காளகம்மாய் பட்டி என்னும் கிராமத்தில் ஒரு எரிகல் விழுந்து இரண்டாகப் பிரிந்து இரண்டு பக்கமும் விழுகிறது. அந்த ஊரில் உள்ள மக்கள் தங்கள் ஊர் பக்கம் உள்ள கல்லை இருவரும் தனித்தனியாக கடவுளாக கும்பிடுகிறார்கள். அதுவரை ஒற்றுமையாக இருந்த அந்த ஊர் பிரிகிறது. அவ்வாறு அந்த ஊர் காளப்பட்டி என்றும் கம்மாபட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
காலப்போக்கில் அவர்களது அந்த பிரிவு மிகப்பெரிய சண்டையாக மாறுகிறது பல வருடங்கள் கழித்து அந்த ஊரில் உள்ள மக்களை ஒன்று சேர்க்க போராடும் மனிதராக காளி வெங்கட் அந்தப் போராட்டத்தில் அவர் தோல்வி அடைந்து ஒரு கட்டத்தில் மரணம் அடைகிறார். அவரது உடலை தூக்க அந்த ஊர் மக்கள் முயற்சிக்கும் பொழுது முடியாமல் போக ,படத்தின் நாயகன் அர்ஜுன் தாஸ் தன்னந்தனியாக அவரை தூக்கிக் கொண்டு செல்கிறார் மேலும் அவரது உடலில் இருந்து காற்று வெளியேற அவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்புகிறார் அர்ஜுன் தாஸ் .
ஆனால் அந்த ஊரில் உள்ள ஒரு வயதான அம்மாவோ அது மனித உடலில் உள்ள வாயு அது இறந்த பிறகு வெளியேறும் என்று கூற, ஆனாலும் மக்கள் அனைவரும் அந்த காளிவெங்கட்டின் மேல் சாமி வந்திருப்பதாக நம்புகிறார்கள்.அந்த புரளியை வைத்துக்கொண்டு அது உண்மையா இல்லையா என்று புரியாமல் குழம்ப ஆனாலும் அந்த உடம்பை தூக்க முடியாமல் இருக்க அர்ஜுன் தாஸ் மட்டும் தூக்க, அர்ஜுன் தாஸ் தான் அந்த சாமியின் மறு அவதாரம் என்று நம்பி அவர் மட்டும்தான் காளிவெங்கட்டின் தூக்கி அடக்கம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். இதில் அர்ஜுன் தாஸ் அவரது குலத்தொழிலாக மாட்டிற்கு லாடம் மற்றும் வேலையை செய்து ஒதுக்கப்பட்டவராக இருக்கிறார்,இப்போது ஊரே அவரை கடவுளாக பார்க்கிறது இந்த சூழ்நிலையில் காளிவெங்கட்டின் உடலை அடக்கம் செய்கிறார்களா இரண்டு ஊர் மக்களும் ஒன்று சேர்கிறார்களா என்பது தான் படத்தின் திரைக்கதை.
இயக்குனர் விஷால் வெங்கட்டிற்கு இது இரண்டாம் திரைப்படம் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து ஒரு வித்தியாசமான கதைகளத்தில், காலகட்டத்தில் நடப்பது போல் காட்டியிருக்கிறார். தனது திரைக்கதையை தெளிவாக எழுதி இருக்கிறார், படம் ஆரம்பித்து ரொம்ப நேரத்திற்கு கதை ஒரே இடத்தில் இருப்பது போல் இருந்தாலும் இடைவேளைக்கு சற்று முன் ஒரு விறுவிறுப்பாக வித்தியாசமான கதைகளை காட்டி நிமிர வைக்கிறார் இயக்குனர், அதன் பிறகு அந்த போக்கிலேயே படமும் செல்கிறது அது படத்திற்கு நிச்சயம் போரடிக்காமல் செல்ல உதவுகிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் காலி வெங்கட், அர்ஜுன் தாசின் நடிப்பு காளி வெங்கட் பிணமாக அவ்வபோது தனது உடலில் இருந்தும் காற்றுக்கு அந்த உடல் அசைவை கொடுப்பதும் அந்த முகபாவணையை சிறப்பாக வைத்துக் கொண்டு பிணமாக நடிப்பதும் ரசிக்கும் படியாகவும் காமெடியாக உள்ளது.
அர்ஜுன் தாசின் நடிப்பு அளவாக அந்த கதாபாத்திரத்தில் எண்ண தேவையோ எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது மேலும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வரும் கதாபாத்திரங்களை சிறப்புடன் செய்து இருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை இயக்குனர் விஷால் வெங்கட் ஒரு தெளிவான திரைக்கதையில் இந்த பாம் திரைப்படத்தை இயக்கிஇருக்கிறார்.
பாம் திரைப்படம் கடவுள் நம்பிக்கை இருப்பவனுக்கு கடவுள் இருக்கு, இல்லாதவனுக்கு இல்லை என்பதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக எடுத்திருக்கிறார்
அர்ஜுன் தாஸ் 2012ல் தமிழில் பெருமான் என்னும் திரைப்படத்தின் அறிமுகமாகிறார் .இவரது குரலைக் கொண்டு இவரது நடிப்பு நிச்சயம் பிற்காலத்தில் பேசப்படும் என்று இந்த திரைப்படத்தின் மூலம் நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப அந்தகாரம் என்னும் படத்தில் ஒரு கதாபாத்திரம் நடிக்கிறார். அதன் பிறகு சிறிது காலம் ஒரு ரேடியோ எஃப் எம் இல் டிரைவ் என்னும் வானொலி நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார்.
இவ்வாறு சென்று கொண்டிருக்க 2017ல் ஆக்சிஜன் என்னும் தெலுங்கு படத்தில் கோபிசந்த் சகோதரராக நடிக்கிறார். இந்த சூழ்நிலையில் 2019 லோகேஷ் கனகராஜன் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியில் வந்த கைதி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று வில்லனின் வலது கரமாகநடித்திருக்கிறார். இந்த படத்தின் அன்பு என்னும் கதாபாத்திரம் இவரது குரலால் மிகவும் பெரிதாக பேசப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதையின் வெற்றிக்கு இவரது குரலும் இவரது நடிப்பும் உடல் மொழியும் ஒரு முக்கியமான பங்காற்றுகிறது.
அதன் விளைவாக லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக விஜயை வைத்து இயக்கிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதை பாத்திரத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறார் .அந்த படத்திலும் தாஸ் என்னும் கேரக்டர் மிகவும் பேசப்படுகிறது .அதன் பிறகு விக்ரம் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார் அந்த திரைப்படமும் லோகேஷ் கனகராஜ்அவர்கள் இயக்கப்படுகிறது ,அவரால் மீண்டும் நடிக்க வைக்கப்படுகிறார்.
அதேபோல் புட்டபொம்மா என்னும் திரைப்படத்தில் 2023 மீண்டும் தெலுங்கு மொழியில் கால் பதிக்கிறார். அதே நேரத்தில் தமிழில் அநீதி திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ் அதன் பிறகு.
2024 இல் போர் என்னும் திரைப்படத்தில் நடித்து அந்த படமும் அவரது நடிப்பால் பேசப்படுகிறது இந்த சூழ்நிலையில் பல திரைப்படங்களில் வில்லனாகவே நடித்து வந்த அர்ஜுன் தாஸ் அவர்களை ரசவாதி என்னும் திரைப்படத்தில் காதல் காட்சிகளில் நடிக்க வைக்கிறார்கள் .அந்த காட்சிகளில் அவரது குரலுக்கும் எதிர்மறையாக என்று நினைத்து பார்த்தால், என்னால் செய்ய முடியும், அந்த ரொமான்ஸ் பண்ண முடியும் என்று அதிலும் நிமிர்ந்து நிற்கிறார் அர்ஜுன் தாஸ்.தன்னால் காதல் கட்சியும் பண்ண முடியும் என்பது ரசவாதி படத்தின் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
இப்படி சூழ்நிலையில் குட் பேட் அக்லி யில் இரட்டை கதாபாத்திரத்தில், அஜித்துக்கு வில்லனாக ஒரு மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து நடிக்க அந்த திரைப்படமும் அந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரமும் மிகவும் பேசப்படுகிறார் அந்த இரண்டு கதாபாத்திரம் இரண்டு பேர் உடல் மொழிகளை கொடுத்து அந்த நடனம் ஒரு காமெடி கலந்த அந்த வில்லத்தனம் நிச்சயம் அவரது நடிப்பில் ஒரு மைல்கல்லாக அமைந்தது .
இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் பாம் என்னும் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான ஒரு கதையின் நாயகன் என்று சொல்ல முடியாமல் கதைக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரமாக ஏற்று நடித்திருப்பது மிகப்பெரிய ஒரு நடிப்பை அவருக்கு தந்திருக்கிறது. அந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் காலி வெங்கட்டும் அந்த கிராமத்தில் மாட்டிற்கு லாடம் கட்டும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாசும் அவரது நடிப்பு நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார்
அர்ஜுன் தாஸ் தனது குரல் வளர்த்தால் தனித்துவமான குரலால் தனது கதாபாத்திரங்களை மேலும் வலுப்படுத்தி தனக்கான ஒரு ஆயுதமாக அதை பயன்படுத்தி நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்
இனிவரும் காலங்களிலும் தனது ஆழமான நடிப்பினாலும் தன் குரல் வளத்தினாலும் நிச்சயமாக ரசிகர் மனதில் மேலும் மேலும் இடம் பிடித்து ஒரு முன்னணி நாயகனாக வந்து நிற்பார் என்பது நமக்கு சந்தேகம் இல்லை
மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்கோடு’.
ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள்.ஆண் அழகை குணமாகப் பார்க்கிறான். பெண்ணோ குணத்தை அழகாகப் பார்க்கிறாள்.இப்படி ஆண், பெண் இடையே பார்வையில் எண்ணங்களில் வேறுபாடு உண்டு. இப்படி பெண்களுக்கு என்று பிரத்தியேகமான சில எண்ணங்கள் உள்ளன.அவர்களுக்கு என்று குறியீடுகள், சங்கேதங்கள், சமிக்ஞைகள் உள்ளன. அவற்றை அவர்களின் உலகத்தில் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் உருவாகி இருப்பது தான் இந்த ‘பெண்கோடு’
மலையாளப் படக்குழுவினர் உருவாக்கி உள்ள இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பரபரப்பான க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை அருண் ராஜ் பூத்தணல் எழுதி இயக்கியுள்ளார்.
ஆஸ்த்திரியா மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் JNKL கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரவிதா ஆர் பிரசன்னா, ஜெய் நித்ய காசி லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஜீத்து ஜோசப்பின் லைஃப் ஆஃப் ஜோசக்குட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அருண் சாக்கோவும், இமை , மதர், வின்சென்ட் செல்வா இயக்கிய கம்மாட்டிக்களி திரைப்படத்தில் அறிமுகமான சரீஷ் தேவும் இப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். லட்சுமி சாந்தா மற்றும் சோனா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். இவர்களைத் தவிர, ஓச்சாயி பட தயாரிப்பாளரும் நடிகருமான திரவிய பாண்டியன் அவர்கள்,கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவியா, எபின் வின்சென்ட், ஷம்ஹூன், ஜார்ஜ் தெங்கனாந்தரத்தில், ஜோஸ் நடத்தி பறம்பில், பேபி அதிதி , சந்தீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அருண் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பாண்டியன் இசையமைத்துள்ளார். அர்ஜுன் ஹரீந்திரநாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக உன்னி கோவளமும், தயாரிப்பு மேலாளராக எபின் வின்சென்ட்டும் பணியாற்றியுள்ளனர்.
வயநாடு, ஊட்டி, திருவனந்தபுரம் ஆகிய கேரளாவின் பசுமை சூழ்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.படப்பிடிப்பு முடிந்து மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார். அப்போது படக்குழுவினரைப் பற்றி விசாரித்தறிந்ததுடன் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் .
நவம்பர் முதல் வாரத்தில் JNKL ரிலீஸ் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும்.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.
வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் இப்படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வ. கௌதமன், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வசனகர்த்தா பாலமுரளி வர்மா பேசுகையில், ”ஒரு திரைப்படம் வெள்ளை தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தின் பணிகளை தொடங்கிய போது பல கேள்விகளை எதிர் கொண்டோம். அதில் ஒன்று எதற்காக இந்த வேலை? ஏனெனில் நாம் இப்போது நரேட்டிவ் சொசைட்டியில் (Narrative Society) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்கனவே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, எதை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் தான் நாம் எல்லாவற்றையும் அணுகுகிறோம். இன்னும் சொல்லப்போனால் காதுகளில் வழியாகத்தான் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் இந்த இனம் பிரச்சாரப் போரில் வீழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழர் தலைவர் உருவாகி வரும் போதெல்லாம் மிக எளிதாக அவர்களை பல்வேறு அவதூறுகளால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வீழ்த்தப்பட்ட உண்மையான மக்கள் தலைவர் ஒருவர் தான் அண்ணன் காடுவெட்டி குரு. அவர் வீழ்ந்தாரா என்றால் வீழவில்லை. ஆனால் அவரைப் பற்றி இன்றைக்கு எல்லோர் மனதிலும் எம்மாதிரியான பிம்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தால்…! அதை திருத்தி உண்மையான காடுவெட்டி குரு யார், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் எப்படி செயல்பட வேண்டும், தான் நேசித்த மக்களுக்காக ஒரு தலைவன் எப்படி இயங்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய கடமை ஒரு படைப்பாளியாக எமக்கு இருக்கிறது.
நாங்கள் மக்கள் தொலைக்காட்சிக்காக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றையும், மாவீரன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்பாக உருவாக்கிய போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் மருத்துவர் ஐயா ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு அவரைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு குழந்தை போன்றவர். நகைச்சுவை உணர்வு கொண்டவரும் கூட. இவரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை பற்றி நாங்கள் அந்த தருணத்திலேயே சிந்தித்தோம். ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் மக்களுக்காக எப்படி செயல்பட வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கான பணிகளை திட்டமிட்ட போது அதனை எதிர்த்து தீரமுடன் போராடி, வரவிடாமல் தடுத்தவர் காடுவெட்டி குரு. அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்துவேன் என்று பேசியவர் காடுவெட்டி குரு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காக செயல்படவில்லை என்று அந்த அலுவலகத்தை பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றவர் காடுவெட்டி குரு. அழகாபுரத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்து சென்றார். வயல்வெளிகளில் மின் கோபுரம் அமைக்கப்பட்ட போது அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகளுக்காக எதிர்த்துப் போராடினார். இப்படி மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காடுவெட்டி குரு. மக்களுக்காக வாழ்ந்த காடுவெட்டி குருவின் இந்த முகம் மறைக்கப்பட்டிருக்கிறது. இதனை திட்டமிட்டு மறைத்தார்கள். 37 ஆண்டுகள் அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றிய அவர் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. சேர்த்துக் கொள்ளவில்லை. தன்னிடம் உள்ளதை விசுவாசம் உள்ள தலைமைக்கும், மக்களுக்கும் செலவழித்தார். மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத தலைவராகவும் திகழ்ந்தார். இவ்வளவு நேர்மையான ஒரு தலைவரின் அசலான பிம்பம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. திட்டமிட்டு அவர் மீது வேறொரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.
இன்றைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நுரையீரல் தொற்று நோய்கள் அதிகம். சிறுநீரக செயலிழப்புகளும் அதிகம். இதற்குக் காரணம் அரியலூரில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள். இதனால் அப்பகுதியில் காற்று இயல்பை விட அளவுக்கு அதிகமாக மாசுபட்டிருக்கிறது. அங்குள்ள நீரில் பாதரசமும், செலினியமும் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைவிட எட்டு மடங்கு அதிகமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலந்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே தெரிவிக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இப்படி உடல் உறுப்பு பாதிப்புகளுடன் தான் அப்பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த சூழலில் தான் காடுவெட்டி குரு அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளாமல் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தார். தினமும் மக்கள் அங்கு மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து யாராவது போராடினார்களா? இதை எதிர்த்து போராடியவர் தான் காடுவெட்டி குரு. இதை படைப்பின் மூலமாக சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது. அதனால் தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதே தருணத்தில் இந்த படம் கருத்துகளை மட்டுமே பேசுகிற படமாக இல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாகவும் உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் இளவரசு பேசுகையில், ”விருத்தாசலம் என்பதை அம்மண்ணின் மக்கள் ‘விருதாசலம்’ என்று பேசுவதை தங்கர் பச்சான் மூலம் தான் முதன்முதலில் கேட்டேன். தங்கர் பச்சான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர் தான் கௌதமன். இந்தத் திரைப்படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சென்றபோது அங்கு ‘கடலை ‘விவசாயம் இன்னும் இருப்பதை பார்த்து மகிழ்ந்தேன். இயக்குநர் கௌதமனின் உண்மையான உழைப்பும், அவருடைய ஆத்மார்த்தமான ஈடுபாடும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு ஊடகங்களும், ரசிகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ”செப்டம்பர் 19ம் தேதி அன்று காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக வெளியிடுகிறோம். இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செய்ய ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர்.
கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களை பார்வையிட்டு வருகிறேன். அதில் இடம்பெறும் கமெண்ட்டுகள் மோசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனிந்த சாதிய வன்மம் என புரியவில்லை,” என்றார்.
தயாரிப்பாளர் குறளமுதன் பேசுகையில், ”நான் அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர். எனக்கும், சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குநர் கௌதமன் என்னை சந்தித்து சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த மாவீரர் காடுவெட்டி குருவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அந்த கதையை சொல்லும்போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். அதன் பிறகு இதனை எப்படி தயாரிப்பது என திட்டமிட்டோம். இந்த படைப்பு மிகப்பெரும் வரலாறாக இருக்க வேண்டும் என்றும், மண்ணை காக்கவும் பெண்ணை காக்கவும் குருவைப் போன்ற ஒரு தலைவர் இருந்தார் என்பதை பதிவு செய்வதற்காகவும் இதை உருவாக்க தீர்மானித்தோம். இதனால் திரள் நிதி (கிரவுட் ஃபண்டிங்) முறையில் இப்படத்திற்காக நிதி திரட்ட தொடங்கினோம்.
நாங்கள் வட தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் விகே சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் வணிகத்தை நடத்தி வருகிறோம். இதன் உரிமையாளரான நீலமேகம் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கினார். கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் அளவில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம். அத்துடன் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகமானது. இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுடன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சரவணன் ராஜும் ஆதரவு தெரிவித்தார்.
இந்தப் படத்தை ஒதுக்கிட வேண்டாம். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். தமிழகத்தில் உள்ள இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்குநர் கௌதமன் இயக்கியிருக்கிறார். மூன்றாண்டுகள் தவமிருந்து இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பாகுபாடும் பார்க்காமல் இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் உமாதேவன் பேசுகையில், ”படையாண்ட மாவீரா என்ற எங்களது முதல் குழந்தையை நாங்கள் பிரசவித்திருக்கிறோம். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கௌதமன் எங்களிடம் விவாதித்த போது எங்களால் முடியுமா? என்ற சந்தேகம் தான் எழுந்தது.
இன்று நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் முக்கியம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை போல பொருளாதாரமும் முக்கியமாகிறது. இதன் அடிப்படையில் வி கே வணிக குழுமம் இப்படத்தின் தயாரிப்பில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவரின் வரலாற்றை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இப்படத்தின் பாடல்களுக்காக முதன்முதலாக கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்தபோது எங்களுக்கு தெரியாத, எங்கள் சமுதாயம் கண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் சொல்லி, அந்த சமுதாயத்தை உயர்த்துகின்ற பாடல்களை எழுதி தருகிறேன் என்று சொன்னார். இதை இங்கு சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு பெரும் சமுதாயங்களாக பிரிந்து கிடக்கும் தமிழகத்தில், இவர்கள் தமிழ் சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் வ. கௌதமன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதனால் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்களின் பொன்னான கடமை,” என்றார்.
தயாரிப்பாளர் அய்யனார் கண்ணன் பேசுகையில், ”தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். அத்தகைய மாமனிதனாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை, இந்த தமிழ் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கிற மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அத்தனை சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை, நல்ல செயல்களை இப்படம் பேசுகிறது. இப்படத்தை அவருடன் இணைந்து பயணித்த இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியிருக்கிறார். இது மிகப்பெரிய கூட்டு முயற்சி. நல்ல சினிமாவை தயாரிப்பதற்கு பெரும்பான்மையான நேரத்தில் தயாரிப்பாளர்கள் முன் வர மாட்டார்கள். சினிமாவிற்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளில் உழைப்பால் முன்னேறியவர்கள் இப்படத்திற்கு உறுதுணையாக நின்றார்கள். இந்த திரைப்பட தயாரிப்பில் மாணவ மாணவிகள் உட்பட பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு மெனக்கடல் என்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒரு தலைவரை, அனைத்து சமுதாயத்திற்கும் தலைவராக திகழ்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடத்தில் எடுத்து சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
குடிதாங்கி எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவரின் சடலத்தை ஒரு வீதி வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த தருணத்தில் மருத்துவர் ஐயாவின் கட்டளையை ஏற்று காடுவெட்டி குரு அவர்கள் அந்த சடலத்தை தனது தோளில் சுமந்து அந்த வீதி வழியாக சென்றார். அதனால் தான் அவரை மக்கள் மாவீரன் என்று போற்றுகிறார்கள். அத்துடன் அந்த கிராமப் பகுதிகளில் நடைமுறையில் இருந்த இரட்டை குவளை முறையையும் ஒழித்துக் கட்டினார் காடுவெட்டி குரு. அந்த வகையில் சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரு தலைவராகத்தான் காடுவெட்டி குரு திகழ்கிறார்.
இப்படத்தில் இடம்பெறும் பாடல்களும், படமும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும். மக்கள் தலைவராக மறைந்த காடுவெட்டி குருவை நாம் கொண்டாட வேண்டும்,” என்றார்.
தயாரிப்பாளர் ‘கிரியாடெக்’ பாஸ்கர் பேசுகையில், ”இயக்குநர் கௌதமனை 2021ம் ஆண்டில் சென்னையில் உணவகம் ஒன்றில் சந்தித்த போது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க வேண்டும் என தனது படைப்பை பற்றி பேசினார். அப்போது நான் தொழில் முனைவோராகவும், கல்வியாளராகவும் இருந்தேன்.
அப்போது தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து மறைக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் பற்றிய ஆய்வினை சமர்ப்பிக்கலாம் என்ற ஒரு செய்தி கிடைத்தது. சுதந்திர போராட்ட காலத்தை கடந்து சமகாலத்தில் மக்களுக்காக பணியாற்றிய ஏராளமான அரசியல் தலைவர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கண்டறிந்தோம். இவரைப் போன்ற மக்களுக்காக பாடுபட்ட அரசியல் தலைவர்கள் அனைத்து சமூகங்களிலும் இருப்பதையும் கண்டறிந்தோம். இப்படிப்பட்ட தலைவர்களைப் பற்றி மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படத்தை உருவாக்கினோம்.
அரசியல்வாதி என்றால் பகட்டு அரசியல் செய்கிற அரசியல்வாதியாக தான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தலைவர்கள் எளிமையாக தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
2023ம் ஆண்டில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கடும் போராட்டத்திற்குப் பிறகு தற்போது இப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் வாழ்வியலை பேசுகிறது. ஒரு சாமானிய மனிதன் எந்த நிலைக்கு உயரலாம், எப்போது உயரலாம், எப்போது மக்களால் போற்றப்படலாம் என்றால் அவர் மக்களுக்காக சுயநலமில்லாமல் சிந்தித்து களத்தில் இறங்கி போராடும் போது தான்.
இந்த திரைப்படத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது எதற்காக சினிமா, உங்கள் துறை இதுவல்லவே எனக் கேட்டனர். அவர்களிடம் ஒருவரை பற்றி அரசியல் காரணங்களால் தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றிய நிஜமான முகத்தை – எல்லா மக்களையும் நேசித்த ஒரு தலைவரைப் பற்றி- மக்களிடத்தில் சொல்ல வேண்டியது எங்களது கடமை. ஒரு குடிமகனாக எங்களுடைய பொறுப்பு என்றும் எடுத்துரைத்தேன். அத்துடன் மறைக்கப்பட்ட காடுவெட்டி குரு போன்ற மக்கள் தலைவர்களைப் பற்றிய வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
இந்தத் திரைப்படம் ஆபாசம் இல்லாமல், வன்முறை இல்லாமல் உருவாகி இருக்கிறது. அதனால் இப்படம் குடும்பத்தினருடனும் பெண் பிள்ளைகளுடனும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் வகையில் தயாராகி இருக்கிறது,” என்றார்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், ”கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர். அவர் என் இளைய தம்பி என கொண்டாடுவேன். எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றி பெற வேண்டும். அவருடைய படைப்பு மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் நோக்கும், போக்கும் துன்பப்படுகிற நிலையில்தான் இருக்கிறது. இன்றைக்கு 200 திரைப்படங்கள் வெளியானால் அதில் 10 படங்கள்தான் வெற்றிக்கு அருகில் வருகின்றன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், மிகப் பெரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள். ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தை பார்த்து படம் எடுக்கிறார்கள். படம் என்பது பிம்பம். வாழ்க்கை என்பது நிஜம். ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம். அந்த வாழ்க்கையில் இருந்து கடந்து சென்ற வாழ்க்கை, தொட்ட வாழ்க்கை, துன்புற்ற வாழ்க்கை, துன்பப்படுத்திய வாழ்க்கை, சக மனிதனை துன்புறுத்தி சென்ற வாழ்க்கை இவற்றை நீ படமாக எடுத்தால்.. பார்வையாளர்களுக்கும், படைப்புக்கும் ஒரு தொடர்புத் தன்மை ஏற்பட்டிருக்கும். இந்த தொடர்பு தன்மையற்று போனதால் பல திரைப்படங்கள் ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டு போயின என நான் நினைக்கிறேன்.
எட்டு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு விட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.
அதிலும் தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?
மகாபாரதத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. ராமாயணத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. இந்த இரண்டு இதிகாசங்களின் கதையும் மக்களுக்கு தெரிந்ததுதான்.
படையாண்ட மாவீரா படத்தை பொருத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தை காண வரும் ரசிகர்களை பொறுத்தது. தமிழர்களை பொறுத்தது என நான் கருதுகிறேன்.
மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில், ”என்னுடைய இனிய நண்பரான தமிழ் கௌதமன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அவன் மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் தமிழ் கௌதமன் பேசுகையில், ”இது என்னுடைய முதல் படம். முதல் படத்திலேயே சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். செப்டம்பர் 19ம் தேதியன்று படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், ”இப்படத்தின் திரைக்கதையை முதலில் கௌதமன் என்னிடம் கொடுத்தார். தமிழ் தேசிய அரசியல் குறித்த பயணத்தை தொடங்கும் போது அண்ணன் கௌதமன் உள்ளிட்ட பலர் எனக்கு அறிமுகமானார்கள். எந்தவித பிரதிபலனும் இல்லாமல் தமிழக மக்களின் நலன்களுக்காக கௌதமன் களத்தில் இறங்கி போராடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தப் படத்தின் திரைக்கதையை கொடுத்தவுடன் என் நிறுவனத்தின் கொள்கையை அவரிடம் தெரிவித்தேன். அதாவது எந்த சாதியை பற்றிய படத்தையும் நான் தயாரிப்பதில்லை என சொன்னேன். இருந்தாலும் அண்ணன் மீதான அன்பின் காரணமாக அந்த திரைக்கதையை முழுமையாக வாசித்தேன். நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு காடுவெட்டி குரு பற்றிய பிம்பம் வேறானதாக இருந்தது. மகாபலிபுரத்தில் அவர் பேசிய காணொலிகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டிருந்தன. அதனை பார்த்து நான் அவரை ஒரு சாதி தலைவராகத்தான் அவதானித்திருந்தேன். அவரைப் பற்றிய புரிதல் அவ்வாறானதாகவே இருந்தது.
இந்த திரைக்கதையை வாசித்தவுடன் இவர் உண்மையை எழுதி இருக்கிறாரா, அல்லது மிகைப்படுத்தி எழுதி இருக்கிறாரா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள என் நண்பர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அவர்கள் காடுவெட்டி குருவைப் பற்றி உண்மையான வரலாறை சொல்ல சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஆனால் அவரைப் பற்றிய பிம்பம் இங்கு வேறு மாதிரியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதிக்கு பிறகு தான் நான் தமிழர்கள் என்றால் யார், தமிழ் தேசியம் என்றால் என்ன என்பது குறித்த அரசியல் ரீதியான புரிதல் ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும் தலைவர் என்றால் அது மேதகு பிரபாகரன் மட்டும் தான்.
காடுவெட்டி குரு பற்றிய வாழ்க்கையை படித்ததும் அவரைப் பற்றி எப்படியெல்லாம் தவறாக கட்டமைத்திருக்கிறார்கள் என வருத்தப்பட்டேன். இப்படி தமிழ் சமூகத்தில் மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாறு ஏராளமாக இருக்கிறது.
இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்த படம் சாதிய படம் அல்ல. காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு. ஒரு மனிதன் நேர்மையாக எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதையும், நேர்மையாக வாழ்ந்ததற்காக அவன் எப்படி வஞ்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதையும், தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாத, தன் குடும்பத்திற்கு என்று எதுவும் விட்டுச் செல்லாத, தன் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவனை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதையும் கடந்து இப்படத்தில் இடம்பெறும் உரையாடல்களும், பின்னணி இசையும் படத்தின் பலம் என்றே சொல்வேன்,” என்றார்.
தயாரிப்பாளர் – இயக்குநர் – நடிகர் தங்கர் பச்சான் பேசுகையில், ”வ. கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. கௌதமன் தமிழனாக இருப்பதால்தான் சினிமாவை தேர்வு செய்திருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும், அடக்கு முறையாகட்டும், வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழன் கௌதமன்.
இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.
தமிழர் அல்லாதவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் அறிந்து கொண்டு தமிழர்களிடையே பாகுபாட்டை,. விரோதத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் கமெண்டுகள், ஃபாலோயர்கள் என்ற பெயரில் ஏராளமான மன நோயாளிகள் வலம் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு அரசியல் கட்சியின் கொத்தடிமைகளாக- கைக்கூலிகளாக இருக்கிறார்கள். இவர்களை வைத்துதான் இன்றைக்கு அரசியல் கட்டமைக்கப்படுகிறது.
பத்து முதன்மையான பத்திரிகைகள், ஐந்து ஊடகங்கள் சொன்ன செய்திகளை மட்டுமே கேட்டு வந்த நமக்கு சமூக வலைதளங்கள் மிகப்பெரிய மாற்றமாக தெரிந்தது. ஒவ்வொரு தனி மனிதனும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களுடைய கருத்துக்களை பதிவிடலாம். பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலை உருவானது. இதன் மூலமாக நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தால், என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்த சிக்கலுக்கு இடையே தான் உண்மையான செய்திகள் வெளிவர வேண்டியதிருக்கிறது.
மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாக பழகி இருக்கிறோம். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர்.
1990களில் இந்திய சினிமாவில் வணிக எல்லைக்குள் நின்று கொண்டு ஆக சிறந்த படைப்பாக வெளியானது மறுமலர்ச்சி. அதில் நான் பணியாற்றிருக்கிறேன். அது ஒரு ஊரில் உள்ள தலைவரைப் பற்றி பேசும் படம். அந்தப் படத்தில் தமிழ் மண்ணின் ஒட்டுமொத்த கலாச்சாரமும், பண்பாடும் இடம் பிடித்திருக்கும். யாருக்குள்ளும் எந்த பகைமையும் இல்லாமல் மனிதர்களையும், மக்களையும், பெண்களையும், மதிக்கிற ஒரு தலைவனை பற்றிய படம். இந்தத் திரைப்படம் யாருடைய மனதையும் காயப்படுத்த வில்லை. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கு பிடித்த மக்கள் தலைவனை பற்றி படம் எடுத்தால்.. அது சாதி படம் என்று குறிப்பிடக் கூடாது. இதை இப்படி வகைப்படுத்துபவர்கள் யார்? என்று தெரியவில்லை.
இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்த பிறகு மக்களிடத்தில் ஒரு தாக்கம் ஏற்பட வேண்டும். ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், ”என்னை வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திரைப்படத்திற்கு தயாரிப்பாளரான வி கே குழுமத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பில் பங்களிப்பு செய்த கர்நாடகத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கும் நன்றி. இறுதிக்கட்டத்தில் கரம் கொடுத்து ஆதரவு தரும் தயாரிப்பாளர் சரவண ராஜுக்கும் நன்றி. படத்தின் பணிகளின் போது தடங்கல் ஏற்படும் போதெல்லாம் அதனை அகற்ற உதவிய தயாரிப்பாளர் சுந்தரவரதனுக்கும் நன்றி. தொடர்ந்து தோள் கொடுத்து வரும் சகோதரர் கண்ணனுக்கும், சகோதரர் சுரேஷ் காமாட்சி, தங்கர் பச்சானுக்கும் நன்றி. இவர்களுடன் இப்படத்திற்காக உழைத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழ் குடிகளில் நான் உயிராக நேசிக்கின்ற அத்தனை தமிழ் சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தையும் பரிசாக அளித்தன. அந்த வலியையும், வேதனையும் நான் இன்றும் மனதளவில் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை . தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த இனத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்.
என்னுடைய தந்தையும், அவருடைய (காடுவெட்டி குரு) தந்தையும் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு மட்டுமல்ல, புரிதல் மட்டுமல்ல, பேரன்பும் இருக்கிறது. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்.
படைப்புகளையும், படைப்பாளிகளையும் வீழ்த்த நினைத்து மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் அருவருப்பானவை. அதனைத் தவிர்த்து விடுங்கள்.
தமிழரசனின் வாழ்க்கை வரலாறை படைப்பாக உருவாக்க வேண்டும். மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றை படைப்பாக உருவாக்க வேண்டும். ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும். தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்ய வேண்டும்.
இந்தப் படத்தின் பாடல்களில் நெருப்பு பொறி பறந்தது போல் படத்திலும் அனல் பறக்கும். இந்தப் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்த கலைஞர்களுக்கு படத்தின் உச்சகட்ட காட்சியை திரையிட்டு காண்பித்தேன். அவர்கள் அனைவரும் கண்ணீருடன் என்னை கட்டி அணைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும், ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்த படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான “கோல்ட் கால்” Title Teaser – ஐ படகுழுவினர் வெளியிட்டனர் .
தனித்துவமான கருப்பொருளுடன், மர்மமான சூழலை கொண்டுள்ள இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடிய வலுவான கதை சொல்லலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கோல்ட் கால்” ஒரு விறுவிறுப்பான கதையையும், ஒரு பீதியூட்டும் சூழலையும் கலந்த ஒரு முயற்சி. இது, தலைப்பு வெளியீட்டிலிருந்தே பார்வையாளர்களை கவரும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் விற்பனை பற்றி அல்ல… ஆனால் விற்பனையாளர் அலுவலக வேளைகளில், விற்பனைக்கு அப்பால் களத்தில் செய்வதைக் குறித்து பேசுகிறது. கதை நகரும் போது, ஒவ்வொரு காட்சியும் பார்வையாளரிடமிருந்து சிரிப்பை கிளப்புவதே முதன்மையான நோக்கமாக அமைந்துள்ளது.
நகைச்சுவை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது – வேடிக்கையான மோதல்கள், முரண்பட்ட குணநலன்கள், சற்றே விநோதமான கேமரா கோணங்கள் போன்றவை வழியாக. இனிமையான உணர்ச்சி பூர்வ தருணங்களும், கடினமான நிமிடங்களும் இணைந்துள்ளன. ஆனால் படம் ஒருபோதும் முட்டாள்தனமான அல்லது “slapstick comedy” போலத் தோன்றாது. காட்சிகள் நிஜ வாழ்க்கையைப்போல இயல்பாக இருக்கும், ஆனால் கதாபாத்திரங்கள் அவற்றை கையாளும் விதம் தான் சற்றே லேசான சுவையில் இருக்கும்.
தனித்துவமான கருப்பொருளுடன், மர்மமான சூழலை கொண்டுள்ள இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடிய வலுவான கதை சொல்லலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இந்தத் திரைப்படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. டீசர் பார்வையாளர்களுக்கு படத்தில் காத்திருக்கும் மர்மத்தின் ஒரு சுவையை மட்டும் தரும். இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக நாங்கள் ஆவலாக காத்திருக்கிறோம்.”
புதுமுக இயக்குனர் திரு. தம்பிதுரை இயக்கத்தில், திரு. கேஷவமூர்த்தி தயாரிப்பில், M/s. Walkthrough Entertainment நிறுவனத்தின் சார்பில் உருவாகும் இந்த கோல்ட் கால், தனது தனித்துவமான தலைப்பு மற்றும் சுவாரஸ்யமான கருத்தால் ஏற்கனவே தமிழ் திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர், படக்குழு உருவாக்கியுள்ள அந்த விறுவிறுப்பான உலகத்தை பார்வையாளர்களுக்கு தருகிறது.
இயக்குனர் திரு. தம்பிதுரை – “கோல்ட் கால் இன்றைய பார்வையாளர்களோடு ஆழமாக இணையும் ஒரு கதை. தலைப்பு டீசர் என்பது சஸ்பென்ஸ், நகைச்சுவை, டிராமா ஆகியவை, படத்தின் சிறு சுவையை மட்டும் தருகிறது.”
தயாரிப்பாளர் திரு. கேஷவமூர்த்தி – “கோல்ட் கால்-இன் தலைப்பு டீசர் -ஐ அனைவருடனும் பகிர்வதில் நாங்கள் மிகுந்த உற்சாகம் கொண்டுள்ளோம். இந்தக் படத்தை உயிர்ப்பிக்கக் இந்த குழு உள்ளம் கனிந்து உழைத்துள்ளது. இந்த டீசர் ஒரு துவக்கமே.”
பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், கோல்ட் கால் அடுத்த சில மாதங்களில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறப்போகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குமார சம்பவம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர் கணேஷ் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர்.
நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குமார சம்பவம்’ திரைப்படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஜி. கணேஷ் தயாரித்திருக்கிறார்.
வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒலி வடிவமைப்பாளர் சரவணன், ‘சரிகம’ ஆனந்த், படத்தொகுப்பாளர் மதன், கலை இயக்குநர் வாசு, ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி, நடிகர்கள் வினோத் முன்னா, குமரவேல், சிவா அரவிந்த், நடிகைகள் தாரிணி, கவிதா, நாயகன் குமரன் தங்கராஜன், நாயகி பாயல் ராதாகிருஷ்ணா, இயக்குநர் பாலாஜி வேணுகோபால், தயாரிப்பாளர் கே. ஜி. கணேஷ், தயாரிப்பு நிர்வாகிகள் சீனிவாசன், ரவிக்குமார் ஆனந்த் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தொகுப்பாளர் மதன் பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி வேணுகோபாலுடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. அவருடைய முதல் படமான ‘லக்கி மேன்’ படத்திலும் பணியாற்றிருந்தேன். அதன் பிறகு என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். சுவராசியமாக இருந்தது. அவரிடம் இதனை எப்படி திரையில் சொல்ல போகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்காகத்தான் உன்னிடம் வந்திருக்கிறேன் என்றார். அதற்கு ஏற்ற வகையில் இப்படத்தின் கதையை நேரடியாக விவரிக்காமல், நான்-லீனியர் பாணியில் சொல்லி இருக்கிறோம். இயக்குநர் பாலாஜி தனக்கு என்ன தேவை என்பதில் மிகத் தெளிவாக இருப்பார். அவரை ஒரு விஷயத்தில் சமரசம் செய்வது கடினம், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். குறிப்பாக ஒலி அமைப்பு தொடர்பான விசயத்தில் அவர் வானொலியில் பணியாற்றிய அனுபவம் காரணமாக துல்லியமாக இருந்தார்.
இந்தப் படத்தில் அனைத்து அம்சங்களும் உள்ளன. நீங்கள் செலவிடும் நேரத்திற்கு தகுதியான பொழுதுபோக்கை வழங்கி இருக்கிறோம். திரையரங்குகளில் படத்தைப் பார்த்து மகிழலாம்.
இந்தப் படத்தில் குமரனின் நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள் என உறுதியாக சொல்கிறேன். இயக்குநர் பாலாஜி வேணுகோபாலின் டயலாக்குகள் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.
செப்டம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் சிவா அரவிந்த் பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி வேணுகோபால் என்னை போன் மூலம் தொடர்பு கொண்டு இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குமரன் சின்னத்திரை தொடர்களில் நடிப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் பெரிய திரையில் நடிக்கும் போது அவரிடம் இருந்து நுட்பமான நடிப்புத் திறன் வெளிப்படும் போது அவரை வியந்து பார்த்திருக்கிறேன். இவரிடம் இந்தத் திறமைகள் எல்லாம் இருக்கிறதா என ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். நாயகனுக்கு பாடல்கள் மிக முக்கியம். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் இரண்டு பாடல்களிலும் அவர் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு நிச்சயமாக பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவரிடம் ஒரு நடிகருக்கான அனைத்து விஷயங்களை விட அவருக்குள் ஒரு இயக்குநருக்கான அறிவும் இருக்கிறது.
இயக்குநர் பாலாஜியிடம் மறைந்த கிரேசி மோகனின் ‘ டச் ‘இருக்கிறது. இதனை பல தருணங்களில் அவருடைய உரையாடல்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த படம் பார்த்த பிறகு நீங்களும் அதை உணர்வீர்கள். இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
‘சரிகம’ ஆனந்த் பேசுகையில், ”வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளரான கணேஷிற்கு வாழ்த்துக்கள். அவருடைய தயாரிப்பில் வெளியான ‘யாத்திசை’ திரைப்படத்தின் இசையை சரிகமவில் தான் வெளியிட்டோம். அதைத்தொடர்ந்து தற்போது ‘குமார சம்பவம்’ படத்திற்கும் சரிகம உடன் கை கோர்த்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறும்.
நீண்ட கால நண்பரான இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவான ‘குமார சம்பவம்’ படத்தினை காணும் வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி எண்டர்டெய்னர். ஃபேமிலி ஓரியண்டட் திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் வெளியாகும் இந்த ‘குமார சம்பவம்’ படத்திற்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையில் தமிழிலும், தெலுங்கிலும் ஏராளமான பாடல்கள் வெற்றி வெற்றி இருக்கின்றன. இந்தப் படத்திற்கும் அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.
நடிகர் குமரவேல் பேசுகையில், ”இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். இப்படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னபோது இந்த படத்தை யார் தயாரிக்கிறார்கள் என அவரிடம் கேட்டேன் அவர் ‘யாத்திசை’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் என்று சொன்னவுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஏனெனில் அந்தத் திரைப்படத்தை நேர்த்தியாக உருவாக்கி அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்த்து படத்தை பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தவர்கள் அவர்கள்.
இயக்குநர் பாலாஜி என்னிடம் என்ன சொன்னாரோ, அதை அப்படியே மாற்றாமல் எடுத்திருக்கிறார். கதை என்ன என்று சொல்ல வேண்டும் என்றால் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவருக்கும், அந்த வீட்டின் உரிமையாளருக்கும் இடையேயான பிரச்சனை. இதுதான் கதையின் மையப்புள்ளி. எனக்கான காட்சிகள் அனைத்தும் ஒரே வீட்டில் அமைந்திருந்தாலும், அதனை காட்சி மொழியாக துல்லியமாக விவரித்து இருந்தனர்.
குமரன் நாயகனாக அறிமுகமானாலும் அவருடைய அனைத்து நடிப்பு திறன்களையும் வெளிப்படுத்தினார். அதற்கேற்ற வகையில் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம்.
எளிமையான கதை. அதனை பொழுதுபோக்காகவும், வித்தியாசமான கோணத்திலும் சொல்லி இருக்கிறார்கள். இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்,” என்றார்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசுகையில், ”இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. நான் நடிகர் குமரவேலின் ரசிகன். இந்தப் படத்தில் அவர் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் நாயகனான குமரன் ஒரு இன்ட்ரோவர்ட் பெர்சன். அதிகம் பேச மாட்டார். ஆனால் அற்புதமான திறமைசாலி. இந்த படத்திற்குப் பிறகு குமரன் நிச்சயமாக ஸ்டாராக உயர்வார்.
இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் 15 ஆண்டு கால நண்பர்கள். ‘மாலை பொழுதின் மயக்கத்திலே’ படத்திற்கு நான் இசையமைக்கும் போது அந்தப் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்போதிலிருந்து நான் இப்போது வரை இசையமைப்பாளராகவே பணியாற்றி வருகிறேன். ஆனால் பாலாஜி வேணுகோபால் நடிகராக உயர்ந்து, அதன் பிறகு இயக்குநராகி, பாடலாசிரியராகவும் உயர்ந்திருக்கிறார். என் நண்பனின் படத்திற்கு நான் இசை அமைத்திருக்கிறேன் என்ற பெருமிதமே எனக்கு போதும்.
உணவகத்தில் காப்பி சாப்பிட்டுக் கொண்டே இந்த படத்தை பற்றி பேசத் தொடங்கினோம். தற்போது முன்னோட்ட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறோம். விரைவில் படத்தின் வெற்றி விழாவிலும் சந்திப்போம்.
இந்த படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் தான் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பாடலை எழுதும் போதும் மூத்த பாடலாசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்பது போல் தான் எழுதி இருக்கிறார். இதற்கு அவருக்குள் ஒரு ‘குரு’த்துவம் இருக்க வேண்டும். அது அவரிடம் இருக்கிறது. இந்தப் படத்திற்காக பத்து நாட்களில் பாடல்களை உருவாக்கினோம். பத்து நாட்களில் படத்திற்கான பின்னணி இசையை அமைத்தோம். அந்த அளவிற்கு இயக்குநர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை வழங்கினார்.
இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும். திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகை பாயல் ராதாகிருஷ்ணா பேசுகையில், ”இந்த படத்தில் பணியாற்ற தொடங்கும் போது எனக்கு தமிழ் மொழி தெரியாது. ஆனால் இப்போது என்னால் தமிழில் பேச முடியும். இதற்கு முழு ஆதரவளித்த படக் குழுவினருக்கு நன்றி.
வழக்கமான காதல் கதையில் இடம்பெறும் நாயகி போல் அல்லாமல் அழுத்தமான வேடத்தை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார். இது நான் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம். என்னுடைய அறிமுகம் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்திற்காக என்னால் பின்னணி பேச முடியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக தமிழில் பின்னணி பேசுவேன் என்று நம்புகிறேன்.
குமரன் மற்ற தருணங்களில் தான் இன்ட்ரோவர்ட் பெர்சன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நடிக்கும் போது நேர்த்தியான கலைஞர். அவருடன் இணைந்து பணியாற்றும்போது சௌகரியமாக இருப்பதை உணர்ந்தேன்.
படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் எளிமையாகவும், இனிமையாகவும் பழகுவார். அவருக்கு ஒரு ஷாட்டில் என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்கிறார். இது என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரிடமிருந்து சில விசயங்களை கற்றுக் கொண்டேன்,” என்றார்.
நாயகன் குமரன் தங்கராஜன் பேசுகையில், ”இந்த மேடையில் வீற்றிருந்து பார்க்கும் போது மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இந்தப் படத்தில் ‘சினிமா என் லட்சியம்’ என்றொரு டயலாக் வரும். உண்மையில் எனக்கு அது மிகப் பெரிய லட்சியம். கிட்டத்தட்ட 17 ஆண்டு கால இலட்சியம். சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவை நனவாக்கியது வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கணேஷ் சார்.
என்னுடைய குடும்பத்தினருக்கு திரை உலக பின்னணி கிடையாது. அப்பா டீ கடையில் வேலை பார்த்தவர். அவர் நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னார். அவருக்கும் அந்த ஆசை இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. அவருடைய கனவை நான் நனவாக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். எங்கெங்கோ தேடி அலைந்து கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க தொடங்கினேன். அதன் பிறகு தான் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. தற்போது குமார சம்பவம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். இதற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம். இது எனக்கு எமோஷனலாகவும் இருக்கிறது. திருப்தியாகவும் இருக்கிறது. இதற்காக தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் யூட்யூப் தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் இருவரும் நண்பர்கள். இன்று இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தரமான படைப்பை வழங்கி இருக்கிறோம். நீங்களும் இதனை பார்த்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், ”இயக்குநராக அங்கீகாரம் பெற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. என்னுடைய இயக்கத்தில் உருவான முதல் படம் ‘லக்கி மேன்’. 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி அன்று வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘குமார சம்பவம் ‘ என்ற படத்தின் மூலம் ரசிகர்களை சந்திக்கிறேன்.
என்றைக்காவது நான் சோர்வடைந்திருக்கும் தருணத்தில் இணையத்தில் வெளியான ‘பானி பூரி’ மற்றும் திரையரங்குகளில் வெளியான ‘லக்கி மேன்’ படத்திற்காக ஊடகங்கள் முன்வைத்த விமர்சனங்களை ஒரு முறை பார்வையிடுவேன். அது எனக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும். இதற்காக இந்தத் தருணத்திலும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
குமார சம்பவம் படத்தைப் பற்றி நிறைய கேள்விகள் இருக்கிறது. குமரனுடைய வாழ்க்கை நடைபெற்ற சம்பவங்கள் தான் இந்த குமார சம்பவம். இது படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் அனைவருக்கும் புரியும்.
முதலில் தயாரிப்பாளர் கணேசுக்கு நன்றி. குமரன் மூலமாக தான் தயாரிப்பாளர் கணேஷ் அறிமுகமானார். கதையைக் கேட்ட பிறகு, உடனடியாக முடிவெடுத்து படத்தின் பணிகளை தொடங்கினார். இந்தத் தருணத்தில் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியாளர் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. கணேஷ் சார் இடதுகை பழக்கம் உள்ளவர். இந்த இடதுகை பழக்கம் உள்ளவர் முடிவுகளை வேகமாக எடுப்பவர்கள். அதேபோல் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். அதனால் தான் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர் கணேஷ் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் அவர்களுடைய திறமைக்கேற்ற ஊதியத்தை பேரம் பேசாமல் சரியான தருணத்தில் வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இதன் காரணமாகவே இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியுடன் பணியாற்றிய அனுபவம் அலாதியானது. ‘விடியாத இரவு ஒன்று..’ பாடலை உருவாக்கியதற்கும் ஒரு பின்னணி உண்டு. என்னுடைய தாத்தா பாட்டி காலத்தில் ‘மயக்கமா.. கலக்கமா..’ என்ற பாடல் பிரபலமானது. என்னுடைய தந்தை – தாய் காலகட்டத்தில் யாராவது சோர்வாக இருந்தால் ‘ஒவ்வொரு பூக்களுமே..’ என்ற பாடலை கேட்பார்கள். இப்போது இருக்கும் 2கே கிட்ஸ்கள் எப்போதாவது சோர்வை உணர்ந்தால் அந்த நேரத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகவே ‘விடியாத இரவு ஒன்று..’ என்ற பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலைக் கேட்டு அவர்கள் உத்வேகம் பெற வேண்டும் என்பதற்காகவும் இதை உருவாக்கினோம். மேலும் இந்தப் பாடலை என்னுடைய ஞான தகப்பன் – ஞானகுரு கண்ணதாசனுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எழுதியவை.
இந்தப் படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களையும் பாரதியார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார், அசல் கோளாறு, பால் டப்பா ஆகியோர்களுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக எழுதினேன். இந்தப் படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை எனக்கு நானே வழங்கிக் கொண்டேன். என்னுடைய கதைக்கான பாடல்களை நான் எழுத முடியும் என்று உறுதியாக நம்பினேன்.
இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் மட்டுமல்ல அனைத்து எழுத்து வடிவங்களையும் நான் மட்டுமே உருவாக்கினேன். இது பேராசை தான். ஆனால் இதன் பின்னணியில் ரசிகர்களுக்கு தரமான பொழுதுபோக்கை வழங்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு குடும்பத்தினர் அனைவரும் தங்களுடைய குழந்தை குட்டிகளுடன் திரையரங்கத்திற்கு வரலாம். குடும்பத்துடன் பொழுதுபோக்கு அம்சம் உள்ள படமாக குமார சம்பவம் உருவாகி இருக்கிறது.
கே .பாக்யராஜின் இயக்கத்தில் வெளியான பல வெற்றி படங்களுக்கு நடிகர்கள் லிவிங்ஸ்டனும், ஜி.எம். குமாரும் அவரிடம் உதவியாளர்களாக இருக்கும்போது தங்களுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அதனை இந்த படத்தில் சாத்தியப்படுத்தி இருக்கிறேன். இதை நான் பெருமிதமாக கருதுகிறேன்.
இது ஒரு போராளி பற்றிய கதை. ஆனால் அவனது போராட்டத்தை பற்றிய கதை அல்ல. இது ஒரு ஃபிலிம் மேக்கரின் கதை. ஆனால் அவர் படம் எடுத்த கதை அல்ல.
குமரன் மிகப்பெரிய திறமைசாலி, அவனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. குமரன் திரையுலகில் நன்றாக வளர வேண்டும் என்று எண்ணம் கொண்ட பலர் அவரை சூழ்ந்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே அவர் திரையுலகில் சிறப்பான இடத்திற்கு உயர்வார். நான் குமரனின் நடனத்திற்கு ரசிகன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. இதை அறிந்ததும் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு கதைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் குமரன். அவருடைய இந்த முயற்சி எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
இந்த திரைப்படத்திற்கு கடவுளின் அனுகிரகம் இருக்கிறது என்பதனை நான் உணர்ந்தேன். நான் லக்கி மேன் படத்திற்காக முதலில் வைத்த பெயர் கந்தன் கருணை. ஆனால் அந்த டைட்டில் எனக்கு கிடைக்கவில்லை. நான் அடிப்படையில் ஒரு முருக பக்தன். ஒரு முறை பாம்பன் சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்று முருகரை வணங்கிக் கொண்டிருந்தபோது உமது பெயரை என்னுடைய திரைப்படத்திற்கு வைக்க முடியவில்லை என வருந்தினேன். அதன் பிறகு முருகன் எனக்கு எப்படி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார் என்றால்.. நாயகன் பெயர் குமரன், படத்திற்கு டைட்டில் குமாரசம்பவம், குமரவேல், ஜி எம் குமார், பால சரவணன், நிகில் முருகன் என முருகரின் பெயரைக் கொண்டவர்கள் இப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். நான் இதற்கு மேல் முருகரி டம் கேட்க இயலாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர், தயாரிப்பு நிர்வாகிகள், நடிகர்கள், நடிகைகள், ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கணேஷ் பேசுகையில், “எங்கள் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் நேரடியான இரண்டாவது படம் தான் ‘குமார சம்பவம்’. முதல் படைப்பு ‘யாத்திசை’. யாத்திசை திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழுமுதற் காரணம் ஊடகங்கள் தான். இதற்காக மீண்டும் ஒருமுறை ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘யாத்திசை ‘படத்தை போலவே இந்த ‘குமார சம்பவம்’ படத்திற்கும் மக்களின் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் குமார சம்பவம் தரமான ஃபேமிலி என்டர்டெய்னர். இயக்குநர் பாலாஜி வேணுகோபால் அழகாக இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
நாயகன் குமரன் எங்களுடைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வருகிறார். அவருடனான சந்திப்பின்போது ஒரு முறை உங்களை வைத்து நிச்சயமாக திரைப்படத்தை தயாரிப்பேன் என வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் நிறைவேற்றி விட்டேன்.
இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மோஷன் போஸ்டரிலேயே நிவின் பாலியின் கதாபாத்திரம் கவனத்தை ஈர்க்கிறது. அழுத்தமான இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகி வரும் ‘பேபி கேர்ள்’ படத்தின் மைய கதாப்பாத்திரமாக, நிவின் பாலி உள்ளதை இந்த மோஷன் போஸ்டர் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் நிவின் பாலி எவ்வாறு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தப்போகிறார் என்பதைக் காண, ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த திரைப்படத்தை சமீபத்தில் ‘கருடன்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய அருண் வர்மா இயக்குகிறார். கதை, திரைக்கதை பிரபல எழுத்தாளர்கள் ஜோடி பாபி & சஞ்சய் ( Traffic ) எழுதியுள்ளனர். Magic Frames நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நிவின் பாலிக்கு இணையாக லிஜோமோல் ஜோஸ், சங்கீத பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் அபிமன்யு திலகன், அசீஸ் நெடுமங்காடு, அஷ்வத் லால் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் படமாக்கப்பட்டிருக்கும் ‘பேபி கேர்ள்’, விறுவிறுப்பான கதைக்களம் மற்றும் நிவின் பாலியின் அழுத்தமான நடிப்புடன், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரில்லர்களில் ஒன்றாக உருவாகி வருகிறது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது.
Wayfarer Films பேனரில் ஏழாவது படைப்பாக உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாளப் படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் அனைத்து மாநிலங்களிலும் ஊடக நண்பர்களையும், ரசிகர்களையும் சந்தித்து, நன்றி தெரிவித்து வருகின்றனர்.இன்று சென்னையில் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
நடிகர் சந்து சலீம் குமார் பேசியதாவது…
என்ன பேசுவது என்றே தெரியவில்லை. முதலில் நண்பர் துல்கர் சல்மானுக்கு நன்றி. நண்பர் இயக்குநர் டோமினிக் அருணுக்கு நன்றி. கல்யாணி , நெஸ்லென் என உடன் நடித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. மம்மூட்டி சார் ஃபாரெவர் பெஸ்ட் ஃபிரண்ட் அவருக்கும் நன்றி. இந்தப்படத்தை இந்த அளவு எடுத்துச் சென்ற உங்கள் அனைவருக்கும் நன்றி.
டப்பிங் பார்வையாளர் RB பாலா பேசியதாவது..,
இயக்குநர் டோமினிக் சாருக்கு நன்றி. வழக்கமாக மற்ற மொழி படங்களை வாய்ஸ் டப்பிங் செய்யும் போது சவாலாக இருக்கும். நான் 30 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். இயக்குநர் டோமினிக் வித்தியாசமானவர், முதலில் செய்து தந்த டப்பிங்கை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் இன்னும் கொஞ்சம் பேஸ் வேணும் மணிரத்னம் ஸ்டைல் வேணும் என்றார். முழுமையாக ரீ டப்பிங் செய்து தந்தேன் அவருக்கு பிடித்திருந்தது. துல்கருடன் முன்னரே வேலை செய்துள்ளேன், ஒரு முறை தான் டயாலாக் கேட்பார், ஒரு டேக்கில் முடித்து விடுவார். என்னை அசரவைத்த நடிகர். இந்தப்படத்தில் ஆச்சரியப்பட வைத்தது, கேமராமேன் தான், ஹாலிவுட் தரத்துக்கு செய்துள்ளார். கல்யாணியுடன் மரைக்காயர் படத்தில் வேலை பார்த்துள்ளேன், இந்தப்படத்தில் மிரட்டியுள்ளார். நஸ்லென் சின்ன சின்ன டயாலாக்குகளிலும் கச்சிதமாக செய்வார். அவர் கண்ணைக்காட்டினாலே அத்தனை உணர்வுகள் இருக்கும். எனக்கு சமீபத்தில் அதிக திருப்தி தந்த படம் இது. எல்லோருக்கும் நன்றி. முக்கியமாக இயக்குநருக்கு நன்றி.
எழுத்தாளர் சாந்தி பாலச்சந்திரன் பேசியதாவது…
சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. நாங்கள் நாங்களே பார்த்து சந்தோசப்படும் படத்தை செய்ய விரும்பினோம், இப்போது எல்லோரும் அந்தப்படத்தைக் கொண்டாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் டோமினிக் உடன் பல காலமாக வேலை செய்து வருகிறேன். அவருடன் இணைந்து எழுதுவது மிக சந்தோசமான அனுபவம். இந்த ஐடியா டோமினிக் தான் சொன்னார். நம் மண்ணில் சூப்பர்ஹீரோ செட் செய்வதை பற்றி மிக உற்சாகமாக பேசுவார். அவர் பார்வையை புரிந்து கொண்டு, எல்லோரும் உழைத்தார்கள். அவருக்கு ஆதரவு தந்த தயாரிப்பு தரப்புக்கு நன்றி. இப்போது நாங்கள் அடுத்த பாகத்திற்கு இன்னும் சிறப்பாக எழுத ஆரம்பித்துள்ளோம். அந்தப்படமும் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.
நடிகர் அருண் குரியன் பேசியதாவது…
மீடியா நண்பர்களுக்கு நன்றி. லோகா படத்தை கொண்டாடுவதற்கு நன்றி. இது என் மனதுக்கு நெருக்கமான படம். எங்களுக்கு இப்படம் மிகப்பெரிய பயணம். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லோரிடமும் பாராட்டுக்களை பெறுவதை பார்க்க மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி பேசியதாவது…,
சென்னை என் இரண்டாம் வீடு. இங்கு தான் விசுவல் கம்மியூனிகேசன் படித்தேன். இப்போது மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. டோமினிக் ஒரு சின்ன ஐடியாவாக, ஒரு இண்டிபெண்டண்ட் படமாக தான் சொன்னார். அது வளர்ந்து வளர்ந்து இப்போது பிரம்மாண்டமாக வந்துள்ளது. அதை எல்லோரும் சேர்ந்து டெவலப் செய்து உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. இன்னும் இந்தப்படத்தை அதிகமான பேருக்கு எடுத்துச்செல்லுங்கள் நன்றி.
Wayfarer Films சார்பில் அனூப் குமார் பேசியதாவது…,
இது AGS உடன் எங்களின் இரண்டாம் படம், இப்படத்தை பெரிய அளவில் எடுத்துச் சென்றதற்கு நன்றி. எல்லோரும் படத்தைக் கொண்டாடுவது மகிழ்ச்சி. இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் பார்க்காதவர்கள் எல்லோரும் படத்தை திரையரங்கில் பாருங்கள் நன்றி.
ஏஜிஎஸ் சார்பில் ஐஸ்வர்யா பேசியதாவது…,
லோகா என்னுடைய பெஸ்ட் தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படம். டிரெய்லர் பார்த்தவுடன் இப்படத்தை வெளியீடு செய்வது என முடிவு செய்து விட்டோம். துல்கர் சல்மான் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி. இரண்டாம் பாகமும் ரெடியாகி வருகிறது. கல்யாணி படத்தில் கலக்கி விட்டார். எங்கள் நிறுவனம் மூலம் இன்னும் நல்ல படைப்புகள் தருவோம் நன்றி. இப்படத்தின் அடுத்த பாகங்களும் வரும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி.
இயக்குநர் டோமினிக் அருண் (Dominic Arun) பேசியதாவது…,
இந்தப் பயணம் மிக நீண்ட, இனிமையான பயணம். உங்களுடன் எங்கள் படத்தை பகிர்ந்து கொள்வது மிகுந்த பெருமையாக இருக்கிறது. எங்கள் படத்தைப் பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி. இப்படத்தை கொண்டாடி வரும் அனைவருக்கும் நன்றி.
நாயகன் நஸ்லென் பேசியதாவது…,
நன்றி, எனக்கு என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியவில்லை, அந்தளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் லைஃபில் என்னென்னவோ நடக்கிறது, நான் நினைத்து பார்க்காததெல்லாம் நடக்கிறது. காலையில் சூர்யா சார், ஜோதிகா மேடம் போன் செய்து பாராட்டினார்கள். பலரும் பாராட்டி வருகிறார்கள் எல்லோருக்கும் நன்றி. எங்கள் படத்தை பார்த்து பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
கல்யாணி பிரியதர்ஷன் பேசியதாவது..,
லோகாவிற்கு இந்தளவு பாராட்டு, வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. நீங்கள் ஆதரவு தந்தததால் தான், இந்த அளவு வெற்றி கிடைத்துள்ளது. இப்படத்திற்காக நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்பாவிடம் ஆக்சன் பண்ணபோகிறேன், என்றவுடன் நீயா ஆக்சன் பண்ணபோறே? கால் கையெல்லாம் ஒழுங்காக பார்த்துக் கொள் என்றார். படம் 100 கோடி வசூலித்துள்ளது அதற்கு, நான் மட்டுமே காரணமில்லை. மொத்த குழுவின் உழைப்பு தான் காரணம். நான் மட்டும் கிரடிட் எடுத்துக்கொள்ள முடியாது. இப்படத்திற்கு இவ்வளவு பாராட்டுக்களை தந்த அனைவருக்கும் நன்றி.
நடிகர் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் பேசியதாவது…
நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன். நான் எந்த மொழியில் படம் செய்தாலும், இங்கு படம் பிரஸ்க்கு போட்டால், படம் நன்றாக இருந்தால், பிரஸ் உடனே பாராட்டுவார்கள், கொண்டாடுவார்கள் அவர்களுக்கு நன்றி. நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம் இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள் இந்த வெற்றி அவர்களுக்கானது தான். கல்யாணியைத்தவிர இந்தப்படத்திற்கு வேறு யாருமே செட் ஆகமாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் டிரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார். நேரடித்தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை. இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன் இந்த அளவு கிரேஸ் பார்க்கவில்லை. அதற்கான மரியாதை உடன் அடுத்தடுத்த பாகங்களை எடுப்போம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருவோம். என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை, எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள். இப்படத்தை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இப்படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தொழில் நுட்பக் குழு
எழுத்து இயக்கம் – டோமினிக் அருண் தயாரிப்பு – Wayfarer Films ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி எடிட்டிங் – சாமன் சாக்கோ எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன் மேக்கப் – ரோனக்ஸ் சேவியர் உடை அலங்காரம் – மெல்வி ஜே, அர்ச்சனா ராவ் ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார் புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல் சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்
இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது.
தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில்,
தேஜா சஜ்ஜா பேசியபோது,
“அனைவருக்கும் வணக்கம், இங்கு நான் வருகை தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிராய் திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி வெளியாகிறது. நீங்கள் அனைவரும் இதுவரை இப்படத்திற்காக கொடுத்த ஒத்துழைப்பை மேலும் தருவீர்கள் என்று நம்புகிறேன். ஆக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, எமோஷன் மற்றும் டிவோஷன் நிறைந்த படம் தான் மிராய்.
ஒரு வருடத்தில் சில படங்களே திரையரங்கில் பார்க்கும் படியாக வெளியாகின்றன; அந்த வரிசையில் மிராய் படமும் இருக்கும். 3 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள். பீபிள் மீடியா பேக்டரி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறேன்; இன்னும் பல முறை இணைய ஆசைப்படுகிறேன். எங்களை நம்பியதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி அவர்களால் தான் இது சாத்தியமானது. அவருடைய திரைக்கதை தான் இப்படத்தை சிறப்பித்துள்ளது. AGS நிறுவனத்துடன் முதல் முறையாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. அர்ச்சனாவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்றி.
மிராய், என்றால் “எதிர்காலத்தின் நம்பிக்கை” என்று அர்த்தம். படத்தில் இன்னொரு அர்த்தம் உள்ளது; அது ஒரு ட்விஸ்ட் மூலம் தெரியவரும்.
மேலும், இப்படத்தை நாங்கள் சீன மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் தயாரித்துள்ளோம். காரணம், சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இந்திய படங்களுக்கு மார்க்கெட் அதிகம் உள்ளது. இதற்கு முன் வெளியான ஹனுமான் திரைப்படமும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
நான் தொடர்ந்து ஃபேண்டசி படங்களை நடிப்பதன் காரணம், எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் இன்னும் போகவில்லை. எனக்கும் ஃபேண்டசி படங்கள் பார்க்க பிடிக்கும். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் நடப்பவைகள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அது நிஜத்தில் சாத்தியமில்லாததால், சினிமாவில் அதைச் செய்ய விரும்புகிறேன்.
இப்படத்தில் VFX பெரும் சவாலாக இருந்தது. இந்தியத் திரைப்படங்களின் தரம் சர்வதேச தரத்திற்கு உயர வேண்டும் என்பதற்காக அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரைக்கதை மற்றும் VFX-ல் அதிக திறன் கொண்ட இயக்குனர்கள் பிரசாந்த் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி.
ஹனுமான் படம் உலக அளவில் பெரும் வெற்றியை பெற்றது; மக்களின் ஆதரவும் கிடைத்தது. அதனால் மிராய் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகப் பெரிய அளவில் முயற்சி செய்துள்ளோம்.
இப்படத்தில் நாங்கள் வழக்கமான சண்டைக் காட்சிகள் இல்லாமல், அதிவேக சண்டைக் காட்சிகளை அமைக்க முயற்சித்துள்ளோம். அதற்காக, கட்சா மாஸ்டர் மற்றும் நங் மாஸ்டரை தாய்லாந்திலிருந்து வரவைத்தோம். அதுமட்டுமின்றி, நான் தாய்லாந்து மற்றும் பாங்காக் நகரங்களுக்கு சென்று 20 நாட்கள் பயிற்சி மேற்கொண்டேன். இப்படத்தில் நீங்கள் காணும் அனைத்து சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நான் நேரடியாக நடித்துள்ளேன்.
இப்படம் சர்வதேச அளவிற்கு உயர வேண்டும் என்பதற்காக, ஹிமாலயா, இலங்கை போன்ற பல இடங்களுக்கு சென்று சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளோம்.
அனைவரும் வரும் செப்டம்பர் 12ம் தேதி குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து மிராய் படத்தை கண்டுகளிக்க வேண்டும். இப்படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்.”
அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணிபிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்குள்வருகிறார். அங்கே பேக்கரி ஒன்றில் பணியாற்றும் நண்பர்கள் அவர்கள் தங்கியிருக்கும்.அடிக்குமாடி அபார்ட்மெண்ட் குடியிருப்பில் சந்திரா வீட்டில் இருக்கும்எதிரே வாசிக்கிறார்கள் நஸ்லன்,சந்து சலீம்குமார், மற்றும் அருண்குரியன், ஆகியோர் குடியிருப்பில் தங்கி இருக்கிறார்கள்.ஆனால் எதிரே மாடியில் இருக்கும் சந்திரா அவரால் ஈர்க்கப்படுகிறார்கள். அதே சமயம்,மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உள்ள உறுப்புகளை திருடும் கும்பலால்பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன்தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன்,கல்யாணி பிரியர்தர்ஷனுடன் அடிக்கடி மோதல் வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால்,கல்யாணி பிரியர்தஷன் அவள் அதீத மாயா சக்திகள் கொண்டபெண் மட்டும் அல்ல, டிராகுலா ஆங்கிலம் படத்தில் வரும் ரத்தக்கட்டேரி போலஇந்த படத்தில் ரத்ததை உரிஞ்சும் ஹிட்பேய் போன்றகதாபாத்திரத்தில் வருகின்ற அதற்கும் மேல என்ற உண்மை தெரியவருகின்றன. அவர் யார் ? அவரைப் பற்றிய உண்மைதெரிந்த பிறகு என்ன நடந்தது ? என்பதை நம்ம புராணக் கதைக் கதாபாத்திரத்தை
சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கும் வகையில் சொல்வது தான் ’லோகா – அத்தியாயம் ஒன்று : சந்திரா’.என்ற கதைக்களம்
சந்திரா என்ற கதாபாத்திரத்தில் மாயா அதீத சக்திகள் படைத்த பெண்ணாககல்யாணி பிரியதர்ஷன் வெகுவாக மிரட்டியுள்ளார்.