Breaking
September 17, 2026

“லீடர்” திரை விமர்சணம்

மாஸ் ஹீரோக்கள் நடிக்க வேண்டிய கதையை தைரியமாக Legent சரவணனை வைத்து இயக்கி வென்றுள்ளார் இயக்குனர் R.S.துரை செந்தில்குமார்.

பழைய கதைதான். திரைக்கதை புதிதாக விறுவிறுப்பாக உள்ளது.

படம் துவங்கிய 1st ஃபிரேமிலிருந்தே திரைக்கதை பரபரவென வேகமெடுக்கிறது.

இடைவேளை வந்ததே தெரியாத அளவுக்கு செம ஸ்பீட்.

இன்டர்வெல் பிளாக் செம…

2nd ஹாஃப் துவங்கி சற்றே தடுமாறினாலும் பிறகு மீண்டும் வேகமெடுக்கும் திரைக்கதை படத்தை காப்பாற்றி விடுகிறது.

படம் ஆரம்பித்ததில் இருந்து கிளைமாக்ஸ் வரை நிறைய டிவிஸ்டுகள் நம்மை ஆச்சர்ய படுத்திக்கொண்டே இருக்கிறது.

இவ்வளவு டிவிஸ்டுகள் இருந்தும் திகட்டவில்லை.

படம் நெடுகிலும் வரும் சின்ன சின்ன காமெடிகள் புன்னகைக்க வைக்கிறது.

படத்தின் முதல் ஹீரோ திரைக்கதை என்றால் 2nd ஹீரோ இசையமைப்பாளர் ஜிப்ரான் தான்.

பின்னணி இசையில் மனிதர் பட்டையை கிளம்பி உள்ளார்.

அடுத்து ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ்.S கலக்கலாக படம் பிடித்து அசத்துகிறார்.

அதே போல சண்டை பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ ஆக்க்ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.

அதுவும் Legend சரவணனை இப்படியான சண்டை காட்சிகளை எடுத்து ரசிக்கவைப்பதெல்லாம் வேற லெவல்…👌

படத்தில் லாஜிக் மிஸ்டேக்ஸ் மற்றும் சின்ன சின்ன குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவைகளை எல்லாம் திரைக்கதையின் வேகம் மறக்கடித்து விடுகிறது.

ஹீரோவுக்கு இணையான வேடத்தில் ஷாம் கச்சிதமான நடிப்பை கொடுத்துள்ளார்.

ஹீரோவின் மகளாக வரும் இயல் நடிப்பு இயல்பாக சிறப்பாக உள்ளது.

படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, ஹீரோயின் பாயல் ராஜ்புத், வில்லன் சந்தோஷ் பிரதீப், லால், அம்ரிதா அயர், உட்பட எல்லோரும் அவரவர் வேடத்தை சிறப்பாக செய்துள்ளார்கள்.

பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஹிந்தி KILL படத்தை நினைவு படுத்தும் கடைசி அரைமணி நேர ரத்தக்களரியான கிளைமேக்ஸ் ஃபைட் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.

இந்த சண்டைக்காட்சியில் பிரதீப் E. ராகவ் எடிட்டிங்கில் அட்டகாசம் செய்துள்ளார்.

ஹீரோவாக அல்ல ஆக்க்ஷன் ஹீரோவாகவும் வெற்றி பெற்றுவிட்டர் லெஜன்ட் சரவணன்.

எல்லோருக்கும் பிடிக்கும்படியான சென்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் + Spy Thriller படமாக வந்துள்ள இந்த லீடர்

‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

நடிகர்கள் பஸில் ஜோசப் – L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்க, படத்தொகுப்பை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் கவனிக்கிறார்.

காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. S. லலித் குமார் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளராக L. K. விஷ்ணு குமார் பணியாற்றியுள்ளார்.

தற்போது ‘ராவடி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எடிட்டிங், பின்னணி இசை, VFX உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தின் அப்டேட்கள் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், கோடை வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு முழு என்டர்டெயின்மெண்ட் அனுபவமாக இருக்கும்.

நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’

நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு

வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா – சைதன்யா- சரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

தமிழ்ப் பதிப்பிற்காக சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கயாடு லோஹர், இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர் சைதன்யா, சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,

”திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா – சைதன்யா – சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,

”இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.

தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,

”இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.

நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,

”இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,

”இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.

நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை. இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.

இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.

எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. ” என்றார்.

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல்

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு: மஞ்சு விரட்டின் பரபரப்பை நம் கண் முன் நிறுத்தும் பாண்டிமுனி

சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது — அது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுத்து, உணர்ச்சிகரமாகத் தொடந்து, நீண்ட நேரம் மனதில் நிற்கும் ஒரு சினிமாப் பயணம்.

தற்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகி வரும் ‘வடம்’, எதற்கும் அடங்காத மஞ்சு விரட்டின் அதிரடி நிறைந்த உலகத்தை இயல்பாகவும் வலிமையாகவும் உயிர்ப்பிக்கிறது. இந்த மண்ணின் வாசனைமிக்க கதையின் மையத்தில் நிற்பது நாம் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஒரு சக்தி – பாண்டிமுனி. ஒரு கண்ணில் மட்டுமே பார்வை கொண்ட இந்த காளை, அறுக்கப்படும் நிலையிலிருந்து தோல்வியறியா சாம்பியனாக உயர்ந்த அதிசயமான பயணத்தை வெளிப்படுத்துகிறது.

வெற்றி என்பவரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பாண்டிமுனி, ஒரு விலங்காக மட்டுமல்ல — அது பெருமை, பொறுமை மற்றும் அவரது அடையாளத்தின் உருவகமாக திகழ்கிறது. பலமும் பாரம்பரியமும் சோதிக்கப்படும் அரங்குகளில், பாண்டிமுனி எதிர்பார்ப்புகளை முறியடித்து, மரியாதையை வென்று, உடைக்க முடியாத மனவலிமையின் சின்னமாக மாறுகிறது. இது வெற்றிகளைப் பற்றிய கதை மட்டுமல்ல — ஒற்றுமை, நம்பிக்கை, மனிதன் மற்றும் காளை இடையேயான உறவைப் பற்றிய கதை.

தமிழ்நாட்டின் கிராமப்புறத்தின் உணர்ச்சிகரமான பின்னணியில் அமைந்துள்ள ‘வடம்’, மஞ்சு விரட்டின் பாரம்பரியத்தையும், பரபரப்பையும் இதுவரை இல்லாத அளவில் பதிவு செய்கிறது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்உலகில், ஒவ்வொரு சவாலும் உணர்ச்சிபூர்வமானது, ஒவ்வொரு வெற்றியும் பாரம்பரியத்தின் பாரத்தை சுமக்கிறது. பாண்டிமுனி மற்றும் வெற்றியின் பயணம், வெறுமனே பார்வையாளர்கள் பார்ப்பதற்காக மட்டும் அல்ல அது ஒரு அனுபவத்தை கொடுக்கும் ஓர் உண்மையான அண்டர்டாக் கதையாக விரிகிறது.

விமல், நட்ராஜ் சுப்பிரமணியம் (நட்டி), பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் கேந்திரன் இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைப்பில், உணர்ச்சி, உற்சாகம் மற்றும் கலாச்சார ஆழம் இணைந்துள்ளன.

விமல் கூறுகையில்:
“இந்தப் படத்தில் காளையுடன், குறிப்பாக பாண்டிமுனியுடன் பணியாற்றியது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். காலப்போக்கில் உண்மையான ஒரு பந்தம் உருவானது — அது நடிப்பு அல்ல, வாழ்ந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நாள் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானது. இந்தப் படம் என் மனத்திற்கு மிகவும் நெருக்கமானது.”

இயக்குனர் கேந்திரன் கூறுகையில்:
“‘வடம்’ உருவாக்கத்தின் நோக்கம், நமது கலாச்சாரத்தின் வேர்களை உண்மையாகச் சொல்லி, அதன் உணர்ச்சி பரிமாணத்தை வெளிப்படுத்துவதாகும். நடிகர்களையும் காளையையும் அந்த அளவிற்கு தயார்ப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அதுவே இந்தப் படத்தின் தனித்தன்மை.”

நட்டி கூறுகையில்:
“‘வடம்’ எனக்கு மிகவும் நெருக்கமான படம். இது நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் ஒரு அனுபவம். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்போது சன் NXT மூலம் இதைப் பார்க்க முடிவது மகிழ்ச்சியான விஷயம்.”

டி. இமான் கூறுகையில்:
“இந்தப் படத்தின் இயல்புத்தன்மை, இசைக்கும் ஒலிக்கும் ஒரு புதிய அணுகுமுறையை தேவைப்படுத்தியது. மஞ்சு விரட்டு என்பது பார்க்கப்படுவது மட்டும் அல்ல — அது உணரப்பட வேண்டியது. அந்த ஆற்றல், குழப்பம் மற்றும் புயலுக்கு முன் நிலவும் அமைதியை இசையில் பதிவு செய்வது சவாலாக இருந்தாலும் சுவாரஸ்யமாக இருந்தது.”

‘வடம்’ படத்தின் உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையை அதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அது கலாச்சாரத்தை நமக்கு அதன் வாழ்வியலோடு இயல்பாகக் காட்டுகிறது. பாண்டிமுனியின் உயர்வும், அதைச் சுற்றியுள்ள மனித உணர்ச்சிகளும், மஞ்சு விரட்டின் பாரம்பரியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த மரியாதையாக இந்தப் படம் திகழ்கிறது.

‘வடம்’ தற்போது சன் NXT-இல் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது… காணுங்கள், எங்கேயும்… எப்போதும்…

சன் NXT பற்றி:

சன் NXT, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு விருப்பமான முன்னணி OTT தளமாக திகழ்கிறது. 4000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 44-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், 7-க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கங்கள் ஆகியவற்றுடன், உயர்தர தென்னிந்திய பொழுதுபோக்கை வழங்குகிறது.

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நேரலை ஒளிபரப்புகள் மற்றும் விரைவான வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளடக்கங்களை வழங்கி வருகிறது.

கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி, சிம்பிளி லேர்ன்கற்றல் மையம்+தளத்தின் மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்த உள்ளது.

பெங்களூரு, இந்தியா, XX மார்ச் 2026: கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி (KRCT),
புதுமையான சிம்பிள்லெர்ன் லேர்னிங் ஹப்+ (SLH+) தளத்தின் மூலம், தொழில்துறைக்குத்
தேவையான பாடத்திட்டத்தை வழங்கி, மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த
உள்ளது. இது, கல்விசார் கற்றலுக்கும் தொழில்துறைத் தேவைகளுக்கும் இடையிலான
இடைவெளியைக் குறைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது. மேலும்,
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல்,
கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச்
சேர்ந்த மாணவர்களுக்கு, அவர்களின் முதல் ஆண்டு முதல் பட்டப்படிப்பு முடியும் வரை, அதிகத்
தேவையுள்ள டிஜிட்டல் திறன்களை இது வழங்குகிறது.
சமீபத்திய தொழில்துறை அறிக்கை ஒன்றின்படி, இந்தியப் பட்டதாரிகளில் 42.6% மட்டுமே
வேலைக்குத் தகுதியானவர்களாக உள்ளனர்; இது 2023-ல் 44.3% ஆக இருந்தது. அதே சமயம், 62%
வணிகத் தலைவர்கள் பாரம்பரிய வணிக இலக்குகளை விட செயற்கை நுண்ணறிவு
ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். KRCT மாணவர்கள், கல்வித் தகுதிகள் மற்றும்
வேலை வழங்குநர்கள் தீவிரமாகத் தேடும் வேலைக்குத் தயாரான டிஜிட்டல் திறன்கள் ஆகிய
இரண்டையும் பெற்றுப் பட்டம் பெறுவதை உறுதி செய்வதன் மூலம், இந்த முக்கியமான
இடைவெளியை இது நிவர்த்தி செய்கிறது.
KRCT மாணவர்கள், Simplilearn-இன் விரிவான கற்றல் திட்டங்களை வழங்கும் ‘சிம்பிளி லேர்ன்
கற்றல் மையம்+’ (SLH+) தளத்திற்கான முழுமையான அணுகலைப் பெறுகின்றனர். இத்தளமானது
ஆண்டுதோறும் 30,000 மணிநேரத்திற்கும் அதிகமான நேரடி வகுப்புகளையும், 40-க்கும் மேற்பட்ட
பணி சார்ந்த கற்றல் பாதைகளில் அமைந்த 550-க்கும் மேற்பட்ட திட்டங்களையும் கொண்டுள்ளது.
மேலும், தொழில் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் திட்டங்களையும் அணுகும்
வாய்ப்பை மாணவர்கள் பெறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) & தரவு அறிவியல் (Data
Science), மென்பொருள் உருவாக்கம், கிளவுட் & DevOps, இணையப் பாதுகாப்பு (Cybersecurity),
டிஜிட்டல் செயல்பாடுகள் மற்றும் டிஜிட்டல் வணிகம் போன்ற அதிக தேவை உள்ள துறைகளில்,
தங்கள் கல்வி அட்டவணைகளுக்கு ஏற்றவாறு நெகிழ்வான மற்றும் முடிவுகளை மையமாகக்
கொண்ட பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
Simplilearn-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு. கிருஷ்ணா குமார்
அவர்கள் இதுகுறித்துத் தெரிவிக்கையில்: “நாளைக்கான பணியாளர்களை உருவாக்குவதில்

உயர்கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன;
இருப்பினும், பல மாணவர்கள் வேலை வழங்குநர்கள் எதிர்பார்க்கும் நடைமுறை சார்ந்த மற்றும்
தொழில் துறைக்கு ஏற்ற திறன்கள் இல்லாமலேயே பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். கே.
ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியுடனான (KRCT) எங்கள் கூட்டாண்மை, கல்விசார்
சிறப்பை அதிநவீன டிஜிட்டல் திறன் பயிற்சிகளுடன் எவ்வாறு தடையின்றி ஒருங்கிணைக்க
முடியும் என்பதை நிரூபிக்கிறது. ஒரே ஆண்டில் 130-லிருந்து 900-க்கும் மேற்பட்ட கற்பவர்கள் என்ற
நிலைக்கு எட்டியுள்ள இந்த வியக்கத்தக்க வளர்ச்சி, முடிவுகளை மையமாகக் கொண்ட கல்வியின்
மீது மாணவர்களுக்கு உள்ள தீவிர ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. எங்கள் சிம்பிளி லேர்ன் கற்றல்
மையம்+’ தளத்தின் வாயிலாக, KRCT மாணவர்கள் அடிப்படைப் பயிற்சிகள் முதல் AI, கிளவுட்
கம்ப்யூட்டிங் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் மேம்பட்ட சான்றிதழ்கள் வரை
விரிவான திறன் தொகுப்புகளை உருவாக்க நாங்கள் உதவுகிறோம். இதன் மூலம், மாணவர்கள்
வெறும் பட்டங்களுடன் மட்டுமல்லாமல், தங்கள் தொழில் வாழ்க்கையில் நேரடி வெற்றியை ஈட்டித்
தரக்கூடிய நிரூபிக்கத்தக்க திறன்களுடனும் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதை நாங்கள்
உறுதி செய்கிறோம்,” என்று கூறினார்.
KRCT நிறுவனம் தொடக்கத்தில், சிம்பிள்லெர்ன் -இன் இணையவழித் தரவு அறிவியல் திட்டங்களை
வழங்கும் ஒரு முன்னோடித் திட்டத்தைத் (Pilot Program) தொடங்கியது; இத்திட்டத்திற்கு
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அமோகமான மற்றும் நேர்மறையான வரவேற்பு
கிடைத்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, கல்வி நிறுவனம் தனது ஈடுபாட்டை 2024-ஆம்
ஆண்டில் 130 கற்பவர்கள் என்ற நிலையிலிருந்து, 2025-ஆம் ஆண்டில் 900-க்கும் மேற்பட்ட
கற்பவர்கள் என்ற நிலைக்கு விரிவுபடுத்தியது. இது, தொழில் துறைக்கு ஏற்ற மற்றும் முடிவுகளை
மையமாகக் கொண்ட பயிற்சிகளுக்குச் சந்தையில் உள்ள வலுவான தேவையை அடிக்கோடிட்டுக்
காட்டுகிறது.

KRCT-யின் தலைவர் டாக்டர் கே. ராமகிருஷ்ணன் கூறியதாவது: “எங்கள் மாணவர்கள் மற்றும்
அவர்களது பெற்றோரிடமிருந்து கிடைத்த வரவேற்பு மிகச் சிறப்பாக உள்ளது. சிம்பிள்லெர்னின்
SLH+ தளத்தின் வழியான நேரடிக் கற்றல் மாதிரியானது, நெகிழ்வுத்தன்மைக்கும்
கட்டமைக்கப்பட்ட வழிகாட்டுதலுக்கும் இடையே ஒரு சரியான சமநிலையை வழங்குகிறது.
துறைசார் வல்லுநர்களை அணுகுதல், செய்முறைத் திட்டங்கள் மற்றும் உலகளவில்
அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் ஆகியவற்றை மாணவர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். இந்தக்
கூட்டாண்மை, எங்கள் வேலைவாய்ப்பு முடிவுகளையும் மாணவர் திருப்தியையும் கணிசமாக
மேம்படுத்தியுள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு வெற்றி-வெற்றி
சூழ்நிலையாக அமைகிறது.”
இந்த விரிவான தீர்வானது, மேற்பார்வையிடப்பட்ட கோடிங் மதிப்பீடுகள், MCO-க்கள் மற்றும்
திறனாய்வுத் தேர்வுகள் அடங்கிய ஒரு மதிப்பீட்டுத் தளத்தை உள்ளடக்கியுள்ளது. இது, துறைசார்
தரநிலைகளுடன் ஒப்பிடப்பட்ட விரிவான, திறன் அடிப்படையிலான அறிக்கையிடலையும்

குறியீட்டுத் தரப் பகுப்பாய்வையும் வழங்குகிறது. மேலும், நிஜ
வாழ்க்கைச் சூழல்களை உருவகப்படுத்தி, பதில்களின் அடிப்படையில் கேள்விகளைத் தானாகவே
மாற்றியமைத்து, வரம்பற்ற பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலமான
மாதிரி நேர்காணல்கள் மூலம் மாணவர்கள் பயனடைகின்றனர். இது அவர்களை வேலைவாய்ப்பு
செயல்முறைகளுக்கு முழுமையாகத் தயார்படுத்துகிறது. இந்தத் திட்டம்
செயல்படுத்தப்பட்டதிலிருந்து, 40,000-க்கும் மேற்பட்ட நேரடி வகுப்பு நேரங்கள், மாணவர்களால்
பெறப்பட்ட 550-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 2,500-க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் மற்றும் 86
என்ற நிகர ஊக்குவிப்பு மதிப்பெண் (Net Promoter Score) உள்ளிட்ட ஈர்க்கக்கூடிய முடிவுகளை
வழங்கியுள்ளது. இது மாணவர்களின் மிக உயர்ந்த திருப்தியைக் குறிக்கிறது. இந்த நெகிழ்வான
கற்றல் மாதிரியானது, மாணவர்கள் அடிப்படைப் படிப்புகளில் தொடங்கி, AI பொறியாளர், தரவு
விஞ்ஞானி, பயன்பாட்டு உருவாக்க AI, ஜாவா முழு அடுக்கு உருவாக்குநர், இணையப் பாதுகாப்பு
போன்ற பணி சார்ந்த திட்டங்களுக்கு முன்னேற அனுமதிக்கிறது. எளிதில் அணுகக்கூடிய,
தொழில்துறைக்கு ஏற்ற டிஜிட்டல் திறன் பயிற்சி மூலம் உயர்கல்வியை மாற்றுவதற்கான
சிம்பிள்லெர்னின் அர்ப்பணிப்பை இந்தக் கூட்டாண்மை எடுத்துக்காட்டுகிறது. கல்விசார்
கடுமையையும் நடைமுறைத் திறன்களையும் இணைப்பதன் மூலம், KRCT மாணவர்கள் வெறும்
பட்டதாரிகளாக மட்டுமல்லாமல், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல்
பொருளாதாரத்தில் சிறந்து விளங்கத் தேவையான திறன்களுடன், வேலைக்குத் தயாரான தொழில்
வல்லுநர்களாக இருப்பதை இந்தக் கூட்டு முயற்சி உறுதி செய்கிறது.
சிம்பிள்லெர்ன் ஃபார் கேம்பஸ், தனது முதன்மைத் தயாரிப்பான சிம்பிள்லெர்ன் லேர்னிங் ஹப்+
மூலம், AI, தரவு அறிவியல், கிளவுட் கம்ப்யூட்டிங், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் மார்க்கெட்டிங்
மற்றும் திட்ட மேலாண்மை போன்ற துறைகளில் தொழில்துறைக்கு ஏற்ற திட்டங்கள் வழியாக,
பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களின் டிஜிட்டல் திறன் மேம்பாட்டை விரைவுபடுத்த
உதவுகிறது. எங்களின் நேரடி மற்றும் செயல்முறைக் கற்றல் மாதிரியானது, கல்வித்துறைக்கும்
தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியை இணைத்து, வேலைக்குத் தயாரான
திறன்களையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது. வேலைவாய்ப்பை மேம்படுத்தவும், தங்களின்
டிஜிட்டல் கற்றல் சூழலமைப்பை வலுப்படுத்தவும், டியூக் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்ட்
பல்கலைக்கழகம், மிசோரி-செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் (UMSL), யூட்டா வேலி
பல்கலைக்கழகம் மற்றும் கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி உட்பட 50-க்கும் மேற்பட்ட
முன்னணிப் பல்கலைக்கழகங்கள் எங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளன.

India’s First Right Shoulder-Artery Heart Valve Replacement Performed at SRM Prime Hospital

Chennai, April 2 2026: In a first in India, SRM Prime Hospital performed an Alternate Access Transcatheter Aortic Valve Replacement/Implantation (TAVR/TAVI), a minimally invasive heart valve replacement procedure, through the artery under the right shoulder (right axillary artery), instead of the standard leg artery route, to save a 73-year-old patient with calcific severe aortic stenosis, a condition in which the heart valve narrows due to calcium deposits, restricting blood flow from the heart to the body.

The patient, a retired professional, was discharged the third day after the procedure, and is now able to resume normal daily activities as before.

TAVR/TAVI procedure is used to replace a diseased aortic valve without the need for open-heart surgery. Doctors deliver an artificial valve through a thin tube inserted into a blood vessel (artery) and position it within the narrowed valve to restore normal blood flow. The most common route is through the artery in the leg. However, in this patient, all conventional access routes proved to be unsuitable due to vascular limitations such as narrowing, blockages, or unfavorable anatomy of the blood vessels. As a result, doctors opted for the right axillary artery.

The Procedure was led by Dr. Balamurugan S, Consultant – Interventional Cardiology and supported by Dr. A. Thomas George, Senior Consultant – Internal Medicine & Diabetology, Dr. P Balasubramanian, Senior Consultant – Cardiothoracic and Vascular Surgery, Dr. A. B. Gopalamurugan, Procedure Proctor, Cardiac Anesthetists and Critical Care Intensivist.

In his comments Dr. Balamurugan, said, “The patient exhibited features of decompensated heart failure, where the heart is unable to pump effectively. Our evaluation confirmed calcific severe aortic stenosis, a narrowing of the aortic valve caused by calcium deposits that restrict blood flow. Given his age and condition, we opted for TAVR/TAVI; however, none of the standard access routes such as femoral, transcarotid, transcaval or Left subclavian, were feasible. The only viable option was the right axillary artery. We therefore performed this entirely percutaneous right trans-axillary TAVR, an India-first, using an advanced catheter-based valve delivery system.”

He further added, “Modern treatments like TAVR provide safe and minimally invasive options, as there is less surgical trauma and faster recovery options, especially for elderly patients or those at high risk for open-heart surgery. In this case, it required advanced pre-procedure planning and precise catheter manipulation due to the tortuous course of the artery, along with expertise in alternative vascular access techniques. We are happy that our team, with utmost dedication to the quality outcome, performed the first of the kind procedure in India, and saved the senior citizen’s life.”

In his comments Dr. A. Thomas George said, “Patients undergoing advanced procedures like TAVR are often elderly and have multiple underlying health conditions that need careful medical management. Our focus is on optimising these conditions and ensuring the patient remains stable throughout the treatment journey.”

Aortic stenosis is primarily a disease of the elderly, with an incidence of about 2-7% in people above 65 years. It is usually caused by age-related valve degeneration and can also occur in conditions like chronic kidney disease. While age-related degeneration cannot always be prevented, risk can be reduced by controlling blood pressure and managing cholesterol. Regular cardiac check-ups, especially after age 60, is important.

People should not ignore early warning signs such as fatigue during mild exertion, breathlessness, chest discomfort, and fainting spells. These symptoms may indicate serious valve disease. Early diagnosis allows timely treatment and helps prevent complications such as heart failure and sudden cardiac death.

‘ஹேப்பி ராஜ்’ – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் அடிக்கடி வரும் “feel-good entertainer” வகையைச் சேர்ந்த படம் தான் Happy Raj. வாழ்க்கையை லைட்டாக எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் ஒரு இளைஞனின் பயணத்தை மையமாக வைத்து, காமெடி, காதல், உணர்ச்சி ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்ட படம்.

பெரிய அளவிலான twist அல்லது experimental storytelling இல்லாமல், ஒரு simple மற்றும் relatable கதையை audience-க்கு கொண்டு செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.ராஜ் என்ற இளைஞன் வாழ்க்கையில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், எப்போதும் positive mindset-இல் வாழ்பவன். அவனுடைய இந்த carefree அணுகுமுறை தான் அவனுக்கு நண்பர்களையும், உறவுகளையும், காதலையும் கொண்டு வருகிறது.

ஆனால், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் அதே அணுகுமுறை அவனுக்கே பிரச்சனையாக மாறுகிறது. முக்கியமான விஷயங்களை கூட லைட்டாக எடுத்துக்கொள்வதால், அவன் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகரிக்கின்றன.

அதன்பிறகு, வாழ்க்கையை எவ்வாறு balance செய்ய கற்றுக்கொள்கிறான்? “சந்தோஷம்” என்றால் என்ன என்பதைக் கண்டுபிடிக்கிறானா? என்பதே படத்தின் மைய conflict.

கதை புதுசாக இல்லையென்றாலும், execution மூலம் ஈர்க்க முயற்சிக்கிறது.

படத்தின் backbone ஹீரோவின் performance தான். அவர் தனது energetic screen presence மூலம் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்திருக்கிறார்.

ஹீரோயின் தனது வரம்புக்குள் நல்ல support கொடுக்கிறார். காதல் track subtle-ஆ அமைந்துள்ளது.

காமெடி மற்றும் supporting characters சில இடங்களில் நல்ல சிரிப்பை உருவாக்குகின்றனர். அதே சமயம், சில scenes-ல் overacting feel ஆகும்.

திரைக்கதை & இயக்கம் (Screenplay & Direction)

படத்தின் screenplay மிகவும் safe zone-ல் நகர்கிறது.

  • First half → லைட் காமெடி, friendship, romance
  • Second half → emotional shift + message

இந்த tonal shift predictable ஆனாலும், audience connect ஆகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் commercial elements-ஐ தவிர்க்காமல், அதே சமயம் message-ஐ clarity-ஆ கொண்டு வந்திருக்கிறார். ஆனால், narration-ல் புதுமை இல்லை என்பது ஒரு minus.


🎵 இசை (Music)

படத்தின் இசை overall decent.

  • Songs → light & catchy
  • BGM → emotional scenes-ஐ elevate செய்கிறது

பாடல்கள் கதைக்கு தடையாக இல்லாமல், flow-க்கு support செய்கின்றன.


🎥 தொழில்நுட்பம் (Technical Aspects)

  • Cinematography → Bright visuals, colorful tone
  • Editing → First half-ல் lag இருக்கிறது
  • Production Quality → decent presentation

Technically படம் average-க்கு மேலே இல்லை, ஆனால் storyக்கு தேவையான அளவுக்கு இருக்கிறது.

Happy Raj ஒரு simple, feel-good entertainer. இது பெரிய cinematic experience அல்ல, ஆனால் ஒரு நல்ல positive vibe தரும் படம்.

ஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம்  தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.

பாடலாசிரியர் விவேகா பேசுகையில், “இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.

லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது “எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்,” என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்,” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், “நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா-பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.

இதனை மறைந்த வாலி ஐயா பாணியில் வாழ்த்திட வேண்டும் என்றால்.. “உங்களுக்கு யாரும் போட்டதில்லை ஆர்டர், உங்களுக்கு நீங்களே தான் பார்டர்,  என்றும் சோர்ந்ததில்லை உங்களுடைய ஷோல்டர், ஏனென்றால் நீங்கள் தான் உண்மையான லீடர்…” லீடர் -கண்டிப்பாக வின்னர்,” என்றார்.  

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், “லெஜெண்ட் சரவணன் நிஜமாகவே லீடர் தான்.‌ பல கதைகளை அவர் மனதில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவருடன் பழகும் போது தெரிந்து கொண்டேன். பல கதாபாத்திரங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்… அவர் என்னிடம் புரூஸ்லீயின் கதை ஒன்றை சொன்னார், அந்த கதையில் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தயார் படுத்திக் கொள்வேன் என்று சொன்னார். அப்போது அவரை அழைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குந‌ரிடம் சென்று அது போன்ற ஒரு படத்தை உருவாக்குங்கள் என்ற பேச்சுவார்த்தையலும் ஈடுபட்டேன். அவருடைய எண்ணமும் பணியும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.  

தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், “லெஜெண்ட் சரவணனின் முதல் படத்தை பார்த்தேன், மிக பிரம்மாண்டமானதாக இருந்தது. அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிறுவனத்தில் ‘பட்டாசு’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் லீடர் படத்தை இயக்குகிறார், அதில் லெஜெண்ட் சரவணன் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும், வெற்றி விழாவில் சந்திப்போம்,” என்றார்.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், “இங்கு வருகை தந்திருக்கும் லெஜெண்ட் சரவணனின் ரசிகர்களை பார்க்கும்போது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக தான் இருக்கும் என்று தோன்றுகிறது. நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988ம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்த காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்த கடைக்கு சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள், அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்கு சென்றோம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்க முடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும் தான் முடியும். அந்த தருணத்தில் நான் என் அப்பாவுக்கு என் தம்பிக்கு தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன்.‌ நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது. பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது. அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார். நூறு ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரே மரியாதை தான் வழங்கினார், லட்ச ரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதை தான் வழங்கினார், வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார். அதுதான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

அதே போல் இந்த படம் குறித்த அறிவிப்பை பார்த்தவுடன் நான் இயக்குநர் துரை செந்தில்குமாருக்கு போன் செய்தேன். அவர் என்னுடைய மிக நெருங்கிய நண்பர். அவரிடம் இதை வெற்றிப் படமாக இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.‌ அதன் பிறகு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எனக்கு அனுப்பினார் இயக்குந‌ர். அதை பார்த்ததும் பாராட்டினேன்.  

நேர்மை, குறைந்த லாபம், நிறைய வாடிக்கையாளர்கள்… இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம். சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப் போல், உங்கள் அப்பா வணிக துறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதே போல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையை படைக்க வேண்டும். 50 அல்ல 100 படங்கள் கூட எடுத்திட வேண்டும், தயாரித்திட வேண்டும், சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்,” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “லெஜண்ட் சரவணன் சார், நீங்கள் வணிக உலகத்தில் மட்டும் அல்ல, இப்போது தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம். ‘லீடர்’ என்ற தலைப்போடு நீங்கள் வருவது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. சினிமாவிற்கான ஆர்வமும் அர்ப்பணிப்பும் உங்களிடம் தெளிவாக தெரிகிறது. வணிகத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்த நீங்கள், அதே உறுதியுடன் சினிமாவிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் அவர்களுடன் உங்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அவருடைய படங்கள் எப்போதும் மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.  அதுபோல இந்த ‘லீடர்’ படமும் பெரிய வெற்றி பெறும். இந்தப் படம் உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். தமிழ்சினிமாவில் அப்பா-மகள் உணர்வுகளை மையமாகக்கொண்ட படங்கள் எப்போதும் மக்களின் மனதைத் தொடும். ‘தெறி’, ‘விஸ்வாசம்’ போன்ற படங்கள் அதற்குச் சிறந்த உதாரணம். அதுபோல, ‘லீடர்’ படமும் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஜிப்ரான் அவர்களின் இசையும் பின்னணி இசையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். டிரெய்லரிலேயே அது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்தப்படத்தின் விளம்பரத்தை சிறப்பாக முன்னெடுத்து வரும் நிகில் முருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சரவணன் சார், உங்கள் சினிமா பயணத்தில் தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில், தரமான படங்களை வழங்க வேண்டும். தமிழ் சினிமாவிற்கு நீங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களைகொடுக்க வேண்டும் என்பதே எங்களின் வாழ்த்து. ‘லீடர்’ படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன், முழு குழுவிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்றார்.

நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், “லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து “நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்” என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.

இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குந‌ர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.

உணவுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யும் மாமனிதர் இவர், இவரை ஏன் நாங்கள் லீடர் என்று சொல்கிறோம் என்றால் அவருடைய பிறந்த ஊருக்கு ஊரில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு நாங்கள் எல்லாம் சென்றபோது, அந்த ஊருக்கே அவர் சாப்பாடு போடுகிறார். அங்கு நடைபெற்ற எல்லா படப்பிடிப்பு நாட்களிலும் ஊர் முழுவதும் இவர் விருந்து படைத்தார்,” என்றார்.

பேபி இயல் பேசுகையில், “இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.

படப்பிடிப்பின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. நாங்கள் நல்ல மழையில் சிக்கிக்கொள்ளும் போது எங்களை லெஜெண்ட் அங்கிள் காப்பாற்றுவது போல் காட்சி இருந்தது அந்த காட்சி படமாக்கப்படும் போது அவர் கால் இடறி விழுந்துவிட்டார், இருந்தாலும் பேலன்ஸ் செய்து எங்களை காப்பாற்றினார். அந்த ஒரு நொடி எனக்கு மினி ஹார்ட் அட்டாக் வந்தது போல் இருந்தது. அப்போது என் நினைவில் இருந்த டயலாக் எல்லாம் மறந்து விட்டது. அவருடைய பெஸ்ட் ஹார்ட் வொர்க் தான் ட்ரெயினில் நடக்கும் ஃபைட் சீன். ஆனால் இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீங்க அங்கிள் எனச் சொன்னேன்,” என்றார்.

நடிகர் ஷாம் பேசுகையில், “கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குந‌ர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குந‌ர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.‌

இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார்.‌ இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.‌

எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன்.‌ வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை,” என்றார்.

நடிகர் வி டி வி கணேஷ் பேசுகையில், “லெஜெண்ட் சரவணன் உடன் நடிக்க வேண்டும் என்று இயக்குந‌ர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனென்றால் எனக்கு அவரையும் அவருடைய நடிப்பையும் மிகவும் பிடிக்கும். அவர் நிறைய பேரை வசீகரித்திருக்கிறார். அப்போதெல்லாம் இந்த மனிதர் எப்படி இவ்வளவு பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்துகிறார் என வியப்புடன் பார்த்துக் கொண்டே இருப்பேன்.  

யாரிடம் வேண்டுமானாலும் பணம் இருக்கலாம் ஆனால் சினிமா மீதான பற்றும் ஆர்வமும் இருந்தால்தான் நடிக்க முடியும்.  ஏதாவது செய்ய வேண்டும் என்ற வெறி இருந்தால்தான் நடிக்க முடியும் இது எல்லோருக்கும் வராது.‌ அதனால் தான் சொல்கிறேன் சாதனையாளர் என்றால் அது லெஜெண்ட் சரவணன் தான். எனக்குத் தெரிந்து இந்த திரைப்படம் வெளியாகி  500- 600 கோடி வசூலிக்கும். மற்ற மொழிகளிலும் வெற்றி பெற்றால் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்கும்,” என்றார்.

இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், “நம்ம லெஜெண்ட் சரவணன் பற்றிப் பலரும் பேசும்விதத்தை நான் கவனித்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொருவரும் அவரைப் பற்றி பாராட்டி  பேசினார்கள். அதிலிருந்து எனக்கு தெளிவாக புரிந்தது என்னவென்றால், அவர் நினைத்ததை தைரியமாகச் செய்து முடிப்பவர், யாரைப் பற்றியும் கவலைப்படாமல், தன்னம்பிக்கையுடன் முன்னேறுவது அவருடைய தனித்துவம்; அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்த அளவுக்கு உற்சாகமாக சினிமாவில் நடிக்க வருவது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய சாதனை. ‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு ‘லீடர்’ என்ற தலைப்பில் வருவது மிகவும் பொருத்தமானதும், வலிமையானதுமாக இருக்கிறது. இயக்குநர் துரைசெந்தில்குமார் அவர்களுக்கு இது ஒரு சவாலான முயற்சிதான். ஆனால் அவர் எப்போதும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து தரமான படங்களை உருவாக்குபவர். இந்தப் படத்திலும் ஜிப்ரான் போன்ற திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளதால், கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லரை பார்த்தபோது மக்கள் அளித்த வரவேற்பு இந்தப் படத்தின் வெற்றியை முன்னரே காட்டுகிறது. படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை அது உருவாக்கியுள்ளது.

இந்தப் படம் பெரும் செலவில் மட்டும் இல்லாமல், உணர்ச்சிகளும், கதையும், சக்திவாய்ந்த அம்சங்களும் சேர்ந்த ஒரு முழுமையான படமாக இருக்கும் என்று நம்புகிறேன். சரவணன் சினிமாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் வரவில்லை; அவர் நினைத்ததை சாதிக்கவும், சினிமாவிற்கு ஒரு சேவையாகவும் வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து இந்தத் துறையிலிருந்து, பல நல்ல படங்களை வழங்கி, பலருக்கும் உதவிசெய்ய வேண்டும். அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருந்து, சினிமாவிற்கு மேலும் பல சேவைகள் செய்யவேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இந்தப் படத்திற்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும், படக்குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்,” என்றார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், “முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர்  துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.

லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக‌ மட்டும் அல்லாமல், முழுமையான‌ அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ‘லீடர்’ எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். ‘லீடர்’ படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி,” என்றார்.

இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.

முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.

ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.

என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ்  இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.

நடிகர்கள் பற்றி பேச வேண்டும். ஷாம் சார் – உங்கள் வருகை அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்தியது. சந்தோஷ் சார், பாயல் – ஒரு இயக்குநர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு நீங்கள் எடுத்துக்காட்டு. அது எனக்கு நல்ல பொறுப்புணர்வை அளித்தது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜ் – அனைவருக்கும் என் நன்றி. குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினருக்கும் – ஒளிப்பதிவு குழு, எடிட்டிங் குழு, விளக்குப் பணியாளர்கள், தயாரிப்பு குழு – அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. கடைசியாக இயல் நீங்கள் இயற்கையான திறமை கொண்டவர். உங்கள் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும்.

இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் ‘கருடன்’ வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.

“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி,” என்றார்.

லெஜெண்ட் சரவணன் பேசுகையில், “இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி.‌ இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

‘லெஜெண்ட்’ படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் ‘லீடர்’. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குந‌ர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.‌

இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன‌. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.‌

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க‌ வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன்.  இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குந‌ர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படபிடிப்பு தளத்தில் அறந்தாங்கி நிஷா, பேபி இயல், ஜார்ஜ் மரியன், பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், ஷாம், லால், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா லட்சுமி, ஆண்ட்ரியா, பாயல் ராஜ்புத் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள்.  

இந்தத் திரைப்படம் ‘ஜெயிலர்’ போன்றோ அல்லது ‘விக்ரம்’ போன்றோ, ‘லியோ’ போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, ஏனெனில் அதற்குண்டான தகுதி அனைத்தும் ‘லீடர்’ படத்தில் இருக்கிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். வரும் குட் ஃப்ரைடே அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது, குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும்.‌

இந்த படத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை உங்கள் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பது எங்களுடைய நம்பிக்கை. கோடைகால விடுமுறையை ‘லீடர்’ உடன் கொண்டாடுங்கள்.

“கடவுள் எந்த உதவியையும் நேரடியாக செய்வது இல்லை, எல்லா நல்லதும் நல்ல மனிதர்கள் மூலமாக தான் நடக்கும். நாம அவங்கள தான் நம்பணும். நீங்க என்னை நம்புங்க” என இந்தப் படத்தில் ஒரு வசனம் இடம் பிடித்திருக்கிறது, அது எனக்கு மிகவும் பிடித்த வசனம். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்,” என்றார்.

‘லீடர்’ திரைப்படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படம்  படமாக்கப்பட்டுள்ளது.

ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ உருவாகியுள்ளது.

இப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. வரும். ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

“TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது!!

KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தம்பி ராமையா கதை எழுதியுள்ள இப்படத்தை திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் உமாபதி ராமையா. தமிழ் திரையுலகில் தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் நாயகிகளாக நடித்துள்ளனர். எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு:

திரைக்கதை & இயக்கம் – உமாபதி ராமையா
கதை – தம்பி ராமையா
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு – பி. ஜி. முத்தையா
எடிட்டிங் – அரள் R. தங்கம்
கலை – NK ராகுல்
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
நடனம் – சாண்டி, பிரவீன்
தயாரிப்பு மேற்பார்வை – ஶ்ரீநாத் விஸ்வநாதன்
தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல்

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!

குற்றத்திற்கு எல்லைகளும் இல்லை, மொழி தடைகளும் இல்லை; அந்த உண்மையை எதிர்பாராத வகையில் உயிர்ப்பிக்கிறது ‘காக்கி சர்கஸ்’ –

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை இந்த தலைப்பு அழகாக பிரதிபலிக்கிறது.

இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். மேலும், முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

தமிழ் டிரெய்லர் லிங்க் – https://www.youtube.com/watch?v=OAAEON0n5wE

அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச் சம்பவம், ஒரு சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. காரணம், யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல், தடைகளை உடைத்து அதற்குள் நுழைகிறார் ! புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடும் நிலையில், மர்மமான திருடன் பல அடிகள் முன்னிலையில் இருந்து, தான் உருவாக்கிய இந்த குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். சாதாரண ஊர்மக்கள், தங்களைத் தாங்களே டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், தெரியாமலே இதற்குள் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — இவர்கள் அனைவரும் சூழ்நிலையை இன்னும் வினோதமாக மாற்ற, இந்த வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. இங்கே எதுவுமே எளிதல்ல, ஒவ்வொன்றும் இன்னும் பல விசித்திரமான உண்மையை மறைத்து வைத்திருக்கிறது.

இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,
“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின் இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,
“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும் மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.

பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்களும், பரபரப்பும், வித்தியாசமான நகைச்சுவையும் கலந்த ஒரு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, தமிழ் மற்றும் மலையாள ZEE5 தளங்களில் ஏப்ரல் 10 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது.
12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.
உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.