Breaking
January 11, 2025

Cinema

‘கல்கி 2898 AD’ படத்தில் ‘பைரவா’வாக நடிக்கிறார் பிரபாஸ்.

‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’வாக பிரபாஸ் !!

மகா சிவராத்திரியின் மங்களகரமான நிகழ்வினைக் கொண்டாடும் வகையில், முன்னணி படைப்பாளி நாக் அஸ்வின் இயக்கத்தில், இதிகாச கதையின் அடிப்படையில் உருவாகும் ‘கல்கி 2898 A.D’ படத்திலிருந்து, ஒரு அற்புதமான அப்டேட் ஒன்றை, தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. சமூக ஊடகங்களின் வழியே, தயாரிப்பாளர்கள், சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இப்படத்திலிருந்து, முன்னணி நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தின் பெயரை அறிவித்துள்ளனர். ‘கல்கி 2898 A.D.’ படத்தில் ‘பைரவா’ என்கிற பாத்திரத்தில் நடிக்கிறார் பிரபாஸ். ‘பைரவா’வை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, படக்குழுவினர் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!. படத்திலிருந்து வெளியான அற்புதமான அப்டேட், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ் ரசிகர்கள் இணையம் முழுக்க இந்த செய்தியினைப் பகிர்ந்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியினை சமூக ஊடகங்களில் ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் ‘பைரவா’ படத்தைப் பகிர்ந்து, காசியின் எதிர்கால தெருக்களிலுருந்து, ‘கல்கி 2898 AD’ இன் பைரவா உங்களுக்காக என தெரிவித்துள்ளது படக்குழு.

Prabhas #ki2898ADonMay9”

புகைப்படத்தின் ஒவ்வொரு சிறு அம்சமும் முழுக்க முழுக்க மிரட்டலாக இருக்கிறது. முழுமையான கறுப்பு நிற ஆடையுடன், தலையில் கேப்புடன், தொழிற்சாலை பின்னணியில், பிரபாஸ் அட்டகாசமாக அமர்ந்திருக்கும் தோற்றம், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.

Check it out here:
https://x.com/kalki2898ad/status/1766066282846400865?s=46

சமீபத்தில்தான் நடிகர் பிரபாஸ், நடிகை திஷா பதானி, இயக்குநர் நாக் அஸ்வின் மற்றும் தயாரிப்பாளர் பிரியங்கா தத் ஆகியோர் இப்படத்தின் ஒரு பாடலைப் படமாக்க இத்தாலிக்குச் சென்றிருந்தனர்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படம், ஒரு பன்மொழித் திரைப்படமாக இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. புராணக் கதைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் நடக்கும் சயின்ஸ் பிக்சன் கதையாகும். இப்படம் மே 9, 2024 அன்று பான்-இந்தியாவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!

~தி கேரளா ஸ்டோரி ZEE5 இல் தென்னிந்தியப் பிராந்தியத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகச் சாதனை படைத்துள்ளது தி கேரளா ஸ்டோரி திரைப்படம்~

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம்,
சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை, உலகளவில் டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்கச் சாதனையைச் செய்துள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ஒரு அழுத்தமான படைப்பாக அனைவராலும் பாராட்டைப் பெற்றது. பிப்ரவரி 16 ஆம் தேதி உலகம் முழுக்க டிஜிட்டல் வெளியீடாக வெளியான இப்படம், வெளியான இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களைத் தாண்டியது மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் தென் பகுதியில் குறிப்பாகத் தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகச் சாதனைப் படைத்துள்ளது. விபுல் அம்ருத்லால் ஷாவின் தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கிய இப்படம், கேரளாவில் இளம் இந்துப் பெண்களைத் தீவிரவாதிகளாக ஆக்கி, மதமாற்றம் செய்வதாகக் கூறப்படும் உண்மைச் சம்பவங்களைச் சுற்றி, அமைக்கப்பட்ட அழுத்தமான படைப்பாகும்.

இப்படம் திரையரங்கில் வெளியானபோது, ​​பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது டிஜிட்டல் வெளியீட்டிலும் அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. உலகளாவிய பார்வையாளர்களுக்குச் சிறப்பான படைப்புகளைத் தொடர்ச்சியாக வழங்கி வரும் ZEE5 இன் மகுடத்தில் மற்றொரு கிரீடமாக அமைந்துள்ளது.

நடிகை அடா ஷர்மா கூறுகையில்.., “ZEE5 இல் கேரளா ஸ்டோரி படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் பல சாதனைகளைச் செய்தது, இப்போது OTT யிலும் பல சாதனைகளைச் செய்து வருவது மகிழ்ச்சி. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், பலர் இப்படத்தின் வாயிலாக எங்களுக்கு அவர்களின் இதயத்தில் நிரந்தர இடத்தைத் தந்துள்ளனர். பார்வையாளர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது முறையாகப் படத்தைப் பார்ப்பதாக வரும் செய்திகள், பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொருவரையும் கவரும் அழுத்தமான இப்படத்தினை ZEE5 உலகம் முழுவதும் உள்ள மக்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! “

மிகச் சக்தி வாய்ந்த கதையுடன், நம் சிந்தனையைத் தூண்டி விடும், கேரளா ஸ்டோரி ZEE5 இல் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்று, வரவேற்பைக் குவித்து வருகிறது. வெளியான இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது.

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’

நகுல் நடிக்கும் ‘ தி டார்க் ஹெவன்’ என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டுள்ளனர்.

இந்த ‘தி டார்க் ஹெவன்’
திரைப்படத்தை பாலாஜி இயக்குகிறார்.டீம் B புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது.

ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது.

கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள்
அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள்.
அப்படி ஒரு கொலை நடக்கும் போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார் .அவர் கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார் .அதன் பின்னே ஒளிந்துள்ள மர்மங்களைத் தேடிப் பிடித்து ஆராய்கிறார். கொலைகளில் ஒளிந்துள்ள இருளைக் கண்டு அஞ்சாமல் புலனாய்வு என்கிற விளக்கைக் கொண்டு தீவிரமாகத் தேடுகிறார்.
பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. இப்படி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் செல்கிற கதை தான் தி டார்க் ஹெவன்.இதில் புலனாய்வு செய்பவராக நகுல் நடிக்கிறார்.ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். இவர் கேரளத்து வரவு.
எதிர்பாராத ஒரு பாத்திரத்தில் இலங்கையிலிருந்து ஒரு நடிகர் நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் பெயர் சொல்லும் படியான பாத்திரங்களில் வருகிறார்கள்.

இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்கிறார்.இவர் D3 படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வர். சக்தி பாலாஜி இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே உடன்பால் படத்திற்கு இசையமைத்தவர். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கிறார். இவர் D3, லேபில் படங்களில் பணியாற்றியவர்.

இப்படி பல்வேறு திறமையான இளைஞர்கள் இணைந்துள்ள இந்தப் படம், முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இப்படிப்பட்ட கதைகள் மொழி எல்லையைக் கடந்தவை என்பதால் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.

Malayalam actor Suraj Venjaramoodu teams up with Chiyaan Vikram!

Malayalam industry’s iconic actor Suraj Venjaramoodu debuts in Tamil Cinema with ‘Chiyaan 62’!

Actor Suraj Venjaramoodu has been chosen to portray one of the main roles in ‘Chiyaan 62’. He has received prestigious accolades such as Kerala State Award and the National Award for Best Actor.

The movie caused quite a stir with the news of having top-notch actors such as ‘Chiyaan’ Vikram and S.J. Suriya in the lead roles, under the direction of S. U. Arunkumar. Adding to the anticipation, Malayalam actor Suraj Venjaramoodu has been confirmed to be part of the cast, further heightening the excitement surrounding the film. It is noteworthy that his exceptional acting in acclaimed movies such as ‘Android Kunjappan’, ‘Driving Licence’, ‘Jana Gana Mana’ and ‘The Great Indian Kitchen’ has garnered admiration across the fans from all walks of life. Significantly, the actor is making his Tamil debut through this film ‘Chiyaan 62’, produced by Riya Shibu of H.R. Pictures.

With the charismatic presence of Chiyaan Vikram, the talented S. J. Suryah and the brilliant Suraj Venjaramoodu, the much-anticipated film ‘Chiyaan 62’ has ignited a fervor of excitement among their devoted fans. Having already captivated the hearts of film enthusiasts with their remarkable performances that earned them prestigious National honours, this collaboration has raised the bar of expectations to unprecedented heights.

The makers of the film have confirmed the pre-production is nearing completion, and the film’s shooting will commence from April 2024.

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

‘சீயான் 62’ மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’, ‘டிரைவிங் லைசன்ஸ்’, ‘ஜன கன மன’, ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாக தமிழில் ‘சீயான் 62’ படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

‘சீயான்’ விக்ரம்- எஸ். ஜே. சூர்யா -சுராஜ் வெஞ்சாரமூடு என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த விருது பெற்ற நட்சத்திர கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தமிழ் சினிமா வர்த்தக கையேட்டை இயக்குந‌ர் பாரதிராஜா வெளியிட்டார்

சென்னை, மார்ச் 1, 2024:

திரையுலகில் செயலாற்றி வரும் 250க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தமிழ் திரைப்படத்துறையின் நலனுக்காக பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், தமிழ் சினிமா வர்த்தக கையேடு எனும் தகவல் களஞ்சியத்தை முதல் முறையாக உருவாக்கியுள்ளது.

சாட்டிலைட், டிஜிட்டல், பிற மொழி டப்பிங், வெளிநாட்டு மற்றும் இந்திய திரையரங்கு உரிமைகளை வாங்குவோர்களை தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் எளிதில் சென்றடையும் நோக்கில் இந்த கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கையேட்டின் மூலம் தமிழ் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களைப் பற்றிய தகவல்களை எளிதாக பரப்புவதோடு, தயாரிப்பு செலவுகளை குறைக்க முடியும்.

வெளிப்புற யூனிட் செலவுகள், பல்வேறு நகரங்களில்/வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு கிடைக்கும் மானியம், பிற மொழிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள், மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்த கையேட்டில் இருப்பதால், தயாரிப்பு செலவைக் குறைக்க இது உதவுவதுடன். தயாரிப்பாளர்களின் விழிப்புணர்வுக்காக‌ தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வரவிருக்கும் படங்களின் வெளியீட்டு அட்டவணை, தொழில்துறை தகவல்கள், வெற்றிகரமான திரைப்படங்கள் குறித்த‌ ஆய்வுகள், பழம்பெரும் தயாரிப்பாளர்கள் குறித்த தற்போதைய தகவல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை தாங்கி வருகிறது.

மொத்தத்தில், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை விற்க சரியான ந‌பவர்களை அணுகவும், திரைப்படங்களின் பல்வேறு உரிமைகளை வாங்குபவர்கள் குறித்து தெரிந்துகொள்ளவும் இக்கையேடு உதவும். மாதாந்திர இதழாக அச்சிலும் டிஜிட்டல் வடிவத்திலும் தமிழ் சினிமா வர்த்தக கையேடு வெளியிடப்படும். திரைப்படங்களின் உரிமை குறித்த தகவல்களை தெரிவிக்க, ‘பொது அறிவிப்பு’ விளம்பரங்களை வெளியிடவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்கு விநியோகஸ்தர்கள், ஹிந்தி டப்பிங் உரிமையை வாங்குபவர்கள், பிற மொழி (தெலுங்கு) உரிமைகளை வாங்குபவர்கள், தென்னிந்திய‌ சாட்டிலைட் சேனல்கள், டிஜிட்டல்/OTT தளங்கள், வெளிநாட்டு உரிமைகளை வாங்குபவர்கள், ஆடியோ/இசை நிறுவனங்களுக்கு தமிழ் சினிமா வர்த்தக வழிகாட்டி அனுப்பப்படும். திரைப்பட வணிக சேவைகளை வழங்கும் ஸ்டூடியோக்கள், வெளிப்புற யூனிட்டுகள், டிஐ, வி எஃப் எக்ஸ், டி ஐ டி, க்யூப்/டிஜிட்டல் சேவை, போஸ்ட்‍ புரொடக்ஷன் நிறுவனங்களுக்கும் பிரதிகள் அனுப்பப்படும்.

அதிகாரப்பூர்வ தொழில்துறை சங்கத்திலிருந்து வெளிவரும் பிராந்திய சினிமாவின் முதல் வர்த்தக வழிகாட்டியாக இது இருக்கும். சங்கதிற்கு சொந்தமான இந்தக் கையேடு எந்த தனி நபருக்கும் உரிமையானதல்ல. உறுப்பினரகளுக்கும் பல்வேறு உரிமைகளை வாங்குபவர்களுக்கும் இலவசமாக இது வழங்கப்படும்.

வர்த்தக வழிகாட்டியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான எந்தவொரு ஆலோசனையையும்/கருத்தையும் வரவேற்கிறோம். உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை tfapa2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு எழுதவும்.

தமிழ் சினிமா வர்த்தக வழிகாட்டியை சங்கத்தின் தலைவர் ‘இயக்குந‌ர் இமயம்’ திரு பாரதிராஜா பல முக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களின் முன்னிலையில் வெளியிட்டார்.

‘எனக்கொரு WIFE வேணுமடா’

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் ரிலீசானது

பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியாகிவிட்டது.

செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். இது முழுநீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை ஜியா இயக்கியிருந்தார். இது அவரது இரண்டாவது குறும்படமாகும். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத், எடிட்டிங். மேக்அப், பவித்ரா.

பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்த குறும்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ வெளியாகிவிட்டது. 10 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம், யூடியூபில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் ஆர்யா விருந்தினராக கலந்து கொண்ட ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழா

ஓஎம்ஆரில் திறக்கப்பட்டிருக்கும் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ

ஓ எம் ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க நேரத்தை ஒதுக்கி வருகிறார்கள். அதிலும் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் தாங்கள் பணியாற்றும் அல்லது
தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தங்களை உடல் ஆரோக்கியத்திற்கான உடற்பயிற்சிகளை செய்வதில் பெருவிருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் இருக்கும் ஓஎம்ஆர் சாலையில் சர்வதேச தரத்துடன் கூடிய ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் ஜிம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதன் திறப்பு விழாவில் காவல்துறை கண்காணிப்பாளர் (பொருளாதார குற்றப்பிரிவு) திரு கே. ஜோஸ் தங்கய்யா, தாம்பரம் மாநகர காவல் துறையின் உதவி ஆணையர் திரு ஆர். ரியாசுதீன், நீலாங்கரை சரக காவல்துறை உதவி ஆணையர் திரு. பரத்,
சென்னை தெற்கு குற்றவியல் குழு காவல் ஆய்வாளர் திரு எஸ். மீனாட்சி சுந்தரம்,உதவி காவல் ஆய்வாளர் திரு. ரஞ்சித்
ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் திரைத்துறையைச் சார்ந்த நட்சத்திர நடிகர்கள் ஆர்யா, ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும்,
சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ், ‘சீயான்’ விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த உடற்பற்சிகூடத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்களுக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அதிவேக இன்டர்நெட் வசதியுடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளது
மேலும் ஐஸ்பாத், ஸ்டீம்பத் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த ஜிம்ல் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் உட்கட்டமைப்பை துபாயில் பல ஆண்டுகளாக இன்டீரியர் டிசைனிங் நிபுணராக பணியாற்றி மற்றும் சென்னையில் உள்ள நியாம் ஸ்டுடியோவின் உரிமையாளருமான நிவேதிதா
மோகனின் வழிகாட்டலுடன் பிரம்மாண்டமான பொருட்செலவில் சர்வதேச தரத்துடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இங்கு பயிற்சிக்காக பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து உபகரணங்களும் ஸ்பெயின் நாட்டிலிருந்து வெல்கேர் நிறுவ.னத்தின் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட உலகத்தரம் வாய்ந்த உபகரணங்கள் ஆகும்

இந்த ஜிம்மில் பிரத்யேக உடற்பயிற்சியுடன், உங்கள் தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சியும் வழங்கப்படுகிறது. உங்களது விருப்பத்திற்குரிய பொலிவான தோற்றத்தை பெறுவதற்கான உடற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

உடற்பயிற்சியுடன் உங்களது உடல்வாகுக்கு ஏற்ற அளவிலான உணவு பட்டியல், ஊட்டச்சத்து பட்டியல் ஆகியவற்றுக்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

இதனுடன் ஆணழகனுக்கான பயிற்சி, ,பெண்களுக்கான பியூட்டி பேஜென்ட், திருமணமாக இருப்பவர்களுக்கான மேக்ஓவர் பயிற்சி, ஆண்களுக்கான உடல் உறுதி பயிற்சி, தசை வலிமைக்கான பயிற்சி என பிரத்யேக பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

சந்தானம் நடிக்கும் புதிய படமான இங்க நான் தான் கிங்கு’

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில்

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

‘இங்க நான் தான் கிங்கு’ என்ற இப்படத்தின் தலைப்பையும் முதல் பார்வை போஸ்டரையும் உலகநாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார்.

அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – ஓம் நாராயண் எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ் ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்.

பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் – பாபா பாஸ்கர்.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை உலகநாயகன் கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.

கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கிறார். 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.



இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் ‘சத்தியமங்கலா’

ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர்யன் இயக்கத்தில் இந்தியா, பாங்காக், இலங்கை மற்றும் நேபாளத்தில் உருவாகும் பான்-இந்தியா சாகச திரில்லர் திரைப்படம் ‘சத்தியமங்கலா’

உலகின் அதிவேக ஆவணப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவரும் குறும்படத்திற்காக‌ சர்வதேச விருதுகளை வென்றவருமான‌ ஆர்யன், ‘சத்தியமங்கலா’ என்ற பான்-இந்தியா திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன் மற்றும் அயிரா புரொடக்‌ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் ஷசிரேகா நாயுடு தயாரிக்கின்றனர்.

‘கோலி சோடா’ புகழ் முனிகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் ‘சத்தியமங்கலா’ படத்தில் கதாநாயகியாக கனக் பாண்டே நடிக்கிறார். தி கிரேட் காளி (WWE உலக சாம்பியன்), பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ராதா ரவி, சரிதா, ரவி காலே, ரெடின் கிங்ஸ்லி, ‘பாகுபலி’ பிரபாகர், விஜய் சிந்தூர், மனேதேஷ் ஹிராமத் மற்றும் சஞ்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படம் பற்றி இயக்குந‌ர் ஆர்யன் பேசுகையில், “காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான சாகச திரில்லராக ‘சத்தியமங்கலா’ உருவாகி வருகிறது. இப்படத்தில் தான் ஏற்றிருக்கும் மிகவும் சவாலான பாத்திரத்திற்காக முனிகிருஷ்ணாவின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு அசாத்தியமானது. இதர‌ நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப‌ குழுவினரும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாங்காக், நேபாளம் போன்ற இடங்களில் 32 நாட்களில் முதல் கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். இலங்கை, பாங்காக், நேபாளம், தமிழ்நாடு, கர்நாடக வனம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரண்டாவது கட்டம் படமாக்கப்படுகிறது. மிகவும் சிறப்பாக இப்படம் உருவாகி வருகிறது,” என்றார்.

ஆர்யன் மேலும் கூறியதாவது: “இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களான ஏஎஸ்ஏ புரொடக்ஷன் மற்றும் ஐரா நிறுவனங்களுக்கு நன்றி. இந்த படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பரபரப்பான திரில் அனுபவமாக இருக்கும்.”

‘சத்தியமங்கலா’ படத்திற்கு ஷங்கர் ஆராத்யா ஒளிப்பதிவு செய்ய‌, வீர் சமர்த் இசையமைக்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கையாள்கிறார். ஸ்டீபன் எம் ஜோசப் வசனங்களை எழுத‌, சின்னி பிரகாஷ் நடன வடிவமைப்பை கவனிக்க‌, பீட்டர் ஹியன் சண்டைப் பயிற்சியை வழங்குகிறார்.

ஏஎஸ்ஏ புரொடக்‌ஷன் மற்றும் அயிரா புரொடக்‌ஷன்ஸ் பேனர்களில் ஷங்கர் பி மற்றும் சசிரேகா நாயுடு தயாரிக்க, முனிகிருஷ்ணா, கனக் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கம் ஆர்யன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சத்தியமங்கலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.