Breaking
February 17, 2025

“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” இன்று முதல் SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில் வெற்றியைக் குவித்த படம் எமக்குத் தொழில் ரொமான்ஸ்.

இப்படத்தின் ஒடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நிலையில், இப்படம் தமிழின் முன்னணி ஓடிடி தளமான SUN NXT ஓடிடி தளத்தில் இன்று முதல் ஸ்ட்ரீமாகிறது.

ரொமான்ஸ் பொங்கி வழியும் ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என, அசத்தலான ரொமான்ஸ் காமெடியாக, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படமாக உருவாகியிருந்த இப்படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நடிகர் அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஊர்வசி மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அழகம் பெருமாள், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், விஜய் வரதராஜ், படவா கோபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக ஜெரோம் ஆலன் பணியாற்றியுள்ளார். பாடாலாசிரியர் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் ஓடிடி வெளியீட்டை எதிர்நோக்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், இப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படத்தை SUN NXT தளத்தின் மூலம் அனைவரும் பார்த்து ரசியுங்கள்!!

SUN NXT என்பது Sun TV Network-ன் OTT தளமாகும், இதில் 4000+ தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்கள், 30+ நேரடி தொலைக்காட்சி சேனல்கள், மற்றும் பெரும் தொகையான பிராந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை வீடியோக்கள் மற்றும் சிறப்பு உள்ளடக்கங்கள் உள்ளன.

முடியாத அளவிலான பொழுதுபோக்கை அனுபவிக்க SUN NXT-ஐ இப்போது பதிவிறக்குங்கள்:
Android: http://bit.ly/SunNxtAdroid
iOS: இந்தியா – http://bit.ly/sunNXT
உலகின் பிற பகுதிகள் – http://bit.ly/ussunnxt
அல்லது பார்வையிடவும்: https://www.sunnxt.com

“ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்………………..

ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ , ஜனவரி 31 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட குழுவினர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் விரிவான VFX வேலைகளை மேம்படுத்துவதில் தயாரிப்பு குழு கவனம் செலுத்துவதால் தாமதம் ஏற்படுகிறது, இது பார்வையாளர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும், அதுமட்டுமின்றி இது ஒரு புதுவிதமான அனுபவத்தை உறுதி செய்யும். உலகத் தரம் வாய்ந்த சினிமா காட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த தாமதம், என பட குழுவினர்கள் தெரிவித்துள்ளனர் .

நட்சத்திர பட்டாளம் மற்றும் Pan – India விவரங்கள் :

பா.விஜய் இயக்கிய அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், ஃபேன்டஸி-ஹாரர் விரும்பும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது.

புதுமையான சினிமா அனுபவம் : அகத்தியா

அகத்தியா , ஒரு திரைப்படம், என்பதை விட மேலானது – இது கற்பனை, திகில் மற்றும் ஆழமான , உணர்ச்சிகரமான கதைசொல்லல் ! ஆகியவற்றின் பிடிமான கலவையாகும். கண்கவர் காட்சியமைப்புகள், மனதைக் கவரும் இசையமைப்பு மற்றும் தீவிரமான கதையுடன், அகத்தியா திரைப்படம் சினிமா அனுபவங்களை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. பார்வையாளர்கள் புதுவிதமாக மாறுபட்ட கற்பனைக் கூறுதல் மற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழுத்தமான கதைக்களம் நிரம்பிய ஒரு எட்ஜ்-ஆஃப்-தி-சீட் த்ரில்லரை எதிர்பார்க்கலாம்.

தயாரிப்பாளர்களின் பார்வை :

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே. ஐசரி கணேஷ், மற்றும் WAM India நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனீஸ் அர்ஜுன் தேவ் தயாரிக்கும் இத்திரைப்படம் , பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. காமெடி, திகில் என பல சுவாரசிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பலவிதமான சவால்கள் மற்றும் எல்லைகளை கடந்து திரைப்படத்தின் காட்சி கலைத்திறன் மேலோங்கி நிற்கிறது, அதுமட்டுமின்றி ஒரு லட்சிய ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. தயாரிப்புக் குழுவினர்களின் உழைப்பால் இப்படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் இணையற்ற பிரம்மாண்டத்தின் காட்சிகளை தங்களுக்கு வழங்க காத்திருக்கிறது.

ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் மற்றும் உணர்ச்சிகளின் தனித்துவமான கலவையுடன் , பாரம்பரிய வகைகளை தாண்டிய அகத்தியா திரைப்படம் வரும் பிப்ரவரி 28 2025 அன்று திரையிடப்படும் போது மறக்க முடியாத ஒரு அனுபவத்திற்கு தயாராகுங்கள்

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ கிங்ஸ்டன்’

இசையமைப்பாளர் – பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ‘ இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராசா ராசா..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வசனத்தை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராசா ராசா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள். மெலோடியாக வெளியாகி இருக்கும் இந்த பாடல்… அனைத்து தரப்பு இசை ரசிகர்களின் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.

நாக சைதன்யா- சாய் பல்லவி யின் ‘தண்டேல்’

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ தண்டேல் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டார்.

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு , நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.‌

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், ”தண்டேல் என்றால் என்ன? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கும். இந்திய சினிமாவில் தற்போது அனைவரும் மொழி என்ற எல்லையை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். தற்போது வெளியாகும் படத்தின் டைட்டில்கள் அனைவரையும் கவர்வது போல் இருக்கும். ‘பாகுபலி’க்கு பிறகு இதற்கு நாம் பழகிவிட்டோம். பாகுபலி என்றால் என்ன? என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதில்லை. அதேபோல் தண்டேல் என்பதற்கும் யாரிடமும் கேள்வி எழாமல் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.‌ இருந்தாலும் தண்டேல் என்றால் லீடர் என இப்படத்தில் ட்ரெய்லர் மூலம் தெரிந்து கொண்டிருப்போம்.

இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பான் இந்திய அளவிலான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல்.. ஒரு கதையை உருவாக்கி, அது பான் இந்திய ரசிகர்களுக்கு சென்றடையும் எனும் நம்பிக்கையில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.‌ இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்பை எங்களுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத் துறையில் தயாரிப்பாளராக 10, 15 ஆண்டுகளை கடந்து செல்வது என்பது சவாலாக இருக்கும் தருணத்தில் தொடர்ந்து 50 வருடங்களாக திரைப்படங்களை வழங்கி வருகிறார் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த். இந்த வகையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.

நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் தற்போது அவர் நடித்த படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையை சாய் பல்லவி தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இந்த திரைப்படம் நன்றாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன்.

நடிகர் கருணாகரன் தற்போது பான் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி அன்று திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கும் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் நடிகர் கருணாகரன் இப்படத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அப்போதிருந்து இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு என்னிடமிருக்கிறது. இயக்குநர் சந்துவின் முந்தைய திரைப்படங்கள் நன்றாக இருக்கும். நாக சைதன்யா – சாய் பல்லவி போன்ற திறமையான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான காதல் கதை. இதற்கு தனித்துவமான பின்னணி என்பதால் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

கருணாகரன் விவரிக்கும் போது நிறைய பயணம் செய்ததாக குறிப்பிட்டார். கதை நிகழும் இடத்தைப் பற்றி சொல்லும் போதும்.. அதனை முன்னோட்டத்தில் பார்க்கும் போதும்.. இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ராக்ஸ்டாரின் பாடல்களும் நன்றாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நடிகர் கருணாகரன் திறமையானவர். காமெடி மட்டுமல்ல அவர் எந்த கேரக்டரிலும் நடிக்கக்கூடியவர். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். அவருக்கும் தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ” மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவை இப்போதுதான் சந்திக்கிறேன். அவருடைய ஸ்கிரிப்ட் செலக்சன் என்பது தனித்துவமானதாக இருக்கும். நாக சைதன்யாவை கண்வின்ஸ் செய்வது கடினம்.

இந்த ஜானர் புதிது. படத்தைப் பற்றி கருணாகரன் என்னிடம் சொல்லும் போது உண்மை சம்பவத்தை தழுவி தயாரான படம் இது என்றார். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதே படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்துவது என்பது கடினமானது. சவாலானது. ஆனால் அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறார்கள். இயக்குநருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

நான் சாய் பல்லவியின் பெரிய ரசிகன். நான் மட்டுமல்ல ஏராளமான இயக்குநர்கள் உங்களுடைய ரசிகர்கள். நீங்கள் மீண்டும் திரையில் ஜோடியாக இணைந்திருப்பதை வரவேற்கிறேன். உங்கள் இருவரையும் திரையில் பார்க்கும்போது பாசிட்டிவ்வான எனர்ஜி இருக்கிறது.

நானும் டிஎஸ்பியும் சிறிய வயதில் இருந்து ஒன்றாக – வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தோம். தற்போது தான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பிரபலமாகி இருக்கிறது ஆனால் 90 களிலேயே தேவி ஸ்ரீ பிரசாத் – எஸ் பி பி சரண் ஆகியோர் இணைந்து இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தக் குழுவில் நான் இருந்தாலும் என்னை பாட அனுமதிக்க மாட்டார்கள். அவரும் இந்த படத்திற்காக தன்னுடைய கடும் உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இயக்குநர் சந்து – இதற்கு முன் இயக்கிய ‘ கார்த்திகேயா ‘ உள்ளிட்ட படங்களை பார்த்திருக்கிறேன். அவரும் நாக சைதன்யாவும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இயக்குநர் சந்து வெவ்வேறு ஜானர்களில் படங்களை இயக்கி வருகிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

எங்களின் கருணாகரனை தெலுங்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாக சைதன்யா திறமையானவர். அர்ப்பணிப்புடன் உழைப்பவர். நன்றாக தமிழ் பேச கூடியவர். தமிழ் இயக்குநர்கள் அவரிடம் சென்று கதையையும் , காட்சியையும் தமிழிலேயே விளக்கிச் சொல்லலாம். அவரும் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக நிறைய மெனக்கெடுவார். நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை. ஆனால் அது தெலுங்கு படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் தெலுங்கு – தமிழ் என கலவையாக இருக்கக் கூடாது. மிகப்பெரிய திரையுலக ஆளுமை மிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும் எளிமையாக பழகக் கூடியவர். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புதிய உயரத்தை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், ” ரொம்ப மகிழ்ச்சி. ‘ தண்டேல் ‘ எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். தண்டேல் படத்தை பற்றி தயாரிப்பாளர் பன்னி வாஸ் மற்றும் இயக்குநர் சந்து ஆகியோர் என்னை சந்தித்து படத்தை பற்றி ஒரு வரி கதையாக சொன்னார்கள்.‌ அதுவே சுவராசியமாக இருந்தது. அந்த சுவாரஸ்யம் படம் முழுவதும் இருந்தது. அதனால் பணியாற்றுவதற்கு உற்சாகமாக இருந்தது. இது உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

கடல் என்று வந்து விட்டால்.. அந்தப் படத்திற்கும் சென்னைக்கும் தொடர்பு எளிதாக அமைந்து விடும். இந்த படத்திலும் கடல்- கடற்கரை- மீனவர்கள்- காதல் -என அனைத்தும் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் தமிழக ரசிகர்களுக்கும் நெருக்கமானதாக இருக்கும்.

அல்லு அரவிந்த் அவர்களுக்கு என்னை சிறிய வயதில் இருந்தே தெரியும். அவரும் சிறந்த இசை ரசிகர். இந்தத் திரைப்படத்தை தயாரித்ததற்காகவும், எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாக சைதன்யா என் நண்பர். என் சகோதரர். திறமையானவர். தண்டேல் படத்தின் போஸ்டரை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி அமைத்து இருந்தார். இது நம்முடைய வழக்கமான நாக சைதன்யா இல்லையே..! என்ற எண்ணம் வந்தது. படத்திற்காக கடும் உழைப்பை வழங்கிய அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

சாய் பல்லவி இந்த பெயரை உச்சரித்தாலே போதும். அனைவருக்கும் பிடித்து விடும். இந்தியாவின் சிறந்த இயக்குநரான மணிரத்தினமே சாய் பல்லவியின் ரசிகர் தான். இந்த திரைப்படத்தில் அவரும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல. நன்றாக நடனம் ஆடக்கூடிய கலைஞர். அவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் அவர் நடனமாடி இருக்கிறாரா..? என்பதை நான் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். ஒரு பாடலுக்கு என்ன தேவையோ.. அதனை அந்த பாடலுக்குள்ளேயே சின்ன சின்ன நடன அசைவுகள் மூலம் அழகூட்டுபவர்.

இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் சிறப்பாகவும், பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கும் கார்த்தி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் , வெங்கட் பிரபு ஆகியோருக்கும் என்னுடைய நன்றிகள்.

நான் பாடலாசிரியர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்குவேன். ஏனெனில் நான் பிரபல கதாசிரியர் சத்தியமூர்த்தியின் மகன். அவர் கதாசிரியர் மட்டுமல்ல. பாடலாசிரியரும் கூட. ஒரு பாடலுக்கு அழகாக டியூன் அமைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது பாடல் வரிகள் தான். இந்த வகையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

பிப்ரவரி 7ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தண்டேல் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை சாய் பல்லவி பேசுகையில், ” இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் கார்த்தி சார் – வெங்கட் பிரபு சார் – கார்த்திக் சுப்புராஜ் சார்- ஆகியோருக்கு நன்றி. நீங்கள் அனைவரும் உங்களுடைய பரபரப்பான வேலைகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கு வந்து படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி.

தண்டேல் படத்தின் கதையை கோவிட் காலகட்டத்தின் போது இயக்குநர் சந்து ஒரு உண்மை சம்பவத்தை தழுவி, 20 பக்க அளவிலான கதையாக சொன்னார். அதை இவ்வளவு அழகான காதல் கதையாக மாற்றி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயணம் மறக்க முடியாதது.

சக நடிகரான நாக சைதன்யா ஒன்றரை ஆண்டு காலத்தை இந்த கதாபாத்திரத்திற்காக வழங்கி, கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னும் இதற்காக உழைக்க வேண்டும் என்றாலும் அதற்கும் அவர் தயாராக இருக்கிறார்.‌ அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது.

இந்தப் படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலம். இதற்காக பணியாற்றிய ராக் ஸ்டார் டிஎஸ்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தெலுங்கு திரையுலகத்திற்கு அறிமுகமாகும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவரை தெலுங்கு திரையுலகம் சார்பாக வரவேற்கிறேன். படப்பிடிப்பில் மொழி தெரியாவிட்டாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.

தண்டேல் படக் குழுவுடன் பணியாற்றிய ஒன்றரை ஆண்டு காலத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று படத்தை பார்க்க வேண்டும். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ” என்றார்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், ” நான் சென்னையில் தான் படித்தேன். பிழைப்பிற்காகத்தான் ஹைதராபாத் சென்றேன். சென்னை அரசு கலை கல்லூரியில் தான் பட்டப் படிப்பினை படித்தேன். அதன் பிறகு சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பினை படிக்கத் தொடங்கினேன். இரண்டு வருடத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்காமல் வெளியேறி விட்டேன்.

முதலில் நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் நாக சைதன்யா- சாய் பல்லவி இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். தரமான படைப்பாக ‘தண்டேல்’ உருவாகி இருக்கிறது.

இயக்குநர் சந்து அற்புதமான திறமைசாலி. நேர்த்தியாக உழைத்து தண்டேலை உருவாக்கி இருக்கிறார். கதை சிறியது தான். ஆனால் அதனை அவர் வழங்கிய விதம் சிறப்பானது. இந்தப் படத்தின் கதைக்காக 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி இருக்கிறோம். அந்த 20 பேரும் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள சிறையில் கைதியாக இருந்து அதன் பிறகு விடுதலையானவர்கள். அவர்களின் கதை இது. இயக்குநர் அதனை இரண்டு மணி நேர கதையாக விவரித்திருக்கிறார். இந்த கதையை அற்புதமான படைப்பாக உருவாக்கியதற்காக இயக்குநர் சந்துவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எனக்கு மகன் போல.‌ அவரை சிறிய வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவரிடம் இங்கிருந்தே ஒரு கேள்வியை கேட்கிறேன். எப்படிடா இப்படி 25 வருடமாக தொடர்ந்து ஹிட் பாடல்கள் வழங்கிக் கொண்டிருக்கிறாய்? அவருடைய அப்பா எனக்கு நல்ல நண்பர்.‌

கருணாகரன் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் அவருடைய நடிப்பு பேசப்படும். ஆடுகளம் நரேன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் என் நினைவுக்கு வந்தவர் எஸ். ஆர். பிரபு மட்டும் தான். அவர் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் கார்த்தி பேசுகையில்,” இது எனக்கு முக்கியமான மேடை. தெலுங்கு திரையுலகிலிருந்து எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. அந்த அன்பை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பாக இதனை கருதுகிறேன்.

இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்த கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் குஜராத்திற்குச் சென்று படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள் என்றார். பிறகு அங்கிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.

எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும் அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது.‌ 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும்.‌ இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள்.‌ இதன் காரணமாகவே இந்த படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள்.

இயக்குநர் சந்து மொண்டேட்டி இதற்கு முன் இயக்கிய படங்களும் வெற்றி படங்கள்தான். கடல் பின்னணியில் நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகி இருக்கிறோம்.‌ இதற்காக அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர். திரை உலகிற்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள். செல்வார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பது கடினம். பெரிய பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பு வேண்டாம் என நிறுத்திவிட்டார்கள். இந்த சூழலில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் அல்லு அரவிந்த். அவர் சினிமாவில் படங்களை வியாபார நுணுக்கங்களுடன் தயாரிக்கிறார். அவர் தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்து எப்படிடா இத்தனை ஆண்டுகளாக ஹிட்டு கொடுக்கிறாய்? என கேட்கிறார். அதை போல் நான் அவரைப் பார்த்து, எப்படி சார் தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்கிறேன். அவர் வேறு வேறு ஆட்களுடன்… வேறு வேறு கூட்டணியுடன்… தொடர்ந்து படங்களை பெரு விருப்பத்துடன் தயாரித்து வருகிறார். எல்லா மொழிகளிலும் படங்களை தயாரித்திருக்கிறார். சினிமா மீதான அவருடைய பற்று எனக்கு இன்று வரை ஆச்சரியத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் படங்களை தெலுங்கு திரையுலகிற்கு எடுத்துச்சென்று விளம்பரப்படுத்தும் போது அவர் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும்.. அவருடைய படத்தை எவ்வளவு நேசிக்க வேண்டும்.. படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் …நடிகர் நடிகைகளை எப்படி பாதுகாக்க வேண்டும்.. படத்தை தயாரிக்கத் தொடங்க தொடங்கியதில் இருந்து அந்தத் திரைப்படத்தை ரசிகர்களுக்காக திரையரங்கத்திற்கு கொண்டு சேர்க்கும் வரை எப்படி உழைக்க வேண்டும் … என்பதனை அவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.‌ அவரை எனக்குத் தெரியும் என்பதிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு மனதார வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கருணாகரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். அவரும் ஒரு அற்புதமான நடிகர். அவர் தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

ஆடுகளம் நரேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவருக்கு தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களை வழங்கி சீரியசான நடிகராக்கிவிட்டார்கள். ஆனால் அவர் அற்புதமாக காமெடியும் செய்வார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார்.

நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் டிஎஸ்பி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால்.. இசையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். அவர் இந்த நாட்டிற்கு சொந்தம். அவை எப்போதும் எனர்ஜியுடன் இருக்கிறார். இதற்காகவே நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் காதல் கதை கிடைத்து விட்டால் போதும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த திரைப்படத்திலும் டிஎஸ்பி தன் திறமையை வெளிப்படுத்தி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கி இருக்கிறார்.

சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது.

அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்தது. இதற்காக நன்றி.‌

நாக சைதன்யா அவருடைய தாத்தா எனக்கு தெரியும்.‌ அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவை தெரியும். அவர் ‘இதயத்தை திருடாதே’ படத்தை பார்த்த பிறகு.. அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது.. அதேபோல் ஓடுவது.
என பல முயற்சிகளை பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது.‌ அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன்.

நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பை பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்து பிடித்து விட்டால்.. உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை.

நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ..! என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும்
. அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது.

நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்.‌ ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.

விவேகா- தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஹிட்டான பாடல்கள்- சாய் பல்லவி திரைத்தோற்றம்- உண்மை சம்பவம் – புது ஐடியா – என பல பாசிட்டிவ்வான விசயங்கள் இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெரும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் நாக சைதன்யா பேசுகையில், ” ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவும், ஆதரவிற்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருப்பேன்.

இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டதற்காக நடிகர் கார்த்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடிப்பில் வெளியான ‘ மெய்யழகன்’ படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் அவருடைய உணர்வுபூர்வமான நடிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன்.

அப்பா என்னிடம் எப்போதும் சொல்வார். சென்னைக்கு செல்கிறாய் என்றால் சொல். கார்த்திக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறேன் என்று’. அந்த அளவிற்கு கார்த்தி எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்.

இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தொழில் ரீதியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர். நீங்களும் இங்கு வருகை தந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ ஹைதராபாத்திற்கு வருகை தந்து என்னை சந்தித்து கதை சொல்லி கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்ததற்கும் நன்றி.

கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களுடைய இயக்கத்தில் வெளியாகும் ‘ரெட்ரோ’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.‌

தண்டேல் படத்தின் தொடக்கம் என்பது, இயக்ங சந்து என்னை சந்தித்து உண்மை சம்பவத்தை ஒரு சின்ன ஐடியாவாக டாக்குமென்டரி ஸ்டைலில் சொன்னார். ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் இருந்து குஜராத்திற்கு சென்று அதன் பிறகு ஒன்றரை வருஷம் பாகிஸ்தானுக்கு சென்று திரும்பவும் வருவது.. என ஒரு பெரிய நீண்ட பயணம் இதில் இருக்கிறது. அந்த உண்மைக் கதையை கேட்டவுடன் ஒரு நடிகராக நான் ஆச்சரியமடைந்தேன்.

அதன் பிறகு ஸ்ரீகாகுளம் சென்று அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடத்தில் பழகி அவர்களுடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொண்டேன்.‌ அந்தப் பயணம் மறக்க முடியாதது . அந்த அனுபவமும் மறக்க முடியாதது.

இது போன்ற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். இதற்காக என்னை நான் மாற்றி க் கொண்டேன்.‌ இது போன்ற கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதால் இதனை உருவாக்கி இருக்கிறோம். ஸ்ரீகாக்குளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள்.

தயாரிப்பாளர்கள் பன்னி வாஸ் மற்றும் அல்லு அரவிந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூன்றாவது படமான 100% லவ் படத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் இணைந்து இருக்கிறேன். இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஒவ்வொரு லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாக அமைய வேண்டும். இதிலும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த படத்திற்கு பாடல்களுக்கு மட்டும் இசையமைக்காமல் அந்தப் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து உற்சாகப்படுத்தினார்.

சாய் பல்லவி அனைவரும் சொல்வது போல் எனக்கும் அவர் ஸ்பெஷலானவர். ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு இயக்குநரும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் உங்களைப் பற்றி பேசுவார்கள். அனைவரும் உங்களுடைய ரசிகர்கள் தான். உங்களுடன் பணியாற்றுவது இனிமையான அனுபவம். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தமிழில் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் நானும் பல கதைகளை பேசி இருக்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்.

கருணாகரனுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவருடைய பங்களிப்பு நன்றாக இருந்தது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தண்டேல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ” என்றார்.

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’

தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, ‘ஒன்ஸ்மோர்’ எனும் படத்தில் இடம்பெற்ற ”வா கண்ணம்மா..’ எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ‘ ரீல்ஸ் ‘களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஒன்ஸ்மோர் ‘ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.

‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நன்னா ” ஆகிய பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்து முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப் ‘ ஒன்ஸ்மோர் ‘ படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரின் இசையில் ‘ ஒன்ஸ்மோர் ‘ படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து திருமண வைபவத்தை கொண்டாடும் வகையில் ‘ வா கண்ணம்மா..’ என்ற பாடலை படக் குழுவினர் பொங்கல் விடுமுறை தினத்தன்று வெளியிட்டனர். இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத , இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் பின்னணி பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் – பண்பாடு – இசை- திருக்குறளுடன் தொடங்கும் பாடல் வரிகள்- இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் திரை தோன்றல்- என பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் இந்தப் பாடல் இதுவரை ஐந்தரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அத்துடன் இந்த பாடலை இளைய தலைமுறையினரின் சமூக வலைதள நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் படக்குழுவினர் இந்தப் பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸாகவும் வெளியிட்டனர். இதனால் உற்சாகமடைந்த 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதனை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினர். இதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்த பாடலுக்கான மெட்டு- பாடல் வரிகள் – இசை – நடனம் – காட்சி அமைப்பு – என அனைத்தும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருந்ததால் ‘வா கண்ணம்மா..’ சமூக வலைதளவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் உற்சாகமடைந்த இசை ரசிகர்கள் அனைவரும் தமிழில் அறிமுகமாகும் ஹேஷாம் அப்துல் வஹாப்பிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ஹாட்டின் + பூங்கொத்து இமோஜிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் – ஹேஷாம் அப்துல் வஹாப் – மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – கூட்டணியில் தயாராகி வரும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இடம்பெற்ற ‘வா கண்ணம்மா..’ எனும் பாடல் புதிய சாதனையை படைத்து வருவதால் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

OCCUCON 2025: A Milestone for Occupational Health


Chennai, January 27, 2025 –
The Tamil Nadu branch of the Indian Association of Occupational Health (IAOH) is proud to announce the 75th National Conference on Occupational Health, OCCUCON 2025, from January 29 to February 1, 2025, at the Radisson Blu GRT, Chennai. Each year, IAOH hosts this National Conference, highlighting workplace initiatives, best practices, and research from a diverse group of professionals, including doctors, safety experts, and HR representatives.
IAOH, established in 1948, serves as a national organization focused on promoting and maintaining the health and safety of workers in various industries. Originally named the Society for the Study of Industrial Medicine (SSIM), it has grown in membership to about 3,000 today, with branches across the country. IAOH is affiliated with the International Commission on Occupational Health (ICOH), the leading global scientific body in occupational health, and the Society of Occupational Medicine[SOM] in the UK. In a historic achievement, India will host the ICOH 2027 Congress in Mumbai, the first-ever in the country, further elevating its significance on the global stage.
OCCUCON will host over 450 participants, including international delegates, ICOH representatives, and experts, with the theme “Occupational Health & Wellbeing: A Key to Organizational Sustainability.” Key highlights include workshops, academic sessions, and discussions on the latest trends in workplace health. Over ninety scientific papers and posters, alongside participation from current and former office bearers of ICOH and SOM, are being featured this year.
This diamond-jubilee year, the Tamil Nadu branch has conducted Continuing Medical Education (CME) programs in Madurai which attracted occupational health physicians from across southern Tamil Nadu, encouraging new memberships for IAOH. Our branch plans to organize similar initiatives in other districts.
OCCUCON 2025 underscores IAOH’s ongoing commitment to advancing occupational health in India, serving as a platform for sharing knowledge and reinforcing the commitment to creating safe and sustainable workplaces, a priority as India navigates the complexities of its growing workforce.

Dr. Sudha S. Ramachandran Dr. S. Sarangadharan
Conference Director Conference Secretary

Financial Results for the Quarter/Nine Month ended 31 st December 2024Bank’s Global Business is at ₹12.61 lakh Cr, up by 8% YoY

. Net Profit up by 35% YoY at ₹2852 Cr in Dec’24 from ₹2119 Cr in Dec’23
. Operating Profit improved by 16% YoY to ₹4749 Cr in Dec’24 from ₹4097 Cr in Dec’23
. Net Interest Income increased by 10% YoY to ₹6415 Cr in Dec’24 from ₹5815 Cr in
Dec’23
. Fee based income grew by 9% YoY to ₹931 Cr in Dec’24 from ₹852 Cr in Dec’23
. Return on Assets (RoA) up by 28 bps to 1.39% in Dec’24 from 1.11% in Dec’23
. Return on Equity (RoE) increased by 108 bps to 21.00% in Dec’24 from 19.92% in
Dec’23
. Yield on Advances (YoA) up by 14 bps to 8.92% in Dec’24 from 8.78% in Dec’23
. Yield on Investments (YoI) increased by 32 bps to 7.12% in Dec’24 from 6.80% in
Dec’23
. Cost-to-Income Ratio reduced by 234 bps to 44.56% in Dec’24 from 46.90% in Dec’23
. Gross Advances increased by 10% YoY to ₹559199 Cr in Dec’24 from ₹509800 Cr in
Dec’23
. RAM (Retail, Agriculture & MSME) advances grew by 13% YoY to ₹334739 Cr in Dec’24
from ₹296845 Cr in Dec’23
. RAM contribution to gross domestic advances stood at 64.35%. Retail, Agri & MSME
advances grew by 16%, 13.5% and 8% YoY respectively. Home Loan (including
mortgage) grew by 12% YoY in Dec’24
. Priority sector advances as a percentage of ANBC stood at 43.85% (₹192761 Cr) in
Dec’24 as against the regulatory requirement of 40%
. Total Deposits increased by 7% YoY and reached to ₹702282 Cr in Dec’24 as against
₹654154 Cr in Dec’23. Current, Savings & CASA deposits grew by 5%, 3.5%, and 4%
YoY respectively
. Domestic CASA ratio stood at 40% as on 31 st Dec’24
.CD ratio stood at 79.63% as on 31 st Dec’24
. GNPA% decreased by 121 bps YoY to 3.26% in Dec’24 from 4.47% in Dec’23, NNPA%
reduced by 32 bps to 0.21% in Dec’24 from 0.53% in Dec’23
. Provision Coverage Ratio (PCR, including TWO) improved by 219 bps YoY to 98.09%
in Dec’24 from 95.90% in Dec’23
. Slippage Ratio improved by 50 bps to 0.78% in Dec’24 from1.28% in Dec’23
. Capital Adequacy Ratio improved by 34 bps to 15.92%. CET-I improved by 91 bps YoY
to 13.27%, Tier I Capital improved by 89 bps YoY to 13.77% in Dec’24
.Earnings Per Share (EPS) increased by 26% to ₹84.70 in Dec’24 from ₹67.12 in Dec’23

. Net Profit up by 5% QoQ to ₹2852 Cr in Dec’24 from ₹2707 Cr in Sep’24
. Return on Assets (RoA) improved by 6 bps to 1.39% in Dec’24 from 1.33% in Sep’24
. Yield on Advances (YoA) improved by 15 bps to 8.92% in Dec’24 from 8.77% in Sep’24
. NIM (Domestic) increased by 8 bps to 3.57% in Dec’24 from 3.49% in Sep’24
. GNPA decreased by 22 bps to 3.26% in Dec’24 from 3.48% in Sep’24, NNPA reduced by
6 bps to 0.21% in Dec’24 from 0.27% in Sep’24
. Slippage ratio decreased to 0.78% in Dec’24 from 1.06% in
Sep’24.

Key Highlights (Quarter ended Dec’24 over Dec’23)

Key Highlights (Quarter ended Dec’24 over Sep’24)

. Credit Cost decreased by 18 bps to
0.47% in Dec’24 from 0.65% in Sep’24

. Net Profit up by 37% YoY to ₹7962 Cr in 9MFY25 from ₹5816 Cr in 9MFY24
. Operating Profit increased by 11.5% YoY to ₹13980 Cr in 9MFY25 from ₹12535 Cr in
9MFY24
. Net Interest Income grew by 9% YoY to ₹18787 Cr in 9MFY25 from ₹17258 Cr in
9MFY24
. Net Interest Margin (NIM) Domestic stood at 3.53% in 9MFY25
. Return on Assets (RoA) improved by 27 bps to 1.31% in 9MFY25 from 1.04% in
9MFY24
. Return on Equity (RoE) increased by 137 bps to 20.62% in 9MFY25 from 19.25% in
9MFY24
. Cost-to-Income Ratio reduced by 50 bps to 44.67% in 9MFY25 from 45.17% in
9MFY24
Network:
. The Bank has 5877 domestic branches (including 3 DBUs), out of which 1987 are
Rural, 1543 are Semi-Urban, 1179 are Urban & 1168 are in Metro category. The Bank
has 3 overseas branches & 1 IBU (Gift City Branch).
 The Bank has 5224 ATMs & BNAs and 13292 number of Business Correspondents
(BCs).
Digital Banking:
. Business of ₹1,18,981 Cr has been generated through Digital Channels in 9MFY25. A
total of 117 Digital Journeys, Utilities and Processes have been launched so far.
. Number of Mobile Banking users has grown by 18% year over year, reaching 1.86 Cr.
. UPI users and Net Banking Users have seen a 24% & 9% YoY increase respectively,
reaching 2.04 Cr and 1.12 Cr respectively.
. The Credit Card users increased by 52% YoY to 2.83 lakh. The transactions in Point of
Sale (PoS) terminals has increased by 23% YoY, reaching to 35 lakh.
Awards & Accolades:
. The Bank received prestigious SKOCH Award for “Project WAVE”, an Indian Bank’s
digital transformation journey and for “SMA Collection Proclivity Predictor”- a
model built to predict the probability of default for Special Mention Accounts (SMA)
and reduce risks by outlining a targeted collection journey.
. The Bank was honoured with the “Best Public Sector Bank” award in the
organisational category and the MD & CEO of the Bank

Key Highlights (Nine Months ended Dec’24 over Dec’23)

received “CEO of the Year” award at Tamil
Nadu Leadership Awards 2024.
.The Vertical Head of CMS/SCF conferred with PT100 Leadership Award as an
“Innovator & Disruptor in Asia Pacific” at the Payments Transformers conference in
Singapore.
. In the 9 th Banking Leadership Summit 2024 of Indian Investors Federation, the Bank
received award for “Best Infrastructure & Ambience in UP”, “Best Marketing
Strategies for business in the year 2024 in UP” and runner up for “Banker of the
Year 2024”.
.In the IBA Annual Banking Technology Conference, 2024 – Special Mention under
Large Bank segment, the Bank received award for “Best Digital Sales, Payments &
Engagement”, “Best Tech Talent & Org., “Best AI and ML Adoption” and “Best FI”.
.During the 5 th Annual BFSI Technology Excellence Awards 2024, the Bank was
awarded “Best Cloud Initiative of the Year” – ET Edge recognition 2024 and “Best
Team Project in Cloud Implementation (PSB)”.
Our Focus
Our focus is to deliver value-added, innovative and tailored solutions to the customers
through omni-channel experience and with dedicated and skilled workforce. We will
focus on achieving compliant, sustainable and inclusive growth, with a clear emphasis
on customer service, CASA, MSME, and continued digital transformation.
We aim to become preferred choice of customer for catering to all financial & banking
needs.

இ லவுன்ஜ் மற்றும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் இணைந்து வழங்கும் பிரபல பாடகி சித்ரா பங்குபெறும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

சென்னை நந்தனம் ஒ ய்எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

திரையுலகில் 47 வருடங்களைக் கடந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் பாடகி சித்ரா. “சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா” பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற நிலையில், இவர் சின்னக்குயில் சித்ரா என்றே மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முறையாகத் தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் வகையில், இந்த இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்த பத்திரிக்கை சந்திப்பு நிகழ்வினில்….

E Lounge Events சார்பில் வெங்கட் பேசியதாவது…

இந்த ஆண்டில் வரும் பிப்ரவரி 8ம் தேதி சென்னை YMCA நந்தனம் மைதானத்தில், இந்த லைவ் இன் கான்சர்ட் நடக்கவுள்ளது. இது இன்னிசை நிகழ்ச்சி அல்ல, நம் அனைவருக்கும் பிடித்த சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு விழா. 47 வருடங்களைக் கடந்து, உலகளவில் நம் அனைவரையும் அசத்தி வரும் அவரைக் கொண்டாடும் வகையில், இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளோம். எந்த ஒரு பாடலையும் உடனடியாக ஸ்வரம் எழுதிப் பாடும் திறமை கொண்ட கலைஞர் சித்ரா அம்மா. அவர் இந்த தமிழ் மண்ணில் தான் தொடர்ந்து பாடி வருகிறார். அதனால் இந்த விழாவைச் சென்னையில், இங்கு நடத்துவது தான் சிறப்பாக இருக்கும். அவர் இந்த விழாவிற்கு ஒப்புக்கொண்டது எங்களுக்குப் பெருமை. இந்த நிகழ்ச்சியை நடத்த உதவிய கனரா வங்கிக்கு நன்றி. இந்த செய்தியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்குமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

கனரா வங்கி சார்பில் ஐசக் ஜானி பேசியதாவது….

சித்ரா அம்மா பெயரைச் சொன்னால் தெரியாதவர்கள் யாருமே இல்லை, இது வெறும் இசை நிகழ்ச்சி அல்ல, சித்ரா அம்மாவைக் கொண்டாடும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வை எங்களது கனரா வங்கி ஸ்பான்சர் செய்வது எங்களுக்குப் பெருமை. இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி. கனரா வங்கி சார்பில், உலகமெங்கும் உள்ள ரசிகர்களை இந்நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன்.

Noise & Grains சார்பில் மஹாவீர் பேசியதாவது….

எங்களது எல்லா நிகழ்ச்சிகளிலும், நீங்கள் எல்லோரும் எப்போதும் துணை நிற்கிறீர்கள் நன்றி. நானும் கார்த்தியும் எப்போதும் அவரை சித்ரா அம்மா என்றே அழைப்போம். அது அன்பால் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் எஸ் பி பி சார் இருந்த போது ஒரு நிகழ்வு நடந்தது, எப்போதும் ஒரு சிலர் தான் நம்மைக் கவனித்து, தட்டிக்கொடுத்து, நீ சரியாகச் செய்து விடுவாய் என ஊக்கம் தருவார்கள், அதைப் புன்னகையுடன் எஸ் பி பி சார் செய்வார். அதன்பிறகு அதைச் செய்வது சித்ரா அம்மா தான். எப்போதும் பாஸிடிவிடி தருவார். நம் தமிழக மக்கள் போல இசை நிகழ்வை ரசிப்பது யாருமில்லை. எல்லாவிதமான இசையையும் ரசிப்பார்கள், அப்பா அம்மா எமோஷனல் கனக்ட்டும் இந்த ஊரில் இருக்கிறது. என் அப்பா அம்மவை அனுப்பி வைக்க வேண்டும் எனப் பலர் இந்நிகழ்ச்சிக்கு டிக்கெட் கேட்டார்கள், அது எங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் தான். எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சித்ரா அம்மாவிற்கு நன்றி. E Lounge Events மற்றும் கனரா வங்கிக்கும் நன்றி. அனைவரும் காலத்தைத் திருப்பித் தரும், இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டாடுங்கள் நன்றி.

பாடகி சின்னக்குயில் சித்ரா பேசியதாவது…

அனைவரும் வந்தது மிகுந்த மகிழ்ச்சி. நான் இதை எதிர்பார்க்கவில்லை, இதுவரை நான் பல இசை நிகழ்ச்சிக்குச் சென்று பாடியுள்ளேன், ஆனால் இந்த நிகழ்ச்சியை என்னைக் கொண்டாடும் நிகழ்வாக ஒருங்கிணைத்துள்ளார்கள். 3 மணி நேரம், மது பாலகிருஷ்ணன், சத்ய பிரகாஷ், திஷா பிரகாஷ், ருபா ரேவதி என நான்கு பாடகர்கள் என்னுடன் இணைந்து பாடவுள்ளனர். பாப்புலரான பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடவுள்ளோம். எனக்கு இத்தனை வருடங்கள் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கும் ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.

உலகளவில் பல நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்து வழங்குவதில் புகழ்பெற்ற, ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் செஷில்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாராட்டு பெற்ற நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்திய E Lounge Events நிறுவனமும், திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள Noise & Grains நிறுவனமும் இணைந்து, கனரா வங்கி ஆதரவுடன் இந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.

‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள‌ ஒ ய் எம் சி ஏ மைதானத்தில் பிப்ரவரி 8 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் இன்ஸைடர்.இன் மற்றும் புக் மை ஷோ இணையதளங்கள் மற்றும் செயலிகளில் கிடைக்கும்.

ZHEN STUDIOS நிறுவனத்தின் முதல் படைப்பாக உருவாகியுள்ள “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது !!

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ரொமாண்டிக் திரில்லர் “தருணம்” படம், ஜனவரி 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது !!

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள “தருணம்” திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.

தேஜாவு திரில்லர் படம் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் ஒரு அருமையான காதல் கதை மூலம் மகிழ்விக்கவுள்ளார்.

வாழ்வே பல தருணங்களால் ஆனது ஆனால், ஒரு தருணம் மொத்த வாழ்க்கையையும் மாற்றும் அப்படியான ஒரு தருணத்தை, காதல் கலந்து சொல்லும் அருமையான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ்த்திரையுலகில் கால்பதித்துள்ள ZHEN STUDIOS நிறுவனம் சார்பில் புகழ் மற்றும் ஈடன், பெரும் பொருட்செலவில் இப்படத்தை உயர்தரமான படைப்பாகத் தயாரித்துள்ளனர்.

ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, உலகமெங்கும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
பின்னணி இசை – அஸ்வின் ஹேமந்த்
படத்தொகுப்பு – அருள் E சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் A, ஈடன் (ZHEN STUDIOS )
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)

“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள், ZEE5 ல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, “சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தினை, பார்வையாளர்கள் எளிதாக ரசிக்கும் வகையில், அவர்களின் உள்ளூர் மொழியில் கொண்டு வருகிறது. இயக்குநர் தீரஜ் சர்னா இயக்கத்தில், விக்ராந்த் மாஸ்ஸி, ராஷி கண்ணா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோரின் நடிப்பில், 24 ஜனவரி 2025 அன்று திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், இந்தியாவின் மிகவும் வேதனையான மற்றும் சர்ச்சைக்குரிய சோகங்களில் ஒன்றான 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை, பின் களமாகக் கொண்ட அரசியல் டிராமா திரைப்படமாகும். நீதியின் உண்மை முகத்தை, ஊடகங்களின் பார்வையை, உண்மையின் விலையை அழுத்தமாகப் பேசும், இந்தத் திரைப்படம் நாடு முழுதும் சிறப்பான பாராட்டுக்களைப் பெற்றது. குடியரசு தினத்தன்று “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ZEE5 பார்வையாளர்களுக்குத் தெலுங்கு மற்றும் தமிழில் வழங்குகிறது.

59 அப்பாவி பயணிகளின் உயிரைக் கொன்ற 2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிக்கொணரும் ஆர்வமுள்ள பத்திரிகையாளர் சமர் குமாரை (விக்ராந்த் மாஸ்ஸி) சபர்மதி ரிப்போர்ட்ஸ் படம் பின்தொடர்கிறது. சமர் ஆழமாக ஆராயும்போது, ​​உண்மையை மறைக்க ஊடக விவரிப்புகளைக் கையாளும், சக்திவாய்ந்த அரசியல் பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு ஆபத்தான சதியை அவர் கண்டுபிடிக்கிறார். அவரது கண்டுபிடிப்புகள் அவரது ஆசிரியரான மணிகா ராஜ்புரோஹித் (ரித்தி டோக்ரா) மூலம் முடக்கப்படும்போது, ​​சமரின் வாழ்க்கை அழிக்கப்பட்டு, அவர் தெளிவற்ற ஒரு நிலைக்குத் தள்ளப்படுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, நிருபர் அம்ரிதா கில் (ராஷி கண்ணா) சமரின் மறைக்கப்பட்ட அறிக்கையின் மீது ஈர்க்கப்பட்டு, உண்மையான கதையை அம்பலப்படுத்த அவருடன் இணைந்து கொள்கிறார். ஒன்றாக, ஊழல், வஞ்சகம் மற்றும் துரோகம் ஆகியவற்றின் வலையை அவிழ்க்க அவர்கள் பணியாற்றும்போது பெருகிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறார்கள், நீதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள். இந்த அதிரடியான உண்மைகளை விவரிக்கிறது “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படம்.

விக்ராந்த் மாஸ்ஸி கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” மூலம், தற்போதைய நிலைக்கு எதிரான, சங்கடமான உண்மைகளை எதிர்கொள்ளத் தூண்டும் ஒரு கதையை நாங்கள் சொல்கிறோம். இது பத்திரிகையின் சக்தியையும், எவ்வளவு இழந்தாலும் நீதிக்காக நிற்பதன் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலித்தது, ஊடக மாஃபியா மற்றும் உண்மையைப் பின்தொடர்வது பற்றிய முக்கியமான உரையாடல்களைத் தூண்டியது. இந்தக் கதை தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களை அவர்களின் உள்ளூர் மொழியில் சென்றடைவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் இது நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் ஈர்க்கும் என நம்புகிறேன்.”

நடிகை ராஷி கண்ணா கூறுகையில்..,
“அம்ரிதா கில் ஒரு உறுதியான மற்றும் அச்சமற்ற பத்திரிகையாளர், தனிப்பட்ட இழப்பைப் பொருட்படுத்தாமல் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என நினைப்பவர். இந்த பாத்திரத்தில் நடித்ததன் மூலம், அடக்குமுறை நிறைந்த உலகில் எது சரியானது என்பதற்கு ஆதரவாக நிற்க எடுக்கும் தைரியத்தை ஆராய என்னை அனுமதித்தது. நீதியை நம்பும் எவருக்கும் இது மிக முக்கியமான பாத்திரம். இப்படம் இப்போது இந்தியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கிலும் ரசிகர்களுக்குக் கிடைக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ரிதி டோக்ரா கூறுகையில்..,
“தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பார்வையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சொந்த மொழியில் கிடைக்கும். நான் குறிப்பாக ஆர்வமாக இருந்தது உண்மையைச் சுற்றி நடக்கும் நாடகம் மீதானது தான். உண்மை எப்போதும் நிலையானது வலுவானது. பரப்பப்படும் செய்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதையும், எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய நிறுவனம் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்வதும் முக்கியம். எப்போதும் ஒரு செய்தி மக்களுக்குத் தீனியாக்கப்படுகிறது.

இப்படத்தில், மாணிக்கா ராஜ்புரோஹித் தீவிரமான ஒரு வேலையைச் செய்கிறார், பல தடைகளைத் தாண்டி, மிகப்பெரிய சதி வலையின் உண்மைகளை, வெளியே கொண்டுவரப் போராடுகிறார். நடிகர்களாக இல்லாமல், உண்மையான மனிதர்களைத் திரையில் கொண்டு வருவது, எனக்கு மிகச் சுவாரஸ்யமாக இருந்தது. உற்சாகமாகவும் இருந்தது” ஒரு நடிகராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

உண்மை மற்றும் நீதியின் பின்னணியிலான அழுத்தமான இந்தக் கதையைத் தவறவிடாதீர்கள் – ZEE5 இல் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் “தி சபர்மதி ரிப்போர்ட்ஸ்” படத்தை ட்யூன் செய்யுங்கள்!