October 6, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!

தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு கிடா விருந்தளித்து, பெரும் கோலாகலமாக படப்பிடிப்பு பணிகளை துவக்கியுள்ளது படக்குழு.

இந்நிகழ்வினில்

நடிகர் வடிவேலு பேசியதாவது…,

மாரனாடு கருப்பணசாமி கோயில் மிகவும் விசேஷமான ஒரு கோயில். இந்த ஊரில் பிறந்த ஒவ்வொருவருமே கருப்பசாமிதான். இவ்வளவு பெரிய கூட்டத்தையும், மக்களின் அன்பையும் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனுஷ் சாரின் படத்துக்கான பூஜை இவ்வளவு பெரிய விழாவாக நடைபெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே மாநாடு போல இருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. ஏன் இடையில் அவருடன் நடிக்கவில்லை என்று கேட்கலாம். சினிமாவில் சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும். இப்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.

இந்தப் படம் சாதாரணமான படம் இல்லை. எந்த அரசியல் தாக்கமும் இல்லாத, தனித்துவமான ஒரு படம். இந்தக் கதையை கேட்டபோது மிகவும் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இது மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய படம் என்று நான் நம்புகிறேன். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை; இன்னும் சில நாட்களில் தலைப்பு அறிவிக்கப்படும்.

மதுரை மண்ணில், அதுவும் மாரனாடு கருப்பசாமி கோயிலில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்கு என்றும் தேவை. இவ்வளவு பெரிய அளவில் வந்து இந்த பூஜையை சிறப்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது..,

வழக்கமாக படங்களின் பூஜையை சென்னையில்தான் நடத்துவார்கள். ஆனால், மாரனாடு கருப்பசாமியின் அருளோடும், உங்கள் அன்புக்கு முன்னாலும் இந்தப் படத்தின் பூஜை நடைபெறுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்காக தனுஷ் சார், இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

தமிழரசன் பச்சமுத்து ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தின் மூலம் சிறந்த உணர்வை உருவாக்கக்கூடிய ஒரு இயக்குநராக இருக்கிறார். ‘லப்பர் பந்து’ படத்திலேயே அவருடைய திறமை உங்களுக்கு தெரிந்திருக்கும். இப்போது D56 படத்திலும் அவர் பிரமாதமாக பணியாற்றியிருக்கிறார். நம்முடைய மண்ணின் கதையை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். இந்தப் படத்தில் வடிவேலு சார், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மிகச் சிறந்த டீம் ஒன்றை தமிழரசன் பச்சமுத்து சார் உருவாக்கியிருக்கிறார்.

கருப்பசாமியின் அருளோடும், உங்கள் அன்போடும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள். படத்தின் பூஜைக்கே இவ்வளவு பெரிய அளவில், மாநாடு போல வந்து ஆதரவு கொடுத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றி.”

நடிகர் தனுஷ் பேசியதாவது..,

இந்த பூஜை, இன்று பின்னால் இருக்கும் சாமியையும், முன்னால் இருக்கும் உங்களையும் நம்பித்தான் நடைபெறுகிறது. இன்று நான் அதிகம் பேச விரும்பவில்லை. அனைவரும் இங்கு நடைபெறும் கடா விருந்தில் வயிறார சாப்பிட்டு, பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

விரைவில் ஓம் படத்தின் ஆடியோ லாஞ்சில் உங்களை மீண்டும் சந்திப்பேன். இங்கு வந்து உங்கள் அன்பையும், ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இப்படத்தில் நடிகர்கள் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரித்தி முகுந்தன் மற்றும் விஜய்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இளம் தலைமுறையில் தனது இசையின் மூலம் கவனம் ஈர்த்து வரும் சாய் அபயங்கர், தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

D56 படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் நடிப்பு, தமிழரசன் பச்சமுத்துவின் தனித்துவமான கதை சொல்லும் பாணி, சாய் அபயங்கரின் இசை என பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள D56, ஆரம்பகட்டத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படப்பிடிப்பு தொடர்பான தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

SIMS Hospital Organises 5-Km Walkathon to Mark World Heart Day

Chennai, September 27, 2026: To commemorate World Heart Day, SIMS Hospital organised a five-kilometre walkathon, SIMS Rhythm of Life, from its premises in Vadapalani. Dr. Raju Sivasamy, Vice-President of SIMS Hospital along with Dr. K. Jai Shankar, Senior Director & Senior Consultant, Cardiology and Dr. T S Srinath, Director & Senior Consultant, Cardiology flagged off the walkathon.

More than 500 people aged between 16 and 70 actively participated in the walkathon, which covered the entire stretch of Arcot Road.

World Heart Day is observed annually across the globe on September 29, with the aim of educating the general public about cardiovascular diseases, particularly the importance of recognising their signs and symptoms. This year, the theme of the day is ‘Heart diseases can hide in plain sight: Don’t miss a beat’.

According to the World Heart Federation, one in three people die from heart disease, while one in five people die prematurely from the condition. Over 50% of babies born with cardiovascular diseases remain undiagnosed at birth. Despite heart disease being the leading cause of death globally, fewer than 20 countries have a dedicated standalone plan to tackle the disease.

Cardiologists reiterate that most heart diseases are preventable and that 80% of cardiovascular deaths are caused by risk factors that can be managed or prevented if diagnosed early. People can improve their overall heart health through small, consistent lifestyle changes.

Through the walkathon, SIMS Hospital aims to create awareness about cardiovascular health and encourage people to follow healthier lifestyles by incorporating regular physical activity into their daily lives and taking proactive steps towards maintaining a healthy heart.

In his comments, Dr. Ravi Pachamuthu said, “At SIMS Hospital, we believe that creating awareness is an important first step towards prevention. Through SIMS Rhythm of Life, we wanted to raise awareness about cardiovascular diseases among the general public. Though these diseases can affect people across age groups, many of the associated risk factors can be addressed through healthier lifestyle choices and timely medical intervention. We hope this walkathon encourages people to stay active, understand their heart-health risks, and make regular preventive health checks a part of their lives.”

Dr. Raju Sivasamy said, “At SIMS Hospital, we believe that healthcare extends beyond treating illness to creating greater awareness about prevention and healthy living. ‘SIMS Rhythm of Life’ is an effort to bring people together around a simple but important message that caring for our hearts begins with the choices we make every day. We are delighted to see the community come together to celebrate World Heart Day with this spirit of health and wellbeing.”

Dr. K. Jai Shankar, said, “Heart health is not something we shouldn’t be ignoring until a problem arises. Regular physical activity, a balanced lifestyle and timely health check-ups are vital to protect the heart. Through this walkathon, we want to encourage people to make movement and preventive heart care a part of their everyday lives.”

Dr. T. S. Srinath, said, “Every step we take towards a healthier lifestyle is a step towards a healthier heart. The rising burden of cardiovascular risk factors makes awareness and early prevention increasingly important. We are happy to bring the community together through this walkathon and reinforce the message that small, consistent changes can make a meaningful difference to heart health.”

‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன் வரும் சிக்கல்களைப் பேசுகிறது

இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Hi திரைப்படத்தைத் திரையிடத் தயாராகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட வகையில், நவீன உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்கும் அதே நேரத்தில், இதமான உணர்வுகளைத் தரும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

நயன்தாரா மற்றும் கவின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள Hi, நவீன கால உறவுகளை இதமான மற்றும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் அணுகுகிறது. எதிர்பாராத வகையில் இணையும் இந்த இரு திறமையான நடிகர்களின் திரை இணைவு, கதைக்கு தனித்துவமான ஈர்ப்பைச் சேர்க்கிறது. நயன்தாரா, வலிமையான, சுயாதீனமான பெண்ணாகவும், தனது கொள்கைகளில் உறுதியுடன் இருப்பவராகவும், அதே நேரத்தில் நிதானத்துடனும் நேர்த்தியுடனும் தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்துகிறார். கவின், உண்மையான மற்றும் அன்புக்குரிய இளைஞராக, தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மையின் மூலம் உடனடியாக ரசிகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் நடித்துள்ளார். இருவரின் நடிப்பும் ஒன்றுக்கொன்று அழகாக இணைந்து, கதாபாத்திரங்களை உண்மையானதாகவும் நினைவில் நிற்கக்கூடியதாகவும் உருவாக்குகின்றன.

விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படம், காதலில் ஏற்படும் ஏமாற்றங்கள் மற்றும் நிராகரிப்புகளுக்குப் பிறகும் காதலைத் தேடுவதில் விடாமுயற்சியுடன் இருக்கும் ஓர் இளைஞனையும், குடும்பச் சவால்களை எதிர்கொண்டு, விருப்பமில்லாத திருமணத்திலிருந்து தப்பிக்க முயலும் ஓர் இளம் பெண்ணையும் மையமாகக் கொண்டுள்ளது. இருவரும் சந்திக்கும் போது, ஏற்றுக்கொள்ளுதல், காதல் மற்றும் தன்னைத் தானே அறிதல் ஆகியவற்றை நோக்கிய இதயப்பூர்வமான பயணத்தைத் தொடங்குகின்றனர். இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தமிழ் திரையுலகின் மூத்த கலைஞர்களான ராதிகா சரத்குமார், மறைந்த நடிகர் கே. பாக்யராஜ் மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் தாக்கமிக்க நடிப்பு கதைக்கு கூடுதல் உணர்வுப்பூர்வமான ஆழத்தை வழங்குகிறது. புகழ்பெற்ற இயக்குநர், நடிகர் மற்றும் எழுத்தாளரான கே. பாக்யராஜ் அவர்களின் இறுதிக்காலத் திரைத் தோற்றங்களில் ஒன்றாக இப்படம் அமைந்திருப்பதும், இப்படத்தின் சிறப்பையும் நினைவில் நிற்கும் தன்மையையும் மேலும் அதிகரிக்கிறது.

புத்துணர்ச்சியூட்டும் கதை மற்றும் ரசிகர்களுடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள் மூலம், மாறிவரும் உலகில் காதல் மற்றும் உறவுகளை எதிர்கொள்ளும் ஒரு தலைமுறையின் அச்சங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை Hi பிரதிபலிக்கிறது. இதமான கதை சொல்லல் மூலம், அனைத்து வயதினரையும் கவரக்கூடிய வகையில், ஆழமான உணர்வுப்பூர்வமான அனுபவத்தை இப்படம் வழங்குகிறது.

டிரெய்லர் லிங்க் 🔗: https://youtu.be/LVmH0rgWZb8?si=Aj0kRE1SAJM2rXak

ZEE5 நிறுவனத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளுக்கான பிசினஸ் ஹெட் லாயிட் சி. சேவியர் கூறுகையில்,

“தமிழ் ZEE5-ல், ரசிகர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் நீண்ட நாட்கள் நினைவில் நிற்கும் அனுபவங்களை வழங்கக்கூடிய பல்வேறு கதைகளைத் தொடர்ந்து தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம். நயன்தாரா மற்றும் கவின் தலைமையிலான சிறப்பான நட்சத்திரப் பட்டாளம், புத்துணர்ச்சியூட்டும் கதை மற்றும் படம் முடிந்த பின்னரும் மனதில் நீடிக்கும் உணர்வுகளைத் தரும் Hi, எங்களது வளர்ந்து வரும் திரைப்படத் தொகுப்பில் ஒரு சிறப்பான இணைப்பாக அமைந்துள்ளது. சமகாலச் சூழலிலும் கருப்பொருள்களிலும் கதை அமைந்திருந்தாலும், இப்படத்தின் கதையில் இருக்கும் அன்பும் எளிமையும் இதை மிகவும் இதமான அனுபவமாக மாற்றுகிறது. நவீன உறவுகளைப் பற்றிய கதையை உண்மைத்தன்மையுடனும் நகைச்சுவையுடனும் கூறுவதோடு, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதே Hi திரைப்படத்தின் தனிச்சிறப்பு. Hi திரைப்படத்தை தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாகத் திரையிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ஒரு இனிமையான திரைப்படமாக இப்படத்தை அவர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.”

நயன்தாரா கூறுகையில்,

Hi திரைப்படத்தில் நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் சுயாதீனமானவர், மன உறுதி கொண்டவர் மற்றும் தனது கொள்கைகளில் ஆழமாக நம்பிக்கை கொண்டவர். அதே நேரத்தில், அவருக்கென சொந்தமான அச்சங்களும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களும் உள்ளன. வலிமைக்கும் பலவீனத்திற்கும் இடையிலான அந்த சமநிலையே இந்த கதாபாத்திரத்தை எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியது. தான் நேசிப்பவர்களைப் பாதுகாப்பவர், தனது முடிவுகளில் மிகவும் கவனமாக இருப்பவர், அதே நேரத்தில் மனதைத் திறப்பது சவாலாக இருந்தாலும் அழகான அனுபவமாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்பவர்.

இன்றைய உலகில் காதலைப் பற்றிய மிகவும் எளிதில் தொடர்புகொள்ளக்கூடிய கதையை இப்படம் சொல்வதால், Hi திரைப்படம் எனக்கு மிகவும் நெருக்கமானது. இருவரும் தங்களுக்கிடையேயான வேறுபாடுகள், பாதுகாப்பின்மை மற்றும் அச்சங்கள் ஆகியவற்றைக் கடந்து, ஏற்றுக்கொள்ளுதலையும் துணையையும் தேடி ஒன்றிணைவதை இப்படம் பேசுகிறது. உறவுகளை எதிர்கொள்ளும்போது நாம் சந்திக்கும் உள்மனப் போராட்டங்களையும், குடும்பத்திலிருந்து வரும் அழுத்தங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளையும் இப்படம் அழகாகப் பதிவு செய்கிறது. அதனால்தான் இப்படம் மிகவும் உண்மையானதாகவும் அனைவருக்கும் பொதுவானதாகவும் உணரப்படுகிறது. விஷ்ணு எடவனுடன் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அவர் கதை சொல்லலில் மிகுந்த உணர்வுப்பூர்வமான அணுகுமுறையையும் நேர்மையையும் கொண்டுவந்தார். மேலும், இப்படத்தில் என்னுடன் இணைந்து நடித்த சிறப்பான நடிகர்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியளித்தது. அவர்களின் நடிப்பும், ஒருவருக்கொருவர் கொண்டிருந்த நட்பும் இப்படத்திற்கு மிகுந்த உயிரோட்டத்தையும் உணர்வையும் சேர்த்துள்ளன. இந்த கதாபாத்திரங்களில் ரசிகர்கள் தங்களது ஒரு பகுதியைப் பார்ப்பார்கள் என்றும், இப்படம் வழங்கும் அன்பு, நேர்மை மற்றும் நம்பிக்கையுடன் அவர்கள் தொடர்புகொள்வார்கள் என்றும் நான் நம்புகிறேன். இந்த இதயப்பூர்வமான பயணத்தை ரசிகர்கள் தங்களுக்காகவே அனுபவிக்க வேண்டும் என்பதில் நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். Hi திரைப்படத்தை தமிழ் ZEE5-ல் ரசிகர்கள் பார்க்கப் போவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.”

கவின் கூறுகையில்,

“Hi திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், தனது உணர்வுகளை மறைக்காமல், உணர்வுப்பூர்வமாக நேர்மையாகவும், தனது மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்காத ஒரு கதாநாயகனை இப்படம் அறிமுகப்படுத்துவதுதான். ஆண்கள் தங்களது உணர்வுகளை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் உலகில், எனது கதாபாத்திரம் தனது உணர்வுகளை வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறான். அதுவே அவனை மிகவும் உண்மையானதாகவும் ரசிகர்களுடன் எளிதில் தொடர்புகொள்ளக்கூடியவராகவும் மாற்றுகிறது. காதல், நிராகரிப்பு, தன்னம்பிக்கையின்மை மற்றும் தான் போதுமானவராக இல்லாமல் போய்விடுவோமோ என்ற அச்சம் ஆகியவற்றைக் கடந்து செல்லும் ஓர் இளைஞன், அதே நேரத்தில் அர்த்தமுள்ள ஒரு உறவைத் தேடும் நம்பிக்கையையும் கைவிடாமல் இருக்கிறான்.

உறவுகளின் உணர்வுப்பூர்வமான ஏற்றத் தாழ்வுகளை உண்மைத்தன்மையுடனும் இதமான உணர்வுடனும் இப்படம் பதிவு செய்வதே இதன் சிறப்பு. எனது கதாபாத்திரம் மேற்கொள்ளும் பயணம், அவன் எடுக்கும் முடிவுகள், தான் நேசிக்கும் பெண்ணின் அன்பைப் பெற அவன் எதிர்கொள்ளும் போராட்டங்கள் ஆகியவை இன்றைய இளம் தலைமுறையினருடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்தும். இயக்குநர் விஷ்ணு எடவன் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாக சமநிலைப்படுத்தி, இதயப்பூர்வமான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஜென் மார்ட்டினின் இனிமையான இசையும், உணர்வுகளை வெளிப்படுத்தும் பின்னணி இசையும் கதையை மேலும் உயர்த்துகின்றன. அதேபோல், ‘ரசகுல்லா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் உற்சாகமான இசையும் எளிதில் மனதில் பதியும் மெட்டும் அனைவரையும் ரசித்து ஆட வைத்த பாடலாக அமைந்தது. Hi திரைப்படத்திற்கு ஏற்கனவே கிடைத்திருக்கும் அன்பும் பாராட்டும் எங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இப்போது இன்னும் அதிகமான ரசிகர்கள் இந்தச் சிறப்பான கதையை தமிழ் ZEE5 மூலம் அனுபவிக்கப் போவதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.”

ரசிகர்கள் இந்தப் புத்துணர்ச்சியூட்டும் காதல் திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாக காணலாம்.

‘Hi’ திரைப்படம் 25 செப்டம்பர் 2026 முதல் தமிழ் ZEE5-ல் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.

மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு

ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 7 எபிசோடுகள் கொண்ட Tamil Zee 5 Original தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

தேசியம், செப்டம்பர் 18, 2026: பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் Tamil Zee 5, தற்போது ‘Octopus’ எனும் பரபரப்பான Suspense Thriller தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், மர்மம், உணர்வு மற்றும் சுவாரஸ்யத்தை ஒன்றிணைக்கிறது.

ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட Tamil Zee 5 Original தொடராகும். இதில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு இளம் பெண் காணாமல் போனதைத் தொடர்ந்து, அந்த உண்மையை கண்டறிய ஒரு நெருக்கமான அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர். இந்த தேடல், மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிக்கொண்டு வரும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மர்மம், உணர்வுகள் மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

Tamil Zee 5-ன் சமூக வலைதளங்களில் ‘Octopus’ தொடரின் Launch Promo வெளியானது முதல், இந்தத் தொடர் ஆன்லைனில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. சுவாரஸ்யமான கதைக்களம், ரசிகர்களின் யூகங்கள், கணிப்புகள் என இயல்பான டிஜிட்டல் உரையாடல்களையும் உருவாக்கியுள்ளது.

வெறும் Suspense Thriller ஆக மட்டுமின்றி, நம்பிக்கை, உறவுகள், மன உறுதி மற்றும் மனிதர்களுக்கிடையேயான உறவின் நீடித்த சக்தி உள்ளிட்ட பல்வேறு முக்கியமான கருப்பொருள்களையும் ‘Octopus’ ஆராய்கிறது. அன்றாட வாழ்க்கையின் உண்மைத் தன்மையில் வேரூன்றிய இந்தத் தொடர், ஆழமான உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ளது. இறுதிவரை என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், மர்மத்தை தொடர்ந்து தக்கவைக்கும் விதத்திலும் இந்தத் தொடர் அமைந்துள்ளது.

Launch Promo Link: https://youtu.be/0LenE_VyLl0?si=_uDohvGGj789TH05

Lloyd C. Xavier, Business Head – Tamil, Telugu & Malayalam, Zee 5 கூறுகையில்:
“Launch Promo-விற்கு கிடைத்துள்ள வரவேற்பால் நாங்கள் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளோம். மேலும்,‘Octopus’ தொடரின் பரபரப்பான உலகத்தை பார்வையாளர்கள் அனுபவிக்கப் போவதை நினைத்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்.

தமிழ் பார்வையாளர்கள் நீண்ட காலமாக Crime Mysteries மற்றும் Investigative Thrillers போன்ற கதைகளை வரவேற்று வருகின்றனர். ‘Octopus’ இந்த வகை கதைகளுக்கு ஒரு புதிய கோணத்தை வழங்குகிறது. ஒரு பெண்ணை கதையின் மையத்தில் வைத்து, நெருக்கடியான சூழ்நிலையில் ஒரு ஒட்டுமொத்த சமூகமும் எவ்வாறு ஒன்றிணைகிறது என்பதை இந்தத் தொடர் எடுத்துக்காட்டுகிறது.

வலுவான கதைக்களம், உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மற்றும் திறமையான நட்சத்திரக் குழுவுடன்,‘Octopus’ ஒரு பரபரப்பான மற்றும் ஆழமான பார்வை அனுபவத்தை வழங்கும். இந்த தனித்துவமான கதையை Tamil Zee 5 மூலம் பார்வையாளர்களிடம் பிரத்தியேகமாக கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்கள் தங்களை இணைத்துக்கொண்டு, அவர்களின் பயணத்தில் ஈடுபட்டு, மர்மம் படிப்படியாக வெளிப்படும் போது உண்மையை கண்டறியும் அனுபவத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.”

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி கூறுகையில்:
“COVID ஊரடங்கின் போது நான் ‘Octopus’ கதையை எழுதினேன். அந்தக் காலகட்டத்தில் நாம் அனைவரும் மூடப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அக்கம்பக்கச் சூழலில் வாழ வேண்டியிருந்தது. நாம் பார்ப்பது எப்போதும் உண்மையில் இருப்பதைப் பிரதிபலிப்பதில்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அனைத்திற்கும் பொருந்தும் – மனிதர்கள், உறவுகள், சமூகம் மற்றும் அவற்றுக்குள் இருக்கும் ஆழமான அடுக்குகள்.

இந்தக் கருப்பொருளை பல்வேறு பரிமாணங்களுடன் கூடிய ஒரு பெரிய களத்தில் ஆராய விரும்பினேன். ஒரு மர்மத்தையும் ஒரு பெண்ணையும் கதையின் மையத்தில் வைத்தது, நாங்கள் ஆராய விரும்பிய கருப்பொருள்களுக்கு மேலும் ஆழத்தைச் சேர்த்தது. ஒரு மர்மமான காணாமல் போதலில் தொடங்கும் கதை, Octopus-ன் கரங்களைப் போல எதிர்பாராத திசைகளில் விரிவடைகிறது.

Tamil Zee 5 தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட, தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களை உருவாக்கி வருகிறது. Zee5-ல் ‘Octopus’ தொடரை பார்வையாளர்கள் அனுபவிக்கப் போவதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.”

Cinemum நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் Adithya J Raju மற்றும் Lisha P Chandran கூறுகையில்:
“Cinemum-ல், சினிமாவின் எதிர்காலம் புதிய குரல்களுக்கு சொந்தமானது என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நோக்கத்தின் பெருமைக்குரிய பிரதிபலிப்பாக ‘Octopus’உள்ளது. வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிப்பதும், புதிய திறமைகளுக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதும் எங்களது பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

எங்களது நடிகர்களின் இடைவிடாத ஆதரவுக்கும், ஒவ்வொரு காட்சியையும் உருவாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நான் ஆழ்ந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களது இயக்குநர் அழகான, உணர்வுப்பூர்வமாக ஈர்க்கக்கூடிய திரைக்கதையை உருவாக்கியுள்ளார். எங்களது DOP அந்தக் கற்பனையை அற்புதமான காட்சிகளாக மாற்றி, கதை சொல்லலை உண்மையிலேயே உயர்த்தியுள்ளார்.

இப்போது பார்வையாளர்களின் எதிர்வினையை அனுபவிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். ஏனெனில் சிறந்த சினிமா துணிச்சலில் தொடங்குகிறது, ஆனால் அது பார்வையாளர்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்கிறது.‘Octopus’ ஒரு தொடர் மட்டுமல்ல; ஆர்வமும் நோக்கமும் ஒன்றிணையும்போது மறக்க முடியாத கதைகள் பிறக்கின்றன என்பதற்கான சான்றாகும்.”

அர்ச்சனா கூறுகையில்:
“‘Octopus’ தொடரில் என்னை மிகவும் கவர்ந்தது, அதன் பரபரப்பான கதைக்குள் இருக்கும் உணர்வுப்பூர்வமான உலகம். எனது கதாபாத்திரம் ஒரு மர்மத்தின் மத்தியில் சிக்கிக் கொள்வது மட்டுமல்ல; அவளது பயணம் ஒரு முழு அக்கம்பக்கத்தினரையும் இணைக்கும் ஒரு நூலாக மாறுகிறது. மேலும், பல மறைக்கப்பட்ட உண்மைகள் படிப்படியாக வெளிவருவதற்கும் அது வழிவகுக்கிறது.

அதன் மையத்தில், இந்தத் தொடர் ஒரு பெண் தனக்கான ஒரு இடத்தை கண்டுபிடிப்பதைப் பற்றியும், அவள் காணாமல் போகும் போது அவளைச் சுற்றியுள்ள மக்கள் ஒன்றிணைவதைப் பற்றியும் பேசுகிறது. நம்பிக்கை, உறவுகள், உள்ளுணர்வு மற்றும் பதில்களைக் கண்டறியும் உறுதி ஆகியவற்றை இந்தத் தொடர் ஆராய்கிறது. அதே நேரத்தில், பார்வையாளர்களை தொடர்ந்து யூகிக்க வைக்கிறது.

பல உணர்வுப்பூர்வமான அடுக்குகளைக் கொண்ட ஒரு கதையில் கதாநாயகியாக நடிப்பது எனக்கு மிகவும் நிறைவான அனுபவமாக இருந்தது. இப்போது ‘Octopus’ Tamil Zee 5 மூலம் பார்வையாளர்களை சென்றடையப் போவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.”

அஷ்வின் கூறுகையில்:
“ZEE5-ல் ஸ்ட்ரீமாகவுள்ள ‘Octopus’ தொடரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். மனிதர்களின் நடத்தை, உறவுகள் மற்றும் நாம் வாழும் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களை ஆராயும் ஒரு கதையின் பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தத் தொடரில் என்னை மிகவும் ஈர்த்தது அதன் வலுவான எழுத்தும், ஒரு தம்பதியின் உலகத்திலிருந்து முழு அக்கம்பக்கத்தின் பெரிய இயக்கவியலுக்கு கதை விரிவடையும் விதமும் தான். கடந்த காலங்களில் சிறப்பாக எழுதப்பட்ட சில தமிழ் திரைப்படங்களை நினைவூட்டும் ஒரு தனித்துவமான சுவை இதில் உள்ளது. அதே நேரத்தில், இது ஒரு புதிய பார்வையையும் வழங்குகிறது.

இத்தகைய வலுவான எழுத்து, பார்வை மற்றும் செயலாக்கம் ஒன்றிணைந்திருப்பதால்,‘Octopus’பார்வையாளர்களுக்கு ஒரு புதிய கதை சொல்லல் அனுபவமாக இருக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.”

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய,  மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்  சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார்.

இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது,

“இந்தப் படம் எடுக்க முடிவு செய்வதற்குக் காரணம் கதை தான் . கதை பிடித்துப் போய் தான் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தோம். அந்த அளவுக்குத் தரமாக இருந்தது. பிறகு நல்லதொரு ஒரு புத்திசாலித்தனமான குழுவினர் அமைந்தார்கள். கனவுப் படம் போலவே இந்தப் படக்குழுவையும் கனவுப் படக்குழு என்று  கூறலாம் .

என் தம்பிக்கும் எனக்கும் எப்போதும் நல்ல ஒரு நல்லிணக்கம் இருக்கும். நான் தான் அதிகமாக ஏதாவது பேசிக்  கொண்டிருப்பேன்.  செய்து கொண்டிருப்பேன். நாங்கள் இருவரும்  எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம் .எந்த விஷயத்திலாவது எனக்குச் சந்தேகம் வந்தால் தம்பி தான் ஓகே சொல்வார் .அசோக் நடித்திருக்கும் கதை, பாத்திரங்களை வைத்து அவர் சீரியஸான ஆள்  என்று நினைக்க வேண்டாம். நாங்கள் எப்போதும் பேசி சிரித்துக் கொண்டே இருப்போம். நான் எதையும் இரண்டு முறை சொன்னால் அவர் கேட்டுக் கொள்வார் .நானும் அப்படித்தான். அசோக்  எனது சகோதரன் மட்டுமல்ல நல்ல நண்பனும் கூட. ’அன்பில் அவன்’ படத்தின் கதை அன்புள்ள தம்பதிகள் சிக்கலிலிருந்து எப்படி போராடி மீள்கிறார்கள் என்பதுதான். நமக்கு இப்படி ஒருவர் கணவராகக் கிடைக்க மாட்டாரா என்று நிறைய பேர் ஆசைப்படும்படியாக அந்தப் பாத்திரம் இருக்கும்”என்றார்.

ஐங்கரன்  இன்டர்நேஷனல் சார்பில் அதன் விளம்பர இயக்குநர் கவிதா பாண்டியன் பேசும்போது,

“இந்தப் படம் எனது மனதுக்கு நெருக்கமான படம் .இந்தப் படத்தில் நடித்தவர்கள், படக் குழுவினர், அவர்கள் செய்கிற முயற்சிகள் எல்லாம் பார்த்து வியப்பாக இருந்தது. நான் எங்கள் கருணாமூர்த்தி சார் சார்பில் வந்தேன்.  அசோக் செல்வன்  இப்படத்தில் அற்புதமாக  நடித்திருக்கிறார். அவர் என் சகோதரனாக மட்டுமல்ல நண்பராகவும் இருப்பவர். நாங்கள் இரட்டையர் போல் இருப்போம். அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் ” என்றார்.

நட்புக்காக வந்திருந்த நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசும்போது,

“இந்தப் படத்தின் டிரெய்லர், டீசர் எல்லாமும் பார்த்து மகிழ்ந்தேன். எல்லாம் பிரமாதமாக இருக்கின்றன. என்னுடைய நண்பன் அசோக் செல்வன். கனவுக் காதலன் என்று சொல்வது போல அவரைக் கனவு நண்பன் என்று சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம். அவரிடம் பேசினாலே நமது பிரச்சினைகளை  மறக்கச் செய்து விடுவார் .அவரது நட்பை நினைத்து, நான் பாக்கியம் செய்ததாக நினைக்கின்றேன்.இந்தப் படம் பிரமாதமாக வந்திருக்கிறது .அதில் ஒரு மேஜிக் இருக்கிறது. இதில் ஒலி அமைப்புகள் கூட நன்றாக இருக்கின்றன” என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது,

“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அசோக் செல்வனுடன்  அவரது முதல் படத்தில் இருந்து பெரும்பாலான படங்களில்  நாங்கள் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. கோவிந்த் வசந்தா எங்கள் கலைஞரைப் போன்றவர். இதில் அவரது ஐந்தாறு பாடல்கள் வந்துள்ளன. அதில் ‘ஆசை வரமே’ ,’கல்லா நிக்கிறியே’ பிரமாதமான வெற்றி பெற்றுள்ளன.

கோவிந்த் வசந்தா  ஓராண்டுக்கு முன்பே சொன்னார். இந்த ஆல்பம் பெரிய வெற்றி அடையும் என்று ,அது போலவே வெற்றியடைந்திருக்கிறது.படத்தில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார்கள்.அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன்  நன்றாக நடனமாடி நடித்துள்ளார்கள்.கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத விதமாக இருக்கும். திங்க் மியூசிக்கிற்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி” என்றார்.

படத்தொகுப்பாளர் ஆர் கே செல்வா பேசும் போது,

“நான் அசோக்செல்வன் மூலம் தான் இந்தப் படத்திற்குள் வந்தேன். நாங்கள் இருவரும் கல்லூரித் தோழர்கள்.இந்தப் படம்  இரண்டு பேர் சம்பந்தப்பட்ட கதை கொண்ட படம் .அசோக் செல்வனைப்போல ப்ரீத்திக்கும்  சமமான பாத்திர வாய்ப்பு உள்ளது. கதையை விக்னேஷ் ராஜா பிரமாதமாக எழுதியிருக்கிறார். கோவிந்த் வசந்தா இசை நன்றாக உள்ளது .முதலில் மூன்று பாடல்கள் என்று இருந்தது இப்போது ஆறாக மாறி உள்ளது.அசோக்செல்வனுடன் இணைந்து  குறும்படம் செய்தோம். இன்று அவர் பெரிய நடிகராக வளர்ந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. பெரிய அளவிற்கு வளர்ந்துள்ளார்” என்றார்.

ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் பேசும்போது,

“முதலில் அபி அக்காவுக்கு நன்றி .என்னை நம்பி  இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக இயக்குநர் கார்த்திக்கிற்கு நன்றி .என்னைப் பல்வேறு சோதனை முயற்சிகளில் ஈடுபட சுதந்திரம் கொடுத்ததற்காக நன்றி. அசோக் அண்ணாவிடம் பலவற்றைக் கற்றுக் கொண்டேன் .அவர் கொடுத்த நம்பிக்கை தான் என்னைச் சிறப்பாகப் பணியாற்றி வைத்தது “என்றார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது,

” அசோக் ஒரு நடிகராக நடித்து  நிறைய படங்கள் நமக்குக் கொடுத்திருக்கிறார். நிறைய வெற்றியும் பெற்றுள்ளன. இப்போது பெரிய நடிகராக வளர்ந்திருக்கிறார். அவரது எல்லா முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள். சண்டைக்காட்சியில் 70 அடி உயரத்தில் இருந்து குதித்தேன் என்றார். அதற்கு ஆதாரமாக ஆவணப்படுத்தி இருக்கிறீர்களா? என்று நான் கேட்டேன். அவர் அப்படிக் குதித்ததில் ஆச்சரியம் இல்லை .ஏனென்றால் அவ்வளவு துணிவு மிக்கவர். அவர் பலருக்கும் தூண்டுதலாக இருப்பவர்.நிஜமான சாதனை நிஜமான சாகசங்கள் செய்பவர்.

பிரீத்தி முகுந்தன் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார் .தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். அர்ப்பணிப்புள்ள நடிகை. அபி அக்கா திறமையானவர். திறமைசாலிகளை இணைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தை வாழ்த்துபவர்கள் பட்டியலில் நானும் இருப்பதில் மகிழ்ச்சி.  கோவிந்த் வசந்தாவின் இசை பெரிய வெற்றி பெற்றுள்ளது. அனைவரும்  இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் பான் இந்தியா நட்சத்திரமாக அசோக் செல்வன் வருவார் என்று நம்புகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசும்போது,

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ரசித்து செய்த படம் என்று இதைச் சொல்லலாம்.இந்தப் படத்தில் பணியாற்றியது  மகிழ்ச்சியான அனுபவம்.நான் பணியாற்றியதில் 99 சதவீதப் படங்கள் முதல் முறை படம் இயக்கும் இயக்குநர்களுடன் தான். அவற்றில்நான் பல பாடல்களைத் தந்திருக்கிறேன் என்றாலும் பலரும் சிறந்த தொழில்நுட்ப கலைஞராக வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பலரும் சிறந்த தொழில்நுட்பத் திறமைசாலிகள்.நம்பிக்கை அளிக்கும் தரத்தில் இந்தப்  படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

கதாசிரியரும் ‘ போர் தொழில்’ இயக்குநருமான விக்னேஷ் ராஜா பேசும்போது ,

” ஓர் எழுத்தாளராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் கார்ப்பரேட் பிலிம்ஸ் படங்கள் எடுத்திருக்கிறேன் .அந்த சமயத்தில் நாங்கள் வட இந்தியாவில் ஜெய்ப்பூர் பக்கம் காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது  நல்ல மழை பெய்தது. காரின் மேல் உள்ள சாதனங்கள் எல்லாம் நனைந்து விடப் போகிறது என்று அந்த இன்னோவா காரை ஓரம் கட்டி விட்டு அருகில் கிடைத்த பிளக்ஸ் பேனரை உடைத்து வைத்துக் கட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தோம். அந்த பிளக்ஸ்  பேனரில் இருந்தது யார் என்று நாங்கள் பார்க்கவில்லை. அதனால் நாங்கள் பெரிய பிரச்சினையில்  சிக்கிக் கொண்டோம். அதுதான் இந்தக் கதையின் முதல் விதை. இது ஒரு காதல் கதை. கனவு  கண்ட வாழ்க்கை வாழ நினைக்கும் தம்பதியினர்  சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சொல்லும் கதை.

அபிநயா, அசோக் செல்வன் என்று வந்து பிறகு கார்த்திக் வந்தார். நான் கற்பனை செய்ததை விடப் படம் பிரமாதமாக வந்திருக்கிறது. அசோக் செல்வன் எனக்கு 15 ஆண்டுகாலப் பழக்கம். அப்போது நாங்கள் ‘மிஷன் இம்பாசிபிள்’ படம் பார்த்துவிட்டு அதைப்போல பேசிப் பார்ப்போம். எனது முதல் படத்தில் முதல் கதாநாயகன் அவர்தான். இப்போது குடும்பம் போல் ஆகி இருக்கிறோம். நானும் அவரும் தெருத்தெருவாக ஓடி அலைந்திருக்கிறோம்.அவரை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது” என்றார்.

வில்லனாக நடித்திருக்கும் கதிர்பாலு பேசும் போது,

” இந்தப் படம் எடுக்கும் போதே தெரிந்தது படம் எவ்வளவு நன்றாக வரும் என்று .கோவிந்த் வசந்தா வின் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.இதில் ஒரே ஷாட்டில் காட்சி எடுத்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால் எல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட சண்டைக் கலைஞர்களை வைத்து எடுத்திருப்பார்கள் .ஆனால்  இதில் அப்படி அல்ல. ஆனாலும் அந்தக் காட்சியை எடுத்திருக்கிறார்கள் .அது பாராட்டும் படி இருக்கும். என்னைத் தேர்வு செய்ததற்கு அசோக் செல்வன் ,அபிநயா, இயக்குநர் மூன்று பேருக்கும் நன்றி “என்றார்.

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் மகன் மஹா டெல்லி கணேஷ் பேசும்போது,

“முதலில்  வாய்ப்புக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். படத்தில் சிரமமான நெருக்கடியான காட்சிகளை  எடுக்கும் போது   கூட அந்த அசௌகரியத்தை பொருட்படுத்தாமல் முகம் சுளிக்காமல் ப்ரீத்தி முகுந்தன் நடித்தார், அவருக்கும் நன்றி. சந்தேகம் வரும் போதெல்லாம் இயக்குநர் வந்து எங்களுக்கு தெளிவுபடுத்தினார்.  அதற்குப் பக்க பலமாக படக்குழு இருந்தது .பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக வந்திருக்கிறது. அவர் இயக்கத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது” என்றார்.

இன்னொரு வில்லன் நடிகர் சபு மோன் பேசும்போது,

“நான் கேரளாவில் இருந்து  தமிழ்நாடு வந்திருக்கிறேன். இங்கு நான் மலையாளம் பேசக்கூடாது என நினைத்தேன். கேரளாவில் பிறந்தாலும்  சிறுவயதில் எல்லைப் பகுதியில் இருந்தேன். அதனால் எனக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும். எனக்குத் தமிழ் பிடிக்கும். தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்கள், தமிழ் சினிமா எல்லாமே எனக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் குடும்பம் போல நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். முன்பே தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் இது முக்கியமான மறக்க முடியாத அனுபவம் .அசோக் செல்வன், கார்த்திக்  என்று  எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.

நான் சாதுவான ஆள். ஆனால் கொடூரமானவனாக நடித்திருக்கிறேன்.அதைவிட படப்பிடிப்பின் போது என்னை மோசமாக நடத்தினார்கள். மைனஸ் டிகிரி குளிரில் கூட சாதாரணமாக என்னை நடிக்க வைத்தார்கள். நான்நேரில் அமைதியானவன். படத்தில் மோசமாக நடித்திருப்பேன். அதைவிட அவர்கள் என்னை மோசமாக நடத்தினார்கள் .என்னை ஓட ஓட விரட்டி அடித்து வேலை வாங்கினார்கள் .மூச்சு விடக் கூட நேரம் கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு வேலை வாங்கினார்கள் . அப்போது வருத்தமாகத் தெரிந்தது. வலியாக இருந்தது எல்லாம் படத்தைப் பார்க்கும் போது  காணாமல் போய்விட்டது. இந்த விழாவில் இப்போது என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. என் மனைவியிடம் சாட் ஜிபிடியில் தமிழில் என்ன பேசுவது என்று எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டேன். ஆனால் எனக்குப் படிக்க முடியவில்லை .எல்லாம் மறந்து விட்டது .உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்.

 இந்தப் படத்தில் எனக்குத் தயாரிப்பாளர் மட்டும் கிடைக்கவில்லை. நண்பராகவும் கிடைத்தார். இதயத்துக்கு நெருக்கமாக நண்பர்கள் இதில் எனக்குக் கிடைத்தார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பேசும்போது,

“இந்தப் படம் எனக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமான படம். இது வழக்கமாகச் சொல்வது போன்றதில்லை .முதலில் விக்னேஷ் ராஜாவுடன் பணியாற்றி இருக்கிறேன் .நண்பர்களாகி விட்டோம் .தயாரிப்பாளர் அபிநயா  இந்தத் திரைக்கதையைக் கொடுத்துப் படித்து பாருங்கள் ,பிடித்தால் செய்யுங்கள் என்றார். நான் அப்போது 17 படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.இயக்குநர் பார்வையில் சண்டைக் காட்சிகள் எப்படி இருக்கும் என்று அறிய விரும்பினேன். அவரது கோணத்தில்  காட்சி எப்படி எப்படி இருக்க வேண்டும் என்றேன்.இந்தப் படத்திற்கு வந்த பிறகு எனது போக்கே மாறியது .ஒரு குடும்ப உறுப்பினர் போல் நான் ஆகிவிட்டேன் .அசோக் செல்வன் எனக்குச் சகோதரர் போல் ஆகி விட்டார் .நான் ஒரு மூத்த அண்ணன் போல் பெரியண்ணன் போல இந்த படத்துடன் இருந்தேன்.எனது 34  ஆண்டுக்கால அனுபவத்தில் இந்த மாதிரி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை.இதை எனது சொந்தக் கம்பெனி போல உணர்ந்தேன் .இது எனது சொந்தப்பட நிறுவனம் போல உணர வைத்தது.  நான் சொந்த சகோதரன் போல் ஆகி விட்டேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனது தனிப்பட்ட சூழலால் படப்பிடிப்பு இடத்தில் நான்  தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அழுதுவிட்டு உடனே இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைப்பேன். இந்தப் படம் சார்ந்து நான் மிகவும் அக்கறையாக இருந்தேன் . இயக்குநர், அசோக் செல்வன் அனைவரிடமும் விவாதிப்போம். அப்படித்தான் எடுத்தோம்.

அது எனக்குப் புது அனுபவமாக இருந்தது.இதில் மூன்று வில்லன்கள் நடித்திருந்தார்கள்.பிரமாதமாக செய்து இருக்கிறார்கள்.இது ஒரு என்டர்டெய்ன்மென்ட் படம் தான், இருந்தாலும் சீரியஸாக எடுத்தோம்.

இந்தப் படத்தில் பிளேடு, ஆணிகள் நடுவில் இருக்கும் ரோஜா போல ப்ரீத்தி முகுந்தன் இருந்தார். இந்தப் படத்தில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. ‘மண்டாடி’ அப்போது தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன் .நிறைய படங்கள் கையில் இருந்தாலும் நான் எனது செயலாளரிடம் சொன்னேன், 45 நாட்கள் வேறு வேலை செய்யவில்லை, யாருக்கும் தேதிகள் கொடுக்க வேண்டாம்,இதை விட்டுவிட்டு இடையில் எல்லாம் போக முடியாது என்று கூறி இருந்தேன்.

 இந்த ஒரு படத்திற்காக பலவற்றையும் அனுசரித்தேன். ஏனென்றால் இதை ஒரு குடும்பப் படம் போல் நினைத்து நான் ஈடுபாட்டுடன் இருந்தேன். இந்தப் படத்தின் இசை நன்றாக இருந்தது. ஒளிப்பதிவாளர் கௌதம் நன்றாக வருவார் அசோக் செல்வன், அபிநயா எப்போதும் நான் உங்கள் பின்னால் இருப்பேன்.இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எதிர்பாராத விருந்தாக இருக்கும்.

இப்போது ஒரு வீடியோ வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. 20 வயது 25 வயது பெண் எனக்கு இரண்டு லட்சம் வேண்டும் ஐந்து லட்சம் வேண்டும் என் கணவர்  யாஷ் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிற வீடியோ அது. இந்தப் படத்தை  பார்த்திருந்தால் இந்தப் படம் முன்பே வந்திருந்தால் அசோக் செல்வன் மாதிரி எனக்கு கணவர் வேண்டும் என்றுதான் கூறுவார்கள் “என்றார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசும்போது,

“நான் இப்போது படப்பிடிப்பில் இருந்து வந்தேன் .இந்த விழாவுக்கு வர வேண்டும் என்பதற்காகவே 2 மணி நேரம் முன்னதாக படப்பிடிப்பினைத் தொடங்கி இரண்டு மணி நேரம் முன்பே முடித்துவிட்டு வந்திருக்கிறேன். எனக்கு இங்கிருந்து தான் எல்லாம் கிடைத்தது. முதல் படம்  ‘ஓ மை கடவுளே ‘.படம் நன்றாக வர, கதை தான் காரணம், அதில் விக்னேஷ் ராஜாவுக்கு முக்கிய பங்கு உண்டு. நாங்கள் ஒரே குழுவாக இருப்போம், விவாதிப்போம் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் தான் அடிப்படை. அதனால் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பெரிய பலமாக இருக்கிறார். அடுத்து இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பெரிய பலமாக இருக்கிறார் .இவர்கள்  வெற்றி பெறுவது எனக்கு முக்கியம். ஒரு படத்திற்கு அடிப்படை சரியாக இருந்தால் படம் நன்றாக இருக்கும்  என்பதற்கு இந்தப் படமே சிறந்த உதாரணம்.

ப்ரீத்தி முகுந்தன் ‘டிராகன்’ படத்தில் நடிக்கக் கேட்டபோது  மறுத்துவிட்டார்.  பிறகு அவரிடம் அருமையான ஒரு படம் வருகிறது என்று கூறினேன். அதுதான் இந்தப் படம். அசோக்செல்வன் 70 அடி உயரத்தில் இருந்து குதித்து இருப்பதாகக் கூறினார்கள். அது எனக்கு ஆச்சரியமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் 150 அடி உயரம் இருந்தால் கூட குதிக்கக் கூடியவர். அவர் ஒரு ஆக்சன் ஹீரோவாக இருக்கிறார்.

அவரை வைத்து நான் படம் இயக்கும் போது ஒருநாளும் அவர் தாமதமாக வந்ததில்லை. இப்போது நான் இயக்கும் ‘தர்மன்’ படத்தில்  தலைவர் ரஜினி சாரும் இந்த வயதிலும் ஒரு நாளும் தாமதமாக வந்ததில்லை. ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்கிறார்.
50 ஆண்டு அனுபவத்திற்குப் பிறகும் அவர் இன்று என்ன செய்யப் போகிறோம் என்று ஆர்வத்தோடு கேட்கிறார்.

முதலில் எனக்கு அவரை வைத்து எப்படி இயக்குவது என்று பயமாகத்தான் இருந்தது.ஆனால் தலைவர் எனக்கு ஏற்றபடி சகஜமாகி சௌகரியமாக மாற்றிக் கொண்டார் .அவரது அர்ப்பணிப்பு ஆச்சரியமாக இருக்கும்.

அசோக் செல்வன் சினிமாவை நேசிக்கிறார்; மதிக்கிறார்.இந்த தருணம் எனக்கு மிகவும் முக்கியமானது” என்றார்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா பேசும்போது ,

“மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது குடும்ப நிகழ்ச்சி போல இருக்கிறது. முதலில் ’தெகிடி’ படத்தில் அசோக் செல்வனுடன் படத்தில் பணியாற்றியது நினைவுக்கு வருகிறது. அவர் இன்று வளர்ந்து இருப்பது பெருமையாக இருக்கிறது . மேலும் வளர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் பேசும்போது,

“முதலில் என்னுடன் பணியாற்றிய எனது உதவி இயக்குநர்களுக்கும் உதவி ஒளிப்பதியாளர்களுக்கும் நன்றி .கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது மனைவியுடன் பேசியதை விட என் இணை இயக்குரிடம்தான் நான் அதிகம் பேசி இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

நான் படம் பற்றிப் பேச ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் படம் நன்றாக இருக்கிறது .நம்பிக்கை இருக்கிறது. தணிக்கைத் துறையினர் தொடங்கித் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி நிறுவனத்தினர் வரை எல்லாரும் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள் .அடுத்து படத்தை உங்களுக்கு எப்போது  காட்டுவது என்று ஆசையாக இருக்கிறோம்

 அசோக் செல்வனை எனக்குப் பத்து வருடங்களாகத் தெரியும். 2017 முறை முதல் பலமுறை படங்கள் தொடங்கி தொடங்கி நின்று  தொடர முடியாமல் போயிருக்கிறது.ஒரு படத்தில் தயாரிப்பாளர் எங்களை வேண்டாம் என்றால் இன்னொரு படத்தில் நாங்கள் இந்தத் தயாரிப்பாளர் வேண்டாம் என்போம்.ஒரு நாள் படப்பிடிப்பிலிருந்து 13 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது வரை பல்வேறு முயற்சி அனுபவங்கள் உண்டு.

 அசோக் செல்வன், அபிநயா இவர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது . ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்பதை நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவில்  புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறார்கள். நல்ல கதையோடு வாருங்கள். அசோக்செல்வன் கதையைத் தேர்வு செய்வதில் தெகிடி முதல் அவரது திறமையைக் காணலாம்.

என்னை இயக்குநர் ஆக்கியதற்கு நன்றி. விக்னேஷ் ராஜா இல்லையென்றால் இந்தப் படம் உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட கதை. .அபிநயா நல்ல கதைகளைத் தேர்வு செய்கிறார். ஒருமுறை நான் மதுரைக்கு எங்கள் அக்காவுக்கு உடல்நிலை சரி இல்லை என்று போய்க் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு போன் வந்தது .அப்படித்தான் தொடங்கியது.அவர் நம்பிக்கை அளித்து இந்த பட வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க இந்த நம்பிக்கைதான் இப்படி மாயமாக நடந்து இருக்கிறது.

அசோக்செல்வன் கொடுத்த ஊக்கம் ஆதரவு முக்கியமானது. அவர் எனது படத்தில் ஒரு உதவி இயக்குநரைப் போல ஈடுபாடு காட்டினார். விளம்பர விஷயங்களில் கூட அவரது உதவி பெரிது. படத்தைச் சரியாகச் செய்ததாக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹாப்பி ஹை நிறுவனம் இன்னும் மேலே உயர்ந்து வளர்ந்து வர வேண்டும். அறிமுக இயக்குநர்களுக்கு  வாய்ப்பு தருகிறார்கள் .திறமையானவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். நல்ல ஒரு திறமையான குழுவினரை வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு யோசனை சொன்னால் திரும்பி பத்து யோசனைகளாகத் தரும் அளவிற்கு இருக்கிறார்கள்.அப்படி இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர்,எடிட்டர், சவுண்ட் இன்ஜினியர் எல்லாரும் திறமைசாலிகள்.

இந்தப் படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் காட்டிய ஈடுபாடு சாதாரணமானதல்ல. அவர் பார்ப்பதற்குத் தான் குழந்தை போல இருப்பார் வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் சீனாக்காரன் எல்லாம் தாண்டி விடுவார். இந்தப் படத்தில் கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம் என்று கூறலாம். அவருக்குத் தனிப்பட்ட முறையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் 40 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து இந்தப் படத்திற்காகப் பணியாற்றினார்.

கோவிந்த் வந்தா நல்ல இசையில் நல்ல வரிகளையும் தேர்வு செய்பவர். தமிழ்ப் பாடகர்களைப் பாட வைத்துள்ளார் .அற்புதமான பாடல்கள் அற்புதமான வரிகள். அவர் வீட்டுக்குக் கொச்சி சென்ற போது அவர் இசையமைக்கும் விதத்தைப் பார்த்து நான் வியந்து போனேன்.

 நான் திருத்தங்கள் சொல்லிக் கொண்டே வந்த போது வரியை மாற்ற சொன்னபோது அப்படி செய்தால் இது என் பாட்டாக இருக்காது உங்கள் பாட்டாக இருக்கும் என்றார். அதெல்லாம் மறக்க முடியாது.சிலருக்கு உதவியாளர்கள் என்று பெரும் கூட்டமே வைத்திருப்பார்கள். ஆனால் அவர் ஒன் மேன் ஆர்மி. அவரே வயலின் வாசிப்பார் ,வீணை வாசிப்பார் ,பெயர் தெரியாத கருவிகளையும்  வாசிப்பார் .இந்த தலைமுறையில் இப்படி ஒரு இசையமைப்பாளர் புதிதாக தெரிந்தார்.

  அபிநயா செல்வம் ஒரு துணிச்சல் மிக்க பெண்மணி தைரியம் மிக்க பெண்மணிக்கு உதாரணமாக அவர் இருக்கிறார் .உதவி இயக்குநர்கள் அவரிடம் திரைக்கதையை அனுப்பினால் மூன்று மணி நேரத்தில் பதில் வரும்.அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.ப்ரீத்தி முகுந்தன் ஒரு காட்சியில் சுமாராக நடித்திருந்தார் .ஆனாலும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார் . அவ்வளவு உற்சாகமானவர் .எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்பவர். அவர் நட்சத்திரம் அல்ல  நடிப்புக் கலைஞர்.

 ஒளிப்பதிவாளர் கௌதம் எனது செல்லப்பிள்ளை.சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவில் முதலீடு செய்பவர்கள் மிகச் சிலரே. கமல் சார் போல் அசோக் செல்வனும் சினிமாவில் சம்பாதித்து எல்லாம் இதிலேயே போடுவார். இது மாதிரி தயாரிப்பாளர் கிடைப்பது  அரிது. அபிநயா, அசோக் செல்வன் எல்லாம் பெரிய பணக்காரர்கள் இல்லை.  நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் .சொன்னால் நம்ப மாட்டார்கள் சிரமப்பட்டுத் தான் இந்தப் படத்தை எடுத்தார்கள். அவர் வெள்ளையாக இருப்பதால் அவரைப் பெரிய பணக்காரர் என்று நினைக்கிறார்கள்” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசும் போது

“இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் முக்கியமானது. மகிழ்ச்சி  தரக்கூடியது. முதலில் அபிநயா பற்றிச் சொல்ல வேண்டும். அவர் ஒரு பவர் ஹவுஸ் .அதுவே அழகு, அவர்  மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி.

படம் பார்க்கும்போது படத்தில் நடித்திருப்பவர்கள் தான் பார்வையாளர்களுக்குத் தெரிவார்கள். அதற்குப் பின்னே இருக்கக்கூடிய சக்தி மிக்க மனிதர்களைத் தெரியாது. ஆனால் ஒரு படத்திற்கு அவர்கள் தான் பலம். அதில் முதன்மையானவர் அபிநயா. எனக்கு அவரே பெரிய  தூண்டுதலாக இருந்தார். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன்.  அசோக் செல்வனும் அபிநயாவும் என்னைத் ,தத்து எடுத்துக் கொண்டது போல் தங்கள் குழுவோடு சேர்த்துக் கொண்டார்கள். வழிகாட்டினார்கள் .என்னை நம்பி உயர்த்தினார்கள். ஏன் இவர்கள் இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றும்.  அசோக் செல்வன்- அற்புதமான அவருடன்  இணைந்து நடித்த இந்தப் படம் ஒரு அற்புதமான பயணம். முழு படமும் இப்படிப் பயணம் செய்தது மகிழ்ச்சி .அவர் இந்தப் படத்தில் நடிப்பில் ஒரு பெரிய உயரத்துக்கு நகர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் எனக்கும் நடிப்பதற்கு இடம் கொடுத்தார். நடிப்பில் அந்த இடத்திற்கு என்னை நகர்த்திக் கொண்டு போனார்.

கல்லூரி நண்பர்கள் இருப்பார்கள், பேசிக்கொண்டிருப்போம்,சண்டை போட்டுக் கொண்டிருப்போம் முட்டாள்தனமாக ஏதாவது செய்து கொண்டிருப்போம்.எது பற்றி வேண்டுமானாலும் விவாதிப்போம் சண்டை போடுவோம் அப்படி ஒரு நண்பராக எனக்கு அசோக் செல்வன் இருந்தார்.இயக்குநர் கார்த்திகேயன் என்னை முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்த வைத்துள்ளார். அதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். உணர்ச்சிமிக்க காட்சிகளில் டப்பிங் பேசும் போது என் குரலே எனக்குக் கேட்கவில்லை. அப்போதெல்லாம் அவர் என்னைத் தவிர்க்காமல் கற்றுக் கொடுத்து பயன்படுத்தினார்.என் மீது நம்பிக்கை வைத்து  அவர்கள் பணியாற்ற வைத்தது எனக்கு சக்தியும் பலமும் கொடுத்தது. அதற்கு பிறகு நல்ல எழுத்தாளர், நல்ல இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது.  எனக்குக் கொடுத்த பலமுள்ள பாத்திரத்திற்கும்  அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் என் வயது உள்ளவர். இந்த குழுவிலே இளைஞர்.. அவர்தான். ஆனால் பரஸ்பரம் எங்களது உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வோம்.

ஒவ்வொரு காட்சிக்கும் பின்னூட்டம் தந்து எனக்கு நண்பரைப் போல அவர் உதவினார் நன்றி. எனக்கு வண்ணங்களில் ஆர்வம் உண்டு .எனக்குப் பிடித்த வண்ணங்களில் என்னைஅழகாகக் காண்பித்திருப்பார். அதற்கு நன்றி. சேது அவர்கள் எனக்கு பக்கபலமாக உதவினார். அவருக்கு நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்கத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருந்தது. என்னைக் கௌரவப் படுத்தியது போல் இருந்தது.

அவர் எனக்குப் பலவகையில் வழிகாட்டினார் அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்.கோவிந்த் வசந்தாவின்  மிகப்பெரிய ரசிகை நான் .96 படத்திலிருந்து அவரது பாடல்கள் என்றால் எனக்குப் பிடிக்கும் . இதிலும் பாடல்கள் நன்றாக வந்துள்ளன.படத்தில் நடித்திருக்கும் கதிர், மகா ,சபு அவர்கள் நடிப்பை பார்த்து நான் வியந்து போனேன். எப்படி இவர்களால் இப்படி நடிக்க முடிகிறது என்று கேட்டேன்.எல்லா உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. என்னை இதை ஒரு குடும்பம் போல உணர வைத்தார்கள்” என்றார்.

படத்தின் நாயகன் அசோக் செல்வன் பேசும்போது,

“இது மகிழ்ச்சியான விழா இதில் பேசுவதற்காக எதுவும் தயாரித்துக் கொண்டு வரவில்லை .அந்த அளவுக்கு சென்சார் தொடங்கிப் பட வேலைகள்  இருந்து கொண்டே இருந்தன.

 நான் நடித்து படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. ஒரு திரைப்படம் என்பது ஏதோ செய்துவிட்டுச் செல்வதல்ல. சினிமா என்றால் நான் நினைப்பேன் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட படத்தில் தான் நான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல கதைகள், நல்ல கதா பாத்திரம் பார்த்து நடிக்க வேண்டும். அனைத்தும் இதில் தேர்ந்தெடுத்து செய்தோம்.இந்தப் படத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல அனுபவங்களைக் கற்றுக் கொண்டோம்.

நான் இந்த விழாவுக்குக் கூப்பிட்ட அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது .ஏதோ ஒரு முயற்சி செய்ய வேண்டும் மக்களிடம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம் எனது உழைப்பு அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.அதற்கான மறு கண்டுபிடிப்பு மறு தேடல் செய்ய வேண்டும்.

இந்த முக்கியமான படம் கொடுத்ததற்கு முதலில் என் அக்காவிற்கு நன்றி. மூன்று நான்கு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார்.பல கடினமான விஷயங்களைக் கடந்து இருக்கிறார். பல சிரமங்களை நான் கடப்பதற்கு அவர்தான் காரணம். எனக்கு அக்கா பலமும் அண்ணன் பலமுமாக அவர் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில்  பலரும் மாறி விடுவார்கள் .ஆனால் என் அக்கா அப்படியே இருக்கிறார். அப்பா அம்மாவுக்கு நன்றி. படத்தின் பட்ஜெட் தாண்டிய போது செலவு அதிகமாகும் வீடு அடமானம் வைப்பதற்காக பத்திரத்தைக் கேட்டபோது அவர்கள் தயங்காமல் கொடுத்தார்கள். மகன் ஏதோ செய்கிறான் என்று அவனது கனவுக்காக ஆதரவு கொடுத்தார்கள்.

இயக்குநரும் நானும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம்.என் படத்தில் அறிமுகமானவர்கள் இன்று பெரிய படங்களை இயக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

விக்னேஷ் ராஜா தனுஷ் படத்திலும் அஸ்வத், ரஜினி சார் படத்திலும் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு பேரும் வளர வாழ்த்துக்கள்.இங்கே வந்திருக்கும் கௌதம் கார்த்திக் என் தம்பி. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .எடிட்டர் செல்வாவும் நானும் கல்லூரிக் காலத்திலிருந்து நண்பர்கள். அவர் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்

பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியது அவர் தான். பெரிய படங்களில் தொடர்ந்து பணியாற்றுபவர் இது மாதிரி சின்ன படத்திற்கு பணியாற்றுவாரா என்று சந்தேகமாக இருந்தது.ஆனால் அவர் சிறந்த வகையில் உருவாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் கௌதம் நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
 
ப்ரீத்தி முகுந்தன் எங்கள் படத்தில் நடித்த போது அவரது ஒரு படம் தான் வந்திருந்தது. அவர்  நான் முதலீடு செய்துள்ள பிட்காயின் என்று சொல்வேன். இப்போது நான் கல்லூரி விழாக்களுக்கு  எங்கு சென்றாலும் ப்ரீத்தி முகுந்தனைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று கத்துகிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கலாம்.

சபு சேட்டன் எங்களுக்கு படப்பிடிப்பில் பிரட் சப்ளை செய்தார். அங்கே ஒரு ஸ்டாலே போட்டு எங்களுக்கெல்லாம் கொடுத்தார். நான் நூறு இருநூறு ஆடிஷன் போயிருப்பேன்.இந்தப் படத்திலும் அப்படி ஆடிஷன் வைத்து தான் தேர்ந்தெடுத்தோம் .அப்படி ஒரு தங்கம் போல மகா, கதிர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்தோம் .அவர்கள் பெரிய இடத்துக்கு செல்வார்கள்.

நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக  இருக்கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான்  சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும்.

இந்தப் படத்தில் ஐங்கரன் இண்டர் நேஷனல் இணைந்த போது கருணாமூர்த்தி சார் ஒன்று கூறினார். அவர் கதையை மட்டும் கேட்டார். மற்றபடி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. எனது மனைவி கீர்த்திக்கு நன்றி.”என்றார்.

நிறைவாக ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரிப்பாளர் அபிநயா அனைவருக்கும் நன்றி கூறினார்.

‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு !

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன.

சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று இன்று பெரிய வெற்றி பெற்றுள்ளது.இது சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது.
படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பினைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது .இந்த வெற்றி மகிழ்ச்சியை முன்னிட்டு படக்குழுவினர் ஊடகங்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில் ‘எங்களின் இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்’ என்ற பதாகையுடன் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்கள்.

சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் கலந்து கொண்டு பேசும்போது,

” முதலில் இந்தப் படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள்.இந்தப் படம் வெளியாவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நான் பார்த்தேன். பார்த்தவுடன் இயக்குநர் பாலாஜியிடம் படம் நல்ல த்ரில்லராக வந்து இருக்கிறது .சரியான தேதியில் வெளியிட்டால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறினேன். இந்தக் தேதியைக் குறிபிட்டபோது நான் பாலாஜியிடம் கேட்டேன் ”இந்தத் தேதி சரியானதுதானா ?அன்றைக்கு ஒன்பது படங்கள் வருகின்றன. ஏற்கெனவே ‘மண்டாடி’ நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றேன்.அப்போது அவர் “இல்லை சார் இந்தத் தேதியை முடிவு செய்துவிட்டோம் அதற்குக் கொண்டு வருகிறோம்” என்றார்.ஒன்பது படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது .அதற்கு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவும் தான் காரணம் .எனது வாழ்த்துக்கள் .இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன்.
இத்தனை படங்கள் நடுவில் மக்கள் பெரிய படங்களை தான் பார்ப்போம், பெரிய நட்சத்திர நடிகர் நடித்த படங்களைத்தான் பார்ப்போம் என்றிருக்கிற சூழலில் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பது கொண்டாடப்பட வேண்டிய வெற்றிதான்.
ஒரு திரைப்படம் எடுக்கும்போது ஒரு நடிகர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினைகளை அந்தப் படம் சந்திக்குமோ அத்தனையையும் இந்தப் படம் சந்தித்திருக்கிறது.அதுவும் அறுபது ,எழுபது சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த நடிகருடன் தொடர்ந்து போக முடியவில்லை என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து நிறுத்தி விடுவோம் என்று முடிவு எடுப்பது யாரும் சுலபமாக எடுக்க முடியாது.சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் அப்படித்தான் நடந்தது. ஒரு பெரிய நடிகருடன் பிரச்சினைகளால் அந்தப் படத்தை முடிக்க முடியாமல் திணறினேன்.படங்கள் வளர்ந்த பிறகு, செலவு செய்த பிறகு எங்களால் அப்படி ஒரு முடிவு ஒன்று எடுக்க முடியவில்லை.படத்துக்காக நீண்ட தூரம் வந்து விட்டோம் ,நிறைய செலவாகிவிட்டது என்று தயங்கினோம்.அப்படிப்பட்ட நிலையில் படத்தை நிறுத்திவிட்டு வேறு படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல .அது தெரிந்து சித்து ஈடுபாட்டுடன் நடிக்க வந்தது பாராட்டுக்குரியது.அவரது நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது.இன்று திரையரங்குகளில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.
நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது எல்லாவற்றையும் சரியாகப் பேசிக் கொண்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும். பிறகு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டியதுதான்.
சில சமயம் வாரத்திற்கு ஆறேழு படங்கள் வருகின்றன. சில வாரம் எதுவுமே வருவதில்லை. இதை முறைப்படுத்த வேண்டும். அடுத்த வாரம் கூட ஆறுபடங்கள் வருகின்றன. மூன்று படங்கள் முக்கியமான படங்களுக்குக் கூட திரையரங்குகள் கிடைக்கவில்லை. வாரத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் வரக்கூடாது. எல்லாவற்றையும் மீறி இந்தப் படம் வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது .இந்தப் படத்திற்கு பிவிஆர் சினிமா கொடுத்த ஆதரவு பெரிய விஷயம். அவர்கள் சிறு முதலீட்டுப் படங்களுக்கும் வாராவாரம் திரையரங்குகள் தர வேண்டும்.படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,

“இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். இப்போதும் அந்த அறுபது -எழுபது சதவீத படத்தை எடுத்து விட்டுத் தூக்கிப் போட்டது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.இந்தப் படம் வருவதற்கு இந்தத் தயாரிப்பாளர்கள் இருவர் முக்கியமானவர்கள். சகோதரர் ஷரண், கோபால் சார் இவர்கள் முக்கியமானவர்கள். அதையும் தாண்டி என் மனைவி, என் சகோதரர்,குடும்பத்தினர் , நண்பர்கள் என் என் குழுவினர் உட்பட பலரும் பெரிய பக்க பலமாக இருந்தார்கள்.அதையும் தாண்டி பலரும் எனக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.மீண்டும் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு எனது குழுவினர் எனக்குப் பெரிய பலமாக இருந்தார்கள்.
வேல ராமமூர்த்தி சார், ஜெயக்குமார் சார் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். சிந்து,ரித்விகா மேம், தர்ஷிகா மேம் நீண்ட நாட்கள் என்னுடன் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் 18 மணி நேரம் கூட வேலை செய்திருக்கிறார்கள்.சித்து என்னுடனே மினி டூர் போல வந்து கொண்டே இருந்தார்.
என்னுடைய ஒளிப்பதிவாளர் மணிகண்டன், அவருக்கு பெரிய நன்றி.என் முதல் படத்திற்கும் எனது அடுத்த படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர்.எங்களுக்குள் கருத்து வேறுபாடு வரும்,ஆனால் எதையும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளலாம். சண்டை போட்டாலும் உடனே மறந்துவிட்டு டீ சாப்பிடக் கூப்பிட்டால் வருவார். அப்படிப்பட்டவர்தான் எடிட்டர் ராஜா ஆறுமுகமும். ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டதை ஏற்கெனவே ஒரு நடிகரை வைத்து எடுத்த படத்தில் தேவையற்றதைத் தூக்கி விட்டுத் தேவையானதை எடுத்து மீண்டும் எடுக்கப்பட்டதோடு சேர்த்துக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது சுலபமானது கிடையாது.அவர் செய்தார். அவருக்கு நன்றி.
மூன்றாவது நபராக வந்து எனது குடும்பத்தில் ஒருவராக மாறி இருக்கிறார் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி.இந்தப் படம் வந்தால் மூன்று பேருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நான் அப்போதே சொன்னேன். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் அதற்குப் பிறகுதான் இயக்குநர் யார் என்று கேட்பார்கள் என்று சொன்னேன். அதுதான் இன்று நடந்திருக்கிறது.
சக்தி பாலாஜியின் இசையைப் பற்றிப் பலரும் பேசும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருக்கிறது.என் இதயத்திலிருந்து சொல்கிறேன் அவர் பெரிய ஆளாக வருவார்.
சகோதரர் ஷரண், கோபால் சார் இல்லாமல் இந்தப் படம் இல்லை. இந்த மேடையும் இல்லை. சிலருக்கு இந்தப் படம் வருமா வராதா என்ற சந்தேகம் இருந்தாலும் பலரும் நம்பிக்கையோடு உழைத்தார்கள்.எல்லாருமே வெற்றிக்காகப் பாடுபட்டார்கள்.படம் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் போது பழைய சர்ச்சைகளுக்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை
இப்போதைய சந்திப்பு வழக்கமான சக்சஸ் மீட் போல் நடைபெறுவதாக யாரும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன்.தயாரிப்பாளர் கோபால் சார் தான் வைக்க வேண்டும் என்றார். இதை ஏற்பாடு செய்தோம் .இது ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு தான்.விரைவில் பெரிய வெற்றி வசூல் விவரங்களுடன் உங்களைச் சந்திக்கிறோம்.பத்திரிகையாளர் காட்சியில் நீங்கள் கொடுத்த கைதட்டல் தான் திரையரங்கு வரை நீண்டு சென்றிருக்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி.அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை தர்ஷிகா பேசும் போது,

“வேர்ட் ஆப் மௌத் என்பதை நான் நம்புகிறேன்.சொல் என்பது மிக முக்கியமானது .அதற்கு நிறைய சக்தி இருக்கிறது.நேர்நிலையாக ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது நாலைந்து பேருக்கு நேர்நிலையாகச் செல்லும் .எதிர்மறையாக ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது பத்துப்பதினைந்து பேருக்கு எதிர்மறையாகச் செல்லும்.முதல் முதலில் இந்த படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னதை வைத்து இந்தப் படத்தைப் பார்க்க வந்திருக்கிற கூட்டம் பெரியது. அதற்கு முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி.
பொதுவாக முதல்படம் செய்யும்போது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டாலும் அது எனது முதல் படம் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்படியாக இந்த ’தி டார்க் ஹெவன்’ படம் அமைந்திருக்கிறது.என் முதல் படம் என்பதை பெருமையாகக் கூறுவேன்.அனைவருக்கும் நன்றி “என்றார்.

நடிகை ரித்விகா பேசும்போது,

” இங்கே வந்து தனஞ்ஜெயன் சார் வந்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.ஊடகங்களின் விமர்சனங்கள் பத்திரிகைகளில் எழுதியது மக்களிடம் போய்ச் சேர்ந்து இருக்கிறது . திரையரங்குகளில் படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது.ஆனாலும் இது போதாது. மேலும் இந்தப் படம் போய்ச் சேர வேண்டும்.
பிரதான ஊடகங்கள் தவிர்த்து சமூக ஊடகங்களிலும் இதை நிறைய பேர் ரீல்ஸ் போட்டு விளம்பரம் செய்து வருகிறார்கள் .இந்தப் படத்தை மேலும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா திரையரங்குகளுக்கும் கூட்டம் வர வேண்டும். மக்கள் அனைத்துப் படங்களையும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும் .அப்போது தான் அந்தத் திரையரங்க அனுபவம் கிடைக்கும் .நான் முன்பே சொன்னேன் இந்தப் படம் ஒரு திரையரங்கு அனுபவத்திற்கான படம் என்று .ஓ டி டி வரும் வரை காத்திருக்க வேண்டாம் .எந்தப் படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள்.அப்போதுதான் சினிமா வளர்ச்சி பெறும்”என்றார்.

படத்தின் நாயகன் சித்து பேசும்போது,

” எப்போதும் தனஞ்ஜெயன் சார் அவர்கள் சிறுபடங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு வந்ததற்கு நன்றி.இந்தத் தருணத்திற்காக நான் பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன் .சாலிக்கிராமத்தில் தசரதபுரத்தில் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு தான் சினிமா வாய்ப்பு தேடினேன். எல்லா கம்பெனிகளுக்கும் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டு சென்று அலைந்திருக்கிறேன்.அது ஒரு பெரிய தேடல்.அப்போது இதில் நிறைய பசி, அவமானம் போன்றவற்றைச் சந்தித்து இருக்கிறேன். நிறைய இடத்தில் போட்டோக்களைக் கொடுத்துவிட்டு உதவி இயக்குநரிடம் இருந்து நாளைக்கு ஓர் அழைப்பு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் உண்டு.
திரையரங்கு சென்று படம் பார்க்கும்போது நம்முடன் வாய்ப்பு கேட்டவர்கள் எல்லாம் நடித்துப் பெரிய ஆளாகி ஹவுஸ் ஃபுல்லாக படங்கள் ஓடியதையும் பார்த்திருக்கிறேன். அப்போது மகிழ்ச்சியாக இருக்கும்.பொறாமை இருக்காது .ஆனால் மனதில் ஒரு பக்கம் சிறு வருத்தமும் ஏக்கமும் இருக்கும். நமக்கான நாள் என்று வரும்? நமக்கான வாய்ப்பு என்று வரும்? என்று ஒரு ஏக்கம் இருக்கும் .அப்படித் தூக்கமில்லாத நாட்கள் எல்லாம் இருந்திருக்கின்றன.
நான் ஆசைப்பட்டது போலப் பல ஊர்களுக்கு திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது ஹவுஸ்புல் காட்சிகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆசைப்பட்டு இருக்கிறோம்.அது இப்போது நடக்கிறது என்கிறபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது .மிக்க நன்றி.
’ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு வசனம் வரும் ,சினிமா ஒரு தேவதை மாதிரி அதை மதித்தால் அது திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டு வரும் என்று.சினிமாவை எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் .இது எனக்கு ஒரு ஆரம்பம் தான். ஒரு நல்லதொரு அறிமுகமாக இருந்திருக்கிறது.இந்த கொண்டாட்டத்திற்குக் காரணமாகப் பலர் இருக்கிறார்கள் .ஒரே ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால் இயக்குநர் பாலாஜி சகோதரரைச் சொல்வேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.

இந்தச் சந்திப்பில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிப்புக் கலைஞர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார்,ஆர்த்தி, சுமித்ரா ,பிரதீப்,விவேக், செல்வா, மனோஜ் , அலெக்ஸ், டேனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

MGM Healthcare Malar, Adyar Advances Precision Imaging with Low-Dose CT and Deep-Learning Technology

Chennai, September 22, 2026: Marking a milestone in bringing advanced radiology closer to patients, MGM Healthcare Malar-Adyar, has introduced a set of innovations in CT imaging that enable early detection of cancer and heart disease. Combining deep-learning technology, advanced CT protocols and radiology expertise, these innovations enable CT examinations to be performed with substantially lower radiation doses while preserving or enhancing diagnostic information.

The hospital has combined ultra-low-dose CT chest screening, and low-dose CT coronary angiography with optimised clinical protocols to reduce radiation exposure while maintaining diagnostic quality. A key component of its CT imaging workflow is Delta, a deep-learning-based image reconstruction technology that enables diagnostically useful images to be reconstructed from scans acquired at substantially lower radiation doses and, in selected applications, with lower volumes of contrast. The innovations are primarily in clinical protocol design, workflow integration, image acquisition, reconstruction, quantitative analysis and the way advanced technologies are applied to patient care.

The hospital has performed 133 coronary CT examinations over a 10-day period using approximately 15 mL of contrast per examination, along with a low-radiation acquisition strategy. The approach is aimed at reducing both radiation exposure and contrast requirements while maintaining the image quality needed to assess the coronary arteries. The ultra-low-dose chest CT programme has been used for 260 patients. Of these, 179 subsequently underwent biopsy based on imaging findings, with 54 cancers identified in the screened cohort.

Speaking about the innovations, Dr. Samuel Reefath J, Senior Consultant & Lead Radiologist, said, “Every time we perform a CT examination, we have to ask two questions: Can we obtain the information the clinician needs? And can we do it with the least possible burden to the patient? That burden includes radiation, iodinated contrast, cost, time and sometimes even the anxiety associated with invasive investigations. We therefore wanted to move from a conventional approach of simply acquiring images towards precision imaging, obtaining the maximum clinically useful information with the minimum necessary exposure. This philosophy has driven our low-dose coronary CT, ultra-low-dose chest CT and our work in quantitative and AI-assisted imaging. We are not abandoning established CT principles. We work within accepted radiology and cardiovascular CT standards, while optimizing acquisition parameters for individual clinical situations.”

He added, “Modern CT and MRI scanners are capable of generating enormous volumes of highly detailed information. Deep Learning assists radiologists in analysing large volumes of imaging data and drawing attention to findings that may require closer evaluation. Deep Learning-based tools can support the identification of subtle abnormalities, assist in image analysis, and help organise and quantify information, allowing the radiologist to focus more closely on the clinical interpretation of the findings. The integration of these technologies is aimed at making radiology not only faster, but also more consistent, quantitative and clinically useful.”

Commenting on the innovations, Mr. Venugopal Bhat, Chief Operating Officer and Group Vice President – Strategic Initiatives, said, “Our vision is to move towards precision healthcare rather than simply more healthcare technology. Advanced imaging should ultimately answer three questions: Can we detect disease earlier? Can we characterise it more accurately? And can we do it more safely? We want MGM Healthcare Malar-Adyar to function not merely as a place where sophisticated scans are performed, but as a centre where advanced imaging is translated into earlier diagnosis and better clinical decision-making.”

He added that ultimately, the patient should gain earlier diagnosis, safer diagnosis and more precise diagnosis. “If we can detect cancer before symptoms develop, that potentially creates an opportunity for earlier treatment. If we can perform a coronary CT with substantially less contrast and radiation, we reduce the burden of the investigation. And if quantitative imaging and AI can help us extract information that is difficult to appreciate visually, we can potentially provide clinicians with more objective information. So, the final measure of innovation is not how sophisticated the scanner is. The final measure is whether the patient benefits,” he said.

Kauvery Hospital Launches “Kauvery First Responders”, a Network of Bike Ambulances to Deliver Rapid First Response Across Chennai

Chennai, September 21, 2026: Kauvery Hospital has launched Kauvery First Responders, a network of bike ambulances across Chennai aimed at bringing trained medical first responders and essential emergency equipment closer to patients at the critical first moments of an emergency. Operated by trained medical responders, the bikes are designed to reach emergency scenes quickly, assess patients and provide appropriate first-response care within established training and protocols, while simultaneously coordinating with the hospital and conventional ambulance services for timely further management and transportation.

Thiru P. Pakalavan, IPS, Joint Commissioner of Police (Traffic – South), Chennai, participated in the event as the Chief Guest.

In the first phase, 10 bike ambulances have been deployed across Kauvery Hospital’s Chennai network, covering its Alwarpet, Vadapalani, Radial Road and Maa Kauvery locations. The network is designed to extend rapid emergency support across different parts of the city, particularly in situations where traffic congestion or road accessibility may delay the movement of larger emergency vehicles.

The bike ambulances are not intended for patient transport. Their role is to bring trained medical expertise and essential emergency support to the patient while a conventional ambulance is coordinated for further management and transportation, when required. Each First Responder bike is equipped with essential emergency-response equipment, including an Automated External Defibrillator (AED), oxygen support and an emergency medical kit.

In a suspected cardiac arrest, for instance, the AED can analyse the patient’s heart rhythm and deliver an electrical shock when indicated. Oxygen can be administered when clinically appropriate, while the emergency medical kit enables the responder to carry out immediate assessment and provide first-response care in accordance with established protocols.

The First Responders also function as part of a connected emergency-care system. Equipped with 5G connectivity, webcams and GPS/live tracking, the responder can stay connected with the hospital team while at the scene, enabling real-time coordination and facilitating the transition to further care when the patient is transported to the hospital. People can contact the hospital’s emergency care at 044-40006000.
In his comments, Dr. Manivannan Selvaraj, Founder & Managing Director, Kauvery Group of Hospitals, said, “In an emergency, reaching the patient is the first challenge, and in a city like Chennai, traffic can sometimes make that challenge even greater. We wanted to create a system that works around this reality and brings medical assistance closer to the point where it is needed. Kauvery First Responders are designed to put trained medical responders and essential emergency equipment on the road, so that appropriate care can begin at the scene while the ambulance and hospital teams coordinate the next stage. It is not about replacing the ambulance; it is about making sure that the wait for an ambulance does not also mean a wait for the first response.”
Dr. Aravindan Selvaraj, Co-Founder & Executive Director, Kauvery Group of Hospitals, said: “Emergency care is not only about how quickly we reach a patient, but also about what happens in those first few minutes. A faster response becomes meaningful when it is backed by trained personnel, the right equipment and a connected clinical system. With Kauvery First Responders, we are extending the emergency-care pathway beyond the hospital and bringing that first point of clinical response closer to the community. The combination of mobility, emergency preparedness and real-time connectivity can help our teams make those early minutes more purposeful, while ensuring that the patient remains connected to the larger continuum of care.”
Kauvery Hospital already operates a connected emergency ambulance network in Chennai, with 5G-enabled ambulances supporting real-time patient monitoring and remote clinical guidance during transport. The First Responders add another layer to this emergency-care pathway, bringing the response even closer to the point where the emergency begins.

Hindustan Institute of Technology & Science Hosts 17th Convocation; 2,732 Students Awarded Degrees

Chennai, 19 September 2026: Hindustan Institute of Technology & Science (HITS) successfully hosted its 17th Convocation Ceremony, celebrating the academic achievements of its graduating students. A total of 2,732 students were conferred degrees during the ceremony, marking a significant milestone in their academic journey.

The ceremony was graced by Justice M.M. Sundresh, Judge, Supreme Court of India, as the Chief Guest. The event was presided over by Dr. Anand Jacob Verghese, Chancellor in the presence of Dr. Ashok George Verghese, Pro Chancellor; Dr. Aby Sam, Executive Director; Mr. Enid Jacob Verghese, Associate Director; and Dr. Vikas Misra, Vice Chancellor.

Of the graduating cohort, 659 were postgraduate students and 67 were Ph.D. scholars, while the remaining graduates were from undergraduate programmes. Ninety-two students were recognised as Rank Holders for their exemplary academic performance. The graduating batch also included 27 foreign nationals, who received their graduation certificates at the ceremony.

As part of the convocation ceremony, HITS conferred Honorary Doctorates upon Mr. Gokul V. Subramaniam, President, Intel India, and Dr. Oscar Concessao, Architect, Oscar & Ponni Rahul Architects, in recognition of their distinguished contributions and achievements in their respective fields.

Addressing the gathering, Justice Mr M. M. Sundresh said, “My advice to the students is that whatever you are or whatever you achieve, you should always remember that their contribution is the barest minimum because you are the creation of your family, friends, and every other being associated with you in different ways. Until now, we are all the beneficiaries of the world, and we should find a way to give it back. Similarly, you should also remember your alma mater, especially your professors. Life is a constant process of learning, and the time you spent at this institution will help you immensely.”

Dr. Anand Jacob Verghese said, “A convocation is not merely a celebration of academic achievement, but the beginning of a new chapter filled with opportunities, responsibilities and possibilities. At HITS, we strive to equip our students with the knowledge, skills and values needed to navigate a rapidly changing world and make a meaningful contribution to society. As our graduates’ step into their professional journeys, I encourage them to remain curious, embrace challenges, uphold integrity and continue learning. I am confident that they will carry forward the values of HITS and make a positive impact in their chosen fields.”

HITS, which has entered its 41st year since inception and completed 18 years as a Deemed to be University, continues to expand its academic offerings across diverse disciplines. The university currently offers 84 undergraduate programmes, 62 postgraduate programmes, five diploma-level programmes, along with Ph.D. programmes across areas including Technology, Arts, Science, Law, Pharmacy, Physiotherapy and Humanities.

The university also highlighted its continued focus on employability and industry engagement. During the 2025–26 academic year, 257 companies participated in campus recruitment, with 85.60% of students securing job offers. The average CTC stood at ₹4.75 lakh per annum, while the highest CTC reached ₹12 lakh per annum. Leading recruiters included Amazon, Oracle, Microsoft, Siemens, Cognizant, Capgemini, TCS and Wipro.

On this eventful day, Hindustan Centre for Future Skills (HCFS) was inaugurated by Hon’ble Justice M. M. Sundresh. HCFS is a transformative initiative established in collaboration with the National Skill Development Corporation (NSDC) and Ethnotech Academy. Conceived to bridge the gap between academic learning and industry expectations, the Centre provides students with access to state-of-the-art technology infrastructure, industry-led training and globally recognised certifications.

The Centre focuses on emerging and high-demand domains such as Artificial Intelligence and Machine Learning, Data Analytics, Cloud Computing, Cyber Security, Internet of Things (IoT), Augmented and Virtual Reality (AR/VR), Robotic Process Automation, Industrial Automation and Semiconductor Design. The objective of the Centre for Future Skills is to empower students to excel in an increasingly technology-driven world while enhancing their employability, innovation capabilities and readiness for the careers of tomorrow.

Through specialised Centres of Excellence developed in association with leading global technology companies, students gain hands-on experience, practical exposure and industry-relevant competencies. The Centre also offers opportunities for internships, capstone projects, certification programmes and skill-development initiatives aligned with national and global workforce requirements. Faculty members also benefit from direct engagement with industry experts, ensuring that teaching and learning remain contemporary and application-oriented.

சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – டாக்டர் ஐசரி கே கணேஷ் -இயக்குநர் சுந்தர் சி- நயன்தாரா- கூட்டணியில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2 : மகா சக்தி – Mookuthi Amman 2: Mahasakthi’ படத்தின் டீசர் வெளியீடு

தீபாவளி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் நயன்தாராவின் நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி’ டீஸர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆப் மகாசக்தி – Rise of Mahasakthi’ எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி. ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ. கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, திரைக்கதை – வசனத்தை வெங்கட் ராகவன் எழுதியிருக்கிறார். மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு குஷ்பூ சுந்தர் – குஷ்மிதா கணேஷ்- இஷான் சக்சேனா- விக்னேஷ் சிவன் – ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறாம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் ‘ரைஸ் ஆஃப் மகா சக்தி- Rise of Mahasakthi’ எனும் பெயரில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும்… ரசிகர்களை வியக்க வைத்திருப்பதுடன் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதை உறுதி செய்திருப்பதால்.. இதற்கான வரவேற்பும், டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

🔗https://youtu.be/UUfAemccAJ0