வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , ‘ஃபைவ் ஸ்டார் ‘ கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் ஜூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட ட்ரெய்லருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் இருந்து பெரும் பேராதரவு கிடைத்து வருகிறது.

‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்… அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்..படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக   வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S . லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை  A வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.  

Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது

இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்.

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!

குளோபல் ஸ்டார் ராம் சரண், நடிப்பில், கிராமிய பாணியில் உருவாகும் ஸ்போர்ட்ஸ் ஆக்சன் திரைப்படம் ‘பெத்தி’ . பர்ஸ்ட் லுக்கிலேயே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தினை, இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை, வெங்கட சதீஷ் கிலாருவின் விருத்தி சினிமாஸ் தயாரிக்க, முன்னணி பேனர்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்குகிறார்கள்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது காதாப்பத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக்கை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கம்பீரமான பார்வை, கன்னத்தில் திருத்தப்பட்ட மீசை மற்றும் உருக்கமான தோற்றத்துடன், ‘கௌர்நாயுடு’ எனும் வீரமிகுந்த கதாபாத்திரத்தில் அவர் மிரட்டும் வகையில், ஃபர்ஸ்ட் லுக் அசத்தலாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய துணை வேடங்களிலும் நடிக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார், ஆஸ்கார் விருது பெற்ற மேஸ்ட்ரோ ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார்.

ராம் சரணின் பிறந்தநாள் கொண்டாட்டமாக , மார்ச் 27, 2026 அன்று “பெத்தி” படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக், வித்தியாசமான ராம்சரண் லுக், சிவராஜ்குமார் லுக் என, “பெத்தி” படம் பற்றிய எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நடிகர்கள்: குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : புஜ்ஜி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம் : விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாரு
இசையமைப்பாளர் : AR ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர் ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா
எடிட்டர் : நவின் நூலி
நிர்வாக தயாரிப்பாளர் : V. Y.பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

MGM Healthcare Launches ‘Namma Health’ Card and Free Ambulance Service on Its Sixth Anniversary

Chennai, July 14 2025: Celebrating six years of compassionate care and medical excellence, MGM Healthcare has launched ‘ Namma Health Card , a comprehensive health card packed with six unique benefits for the public in the neighbourhood. The card also includes a free Master Health Check-up exclusively for women.

The special benefits for the cardholders are steep discounts on outpatient consultations, diagnostic tests, pharmacy bills, and premium health check packages, along with reduced room rent for non-insurance patients and immediate room upgrades for those with insurance.

As part of the anniversary initiative, the hospital also launched a free ambulance service to improve emergency access and timely care for patients living within a 10-kilometre radius.

In his comments, Dr. Prashanth Rajagopalan, Managing Director, MGM Healthcare, said, “Our sixth anniversary represents more than a timeline. It reflects our sustained commitment to delivering meaningful care. The launch of the Namma Health card and additional emergency and preventive services aligns with our belief in making healthcare more consistent and dependable for those who turn to us.”

Following the flagging off of the ambulance service, the Chief Guest Dr. Bhukya Sneha Priya, Deputy Commissioner of Police, Anna Nagar District remarked, “Initiatives such as this indicate thoughtful expansion of medical services. By integrating emergency and routine care offerings, hospitals like MGM Healthcare are reinforcing the importance of timely and continuous care.”

விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிக்கும் ‘தலைவன் தலைவி’

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவன் தலைவி’ திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், ”மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘தலைவன் தலைவி’ அற்புதமான குடும்பத் திரைப்படம். இயக்குநர் பாண்டிராஜ் ஒரு சுயம்பு. அவருடைய தனிப்பட்ட முயற்சியில் மிகப் பெரும் இயக்குநராக உருவாகி இருக்கிறார். அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான். அவர் கதை சொன்னபோது அப்பாவுக்கு பிடித்திருந்தது. எங்களுக்கும் பிடித்திருந்தது.

விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவருடைய புகழ் இன்று சீனா வரை பரவி இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் அங்கு இந்திய மதிப்பில் எண்பது கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஹாங்காங்கில் அவர் ஹாலிவுட் நடிகர் டென்செல் வாஷிங்டனுக்கு இணையாக புகழ் பெற்றிருக்கிறார்‌. அந்த அளவிற்கு அவர் ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறார். கொல்கத்தாவிலும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் ‘தமிழ் சினிமா என்றால் விஜய் சேதுபதி தான்’ என சொல்கிறார்கள். அவருடைய புகழ் எங்களுக்கு மிகவும் பொக்கிஷமாக இருந்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்றுவதும் பெருமிதமாக இருக்கிறது.

நித்யா மேனனை பற்றி குறிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவருடன் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் நடித்தாலும், அவருடைய தனி திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதும் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்.

இந்தப் படத்தில் பாடல்களை அனைத்தும் அற்புதமாக வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். புதிய புதிய ஓசைகளையும் கொடுத்திருக்கிறார். ஆதி கால தமிழர்களின் இசையை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார்.

‘தலைவன் தலைவி’ மிகப்பெரிய கேளிக்கை படமாக அமையும். ரசிகர்களும், ஊடகங்களும் இந்த படத்திற்கு பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், ”எங்கிருந்து தொடங்குவது என தெரியவில்லை. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன.

கிட்டத்தட்ட இயக்குநரை எனக்கு 2009ம் ஆண்டிலிருந்து தெரியும். ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக தேசிய விருதினை வென்ற போது நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடி இருக்கின்றோம். இப்போது இணைந்திருப்பது எப்படி இருக்கிறது என்றால்.ஒரு மிகப்பெரிய வட்டம் நிறைவடைந்தது போல் இருந்தது.
இந்த படத்தின் பணிகள் தொடங்கியது ஒரு அற்புதமான அனுபவம்.

சத்யஜோதி நிறுவனத்தை பற்றி தெரியும். ‘மூன்றாம் பிறை’ படத்தின் மூலம் தான் இவர்கள் தங்களுடைய தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடித்ததும், இணைந்து பணியாற்றியதும் எனக்கு மிகவும் சந்தோஷம் . இந்த நிறுவனத்துடன் முதன் முதலாக நான் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.

நித்யா மேனனுடன் 2020ம் ஆண்டில் ’19 (1) (ஏ) ‘ என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். அது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம். இயக்குநர் இந்துவின் வேண்டுகோளை ஏற்று, அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தேன். அப்போது நித்யா மேனன் தான் கதாநாயகி என எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் இணைந்து பணியாற்றிய போது.’வாய்ப்பு கிடைத்தால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்’ என பேசிக்கொண்டோம். ஆனால் அந்த வாய்ப்பு ‘தலைவன் தலைவி’ படத்தில் இப்படி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை.

நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது படம் பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும். அவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது. கிட்டத்தட்ட அவர் நடித்த எல்லா கதாபாத்திரமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நித்யா ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றால் அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான நடிப்பை வழங்குபவர்.

படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தோம், இதுதான் காட்சி, இதுதான் வசனம், இதுதான் நடிப்பு, இதுதான் நடனம் என்று இயல்பாக கடந்து செல்ல மாட்டார். அதை முழுமையாக உணர்ந்து அந்த கதாபாத்திரத்திற்காக என்ன செய்யலாமோ அல்லது அதனை எப்படி எல்லாம் திரையில் காண்பிக்கலாமோ அல்லது இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ இவை அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டு அதை சரியாக வழங்கிட வேண்டும் என்று மெனக்கெடும் அற்புதமான நடிகை தான் நித்யா. அவருடன் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாண்டிராஜ் பற்றி சொன்னேன். நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.
இதை ஒரு பயணத்துடன் ஒப்பிடுகிறேன். பிரயாணம் செய்து கொண்டிருப்போம். தோராயமாக 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்கிறோம் என்றால்.. அதில் ஒவ்வொரு கிலோ மீட்டரும் மனதில் தங்காது. ஏதோ ஐந்தாறு இடங்கள் நினைவில் பசுமையாய் தங்கிவிடும். எங்காவது இளைப்பாறியிருப்போம், எங்காவது உட்கார்ந்து இயற்கையை ரசித்திருப்போம், எங்காவது சாப்பிட்டிருப்போம், எதுவும் செய்யாமல் நின்று இருப்போம், மேகங்களை ரசித்திருப்போம், புகைப்படம் எடுத்திருப்போம். அந்த நினைவுகள் மட்டும் தான் அந்த பயணத்தில் கிடைத்திருக்கும். அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும்போது மீண்டும் மற்றொரு முறை பயணம் செய்யலாமா எனத் தோன்றும். அதைப் போன்று தான் அவருடன் நான் இணைந்து பணியாற்றியது. மிக அற்புதமான பயணத்தில் கிடைக்கக்கூடிய நினைவுகளை போன்றது தான் அது.

உண்மையை சொல்லப்போனால் சற்று கடினமாக இருந்தாலும், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் கடைசி நாளன்று படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டு ஓய்வாக 45 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதே, இன்னும் ஒரு வார காலம் நீடித்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு படப்பிடிப்பு முழுவதும் இனிமையான அனுபவங்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றினோம்.

இந்தத் திரைப்படத்தில் மகிழினி என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். திரைக்கதையில் ஆண் குழந்தை தான் இருந்தது. ஆனால் இயக்குநர் மகிழினியை பார்த்தவுடன் இவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என தேர்வு செய்தார். இந்தப் படத்தில் எங்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வ குழந்தை தான் மகிழினி என்று நான் நினைக்கிறேன்.

திரைக்கதையில் இயக்குநர் எழுதியதை குழந்தையான மகிழினி நடிக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஆச்சரியமும் இருந்தது. இயக்குநரிடம் நீங்கள் எழுதியதெல்லாம் திரையில் வருமா என்று கேட்டேன். அவர் வரும், நடக்கும் என்றார். அவர் இயக்கத்தில் வெளியான ‘பசங்க ‘படத்தில் ஒரு காட்சியில் குழந்தை ஒன்று அங்கு எங்கும் ஓடி அந்த காட்சியை உயிர்ப்புள்ளதாக மாற்றி இருக்கும். அந்தக் காட்சியை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்திலும் மகிழினி மற்றும் முத்துமணி ஆகிய இரு குழந்தைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தக் கதையில் இயக்குநர் என்ன என்ன நினைத்தாரோ அதை எல்லாம் அந்த குழந்தை மகிழினி அற்புதமாக வழங்கினார். இந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவரும். அந்தக் காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுடைய பங்களிப்பை நன்றாக வழங்கி இருக்கிறார்கள். இந்த படம் ஜூலை 25ம் தேதி அன்று வெளியாகிறது. இது ஒரு ஃபுல் பேக்கேஜ் ஃபேமிலி என்டர்டெய்னர். படத்தை பார்க்கும் போது அனைவரும் ரசிப்பார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை நித்யா மேனன் பேசுகையில், ”படத்தைப் பற்றி விஜய் சேதுபதி ஏராளமான விசயங்கள் பகிர்ந்து கொண்டார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே எண்ணம் தான் இருந்தது.

இந்தப் படத்தில் பணியாற்றியது என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமான அனுபவம். ஒரு படத்தில் நடிக்கும் போது நிறைய பேர் இருப்பார்கள். குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஏராளமான நடிகர்கள் நடிகைகள் இருந்தனர். தொழில்நுட்ப கலைஞர்களும் இருந்தனர். இந்தப் படத்தில் அனைவரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒரே அலைவரிசையில் இணைந்து உற்சாகமாக பணியாற்றினோம். அனைவரும் எளிமையாகவும் இருந்தனர்.

யாராவது எங்கேனும் ஒரு சிறிய பிரச்சனையை எழுப்பி இருந்தாலும்.. அது பொருத்தமாக இருந்திருக்காது. அதாவது அந்த அனுபவம் நேர்த்தியாக இருந்திருக்காது. அந்த வகையில் இந்த படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

அதே தருணத்தில் இந்த படத்தைப் பற்றி எனக்கு அதிக நம்பிக்கையும் இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது,” என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ”ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

‘தலைவன் தலைவி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் – பேரரசி.

நேரில் பார்த்ததை படமாக எடுக்க முடியாது. ஆனால் இப்படி இருந்தால். எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்விதான் இந்த கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன். எழுத எழுத அது வேறு ஒன்றாக மாற்றம் பெற்றது. அதை எழுதும் போது தான் ஆகாச வீரன் எனும் கதாபாத்திரத்தின் மதிப்பு உயர்ந்தது. ஏனென்றால் ஆகாச வீரன் சிரிக்க வைப்பான்.. அழ வைப்பான்… டார்ச்சர் செய்வான்… இவன் எந்த மாதிரியான கேரக்டர் என்று வரையறுக்க முடியாது.

பொதுவாக ஹீரோ கேரக்டர் என்றால்.. அதற்கென்று ஒரு வரையறை இருக்கும். இதில் எந்த வரையறையும் இல்லாத ஒரு கதாபாத்திரம் தான் ஆகாச வீரன். இந்த கேரக்டரை எல்லா ஹீரோக்களாலும் செய்திட இயலாது. இந்த கேரக்டரை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்திட இயலும். இதை அவரை சந்தோசப்படுத்துவதற்காக குறிப்பிடவில்லை. நீங்கள் பார்க்கும் போது இதை உணர்வீர்கள். பாராட்டுவீர்கள். இந்த கதாபாத்திரத்தை இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று நான் நம்பினேன்.

சீரியஸ் ஆகவும் மாஸாகவும் சென்று கொண்டிருக்கும் டக்கென்று அது காமெடியில் முடியும். காமெடியில் சென்று கொண்டிருக்கும் போது அது எமோஷனலாக மாறும். வண்டி ஓட்ட தெரியாமல் வண்டி ஓட்டுவார்களே..! அதைப் போன்றது தான் இந்த கதாபாத்திரம். ஆனால் ரசிக்கக்கூடிய கேரக்டராக இருக்கும். லவ் பண்ண கூடிய கேரக்டராகவும் இருக்கும். அந்த கேரக்டர் மீது வெறுப்பு வராது. இதனால் தான் இந்த கேரக்டரை விஜய் சேதுபதி ரசித்து ரசித்து செய்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்த ஒவ்வொரு விசயத்தையும் அனைவரும் ரசித்தோம்.

பேரரசியின் கதாபாத்திரமும் ஆகாச வீரனை போன்றது தான். பேரரசியின் கதாபாத்திரத்திற்கும் எந்த வரையறையும் இருக்காது. அந்தக் கதாபாத்திரமும் அப்படித்தான் அழகானவள்.. அன்பானவள்… அன்பான அம்மா -அழகான மருமகள்- நல்ல மனைவி – என்று இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்று தெரியாது. இதுபோன்ற கதாபாத்திரத்தை கையாள்வது கடினம். ஆனால் பேரரசி ஆகாச வீரனை அதிகமாக காதலிப்பார். இதுபோன்ற கதாபாத்திரத்தை நித்யா மேனனை தவிர வேறு யாராலும் ஏற்று நடித்திருக்க முடியாது.

நான் இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன். பத்து படங்களுக்கு நான் நினைத்த ஹீரோயின் கிடைத்ததில்லை. முதல் முறையாக நான் திரைக்கதையில் என்ன எழுதினேனோ..! நித்யா மேனன் தான் வேண்டுமென்று கேட்டேன். அவர் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கணவன்- மனைவி சண்டையை டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி என்று சொல்லலாம். கணவன் மனைவி சண்டை ..படம் பார்க்கும் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுக்கு டார்ச்சர் கொடுத்தேன். உண்மை தான்.
படப்பிடிப்பு நடைபெற்ற 70 நாள்களும் இப்படித்தான் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் யாரேனும் சிறிய இடையூறை ஏற்படுத்தினாலும் கோபப்படுவேன். அதற்காக இந்த தருணத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொருத்தவரை சொன்ன தேதியில்.. சொன்ன பட்ஜெட்டில்.. படத்தை நிறைவு செய்து தர வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது.

அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பை 75 நாட்களில் நிறைவு செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்ற தொடங்கினோம். 72 நாட்களில் நிறைவு செய்தோம். படத்தில் பணியாற்றிய அனைவரும் படப்பிடிப்பு அதற்குள் நிறைவடைந்து விட்டதே.. ! இன்னும் சில நாட்கள் நீடிக்காதா..? என வருத்தமடைந்தனர். இதே போன்றதொரு அனுபவம் எனக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போதும் ஏற்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்தப் படத்தை விட அதிகமாக அதே போன்றதொரு அனுபவம் கிடைத்தது.

படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி பரோட்டாவை தயாரிப்பார். சாக்லேட் பரோட்டா… வாட்டர்மெலன் பரோட்டா.. என வகை வகையாக கண்டுபிடித்து தயாரிப்பார். அதுவும் சுவையாக தான் இருக்கும்.

படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றினோம். முதல்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ‘பசங்க 2’ படத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அப்போது சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தில் அவர் ஐந்து பாடல்களை வழங்கியிருக்கிறார். சிறந்த ஆல்பமாக இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக பாடலாசிரியர் கார்த்திக் நேதா எழுதிய பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதி இடம்பெற்ற ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..’ என்ற அப்பா பற்றிய பாடல் எப்படி பெரிய வெற்றியை பெற்று இன்றும் அனைவரது நினைவில் நீங்காமல் இருக்கிறதோ… அதே போன்று இந்தப் படத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரிவை பற்றிய பாடலும் ஹிட்டாகும். இந்தப் பாடலுக்காக சந்தோஷ் நாராயணன் மெட்டு அமைக்கும் போது எனக்கு பிடித்திருந்தது. அதனை கார்த்திக் நேதா பாடலாக எழுதும் போதும் எனக்கு பிடித்திருந்தது. அந்தப் பாடலை கேட்டபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. இந்தப் பாடலை தொகுப்பதற்காக எடிட்டருக்கு அனுப்பினேன். அவரும் இந்த பாடலை கேட்டு அழுதார். இந்தப் பாடலை காட்சி மொழியாக நீங்கள் பார்க்கும் போது.. உண்மையில் நீங்கள் பிரிவை பற்றி உணர்வீர்கள்.

இந்த திரைப்படத்தில் விவாகரத்தை பற்றி பேசி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏன்? என்ற ஒரு கேள்விதான் இப்படத்தின் கதை. இந்தப் படம் வெளியான பிறகு விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் பலரும் யோசிப்பார்கள்.

‘கடைக்குட்டி சிங்கம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ ஆகிய படங்களை பார்த்த பிறகு நிறைய அண்ணன்- தங்கைகளும் தங்களிடமிருந்த விரோதத்தை மறந்து ஒன்றிணைந்தாக என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்தப் படம் வெளியான பிறகு கணவன் மனைவி விவாகரத்து குறித்து ஏதேனும் முடிவு செய்திருந்தால்.. அதற்கு செல்ல வேண்டுமா? என யோசிப்பார்கள். அந்த யோசனையை இந்த படம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

*

MRS&MR திரைவிமர்சனம்

வனிதா விஜயகுமார் கதை திரைக்கதை வசனத்தில் ராபர்ட் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் மிசஸ் அண்ட் மிஸ்டர்.

தாய்லாந்தில் பேக்கரி கடை வைத்திருக்கும் வனிதா ராபர்ட் தம்பதியினர் திருமணம் ஆகி 20 வருடங்கள் கழித்து தங்களது 40 வது வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார்கள். இதற்கு ராபர்ட் ஒத்துக்கொள்ள வில்லை ,ஆனால் வனிதா வம்படியாக எனக்கு குழந்தை வேண்டும் என்று கேட்கிறார். இந்த சூழ்நிலையில் ஒரு நாள் வனிதா கர்ப்பமாக இருப்பது ராபர்ட்க்கு தெரிய வர ராபர்ட் கோபித்துக் கொண்டு வனிதாவை தரம் தாழ்த்தி பேசுகிறார். இதனால் வனிதா மனதளவில் பாதிக்கப்பட்டு தன் தாயிடமே வந்து விடுகிறார்.

அங்கிருந்து திடீரென கிளம்பி தங்களது பூர்வீகமான சித்துருக்கு வந்து அங்கு அவருக்கு தனது மாமாவான ஸ்ரீமனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அவ்வாறு நடக்கும் பொழுது அங்கு அவர்களை தேடி வரும் ராபர்ட் நான் ஏன் அப்படி பேசினேன் அதற்கு என்ன காரணம் என்று கூறுகிறார். அதைக் கேட்கும் ஸ்ரீமன் ராபர்ட் இடம் இதுதான் இந்த வார்த்தைக்காக தான் நாங்கள் இவ்வளவு நாள் காத்திருந்தோம் இதை நீ தாய்லாந்தில் சொல்லி இருந்தால் எங்களுக்கு டிக்கெட் செலவு மிச்சம் .நாங்கள் சித்தூருக்கு வந்திருக்க மாட்டோம் என்று கூற,

மருத்துவமனையில் வனிதாவிற்கு குழந்தை பிறக்கிறது, குழந்தையும் வனிதாவும் இறந்துவிட்டார்கள் என்று சொல்ல அந்த குழந்தை வனிதாவின் மேல் போடுகிறார்கள் திடீரென நின்று போன இதயம் துடிக்க ஆரம்பித்து மருத்துவமனையில் உள்ள மிஷினில் நேராக ஓடிய கோடு குறிக்கும் நடக்குமாக ஓடி அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று காட்டுகிறது.
இப்படியாக இந்த படம் முடிகிறது கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாமே வந்து நம்ம வனிதா விஜயகுமார் தான்.
இந்தப் படத்தில் வனிதாவை பாராட்ட வேண்டியது என்னவென்றால் தன்னுடைய நண்பர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் அவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது எப்சி முடிந்து போன வண்டியை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஏலத்தில் எடுத்து பெயிண்ட் அடித்து ஊரில் ஓட்ட விடுவது போல் எல்லாம் ரிட்டையர்டு பார்ட்டிகளாக கொண்டு வந்து நடிக்க வைத்திருக்கிறார்.


ஏன் வனிதா உனக்கு இந்த வேலை உனது வயதுக்கு ஏற்றவாறு இந்த படத்தில் நடித்திருக்கலாம் ,இந்த வயதில் உனக்கு இந்த கிளாமர் தேவையா உனக்கு வயது வந்த ஒரு பெண் இருக்கிறது அதை மனதில் வைத்தாவது இந்த படத்தை ஒரு கண்ணியமாக எடுத்திருக்கலாம் .ராபர்ட் அவரும் மிகவும் பல்க்காக இருக்கிறார் எதற்கு டபுள் மீனிங் பேசிக்கொண்டு,

ஏன் இந்த படம் என்றே தோன்றுகிறது நிச்சயம் இந்த படம் பார்த்து விட்டு வந்து எங்களுக்கே ஒரு நிமிடம் யாராவது எங்களை தவறாக பார்த்து விடுவார்கள் என்ற தியேட்டர் வாசலில் தான் தோன்றுகிறது அந்த மாதிரியான ஒரே அடல்ட் கன்டென்ட் .

இதையெல்லாம் சரி செய்து வனிதா படம் எடுத்திருந்தால் நிச்சயம் ஒரு நல்ல கதையாக தான் வந்திருக்கும்

Vizhinjam Port – India’s Gateway to Maritime Supremacy

In May 2025, India marked a monumental chapter in its maritime journey with the dedication of the Vizhinjam International Seaport in Kerala to the Nation. Designed to transform India’s position in global trade, the port has already started rewriting the narrative of South Asia’s shipping economy. Since the commencement of trial operations in July 2024, Vizhinjam has welcomed more than 380 vessels, including Container Mother Ships of global scale. The Port has handled over 8 lakh TEUs (twenty-foot equivalent units), setting a powerful precedent before its formal dedication of the Port to the Nation by Hon’ble Prime Minister Shri. Narendra Modi. Notably, the World’s largest Container Vessel, MSC Irina, with a capacity of 24,346 TEUs, recently docked here symbolizing the port’s readiness for ultra-large container vessels (ULCVs).

Strategic Strengths

The significance of Vizhinjam lies in its geographic and natural advantages. Located just 10 nautical miles from the East-West and Far East – Middle East Asia International Shipping Routes, the port enjoys a natural depth of up to 20 meters making it the deepest Port in India. This allows it to handle ULCVs without continual dredging, ensuring lower maintenance costs and minimal environmental disruption. Vizhinjam is also the first automated port in India, equipped with state-of-the-art automated ship-to-shore cranes, automated yard cranes, and an AI-powered Vessel Traffic Management System (VTMS) indigenously developed in collaboration with IIT Madras.

India’s Maritime Future

India currently transships about 5 – 6 million TEUs in an year, of which about 75% are transshipped through the foreign ports like Colombo, Dubai, and Singapore. Vizhinjam is the solution for the Country’s need for a domestic alternative for transshipment. Its first phase is expected to handle up to 1.5 million TEUs annually, with capacity projected to rise to 4.5 million TEUs after subsequent expansions. This reduces dependency on foreign ports, boosts revenue retention, and secures strategic autonomy.

Moreover, the port is a critical component of the PM Gati Shakti initiative and the India-Middle East-Europe Corridor (IMEC), aimed at enhancing logistics and global trade connectivity. Vizhinjam’s development supports thousands of direct and indirect jobs and fosters local industries, tourism, and services in Kerala.

Challenging Global Titans

Vizhinjam is India’s answer to regional transshipment hubs like Colombo, Singapore, Dubai etc. With a comparable draft and automation infrastructure, it can rival these ports in efficiency and ship-handling capability. The proximity to major sea routes reduces sailing time, and handling charges are significantly lower-saving an estimated $200–300 per container.

Already, major global liners like MSC have integrated Vizhinjam into their Jade and Dragon service routes, traditionally dominated by foreign ports. This underscores its growing appeal in international shipping circles.

Sustainability and Innovation

The Vizhinjam International Seaport integrates green practices such as automated logistics, minimal carbon emissions, and efficient waste management. Its sustainable infrastructure offers a model for future port development.

Ten Key Highlights

  1. First-of-its-kind in India: Deepwater, Automated Container Transshipment Port with a natural depth of up to 20m.
  2. Rapid cargo capacity: Annual Capacity of 1.5 million TEUs/year initially, scalable to over 4.5 million TEUs.
  3. Shortest detour: Only 10 nautical miles off international East-West and Far East – Middle East Asia International Shipping routes.
  4. Cutting-edge tech: Equipped with 8 nos. of Semi-automated ship-to-shore Cranes, 24 nos. of fully automated Yard Cranes and VTMS indigenously developed in collaboration with IIT Madras.
  5. Job creation: Over 600 direct jobs and over 5,000 indirect jobs.
  6. Integrated connectivity: Linked to NH-66 and planned 10.76 Km long railway line consisting of 9 km long underground tunnel.
  7. Green port: Minimal dredging, lower emissions, and intelligent logistics systems.
  8. Global recognition: Handled MSC Irina, the world’s largest container ship.
  9. Terminal Automation managed by NAVIS N4, ABB and CAMCO Automation Systems
  10. Capacity Augmentation: Expansion of the Container Berth by an additional 1,200 m, Plans for 1,220-meter multi-purpose Berth capable of handling Coastal Vessels as well as Cruise Vessels and 250 m liquid cargo berth.

Historical Legacy Meets Modern Power

Vizhinjam has historical roots tracing back to the 2nd Century BCE under the Ay dynasty, once a bustling port for the spice trade. Today, it returns to prominence as India’s maritime gateway. The project is a collaboration between the Adani Group and the Kerala Government under a Public-Private Partnership (PPP) on a Build-Own-Operate-Transfer (BOOT) model.

Engineering Marvel

A breakwater stretching 2,960 meters—India’s deepest—protects the port from high seas, enabling uninterrupted operation. An 800 – meter long Container Berth supports simultaneous berthing of mega-vessels. Future expansion includes the extension of the container berth by 1,200 m, extension of Breakwater by 920 m, 1220 m multipurpose Berth, bunkering facilities, enhanced warehousing, and inland connectivity upgrades.

Building a Maritime Powerhouse

Vizhinjam is not merely a port—it is the cornerstone of India’s ambition to emerge as a dominant maritime nation. Its ability to accommodate ULCVs, reduce foreign dependence, secure strategic routes, and champion green infrastructure makes it an exemplar of India’s infrastructural renaissance.

In the next decade, as India aspires to become a $10 trillion economy, ports like Vizhinjam will anchor that growth. It will empower trade, support diplomacy through connectivity, and turn Kerala into a logistics and tourism hotspot.

In every sense, Vizhinjam isn’t just a port—it’s a symbol of India’s maritime awakening and strategic foresight.

Tata Motors Group global wholesales at 2,99,664 in Q1 FY26

Chennai, July 8, 2025: The Tata Motors Group global wholesales in Q1 FY26, including Jaguar Land Rover** were at 2,99,664 nos., lower by 9%, as compared to Q1 FY25.

Global wholesales of all Tata Motors’ commercial vehicles and Tata Daewoo range in Q1 FY26 were at 87,569 nos., lower by 6%, over Q1 FY25.

Global wholesales of Tata Motors passenger vehicles* in Q1 FY26 were at 1,24,809 nos., lower by 10% as compared to Q1 FY25.

Global wholesales for Jaguar Land Rover** were 87,286 vehicles, lower by 11% as compared to Q1 FY25. Jaguar wholesales for the quarter were 2,339 vehicles, while Land Rover wholesales for the quarter were 84,947 vehicles.

*Tata Motors passenger vehicles includes sales of electric vehicles
**JLR number does not include CJLR volumes (CJLR – It is a JV between JLR and Chery Automobiles)

வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரடக்சன்ஸின் “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம், உண்மையிலேயே தனித்துவமான சினிமா காட்சி அனுபவத்தைத் தரத் தயாராக உள்ளது. சக்திவாய்ந்த கதை சொல்லல் மற்றும் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி வரும் மஹாவதர் சினிமாடிக் யுனிவர்ஸிலிருந்து, மஹாவதர் நரசிம்மா படத்தின் அதிரடியான டிரெய்லரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்தப்படத்தின் கதை, இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விஷ்ணுவின் தீவிர சீடரான பிரஹலாதனைச் சுற்றி இப்படத்தின் கதை பின்னப்பட்டுள்ளது, அவர் தனது நாத்திக தந்தை இரண்யகசிபுவின் எதிர்ப்பை மீறி விஷ்ணுவை வணங்குகிறார், இறைவன் பிரம்மாவிடமிருந்து அமரத்துவம் பெற்ற இரண்யகசிபுவை அழிக்க, பகவான் விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்மராக அவதரிக்கிறார். விஷ்ணுவின் அவதாரமான மகாவதார நரசிம்மரின் பிறப்புடன் கூடிய நம்பிக்கையின் கர்ஜனையை, இந்த டிரெய்லர் காட்டுகிறது.

பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடனும், அற்புதமான பின்னணி இசையுடனும், இந்த டிரெய்லர் உண்மையிலேயே அற்புதமாக உள்ளது. இந்திய வரலாற்றிலிருந்து ஒரு இதிகாசத்தின் கதையை, இவ்வளவு அற்புதமாக இதற்கு முன்பு திரையில் பார்த்ததில்லை. சினிமா உச்சத்தை எட்டிய இடம் இதுதான்.

தயாரிப்பாளர் ஷில்பா தவான் கூறியதாவது.., “கர்ஜிக்க வேண்டிய நேரம் இது! 5 ஆண்டுகளின் இடைவிடாத உழைப்புக்குப் பிறகு, ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ வராஹரின் காவியக் கதையை, உலகிற்கு வெளிப்படுத்த நாங்கள் இறுதியாகத் தயாராகிவிட்டோம்! ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு இதயத்துடிப்பும் இந்த தெய்வீகக் கதையை உயிர்ப்பித்துள்ளன. உங்களை வியக்கை வைக்கும், தலைசிறந்த படைப்பிற்காக உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்! நரசிம்மரின் கர்ஜனை உங்களை நோக்கி வருகிறது… அது எல்லாவற்றையும் மாற்றப் போகிறது!”.

இயக்குநர் அஷ்வின் குமார் கூறியதாவது…, “இறுதியாக மகாவதார் சினிமா பிரபஞ்சத்தின் முதல் அனிமேஷன் திரைப்படத்தின் டிரெய்லரை அவரது அருள் நிறைந்த இந்திரேஷ்ஜி மகாராஜ் புனித பூமியான பிருந்தாவனத்தில் வெளியிட்டார். தெய்வீக பயணத்தைத் தொடங்க என்ன ஒரு அற்புதமான வழி. க்ளீம் புரடக்சன்ஸின் தொலைநோக்குப் படைப்பாக, திரை மூலம் பாரதத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் ஒரு கனவு, பார்வையாளர்களுக்கான புதிய யுக அனுபவமாக உயிர் பெற்றுள்ளது.”

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மற்றும் க்ளீம் புரடக்சன்ஸ் இந்த லட்சிய அனிமேஷன் திரைப்பட வரிசையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டன, இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கும் மற்றும் விஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை இப்படங்கள் விவரிக்கவுள்ளது. பட வரிசை மஹாவதார் நரசிம்மா (2025), மஹாவதார் பரசுராம் (2027), மஹாவதார் ரகுநந்தன் (2029), மஹாவதார் கோகுலானந்தா (2033), மஹாவதார் கல்கி பகுதி 1 (2035), மற்றும் மஹாவதார் கல்கி பகுதி 2 (2037).

மஹாவதார் நரசிம்மா திரைப்படத்தை அஷ்வின் குமார் இயக்கியுள்ளார். ஷில்பா தவான், குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் க்ளீம் புரடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். இந்நிறுவனத்துடன் இணைந்து ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் இத்திரைப்படம், பல்வேறு பொழுதுபோக்கு தளங்களில் ஒரு சினிமா அற்புதத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் ஒப்பிடமுடியாத காட்சி பிரமாண்டம், கலாச்சார செழுமை, சினிமா சிறப்பு மற்றும் கதை சொல்லும் ஆழம் ஆகியவற்றுடன், இந்த திரைப்படம் 3D யில், ஐந்து இந்திய மொழிகளில், வரும் ஜூலை 25, 2025 அன்று வெளியாகிறது.

ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லர் …..

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை 18, 2025 அன்று முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன் கலக்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.