Cinema

“யாஷிகா ஆனந்த்” நடிக்கும் “டாஸ்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது…

பிளாக் டைமண்ட் ஸ்டுடியோ சார்பில் சையத் ஜாஃபர் தயாரிப்பில், சகு பாண்டியன் இயக்கத்தில் ரத்தன் மௌலி, யாஷிகா ஆனந்த், விஜய் டிவி புகழ் யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘டாஸ்’ (TOSS). இந்த படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா படக்குழுவினர் கலந்து கொள்ள கோவில்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த பூஜை மற்றும் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் திரு. கடம்பூர் C ராஜூ MLA அவர்கள் கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

படத்தை பற்றி இயக்குனர் சகு பாண்டியன் கூறியதாவது: மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அந்த கொலைகளின் பின்னணி என்ன? யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் இருந்து வந்திருக்கும் தேஜா ஸ்ரீ இன்னொரு நாயகியாக நடிக்கிறார். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த ஊர் மக்களின் ஆதரவும், அன்பும் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி MLA-வுமான திரு.கடம்பூர் C ராஜூ அவர்கள் பூஜைக்கு வந்திருந்து எங்கள் குழுவை வாழ்த்தியதோடு, படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். TOSS என்ற தலைப்பே எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது எனவும் எங்களை பாராட்டினார்.

படக்குழுவினர் விபரம்:
நடிகர்கள்:

ரத்தன் மௌலி,
யாஷிகா ஆனந்த்,
விஜய் டிவி புகழ் யோகி, ஷன்னா
தேஜா ஸ்ரீ,
சஞ்சய் ஷங்கர் & மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:

இயக்குனர் – சகு பாண்டியன்,
தயாரிப்பு – சையத் ஜாஃபர்,
இசை – சாந்தன் அனிபஜகனே,
ஒளிப்பதிவு – தர்மதுரை,
படத்தொகுப்பு – வளர்பாண்டி,
பாடல்கள் – நலங்கிள்ளி,
ஸ்டண்ட்ஸ் – ஜேசுதாஸ்,
துணை இயக்குனர் -A. வரதராஜ். நித்யானந்தம்,
நிர்வாக தயாரிப்பு – A. சுந்தரமூர்த்தி,
புரொடக்‌ஷன் எக்சிகியூட்டிவ் – KR வெங்கடாசலம்,
மக்கள் தொடர்பு – ஷேக்.

விரைவில் படப்பிடிப்பை முடித்து விட்டு 2025 இறுதியில் அல்லது 2026 துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! !

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!.

இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்.

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா: சேப்டர் 1, இந்த வருடத்தின் மிக எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். இது ஒரு பான்-இந்தியா திரைப்படமாக பரவலாக பேசப்படுகின்றது, இப்படம் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்கள் படத்திற்காக பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அவர்களை மகிழ்விக்கும் விதமாக டிரெய்லர் தற்போது வெளிவந்துவிட்டது.

இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரெய்லரை முன்னனி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன்
தனது டிவிட்டர் பக்கத்தில் டிரெய்லரை பகிர்ந்து…

ஒரு நாட்டுப்புறக் கதையும், நம்பிக்கையின் பேரொளியும் – தீவும் வேகமும் சங்கமிக்கும் அற்புதம்.

KantaraChapter1 தமிழ் டிரைலரை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன்

சினிமா ரசிகர்களுக்கு இயற்கையோடு இணைந்த தனித்துவமான அனுபவம்.

@shetty_rishab, @rukminitweets மற்றும் @hombalefilms குழுவிற்கு மிகப்பெரிய வெற்றிக்காக வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.

டிரெய்லரில் திரைப்படம் பற்றிய பல விஷயங்களை தெரியப்படுத்தவில்லை, ஆனால் அதில் ஒரு விதமான மர்மம் மற்றும் சுவாரஸ்யமும் கலந்துள்ளது. முந்தைய படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் கதை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

காந்தாரா: சேப்டர் 1 ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாகும். இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவாளர் அரவிந்த் காஷ்யப், தயாரிப்பு வடிவமைப்பாளர் வினேஷ் பங்க்லன் ஆகியோரின் கலைநயமான திறமையில் திரைப்படத்தின் காட்சி மற்றும் உணர்ச்சி அனுபவம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

ஹொம்பாலே பிலிம்ஸ் முன்னெடுப்பில் 2022 படத்தின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் காந்தாரா: சேப்டர் 1-ல் ஒரு மிகப்பெரிய போர் காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்கள், 500க்கும் மேற்பட்ட திறமையான போர் கலைஞர்கள் மற்றும் 3,000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த காட்சி 25 ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு நகரில் 45–50 நாட்களுக்கு படமாக்கப்பட்டது. இது இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்றாகும்.

இப்படம் அக்டோபர் 2 அன்று உலகளாவிய வெளியீடாக, கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலத்தில் என, அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவரும் முயற்சியுடன் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

காந்தாரா: சேப்டர் 1 மூலம் ஹொம்பாலே பிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்துகிறது, பாரம்பரியக் கதை, நம்பிக்கை மற்றும் கலைப்பூர்வமான அனுபவங்களை கொண்டுவரும் ஒரு ஆழமான காட்சி அனுபவத்தை இப்படத்தில் வழங்கவுள்ளது.

link : https://www.youtube.com/watch?v=gKJMgeEvSyE

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக்

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் Production No.5 திரைப்படமான இப்படம் மிகப் பிரமாண்டமான பொருட்ச் செலவில் தயாரிக்கப்படுகிறது.

மேலும், இதற்கு முன்னதாக பிரபுதேவா – வடிவேலு – யுவன் சங்கர் ராஜா கூட்டணியை அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்த விரிவான அறிவிப்புகள் – கதாநாயகி, முக்கிய நடிகர்கள் பட்டியல், தொழில்நுட்பக் குழுவின் முழுமையான விவரங்கள் மற்றும் கதை தொடர்பான சுவாரஸ்யங்கள் – விரைவில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது

“காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார்.

2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உருவாகியுள்ளது.

காந்தாரா சேப்டர் 1 உலகளாவிய அளவில் 2 அக்டோபர் 2025 அன்று, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழுவில்

இயக்கம் திரைக்கதை – ரிஷப் ஷெட்டி
தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர் (ஹொம்பாலே பிலிம்ஸ்)
ஒளிப்பதிவாளர் – அரவிந்த் S காஷ்யப்
இசையமைப்பாளர் – B. அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதால், தமிழ் ரசிகர்களுக்கு ஒரு பிரமாண்டமான டிரைலர் வெளியீட்டை எதிர்பார்க்கலாம். கன்னட திரையுலகை உலக அரங்கில் கொண்டு செல்வதில் ஹொம்பாலே பிலிம்ஸ் எடுத்து வைக்கும் மற்றொரு முக்கியமான அடையாளமாக இது திகழ்கிறது.

இயற்கையின் கோபமும், அடக்க முடியாத ஆற்றலும் இணையும் இந்த மாபெரும் படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டை 22 செப்டம்பர் அன்று காணத்தவறாதீர்கள்!

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம்

தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது

தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். ஷேன் நிகம், சாந்தனு, சாய் அபயங்கர், உன்னி ஆகியோர் மிகவும் திறமையானவர்கள். அனைவரும் இப்படத்தை வெற்றிப் படமாக ஆக்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் பேசும்போது,

இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. இப்படம் என்னுடைய கனவை நனவாகியிருக்கிறது. சாய் அபயங்கரை விட இந்த கதாபாத்திரத்தை சிறப்பாக யாரும் செய்திருக்க முடியாது. உதயன் பாத்திரம் ஷேன் நிகம் செய்திருக்கிறார். சாந்தனு அவருடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியிருக்கிறார். செல்வராகவன் கதாபாத்திரம் பயங்கரமாக இருக்கும். நான் செல்வராகவன் சாருடைய ரசிகன். இந்த பூமி கோளில் இவர் தான் மிகவும் சிறந்த மனிதர். உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசும்போது,

முதன்முதலாக உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். நன்றாக வந்திருக்கிறது. இப்படத்திற்காக இசையமைத்ததில் மகிழ்ச்சி. இன்னும் நிறைய நல்ல வாய்ப்பு வரும் என்று நம்புகிறேன். அனைவரையும் பார்க்கும் போது கதாபாத்திரங்களாகவே தோன்றுகிறது என்றார்.

இயக்குனர் உன்னி சிவலிங்கம் பேசும்போது,

இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. மலையாளத்தில் எடுத்தாலும் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருக்கிறோம். நான் மலையாளி, என்னையும் இப்படத்தையும் 60 சதவிகிதம் மலையாளம் 40 சதவிகிதம் தமிழ் படமாக மலையாளத்தில் இருக்கும். தமிழ் மொழியில் மாறி வரும். அதிரடியாக படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது விளையாட்டு தளமாக இருந்தால் ஆர்வமாக இருக்கும் என்று விளையாட்டை மையப்படுத்தி இயக்கியிருக்கிறேன்.

கச்சிசேரா ஆல்பத்தை பார்த்து தான் சாய்யை முடிவு செய்தேன். இன்று வரை என்னுடன் இருந்து பக்கபலமாக சாய் இருக்கிறார். ஷேன் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.

சாந்தனு அண்ணனிடம் கதை கூறினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. அவருடன் 25 நாள் தான் படப்பிடிப்பு எடுத்தோம். ஆனால், அவருடன் நிறைய கருத்து வேறுபாடுகள் வந்து சென்றாலும் படத்திற்காக நன்றாக உழைத்திருக்கிறோம்.

ப்ரீதியிடம் அயோத்தி படம் போன்று இப்படத்தில் அழுது கொண்டே இருக்க வேண்டாம், வசனங்கள் பேச வேண்டும் என்றேன். எனக்கு மலையாளம் தெரியாது என்றார். இங்கு பலருக்கு மலையாளம் தெரியாது என்று கூறினேன். வசனங்களை இடையில் மாற்றினாலும் பயிற்சி எடுத்து சிறப்பாக பணியாற்றினார்.

என்னுடைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் என்னை 6வது புதிய இயக்குனராக அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனக்கு ஏதாவது கற்பனையாக வந்தால் நான் அவரிடம் தான் ஆலோசிப்பேன்.

பல்டியில் பல புதிய ஆக்ஷன் ட்ரிக் காட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறோம். அதிலும் கபடியில் அதை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து செய்தோம். அல்போன்ஸ் அண்ணாவும் இப்படத்தில் இருக்கிறார். பல தமிழ் கலைஞர்கள் இப்படத்தில் இருப்பதால் டப்பிங்கிற்கு தனிகவனம் செலுத்தியிருக்கிறோம். இப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

நடிகை ப்ரீதி பேசும்போது,

என்னுடைய முதல் படம் அயோத்தி-யில் இருந்தே உங்களுடைய ஆதரவு எனக்கு கிடைத்திருக்கிறது. இன்று என்னுடைய கிஸ் படம் வெளியாகியிருக்கிறது. மலையாளத்தில் எனக்கு இது முதல் படம். ஆனால், தமிழ் படமும் சென்னையும் என்னுடைய தாய் வீடு போன்ற உணர்வு வரும். தயாரிப்பாளர் இறுக்கமாக இல்லாமல் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். உன்னி சேட்டா இயக்குனர் என்பதை விட இப்படத்தின் மூலம் அண்ணனாகிவிட்டார். இதற்கு முன்பு நான் நடித்த படங்களைவிட இப்படம் மிகவும் புத்துணர்ச்சியோடும், வித்தியாசமாகவும் இருக்கும். செல்வராகவன் சார், பூர்ணிமா மேடம் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். முதல் படம் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். அதுபோல, எனக்கு பல்டி படம் அமையும். அதேபோல், ஜாலக்காரி பாடல் எனக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி. எங்கு சென்றாலும் என்னை ஜாலக்காரி என்று தான் அழைக்கிறார்கள்.

பார்டரில் நடக்கும் கதை. ஆனால் அனைவரையும் கவரும் படமாக இருக்கும். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் சாந்தனு பேசும்போது,

ப்ளு ஸ்டார் சந்திப்பிற்கு பிறகு இப்போது தான் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். என்னுடைய முதல் படம் ஆரம்பித்து இன்றுவரை நீங்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள். நடிகரோ, தொழில்நுட்ப கலைஞர்களோ எந்தளவிற்கு கடினமாக உழைக்கிறார்களோ அந்தளவிற்கு அவர்களுக்கு நீங்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறீர்கள்.

நான் சாந்தனு பாக்யராஜ் ஆகத்தான் அறிமுகமானேன். ஆனால், இன்று 15 வருடங்களுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் இணைந்திருக்கிறேன். உன்னியின் நண்பர் தேவ் என்னை இப்படத்திற்காக பரிந்துரை செய்திருக்கிறார். உடனே உன்னி மற்றும் தயாரிப்பாளர்கள் என்னை அழைத்து கதை கூறி வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு பாவக்கதைகள், தங்கம் எனக்கு கிடைத்தது. திரையரங்கில் வெற்றியடைந்த படமாக ப்ளு ஸ்டார் அமைந்தது.

பல்டி 4 பசங்களை கொண்ட கதை. ஷேனுக்கு சமமாக மலையாளத்திலோ, தமிழில் மற்றவர்களையோ கூட தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட கதையில் எனக்கு அற்புதமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. இப்படம் மலையாளத்தில் ரீஎண்ட்ரியாக இருக்கும். மலையாளம் தெரியுமா என்று கேட்டதும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று தெரியும் என்று கூறினேன். பிறகு நான் நடித்துவிடுவேன் ஆனால், வசனங்கள் கொஞ்சம் சிரமம் என்று கூறினேன். 1 மாதம் ஆன்லைன் டீச்சர் வைத்து பயிற்சி கொடுத்தார்கள்.

கபடி குழுவில் ஒருவர் காணாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை இப்படத்தில் கூறியிருக்கிறார்கள். 3 மாதங்கள் கபடி பயிற்சி எடுத்து நடித்தோம்.

செல்வராகவன் சாருக்கு ரசிகனாக இல்லாமல் யாரும் இருக்க முடியாது. அவரிடம் அவருடைய படங்கள் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அல்போன்ஸ் சாரிடம் பிரேமம் பற்றி பேசினேன். ப்ரீதியை அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். அப்பா எப்போதும் மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்பார். ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன். திருவிழா காட்சியில் தோன்றும்போது வேறு மாதிரி இருப்பார். நாமும் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்.

சாய்க்கு முதல் மலையாளப் படம், சந்தோஷமாக இருக்கிறது. நம்மை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள். இப்படம் பிடித்திருந்தால் அனைவரும் ஆதரவு கொடுங்கள்.

மலையாளத்தில் நான் தான் டப்பிங் பேசினேன். 3 நாட்களில் பேசி முடித்தேன். ஆனால், 3 நாட்களில் முடித்துவிட்டோம் என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால், மறுபடியும் கேரளாவிற்கு அழைத்து இந்த ஒரு காட்சிதான் என்று கூறி முழு வசனங்களையும் பேசவைத்தார் தமிழ் படத்தில் உதடு அசைவுகளுக்கு ஏற்ப டப்பிங் பேச வேண்டும். அது சிறிதும் மாறாத அளவிற்கு பாலா சார் பணியாற்றியிருக்கிறார்.

நடிகர் ஷேன் நிகம் பேசும்போது,

பல்டி ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா. 4 பசங்க, அவர்களுடைய கபடி குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை. பினு சேட்டா, சந்தோஷ் சேட்டாவிற்கு நன்றி. செல்வராகவன் சாருக்கு நான் மிகப் பெரிய ரசிகன் அவருடைய புதுப்பேட்டை படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.

சாந்தனு மாதிரி ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது அரிது. சாய் நன்றாக இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி. ப்ரீதிக்கு நன்றி மற்றும் இப்படக் குழு அனைவருக்கும் நன்றி.

இப்படம் பிடித்திருந்தால் ஆதரவு கொடுங்கள் என்றார்.

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் டீசர்

ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.

சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் இந்த க்ரைம் திரில்லர் படத்தின் டீசர், ஆக்சன் கிங் அர்ஜூனின் ஆக்சன் விஸ்வரூபத்தையும், மென்மையான ஐஸ்வர்யா ராஜேஷின் மர்மமிகு பாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்துவதோடு, ஒரு விசாரணையை பரபர காட்சிகளுடன், விறுவிறுப்பான திரில்லராக காட்டி, படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. வெளியான வேகத்தில் இந்த டீசர் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, பி எல் தேனப்பன், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்முதலாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

தற்போது டீசர் பெரும். வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், படத்தை திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. விரைவில் இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல்

~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் பார்வையாளர்கள் ரசிக்கும்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படம் கேரளாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற வளைவை மையமாகக் கொண்டது. சுமதி வளவு எனப்படும் அந்த வளைவில், சுமதி என்ற இளம் பெண் துயரமான முறையில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, அது பீதியூட்டும் இடமாகப் பேசப்பட்டு வருகிறது. அந்த வளைவைக் கடக்கும் ஒவ்வொருவரும் விசித்திரமான அதீத அனுபவங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த வளைவில் நேரிடும் அமானுஷ்ய சம்பவங்கள் பலரின் வாழ்க்கையை மாற்றி விடும் விதத்தில், புராணமும் நிஜமும், துயரமும் பயமும், கடந்தகாலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று கலந்த கதையாக இது நகர்கிறது.

இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் கூறியதாவது..,
“சுமதி வளவு கேரளா மக்களின் வாழ்க்கை கதைகளிலிருந்து வந்தாலும், இது நவீன பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயத்தைத் தாண்டி, துயர சம்பவங்கள் நினைவில் விட்டுச்செல்லும் மனித உணர்ச்சிகளையும் இப்படம் வெளிப்படுத்துகிறது. நினைவு, புராணம் மற்றும் மர்மம் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாட்டை இந்தப் படம் காட்டுகிறது. ZEE5 மூலமாக உலகெங்கும் பார்வையாளர்களிடம் இப்படம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.”

நடிகர் அர்ஜுன் அசோகன் கூறியதாவது..,
“இந்த படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அமானுஷ்ய சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் இணைத்துக் காட்டுகிறது. பீதியூட்டும் அந்த வளைவில் சிக்கிக் கொள்கிற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. பயம், பலவீனம், தைரியம் ஆகியவற்றை ஒரு வித்தியாசமான முறையில் ஆராய முடிந்தது. சுமதி வளைவு பல மொழிகளில் ZEE5-இல் வெளிவருவது எனக்குப் பெருமை தருகிறது.”

நடிகை மாளவிகா மனோஜ் கூறியதாவது..,
“சுமதி வளவு கேரளாவின் கலாச்சார வேர் கொண்டதோடு, அதில் நிறைய மர்மமும் சஸ்பென்ஸும் நிரம்பியுள்ளது. இப்படத்தில் ஒரு திறமையான நட்சத்திரக் குழுவுடன் பணிபுரிந்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. மர்மம், உணர்ச்சி, திகில் ஆகியவற்றை ஒருங்கே இணைக்கும் இந்தப் படம் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். ZEE5-இல் படம் வெளியாகும் தருணத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

ரசிகர்களே அற்புதமான ஹாரர் அனுபவத்தை, தவற விடாதீர்கள். சுமதி வளவு – உலக டிஜிட்டல் பிரீமியர், செப்டம்பர் 26 முதல், ZEE5-இல் மட்டும் – மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்ரீமிங்காகிறது.

“படையாண்ட மாவீரா” திரைவிமர்சனம்

மறைந்த முன்னாள் எம்எல்ஏவான காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து கற்பனையும் கலந்து புனையப்பட்ட கதைதான் படை ஆண்ட மாவீரா .
உண்மையில் அவர் மீது சுமத்தப்பட்ட சாதிய ரீதியான தாக்குதல்களையும் குண்டர் சட்டத்தையும் அவர் மீது தவறான குற்றங்களை முளைத்து அவர் மக்கள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்காக சாதி பாகுபாடு இன்றி எவ்வாறு போராடினார் என்ற விஷயத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் வா கௌதமன் இந்த திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கி அவரே காடுவெட்டி குருவாகவும் நடித்திருக்கிறார்.
காடுவெட்டி குருவின் அடையாளம் மாவீரன் என்னும் அடைமொழி தான் அந்த மாவீரன் எனும் கதாபாத்திரத்தில் ஏற்ப கௌதமன் தன் கதாபாத்திரத்தில் நிலைத்து நிற்கிறார் அவர் எந்தப் பின்னணியில் அரசியலுக்கு வந்தார் அவர் குடும்பப் பின்னணி என்ன என்பதை மிகவும் அழகாகவும் ரசிக்க முடியும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் ஆரம்பித்த காலகட்டத்தில் இது ஒரு சாதிய ரீதியான படம் என்று பல்வேறு பிரச்சனைகள் இருந்தது இந்த படத்திற்கு இது இசை அமைத்த இசையமைப்பாளரை வேறு சில சமூகத்தினர் மிரட்டியதாகவும் தகவல் வந்தது இதை அவரே மேடையிலும் ஒப்புக் கொண்டுள்ளார் ஆனால் இந்த திரைப்படத்தை பார்க்கும் போது இந்த படத்தில் எந்தவித சாதிய கட்டமைப்பும் இல்லாமல் ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனையை தெளிவாக எடுத்து காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு எந்த விதமான ஒரு சர்ச்சையும் இன்றி இயக்கியிருக்கிறார் .
இந்த படத்தில் குருவின் தந்தையாக சமுத்திரகனி சிறு வயது காடுவெட்டி குருவாக அவரது மகனே தமிழ் கௌதமன் மற்றும் ஆடுகளம் நரேன் தாயாக சரண்யா பொன்வண்ணன் மன்சூரலிகான் இளவரசு மற்றும் பல நடித்திருக்கிறார்கள் படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் ஒளிப்பதிவு படமாக்கப்பட்ட இடங்களும்தான்.
படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாசம் பின்னணி இசை திறம்பட கையாண்டு இருக்கிறார்கள்

படையாண்ட மாவீரர
காடுவெட்டி மறு வாழ்க்கையே நிச்சயம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் என்று களம் இறங்கி அதில் ஜெயித்தும் இருக்கிறார்கள் பட குழுவினர்

ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது கர்ஜனை நாளை தொடங்குகிறது – விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகத்தான எபிக் எண்டர்டெயினர் “விருஷபா” உங்களை மயக்க தயாராகிவிட்டது. இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் லாலேட்டன் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், தீவிரமான டிராமா, கண்கவர் காட்சிகள், மறக்க முடியாத சினிமா அனுபவம் மற்றும் இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது.

படக்குழு நாளை விருஷபா பயணத்தின் அடுத்த பெரிய படி முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், சிறப்பு காட்சிகள், வித்தியாசமான கூட்டணிகள், மேலும் விருஷபா உலகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டதாவது..,“காத்திருப்பு முடிந்தது. கர்ஜனை நாளை தொடங்குகிறது! விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்.”

நந்த கிஷோர் எழுதி இயக்கியுள்ள விருஷபா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ளது. கனெக்ட் மீடியா மற்றும் பலாஜி டெலிஃபிலிம்ஸ் இணைந்து அபிஷேக் வியாஸ் ஸ்டுடியோஸ் உடன் வழங்கும் இந்தப் படம், அதிரடி, புராணா கதை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த பெரும் காட்சிப்படையாக உருவாகிறது.

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம், இந்தி மற்றும் கன்னடத்திலும் வெளியாகவுள்ளது. இது உண்மையான பான்-இந்திய படைப்பாக ரசிகர்களை மயக்கவுள்ளது.

இந்தப்படத்தை ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK. பத்மகுமார், வருண் மாதூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி மற்றும் ஜுஹி பாரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

அசத்தும் காட்சிகள், பரந்து விரிந்த அளவிலான யுத்தக் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான டிராமா மற்றும் மோகன்லால் தலைமையிலான சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளுடன், “விருஷபா”, இந்திய சினிமாவில் புதிய அளவுகோலை அமைத்து, மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக வரலாற்றில் இடம்பிடிக்கத் தயாராகிவிட்டது.

ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது கர்ஜனை நாளை தொடங்குகிறது – விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்!

ரசிகர்களின் காத்திருப்பு முடிந்தது கர்ஜனை நாளை தொடங்குகிறது – விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்!

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகத்தான எபிக் எண்டர்டெயினர் “விருஷபா” உங்களை மயக்க தயாராகிவிட்டது. இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் லாலேட்டன் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், தீவிரமான டிராமா, கண்கவர் காட்சிகள், மறக்க முடியாத சினிமா அனுபவம் மற்றும் இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது.

படக்குழு நாளை விருஷபா பயணத்தின் அடுத்த பெரிய படி முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், சிறப்பு காட்சிகள், வித்தியாசமான கூட்டணிகள், மேலும் விருஷபா உலகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டதாவது..,“காத்திருப்பு முடிந்தது. கர்ஜனை நாளை தொடங்குகிறது! விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்.”

நந்த கிஷோர் எழுதி இயக்கியுள்ள விருஷபா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ளது. கனெக்ட் மீடியா மற்றும் பலாஜி டெலிஃபிலிம்ஸ் இணைந்து அபிஷேக் வியாஸ் ஸ்டுடியோஸ் உடன் வழங்கும் இந்தப் படம், அதிரடி, புராணா கதை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த பெரும் காட்சிப்படையாக உருவாகிறது.

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம், இந்தி மற்றும் கன்னடத்திலும் வெளியாகவுள்ளது. இது உண்மையான பான்-இந்திய படைப்பாக ரசிகர்களை மயக்கவுள்ளது.

இந்தப்படத்தை ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK. பத்மகுமார், வருண் மாதூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி மற்றும் ஜுஹி பாரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

அசத்தும் காட்சிகள், பரந்து விரிந்த அளவிலான யுத்தக் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான டிராமா மற்றும் மோகன்லால் தலைமையிலான சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளுடன், “விருஷபா”, இந்திய சினிமாவில் புதிய அளவுகோலை அமைத்து, மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக வரலாற்றில் இடம்பிடிக்கத் தயாராகிவிட்டது.