Breaking
August 12, 2026

July 2026

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக ‘அர்ஜுனன் பேர் பத்து’.

இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தில் யோகி பாபுவுடன் ,அனாமிகா மஹி,காளி வெங்கட், அருள் தாஸ், லெனின் பாரதி, சுப்பிரமணியம் சிவா, மைனா நந்தினி, மதன் தட்சிணாமூர்த்தி, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி ,எம் சௌந்தர்யா சரவணன் ,ரஞ்சன் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு டி .இமான் இசையமைத்துள்ளார் .பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.மு. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல்களை கார்த்திக் நேத்தாவும் வசனத்தை எம் .ஆர் .அருண் சந்தரும் எழுதியுள்ளனர்.கலை இயக்கத்தை B. சேகரும் சண்டைக் காட்சிகளை ஓம் பிரகாஷும் கவனித்துள்ளனர். ஆடியோ லஹரி மியூசிக்.

தேவ் சினிமாஸ் சார்பில் கிருத்திகா தங்கப் பாண்டி எஸ் மற்றும் தங்கப்பாண்டி. D தயாரித்துள்ளனர்.

இணைத் தயாரிப்பு: எல் .சுந்தரபாண்டி

இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவிழா பிரசாத் லேப் திரையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் படக் குழுவினருடன் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் கதை நாயகன் யோகி பாபு பேசும் போது,

” எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தங்கபாண்டி சார், கீர்த்திகா மேடம்,இயக்குநர் ராஜ்மோகன் உங்களுக்கு எல்லாம் ரொம்ப நன்றி.
இது எனது 300 ஆவது படம் என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நம்பருடன் நாமே ஒரு வரையறை வைத்துக் கொள்ளக் கூடாது.
எனவே 300 என்ற எண் எனக்குப் போதாது.ஒரு நடிகராக இருந்து கொண்டு நாமே ஒரு எண்ணிக்கை போட்டுப் பெருமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த எண்ணிக்கையைக் கடைசி காலத்தில் தான் சொல்ல வேண்டும்.
நாகேஷ் சார், மனோரமா அம்மா போன்ற ஜாம்பவான்கள் நடித்த எண்ணிக்கையைப் போல் நானும் நிறைய படங்கள் நடித்துப் பெரிதாக வளர வேண்டும். அந்த அளவிற்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.இந்தப் படத்தில் நடித்த சென்ட்ராயனுக்கு நன்றி.இந்தப் படத்தில் நான் அழுவது போல் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
அடுத்து மைனா உங்களுக்கு ரொம்ப நன்றி. கதாநாயகி அனாமிகாவுக்கு நன்றி.

நான் 2016 லேயே நயன்தாரா கூட நடித்து விட்டேன். இனி யாருடன் நடிக்க வேண்டும் என்கிற கவலை இல்லை.எந்தக் கதாநாயகியுடனும் நடிக்க வேண்டும் என்ற கவலை இல்லை.நமக்குக் கதை தான் முக்கியம் ,கதாநாயகி அல்ல.

இமான் சார் எனக்குப் பிடித்த இசையமைப்பாளர். அவர் என்னைப் பாராட்டிப் பேசினார். ஆனால் நானும் அவரை எப்போதும் பாராட்டிக் கொண்டிருக்கிறேன் .நானும் பிரபு சாலமன் சாரும் ‘மேம்போ’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எப்போதும் அவரைப் பற்றித் தான் பேசுவோம். அவரும் பெருமையாகச் சொல்வார்.
நான் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் படங்களின் இசையை அவரிடம் தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.கண்டிப்பாக நீங்கள் செய்து தர வேண்டும்.இந்தப் படத்துக்காக அவரிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன், அதைச் செய்து கொடுத்து உதவினார்.ரொம்ப நன்றி சார்.காளி வெங்கட் என் நல்ல நண்பர்.நான் அழைத்ததும் உடனே வந்து விட்டார்.அவர் நாயகனாக நடிக்கும் படங்களில் இரண்டு காட்சிகளுக்குக் கூப்பிட்டால் கூட போய் நடித்துக் கொடுப்பேன். நித்திலன் இங்கே வந்ததற்கு ரொம்ப நன்றி.பாடல் எழுதியிருக்கும் கார்த்திக் நேத்தா சாருக்கும் நன்றி.
மேலும் இங்கே வந்துள்ள
மதன் சார், ரமேஷ் சார், சௌந்தர்யா எல்லாருக்கும் ரொம்ப நன்றி. கேமராமேன் பிரதீப்,உதவி இயக்குநர்கள் எல்லாருக்கும் ரொம்ப நன்றி.

இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்மோகன் எனக்கு நீண்ட காலமாக நல்ல பழக்கம்.

ஆற்காடு பக்கத்தில் ஒரு கிராமம் தான் எங்கள் தாத்தாவோட பூர்வீகம். நாங்கள் பிறந்ததெல்லாம் எல்லாமே சென்னைதான்.வெளியூரிலிருந்து வந்தவர்களுக்குத் தான் சினிமா கஷ்டம் என்று கிடையாது .சென்னையில் பிறந்தவர்களுக்கும் சினிமா கஷ்டம் தான்.
சென்னை வாசிதான் நாங்க எல்லாமே. நான் அதை இந்த 24 வருஷம் அனுபவப்பட்டுத் தெரிந்திருக்கிறேன்.

2009 வந்து யோகிதான் உங்களுக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி நான் லொள்ளுசபா போல எல்லா சேனலிலும் நிகழ்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன்.எல்லார் கூடவும் பணியாற்றி இருக்கிறேன் ஆர்ட் டைரக்டர் இடம் உதவியாளராக வேலை பார்த்துள்ளேன் .இப்படி நிறைய வேலை பார்த்திருக்கிறேன். நாம் வளர வேண்டும் என்றால் அதெல்லாம் செய்துதான் ஆக வேண்டும்.அவை யாவும் என்னுடைய வளர்ச்சிக்கு நான் செய்தவை தான்.

இந்த ராஜ்மோகன் பற்றி இங்கே சொல்ல வேண்டும்.
ஒரு நாள் ராஜ்மோகன் என்னிடம் வந்து ஒரு மாதிரி கதை சொன்னான்.அதன் பிறகு ஆளே காணோம். கொஞ்ச நாள் காணாமல் போய்விட்டான்.மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் என் அலுவலகத்தில் இருக்கும்போது ராஜ்மோகன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று நினைவுவந்தது. உடனே அவனுக்குப் போன் செய்தேன்.என்ன செய்கிறாய் என்று கேட்டேன்.இது மாதிரி ஒன்று செய்து கொண்டிருக்கிறேன் என்றான் உடனே வா படம் பண்ணலாம் என்று அழைத்தேன்.அதற்குப் பிறகுதான் சந்தித்தோம்.அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தோம்.இது மாதிரி நிறைய உதவி இயக்குநர்களுக்கு நான் உதவி செய்யத் தயாராக இருக்கிறேன் நல்ல கதையோடு வாருங்கள்.சரியாகச் செய்யுங்கள்.மீண்டும் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”. என்றார்.

பேசி முடித்ததும் அவருடன் செய்தியாளர்கள் கலந்துரையாடிய போது அவரிடம் யாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று கேட்ட போது, “கமல் சாருடன் மட்டும் தான் இன்னும் நடிக்கவில்லை. விரைவில் நடிப்பேன் என்று நம்புகிறேன் “என்றார். மேலும் யோகி பாபு பகிர்ந்து கொண்டவை:

“300 படங்கள் வரை வந்துள்ளதற்குத் தெய்வ பக்தி காரணம்.நான் வழங்கும் முருகன்தான் அதற்குக் காரணம். எனக்கு முருகன் மேல் பெரிய நம்பிக்கை உள்ளது.

நான் எந்த பிரேமில் தலை காட்டினாலும் என்னை ஒரு நகைச்சுவை நடிகராகத்தான் பார்க்கிறார்கள்.நகைச்சுவை வேடங்கள் தான் எனக்குச் சோறு போடுகிறது. அதை முதலில் நான் திருப்தி செய்ய வேண்டும்.அதனால் அதை நிறுத்த மாட்டேன்.சில படங்களில் லீடு என்று முன்னணிப் பாத்திரங்களில் என்னைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்.மற்றபடி நான் ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் என் காலத்தை ஓட்டுகிறேன்.என்னை ஆதரித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. அவர்களுக்கு நான் இன்னும் படங்களின் மூலம் கொடுக்க வேண்டும், நிச்சயம் செய்வேன்” இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னதாக தயாரிப்பாளர் தங்கப்பாண்டி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

மேலும் விழாவில்சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், நித்திலன், ஷான் ,படத்தின் இயக்குநர் ரா.ராஜ்மோகன், இசையமைப்பாளர் இமான்,ஒளிப்பதிவாளர் பிரதீப் காளி ராஜா, கதாநாயகி அனாமிகா,மைனா நந்தினி, அருள்தாஸ், காளி வெங்கட், லெனின் பாரதி,சுப்பிரமணியம் சிவா, சென்ட்ராயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவின் நிறைவில் ட்ரெய்லர் பாடல்கள் வெளியிடப்பட்டன.
300 ஆவது படத்தை முன்னிட்டு நாயகன் யோகிபாபுவுக்குத் தயாரிப்பாளர் ஆளுயர மாலை அணிவித்தார். அத்துடன் விழாவில் கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.

யோகி பாபுவின் 300 வது படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளிவர இருக்கிறது.

ராம் பொதினேனி – சாம் சி எஸ் கூட்டணியில் #RAPO23

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, தனது 23வது திரைப்படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் இயக்குநராக எடுக்கும் முதல் படத்திற்கு சாம் சி எஸ் இசையமைப்பது, இந்த கூட்டணியை தென்னிந்திய சினிமாவின் மிகவும் பேசப்படும் கூட்டணிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, கதையின் மனநிலையையும், பரபரப்பையும் இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளர் தேவைப்படும் சூழலில், சாம் சி எஸ் சரியான தேர்வாக பார்க்கப்படுகிறார். திரில்லர், ஆக்ஷன், சஸ்பென்ஸ், ஹாரர் என எந்த ஜானரிலும் தனக்கென ஒரு தனித்துவமான இசை மொழியை உருவாக்கியுள்ள அவர், #RAPO23-க்கும் அதே தரத்தில் ஒரு புதிய இசை அனுபவத்தை வழங்குவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், பின்னணி இசைக்காக அதிகம் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக சாம் சி எஸ் திகழ்கிறார். கதையின் உணர்வுகளை இசையின் மூலம் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது திறமை, பல திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக த்ரில்லர் படங்களில் அவர் உருவாக்கும் சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசை, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கி வருகிறது.

அதேநேரத்தில், சமீபத்தில் வெளியான “இம்மார்டல்” திரைப்படத்தின் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல், அவரது மெலடி திறமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒருபுறம் காதல் பாடல்களில் மனதை வருடும் மெலடியையும், மறுபுறம் திரில்லர் படங்களில் பரபரப்பை கூட்டும் பின்னணி இசையையும் சமமாக கையாளும் இசையமைப்பாளராக சாம் சி எஸ் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ராம் போதினேனியின் முதல் இயக்குநர் படமும் அவரது கைவசம் வந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

இயக்குநராக புதிய பயணத்தை தொடங்கும் ராம் பொதினேனி மற்றும் இசையின் மூலம் கதைக்கு உயிர் கொடுக்கும் சாம் சி எஸ் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி, #RAPO23 திரைப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. கதைக்கு இணையாக இசையும் இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி, தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பேசப்படும் முக்கியமான காம்பினேஷனாக மாறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘ஐ, நோபடி’ திரைப்பட விமர்சனம்….

மூன்று கொள்ளையர்கள் ஒரு வங்கியில் துணிகர கொள்ளை நடத்துகின்றனர். அந்த நேரத்தில் வங்கிக்குள் இருந்த பிரித்விராஜ் சுகுமாரனின் முகத்தை மூடி, அவரை பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர்.

சிறிது தூரம் சென்ற பிறகு, ஒரு இடத்தில் அவரை இறக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த மூவரில் ஒருவரை அடையாளம் காண உதவும் முக்கிய ஆதாரம் ஒன்று பிரித்விராஜ் சுகுமாரனின் கையில் கிடைக்கிறது. இதற்கிடையில், அந்த மூன்று கொள்ளையர்களும் விபத்து ஒன்றில் உயிரிழக்கின்றனர்.

பிரித்விராஜ் கையில் கிடைத்த ஆதாரத்தின் மூலம் உண்மையான கொள்ளையர்கள் யார் என்பது காவல்துறைக்கு தெரியவருகிறது. ஆனால், அவர்கள் ஏற்கனவே விபத்தில் இறந்துவிட்டதால் கைது செய்ய முடியாத சூழல் உருவாகிறது. குறைந்தபட்சம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையாவது மீட்டெடுக்கலாம் என காவல்துறை முயற்சித்தாலும், அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இதற்கிடையில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட அந்த வங்கியில் பிரித்விராஜ் சுகுமாரன் என்ன காரணத்திற்காக இருந்தார் என்ற கேள்வி காவல்துறைக்கு எழுகிறது. அந்த வங்கியில் அவருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்தவித வங்கிக் கணக்கும் இல்லை. அப்படியிருக்க, அவர் ஏன் அந்த வங்கிக்கு வந்தார்? நீண்ட நேரம் அங்கு இருந்தும், எந்த வங்கி ஊழியரிடமும் எந்த உதவியையும் கேட்காமல் இருந்தது ஏன்?

இந்தச் சந்தேகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அதிகரிக்க, ஒருவேளை கொள்ளையர்களுக்கும் பிரித்விராஜ் சுகுமாரனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வியும் காவல்துறையினரின் மனதில் எழுகிறது. அதே நேரத்தில், இந்த சந்தேகங்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளால் பிரித்விராஜ் சுகுமாரனும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

சிலந்தி வலை போல சிக்கல்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைய, அவற்றிலிருந்து பிரித்விராஜ் சுகுமாரன் எப்படி தப்பிக்கிறார்? அவரது குடும்பம் இந்த நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கிறது? வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இறுதியில் எங்கே செல்கிறது? அதை கண்டுபிடிக்க காவல்துறை மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் என்ன? அந்தப் பணம் இறுதியில் யாரிடம் சிக்குகிறது? என்ற கேள்விகளுக்கான பதில்களை, ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பும் பதற்றமும் குறையாமல் சொல்லும் த்ரில்லர் திரைப்படம்தான் ‘ஐ நோபடி’ (I NOBODY).

வங்கிக் கொள்ளைக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒருவரை கதையின் மையமாக வைத்து, ஒவ்வொரு காட்சியிலும் புதிய பரபரப்பை உருவாக்கி, நொடி தோறும் திக்… திக்… என திகில் உணர்வை ஏற்படுத்தி, இறுதிவரை பார்வையாளர்களின் கவனத்தை சிதறவிடாமல் ஈர்த்திருப்பது படக்குழுவினரின் சிறப்பான திரைக்கதை அமைப்பையும் திறமையையும் வெளிப்படுத்துகிறது.

நடிகர் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர்

டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஓ! சுகுமாரி’ – திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் – காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். ‘ஓ! சுகுமாரி ‘ படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரில், ‘தாமினி’ என்ற துடுக்குத்தனமான இளம் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது. இவளைக் கண்டு ஊரே ஒரு விசித்திரமான காரணத்திற்காக அஞ்சுகிறது. அதாவது, அவளை தொடுபவர்களுக்கு மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சி ( Electric Shock) ஏற்படுகிறது. இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்து, அவளது குடும்பத்தினர்- அவளை நாயகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு தனக்கு என்ன காத்திருக்கிறது என்பது அந்த நாயகனுக்கு தெரியாது. இதுபோன்ற அசாதாரணமான சிக்கலை சமாளிக்க போராடும் அந்த புதுமண தம்பதியினருக்கு இடையே ஏற்படும் கலகலப்பான மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளே படத்தின் அடுத்த கட்ட நகர்வாக அமைகிறது. அவர்கள் இருவரும் இணைந்து இந்த சிக்கலை எப்படி எதிர்கொண்டு காதலையும், மகிழ்ச்சியையும் கண்டறிந்து கொண்டாடுகிறார்கள் என்பதே இந்த கதையின் மையமாகும்.

இயக்குநர் பரத் தர்ஷன் உணர்ச்சிகளுக்கு குறைவில்லாமல் அதே சமயம் மிகுந்த நகைச்சுவையுடன் இந்த கதையை வழங்கியுள்ளார். திரு வீர் மீண்டும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். கவலையற்ற கிராமத்து இளைஞராக தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி, துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக ஜொலிக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கான அழகையும், ஆழத்தையும் அவர் திரையில் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். இவர்களுடன் முரளிதர் கௌட் , விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி மற்றும் ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் C.H. குஷேந்தர் – கிராமத்து பின்னணியிலான அழகியல்களை நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் பரத் மஞ்சிராஜு – தனது துடிப்பான இசையின் மூலம் இந்த கலகலப்பான கதை களத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளராக திருமலா எம். திருப்பதி பணியாற்ற, படத் தொகுப்பை ஸ்ரீ வர பிரசாத் கையாளுகிறார்.

இந்த ‘ஓ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் நகைச்சுவை, காதல் மற்றும் உணர்ச்சிகளின் புத்துணர்ச்சியூட்டும் கலவையை வழங்குகிறது. மேலும் இது ஒரு ஆரோக்கியமான குடும்ப பொழுதுபோக்கு படைப்பு என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. ‘ஓ! சுகுமாரி’ ஜூலை 17ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள் : திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், முரளிதர் கௌட், விஷ்ணு. ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் .

தொழில்நுட்ப குழு :

தயாரிப்பாளர் : மகேஸ்வரா ரெட்டி மூலி
இயக்குநர் : பரத் தர்ஷன்
ஒளிப்பதிவு : சி ஹெச் குஷேந்தர்
இசை : பரத் மஞ்சிராஜு
கலை இயக்குநர்: திருமலா எம் திருப்பதி
படத்தொகுப்பு : ஸ்ரீ வர பிரசாத்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

‘லவ்-ஓ-லவ்’ – பழைய காதல் ஃபார்முலாவில் சிக்கிக் கொண்ட ரொமான்டிக் டிராமா

காதலை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களில் புதுமையான திரைக்கதையோ, மனதைத் தொடும் கதாபாத்திரங்களோ இருந்தால் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். ஆனால் ‘லவ்-ஓ-லவ்’, வழக்கமான காதல் கதையை புதிய கோணத்தில் சொல்ல முயன்றாலும், அதில் முழுமையாக வெற்றி பெறவில்லை.

படத்தின் தொடக்கம் ஓரளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், கதை நகர நகர அது ஏற்கனவே பல படங்களில் பார்த்த சம்பவங்களின் தொடர்ச்சியாகவே தோன்றுகிறது. காதல், பிரிவு, மீண்டும் சந்திப்பு போன்ற அம்சங்கள் எந்தப் புதுமையும் இல்லாமல் நகர்வதால் திரைக்கதை எதிர்பார்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை.

நாயகன் மற்றும் நாயகி தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்க முயற்சித்துள்ளனர். இருவருக்கும் இடையிலான சில காட்சிகள் இயல்பாக இருந்தாலும், உணர்ச்சிகரமான தருணங்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. துணை நடிகர்களின் பங்களிப்பும் சாதாரணமாகவே அமைந்துள்ளது.

இயக்குநர் காதலின் பல பரிமாணங்களை பேச முயன்றிருந்தாலும், திரைக்கதையில் போதுமான ஆழம் இல்லாததால் அந்த முயற்சி முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பல காட்சிகள் தேவையற்ற நீளத்துடன் நகர்வதால் படத்தின் வேகம் குறைகிறது. கிளைமாக்ஸும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல், எளிதில் யூகிக்கக்கூடிய வகையிலேயே முடிகிறது.

ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தை அளிக்கிறது. பாடல்களில் சில ரசிக்கும்படியாக இருந்தாலும், பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளின் உணர்வை உயர்த்தத் தவறுகிறது. எடிட்டிங் இன்னும் இறுக்கமாக இருந்திருக்கலாம்.

படத்தின் மிகப்பெரிய குறை அதன் கணிக்கக்கூடிய திரைக்கதை. கதாபாத்திரங்களின் வளர்ச்சியும் போதுமான அளவில் இல்லாததால், அவர்களின் முடிவுகள் பார்வையாளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. நகைச்சுவையும் சில இடங்களில் மட்டுமே வேலை செய்கிறது.

மொத்தத்தில், ‘லவ்-ஓ-லவ்’ ஒரு சாதாரண காதல் திரைப்படமாக மட்டுமே நிற்கிறது. புதுமையான காதல் அனுபவத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளிக்கலாம். சில நல்ல தருணங்கள் இருந்தாலும், அவை படத்தை முழுமையாக காப்பாற்றுவதற்கு போதுமானதாக இல்லை.

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது!

பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார்.

இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களை இணைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. குறிப்பாக துல்கர் – பூஜா இருவரின் இயல்பான கெமிஸ்ட்ரி அனைவரையும் கவர்ந்தது.

அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என்று வெகு சுவாரசியமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், “Love Will Spark Again” என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது. இது காதலையும் நம்பிக்கையையும் மீண்டும் கண்டுபிடிக்கும் ஒரு அழகான காதல் கதையை சுட்டிக்காட்டுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் ஒரு சுவரின் மேல் அமர்ந்து மகிழ்ச்சியாக உரையாடும் தருணம் இடம் பெற்றுள்ளது. இளநீல நிற சட்டை, சாம்பல் நிற பேண்ட் மற்றும் கண்ணாடி அணிந்த துல்கர் சல்மான் வெட்கப் புன்னகையுடன் கீழே பார்க்கிறார். இளநீல நிற சல்வார் அணிந்த பூஜா ஹெக்டே, அவரைப் பார்த்து மனம் திறந்து சிரிக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார்.

இருவரின் உடைத் தேர்வைப் பார்க்கும்போது, அவர்கள் வகுப்புத் தோழர்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான பின்னணி, அமைதியான சூழல், இயல்பான உடல்மொழி மற்றும் மனதை வருடும் புன்னகை ஆகியவை, இருவருக்கும் இடையிலான நெருக்கம், நட்பு மற்றும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பந்த்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.

மொத்தத்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியையும், பாஸிடிவ் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை, மனதை வருடும் உணர்வுகள் மற்றும் கண்கவர் காட்சிகளால் நிறைந்த முழுமையான காதல் பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் குழுவிலும் பல திறமையான கலைஞர்கள் இணைந்துள்ளனர். அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவிநாஷ் கொல்லா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்:

துல்கர் சல்மான்
பூஜா ஹெக்டே

தொழில்நுட்பக் குழு:

கதை, இயக்கம் – ரவி நேலகுதிடி
தயாரிப்பு – சுதாகர் செருகூரி
தயாரிப்பு நிறுவனம் – எஸ்எல்வி சினிமாஸ்
இணை தயாரிப்பாளர் – கோபிசந்த் இன்னமூரி
தலைமை நிர்வாக அதிகாரி – விஜய் குமார் சாகண்டி
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – அனய் ஓம் கோஸ்வாமி
தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா
மக்கள் தொடர்பு – யுவராஜ்

‘இதயம் முரளி’ – விமர்சனம்

‘இதயம் முரளி’ – உணர்வுகளைத் தொட முயன்று தடுமாறும் குடும்ப நாடகம்

குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் வாழ்க்கையின் உணர்வுபூர்வமான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘இதயம் முரளி’, மனதைத் தொடும் ஒரு படமாக இருக்க வேண்டிய இடத்தில், பல இடங்களில் அதன் தாக்கத்தை இழக்கிறது.

கதையின் கரு நன்றாக இருந்தாலும், அதை திரையில் சுவாரஸ்யமாக சொல்லும் விதத்தில் திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. தொடக்கத்தில் உருவாகும் எதிர்பார்ப்பு, அடுத்தடுத்த காட்சிகளில் மெதுவான நகர்வால் குறைந்து விடுகிறது. பல காட்சிகள் தேவையற்ற நீளத்துடன் நகர்வதால் படத்தின் ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர்கள் தங்களால் முடிந்த அளவில் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், வலுவான கதாபாத்திர வடிவமைப்பு இல்லாததால் அவர்கள் நடிப்பு முழுமையாக வெளிப்படவில்லை. உணர்ச்சிகரமான காட்சிகளில் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய தருணங்கள் கூட எதிர்பார்த்த அளவுக்கு மனதில் பதியவில்லை.

இயக்குநரின் நோக்கம் குடும்ப உறவுகளின் மதிப்பை எடுத்துரைப்பதாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை வலுவாக அமையவில்லை. சில முக்கியமான மோதல்கள் மிக எளிதாக முடிவுக்கு வருவதால், கிளைமாக்ஸும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

ஒளிப்பதிவு சில இடங்களில் கதையின் மனநிலையை அழகாக பதிவு செய்கிறது. இசை மற்றும் பின்னணி இசை ஓரளவு பலமாக இருந்தாலும், நினைவில் நிற்கும் பாடல்கள் குறைவாகவே உள்ளன. எடிட்டிங்கில் இன்னும் இறுக்கம் இருந்திருந்தால் படத்தின் நீளம் மற்றும் வேகம் மேம்பட்டிருக்கலாம்.

படத்தின் மிகப்பெரிய குறை அதன் கணிக்கக்கூடிய திரைக்கதை. அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால், எந்தக் காட்சியும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. சில துணைக் கதாபாத்திரங்களும் முழுமையாக பயன்படுத்தப்படாமல் போயுள்ளன.

மொத்தத்தில், ‘இதயம் முரளி’ நல்ல கருத்தை கொண்டிருந்தாலும், பலவீனமான திரைக்கதை, மெதுவான நகர்வு மற்றும் தாக்கம் குறைந்த உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளால் சராசரி குடும்ப நாடகமாக மட்டுமே முடிகிறது. உணர்வுபூர்வமான திரைப்படங்களை விரும்புபவர்களுக்கு கூட இது முழுமையான திருப்தியை வழங்குவதில் தவறுகிறது.

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !

கோபமடைந்த கூட்டத்தை எதிர்கொள்ளும் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே!

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது.

வெளியான புதிய போஸ்டரில், காஜல் அகர்வாலும் ஷ்ரேயாஸ் தல்படேவின் பதற்றமான சூழ்நிலையில் கோபமடைந்த பொதுமக்கள் கூட்டத்தால் சூழப்பட்டிருப்பது காணப்படுகிறது. காய்கறி சந்தையின் நடுவே நடைபெறும் இந்தக் காட்சியில், வியாபாரிகள் இருவரையும் நோக்கி காய்கறிகளை வீசுவதும், குற்றம் சாட்டுவதும் இடம்பெற்றுள்ளது. உண்மையை வெளிக்கொணர முயலும் நபர்கள் சந்திக்கும் எதிர்ப்பையும் சமூகத்தின் கோபத்தையும் இந்த போஸ்டர் வலுவாக பிரதிபலிக்கிறது.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள “Slow Poison in Progress…” என்ற வாசகம், மெதுவாக மனிதர்களின் வாழ்வை பாதிக்கும் மறைமுக அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி, படத்தின் மையக் கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

இயக்குநர் சேட்டன் DK கூறுகையில், “உண்மையை பேசுவதற்கான விலையை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது. ஏமாற்றத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பை கேள்வி கேட்கும்போது, முதலில் வெளிப்படுவது பயமும் கோபமும்தான். ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் அந்தப் போராட்டத்தை உணர்த்துவதோடு, நாம் உண்ணும் உணவு மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி பார்வையாளர்கள் சிந்திக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி , ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி – ஆரவ் ,ரம்யா பாண்டியன் -கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்திருக்கும் ‘அருள்வான்’ திரைப்படத்தினை பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தை கவனிக்க.. லாரன்ஸ் கிஷோர் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஜி சரவணன் தயாரித்திருக்கிறார். இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வழங்குகிறார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இணை தயாரிப்பாளர் திருமதி சுபா சரவணன், இயக்குநர் கணேஷ் விநாயகன், இணை தயாரிப்பாளர்கள் சரண், சரத் , நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட் , நடிகைகள் ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநர் இளையராஜா , ஒளிப்பதிவாளர் எம். சுகுமார், கலை இயக்குனர் லால்குடி’ இளையராஜா ,சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், ” இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். மனிதர்களும், மிருகங்களும் நடமாட கடினமான மலைப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. மலைப்பகுதியில் முட்புதர்களாக இருக்கும் இடத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் பின்னோக்கி ஓடிக் கொண்டிருப்பார். நாங்கள் அவரை பின்தொடர்ந்து செல்வதே சவாலானதாக இருக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதே சவாலானதாக இருக்கும்.

ஒரு நாள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு செல்வதற்கு எந்த வசதியும் இல்லை. நடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான ‘டென்ட்’டை அவர்களே தூக்கிக் கொண்டு சென்று, ,அங்கு டென்ட் அடித்து தங்க வேண்டும். படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளூர் வழிகாட்டி ஒருவர் வேகமாக மலைப்பகுதியில் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்வது கடினமானதாக இருந்தது. ஓரிடத்தில் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்லும் போது ‘திக் திக் ‘என்று இருந்தது. இவ்வளவு இருந்தும் இறுதி கட்ட படப்பிடிப்பில் இரண்டு நாள் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தப் படத்தில் சின்ன வேடத்தில் நடித்த எனக்கே அவ்வளவு சவால்கள் இருந்தது என்றால் ..இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும். அனைவருக்கும் இது கடினமான – மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் இப்படத்தின் காட்சிகளை இயக்குநர் எனக்கு காண்பித்த போது மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் சுகுமார் ஏற்கனவே காட்டில் பிறந்த மனிதரைப் போலவே படமெடுப்பார். ஆனால் இந்த படத்தில் காட்டை வேறொரு கோணத்தில் காண்பித்திருக்கிறார். படத்தில் எல்லா படப்பிடிப்பு தளங்களும் மேகத்திற்கு மேலே தான் இருந்தது. அதாவது சொர்க்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது போல் இருந்தது.

இவற்றையெல்லாம் கடந்து இப்படத்தின் கதை மிகவும் முக்கியமானது. அடிப்படைக் கல்வியைப் பற்றி பேசும் ஒரு படம். இந்த படம் வெளியான பிறகு நிச்சயமாக பேசப்படும்.

நடிகர் அருள்நிதி ஒரு படத்திற்கு சாதாரணமாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். அவருடைய கதை தேர்வு பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றால்… இந்தப் படம் மிக நன்றாக இருக்கும். இப்படத்தில் உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசுகையில், ” பொதுவாக திரைப்பட விநியோகம் என்பது வர்த்தகத்தை சார்ந்தது. இதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். அது கருத்தியல் ரீதியாகவும்… காட்சி அமைப்பு ரீதியாகவும் அல்லது அதில் பங்களிப்பு செய்திருக்கும் கலைஞர்களுக்காக என ஏதோ ஒரு விசயம் மனதிற்கு நெருக்கமாக அமைந்திருக்கும். அதுபோன்ற படங்களையும் வெளியிட்டிருக்கிறோம்.

ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை பற்றி எனக்குள் நிறைய கேள்விகள் இருக்கிறது. இது தொடர்பாக பல விசயங்களை நான் பகிர்ந்து கொண்டதில்லை. அரசு பள்ளியில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்களை பற்றி 2026 ஆம் ஆண்டில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் 2000 ஆம் ஆண்டில் கதை நடப்பது போல் விவரித்திருக்கிறார்கள்.‌ இந்த படத்தை பார்க்கும் போதே என்னவோ செய்தது.‌ இந்தக் கதையில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய கதை மாந்தர்கள் கூட நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் கணேஷ் விநாயகனும் , ஒளிப்பதிவாளர் சுகுமாரும் ஏற்கனவே இணைந்து ‘தேன்’ எனும் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்கள். நாங்கள் தான் அந்த படத்தை வெளியிட்டோம். இந்த இருவருக்கும் காடு- மலை- மக்கள்- எனும் விசயத்தில் ஒற்றுமை உண்டு என நினைக்கிறேன். அதனால் மீண்டும் இருவரும் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

சினிமாவில் காடு -மலை- அருவி- என்றால் சுகுமார் தான் என ஒரு ‘பேட்டர்ன்’னை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் காட்டின் மொத்த அழகியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் சுகுமார்.

ஆரவ்- ரம்யா பாண்டியன் தம்பதியினரின் நடிப்பும் முதிர்ச்சியாக இருக்கும். பேபி கிருத்திகாவின் நடிப்பும் நன்றாக இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து கல்வியைப் பற்றிய ஒரு கடினமான உண்மையை இப்படம் பேசி இருக்கிறது.

இந்த படத்தில் அருள் நிதியின் பங்களிப்பையும் அவசியம் குறிப்பிட வேண்டும். திரைக்கதையில் அவர் வருகை தந்த பிறகு கலை படைப்பாக இருந்த படத்தை கமர்ஷியல் படமாக மாற்றிவிட்டார். அருள்நிதி மிகப் பெரிய பர்ஃபெக்ஷனிஸ்ட். தயாரிப்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குபவர்.

இந்தப் படத்தை வெளியிடுவதை பெருமிதமாக நினைக்கிறேன். ஏனெனில் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை திரை மொழியில் பேசக்கூடிய- அரசியல் புரிதலுடன் கூடிய இயக்குநர்கள் மிகவும் குறைவு. இவரைப் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

அரசு பள்ளியில் பயிலும் முன்னாள் மாணவர்களின் நல சங்கத்திற்காக நடிகர் காளி வெங்கட் தன்னாலான பங்களிப்பை வழங்கி உள்ளது குறித்த செய்தியை பார்த்திருக்கிறேன். இது மிகவும் அழகான விசயம். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.

இப்போதுள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் தங்களுடன் படித்த மாணவர்களுடன் தொடர்ந்து இணைய வழியிலான தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இது போன்ற சமூக ஊடக தொடர்புகள் இல்லை.

நல்லதொரு விசயத்தை சொல்வதற்காக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால்.. தொடர்ந்து நல்ல விசயத்தை சொல்லும் படங்கள் வரும்” என்றார்.

நடிகை பேபி கிருத்திகா பேசுகையில், ” நான் வளர்ந்து வரும் இளம் நடிகை. திரைத்துறையில் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. இந்நிலையில் ‘அருள்வான்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படத்தில் இவ்வளவு பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றுவேனா..! என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு நிஜமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜீ. வி . பிரகாஷ் குமாரின் இசையில் யுக பாரதியின் வரியில் வெளியான ‘அல்லிப்பூவே ‘ எனும் பாடல் என்னுடைய ஃபேவரைட் .அந்தப் பாடலை இதுவரை நூறு முறைக்கும் மேல் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடினமான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், ” இந்தப் படத்தின் கதையை கேட்பதற்கு முன் கிராமத்து கதைகளில் சிறிது நாட்கள் வரை நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். இருந்தாலும் இயக்குநருக்காக இந்த கதையை கேட்டேன். கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இந்த கதையில் நடிக்கலாம் என விரும்பினேன். ஏனெனில் இந்தப் படத்தின் கரு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

படிக்கும் போது ஒரு பள்ளியில் இந்த வசதி இல்லை… இது இல்லை… என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளோ வசதிகளோ இல்லை என்று.. நம் மண்ணிலேயே ஒரு இடம் இருக்கிறது… மக்கள் இருக்கிறார்கள்… அந்த நிலையிலும் மக்கள் வாழ்கிறார்கள்… என கேள்விப்பட்டவுடன் இதில் நிச்சயமாக என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். இதை என்னுடைய பொறுப்பாகவும் நினைத்தேன். இதுபோன்ற கதையை நம்பி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி.

வரைபடத்திலேயே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை… தொலை தொடர்பு வசதிகளே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை…. தூங்குவதற்கோ சாப்பிடுவதற்கோ எந்த வசதிகளும் இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை… இந்த படத்தில் தான் நாங்கள் பார்த்தோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது. அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அங்கு செல்வதற்கு கடினமானதாக இருந்தாலும் அங்கு சென்ற பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டதும்.. அங்குள்ள மக்களுடன் உரையாடியதும்… மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடன் பழகி வாழும் போது அதுவும் சுவாரசியமாகவே இருந்தது.

ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் இணைந்து ஏற்கனவே ‘ரா ரா’ என்ற ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் கிராமங்களை அழகியலுடன் காட்சிப்படுத்துவதை விட, இந்தப் படத்தில் பிரம்மாண்டமாக காண்பித்து இருக்கிறார். அதை இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியும் அற்புதமான விஷுவல் ட்ரீட்டாக இருந்தது.

அருள்நிதி- நம்பிக்கை நாயகன். இந்த படத்தில் அருள்நிதி சார் இருக்கிறார் என்று சொன்னவுடன்… என்னுடைய நண்பர்களும், தோழிகளும் ‘அவர் இருக்கிறாரா..! அப்போ படம் நன்றாக இருக்கும். படம் வித்தியாசமாக இருக்கும் படத்தில் ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என்று சொல்கிறார்கள். அவர் அப்படி ஒரு நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்திலும் நிச்சயமாக ஒரு நல்ல விசயம் இருக்கிறது. அதைத்தான் அவரும் நம்பி இருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது என்று சொன்னவுடன் எங்களுடைய குழுவினரின் நம்பிக்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. இதற்காக அவருக்கு நன்றி.

என்னுடைய சக நடிகர் ஆரவ். அற்புதமான அர்ப்பணிப்புள்ள நடிகர். நடிகர் காளி வெங்கட் சொன்னது போல் மலையில் செங்குத்தாக ஏறி, அதன் பிறகு மேலே சென்று அங்குள்ள மரத்தில் ஏறி ஆரவ் நடித்தார். அதேபோல் அருவி ஒன்றின் கீழ் பகுதியில் நடுங்கும் குளிரில் அவர் உடல் முழுவதும் சந்தனத்தை பூசிக்கொண்டு நடித்தார். இவை எல்லாம் மிகவும் கடினமானது. நாங்கள் அனைவரும் அவர் உடனிருந்து பார்த்தோம். அவருடைய அர்ப்பணிப்பை கண்டு வியந்தேன். ” என்றார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசுகையில், ” இந்த திரைப்படத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. இதில் நிறைய வலிகளும் இருக்கிறது. துன்பங்களும் இருக்கிறது.

‘தகராறு’, ‘வீர சிவாஜி’ ‘ஹைப்பர்’ ( கன்னடம் ) ‘தேன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறேன். இதை தொடர்ந்து ‘அருள்வான்’ படத்தை இயக்கினேன். அருள்வான் படத்திற்கு முன்னதாக நான் இயக்கிய அனைத்து படத்திற்கும் நான் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து, கதை சொல்லி, வாய்ப்பு கேட்டு தான் இயக்கினேன். ஆனால் இந்த படத்திற்கு மட்டும் தயாரிப்பாளர் என்னை தொடர்பு கொண்டு இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் நான் இந்த தயாரிப்பாளரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரான S.G.சரவணன் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். இருந்தாலும் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டவர்.

காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்க வைத்து சிறிய அளவில் தொடங்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம். ஆனால் தயாரிப்பாளர்தான் இப்படத்தினை பெரிதாக்கினார். இந்த படத்திற்கு பெரிய டெக்னீசியனை பயன்படுத்துங்கள். ஜீ வி பிரகாஷ் குமாரிடம் கேளுங்கள் என்றார். தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னுடைய நிறுவனத்திற்கு 90 பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிச்சயம் அவர் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிப்பார். அவர் சினிமாவைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனம் தொடர்ந்து வெற்றி பெற்று வளர வேண்டும். இப்படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி.

எடிட்டர் லாரன்ஸ் கிஷோருடன் ‘தேன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறேன். தேன் படத்தில் அவருக்கு சிறந்த படத் தொகுப்பாளர் என்ற மாநில விருது கிடைத்தது. இந்தப் படத்திலும் அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும்.

இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவும் இல்லாமல். கமர்சியல் ஃபிலிம் ஆகவும் இல்லாமல் இருக்கும். இதனை துல்லியமாக உணர்ந்து முழுமையாக படத்தை தொகுத்திருக்கிறார் லாரன்ஸ் கிஷோர்.

இந்தப் படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

இந்த கதையை என்னுடைய குழந்தை பருவத்திலிருந்து நண்பராக உள்ள ஒளிப்பதிவாளர் சுகுமாரிடம் சொன்னபோது, அவர்தான் படத்திற்கான படப்பிடிப்பு தளத்தை தேர்வு செய்தார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினர். அனைவருக்கும் நன்றி.

இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றால் அதில் 50 சதவீத உழைப்பு இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் சாருக்கு சேரும்.

இந்தப் படத்திற்கு மூன்று ஹீரோக்கள். ஆரவ் -அருள்நிதி- பேபி கிருத்திகா. இதில் பேபி கிருத்திகாவின் பார்வையில் தான் இப்படத்தின் கதை இருக்கும்.‌

படப்பிடிப்பு தளம் சாலை வசதி இல்லாத மலை பகுதி என்பதால்.. 18 நாட்கள் அங்கேயே அனைத்து கலைஞர்களும் தங்கினார்கள். சரியான உணவு கிடையாது. நடைபாதை கூட இருக்காது. இரவு நேரத்தில் விலங்குகள் வரக்கூடிய அபாயம்.. இவ்வளவு இருந்தும் பேபி கிருத்திகா அர்ப்பணிப்புடன் நடித்தார். அதனால் இந்தப் படத்தில் பேபி கிருத்திகாவிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

ரம்யா பாண்டியன் – காளி வெங்கட் – வி டிவி கணேஷ் ஜான் விஜய் சரவணன் ஆகியோருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் ஆரவ்விடம் கதை சொல்லும் முன் இந்தக் கதையில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஒரு மாணவி என இரண்டு முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறது. உங்களுக்கு சரியாக வருமா? என கேட்டுவிட்டு தான் கதையை சொல்லத் தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, ‘கதை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றார். இந்தக் கதையை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார்? இது தனிப்பட்ட விசயம் இல்ல. சமூகம் சார்ந்த விசயம். அதனால் நான் நடிக்கிறேன்’ என முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார்.

அவருடைய லைஃப் ஸ்டைல் என்ன? என்று எனக்குத் தெரியாது. ஆனால் 18 நாட்கள் அந்த மலைப்பகுதியில் டென்ட் அடித்து எங்களுடன் தங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

இப்படத்தின் கதையின் முற்பகுதியில் இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகளுக்காக போராடும் போராளியாக ஆரவ் இருப்பார். படத்தில் இரண்டாம் பகுதியில் இந்த சமூகத்திற்காக போராடும் மனிதராக அருள்நிதி நடித்திருக்கிறார். இந்தத் தருணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் ஆரவ்விற்கு நன்றி.

நடிகர் அருள் நிதியுடன் எனக்கு 14 ஆண்டு கால நட்பு இருக்கிறது. அவருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. எளிமையானவர். அன்பானவர். எல்லோரிடத்திலும் இயல்பாக பழகக்கூடியவர். இவர் வெற்றி பெற்றவர் இவர் தோல்வி அடைந்தவர் என்ற பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர். அவருக்கு கதை பிடித்திருந்தால் இணைந்து பணியாற்றுவார். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். கதையைக் கேட்டு விட்டு இதை நாம் அவசியம் சொல்ல வேண்டிய படம். நான் நடிக்கிறேன் என்றார். அவருக்கும் நன்றி.

நான் இதற்கு முன் இயக்கிய ‘தேன்’ திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தான் வெளியிட்டது. இந்தப் படத்தையும் நிறைவு செய்த பிறகு அவருக்கு திரையிட்டோம். அவருக்கும் படம் பிடித்திருந்தது. இந்தப் படத்தையும் நான் வெளியிடுகிறேன் என்று சொன்னார். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

இதன் பின்னர் நடிகர் அருள்நிதி பகிர்ந்து கொண்டதாவது….

”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும்… பிறகு 15 நாளாகவும்.. பிறகு 20 நாளாகவும் உயர்ந்தது.

இப்படத்தின் கதையை கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை -கதாபாத்திரத்தை- என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா? என தெரியாது.

இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து விவரித்திருக்கும்- பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.

நடிகர் ஆரவ் பகிர்ந்து கொண்டதாவது…

”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன பிறகு, இதுபோன்ற கதாபாத்திரம் திரையுலக பயணத்தில் எனக்கு மீண்டும் அமையுமா? என தெரியாது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் காளி வெங்கட் உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்த காட்சிகளில் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன்” என்றார்.

“EVIL DEAD BURN”REVIEW

CURTAIN RAISER

It was Sam Raimi who created this famous horror thriller franchise that showcased five films! The main plot was basically about the war waged by the principal characters as against the demonic forces that were unleased by some evil powers! The trilogy of films that set the franchise function successfully were Evil Dead (1981), Evil Dead 2 (1987) & Army of Darkness (1992). Evil Dead (2013) was a new reboot which was a new instalment of the Evil Dead franchise! Based on its potential, the franchise was decided to be continued! Evil Dead Rise (2023) came up! Evil Dead Burn (2026) is a standalone sequel to the Evil Dead (2023) & the 6th instalment in the Evil Dead franchise! Watch out for the 7th instalment in 2028!

SYNOPSIS– 

Touted to be most terrifying horror-ride till date, the screenplay is about a woman who opts to shift to the secluded home of her in-laws following the passing away of her husband! But things are not what she thought of and it turns into a family reunion from Hell…

CREDITS

Directed by Sebastien Vanicek

Cast –Souheila Yacoub, Tandy Wright, Hunter Doohan, Luciane Buchanan, Errol Shand etc.

Cinematography- Philip Lozano        Music –Double Danger

CC         Sony Pictures Entertainment India Release in English, Hindi, Tamil & Telugu