சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ‘ மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

குரு சோமசுந்தரம் பேசியதாவது..,

இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை — அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு பெருமை. இந்த படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம். குறிப்பாக சைத்ரா — தமிழ் சினிமாவுக்கு தேவையான நடிகை, அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பு. இந்த படம் ஒரு வாழ்க்கையை முழுமையாக பார்த்து, அதன் சுக–துக்கங்களை நேர்மையாக பேசும் படம். அதுதான் நல்ல, மக்களுக்கான சினிமாவை உருவாக்குகிறது.

இப்படிப்பட்ட படங்களை தயங்காமல் தயாரிக்கும் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றி. கமர்ஷியல் கணக்கை மட்டும் பார்க்காமல்,மக்களுக்கான சினிமாவை ஆதரிப்பது பாராட்டுக்குரியது. இசை பற்றியும் சொல்ல வேண்டும். ஷான் ரோல்ட் இசையில் வந்த என் படங்கள் எப்போதும் தனித்துவமாக இருந்துள்ளன. இந்த படத்திலும் இசை ஒரு முக்கிய பலமாக இருக்கும். இந்த படம் பிப்ரவரி 13 அன்று வெளியாகிறது. ஊடக நண்பர்கள் இதைப் பற்றி எழுதி மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி

இயக்குநர் ரவிக்குமார் பேசியதாவது..,

ஒரு படத்தை பார்த்த பிறகுதான் அதைப் பற்றி நிச்சயமாக பேச முடியும். சம்பிரதாயமான வாழ்த்துக்காக இல்லாமல், அந்த படம் நமக்குள்ளே என்ன உணர்வை உருவாக்குகிறது என்பதை தைரியமாக சொல்ல முடியும். அந்த வகையில் நான் உறுதியாக சொல்ல முடியும், இது ஒரு மிகச்சிறந்த படம்,நிச்சயமாக ஒரு வெற்றிப்படம். ராஜு முருகன் அவர்களின் படங்களை வரிசைப்படுத்தினால், இதுதான் முதல் இடத்தில் நிற்கும் என்று தைரியமாக சொல்லலாம். அந்த அளவுக்கு அழகாகவும், ஆழமாகவும் இந்த படம் உருவாகியுள்ளது. இதற்குள்ளேயே பல படங்களுக்கான விதைகள் ஒளிந்திருக்கின்றன. இந்த படத்தின் மைய கருத்து ரொம்ப அழகானது — “மனிதன் தோற்கலாம்; ஆனால் மனிதநேயம் எப்போதும் தோற்காது.” இந்த எண்ணமே படத்தை உயர்த்துகிறது.

இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், குறிப்பாக சசிகுமார் சாருக்கும் என் நன்றிகள். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஒரு மனிதநேய உணர்வை நமக்குள் ஏற்படுத்துகின்றன. படம் முடிந்த பிறகும் மனசுக்குள் ஒரு நல்ல தாக்கம் இருக்கிறது.

இசை இந்த படத்தின் இன்னொரு பெரிய பலம்.அது நம்ம மனசுக்குள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு, தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கின்றன. மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு உணர்வுப்பூர்வமான, மனிதநேயமான, மக்களுக்காக உருவாக்கப்பட்ட திரைப்படம். இந்த நல்ல படத்தை பார்க்கவும், இதுபற்றி பேசவும் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் என் நன்றி.

இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,

சினிமாவிலிருந்து சில பேர் கண்டிப்பாக ஜெயிக்கணும் என்று நம்ம மனசார ஆசைப்படுவோம். அந்த வகையில் எனக்கு மிகவும் முக்கியமானவர் ராஜு முருகன். சும்மா ஒரு கதையை சொல்லி சம்பளம் வாங்கி போகாமல், ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் இருக்கும் மாதிரி, ஒரு கருத்தோடு படம் பண்ணிக்கிட்டே இருக்கிறவர். இப்போ இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவு. இங்கே இவ்வளோ பேர் கூடிவந்திருக்கிறதுக்கே காரணம் அவருடைய எழுத்து தான். இந்த படம் பார்த்த பிறகு உறுதியாக சொல்ல முடியும், ராஜுமுருகனுக்கு இது இன்னொரு பெரிய அடையாளம். படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது.

இப்படிப்பட்ட கதைகளை படம் ஆக்குறது சவாலான விஷயம். அதற்கு ஒரு துணிச்சலான தயாரிப்பாளர், அதை நம்பி நடிக்கிற நடிகர் தேவை. அந்த துணிச்சலை காட்டி இந்த படத்திற்கு ஓகே சொன்ன சசிகுமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் இந்த மாதிரி மனிதநேயமான, கருத்துள்ள படங்களை தொடர்ந்து ஆதரிப்பது ரொம்ப முக்கியம். அதனால்தான் இந்த படம் இவ்வளவு நேர்மையாக வந்திருக்கிறது. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால், இது கமர்ஷியலாகவும், கருத்து ரீதியாகவும் மக்களிடம் பேசக்கூடிய ஒரு நல்ல படம். ஜோக்கர், குக்கூ மாதிரி இந்த வருடத்தில் நினைவில் நிற்கும் படமாக இது இருக்கும்.

இயக்குநர் த செ ஞானவேல் பேசியதாவது…,

எந்த நெருக்கடியிலும், யாருடைய மனசையும் காயப்படுத்தாமல், ஒரு பொறுப்புணர்வோடு பேசுவதும், எழுதுவதும் ரொம்ப முக்கியம். அந்த வகையில் நான் மனசார பாராட்ட விரும்புவது ராஜுமுருகன். ஒவ்வொரு எழுத்தையும் ஒரு பொறுப்பாக நினைத்து, கருத்தோடு, மனிதநேயத்தோடு படம் எடுக்கிறவர். அவருடைய சிந்தனைக்கு துணை நின்றதே தான் இந்த படம் இவ்வளவு அழகாக உருவாக காரணம்.

இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் சசிகுமார் சாரிடம் நான் சொன்ன முதல் வார்த்தை “நன்றி சார்” தான். இன்றைய காலத்தில், வர்த்தகத்தையும் மனிதநேயத்தையும் சேர்த்து படம் எடுப்பது ரொம்ப பெரிய சவால். அந்த சவாலை தொடர்ந்து ஏற்று, வெற்றி பெறுவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களும், அதைக் கையாண்ட நடிகர்களும் யாருமே நடிப்பதாக தெரியவில்லை — அந்த ஊரில் வாழ்கிற மனிதர்களாகவே இருந்தார்கள். குறிப்பாக சைத்ரா தமிழ் சினிமா தவற விடக்கூடாத ஒரு நடிகை.

இந்த மாதிரி படங்கள் நம்ம மனசை “டீடாக்ஸ்” பண்ணும். நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களை புதுசா சிந்திக்க வைக்கும். இப்படிப்பட்ட படைப்புகளுக்கு நம்ம எல்லாரும் கை கொடுத்தால், இந்த பயணம் இன்னும் வலிமையாகும். இந்த நல்ல படைப்புக்கு உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது..,

நான் ராஜுமுருகன் பற்றி பேச ஆரம்பித்தால் அது பெருசா காமெடியாக முடிஞ்சிடும். அதனால இன்று இந்த விழாவுக்கு வந்து அவரை மனசார வாழ்த்திய, அனைவருக்கும் நன்றி சொல்ல வந்திருக்கேன். ஒரே ஊர்ல வளர்ந்தோம், ஒண்ணா ஊர் முழுக்க சுத்தின பசங்க நாங்க. அந்த ராஜுமுருகன், இன்னைக்கு இப்படியொரு படத்தை இயக்குனராக கொடுத்திருக்கார்னு
நினைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கிறது.

இந்த படம் எல்லா வகையிலும் ராஜுமுருகனுக்கு ஒரு பெரிய வெற்றியை தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு நன்றி. சுப்ரமணியபுரம் முதல் இன்று வரை எவ்வளவு உயரம் போனாலும் அதே பண்போட இருக்கிற சசிகுமார் — அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இந்த படத்தின் இசை பற்றி சொல்லவே வேண்டாம். ஷான் இசையில் இந்த படம் ரொம்பவே தனிச்சிறப்பாக இருக்கும்.

நான் இந்த படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனா கதையை தெரிஞ்சவன் என்ற வகையில் இதுவொரு மிகச் சிறந்த, நிச்சயமான வெற்றிப் படம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கும் அது வரும் நாட்களில் உறுதியா தெரியும்.

இயக்குநர் ப்ரேம்குமார் பேசியதாவது..,

ராஜுமுருகனை நான் இன்று தான் நேரில் பார்க்கிறேன். நேற்று தான் போன்ல பேசினேன். ஆனா அவரை எனக்கு நல்லா தெரியும் – அவர் படங்கள் மட்டுமல்ல, அவர் வேலை செய்யும் விதமும்,ஒரு ஊர் அவரை எப்படி கொண்டாடுகிறது என்பதுமே அவருடைய சினிமாவை சொல்லிடும். நான் என் படத்தை அவர் ஊரில் எடுக்கும் போது அங்கு அவருக்கு பேனர் வைத்திருந்தார்கள். ஒரு ஊரில் ஒரு இயக்குநரை இவ்வளவு மக்கள் கொண்டாடுறாங்கன்னா, அது கண்டிப்பா அவர் சொல்ற கருத்துக்காகத்தான்.

சசிகுமார் சார் உடன் ராஜுமுருகன் படம் பண்ணுறாங்கன்னு கேட்டாலே, கதை என்ன, ஜானர் என்ன, பட்ஜெட் என்ன இதெல்லாம் தெரியாமலேயே “இந்த படம் நல்லா இருக்கும்”ன்னு நம்ம மனசு நம்ப ஆரம்பிச்சிடும். அந்த நம்பிக்கையே பெரிய விஷயம்.

நான் இந்த படத்தை இன்னும் பார்க்கல. ஆனா இந்த கூட்டணி இருக்கிறதாலேயே இந்த படம் கண்டிப்பாக நல்லா இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த படக்குழுவிலுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது..,

நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்த படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்த படம் ஒரு விஷயத்தை தெளிவாக கேட்கிறது – எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்த படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது.

சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன், ஆனா “ஒரு மனிதனை விட்டுவிடலாமா?”ன்னு கேள்வி எழுப்பும் இடத்துல எனக்கு உண்மையிலேயே ஒரு ஷாக் இருந்தது. இது சரி–தவறு என்று தீர்ப்பளிக்குற படம் இல்லை. நம்ம மனசுக்குள்ள இருக்குற நியாயம், மனிதத்தன்மை, அறம்
இதையெல்லாம் நம்மையே யோசிக்க வைக்குற படம்.

ராஜுமுருகன் தொடர்ந்து இப்படிப்பட்ட சினிமாவை உறுதியோட செய்து வருவார். தான் எழுத்தாளனாக இருந்த போது சந்தித்த அத்தனை மனிதர்களையும் திரையில் கொண்டு வரத் துடிப்பவர் அதுக்காக தமிழ் சினிமா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.

ஷான் ரோல்டன் இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு, அம்பேத்கர் சார் மாதிரி தயாரிப்பாளர்கள் – இந்த எல்லாமே இந்த படத்தை ஒரு முக்கியமான படமாக மாற்றியிருக்கிறது. மை லார்ட் என்னை யோசிக்க வைத்த, உள்ளுக்குள் உலுக்கிய படம். படக்குழுவிற்கு பெரிய வாழ்த்துக்கள்

இயக்குநர் லிங்குசாமி பேசியதாவது..,

முருகன் தோற்றாலும் ஜெயித்தாலும் இவ்வளவு இயக்குநர்கள் உடன் இருக்கிறோம் ஆனால் அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், ஒரு தயாரிப்பாளர் மறுபடியும் திரும்பி வந்து “முருகன் படம் பண்ணுறேன்”ன்னு நம்பிக்கையோட சொல்றது. எங்களோட அனுபவத்துல, ஒரு தயாரிப்பாளர்கிட்ட “இந்த படத்தை எப்படி புரமோட் பண்ணப் போறீங்க?”ன்னு கேட்டா, “முருகனோட படம் தான்”ன்னு ஒரே வரியிலே சொல்ல முடிஞ்சா, அதுவே மிகப் பெரிய புரமோஷன். உண்மையிலேயே நன்றி சார். முருகன் எந்த சமரசமும் செய்யாதவர், எந்த விஷயத்தையும் அவர் மிகவும் ஆழமா யோசிச்சுதான் செய்றார். “எனக்கு ரெண்டு சாய்ஸ் இருக்குன்னாலும், நான் எல்லாத்தையும் எடுக்க மாட்டேன். எனக்கு பிடிச்ச, சரியான படம் மட்டும் தான் எடுப்பேன்”
அப்படின்னு சொல்லி அதை நடைமுறையிலே கடைப்பிடிக்கிறதுதான் அவரோட பெரிய பலம்.

சசிகுமார் சார்— தோற்றாலும், ஜெயித்தாலும் மக்கள் அவருடைய படங்களை தேடி பார்க்கிறாங்க. அந்த நம்பிக்கையே ஒரு நடிகருக்குக் கிடைக்கிற மிகப் பெரிய வெற்றி. அவர் செய்யும் கதாபாத்திரங்கள் எப்போதும் மிக தெளிவாக, எந்த குழப்பமும் இல்லாமல், நேர்மையாக இருக்கும். அந்த சிரிப்பு, அந்த உடல் மொழி, அந்த உள்ளார்ந்த மனிதத்தன்மை—
அதை வீணாக்காமல் பயன்படுத்துறவர். உண்மையிலேயே மிகப் பெரிய வாழ்த்துகள் சார்.

இந்த படம் நிச்சயமாக பேசப்படும் படம். நாளைக்கு நான் ஆவலோட காத்திருக்கிறேன். மக்களுக்குத் தேவையான, அர்த்தமுள்ள படம் இது. எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசியதாவது

“இந்த படத்தைப் பற்றி பேசுவது ரொம்ப சந்தோஷமா இருக்குது. ராஜுமுருகனோட முதல் படம் ‘குக்கூ’ல இருந்து இந்த பயணம் தொடர்ந்து வர்றது எனக்கு ரொம்ப நெருக்கமான விஷயம்.” “இந்த படத்தை நான் மூணு–நாலு தடவைக்கு மேல பார்த்திருக்கேன். எத்தனை தடவ பார்த்தாலும், முதல் தடவ பார்த்தப்போ இருந்த அதே எமோஷன் திரும்ப திரும்ப கிடைக்குது.” அம்பேத்கர் சார் ஒரு சினிமா ரசனை கொண்ட தயாரிப்பாளர். நல்ல கதைகளை ரொம்ப தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி அர்த்தமுள்ள படங்களை ஆதரிக்கிறவர்.

ஷான் ரோல்டன் மியூசிக் எப்போதுமே ஸ்பெஷல். இந்த படத்துல அது இன்னும் நெருக்கமா, இதயத்தோட இணைஞ்ச மாதிரி இருக்கு. இந்த படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை அடையும். மிகப் பெரிய பிளாக்பஸ்டர் மாறும். எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியதாவது..,

மை லார்ட் – ராஜுமுருகனின் சமூகமும் மனிதமும் பேசும் இன்னொரு முக்கிய படைப்பு “‘வட்டியும் முதலும்’ படித்தபோதே யார் இந்த எழுத்தாளர் என்று ஆச்சரியப்பட்டேன். நகைச்சுவை, இலக்கியம், சமூக பார்வை மூன்றையும் இயல்பாக கலக்கும் எழுத்தாளர் அவர். அதே தன்மைதான் அவருடைய திரைப்படங்களிலும் தொடர்கிறது”

“இந்த படத்தை முழுக்க ஒரு ரசிகர் மனநிலையோட தான் பார்த்தேன். என்டர்டெயின்மெண்ட் இருக்கா, கருத்து சொல்லுதா, எங்காவது சலிப்பா இருக்கா என்ற நேர்மையான பார்வையோட பார்த்தேன். உண்மையிலேயே இந்த படம் ரொம்ப மனசை தொட்டது. ராஜுமுருகன் மீண்டும் அவருடைய ஃபார்முக்கு வந்திருக்கார்.

‘ஜோக்கர்’, ‘குக்கூ’ போன்ற படங்களுக்குப் பிறகு, மை லார்ட் ராஜுமுருகனின் படைப்புப் பயணத்தில் இன்னொரு சிறப்பான படம்
“அவர் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையை கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்த படத்திலும் தெளிவாக தெரிகிறது. இது
கருத் ரீதியாகவும், கமர்ஷியலாகவும் வெற்றி பெறும் படம்”

“சசிகுமார் ஒவ்வொரு படத்திலும் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் நடிகர். இந்த படத்தில் அந்த ஈடுபாடு இன்னும் அதிகமாக தெரிகிறது” என கூறினார். “மியூசிக் படம் தாண்டி தெரியக்கூடாது; ஆனா மனசுக்குள்ள ஆழமா உட்காரணும். இந்த படத்தில் அந்த சமநிலையை ஷான் சரியாக செய்திருக்கிறார். “மொத்தத்தில், ‘மை லார்ட்’ ராஜுமுருகன் ‘நான் யார்’ என்பதை மீண்டும் நிரூபிக்க வந்திருக்கும் முக்கியமான படம்” அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாலா பேசியதாவது..,

தயாரிப்பாளர் அம்பேத்கர் குமார் மிக நல்ல கதைகளை மிகத் தேர்ந்தெடுத்து, இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள் நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.

“‘குக்கூ’, ‘ஜோக்கர்’, இப்போது ‘மை லார்ட்’ – டைட்டிலிலேயே நக்கலையும் கருத்தையும் சேர்த்து வைக்கும் தைரியம் ராஜுமுருகனுக்கே உரியது. அவர் சந்தித்த மனிதர்களையும், வாழ்க்கையையும் கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்த படத்திலும் தெளிவாக தெரிகிறது” படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும், “நிகழ்வில் பேசியவர்களின் கருத்துகளையும், படம் குறித்து வந்துள்ள எதிர்வினைகளையும் பார்த்தால், இது மரியாதைக்குரிய, தரமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”

“சசிகுமார் எந்த படமாக இருந்தாலும் முழுமையாக தன்னை ஒப்படைக்கும் நடிகர். இந்த படத்தில் அவருடைய ஈடுபாடும், நடிப்பும் இன்னும் அதிகமாக தெரிகிறது. குறிப்பாக நடனக் காட்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. நடிகை சைத்ரா “உண்மையாக நல்ல நடிகை. சில காட்சிகளில் அவருடைய ஆக்ரோஷமான, ஆழமான நடிப்பு பார்ப்பவர்களை கட்டிப்போடும். தமிழ் சினிமா இப்படிப்பட்ட நடிகைகளை பாதுகாத்து, அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்”.

“‘மை லார்ட்’ நல்ல படம் மட்டுமல்ல, நம்பிக்கையை தரும் படம். படம் கண்டிப்பாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

ராஜுமுருகன் எழுத்தாளராக இருந்த போதே தெரியும். அவர் என்னை சந்தித்து ஜிப்சி கதை சொன்னார். அந்தப் படம் எனக்கு வெற்றிப்படம் தான். அவர் இந்த கதையை சொன்ன போது சின்ன படமாக எடுக்கலாம் என்றார். அடுத்து நீரவ் ஷா, ஷான் ரோல்டன் என்றேல்லாம் சொன்னார். இறுதியாக சசிக்குமார் நடிக்க வைக்கலாம் என்றார். அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இம்மாதிரியான படத்தை மக்களிடம் சேர்க்க அவர் மாதிரி ஒரு நடிகர் கண்டிப்பாக வேண்டும். நடிகை சைத்ரா அவர்களும் அற்புதமாக நடித்துள்ளார். ஷான் மிக அற்புதமான இசையை தந்துள்ளார்.

நான் இனி எத்தனை படங்கள் தயாரித்தாலும் மை லார்ட் மாதிரி ஒரு படம் செய்வேனா எனத் தெரியாது அந்தளவு இது மிகச்சிறந்த படம் அனைவருக்கும் நன்றி.

நடிகை சைத்ரா பேசியதாவது..,

“இங்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ராஜு சார் மற்றும் எங்கள் சினிமாவுக்காக நீங்கள் இங்கு வந்து பேசியது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என் நடிப்பைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது”

“தமிழ் மொழி எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமானது. இந்தப் படத்தின் மூலம் அந்த விருப்பம் இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழ் மொழியை மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அனுபவம் எனக்குள் உருவாக்கியுள்ளது”

இயக்குநர் ராஜு சார் குறித்து சொல்ல வேண்டும் அவருடைய படங்களை நான் முன்பே அறிந்திருந்தாலும், அவருடைய மனிதநேயமும் நம்பிக்கையும் இந்தப் படத்தின் போது எனக்கு நெருக்கமாக தெரிந்தது. ஆரம்பத்தில் எனக்கு சிறிது பயம் இருந்தது. ஆனால் அவர் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இந்தப் பயணத்தை எனக்கு எளிதாக்கியது. சசிக்குமார் மிகப்பெரிய இயக்குநர் நடிகர் அவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம் அவர் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.

“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக என்னை இணைத்துக்கொண்ட ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முழு படக்குழுவிற்கும் மனப்பூர்வமான நன்றி. இந்த அனுபவம் என் வாழ்க்கையிலும், கலைப் பயணத்திலும் என்றும் நினைவில் இருக்கும்” நன்றி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

இந்த படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
இதில் சொல்லப்படும் கருத்தும், அதை அணுகிய விதமும் நேர்மையானது. சமூக உணர்வோடு சொல்லப்படும் விஷயங்கள் எளிதானவை அல்ல. ஆனால் அவை மனிதர்களை மையமாக வைத்து பேசும்போது தான் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராஜுமுருகன் இந்தப்படத்தின் கதை சொன்னபோது இது சமூகம் சார்ந்த படமாக இருக்குமென்று நினைத்தேன் ஆனால் இது ஜனரஞ்சக படமாகவும் இருந்தது. இசை, காட்சி அமைப்பு, பாடல்கள் – அனைத்தும் கதைக்கு ஆதரவாக, சினிமாட்டிக் அனுபவத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. வெறும் எண்டர்டெயின்மெண்ட் மட்டுமல்ல; சிந்திக்க வைக்கும் உள்ளடக்கத்தையும் இந்த படம் வழங்குகிறது.

நான் அண்ணா எனச் சொல்லி பெருமைப்படும் நபர் சசிக்குமார் அவரிடம் எந்த ஈகோவும் இல்லை. மிகச்சிறந்த மனிதர் இந்தப்படத்தை மிகச்சிறப்பாக ஆக்கியிருக்கிறார். சைத்ரா நடிப்பை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கோவில்பட்டி பொண்ணாக மாறியிருக்கிறார்.

இந்த முயற்சி ஒரு தனித்துவமான கலை அனுபவம். இந்த படக்குழுவினரின் உழைப்புக்கும், நேர்மையான அணுகுமுறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,

“இந்த படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் இல்லை. படத்தில் கோர்ட் காட்சிகள் ஒரு பத்து நிமிடம்தான் வரும். ஆனால் இந்தக் கதை அதிகாரத்தைப் பற்றியது. அதிகாரம் ஒரு எளிய, கரைக்கோடி மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எப்படிப் பயன்படுத்துவான்? அவன் அந்த அதிகாரத்துடன் என்ன செய்ய முடியும்? என்பதையே இந்த படம் கேள்வியாக முன்வைக்கிறது. ‘மை லார்ட்’ என்ற வார்த்தை அந்த மனிதனின் மனநிலையையும் முத்துச்சிற்பி என்ற நபரையும் குறிக்கிறது. அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம்,”

“இங்கே இருப்பவர்கள் எல்லோரும் எனக்கு வழிகாட்டிகள். இங்கே கிடைக்கும் வாழ்த்துகளை நான் என் அண்ணன் பாலாவுக்கு ஒப்படைக்கிறேன். இது எனக்கான வாழ்த்து அல்ல; இந்தப் படத்தை உருவாக்கிய அனைவருக்குமானது.

“இந்த கதையை, ‘கதையில் எதையும் மாற்ற வேண்டாம். கதை எப்படியிருக்கிறதோ அப்படியே படம் எடுங்கள்’ என்று முழு சுதந்திரம் கொடுத்தார் தயாரிப்பாளர். இப்படிப்பட்ட நம்பிக்கை ஒவ்வொரு இயக்குநருக்கும் கிடைப்பது பெரிய விஷயம். அந்த நம்பிக்கைக்காக தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி,” என்றார்.

“இந்த படம் ஒரு கூட்டுப் பயணம். நடிகர்கள், இசையமைப்பாளர், பாடகர்கள், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் தங்களது முழு உழைப்பையும் நேர்மையையும் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குநர் ராஜுமுருகனை சைக்கோ என்றார்கள் நானே பயந்தேன் அவருடன் வேலைபார்த்த போது அவர் அப்படி இல்லை. படம் முடித்து பார்த்த போது தான் தெரிந்தது. அவர் சினிமா மீது தான் சைக்கோவாக இருக்கிறார். அவர் நல்ல படங்கள் தருவதில் சைக்கோவாக இருக்கிறார். இந்த படம் கண்டிப்பாக எல்லோரையும் மகிழ்விக்கும். நீங்கள் படம் பார்த்து உண்மையாக பேசினால், அதுவே எங்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம்,” நன்றி.

இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது..,

உண்மையிலேயே இது எனக்கு கொஞ்சம் நெகிழ்ச்சியான தருணமாக இருக்கிறது. என்னைப் பற்றி இவ்வளவு அர்த்தமுள்ள, ஆழமான வார்த்தைகளை இங்கே பலர் பேசினார்கள் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி,” என்று அவர் தனது உரையைத் தொடங்கினார்.

“நான் அசிஸ்டண்ட் டைரக்டராக இருந்த களத்தில் தினமும் பாலா சாரின் பிதாமகன் படத்தின் சிடியை 52 முறை வாங்கியிருக்கிறேன். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும், நேர்மையையும் சினிமாவாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அந்தப்படம் தந்தது அவர் வந்து வாழ்த்தியது பெருமை.

மாரி செல்வராஜின் படங்கள் என்னையே வெட்கப்பட வைத்தது. அவர் மூலம் நான் கற்றுக்கொண்டேன் அவர் வாழ்த்தியதும் மகிழ்ச்சி. என் குருநாதர் லிங்குசாமி சார் என்னை கரம்பிடித்து சினிமாவில் அழைத்து சென்ற அவருக்கு என் நன்றிகள்.

குரு சோமந்தரம், ஏ வெங்கடேஷ், ரவிக்குமார், ஞானவேல், யுகபாரதி என இங்கு வந்து வாழ்த்திய ஆளுமைகள் அனைவருக்கும் என் நன்றி.

நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே இந்த படத்தின் அடிப்படையான நோக்கம்.
இந்த படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல. ‘ராஜுமுருகன்’ என்ற மனிதன் மீது ‘அம்பேத்குமார்’ என்ற மனிதன் வைத்த நம்பிக்கையில் தான் மை லார்ட் உருவானது,” என்று அவர் கூறினார்.

“அம்பேத்குமார் என்ற மனிதர் இல்லையென்றால் இந்த படம் உருவாகியிருக்காது. நான் என் வாழ்க்கையில் மிகவும் டவுன் ஃபாலில் இருந்த ஒரு காலகட்டத்தில், என்னை அழைத்து ‘வாழ்க்கை தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் சார், ஒரு நாள்கூட உட்காரக் கூடாது’ என்று சொல்லி, அடுத்த நாளே படம் பண்ணத் தொடங்குவதற்கான மனநிலையை எனக்கு கொடுத்தவர் அவர். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றி,”

“இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் இயல்பாகவே வேண்டிக் கொள்வது, அந்த நம்பிக்கையை என்மீது வைத்த அம்பேத்குமார் என்ற மனிதனுக்காகத்தான். அவர் வைத்த நம்பிக்கை பொய்யாகக் கூடாது என்பதே என் மனதில் இருந்த ஒரே எண்ணம்,” என்றார்.

“இந்த படத்தை முதல் நாளிலிருந்து தன் தோளில் சுமந்து, எப்படியாவது இந்த சந்தையில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து என் கூடவே இருந்தவர் Think Music சந்தோஷ். படம் பார்த்த நாளிலிருந்து இன்று வரை இந்த படத்தைப் பற்றி பேசிக்கொண்டே, ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் இருந்தார். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், சந்தோஷ் அந்த இடத்தில் இருந்தால் அது நிச்சயம் கிளியராகிவிடும். அவர் எப்போதும் எனக்கு ‘ஆல்-டைம் டார்லிங்’,”.

“இந்த படத்தில் நடித்த நடிகை சைத்ரா ஆரம்பத்தில் கால்ஷீட் தொடர்பான சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் கதையை கேட்டவுடன், அனைத்தையும் தாண்டி உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

ஷான் ரோல்டனுக்கும் எனக்கும் உள்ள பிணைப்பு வெறும் இசை மட்டுமல்ல. அது இலக்கியம், அரசியல், சமூகம் என்று பல அடுக்குகளைக் கொண்ட ஆத்மார்த்தமான உறவு. அந்த எல்லாமே சேர்ந்து தான் அவரது இசையாக வெளிப்படுகிறது. இந்த படத்தில் அவர் இன்னொரு கட்டத்தை அடைந்திருக்கிறார்.

சசிக்குமார் அண்ணன்

பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ்  (vintage)தோற்றம் வெளியானது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ்  கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ்  தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.

இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.
கன்னட திரைப்படமான ‘முகில்பேட் ‘ ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ எனும் தமிழ் திரைப்படம் – அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

பள்ளிச்சட்டம்பி – கயாடு லோஹரின் மூன்றாவது மலையான திரைப்படமாகும். துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நடைபெற்று வருகிறது. கயாடு லோஹர் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பள்ளிச்சட்டம்பி திரைப்படம்-  ஏப்ரல் மாதம் 9 தேதி வெளியாகிறது. வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் ( Worldwide Films) மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் ( C Qube Bros Entertainment) ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம்  ஒரு முழுமையான மாஸான ஆக்சன் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோஷன் போஸ்டர் – டைட்டில் போஸ்டர் மற்றும் டொவினோ தாமஸ் தற்காப்பு கலைகளில் பயிற்சி பெறும் வீடியோக்கள்.. ஆகிய அனைத்தும் வெளியாகி, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன.

இப்படத்தை வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh ), இவர்களுடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சானுக்யா – சைதன்யா-  மற்றும் சரண் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஷியாம் மற்றும் தன்சீர் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். திரைக்கதையை எஸ். சுரேஷ் பாபு எழுதியுள்ளார். பள்ளிச்சட்டம்பி எனும் இந்த திரைப்படம் 1950-60 காலகட்டத்தில் கேரளாவில் நடக்கும் ஒரு கதையை சொல்கிறது. டொவினோ தாமஸ் மற்றும் கயாடு லோஹர்ருடன் விஜயராகவன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்

₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை!

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.

டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கும் இடையே ஏற்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம், இந்தப் படத்தின் மீது திரைத்துறை வைத்திருக்கும் அளவிட முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. AP–TG உரிமைக்காக மூன்று முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில் ஈடுபட்ட நிலையில், இறுதியில் SVC வெற்றி பெற்று, சமீபத்திய இந்திய சினிமாவின் மிக முக்கியமான விநியோக ஒப்பந்தங்களில் ஒன்றை உறுதி செய்துள்ளது.

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் டாக்ஸிக், மொழி எல்லைகளை உடைக்கும் உண்மையான நட்சத்திர சக்தியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பிலிருந்தே, உலகம் முழுவதும் ரசிகர்களிடையே அபார வரவேற்பும், இயல்பான ரசிகர் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில், யாஷ் “அவர்களில் ஒருவராக” ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். KGF Chapter 2க்குப் பிறகு அவரின் அடுத்த படத்துக்கான நான்கு ஆண்டுகால எதிர்பார்ப்பு, இப்போது டாக்ஸிக் மீது உருவான மாபெரும் முன் வெளியீட்டு வரவேற்பாக வெளிப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து தில் ராஜு கூறியதாவது:

“யாஷ் இன்று இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் சக்தி. KGF 2வுக்குப் பிறகு அவரது மார்க்கெட் உலகம் முழுவதும் மேலும் வளர்ந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப் பெரியதாக உள்ளது. நான்கு ஆண்டுகள் கழித்து வரும் இந்தப் படத்தை SVC சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். யாஷுடன் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.”

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்திருப்பது, டாக்ஸிக் படத்தின் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது. தேசிய விருது பெற்ற படங்கள் மற்றும் பல மெகா ஹிட்களை உருவாக்கியுள்ள இந்த நிறுவனம், படத்தின் உள்ளடக்கம், அளவு மற்றும் நீண்டகால வசூல் திறன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.

இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு வெளியீடு, பரவலான புரமோஷன்கள் மற்றும் “அசாதாரணமான, மாபெரும் சினிமா அனுபவம்” இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி – தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) – தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.

கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, விழாக்கால கொண்ட்டாட்டமாக வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

“வித் லவ்” திரைவிமர்சனம்

படித்து முடித்துவிட்டு வேலையில் இருக்கும் இளைஞன் அபிஷன், அவனது சகோதரி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். அவர் பார்க்கும் பெண் அனஸ்வரராஜன். இருவரும் ஒரு ஹோட்டலில் சந்தித்து பேச இருவரும் ஒரே பள்ளியில் படித்தது தெரிய வருகிறது. அதன் பிறகு அவர்களது பேச்சு அந்தப் பள்ளியில் படித்த காலகட்டத்தை நோக்கி பின் நோக்கி நகர்கிறது அப்பொழுது அபிஷேணின் காதலும், காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும் இந்த மாதிரியான அவனது கதையில் முடிய . அனஸ்வர ராஜனும் அவருடைய பிளாஷ்பேக்கை சொல்கிறார், அதில் அவர் ஒரு பையனை காதலிப்பதும் அந்த காதலை சொல்ல முடியாமல் விடுவதும் இருவரும் பேசி ஒரு விபரீத முடிவு எடுக்கிறார்கள்.

அது
இருவரும் தங்கள் படித்த பள்ளிக்கு சென்று தங்கள் இருவரும் காதலித்த அந்த நபர்களை தேடி கண்டுபிடித்து ,அவர்களிடம் தங்கள் காதலை கூற வேண்டும் அவர்களது திருமணம் ஆகி இருந்தாலும் சரி, ஆக இல்லாமல் இருந்தாலும் சரி என்று முடிவு செய்து அவர்களை தேடி பயணப்படுகிறார்கள். அந்தப் பயணம் அவர்கள் இருவரும் அவர்கள் காதலை அந்த பழைய காதலன், காதலர்களிடம் கூறினார்களா என்பது தான்.
படம் முதல் பாதியில் செல்லும் கதை பள்ளியில் நடக்கும் கதைகளையும் மாணவர்களின் விளையாட்டு தனத்தையும் இந்த மாதிரியான விஷயங்களையே கொடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் என்னடா இது என்று இடைவளை வரை சென்றாலும், இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாதியில் நமக்குள் இருக்கும் நினைவுகளையும் தூண்டி எடுக்கிறார் இயக்குனர். அந்த நினைவுகளும் அந்த ஒரு முயற்சியும் கண்டிப்பாக இயக்குனருக்கு ஒரு பாராட்டாக தான் அமையும்
அதேபோல் இந்த கதை சொன்ன விதமும் எந்த நெருடலும் இல்லாமல் எந்த விரசமும் இல்லாமல் சமீபத்தில் வந்த பல படங்கள் கத்திக்கொண்டு ஒரு நார்மல் மனிதனாக நடந்து கொள்ளாத ஹீரோக்களுக்கு மத்தியில் ஒரு சாதாரண ஹீரோவாக நிற்கிறார் அபிஷன்.
அதேபோல் நாயகியும் தன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்
படத்தில் வரும் அந்த முஸ்லிம் பெண் கேரக்டர் ஆகட்டும் அந்த காதலன் கேரக்டரனைப்படி கதாபாத்திரங்கள் நம்மை கடந்து செல்கின்றன நம் கடந்த நினைவுகளையும் கடந்து செல்கின்றன
படத்தின் இசையும் இந்த படத்தின் கதைக்கேற்றவாறு காலகட்டத்திற்கு ஏற்றவாறு சான்றோல்டன் தர முயற்சி செய்திருக்கிறார் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்
நிச்சயம் இந்த வித் லவ் திரைப்படம் இந்த காலை இளைஞர்கள் மட்டும் இல்லாமல் அனைவரது மனதையும் பழைய நினைவுகளை தோண்டி விடும் என்பதில் சந்தேகம் இல்லை

மொத்தத்தில் வித் லவ் எல்லோர் மனதிலும் விட்டுப் போன லவ்வை தோண்டி எடுக்கும்

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் – புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் ‘பெத்தி’ (peddi) படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சானா (Buchi Babu Sana), வெங்கட சதீஷ் கிலாரு( Venkata Satish Kilaru),விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas) இணையும் ‘பெத்தி’ படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது !!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான புரமோசன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது.

வெளியீட்டு தேதி போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் தோன்றுகிறார். நீளமாக அலங்கோலமாக இருக்கும் முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது உருவத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன. புகை சூழ்ந்த பரபரப்பான சூழலில், சோர்வுற்றும் கடுமையான முகபாவனையுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திலிருந்து அவர் முன்னேறி வருகிறார். அவரது கடும் பார்வை அந்த குழப்பத்தை துளைத்துச் செல்லும் விதத்தில் அமைந்துள்ளது. முழு காட்சியும் இருள் மிகுந்த வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு, போராட்டம், எதிர்ப்பு மற்றும் கலக்கம் நிறைந்த உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

‘பெத்தி’ படத்தின் விளம்பர உள்ளடக்கங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல் க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் A.R.ரஹ்மான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதுடன், பல சாதனைகளை முறியடிக்கும் பாதையில் பயணித்து வருகிறது.

படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் உயர்த்தும் வகையில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம் சரண், இதுவரை காணாத முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் தோன்றுகிறார்.

வெங்கட சதீஷ் கிலாரு, தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்திற்கு, மிகச் சிறந்த தொழில்நுட்பக் குழு இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற A.R.ரஹ்மான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் R.ரத்னவேலு காட்சிகளைப் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பின் மூலம் படத்தின் உலகத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.

‘பெத்தி’ திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும், பான் இந்திய அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் :
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு,திவ்யேந்து சர்மா, பொமன் இரானி

தொழில்நுட்பக் குழு :
இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இணை தயாரிப்பாளர்: இஷான் சக்சேனா
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்னவேலு
கலை இயக்கம்: அவிநாஷ் கொல்லா
படத்தொகுப்பு: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஜன கன மன’ ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ – சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். பள்ளிச்சட்டம்பி அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைகிறது.மேலும் இது அவரது இயக்கத்தில் வெளியாகும் முதல் பீரியாட்டிக் ஃபிலிம் என்பதால்.புதிய வகைகளையும், சினிமாவின் பரிமாணங்களை ஆராய வேண்டும் என்ற அவரது இலக்கையும் பிரதிபலிக்கிறது.

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஷிகார் ‘( Shikkar) எனும் ஒரே படத்தின் மூலம் தனது திறமைக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற திரைக்கதை ஆசிரியர் எஸ். சுரேஷ் பாபு – ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவருடைய செழுமை மிக்க சினிமா பயணத்தில் மோகன்லால் – மம்மூட்டி – ஜெயராம் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கும், ஷைன் டாம் சாக்கோ ( Shine Tom Chacko) சௌபின் ஷாஹிர் ( Soubin Shahir) மற்றும் விநாயகன் போன்ற புதிய தலைமுறை நடிகர்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.

தொடர்ந்து வெற்றி படங்களையும் , இசை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் பாடல்களையும் வழங்கி வரும் ஜேக்ஸ் பிஜாய் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1950 – 60 கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் மூலம் ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) இடமிருந்து மற்றொரு வெற்றிகரமான இசை ஆல்பத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

‘பள்ளிச்சட்டம்பி’ ஒரு பீரியட் சினிமா என்பதால் ஆடை வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரள மாநில அரசின் விருது பெற்ற மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். பல மொழிகளில் படங்களை தொகுத்த அனுபவம் கொண்ட ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி கையாண்டுள்ளார்.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் (Worldwide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh )ஆகியோருடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் (C Qube Bros Entertainment) சார்பில் தயாரிப்பாளர் சானுக்யா – சைதன்யா சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள் டொவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றாத வகையில் புதிய தோற்றத்தில் காணப்படுவார். இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது

‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி அறிமுக விழா!!

கலைமாமணி மதுரை R. முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை–நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த மேடை நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று ஒரு அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…

உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.
நன்றி.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…

முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தாயன்பன் பேசியதாவது…
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன்.
நன்றி.

மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…

இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…

முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
நன்றி.

‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது. மருது சகோதரர்களாக கலைமாமணி மதுரை R. முரளிதரன், சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக மதுரை R. முரளிதரன் அவர்களின் மகள் காவ்யா நடிக்கின்றார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசும் போது,

“நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன்.சினிமா விலும் அதைப் பின்பற்ற நினைத்தேன்.சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரையை தேர்வு செய்தேன்.எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்பதை சினிமாவிலும் நான் தொடர விரும்பினேன். எந்த வேலையாக இருந்தாலும் நேர்மையாகச் செய்தால் போதும், நடப்பது நடக்கும். பலன் நல்லதாகவே இருக்கும். இந்தப் படத்திற்கு ஐந்து கதாநாயகிகளைப் பார்த்து ஆறாவதாகத்தான் அஸ்மின் வந்தார்.

இந்த ஒரே படத்தில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன படத்திற்குத் தலைப்பு பதிவு செய்வதே சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. முதலில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தோம். கிடைத்தது,பிறகு அது காலாவதி ஆகிவிட்டது, இல்லை என்றார்கள்.அதைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டுமாம். பிலிம் சேம்பரில் தலைப்பு பதிவு செய்யும்போது நாம் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பிலிம் சேம்பரில் கணினி மயமாக்கி இணைத்தால் மிகச் சுலபமாக இந்த வேலையைச் செய்ய முடியும். பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் யாரும் இதைச் செய்வதில்லை . நான் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன் அதுவும் இலவசமாக. பேப்பர் வேலை,அலைச்சல்கள் எதுவும் தேவையில்லை.எல்லாவற்றையுமே எளிமையாகச் செய்யலாம்.

நான் முதலில் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தான் பிறகு நடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்தேன். நான் சரியாகத்தான் செய்திருக்கிறேன் என்பதற்கு எனது இசையமைப்பாளருக்கு கேரளாவில் விருது கிடைத்தது, எனது எடிட்டருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்து இருக்கிறது என்பதிலேயே தெரிந்துவிடும். ஒரு படத்திற்கு நடிப்பதற்கு முக மதிப்பு உள்ளவர்கள் தேவைதான். இருந்தாலும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை. நான் பணம் சம்பாதிக்க என்று இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன்.

முதலில் 2023-ல் கதை தேர்வானது, கதை பிடித்து விட்டது. ஆனால் எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பது போல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன். வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்.

நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன்.ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன். இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

ஒரு சினிமாவிற்கு இசையமைப்பாளரும் எடிட்டரும் முக்கியமானவர்கள்,அவர்கள் இருவரால்தான் ஒரு படத்தை நன்றாகக் கொண்டு வர முடியும். இசையமைப்பாளர் தெரிகிற அளவிற்கு எடிட்டர் வெளியே தெரிவதில்லை. இசையமைப்பாளர் அளவுக்கு எடிட்டர் கவனத்தில் வருவதில்லை. நான் நடித்த போது முதலில் இரண்டு நாள் சுமாராகத்தான் நடித்து இருந்தேன். எனக்கே சந்தேகம் இருந்தது .படத்தில் சில இடங்களில் தொய்வு இருந்தது.ஆனாலும் எல்லாவற்றையும் தோன்றாத அளவிற்கு சரி செய்து நன்றாகப் படத்தை தொகுத்துள்ளார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் அவருக்கு நன்றி.

படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம்.அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.

இப்படி 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம்.

சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் செலவு செய்வது அனைத்தும் செலவுக் கணக்கில் தெரியுமா என்றால் தெரியாது .ஒரு படத்திற்கு 5 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் செலவில் வராது .கமிஷனாகப் போய் விடுகிறது. இப்படி நாலு ஷெட்யூலுக்கு நாலு யூனிட் மாற்றினேன். முதலில் ஒரு லட்சம் கேட்டார்கள், பிறகு 90 ஆயிரம் , பிறகு 80 ஆயிரம், 70 ஆயிரம் என்று மாறிக்கொண்டே போனது.இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.

சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது .நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து படம் எடுக்க வந்தால் இடையில் உள்ளவர்கள் யாராவது சாப்பிட நினைக்கிறார்கள். நான் சம்பாதித்த காசுக்கு எனக்கு கணக்கு வேண்டும்.இதை நான் விடமாட்டேன். இன்னொரு அனுபவம். ஒரு குணச்சித்திர நடிகரை அணுகிய போது பெரிய சம்பளம் கேட்டார். அது அவரது விருப்பம் பரவாயில்லை.ஆனால் பயணப்படியாக கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் நான் கொடுக்க வேண்டும்? அதுபோல உதவியாளர்கள் சம்பளமும் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் நிபந்தனை போட்டால் யாரும் வர மாட்டார்கள் .ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை .

இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம்.ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

படத்தின் நாயகி அஸ்மின் பேசும்போது,

“இந்த ரெட் லேபில் படத்தின் அனுபவம் மறக்க முடியாது. இந்த படத்தின் மூலம் புதிய உறவுகள் கிடைத்தனர் .நான் வேறு ஒரு தொழிலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்திற்குள் நான் வரக் காரணம் தயாரிப்பாளர் லெனினும் இயக்குநர் வினோத்தும் தான். இயக்குநர் என்னை நன்றாகப் படத்தில் வடிவமைத்திருக்கிறார். இசைஅமைப்பாளர் கைலாஷ் மேனன் இந்தப் படத்திற்குள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .இந்தப் படத்தில் நாம் அறிமுகமானது பெரிய விஷயம். ஒரு குடும்பம் போல் என்னைக் கவனித்துக் கொண்டார்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

படத்தின் கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசும் போது,

“இந்தப் படக்கதையைப் படமாக எடுக்கும் போது முதலில் எதெல்லாம் வேண்டாம் என்று முடிவு எடுத்து தவிர்க்க வேண்டியவற்றையெல்லாம் தவிர்த்தோம் .ஆனால் ஆதாரமாக இருக்கும் ஒருவரியை மட்டும் அதன் பொறியை அக்கினி குஞ்சு இருப்பது போல் அதன் தன்மை மாறாமல் பார்த்துக் கொண்டோம். 2023 இல் கதை விவாதமாகத் தொடங்கப்பட்டு 2026 வரை ஒவ்வொரு நாளும் மெருகேறி வருகிறது இந்தப் படம். முதல் காட்சிலிருந்து கதை தொடங்கிவிடும். ஒவ்வொரு காட்சிக்கும் சங்கிலி போலத் தொடர்பு இருக்குமாறு இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசும்போது,

“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னோடு உரிமையாகப் பழகுபவர்.
எனக்கு ஒருமுறை பணத் தேவை இருந்த போது தயங்கிக் கொண்டு நான் அவரிடம் கேட்கவில்லை.அடுத்த வாரம் தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போது தயாரிப்பாளர் பேசும்போது மகிழ்ச்சியா என்றார் .ஒரு வாரத்துக்கு முன்பு கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றேன். ஏன் கேட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் தயக்கம் உங்களுக்கு ? என்றார் .அந்த அளவுக்கு உரிமையோடு பழகுபவர். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன” என்றார்.

படத்தின் கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசும்போது,

“படங்களில சின்ன படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லா படமும் ஒன்றுதான். எது ஓடுகிறது அது பெரிய படம். எது ஓடும் என்று யாராலும் சொல்ல முடியாது .எனக்கு இந்தப் படத்தில் ஒரு சம்பளம் கொடுத்தார்கள் .அதை வெளியே சொல்ல முடியாது. ஆனால் பணத்துக்காக நான் இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன். பணம் வளர வளர கிடைக்கும் “என்றார்.

இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன் பேசும்போது,

“இதுதான் எனக்குத் தமிழில் முதல் படம் .ஆனால் இங்கே முதலில் வந்தபோது எனக்குத் தயக்கம் இருந்தது .ஆனால் தயாரிப்பாளரும் இயக்குநரும் நன்றாக என்னைப் பார்த்துக் கொண்டார்கள் .அதனால் இந்தப் பயணம் சௌகரியமாக இருந்தது .ஒரு வகையில் மலையாளப் படங்களை விட எனக்கு இங்கே மிகவும் சௌகரியமாகவும் சுலபமாகவும் இருந்தது. இங்கே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பளிக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் சினிமாவை நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தப் படம் இப்போது வெளியாக இருக்கிறது மகிழ்ச்சி”என்றார்.

இயக்குநர் கே .ஆர் வினோத் பேசும் போது,

“நாங்கள் வளர்ந்து வரும் திரைப்படக் குழுவினர். வளர்ந்து வரும் நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் யாரையும் நிச்சயமாக ஏமாற்றாது என்று நம்புகிறேன் “என்றார்.

படத்தில் நடித்துள்ள இயக்குநர் அனுமோகன் பேசும்போது,

“அப்போதெல்லாம் சினிமாவில் ஒரு வழிமுறையைப் பின்பற்றினார்கள் முதலில் கதாசிரியரைக் கொண்டு கதையைத் தேர்ந்தெடுப்பார்கள் . பிறகு திரைக்கதை ஆசிரியர் வசனம் என்று ஆள் தேர்ந்தெடுப்பார்கள்.அவர்களும் தயாரிப்பாளரும் இணைந்து இயக்குவது யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அவர்கள் இணைந்து அந்தக் கதைக்குரிய கதாநாயகன்,நடிகர்கள் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள்,அந்த வழியில் தான் இப்போது இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இப்போதெல்லாம் கதாநாயக நடிகர்கள் தான் கதையையும் படத்தின் காட்சிகளையும் முடிவு செய்கிறார்கள் .ஷாட் என்ன என்பது கூட அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அப்படி எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து சுயநலமாக இருக்கிறார்கள். உங்கள் சுயநலத்தை விட்டு விடுங்கள்.

இந்தப் படத்தில் ரத்தினபுரி என்று பாடலில் வரி வருகிறது. அதுதான் எங்கள் சொந்த ஊர். அந்த ரத்தினபுரியில் தான் பல சினிமாக்காரர்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேதான் சத்யராஜ், சுந்தர் சி, தயாரிப்பாளர் கே ஆர் ஜி, கே. கோபிநாத் எல்லாரும் சுற்றி இருக்கிறார்கள்.

சினிமா டிக்கெட்டுக்கு 120 ரூபாய் கொடுத்தால் அந்த பணத்தில் தான் 120 குடும்பங்கள் பிழைக்கின்றன. இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.இந்தப் படத்திற்குப் பிறகு எனது பெயரே மாறிவிடும் ‘என்றார்.

படத்தை விநியோகம் செய்து வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் குகன் பேசும்போது,

“ஒரு படத்திற்கு ரசிகர்கள் எப்படி வருகிறார்கள் என்றால் முதலில் ரசிகர்கள் அதிகம் உள்ள கதாநாயகர்களுக்கு வரும் கூட்டம் பெரியது .அதைத் தவிர்க்க முடியாது. அது அல்லாத படங்களும் வரத்தான் செய்கின்றன. அப்படி சிறை, மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் ஓடின. இப்போது வரும் பார்வையாளர்கள் யார் என்றால் 15 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் .அவர்கள் எதிர்பார்த்து எது அவர்களைத் தூண்டுகிறதோ அந்தக் கதைகள் ஓடுகின்றன. பிறகு தான் வாய் வழியாக பேசப்பட்டு மற்றவர்கள் உள்ளே நுழைகிறார்கள்.

முதல் 10 கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதையும் தாண்டி கதை உள்ள படங்கள் ஓடத்தான் செய்கின்றன. எனவே கதை என்பதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அடுத்து பாடல்கள் முக்கியம். ரீ ரிலீஸ் படங்கள் எல்லாம் பாடல்களால்தான் பேசப்படுகின்றன .எனவே பாடல்களுக்கு ஓர் இடம் உள்ளது .

இன்று 8 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 10% பேர் என்றால் 80 லட்சம் பேர் படம் பார்க்க வர வேண்டும் .ஆனால் இது போன்ற புதுப் படங்களுக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் பேர்கள் தான் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது .அது ஒரு சதவீதம் தான். அப்படி இருக்கும்போது நல்ல கதை உள்ள படங்கள் வெற்றி பெறுகின்றன. சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது, சினிமா டிக்கெட் மட்டுமல்ல பிற செலவையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. வெளியில் 30 ரூபாய் விற்கும் காபி உள்ளே 150 ரூபாய் விற்கிறார்கள்.

20 ரூபாய் பப்ஸ் உள்ளே 120 ரூபாய். பாப்கான் 700 ரூபாய் வரை விற்கிறார்கள்.படம் பார்க்க வருபவர்களுக்கு இது ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாம் கொடுக்கிற காசுக்கு சரியாக படம் உள்ளதா என்று பார்க்கிறார்கள். எனவே படத்திற்கு கதை முக்கியம்.இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்” என்றார்.

பிப்ரவரி 14 காதலர் தினத்தில் வெளியாகும் ‘ட்ரீம் கேர்ள்’ திரைப்படம்!

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில்
ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது,
” இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.
இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள் .

நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள்.அவர்களுக்குள் காதல் வருகிறது.
கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது.அது சில மாயங்களைச் செய்கிறது.அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான்
‘ட்ரீம் கேர்ள்’ படம்.
இது மசாலா கலப்பில்லாத ஒரு முழுமையான காதல் கதை.படத்தில் வில்லனே கிடையாது, வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம்.

கதையில் குளுமை இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது “என்கிறார்.

படப்பிடிப்பு அனுபவத்தைக் கேட்டபோது,
“இது 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட படம்.’சில்ட்ரன் ஆப் ஹெவன்’ மிகக்குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம்.ஆறு – ஏழு லட்சத்தில் முடிந்த படம். பெரிய படமான ‘ப்ரேவ் ஹார்ட் ‘கூட 80 கால்ஷீட்டில் முடிக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியாது அல்லவா?

இன்று வருகிற மிகச் சாதாரண படங்களுக்குக் கூட 60 நாட்கள் 70 நாட்கள் என்று படப்பிடிப்பு நடைபெறுகின்றன. ஒரு கோடி இரண்டு கோடி என்று செலவு செய்கிறார்கள்.

இது மிகவும் தவறான போக்கு. சரியான திட்டமிடல் இல்லாதது, சினிமாவைப் புரிந்து கொள்ளாதது , தொழில்நுட்பங்களைக் கையாளத் தெரியாதது போன்றவைதான் இதற்கெல்லாம் காரணம்.

சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு நல்ல படம் எடுக்க முடியும் .
நல்ல படம் ஓடினால் அது பெரிய படம்.
ஆனால் அதே படத்துக்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள் .சில லட்சங்கள் என்றால் ஒரு தயாரிப்பாளர் தாங்குவார். ஆனால் கோடி ரூபாய் இழப்பு என்றால் அவர் எப்படித் தாங்க முடியும்? இப்படிப்பட்ட திட்டமிடாத சிலரால் தான் சினிமா நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.

வணிக மதிப்புள்ள கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்வதைக் குறை சொல்ல முடியாது. எப்படியாவது வியாபாரம் ஆகிவிடும். சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் இப்படியான சிறு முதலீட்டுப் படங்களுக்குச் சில லட்சங்களைத் தாண்டினால் தயாரிப்பாளரால் இழப்பைத் தாங்க முடியாது” என்றார்.

இதைத் தடுப்பதற்குரிய வழியாக அவர் கூறுவது என்ன?

“சரியாகத் திட்டமிட்டு நன்றாக நடிக்கத் தெரிந்த புதுமுகங்களை வைத்து எடுத்தால் அந்தப் படம் நிச்சயமாக கவனிக்கப்படும். அதிக திரையரங்களில் வெளியிடாமல் குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல படம் என்று பெயர் பெற்றால் போதும். படம் தப்பித்து விடும்.
நல்ல படம் ஓடினால் அது பெரிய படமாக மாறிவிடும்.அந்தப் படம்
வெளியான முதல் காட்சி – அந்த ஒரு காட்சியே படத்தின் தலைவிதியைச் சொல்லிவிடும். இப்போது படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் போதும் .செய்தி தீ போல பரவிவிடும். ஒரு காட்சியை வைத்தே அதன் தலைவிதி தெரிந்து விடும்.

அந்த நம்பிக்கையில் தான் நான் இந்தப் படத்தை சில லட்சங்களில் எடுத்து இருக்கிறேன்.ஏழு லட்ச ரூபாயுடன் ஊட்டிக்குச் சென்றேன் .சரியாகத் திட்டமிட்டோம். அதனால் ஒருநாளும் படப்பிடிப்பு தடை பட்டதில்லை. நண்பர்கள் உதவினார்கள் இயற்கை உதவியது. பனியும் மழையும் நாங்கள் எதிர்பார்த்த நேரத்தில் வந்து உதவி செய்தன.சரியாகத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடக்கும் இயற்கை நிலைகளைத் தேர்வு செய்தோம் .ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்து நேரத்தை வீணடிக்கவில்லை.எல்லாமே சுமுகமாக நடந்தது”என்றவர், நடிகர்கள் தேர்வு பற்றிப் பேசும்போது,

“நான் இந்தக் கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரைத் தேடி அலையவில்லை. திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் .அதற்குரிய பலன் கிடைத்தது. இதில் நடித்திருக்கும் நாயகனும் சரி, நாயகியும் சரி, பிறபாத்திர நடிகர்களும் சரி அருமையாக நடித்திருக்கிறார்கள். நான் அவர்களை -அழகையும் தோற்றத்தையும் வைத்து தேர்வு செய்யவில்லை. நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தேர்வு செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.இதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவரும் திறமையின் வழியாகத்தான் இந்தப் படத்திற்குள் வந்தார்கள்.

நான் இதற்கு முன்பு ‘அழியாத கோலங்கள் 2 ‘என்ற படத்தை இயக்கி இருந்தேன்.அதன் படப்பிடிப்பை 12 நாள்களில் முடித்திருந்தேன். நான் செலவு செய்த தொகையை கலைஞர் டிவியிலிருந்தே எனக்குக் கொடுத்து விட்டார்கள்.
தேவையில்லாமல் செய்த சில செலவுகள்தான் எனக்கு இழப்பு .மற்றபடி இன்று ஏராளமான வியாபார வழிகள் உள்ள சினிமாவில் சரியாகப் புரிந்து கொண்டு திட்டமிட்டுப் படமெடுத்து வெளியிட்டால் இழப்புக்கு வழியே இல்லை என்பது என் கருத்து” என்கிறார்.

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ பிரச்சினைக்குப் பிறகு திரைப்படத் தணிக்கைத் துறை படைப்புக்கு எதிராக இருப்பது போல் ஒரு கருத்து நிலவுகிறது. இதற்கு இவர் என்ன பதில் கூறுகிறார்?

” தணிக்கைத் துறை நல்ல படைப்புக்கு எதிராக இருப்பதாக நான் நினைக்கவில்லை.சென்சார் போர்டு எனப்படும் தணிக்கைத் துறைக்கென்று சில விதிகள் உள்ளன. அதன்படி அவர்கள் பார்க்கிறார்கள் .உரிய முறையில் சமூகத்தில் பொறுப்புள்ள உறுப்பினர்கள் சேர்ந்து படம் பார்க்கிறார்கள்.

அந்த விதிகளுக்கு முரணாக உள்ளவற்றுக்கு அவர்கள் வெட்டு கொடுப்பார்கள். சினிமா எடுப்பதற்குப் பல விஷயங்களைப் புரிந்து கொள்வது போல சென்சார் விதிகளையும் புரிந்து கொள்ளவேண்டும் .தணிக்கைத் துறையின் வெட்டு என்பது எம்ஜிஆர் நாடோடி மன்னன் எடுத்த காலத்திலிருந்து இருக்கிறது. அப்போது கூட வெட்டுகளுக்குப்பின் அந்த காட்சிகளுக்கு மறுபடியும் படப்பிடிப்பு நடத்திய வரலாறு உண்டு. அந்த விதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என் படத்திலும் சில வெட்டுகள் கொடுத்தார்கள். . அதைச் சரி செய்து கொடுத்தேன், பிரச்சினை முடிந்தது. சென்சாருக்கென்று ஒரு பொறுப்புள்ள அதிகாரி இருக்கிறார். சமூகத்தில் பொறுப்பானவர்கள் படம் பார்க்க வருகிற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களே படத்தைப் பார்க்கிறார்கள்.
எனவே அந்த விதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சென்சார் மீது குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. இங்கே பட்ஜெட் பற்றி நட்சத்திர நடிகர்கள் பற்றியும் பேசப்படுகிறது. ஆனால் கடந்து போன 2025-ல் எவ்வளவு பெரிய பட்ஜெட், எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படம் என்றெல்லாம் மக்கள் பார்க்காமல் நிராகரித்து விட்டார்கள். .நல்ல கதை அம்சம் உள்ள சிறிய பட்ஜெட் படங்கள் ஓடி இருக்கின்றன மக்களை ஏமாற்ற முடியாது ஓடுகிற படம் நல்ல படம் பெரிய படம் அவ்வளவுதான்” என்றார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சாலமன் போவாஸ் இளமாறன்,வசனம் ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம்,எம். டி .தமிழரசன்,தயாரிப்பு வடிவமைப்பு எஸ் .ரதி,
திரைக்கதை எம்.டி. தமிழரசன் கிருத்திகா தாஸ்,எடிட்டிங் எஸ். பி .அஹமத், இணை இயக்கம் எம்.பொன் புவனேஸ்வரன்.

இப்படத்தில் என் .காவேரி மாணிக்கம் டாக்டர் ஆர். குணசேகரன் B. ஆதித்யன் இணைத் தயாரிப்பாளர்களாகப் பங்கெடுத்துள்ளனர்.

‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் கதை அழுத்தமாக இருப்பதால் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது.2026 காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று இந்தப் படம் வெளியாகிறது.

250 ட்ரோன்களுடன் ‘வித் லவ்’ பிரம்மாண்ட அறிவிப்பு!

திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ டிரோன் நிகழ்ச்சி!!

தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பட வெளியீட்டை ஒட்டி படக்குழு பலமுனைகளில் பல புதுமையான விளம்பரங்களைச் செய்து வருகிறது. அதன் ஒருகட்டமாகவே சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான டிரோன் ஷோ நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய அளவில், திரைப்பட விளம்பரத்திற்காக ட்ரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. வானில் மின்னும் எழுத்துகளாக ‘With Love’ தோன்றிய தருணம், காதலின் உணர்வையும், இளமை துள்ளலையும் ஒருசேர வெளிப்படுத்தியது.

இந்த தனித்துவமான நிகழ்வில், ‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரம் என்பதையும் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் இந்த ட்ரோன் ஷோ வீடியோக்கள் வைரலாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

அறிமுக இயக்குநர் மதன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

“வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.