இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதியர்

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

இயக்குநர் – தயாரிப்பாளர் அட்லீ – திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான செய்தியை.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே மீர் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது இரண்டாவது முறையாக அட்லீ அப்பாவாகி இருக்கிறார்.

இது தொடர்பாக பிரியா அட்லி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” எங்களது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் இணைகிறார். ஆம்! நான் மீண்டும் கருவுற்று இருக்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளையும், அன்பையும் எதிர்பார்க்கிறேன்” என பதிவிட்டு, பிரத்யேக புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படம்-  அட்லீயின் விவரிக்க முடியாத தந்தையின் பாசத்தையும், நேசத்தையும் , புன்னகையுடன் வெளிப்படுவதுடன், தந்தையாக அவரின் பொறுப்புணர்வையும் பிரதிபலிக்கிறது. அத்துடன் பிரியா அட்லீ – மீர் இடையேயான பிரிக்க முடியாத பந்தமும்  இந்த புகைப்படத்தில் இணைந்திருப்பதால்.. உறவின் உன்னதத்தை ஆராதிக்கும் அனைவரும்,  இதனை வரவேற்று தங்களது வாழ்த்துகளைப்  பகிர்ந்து வருகின்றனர்.  

இதனிடையே திருமதி பிரியா அட்லீ & இயக்குநர் அட்லீ உரிமையாளராக இருக்கும் ‘பெங்களூரூ ஜவான்’ஸ்’ எனும் பிக்கிள்பால் அணி. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி அன்று மும்பையில் தொடங்கும் ‘வேர்ல்ட் பிக்ளிபால் லீக் ‘ போட்டி சீசன் 2 வில் விளையாடுகிறது என்பதும் தற்போது ‘ஐகான் ஸ்டார் ‘ அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகி வரும் #AA22XA6 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ‘ மை லார்ட் ‘ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களை கவனத்தை‌ ஈர்த்திருக்கிறது.  அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிப்பதால் இந்த முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் –  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘மை லார்ட்’ படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்…  டிரெய்லர் இடம் பிடித்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.

Link – https://www.youtube.com/watch?v=KR05JMlq8K8

ஜி.வி. பிரகாஷ் குரலில் பிரதமர் மோடி ரசித்த திருவாசகம் முதல் பாடல், ஜனவரி 22ல் வெளியாகிறது !!

பிரதமர் மோடி முன்னிலையில் மெய்சிலிர்க்க வைத்த திருவாசகம் – ஜனவரி 22ல் ஜி.வி. பிரகாஷ் வெளியிடும் முதல் பாடல் !!

தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பான திருவாசகம். அதன் முதல் பாடல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் அவர்களால் வரும் ஜனவரி 22 ஆம் தேதி அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் பாடலின் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் முன்னிலையில் அவர் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

பொங்கல் விழாவின் ஆன்மிகமும் தமிழ்ச் சுவையும் கலந்த அந்த காலை நேரம்,  தமிழ் உணர்வோடு ஒலித்த திருவாசக இசை நிகழ்ச்சியால், தனித்துவம் பெற்றது. பிரதமர் மோடி நேரில் அமர்ந்து இந்த இசையை ரசித்தது, நிகழ்வின் பெருமையை மேலும் உயர்த்தியது. ஜி.வி. பிரகாஷின் குரலும் இசையும், திருவாசகத்தின் ஆழ்ந்த பக்தி உணர்வை சமகால இசை மொழியில் வெளிப்படுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.

நவீன இசையில்  பாரம்பரியத்தின் அம்சத்தை இணைப்பதில் தேர்ச்சி பெற்றவர் ஜி.வி. பிரகாஷ். திரைப்பட இசை, தனிப்பாடல்கள், சர்வதேச மேடைகள் என பல தளங்களில் தனது தனித்த குரலை பதித்துள்ள அவர், திருவாசக முயற்சியின் மூலம் தமிழ் ஆன்மிக இசைக்கு புதிய அடையாளம் அளிக்க முனைந்துள்ளார்.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவு. அந்த கனவின் முதல் படியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாரம்பரிய ஆன்மிகப் பாடல்களை இன்றைய தலைமுறைக்கும் எளிதாக உணரச் செய்யும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் கையாண்டுள்ளார்.

இந்த முயற்சியின் தொடக்கமாக, மோடி முன்னிலையில் பாடப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல் வரும் ஜனவரி 22 அன்று ஜி.வி. பிரகாஷ் தனது YouTube சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டைப் பெற்றுள்ள இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City)

அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !!

தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

இப்படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு  ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம், Power House Pictures நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். 

‘கான் சிட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தவுடன் புன்னகை வரவைக்கும் அதே நேரம்,  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  நகரப் பின்னணியில், ஆபிஸ் பேக்குடன் அர்ஜூன் தாஸ் அவரைச் சுற்றி ஹேண்ட் பேக்குடன் அன்னா பென்,  பயணப்பெட்டி பையுடன் யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோருடன் வீல் சேரில் ஒரு வெற்றிக் கோப்பையுடன் குழந்தை அகிலன் என,  முற்றிலும் வித்தியாசனான  இந்த போஸ்டர்,  படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் எனும் ஆவலைத் தூண்டுகிறது. கான் சிட்டி எனும் தலைப்பு இது முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படம் என்பதை உணர்த்துகிறது.

இதுவரை படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

புதுமையான டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

தமிழில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும்  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

தொழில்நுட்ப குழு

எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங்: அருள் மோசஸ்
இசை: ஷான் ரோல்டன்
கலை இயக்கம்: ராஜ் கமல்
உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
மக்கள் தொடர்பு: யுவராஜ்

SIMS Hospital Unveils India’s First 24×7 Digital Medical Bus for Rural Communities

Chennai, January , 2026: SIMS Hospital has unveiled SIMS Hello Doctor Health on Wheels, India’s first medical bus designed to deliver essential and comprehensive medical services and teleconsultations with specialists to rural communities. Health on Wheels offers on-the-go consultations, health screenings, vaccinations, and basic diagnostic services backed by a 24×7 medical team.

Thiru. Ma. Subramanian, Hon’ble Minister for Health & Medical Education, Government of Tamil Nadu, flagged off the medical bus in the presence of Tmt. Tamilachi Thangapandiyan, Member of Parliament, South Chennai Constituency, Thiru. A.M.V. Prabhakara Raja, Member of Legislative Assembly, Virugambakkam Constituency, and Dr. Ravi Pachamuthu, Chairman, SRM Group.

The mobile unit enables seamless and paperless end-to-end patient care, including registration, consultation, diagnostics, referrals, and follow-ups, ensuring that individuals receive quality medical attention without the burden of travel or long waiting times. The medical bus provides a wide spectrum of services such as real-time mobile teleconsultations with specialists and super-specialists, vaccination-on-wheels to improve immunisation access and coverage, and one-stop preventive health check-ups for early risk identification.

With a strong focus on preventive healthcare and wellness, SIMS Hello Doctor also facilitates early assessment and detection of non-communicable diseases, particularly in rural and underserved communities.

As part of its operations, the SIMS Hello Doctor medical bus will conduct exclusive health screenings and check-ups across industries, schools, colleges, and rural communities. The medical bus also delivers smart health education and awareness sessions aimed at promoting healthy lifestyles, early intervention, and informed healthcare decisions. An AI-powered chatbot further enhances patient engagement by offering guided assistance, appointment support, and access to verified health information. Under its Mission SIMS VILLAGE framework, the hospital will identify villages through the medical bus to ensure continuous access to preventive, diagnostic, and consultative healthcare services, while strengthening grassroots healthcare delivery on a call to 044 2001 2001.

Speaking on the occasion, Thiru. Ma. Subramanian, Hon’ble Minister for Health & Medical Education, Government of Tamil Nadu, said, “Initiatives such as Hello Doctor Health on Wheels play an important role in strengthening the public healthcare ecosystem by ensuring that medical services reach people where they live. This step signifies the future of healthcare—one that is inclusive, preventive, and accessible. I appreciate SIMS Hospital for taking this forward towards community well-being.”

Commenting on the launch, Tmt. Tamilachi Thangapandiyan said, “Tamil Nadu has gained a global recognition as a preferred destination for medical tourism, offering advanced treatments, skilled doctors. Growing number of foreign patients are choosing Tamil Nadu for affordable and high-quality medical care, strengthening state’s position as a leading healthcare hub in India. I also commend Mr. Ravi Pachamuthu and the SIMS Hospital team for their consistent efforts in delivering quality healthcare services to rural communities, ensuring equitable access to medical care for all.”

Dr. Ravi Pachamuthu, Chairman, SRM Group, said, “At SIMS Hospital, our vision has always been to go beyond hospital walls and reach patients where they need us the most. SIMS Hello Doctor – Health on Wheels reflects our commitment to preventive healthcare, early intervention, and technology-driven care. This 24×7 mobile healthcare service will not only improve health outcomes but also empower communities with awareness and timely medical guidance.” This initiative marks a significant step in redefining healthcare delivery through innovation, outreach, and community-centric care, paving the way for a future where timely and quality medical support is always within reach.

ஆர்வமும் ஈடுபாடும் : நேதாஜி பிரபு

ஒரு போட்டோ ஷூட்டுக்கு ஓராண்டு உழைப்பு : வியக்க வைக்கும் நேதாஜி பிரபு!

தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாக, தயாரிப்பாளராக ‘ஒளடதம்’ படத்தின் மூலம் அறிமுகமானார் நேதாஜி பிரபு.மெடிக்கல் மாஃபியாக்களைப் பற்றிப் பேசியது அந்தப் படம். ‘ஒளடதம்’ படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு.

சிறு இடைவெளிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் மறுபிரவேசம் செய்யும் வகையில் அவர் அட்டகாசமான ஒரு போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி முறுக்கேற்றி,சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து, தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.இந்த போட்டோ ஷூட்டில் எட்டு விதமான ஸ்டைல்களில் எட்டு விதமான மாறுபட்ட தோற்றங்களில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி எடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட தோற்ற மாற்றங்களில்
500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து இதுவரை யாரும் செய்யத் துணியாத வகையில் இந்த போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார்.

இதன் மூலமாக தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கைத் தொடங்குவதற்கு ஆர்வமாக களம் இறங்கி உள்ளார் நேதாஜி பிரபு.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய வகையில் உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு ,அர்ப்பணிப்பு, என அத்தனை கோணங்களிலும் தன்னை முழுத்தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்துள்ளார்.

சினிமா என்பது தன்னை நோக்கிக் காதலுடனும் அர்ப்பணிப்புடனும் வருபவர்களைக் கைவிடாது என்பதற்கு உதாரணமாக அவர் இதைச் செய்துள்ளார்.சினிமாவை யாரும் ஏனோ தானோ என்றோ அலட்சியமாகவோ பார்க்கக் கூடாது. தனக்கான தகுதி உள்ளவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதைச் சொல்லும் வகையில் இதைச் செய்துள்ளார் .இதைப் பார்க்கும்போது இது நாள் வரை படை திரட்டி வந்தவர், இப்போது போர் தொடுக்க இருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

நேதாஜி பிரபுவின் இந்த அயராத உழைப்பின், நம்பிக்கையின் வெளிப்பாடாக உருவாகியுள்ள இந்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு இங்கே…

காட்சி ஊடகங்கள் அனைத்திலும் முகம் காட்டும் வகையில் நேதாஜி பிரபு ஆர்வமாக இருக்கிறார்.

அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணி

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் (Icon Star Allu Arjun) × லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கூட்டணியில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) வழங்கும் பிரம்மாண்ட மெகா திரைப்படம் !!

இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும் பிரம்மாண்டமான திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்கள் ஒன்றிணையும் இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

பவர்ஃபுல் வீடியோவுடன் இந்தப் பிரம்மாண்டமான திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் ( Mythri Movie Makers)  நிறுவனம் பன்னி வாஸ் ( Bunny Vas )  உடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இப்படம்  இந்திய சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தப் பிரம்மாண்ட முயற்சிக்கு தலைமையேற்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி ( Naveen Yerneni ) மற்றும் ரவி சங்கர் ஆகியோருடன் இணைந்து, பன்னி வாஸ் (Bunny Vas) இணைத் தயாரிப்பாளராகவும், நட்டி, சாண்டி, ஸ்வாதி ஆகியோரும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளனர்.

அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து, படத்தின் பிரம்மாண்டம் மற்றும் கதையின் தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தனித்துவமான ஸ்டைல், மின்னல் வேக நடனங்கள், மாஸ் ஆக்ஷன் மற்றும் வலுவான திரை நடிப்பு என பான்-இந்தியா ஸ்டார்டம் கொண்ட அல்லு அர்ஜுன், தனித்துவமான  கதை சொல்லல் மற்றும் மாறுபட்ட மாடர்ன் மேக்கிங் மூலம் கமெர்ஷியல் சினிமாவை மறுவரையறை செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் — இந்த கூட்டணி தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் (இதுவரை காணாத வேடத்தில்) நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில்  மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.

நாகபந்தம்” திரைப்படத்தில் பார்வதி ஆக நடிக்கும் நபா நடேஷ்

நாகபந்தம்” திரைப்படத்தில் பார்வதி ஆக நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது | பான்-இந்தியா வெளியீடாக இந்த கோடையில் வெளியாகிறது !!

“நாகபந்தம்” (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘பார்வதி’ கதாபாத்திரத்தில் தோன்றும் நாயகி நபா நடேஷின் (Nabha Natesh) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், பாரம்பரிய உடையில் நபா நடேஷ் மிகுந்த அழகும் ஆன்மிக ஒளியும் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அழகிய சேலை, நுட்பமான ஆபரணங்கள், அமைதியான முகபாவனை—அனைத்தும் அவரது கதாபாத்திரத்தின் பக்தி, தூய்மை மற்றும் புராண அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

போஸ்டரில் படத்தின் தரத்தை களத்தை வெளிப்படுத்தும் வகையில், நாயகி அருகே நீல நிறப் பறவை, ஒரு பிரம்மாண்ட மயில் மற்றும் கோவில் பின்னணி இடம் பெற்றுள்ளன. ‘பார்வதி’ கதாபாத்திரத்தின் ஆன்மிக அடையாளத்தையும், படத்தின் கருப்பொருளையும் இந்த ஒரே போஸ்டர் அழகாக எடுத்துரைக்கிறது.

இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி ஷர்மா, B. S. அவினாஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் பழமையான விஷ்ணு கோவில்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் நாகபந்தம் திரைப்படம், நம் மரபின் புனித ரகசியங்களை மையமாக வைத்து, புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை இன்றைய காலகட்ட கதையுடன் இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்டுள்ளது.

ஒளிப்பதிவு சௌந்தர் ராஜன் S, எடிட்டிங் RC பிரணவ், கலை இயக்கம் அசோக் குமார் என முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதால், படம் மிகச் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கிஷோர் அன்னபூரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் நாகபந்தம், இந்த கோடைக்காலத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

நடிப்பு:
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு

கதை / திரைக்கதை / இயக்கம்: அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள்: கிஷோர் அன்னபூரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன் S
இசை: அபே, ஜுனைத் குமார்
கலை இயக்கம்: அசோக் குமார்
எடிட்டிங்: RC பிரணவ்
சிஇஓ: வாசு போதினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !!

மண்ணின் மணம்… கண்ணில் தீ… ‘சம்பரால எட்டிகட்டு’(Sambarala Yetigattu) சங்கராந்தி (Sankranti) போஸ்டரில் சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !!

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது பிரம்மாண்டமான பான்-இந்தியா ப்ரீயட் ஆக்‌ஷன் திரைப்படமான SYG (சம்பரால எட்டிகட்டு)-இன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ரோஹித் KP இயக்கத்தில், K நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிப்பில், ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் (Primeshow Entertainment) (ப்ளாக்பஸ்டர் ஹனுமேன் தயாரித்த நிறுவனம்) இந்த மாபெரும் படத்தை உருவாக்குகிறது.

இந்த பிரம்மாண்டத் திரைப்படம், கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, அழுத்தமான மற்றும் தீவிரமான ப்ரீயட் ஆக்‌ஷன் களத்தில் உருவாகிறது. சமீபத்தியபோஸ்டர், சாய் துர்கா தேஜை இதுவரை காணாத ஒரு கிராமத்து அவதாரத்தில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கிறது.

மண் மணக்கும் கிராமத்து இளைஞனாக , சாம்பல் நிற சட்டையும் பாரம்பரிய பஞ்ச கட்டு அணிந்து, காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் சாய் துர்கா தேஜ்—அருகில் ஒரு மகத்தான காளை மாட்டை இழுத்து செல்கிறார். அவரது அடர்த்தியான தாடி, தீவிரமான பார்வை, நுண்ணிய புன்னகை எல்லாம் இணைந்து, கடுமையும், உள்ளார்ந்த வெப்பமும் ஒன்றாக இணைந்து அவரது கதாப்பாத்திரத்தை அழகாக பிரதிபலிக்கின்றன.

இந்தக் கதாபாத்திரத்திற்காக, நடிகர் தனது உடல் அமைப்பையும், உடல் மொழியையும் முழுதாக மாற்றியுள்ளார். மண்ணோடு பிணைந்த மனிதனாக, தன் உலகில் உருவாகும் மோதல்களை எதிர்கொள்ளும் அவர், பல கடுமையான மற்றும் உடல் வலிமை தேவைப்படும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார்.

முன்னதாக, அவரது பிறந்த நாளில் வெளியான அசுர ஆகமனம் க்ளிம்ப்ஸ், அதன் இருண்ட மனநிலை, உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் மற்றும் பீரியட் கால சாயலுக்காக பெரும் பாராட்டுகளைப் பெற்றது. அந்த க்ளிம்ப்ஸ் கதையின் வன்முறை புயலை சுட்டிக்காட்டினால், சங்கராந்தி போஸ்டர்கள்—புயலுக்கு முன் நிலவும் அமைதியை அறிமுகப்படுத்துகின்றன.

வெற்றிவேல் பழனிசாமியின் அற்புதமான ஒளிப்பதிவு, B அஜனீஷ் லோக்நாத் யின் ஆழமான இசை, மற்றும் ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்-உடைய சமரசமற்ற தயாரிப்பு தரம் SYG (சம்பரால எட்டிகட்டு) படத்தை, மண்ணின் உணர்ச்சியும், பிரம்மாண்டமான ஆக்‌ஷனும் கலந்த ஒரு சக்திவாய்ந்த படமாக உருவாக்குகின்றன.

நடிகர்கள்:
சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜகபதி பாபு, சாய் குமார், ஸ்ரீகாந்த், அனன்யா நாகல்லா

தொழில்நுட்ப குழு:
கதை, இயக்கம்: ரோஹித் KP
தயாரிப்பாளர்கள்: K. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
பேனர்: ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட்
ஒளிப்பதிவு: வெற்றிவேல் பழனிசாமி
இசை: B. அஜனீஷ் லோக்நாத்
எடிட்டிங்: நவீன் விஜய கிருஷ்ணா
கலை இயக்கம்: காந்தி நடிகுடிகர்
உடை வடிவமைப்பு: ஆயிஷா மரியம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங்: ஹாஷ்டேக் மீடியா

விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத், இனையும் “ஸ்லம் டாக் – 33  டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road)

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத், இனையும் “ஸ்லம் டாக் – 33  டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக  “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) )ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி.   நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு”  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB  நாராயண் ராவ்   கொண்ட்ரோலா  (JB Narayan Rao Kondrolla) இணைந்து தயாரிக்கிறார்.

விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று  வெளியிட்டுள்ளது. “ஸ்லம் டாக்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு “33 டெம்பிள் ரோடு” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கலைந்த முடி மற்றும் தாடியுடன், பிச்சைக்காரன் உடையில், நீளமான ஸ்கார்ஃப் மற்றும் பூட்ஸ் அணிந்து, மங்கலான வெளிச்சம் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்த குடிசைப் பகுதியில், கையில் பெரிய கதையை பிடித்தபடி, சுற்றிலும் பணக்கட்டுகள் பறக்கும் நிலையில் விஜய் சேதுபதி ஒரு வெறித்தனமான அவதாரத்தில் தோன்றுகிறார். இந்த டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும்  இப்படத்தின் ஆக்சன் எண்டர்டெய்னர் தன்மைக்கு, பெரும் ஹைப்பை உருவாக்குகின்றன.

தன் நாயகர்களை தனித்துவமான மேக்கோவர்களுடன் மாஸாக உருவாக்குவதில் பெயர் பெற்ற பூரி ஜெகன்னாத், இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். விஜய் சேதுபதி, இதுவரை தனது திரை வாழ்க்கையில் முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மேலும், பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் கலக்கியுள்ளனர்

அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்,  படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படம், தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
நடிகர்கள் :

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects
இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா