“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது.

அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

எடிட்டர் சுரேஷ் பேசியதாவது..,

இந்த திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி படக்குழுவுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,

மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும், இது நல்ல படம் – ன்னு நீங்கள் நம்பினால், அதை முழு மனதோடு தூக்கிக்கொண்டு போய் ஒரு வெற்றிப் படமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய பெரிய நன்றிகள். இப்படத்தில் தயாரிப்பாளராக சௌந்தர்யா மேம் எங்களுக்கு கிடைத்தது, ஒரு பெரிய வரம்னு தான் நினைக்கிறோம். உண்மையிலேயே, நான் நீண்ட நாளா மனசுக்குள்ள வைத்திருந்த ஆசை – ரஜினி சாரை நேரில் சந்திக்கணும்ன்னு. அதை மகேஷ் ஐயாவிடம் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். சௌந்தர்யா மேடமிடம் சொன்னேன். அது இப்படத்தில் நடந்தது மகிழ்ச்சி.

ரஜினி சாரை பார்க்கும் போது வைரமுத்து சார் போல எப்படியாவது ஒரு கவிதை சொல்லி, சாரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சேன். உண்மையிலேயே அந்த கவிதை அவருக்கு ரொம்ப பிடிச்சது. என்னோட வாழ்நாள் கனவு நிறைவேறிச்சு.

இந்த படத்தில் ஒர்க் பண்ணிய ஒவ்வொருத்தருக்கும் நான் மனசார நன்றி சொல்லணும். மதன் – அடுத்த படம் இன்னும் கவனமா பண்ணணும். அபி – இது உன்னோட முதல் படம். அது ஜெயிக்கணும்னு நானும் ஷான் ஐயாவும் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம். அது இப்போ நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. அனஸ்வராவுக்கு வாழ்த்துக்கள் , கடைசியாக, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் பெரிய நன்றி.

நடிகர் சரவணன் பேசியதாவது..,

இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு குழுவுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.இந்த படத்தில் என்னோட கேரக்டர் உண்மையிலேயே ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனாலும் அந்த சின்ன கேரக்டரையும் அழகாக எழுதி, அதைப் பாராட்டி, நிறைய ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் மனசார எழுதியிருந்தார்கள். என்னைப் பாராட்டிய எல்லாருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லக் கடன்பட்டிருக்கிறேன். இந்த படம் இன்னும் நல்ல படியாக, இன்னும் அதிக மக்களைச் சேரும் வகையில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகை ஆனந்தி பேசியதாவது..

நான் இந்த படத்தைப் பற்றி பேசும்போது, ஒரு நடிகராக இல்லாமல், ஒரு ஆடியன்ஸாக பேசணும்னு ஆசைப்படுறேன். நேத்து நைட்டுதான் இந்த படம் பார்த்தேன். ஒரு நல்ல படத்தில் நானும் ஒருத்தராக இருப்பது மகிழ்ச்சி.
இன்றைய தலைமுறை பற்றி ஒரு தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது அதை மாற்றி வேறு பார்வையில் இப்படம் நம்மிடம் காட்டுகிறது.

இந்த படம் அந்த Human Nature-ஐ ரொம்ப அழகாக, ரொம்ப மென்மையாக சொல்லுகிறது. “There are no bad people.But we all do bad things sometimes.”

அது நம்ம எல்லாருக்கும் நடந்திருக்கலாம்.ஆனா அதே சமயம், நம்மளுக்குள்ள வளர வாய்ப்பு இருக்கிறது அப்படிங்கிற கருத்து இந்த படத்துல ரொம்ப அழகா ஒரு காதல் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் ஒரு பங்காக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

நடிகை காவ்யா பேசியதாவது..,

ஒரு புதுமுகமாக என்னை என் பெயர் சொல்லி பாராட்டிய அனைவருக்கும் நன்றி. என் கதாப்பாத்திரத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் படக்குழுவுக்கு என் நன்றி.

நடிகர் சச்சின் பேசியதாவது..,,

இப்படத்தில் பங்கு கொண்டது மிக மகிழ்ச்சி. இந்த மொத்தக்குழுவுக்கும் என் நன்றி. அபி மற்றும் அனஸ்வராவுக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகை அனஸ்வரா பேசியதாவது..,

இந்த படம் ரொம்ப ரொம்ப அன்போட உருவக்கிய படம். அந்த அன்பை ஆடியன்ஸ் அப்படியே ஏற்றுக்கிட்டது தான் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்.

“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக மதனுக்கு மனப்பூர்வமான நன்றி. அபியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். அபியுடன் உள்ள கெமிஸ்ட்ரியை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் ரசித்தது ரொம்ப மகிழ்ச்சி. சௌந்தர்யா மேடம், மகேஷ் அண்ணா, காவ்யா மற்றும் முழு நடிகர்–தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரை சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது. எங்கள் படத்தை இவ்வளவு அன்போட ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

இந்தப்படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. அபியை முதல் படம் செய்ய கஷ்டபட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். அவனுடைய உழைப்பு 200 சதவீதம் இருந்தாலும் நீங்கள் அவனுக்கு முழு ஆதரவு தந்திருக்கிறீர்கள் நன்றி. அபி மிக அழகான மனது கொண்டவர் அவர் மாற மாட்டார் என நம்புகிறேன். எனது கூட்டாளி மோகன்ராஜனுடன் தொடர்ந்து படங்கள் செய்கிறேன் அவருக்கு என் நன்றி.

இயக்குநர் மதன் இந்தக்கதை சொன்ன போதே இது வெற்றிப்படம் என்பது தெரியும், கதை சொல்லும் போது தடுமாறினாலும் படத்தில் மிக அழகாக அதை நிறைவு செய்துவிட்டார். அனஸ்வரா கேரக்டரை எழுதிய விதமும், அதை எடுத்த விதமும் அத்தனை அழகாக இருந்தது. அனஸ்வராவுக்கு படத்தில் நான் கை தட்டினேன் அவர் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளர் மகேஷ் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அவரைப் பார்த்தால் என் பையன் தான் ஞாபகம் வரும். குழந்தை மனது கொண்டவர். கண்டிப்பாக இன்னும் 3 படங்கள் ஹிட் தந்துவிடுவார். எங்களுக்கு முழு ஆதரவு தந்ததற்காக நன்றி. சௌந்தர்யா மேம், அவர் மிகத்தெளிவான சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய திட்டமிடல் இருக்கும். அவர் இன்னும் நிறைய சாதிப்பார் அதைக் காண ஆவலாக இருக்கிறேன்.

படத்தில் உழைத்த அத்தனை நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்களுக்கு நன்றி.

இயக்குநர் மதன் பேசியதாவது..,

எல்லாருமே“இந்த படம் கண்டிப்பா ஒரு வெற்றி படம்” என சொன்னார்கள். அதே போல படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம், இருவருக்கும் பெரிய நன்றி. அதே மாதிரி சரவணன் சார் டீம் உட்பட, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது..,

“நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.”நீங்கள் எல்லாரும் இல்லாம இந்த டீமும் இல்லை. அதனால ரொம்ப சந்தோஷம். பிரஸ் ஷோ முடிந்த பிறகு,நீங்கள் தந்த பாராட்டுக்களில் இருந்து தான் இந்த படம் உண்மையிலேயே take off ஆனது. இப்படத்தை மக்கள் மனதளவில் நெருக்கமாக கொண்டாடுகிறார்கள்.

மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்கு தெரியும். இந்தக் கதை சொல்லும்போதே, “இந்த படம் ஹிட்” எனத் தோன்றியது. அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அனஸ்வரா நடிப்பை பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரிய பலம் என்று புரிந்தது. அபி எனக்கு சொந்த தம்பி. அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பையன் மாதிரி
பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஷான் தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர். இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது. எங்கள் சின்ன டீமை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர்ஸ்டாருக்கு நன்றி.

சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அவர் எனக்கு எப்போதும் அக்கா தான். எங்களால் முடியாத பல விஷயங்களை ஒரு போன் கால்லஅவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள்.அக்கா – ஒரு பெரிய சப்போர்ட். எங்கள் டீமின்தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.

தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது..,

“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது”ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார்.

“படம் முடிந்ததும், வீட்டிற்கு சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போது தான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்த படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இது தான் முதல் சக்சஸ் மீட்.

“அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறினார். அனஸ்வராவை எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றியது. இந்த படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் அமைதியும், மழையை பார்த்து அவர் சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்”

இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றி படம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரே ஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச். அவரது அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும். பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி, மக்கள் தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது..,

“ரஜினி சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது,”

நீங்கள் படத்தை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். நல்ல ரிவ்யூஸ், நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.

“என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்க வைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி. உன்னை இந்த மேடையில் பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்த பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார். ‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல். புகழை கூட அழகாக, ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர், அவருக்கு நன்றி. பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், ஸ்ரேயாஸ், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அனஸ்வரா எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது. ஆடியன்ஸ் அதை ரொம்ப ரசிக்கிறார்கள். இந்த கூட்டணி அடுத்தும் தொடரும். காவியா, சச்சின், தேனி முருகன், சரவணன், ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும், ‘நான் எதாவது தவறு பண்ணினேனா ? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது. அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அது தான் இந்த உறவின் அழகு,” அவருக்கு என் நன்றிகள்.

சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு“‘சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா என்று அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம். இந்த படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி

ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., 

மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும்.
ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.  

சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தாலும் அதை சாப்பிடக் கூடாது.

“மை லார்ட்”  படம், எல்லாருமே ரசித்து, சந்தோஷமாக, ரொம்ப என்ஜாய் பண்ணி, எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய  படமாக இருக்கும். ஆனால்  அதே நேரத்தில்,  மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும்  படமாகவும் இருக்கும்.

சசி சாருக்கு  “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்”  மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி.

இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது.., 
மை லார்ட்  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதாவது வேலண்டைன்ஸ் டே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் பலர், “வேலண்டைன்ஸ் டேக்கும் ‘மை லார்ட்’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள். உண்மையில் இந்த படத்துக்கும் வேலண்டைன்ஸ் டேவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஏனென்றால் மை லார்ட் என்பது சசிகுமார் மற்றும் சைத்ரா (முத்துசிற்பி, சுசீலா) ஆகியோரின் காதல் நிறைந்த ஒரு தம்பதியரை மையமாக கொண்ட படம்.

ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்த படத்தின் மையம். கணவன்–மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான், உலகத்திலேயே மிகப் பெரிய காதல். அதனால் மை லார்ட்  வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது.  இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.
நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே காதல் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில், இந்த படம் கணவன்–மனைவிக்கிடையிலான காதலை பேசுகிறது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் சொல்லும் படமாக இருக்கும்.

இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல; சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர். அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.

அதேபோல் சைத்ரா இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மை லார்ட்  மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி. அந்த வகையில், அவரையும் தமிழ்நாடு வாழ வைக்கும்.

என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.

பெரும் உழைப்புடன், முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழ வைக்கும். அனைவருக்கும் நன்றி.  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பாருங்கள்.

நடிகை சைத்ரா பேசியதாவது.., 
இந்தப்படம் மிக மிக இனிமையான அனுபவம், இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பங்குபெற்ற படத்தில் நானும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஷான் ரோல்டன் இசை அனைவருக்கும் பிடிக்கும். இப்பட பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தில் காதல் இருக்கிறது. சசிகுமார் மிக ஜாலியானவர். அவர் இயக்குநர் என்பதால்,  அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை. பொலிடிகல் டிராமாவும் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பயனுள்ள படமாக இருக்கும். 
எல்லோரும் கண்டிப்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பார்த்து ஆதரவு தாருங்கள்.

நடிகர் சசிக்குமார் பேசியதாவது…, 
டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றி சொன்ன மாதிரி, இந்த படமும் உங்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் படம். என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள். உங்கள் குடும்பத்தோட, குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம். இளம் தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம். இப்போ உள்ள ஜெனரேஷன், வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,
“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம். ராஜுமுருகன் சார் ஸ்டைலில், கலகலப்பான காமெடியோட படம் நகரும். உங்களை சோகப்படுத்த மாட்டோம். அழ வைக்க மாட்டோம். சிரிக்க வைப்போம்… சிந்திக்க வைப்போம்.

நாயகி சைத்ரா, கர்நாடகாவிலிருந்து வந்து தமிழில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். “கன்னடத்தில் சிறந்த நடிகையாக இருப்பதுபோல, தமிழிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக வளர்வார். மை லார்ட் அவருக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும்.

படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி வந்து கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்தார்.
இசையமைப்பாளர் ஷான் குரல் எல்லோரையும் கவரும் தன்மை கொண்டது. காதல், சோகம், சந்தோஷம் – எந்த உணர்வாக இருந்தாலும் அவரது குரல் மனதில் நிற்கும். டூரிஸ்ட்  ஃபேமிலிக்குப்  பிறகு மீண்டும் இணைவது மிகுந்த சந்தோஷம்.  பிப்ரவரி 13-ஆம் தேதி, சமயத்தில் மை லார்ட் படம் வருகிறது அனைவரும் பார்த்து கொண்டாடுங்கள்.
ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,  அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.

இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.

“மை லார்ட்” திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை!

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.

டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கும் இடையே ஏற்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம், இந்தப் படத்தின் மீது திரைத்துறை வைத்திருக்கும் அளவிட முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. AP–TG உரிமைக்காக மூன்று முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில் ஈடுபட்ட நிலையில், இறுதியில் SVC வெற்றி பெற்று, சமீபத்திய இந்திய சினிமாவின் மிக முக்கியமான விநியோக ஒப்பந்தங்களில் ஒன்றை உறுதி செய்துள்ளது.

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் டாக்ஸிக், மொழி எல்லைகளை உடைக்கும் உண்மையான நட்சத்திர சக்தியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பிலிருந்தே, உலகம் முழுவதும் ரசிகர்களிடையே அபார வரவேற்பும், இயல்பான ரசிகர் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில், யாஷ் “அவர்களில் ஒருவராக” ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். KGF Chapter 2க்குப் பிறகு அவரின் அடுத்த படத்துக்கான நான்கு ஆண்டுகால எதிர்பார்ப்பு, இப்போது டாக்ஸிக் மீது உருவான மாபெரும் முன் வெளியீட்டு வரவேற்பாக வெளிப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து தில் ராஜு கூறியதாவது:

“யாஷ் இன்று இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் சக்தி. KGF 2வுக்குப் பிறகு அவரது மார்க்கெட் உலகம் முழுவதும் மேலும் வளர்ந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப் பெரியதாக உள்ளது. நான்கு ஆண்டுகள் கழித்து வரும் இந்தப் படத்தை SVC சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். யாஷுடன் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.”

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்திருப்பது, டாக்ஸிக் படத்தின் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது. தேசிய விருது பெற்ற படங்கள் மற்றும் பல மெகா ஹிட்களை உருவாக்கியுள்ள இந்த நிறுவனம், படத்தின் உள்ளடக்கம், அளவு மற்றும் நீண்டகால வசூல் திறன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.

இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு வெளியீடு, பரவலான புரமோஷன்கள் மற்றும் “அசாதாரணமான, மாபெரும் சினிமா அனுபவம்” இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி – தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) – தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.

கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, விழாக்கால கொண்ட்டாட்டமாக வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில்

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஜன கன மன’ ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ – சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். பள்ளிச்சட்டம்பி அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைகிறது.மேலும் இது அவரது இயக்கத்தில் வெளியாகும் முதல் பீரியாட்டிக் ஃபிலிம் என்பதால்.புதிய வகைகளையும், சினிமாவின் பரிமாணங்களை ஆராய வேண்டும் என்ற அவரது இலக்கையும் பிரதிபலிக்கிறது.

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஷிகார் ‘( Shikkar) எனும் ஒரே படத்தின் மூலம் தனது திறமைக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற திரைக்கதை ஆசிரியர் எஸ். சுரேஷ் பாபு – ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவருடைய செழுமை மிக்க சினிமா பயணத்தில் மோகன்லால் – மம்மூட்டி – ஜெயராம் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கும், ஷைன் டாம் சாக்கோ ( Shine Tom Chacko) சௌபின் ஷாஹிர் ( Soubin Shahir) மற்றும் விநாயகன் போன்ற புதிய தலைமுறை நடிகர்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.

தொடர்ந்து வெற்றி படங்களையும் , இசை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் பாடல்களையும் வழங்கி வரும் ஜேக்ஸ் பிஜாய் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1950 – 60 கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் மூலம் ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) இடமிருந்து மற்றொரு வெற்றிகரமான இசை ஆல்பத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

‘பள்ளிச்சட்டம்பி’ ஒரு பீரியட் சினிமா என்பதால் ஆடை வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரள மாநில அரசின் விருது பெற்ற மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். பல மொழிகளில் படங்களை தொகுத்த அனுபவம் கொண்ட ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி கையாண்டுள்ளார்.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் (Worldwide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh )ஆகியோருடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் (C Qube Bros Entertainment) சார்பில் தயாரிப்பாளர் சானுக்யா – சைதன்யா சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள் டொவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றாத வகையில் புதிய தோற்றத்தில் காணப்படுவார். இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.

இந்தியாவின் முதல் Visual-Only Station நெட்வொர்க் – Impressn அறிமுகம்

சென்னை, 9 பிப்ரவரி 2026:
நகரங்களில் ஆஃப்லைன் மார்க்கெட்டிங் தற்போது புதிய கட்டத்தை அடைந்து வருகிறது. மக்கள் தினமும் காணும் காட்சிகள் அவர்களின் நினைவில் இடம் பிடிக்கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டு, Impressn Visual-Only Station என்ற புதிய மார்க்கெட்டிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Visual-Only Station என்றால் என்ன?
Visual-Only Station என்பது ஒலியில்லாமல், தொடர்ந்து காணப்படும் சிறிய LED திரை. மக்கள் அங்கு இருக்கும்போது இயற்கையாகக் கவனிக்கும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைகள் தகவல், பொழுதுபோக்கு மற்றும் குறைந்த அளவு விளம்பரங்களை இயக்குகின்றன.

Impressn-ன் பங்கு
Impressn Visual-Only Station ஐ இந்தியாவில் ஒருங்கிணைந்த நெட்வொர்க் வடிவத்தில் செயல்படுத்தும் முதல் நிறுவனம். ஒவ்வொரு திரையும் தனித்தனியாக இல்லாமல், ஒருங்கிணைந்த முறையில் இயக்கப்படும்.

Visual-Only Station களில் உள்ளடக்கம்:
70% தகவல் மற்றும் பொழுதுபோக்கு
30% விளம்பரங்கள்
இதனால் பார்வையாளர்கள் விளம்பரங்களால் சிரமப்படுவதில்லை, பிராண்டுகளுக்கு நினைவாற்றல் அதிகமாகும்.

திரைகள் எங்கே அமைக்கப்படுகின்றன?
மக்கள் காத்திருக்கும் அல்லது நேரம் செலவிடும் இடங்களில்:
டீ கடைகள் மற்றும் கஃபேக்கள்
ரீட்டெயில் கடைகள்
வணிக மையங்கள்
மக்கள் அடிக்கடி வருகை தரும் பொது இடங்கள்

Impressn-ன் தனிச்சிறப்பு
Visual-Only Station கள் ஒழுங்காக உள்ளடக்கம் காட்டி, மக்கள் தினசரி இயற்கையாக பார்க்கும் முறையில் செயல்படுகின்றன. இது விளம்பரங்களை நினைவில் நிறுத்த உதவுகிறது.

பிராண்டுகளுக்கு பயன்
நீண்ட நேரம் பார்வை ஈர்க்கும்
உள்ளூர் மக்களை இலக்கு செய்யும்
குறைந்த செலவில் விளம்பரம் செய்யும்
நல்ல நினைவாற்றல் ஏற்படும்

பல்வேறு துறைகளில் பயன்பாடு
நுகர்வோர் பிராண்டுகள்
ரியல் எஸ்டேட் திட்டங்கள்
மருத்துவமனைகள்
கல்வி நிறுவனங்கள்
ரீட்டெயில் கடைகள்
நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் அறிமுகங்கள்

எதிர்கால நோக்கு
Visual-Only Station கள் அமைதியாக, தினசரி சூழலில் இடம் பிடித்து, மக்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கின்றன. Impressn இந்தியாவில் இதன் நெட்வொர்க் விரிவாக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Impressn
இந்தியாவின் முதல் Visual-Only Station நெட்வொர்க்

அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின் மையம்.

படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.

கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம் இவை அனைத்தும் இணைந்து, தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.

டிரெய்லர்: https://youtu.be/ZNZuX5zSHYw

படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,
“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,
“கென்னடி பாத்திரத்தில் நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும் நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”

சன்னி லியோன் கூறியதாவது..,

“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள்.

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா



தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


#AazhiTrailer https://www.youtube.com/watch?v=bq5Gu1HktK0

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட.. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், ”இன்றைய தேதியில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பல சவால்கள் இருக்கின்றன. நல்ல கன்டென்ட் கிடைப்பதும் பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் ஆழி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத்குமாரின் ரசிகர். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த இந்த திரைப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை தாமரை செல்வி பேசுகையில், ”இது எனக்கு முதல் மேடை. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன் பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை படபிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.

நடிகர் வையாபுரி பேசுகையில், ”சரத்குமாருடன் 2001ம் ஆண்டிற்கு முன்னர் நடித்துள்ளேன். அதன் பிறகு இப்போது தான் அவருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநர் என்னிடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டார். ஆனால் ஒரே நாளில் அனைத்து படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று என ஆசைப்படுகிறார்கள். அதற்காக இயக்குநர் உருவாக்கிய கதைதான் ‘ஆழி’ . இப்படம் பிப்ரவரி 27ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை தேவிகா சதீஷ் பேசுகையில், ”தமிழில் நான் நடிக்கும் மூன்றாவது படம் ‘ஆழி’. நான் இந்தப் படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத் குமார் சார் நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு அப்பாவை போல் அறிவுரை கூறி அன்பாக அக்கறையுடன் நடத்தினார். என்னுடைய ஆசிரியர்களுக்கும் இயக்குநர் மாதவ் ரமா தாஸ் இயக்கிய படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். அதனால் படத்தின் தரம் அனைவருக்கும் பிடிக்கும்.‌‌ படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர் அனைவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் இந்திரஜித் ஜெகன் பேசுகையில், ” இப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. திரைக்கு முன்னாலும்… திரைக்குப் பின்னாலும்… அவர் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆழி படக்குழுவில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது,” என்றார்.

தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், ”படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன என தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

கடல் அலையின் ஓசையை கேட்டிருப்பீர்கள். கடல் – ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா?  அதனை இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையை சொல்லி இருக்கிறார்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன் எனது தயாரிப்பில் வெளியான மலையாள படத்தை 26 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர். சிறந்த அனுபவசாலி. அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூன் மாதத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கும். அனைவரும் வருகை தாருங்கள். சினிமாவை மேலும் வளப்படுத்துவோம்,” என்றார்.

இயக்குநர் மாதவ் ரமா தாசன் பேசுகையில், “நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் ‘மேல் விலாசம்’, ‘அப்போதகேரி ‘, ‘இளையராஜா ‘ என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் ‘இளையராஜா’ படத்தை தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்.  அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி  உருவாகியுள்ளது.  70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம்.  அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காக கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாக பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களை கவரும். இந்தப் படத்தை பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.

இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில்  அதிகாலை 3 மணி அளவில் கூட என்னை தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளை கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார்.‌ இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த வையாபுரி, இந்திரஜித், தேவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,” என்றார்.

சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி பேசுகையில், ”சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்து ரசித்து கொண்டாடி இருக்கிறேன்.  அவரை மீண்டும் இந்த படத்திற்காக திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.
சரத்குமாரை பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.

நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகி பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.

அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையை கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.  இந்த காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா,.வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன.  இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தேவிகாவின் புன்னகை நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான ‘மேல் விலாசம்’ படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.

பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.

இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.

மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், நடிகர் நிகில் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்.‌ புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் இன்றைக்கு காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. வித்தியாசத்திற்கு தேவைப்படும் நெகடிவ் ஷேடு – தவறு என்றும் உணர்த்தப்படுகிறது. அதனால் தவறாமல் டிஸ்க்ளைமரும் இடம் பிடிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,
நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.  மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள். மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு குழு அனைவருக்கும் என் நன்றி. இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் கணேஷ் சந்திரா பேசியதாவது..

இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற ‘ஆக்ஷனை’ மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, ‘பூக்கி’ படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து ‘ஆக்ஷன்-கட்’ சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.

இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி. விஜய் ஆண்டனி சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான் “தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்” என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்த படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா —இந்த மூன்று பேரும் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்த படம் இப்படியாக உருவாகியிருக்காது. இயக்கக் குழு, இசை, எடிட்டிங், உடை வடிவமைப்பு, தயாரிப்பு குழு, அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள்.
அதனால்தான் இந்த படம் இவ்வளவு வேகமாகவும் அழகாகவும் உருவானது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

நடிகர் அஜய் திஷான் பேசியதாவது..,  
இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நடந்திருக்கிறது. கதையை முதலில் படித்தபோதே, இந்த படம் மிகுந்த கவனத்தோடு, ஆழமான எழுத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் உணர்ந்தேன். உண்மை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த கதையே என்னை மிகவும் பாதித்தது. இயக்குநர் கணேஷ் சந்திரா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவருடன் வேலை செய்வது மிகுந்த ஊக்கமும் நிம்மதியும் தரும் அனுபவமாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப்படங்கள் வேலை செய்ய ஆசைப்படுகிறேன். படத்தில் உடன் நடித்த அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். தனுஷா நல்ல தோழியாக மாறி விட்டார். இந்த படத்தின் குழு அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாகவே இருந்தார்கள். அவர்களில்லாமல் இந்த படம் இவ்வளவு சீக்கிரமாகவும் ஒழுங்காகவும் முடிந்திருக்காது. உடை வடிவமைப்பாளர் மாளவிகா அவர்களுக்கும், நடன இயக்குநர் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். இந்த படம் எனக்கு ஒரு வேலை போல அல்ல; இன்னொரு வீட்டில் இருப்பது போலவே இருந்தது. அந்த அளவுக்கு அன்பும், நம்பிக்கையும் இந்த குழுவில் இருந்தது. என்னை ஆரம்பத்திலிருந்தே நம்பி ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படம் உங்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நடிகை லக்‌ஷ்மி மஞ்சு பேசியதாவது…,
இந்த படம் உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷல். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இயக்குநர் மிகப்பெரிய  திறமைசாலி. மிகவும் தனித்துவமானவர். நடிகர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரை கண்டுபிடித்தற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. அஜய் ஒரு உதவி இயக்குநர் போல தான் இருந்தார். அவர் திறமை பார்த்து ஆச்சரியாமாக இருந்தது. விஜய் ஆண்டனி சார் பாடலில் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம். ஆனால் இந்தப்படத்தில் நானும் இருப்பது பெருமை. தமிழில் எப்போது நடித்தாலும் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகை தனுஷா பேசியதாவது..,
முதலில், இவ்வளவு பெரிய படத்தில் என்னை நம்பி, எனக்கு வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நாயகியாக இது எனது முதல் திரைப்படம். அதுவும் இவ்வளவு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம். நான் உண்மையிலேயே மிகுந்த அதிர்ஷ்டசாலி. இயக்குநர் கணேஷ் சந்திரா சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு கலைஞருக்கு மிகவும் முக்கியமானது, சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் நடிக்க முடிவதுதான். அந்த நிம்மதியை முழுமையாக எனக்கு அளித்தவர் கணேஷ் சந்திரா சாரும், இந்த முழு குழுவும் தான். எத்தனை சிறிய காட்சிகளுக்காக எத்தனை முறை எடுத்தாலும், ஒரு நொடி கூட முகம் சுளிக்காமல் எப்போதும் ஊக்கம் அளித்தார்கள். அதற்காக என் மனமார்ந்த நன்றிகள். என்னுடன் நடித்த அஜய் — உங்களுக்கும் என் நன்றி. மிகவும் கனிவாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொண்டதால் இப்படத்தில் நடிக்க எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அஷ்வின், லக்ஷ்மி அம்மா — அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். இந்த திரைப்படத்தை பிப்ரவரி 13 அன்று, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்கில் கண்டிப்பாக பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

எழுத்தாளர் புதிய பரிதி பேசியதாவது..,
இந்த படம் ஒரு சாதாரண முயற்சி அல்ல. கணேஷ் சந்திராவிடம் நான் கதையை ஒரு படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட கொடுக்கவில்லை. “படிக்க ஒரு ஸ்கிரிப்ட் கொடுங்கள்” என்றார். அதைப் படித்த இரண்டே நாளில் படம் உறுதியானது — அது எனக்கு ஒரு மேஜிக் மாதிரி இருந்தது. இந்த படத்தில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பலம் — கணேஷ் சந்திரா சாரும் , தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாரும் தான். இருவரும் கதையை அப்படியே நம்பி, அதற்கு உண்மையாக நின்றார்கள். “ஸ்கிரிப்ட் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுதியாக நின்றார்கள். ஒரு முதல் பட எழுத்தாளருக்கு இப்படி ஒரு வாய்ப்பு  கிடைப்பது அரிது. நான் எழுதும்போதே இந்த படம் என் மனதில் இசையோடு, எடிட்டிங்கோடு ஓடிக்கொண்டிருந்தது. அந்த உணர்வை இசை மூலமாகவும், எடிட்டிங் மூலமாகவும் அப்படியே திரையில் கொண்டு வந்ததற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இந்த படத்தில் இசை என்பது பின்னணி மட்டும் அல்ல, பல காட்சிகளுக்கே மாற்றாக இசை பேசுகிறது. அது இந்த படத்தின் மிகப் பெரிய பலம். இயக்கக் குழு, உடை வடிவமைப்பாளர் மாளவிகா, நடன இயக்குநர், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் ஒரு குழுவாக அல்ல — ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள். உண்மையிலேயே இந்த படம் எனக்கு ஒரு வேலை போலவே தோன்றவில்லை. ஒரு குடும்பத்தோடு இருந்து செய்த அனுபவமாகத்தான் இருந்தது. இந்த பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இயக்குநர் சசி பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்துல இருக்கிற பாடல் காட்சிகளையும், சீன்ஸையும் நீங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க. உங்கள் எல்லாருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பை விட  இரண்டு  மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. அதுக்குக் காரணம் கணேஷ்சந்திரா. அவர் ஒரு சினிமாட்டோகிராபர் மட்டுமல்ல, ஒரு இயக்குநரும் கூட.  நான் விஜய் ஆண்டனி, அஜய் வைத்து கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன். அந்த படத்துல எல்லாருமே ஃபுல்லா டேன் லுக். விஜய் ஆண்டனிக்கு ஒரு விவசாயி கேரக்டர். ஆனா இங்க இந்த படத்துல பார்த்தா… எல்லாமே கலர் கலரா, ஃப்ரெஷ்ஷா இருக்கிறது. அதை பார்த்ததும் ரொம்ப பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அஜய் என் படத்திலேயும், இந்த படத்திலேயும் இரண்டு வெவ்வேறு மாதிரியான கேர்கடர்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார். உண்மையிலேயே நல்ல திறமைசாலி.  இப்படத்தில் ரொம்ப சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கணேஷ்சந்திரா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் எடுக்குற கதை, சொல்லுற விதம் எப்போதுமே ஒரு உணர்வோட இருக்கும். அதோட விஜய் ஆண்ட்னியின் பாடல்கள்… சோகமான இடத்துல வர வேண்டிய சாங்ஸ்கூட ஒரு தனி வைபோட, அவருடைய ஸ்டைல்ல ரொம்ப அழகா போட்டிருக்கார். இந்த பிப்ரவரி 13, ஒரு நல்ல கதையோட, ஒரு நல்ல படம் திரைக்கு வரப்போறதுன்னு நம்பிக்கையோட முடிக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் அஷ்வின் ராம் பேசியதாவது..,
நான் தியேட்டர் குரூப்பில் ஏழு வருடமாக இருந்தேன், பூக்கி பட வாய்ப்பு தந்த என் இயக்குநர் கணேஷ் சந்திரா சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இயக்குநர் ரொம்பவே கூல், அவர் ஒரே நேரத்தில் கேமரா, டைரக்ஷன் இரண்டையும் செய்துள்ளார். இந்த டீம் ரொம்பவே இனிமையாக இருந்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். விஜய் ஆண்டனி சார் பாடல்களுக்கு தீவிர ரசிகன், அவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது பெரிய மகிழ்ச்சி. படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

காஸ்ட்யூம் டிசைனர் மாளவிகா  பேசியதாவது..,
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக முதலில் விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. “பூக்கி” எனக்கு ரொம்பவே சிறப்பு வாய்ந்த படம். என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம். இந்த டீம்ல வேலை பண்ணும்போது மனசு ரொம்ப சந்தோசமாக இருந்தது. முழு இயக்குநர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் உண்மையிலேயே அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்தப் படம் எல்லாருக்கும், குறிப்பா காதல் ஜோடிக்கு, ரொம்ப நெருக்கமான படமாக இருக்கும். பிப்ரவரி 13, கண்டிப்பா திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள். நன்றி.

நடன இயக்குநர் ஹரி பேசியதாவது..,
இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவம். இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி சாருக்கும் என் நன்றிகள். பிப்ரவரி 13, கண்டிப்பா திரையரங்குகளில் எல்லோரும் இப்படத்தை பாருங்கள் நன்றி.

கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசியதாவது…,
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் கணேஷ் சந்திராவுக்கும், விஜய் ஆண்டனி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. கணேஷ் இந்த படத்தை பற்றி முதலில் எனக்கு சொல்லும்போது, “இது ஃபேன்டஸியா பண்ணணும், இதுவரைக்கும் பண்ணியதிலிருந்து கொஞ்சம் வேற மாதிரி இருக்கணும், பார்த்து பண்ணுங்கன்னு சொன்னார். அப்போலிருந்தே அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தார். “இது இப்படிதான் வரணும், இது இதே மாதிரி தான் இருக்கணும்”ன்னு ஒவ்வொன்றையும் டிஸ்கஸ் பண்ணி, அதுக்கப்புறம் ஒவ்வொரு விஷயமாவே பிரிச்சு வேலை பண்ணினோம். அந்த உழைப்பு எல்லாம் சேர்ந்து, நல்லா வந்திருக்கு. இந்த படமும் நல்லா வந்திருக்கு. 13 ஆம் தேதி பார்த்துட்டு, நீங்க எல்லாரும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நன்றி.

பாடலாசிரியர் லாவர்தன் பேசியதாவது..,
“பூக்கி” படத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் பாடலை எழுதினது எனக்கு ரொம்பவே சந்தோசம். விஜய் ஆண்டனி சார் கூட வேலை பார்க்க வேண்டும் என்பது எல்லா பாடலாசிரியர்களும் ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு நிறைவேறிச்சுன்னு நான் தைரியமா சொல்ல முடியும். ஏன்னா, நான் 12th படிக்கிற டைம்ல “வேட்டைக்காரன்” படம் ரிலீஸ் ஆனது. அப்போ சார் பாட்டை கேட்டு, “புலி உருமுது” மாதிரி பாடல்களுக்கெல்லாம் நாங்க வைப் பண்ணிய நாட்கள் அது. அப்படிப்பட்ட ஒரு மியூசிக் டைரெக்டரை ரசிச்சு வளர்ந்த நான், இன்னைக்கு அவருக்குப் பக்கத்துல உட்கார்ந்து, நான் பாடல் எழுதுற பாக்கியம் கிடைத்திருக்கிறது, நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவன் ன்னு தான் சொல்லணும். அந்த விதத்துல, விஜய் ஆண்டனி சாருக்கு  நான் மனதார நன்றியை சொல்லிக்கிறேன். இந்த படத்தோட இயக்குநருக்கும், எழுத்தாளர் புதிய பரிதி சாருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஸ்டண்ட் மாஸ்டர் பிரபு ஜாக்கி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் ஆண்டணி சாருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. கணேஷ் சந்திரா கூட நான் முன்பே மூன்று படங்களில், அவர் கேமராமேன் ஆக இருந்தபோதும், அசிஸ்டெண்ட் ஆக இருந்த போதும், ஃபைட் மாஸ்டர் டீமில் வேலை செய்திருக்கேன். அந்த நம்பிக்கையில் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. இந்த படம் முழுக்கவே மிக நல்ல ஸ்டண்ட் காட்சிகள். குறிப்பா படத்துல ஒரு சேஸ் சீன் இருக்கிறது, அதுக்கப்புறம் ஒரு ஃபைட் சீனும் இருக்கிறது. கண்டிப்பாக நீங்க எல்லாரும் பார்த்து ரசிப்பீங்கன்னு நம்புறேன். நன்றி.

நடிகை பிரியங்கா மஸ்தானி பேசியதாவது…,
என்னுடைய ஊர் சேலம், கிராமத்து பொண்ணு, என்னை மாதிரி ஒரு கிராமத்திலிருந்து வந்த தமிழ் பொண்ணுங்களுக்கு, ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்துல வாய்ப்பு தர்றது மிகப்பெரிய விசயம். அதுக்காக விஜய் ஆண்டனி சாருக்கு பெரிய நன்றி.  இயக்குநர் ரொம்ப டென்ஷன் ஆகவே மாட்டார். இது என்னுடைய முதல் படம். அதனால டைரக்டர்னா ரொம்ப கோபப்படுவாங்க, டேக் சரியா போகலன்னா திட்டுவாங்கன்னு நினைச்சு நான் ரொம்ப பதட்டமாதான் இருந்தேன். ஆனா அவர் அப்படியே இல்ல. ரொம்ப கூலாக, ஜாலியாக எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணினார். அதுக்காக ரொம்ப ரொம்ப நன்றி. அனைவருக்கும் நன்றி.

குழந்தை நட்சத்திரம் ஷன்விகா ஶ்ரீ பேசியதாவது..,
எல்லோருக்கும் வணக்கம் எனக்கு வயது 5 தான். இந்தப்படத்தில் நடித்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். பிப்ரவரி 13 ஆம் தேதி எல்லோரும் படம் பாருங்கள் நன்றி.

நடிகர் சத்யா பேசியதாவது..,
பிக்பாஸ் அங்கீகாரத்தை விட, இப்படத்தை பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். இயக்குநர் கணேஷ் சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இப்படம் மிகச்சிறப்பான அனுபவம். அஜய் கற்பூரம் மாதிரி, எந்த காட்சியையும் அட்டகாசமாக நடிப்பார்.  ஹீரோயின் நன்றாக நடித்துள்ளார். பிப்ரவரி 13 ஆம் தேதி எல்லோரும் திரையரங்கில் படம் பாருங்கள் நன்றி.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரு வெற்றி பெற்ற சலீம் படத்தில் அறிமுமாகி, ஜெயில், காரி, Miss Match தெலுங்குப்படம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார்.

இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை, காதலர்களே தான் பிரச்சனையாக இருக்கிறார்கள். அப்படியான 2K தலைமுறை காதலர்களின் உலகை மையப்படுத்தி, ஒரு இளைஞன் சந்திக்கும் பிரேக்கப் அதைத்தாண்டி அவன் எப்படி வெளியே வருகிறான் என்பதை, பரபரப்பான திரைக்கதையில், கலக்கலான காமெடியுடன் சொல்லும், ஒரு அழகான ரோம் காம் திரைப்படமாக ‘பூக்கி’ உருவாகியுள்ளது.

தன் இசை ரசிகர்கள் நீண்ட காலமாக முன்வைத்து வந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மார்கன் படத்தில் தனது நடிப்பால் பெரும் பாராட்டுக்களைக் குவித்த  அஜய் திஷான் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தனுஷா  நடித்துள்ளார்.  இவர்களுடன் லக்‌ஷ்மி மஞ்சு, பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, MJ ஶ்ரீராம், அஸ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில்நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு – Vijay Antony Film Corporation
தயாரிப்பாளர்கள் – ஃபாத்திமா விஜய் ஆண்டனி
இயக்கம், ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா
எழுத்து – புதிய பரிதி
இசை, எடிட்டிங் : விஜய் ஆண்டணி
கலை இயக்கம் : பிரகதீஸ்வரன்
ஆடை வடிவமைப்பாளர் : மாளவிகா செல்வம்
நடனம் – ஹரிகிரண்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)

லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லீடர்’ திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்தா ஐயர், வி டி வி கணேஷ், பேபி இயல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கையாண்டிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியீட்டு விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் மற்றும் படக் குழுவினருடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. ஏ. எம். விக்ரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் டைட்டிலை வெளியிட்டார்.

திரு. விக்ரமராஜா பேசுகையில், “லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது படத்தின் பெயர் வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாடறிந்த தொழிலதிபர் சரவணன் என்பது அனைவருக்கும் தெரியும்.

தகப்பனார் ஒரு பிரபலமான நிறுவனத்தை ஸ்தாபித்து அதனை பிள்ளைகளின் கைகளில் கொடுக்கும் போது சில பிள்ளைகள் வெற்றி பெறுவதுண்டு, சில பிள்ளைகள் தோற்றுப் போவதுண்டு. ஆனால் இதற்கெல்லாம் மாற்றாக கடுமையாக உழைத்து ஆசியா கண்டத்திலேயே சிறந்த விற்பனையாளர் என்று உயர்ந்து கொண்டிருப்பவர் தான் மரியாதைக்குரிய சகோதரர் லெஜெண்ட் சரவணன். இது அவருடைய இரண்டாவது திரைப்படம். அவருடைய முதல் படத்தை நான் பார்த்திருக்கிறேன். மிக நன்றாக இருக்கும். அதுவும் வெற்றிப்படம் தான். ஆனால் இந்த படம் அதையும் தாண்டி சிறந்த மைல்கல் படமாக திகழும். இது வெற்றி பெறுவது நிச்சயம். இதை யாரும் தடுத்திட இயலாது. இந்த ‘லீடர் ‘ கட்டாயம் வெற்றி பெறுவார்.

இரண்டரை மணி நேர திரைப்படம் என்று சொன்னாலும் மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக மக்கள் அதை பார்த்து ரசிக்கக்கூடிய வகையிலும், மன மகிழ்ச்சியோடு வரக்கூடிய சூழலிலும் இந்த படம் அமையவிருக்கிறது.  
இந்த திரைப்படத்தை திட்டமிட்டு பணியாற்றி இரவு பகல் பாராது உழைத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறும். இந்த விழாவில் எங்களையும் அழைத்து கௌரவப்படுத்தியதற்காக நன்றி. தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு பெட்டிக்கடை நடத்தும் சாமானிய வணிகர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த மேடை அமைந்திருக்கிறது. ஆகவே இந்த நிகழ்ச்சி எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி. ஒவ்வொரு வணிகர்களும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக எப்படி கடுமையாக உழைத்து, முன்னேற வேண்டும் என்பது குறித்து தான் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் சரவணன் அவர்கள் விவாதிப்பார்.

ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனிகள், இது போன்ற நிறுவனங்களால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படாமல் அவர்களை பாதுகாப்பதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறீர்கள் என்பது குறித்து தான் பேசுவார். ஜிஎஸ்டி பிரச்சினையாக இருந்தாலும், உணவு பாதுகாப்பு துறை சட்டம் சம்பந்தமான விஷயமாக இருந்தாலும் சாமானிய வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் விவாதிக்க கூடியவர். அவர்கள் மீது உள்ளன்போடு இருப்பவர்தான் லெஜெண்ட் சரவணன்.

லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் சரவணனின் பெயர் கொடி கட்டி பறக்கும்,” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், “ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த வகையில் நான் ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன் என்றால் அது இயக்குநர் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படங்களைத் தான். அவருடைய படங்களை பார்க்கும்போது எல்லா தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். அவரிடம் எல்லா படங்களையும் என்டர்டெய்ன்மென்டாக வழங்கும் மேஜிக் இருக்கிறது. அந்த மேஜிக் இந்த படத்தில் இன்னும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாக இத்தகைய ஜானரிலான படங்களை தவறவிட்டிருக்கிறோம். அதை லீடர் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்காக உருவாக்கி இருக்கிறோம்.

நான் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். லெஜெண்ட் நடிக்கும் படத்தில் பணியாற்றும்போது, என்னை சந்திக்கும் பலரும் சிறப்பான இசையை வழங்குங்கள் என்று உற்சாகப்படுத்தியுள்ளனர். அவருடைய படத்தை குடும்ப ரசிகர்கள் அனைவரும் திரண்டு வந்து பார்ப்பார்கள். அதனால் பாடலையும் பின்னணி இசையையும் சிறப்பாக உருவாக்குங்கள் என அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில் இந்த படத்தில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. திங்க் மியூசிக் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனைய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிறேன். இந்த தருணம் மகிழ்ச்சியானதாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,” என்றார்.

இயக்குநர் R. S. துரை செந்தில்குமார் பேசுகையில், “இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸை பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் வெளியிடுவோம் என தயாரிப்பாளரான சரவணன் சார் என்னிடம் சொன்னார். ஊடகங்கள் பிள்ளையார் சுழி மட்டுமல்ல, பிள்ளையாரே அவர்கள் தான். மக்கள் என்ற கடவுளை சந்திப்பதற்கு முன் பிள்ளையாரான பத்திரிகையாளர்களை நாங்கள் தற்போது சந்தித்திருக்கிறோம்.

2022ம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து லெஜெண்ட் சரவணன் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தையை தொடங்கினேன். 5, 6 மாதங்கள் கழித்து தான் இப்படத்திற்கான பணிகளை இறுதி செய்து தொடங்கினோம்.

அந்தத் தருணத்தில் அவரை சந்தித்து பேசும் போதெல்லாம் அவர் ஆசைக்காகத் தான் நடிக்க வந்திருக்கிறார் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவருடனான தொடர் சந்திப்பில் அவரின் பேச்சு மூலம் சினிமாவை பற்றிய அனைத்து விஷயங்களை நுணுக்கமாக பார்க்கக் கூடியவர் அவர் என்பது தெரிந்தது. அதன் பிறகு தான் அவர் நடிக்க வந்தது ஆசையால் அல்ல என்பது புரிந்தது.

சாதாரணமாக அவருடனான சந்திப்பின்போது ஒருமுறை அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது சில இந்தி நடிகர்களின் போட்டோக்களை வீட்டில் ஒட்டி இருந்தாராம். அது தொடர்பாக அவரது அம்மா கேட்டபோது, ‘நான் இவர்களைப் போல் எதிர்காலத்தில் வரவேண்டும், வருவேன்” என்றாராம். அதன் பிறகு அவர் தன்னுடைய குடும்பத்திற்காகவும், கடமைகளுக்காகவும் கடுமையாக உழைத்து உச்சத்தை எட்டி இருக்கிறார். இருந்தாலும் அந்த சிறுவனுடைய ஆசையை, கனவை ஒரு இளைஞனாக- இளைஞர்களுக்கான உத்வேகத்துடன் இந்தப் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். இது எனக்கு உண்மையிலேயே சிறந்த முன்னுதாரணமாக இருந்தது.

அவருடன் பழகிய இந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய கடும் உழைப்பை நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரிடம் உள்ள அசாத்தியமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

படப்பிடிப்பு தளங்களில் அவருடனான அனுபவம் ஒவ்வொன்றும் மறக்க முடியாதது.
ஒவ்வொரு இயக்குநருக்கும் அல்டிமேட் கோல் என்னவென்றால், அவர் நினைத்ததை நினைத்த வகையில் உருவாக்கிட வேண்டும் என்பது தான். அதற்கு முழுமையான சுதந்திரமும், அனுமதியும் வழங்கும் தயாரிப்பாளர் தான் தேவை. அந்த வகையிலான ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், நான் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே கேட்டு செய்வதற்கு தயாராக இருக்கக்கூடிய நடிகராகவும் அவர் இருந்தார். அவரின் இந்த துணிச்சலை கண்டு தான் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் எங்களுக்கு மன நிறைவை அளித்திருக்கிறது. உங்களுடைய ஆதரவிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் / நடிகர் லெஜண்ட் சரவணன் பேசுகையில், “லீடர்- இந்த படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் அரசியல் சார்ந்த படமா, அல்லது எந்த மாதிரி படம் என்ற கேள்வி வரும். இந்தப் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ, அரசியல் சார்ந்த வசனங்களோ ஒரு துளி கூட கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர் ஃபிலிம். தற்போது வெளியாகி இருக்கும் க்ளிம்ப்ஸ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கும். இந்த படத்தின் எசன்ஸ் இதுதான். இதே போல் தான் படம் முழுவதும் இருக்கும்.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும், பிள்ளையும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்க் நுழைந்து விடுவார்கள். அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை தான் என்னுடைய இயக்குநர் துரை செந்தில்குமார் அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தமான வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதுதான் முக்கியமானது.

ஏனெனில் கதைகள் ஏராளமாக இருக்கும். ஆனால் திரைக்கதை அமைப்பது தான் சவாலானது. அந்த வகையில் இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் துல்லியமாக செதுக்கி செதுக்கி உருவாக்கி இருக்கிறார்.

ஜிப்ரானின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதேபோல் படத்தின் கதையோட்டத்திற்கு தகுந்தாற்போல் பாடல்களுக்கும் அவர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்திற்காக தூத்துக்குடியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பிறகு ஜார்ஜியா நாட்டில் 15 நாட்கள் படபிடிப்பு நடத்தினோம். ஜெய்ப்பூர், சென்னை , ஊட்டி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தினோம்.‌ ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ மற்றும் ‘ஜனநாயகன்’ படங்களில் பணியாற்றிய எடிட்டர் பிரதீப் ராகவ் தான் இப்படத்திற்கும் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். இந்த படத்திலும் அவர் நேர்த்தியாக பணியாற்றி இருக்கிறார் அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கலை இயக்குநர் துரைராஜுக்கும் என் வாழ்த்துக்கள். படப்பிடிப்பு தளத்திற்கு சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ வந்துவிட்டால் அந்தத் தளமே உற்சாகமடைந்திடும். அந்த அளவிற்கு உத்வேகத்துடன் பணியாற்றுவார்.

சிறிய வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. என்னுடைய வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக்கான் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டி இருப்பேன்.‌ என் தாயிடம் என்றைக்காவது ஒரு நாள் இவர்களைப் போல் நான் ஸ்டார் ஆவேன் என சொல்லி இருக்கிறேன். இதைக் கேட்ட என் தாய் ‘சந்தோஷம்’ என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.‌

நான் என்னுடைய தந்தையார் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அதன் காரணமாக குடும்ப தொழிலில் ஈடுபட்டு, என்னுடைய தந்தையாருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அதன் பிறகு என்னை நம்பி முழு பொறுப்பையும் வழங்கி விட்டார். நான் கடுமையாக உழைக்கத்தொடங்கினேன். என்னுடைய நிறுவனத்தில் காலையில் முதல் ஆளாக உள்ளே நுழைவேன். அனைவரும் சென்ற பிறகு கடைசி ஆளாக வெளியேறுவேன். ஆரம்பம் முதல் இன்று வரை இப்படித்தான் தொடர்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் இதைத்தான் கடைப்பிடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக செல்வேன். அங்கிருந்து கடைசி ஆளாக வெளியேறுவேன். நான் எந்த வேலையை செய்தாலும் அதில் முழு கவனத்துடன் அர்ப்பணிப்புடன் உழைப்பேன். இதுதான் என்னுடைய கேரக்டர்.

இன்றைக்கு ஒரு பக்கம் கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்கிறார்கள். மறுபக்கம் மாஸான ஆக்ஷன் படங்கள்தான் வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த படத்தில் நல்ல கதையம்சமுள்ள கன்டென்ட்டும் இருக்கிறது. மாஸான ஆக்ஷன் எலிமெண்ட்டும் இருக்கிறது. இந்த திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தை பார்த்த நானும் எங்களுடைய படக் குழுவினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே மகிழ்ச்சியும், சந்தோஷமும், மன நிறைவும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன்.

சினிமா என்பது ஒரு தனிநபரின் வெற்றி அல்ல. சினிமாவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். படத்தை திரையிடும் திரையரங்குகளிலும் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக நான் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியடைய வேண்டும் என நினைப்பேன்.

சினிமா துறை தற்போது கொஞ்சம் இறங்கு முகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு சற்று குறைந்திருக்கிறது. புதிதாக வருபவர்களுக்கும் வேலை வாய்ப்பு முழுமையாக கிடைப்பதில்லை. அதனால் தான் நான் எப்போதும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி அடைய வேண்டும் என நினைப்பேன். அதேபோல் பத்திரிகையாளர்களாகிய நீங்களும் இந்த சினிமாத்துறை வளர்ச்சி அடைவதற்கும், மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் உங்களாலான பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌

இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலை பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் ஆறாம் தேதி இப்படத்திற்கான க்ளிம்ப்ஸ் வெளியிடுகிறோம்.

இந்த திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னதாக பிரம்மாண்டமான முறையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். அந்த விழாவில் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்,” என்றார்.

‘பராசக்தி’ வரும் பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராகிறது ZEE5 தளத்தில்

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகிறது

இந்தியாவின் மிகப் பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொலிடிகல் ஆக்ஷன் டிராமாவான “பராசக்தி” திரைப்படத்தை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ்நாட்டின் சமூக-அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அத்தியாயத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது.

1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்புப் போராட்டம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலகட்டத்தின் முக்கிய இயக்கத்தில் இழுத்துச் செல்லப்படும் இரண்டு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான கதையை சொல்லுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கைநிலையுள்ள இளைஞரான செழியன் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

திரைப்படத்தின் பின்னணி குறித்து பகிர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா…,
“மரியாதை, மொழி மற்றும் மக்களின் கூட்டுச் சிந்தனையின் சக்தி குறித்து ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற ஆழமான விருப்பத்திலிருந்து பராசக்தி உருவானது. இது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; ஒருவரின் அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது, சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இக்கதை பேசுகிறது. நம் குரல்கள், பண்பாடுகள், வரலாறுகள் குறித்து அறிந்து கோள்ள வேண்டிய அவசியத்தை பேசும் இப்படைப்பை, உலகளாவிய பார்வையாளர்களிடம் ZEE5 கொண்டு செல்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் கூறுகையில்,
“செழியன் எனக்கு மிகவும் பிடித்த அழுத்தமான, அர்த்தமுமிக்க கதாபாத்திரங்களில் ஒன்று. நம்பிக்கை, துணிவு மற்றும் உண்மையாக முக்கியமான விஷயங்களுக்காக குரல் கொடுப்பதற்கான பொறுப்பு ஆகியவற்றின் பிரதிநிதியாக செழியன் இருக்கிறான். பராசக்தி என்னை ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் பல சவாலுக்கு உள்ளாக்கியது. இப்போது இந்த பயணத்தை ZEE5 வழியாக பார்வையாளர்கள் அனுபவிக்கவிருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.

ஸ்ரீலீலா கூறுகையில்,
“பராசக்தி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மைல்கல்லாகும். ரத்னமாலா கதாப்பாத்திரம் அமைதியான வலிமையும் கருணையும் கொண்ட கதாபாத்திரம். இவ்வளவு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கதையின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெருமை. இந்த வேடத்தில் என்னை நம்பிய சுதா மேடம் மற்றும் முழு குழுவுக்கும் என் நன்றி,” என்றார்.

எதிர்ப்பு, சகோதரத்துவம் மற்றும் அடையாளம் குறித்த ஒரு தீவிரமான கதையைக் காண, பராசக்தி திரைப்படத்தை பிப்ரவரி 7 முதல் ZEE5 தளத்தில் காணுங்கள்.