இயக்குநர் பலராம் கிருஷ்ணா தனது முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல தெளிவான பார்வையுடன் பணியாற்றியிருக்கிறார். கதாநாயகன் முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து கலைஞர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாடலாசிரியர்கள் விவேகா, பா. விஜய், எடிட்டர் சாபு ஜோசப் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரின் பங்களிப்பும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்.அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து, இந்த படக்குழுவின் உழைப்பை பாராட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர் பலராம் கிருஷ்ணா பேசியதாவது

எல்லோருக்கும் வணக்கம். இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்பது என் வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு நிறைவேறிய தருணம். பல வருடங்களாக நான் இந்த வாய்ப்புக்காக காத்திருந்தேன். என்னை நம்பிய குடும்பத்தினர், நண்பர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி. “நிறம்” என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல. ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்கள்தான் இந்த படத்தின் மையக் கருத்து. இது ஒரு கிரைம்-இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இமான் சார், முகன், நிதின் சத்யா மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் இந்த படம் உருவாகியுள்ளது. நல்ல உள்ளடக்கத்தை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த படத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம்.

நாயகன் முகன் பேசியதாவது

அனைவருக்கும் வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. “நிறம்” ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர். இந்த படத்தில் நடிக்க என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கியிருக்கிறார். படப்பிடிப்பின் போது எங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்து, கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிப்படுத்த உதவினார். இமான் சார் இசையில் நடிப்பது எனக்கு ஒரு கனவு நிறைவேறியது. நிதின் சத்யாவுடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். தயாரிப்பாளர், தொழில்நுட்பக் குழுவினர், பாடகர்கள், பாடலாசிரியர்கள் என அனைவரும் இந்த படத்திற்காக மனதார உழைத்திருக்கிறார்கள். இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படத்திற்கு சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். வி. ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்கத்தை தாமோதரன் மேற்கொண்டுள்ளார். கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.

‘நிறம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.