நடிகர் கௌஷிக் ராம் நடிக்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

நவம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவம் புதிதாக இருந்தது. தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் பேசுகையில், “தமிழ் திரை உலகில் சமீபகாலமாக கிராமிய பின்னணியிலான காதல் கதைகள் வெளியாவது குறைவாக இருந்தது. அந்த குறையை கிறிஸ்டினா கதிர்வேலன் போக்கும் என நம்புகிறோம். இந்தப் படத்தின் கதை நம் வீட்டில் இயல்பாக நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ஆனால் வலி நிறைந்த யதார்த்தமானதாக இருக்கும். இதனை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி சொல்லப்பட வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி பேசுகையில், ”இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் ஆறாண்டுகளுக்கு முன் பணியாற்றினேன். அதற்காக அவரிடம் இருந்து முதல்முறையாக 1500 ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டேன். அப்போது நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவருடன் பயணித்து ஏராளமான லொகேஷன்களை பார்வையிட்டோம். மூன்று ஆண்டுகள் வரை இந்த பணி தொடர்ந்தது. அங்கு சென்று இந்தந்த காட்சிகளை இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என விவாதித்தோம். படப்பிடிப்பில் சந்தோஷமாக பணியாற்றினோம். உச்சகட்ட காட்சியை படமாக்கும் போது எங்களுக்கும் எமோஷனலாக இருந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக நம்புகிறோம். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்,” என்றார்.

இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசுகையில், ”சின்ன சின்ன படங்களை இயக்கி தான் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இயக்குநர்கள் இங்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள், முன்னோட்டத்தை பார்த்தவரை அனைத்து நடிகர்களும், நடிகைகளும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனான கௌஷிக் ராம் நேரில் பார்க்கும்போது ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் திரையில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். நாயகி பிரதீபாவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநரின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். அந்த பெயரிலேயே கம்பீரம் இருக்கிறது. படமும் அதே அளவு இருக்கும் என்று நம்புகிறோம். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதிலும் உருமி.. பாடல் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு எல்லா விஷயங்களும் தெரியும். காரணம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய உதவியாளர். ‘பவுடர்’ படத்தில் அவர் என்னுடன் பணியாற்றும்போது தான் ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி அறிமுகமானார். அவர் நான் இயக்கிய ‘ஹரா’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். படத்திற்கு ஹீரோவாக ஒரு புதுமுகம் வேண்டும் என்று தேடிய போது ‘ஹரா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த கௌஷிக் ராம் தேர்வானார்.

படத்தை உருவாக்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். அதனை இயக்குநர் அலெக்ஸ் எதிர்கொண்டார். இதற்கு அவரது பெயரில் இருக்கும் பாண்டியன் என்ற ஒரு நண்பர் உதவி புரிந்தார். அவர் தான் அலெக்ஸை இந்த மேடையில் அமர வைத்திருக்கிறார். அதனால் அலெக்ஸ் பாண்டியன் இருவரையும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்,” என்றார்.

‘பிக்பாஸ்’ பிரபலம் நடிகர் சிபி பேசுகையில், ”இந்தப் படத்தின் பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு உண்டாகிறது. ஏனென்று தெரியவில்லை, அந்தப் படத்தை பார்க்கும் போதும் இதே போன்றதொரு ஃபீல் இருந்தது. இந்தப் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம். ரகுநந்தன் அற்புதமாக பாடல்களை வழங்கி இருக்கிறார். பின்னணி இசையும் நன்றாக வழங்கி இருப்பார். காதல் திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதேபோல் இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் விஷ்ணு பேசுகையில், ”இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொன்னார்கள். இந்த கதையை இயக்குநர் எத்தனையோ தயாரிப்பாளரிடம் சொல்லி, அவர்களால் நிராகரிக்கப்பட்டு இறுதியாக இந்த தயாரிப்பாளர் தயாரிக்க ஒப்புக் கொண்டிருப்பார். அதனால் முதலில் தயாரிப்பாளருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் நன்றாக இருக்கிறது. திரையரங்கில் நன்றாக ஓடக்கூடும் என்றும் தெரிகிறது. படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். படத்தின் நாயகியான பிரதிபாவின் ரீல்ஸ்களை பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் எனர்ஜியுடன் நடனம் ஆடியிருப்பார்கள். அவர் ராப்பும் பாடியிருப்பார். மிகுந்த திறமைசாலி. அவர் திரைப்படத்தில் நடிகையாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கதையின் நாயகனான கௌஷிக் ராமிக்கும் என் வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று என்னிடம் கேட்டனர். இதே விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். வெள்ளையாக பிறந்தது எங்களுடைய தப்பா? அதே தருணத்தில் சிலர் பார்த்தவுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறாய் என்றும் சொல்வார்கள். வெள்ளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் அளவற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். அவருடைய ‘ட்ரேட்மார்க்’ சிரிப்பு தனித்துவமானது. அவர் இயக்குநர்களுக்கு பிரியமான இசையமைப்பாளர். இயக்குநர்கள் எதை கேட்கிறார்களோ, அதை தரக்கூடிய திறமை மிக்கவர்.

இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், ”என்னிடம் இசையமைப்பதற்காக வரும் படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவு செய்த பிறகு தான் வருகின்றன. கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தான் படத்தை காண்பித்தார்கள். படத்தில் நிறைய வேரியேஷன்ஸ் இருந்தது. ஒரு கிராமத்தில் தொடங்கி, கல்லூரியில் பயணித்து, அதன் பிறகு வேறு ஒரு ஜோடி திரைக்கதையில் அறிமுகம் ஆகிறார்கள். இப்படி இருந்ததால் இதற்கு பின்னணி இசை தாமதமாகும் என இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். இயக்குநரோ முதலில் பாடலை உருவாக்கி விடலாம் என்றார்.‌ நிறைய மாண்டேஜ் காட்சிகளை படமாக்கி இருந்தார். அதை வைத்து காதல் பாட்டை முதலில் உருவாக்கினோம். அந்த வகையில் ‘செல்லாட்டி..’ என்ற பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடலுக்காக ஒரே ஒரு டியூன் மட்டும் தான் அமைத்தேன். இயக்குநர் அதைக் கேட்டு விட்டு ஓகே சொன்னார். அவர் பாடல்கள் அனைத்தும் எனர்ஜிட்டிக்காக இருக்க வேண்டும். எங்கும் போர் அடிக்கக் கூடாது என்ற அவரது விருப்பத்தை தெரிவித்தார். அதே போல் எல்லா பாடல்களையும் ஒரே ஒரு டியூனில் ஓகே சொன்னார். இப்படத்திற்கான பின்னணி இசை எனக்கு சவாலாக இருந்தது. ‘தென்மேற்கு பருவக்காற்று ‘ படத்தைப் போலவே இதிலும் சவாலாக பணியாற்றினேன். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் மெனக்கடல் வியக்க வைத்தது. இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தின் ஒலி அமைப்பு தொடர்பாக நான் கூறிய பல ஆலோசனைகளை இயக்குநர் ஏற்றுக்கொண்டார்.

இந்த படம் நிறைய விஷயங்களை பேசுகிறது. இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. உச்சகட்ட காட்சியை பார்த்துவிட்டு நீங்களே அது தொடர்பாக பேசுவீர்கள். இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் கருணை இருக்கிறது. ‘அயோத்தி’ படத்தைப் பற்றி இதே மேடையில் தான் சிலாகித்து பாராட்டினேன். இதற்கும் ஊடகங்கள் பேராதரவு தெரிவிக்க வேண்டும்.

நான் படத்தை பார்க்கும் போது நடிகர்கள் எங்கேயும் செயற்கையாக நடித்திருக்கிறார்களா என்பதைத்தான் உன்னிப்பாக கவனிப்பேன். இந்தப் படத்தில் நடிகர், நடிகைகள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,” என்றார்.

நடிகை பிரதீபா பேசுகையில், ” கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. ‘நீர்ப்பறவைசி படத்திலிருந்து நான் இசையமைப்பாளர் ரகுநந்தனின் ரசிகை. அவருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமிதமாக இருக்கிறது.

கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் ‘பருத்திவீரன்’, ‘மைனா’ படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை போல் ரசிகர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். படத்தில் இயக்குநர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது இந்த படம் பார்க்கிற அனைத்து
ஆண்களுக்கும் ஒரு கேள்வியாக அந்தக் கருத்து தோன்றும். அதற்குரிய விடை என்ன என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நவம்பர் 7ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.

நடிகர் கௌஷிக் ராம் பேசுகையில், ”இந்த படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும் அதற்கு காரணமாக இருந்த நிகில் முருகனுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் சுவாரசியமானதாக இருந்தது.‌ கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி இப்படத்தில் நடித்தேன். எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான். ஆனால் கும்பகோணத்திற்கு பயணித்ததில்லை. அங்குள்ள மக்களின் பாசமும், அன்பும் என்னை வியக்க வைத்தது.

இந்த படத்தில் லேயர் லேயராக பணியாற்றி இருக்கிறோம்.‌ இது கிராமத்து காதல் கதை. அதிலும் ஒன் சைட் லவ் ஸ்டோரி. ஒரு காதலன் தன் காதலை சொல்வதற்கு எப்படி தவிக்கிறான், எப்படி அதனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான். இதனை இந்த படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களையும் இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் எந்த சினிமா பின்புலமும் இல்லாத புதிய இளம் திறமைசாலிகள் பணியாற்றிருக்கிறார்கள். இதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். 2019ம் ஆண்டிலிருந்து நான் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

இயக்குநர் S J N அலெக்ஸ் பாண்டியன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற பெயர் வைத்து விட்டு படத்தின் பணிகள் தொடங்கி இதுவரையிலான பயணம் என்பது விமானத்தின் மேற்கூரை பகுதியில் அமர்ந்து பயணிப்பது போன்றதொரு பயணமாக எனக்கு இருந்தது. இரண்டு ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறோம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் தங்கமானவர்கள்.

தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி உலக புகழ்பெற்ற ஸ்தபதி. அவருக்கும் இந்த துறைக்கும் தொடர்பே இல்லை. அவரை இத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர்கள் எங்களை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார். அதேபோல் இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பனும் பிரச்சனை என்று அவரிடம் செல்லும்போது எல்லாம் அவரும் பணம் கொடுத்து உதவினார்.‌ இருந்தாலும் இந்த திரைப்படத்தை உருவாக்கி இந்த நிலைக்கு எடுத்து வருவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஏனெனில் தமிழ் சினிமா அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறது.

புதுமுகமாக இருக்கும் கௌஷிக் ராமை தேர்வு செய்தேன்.‌ அவரும் எங்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.‌

பிரதீபா அவர்களிடம் கதையை சொன்ன போது கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார். அத்துடன் சம்பளம் எனக்கு முக்கியமில்லை. கதை நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டி கிடக்கிறது. அவரும் எதிர்காலத்தில் மிகப்பெரும் கதாநாயகியாக வருவார்கள். அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி நான் பார்க்கும் போது அவருக்கு 15,16 வயது தான் இருக்கும். அப்போதே அவர் 40 குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுதுதல் குறித்த பயிற்சி பெற்றேன். என்னுடைய திட்டமே தாமதமாக இயக்குநராக வேண்டும் என்பதுதான்.

இப்படத்தின் இருபது நிமிட காட்சிகளை செல்போனில் தான் எனது நண்பரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான கார்த்திக் வீரப்பனிடம் காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு எமோஷனலாகி இப்படத்திற்கு தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக மதுரையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வை மிக சிறப்பாக நடத்திக் காட்டினார். தொடர்ந்து நேரு கல்லூரியிலும் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்திக் காட்டினார். அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

நான் இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தவுடன் நான் எழுதிய முதல் தொழில்நுட்பக் கலைஞரின் பெயர் என். ஆர். ரகுநந்தன். நான் ‘நீர்ப்பறவை’ எனும் படத்தை பார்த்தேன். அந்தப் படத்தின் பின்னணி இசையை பார்த்தவுடன் இவர் தான் என் முதல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்தப் படத்தில் அவருடைய அற்புதமான திறமையை பார்க்கலாம். அதிலும் 25 நிமிடம் கொண்ட உச்சகட்ட காட்சியில் அவருடைய பின்னணி இசை நிச்சயமாக பேசப்படும்.‌ அந்த வகையில் இது சின்ன படம் அல்ல. பெரிய படம்தான். ஒலி அமைப்புக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்திற்கான வியாபாரத்திலும் அவர் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

என்னுடைய குருநாதர் விஜய் ஸ்ரீ. நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றாலும் கிடைத்த இடைவெளியில் அவரின் அறிமுகம் கிடைத்து அவருடன் பவுடர் படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். ‘பவுடர்’, ‘ஹரா’ ஆகிய இரண்டு படத்தின் வெளியீட்டின் போதும் அவருடன் இருந்தேன். அதனால் படத்தை வெளியிடுவதற்கான திரையரங்க ஒருங்கிணைப்பு விசயத்தைப் பற்றிய வழிமுறையை தெரிந்து கொண்டேன். அதனால் இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக அளவில் நல்லபடியான திரையரங்குகளில் வெளியாகிறது. அத்துடன் கேரளாவில் 20 திரையரங்குகளில் வெளியாகிறது. கர்நாடகாவிலும் இப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாய்ப்புகளை என் ஆர் ரகுநந்தன் உருவாக்கி தந்தார். எந்த ஒரு சின்ன படத்திற்கும் இத்தகைய வரவேற்பு இருக்காது. அதனால் இது சின்ன படம் இல்லை பெரிய படம்தான்.‌ இதற்கு ஊடகங்களும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் அழகான தலைப்பு. இது நான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை நினைவு படுத்தியது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்கிய இயக்குநருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஸ்தபதி என்றார்கள். சிற்பி நல்ல கதையை தான் தேர்ந்தெடுத்து இருப்பார். அதனால் இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆல்பமாக வெற்றி பெற்றவை. சமீபத்தில் ‘அயோத்தி’ படத்தில் கூட ‘காற்று ஒரு பட்டம் போல..’ பாடலை வெற்றி பெற வைத்தார். இந்தப் பாடலை அண்மையில் கேட்டேன். உடனே தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடலைப் பற்றி அவருடன் பேசினேன்.‌ மிகுந்த இசைஞானம் உள்ளவர்களால் தான் இது போன்ற பாடல்களை உருவாக்க முடியும். அவருக்குள்ள திறமைக்கு அவர் செல்ல வேண்டிய உயரம் இன்னும் அதிகம். இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் ஒரு கிறிஸ்தவ பெண்ணிற்கும், ஒரு இந்து பையனுக்கும் இடையே ஏற்பட்ட காதலாக தோன்றுகிறது. பொதுவாக ஒரு எழுத்தாளர் கதையை எழுதும்போது சமூகம் சார்ந்து சாதி சார்ந்து மதம் சார்ந்து கதை எழுதும்போது சாதாரண கதையை எழுதுவதை விட கூடுதல் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டி இருக்கும்.

காதலைப் பற்றி எழுதும் தருணத்தில் காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம். எங்கு கைத்தட்டல்கள் கிடைக்குமோ அதைத்தான் எழுதுவோம்.‌ அதே தருணத்தில் சமூகம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து கதை எழுதும் போது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் சமமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படித்தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் பிடித்த நியாயமான தீர்வும் இதில் இருந்தால் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும்.‌ இந்த மேடையில் படத்தில் இடம்பெறும் உச்சகட்ட காட்சியை பற்றி பேசும்போது எமோஷனலாக பேசினார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களையும் பாதிக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்,” என்றார்.

ZEE5-ல் ‘கிஸ்’ — வரும் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீமிங்!

நாட்டின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரொமாண்டிக் தமிழ்த் திரைப்படமான ‘கிஸ்’-யை நவம்பர் 7, 2025 முதல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.

பிரபல நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் தனது அறிமுக இயக்கமாக உருவாக்கியுள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் VTV கணேஷ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘கிஸ்’ திரைப்படம் அர்ஜுன் (கவின்) எனும் திறமையான இசைக்கலைஞரின் கதையைச் சொல்கிறது. அவரிடம் ஒரு வினோதமான சக்தி உள்ளது — ஒரு ஜோடி முத்தமிடும் போதெல்லாம், அவர்கள் உறவின் எதிர்காலத்தை முன்கூட்டியே காண முடியும்!
காதலும் விதியும் மீது நம்பிக்கையற்ற அர்ஜுனின் வாழ்க்கை, மீரா (ப்ரீத்தி அஸ்ரானி) என்பவளைச் சந்தித்த பிறகு பெரும் மாற்றத்தை எதிர்கொள்கிறது. அவள் அவனது நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தி, உண்மையான உணர்வுகளை உணரச்செய்கிறாள்.

காதல், நகைச்சுவை மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த இந்த படம் — “காதல் விதியை மாற்றுமா?” என்ற கேள்விக்கான சுவாரஸ்யமான பதிலைச் சொல்லும் ஒரு கமர்ஷியல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் ஆகும்.

இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் கூறியதாவது:

“‘கிஸ்’ படம் காதலின் மென்மையான உணர்வுகளைச் சொல்லும் அதே நேரத்தில், அதை சிந்திக்க வைக்கும் ஒரு கோணத்திலும் அணுகுகிறது. இது உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தாலும், சில ஆச்சரியமான ஃபேண்டஸி அம்சங்களும் நிறைந்தது. புதிய குரல்களையும் கதைகளையும் ஊக்குவித்து வரும் ZEE5 தளத்தில் இப்படம் வெளியாகிறது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் கவின் கூறியதாவது:

“அர்ஜுன் கதாபாத்திரம் ஒரு சாதாரண ரொமாண்டிக் பாத்திரம் அல்ல. அதில் பல சவால்களும் உணர்ச்சிகளும் நிறைந்துள்ளன. காதலை நம்பாத ஒருவனின் மாற்றத்தை வெளிப்படுத்துவது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதுவரை பல இதயத்தைத் தொடும் தமிழ்ப் படைப்புகளை வெளியிட்ட ZEE5-ல் இப்போது ‘கிஸ்’ படமும் வெளியாகிறது என்பதில் மகிழ்ச்சி.”

டிரெய்லரை காண 🔗: https://youtu.be/d7v_OVWkNCk

‘கிஸ்’ திரைப்படம் — நவம்பர் 7 முதல் ZEE5-ல் மட்டும்! தவறாமல் பாருங்கள்!

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது………

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்துள்ளது.

இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு திரில்லிங்கான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் “கிஷ்கிந்தாபுரி” – ZEE5-இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகிறது!

சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படம்……..

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

BR Talkies Corporation மற்றும் நடிகர் சுரேஷ் ரவி இணையும் இரண்டாவது திரைப்டத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது !!!

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், தயாரிப்பில், இயக்குநர் K பாலையா இயக்கத்தில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில், கலக்கலான ஃபேமிலி எண்டர்டெயினராரக உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.

முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், மிக அழுத்தமான படைப்பாக “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது தயாரிப்பாக, இந்த புதிய படத்தை அனைத்து அம்சங்களுடன், நகைச்சுவை நிறைந்த, முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாக்கி வருகிறது.

இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்துக் காட்டும் வகையில், சமூக அக்கறை கருத்தோடு, கிராமத்து பின்னணியில், கலக்கலான காமெடி டிராமாவாக இப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு, பிரிகிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி, ஆதித்யா கதிர், அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு, மதுரை, இராமநதபுரம், தேனி, சென்னை பகுதிகளில், 45 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி இணைந்து இப்படத்தை, பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது படத்தின் போஸ்ட புரடக்சன் பணிகள் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்கம் – K பாலையா
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – N R ரகுநந்தன்
படத்தொகுப்பு – தினேஷ் போனுராஜ்
கலை – C S பாலச்சந்தர்.

மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” – பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) நிறுவனத்தின் தயாரிப்பில்,அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்” வரும் நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

படத்தில் புதிய முகம் ஆதித்யா மாதவன் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கௌரி கிஷன் மற்றும் அஞ்சு குரியன் நடித்துள்ளனர்.

படம் வெளியாகும் முன்னதாக,நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான்:

“ஒரு புரொடக்ஷன் நிறுவனத்துடன் வேலை செய்வது எப்போதும் ஒரு புதிய அனுபவம். கிராண்ட் பிக்சர்ஸ் என்னிடம் மிகவும் அன்பாக நடந்துகொண்டனர். அபின் கதை சொன்னபோதே வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் செம்ம ஸ்மார்ட்டாகவும் அட்டகாசமாகவும் நடித்துள்ளார். கௌரி கிஷன், அஞ்சு குரியன் இருவரும் கதையின் முக்கியமான பாகங்கள். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் ஆதரவு தாருங்கள்.”

ஸ்டண்ட் இயக்குநர் பிரதீப்:

“எல்லோருக்கும் வணக்கம். இயக்குநர் அபின் அவர்களின் முதல் படம் போலவே இல்லை — மிக நன்றாக இயக்கியுள்ளார். ஹீரோவுக்கும் இது முதல் படம் என்றாலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து ஆதரவு தாருங்கள்.”

இயக்குநர் அரவிந்த்:

“நான் இயக்குநராக இல்லாமல், புரொடக்ஷன் அணியிலிருந்து இங்கு இருப்பது மகிழ்ச்சி. ஜிப்ரான் மியூசிக் என்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. ஹீரோ புதுமுகம் என்றாலும் மெச்சியூராக நடித்துள்ளார். நமக்கு புதிய ஹீரோக்கள் தேவை. இயக்குநர் அபின் மலையாளி என்றாலும், தமிழை கற்றுக்கொண்டு திரைக்கதை எழுதியுள்ளார் — முதல் படம் போலவே இல்லை, மிக அழகாக எடுத்துள்ளார். கௌரி கிஷன் மருத்துவராக சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப் புது ஹீரோவிடம் மிக அழகாக வேலை வாங்கியுள்ளார். ஜிப்ரான் எப்போதும் கதையின் உணர்வை இசையில் வெளிப்படுத்துவார்; இதிலும் அதையே செய்துள்ளார்.”

இணைத் தயாரிப்பாளர் ஆதிராஜ் புருஷோத்தமன்:

“ஒரு நல்ல படம் மக்களிடம் செல்வதில் பத்திரிக்கையாளர்களின் பங்கு மிக முக்கியம். நாங்கள் ஒரு நல்ல படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம். நன்றி.”

நடிகை கௌரி கிஷன்:

“மீடியா நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி. அபின் சார் ஹாஸ்பிடலில் இருந்தபோது கதையைச் சொன்னார் — அப்போது காட்சிகள் என் கண்முன் தோன்றியது. டீம் முழுவதும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. கிராண்ட் பிக்சர்ஸ் மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளனர். ஆதித்யா புதுமுகம் போல இல்லை; மிகவும் நன்றாக நடித்துள்ளார். ஜிப்ரான் சார் இசை மிக சிறப்பாக உள்ளது. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.”

நடிகர் ஆதித்யா மாதவன்:

“ஒரு புதிய ஹீரோவான என்னை நம்பி இப்படத்தில் பெரிய வாய்ப்பு தந்த இயக்குநர் அபின் அவர்களுக்கு நன்றி. அதிலும் அறிமுக ஹீரோவுக்கு இரண்டு ஹீரோயின்களை வைத்தது அவரின் மனதார்ந்த நம்பிக்கை. ஜிப்ரான் சார் இசை வருவது தெரிந்தவுடன் ரோட்டிலேயே டான்ஸ் ஆடினேன்! என்னை மிக அழகாக காட்டிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்கிற்கு நன்றி. கௌரி, அஞ்சு குரியன் இருவரும் மிக நன்றாக இணைந்து நடித்தனர். நவம்பர் 7 எங்கள் தீபாவளி — நீங்களும் பார்த்து சொல்லுங்கள்.”

இயக்குநர் அபின் ஹரிஹரன்:

“ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ‘அதர்ஸ்’ இன்று உருவாகியுள்ளது. நான் புதுமுக ஹீரோவையே தேடினேன், அதற்காக ஆடிஷன் நடத்தி ஆதித்யா மாதவனை தேர்ந்தெடுத்தோம் — அப்போது ஆடிஷனிலேயே அவர் அசத்தினார். கௌரி, அஞ்சு குரியன், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பல அனுபவமுள்ள நடிகர்கள் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் சார் மிகப் பெரிய கேமராமேன் என்றாலும், எனது கற்பனையை திரையில் துல்லியமாகப் பதிவு செய்தார். ஜிப்ரான் சார் கதையின் உணர்வுகளை இசையில் உயிர்ப்பித்துள்ளார். ஆதித்யா கடின உழைப்பை தந்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது — அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள்.”

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு: அரவிந்த் சிங்

இசை: ஜிப்ரான்

பாடல் வரிகள்: மோகன் ராஜன்

எடிட்டிங்: ராமர்

கலை இயக்கம்: உமா சங்கர்

நடிகர்கள் : ஆதித்யா மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R. சுந்தர்ராஜன் உள்ளிட்டோர்.

தயாரிப்பு: கிராண்ட் பிக்சர்ஸ்

இணைத் தயாரிப்பு: அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன்

“அதர்ஸ்” — உலகமெங்கும் திரையரங்குகளில் நவம்பர் 7 முதல்!

“AARAV STUDIOS”-இன் துவக்கம்

கடந்த பல ஆண்டுகளாக மக்கள் அளித்த அன்பும் அங்கீகாரமும், எனக்கு பெரும் உற்சாகத்தையும்  ஊக்கத்தையும்  வழங்கியதோடு, இந்த அழகான திரைப்பட உலகின் ஒரு பகுதியாகவும் மாற்றியுள்ளது.

இப்போது அந்த பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில், எனது திரைப்பட தயாரிப்பு நிறுவனமான “AARAV STUDIOS”-இன் துவக்கத்தை பணிவுடன் அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.

AARAV STUDIOS என்பது கதை சொல்லும் கலையின்மீது உள்ள தீவிரமான ஆர்வத்திலிருந்தும், ஆழமான அன்பிலிருந்தும் உருவானது.  விஷுவல் மற்றும் கிரியேட்டிவ் உலகில், இதுவரை சொல்லப்படாத இயல்பான கதைகளை உருவாக்கும் நோக்குடன்,  இந்த நிறுவனம் உருவாகியுள்ளது.

கடவுளின்  அருளும், திரைப்பட ரசிகர்களின் அன்பும் துணையாக, இதயங்களைத் தொடும் சிறந்த படங்களை தொடர்ந்து உருவாக்கும் நம்பிக்கையுடன், நன்றியுடன், எங்களின் இந்த சினிமா பயணத்தை பெருமையுடன் தொடங்குகிறோம்.

அன்பும் நன்றியுமுடன்,
ஆரவ்

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் திருமணம் !!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இளம் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அவரது காதலி அகிலாவை கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரது திருமணம், இன்று அக்டோபர் 31 ஆம் தேதி, இருவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ, ஹனு ரெட்டி, போயஸ் கார்டன், சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று க்ரீன் பார்க் ஸ்டார் ஹோட்டலில், நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், நடிகர்கள் சசிகுமார், சிவகார்த்திகேயன், எம் எஸ் பாஸ்கர் , ரமேஷ் திலக், நடிகைகள் சிம்ரன்,அனஸ்வரா விஜயன், தயாரிப்பாளர்கள் 2D Entertainment ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியான், அருண் விஷ்வா, ஷினீஷ், இயக்குநர்கள் ‘பூ’ சசி, ரஞ்சித் ஜெயக்கொடி, சண்முகப்பிரியன் (லவ் மேரேஜ்), பிரபு ராம் வியாஸ் (லவ்வர்) , மதன் (அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் படம்) இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன்ராஜ், விநியோகஸ்தர் விர்தூஷ், எடிட்டர் பரத் ராம், திங் மியூசிக் சந்தோஷ், ஜியோ ஹாட்ஸ்டார் சபரி ஆகியோர் கலந்துகொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

ஹனு மேன்  திரைப்படத்தின் மூலம், இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படங்களை மறுபரிமாணம் செய்த தொலைநோக்கு  இயக்குநர் பிரசாந்த் வர்மா (Prasanth Varma)மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) இணைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ‘மஹாகாளி’ படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ‘மஹாகாளி’ படத்தின் நாயகியாக பூமி ஷெட்டி (Bhoomi Shetty) நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வ போஸ்டர்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி, இந்திய சினிமாவின் மிகப்பெரிய காட்சிப் பிரமாண்டத்திற்கான மேடையை அமைத்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50% முடிவடைந்துள்ளதுடன், தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட்டில் நடைபெற்று வருகிறது. நட்சத்திர நடிகர்கள்  இல்லாத இப்படத்தில், மிகப்பெரிய தயாரிப்பு செலவினை மேற்கொள்வதில் தயாரிப்பாளர்கள் எந்த தயக்கமும் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல முன்னணி நடிகைகள்   இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டியதாக கூறப்பட்டாலும், கதையின் உண்மைத்தன்மை மற்றும் ஆழத்தினை வெளிப்படுத்தும் கருமை நிறத்திலான புதிய முகத்தை தேர்வு செய்வதில் இயக்குநர் பிரசாந்த் வர்மா கதைக்கு உண்மையாகவும், உறுதியாகவும் இருந்துள்ளார்.

மஹாகாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீவிர தெய்வீக ஆற்றல் மற்றும் மர்ம அழகுடன் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. சிவப்பு மற்றும் பொன்னிறத்தில் தோன்றும் பூமி ஷெட்டி, தாயான மஹாகாளியின் ஆற்றல், அழிவு மற்றும் மறுபிறப்பின் இரட்டை முகங்களையும் பிரதிபலிக்கும் சக்தியின் வடிவமாக காட்சியளிக்கிறார். பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் புனித குறியீடுகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாகாளியின் பார்வை, கொந்தளிப்பு மற்றும் கருணையின் கலவையாக ஃபர்ஸ்ட் லுக்  ஒளிர்கிறது.

“ஹனு மேன் யுனிவர்ஸிலிருந்து” என்ற டேக்லைன், இந்த படம் பிரசாந்த் வர்மாவின் விரிவடைந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த முக்கிய அத்தியாயம் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் புராணம் மற்றும் நவீன சினிமா இணையும் இந்தியாவின் தனித்துவமான  மித்திக் சூப்பர் ஹீரோ யூனிவர்ஸை உருவாக்கும் முயற்சி மேலும் வலுப்பெறுகிறது.

ஆர்கே துக்கல்  ( RK Duggal) மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் ஆகியோரின் ஆதரவுடன், ஆர்கேடி ஸ்டூடியோஸ் (RKD Studios) ‘மஹாகாளி’யை  மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது. பிரசாந்த் வர்மாவின் கற்பனை திறன் மற்றும் பூஜா அபர்ணா கொல்லூருவின் இயக்கமும் இணையும் இப்படம், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்த பெரிய சினிமா அனுபவமாக உருவாகிறது.

Rela Hospital Rolls Out Mobile Stroke Care Unit and Launches ‘New Beginnings’ Support Group

Chennai, October 31, 2025: Rela Hospital unveiled its pioneering Mobile Stroke Care Unit and “New Beginnings”, a dedicated support group for stroke survivors, on the occasion of World Stroke Day.

Film director Ms. Aishwarya Rajinikanth officially launched these services in the presence of Prof. Mohamed Rela, Chairman, Rela Hospital; Dr. Shankar Balakrishnan, Clinical Lead, Neurology & Neuro-Sciences, and Dr. Muralidharan Vetrivel, Cerebrovascular Neurosurgeon, Rela Hospital. The event featured leading stroke-care experts sharing inspiring stories of treatments and recovery journeys of patients.

World Stroke Day is observed annually on 29 October to raise global awareness about strokes – their prevention, symptoms, treatment and the support required for survivors. This year’s theme, as set by the World Stroke Organisation, is #EveryMinuteCounts, putting the spotlight on recognising the warning signs of stroke and acting fast.

The Mobile Stroke Care unit at Rela Hospital will provide rapid-response outreach, including on-site neurological assessment, thrombosis screening, emergency transport coordination, tele-consultation with neurologists and initial rehabilitation counselling. Meanwhile, the “New Beginnings” support group will offer stroke survivors and their caregivers a structured platform to connect, share experiences, inspire each other and access guidance on life after stroke.

In his address, Prof. Mohamed Rela said that stroke incidence in India is rising rapidly. Population-based studies report annual stroke incidence between 105 and 152 per 100,000 people. A recent study noted that India recorded over 1.25 million new stroke cases in 2021, marking a 51 % increase over three decades. Stroke-related mortality and disability are also increasing. However, when detected early – during the “golden hour” – stroke can often be treated successfully, reducing both death and long-term disability. There is a need for greater public awareness about stroke symptoms, regular screenings and immediate medical support.

He said that the hospital is happy to launch the Mobile Stroke Care Unit, as it enables doctors and paramedics to reach patients within minutes of a stroke, ensuring that life-saving treatment can begin even before the patient reaches the hospital. Likewise, the “New Beginnings” support group is a timely community initiative that brings survivors and caregivers together, helping them share coping strategies, regain confidence, promote rehabilitation, and rebuild meaningful lives after stroke.

Dr. Shankar Balakrishnan said that a stroke occurs when the blood supply to part of the brain is interrupted (ischemic stroke) or when a blood vessel bursts (haemorrhagic stroke). Risk factors include uncontrolled high blood pressure, cholesterol, diabetes mellitus, smoking, obesity and sedentary lifestyle. People at high risk should consider regular vascular screening and work with their physicians to manage risk factors through medications and lifestyle modification.

In his comments, Dr. Muralidharan Vetrivel said, “At Rela Hospital’s Department of Neurology, we provide comprehensive diagnosis and treatment for a wide range of neurological conditions through advanced facilities such as EEG, EMG, Nerve Conduction Studies, and a fully equipped Neurointerventional Cath Lab. Our 24×7 neuroradiology support, neurophysiotherapy and rehabilitation unit, and specialized care in areas like epilepsy, movement disorders, and neuro-oncology ensure patients receive accurate evaluation, timely intervention, and continued support under one roof.”

“ஃபௌசி” புராணக் கதை இல்லை , இது ஒரு அதிரடியான வரலாற்றுப் படம் – இயக்குநர் ஹனு ராகவபுடி !!

பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது – இயக்குநர் ஹனு ராகவபுடி !!

ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி இணையும் பான் இந்திய படமான “ஃபௌசி” படத்தின், அதிராகரபூர்வ டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபாஸ் போர்விரனாக காட்சி தரும் ஃபௌசி பட ஃபர்ஸ்ட் லுக்கின் பின்னணி குறித்து, ரசிகர்கள் இணையம் முழுக்க விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குநர் இயக்குநர் ஹனு ராகவபுடி படம் குறித்தான பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் பகவத்கீதையைச் சேர்ந்த குறிப்புகள் ஃபர்ஸ்ட் லுக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதே ஏன் ?
நாங்கள் திட்டமிட்டு தான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம், போர்வீரனைப் பற்றிய இந்தக் கதைக்கு அவை ஆழமான பொருள் தருகிறது மற்றபடி இது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் அல்ல. பகவத்கீதையிலிருந்து நாங்கள் எடுத்துக் கொண்டது வெறும் தத்துவ ரீதியான ஊக்கம் மட்டுமே. ஃபௌசி என்பது மனித உணர்வுகள், தேசப்பற்று மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சமூக-அரசியல் பதற்றங்களை மையமாகக் கொண்ட ஒரு அழுத்தமான அதிரடி டிராமா. இன்றும் உலகளவில் அதேபோல் எதிரொலிக்கும் உண்மைகளை இப்படம் பேசும்.

ஃபௌசி டைட்டில் போஸ்டரில் அர்ஜுனன், கர்ணன் போன்ற புராண வீரர்களின் பெயர்கள் இருக்கிறதே அதற்கான அர்த்தம் என்ன?
ஃபௌசியில் பிரபாஸ் ஒரு மிகப்பெரிய வீரராக நடிக்கிறார். அவருடைய கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தில் புராண வீரர்களின் சிறப்புகளை கலந்து காட்ட விரும்பினேன். அர்ஜுனன், கர்ணன், ஏகலைவன் ஆகியோர் திறமை, தியாகம், பக்தி என சக்திவாய்ந்த பரிமாணங்களைக் குறிக்கிறார்கள் அதை தான் டைட்டில் பயன்படுத்தினேன். “கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்?” என்ற சிந்தனை தான் இந்தக் கதையின் மையக் கரு. இப்போதைக்கு கதை பற்றி அதிகமாக சொல்ல முடியாது, ஆனால் இப்படம் 1940களின் காலனித்துவ பின்னணியில் நடக்கும் அதிரடி டிராமாவாக இருக்கும்.

ஃபௌசி பல மொழிகளில் உருவாகும் உலகளாவிய படமா?
பிரபாஸ் முன்னணி கதாபாத்திரமாக இருக்கும்போது, படம் தானாகவே உலகளாவியதாகி விடுகிறது. அவருக்கு எல்லைகளைத் தாண்டி ரசிகர்கள் உள்ளனர். எங்கள் கதை இந்திய மண்ணில் வேரூன்றியிருந்தாலும், அதன் உணர்ச்சி மற்றும் மனிதநேயம் எல்லா மக்களையும் தொடும் வகையில் அமைந்துள்ளது. பிரபாஸ் உலகளவில் படத்தை எடுத்துச் செல்லுவார், ஆனால் உண்மையில் இதயத்தைத் தொடும் கதையும் உலகளாவிய வகையிலான உணர்வுகளுமே அனைவரையும் இணைக்கும்.

நீங்கள் உணர்ச்சி மிகுந்த காதல் கதைகள் செய்வதில் வல்லவர், இப்படத்தில் ரொமான்ஸ் இருக்கிறா?, இமான்வியின் பாத்திரம் எப்படி இருக்கும் ?

“அந்தால ராக்‌ஷசி” முதல் “சீதா ராமம்” வரை என் காதல் கதைகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஃபௌசியிலும் காதல் இருக்கிறது. அது வேறுவிதமான வகையில், தீவிரமான, உணர்ச்சிகரமான வடிவில் இருக்கிறது. பிரபாஸ் மற்றும் இமான்வி இடையேயான காதல் உங்கள் இதயத்தைத் தொட்டுவிடும். இமான்வி “பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ” என பரவி வரும் வதந்திகளை முற்றிலுமாக மறுக்கிறேன். அவர் உண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார். அவரது தந்தை அங்கு ஹோட்டல் துறையில் பணியாற்றுகிறார். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் முழுமையான அர்ப்பணிப்புடன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

பிரபாஸுடன் பணிபுரியும் அனுபவம் எப்படி இருக்கிறது? அவர் உங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறாரா ?
பிரபாஸ் எல்லோராலும்“டார்லிங்” என்று அழைக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அவர் தனது இயக்குநர்களுக்கு முழு சுதந்திரத்தையும் வழங்குகிறார். அவர்களின் கற்பனைக்கு முழு ஆதரவு தருகிறார். அவரது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தினையும் மீறி, அவர் எளிமையானவர், கடினமாக உழைப்பவர், மிகுந்த பணிவுடன் இருப்பவர். என் முழு திரை வாழ்க்கையிலும் இப்படிப் பட்ட படைப்புச் சுதந்திரம் கிடைத்ததில்லை. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில் அவர் பல பரிமாணங்களுடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, T-Series நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்குகிறார்.