முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர்
‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.
பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த அதிரடி திரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழின் முன்னணி இயக்குநர் மிஷ்கின், கதிர், பார்த் திவாரி மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை, கபாலி, KGF, கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்–இந்தியா படங்களில் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். ‘RDX’ படத்தின் பிரமாண்டமான ஆக்சன் வெற்றிக்கு பிறகு, நஹாஸ் மற்றும் அன்பறிவு கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தொழில் நுட்ப குழு விபரம்
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித் இசை – ஜேக்ஸ் பெஜாய் படத்தொகுப்பு – சமன் சக்கோ தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சாலிசேரி ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர ஆடை – மாஷர் ஹம்சா புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன் இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர், பாடல் வரிகள் – மனு மஞ்சித் , விநாயக் சசிகுமார் VFX – . தௌஃபீக் (எக்வொயிட்) (Taufeeq – Eggwhite) போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட் சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத் ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே மக்கள் தொடர்பு – யுவராஜ்
யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்றுடன் நிறைவு பெற்றது.
ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் மூன்று வெவ்வேறு கதைகள் தான், இப்படத்தின் மையம். வாழ்வின் வினோதங்களையும் அன்பையும் பேசும் படைப்பாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் அம்சங்களுடன், ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன், இப்படத்தை எழுதி இயக்குவதுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதைகளில் ஒரு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
தேசிய விருது பெற்ற எம் எஸ் பாஸ்கர் முக்கியமான பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்ற போட்டியாளரில் ஒருவரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் அருள்தாஸ், கதிரவன் பாலு, அம்மு சாய், மோனிகா சந்தோஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா, ரஞ்சித் வேலாயுதன், வெற்றிவேல் ராஜா, திண்டுக்கல் அலெக்ஸ், உறியடி ஷங்கர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களாக பேபி தனுஷ்கா, இயக்குநர் கே பி ஜெகனின் மகன் மாஸ்டர் சபரிஷ், ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் , திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டணம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. சென்னை ஏ ஆர் எஸ் கார்டனில் கிளை சிறைச்சாலை செட் அமைத்து, படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் மணலிபுதூர், சென்னை மேற்கு மாம்பலம், திருவேற்காடு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.
மாயாண்டி குடும்பத்தார் என்ற காலத்தால் அழியாத சிறந்த படத்தை தயாரித்த யுனைடெட் நிறுவனம், தனது இரண்டாவது படைப்பாக இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கவுள்ளது. படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் – யுனைடெட் ஆர்ட்ஸ் தயாரிப்பு – எஸ். கே. செல்வகுமார் B. E., எழுத்து & இயக்கம் – கே. பி. ஜெகன் ஒளிப்பதிவு (DOP) – சுகசெல்வம் இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா படத்தொகுப்பு – மணிகண்டன் சிவகுமார் கலை இயக்கம் – வீரசமர். பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா, திரை வண்ணன், சக்தி (USA) நடன அமைப்பாளர் – ரிஷி உடை வடிவமைப்பாளர் – கே. நடராஜ் தயாரிப்பு நிர்வாகி – பாஸ்கர் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் – ராமதாஸ் நிர்வாக தயாரிப்பாளர் – சாமுவேல் சிவராஜ் மக்கள் தொடர்பு – யுவராஜ்
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தொடர்ந்து அடங்காத ப்ளாக்பஸ்டர் வெற்றிப்பாய்ச்சலுடன், மீண்டும் பாக்ஸ்ஆஃபிஸை அதிரவைக்க தயாராக உள்ளார். ‘வீரசிம்ஹாரெட்டி’ மூலம் வசூல் சாதனைகளை புரட்டி போட்ட பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி கூட்டணி, இப்போது இன்னும் பிரம்மாண்டமான வரலாற்று களத்தில் மீண்டும் இணைகிறது.
இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
அழகு நாயகி நயன்தாரா, பாலகிருஷ்ணாவின் ஜோடியாக இப்படத்தில் இணைந்துள்ளார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ‘ஸ்ரீ ராம ராஜ்யம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு பாலகிருஷ்ணா – நயன்தாரா இணையும் நான்காவது படம் இதுவாகும்.
ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பூஜை விழாவினைத் தொடர்ந்து, இப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
ஆந்திர பிரதேச அமைச்சர்கள் அனகனி சத்ய பிரசாத் மற்றும் கோட்டிப்பட்டி ரவி குமார் திரைக்கதை நகலை தயாரிப்பாளர்களிடம் வழங்கினர். பாலகிருஷ்ணாவுடன் பல வெற்றி படங்களை இணைந்து வழங்கிய இயக்குநர் B. கோபால் க்ளாப் அடிக்க, பாலகிருஷ்ணாவின் மகள் தேஜஸ்வினி கேமராவை ஸ்விட்ச் ஆன் செய்தார். முதல் ஷாட்டை போயபாடி ஶ்ரீனு, பாபி, புச்சி பாபு ஆகியோர் இணைந்து இயக்கினர். பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்துகொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
மகத்தான மன்னனின் எழுச்சியை போர்க்களமே வணங்கும் தருணம் இது. வரலாற்றை குலுக்கும் இந்த கர்ஜனை புதிய அத்தியாயத்தை எழுத வருகிறது.
மாஸ் எலிவேஷன் மற்றும் அதிரடி கதைக் கட்டமைப்பில் பிரசித்தமான கோபிசந்த் மலினேனி, முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்குகிறார். நந்தமூரி பாலகிருஷ்ணாவை ரசிகர்கள் இதுவரை காணாத ஒரு புதிய, ஆச்சரியமான அவதாரத்தில் காட்சிப்படுத்தும் விதமாக, இந்தக் கதை உருவாகிறது.
சிறப்பு போஸ்டரில், நீண்ட முடி, பூரண தாடி, வாள் மற்றும் நங்கூரத்தைத் தாங்கி, அரச கம்பீரத்துடன் நிற்கும் அதிபதியாக பாலகிருஷ்ணா மிளிருகிறார்.
வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்து, பிரம்மாண்ட காட்சிகளுடன் ஒரு எபிக் அனுபவத்தை, வழங்கப் போகிறது இந்த படம்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
நடிகர்கள்: நந்தமூரி பாலகிருஷ்ணா நயன்தாரா
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுத்து, இயக்கம்:கோபிசந்த் மலினேனி தயாரிப்பு: வெங்கட சதீஷ் கிலாரு வழங்குபவர்: விருத்தி சினிமாஸ் மக்கள் தொடர்பு – யுவராஜ்
Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..,
நடிகர், ரேடியோ ஜாக்கி, பிளேடு சங்கர் பேசியதாவது.., இது நமது படம், என் நண்பன் படம், கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் என்று ஆரம்பித்தது தான் இந்தப்படம். தமிழ்படம், ரோமியோ ஜூலியட் மாநாடு, கோட், என பல படங்களில் அவர் எழுத்து இருக்கிறது, அதைப் பற்றிச் சொல்லிக்கொள்ளவே மாட்டார். அத்தனை தன்னடக்கம். அவர் நிறைய யோசிப்பார். நாம் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார், ஆனால் அவருக்கு தேவையானதைச் சரியாக எடுத்துக்கொள்வார். இப்படத்தில் நான் கீர்த்தி சுரேஷின் அக்கா கணவராக நடித்துள்ளேன். அவர் சாதாரணமாக இந்த ஸ்டேஜுக்கு வரவில்லை. ஒரு காட்சிக்கு இப்படி பண்ணலாமா ?, அப்படி பண்ணலாமா?, என உழைத்துக்கொண்டே இருப்பார். ராதிகா மேடமிடம் ஒரு காட்சியில் செம்மையாக அடி வாங்கியிருக்கிறேன். இது ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
நடிகர் அகஸ்டின் பேசியதாவது.., மேடையில் இருப்பது இது தான் முதல் முறை. The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. இந்தப்படம் செம்ம ஜாலியாக எடுத்தார்கள், நானும் செண்ட்ராயன் அண்ணாவும் நடிக்கும் போது, டைரக்டர் பயங்கர டென்ஷனாக இருப்பார். ஆனால் போகப் போக ஈஸியாகிவிட்டார். கீர்த்தி மேடம் எல்லோரையும் சரிசமமாகப் பார்ப்பார், அது எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து உழைத்து ஒரு நல்ல படத்தைத் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் சஞ்சீவ் பேசியதாவது.., எல்லோருக்கும் நன்றி. இந்தப்படத்தில் டேனி என ஒரு சுவாரஸ்யமான கதாப்பாத்திரம் செய்துள்ளேன். கீர்த்தி சுரேஷ் ரொம்ப ஜாலியாக எங்களுடன் வேலை பார்த்தார். இப்படம் The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நல்ல வெற்றியைத் தரும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் கதிரவன் பேசியதாவது.., இந்த படத்தின் ஒன் லைனை சந்துரு சார் சொன்ன போதே, இந்தக்கதை எப்படிச் செய்தாலும் வெற்றி பெறும் எனச் சொன்னேன். அவருடன் நான் நிறைய வேலைபார்த்துள்ளேன். இப்படத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம், கீர்த்தி மேடம், சந்துரு அனைவருக்கும் நன்றி. நான் என் திரை வாழ்க்கையில் நிறைய பேரைப் பார்த்துள்ளேன், ஆனால் கீர்த்தி மேடம் நிறைய ஸ்பேஸ் தந்தார். இந்தப்படம் ஒரு ரோலர்கோஸ்டர் ரைட் மாதிரி இருக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகை அக்ஷிதா அஜித் பேசியதாவது.., ரிவால்வர் ரீட்டா என் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான மைல்ஸ்டோன். இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்கள் ஜகதீஷ் பழனிச்சாமி, சுதன் சுந்தரம், இயக்குநர் சந்துரு சார் அனைவருக்கும் நன்றி. கீர்த்தி மேடம் மிகவும் ஃபர்ண்ட்லியாக, இயல்பாக பழகினார். என்னுடன் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் செண்ட்ராயன் பேசியதாவது.., ரிவால்வர் ரீட்டா ஒரு பிரம்மாண்டமான படம், மிக அழகாகப் படத்தை இயக்குநர் எடுத்துள்ளார். நவம்பர் 28 ஆம் தேதி படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள். படத்தில் அனைவரும் கடினமான உழைப்பைத் தந்தார்கள். கீர்த்தி மேடம் மிக இயல்பாக பழகினார். இந்தப்படத்தில் சூப்பராக கார் ஓட்டியுள்ளார். அந்த காட்சிகள் சூப்பராக வந்துள்ளது. எனக்கு தா குமார் என ஒரு கதாப்பாத்திரம், படம் சூப்பராக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு நல்ல ரோல் தந்த இயக்குநருக்கு நன்றி.
இயக்குநர் JK சந்துரு பேசியதாவது.., The Route ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை நம்பி, பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்கள். கீர்த்தி மேடமுக்கு நன்றி. கதையில் கீர்த்தி மேடம் அளவுக்கு ராதிகா மேடம் மற்றும் பல கேரக்டருக்கு சமமான ரோல் இருந்தது, ஆனால் அவர் எனக்குக் கதை பிடித்துள்ளது எனச் சொன்னார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் தினேஷ் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஷான் ரோல்டன் அவருடைய பெஸ்ட் தந்துள்ளார். திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் நீண்ட கால நண்பர் சூப்பராக செய்துள்ளார். எடிட்டர் பிரவீன் சார் அவர்களின் எடிட்டிங் இந்த படத்தில் பேசப்படும். செய்து தந்தார். கீர்த்தி மேடம் படத்திற்காக அவ்வளவு பெரும் ஒத்துழைப்பு தந்தார், அவருக்கு நன்றி. ராதிகா மேடம் அம்மாவாக நடித்துள்ளார். அவருடைய ரோல் சூப்பராக இருக்கும். சுனில் சார், அஜய் கோஷ் சார் நல்ல ரோல் செய்துள்ளார்கள். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள் எல்லோருமே நன்றாக நடித்துள்ளனர். இது ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்தோடு ஜாலியாக பார்க்கலாம். அனைவருக்கும் நன்றி.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது.., ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் சந்துரு வெங்கட் பிரபு சார் கூட நிறைய வேலை பார்த்துள்ளார். அவர் முதல் நாள் கதை சொன்னபோதே பயங்கரமாகச் சிரித்து மகிழ்ந்தேன். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அவர் ரீட்டாவாக என்னைத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி. The Route நிறுவனத்தின் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சுதன் சுந்தரம் இருவருக்கும் நன்றி. அவர்கள் தான் இந்த புராஜக்டை டிசைன் செய்தார்கள். ஒளிப்பதிவாளர் தினேஷ் உடன் முன்பே வேலை பார்த்துள்ளேன், அவர் இப்படத்தை அழகாக ஷீட் செய்துள்ளார். ஷான் நல்ல இசை தந்துள்ளார், அவருடன் மீண்டும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கலை இயக்குநர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி. ராதிகா மேடமுடன் முதல்முறையாக நடிக்கிறேன், அவர் தயாரிப்பில் தான் நான் தமிழில் அறிமுகமானேன் , அவருடன் நடித்த காட்சிகளை எல்லோரும் ரசிப்பீர்கள். என் உடன் நடித்த மற்ற அனைவரும் மிக நன்றாக நடித்துள்ளனர். கதிர் சார், செண்ட்ராயன் சார், அகஸ்டின் சார் காட்சிகள் சூப்பராக இருக்கும். ரிவால்வர் ரீட்டா ஒரு டார்க் காமெடி படம், எல்லோரும் கண்டிப்பாக ரசிப்பீர்கள் நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசியுங்கள் நன்றி.
சென்னை 28, மாநாடு, பார்டி உட்பட பல வெற்றிப்படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றிய இயக்குநர் சந்துரு “நவீன சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்குப் பிறகு உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இப்படம் The Route நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும் அனைத்து ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், ராதிகா சரத்குமார், சூப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், கல்யாண் மாஸ்டர், சுரேஷ் சக்ரவர்த்தி, கதிரவன், செண்ட்ராயன், அகஸ்டின், பிளேடு சங்கர், ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், குஹாசினி, காயத்ரி ஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழு
இயக்கம் – JK சந்துரு ஒளிப்பதிவாளர் – தினேஷ் கிருஷ்ணன் B எடிட்டிங் – பிரவீன் KL கலை இயக்கம் – MKT ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன் நிர்வாக தயாரிப்பாளர் – வீர சங்கர் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஐஸ்வர்யா சுரேஷ் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம் & ஜெகதீஷ் பழனிசாமி தயாரிப்பு நிறுவனம் – The Route & Passion Studios மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
Chennai, November 25, 2025: In a first for Tamil Nadu, SRM Prime Hospital has successfully used a bovine pericardial patch to close a neovaginal fistula – an abnormal connection between the rectum and neovagina – that was causing the passage of flatus and faecal matter through the neovagina of a 22-year-old transgender youth who had recently undergone male-to-female gender-affirming surgery elsewhere. The minimally invasive, endoscopic day-care procedure helped avert the need for major open-abdominal surgery for the patient from a poor economic background.
This procedure was performed by Dr. Arulprakash S., Clinical Lead and Senior Consultant, and Dr. Tarun J. George, Senior Consultant, Medical Gastroenterology and Hepatology, under the guidance of Dr. C. Paul Dilip Kumar, Director–Medical Services, SRM Prime Hospital.
In his comments, Dr. Arulprakash said, “The patient had undergone gender-affirming surgery at a hospital in another city a few months ago. Soon after the procedure, she developed a recto-neovaginal fistula, an abnormal connection between the rectum, the last part of the large intestine, and the neovagina created during surgery. As a result, flatus and faecal matter began passing through the neovagina. Such fistulas in transgender patients are rare complications of gender-affirming surgery, occurring in only about 1% of cases. An endoscopic procedure was attempted at the same hospital; a clip was used. But the relief was only temporary, and the condition recurred after the clip placement. This was a rare and challenging clinical situation.”
He added: “At that stage, an open abdominal surgery was considered the only option, which would have meant higher costs and a prolonged hospital stay. However, when she came to us, we opted for an endoscopic closure of the fistula using a novel bovine pericardial patch – the first such procedure in the state. Using bovine pericardial patch to support and close the fistula was a novel idea. Here the patched served as a cellular scaffold to bridge tissues in surgeries. Although a few similar attempts to close recto-neovaginal fistulas with this bioprosthesis have been made in other parts of the country, these cases have not been formally documented or published so far. The procedure required two endoscopists working simultaneously – one visualising the fistula from each side and the other helping position the patch while the clip was placed. Such advanced endoscopic capability is not available in many hospitals. With this approach, we were able to completely avoid a major surgery and still offer the patient a safe, day-care procedure. She is recovering well and is very satisfied with the outcome.”
Providing more details about the procedure, Dr. Tarun J. George said, “We performed a contrast CT scan to confirm the location and size of the fistula opening and evaluated various endoscopic management options before deciding on this approach. We first used argon plasma coagulation over the fistula opening – a method that uses gentle heat delivered through gas to prepare the area without direct contact. This was done to roughen the lining of surface that was to be closed. We then placed the bovine pericardial patch inside the tract and finally deployed a large 14 mm over-the-scope clip to seal the opening and anchor the patch securely, successfully closing the fistula. This minimally invasive procedure helped the patient avoid a major, complex surgery, along with a prolonged hospital stay and higher treatment costs. She was discharged the same day and walked out of the hospital. She only requires one week of rest at home, five days of antibiotics, and stool softeners for about three months.”
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!
பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த, மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர்.
வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் உடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறினார். பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். விஜய் சேதுபதி, நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியதும் வீடியோவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தது.
இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார். படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான இசையமைப்பால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் அறிமுகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
நடிகர்கள் :
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத் தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா வழங்குபவர் : சார்மி கௌர் தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் CEO : விசு ரெட்டி மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்காக நாடு முழுவதும் மிக தீவிரமான மற்றும் பரவலான புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது. ராம் ஆசம்டா மற்றும் கோபி ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் பாடல்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்று பெங்களூரில் நடைபெற்ற விழாவில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முன்னிலையில், படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் டிரெய்லர்கள் வெளியிடப்பட்டது.
டிரெய்லர் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் தொடங்குகிறது. இந்தியாவின் ஆன்மீக அடித்தளத்தை அழிக்க, நாட்டின் உள்ளும் வெளியும் செயல்படும் தீயசக்திகள் ஒன்று சேர்கின்றன. இவர்களின் நோக்கம் — சனாதன ஹைந்தவ தர்மத்தை முழுமையாக அழித்து, தேசத்தை குழப்பமும் பயமும் நிறைந்த நிலைக்கு தள்ளுவது.
ஆனால் நம்பிக்கை குலையும் அந்த தருணத்தில் — தெய்வீக தீப்பொறி போல எழும் சக்தி… தான் அகண்டா!புராண வலிமையும் தேசபக்தியும் கலந்த ஒரு அதீத சக்தியாக, தீயதை சுட்டெரிக்க அகண்டா எழுகின்றார்.
இயக்குநர் போயபாடி ஶ்ரீனு இந்த முறை மிக விரிவான, எல்லைகளைத் தாண்டும் தொலைநோக்கு பார்வையில் படத்தை உருவாக்கியுள்ளார். ஆன்மீக ஆற்றலும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும், பெரும் உலகை அகண்டா 2 கட்டியெழுப்புகிறது. கும்பமேளா காட்சி டிரெய்லரின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் கோபம் — தெய்வீகத்தின் வடிவம்.அவரது சக்தி — நிறுத்த முடியாத புயல்.இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அகண்டா அவதாரம் திரையை முழுமையாக ஆட்சி செய்கிறது. அவரது நடை, பார்வை, வசனங்கள், தெய்வீக பாதுகாவலனின் உருவத்தை நினைவூட்டுகின்றன.
ஆதி பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின் உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.
படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும் உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும், A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.
தேசபக்தி, ஆன்மீக வலிமை மற்றும் மாஸ் எலிவேஷன் — இந்த மூன்றையும் இணைத்து, அகண்டா 2 டிரெய்லர் உண்மையான NBK ஸ்டைல், சர்ஜிகல் ஸ்டிரைக் போல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சானதான ஹைந்தவ தர்மம் மையமாக இருப்பது, முழு இந்திய ரசிகர்களுக்கும் பெரும் ஈர்ப்பாக அமைந்துள்ளது.
அகண்டா 2 – தாண்டவம் திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ் வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி இசை : S. தமன் ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி கலை : A.S. பிரகாஷ் எடிட்டிங் : தம்மிராஜு சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன் மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
தீமை செய்வோர் திகைப்பார்கள், நீதி வெல்லும் – இந்த கோட்டை மனதில் கொண்டு நகரும் ஒரு சமூக-த்ரில்லர்!
“தீயவர்குலை நடுங்க” ஒரு வழக்கமான மசாலா படம் போல தொடங்கினாலும், நடுப்பகுதிக்குப் பிறகு கதை மெல்லக் கண்ணியை இறுக்கத் தொடங்குகிறது. மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் இருண்ட முகங்களையும், அதிகாரத்தின் பலத்தையும், அதற்கெதிராக பொதுமகன் எப்படிப் போராடுகிறார் என்பதையும் படம் நேரடியாகத் தொட்டுச் செல்கிறது. நாயகன் ஒரு சாதாரண இளைஞன். வாழ்க்கையில் நடக்கும் அநியாயங்களைக் கண்டுக் கொண்டே செல்லும் அவனுள், ஒரு நாள் வெடிக்கும் கோபமே கதையின் தொடக்கம். சமூகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில சக்திமிக்க மனிதர்களின் பாவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயலும் அவனுக்கு எதிராக, “தீயவர்குல்” ஒன்று சேர்ந்து நின்றாலெல்லாம் என்ன நடக்கும் என்பதை படம் விறுவிறுப்பாக காட்டுகிறது. இறுதியில், தன்னுடைய அறிவும் துணிவும் கொண்டு அவன் எப்படிக் கட்டுக்கதை முறியடிக்கிறான் என்பதே சிகரம். நாயகனின் கோபம், வேதனை, பழிவாங்கும் ஜாடை – அனைத்தும் நம்ப வைக்கும் வகையில் இருந்தது. எதிர் வேடங்களில் வந்தவர்கள் கதை முழுவதும் ஒரு இருண்ட அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். சில காட்சிகளில் அவர்கள் செய்கின்ற கொடூரம், நாயகனை விட பார்வையாளர்களையே உசுப்பேற்றுகிறது.
பின்னணி இசை கதை சொல்லலுக்கு பேஸைக் கூட்டுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதிகளில் இசை தாளமே மாற்றித் தருகிறது. சினிமாடோகிரஃபி இரவுக்காட்சிகளிலும், துரத்தல் சீன்ஸ்களிலும் மிகுந்த தாக்கத்தைக் கொடுக்கிறது. சில இடங்களில் டயலாக் மிகப் பெரியதாக உணரப்படும்; மேலும், நீதி-அநீதி பற்றிய “லெக்சர்” சற்று நீளுகிறது. ஆனால் நோக்கம் சரியாக சென்று சேருகிறது “தீயவர்குலை நடுங்க” என்பது ஒரு சண்டை-ஆக்ஷன் படம் அல்ல; அது ஒரு சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதை. தீமை பெருகும் காலத்தில், ‘ஒருவன் எப்படியாவது நிற்க வேண்டும்’ என்று சொல்லும் ஒரு சத்தமான முயற்சி. அதற்காகவே ஒரு முறை பார்க்கத் தக்க படம்.
இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்
ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது
அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு – ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
டிசம்பர் மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் கௌரவ் நாராயணன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா, திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”சினிமாவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. சினிமா குடும்பத்திற்கு என்னை அழைத்து வந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படக்குழுவினருக்கு நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார் .
பாடலாசிரியர் கருணாகரன் பேசுகையில், ”இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் , இசையமைப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றி. 2004ம் ஆண்டில் வெளியான ‘ஏய்’ படத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்து பணியாற்றிய வேண்டிய தருணம். ஆனால் அந்த வாய்ப்பு தவறிப் போனது. அதன் பிறகு அவருடைய இசையில் இப்போது அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.
நடிகை மஞ்சு பேசுகையில், ”எல்லோரும் ஏதோ ஒரு சூழலில் மோசடிக்கு ஆளாகி இருப்போம். இதுபோன்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து உங்களின் ஆதரவை தர வேண்டும்,” என்றார்.
நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், ”முதலில் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த நடிகர் ஆதவனுக்கு நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.
நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது. எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது.
நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் கார்த்திக் மற்றும் படக் குழுவினருடன் தொடர்ந்து பழகி வருகிறேன். அற்புதமான குழு. கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி பேசுகையில், ”நான் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் வாசிப்பாளர். தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு திரைப்படங்களை தணிக்கை சான்றிதழுக்காக பார்ப்போம். இந்த சமுதாயத்தில் புரையோடி இருக்கின்ற, அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை படக் குழுவினர் கையாண்டிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,000 கோடி ரூபாய் அளவிற்கு சைபர் குற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. இது தொடர்பாக தினந்தோறும் செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிறது. ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், டிரேடிங் ஸ்கேம், முதலீடு தொடர்பான மோசடி என நாள்தோறும் விதவிதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். நம் நாட்டின் பட்ஜெட்டிற்கு நிகராக மக்கள் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள். சைபர் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.
தணிக்கை குழுவை பொருத்தவரை கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது, யாரையும் அவமதிக்கக்கூடாது, அரசியல் தலைவர்களை பற்றி தவறாக பேசுவதோ சித்தரிப்பதோ கூடாது. எங்களைப் பொருத்தவரை படைப்பாளிகள் கொடுக்கும் ஒரு படம் சமூகத்தில் மக்களுக்கு படிப்பினையையும், விழிப்புணர்வையும், நல்லதொரு சிந்தனையையும் கொடுக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அப்படிப்பட்டதொரு படத்தை எடுத்ததற்காக இந்த படக் குழுவினரை மீண்டும் பாராட்டுகிறேன்,” என்றார் .
நடிகர் இமான் அண்ணாச்சி பேசுகையில், ”புதுமுக நடிகர் மற்றும் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்ற திரைப்பட விழாக்களில் அணிவிக்கப்படும் சால்வையால் எந்த பயனும் இல்லை. இதை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்கவும் முடியவில்லை. அதனால் சால்வைக்கு பதிலாக துண்டினை (டர்க்கி டவல் – குற்றால துண்டு ) பரிசாக அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்,” என்றார்.
நடிகை மிருதுளா சுரேஷ் பேசுகையில், ”இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான செய்தியையும், பொழுதுபோக்கையும் கொண்ட திரைப்படம். அனைவரும் நிச்சயமாக திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி,” என்றார்.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ”என் தந்தை தேவாவின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளான இன்று அவர் பாடிய ஒரு பாடலை இங்கு திரையிட்டு, அவரை கௌரவப்படுத்தியதற்காக அனைவருக்கும் என் தந்தையின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு துறையை சார்ந்தவராக இருந்தாலும் பொருத்தமான கதையை தேர்வு செய்து அதற்கு தேவையான பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு நிச்சயமாக நஷ்டத்தை தராது. லாபத்தை அள்ளித் தரும். அதற்கு என் வாழ்த்துகள்.
நானும், பாடலாசிரியர் கருணாகரனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தான் இணைந்திருக்கிறோம். அவரை பார்க்கும் போதெல்லாம் இவரைப் போல் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அவரிடமிருந்து இதை கற்றுக் கொண்டேன்,” என்றார்.
இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ”முதலில் இயக்குநர் கே. பாக்யராஜுக்கு நன்றி. இந்த ஆண்டு தேசிய விருதுக்கான நடுவர் குழுவில் தென்னிந்திய பிரதிநிதியாக தமிழ்நாடு சார்பில் நான் இடம் பெற்றிருந்தேன். இந்த நடுவர் குழுவில் நான் தான் மிகவும் இளையவன். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கும் பட்டியலில் ‘பார்க்கிங்’ படத்துடன் வேறு சில படங்களும் போட்டியில் இருந்தன. இந்தத் தருணத்தில் கே. பாக்யராஜ் படங்களில் இடம் பிடித்திருக்கும் திரைக்கதை நுட்பங்களால் உந்தப்பட்ட நான் அவருடைய திரைக்கதை மேஜிக்கை உதாரணமாக பேசி தான் ‘பார்க்கிங்’ படம் தேசிய விருதுக்கு தேர்வானது. எனவே ‘பார்க்கிங்’ படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் கே. பாக்யராஜ் இருக்கிறார். திரைக்கதை என்றால் தமிழ் சினிமா தான் நிகரற்றது. இத்தனை ஆண்டு காலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை போன்ற சில விஷயங்களை பேசி பரிந்துரைத்தேன்.
அப்பா அம்மாவை நேசிப்பவர்கள் யாரும் தோற்க மாட்டார்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவருடைய தந்தை மீது அளவற்ற நேசம் கொண்டவர். இதற்காகவே இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருடைய தந்தையின் பரிபூரண ஆசி உண்டு என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்மறை எங்கும் இருக்கக் கூடாது என விரும்பும் நான் என் படத்தின் டைட்டிலில் கூட ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’, ‘இப்படை வெல்லும்’ என பெயர் வைத்திருப்பேன். ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசிட்டிவிட்டி இருக்கும். அவர் இந்த படத்தில் பங்களிப்பு வழங்கியது இப்படத்திற்காக வெற்றியை குறிக்கிறது.
மோசடி குறித்து படம் இயக்குவது கடினம். ஏடிஎம் பண மோசடி குறித்து நான் முதன்முதலாக ‘சிகரம் தொடு’ படத்தை உருவாக்கினேன். ஒரே ஒரு விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு ஒரு நபர் 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்தான் சிகரம் தொடு படத்தை உருவாக்குவதற்கான இன்ஸ்பிரேஷன். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபரை சந்தித்து பல விஷயங்களை கேட்டு அந்த படத்தை உருவாக்கினேன். அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் இங்கு 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து அவர் அங்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டியிருந்தார்.
சம்பாதிப்பது கடினம், அதை செலவழிப்பது எளிது, அதை திருடுவது அதைவிட எளிது. ஆனால் இதற்கு மூளை அதிகமாக வேண்டும். அதனால் இந்தப் படத்திலும் மோசடிகள் பற்றி நிறைய விவரங்களை சொல்லி இருப்பார்கள். இவை மக்களுக்கு பிடித்தவையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்று கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறுகிறது,” என்றார்.
விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா பேசுகையில், ”இந்த நிகழ்விற்கும், மேடையில் வீற்றிருக்கும் படக்குழுவினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் தொகுதி அருகில் உள்ளதாலும், என்னுடைய நண்பர்களின் அழைப்பின் காரணமாகவும் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்கள் கட்சியின் மறைந்த தலைவர் கலைஞர் ஐயா, தமிழக முதல்வர், தமிழகத்தின் துணை முதல்வர் அனைவரும் திரைத்துறையில் இருந்து தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தக் கட்சியில் இருந்து வந்தவன் என்பதால் இந்த மேடையில் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.
இயக்குநர் கே .பாக்யராஜின் காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படங்களும் ஆண்டு கணக்கில் ஓடும். ஆனால் இன்று மூன்று நாள் ஓடிய படங்களுக்கு மெகா ஹிட் என விளம்பரம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு கால சூழல் மாறி இருக்கிறது.
இன்றுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் சினிமாவில் இருக்கும் நடிகர்களை பார்த்து தான் தங்களை வழி நடத்திக் கொள்கிறார்கள். இதற்காகத்தான் படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் சிகரெட் பிடித்தால் அதற்கு கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெறுகிறது. இருந்தாலும் இன்று கருத்துள்ள படங்கள் அதிகம் வருவதில்லை.
இந்தப் படத்தில் மோசடி குறித்து பேசி இருக்கிறார்கள். இன்று அனைத்து துறையிலும் மோசடி இருக்கிறது. இதில் யார் அதிகம் ஏமாறுகிறார்கள் என்றால், படித்தவர்கள் தான் அதிகம். இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும் பேராசை தான்.
சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் என்னை தேடி வந்து பலரும் பத்து லட்சம் கட்டினோம் மோசடி செய்து விட்டார்கள் என்று புலம்புவார்கள், புகார் அளிப்பார்கள். நான் காவல்துறையில் புகார் அளிக்குமாறு பரிந்துரைப்பேன்.
நமக்கு எது தேவை என்பதை நன்றாக திட்டமிட்டு அளவுடன் வாழ்ந்தால் மோசடியில் சிக்க மாட்டோம். மேலும் மோசடி குறித்து அரசாங்கம் மட்டுமே பணியாற்றினால் இதை தடுக்க முடியாது. மக்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தர வேண்டும்.
தமிழக மக்கள் மிகவும் விழிப்பானவர்கள். சிறப்பானவர்கள். இந்த படத்தை பார்த்து, எதிர்காலத்தில் எந்த மோசடியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர்-நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசுகையில், ”எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்திற்கு பத்து பாகத்தை எடுக்கலாம். என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்த படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாக சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து சொல்லி இருக்கிறேன்.
இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நாயகனாகவும் நடித்து இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். இதற்கு விதை போட்டவர் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தும் கே. பாக்யராஜ் அவர்கள் தான். ஹீரோவாகவும் நடித்து, இயக்கவும் முடியும் என்ற அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நானும் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறேன்,” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”பொதுவாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் எல்லாப் புகழும் ரசிகப் பெருமக்களுக்கே என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் இல்லை என்றால் இங்கு யாரும் இல்லை.
சினிமாவில் ஆபத்பாந்தவன் என்ற பெயரை ஸ்ரீகாந்த் தேவாவின் தந்தையான தேவா பெற்றிருக்கிறார். நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைப்பார். சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பார். தந்தை வழியில் இன்று ஸ்ரீகாந்த் தேவாவும் பயணிக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.
மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாக பயன்படுத்தாமல் எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள். நான் ‘பாக்யா’ இதழில் கேள்வி பதில் எழுதும் போது இது போன்ற விஷயங்களை நிறைய வாசித்திருக்கிறேன்.
மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு.
இந்தப் படத்தின் கதை என்ன? என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. “நான் ஏமாற்ற பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன்” என்றார். அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.
உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆகவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை “லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
முழுக்க முழுக்க நவீன இக் கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு, தலைமுறையின் புழக்கத்தில் இருக்கும் “வித் லவ் ( With Love )” தலைப்பு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் தற்போது இணையம் முழுக்க பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்
LINK : https://www.youtube.com/watch?v=gNrYsSN0V9A