Breaking
June 28, 2026

“மிராய்” திரைவிமர்சனம்

கலிங்கத்து நாட்டின் போருக்குப் பின் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய மிக பெரிய ரகசியத்தை 9, புத்தகங்களில் மறைத்து வைக்கிறார்.மிகப்பெரிய தீய சக்திகளை இந்த 9. புத்தகங்களில் கைபற்றாமல் இருக்க 9 . வீரர்களை நியமிக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 .
புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார்.மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களத்தில் இறங்க, அதை அவர் எப்படி செய்கிறார் ?
என்பதை மிக பிரமாண்டமாக சொல்வது தான் “மிராய்”. கதைக்களம்.

தேஜா சஜ்ஜா, ஃபேண்டஸி படங்களின் கதைக்கு கனகச்சிதமாக

பொருந்தியுள்ளார். தன்னிடம் இருக்கும் மிராயின் சக்தி என்ன ? என்று தெரியாமல் இருப்பவர், அது தெரிந்ததும் எடுக்கும் விஸ்வரூபமும் திரையரங்கில் நிச்சயம் கைதட்டல் பெறுகிறார்.வில்லனாக நடித்து ள்ள மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்கள் மூலம் சாகாவரம் பெற்று,உலகத்தை ஆளும்கதாபாத்திரத்தின் ஏற்ப நடித்துள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக்,தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அனைவரும் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நடித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி கேமரா பிரமிக்க வைக்கிறது .மணிபாபு கர்ணம் கடவுள் ராமரையும், அவர் வில்லையும் மையமாக கொண்டு ஒரு ஃபேண்டஸி ஜானரை சொல்லியிருக்கிறார்கள்

Related Post