deccanwebtv

‘வீர தமிழச்சி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

மகிழினி கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் நடிகர்கள் சஞ்சீவ் வெங்கட் – இளயா – சுஷ்மிதா சுரேஷ் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் – பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும்’ வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழினி கலைக்கூடம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார்- பேரரசு -ராஜகுமாரன்- விஜய் ஸ்ரீ – தயாரிப்பாளர் அன்புச்செல்வன் – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், ”தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் ‘வீர தமிழச்சி’ உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளோம். இந்த ‘வீர தமிழச்சி’யை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து, வெற்றி தமிழச்சியாக மாற்றி தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ”தயாரிப்பாளர்கள் நல்லதொரு இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். கட்டிட தொழிலாளியான இயக்குநரின் கனவை நனவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி.

இயக்குநர் கட்டிட தொழிலாளி என்பதால் எந்த கல்லை எங்கு வைக்க வேண்டும், எந்தக் கலவையை எங்கு பூச வேண்டும், ஜன்னலை எங்கு வைக்க வேண்டும், வாசக்காலை எங்கு வைக்க வேண்டும், பெட்ரூம் எப்படி இருக்க வேண்டும், கிச்சன் எப்படி இருக்க வேண்டும், எந்த அகலம்- எந்த நீளம் இருக்க வேண்டும், என்பதை பார்த்து பார்த்து தெரிந்து கொண்டு படைப்பை உருவாக்கி இருக்கிறார் என முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. ஒவ்வொரு இயக்குநரையும் கட்டிட கலைஞருடன் தான் ஒப்பிடுவார்கள். இவர்கள்தான் கதையை எங்கு, எப்படி ஆரம்பிப்பது, எப்படி எடுத்து செல்வது, அந்த கதையில் கதாநாயகனின் பிம்பம் என்ன, கதாநாயகியின் வேலை என்ன, நாம் சொல்லக்கூடிய சாராம்சம் என்ன, இந்த கதையின் முடிச்சு என்ன என ஏராளமான இன்ஜினியரிங் வேலைகளை பார்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் பொறுப்பு. நானும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த கட்டிட கலைஞராக இருந்தவன் தான். அதனால் இந்தப் படம் நன்றாக இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தழுவி இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பாடல்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கின்றன. படத்தில் இடம்பெற்ற ‘தீம் சாங்’கும் நன்றாக இருக்கிறது.

ஹீரோயின் ஓரியண்டட் ஸ்கிரிப்டான இந்த திரைப்படத்தில் சஞ்சீவ் – இளயா போன்றவர்கள் நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திரைப்படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படத்தை 40 அல்லது 50 திரையரங்குகளில் தினசரி மூன்று கட்சியாகவோ நான்கு காட்சியாகவோ திரையிடுமாறு திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகளாக ஒரு படம் வெளியானால் தான் ‘மௌத் டாக்’ மூலம் படத்திற்கான விளம்பரம் சில நாட்களில் கிடைக்கும்.‌ அப்போதுதான் இது போன்ற நல்ல படங்கள் மக்களை சென்றடையும்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்தக் குழுவினருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.

சிறு பட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புசெல்வன் பேசுகையில், ”வீர தமிழச்சி என்றால் தமிழக பெண்கள்தான் என உலகத்திற்கே தெரியும். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளியாக இருந்தது. தயாரிப்பாளர் கடினமாக உழைத்து இப்படத்தினை வெளியிட முயற்சி செய்து வருகிறார். இந்த தயாரிப்பாளரின் கடின உழைப்பிற்காகவும், நல்ல மனதிற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.

படம் வெளியாகும் நாளான வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியிடாதீர்கள் என ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.‌ சிறுபட தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள்,” என்றார்.

இயக்குநர் ஷரவண சுப்பையா பேசுகையில், ”வீரம் என படம் வந்திருக்கிறது. ‘தமிழ்’ என படம் வந்திருக்கிறது. ‘தமிழன்’ என படம் வந்திருக்கிறது. ‘தமிழச்சி’ என்றொரு படம் வந்திருக்கிறது. இது ‘வீர தமிழச்சி’ பெயரை கேட்டாலே நல்ல அதிர்வு இருக்கிறது.

தமிழ் மொழி என்பது உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு யுனிக்கான வார்த்தை. அதற்கான இலக்கணம் இருக்கிறதே.. ‘த’ உயிரெழுத்து ‘மி ‘ என்பது மெய்யெழுத்து என தமிழுக்குள் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. இப்படி தமிழிலிருந்து வரும் மரபணு இருக்கிறதே, அதன் ரத்தத்தில் வீரம் இயல்பாகவே இருக்கும், உணர்வும் இருக்கும். இதனை நாம் இதிகாசங்களில் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். இந்தப் படத்தில் அதனை நாம் காணவிருக்கிறோம். ஒரு பெண் தன்னுடைய பழி தீர்க்கும் உணர்வை வன்முறையால் தீர்த்துக் கொள்கிறாள் என்பது போன்ற ஒரு கன்டென்ட்டில் இந்த படம் இருக்கும் என நம்புகிறேன். அத்துடன் இந்த திரைப்படத்தின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சில சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பேசி இருக்கிறார்கள். எனவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புதுமைப்பெண்’ திரைப்படம், இந்த சமூகத்தில் பெண்களுக்கான புரட்சியை உண்டாக்கிய படம் என குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் அந்த படம் பேசப்பட்டது. இந்த காலத்தில் ‘வீர தமிழச்சி’ படம் உருவாகி இருக்கிறது. கமர்ஷியலாக இல்லாமல் இது போன்ற கன்டென்ட் உள்ள படத்தினை தயாரித்ததற்காக தயாரிப்பாளரை பாராட்டுகிறேன்.

‘சட்டம் ஒரு திறந்த புத்தகம். அதனால் அந்த சட்டத்தை பற்றி தெரியாதது குற்றம். அத்தகைய சட்டத்தை தெரிந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதும் குற்றம்’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு கதாபாத்திரம் சட்ட மேதை அம்பேத்கரிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் படம் தெரிவிக்கும் கருத்து மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசை, பாடல்கள் நன்றாக உள்ளன. இந்தப் படத்திற்கு ஆக்ஷன் காட்சிகள் அதாவது கதாநாயகிக்கு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கும் விதமும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது,” என்றார்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசுகையில், ”பெண்களுக்கு அடிக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் அடித்தால் நம்மால் தாங்க முடியாது என்பதுதான் உண்மை. அவர்கள் நம்மை அடிக்காமல் இருக்கிறார்களே என்பது வரை தான் நமக்கு அது பெருமை. அவர்கள் மிக பயங்கரமான மன உறுதியும், உடல் வலிமையும் மிக்கவர்கள். நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு வலிமை குறைவு தான்.

தங்களை மலை போல் காண்பிப்பதில் ஆண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. தங்களை மலர் போல் காண்பிப்பதில் பெண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. ஆனால் நாம் காண்பது மவரல்ல, அவர்களிடம் இருப்பது தான் மலை. நான் இதனை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நிறைய பெண்களிடம் அடி வாங்கி இருக்கிறேன் என்னுடைய அம்மாவை போன்ற கம்பீரமான – மலை போன்ற உறுதியான பெண்மணியை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அவர்களை நான் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்திருக்கிறேன்.

அதேபோல் தேவயானியை, பார்ப்பதற்கு நீங்கள் எல்லாம் புஷ்பம் போல் இருக்கும் அந்த பெண் அவ்வளவு உறுதியான, வலிமையான, ஒரே அடியில் ஒரு டன் அல்ல இரண்டு மூன்று டன் வெயிட் உடன் அடிக்கக்கூடிய ஒரு பயங்கரமான பெண்மணி. இதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள். ஆண்களுக்காக, குழந்தைகளுக்காக மென்மையாக நம்மிடம் நடந்து கொள்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது நடிகை சுஷ்மிதா சுரேஷிற்கு பயிற்சி அளிக்கவில்லை என்றாலும்… அவர் ஆக்ஷன் காட்சிகளில் பயங்கரமாக தான் நடித்திருப்பார். அவர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த ஆக்ஷன் ஜானரில் நடிக்கக்கூடிய நடிகைகளே இல்லை‌, நீங்கள் அந்த இடத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சிறுசிறு குறும்படங்களை இயக்கி தன்னை செதுக்கி கொண்ட பின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் பாரதி. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்,” என்றார்.

நடிகை சுஷ்மிதா சுரேஷ் பேசுகையில், ”வீர தமிழச்சியாக என்னை தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் என்னுடைய பாதுகாப்பையும், என்னுடைய சௌகரியத்தையும் மனதில் வைத்து பணியாற்றினார். குறிப்பாக நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியில் நடிக்கும் போது நான் பயந்தேனோ, இல்லையோ அவர் பயந்து கொண்டே இருந்தார். என் மீது அக்கறை செலுத்தி பாதுகாத்த ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் நடிக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது உடலில் வலி உண்டானது, இருந்தாலும் பொறுத்துக் கொண்டு படக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக பழகினார்கள். அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெண்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்- அதனை எப்படி வெளிக் கொண்டு வரலாம் என்பதை கற்றுத் தரும் படமாக இது இருக்கும்.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான எனக்கு ஏன் நடிப்பு என பலர் கேள்வி கேட்டனர். ஆனால் என்னுடைய விருப்பம் நடிப்பாக இருந்ததால் ஆடிஷனுக்கு பொறுமையுடன் என்னுடைய பெற்றோர்கள் வருகை தந்து ஆதரவை வழங்கினார்கள். நிறைய பெண்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில், ”’திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை கலைமாமணி விவேகா எழுத, மற்றொரு பாடலை அறிமுக பாடலாசிரியர் செந்தில் ராஜா எழுதியிருக்கிறார். இந்த பாடலை எழுதிய பின் தான் மெட்டமைத்தோம். மூன்றாவதாக வீர தமிழச்சி என்ற பெயரில் ஒரு டைட்டில் சாங் இருக்கிறது.

பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி போராடுகிறார் என்பதுதான் இதன் கதை.‌ இந்தப் படத்தில் நாயகி சுஷ்மிதா சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அந்தக் கால விஜயசாந்தியை திரையில் பார்ப்பது போல் இருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது, வாழ்த்துகள்.

இந்த படத்திற்காக எனக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதனை முழுமையாக தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். திரையுலகில் இவ்வளவு அன்பான பண்பான தயாரிப்பாளரை பார்க்க முடியாது. இவரிடம் நாம் சம்பளம் கொடுக்கிறோம் என்ற அதிகாரம் எப்போதும் இருக்காது, இவர்கள் தொடர்ந்து படத்தை தயாரிக்க வேண்டும்,” என்றார்.

இயக்குநர் சுரேஷ் பாரதி பேசுகையில், ”அடிமட்ட கட்டிட தொழிலாளியாக 35 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த நான் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறேன் என்றால், இதற்கு முதல் காரணம் என்னுடைய மனைவி மற்றும் மகன்கள் தான். இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். இந்த ஐந்து வருடங்களிலும் என்னையும், என் குடும்பத்தையும் வழிநடத்திச் செல்வது என் மனைவி தான்.

2016 ஆம் ஆண்டில் என்னுடைய ‘கொஞ்சம் கொஞ்சமாக..’ எனும் முதல் குறும்படத்திற்கு, சிதம்பரம் காட்மாடி பகுதியை சேர்ந்த என் குருநாதர் பழனிச்சாமி தான் ஒரு லட்ச ரூபாயை வழங்கினார். இந்த குறும்படம் சிறந்த விழிப்புணர்வுக்கான குறும்படம் என தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரிடம் விருதினை பெற்றேன். என்னுடைய இரண்டாவது குறும்படமான ‘தாய்’. இணையத்தில் வெளியாகி இதுவரை 46 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. இதுவரை நான் 18 குறும்படங்களை இயக்கியிருக்கிறேன், 36 விருதுகளை வென்றிருக்கிறேன். நான் இயக்கினால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெறும் படைப்பை தான் இயக்குவேன் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அதற்குப் பிறகு ஒரு கதையை சினிமாவுக்காக தயார் செய்துவிட்டு ஏராளமான தயாரிப்பாளர்களை அணுகி கதையை சொன்னேன். மகிழினி கலைக்கூடத்தில் கதையை சொன்னேன்.‌ அவர்களால் படத்தை தயாரிக்கும் அளவிற்கு பொருளாதாரமில்லை, அதனால் இந்த திரைப்படத்தை கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாக்கத் தொடங்கினோம். ஒரு வார காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை அறிந்து தயாரிப்பாளர் நித்தியானந்தம் எங்களுடன் இணைந்தார்.‌ அதன் பிறகு முழு படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று அவர் சொன்னார். என்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து என்னுடைய இயக்குநர் கனவை நனவாக்கியவர் தயாரிப்பாளர் நித்தியானந்தம். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்தப் படத்தை தொடங்கும் போது 60 லட்சம் ரூபாய் தான் பட்ஜெட் என்றேன். ஆனால் தற்போது மூன்றரை கோடி ரூபாயில் படம் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த திரைப்படம் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படம். பெண்கள் எங்கு எப்போது பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வர வேண்டும், இதற்கு என்ன தீர்வு என அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் உள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

இந்தப் படத்தின் மூலம் நான் என்ன சொல்ல விரும்பினோனோ அது ஆறு மாதத்திற்கு முன்னதாக தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் சட்ட திருத்தமாக கொண்டு வந்திருக்கிறார். நான் இது தொடர்பாக படம் எடுத்தது மூன்று ஆண்டுகளுக்கு முன். நான் மக்களுக்கு எதனை தீர்வாக சொல்ல நினைத்தேனோ அதை சட்ட திருத்தமாக கொண்டுவரப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை. இந்த படம் ஆறு மாதம் மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தால் எங்கள் கதை தான் ஹீரோ. இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரமும் இருக்கிறது.

நான் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகன். கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தியை கேட்டு மூன்று நாட்கள் உறக்கமில்லாமல் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தேன். கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களை பார்த்து தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். விஜயகாந்தை வைத்து நான் என்ன திரைப்படத்தை இயக்க வேண்டும்cஎன நினைத்தேனோ, அவர் இல்லாததால் ஒரு புது ஹீரோயினை வைத்து இயக்கியிருக்கிறேன். அந்த வகையில் ஒரு பெண் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

ஆர்.வி. உதயகுமார், பேரரசு போன்றவர்களை பார்த்து ஆக்ஷன் திரைப்படங்களை இயக்க வேண்டும் என ஆசை.

தமிழ் மொழியில் இல்லாமல் வேறு மொழியில் 50க்கும் மேற்பட்ட ஆக்ஷன் திரைப்படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோயின் ஆக்ஷன் செய்தால் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏராளமான ரெஃபரன்ஸ்களை பார்த்த பிறகு தான் படத்தின் நாயகியான சுஷ்மிதா சுரேஷுக்கு ஆக்ஷன் காட்சிகளை நானும் ஸ்டாண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவும் விவாதித்து வைத்தோம்.

ஒரு தமிழ் பெண்ணை தலைகீழாக கட்டி வைத்து தொங்கவிட்டு அவருடைய நெஞ்சில் கால் வைத்து எட்டி உதைக்கும் காட்சியை வைத்திருக்க மாட்டார்கள், இத்தகைய காட்சி தமிழ் சினிமாவில் முதன் முதலாக இந்தப் படத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் எந்த தமிழ் படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை. இந்தக் காட்சியில் நடிப்பதற்கு நடிகை சுஷ்மிதா முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

நான் இதுவரை எந்த படப்பிடிப்பையும் வேடிக்கை கூட பார்த்ததில்லை. ஆனால் ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு என்னுள் ஐக்கியமாகி இருக்கும் விஜயகாந்த் தான் காரணம். இன்று கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கேப்டன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். அதனால் அவருடைய ஆசி இந்த படத்திற்கு பரிபூரணமாக இருக்கும்.

மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருக்கும் திறமை இருக்கிறது. அதனை வெளிக்கொணர வேண்டும். எவரையும் பார்த்து அஞ்ச கூடாது. எவரையும் பார்த்து பிரமிக்க கூடாது. உனக்கு திறமை இருந்தால் வெற்றி பெறலாம். இதற்கு முன்னுதாரணமாக நான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் இயக்குநராகி இருக்கிறேன். ‌

எங்கள் ஊரில் சாதாரண கட்டிட தொழிலாளியான எனக்கு இன்று கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 25 கட் அவுட்கள் வைத்திருக்கிறார்கள்,” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், ”குடும்பத்தில் நடைபெறும் உண்மைகளை யார் ஒப்புக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் வீரத்தமிழர். அந்த வகையில் எங்கள் இயக்குநர் ராஜகுமாரன் தான் சிறந்த வீரத்தமிழர். அவருடைய பேச்சில் உண்மை படார் படார் என வெளிப்பட்டது. நாம் இதுவரை தேவயானி மேடத்தை சாப்ட் ஆக தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வீட்டில் அவர் ஆக்ஷன் ஹீரோயின் என்பது இப்போதுதான் தெரியும்.

கட்டிட தொழிலாளியாக இருந்து இயக்குநராக உயர்ந்தவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.

முயற்சிக்கும், விடாமுயற்சிக்கும் என்ன வித்தியாசம், என்றால், முயற்சியை நாம் செய்து கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் முயற்சி நம்மை விடாது. அதுதான் விடா முயற்சி.

வீட்டை நன்றாக கட்ட வேண்டும் என்றால் நல்லதொரு கொத்தனார் வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு நார் வேண்டும் ஒன்று நாத்தனார். மற்றொன்று கொழுந்தனார். இயக்குநர் நல்லதொரு கொத்தனார். படத்தில் பாட்டு எங்கு வைக்க வேண்டும்? பைட்டு எங்கு வைக்க வேண்டும்? என தெரிந்து வைத்திருக்கிறார்.

வீர தமிழச்சி யார் என்றால்.. புருஷன் கஷ்டப்படும் போது பக்க பலமாக இருந்து, அவருடைய திறமையை வெளிப்படுத்துபவர் தான் வீர தமிழச்சி. அப்படிப் பார்த்தால் இயக்குநருடைய மனைவி தான் வீர தமிழச்சி.

சில தலைப்புகளை கேள்விப்படும் போது தான் எப்படி இந்த தலைப்பை இதுவரை தவற விட்டார்கள் என்று தோன்றும். அந்த வகையில் இந்த வீர தமிழச்சி டைட்டில் நன்றாக இருக்கிறது. தமிழகத்தில் தான் வேலு நாச்சியார் போன்ற ஏராளமான வீர தமிழச்சிகள் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்தான் வீர தமிழச்சி.

வீர தமிழச்சி என்பது அடிப்பதோ உதைப்பதோ.அல்ல. செருப்பால் அடிப்பதோ கைகளால் அடிப்பதோ அல்ல. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மிருகம் தன்னை சிதைத்ததை இந்த சமூகத்தில் துணிச்சலுடன் புகாராக அளித்த பெண் தான் வீர தமிழச்சி. கராத்தே கற்பது, துப்பாக்கி சுடுவது, சிலம்பம் சுற்றுவது, இதெல்லாம் வீரமல்ல. வீரம் என்பது உடலில் அல்ல, மனதில் இருக்க வேண்டும். இந்த படத்தில் இதைத்தான் நான் பார்த்தேன். ஒரு பெண் அநியாயத்திற்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும், அதை சொல்வது தான் இந்த வீர தமிழச்சி,” என்றார்.

“காந்தாரா-சாப்டர் 1” திரைவிமர்சனம்

ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளிவந்து சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த காந்தாரா திரைப்படத்தின் முந்தைய பாகமாக காந்தாரா சேப்டர் ஒன் என்ற பெயரில் எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் செட்டி.
கர்நாடகவில் உள்ள கடம்ப வம்சம் என்னும் பழங்குடியினரின் வரலாறு சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
காத்தாரா மலைப்பகுதியில் தங்கள் வாழும் பகுதியை ஈஸ்வரனின் பூந்தோட்டம் என்று நம்புகிறார்கள் அந்த மக்கள். அந்த பகுதியில் காலம் காலமாக விளையும் மிளகு, பட்டை போன்ற இயற்கை பொருட்களை வைத்து வாழ்ந்து வருகிறார். அந்த நேரத்தில் அவர்கள் மீது படையெடுக்கும் மற்ற பழங்குடியினரை அவர்கள் வணங்கும் கருணீக கற்களின் துணையோடு வெல்கிறார்கள். அந்த கல் சிவனின் வடிவம் தான் என்று நம்பும் அவர்கள் அதை கடவுளாக வணங்குகிறார்கள். இந்த நிலையில் அந்த நாட்டின் மன்னன் அந்த கல்லை கவர்ந்து தனது கோயில் வைத்து கடவுளையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறான்.
அந்த நேரத்தில் அந்த மன்னனின் அதிகார எல்லைக்குள் சென்று தங்களிடம் விளையும் பொருட்கள் விற்பனை செய்ய நாயகன் முயற்சி செய்து அதிலும் வெற்றி அடைகிறான். இந்த சூழ்நிலையில் அந்த மன்னனின் ,மகள் ஒரு சதி திட்டத்தில் ஈடுபட்டு அந்த கற்களை தனது கோவிலுக்குள் கொண்டு வந்து தங்களது அடிமையாக அந்த மக்களையும் வைக்க நினைக்கிறார். அதற்கு அவர் அந்த மலையில் வாழும் சூனியக்காரர்களை உதவிக்கு அழைக்கிறார் இவர்களெல்லாம் வென்று சிவனின் அருளோடு நாயகன் எவ்வாறு தம் மக்களை காப்பாற்றுகிறான் அந்த கடவுளை அந்த சூனியக்காரர்கள் எவ்வாறு விடுவிக்கிறான் என்பதை இந்த படத்தின் திரைக்கதை….


நாயகனாக ரிஷப் ஷெட்டி, மன்னனாக ஜெயராம், நாயகியாக ருக்மணி மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் பகுதியில் நாயகன் மன்னரின் எல்லைக்குள் சென்று வியாபாரம் செய்வது போல் சில காட்சிகளும் அதன் பிறகு காட்டில் விளையும் காட்சிகளாக படம் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக தான் நகர்கிறது படம் இடைவெளிக்கு முன் நடக்கும் சண்டைக்காட்சி நம்மை நிமிர வைத்து இரண்டாம் பாதியில் அதே விருப்போடு நம்மை கொண்டு செல்கிறது இந்த படத்திற்கு மிகவும் ஒரு இயக்குனராக உழைத்திருக்கிறார் படத்தின் வரும் விஷுவல் காட்சிகள் ஒளிப்பதிவு இசை செட் ஒர்க் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து இளைத்து செய்திருக்கிறார் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களையும் கதாபாத்திரங்களாக இல்லாமல் வாழ வைத்திருக்கிறார் இதுவே இயக்குனரின் மிகப்பெரிய வெற்றி
காந்தாரா சேப்டர் ஒன் இதற்கு முன் வந்த காந்தாராவின் வெற்றியை முந்துமாஎன்பது பொறுத்திருந்து பார்ப்போம்

#இட்லி கடை# திரைவிமர்சனம்

ரேட்டிங் 4/5

நடிகர் தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் இட்லி கடை.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கோ, நகரங்களுக்கோ புலம் பெயர்ந்து வாழும் மக்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தாங்கள் வாழ்ந்த மண்ணையும் அந்த மண்ணின் அடையாளத்தையும் மறக்க முடியாமல் அந்த நினைவுகளில் இருப்பவர்களுக்கு ஓர் இனிய நினைவாக இயக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
ஒரு கிராமத்தில் இட்லி கடை வைத்து நடத்தும் ராஜ்கிரன், அவருடைய மகன் தனுஷ் கேட்டரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் சத்யராஜ் நடக்கும் மிகப் பெரிய ஹோட்டலில் வேலை செய்கிறார் ஒரு பெரிய பதவியில் இருக்கிறார்.அவருக்கு சத்யராஜ் தன் மகளை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது அவ்வாறு இருக்கும் போது ராஜ்கிரண் இறந்துவிட தன் சொந்த ஊருக்கு வருகிறார் தந்தையின் இறுதிச் சடங்குக்காக, ஆனால் அங்கு தந்தையைத் தொடர்ந்து தனது தாயும் இறந்து விட, தந்தை தனக்கு சிறுவயதில் சொல்லிக் கொடுத்த விஷயங்களும், அவருடைய ஹோட்டலும் அதாவது இட்லி கடை அந்த கடை அந்த ஊரின் அடையாளமாக எவ்வாறு மாறியது என்பது நினைவுக்கு வர அங்கேயே தங்கிவிட முடிவு செய்கிறார்.
இதற்கிடையே சத்யராஜின் மகனான அருண் விஜய்க்கும் இவருக்கும் ஒரு ஈகோவில் எப்பொழுதும் ஒரு முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. தன் தங்கையின் திருமணம் நின்று விட்ட கோபத்திலும் தனுஷ் தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் அவனுக்காக நாம் காத்திருக்க வேண்டுமா என்ற கோபத்திலும் வெளிநாட்டில் இருந்து வந்து தனுஷை வம்பு இழுத்து அடித்து இழுத்துப் போக நினைக்கிறார். அங்கு நடக்கும் சண்டையை தனுஷ் அவரை அடித்து விடுகிறார் அந்த கோபத்தில் தனுஷை எப்படியாவது பழி வாங்க நினைக்கிறார். இதற்கிடையே தனுஷிற்கு நித்தியாமேனன் மீது காதல், இதுவும் தன் தங்கையின் திருமணம் நின்று போன ஒரு கோபமும் சத்யராஜ் , மகனான அருண் தனுசை எவ்வாறு சித்திரவதை செய்கிறார்கள் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் ராஜ்கிரண் அடிக்கடி சொல்லும் விஷயம் சண்டை போடக்கூடாது அகிம்சையே சிறந்தது என்று சொல்லி வளர்க்கிறார் .அதன்படியே இடைவேளையில் தனுஷ் அருன் விஜயைஅடிக்க மீண்டும் எப்படியும் அருண் விஜய் தனுஷை அடிப்பார் ஆனால் தனுஷ் அகிம்சை மூலம் எவ்வாறு செல்கிறார் என்பது நமக்கு தெரிந்தாலும் அதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது.
மேலும் இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் சமுத்திரகனி ஆகட்டும் பார்த்திபனாகட்டும், இளவரசாகட்டும், சத்யராஜ் ஆகட்டும், அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் சிறப்பு .நம் கண் முன்னே வாழ்ந்த சிலரை நமக்கு நினைவு படுத்துகிறது அந்த வகையில் தனுஷ் ஒரு சிறந்த இயக்குனராக நிமிர்ந்து நிற்கிறார்.
நித்யா மேனன் தனக்கே வழக்கமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கோபம் ஆகட்டும் ,காதல் ஆகட்டும், சந்தோஷமாக, அனைத்திற்கும் ஒவ்வொரு விதமான ரியாக்சன் கொடுத்து அருமையாக நடித்திருக்கிறார்.

ஜி வி பிரகாஷ் இசை சில இடங்களில் தான் என்று நிரூபித்து விட்டார்.

ஒளிப்பதிவு வழக்கம்போல கிராமத்தின் அழகை எதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள்
நிச்சயம் இட்லி கடை இந்த மாதிரி கடைகளில் வாழும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. 

தயாரிப்பாளர் மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க மற்றொரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நீமா ரே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்…. 

மேலும் முக்கிய வேடங்களில்  நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க, விடுதலை படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ்  படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர். 

சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும், நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை அரவிந்த் அக்ரம் எழுதியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. 

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, மு.களஞ்சியம், போஸ் வெங்கட், நடிகை நமீதாவின் கணவர் வீரா, நடிகை கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில்

*இயக்குநர் சிக்கல் ராஜேஷ் பேசும்போது,*

“படத்தின் தயாரிப்பாளர் மகேந்திரன் என் நண்பர். பலரிடம் இந்த கதையை  நான் சொல்வதை பார்த்த அவர், நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு மேற்கொண்டு நகர்வதில் சிக்கல் எழுந்தது.. ஆனால் கதை பிடித்து இருந்ததால் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டு இந்த படத்தைத் தயாரித்தார். 

படத்தொகுப்பாளர் ராமர் படத்தொகுப்பை முடிந்தபின், படம் நன்றாக இருக்கிறது.. இன்னும் இரண்டு பாடல்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். 

மக்களை திருப்திப்படுத்துவதையும் தாண்டி இங்கே வியாபாரம் என்று ஒன்று இருக்கிறது. தயாரிப்பாளரும் நஷ்டப்படக்கூடாது என்பதால் அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். அது மட்டுமல்ல, படத்தில் ஏற்கனவே எடுத்த கொஞ்சம் திருப்தி இல்லாத கிட்டத்தட்ட 12 நாள் எடுத்த காட்சிகளை தூக்கிவிட்டு புதிதாக எடுத்தோம். அந்த அளவுக்கு ஒத்துழைப்பு தந்தார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட பெண்களை அடக்கி ஒடுக்கி வைக்கவே முயற்சி செய்தார்கள். அதன்பிறகு சில அரசியல் கட்சிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள் வந்து அவற்றை மாற்றி அமைக்க முயற்சி செய்தார்கள். அதற்கான சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. 

ஆனாலும் இப்போது வரை பெண்களுக்கான அநீதியும் கொடுமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கேட்கும்போதே மனது அதிர்கிறது. அதன் விளைவு தான் இந்த இரவின் விழிகள் படம். 

இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என நினைத்தேனோ அதை தெளிவாகவும் தீர்க்கமாகவும் சொல்லி இருக்கிறேன்.

இசையமைப்பாளர் நான் என் மனதில் என்ன வேண்டும் என நினைக்கிறேனோ, அதை அழகான பாடல்களாகக் கொடுத்தார். 

ஏற்காடு பகுதியில் வாகனங்கள் கூட செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். ஒரு சண்டைக் காட்சியில் எண்பது அடி உயரத்திற்கு என்னை கம்பியில் கட்டி தூக்கியவர்கள், இரண்டு மூன்று நிமிடம் கீழே இறக்காமல் அந்தரத்திலேயே தொங்க விட்டு விட்டனர். அந்த சில நிமிடங்கள் கீழே பார்க்கும் போது மிகவும் திகிலாக இருந்தது” என்று பேசினார்.

*சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் விஷ்ணு சரண் பேசும்போது,* 

“இந்த படத்தில் நான் பாடியிருக்கும் பாடல் படத்தின் ஜானரை வெளியே இருப்பது போல கொஞ்சம் ஸ்டைலாக  இருக்கும். இசையமைப்பாளரைப் பொருத்தவரை ஒரு பாடலைப் பாடி ரெக்கார்டிங் செய்யும் வரை அவர் உட்காரவே மாட்டார்” என்று பேசினார்

*பாடலாசிரியர் அரவிந்த் அக்ரம் பேசும்போது,*

“இந்த படத்தில் ஐந்து பாடல்களை உருவாக்கியதில் எனக்கும் இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் என ஐந்து விதமான பின்னணி கதைகள் இருக்கின்றன. என் பெயர் அக்ரம்… இசையமைப்பாளர் பெயர் அசார். ஆனால் நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய முதல் பாடல் வாடா கருப்பா.. எப்படி எங்களை நம்பி இயக்குநர் இந்த பாடலைப் படைத்தார் என்பதே மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது” என்று பேசினார்.

*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*

“சமீபத்தில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.. நாங்களும் தமிழிலிருந்து ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பும் படங்களைப் பார்த்து தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருந்தோம். ஆனாலும் இந்த வருடம் அங்கே போட்டியிட தமிழ் படம் எதுவும் தேர்வாகவில்லை என்பது வருத்தம். ஆனால் தெலுங்கு, கன்னட படங்கள் இடம்பெறுகின்றன. இங்கே தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ? சிறிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் படங்கள் எந்த திரையரங்குகளில் எந்த காட்சி ஓடுகிறது என்கிற தகவல் கூட தெரிவதில்லை. 

என்னுடைய பொன்னுமணி படம் வெளியான காலத்தில் கூடவே 16 படங்கள் வெளியாகின. அதில் 12 படங்கள் வெற்றி பெற்றன. அது போன்று ஒரு காலம் வேண்டும், திருப்பிக் கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைக்கிறோம்.

ரசிகர்கள் மொத்தமாக பல படங்களை பார்ப்பதற்கு வசதியாக வெளிநாடுகளில் இருப்பது போல சலுகைகளை திரையரங்கு உரிமையாளர்கள் அறிவியுங்கள்.

இப்போதும் பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இருந்து கொண்டிருக்கிறது. அது பற்றி தான் இந்த படம் பேசுகிறது. படத் தயாரிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை படத்தின் பப்ளிசிட்டிக்கு இப்போது யாரும் கொடுப்பதில்லை. அதுவே மைனஸ் ஆக அமைந்து விடுகிறது. 

பல படங்கள் இசை வெளியீட்டு விழாவின்போது தான் இப்படி ஒரு படம் இருக்கிறதா? என்பதே தெரிய வருகிறது. படத்தை மோசமாக விமர்சிக்கிறார்கள் என வலைதளக்காரர்களை திட்டுகிறோம். தப்பாக கூட நம் படத்தைத்  திட்டுகிறார்களே என்று சந்தோஷப்படுங்கள். அதுவும் ஒரு பப்ளிசிட்டி தான்” என்று பேசினார்.

*இசையமைப்பாளர் ஏ.எம் அசார் பேசும்போது,*

“இரவின் விழிகள் ஒரு அருமையான சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐந்து பாடல்கள் ஐந்து விதமான ஜானரில் இருக்கும். அரவிந்த் அக்ரம் ஒரு முறை பாடல் எழுதிக் கொடுத்தார் என்றால் அதில் பெரும்பாலும் திருத்தமே இருக்காது. படத்தின் பாடல்களுக்கேற்ற விஷுவல்சும் அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

*நாயகி நீமா ரே பேசும்போது,*

“மிஸ்டர் பர்ஃபெக்க்ஷனிஸ்ட் என்று இயக்குநர் ராஜேஷை சொல்லலாம். படப்பிடிப்பில் அவருக்கு எடுத்த சில காட்சிகளில் திருப்தி இல்லை என்றால் படப்பிடிப்பு முடிந்து இரண்டு வாரம் கழித்துக் கூட என்னை அழைத்து சில காட்சிகளை ரீ ஷூட் செய்தார்.. அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அவரைத் தொடர்பு கொண்ட போது ஹீரோவான அவரது காட்சிகளே கொஞ்சம் திருப்தி இல்லை என்று அதை மீண்டும் எடுப்பதற்காக போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னார். இப்படி ஒவ்வொன்றிலும் பர்ஃபெக்ஷன் பார்த்து பார்த்து இரவின் விழிகள்  படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநரை பார்க்கும்போது எல்லாம் அந்நியன் படம் தான் ஞாபகத்திற்கு வரும். 

படப்பிடிப்புக்கு முன்பு அம்பி போலவும் படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன் போலவும் மாறிவிடுவார்” என்று பேசினார்

*நடன இயக்குனர் எல்.கே அந்தோணி பேசும்போது,*

“முதலில் ஒரு பாடலுக்கு தான் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அந்த ஒரு பாடல் சிறப்பாக வந்திருப்பதை பார்த்துவிட்டு, நான்கு பாடல்களையும் என்னையே நடனம் அமைக்கச் சொல்லிவிட்டார்கள். நான் கேட்பதற்கு முன்பே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். தயாரிப்பாளரே கதாநாயகனாகவும் நடித்திருப்பதால் அவரை ஆடவைப்பதற்கு எக்ஸ்ட்ராவாக சம்பளம் கொடுத்தார்கள்” என்று பேசினார்.

*தயாரிப்பாளரும் நாயகனுமான மகேந்திரன் பேசும்போது,*

“வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பதற்காகத்தான் என்னை அழைத்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் எனக் கூறிவிட்டேன். 

நீங்களே ஹீரோவாக நடியுங்கள் என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் நான் கஷ்டப்பட்டதை விட அவர் கஷ்டப்பட்டது தான் அதிகம். சில காட்சிகளில் திருப்தி வராவிட்டால் பத்து டேக் என்றாலும் விட மாட்டார். 

ஒரு நாள் காலை சாப்பாடு கூட சாப்பிட விடாமல் என்னை வைத்து காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார். மக்களுக்கு  விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் என்னிடம் இந்த கதையை சொல்லும்போது இந்த படம் ஒரு விதையாக விதைக்கப்பட்டு இருந்தது. அதை நான் செடியாக மாற்றி இருக்கிறேன். அதை மரமாக்கி அதில் உள்ள கருத்து என்கிற பழத்தை சாப்பிடுவதற்கு உறுதுணையாக இருக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசினார்.

*நடிகர் சிசர் மனோகர் பேசும்போது,*

“வெள்ளிமலை பகுதிக்கு படப்பிடிப்பிற்கு சென்றோம். 25 நாட்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை 15 நாட்களில் எடுத்து முடித்தார். அந்த அளவிற்கு இயக்குநர் யாரையும் உட்கார விடாமல் பம்பரமாக சுழல்வார். இந்த காலத்தில் பெண்களுக்கு தேவையான கருத்தை சொல்லும் விதமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது” என்று பேசினார்.

*நடிகை கோமல் சர்மா பேசும்போது,*

“உண்மையான சுதந்திரம் என்பது இளைஞர்கள் எல்லாமே சுதந்திரமாக பேசுவது என்று தான் நான் நம்புகிறேன். உங்கள் கண்களில் நாட்டின் எதிர்காலத்தை பார்க்கிறேன். உங்கள் இதயத்தில் இருக்கும் தீ, நம் ஊருக்கு மட்டும் வெளிச்சம் கொடுக்காமல் இந்த உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக மாறணும். உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால் ஒவ்வொரு புரட்சிகளிலும் இளைஞர்கள் தான் தோளோடு தோள் நின்று இருக்கிறார்கள். 

இன்றைய இளைஞர்களின் போர்க்களமே வேறு. அது துப்பாக்கியோ. வாளோ அல்ல.. ஒரு போஸ்ட்.. ஒரு ட்வீட்.. ரீல்ஸ் இவைதான். உங்கள் கையில் இருக்கும் செல்போன் ஒரு ஒளிகாட்டி.. வழிகாட்டி.. ஒரு சில ஃபாலோயர்களுக்காக உங்கள் வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். உங்கள் குரலை ஒரு நாட்டுக்காக காட்டுக்காக பயன்படுத்துங்கள். குரல் இல்லாத குழந்தைகளுக்கு குரலாக மாறுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நதிகளுக்கு பயனுள்ளவர்களாக இருங்கள்.. சோசியல் மீடியாவில் வெறுப்பைக் காட்டினால் அது ஆயிரம் மடங்கு அதிகரிக்கும். நம்பிக்கை விதைத்தால் அது ஆயிரம் மடங்கு நம்பிக்கையை கொடுக்கும். 

புதிய இளைஞர்கள், வரும் தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என்று பேசினார்.

*நடிகை நமீதாவின் கணவர் வீரா பேசும்போது,*

“நான் ஆந்திராவைச்  சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் மீது உள்ள காதலால் இங்கே வந்து குடியேறி விட்டேன். முன்பெல்லாம் அண்ணா, அக்கா என்று பாசத்தோடு இங்கே அழைத்தார்கள். 

இப்போது எல்லாமே ப்ரோ என்று மாறிவிட்டது. தமிழ்நாட்டில் கலாச்சாரமும் சினிமாவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்தன. உலகமே வியந்து பார்க்கும் விதமாக இருந்தது. இப்போது அதில் சின்ன தேக்கம் இருக்கிறது. அதற்குக் காரணம் நாம் தான்.. நான் முதலில் ஒரு சினிமாவுக்கு தயாரிப்பாளராக இருக்கலாம்.. ஆனால் இரண்டாவது சினிமாவிற்கு நான் ஒரு பார்வையாளன் தான்.. 

புஷ்பா, பாகுபலி மாதிரி படங்கள் வந்தால் தான் ரசிகர்கள் ரசிப்பார்களா என்றால்,  இல்லை. கடந்த வாரம் கூட தெலுங்கில் வெளியான சின்ன படங்கள் கூட மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இங்கே தமிழில் நாங்கள் படங்களை தவறாக எடுக்கிறோமா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகெட்ட தவறுகிறோமா என்பது தெரியவில்லை. இந்த படம் மிகுந்த சிரமத்துடன் மிக நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவை தாருங்கள்” என்று பேசினார்.

*நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது,*

“இரவின் விழிகள் படம் ஊமை விழிகள் படம் போல வெற்றியடைய வேண்டும். அண்ணன் இயக்குநர் ஆர். வி உதயகுமார், பட ரிலீஸ் பற்றி பேசினார். ரிலீஸ் என்று சொன்னதுமே எல்லோரும் டக்கென திமுக பக்கம் தான் பார்வையைத் திருப்புவார்கள். 

ஒருவேளை ரெட் ஜெயண்ட் பற்றி அவர்கள் சொன்னார்கள் என்றால் அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் ரெட் ஜெயண்ட் படம் தயாரிக்கவில்லையா என்ன ? 

என்னுடைய படம் வெளியான போது முதல் வாரம் 200 தியேட்டர்களுக்கு மேல் இருந்தது.. அடுத்த வாரம் 150 தியேட்டர்.. ஆனால் மூன்றாவது வாரம் பல தியேட்டர்களில் என் படம் இல்லை.. 25 நாள் அல்லது 50 நாள் போஸ்டர் ஒட்டுவதற்காக ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டேன். அந்த வகையில் இப்போது ஒரு படத்தின் ஆயுள் காலம் 10 லிருந்து 20 நாள் என மாறிவிட்டது. அதன் பிறகு ஓடிடி வந்து விட்டது.

சின்ன தயாரிப்பாளர்கள் தயவு செய்து படம் எடுக்க வரவேண்டாம் என விஷால் சொன்னபோது நான் தான் முதல் கண்டனக்  குரல் கொடுத்தேன். ஆனால் அவர் என்ன அர்த்தத்தில் சொல்லி இருக்கிறார் என்றால் கொஞ்சம் உஷாராக இருங்கள் என்று தான் சொல்லியிருக்கிறார். 

அதை அவர் சொல்லத் தெரியாமல் சொல்லிவிட்டார். அதனால் சில தயாரிப்பாளர்கள் ஓடியே விட்டார்கள் என்பதையும் மறுக்க முடியாது. ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கித் தராதது நம் மீது உள்ள தவறுதான்.. அவர்கள் உள்ளே வருவதற்கு முக்கியமான ஒரு பாயிண்ட் இருக்க வேண்டும். 

ஜாதி படமாக இருந்தால் கூட அதை பார்ப்பதற்கான ஒரு கூட்டம் வருகிறார்கள். விருதுகளுக்கான படங்கள் எடுப்பது வேறு, ஸ்டார் படங்கள் என்பது வேறு. ஆனால் மற்ற படங்களுக்கு தியேட்டர்களையோ விநியோகஸ்தர்களையோ ரசிகர்களையோ குறை சொல்லவே முடியாது.

ஏற்கனவே ரிலீஸ் தேதியை திட்டமிட்டு விட்டு பெரிய படங்கள் வருகிறது என்பதால், நீங்கள் ஏன் பின்வாங்குகிறீர்கள்? பெரிய படம் தோற்றது இல்லையா ? பல நேரங்களில் பெரிய படம் தான் தோற்கிறது. ஏன் விட்டுக் கொடுக்கிறீர்கள் ? போராட வேண்டும்.. 

நீங்கள் விலகும் போது அவர்களுக்கு விளையாடுவதற்கு களம் கிடைக்கிறது .அதிக காட்சிகள் கிடைக்கிறது. உங்கள் வீடு, சொத்தை யார் பெயரிலாவது எழுதி வைப்பீர்களா ? அப்புறம் பல கோடி பணம் போட்டு எடுத்த படத்தை மட்டும் யாரோ ஒருவரிடம் எப்படி கொடுக்கிறீர்கள் ? சொந்தமாக ஏன் ரிலீஸ் செய்யத் தயங்குகிறீர்கள் ? அப்படி என்றால் வியாபாரம் கற்றுக் கொள்ளாமல் உள்ளே வந்திருக்கிறீர்கள். வியாபாரத்தை தெரிந்து கொண்டு வாருங்கள். 

அப்படி இல்லாமல் தோற்றுப் போய் விட்டேன் என்று அழுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.. 

எனக்கு இப்போது டிஸ்ட்ரிபியூஷன் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. விரைவில் அதில் இறங்கப் போகிறேன். அங்கே தான் எல்லா படங்களும் கடைசியாக பிரச்சனையில் வந்து நிற்கிறது. யாரிடமாவது படத்தை ரிலீஸ் செய்யக் கொடுத்துவிட்டு ஏன் கெஞ்ச வேண்டும்? இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்.. யார் பின்னாடியும் போக வேண்டாம்” என்று கூறினார்..

*இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது,*

“நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது படம் ரிலீஸ் என்று வந்து விட்டால் எல்லோருமே திமுக பக்கம் தான் திரும்புகிறார்கள் என்று சொன்னார். ஒரு நிறுவனம் தாங்கள் வெளியிடும் படங்களே அதிக திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என தொடர்ந்து பார்த்துக் கொண்டால் நாங்கள் வேறு யார் பக்கம் திரும்ப வேண்டும்?

சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஒரு படம் நன்றாக இருக்கிறது என விமர்சனம் வந்தது. ஆனால் எந்த திரையரங்கில் ஓடுகிறது என்றே தெரியவில்லை. படத்துறையை ஒழுங்கு படுத்துவதற்காக இருக்கக்கூடிய திரைப்பட சங்கங்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இவர்கள் எல்லோரும் இதைப் பற்றி எப்போதுமே கவலைப்படுவது இல்லை. 

அதற்கு காரணம் அரசியல். அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ, வருத்தப்படுவார்களோ என்கிற பயம்.

இன்னொரு பக்கம் பெரிய படம் வெளியாகும்போது அனைத்து திரையரங்குகளிலும் அந்த படத்தையே வெளியிட்டால் சின்ன படங்களுக்கு எப்படி இடம் கிடைக்கும் ? உண்மையிலேயே பொறுப்புணர்வோடும் மக்கள் குறித்த சிந்தனையோடும் சிறிய படங்கள் தான் எடுக்கப்படுகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் அப்படி எந்த சமூக நோக்கத்திலும் எடுக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் சமூக சீரழிவுக்கு வித்திடுகின்றன. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இணையதளம் மூலமாக அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை பற்றித்தான் இந்த இரவின் விழிகள் படம் பேசுகிறது. 

அந்த இணையதளங்களின் பாதிப்பு தான் சினிமாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறிய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவது என்பதே பண விரயம் என்பது போன்ற சூழ்நிலையைத் தான் தமிழ் சினிமா ஏற்படுத்தி வைத்திருக்கிறது.. ஆந்திராவில் எல்லாம் சினிமாவில் ஒரு ஒழுங்குமுறை இருக்கிறது. ஒரு பெரிய படம் வந்தால், கூடவே 10 சின்ன படங்களையும் ரிலீஸ் செய்ய வேண்டும் என எங்கள் இயக்குநர் சங்கம் மட்டும் தான் கவலைப்படுகிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அதை செய்ய மறுக்கிறார்கள்” என்று பேசினார்.

*இயக்குநர் பேரரசு பேசும்போது,*

“இங்கே அதிமுக, திமுக, நாம் தமிழர், பாஜக என பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பேச வந்திருக்கிறோம். நாயகி நீமாரே இயக்குநரைப் போல மிமிக்கிரி செய்து பேசுவதைப்  பார்க்கும்போதே அவர் சிறந்த நடிகையாக இருக்கிறார் என்பது தெரிகிறது. 

சீமான் அண்ணன் பேச வேண்டியதை மு.களஞ்சியம் பேசிவிட்டார். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் என்னைப்போல ஊர் பாசம் கொண்டவர். அதனால் தான் தன்னுடைய ஊர் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்டார்.

பெண்கள் ஆண்களுக்கு நிகராக வந்து விட்டார்கள், புரட்சிப் பெண் என்றெல்லாம் சொல்கிறோம். ஆனால் இன்று அவர்களை விட மிக மோசமான நிலையில் வேறு யாருமில்லை.. அது குறித்த விழிப்புணர்வை இந்த படம் சொல்ல வருகிறது. இன்று படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. அதை ரிலீஸ் செய்வது தான் கஷ்டமாக இருக்கிறது. 

இன்றைக்கு சினிமாவில் உள்ள மிகப்பெரிய இடர்ப்பாடு இதுதான். திரைப்படத்தை ரிலீஸ் செய்வது தான் முதல் வெற்றியாக இருக்கிறது. அன்று இந்த சினிமா நன்றாக இருக்க வேண்டுமென அனைவருமே நினைத்தார்கள். ஆனால் இன்று என் படம் மட்டுமே ஓட வேண்டும், நான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என பலரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். 

இன்னொரு தயாரிப்பாளரின் படத்திற்கு திரையரங்குகள் கொடுக்க வேண்டுமே என அவர்கள் நினைப்பது இல்லை. 

அந்த வகையில் இன்று சினிமாவை அழிப்பது சுயநலம் தான்/ அப்படி நினைத்தால் ஒரு காலகட்டத்தில் சினிமாவும் அழிந்து இந்த சுயநலத்தில் இருப்பவர்களும் அழிந்து போவார்கள். முன்பெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள், சில முக்கியமான பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்காக காத்திருந்து அதை படித்துவிட்டு படம் பார்க்க சென்றார்கள். 

விமர்சனம் வரவில்லை என்றால் போன் போட்டுக் கேட்டார்கள். ஆனால் இன்று ஒரு சிலர் செய்யும் விமர்சனங்களை பார்க்கும்போது ஏன் தான் இவர்கள் இப்படி விமர்சனம் பண்ணுகிறார்கள் என தோன்றுகிறது. வன்மத்தைக் கக்குகிறார்கள். 

அப்படிப்பட்டவர்களின் விமர்சனத்தை தான் இன்றைய ரசிகர்களின் மன நிலையும் நம்புகிறது. யாரையாவது திட்டினால் தான் அவர்களுக்கு சந்தோசமாக இருக்கிறது. பாசிட்டிவாக சொன்னால் அதை ஒதுக்கி விடுகிறார்கள்.

சின்ன படம் ஓட வேண்டும் என நினைப்பவர்கள் அனைவருமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஒரு நல்ல படம் வெளியானால் அந்த படக்குழுவினரை தன் வீட்டிற்கே வரவழைத்து வாழ்த்துகிறார். 

இன்றைக்கு அப்படிப்பட்ட மனம் வேறு யாரிடம் இருக்கிறது? ரஜினி சாரே நன்றாக இருக்கிறது என சொல்லிவிட்டார் என்பதற்காக பல பேர் அந்த படத்தை பார்க்கிறார்கள். அந்த வகையில் ஒரு சிறிய பட வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் உதவி செய்கிறார். ஏனென்றால் அவர் சினிமா நன்றாக இருக்க வேண்டுமென நினைப்பவர்.

அவருடைய ஒரு பட வெற்றி விழாவில் இயக்குநர் சேரன் படத்தைப் பாராட்டி அவருக்கு தங்கச்சங்கிலி போட்டு பரிசளிக்கிறார்.. எந்த ஹீரோவுக்கு இப்படி ஒரு மனசு வரும்..? அதே போல இப்போது இருக்கும் பெரிய ஹீரோக்கள், உங்களுக்குப் பிடித்த சின்ன படங்கள் இருந்தால், அது நன்றாக இருந்தால் தாராளமாக மனது விட்டு பாராட்டுங்கள்..” என்று பேசினார்.

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11ல் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘Celebrating இசை’ !!

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா !!

இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் கலந்துகொண்ட இளையராஜா ஸ்பெஷல் சூப்பர் சீனியர் சீசன் 11 !!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘Celebrating இசை’ என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர்.

அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தியது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது.

தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இளையராஜாவின் இசையை கொண்டாடும் வகையிலும், அவரின் தீவிரமான ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வழக்கத்தை விடவும் இந்த வாரம் நிகழ்ச்சி பெரிய அளவில் களைகட்டும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

பல இளம் திறமையாளர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.

சூப்பர சிங்கர் சீனியர் 11 நிகழ்ச்சியை சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டுகளியுங்கள்.

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்”

ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது புதிய தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் பிரீமியர் ஆகும் இந்த சீரிஸ், அதன் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆர்வத்தை உருவாக்கிய நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருன்மை நிறைந்த, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் திகில் நிறைந்த கதையம்சத்தில் பரபர திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

வேடுவன் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். மேலும் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ், ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசை – விபின் பாஸ்கர்.

டிரைலர் – https://www.youtube.com/watch?v=aD8JadO6q7U

கதையில் சூரஜ் (கண்ணா ரவி), முன்னேற போராடும் நடிகராக வாழ்ந்து வரும் போது, “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்” என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவற்றின் உலகில் ஆழமாக இழுத்துச் செல்கிறது. சினிமா கதையும் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான திரில்லராக இந்த கதை நகர்கிறது.

நடிகர் கண்ணா ரவி கூறுகையில்:
“வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு இது ரீல்-ரியல் கலந்த ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணம். சூரஜாக நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நடிகனின் போராட்ட வாழ்க்கையை மட்டும் அல்லாமல், அருணின் சவால்கள், முடிவுகள், தியாகங்களை வாழ்ந்தது போன்ற உணர்வைத் தந்தது. கடமைக்கும், காதலுக்கும், மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. ஒரு நடிகனாக, இது எனக்கு வித்தியாசமான சவாலை அளித்தது.”

ZEE5 தமிழ் & மலையாளம் பிஸினஸ் ஹெட்அான லாய்ட் C சேவியர் தெரிவித்ததாவது..,
“வேடுவன் மூலம், வேர்களோடு பிணைந்த, துணிச்சலான, உணர்ச்சிப்பூர்வமான கதைகளை எங்கள் தமிழ் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். வலுவான நடிகர்கள், உணர்ச்சி மிக்க கதை, அருமையான விஷுவல் மூன்றும் இணைந்திருப்பதால், இது சாதாரண டிராமாவாக இல்லாமல், ரசிகர்களுக்கு பிரத்தியேகமான அனுபவத்தை தரும். மனித உணர்வுகளின் உறுதியைப் பற்றிய சக்திவாய்ந்த கதையாக, பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவம் தரும் என்று நம்புகிறோம்.”

இயக்குநர் பவன் கூறுகையில்..,
“வேடுவன் எனது கண்ணோட்டத்தில், காதல், கடமை, துரோகம் ஆகியவை மனித உணர்வுகளின் ஆழத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெரிய விலை கொடுக்கிறார்கள். பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும், பார்வையாளர்கள் தங்களும் இத்தகைய சூழலில் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பும் கதையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இப்படியான கதைக்கு துணிச்சலாக ஆதரவளித்த ZEE5-க்கு நன்றி. பார்வையாளர்கள் ‘வேடுவன்’ உலகத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

காதல், துரோகம், மீட்பு நிறைந்த பயணம் அக்டோபர் 10 முதல், உங்கள் ZEE5-இல்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும்“சரஸ்வதி”

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர்.

முன்னனி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
படத்தொகுப்பு – வெங்கட் ராஜன்
கலை இயக்கம் – சுதீர் மச்சர்லா

திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக அமைந்துள்ளது.

பிரபாஸ் நடிப்பில் ஃபேண்டஸி திரைப்படம் “தி ராஜா சாப்”

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில், ஹாரர் ஃபேண்டஸி டிராமா – தி ராஜா சாப் டிரெய்லர், கண்களுக்கு அசத்தலான காட்சி விருந்தாக நகைச்சுவை, டிராமா, உணர்வுகளுடன் ரசிகர்களை ஈர்க்கிறது !!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடித்த பான்-இந்திய பிரம்மாண்ட திரைப்ப்படமான “தி ராஜா சாப்” படத்தின் டிரெய்லர் இறுதியாக வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமானுஷ்ய திகில், நகைச்சுவை, டிராமா மற்றும் உணர்வுகளை கலந்து, இந்திய திரையுலகில் அரிதாகக் நிகழும் கலக்கலான எண்டர்டெய்ன்மெண்ட் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர்-ஃபேண்டஸி டிராமாவாகக் கருதப்படும் இந்த படம், பெரும் பிரம்மாண்டத்தால் மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான கதையினாலும் மனதைத் தொடுகிறது. காதல், குடும்பம், மரபு போன்ற உணர்வுகளால் மனதை தொடும் இந்த கதை, பெரும் கனவுலகப் பிம்பங்களுடன் பார்வையாளர்களின் உள்ளங்களையும் கவரவிருக்கிறது.

₹1,200 கோடி வசூலித்த கல்கி 2898 AD வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் புதிய வேடத்தில் திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படக்குழு மூன்று நிமிடத்திற்கும் அதிகமான டிரெய்லரை, படத்தின் வெளியீட்டிற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியிட்டிருப்பது, படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 105 தியேட்டர்களில் டிரெய்லர் மாஸ் ஸ்கிரீனிங்ஸ் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரம், விசில் முழக்கங்களுடன் திரையரங்குகளை திருவிழாவாக மாற்றினர். அதேசமயம், பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் People Media Factory’ன் டிஜிட்டல் தளங்களிலும் டிரெய்லர் வெளியிடப்பட்டது, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.

படம் குறித்து இயக்குநர் மாருதி கூறியதாவது:

“தி ராஜா சாப் மூலம் பெரும் உலகம், உணர்ச்சி, எண்டர்டெய்ன்மென்ட் என அனைத்தையும் ஒருங்கிணைக்கவேண்டுமென விரும்பினோம். டிரெய்லர் என்பது அந்த அளவின் ஒரு சிறு முன்னோட்டமே. பிரபாஸ் அவர்கள் தனது திரை ஆளுமையாலும், தனித்துவ நடிப்புத் திறமையாலும் வேடத்தை சிறப்பாகக் கொண்டுசென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த இன்ட்ரோ பாடல் எனக்குப் பெரும் அனுபவமாக இருந்தது – அதை நீங்கள் டார்லிங் ரெபெல் ஸ்டாருக்கான அன்பாகக் கருதினாலும், டைட்டில் பாடலாக கருதினாலும் அது எங்கள் இதயத்திலிருந்து உருவாகி வந்தது.”

தயாரிப்பாளர் டி.ஜி. விஸ்வ பிரசாத் (People Media Factory) கூறியதாவது..,

“இந்தியாவின் மிகப்பெரிய ஹாரர் செட் உருவாக்கியதிலிருந்து, ரெபல் ஸ்டார் பிரபாஸை முன்னணியில் வைத்து சக்திவாய்ந்த நடிகர் பட்டாளத்தை அமைத்தது வரை, எங்கள் குறிக்கோள் மறக்க முடியாத பான்-இந்திய அனுபவத்தை தர வேண்டும் என்பதே. டிரெய்லருக்கான ரசிகர்களின் பெரும் வரவேற்பு, எங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இது கொண்டாட்டத்தின் தொடக்கம் மட்டுமே.”

பிரபாஸ் உடன் சஞ்சய் தத், பூமன் இரானி, சரினா வாஹாப், மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள இந்த படம், சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளோடும் அமானுஷ்ய உலகின் களத்தோடும் திரைக்கு வருகிறது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி People Media Factory நிறுவனத்தின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் தயாரித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. தமன் எஸ் இசையமைத்து, பிரம்மாண்ட காட்சிகளுடன், ஹாரர், ஃபாண்டஸி, நகைச்சுவை, உணர்ச்சி என அனைத்தையும் இணைக்கும் இந்தப் படம், ரசிகர்கள் ஆராதிக்கும் பிரபாஸின் தனித்துவமான திரை ஆளுமையை அசத்தலாக வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது.

ஜனவரி 9 , 2026 அன்று திரைக்கு வர உள்ளது

“ஹெய் வெசோ” திரைப்படம் பிரம்மாண்டமாக துவங்கியது !!

சுதீர் ஆனந்த், பிரசன்னா குமார் கோட்டா, சிவா சேர்ரி, ரவிகிரண், வஜ்ர வராஹி சினிமாஸ் இணையும் புரடக்சன் நம்பர் 1 – “ஹெய் வெசோ” திரைப்படம் பிரமாண்டமாக துவங்கியது!! VV வினாயக் முதல் காட்சியை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார் !!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா ( Prasanna Kumar Kota) இயக்குநராக அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் (Vajra Varahi Cinema) சார்பில் தங்கள் முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“ஹெய் வெசோ” எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன் வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.

டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும், தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.

படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு (Bunny Vasu) திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா (Vassishta) , சந்தூ மொண்டேட்டி (, Chandoo Mondeti) , மெஹர் ரமேஷ் ( Meher Ramesh )கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர். VV வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.

நடாஷா சிங் (Natasha Singh) , நக்‌ஷா சரண் (Naksha Saran) ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா (Akshara Gowda) முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் (Anudeep Dev) இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா K பிரசாத் (Chota K Prasad) எடிட்டிங், பிரஹ்மா கடலி ( Brahma Kadali )ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

“ஹெய் வெசோ” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ளது.

நடிகர்கள் : சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம்: வஜ்ர வராஹி சினிமாஸ்
தயாரிப்பாளர்கள்: சிவா சேர்ரி – ரவிகிரண்
இயக்குநர்: பிரசன்னா குமார் கோட்டா
இசை: அனுதீப் தேவ்
ஒளிப்பதிவு: சுஜாதா சித்தார்த்
எடிட்டிங்: சோட்டா கே பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரம்ம கடாலி
பாடல்கள்: ராமஜோகைய்யா சாஸ்த்ரி
எழுத்து: சிந்தா ஸ்ரீனிவாஸ்
உடை வடிவமைப்பு: ரஞ்சிதா குவ்வலா
நடன அமைப்பு: விஜய் போலாகி
ஸ்டண்ட்: ப்ருத்வி
லைன் புரொட்யூசர்: உதய் நந்திபட்டி
மார்க்கெட்டிங்: மனோஜ் வல்லூரி (Hashtag Media)
பிரசாரக் கலை: தானி ஆலே
மக்கள் தொடர்பு: யுவராஜ்

We at SMCA take immense pride and delight to present the 47th AnnualAutumn Festival “Sharodotsav”

We at SMCA take immense pride and delight to present the 47th Annual
Autumn Festival “Sharodotsav” from 28th September to 2nd October, 2025.
SMCA is a body registered under the Tamil Nadu Societies Registration Act,

  1. While we inaugurate the Annual Autumn festival by invoking the
    Goddess of Shakti – Maa Durga, we add to the grandeur with gala events Musical Nights, Stage performances of renowned artists and members,
    Food-fest, various contests, lucky draw and many more, over a period of 5
    days. This mega event gives space for branding products visible to a large gathering from various strata of society and a souvenir that is read by 3000+ patrons, as experienced over the years.
    We stay relevant throughout the year with our charitable initiatives under SMCA CHARITABLE TRUST, registered as a Public Charitable Trust. Over four decades our trust has been offering support to individuals and organizations in the areas of – Annadanam, Education, Health and Environment. It has been involved in the enhancement of socio-economic living conditions of the marginalized population of the society.
    The Sharodotsav at SMCA brings together people from all walks of life-cultures, communities and states, into a bond of friendship and goodwill
    instilling the spirit of harmony and humanity in the process. We also serve free
    food on 3 days – Saptami, Ashtami and Navam for about 10,000 people.
    This event also coincides with our annual fundraising initiative for the Charitable Trust and other social activities of SMCA.

Chief Guests-
Rtd. Chief Justice of Manipur and Agartala and
Mr Murlidharan and Mr. Senthil Kumar- Madras High Court Judge.

SMCA
President
Kausik Ganguly
Secretary
Sandip Dey
Vice -Presidents Bhaskar Sain
and Debashish
Mukherjee.
Dr Anita Ramesh, Executive Committee Member was also present on the occasion.