Breaking
June 6, 2026

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி”

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” – சாய் அபயங்கர் உருவாக்கத்தில், கலாச்சாரமும் நவீன இசையும் கலந்த இசை அனுபவம்!!

நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசைமைத்துள்ளார்.

இந்த பாடலின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்துள்ளது ஸ்ருதிஹாசனின் குரல். அவரது குரல் பாடலுக்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியையும் ஆழமான உணர்ச்சியையும் அளிக்கிறது. மணமகன்–மணமகள் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான ஊடலை மையமாகக் கொண்டு, கேள்வி–பதில் பாணியில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மணமகளின் பதில்கள் ஸ்ருதிஹாசனின் குரலில் இனிமையாக ஒலித்து பாடலுக்கு மேலும் உயிரூட்டுகின்றன.

காதல் வளர வளர, இந்தப் பாடலின் இசையும் பல உணர்வுகளைக் கடக்கிறது. இடையில் ஒரு மயக்க நிலைக்குச் சென்றுவிட்டு, பிறகு கலாச்சாரம் நிறைந்த ஒரு வலிமையான இசைப் பகுதிக்குத் திரும்புகிறது. இந்த இசை மாற்றங்களை ஸ்ருதிஹாசனின் குரல் மேலும் அழகாக இணைக்கிறது.

பாடலின் கவிதைத் தன்மையை உயர்த்தும் வரிகளை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். அவரது வரிகள் கொண்டாட்டத்தின் உணர்வை நுட்பமாகவும் கவிதை நயத்துடனும் வெளிப்படுத்துகின்றன.

மொத்தத்தில், ஸ்ருதிஹாசன் குரலில் ஒலிக்கும் “பவழ மல்லி” பாடல் பாரம்பரியமும் நவீன இசை முயற்சிகளும் இணையும், கலாச்சார மணம் மிக்க வித்தியாசமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது.

Related Post