அரண் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்’!

பிரதீப் ஜோஸ் தயாரிப்பில், எஸ் பி அர்ஜுன், ஹக்கா இணை தயாரிப்பில் அரண் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் படம் ‘ஜிகிரி தோஸ்த்’!

நண்பர்கள் கதை என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். அப்படி ஒரு ஜாலியான நண்பர்கள் பயணம் செல்லும்போது ஏற்படும் திடீர் திருப்பங்களின் கதையாக உருவாகி இருக்கிறது ‘ஜிகிரி தோஸ்த்’. இயக்குநர் ஷங்கரிடம் ’2.0’ படத்தில் பணியாற்றியவரும், ’திறந்த புத்தகம்’, ’கால் நூற்றாண்டுக் காதல்’, ’நீங்க நல்லவரா கெட்டவரா’ ஆகிய குறும்படங்களை இயக்கி, விருது பெற்றவருமான அரண் தயாரித்து , நடித்து எழுதி இயக்கி இருக்கும் படம்தான் ’ஜிகிரி தோஸ்த்’.
ஷாரிக் ஹாசன் அம்மு அபிராமி, வி ஜே ஆஷிக், பவித்ரா லக்ஷ்மி, அனுபமா குமார், கவுதம் சுந்தர்ராஜன் பாடகரும் நடிகருமான சிவம் ஆகியோர் நடித்து இருக்கும் இந்தப் படத்துக்கு ’ஒரு கிடாயின் கருணை மனு’, ’பந்தன்’, ’சத்திய சோதனை’, ’விழித்திரு’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி வி பிரகாஷிடம் உதவியாளராக இருந்தவரும், பிரபு தேவா படம் ஒன்றுக்கு இசையமைப்பாளருமான அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைக்கிறார்.

விஞ்ஞானியாக ஆசைப்படும் விக்கி, நடிகனாக ஆசைப்படும் ரிஷி, ஜாலி பேர்வழியான லோகி என்ற மூன்று பால்யகால நண்பர்கள் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் கதை இது. விக்கியின் பிறந்த நாளை ஒட்டி நண்பர்கள் மகாபலிபுரம் சொல்ல, வழியில் ஒரு பெண்ணை கேங்ஸ்டர் கூட்டம் ஒன்று காரில் கடத்திக் கொண்டு போவதை இவர்கள் பார்க்கிறார்கள். லோகியைத் தவிர மற்ற இருவரும் அவளைக் காப்பாற்ற முயல, விக்கி கண்டுபிடித்து இருக்கும் டெரரிஸ்ட் ட்ராக்கர் என்ற கருவி மூலம் அவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்ற முயல பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை. நண்பர்களின் கலாட்டாவோடு படம் ஜாலியாக இருக்கும் என்கிறார் இயக்குநர். படம் எல்லோரையும் ஈர்க்கும்படி இருக்கும் என்கிறார் இணைத் தயாரிப்பாளர் அர்ஜுனன்.

காட்சியில் இல்லாதவர்களை மனதில் கொண்டு இசை அமைக்கும் சூழல் இந்தப் படத்தில் சவாலாக இருந்தது என்கிறார் இசை அமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி. படம் வெளியாகும் தேதி, டீசர், டிரெய்லர் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை பேசும் காதல் கதையான ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது

இசைஞானி இளையராஜா இசையில், செழியன் ஒளிப்பதிவில், ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், சிங்கம்புலி முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்க பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைப்பான ‘மைலாஞ்சி’, தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ என்று மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, “திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது,” என்றார்.

“மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசும் அழகான காதல் கதையான இதை செய்துள்ளோம். பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. ஒரே மாதத்தில் படபிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் மிகவும் அழகாகவும் உணர்ச்சிபூர்வமான வகையிலும் உருவாகியுள்ளது,” என்று அஜயன் பாலா கூறினார்.

மேலும் பேசிய அவர், “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்,” என்று கூறினார்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரையரங்குகளில் வெளியாகிறது.

‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் இயற்கை புகைப்பட கலைஞர் வேடத்தில் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘கோலிசோடா 2’ புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் சிங்கம்புலி நடிக்கிறார். சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா (SIIMA) விருதை ஸ்ரீராம் கார்த்திக் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்து தமிழ் சினிமாவின் தரமான கலைஞர்களை கொண்ட கூட்டணி இப்படத்திற்காக பணத்தைக் கருத்தில் கொள்ளாமல் கைகோர்த்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவை கவனிக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

இப்படத்தின் கதையை பெரிதும் விரும்பி பாராட்டு தெரிவித்த இசைஞானி இளையராஜா, இதில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்பட பாடல்கள் அடுத்த வருடம் முதல் காதலர்களின் தேசிய கீதமாக இருக்கும் என்று இயக்குநர் கூறினார்.

‘பொன்னியின் செல்வன்’, ‘ஆர் ஆர் ஆர்’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்த இந்தியாவின் முதன்மை படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக பங்காற்றுவது கூடுதல் சிறப்பு.

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2017ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ள அஜயன் பாலா, தற்போது ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் சூர்யாவின் சனிக்கிழமை

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் இணையும் சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் படப்பிடிப்பு அதிரடியான ஆக்சன் காட்சியுடன் துவங்கியது

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூவரும் இணையும் இரண்டாவது படைப்பான சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் கடந்த மாதம் பூஜை போடப்பட்டது. நேச்சுரல் ஸ்டார் நானியை தனித்துவமான அதிரடி அவதாரத்தில் காட்டிய இப்படத்தின் அறிமுக அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் DVV தனய்யா மற்றும் கல்யாண் தாசரி இருவரும் இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு அதிரடி ஆக்சன் காட்சியுடன் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. ராம்-லக்ஷ்மண் மாஸ்டர்கள் சாகச சண்டைக்காட்சியை வடிவமைக்கிறார்கள். இந்த ஷெட்யூலில் ஆக்ஷனுடன் சில வசன காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. இப்படப்பிடிப்பில் நாயகன் நானி மற்றும் படத்தின் முக்கிய கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நடிகை பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில், நானி வித்தியாசமான முரட்டுத் தோற்றத்தில் நடிக்கிறார், மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். புகழ்மிகு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

நடிகர்கள்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: விவேக் ஆத்ரேயா
தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி
பேனர்: DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி ஜி
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ்
சண்டை காட்சிகள் : ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்

பிரசாந்த் வர்மாவின் ஹனு-மான் படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகியுள்ளது !!

சூப்பர் மேன் ஹனு-மான் சூப்பரான ஆந்தம் பாடலுடன் வந்துள்ளார் !! இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் ஹனு-மான் படத்திலிருந்து , சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் வெளியாகியுள்ளது !!

சூப்பர் ஹீரோ திரைப்படங்களை ரசிக்கும் இந்திய ரசிகர்கள், நமது மண்ணின் சூப்பர் ஹீரோவான ஹனு-மானை திரையில் தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் ஆர்வமாக உள்ளனர். திரையுலகின் திறமைமிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்திருக்கும் இப்படம் திரைக்கு வர இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் வர்மா படம் குறித்தான விளம்பரங்களிலும் தன் தனித்திறமையைக் காட்டி வருகிறார். இப்படத்தின் டீசர் மற்றும் சாலிசா பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழு குழந்தைகள் தினமான இன்று அவர்கள் கொண்டாடும் வகையில், ஹனு மான் சூப்பர் மேன் பாடலை வெளியிட்டுள்ளனர்.

சூப்பர் ஹீரோ ஹனுமானின் இரண்டாவது தனிப்பாடலை வெளியிட, படக்குழு ஏன் குழந்தைகள் தினத்தைத் தேர்ந்தெடுத்தது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால் இப்பாடலைப் பார்த்தவுடன் அனைவருக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். சூப்பர் ஹீரோ ஹனுமான் வேடிக்கையானவர், அதே நேரத்தில் சாகசக்காரர். அனுதீப் தேவ் உடைய அற்புத இசையில், மதுரகவி பாடல் வரிகளில், ஆர்.பி.கிரிஷாங், அஹானா பாலாஜி, சாய்வேதா வாக்தேவி குரல்களில், முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் அனைவரையும் மகிழ்விக்கும் பாடலாக இப்பாடல் வந்துள்ளது. காமிக் வடிவத்தை ஞாபகப்படுத்தி, குழந்தைகளை ஈர்க்கும் வகையில் ஹனு மானின் சாகசங்களை சொல்லும் இப்பாடலை, குழந்தைகள் அனைவரும் விரும்புவார்கள். இந்த சூப்பர் கீதம் வெளியான வேகத்தில் அனைவரும் கொண்டாட பெரும் ஹிட்டடித்துள்ளது.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தைப் பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்த பிரம்மாண்டமான படைப்பின், ஒளிப்பதிவை சிவேந்திரா செய்கிறார், ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படம் ஹனு-மான் ஆகும். இக்கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கான்செப்ட் உலகளாவியதாக இருப்பதால், உலகம் முழுவதும் சிறப்பாக வரவேற்கப்படும் சாத்தியம் உள்ளது.

ஜனவரி 12, 2024 அன்று தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகள் உட்பட ஹனு- மான் திரைப்படம் பான் வேர்ல்ட் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: பிரசாந்த் வர்மா
தயாரிப்பாளர்: K நிரஞ்சன் ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்
வழங்குபவர்: ஸ்ரீமதி சைதன்யா
திரைக்கதை: ஸ்கிரிப்ட்ஸ்வில்லே (Scriptsville)
ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரா
இசையமைப்பாளர்கள்: அனுதீப் தேவ், ஹரி
கவுரா, ஜெய் கிரிஷ் மற்றும் கிருஷ்ணா சௌரப்
எடிட்டர்: எஸ்.பி.ராஜு தலாரி
நிர்வாக தயாரிப்பாளர்: அஸ்ரின் ரெட்டி வரி
தயாரிப்பாளர்: வெங்கட் குமார் ஜெட்டி
லைன் புரடியூசர்: குஷால் ரெட்டி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஸ்ரீநாகேந்திர தங்காலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஆடை வடிவமைப்பாளர்:
லங்கா சந்தோஷி

பிரைம் வீடியோவில் தமிழ் திகில் ஒரிஜினல் ​​’தி வில்லேஜ்’

பிரைம் வீடியோவில் வெளிவரவிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் ​​தி வில்லேஜ் சீரிஸின் அசத்தலான இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளது

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திகில், ஒரிஜினல் வெப்சீரிஸ் ​​தி வில்லேஜ் சீரிஸுக்கு, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார், பாடல் வரிகளை மதுரை சொல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் எழுதியுள்ளனர். முத்து சிற்பி(காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா(ஜி. முருகன்), குரு அய்யாதுரை, மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், டி.பிரதிமா பிள்ளை, ஷில்பா நடராஜன் ஆகியோர் பாடியுள்ளனர்.

ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், B.S.ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ள தி வில்லேஜ் தமிழ் ஒரிஜினல் சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளிலுள்ள ப்ரைம் உறுப்பினர்கள் இந்த திகில் சீரிஸை ஸ்ட்ரீம் செய்து ரசிக்கலாம்.

மும்பை – நவம்பர் 14, 2023 – இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான மிகவும் பிரைம் வீடியோ, தங்களின் வரவிருக்கும் தமிழ் ஒரிஜினல் திகில் தொடரான ​​தி வில்லேஜ் சீரிஸின் இசை ஆல்பத்தை இன்று வெளியிட்டது. இந்த ஆல்பத்தில் ஆழமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் 11 பாடல்கள் உள்ளன, ஒவ்வொரு பாடல்களும் சமூகத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த இசை ஆல்பத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை மதுரை சோல்ஜர் (சியான் சாஹீர், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி, சினேகன், குரு அய்யாதுரை மற்றும் ஷில்பா நடராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். திருவிழாவின் துடிப்பான கொண்டாட்டம் முதல் நினைவு மோரியின் புதுமையான அனுபவங்கள் மற்றும் கண்ணுறங்கு கண்மணியே என்ற மென்மையான தாலாட்டு வரை, இந்த ஆல்பம் காலத்தால் மனித உணர்வுகளான காதல், தியாகம் மற்றும் காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை வெளிப்படுத்துகிறது.

ஆல்பத்தின் டிராக்லிஸ்ட் இதோ –

  1. திருவிழா – பாடியவர்: முத்து சிற்பி (காளிமுத்து), சிந்துரி விஷால், மதிச்சியம் பாலா (ஜி.நந்தபாலா முருகன்) ; பாடலாசிரியர்: சினேகன்
  2. தாயி பாடல் (பாரம்பரிய வகை டியூன்) – பாடியவர்: மதிச்சியம் பாலா(ஜி.நந்தபால முருகன்), குரு அய்யாதுரை, சிந்துரி விஷால் ; பாடலாசிரியர்: சினேகன்
  3. தாயி பாடல் (திகில் வகை டியூன்) – பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்
  4. மெமெண்டோ மோரி – பாடகர் & பாடலாசிரியர்: மதுரை சோல்ஜர் (சியான், செந்தில் குமார்), ஐக்கி பெர்ரி
  5. மியூட்டேசன் தீம் (தி வில்லேஜ் டைட்டில் டிராக்) – பாடியவர்: சிந்துரி விஷால் , குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: சினேகன்
  6. கண்ணுறங்கு கண்மணியே (சகோதரியின் மரணப் பாடல்) – பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்
  7. மண்ண வெட்டி (தொழிலாளர் பாடல்) – பாடியவர்: குரு அய்யாதுரை ; பாடலாசிரியர்: குரு அய்யாதுரை
  8. ஜிகும்-வா – பாடியவர்: டி.பிரதிமா பிள்ளை , ஷில்பா நடராஜன் ; பாடலாசிரியர்: ஷில்பா நடராஜன்
  9. நீல குகை
  10. வேட்டையன் தீம்
  11. தாயி பாடல் (பேய் டுயூன்) – பாடியவர்: கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ; பாடலாசிரியர்: சினேகன்

இந்த சீரிஸை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார், தி வில்லேஜ் சீரிஸ், அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ்குப்தாவின் ஆகியோர் எழுதிய கிராஃபிக் ஹாரர் நாவலிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கிராஃபிக் திகில் நாவல் யாழி ட்ரீம் ஒர்க்ஸ் வெளியீடாக வெளிவந்தது.

தனது குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஒருவனின் அபாரமான போராட்டக் கதையைச் சொல்வது தான் தி வில்லேஜ் சீரிஸ்.
ஸ்டுடியோ சக்தி நிறுவனத்தின் சார்பில், இந்தத் தொடரை B.S. ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். சீரிஸுக்கான திரைக்கதயை மிலிந்த் ராவ், தீரஜ் வைத்தி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தத் சீரிஸில், பிரபல தமிழ் நடிகர் ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மாயன், பி.என். சன்னி, முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கொக்கன், பூஜா, வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தி வில்லேஜ் சீரிஸ் பிரைம் வீடியோவில் நவம்பர் 24 முதல் இந்தியா மற்றும் 240+ நாடுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுடன், ஆங்கில சப்டைட்டில்களுடன் திரையிடப்பட உள்ளது.

M.V. Diabetes and Prof. M Viswanathan Diabetes Research Centre Unveil “Chennai Slim & Fit 2.0” on World Diabetes Day 2023

Chennai, 14th November 2023: In commemoration of World Diabetes Day 2023 on November 14th, M.V. Diabetes and Prof. M Viswanathan Diabetes Research Centre today hosted a grand “Health Conclave: For a Healthy Mind and Body” event aimed at fostering awareness about general well-being and the prevention of diabetes and its associated complications among the public. As part of the event, the renowned institutions proudly introduce “Chennai Slim & Fit 2.0.” This initiative aligns with their ongoing commitment to primary diabetes prevention, particularly focusing on combating the escalating obesity epidemic among children and adolescents in Chennai. The event was graced by the Chief Guest Ms. Nina Reddy, Joint Managing Director of Savera Hotel.

The launch of Chennai Slim and Fit 2.0 is a key highlight of the “Health Conclave – For a Healthy Mind and Body” event. This initiative underscores their unwavering commitment to creating a healthier future for the community.

Dr. Vijay Viswanathan, Head & Chief Diabetologist at M.V. Diabetes, emphasized the importance of collaborative efforts, notably with the CBSE board. Together, they implemented the Comprehensive School Health Manual (CSHM) across all zones in Chennai. An evaluation of the CSHM activities among school children revealed a significant reduction in BMI and body fat percentage, along with a notable decrease in the consumption of junk food in the intervention group compared to the control group. The Chennai Slim and Fit program has been a pivotal activity, featuring numerous screening programs in schools to gauge the prevalence of overweight and obesity among children and adolescents.

“People should lead an active life when they are still young. At least 45 minutes of exercise, such as swimming, jogging or walking is important. Practicing yoga and meditation can greatly reduce stress, which has emerged as a significant risk factor. It is better that the at-risk population can get used to diabetic food, which is less in carbohydrates and fat. With a balanced diet, regular exercise, lab investigations once in three months, and consultations from a qualified doctor, diabetes can be managed at any stage. Intermittent fasting is a good option to consider in a predominantly carbohydrate-consuming population of India. The obese and the pre-diabetics are particularly the most beneficiary group. Those on insulin should discuss with their physicians before resorting to intermittent fasting”, added Dr Vijay Viswanathan.

In light of the escalating burden of overweight and obesity among not only children but also teenagers and young adults in the post-COVID era, characterized by increased screen time and altered routines, M.V. Diabetes and Prof. M Viswanathan Diabetes Research Centre have tailored their focus. Building on their past success, the institutions are gearing up to target teenagers and young adults to instill and promote healthy habits for a wholesome life.

For nearly two decades, M.V. Diabetes and Prof. M Viswanathan Research Centre have been at the forefront of efforts to address the root causes of diabetes, concentrating their efforts on the younger population to tackle obesity at its earliest stages. Recognizing the higher incidence of these conditions in private schools compared to government schools, the institutions implemented various behavioral health intervention programs. These initiatives included individualized education sessions conducted by a proficient team comprising psychologists, dietitians, physiotherapists, doctors, and the active involvement of parents and teachers. The positive outcomes encompassed changes in dietary habits, increased physical activity through compulsory participation in physical education classes, promotion of healthy snacks in school canteens, reduction of sedentary activities such as TV watching and mobile gaming, and the instilling of nutrition label reading habits.

“லூசிஃபர்” பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லாலின் ‘எம்புரான்’ (லூசிபர் 2) ஃபர்ஸ்ட் லுக்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர்ஆகியோர் இணைந்து தயாரிக்க, பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் முதன்முறையாக இயக்க, மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி, தென்னிந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற, இப்படத்தின் அடுத்த பாகம் தற்போது எம்புரான் என்ற பெயரில் உருவாகியுள்ளது.

மிகப்பெரிய பொருட்செலவில், லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் – ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் – இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

இந்த ஆண்டில், மலையாளத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுக்க, மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மோகன்லாலின் அதிரடியான தோற்றம் அவரது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக, பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இணையம் முழுக்க இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க, இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.

மோகன் லால் ‌- பிருத்விராஜ் சுகுமாறன் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் ‘எம்புரான்’ திரைப்படம், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் டீசர்.

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ‘ரெபல்’ படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், ஆவேசமான கதாபாத்திர குணாதிசயமும் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இதன் காரணமாக ‘ரெபல்’ படத்தின் டீசர் குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Marvel Studios presents ‘THE MARVELS’

CURTAIN RAISER –The Marvels (2023) is a super-hero film which is the 33rd instalment of the Marvel Cinematic Universe (MCU). It is based on Marvel Comics featuring the characters Carol Danvers / Captain Marvel, Monica Rambeau, and Kamala Khan / Ms. Marvel. It stars Brie Larson as Carol Danvers, Teyonah Parris as Monica Rambeau, and ImanVellani as Kamala Khan,

SYNOPSIS – The Marvels is the next big-ticket action film from Marvel Studios- all set to shine bright on the big screens this Diwali! Three powerful superheroes will unite against a mighty intergalactic threat in an exchange of superpowers inflicted by the villain. The Marvels will be released in theatres across India in Tamil, Telugu, English and Hindi

The Marvels is the sequel to Captain Marvel (2019) which introduced audiences worldwide to an all-new adventure starring Brie Larson as Carol Danvers, the MCU’s first  stand-alone, female-franchise title character.

Carol Danvers’ heroism inspired Nick Fury to create the Avengers initiative and set him out to find heroes like her who could watch over Earth, which then became the Avengers. Now, in “The Marvels,” Carol Danvers aka Captain Marvel has reclaimed her identity from the tyrannical Kree and taken revenge on the Supreme Intelligence. But unintended consequences see Carol shouldering the burden of a destabilized universe. When her duties send her to an anomalous wormhole linked to a Kree revolutionary, her powers become entangled with that of Jersey City super-fan, Kamala Khan aka Ms. Marvel, and Carol’s estranged niece, now S.A.B.E.R. astronaut, Captain Monica Rambeau. Together, this unlikely trio must team-up and learn to work in concert to save the universe as The Marvels.

CREDITS -The cast includes Samuel L. Jackson, Mohan Kapur and Saagar Shaikh

Directed by- Nia Da Costa 

Cinematography- Sean Bobbitt    Music- Laura Karpman  

At theatres from November 10th in English, Tamil, Telugu and Hindi

பிரைம் வீடியோ தனது அடுத்த உலகளவிலான ப்ரீமியர் வெளியீடாக தமிழ் ஒரிஜினல் திகில், தொடரான தி வில்லேஜ் திரைப்படம் நவம்பர் 24 அன்று.

பிரைம் வீடியோ தனது அடுத்த உலகளவிலான ப்ரீமியர் வெளியீடாக தமிழ் ஒரிஜினல் திகில், தொடரான தி வில்லேஜ் திரைப்படம் நவம்பர் 24 அன்று வெளியிடப்படுவதை அறிவித்தது ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் சார்பில்பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்கத்தில் தி வில்லேஜ் படம் உருவாகியிருக்கிறது

இந்தத் தொடரில் புகழ் பெற்ற தமிழ் நடிகரான ஆர்யா, மிகச்சிறந்த திறமை வாய்ந்த நட்சத்திரங்களான திவ்யா பிள்ளை, அலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா ராமச்சந்திரன், முத்துக்குமார் கே., கலைராணி எஸ்.எஸ்., ஜான் கோக்கன், வி.ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், மற்றும் தலைவாசல் விஜய் உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மும்பை, இந்தியா—நவம்பர் 09, 2023—இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, மிகவும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட அதன் தமிழ் திகில், ஒரிஜினல் தொடரான தி வில்லேஜ் திரைப்படத்தின் பிரீமியர் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்தது. மிலிந்த் ராவ் (Milind Rau) இயக்கத்தில் உருவான , தி வில்லேஜ், தொடக்கத்தில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, முதலில் யாலி ட்ரீம் ஒர்க்ஸால் அதே பெயரில், பிரசுரிக்கப்பட்ட கிராஃபிக் திகில் நாவலால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு திகில் தொடராகும், தனது குடும்பத்தை ஆபத்திலிருந்து மீட்டு காப்பாற்றுவதற்காக ஒரு சாகச பயணத்தை மேற்கொள்ளும் ஒரு மனிதனை சுற்றி இந்த கதை சுழல்கிறது. மிலிந்த் ராவ், தீராஜ் வைத்தி(Deeraj Vaidy), மற்றும் தீப்தி கோவிந்தராஜன் (Deepthi Govindarajan) ஆகியோரின் எழுத்தில் உருவான இந்தத் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக பி.எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்தத் தொடரில், புகழ்பெற்ற பிரபல தமிழ் நடிகர் ஆர்யா (Arya) கதாநாயகனாகத் தோன்ற அவருடன் இணைந்து , திவ்யாபிள்ளை (Divya Pillai), அலீயா(Aazhiya), ஆடுகளம் நரேன் (Aadukalam Naren), ஜார்ஜ் மரியான் (George Maryan), PN சன்னி (PN Sunny), முத்துக்குமார் கே. (Muthukumar K.), கலைராணி எஸ்.எஸ். (Kalairaani S.S.), ஜான் கொக்கன் (John Kokken,) பூஜா(Pooja), வி.ஜெயபிரகாஷ்) (V Jayaprakash), அர்ஜூன் சிதம்பரம்(Arjun Chidambaram), மற்றும் தலைவாசல் விஜய்(Thalaivasal Vijay)போன்ற பல்வேறு திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்தத் தொடர் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 24 அன்று தமிழில் வெளியிடப்படுவதோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் சப்டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது. இந்த தி வில்லேஜ் திரைப்படம், பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499/- செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவித்து மகிழ்கிறார்கள்.

“எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு வகையான ஆர்வங்கள் மற்றும் விருப்பத்தேர்வுகளை வழங்கி நிறைவேற்றுவதே பிரைம் வீடியோவில், எங்களின் தலையாய நோக்கமாக உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் திகில் மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வகையில் அதிக ஆர்வம் காட்டப்படுவதை நாங்கள் கவனித்து வருகிறோம். ,” என பிரைம் வீடியோவின் ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ், இந்தியா & SEA, அபர்ணா புரோஹித் கூறினார். “எங்களின் ஒட்டுமொத்த கலைப்படைப்புக்களிலும் தி வில்லேஜ் முக்கியமான சிறப்பிடத்தைப் பிடித்துள்ளது. ஒரு கிராஃபிக் நாவலில் இருந்து பெற்ற மன எழுச்சியின் வழியாக , இந்திய திரைப்பட வரலாற்றில் திகிலூட்டும் பொழுதுபோக்கு படவரிசையில் இதுவரை கண்டறியப்படாத ஒரு தனித்துவமான கதைக்களத்தை இந்தத் தொடர் அறிமுகப்படுத்தி வழங்குகிறது. மிலிந்த் மிக அற்புதமான முறையில் பிரமிக்கத்தக்க வகையில் தனது பார்வைக்கு உயிரூட்டியிருப்பது மிலிந்த் இது நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் தலை சிறந்த நடிப்பாற்றலின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இந்த தி வில்லேஜ் திரைப்படம் மனதை விட்டு அகலாத அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க உத்திரவாதமளித்து, சஸ்பென்ஸ், அமானுஷ்யமான மயிர்க்கூச்செறியும் நிகழ்வுகள் நிறைந்த காட்சி பூர்வமான ஒரு உலகத்தை உருவாக்கி கட்டாயம் காணவேண்டிய வகையில் உணர்ச்சி பூர்வமான ஒரு குடும்பக் கதையை வழங்குகிறது.”

“எங்கள் கடுமையான உழைப்பில் அன்பின் வெளிப்பாடான தி வில்லேஜ் ஐ உலகளாவிய பார்வையாளர்களிடம் பிரைம் வீடியோவுடனான கூட்டாண்மையோடு கொண்டு செல்வது எங்களுக்கு முழுமையான மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று கிரியேட்டிவ் தயாரிப்பாளரும் இயக்குநருமான மிலிந்த் ராவ் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது “ஒரு நல்ல திகில் தொடர் அல்லது திரைப்படம் என்பது இரவில் தனியாக வெளியே செல்லவேண்டும் என்ற எண்ணமே உங்களை அச்சுறுத்துவதாகவும்,ஒரு மரக்க்குச்சி உடையும் சத்தம் கூட உங்கள் இதயத்துடிப்பை ஒரு கணம் நிறுத்தி, உங்களைச் சுற்றி நிழலுருவங்கள் உயிரெழுந்து வருவது போல தோற்றமளிக்கச்செய்ய வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த பிரிவு வகை திரைப்படங்களை அனுபவித்து ரசிப்பவர்களுக்கு அடிவயிற்றைக் கலக்கும் வகையில் அச்சத்தை உருவாக்கும் உள்ளடக்கத்தை கொண்டுவர நான் விரும்புகிறேன். நாங்கள் ஒவ்வொருவரும்-நடிகர்கள் குழுவினர் தி வில்லேஜ் மூலம், திகில் படங்களின் ஆர்வலர்கள் மட்டுமின்றி, அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் மேம்பட்ட திரைப்படக் கலையம்சத்தை விரும்பி அனைவரும் ரசிக்கக்கூடியவகையிலான ஒரு திரைப்படத்தை -வழங்க முடிந்தது என்று நான் நம்புகிறேன்.