Cinema

அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

கல்கி 2898 கிபி இல், அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் கமல்ஹாசன் உச்ச யாஸ்கின் பாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பார்வையாளர்கள் இருவரையும் ஒன்றாக ஒரே ஃபிரேமில் காண வெகு ஆவலோடு உள்ளனர்.

ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் திரையில் மீண்டும் இணைவதைக் காணும் வாய்ப்பிற்காகவும், படத்தின் புதுமையான கதைக்களம் மற்றும் பல நட்சத்திரங்களை ஒன்றாக தரிசிக்கவும் ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கல்கி 2898 கிபி இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமென எதிரப்பார்க்கப்படுகிறது. இப்படம் இந்திய புராணக்கதையில் அடிப்படையில், டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடக்கும் கதையை, இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், அட்டகாசமான உருவாக்கத்தில் வழங்குகிறது.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர், இப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் ‘டைம்லெஸ் வாய்சஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம்

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பவதாரிணி குடும்பத்தினரின் இதயம் தொட்ட ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான‌ டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி ‘திமிரி எழுடா’ என்ற உத்வேக‌மூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, கோட் திரைப்படத்தில் இடம்பெறும் குடும்ப பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகியுள்ளார்.

இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெரிதும் மகிழ்ந்த கிருஷ்ண சேத்தன், பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து பெற்று, மூன்று தினங்கள் தனது குழுவினருடன் உழைத்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்கு அதை பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய கிருஷ்ண சேத்தன், “பவதாரிணி அவர்களின் குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா அவர்களும் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்,” என்று கூறினார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தும் பணியில் கிருஷ்ண சேத்தன் மற்றும் அவரது டைம்லெஸ் வாய்சஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தன் மூன்றாம் தலைமுறை இசைக்கலைஞர் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் ‘ரங் தே பசந்தி’யில் இணைந்து இரண்டு தசாப்தங்களாக ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். இசைக்கலைஞராக குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளதோடு, பிட்ச் இன்னோவேஷன்ஸ் எனும் நிறுவனத்தையும் கிருஷ்ண சேத்தன் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த முன்னோடி இசை மென்பொருள் நிறுவனம் அதன் புதுமையான தயாரிப்புகளுக்காக பல சர்வதேச பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைம்லெஸ் வாய்சஸ் குறித்து கிருஷ்ண சேத்தன் கூறுகையில், “பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். ரஹ்மான் சாரிடம் இந்த யோசனையை நாங்கள் முன்வைத்த போது அவர் அதை வரவேற்றார். இதைத் தொடர்ந்து ‘திமிரி எழுடா’ பாடலுக்கு பம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீதின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவர்களது குரலை பயன்படுத்தினோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்றார்.

கிருஷ்ண சேத்தன் மேலும் கூறுகையில்: “குரல்களை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பிரதியெடுத்து நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், பிரபல பாடகர்கள் முதல் இளம் பாடகர்கள் வரை பயனடைய முடியும். பாடகர்கள் தங்கள் குரலை என்றென்றும் பாதுகாக்க முடியும். உலகெங்கும் உள்ள இசை நிறுவனங்கள் மற்றும் இசையமைப்பாளர்களை அவர்கள் எளிதில் அணுக முடியும். பிரபல நடிகர்கள் மிகவும் சுலபமாக பல மொழிகளில் டப்பிங் பேச முடியும்,” என்றார். “கலைஞர்களுக்கு முன்னுரிமை” என்ற அணுகுமுறையுடன், கலைஞர்களின் உரிமைகளை பாதுகாப்பதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். “கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அவர்களின் தேவைகளை ஆதரிப்பதன் மூலமும் நாங்கள் வளர விரும்புகிறோம்,” என்று கிருஷ்ண சேத்தன் தெரிவித்தார்.

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது – இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள் !!

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

முழு வீடியோ லிங் :

படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்காவிடம் “இது இயக்குநர் நாகியின் ஐடியாவா, அல்லது உங்கள் ஐடியாவா ? என்று கேட்டேன். அதற்கு தத் சகோதரிகள், “நாகி நம்மருகே இருக்கும் போது தனியாக யோசிக்க ஏதும் உள்ளதா என்ன? ” என்று பதிலளித்தனர் என்றார்.

தீபிகா படுகோன் பிரபாஸை போனில் அழைத்ததை குறிப்பிட்டு, “கமல் சாருடன் எங்கள் முதல் நாள் படப்பிடிப்பை முடித்த, சிறந்த அனுபவத்தை கூறவே அழைத்தேன்” என்று தெரிவித்தார். பிரபாஸ் கூறும்போது, “என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம் என்றார். படத்தின் கான்செப்ட் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், “இந்தியா வித்தியாசமான களங்களுக்கு தயாராக உள்ளது, இக்கதையை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்” என்றார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்களுடன், இப்படம் ஒரு இணையற்ற சினிமா அனுபவமாக இருக்கும்.

Kalki X Kantara: Rishabh Shetty Takes the Wheel of Bujji from ‘Kalki 2898 AD’

In a delightful crossover moment, actor Rishabh Shetty, renowned for his role in the blockbuster ‘Kantara,’ recently took the wheel of Bujji, the futuristic vehicle from ‘Kalki 2898 AD.’ The official Twitter page of “Kalki 2898 AD” celebrated this collaboration by posting, “Kalki x Kantara,” along with a video of Shetty driving Bujji through the town of Kundapura.

Shetty’s drive in Bujji has added an exciting twist to the highly anticipated film, creating a buzz and further fueling anticipation for its release. Earlier, Anand Mahindra had also taken Bujji for a spin, adding to the vehicle’s allure.

In a heartfelt gesture, Shetty extended his best wishes to Prabhas, the lead actor of ‘Kalki 2898 AD,’ expressing his admiration for the superstar. He also encouraged moviegoers to watch the film in cinemas on June 27th.

Directed by Nag Ashwin and produced by Vyjayanthi Movies, ‘Kalki 2898 AD’ boasts a stellar cast including Amitabh Bachchan, Kamal Haasan, Prabhas, Deepika Padukone, and Disha Patani. The film is set to hit theaters on June 27, 2024.

நடிகர் சாய் துர்கா தேஜின் #SDT18 திரைப்பட படப்பிடிப்பு துவங்கியது !!

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் புதிய பான்-இந்தியா ஹை-ஆக்ஷன் டிராமா திரைப்பபடம் #SDT18 அதிகாரப்பபூர்வமாக அறிவிக்கப்பட்டது !!

‘விருபாக்ஷா’ மற்றும் ‘ப்ரோ’ ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து, மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் தனது அடுத்த படத்தை துவங்கியுள்ளார். அறிமுக இயக்குநர் ரோஹித் KP இப்படத்தை இயக்குகிறார். பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள், K.நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்த்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அட்டகாசமான போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கண்ணிவெடிகளால் சூழப்பட்ட ஒரு பாலைவனத்தின் மத்தியில் தனித்த பச்சை மரத்தைக் கொண்டுள்ள போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்த அதிரடி- பீரியட் – ஆக்சன் திரைப்படத்தில் சாய் துர்கா தேஜ் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார். முதல் ஷெட்யூலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம்” என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு #SDT18 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்கி 2898 கி.பி க்ரோனிக்கிள்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது

– இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களை ஒன்றாக கண்டுகளியுங்கள் !!

சமீபத்தில் வெளியான டிரெய்லரைத் தொடர்ந்து எட்டுதிக்கும் “கல்கி 2898 கிபி” படத்தின் பேச்சாகவே இருக்கிறது. மாய உலகைகாட்டும் இந்த மகத்தான படைப்பின் வெளியீட்டை நோக்கி ரசிகர்கள், பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் இப்படத்திற்காக, மிகவும் தனித்துவமான விளம்பர உத்திகளை பயன்படுத்தி வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

முழு வீடியோ லிங் : https://youtu.be/z6cZSWF7dy4

படத்தின் டிரெய்லரைத் தொடர்ந்து , தயாரிப்பாளர்கள் இப்போது கல்கி 2898 கிபி படத்தின் க்ரோனிகல்ஸ் என்ற நேர்காணல் தொடரை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொடரில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோருடன் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். வீடியோவில் நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் தாங்கள் பணியாற்றிய சுவாரஸ்ய அனுபவங்களைப் பற்றியும், இப்படத்தினைப் பற்றியும் பல விசயங்களை பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோவில், மெகாஸ்டார் அமிதாப் பச்சன், “பிரபாஸ் மற்றும் பிரபாஸின் அனைத்து ரசிகர்களும், தயவு செய்து என்னை மன்னிக்கவும், இந்தப்படத்தினை பற்றி தெரியவந்த போது, தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா தத் மற்றும் பிரியங்காவிடம் “இது இயக்குநர் நாகியின் ஐடியாவா, அல்லது உங்கள் ஐடியாவா ? என்று கேட்டேன். அதற்கு தத் சகோதரிகள், “நாகி நம்மருகே இருக்கும் போது தனியாக யோசிக்க ஏதும் உள்ளதா என்ன? ” என்று பதிலளித்தனர் என்றார்.

தீபிகா படுகோன் பிரபாஸை போனில் அழைத்ததை குறிப்பிட்டு, “கமல் சாருடன் எங்கள் முதல் நாள் படப்பிடிப்பை முடித்த, சிறந்த அனுபவத்தை கூறவே அழைத்தேன்” என்று தெரிவித்தார். பிரபாஸ் கூறும்போது, “என் திரை வாழ்க்கையில் இதுவே சிறந்த கதாபாத்திரம் என்றார். படத்தின் கான்செப்ட் குறித்து கமல்ஹாசன் கூறுகையில், “இந்தியா வித்தியாசமான களங்களுக்கு தயாராக உள்ளது, இக்கதையை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்” என்றார்.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்களுடன், இப்படம் ஒரு இணையற்ற சினிமா அனுபவமாக இருக்கும்.

“பயமறிய பிரம்மை” திரைவிமர்சனம்

சிறை சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் கொலை குற்றவாளியான ஜே.டி. ஜெகதீஷ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதுவதற்காக பத்திரிக்கையாளர் வினோத் சாகர் அவரை சந்தித்து அவருடைய வாழ்க்கையைப் பற்றி உரையாடுகிறார்.இருவருக்குமான உரையாடலின் போது, “புத்தகங்கள் மனிதர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” வினோத் சாகர் கூறுகிறார்.

அது எப்படி நடக்கும்? என கொலை குற்றவாளியான கதாநாயகன் ஜே.டி. ஜெகதீஷ் கேட்க கேள்விக்கான பதிலாக, அவரது வாழ்க்கையையே புத்தக வாசகர்களின் கண்ணோட்டத்தில் திரையில் காட்சிகளாக மாறி இருப்பது ‘பயமறியா பிரம்மை’ திரைப்படத்தின் மீதி கதை.

இந்த திரைப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஜே.டி.ஜெகதீஷ் ,மற்றும் குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகிய ஆறு பேர் ஜே.டி ஜெகதீஷ் கதாபாத்திரமாக உருமாறி நடித்திருக்கிறார்கள்.

மாறன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய் மற்றும் ஏ.கே, எழுத்தாளர் கபிலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வினோத் சாகர், ஜே.டி.ஜெகதீஷின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திவ்யா கணேஷ் என இந்த பயமறியா பிரம்மை திரைப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் தங்களது வேலை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் பிரவின் மற்றும் நந்தா ஒளிப்பதிவின் மூலம் இந்தத் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் கே -வின் இசையும் பாடல்களும் பிண்ணனி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

ஒரு கதையை புத்தகமாக பதிவு செய்வார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் ஒரு புத்தகத்தை கதையாக வித்தியாசமான திரைக்கதையை அமைத்து, வித்தியாசமான முறையில் கதை சொல்கிறேன் என்ற பெயரில், கொலையை கலையாக சித்தரித்து அதிர வைத்தவர் அதை புரியும் படியாக பதிவு செய்திருக்கலாம் இயக்குனர் ராகுல் கபாலி .

மொத்தத்தில் பயமறியா பிரம்மை—– பயமும் கம்மி, பிரம்மையும் கம்மி…………

While the 18th Mumbai International Film Festival was held in Mumbai

While the 18th Mumbai International Film Festival was held in Mumbai (June 15th to 21st), its Chennai Edition was organised by N. F.D. C.(National Film Development Corporation) in Tagore Film Centre , Chennai which showcased several Documentaries, Short Fiction and Animation Movies from morning till evening.
The Festival was flagged off on Saturday, 15th June with Billy and Molly: An Otter Love Story from the USA, directed by Charlie ,Hamilton -James.
18th June was earmarked for Red Carpet which was attended by dignitaries as Sri. Annadurai, Additional Director , P. I. B. (Press Information Bureau), E. Thangaraj , Director of CIFF(Chennai International Film Festival), Actor/Director, Vijay Aadhiraj and Actor G. M. Kumar.
Rohini Gauthaman, Head, N. F. D. C., Chennai , Thembavani and Nidhi Dhanamithran, Deputy Managers, were also present on the occasion.
Cineasates, film buffs, college students and a vast multitude of film lovers at large, watched the films following which they were seen discussing and deliberating on the content, directorial acumen and other technical aspects related to the films that were screened.
Finally, the curtains were downed on the 21st evening.
We can hopefully expect more of many good films, next year!
Thanks to NFDC…

கவுதம் மேனனின் புதிய படைப்பில் யோகி பாபு ? என்னவாக இருக்கும் ரசிகர்கள் ஆவல் ? !!

“வாரணம் ஆயிரம்”, “காக்க காக்க”, “மின்னலே”, “விண்ணைத்தாண்டி வருவாயா”, “வேட்டையாடு விளையாடு” போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, தனது அடுத்த படைப்பு குறித்து மறைமுகமாக ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.

மம்முட்டியுடன் கௌதம் மேனன் இணையும், அவரது முதல் மலையாளத் திரைப்படம் தாமதமாவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் சோஷியல் மீடியா இன்புளுயன்சர் பால் டப்பா ஆகிய மூவரும், ஒரு படப்பிடிப்பு தளத்தில் காரில் அமர்ந்துகொண்டு வைப் செய்கின்றனர். 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படத்திலிருந்து “வனிதாமணி” என்ற இசைஞானி இளையராஜா இசையில் உருவான கிளாசிக் பாடலுக்கு மூவரும் வைப் செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. யாரும் எதிர்பாராத இந்த மூவர் கூட்டணி குறித்து, ரசிகர்கள் தங்கள் உற்சாகத்தைப் பகிர்ந்து, ஆவலுடன் பல கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் – ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் ‘புரொடக்சன் நம்பர் 3’!

‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌ இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர் 3’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் தயாரிப்பாளர்களும், ஃபேமிலி என்டர்டெய்னர் ஜானரிலான திரைப்படங்களை தொடர்ந்து அளித்து வரும் நடிகர் ஆர். ஜே. பாலாஜியும் இணைந்திருப்பதால், இவர்களின் கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்.ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மட்டும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.