இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.’கூரன்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது,
“நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் ‘கூரன்’ என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப் படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.
‘கூரன்’ படத்தில் நடித்ததற்காக எனக்கு சிறந்த நடிகர் என்ற ஒரு விருது கிடைத்துள்ளது. ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கியிருக்கிறார்கள்.சினிமாவில் அன்பைப் பற்றிச் சொல்லப்படுவதற்காக ‘சினிகைண்ட்’ என்கிற அந்த விருது வழங்கப்படுகிறது.அந்த விருதைப் பெற்றுக் கொள்ளும்படி எனக்கு அழைப்பு வந்தது. கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் எனக்கு விருதை வழங்கினார்கள் .நான் எனது மனைவியோடும் மகிழ்ச்சியோடும் அந்த விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டேன்.சினிமாவில் நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைப்பை வழங்கினால் அது நமக்குப் பெருமையையும் அங்கீகாரத்தையும் தேடித் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று நான் சொல்வேன்.”என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கத்துடன் இணைந்து எலிஃபண்டைன் சர்க்யூட் நடத்திய சைக்ளோத்தான் நிகழ்வு சென்னை அடையாறு பகுதியில் இன்று காலை நடைபெற்றது ( CYCLOTHON ) .
பசுமை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மிதிவண்டி.
டாக்டர் சைலேந்திர பாபு (பதிவு டிஜிபி/காவல்துறைத் தலைவர்) எலிஃபண்டைன் நிர்வாக இயக்குநர் திரு*ரமணன் பாலகங்காதரன் உடன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கலா அறக்கட்டளையைச் சேர்ந்த 35 மதியிறுக்க (ஆட்டிசம்) நிலையினர் பங்கேற்றுள்ளனர், மேலும் அவர்களில் ஒருவரான 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார். மேலும் நகரம் முழுவதும் சுமார் 400 மேற்பட்ட சைக்கிள் ஓட்டுநர்கள் பங்கேற்று நிகழ்வை வெற்றிகரமாக முடித்தனர்*.
தமிழ் திரையுலக முன்னணி இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் சைக்ளோத்தான் டீசர்ட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிகழ்வினில் கலந்துகொண்ட டாக்டர் சைலேந்திர பாபு (பதிவு டிஜிபி/காவல்துறைத் தலைவர்) பகிர்ந்துகொண்டதாவது..,
மாரத்தான் சென்னையில் பரவலாக நடந்து வருகிறது ஆனால் இப்போது முதல்முறையாக சைக்ளோத்தான் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிள் ஒட்டுகிறார்கள். பெரிய மகிழ்ச்சி. மக்களின் அடிப்படை தேவை மனமகிழ்ச்சி தான் அது சைக்கிளிங்கில் கிடைக்கும். இதில் கலந்துகொள்ளும் போது பல இடங்களை பார்த்த திருப்தி கிடைக்கும். 50, 100 கிலோ மீட்டர் சைக்கிளிங் ஓட்டுபவர்கள் தினமும் எத்தனையோ பேரைச் சந்திப்பார்கள். அது மனதுக்கு மகிழ்ச்சி தரும். உற்சாகம் தரும். மேலும் இதன் மூலம் சாதனைகள் இந்திய அளவிலும் உலக அளவிலும் நிகழும் அதற்காக இந்த சைக்களத்தான் நிகழ்வை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். பைக் ஒரு தானியங்கி இயந்திரம் அதை ஓட்ட உடல் உழைப்பு தேவை இல்லை. சைக்கிள் ஓட்ட உடல் பலம் தேவை, இளைஞர்கள் பைக் மோகத்தை விட்டு விட்டு சைக்ளோத்தானை தேர்ந்தெடுக்க வேண்டும். உண்மையான உடல் தகுதி யோடு இருக்கக்கூடிய விளையாட்டு சைக்கிள் பந்தயம் தான். உலக நாடுகளில் பாரிஸில் 1800 கிலோமீட்டர் சைக்கிள் பந்தயம் ஆனது இருக்கிறது. லண்டனில் கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டருக்கு மேல சைக்கிள் ஓட்டக்கூடிய பந்தயங்கள் இருக்கிறது. அங்கு உள்ளவர்கள் அதற்கே தயாராக இருக்கிறார்கள் நமது ஊரில் நாம் இமய மலைக்கு காரில் செல்வதே பெரிய விஷயமாக பார்க்கிறோம். மூன்று நாள் நான்கு நாட்கள் என தொடர்ச்சியாக அவர்கள் சைக்கிள் ஓட்டுவது அவர்களது மன உறுதியை காட்டுகிறது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவதை விட சைக்கிளை ஓட்டுவதே நல்லது.
New Delhi, India — December 19, 2025: IBM (NYSE: IBM) today announced its commitment to skill 5 million learners across India in Artificial Intelligence (AI), Cybersecurity, and Quantum Computing by 2030. Delivered through IBM SkillsBuild, this initiative advances IBM’s mission to build an equitable, future-ready workforce, broaden access and opportunity to advanced digital skills and employability for students and adult learners.
Through this initiative, IBM will expand AI and emerging technology education across schools, universities, and vocational and skilling ecosystems. It will also collaborate with institutions like All India Council for Technical Education (AICTE) to drive hands-on AI learning pathways and faculty enablement programs, curriculum integration, hackathons and internships.
“India possesses the talent and ambition to lead the world in AI & Quantum. Fluency in frontier technologies will define economic competitiveness, scientific progress and societal transformation,” said Arvind Krishna, IBM Chairman, President and Chief Executive Officer. “Our commitment to skill five million people is an investment in that future. By democratizing access to advanced skills, we are enabling the youth and students to build, innovate and accelerate India’s growth.”
IBM also continues to strengthen school-level readiness by co-developing the AI curriculum for senior secondary students, along with teaching resources including the AI Project Cookbook, Teacher Handbook and explainer modules. These programs are designed to embed computational thinking and responsible AI principles early, while enabling teachers to deliver AI education confidently and at scale.
At the core of this initiative is IBM SkillsBuild, one of the world’s most accessible technology learning ecosystems. The programme offers over 1,000 courses in AI, cybersecurity, Quantum, Cloud, Data, Sustainability and workplace readiness for learners, educators and institutions. With 16 million+ learners globally, SkillsBuild, among other programmes, is central to IBM’s mission to train 30 million people worldwide by 2030, with India as one of the biggest accelerators of that ambition.
கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி”
டிசம்பர் 25 திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்
தயாரிப்பாளர் நடிகர் கோதண்டம் பேசியதாவது.., பருத்தி நல்ல படம். இப்படத்தை முழுக்க கஷ்டபட்டு எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் லட்சு கணேஷ் பேசியதாவது.., பருத்தி படத்தை படக்குழு மிகச்சிறப்பாக எடுத்துள்ளனர். படத்தில் நடித்த சோனியா அகர்வால் முதலாக அனைவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் குரு A பேசியதாவது.., என் முதலாளி கோதண்டம், லட்சு கணேஷ் இருவரும் கதை சொன்ன உடனே, எப்போது ஷீட்டிங் போகலாம் என்று கேட்டனர். எனக்கு முழு ஆதரவு தந்து இப்படத்தை எடுத்ததற்கு இருவருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த குழந்தை தயாரிப்பாளரின் குழந்தை. அவர்கள் இருவருக்கும் உள்ள நட்பை இப்படத்தில் பேசியுள்ளேன். சின்ன வயதில் குழந்தைகள் மனதில் சாதி எனும் விதையை விதைக்கக் கூடாது என பேசியுள்ளோம். பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் குகன் சக்கரவர்த்தி பேசியதாவது.., பருத்தி படம் எடுக்கும் முன்பிருந்தே இயக்குநரைத் தெரியும், அவர் நல்ல நடிகர் நன்றாக பேசுவார், அவர் நல்ல இயக்குநர். பருத்தி படத்தின் மிகப்பெரிய தூண் சோனியா அகர்வால், அவருக்கு இப்படம் மூலம் பெரிய வெற்றி காத்திருக்கிறது. இப்படம் அனைவருக்கும் வெற்றியைத் தர என் வாழ்த்துகள்.
நடிகர் பிரஜின் பேசியதாவது.., சின்ன முயற்சிகளே பெரிய மரமாகும். குரு சாரை எனக்கு மிக நன்றாகத் தெரியும். நன்றாக பேசுவார். அவர் நல்ல நடிகர் எனக்கு கதை சொல்லியிருக்கிறார். அவர் இன்று இருக்கும் நல்ல இயக்குநர்களின் லிஸ்டில் இடம் பிடிப்பார். அவருக்கு மிகச்சிறப்பான இடம் கிடைக்கும். சோனியா மேடம் இன்றும் பார்க்க அப்படியே இருக்கிறார். இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் அனைவருக்கும் நன்றி.
SGR Film Factory சார்பில் ஶ்ரீதர் பேசியதாவது.., நான் இயக்குநர் குழுவில் இருப்பவன் தான். நண்பனோட பயணத்தில் நானும் இருக்க வேண்டுமென நான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறேன். இது மாதிரி நல்ல படைப்புகளை SGR Film Factory மூலம் தொடர்ந்து வெளியிடுவோம். குருவும் நானும் நெருங்கிய நண்பர்கள், இரவு 2 மணிக்கு போன் செய்து என்னிடம் கதை சொல்வார், ரொம்ப ஜாலியாக எல்லோருடனும் பழகுவார். சினிமாவில் அவருக்கும் இன்னும் பெரிய இடம் உள்ளது. கோதண்டம் சார் குருவை முழுதாக நம்பினார். வரும் 25 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். சோனியா அகர்வால் மேடம் ரசிகன் நான். அவர் சூப்பராக நடித்துள்ளார். அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் உதயா பேசியதாவது.., இயக்குநர் குரு எனக்கு நீண்ட கால நண்பர். தரமான படமெடுத்து விட்டு உங்களை அழைப்பேன் என்றார். அவர் எடுக்கும் எல்லா படமும் தரமான படம் தான். நல்ல படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். என் தம்பி குருவுக்கு இப்பட வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. சோனியாவுக்கு நானும் ரசிகன். அவர் இப்படி ஒரு கேரக்டர் நடித்திருப்பது அருமை. படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் திலீஷ் பேசியதாவது.., எல்லோருக்கும் வணக்கம். எனக்கு வாய்ப்பு தந்த அப்பாவுக்கு நன்றி. எல்லோரும் ஒரு குடும்பமாக தான் வேலை பார்த்தோம். பருத்தி மிக அழகான படமாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ராஜா பேசியதாவது.., பருத்தி என்றால் பூ. நண்பர் குருவுக்கு இப்படம் பெரிய திருப்புமுனை தரட்டும், சோனியா மேடம் இப்படத்தின் மையமாக இருக்கிறார். அவர் விழாவிற்கு வந்தது மகிழ்ச்சி. என் படத்தில் யோகிபாபு நடித்து விட்டு விழாவிற்கு வரவில்லை, அதைப்பற்றி பேசியது பிர்ச்சனை ஆனது. இதை தயாரிப்பாளர் சங்கம் பார்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இசையமைப்பாளர் வரவில்லை என்பது வருத்தம், அவர் சொந்த படத்திற்கு வரமால் இருக்கக் கூடாது. படத்தின் பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.
இயக்குநர் திருமலை பேசியதாவது..,
சிறு படங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு தர வேண்டும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இயக்குநர் இமயம் பாரதிராஜா அவருடைய உதவியாளர் குரு இயக்கியுள்ள படைப்பு பருத்தி. டிரெய்லர் பார்க்கும் போதே அதில் உள்ள எதார்த்தம் தெரிகிறது. சோனியா மேடம் நடிப்பு அருமையாக உள்ளது. குரு இந்தப்படத்தை எடுத்து இங்கு கொண்டு வர அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் படம் எடுக்கவில்லை என்றால் தமிழ் சினிமா அழிந்துவிடும். அந்த தயாரிப்பாளர்களின் முயற்சியால் தான் இந்த தமிழ் சினிமா இயங்கி வருகிறது. திரையரங்கு வைப்பது தான் இன்று சட்டமாக உள்ளது. சின்ன படத்தை வெளியிடுவதில் அத்தனை பிரச்சனை உள்ளது. சினிமா தயாரிப்பாளர்கள் இயக்குநர்களிடையே ஒரு கட்டுக்கோப்பு இல்லை. இதை தட்டிக்கேட்க ஆளில்லை. இது மாற வேண்டும். வெறும் பத்து பேர் வாழ சினிமா இயங்கி வருகிறது. படம் ரைட்ஸ் விற்கவில்லை ஆனால் ஆன்லைனில் வந்துவிடுகிறது. கோடிகளை போடும் தயாரிப்பாளருக்கு பாதுகாப்பு வேண்டும். விரைவில் மாற்றம் வரும். இப்படம் ஜெயிக்க வாழ்த்துகள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் ரிஷி பேசியதாவது.., பருத்தி மிக அழகான படம். சோனியா மேடமை நாம் அழகாக பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் கிராமத்தில் வாழும் ஒரு அம்மாவாக அருமையாக நடித்துள்ளார். இயக்குநர் குரு மிகத்திறமையானவர். நல்ல நடிகர், எல்லா காட்சியையும் அவரே நடித்து காட்டி விடுவார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். நாயகன் புதிதாக நடித்தாலும் அட்டகாசமாக நடித்துள்ளார். நாயகி தமிழ் தெரியவில்லை என்றாலும் அருமையாக நடித்துள்ளார். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்துள்ளது இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.
நடிகை சோனியா அகர்வால் பேசியதாவது.., பருத்தி எனக்கு மிக வித்தியாசமான அனுபவம். டார்க் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். நான் இயக்குநரிடம் இங்கு இருந்து யாரையாவது நடிக்க வைக்கலாமே எனக் கேட்டேன் ஆனால் உங்களுடைய அனுபவமும் நடிப்பும் இந்தப் படத்திற்கு வேண்டும் என்றார். அவர் வைத்த நம்பிக்கையை நிறைவேற்றியுள்ளேன் என நம்புகிறேன். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் K பாரதி அவர்களை வைத்து, வளையல் என்ற திரைப்படத்தை இயக்கிய குரு A அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோனியா அகர்வால் மற்றும் திரை பிரபலங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிராமத்து வாழ்வியலையும் உணர்வு போராட்டத்தையும், இத்திரைப்படத்தில் கொண்டுவந்துள்ளார் . சமூக சிக்கல்களில் சிக்கி தவித்து பால்ய பருவத்தை கடக்கும் சிறார்களின் மனநிலையை யாதார்த்தத்துடனும் மிகவும் உணர்வு பூர்வமாக கிராமத்திலிருந்து வாசம் மாறாமல் இயக்குநர் எடுத்து வந்திருக்கிறார்.
இப்படத்திற்கு ரஞ்சித் வாசுதேவன் இசையமைத்துள்ளார். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இத்திரைப்படம் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஓசூர் தேன் கனி கோட்டாவில் நடைபெற்றுள்ளது வரும் டிசம்பர் 25 திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”.
1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.
வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு படம் வெளிவருவதற்கு முன்னதாக, அதன் உலகம் மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்கள் அடுத்த மூன்று நாட்கள் (19, 20, 21 டிசம்பர்) பராசக்தி உலகை கண்டுகளிக்கலாம் .
பராசக்தி படத்தின் இந்த உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, வள்ளுவர் கோட்டம் அரங்கில், ரசிகர்கள் சூள, படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
இயக்குநர் சுதா கொங்கரா பேசியதாவது.., திரைப்படம் மூலம் நாம் ஒவ்வொரு வாழ்வியலில் போய் வாழலாம். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இறுதிச்சுற்று படத்தில் ஒரு குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்த்திருக்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். 1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது. கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.
ஜீவி பிரகாஷ் பேசியதாவது.., பராசக்தி ஒரு பெரிய உலகம். சுதா கொங்கரா எனக்கு சூரரைப் போற்று படத்தில் தேசிய விருது வாங்கி தந்தார். நான் ரஹ்மான் சாரிடம் இருக்கும் போதே, சுதா எனக்குப் பழக்கம். அவருடன் நிறையப் படங்கள் செய்யவில்லை. நீண்ட காலம் கழித்து சூரரைப் போற்று படம் செய்தோம். அது எனக்கும் சூர்யா சருக்கும் மிகப்பெரிய படமாக அமைந்தது. அதற்கான நன்றிக்கடன் தான் பராசக்தி. பராசக்தியில் மீண்டும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஏற்கனவே பீரயட் படங்களில் மதராஸப்பட்டினம் படம் செய்துவிட்டோம், அதிலிருந்து மாறுபட்டு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வியாக இருந்தது. அதைத் தர உழைத்திருக்கிறோம். சிவா உடன் அமரனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். ரவி மோகன், அதர்வா ஶ்ரீலீலா என எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பெரிய படத்தைத் தாங்க ஆகாஷ் போன்ற தயாரிப்பாளர் இருக்க வேண்டும். இப்படத்தில் ஒரு பீரியட் ஃபீல் இருக்கும். ஒரு பெரிய புரட்சியைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அதை இசையாகக் கொண்டு வர முயற்சித்திருக்கிறோம். இதில் எல்லோரும் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகை ஸ்ரீலீலா பேசியதாவது.., எல்லோருக்கும் நன்றி. பராசக்தி எனக்கு மிக முக்கியமான படம். என் அறிமுகத் தமிழ்ப்படம். சுதா மேடமுக்கு நன்றி. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப்பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது, ஒரு அர்த்தம் இருக்கிறது. அது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். பராசக்தி உலகிற்குள் தரிசித்து கொண்டாடுங்கள் நன்றி.
நடிகர் அதர்வா பேசியதாவது.., இந்த மாதிரி விழா எல்லா படத்திற்கும் எளிதாக நடக்காது. இது பிரம்மாண்டமான படம். ஜீவி பிரகாஷின் 100 வது படம், ரவிமோகன் சார் வில்லனாக நடிக்கும் படம், சிவகார்த்திகேயன் சாரின் 25 வது படம். ஶ்ரீலீலாவின் முதல் தமிழ்ப்படம். இப்படி எல்லோருக்கும் முக்கியமான படம். ஷீட்டிங் போன போது மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வளவு பெரிய படத்தை எடுத்துத் தயாரித்திருக்கும் ஆகாஷ் அவர்களுக்கு நன்றி. படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்
நடிகர் ரவி மோகன் பேசியதாவது.., ஊரே இந்தப்படம் பற்றித் தான் பேசுகிறது. இந்தப்படம் மிகப்பிரம்மாண்ட படம். படத்திற்குள் நான் போகும் முன் எனக்குமே நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக உழைப்பைப் போட்ட அனைவரையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவ்வளவு உழைத்துள்ளார்கள். என்னை அவ்வளவு அற்புதமாகப் பார்த்துக்கொண்டார்கள். என்னை நன்றாக பார்த்துக்கொண்ட சுதா மேடமுக்கு நன்றி. என்னைச் சரியாக அந்த கதைக்குள் கொண்டு சேர்த்துவிட்டார். ஆகாஷ் பாஸ்கரன், ஒரு ஹீரோ வைத்து படமெடுப்பதே கஷ்டம், அவர் மூன்று ஹீரோ வைத்துப் படமெடுத்துள்ளார். அதர்வாவை இந்தப்படத்தில் கொண்டாடுவீர்கள். அதர்வாவிற்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஶ்ரீலீலாவை ஒரு நல்ல நடிகையாக இப்படத்தில் கொண்டாடுவார்கள். சிவா என்னிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார். ஒரு சின்ன அடிபட்டால் கூட என்னையும் அடித்துக்கொள்ளுங்கள் என்பார். சிவாவின் 25 படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமை. பராசக்தி திரைப்படம் திரைத்துறையில் மிக முக்கியமான படமாக இருக்கும் நன்றி.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது.., சுதா மேம் 1960 களில் நடப்பதாகக் கதை அமைத்திருந்தார். அவர் தான் இந்தப்படம் பண்ணக்காரணம். இந்தப்படத்திற்காக 4,5 வருடம் அவர் உழைத்திருந்தார். அவர் சொன்னதைச் செய்தால் போதும். இந்தப்படம் செய்வது எல்லோருக்குமே கஷ்டம் தான். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார்கள். அதர்வாவிற்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையான அண்ணன் தம்பி போலத்தான். அவர் முதல் படத்திற்கு புரமோசன் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வந்தார், நான் தான் ஹோஸ்ட் செய்தேன். இந்தப்படத்தில் சேர்ந்து நட்சத்திருப்பது மகிழ்ச்சி. ஶ்ரீலீலாவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்டமான டான்ஸ் மூவ்மெண்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி. ரவி மோகன் சார் இந்தப்படத்திற்கு ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியம். ஹீரோவாக கதை கேட்டுத் தேர்ந்தெடுப்பதே கஷ்டம். ஆனால் ஹீரோவாக ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் போது, வில்லனாக ஒத்துக்கொள்வது மிகப்பெரிய விஷயம். அவர் எப்போதும் எனக்குக் கல்லூரியில் பார்த்த ஹீரோ தான். அவர் தான் எங்கள் செட்டில் மூத்தவர், அவர் பெயர் தான் முதலில் இருக்கும். அவரை அப்படித்தான் நாங்கள் பார்க்கிறோம். ஜீவி பற்றி என் அம்மா சொன்னார்கள், அந்தப்பையன் சின்ன வயதிலிருந்து இசையமைக்கிறார் போல 100 படம் செய்துவிட்டார் என்றார். 100 படத்திலும் வித்தியாசமான ஜானர்கள் செய்து அசத்தியுள்ளார். இது 25 வது படமாக நடக்கக் காரணம் ஆகாஷ் தான். அவர் தான் இந்தப்படம் 25வதாக இருக்கட்டும் என்றார். இந்த மாதிரி ஒரு டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாக கிடைத்தது என் வரம் தான். பராசக்தி அருள் தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாத்தையும் பேசும் படமாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும் பார்த்து ரசியுங்கள் நன்றி.
பராசக்தி திரைப்படம் வரும் 2026 பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.
இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.
சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன்.
நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படத்தில் புதுமுகங்களான ஷான் நாயகனாகவும், ஷெர்லி பபித்ரா நாயகியாகவும் நடித்துள்ளனர். பவன் ஜினோ தாமஸ், ஆர்யன், பிரதோஷ், விக்ரம் ஆனந்த் ஆகியோர் வில்லன் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர்களான சரவணன், முனிஷ்காந்த், ராமசந்திரன், மணிகண்டன், அஜித் கோஷி, காயத்ரி ரெமா, கிச்சா ரவி, காலா பீம்ஜி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
அனைத்து ரசிகர்களும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் திரில்லராக உருவாகியுள்ள இப்படம், சென்னை, கேரளா, பொள்ளாச்சி ஆகிய ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு – இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் இயக்குநர் – சிவனேசன் ஒளிப்பதிவு- M.S.நவீன்குமார். இசை – விபீன் R எடிட்டிங் – பிரேம் B கலை இயக்கம் – நீலகண்டன் ஸ்டன்ட் – யுனிவர்ஸ் ராஜேஸ். பாடல்கள் – மதன் கார்க்கி, விவேக், திருமாலி, அபிலாஷ் பிரிட்டோ. பாடியவர்கள் – GV பிரகாஷ், கார்த்திக், சைந்தவி, மாளவிகா சுந்தர், திருமாலி.
பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!
பாகுபலி, சலார் , கல்கி 2898 ஏடி போன்ற மெகா ஹிட் படங்கள் மூலம் கொண்டாடப்படும், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்படும் பான்-இந்திய ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இன்று தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவலை ஒரு அற்புதமான அறிவிப்பு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் தளத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பையும், புகழ் பெரும் வாய்ப்பையும் வழங்கி, கனவுகளை சினிமா வாழ்க்கையாக மாற்றும் புதிய காலத்தை உருவாக்குகிறது.
இந்த புரட்சிகர தளத்தை தனிப்பட்ட முறையில் ஆதரித்த பிரபாஸ், திரைப்பட உருவாக்கத்தை ஜனநாயகப்படுத்தும் இதன் சக்தியை வலியுறுத்தி பேசியுள்ளார்.
“தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் என்பது ஒரு விழா மட்டும் அல்ல — இது கதைகள் வாழ்க்கையாக மாறும் இடம்,” என்று அவர் அந்த வீடியோவில் பகிர்ந்தார்.
மேலும் அவர் பகிர்ந்துகொண்டதாவது:
ஒவ்வொரு குரலும் ஒரு ஆரம்ப வாய்ப்புக்கு தகுதியானது. ஒவ்வொரு கனவுக் கதைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டியது அவசியம்.
TheScriptCraft சர்வதேச குறும்பட திரைப்பட விழா இது இங்கே உங்களுக்காக,
உலகம் முழுவதிலிருந்தும் கதை சொல்லிகளை தங்கள் பயணத்தைத் தொடங்க அழைக்கிறது.
பாரம்பரிய போட்டிகளிலிருந்து மாறுபட்டு, இந்த விழா உலகின் எந்த மூலையிலிருந்தும் கதை சொல்லிகளை ஆதரிக்கிறது. 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட குறும்படங்கள், எந்த ஜானரிலும், 90 நாட்கள் போட்டி காலத்தில் பங்கேற்கலாம். பார்வையாளர்களின் வாக்குகள், லைக்ஸ் மற்றும் ரேட்டிங்ஸ் அடிப்படையில் முதல் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதே சமயம், சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படமும், புதிய திறமைகளை தேடி வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் கவனத்தை பெறும்.
அந்த வீடியோவில் பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கூறியுள்ளதாவது :
“ஒரு திரைப்பட இயக்குநராக உருவாக குறும்படம் எடுப்பதே மிக முக்கியமான அம்சம். காகிதத்தில் நீங்கள் எழுதுவது மற்றும் திரையில் நீங்கள் உருவாக்குவது — இரண்டும் முற்றிலும் வேறு வேறு யதார்த்தங்கள். சாதிக்க ஆசைப்படும் இயக்குநர்களுக்கு இது சரியான நேரம். பதிவு செய்து இதை முழுமையாக பயன்படுத்துங்கள்.”
இயக்குநர் நாக் அஸ்வின் கூறியதாவது :
“YouTube-ல் பார்த்த ஒரு குறும்படம் மூலமாகத்தான் நான் அனுதீப்பை கண்டுபிடித்தேன். அதிலிருந்தே ‘ஜதி ரத்னாலு’ படம் உருவானது. ஒரு திரைப்பட பள்ளியை விட, உங்கள் வேலை மற்றும் அதைப் பற்றிய உங்கள் புரிதலே மிகவும் முக்கியம். இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி, உங்கள் படங்களை சமர்ப்பித்து, சிறந்ததை சாதிக்க வேண்டும்.”
இயக்குநர் ஹனு ராகவபுடி மேலும் கூறியதாவது:
“பல இளைஞர்களுக்கு திரைப்படத் துறையில் நுழைந்து இயக்குநராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. உங்கள் பார்வையை வெளிப்படுத்துங்கள், உங்கள் கனவுகளை வெல்லுங்கள். வாழ்த்துகள்.”
ஒரு பிரத்யேக கூட்டணியாக, புதிய இயக்குநர்களுக்கான கூட்டாளியாக க்விக் டிவி இதில் இணைகிறது. க்விக் டிவியின் ஜூரி 15 சிறந்த திரைப்படக் கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையாக நிதியளிக்கப்படும் 90 நிமிட திரைப்பட ஸ்கிரிப்ட், முழு தயாரிப்பு ஆதரவு மற்றும் க்விக் டிவி தளத்தில் உலகளாவிய பிரீமியர் வழங்கப்படும். இதன் மூலம் 15 படைப்பாளிகள் குறும்படங்களில் இருந்து நேரடியாக தொழில்முறை திரைப்பட இயக்குநர்களாக, சர்வதேச அளவில் அறிமுகமாகும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இணையதளத்தில் தற்போது பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன. சரியான சமர்ப்பிப்பு தேதிகள் மற்றும் பிரிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “அடுத்த பார்வையாளர்களை கவரும் இயக்குநர் எங்கிருந்தும் வரலாம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த தளம் ஒவ்வொரு கதை சொல்லிக்கும் ஒரு குரல், ஒரு மேடை மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களால் காணப்படும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.”
பிரபாஸ் அவர்களின் துணிச்சலான கனவுத் திட்டமான தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட், தால்லா வைஷ்ணவ் மற்றும் பிரமோத் உப்பலபாட்டி ஆகியோரால் நிறுவப்பட்டது. புதிய திறமைகளை வளர்த்து, எழுத்தாளர்கள், கதை சொல்லிகள் மற்றும் இயக்குநர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு வலுவான மேடையை வழங்கும் நோக்கில் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்களை பொறுத்தவரையில், பிரபாஸ் நடிப்பில் தி ராஜாசாப், ஃபௌஸி, ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி பாகம் 2, சலார் பாகம் 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் லொகேஷனுக்கு வந்த மம்மூட்டி, இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) , ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்தை, துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் Wayfarer Films சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன், ஷஹபாஸ் ரசீத் ஆகியோர் எழுதுகின்றனர்.
இதற்கு முன்பு ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் தோற்றத்தில் துல்கர் சல்மான் அறிமுகமான, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்தது. முக்கிய கதாபாத்திரங்களின் போஸ்டர்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஐ அம் கேம்’, துல்கர் சல்மானின் 40-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகர்-இயக்குநர் மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த பிக்பட்ஜெட் ஆக்ஷன் த்ரில்லரின் சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைக்கிறார்கள். கபாலி, KGF தொடர், கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்-இந்தியா படங்களில் பணியாற்றிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. ‘RDX’க்கு பிறகு, நஹாஸ் ஹிதாயத்துடன் அன்பறிவ் குழு மீண்டும் இணையும் படமாகவும் இது அமைந்துள்ளது.
தொழில் நுட்ப குழு விவரம்
லைன் புரடியூசர் – பிபின் பெரும்பில்லி ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித் இசை – ஜேக்ஸ் பெஜாய் படத்தொகுப்பு – சமன் சாக்கோ தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சல்லிசேரி ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர் ஆடை – மாஷர் ஹம்சா புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன் இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர், பாடல் வரிகள் – மனு மஞ்சித் , விநாயக் சசிகுமார் VFX – . தௌஃபீக் (எக்வொயிட்) (Taufeeq – Eggwhite) போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட் சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத் ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே மார்க்கெட்டிங் ஹெட் – விஜித் விஸ்வநாதன் மக்கள் தொடர்பு – யுவராஜ்
Demonstrating its end-to-end B2B stack including devices, services and solutions for India’s Enterprise Transformation
CHENNAI, INDIA, December 18 2025 – Lenovo, the global technology leader, today showcased its full-stack enterprise AI portfolio in Chennai, reaffirming its commitment to enabling Smarter AI for All. With a focus on simplifying adoption and accelerating transformation, Lenovo’s integrated offerings are designed to help organizations modernize operations, optimize IT, and scale AI with confidence.
Supporting Tamil Nadu’s Tech Acceleration
Chennai continues to lead India’s enterprise-tech landscape as the country’s SaaS Capital, backed by a strong engineering workforce and more than fifty successful SaaS companies. Tamil Nadu as one of India’s top software exporters and the second-largest data centre market with nineteen operational facilities, the city is set to contribute about 25 percent of upcoming national capacity. Chennai also hosts over 250 Global Capability Centres, expected to rise to 450 to 460 by 2030, highlighting its growing global relevance. With this strong momentum in innovation and enterprise demand, Chennai remains a strategic market where Lenovo’s full-stack AI and digital solutions can help organizations scale with confidence.
Enabling Smarter and Secure AI Adoption
Enterprises across India continue to express strong intent to adopt AI, but many are challenged by deployment complexity and scaling constraints. Lenovo’s portfolio has been designed to simplify this journey while ensuring performance, security and flexibility across environments.
Future-Ready Enterprises Enabled by Lenovo Services
The Chennai showcase featured Lenovo’s complete enterprise AI Portfolio, including:
Infrastructure Solutions: Servers, storage, edge, and high-performance computing (HPC)
Software-Defined Infrastructure & Services: TruScale for scalable infrastructure, Digital Workplace Solutions (DWS), Device as a Service (DaaS), and Premier Support Plus
AI-Powered IT Tools: Lenovo Device Intelligence Plus and Care of One for predictive support and intelligent, personalized user experiences
Sustainable Solutions: Lenovo’s portfolio also supports sustainability goals through innovations such as Lenovo Intelligent Sustainability Solutions Advisor (L.I.S.S.A.) for emissions tracking and Neptune Liquid Cooling 2.0 for efficient operations without sacrificing energy efficiency
Security Solutions: ThinkShield XDR for endpoint detection and response and Cyber Resiliency as-a-Service, developed with Microsoft
Accelerating AI Maturity with Hybrid Architecture
Chennai’s diverse economy spanning SaaS, IT services, automotive manufacturing, data centres and global engineering hubs requires flexible and secure AI architectures. Lenovo’s hybrid AI model supports this shift by allowing organizations to train models in cloud or hybrid environments and run inference at the edge while maintaining control, compliance and high performance.
“Tamil Nadu is witnessing strong momentum in AI adoption and enterprise technology investment, and customers are looking for solutions that can scale quickly and securely.” said S.K. Venkataraghavan, Director, Solutions and Services Group, Lenovo India. “Lenovo’s full-stack AI portfolio helps enterprises convert intent into real outcomes with the right mix of infrastructure, services and intelligent tools. Our hybrid AI architecture brings edge, cloud and on-prem systems together to support faster insights, stronger compliance and more efficient operations. Chennai’s growing SaaS, data centre and GCC ecosystems make it a key market for this next phase of enterprise transformation.”
Lenovo’s hybrid AI architecture supports every stage of AI maturity by enabling organizations to train models in hybrid or multi-cloud environments and run inference at the edge while maintaining robust security and performance.
As Tamil Nadu accelerates its AI journey, Lenovo remains committed to helping businesses build smarter and more resilient operations across the entire technology stack, from devices to the edge to the cloud.
யுவா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
முகூர்த்த நேரத்தில் முதல் ஷாட்டுக்கு எஸ்.கே.என் கிளாப் அடிக்க, வம்சி நந்திபதி கேமராவை ஆன் செய்தார். தனிகில்லா பரணி படத்தின் திரைக்கதையை படக்குழுவினரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முழு படக்குழுவும் கலந்து கொண்டது.
இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். விவேக் அண்ணாமலை கலை இயக்குநராக இருக்கிறார்.
விழாவில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி பேசுகையில்: “அனைவருக்கும் என் வணக்கம். இயக்குநர் மெஹர் என் நண்பர். இந்த படத்திற்காக பல கதைகளை கேட்டேன். ஆனால் மெஹர் இந்த கதையை சொன்னவுடனே மிகவும் பிடித்தது. அருமையான திரைக்கதை. நடிகர்களுக்கு நடிப்பில் சிறந்த வாய்ப்புகள் உள்ள கதை இது. இந்த கதையை கேட்டவுடன் முதலில் பாபி சிம்ஹா அவர்கள்தான் நினைவுக்கு வந்தார். பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த வேளையில் அவரை அணுகி இப்படத்தின் கதையை கூறினோம். அவரும் கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்ததாக சொல்லி உடனே ஒப்புக்கொண்டார். அது எங்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. தயாரிப்பாளராக எந்த சமரசமும் இல்லாமல், கதைக்கு தேவையான அனைத்தையும் வழங்கி ஒரு சிறந்த படமாக உங்கள்முன் கொண்டு வருகிறோம்.”
இயக்குநர் மெஹர் யாரமாட்டி: “அனைவருக்கும் வணக்கம். இது இயக்குநராக எனது முதல் படம். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். எங்கள் முழு குழுவிற்கும் நன்றி.”
சூர்யா ஸ்ரீனிவாஸ்: “அனைவருக்கும் வணக்கம். பாபி சிம்ஹா அவர்களுடன் முதல் முறையாக வேலை செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஹெப்பா படேல் அவர்களுடன் மீண்டும் நடிப்பது சந்தோஷமாக உள்ளது. எங்கள் முழு குழுவிற்கும் நன்றி. இந்த படம் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.”
நடிகர் தனிகில்லா பரணி: “பாபி சிம்ஹா ஒரு சிறந்த நடிகர். அவர் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சூர்யா ஸ்ரீனிவாஸுடன் ‘ப்ரோ’ படத்தில் ஏற்கனவே நடித்துள்ளேன். மெஹர் இந்த படத்தை சிறந்த கதைக்களத்துடன் உருவாக்குகிறார். இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பாபி சிம்ஹாவுக்கு இது மிகவும் சவாலான கதாபாத்திரம்.”
ஹெப்பா படேல்: “அனைவருக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு சிறந்த கதைக்களத்துடன் ஒரு படம் கிடைத்துள்ளது. சூர்யாவுடன் இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. பாபி சிம்ஹா அவர்களுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும்.”
நாயகன் பாபி சிம்ஹா: “அனைவருக்கும் வணக்கம். ‘வால்டேர் வீரய்யா’ படத்திற்கு பிறகு உங்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தெலுங்கில் நாயகனாக ஒரு படம் செய்ய வேண்டும் என்று நினைத்தபோது பல கதைகளை கேட்டேன். ஒரு நல்ல கதைக்காக காத்திருந்த நேரத்தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்தார். கதையை கேட்டவுடன் மிகவும் பிடித்தது. இது ஒரு நடிகனாக எனக்கு சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. இதில் தாத்தா கதாபாத்திரம் உள்ளது. அந்த வேடத்தை பரணி அவர்கள் செய்கிறார் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருடன் நடிப்பது ஒரு பெரிய சந்தோஷம். ஹெப்பா ஒரு சிறந்த நடிகை. அவருடன் பணியாற்றுவதும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் நல்ல குழுவுடன் இந்த படத்தை செய்கிறோம். தயாரிப்பாளர் யுவா மிகவும் ஆர்வமுள்ளவர். இந்த கதை சவாலானதாக இருப்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். டிசம்பர் 22 முதல் விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களையும் வேண்டுகிறோம்.”