சமீபத்தில் வெளியான டங்கி டிராப் 4 படத்தின் மீதான எதிர்பார்ப்பை, உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ரசிகர்கள் ஒரு அற்புதமான திரை அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உணர்ச்சிகள் நிறைந்த, ஒரு மகத்தான மனதைக் கவரும் உலகத்தை வடிவமைத்திருக்கும் விதத்தைப் பார்வையாளர்கள் பாராட்டினாலும், படத்தின் மையத்தை அழகாக வெளிப்படுத்தும் பாடல்களையும் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்போது அவர்களின் உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் மேலும் ஒரு அப்டேட் வந்துள்ளது. விளம்பர நோக்கங்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட “டங்கி” படத்திற்கென ஒரு சிறப்புப் பாடலைப் படமாக்க SRK ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தந்த தகவலின் படி , “ஷாரூக் மற்றும் ஹிரானி ஆகியோர், செவ்வாய் இரவு சுஹானாவின் படத்தின் பிரீமியரின்போது வெளியிடும்படி இப்பாடலை மூன்று நாட்களில் படமாக்கியுள்ளனர். மிகக்குறைந்த குழுவினருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அபுதாபியின் புறநகர் பகுதிகளில் இப்பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் SRK விற்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் SRKவின், பாடல் படப்பிடிப்பு பற்றிய செய்தி அவரது உள்ளூர் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.
KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்..
திண்டுக்கல் I லியோனி பேசியதாவது.., முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி வெங்கட் அட்டகாசமாக நடிக்துள்ளார். எனது பேரனாக வைபவ் நடித்துள்ளார். மிக நல்ல மனிதர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். இப்படத்தில் சாதாரணமாக வந்து போகும் கேரக்டர் இல்லை. டான்ஸர்களோடு டான்ஸ் ஆடும் தாத்தா கேரக்டர். படத்தில் என்னை டான்ஸ் ஆட வைக்க, அவ்வளவு கஷ்டப்பட்டார் இயக்குநர். படம் நன்றாக வந்துள்ளது குழந்தைகளோடு பார்க்ககூடிய அருமையான படம். ஆதரவு தாருங்கள். நன்றி.
நடிகர் காளி வெங்கட் பேசியதாவது… முண்டாசுபட்டி உதவி இயக்குநர் பாரி தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் நாங்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒரே செட்டாக இருந்து பணிபுரிந்தவர்கள். இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்த படம், திரைக்கு வருவது மகிழ்ச்சி. இப்படத்தில் இருக்கும் காமெடி, படம் எடுக்கும் போது இருந்ததை விட, பார்த்த போது இன்னும் சிறப்பாக வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நண்பர் முனீஷ்காந்துடன் நடித்தது மகிழ்ச்சி. வைபவ், பார்வதி ஆகியோருடன் வேலை பார்த்தது சந்தோசம். இயக்குநர் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.
நடிகர் கபீர்சிங் பேசியதாவது… இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வைபவ்,பார்வதி இருவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இது மிக நல்ல படம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது, நீங்கள் உணர்வீர்கள், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் வினோத் பேசியதாவது.. இந்தப்படத்தில் கதைக்கு தேவையான அளவில் அத்தனை நடிகர்களை ஒருங்கிணைத்ததே பெரிய வெற்றி தான். எல்லோரும் தங்கள் படம் போல் வேலைப்பார்த்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை படம் செம்ம காமெடியாக இருக்கும். முனீஷ்காந்த் கலக்கியிருக்கிறார். ஆர்ட் டைரக்டர் எனக்குப் பெரிய உதவியாக இருந்தார். அவருக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது… இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ ஹீரோயின் அனைவருக்கும் என் நன்றி. KJR Studios தயாரிப்பு நிறுவனம் என் சொந்த நிறுவனம் போல அவர்களின் அனைத்து படங்களிலும் நான் நடித்துள்ளேன். இந்தப்படம் நீங்கள் மனம் விட்டு சிரித்து மகிழும் படமாக இருக்கும். இப்படம் குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும். இயக்குநருக்கும், என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
கபிலன் வைரமுத்து பேசியதாவது.. நண்பர் பாரி K விஜய்யுடைய நீண்ட நாள் கனவு. பல காலமாக இந்தப்படம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். இப்போது இறுதியாக இப்படம் திரைக்கு வருவது மகிழ்ச்சி. எனக்கு வைபவ் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும். ஒரு காதாநாயகனாக குறிப்பிட்ட எல்லைக்குள் அவர் செய்யும் காமெடி மிக நன்றாக ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. இந்தப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையில் 4 பாடல்கள் எழுதியுள்ளேன். இயக்குநர் பாரியிடம், யாருக்கு படமெடுக்கிறேன் என்கிற தெளிவு இருக்கிறது. அவரின் மனதிற்கு இந்தப்படம் பெரியதாக ஜெயிக்க வேண்டும். சென்னை வெள்ளத்தால் நாம் தற்போது மிக சோகமான காலகட்டத்தில் சிக்கியுள்ளோம் அதிலிருந்து நம்மை மீட்டு சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கவேண்டும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் பாரி K விஜய் பேசியதாவது.. இந்தக்கதையைத் தயாரிப்பாளரிடம் சொன்ன போது, தயாரிப்பாளர் இந்தக்கதை, நல்ல கதை, நன்றாக எடுத்தால் ஓடும் என்றார். அவர் நான் நினைத்ததை விட, கேட்டதை விட இப்படத்திற்காக அதிகம் செலவழித்தார். அவரால் தான் இத்திரைப்படம் நன்றாக வந்துள்ளது. எழுதியதை விட, எடுப்பது கஷ்டம் ஆனால் அதை மகிழ்ச்சியோடு உழைத்து எடுத்துள்ளோம். வைபவ், பார்வதி இருவரும் என்னைப் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக நடித்து தந்தார்கள். அதே போல் பூதம் என யோசித்த போதே முனீஷ் காந்த் தான் மனதில் இருந்தார். நன்றாக நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், காளிவெங்கட் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் தாத்தா கேரக்டர் என்ற போதே திண்டுக்கல் ஐ லியோனி தான் ஞாபத்திற்கு வந்தார். அவரும் சிறப்பாக செய்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ஆக்சனை குழந்தைகளும் ரசிக்கும் படி தந்துள்ளார். படத்தை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம் தற்போது திரைக்கு வருகிறது. ஊடக மக்கள் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடிகை பார்வதி பேசியதாவது.. என் ஃபேவரைட் ஜானர் , ஃபேண்டஸி காமெடி தான். எனக்கு அந்த ஜானரில் ஆலம்பனா படத்தின் வாய்ப்பு வந்தது மிக்க மகிழ்ச்சி. இந்தப்படத்தில் முனிஷ் காந்த், காளி வெங்கட் ,ஆனந்த்ராஜ் என மிக நல்ல மனிதர்களோடு வேலைபார்த்தது சந்தோஷமாக இருந்தது. வைபவ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசித்து சிரிக்கும் படமாக இருக்கும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்
நடிகர் வைபவ் பேசியதாவது… இப்படத்தின் கதையை KJR லிருந்து சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். இந்தப்படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.
நடிகர்கள்: வைபவ், பார்வதி, முனிஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட் ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர் திண்டுக்கல் I லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங்
தொழில் நுட்ப குழு விபரம் இயக்குநர்: பாரி K விஜய் இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி எடிட்டிங் : ஷான் லோகேஷ் கலை: கோபி ஆனந்த் சண்டைக்காட்சிகள்: பீட்டர் ஹெய்ன் பாடல் வரிகள் -பா.விஜய், கபிலன் வைரமுத்து நடனம்: ஷெரிப் ஆடை வடிவமைப்பாளர் – கீர்த்தி வாசன் மக்கள் தொடர்பு : யுவராஜ்
ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.
பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.
தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.
இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.
தொழில்நுட்ப குழு விபரம் இயக்கம் – மந்த்ரா வீரபாண்டியன் தயாரிப்பு நிறுவனம் – ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் TN திரையரங்கு வெளியீடு – பாபின்ஸ் ஸ்டுடியோஸ் இசையமைப்பாளர் – கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு – பர்வேஸ் K எடிட்டர் – சதீஷ் சூர்யா கலை இயக்குனர் – V.மாயபாண்டி சண்டைக்காட்சி – சுரேஷ் குமார் ஆடை வடிவமைப்பாளர் – கடலூர் M ரமேஷ், ஷேர் அலி N (வெங்கட் செங்குட்டுவன்) ஒப்பனை – என்.சக்திவேல் மக்கள் தொடர்பு – யுவராஜ்.
பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் இப்படத்தின் ஒரு சிறு துளி போதும், ரசிகர்களுக்கு உற்சாகத்தில் கொந்தளிக்க, தற்போது வெளியாகியுள்ள டீசர், அந்த விருந்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது.
திரையுலக காதலர்களின் நீண்ட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மோகன்லாலின் வரலாற்றுத் திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. புகழ்மிகு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் முதல் திரைப்படமாக மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படம் வெளிவருகிறது.
ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
நடிகர் மோகன்லால் கூறுகையில், “படைப்பாளி லிஜோ ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளார், அதன் ஒரு துளியை இந்த டீசரில் பார்வையாளர்கள் பார்க்க முடியும்.” என்றார்.
‘மலைக்கோட்டை வாலிபன்’ யூட்லீ நிறுவனம் மோகன்லாலுடன் இணைந்து தரும் முதல் திரைப்படமாகும். “லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஒரு புதுமையான உலகை படைத்ததோடு மட்டுமல்லாமல், மோகன்லால் உடன் அற்புத நடிகர்கள் கூட்டணியையும் இப்படத்தில் இணைத்துள்ளார். மலையாள திரை உலகில் இப்படம் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும், ஏனெனில் இதன் தீம், பிரம்மாண்டம் மற்றும் உணர்ச்சிகரமான பின்னணி என அனைத்தும் உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளன. இதனால்தான் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்” என்கிறார் சரேகாமா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் – பிலிம்ஸ் & ஈவென்ட்ஸ் சித்தார்த் ஆனந்த் குமார்.
‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்திற்கு வசனம் எழுதியவர், இதற்கு முன்பு லிஜோவுடன் ‘நாயகன்’, ‘ஆமென்’ படங்களில் பணியாற்றிய P S ரஃபீக் ஆவார். “என்னைப் பொறுத்தவரை, ஒரு கருப்பொருளை திரைப்படமாக உருவாக்கும் செயல்முறையாக நடந்தது, ஒரு பெரிய வெற்றியை ப்ளாக்பஸ்டரை உருவாக்கவேண்டும் என்ற அழுத்தத்திலிருந்து இது உருவாகவில்லை, இது இயல்பாக நடந்த திரைப்படம். ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் அடிப்படை கரு, சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் முளைத்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவான கதைக்களமாக உருமாற்றம் பெற்றது. எழுத்தாளர் ரஃபீக் அந்த உலகத்தை என்னுடன் இணைந்து விரிவுபடுத்தினார், அதன் பிறகுதான் அந்த பாத்திரத்திற்கு லாலேட்டன் (மோகன்லால்) சரியான பொருத்தமாக இருப்பார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்கிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.
“மோகன்லாலுடன் நீண்ட நாள் பழகிய நான், திரைப்படத் தயாரிப்பில் இறங்க முடிவு செய்தபோது, இயல்பாகவே அவரை மிகப்பெரியதொரு படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். லிஜோ போன்ற திறமையான இயக்குநர் மோகன்லாலுடன் கைகோர்க்கும் போது, மக்கள் கண்டிப்பாக மிகப்பெரும் பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம்,” என்கிறார் ஷிபு பேபி ஜான்.
இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்க, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, டேனிஷ் சைட், மனோஜ் மோசஸ், கதா நந்தி மற்றும் மணிகண்டன் ஆச்சாரி ஆகியோர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர், ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி 25, 2024 அன்று திரைக்கு வருகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்19 படத்தின் தலைப்பாக டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரவுன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) அறிவிக்கப்பட்டுள்ளது!!
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) தலைப்பிடப்பட்டுள்ளது !!
ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகவும் என எதிர்பார்க்கப்படும் இப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நாடு முழுக்க ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகிறது.
தாங்கள் செய்ய விரும்பிய படத்தை ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் முனைப்பில் பொறுமை மற்றும் ஆர்வத்துடன், இருவரும் படத்தை வடிவமைப்பதிலும் ஒரு நட்சத்திரக் குழுவை அமைப்பதிலும் தங்கள் முழுமையான நேரத்தை எடுத்துக் கொண்டனர். பல ஊகங்களுக்குப் பிறகு, படக்குழு படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் பகிர்ந்து கொண்டது, அவர்களின் திட்டமிடல் மற்றும் படைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
“டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) என்ற தலைப்பை வெளிப்படுத்தும் வீடியோ, பார்வையாளர்களை தீவிரமான ஒரு படைப்புலகத்திற்குள் அழைத்துச் செல்லும் என்பதை உறுதியளிப்பதுடன், வெளியீட்டுத் தேதியையும் அறிவித்து, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் K நாராயணா கூறுகையில்.., “எங்களின் மிகப்பெருமையான படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யாஷ் மற்றும் கீது இருவரும் ரசிகர்களை மகிழ்விக்கும் ஆக்சனுடன் ஒரு மிகச்சிறந்த படைப்பாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால், இப்படத்தை அறிவிக்க சிறிது காலதாமதாமானது. நாங்கள் தயாரிக்கும் இந்த அற்புதமான மற்றும் பிரம்மாண்டமான படத்தை உலகத்திற்கு காட்டுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
படத்தைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட கீது மோகன்தாஸ், ”எனது கதை சொல்லல் பாணியில் நான் எப்போதும் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். எனது முந்தைய படங்களான லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகியவை சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், எனது நாட்டில் எனது சொந்த பார்வையாளர்களை திருப்திபடுத்தி வெற்றிப்படம் தர ஆசைப்பட்டேன். அந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்த திரைப்படம். இந்த படம் இரண்டு எதிர் உலகங்களின் கதையை அழகியல் கலந்து சொல்லும் ஒரு கலவையான படைப்பாக இருக்கும், இந்தப்படத்திற்காக யாஷுடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யாஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தை கீது மோகன்தாஸ் எழுதி இயக்குகிறார், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி.
தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, “ஜவான்” மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொட்டு, தற்போது ‘ஜவான்’ மூலம் ஹாலிவுட்டில் இடம்பெற்ற முதல் தமிழ் இயக்குநராக சாதனை படைத்திருக்கிறார்.
ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, ‘ஜவான்’ திரைப்படம், இந்தியாவின் அத்தனை முன்னணி மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படம் இந்தியாவில் திரையரங்குகளில் 3.5 கோடி பார்வையாளர்களைப் பெற்றது, 1080 கோடி ரூபாய் வசூலித்த, இந்தியாவில் முதல்ப்படமாக சாதனை படைத்தது.
பல புது வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த இப்படம், ஹாலிவுட்டில் வருடா வருடம் வழங்கப்படும், உலகளவிலான சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இந்தியா சார்பில் இடம்பிடித்துள்ளது. ஒரு தமிழ் படைப்பாளியின் படைப்பு, உலகளவிலான படைப்புகளுடன் இடம்பிடித்திருப்பதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இயக்குநர் அட்லிக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
Ushering in the festive mood and ambience on the very first day of December for the second consecutive year, the Life Focus Society hosted the Christmas programme, Love Came Down, in the city. Dulcet-toned sopranos Shilvi Sharon and Roshni Sharon and the double quartet Octet Cantabile treated the audience to choice carols and popular Christmas songs to set the stage for the speaker, Ram Gidoomal, the UK-based entrepreneur and author.
Mr Gidoomal shone the spotlight on the theme for the evening, Love, and challenged the audience to go out and make a difference. The CEO of Covenant, Mr Joshua Madhan, proposed the vote of thanks to the show anchored by Leeza Harris.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும், ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது “ஃபைட் கிளப்”. திரைப்படம். ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் கதாநாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக, இணையதள, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா பேசியதாவது… ஃபைட் கிளப், மிகப்பெரிய அனுபவம். முதலில் லோகேஷ் பிரதருக்கு நன்றி. இந்தப்படம் பற்றி பேச நிறைய இருக்கிறது. ரீல் குட்ஸ் ஃபிலிம்ஸ் ஆரம்பித்ததிலிருந்தே விஜய்குமாரும் நானும் படம் செய்யப் பேசி வந்தோம். இப்போது இந்த கட்டத்திற்குப் படம் வந்துள்ளது மகிழ்ச்சி. இந்தப்படம் கடந்த ஆண்டு பாதி முடித்திருந்தபோது விஜய் குமார் லோகேஷ் பிரதருக்கு படம் காட்ட வேண்டும் என்றார். அப்போது விக்ரம் சக்ஸஸில் இருந்தார் லோகேஷ். படம் பார்ப்பதற்கு முன்பாகவே விஜய்குமார் பண்ணியிருந்தால் கண்டிப்பாக வித்தியாசமாக இருக்கும் நான் வெளியிடுகிறேன் என்றார். எங்களை நம்பி, ஜி ஸ்குவாட் முதல் படைப்பாக எங்கள் படத்தை வெளியிடுவதற்கு நன்றி. நண்பர் ஜெகதீஷ் அவர்களுக்கு என் பெரிய நன்றி இப்படத்தைப்பற்றிச் சொல்ல வேண்டும், அப்பாஸ் இந்தக்கதை சொன்னதிலிருந்து இன்று வரை இப்படத்திற்காக உழைத்து வருகிறார். அவரது டீம் கடின உழைப்பைத் தந்திருக்கிறார்கள். விஜய் குமார் உறியடி வந்ததிலிருந்து இன்று வரை அவரை வியந்து பார்க்கிறேன். அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி. ஒரு திரைப்படமாக புதிய அனுபவத்தைத் தரும்படி இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ரீல் குட் ஃபிலிம்ஸ் தொடர்ந்து நல்ல படங்களை வழங்கும் அனைவருக்கும் நன்றி.
நடிகை மோனிஷா மோகன் மேனன் பேசியதாவது.. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு பெரிய மேடையில், இப்படிப்பட்ட படத்தில் இருப்பதை ஆசீர்வாதமாக நினைக்கிறேன். இந்தப்படம் சினிமா காதலர்கள் விரும்பும் படம். மிகவும் அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம். இங்குள்ளவர்களைச் சந்திப்பதே பாக்கியம் என நினைக்கிறேன், இவர்களோடு பணியாற்றியது மகிழ்ச்சி. திரைப்படம் தான் என் கனவு, உதவி இயக்குநராக இரண்டு படங்கள் மலையாளத்தில் வேலைப்பார்த்திருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு வந்த போது, உறியடி விஜய்குமார் என்று சொன்னார்கள், உடனே எனக்குத் தெரிந்த எல்லோரும் கண்டிப்பாக நீ நடிக்க வேண்டும் எனச் சொன்னார்கள். விஜய் குமாருக்குக் கேரளாவில் நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள். லோகேஷ் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தியா முழுக்க பிரபலமானவர் எங்கள் படத்தை வெளியிடுகிறார் நன்றி. அப்பாஸ் அட்டகாசமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். உங்களுக்கு இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் பேசியதாவது.. 2020 ல் இப்படத்தை அறிவித்தோம் கொரோனா, ஷீட்டிங், லோகேஷன் என நிறையப் பிரச்சனை படம் 3 வருடங்கள் ஆகிவிட்டது. விஜய்குமார் சார் நினைத்திருந்தால் வேறு படம் இயக்கப் போயிருக்கலாம் ஆனால் எங்களுக்காகவும் தயாரிப்பாளருக்காகவும் காத்திருந்து, இப்படத்தில் வேலை செய்த விஜய்குமார் சாருக்கு நன்றி. தான் மட்டுமில்லாமல் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் லோகேஷ் சாருக்கு நன்றி. ஆதித்யா சாருக்கு நன்றி. இந்தப்படத்தில் உழைத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தை அர்ப்பணிப்போடு உருவாக்கியுள்ளோம் உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.
நாயகன் விஜய் குமார் பேசியதாவது.. இந்த டைட்டில் ஒரு ஆங்கில பட டைட்டில் மிகப்புகழ் பெற்ற டைட்டில் கல்ட்கிளாசிக், அந்தக்கதை வேறு இந்தக்கதை வேறு ஆனாலும் அதை நம் படத்திற்கு வைக்கலாமா என யோசித்தோம். நாம் ஆத்மார்த்தமாகக் காதலுடன் உருவாக்கியுள்ள படம் அந்தப்படத்திற்குத் தரும் மரியாதையாக இருக்கும் என்பதால் வைத்தோம். நாம் நினைத்த மாதிரி படத்தை உருவாக்க வேண்டும் எனும்போது, அதில் நிறையப் பிரச்சனைகள் வரும் அதற்கான உழைப்பை, நம் அர்ப்பணிப்பைத் தந்து தான் ஆக வேண்டும். லோகேஷ் என் நெருங்கிய நண்பர். நான் எது செய்தாலும் அதைக் கவனித்துப் பாராட்டுவார். இந்தப்படம் விக்ரம் சக்ஸஸ் டைமில், 20 நிமிடம் தயாராகியிருந்தது, அப்போது பார்த்தார். பின்னர் லியோ வெளியீட்டு டைமில் முழுசாக முடித்துவிட்டுக் காட்டினோம் அவர் பேனரிலேயே இந்தப்படம் வெளியாவது மகிழ்ச்சி. அவர் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநராக இருக்கிறார், எப்போதும் நாங்கள் சினிமா பற்றித் தான் பேசுவோம். அவர் இப்படத்தை வெளியிடுவது மகிழ்ச்சி. நண்பர் ஜெகதீஷ் மற்றும் சக்திவேலன் சார் இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருக்கிறார்கள் அவர்களுக்கு என் நன்றி. இப்படத்தில் நிறையப் புதுமுகங்கள் அர்ப்பணிப்போடு வேலை பார்த்துள்ளனர். தயாரிப்பாளர் சினிமா மேல் உள்ள காதலால் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவருக்காக இந்தப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அப்பாஸ் ஒரு சினிமா பைத்தியம், சினிமா தவிர அவனுக்கு எதுவும் தெரியாது. தீவிரமான மணிரத்னம் ஃபேன் அவனை இயக்குநராக இந்த உலகம் பாராட்டுவதைக்காண நானும் காத்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது.. இந்தப்படம் மாநகரம் மாதிரி தான், எனக்கு இது ஒரு புதிய தொடக்கம். உங்கள் ஆசியோடு தொடங்க ஆசை. உறியடி விஜய் குமார், அவன் பேரும் என் பேரும் ஒரு படத்தில் ஒன்றாக வர வேண்டும் என்று 2017 லிலிருந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இப்போது நடப்பது மகிழ்ச்சி. எனக்குத் தெரிந்த மிக நேர்மையான மனிதன் விஜய்குமார். எப்போதும் சினிமா பற்றி மட்டுமே சிந்திப்பவன், இந்தப்படத்தை நான் வெளியிடுவது, படக்குழுவிற்குச் செய்யும் நல்லதல்ல, நான் என் கம்பெனிக்கு செய்து கொண்ட நல்ல விசயம் அவ்வளவு தான். இந்தப்படத்தில் அத்தனை பேரும் அவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார்கள், விஜய் குமாரை தவிர இந்தப்படத்தில் பல புதுமுகங்கள் உழைத்துள்ளார்கள். படத்திற்குப் பிறகு எல்லோரும் பெரிதாகப் பேசப்படுவார்கள். நான் படம் செய்ய ஆசைப்பட்ட போது என் நண்பர்கள் தான் பணம் போட்டு குறும்படம் எடுக்க வைத்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஏதாவது செய்வேன் என எவரும் நினைக்கவில்லை. எனக்காக மட்டுமே செய்தார்கள், அதே போல் நான்கு பேருக்கு நான் செய்ய வேண்டுமென நினைக்கிறேன், அவ்வளவு தான், அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனம். ஜி ஸ்குவாட் நிறுவனத்தோட அபீசியல் பார்ட்னர்ஸ் ஜெகதீஷ் மற்ரும் சுதன் இருவரும் தான். அவர்களுக்கு நன்றி. நல்ல படங்களைத்தர இந்த நிறுவனத்தைத் துவங்கியிருக்கிறோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள். அனைவருக்கும் நன்றி
இயக்குநர் அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தில் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன் , சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்குக் கதையை சசி அவர்கள் அமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை ஆதிகேசவன் கவனிக்கப் படத்தொகுப்புப் பணிகளைக் கிருபாகரன் மேற்கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் – அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கிரியேட்டிவ் புரடியூசராக விஜய் குமார் பணியாற்றியுள்ளார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை, ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
இயக்குநரான லோகேஷ் கனகராஜ் சொந்தமாகத் தொடங்கி இருக்கும் ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக இப்படத்தை வழங்குகிறார்.
இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது என, டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி SRK பகிர்ந்திருக்கிறார்.
டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. பாடல் மீதான ரசிகர்களின் அன்பின் வெளிப்பாடு சமீபத்திய #AskSrk அமர்வின்போது கண்கூடாக வெளிப்பட்டது.
சிறந்த எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் தேடி வீட்டை விட்டு வெளியேறிய கணத்தையும், அன்புக்குரியவர்களை விட்டுச் சென்ற கணத்தையும் ஒவ்வொருவருக்கும் நினைவூட்டும் வகையில், இந்த பாடல் பார்வையாளர்களுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரும் உணர்வைத் தூண்டும் வகையில், இந்த பாடல் உண்மையில் தங்கள் வீட்டைத் தவறவிட்டு, அதை விட்டு விலகி இருப்பவர்களின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கீதமாக வந்துள்ளது.
இந்த பாடலின் பெரும் சிறப்பு என்னவெனில், ஜாவேத் அக்தர், ராஜி ஹிரானி, சோனு நிகம், ப்ரீதம் மற்றும் ஷாருக்கான் போன்ற அனைத்து பிரபலங்களின் கூட்டு விருந்தாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
நடிகர் ஷாருக்கான் சோனு நிகம், ப்ரீதம் மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து #AskSrk அமர்வைத் தொடங்கினார். அந்த பதிவில் அவர் எழுதியிருப்பதாவது,
“#Dunki படத்தின் யின் ஆன்மாவை வெளிப்படுத்தும் வரையறுக்கும் Nikle The….பாடலுக்கு #சோனு @ipritamofficial @Javedakhtarjadu ஆகியோருக்கு. நான் இப்போது கொஞ்சம் விலகி இருக்கேன், உங்களுடன் #AskSRK வில் இணைகிறேன் வாருங்கள் வேகமாக ஆரம்பிப்போம்….”
இது வெறும் ஆரம்பம் தான், SRK ரசிகர்கள் பாடல்கள் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தும் போது #AskSrk அமர்வை அன்பு வெள்ளத்தில் மூழ்கடித்தனர். அவர்கள் எவ்வாறு தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள் என்பது இங்கே, –
சோனு நிகாம் குறித்து
ஒரு ரசிகர் கேட்கையில், “சார் பாடல் பிடித்திருந்தது. சோனு நிகாமுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எப்படி இருந்தது ?” என்றார்.
இதற்கு , SRk பதிலளிக்கையில், “சோனுவின் குரல் தங்கம் போன்றது.. #Dunki” என்றார்.
ஷாருக்கின் பலவீனம்*
ஒரு ரசிகர் கேட்டபோது, “இந்தப் பாடலின் மூலம் எங்களை மிகவும் உணர்ச்சிவசப் படுத்தியுள்ளீர்கள். உங்களின் எமோஷனல் பலவீனம் என்ன? #AskSRK” என்றார்.
அதற்கு பதிலளித்த ஷாருக், “என் குடும்பம் என நினைக்கிறேன்….அது எல்லோருக்கும் தான் அல்லவா. #Dunki” என்றார்.
பார்வையாளர்களுக்கு அவர்களின் வீட்டை பற்றி நினைவூட்டல்
ஒரு ரசிகர் கேட்கையில், “சார் இந்தப் பாடலை நீங்கள் முதலில் கேட்டபோது உங்களுக்கும் என்னைப் போல் வீட்டு ஞாபகம் வந்ததா? #AskSRK @iamsrk #Dunki #DunkiDrop3 #NikleThekhiHumGharSe” என்றார்.
அதற்கு பதிலளித்த ஷாருக், ஆம் இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது. மிகவும் உணர்வுப்பூர்வமாகி விட்டேன் #Dunki.
பாடலுடன் இணைக்கும் அன்பு குறித்து SRK
ஒரு ரசிகர் கேட்கையில், “#asksrk இந்த நிலையிலும் எப்படி மிக எளிமையானவராக இருக்கிறீர்கள்”
பாடலினால் பெரிதும் ஈர்க்கபட்ட SRK பாடலிலிருந்தே இதற்கு பதிலளித்தார், “இசா தர்தி பே ஜன்மெய்ன் ஹைன் இஸ் தர்தி பே மர்னா ஹை….எப்போதும் கால்களை தரையில் ஊன்றிக் கொண்டே இருப்பது நல்லது… கடினமாக உழைக்க வேண்டும். “
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பரில் வெளியாகிறது.
ஹோம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1 சீஸ்ஃபயர் படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள் தற்போது, இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் அதிரடியான ஆக்சன் மிகுந்த டிரெய்லரை, இரவு 7:19 மணிக்கு வெளியிட்டனர்.
பிரபாஸ் நடிப்பில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் டிரெய்லர் முழுக்க முழுக்க திரில், அதிரடி மற்றும் ஆக்சன் கலந்த பெரிய விருந்தாக வெளி வந்துள்ளது. பிரசாந்த் நீலின் ஆக்ஷன் நிறைந்த உலகத்தைப் பற்றிய ஒரு பரந்த பார்வையை அளிக்கும் இந்த டிரெய்லர், உண்மையிலேயே பார்வையாளர்களாகிய நம் கற்பனையைத் தாண்டி, ஒரு பெரும் உலகைக் காட்டுகிறது. நடிகர் பிரபாஸின் முத்திரையான அதிரடி மாஸ் ஆக்ஷன் என அனைத்தையும் இந்த டிரெய்லர் அட்டகாசமாக காட்சிப்படுத்துகிறது. சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று டிரெய்லர் உறுதிப்படுத்துகிறது.
ஹோம்பாலே பிலிம்ஸ், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.