இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ஒன்றிணைத்திருப்பதுடன், உதடுகளுக்கு இடையே ஒரு ரோஜாப்பூவையும், கண்களில் கனல் கக்கும் தீப்பொறியையும், கைகளில் துப்பாக்கியையும் ஏந்தியபடி தோன்றும் ஷாருக்கானின் பிரமிக்க வைக்கும் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அத்துடன், ஆக்ஷன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அவரது மூர்க்கமான அவதாரத்தையும் இந்தப் போஸ்டர் பிரதிபலிப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
‘கொலையாளி அல்ல; நான் காதலன்!’ என்ற கவனம் ஈர்க்கும் வாசகத்துடன் வெளியாகியிருக்கும் இந்தப் போஸ்டர், ‘கிங்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருப்பதுடன், இந்த அவதாரத்தில் ஷாருக்கானை வெள்ளித்திரையில் கண்டு ரசிப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதற்கான மற்றொரு காரணத்தையும் அளித்திருக்கிறது.
இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்தத் திரைப்படத்தில் நடிகை கரீனா கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். சச்சித் பாலோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் மற்றும் சச்சின் – ஜிகர் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மார்ஃபிளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கௌரி கான், சித்தார்த் ஆனந்த் மற்றும் மம்தா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி, பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இதனிடையே, ‘பதான்’ படத்தின் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தொடர்ந்து, மீண்டும் ஷாருக்கான் – சித்தார்த் ஆனந்த் கூட்டணி அமைத்திருப்பதாலும், நடிகர் ஷாருக்கானின் மகளான சுஹானா கான் இப்படத்தின் மூலம் திரையுலகில் முழு நீள திரைப்படத்தில் அறிமுகமாவதாலும், ‘கிங்’ படத்திற்கு ரசிகர்களிடத்திலும் சர்வதேசத் திரையுலக வணிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) – டீசர் வெளியீடு
நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபேமிலி பாய்- Family Boy’ திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜிஜேந்திரன். V கவனிக்க, கலை இயக்கத்தை C. K. முஜிபுர் ரஹ்மான் மேற்கொண்டிருக்கிறார். உண்மை சம்பவத்தை தழுவி ஃபேமிலி டிராமா ஆக்சன் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மெக்கானிக் பிக்சர்ஸ் – (Mechanic Pictures) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மித்துன் மாணிக்கம் தயாரித்திருக்கிறார். அவருடன் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP – Milliennials Movie Production L L P நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் முஹம்மத் கனி ஃபைசல்- டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தில தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்… என தொடங்கும் இந்த டீசர், 2020 ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒரு நாள் பயணத்தில் நிகழும் சுவாரசியமான சம்பவங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும்…. இந்த டீசர் வெளிப்படுத்துகிறது. அத்துடன் இதன் பின்னணி இசை ,காட்சி அமைப்பு என அனைத்து அம்சங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால்.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கருவாகும். அனைத்து விதமான கமர்ஷியல் அம்சங்களுடன், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி, ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இந்திரஜா, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்படத்திற்கு ரீ-என்ட்ரி கொடுத்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு ,திருவனந்தபுரம், மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கட் ராஜன் படத்தொகுப்புப் பணிகளைக் கவனித்துள்ளார். உமா சங்கர் – ஜெயமுருகன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளனர். கவின் மூர்த்தி, சந்திரன் வசனங்களை எழுதியுள்ளனர். ஏ. ராஜா இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். மணி சந்திரா, விஜி நடன அமைப்பையும், ஃபீனிக்ஸ் பிரபு, மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர்.
‘மைலோ’ படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்ல நாயின் துணையுடன் 18 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றத்தின் மர்மத்தை நாயகன் கண்டறியும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபூடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் – டி-சீரிஸ் கூட்டணியில் தயாராகி, பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ‘ஃபௌஜி’ திரைப்படத்திலிருந்து, ‘ஃபைல் நம்பர் 25’ என்ற பெயரில் சக்திவாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தேசபக்தியின் காவியக் கதையாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
படைப்பாற்றல் மிக்க திரைப்பட இயக்குநரான ஹனு ராகவபூடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் பிரம்மாண்டமான பீரியட் ஆக்ஷன் திரைப்படமான ‘ஃபௌஜி’யில், ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி, Y. ரவிசங்கர், பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி தொடர்பான போஸ்டர்கள் ஏற்கெனவே ரசிகர்களிடையே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் ‘ஃபைல் நம்பர் 25’ எனும் சக்திவாய்ந்த புதிய முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இது அவரது கதாபாத்திரத்தின் அடையாளம், புத்திசாலித்தனம், அசாதாரணமான நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் அமைந்துள்ள இந்த முன்னோட்டம், 1942 மே 29ஆம் தேதி பெர்லினில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – அடால்ஃப் ஹிட்லர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புடன் தொடங்குகிறது. இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில், போஸ் ஜெர்மனியின் ஆதரவைக் கோருகிறார். இது, கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டு கால அடக்குமுறைக்குப் பிறகு சுதந்திரம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விறுவிறுப்பான உரையாடலுக்கு வழிவகுக்கிறது. இந்தியாவால் பிரிட்டிஷ் பேரரசை வெல்ல முடியுமா என்று ஹிட்லர் கேள்வி எழுப்புகிறார். அதற்குச் சுபாஷ் சந்திர போஸ், ‘சுதந்திரம் அடைவதற்கான உறுதியை ஒருபோதும் அணைக்க முடியாது’ என்று உறுதியாகக் கூறுகிறார்.
ராணுவ வலிமையைவிட உளவுத்துறை வலிமைமிக்கதாக நிரூபிக்க முடியும் என்று போஸ் வாதிடும்போது, இந்த உரையாடல் எதிர்பாராத சுவாரசியமான திருப்பத்தை அடைகிறது. தனது கருத்தை வலுப்படுத்தும் வகையில், கவனமாகத் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் மூலம் பிரிட்டிஷ் உளவுத்துறைக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவரும் ஓர் அசாதாரணமான இந்திய உளவாளியின் கதையை அவர் அறிமுகப்படுத்துகிறார். இந்த மர்மமான நபர், தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், ராணுவப் படைகளைத் திசைதிருப்பி, முக்கியப் பணிகளைச் சீர்குலைத்து, காலனித்துவ நிர்வாகத்தை மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாக முறியடித்தார் என கூறப்படுகிறது.
இந்தக் காட்சி, அந்தக் கதாபாத்திரத்தின் தனித்துவமான தகவல் தொடர்பு அமைப்பின் மூலம் அவருக்கு மற்றொரு வசீகரமான பரிமாணத்தை வழங்குகிறது. பகவத் கீதையால் ஈர்க்கப்பட்ட அந்த ரகசியக் குறியீடு, ஜெர்மனியின் ‘எனிக்மா’ குறியீட்டைவிடவும் புரிந்துகொள்வதற்கு மிகவும் கடினமானது என விவரிக்கப்படுகிறது. அந்த உளவாளியின் செல்வாக்கு அதிகரித்து வந்தபோதிலும், பிரிட்டிஷார் அவனது உண்மையான அடையாளத்தை அறியாமல் இருப்பதாக போஸ் வெளிப்படுத்துகிறார். இதன் மூலம், அந்த உளவாளி நிழலில் இயங்கும் ஒரு வலிமைமிக்க சக்தியாகச் சித்தரிக்கப்படுகிறார்.
‘ஃபைல் நம்பர் 25’ முன்னோட்டத்தின் மிகவும் ஈர்க்கக்கூடிய தருணங்களில் இந்த அடையாள வெளிப்பாடும் ஒன்றாகும். பிரிட்டிஷாரால் ‘ஃபௌஜி’ என அறியப்படும் அந்த வீரனின் உண்மையான பெயர் புதிராகவும் மர்மமாகவும் உள்ளது. 1932 முதல் காலனித்துவ அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் அவன், தனது தாய்நாட்டைப் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்ட அச்சமற்ற புரட்சியாளனாகச் சித்தரிக்கப்படுகிறான். பிடிபடாத அந்த உளவாளி தற்போது கல்கத்தாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்கிறான் என்றும் போஸ் விரிவாக எடுத்துரைக்கிறார்.
அந்தக் காட்சியின் இறுதியில் பிரபாஸின் அதிரடியான திரைத் தோற்றம் இடம்பெறுகிறது. காலனித்துவ அதிகாரத்திடம் சரணடைய மறுக்கும் இரக்கமற்ற புரட்சிவீரனாக அவர் உருமாறுகிறார். உதடுகளுக்கு இடையே ஒரு சிகரெட்டையும், கையில் ஒரு பெரிய துப்பாக்கியையும் ஏந்தியபடி, அவர் அப்பட்டமான ஆக்ரோஷத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகிறார். பிரிட்டிஷாருக்குக் கடுமையாகச் சவால் விடுக்கும் அவரது தோற்றம் இந்த முன்னோட்டத்திற்கு முன்னதாய் அமைகிறது. மேலும், இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய கம்பீரமான திரைத் தோற்றம் மற்றும் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளின் சிறு தொகுப்பையும் இந்த முன்னோட்டம் வழங்குகிறது.
உடல் வலிமை மற்றும் போர்க்களத்தின் வீரதீரச் செயல்களைக் கடந்து, கதாநாயகனைப் பரந்த கண்ணோட்டத்தில் கட்டமைக்க முயல்வதே ‘ஃபைல் நம்பர் 25’ முன்னோட்டத்தைத் தனித்துவமாக்குகிறது. ரகசிய நடவடிக்கைகள், உளவுப் போர், குறியீட்டுத் தகவல் தொடர்பு மற்றும் வெளிப்படுத்தப்படாத அடையாளம் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கதையில் சுவாரசியமான மர்ம அடுக்குகளை அறிமுகப்படுத்துகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியை இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் இணைப்பதன் மூலம், இந்த முன்னோட்டம் ‘ஃபௌஜி’யைத் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மையக் கதாபாத்திரமும் கொண்ட பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக நிலைநிறுத்துகிறது.
இயக்குநர் ஹனு ராகவபூடி வரலாற்றுத் தொடர்புகள், உளவு, தேசபக்தி மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பிரபாஸை வழக்கத்திற்கு மாறான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பது இந்த முன்னோட்டத்தின் மூலம் தெரியவருகிறது. இந்த முன்னோட்டம் கதாநாயகனின் உலகத்தைப் பற்றிய ஒரு சிறிய பார்வையை மட்டுமே வழங்குகிறது. அவரது தோற்றம், செயல்படும் விதம், பிரிட்டிஷ் பேரரசால் பிடிக்க முடியாத எதிரியாக அவரை உருவாக்கிய நிகழ்வுகள் ஆகியவை குறித்த பல கேள்விகளுக்கு இது விடையளிக்காமல் விட்டுவிடுகிறது.
‘ஃபௌஜி’ திரைப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அனுபம் கேர்,மிதுன் சக்கரபோர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுதீப் சட்டர்ஜி ISC ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை அனில் விலாஸ் ஜாதவ் கவனித்துள்ளார்.
இந்த முன்னோட்டம், விறுவிறுப்பான பீரியாடிக் ஆக்ஷன் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.
எழுத்து மற்றும் இயக்கம்: ஹனு ராகவபூடி தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்குபவர்கள்: குல்சன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y. ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி ISC இசை: விஷால் சந்திரசேகர் தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ் படத்தொகுப்பு: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் VFX: R. C. கமலக்கண்ணன் நடன இயக்குநர்: பிரேம் ரக்ஷித் ஆடை வடிவமைப்பாளர்கள்: ஷீத்தல் இக்பால் சர்மா, டி. விஜய் பாஸ்கர் மக்கள் தொடர்பு: யுவராஜ்
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புப் பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளது.
இப்படத்தை கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பையும், சேகர் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். அனுவர்தன் மற்றும் நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளர்களாகப் பணியாற்றுகின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார்.
கேமரா செந்தில் விளம்பரப் புகைப்படப் பணிகளையும், மணியன் படப்பிடிப்புத் தளப் புகைப்படப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். R.J. சுரேஷ் குமார் தயாரிப்பு மேலாளராகப் பணியாற்றுகிறார். கோபி பிரசன்னா விளம்பர வடிவமைப்பையும், சுரேன் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். சிவகாந்த் தலைமை இணை இயக்குநராகவும், தினேஷ்.E இணை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளைக் கவனிக்கிறார். பிரசாந்த் எக்செக்ட்யூவ் தயாரிப்பாளராகவும், சரத் J. சாமுவேல் இணைத் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தயாரித்து வரும் MRP Entertainment நிறுவனம், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பாக ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தை உருவாக்குகிறது. இப்படத்தை Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குகிறார்.
இப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
. VICTORIS has won the hearts of customers in its first year by setting the record for the highest cars sold during the 1st Year for a new model launch #1 . . As a tech-loaded SUV developed for digital natives, the VICTORIS has become the fastest-selling passenger vehicle in India to surpass both 1.5 lakh #2 and 1 lakh sales milestones #3 since launch. .To celebrate the milestones, Maruti Suzuki launches the VICTORIS AURUM Edition Strong Hybrid featuring unique styling elements that set it apart from the crowd this festive season. . The new VICTORIS AURUM Edition is styled with copper coloured inserts for the front, side, rear skid plate designs and wheel arches. A striking new range of chrome accessories garnish the front grille, fenders, bumpers, body side mouldings and door visors, along with new all-weather 3D cabin mats, a 3D boot mat and a rear trunk sill guard. . For the launch, Maruti Suzuki has teamed up with Bollywood icon Shahid Kapoor as the face of the VICTORIS AURUM Edition.
New Delhi, October 24, 2026: Maruti Suzuki India Limited (Maruti Suzuki) celebrates the first anniversary of the VICTORIS ‘Got it All’ SUV with the launch of the new AURUM Edition. Designed and developed for young, ambitious, tech-savvy customers, the VICTORIS has won the hearts of customers in its first year by setting a record for the highest cars sold during the 1st Year for a new model launch in the Passenger Vehicle (PV) category #1 . As a tech-loaded SUV developed for digital natives, the new celebratory VICTORIS AURUM Edition with Strong Hybrid technology and EV mode has been launched with a kit price of INR 22 990. Commenting on the launch of the Maruti Suzuki VICTORIS AURUM Edition, Mr. Partho Banerjee, Senior Executive Officer, Marketing and Sales, Maruti Suzuki India Limited, said, “Conceptualised as a ‘Got it All’ SUV for today’s dynamic young go-getters who ‘want it all’, the VICTORIS has truly won the hearts of buyers. As we celebrate its first anniversary, it’s worth noting that the VICTORIS has become the fastest- selling PV to clock both the 1.5 Lakh and 1 Lakh sales milestones, going on to achieve the highest sales for any car in India during its 1 st year of launch. Recognising these extraordinary achievements, we are introducing the VICTORIS AURUM Edition Strong Hybrid, with tasteful enhancements that are sure to grab eyeballs and make this festive season feel all the more special for our valuable customers. Our association with Shahid Kapoor, for the new AURUM Edition is also sure to complement the VICTORIS’ contemporary appeal.”
Press Release
Named after the Latin word for gold, AURUM reflects the VICTORIS’ golden first-year with record-breaking sales performance that has garnered industry-wide recognition. The introduction of the VICTORIS AURUM Edition with Strong Hybrid technology is sure to strike a chord with dynamic young customers who are early adopters of technology. The new Maruti Suzuki VICTORIS AURUM Edition has been curated with a unique design theme featuring copper coloured inserts for the front, side, rear skid plate designs and wheel arches. A striking range of chrome accessories for the front grille, fenders, bumpers, body side mouldings and door visors, along with new all-weather 3D cabin mats, a 3D boot mat and a rear trunk sill guard to set the VICTORIS AURUM Edition apart. Complementing the unique appeal of the new VICTORIS AURUM Edition is a tie-up with Bollywood icon Shahid Kapoor VICTORIS AURUM Edition—uniting one of Indian cinema’s most dynamic and versatile contemporary stars with the ultimate ‘Got it All’ SUV. Driven by relentless energy, a distinct sense of style, and a passion for premium lifestyle experiences, Shahid perfectly mirrors the vibe of today’s young India. He embodies a generation that refuses to compromise, is always moving forward. This raw synergy seamlessly aligns with the VICTORIS philosophy: engineered for those who demand more from life and live it loud. The VICTORIS’ unprecedented success has received significant recognition from the Indian Automotive Media Fraternity during its debut year. It received the prestigious Indian Car of the Year Award (ICOTY) 2026 and Car of the Year Awards from BBC Top Gear India, Car India Magazine, ABP Live Auto and Hindustan Times Auto. The Maruti Suzuki VICTORIS has received numerous awards across multiple categories from diverse juries, making it one of the most awarded vehicles of 2026.
கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ளனர்.
மகிழ் புரொடக்ஷன்ஸ் (Magizh Productions) சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கத்திலிருந்தே தனது புதுமையான விளம்பர முயற்சிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது.
ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். மேலும், கல்லூரிகளில் பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி இளைஞர்களிடையே படத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வித்தியாசமான புரமோஷன், அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தில் G. M. குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, வாழை ஜானகி, அமுதவாணன், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு, திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா மற்றும் பாலா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். படத்தைச் சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.
வழக்கமான விளம்பர முறைகளைக் கடந்து, ஒவ்வொரு கட்டத்திலும் வித்தியாசமான முயற்சிகளைக் கையாண்டு வரும் ‘துரோகம் பழகு’ படக்குழு, அடுத்ததாகப் படத்தின் டிரெய்லரை வெளியிடத் தயாராகி வருகிறது. டிரெய்லர் வெளியீட்டுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுமையான புரமோஷன் முயற்சிகளால் கவனம் பெற்று வரும் ‘துரோகம் பழகு’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
நா ஹாங்-ஜின் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்ட ஒரு அறிவியல் புனைவு (sci-fi) மற்றும் அரக்கர்கள் குறித்த திரைப்படமாகும்! மர்மமான உயிரினம் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரு கிராமப்புறச் சமூகத்தைச் சுற்றி இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது! அந்த உயிரினத்தின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு, உள்ளூர் காவல் துறைத் தலைவருக்கும் அவரது உதவியாளருக்கும் வந்து சேர்கிறது. அதிரடி, நாடகம், நகைச்சுவை, சிலிர்ப்பூட்டும் தருணங்கள் என அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த ஒரு கதையோட்டம் இதில் உள்ளது. சுருக்கம் ‘ஹோப் ஹார்பர்’ (Hope Harbour) எனும் சிறிய நகரத்தில் கதை நடக்கிறது. முள்வேலிகள், தடுப்புகள் மற்றும் கண்ணிவெடிகளால் சூழப்பட்ட அந்த நகரத்திற்கு, எல்லைக்கு அப்பாலிருந்து அல்ல, வானத்திலிருந்து ஆபத்து வருகிறது! வேற்றுலக உயிரினங்களின் படையெடுப்பால் அந்த நகரம் நிலைகுலைந்து போகிறது; மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாகிறார்கள்! எங்கும் ரத்தமும் குழப்பமும் நிறைந்த சூழலில், காவல் துறைத் தலைவர் பம்-சியோக் (ஹ்வாங் ஜங்-மின்) மற்றும் அவரது குழுவினரான சுங்-கி (ஜோ இன்-சுங்), சுங்-ஏ (ஹோயியோன்) ஆகியோர் அந்த அரக்கர்களை எதிர்த்துப் போராடத் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்கிறார்கள்!
வேற்றுலக உயிரினங்கள் ஏன் பூமியைத் தாக்கின என்பதற்கான காரணத்தை இந்தப் படம் வெளிப்படுத்தவில்லை; அதே சமயம், படத்தின் இறுதிக்காட்சி, இதன் தொடர்ச்சி (sequel) வரக்கூடும் என்பதற்கான குறிப்பை வழங்குகிறது! மைக்கேல் ஃபாஸ்பெண்டர், அலிசியா விகாண்டர் மற்றும் டெய்லர் ரஸ்ஸல் ஆகியோர் வேற்றுலக உயிரினங்களாக நடித்துள்ளனர். படக்குழு எழுத்து மற்றும் இயக்கம் – நா ஹாங்-ஜின்; நடிகர்கள் – ஹ்வாங் ஜங்-மின், ஜோ இன்-சுங், ஹோயியோன், மைக்கேல் ஃபாஸ்பெண்டர், அலிசியா விகாண்டர், டெய்லர் ரஸ்ஸல்; ஒளிப்பதிவு – ஹாங் கியுங்-ப்யோ; இசை – மைக்கேல் ஏபெல்ஸ். இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அமெரிக்காவில் வெளியான சர்வதேசத் திரைப்படங்களிலேயே, இந்தப் படம் மிகப்பெரிய தொடக்கத்தைப் (opening) பெற்றுள்ளது.
“கிளேஃபேஸ்” என்பது இயக்குனர் ஜேம்ஸ் வாட்கின்ஸ் இயக்கிய ஒரு திகில் திரில்லர் திரைப்படம். இதில், கோதமின் வில்லன் கூட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட, ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வில்லன் கதாபாத்திரத்தில் டாம் ரைஸ் ஹாரிஸ் நடித்துள்ளார். கோதம் தெருச் சிறுவனாக இருந்து ஹாலிவுட்டின் முன்னணி நாயகனாக உயர்ந்த மேட் ஹேகனின் அசுர வளர்ச்சி, ஒரு உள்ளூர் குற்றக் கும்பல் தலைவனின் செயல்களால் கோரமாக உருக்குலைந்து, சோகமாக முடிவுக்கு வருகிறது. தனது குழுவினரால் கைவிடப்பட்டு, எதுவும் மிச்சமில்லாத நிலையில், மேட் ஒரு அதிநவீன சிகிச்சையை நாடுகிறான். அது அவனை அற்புதமாக அவனது பழைய நிலைக்குத் திரும்பச் செய்கிறது… ஆனால் எதிர்பாராதவிதமாக, அது யதார்த்தத்தின் மீதான அவனது பிடிப்பையும் பாதித்து, அவனை அனைத்தையும் அழிக்கும் பழிவாங்கும் பாதையில் தள்ளுகிறது. இப்படத்தில் நவோமி ஆக்கி, டேவிட் டென்சிக், மேக்ஸ் மிங்கெல்லா மற்றும் எட்டி மார்சன் ஆகியோருடன் நான்சி கரோல் மற்றும் ஜோஷுவா ஜேம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். மைக் ஃபிளானகன் மற்றும் ஹொசைன் அமினி ஆகியோரின் திரைக்கதையிலிருந்து ஜேம்ஸ் வாட்கின்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இதன் கதையை ஃபிளானகன், டிசி கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். இப்படத்தை மேட் ரீவ்ஸ், லின் ஹாரிஸ், ஜேம்ஸ் கன் மற்றும் பீட்டர் சஃப்ரன் ஆகியோர் தயாரித்துள்ளனர், இவர்களுடன் மைக்கேல் இ. உஸ்லானும் இணைந்துள்ளார். சாண்டல் நோங் வோ, லார்ஸ் பி. வின்டர், பால் ரிட்சி, ராஃபி க்ரோன் மற்றும் ட்ரெவர் மேசி ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.
வாட்கின்ஸின் படைப்புக் குழுவில் ஒளிப்பதிவாளர் ராப் ஹார்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் ஜேம்ஸ் பிரைஸ், படத்தொகுப்பாளர் ஜான் ஹாரிஸ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் கீத் மேடன் ஆகியோர் அடங்குவர். வோல்கர் பெர்டெல்மேன் இசையமைத்துள்ளார்.
டிசி ஸ்டுடியோஸ் வழங்கும், 6த் & இடாஹோ தயாரிப்பான, ஜேம்ஸ் வாட்கின்ஸ் திரைப்படமான “கிளேஃபேஸ்”. இப்படம் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டு, அக்டோபர் 23, 2026 அன்று இந்தியாவில் உள்ள திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படும்.
New campaign brings together distinct personalities, quirky snacking habits and the
bonds that make every friend group special
Through relatable characters and a catchy musical narrative, Lotte PEPERO
celebrates individuality and the joy of belonging
Chennai, 22 October, 2026: Every friend group has its own characters. Different in their habits, personalities and preferences, they somehow fit together perfectly. Celebrating these familiar dynamics, Lotte India brings the spirit of friendship to life through its PEPERO campaign, ‘We Are All PEPEROs’, turning everyday snacking quirks into a playful expression of individuality and togetherness. Campaign film link: https://youtu.be/KHpoEVhGlQA Built around the insight that young people find a sense of belonging in their own circles of friends, the campaign draws a parallel between the many personalities in a friend group and the different ways of enjoying PEPERO, Lotte’s choco-coated biscuit sticks. Conceptualised by Dentsu Creative, the campaign turns these everyday preferences into a playful expression of individuality and togetherness. It celebrates the idea that being part of a group does not mean being the same. It is the differences that make every circle distinctive, memorable and fun. At the centre of the campaign is a vibrant, 65-second film that opens with a simple question: “Who are these PEPEROs?” Set to a catchy musical track, the film introduces a range of distinct personalities through their individual PEPERO-eating habits. Some prefer to start with the biscuit, saving the choco coating for later, while others go straight for the choco coating. Some enjoy their PEPERO all at once, while others savour every bite. Each habit becomes a playful identifier, making it easy to recognise the familiar characters within one’s own circle of friends. The film builds towards a shared refrain, bringing these different personalities together under one thought: We Are All PEPEROs! By placing PEPERO at the heart of these familiar moments, Lotte India connects the brand with the spontaneous interactions, shared laughter and sense of belonging that define young friendships. With ‘We Are All PEPEROs’, Lotte PEPERO builds on the idea that individuality and togetherness can go hand in hand. Rather than asking everyone to fit the same mould, the campaign celebrates the personalities that make each friend group its own. It also brings a playful dimension to the PEPERO snacking experience, positioning the product as a natural part of the moments friends share. Ms. Rachna Anbumani, Vice President and Head of Marketing, Lotte India Corporation Private Limited, said, “Our brief was clear. We wanted our campaign to introduce new audiences to PEPERO, making it an integral part of their friends’ gang. With relatable situations built around our ethos of friendship, love and sharing, we believe we have a film that brings ‘We Are All PEPEROs’ to life.” Indrajeet Mookherjee, President – Integrated Client Management, Dentsu added, “Here’s a film that sings its way into conversations. Centered around honest human connection, each situation leaves you thinking, ‘Hey, I know a friend like that!’ That’s what we want people to think of when they open a pack of PEPERO”.
The campaign is live across television, YouTube and social media platforms, introducing PEPERO to young consumers through a mix of music, relatable characters and everyday friendship moments. Different quirks. Different personalities. One shared bond. We Are All PEPEROs! About LOTTE India: LOTTE India Corporation Private Limited entered the Indian market post the takeover of Parrys Confectionery from Murugappa Group in 2004. LOTTE Wellfood Co., Ltd (formerly LOTTE Confectionery), the parent company of LOTTE India is part of the Korean conglomerate, LOTTE Corporation. The company is a respectable player in the confectionery space with strong brands like Coffy Bite, Coconut Punch, Caramilk, Lacto King, Joee, Lolly Bliss and Eclairs. With 24 CFAs and 4 regional offices, LOTTE India’s products reach out to over a million retail outlets through 2000+ distributors spread across the country. Apart from the two state-of-the-art, fully automated Choco Pie manufacturing facilities in Chennai and Rohtak, LOTTE India has its own confectionery manufacturing unit in Nellikuppam (near Pondicherry). Additionally, the company outsources its confectionery manufacture to seven other units spread across India. LOTTE India aspires to achieve leadership status in all categories it operates in.