பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளனர். மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் மாஸ் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான Aravinda Sametha Veera Raghava (அரவிந்த சமேத வீரராகவா)-க்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் உருவாகுவது இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த படத்தைப் பற்றி என்.டி.ஆர் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் அறிவிப்பு போஸ்டரில் திரிசூலம் மற்றும் வேல் ஒன்றிணைவதுடன் DNA வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், “ஒரே வேல்… ஒரே நோக்கம்… ஒரே தெய்வீக தீர்ப்பு” (One Spear, One Purpose… One Divine Reckoning) என்ற டேக்லைன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
புராணக் கதைகளின் தாக்கத்துடன், தெய்வீக கருவை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், வலுவான கதைக்களம், ஆழமான உணர்வுகள், அதிரடி காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். அவரது இசை இந்த பிரம்மாண்ட படைப்புக்கு மேலும் ஒரு சிறப்பை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு சினிமாவின் வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும், இரண்டு முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் இணைவதால், இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான திரைப்படங்களில் ஒன்றாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.
நடிகர் என்.டி.ஆர்
தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனங்கள்: ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ், என்.டி.ஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர்கள்: எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு), நந்தமூரி கல்யாண் ராம் கதை, திரைக்கதை, இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இசை: அனிருத் ரவிச்சந்தர்
Awards honour human endeavour and excellence in the domains of Non-Violence & Vegetarianism, Education, Medicine, Community & Social service
101 Changemakers from 26 States and 2 Union Territories Recognised, with Tamil Nadu Accounting for 17 Awardees Among the Highest in the Country
Former Chief Justice of India Justice M. N. Venkatachaliah Heads Eminent Jury
Chennai, June 2026:
Marking three decades of celebrating compassion, service and social impact, the Bhagwan Mahaveer Foundation has invited nominations for the 30th edition of the prestigious National Mahaveer Awards 2027. Among India’s most distinguished awards recognising selfless service by outstanding individuals and institutions whose work has transformed lives and communities in the fields of Non-Violence & Vegetarianism, Education, Medicine, and Community & Social Service. Each award carries a cash prize of ₹10 lakh, along with a citation and memento. Nominations are open until July 31, 2026.
Celebrating service beyond boundaries, the Bhagwan Mahaveer Foundation has, over the past three decades and including the recently announced 29th edition, honoured 101 exceptional individuals and institutions from 26 States and 2 Union Territories. Tamil Nadu has been among the most prominent contributors to the National Mahaveer Awards, with 17 awardees from the State over the years—one of the highest representations in the country.
Indian citizens and institutions engaged in selfless service for the welfare of the needy, the underprivileged and the voiceless are eligible for nomination. The awardees will be selected by an eminent jury chaired by Justice M. N. Venkatachaliah, former Chief Justice of India, ensuring a rigorous and credible evaluation process befitting the stature of the awards.
Jury for the Mahaveer Awards
Justice M. N. Venkatachaliah, Former Chief Justice of India – Chairman, Mahaveer Awards
Justice D. Y. Chandrachud, Former Chief Justice of India
S. Gurumurthy, Editor, Thuglak and Part-time Director, RBI
Prof. B. M. Hegde, Chairman, Bharatiya Vidya Bhavan, Mangalore Kendra
T. S. Krishnamurthy, Former Chief Election Commissioner of India
D. R. Mehta, Former Chairman, SEBI
Prabhat Kumar, Former Cabinet Secretary, Government of India and Former Governor of Jharkhand
Justice G. S. Singhvi, Former Judge, Supreme Court of India
Dr. Shiv Kumar Sarin, Director and Chancellor, Institute of Liver and Biliary Sciences, New Delhi
About the award:
Since 1995, Bhagwan Mahaveer Foundation has been conferring the Mahaveer Awards on outstanding personalities and organisations across India in recognition of their excellence in the propagation of Non-Violence & Vegetarianism, Education, Medicine, and Community & Social Service. The awards have been presented by distinguished dignitaries including the President and Vice-President of India, Governors and Union Ministers, underscoring their national stature and significance. Nomination forms can be downloaded from: www.bmfawards.org
Media Contact: Samta Lakhani, Coordinator, Bhagwan Mahaveer Foundation @ +91 99623 40367.
Annexure
Recipients of the National Mahaveer Awards from Tamil Nadu
1996 – Shri S. Jagannathan & Smt. Krishnammal Jagannathan, Gandhigram
கஸ்தூரி ராஜாவின் பேரன் பவிஷ் அறிமுகமாகும் ‘லவ் ஓ லவ்’ – பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா! மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media & Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும்
இப்படத்தின் கலைஞர்கள் கலந்து கொண்டு பேசியதாவது :
தயாரிப்பாளர் தினேஷ் பேசும்போது,
தனஞ்செயன் சாருடன் சேர்ந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.
கடந்த 21/2 ஆண்டு காலமாக தூக்கமில்லாமல் ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக சரியான நாயகனை தேடி பவேஷ் கிடைத்தார்.
நாயகி தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார். யூடியூப்-ல் நடனம் மூலம் பிரபலமானவர்.
இசையமைப்பாளருக்கு இது முதல் படம். ஆனால், பரிமளா & கோ முதலில் வெளியாகி விட்டது.
இப்படத்தின் கதை அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும். கருத்தசொல்ல கூடிய படமாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும் என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது,
சிறிய அரங்கில் பார்ப்பதை விட கமலா போன்ற பெரிய திரையில் பார்க்கும் போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
திங்க் மியூசிக் அவர்களுக்கும் நன்றி. ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி. அதற்கு திங்க் மியூசிக் மிகவும் உறுதுணையாக இருந்தது.
இப்படம் விரைவாக வெளியாக அமேசான் தான் காரணம். அவர்களின் அழுத்தத்தால் ஜூலை 10 அன்று வெளியாக இரவு பகலாக வேலை நடந்து கொண்டிருக்கிறது.
நல்ல திரைப்படங்களை மக்கள் கொண்டாட தவறியதே இல்லை. அதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் நூறு சாமி படம் தான்.
சசி சார் 10 படங்கள் தான் கொடுத்திருக்குறீர்கள், இன்னும் 100 படம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நூறு சாமி படம் இந்த வருடத்தின் சிறந்த படமாக பேசுப்படும்.
இந்த படத்திற்கு பிறகு வனிதா பெரிய வலம் வருவார்.
நடிகை நாக துர்கா யூடியூப்-ஐ நிறுத்தி விடுங்கள். சுபராசு சார் பணத்தில் எந்த சமரசமும் இல்லாமல் இந்த படத்தை வெளிய கொண்டு வரோம் என்று முன் பணம் கொடுத்தார்.
ஆரம்ப காலத்தில் தனுஷ் சாரை பார்த்தது போல பவேஷை பார்த்ததும் தோன்றியது. இன்னும் 2 படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். பெரிய நாயகனாக வருவார். ஆனால் தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் இதே பணிவோடு இருக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.
தயாரிப்பாளர் தாணு பேசும்போது,
20 கோடி செலவாகும் பட்ஜெட்டை 10 கோடியாக்கும் தனஞ்செயனுடன் கூட்டு வைத்திருக்கிறீர்கள்.
காதல் எப்போதும் மாறாது, அந்த காதலை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
நடிகர் சித்ரா லட்சுமணன் பேசும்போது,
தனஞ்செயன் பவிஷை பார்த்து எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். நாக துர்காவிடம் யூடியூப் பக்கம் போகாதீர்கள் என்றார். அதை கேட்காதீர்கள். அது தான் உங்களை இந்த இடத்தில் உட்கார வைத்திருக்கிறது.
கஸ்தூரி ராஜா பேரனை நாயகனாக்கி விட்டார். பவேஷ் காதல் காட்சிகளிலும் உணர்வு பூர்வமான காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார் என்றார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் கதிரேசன் பேசும்போது,
பாடலாக இருந்தாலும் பின்னணி இசையாக இருந்தாலும் எந்த இடத்தில் என்ன மாதிரியான பாதிப்பு கொடுத்தால் படம் வெற்றியாகும் என்பதை தெரிந்து கொண்டு இசையமைத்திருக்கும் Wayne Pavey, Pradeep PJ, FOXn இருவருக்கும் பாராட்டுகள் என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் கமலகண்ணன் பேசும்போது
ஓடிடி இன்னும் 2 மாதத்தில் முதல்வரை வைத்து துவக்கி வைப்போம். ஆகவே தைரியமாக படம் எடுங்கள்.
பல்வேறு கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்திருக்கிறோம். சினிமாத் துறை இதன் பிறகு நன்றாக இருக்கும். லவ் ஓ லவ் படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் ஆர் வி உதயகுமார் பேசும்போது,
புதிதாக வருபவர்களுக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. ஆனால், விஷயம் தெரிந்த தனஞ்செயனை தேர்ந்தெடுத்து உடன் வைத்திருக்குறீர்கள். அவர் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகளையும் கூறுவார்.
இந்த படத்தின் ட்ரைலர் பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். யார் இந்த பையன் பிரமாதமாக நடித்திருக்கிறான் என்று கேட்டேன். கஸ்தூரி ராஜா பேரன் என்று தெரிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.
ஒரு மகனை இயக்குனராகவும், இன்னொரு மகனை நடிகராகவும் உருவாக்கியுள்ளார் கஸ்தூரி ராஜா. தன்னுடைய பெரியப்பாவிற்கு பவிஷ் நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும்.
இசையமைப்பாளர் தீனா பேசும்போது,
6 நாட்கள் கோவாவில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு இந்த படத்தை பற்றி தனஞ்செயனும் இயக்குனர் சசியும் கூறினார்கள்.
23 வருடத்திற்கு முன்பு திருடா திருடி படத்தில் தனுஷை பார்த்தது போல இன்று பவேஷை பார்க்கிறேன். இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது,
பவிஷ் அம்மா இன்று வர இயவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தனுஷின் பிரதி தான் பவேஷ்.
உன்னுடைய இயக்குனரோ தயாரிப்பாளரோ அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று தனுஷிடம் கூறினேன். இன்று வரை அதை பின்பற்றி கொண்டிருக்கிறார். அதே போல் பவேஷ் தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போதெல்லாம் நான் யாருக்கும் அறிவுரை சொல்வது கிடையாது.
என்னுடைய வீட்டில் பவேஷ் ஸ்பெஷல், என் மனைவிக்கு செல்வராகவன் ஸ்பெஷல். எனக்கு பவேஷ் அம்மா ஸ்பெஷல். 3 பாடல்களிலேயே வியக்க வைத்து விட்டான் பவேஷ்.
தயாரிப்பாளர் மற்றும் தனஞ்செயன் இருவரும் பவேஷ் பற்றி பெருமையாக சொல்கிறார்கள்.
இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசும்போது,
ரோஜாவை அறிமுகப்படுத்தியது செல்வமணி என்பது மாறி ரோஜாவின் ராஜா செல்வமணி என்ற பெயர் வந்துவிட்டது. அது தான் நடிகருக்கு இருக்கும் சிறப்பு.
லவ் ஓ லவ் பெயருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த கதையை 1 1/2 மணி நேரம் கதை கூறினார். கேட்கும் போது நேரில் பார்ப்பது போல் இருந்தது.
தனஞ்செயன் வாயால் நல்ல பெயர் எடுப்பது கஷ்டம். அதை இந்த படத்தின் இயக்குனர் மகேஷ் வாங்கியிருக்கிறார்.
அன்று படம் வெளியாவது தயாரிப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்தது, பிறகு நடிகரிடம் இருந்தது. இப்போது ஓடிடி -யிடம் இருக்கிறது. இங்கு இருக்கும் ஓடிடி அலுவலகம் மும்பையில் இருக்கிறது.
200 படங்கள் இலவசமாக கொடுத்தால் கூட வாங்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. வாரந்தோறும் 50 படங்களாவது ஓடிடியில் வெளியானால் நன்றாக இருக்கும்.
ரஜினியிடம் இருக்கும் தன்னம்பிக்கை முதல் படத்திலேயே தனுஷுக்கு இருந்தது. அதே நம்பிக்கை இன்று பவிஷிடம் பார்க்க முடிகிறது என்றார்.
இயக்குனர் சசி பேசும்போது,
பரிமளா & கோ படத்திலேயே பாலாஜி ஸ்ரீராமின் இசையை பார்த்தேன். ஒரு பாடலே அந்த படத்தை அடுத்த இடத்திற்கு கொண்டு சென்றது. அதே போல இந்த படமும் பெரிய வெற்றி பெறும் என்றார்.
நடிகர் ரவி மரியா பேசும்போது,
மகேஷ் கதை கூறினால், உடனே படப்பிடிப்பிற்கு சென்று விடலாம் என்று தோன்றும்.
தனஞ்செயன் சாருடன் உருவான தண்டட்டி படம் பெரிய பெயர் வாங்கியது எல்லோருக்கும் தெரியும் என்றார்.
சுப்பிரமணிய சிவா பேசும்போது,
செல்வமணி அண்ணன் பேசியது ரொம்ப முக்கியமானது. பவிஷ் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கருப்பண்ண சாமி மூலம் தாத்தா எப்படி வெற்றி அடைந்தாரோ அதே போல பவிஷ் வர வேண்டும். எல்லா காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
எம் ஜி ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், சிம்பு – தனுஷ் வரிசையில் பவிஷ் இடம் பெறுவார். ஆனால், அவருக்கு இணையாக யார் வருவார் என்று தெரியவில்லை என்றார்.
லக்ஷ்மணன் பேசும்போது,
6 வருடங்களுக்கு முன்பே இந்த கதையை மகேஷ் கூறும் போது இந்த படம் நிச்சயம் வெற்றியடையும் என்று கூறினேன். மகேஷ் மற்றும் பவிஷ் இருவரும் அழகாக இருக்கிறீர்கள் என்றார்.
இசையமைப்பாளர்கள் பாக்ஷன் பேசும்போது,
இந்த வாய்ப்பை கொடுத்த தனஞ்செயன் சார், மகேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தின் பாடல்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
நடிகை நாக துர்கா பேசும்போது,
டீஸருக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கு நன்றி. அதே போல படத்திற்கும் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.
நடிகர் பவிஷ் பேசும்போது,
எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன்.
தனஞ்செயன் மற்றும் தினேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் கதை கூறுவதில் சிறந்தவர்.
பிரதீப் மற்றும் இருவரும் சேர்ந்து பாக்சன் என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார்கள். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.
நாக துர்கா பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார் என்றார்.
சண்டை பயிற்சி இயக்குனர் என்னுடைய பணியை எளிமையாக்கினார் என்றார்.
நடிகர் அஜய் திஷான் பேசும்போது,
லவ் ஓ லவ் ட்ரைலர் நன்றாக வந்துருக்கிறது. பவிஷ், நாக துர்கா, நன்றாக நடித்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் பேசும்போது,
இங்கு வந்த அனைவருக்கும் நன்றி. 1 1/2 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்ற முடியுமென்றால் கடவுளால் தான் முடியும். அந்த வகையில் தனஞ்செயன் சாருக்கும் தினேஷ் சாருக்கும் நன்றி.
கலை இயக்குனர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். நாக துர்கா நன்றாக நடித்திருந்தீர்கள். சசி சார் நூறு சாமி என்ற சிறப்பான படைப்பை கொடுத்திருக்கிறார்.
இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
கடவுளுக்கு நன்றி என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது,
நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது.
இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள்.
நேர்மையான விமர்சனம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இவானா வருண் எப்போதெல்லாம் திருமணம் நிச்சயமாகிறதோ, அப்போதெல்லாம் மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழக்கிறான். இதனால் தனக்கு ஏதோ துரதிர்ஷ்டம் இருப்பதாக பயந்து, திருமணம் செய்ய அஞ்சுகிறாள்.இந்த விசித்திரமான வழக்கைப் புலனாய்வு செய்ய ஐபிஎஸ் அதிகாரி பிரஜின் வழக்கின் பின்னணியை தேடிச் செல்லும்போது, அவரேஇவானா வருண் மேல் காதலில் விழுகிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதற்குப் பின் பிரஜினின் உயிருக்கு ஆபத்து வந்ததா? அந்த மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் கொலையாளி யார்? அவர் கண்டுபிடிக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மை என்ன? என்பதே மீதிக்கதை.
செழியனாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரஜின் ஒரு கம்பீரமான, நேர்மையான போலீஸ் அதிகாரியாக அமைதியான நடிப்பு படத்திற்குப் பெரிய பலம்.
இவானா வருண் கார்த்திகாவாக அறிமுக நாயகியாக இருந்தாலும், கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். தன்னைச் சுற்றி நடக்கும் மரணங்களால் ஏற்படும் பயம், மன உளைச்சல் காதல் எனப் உணர்ச்சிகளை தனது கண்கள் மூலமாகவேவெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சைக்காலஜிக்கல் சஸ்பென்ஸ் கதையைத் தேர்ந்தெடுத்து, அதை இறுதிவரை தொய்வில்லாமல் கொண்டு சென்றதில் இயக்குனர் சந்தோஷ் ராவணன் வெற்றி பெற்றுள்ளார்
அருண்குமார் சேகரன், நதியா சோமு , சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார்,கலைவாணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியுள்ளார் அருண்குமார் சேகரன். வினோத் குமார் பி.எஃப்.டி. ஒளிப்பதிவு செய்துள்ளார் . சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப் பாலா எழுதியுள்ளார் . ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். என்.நாகராஜ் பெருமையுடன் வழங்க சங்கமித்ரன் புரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் நாராயண நாகராஜ் , அருண்குமார் சேகரன் தயாரித்துள்ளனர்.
சங்கமித்ரன் என்கிற மித்ரன் கல்லூரி மாணவி லட்சுமியைக் காதலிக்கிறான். அவன் ஒரு டைல்ஸ் விற்பனை நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். காதலில் விழுந்ததால் வேலையில் கவனம் இல்லாமல் இருக்கிறான். ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை. லட்சுமியிடம் அவன் காதலைச் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறான். நண்பர்கள் உந்துதலில் நெருங்கிக் கேட்கும் போது அவன் தன்னைக் காதலிப்பது தனக்குத் தெரியுமே என்கிறாள். அவன் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறான். பிறகு இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பார்க்கிறார்கள். டூயட் பாடுகிறார்கள் .லட்சுமி குடும்பத்தினருக்கு இதில் சம்மதம் இல்லை. இருந்தாலும் அவள் மித்ரன் தனக்கே சொந்தம் என்று நினைக்கிறாள்.
அவனுக்கு நண்பர்கள் மூலம் குடிப்பழக்கம் அறிமுகமாகிறது. ஒரு நாள் லட்சுமி அவன் குடிப்பதைக் கண்டித்து இனிமேல் குடிக்கக் கூடாது என்று ப்ராமிஸ் செய்யச் சொல்லி சத்தியம் வாங்குகிறாள்.
ஒரு நாள் சில வாலிபர்கள் ஒரு பெண்ணைப் பாலியல் சீண்டல் செய்யும் போது மித்ரன் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். இதைத் தொலைவில் இருந்து பார்த்த லட்சுமி தவறாகப் புரிந்து கொள்கிறாள்.அவன் மீது கோபம் கொள்கிறாள்.இந்த நிலையில் விரக்தியுற்றவன், மேலும் குடிக்கிறான்.அவனுடன் பேசாமல் இருப்பதால் , தன்னை மறந்து விட்டாளோ என்று வருத்தப்படுகிறான்.அவளுக்கு வீட்டில் திருமண நிர்ப்பந்தம் நெருக்கிக் கொண்டிருக்கிறது.ஒரு நாள் தன் தோழியின் மூலம் மித்ரனை மலைக் கோயிலுக்கு வரச் சொல்கிறாள்.நண்பர்களுடன் அங்கே குழப்பத்துடன் செல்கிறான்.ஆனால் எல்லா ஏற்பாட்டுடன் வந்த அவள் திடீரென மாலை மாற்றி தாலி கட்டச் சொல்கிறாள். மித்ரனும் இந்தத் திடீர் திருமணத்தில் சற்றே அதிர்ச்சி அடைந்தாலும் வேறு வழி இல்லாமல் தாலிகட்டி விடுகிறான். திருமணம் முடிந்து விடுகிறது. மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் லட்சுமி கருவுறுகிறாள். ஆனால் கணவன் மனைவி இருவருக்கும் மருத்துவ சோதனை செய்ததில் அவனுக்கு மட்டும் ஹெச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரிய வருகிறது. இதை எண்ணி அவன் அதிர்ச்சி அடைகிறான். வேறொரு பரிசோதனை செய்து சோதித்த போதும் அதே முடிவு தான் வருகிறது. தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்று மனம் உடைந்து போகிறான்.அவளிடமிருந்து விலகி இருக்கிறான். அவளிடம் இதைச் சொல்லத் தயங்குகிறான் .பிறகு அவள் வற்புறுத்திக் கேட்டதும் சொல்கிறான் .அதிர்ச்சி அடைந்த அவள், சற்றே அதில் இருந்து மீள்கிறாள்.ஒரு நிலையில் அவன் மீது ஒரு பரிவு வருகிறது.மருத்துவ சிகிச்சை செய்யலாம் என்று கூறுகிறாள். இதை அறிந்து கொண்ட லட்சுமியின் பெற்றோர் அவனுக்குத் தவறான தொடர்பால் தான் இது வந்தது என்று திட்டி அவமானப்படுத்துகிறார்கள்.அவள் விலைமாதிடம் சென்றது உண்மையா என்று அவனிடம் கேட்கிறாள் .அவன் தான் சென்றது உண்மை ஆனால் எதுவும் நடக்கவில்லை என்கிறான்.அவள் மிகவும் வருத்தப்படுகிறாள்.ஒரு கட்டத்தில் பெற்றோர் அவளைப் பிரித்து அழைத்துச் செல்கின்றனர்.லட்சுமி வயிற்றில் உள்ள கரு கலைக்கப்படுகிறது. மித்ரன் அவளைச் சந்திக்க விடாமல் தடுக்கின்றனர். தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனவன் , அவளுக்கு வீடியோவில் பேசி ஒரு மெசேஜ் அனுப்புகிறான். அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஒரு ப்ராமிஸ் செய்கிறான்.
”அடுத்த பிறவியில் உனக்கு மகனாக நான் பிறப்பேன். பிறக்கும் குழந்தைக்கு என் பெயரை வைத்து விடு . நீ இதைப் பார்க்கும் போது நான் உயிருடன் இருக்க மாட்டேன்”என்று பேசி வீடியோ அனுப்பி விடுகிறான்.அதிர்ச்சி அடைந்தவள் அவனைப் பார்க்க ஓடிய போது அவனை உயிரற்ற உடலாகத்தான் பார்க்க முடிந்தது.இதற்குப் பிறகு இந்தக் கதை எப்படிச் செல்கிறது என்பதைச் சொல்கிற படம் தான் ‘ப்ராமிஸ்’.
இந்தப் படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் அருண்குமார் சேகரன் சங்கமித்ரன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சுமாரான தோற்றம் சுமாரான உடல்மொழி என்றாலும் அந்தப் பாத்திரத்திற்கு தன்னைப் பொருத்திக் காட்டியுள்ளார். நடுத்தர வர்க்கத்து அல்லாட்டங்களையும் தடுமாற்றங்களையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு நடிகர் நடித்தது போலத் தெரியாமல் தன்னால் முடிந்த அளவிற்கு முக பாவனைகள் காட்ட முயற்சி செய்துள்ளார். குறிப்பாகக் குடிக்கும் காட்சிகளில் எச்ஐவி வந்த பிறகு வருத்தப்படும் காட்சிகளில் அவருடைய நடிப்பு கவனிக்க வைக்கிறது.
கதாநாயகி லட்சுமியாக நடித்துள்ள நதியா சோமு திராவிட முகத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சுமாரான முக பாவனைகள் காட்டினாலும் போகப் போக கதையின் தீவிரத்தில் தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தக் கதையில் துணைக் கதாபாத்திரங்களில் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், குணா, சுந்தரவேல்,கார்த்திக் ஸ்மித் ,ராஜா, டாக்டர் இவின், ராஜ்குமார்,கலைவாணி போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகனின் நண்பர்களாக வருபவர்கள், கடை முதலாளி, நாயகனின் தாய் தந்தை, நாயகியின் தாய் , எதிர்மறைப் பாத்திரத்தில் லிங்கேஸ்வரனாக நடித்திருப்பவர் என அனைவரும் மண்ணின் மைந்தர்கள் போல் தெரிகிறார்கள். ஆபத்துக்கு கிடைத்த அவர்களைப் பயன்படுத்திக் கொண்டது போல் உள்ளது .
இந்தக் கதை வேலூர் மாவட்டத்தில் நடக்கிறது. எனவே அந்த வேலூரின் வெம்மை பூமியையும் இருப்புப் பாதைகளில் ரயில் செல்வதையும் காட்டி அந்த நிலக்காட்சியை நம்மை உணர வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் வினோத் குமார். இசையமைப்பாளர் தீபச்செல்வனின் இசையில் பாடல்கள் புரிகிற வரிகளில் உள்ளது பெரும் ஆறுதல்.குறிப்பாக ‘தேன்மழை சாரலே ‘, ‘உதிர்கிறேன் நானடி ‘பாடல்கள் கவனிக்க வைக்கின்றன.
படத்தில் புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற காட்சிகள் அதிக இடங்களில் வருவதைத் தவிர்த்து இருக்கலாம்.
மது போதையில் திடீர் முடிவெடுக்கும் மனநிலை கொண்டு செல்லும் ஆபத்தைப் பற்றி இந்தப் படத்தில் கூறியிருக்கிறார்கள் .வாக்கு கொடுப்பவர்கள், சத்தியம் செய்பவர்கள் அதைக் காப்பாற்ற வேண்டும். எதற்கெடுத்தாலும் ப்ராமிஸ் ப்ராமிஸ் என்று சத்தியம் செய்வது பெரிதல்ல. அதைக் காப்பாற்றுவதில் பொறுப்பு உள்ளது என்பதை உணரும் வகையில் காட்சிகள் உள்ளன.
மித்ரனுக்கு எப்படி எச்ஐவி வந்தது என்பதற்கான தெளிவான விளக்கம் இல்லாமல் இருக்கிறது. விலை மகள் வீட்டுக்குச் சென்று இருந்தாலும் அங்கு எந்தத் தொடர்பும் ஏற்படவில்லை என்றாலும் எச்ஐவி எப்படி வந்தது என்பதற்கான தெளிவான விடை இல்லை.
குடும்பத்தில் நிகழும் முக்கியமான முரண்பாட்டு மோதல்களின் போது கதாநாயகனின் பெற்றோர்கள் எங்கே சென்றார்கள்? அவர்களது பதில் வினை என்ன என்பதைச் சரியாக காட்டவில்லை.
மொத்தத்தில் குடிப்பழக்கத்தின் விளைவுகளையும் அவசர முடிவுகள் தரும் ஆபத்தையும் மனம்விட்டுப் பேசாத மனநிலை தரும் சிக்கல்களையும் எளிய முறையில் இந்தப் படத்தில் கூறி இருக்கிறார்கள் என்று கூறலாம்.
அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள கான் சிட்டி ஒரு வித்தியாசமான கிரைம்-காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. பணத்திற்காக மோசடி செய்யத் தொடங்கும் சாதாரண மனிதர்கள், அதே மோசடிகளின் வலையில் சிக்கிக் கொள்வதே படத்தின் மையக் கதை.
கடனில் சிக்கித் தவிக்கும் சரவணன், தனது வாழ்க்கையை மாற்றும் நோக்கில் மோசடி உலகில் கால் பதிக்கிறார். அவருடன் இணையும் பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று இணைகிறது. ஒவ்வொரு மோசடியும் புதிய சிக்கல்களை உருவாக்க, அதிலிருந்து தப்பிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளே படத்தின் சுவாரஸ்யமாக மாறுகின்றன.
அர்ஜுன் தாஸ் தனது வழக்கமான ஆக்ஷன் இமேஜிலிருந்து விலகி, சாதாரண மனிதராகவும் பின்னர் தந்திரமான மோசடிக்காரராகவும் சிறப்பாக நடித்துள்ளார். அன்னா பென் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்துகிறார். யோகி பாபு மற்றும் வடிவுக்கரசி இணையும் காட்சிகள் படத்திற்கு நல்ல நகைச்சுவை அம்சத்தை சேர்க்கின்றன.
படத்தின் முதல் பாதி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் சற்று மெதுவாக நகர்ந்தாலும், மோசடிகள் தொடங்கிய பிறகு திரைக்கதை வேகம் பெறுகிறது. எதிர்பாராத திருப்பங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் நகைச்சுவை கலந்த காட்சிகள் ரசிகர்களை ஈர்க்கின்றன.
ஷான் ரோல்டனின் இசை சில இடங்களில் கதைக்கு உதவினாலும், சில உணர்ச்சிகரமான காட்சிகளில் பின்னணி இசை அதிகமாக இருப்பது தாக்கத்தை குறைக்கிறது. மேலும், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீளமாக இருப்பதும், வில்லன் கதாபாத்திரத்திற்கு போதிய முக்கியத்துவம் இல்லாததும் படத்தின் குறைகளாக அமைகின்றன.
மொத்தத்தில், கான் சிட்டி ஒரு வழக்கமான கிரைம் திரைப்படம் அல்ல. நகைச்சுவை, குடும்ப உணர்வு மற்றும் மோசடி சம்பவங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், வார இறுதியில் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக அமைகிறது. அர்ஜுன் தாஸின் வித்தியாசமான நடிப்பும், சுவாரஸ்யமான திரைக்கதையும் படத்தின் முக்கிய பலமாக இருக்கின்றன.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள அங்கீகாரம், விளையாட்டு துறையில் நிலவும் அரசியல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் திறமையான வீரர்கள் சந்திக்கும் அநீதிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் கோர்ட்ரூம் டிராமா. இயக்குநர் தென்பதியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், ஒரு சாதாரண வீரனின் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது.
ஏழ்மையான பின்னணியில் இருந்து வரும் ஆதிரன் என்ற ஓட்டப்பந்தய வீரர், இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார். ஆனால் விளையாட்டு அமைப்புகளில் நிலவும் ஊழல் மற்றும் அரசியல் காரணமாக அவரது வாய்ப்பு பறிக்கப்படுகிறது. தனது உரிமையை மீட்டெடுக்க அவர் நீதிமன்றத்தை நாடுகிறார். அதன் பிறகு நடைபெறும் சட்டப் போராட்டமே படத்தின் மையக்கதை.
நாயகனாக அறிமுகமாகும் கே.ஜே.ஆர் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். விளையாட்டு வீரராகவும், நீதிமன்றத்தில் தனது உரிமைக்காக போராடும் இளைஞராகவும் அவர் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். வசுந்தரா காஷ்யப், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளனர்.
கோர்ட்ரூம் காட்சிகள் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகின்றன. விளையாட்டு நிர்வாகங்களில் நடைபெறும் அரசியல், திறமையான வீரர்கள் எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகளை படம் நேரடியாக பேசுகிறது. வசனங்களும் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
கிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளுக்கு கூடுதல் வலிமையை அளிக்கிறது. ஒளிப்பதிவும், விளையாட்டு காட்சிகளின் அமைப்பும் தரமாக உள்ளன. முதல் பாதி கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் செலவிடப்பட்டாலும், இரண்டாம் பாதியில் நீதிமன்ற காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக முன்னேற்றுகின்றன.
இருப்பினும், சில காட்சிகள் வழக்கமான விளையாட்டு திரைப்படங்களின் பாணியை நினைவுபடுத்துகின்றன. சில துணைக் கதாபாத்திரங்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. படத்தின் வேகம் சில இடங்களில் குறைவாக உணரப்படுவதும் ஒரு சிறிய குறையாக அமைகிறது.
மொத்தத்தில், அங்கீகாரம் வெறும் விளையாட்டு திரைப்படமாக இல்லாமல், திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க போராடும் இளைஞர்களின் குரலாக மாறுகிறது. சமூக கருத்தும், உணர்ச்சியும், நீதிமன்ற பரபரப்பும் இணைந்த இந்தப் படம் ஒரு நல்ல முயற்சியாக திகழ்கிறது.
94 வயதிலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தயங்காத இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், சிங் கீதம் மூலம் மீண்டும் ஒரு முறை தனது கற்பனை உலகத்தை திரையில் கொண்டு வந்துள்ளார். முழுக்க முழுக்க பாடல்களின் வழியே நகரும் இந்த இசை-கற்பனை திரைப்படம் இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.
குபேரபுரம் என்ற கிராமத்தில் நடக்கும் கதை, தங்க சுரங்கத்திற்காக இயற்கையை அழித்த மனிதர்களின் பேராசையையும், கடைசியாக எஞ்சியிருக்கும் மரத்தை காப்பாற்றும் போராட்டத்தையும் மையமாகக் கொண்டுள்ளது. ஊரே பாடல்களின் மூலம் பேசும் தனித்துவமான அமைப்பு ஆரம்பத்தில் புதுமையாக தோன்றினாலும், சில நேரங்களில் அது சற்று மீளுருவாக்கமாகவும் உணரப்படுகிறது.
அயான் மற்றும் அஹில்யா ஆகிய புதிய நடிகர்கள் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர். இருப்பினும், சில இடங்களில் அனுபவக் குறைபாடு தெரிகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது.
ஒளிப்பதிவு, கலை இயக்கம் மற்றும் கிராமத்தின் கற்பனை உலகம் படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. இயற்கை பாதுகாப்பு, பேராசையின் விளைவுகள் மற்றும் மனிதநேயத்தைப் பேசும் படத்தின் மையக்கரு மனதில் நிற்கிறது.
ஆனால் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் நீளமாக உணரப்படுகின்றன. பாடல்களாகவே உரையாடல்கள் தொடர்வது சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தக்கூடும். உச்சக்கட்ட காட்சியும் அனைவரையும் ஒரே அளவில் திருப்திப்படுத்தாது.
மொத்தத்தில், சிங் கீதம் ஒரு சாதாரண வணிகப் படம் அல்ல. இது இசை, கற்பனை மற்றும் சமூகக் கருத்துகளை இணைக்கும் துணிச்சலான முயற்சி. வித்தியாசமான சினிமாவை விரும்புபவர்களுக்கும், சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் படைப்புகளை ரசிப்பவர்களுக்கும் இந்த படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
காதல், நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஹார்ட்டின் திரைப்படம், ஒரு மென்மையான காதல் கதையை திரையில் சொல்ல முயற்சிக்கிறது. ஜெய்ப்பூரில் தமிழ் உணவகம் நடத்தும் சிவாவின் வாழ்க்கையில் ஏற்படும் காதல், பிரிவு மற்றும் நினைவிழப்பு சம்பவங்களை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
நாயகனாக நடித்துள்ள சனந்த் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். மடோனா செபாஸ்டியனும் தனது அனுபவமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இருப்பினும், கதாபாத்திரங்களுக்கு ஆழம் குறைவாக இருப்பதால் அவர்களின் உணர்வுகள் பார்வையாளர்களை முழுமையாகக் கவர முடியவில்லை.
படத்தின் மிகப்பெரிய பலம் ராஜேஷ் முருகேசனின் இசை. பாடல்களும் பின்னணி இசையும் காதல் காட்சிகளுக்கு நல்ல உணர்வை அளிக்கின்றன. ஒளிப்பதிவில் ஜெய்ப்பூரின் அழகான இடங்கள் ரசிக்க வைக்கின்றன. காட்சியமைப்பிலும் படக்குழு சிறப்பாக செயல்பட்டுள்ளது.
ஆனால் திரைக்கதையில் புதுமை இல்லாதது படத்தின் பெரிய குறையாக மாறுகிறது. பல இடங்களில் கதை முன்கூட்டியே யூகிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் கதை மெதுவாக நகர்வதால் சுவாரஸ்யம் குறைகிறது. நினைவிழப்பு போன்ற முக்கியமான அம்சம் கதையில் இடம்பெற்றிருந்தாலும், அதற்கான உணர்ச்சி தாக்கம் போதுமான அளவில் வெளிப்படவில்லை.
மொத்தத்தில், ஹார்ட்டின் ஒரு மென்மையான காதல் திரைப்படமாக இருந்தாலும், மனதில் நீண்ட நேரம் நிற்கும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதில் தவறுகிறது. காதல் திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு ஒரு முறை பார்க்கக்கூடிய படமாக இது அமைகிறது.
கிரிக்கெட்டை உயிராக நேசிக்கும் மூன்று நண்பர்களின் கனவுப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள வெப் சீரிஸ்தான் Mammattiyaan Stars. சிறிய ஊரில் வசிக்கும் இளைஞர்கள் தங்கள் விருப்பமான கிரிக்கெட் வீரரின் கடைசி போட்டியை நேரில் பார்க்க சென்னைக்கு செல்ல முடிவு செய்கிறார்கள். ஆனால் அந்தப் பயணம் பல எதிர்பாராத சம்பவங்களையும் சவால்களையும் சந்திக்கிறது.
சின்னா, ஷகில் மற்றும் அவர்களது நண்பர்கள் கிரிக்கெட்டின் மீது கொண்டுள்ள தீவிர ஆர்வத்தால் சென்னைக்கு கிளம்புகிறார்கள். சாதாரண ரசிகர்களின் கனவு பயணமாகத் தொடங்கும் இந்த பயணம், நட்பு, நம்பிக்கை, தியாகம் மற்றும் வாழ்க்கைப் பாடங்களை கற்றுத் தரும் அனுபவமாக மாறுகிறது.
Vaibhav Murugesan தனது கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். Lavanya Anbazhagan மற்றும் Vivek Prasanna ஆகியோரின் நடிப்பும் கதைக்கு பலம் சேர்க்கிறது. குறிப்பாக நகைச்சுவை மற்றும் உணர்ச்சி காட்சிகளில் நடிகர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
இயக்குனர் சவிர் சுதாகர், கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளையும் நண்பர்களுக்கிடையேயான உறவையும் எளிமையாக காட்சிப்படுத்தியுள்ளார். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பயணத்தின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகின்றன.
சில இடங்களில் கதை முன்னறிவிக்கக்கூடியதாக உள்ளது. சில துணைக் கதாபாத்திரங்களுக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம்.
மம்மட்டியான் ஸ்டார்ஸ் கிரிக்கெட்டை விட நட்பு மற்றும் கனவுகளைப் பற்றிப் பேசும் ஒரு எளிமையான பயணக் கதையாக உருவாகியுள்ளது. பெரிய திருப்பங்களோ அதிரடி சம்பவங்களோ இல்லாவிட்டாலும், உணர்வுகளையும் நட்பின் அர்த்தத்தையும் ரசிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு இந்த வெப் சீரிஸ் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது நெருக்கமான அனுபவத்தை வழங்குகிறது.