SRM Prime Hospital Uses Bovine Pericardial Patch in Novel Endoscopic Procedure to Stop Stool Leakage through Neovagina

Chennai, November 25, 2025: In a first for Tamil Nadu, SRM Prime Hospital has successfully used a bovine pericardial patch to close a neovaginal fistula – an abnormal connection between the rectum and neovagina – that was causing the passage of flatus and faecal matter through the neovagina of a 22-year-old transgender youth who had recently undergone male-to-female gender-affirming surgery elsewhere. The minimally invasive, endoscopic day-care procedure helped avert the need for major open-abdominal surgery for the patient from a poor economic background.

This procedure was performed by Dr. Arulprakash S., Clinical Lead and Senior Consultant, and Dr. Tarun J. George, Senior Consultant, Medical Gastroenterology and Hepatology, under the guidance of Dr. C. Paul Dilip Kumar, Director–Medical Services, SRM Prime Hospital.

In his comments, Dr. Arulprakash said, “The patient had undergone gender-affirming surgery at a hospital in another city a few months ago. Soon after the procedure, she developed a recto-neovaginal fistula, an abnormal connection between the rectum, the last part of the large intestine, and the neovagina created during surgery. As a result, flatus and faecal matter began passing through the neovagina. Such fistulas in transgender patients are rare complications of gender-affirming surgery, occurring in only about 1% of cases. An endoscopic procedure was attempted at the same hospital; a clip was used. But the relief was only temporary, and the condition recurred after the clip placement. This was a rare and challenging clinical situation.”

He added: “At that stage, an open abdominal surgery was considered the only option, which would have meant higher costs and a prolonged hospital stay. However, when she came to us, we opted for an endoscopic closure of the fistula using a novel bovine pericardial patch – the first such procedure in the state. Using bovine pericardial patch to support and close the fistula was a novel idea. Here the patched served as a cellular scaffold to bridge tissues in surgeries. Although a few similar attempts to close recto-neovaginal fistulas with this bioprosthesis have been made in other parts of the country, these cases have not been formally documented or published so far. The procedure required two endoscopists working simultaneously – one visualising the fistula from each side and the other helping position the patch while the clip was placed. Such advanced endoscopic capability is not available in many hospitals. With this approach, we were able to completely avoid a major surgery and still offer the patient a safe, day-care procedure. She is recovering well and is very satisfied with the outcome.”

Providing more details about the procedure, Dr. Tarun J. George said, “We performed a contrast CT scan to confirm the location and size of the fistula opening and evaluated various endoscopic management options before deciding on this approach. We first used argon plasma coagulation over the fistula opening – a method that uses gentle heat delivered through gas to prepare the area without direct contact. This was done to roughen the lining of surface that was to be closed. We then placed the bovine pericardial patch inside the tract and finally deployed a large 14 mm over-the-scope clip to seal the opening and anchor the patch securely, successfully closing the fistula. This minimally invasive procedure helped the patient avoid a major, complex surgery, along with a prolonged hospital stay and higher treatment costs. She was discharged the same day and walked out of the hospital. She only requires one week of rest at home, five days of antibiotics, and stool softeners for about three months.”

விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணையும், பூரி கனெக்ட்ஸ் (Puri Connects), JB Motion Pictures தயாரிப்பில் உருவாகும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, சார்மி கௌர், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா கூட்டணியில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள #PuriSethupathi படத்தின் முழு படப்பிடிப்பும் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துவிட்டது. அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம், தனது இறுதி நாள் படப்பிடிப்பை எட்டிய நிலையில், பூரி  ஜெகன்னாத் – விஜய் சேதுபதி – சார்மி கௌர் ஆகியோர் பகிர்ந்த,  மகிழ்ச்சியும், உணர்ச்சியும் நிறைந்த வீடியோவை வெளியிட்டு, இந்த சிறப்பு தருணத்தை படக்குழு கொண்டாடியுள்ளனர்.

வீடியோவில் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் உடனும் படக்குழுவுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் எந்த அளவு  நினைவில் நிற்கக்கூடியது என்பதையும், அவர்களை நிறைய மிஸ் செய்யப் போவதாகவும் கூறினார். பூரி மற்றும் சார்மி ஆகியோரும் இதே போல தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். விஜய் சேதுபதி, நகைச்சுவையாக பூரியின் ஜாக்கெட்டை பாராட்டியதும் வீடியோவின் ஹைலைட்களில் ஒன்றாக இருந்தது.

இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB  Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார். படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களில் அதிரடியான  இசையமைப்பால் கவனம் பெற்ற தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், படக்குழு புரமோஷன் பணிகளை விரைவில்  தொடங்கவுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், டைட்டில் அறிமுகம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள் :

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects
இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

அகண்டா 2: தாண்டவம்

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, லக்கி சார்ம் சம்யுக்தா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு, இசையமைப்பாளர் தமன் S,  இணையும் #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் — சர்ஜிகல் ஸ்டிரைக் போல வெடித்தது!காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா #BB4 அகண்டா 2: தாண்டவம்  டிரெய்லர் வெளியானது !!

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும்  மாபெரும் ஆன்மீக-ஆக்சன் அதிரடி திரைப்படமான அகண்டா 2: தாண்டவம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதற்குத் தயாராகியுள்ளது. தற்போது இந்த திரைப்படத்திற்காக நாடு முழுவதும் மிக தீவிரமான மற்றும் பரவலான புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது.
ராம் ஆசம்டா மற்றும் கோபி ஆசம்டா தயாரிப்பில், 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில், M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்கும் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் பாடல்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இன்று பெங்களூரில் நடைபெற்ற விழாவில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் முன்னிலையில்,  படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் டிரெய்லர்கள் வெளியிடப்பட்டது.

டிரெய்லர் ஒரு கடுமையான எச்சரிக்கையுடன் தொடங்குகிறது. இந்தியாவின் ஆன்மீக அடித்தளத்தை அழிக்க, நாட்டின் உள்ளும் வெளியும் செயல்படும் தீயசக்திகள் ஒன்று சேர்கின்றன. இவர்களின் நோக்கம் — சனாதன  ஹைந்தவ தர்மத்தை முழுமையாக அழித்து, தேசத்தை குழப்பமும் பயமும் நிறைந்த நிலைக்கு தள்ளுவது.

ஆனால் நம்பிக்கை குலையும் அந்த தருணத்தில் — தெய்வீக தீப்பொறி போல எழும் சக்தி… தான் அகண்டா!புராண வலிமையும் தேசபக்தியும் கலந்த ஒரு அதீத சக்தியாக, தீயதை சுட்டெரிக்க அகண்டா  எழுகின்றார்.

இயக்குநர் போயபாடி ஶ்ரீனு  இந்த முறை மிக விரிவான, எல்லைகளைத் தாண்டும் தொலைநோக்கு பார்வையில் படத்தை உருவாக்கியுள்ளார். ஆன்மீக ஆற்றலும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும், பெரும் உலகை அகண்டா 2 கட்டியெழுப்புகிறது. கும்பமேளா காட்சி டிரெய்லரின் மிகப்பெரிய ஈர்ப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் கோபம் — தெய்வீகத்தின் வடிவம்.அவரது சக்தி —  நிறுத்த முடியாத புயல்.இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அகண்டா அவதாரம் திரையை  முழுமையாக ஆட்சி செய்கிறது. அவரது நடை, பார்வை, வசனங்கள்,  தெய்வீக பாதுகாவலனின் உருவத்தை நினைவூட்டுகின்றன.

ஆதி பினிசெட்டி வலுவான வில்லனாக வருகிறார். சம்யுக்தா நாயகியாக நடித்துள்ளார். ஹர்ஷாலி மால்ஹோத்ராவின் சிறிய காட்சிகள் கதையின்  உணர்ச்சியை மேலும் ஆழப்படுத்துவதாக அமைந்துள்ளது.

படத்தின் தொழில்நுட்பத் தரம் சிறப்பாக உள்ளது.ஒளிப்பதிவாளர்கள் C. ராம்பிரசாத் மற்றும் சந்தோஷ் D டெடாகே  — ஒவ்வொரு ஃபிரேமிலும் பெரும் பிரம்மாண்டத்தையும், அற்புதமான உலகையும்  உருவாக்குகியுள்ளனர்.இசையமைப்பாளர் தமன் S உடைய  அதிரடி பின்னணி இசை — தெய்வீக தாளம் போல காட்சிகளின் தாக்கத்தை உயர்த்துகிறது. தம்மிராஜுவின் எடிட்டிங் கச்சிதமாகவும்,  A.S. பிரகாஷின் கலை அமைப்பு படத்தை இன்னும் பிரம்மாண்டமாக மாற்றியுள்ளது.

தேசபக்தி, ஆன்மீக வலிமை மற்றும் மாஸ் எலிவேஷன் — இந்த மூன்றையும் இணைத்து, அகண்டா 2 டிரெய்லர் உண்மையான NBK ஸ்டைல், சர்ஜிகல் ஸ்டிரைக் போல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக சானதான ஹைந்தவ தர்மம் மையமாக இருப்பது, முழு இந்திய ரசிகர்களுக்கும் பெரும் ஈர்ப்பாக அமைந்துள்ளது.

அகண்டா 2 – தாண்டவம்  திரைப்படம் வரும்  டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிப்பு :

நந்தமூரி பாலகிருஷ்ணா
சம்யுக்தா
ஆதிப் பினிசெட்டி
ஹர்ஷாலி மால்ஹோத்ரா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு
தயாரிப்பாளர்கள் :ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா
பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ்
வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி
இசை : S. தமன்
ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி
கலை : A.S. பிரகாஷ்
எடிட்டிங் : தம்மிராஜு
சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

தீயவர்குலை நடுங்க- திரைப்பட விமர்சனம்

தீமை செய்வோர் திகைப்பார்கள், நீதி வெல்லும் – இந்த கோட்டை மனதில் கொண்டு நகரும் ஒரு சமூக-த்ரில்லர்!

“தீயவர்குலை நடுங்க” ஒரு வழக்கமான மசாலா படம் போல தொடங்கினாலும், நடுப்பகுதிக்குப் பிறகு கதை மெல்லக் கண்ணியை இறுக்கத் தொடங்குகிறது. மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் இருண்ட முகங்களையும், அதிகாரத்தின் பலத்தையும், அதற்கெதிராக பொதுமகன் எப்படிப் போராடுகிறார் என்பதையும் படம் நேரடியாகத் தொட்டுச் செல்கிறது.
நாயகன் ஒரு சாதாரண இளைஞன். வாழ்க்கையில் நடக்கும் அநியாயங்களைக் கண்டுக் கொண்டே செல்லும் அவனுள், ஒரு நாள் வெடிக்கும் கோபமே கதையின் தொடக்கம். சமூகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில சக்திமிக்க மனிதர்களின் பாவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயலும் அவனுக்கு எதிராக, “தீயவர்குல்” ஒன்று சேர்ந்து நின்றாலெல்லாம் என்ன நடக்கும் என்பதை படம் விறுவிறுப்பாக காட்டுகிறது. இறுதியில், தன்னுடைய அறிவும் துணிவும் கொண்டு அவன் எப்படிக் கட்டுக்கதை முறியடிக்கிறான் என்பதே சிகரம்.
நாயகனின் கோபம், வேதனை, பழிவாங்கும் ஜாடை – அனைத்தும் நம்ப வைக்கும் வகையில் இருந்தது. எதிர் வேடங்களில் வந்தவர்கள் கதை முழுவதும் ஒரு இருண்ட அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். சில காட்சிகளில் அவர்கள் செய்கின்ற கொடூரம், நாயகனை விட பார்வையாளர்களையே உசுப்பேற்றுகிறது.


பின்னணி இசை கதை சொல்லலுக்கு பேஸைக் கூட்டுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதிகளில் இசை தாளமே மாற்றித் தருகிறது. சினிமாடோகிரஃபி இரவுக்காட்சிகளிலும், துரத்தல் சீன்ஸ்களிலும் மிகுந்த தாக்கத்தைக் கொடுக்கிறது.
சில இடங்களில் டயலாக் மிகப் பெரியதாக உணரப்படும்; மேலும், நீதி-அநீதி பற்றிய “லெக்சர்” சற்று நீளுகிறது. ஆனால் நோக்கம் சரியாக சென்று சேருகிறது
“தீயவர்குலை நடுங்க” என்பது ஒரு சண்டை-ஆக்ஷன் படம் அல்ல; அது ஒரு சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதை. தீமை பெருகும் காலத்தில், ‘ஒருவன் எப்படியாவது நிற்க வேண்டும்’ என்று சொல்லும் ஒரு சத்தமான முயற்சி. அதற்காகவே ஒரு முறை பார்க்கத் தக்க படம்.

‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

இயக்குநர் கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5 திரையரங்குகளில் வெளியாகிறது

அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி,  பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு – ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.  இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

டிசம்பர் மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் கௌரவ் நாராயணன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா, திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”சினிமாவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. சினிமா குடும்பத்திற்கு என்னை அழைத்து வந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படக்குழுவினருக்கு நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார் .

பாடலாசிரியர் கருணாகரன் பேசுகையில், ”இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் , இசையமைப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றி.‌ 2004ம் ஆண்டில் வெளியான ‘ஏய்’ படத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்து பணியாற்றிய வேண்டிய தருணம். ஆனால் அந்த வாய்ப்பு தவறிப் போனது. அதன் பிறகு அவருடைய இசையில் இப்போது அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.

நடிகை மஞ்சு பேசுகையில், ”எல்லோரும் ஏதோ ஒரு சூழலில் மோசடிக்கு ஆளாகி இருப்போம். இதுபோன்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து உங்களின் ஆதரவை தர வேண்டும்,” என்றார்.

நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், ”முதலில் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்த நடிகர் ஆதவனுக்கு நன்றி. வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.

நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது.‌ எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள்.‌ நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது.

நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் கார்த்திக் மற்றும் படக் குழுவினருடன் தொடர்ந்து பழகி வருகிறேன். அற்புதமான குழு. கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி பேசுகையில், ”நான் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் வாசிப்பாளர். தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு  திரைப்படங்களை தணிக்கை சான்றிதழுக்காக பார்ப்போம். இந்த சமுதாயத்தில் புரையோடி இருக்கின்ற, அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை படக் குழுவினர் கையாண்டிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,000 கோடி ரூபாய் அளவிற்கு சைபர் குற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. இது தொடர்பாக தினந்தோறும் செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிறது. ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், டிரேடிங் ஸ்கேம், முதலீடு தொடர்பான மோசடி என நாள்தோறும் விதவிதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். நம் நாட்டின் பட்ஜெட்டிற்கு நிகராக மக்கள் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள். சைபர் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

தணிக்கை குழுவை பொருத்தவரை கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது, யாரையும் அவமதிக்கக்கூடாது, அரசியல் தலைவர்களை பற்றி தவறாக பேசுவதோ சித்தரிப்பதோ கூடாது. எங்களைப் பொருத்தவரை படைப்பாளிகள் கொடுக்கும் ஒரு படம் சமூகத்தில் மக்களுக்கு படிப்பினையையும், விழிப்புணர்வையும், நல்லதொரு சிந்தனையையும் கொடுக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அப்படிப்பட்டதொரு படத்தை எடுத்ததற்காக இந்த படக் குழுவினரை மீண்டும் பாராட்டுகிறேன்,” என்றார் .

நடிகர் இமான் அண்ணாச்சி பேசுகையில், ”புதுமுக நடிகர் மற்றும் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது போன்ற திரைப்பட விழாக்களில் அணிவிக்கப்படும் சால்வையால் எந்த பயனும் இல்லை. இதை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்கவும் முடியவில்லை. அதனால் சால்வைக்கு பதிலாக துண்டினை (டர்க்கி டவல் –  குற்றால துண்டு ) பரிசாக அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்,” என்றார்.

நடிகை மிருதுளா சுரேஷ் பேசுகையில், ”இந்த விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான செய்தியையும், பொழுதுபோக்கையும் கொண்ட திரைப்படம். அனைவரும் நிச்சயமாக திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி,” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், ”என் தந்தை தேவாவின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளான இன்று அவர் பாடிய ஒரு பாடலை இங்கு திரையிட்டு, அவரை கௌரவப்படுத்தியதற்காக அனைவருக்கும் என் தந்தையின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு துறையை சார்ந்தவராக இருந்தாலும் பொருத்தமான கதையை தேர்வு செய்து அதற்கு தேவையான பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு நிச்சயமாக நஷ்டத்தை தராது. லாபத்தை அள்ளித் தரும். அதற்கு என் வாழ்த்துகள்.

நானும், பாடலாசிரியர் கருணாகரனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தான் இணைந்திருக்கிறோம். அவரை பார்க்கும் போதெல்லாம் இவரைப் போல் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அவரிடமிருந்து இதை கற்றுக் கொண்டேன்,” என்றார்.

இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ”முதலில் இயக்குநர் கே. பாக்யராஜுக்கு நன்றி. இந்த ஆண்டு தேசிய விருதுக்கான நடுவர் குழுவில் தென்னிந்திய பிரதிநிதியாக தமிழ்நாடு சார்பில் நான் இடம் பெற்றிருந்தேன். இந்த நடுவர் குழுவில் நான் தான் மிகவும் இளையவன். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கும் பட்டியலில் ‘பார்க்கிங்’ படத்துடன் வேறு சில படங்களும் போட்டியில் இருந்தன. இந்தத் தருணத்தில் கே. பாக்யராஜ் படங்களில் இடம் பிடித்திருக்கும் திரைக்கதை நுட்பங்களால் உந்தப்பட்ட நான் அவருடைய திரைக்கதை மேஜிக்கை உதாரணமாக பேசி தான் ‘பார்க்கிங்’ படம் தேசிய விருதுக்கு தேர்வானது. எனவே ‘பார்க்கிங்’ படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் கே. பாக்யராஜ் இருக்கிறார். திரைக்கதை என்றால் தமிழ் சினிமா தான் நிகரற்றது. இத்தனை ஆண்டு காலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை போன்ற சில விஷயங்களை பேசி பரிந்துரைத்தேன்.

அப்பா அம்மாவை நேசிப்பவர்கள் யாரும் தோற்க மாட்டார்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவருடைய தந்தை மீது அளவற்ற நேசம் கொண்டவர். இதற்காகவே இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருடைய தந்தையின் பரிபூரண ஆசி உண்டு என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்மறை எங்கும் இருக்கக் கூடாது என விரும்பும் நான் என் படத்தின் டைட்டிலில் கூட ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’, ‘இப்படை வெல்லும்’ என பெயர் வைத்திருப்பேன். ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசிட்டிவிட்டி இருக்கும். அவர் இந்த படத்தில் பங்களிப்பு வழங்கியது இப்படத்திற்காக வெற்றியை குறிக்கிறது.

மோசடி குறித்து படம் இயக்குவது கடினம். ஏடிஎம் பண மோசடி குறித்து நான் முதன்முதலாக ‘சிகரம் தொடு’ படத்தை உருவாக்கினேன். ஒரே ஒரு விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு ஒரு நபர் 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்தான் சிகரம் தொடு படத்தை உருவாக்குவதற்கான இன்ஸ்பிரேஷன். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபரை சந்தித்து பல விஷயங்களை கேட்டு அந்த படத்தை உருவாக்கினேன். அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் இங்கு 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து அவர் அங்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டியிருந்தார்.

சம்பாதிப்பது கடினம், அதை செலவழிப்பது எளிது, அதை திருடுவது அதைவிட எளிது. ஆனால் இதற்கு மூளை அதிகமாக வேண்டும். அதனால் இந்தப் படத்திலும் மோசடிகள் பற்றி நிறைய விவரங்களை சொல்லி இருப்பார்கள். இவை மக்களுக்கு பிடித்தவையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்று கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறுகிறது,” என்றார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா பேசுகையில், ”இந்த நிகழ்விற்கும், மேடையில் வீற்றிருக்கும் படக்குழுவினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் தொகுதி அருகில் உள்ளதாலும், என்னுடைய நண்பர்களின் அழைப்பின் காரணமாகவும் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்கள் கட்சியின் மறைந்த தலைவர் கலைஞர் ஐயா, தமிழக முதல்வர், தமிழகத்தின் துணை முதல்வர் அனைவரும் திரைத்துறையில் இருந்து தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தக் கட்சியில் இருந்து வந்தவன் என்பதால் இந்த மேடையில் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.

இயக்குநர் கே .பாக்யராஜின் காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படங்களும் ஆண்டு கணக்கில் ஓடும். ஆனால் இன்று மூன்று நாள் ஓடிய படங்களுக்கு மெகா ஹிட் என விளம்பரம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு கால சூழல் மாறி இருக்கிறது.

இன்றுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் சினிமாவில் இருக்கும் நடிகர்களை பார்த்து தான் தங்களை வழி நடத்திக் கொள்கிறார்கள். இதற்காகத்தான் படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் சிகரெட் பிடித்தால் அதற்கு கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெறுகிறது. இருந்தாலும் இன்று கருத்துள்ள படங்கள் அதிகம் வருவதில்லை.

இந்தப் படத்தில் மோசடி குறித்து பேசி இருக்கிறார்கள். இன்று அனைத்து துறையிலும் மோசடி இருக்கிறது. இதில் யார் அதிகம் ஏமாறுகிறார்கள் என்றால், படித்தவர்கள் தான் அதிகம். இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும் பேராசை தான்.

சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் என்னை தேடி வந்து பலரும் பத்து லட்சம் கட்டினோம் மோசடி செய்து விட்டார்கள் என்று புலம்புவார்கள், புகார் அளிப்பார்கள்.  நான் காவல்துறையில் புகார் அளிக்குமாறு பரிந்துரைப்பேன்.

நமக்கு எது தேவை என்பதை நன்றாக திட்டமிட்டு அளவுடன் வாழ்ந்தால் மோசடியில் சிக்க மாட்டோம். மேலும் மோசடி குறித்து அரசாங்கம் மட்டுமே பணியாற்றினால் இதை தடுக்க முடியாது. மக்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தர வேண்டும்.

தமிழக மக்கள் மிகவும் விழிப்பானவர்கள். சிறப்பானவர்கள். இந்த படத்தை பார்த்து, எதிர்காலத்தில் எந்த மோசடியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர்-நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசுகையில், ”எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்திற்கு பத்து பாகத்தை எடுக்கலாம். என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்த படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாக சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து சொல்லி இருக்கிறேன்.

இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தில் நாயகனாகவும் நடித்து இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். இதற்கு விதை போட்டவர் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தும் கே. பாக்யராஜ் அவர்கள் தான். ஹீரோவாகவும் நடித்து, இயக்கவும் முடியும் என்ற அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நானும் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறேன்,” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”பொதுவாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் எல்லாப் புகழும் ரசிகப் பெருமக்களுக்கே என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் இல்லை என்றால் இங்கு யாரும் இல்லை.

சினிமாவில் ஆபத்பாந்தவன் என்ற பெயரை ஸ்ரீகாந்த் தேவாவின் தந்தையான தேவா பெற்றிருக்கிறார். நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைப்பார். சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பார். தந்தை வழியில் இன்று ஸ்ரீகாந்த் தேவாவும் பயணிக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாக பயன்படுத்தாமல் எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள். நான் ‘பாக்யா’ இதழில் கேள்வி பதில் எழுதும் போது இது போன்ற விஷயங்களை நிறைய வாசித்திருக்கிறேன்.

மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு.

இந்தப் படத்தின் கதை என்ன? என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. “நான் ஏமாற்ற பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன்” என்றார்.  அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம்.  இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.‌

உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆகவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.

அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love )

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது.  

இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

முழுக்க முழுக்க நவீன இக் கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு, தலைமுறையின் புழக்கத்தில் இருக்கும் “வித் லவ் ( With Love )”  தலைப்பு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  டீசர் தற்போது இணையம் முழுக்க பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்

LINK : https://www.youtube.com/watch?v=gNrYsSN0V9A

Sisu 2 : Road to Revenge


வெளியீடு -November 21st 2025
நிறுவனம் -Sony Pictures
2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிறைவிருக்கலாம். இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில
வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்!
தப்பித்து விடுகிறார்!
இனி , இரண்டாம் பாகம் பற்றி …

கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக , அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும் பொழுது , அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி!
அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர்!
அவர்கள் அனைவரையும் அவரால் சமாளித்து வெல்ல முடிந்ததா என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்!
2002 இல் வெளிவந்த Sisu திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது!
இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மிக பெரிய அளவில் பேசப்பட்டன!
திரைப்பட துறையை சார்ந்த Stunt Masters பலரும் இப்படத்தை பெரியளவில் கொண்டாடினர்!
இந்த இரண்டாம் பாகத்தில், சண்டை காட்சிகள் , முதல் பாகத்தை விட அசத்தலாக உள்ளது என்றால் மிகையில்லை !
Jelmari Helander படத்தை, எழுதி இயக்கியுள்ளார் .
2022 இல் வெளிவந்த படத்தையும் எழுதி இயக்கியவரும் இவரே!
Jorma Tommila (கதாநாயகன்), Stephen Lang, Richard Brake ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.
Mika Orasmaa – ஒளிப்பதிவாளர்

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’

மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம்  24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ‘ப்ரண்ட்ஸ்’  படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் பேசுகையில்,  

”நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் ‘ப்ரண்ட்ஸ்’. ப்ரண்ட்ஸ் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது நட்பு, சிரிப்பு.  இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது.‌ தற்போது 4K தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

திரு‌. ஷானு பேசுகையில், “ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. தயாரிப்பாளர் அப்பச்சனிடம் பேசி, மறு வெளியீட்டிற்கான உரிமையை வாங்கினோம். அப்போதே அவர் இந்த திரைப்படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்த பிறகே அனுமதி வழங்கினார். மிகப்பெரிய திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவிடம் இப்படத்தின் புதுப்பிப்பு பணிகளை வழங்கினோம். இந்தப் படத்திற்காக 5.1 – 7.1-  டால்பி அட்மாஸ் – என மூன்று வெர்ஷன்களில் ஒலிகளை மாற்றி அமைத்திருக்கிறோம்.‌ ஒவ்வொரு ஃபிரேமையும் டி ஐ (DI) செய்து, கலர் கரெக்ஷனையும் செய்திருக்கிறோம். ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை மீண்டும் வழங்குவதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இந்தப் படத்தை எந்த காலத்தில் பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.‌

இந்தப் படத்தை மலையாளத்தில் உள்ளது போல் இல்லாமல் தமிழ் ரீமேக்கில் இரண்டு கதாபாத்திரங்களை இயக்குநர் சித்திக் புதிதாக இணைத்து இருப்பார். அதனால் மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ்’ படத்திற்கும்,  தமிழில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதிலும் வடிவேலுவின் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். இந்தப் படம் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.

இயக்குநர் கௌதம் ராஜ் பேசுகையில், “நான் பள்ளியில் படிக்கும் போது இந்த படத்தை பார்த்தேன்.‌ தற்போது இந்த படம் மீண்டும் வெளியாகிறது. டிரைலரை பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியாக தரமிக்கதாக இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டன் அந்த காலகட்டத்தில் பாசில், சித்திக் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவருடைய லைட்டிங் குவாலிட்டி ஸ்பெஷலாக இருக்கும்.‌

இந்தப் படத்தை மீண்டும் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது பல விஷயங்களை நினைவு படுத்தும். அந்த அளவிற்கு இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் மூவி.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த காலத்தில் சித்திக் தான் பான் இந்திய இயக்குநர். அவர் ஒரு கதையை மலையாளத்தில் எடுத்து வெற்றி பெற வைத்து, அதே கதையுடன் தமிழ், தெலுங்கு ,இந்தி என்று ஒவ்வொரு மொழியிலும் இயக்குவார். அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு கதையை இயக்குவார். அவரைப் போல் ஒரு ஸ்கிரிப்ட்டை காமெடி வெர்ஷனில் எழுதி இயக்கக்கூடிய இயக்குநர் தற்போது இல்லை.

விஜய்யின் கலை உலக பயணத்தில் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் தான் கலெக்ஷன் கிங் ஆக அவரை உயர்த்தியது.

புதுக்கோட்டை அருகில் உள்ள அறந்தாங்கியில் தான் நான் இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் ஊரில் இந்த படம் 40 நாட்கள் ஓடியது.

சூர்யாவையும் ஊர் முழுவதும் அறிமுகப்படுத்தி சென்றடைய வைத்த படமும் இந்தப் படம் தான்.

லெஜன்ட் இளையராஜாவின் பாடல்களை இப்போது கேட்டாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறது.

இன்று வரை டிரெண்டில் இருக்கும் நேசமணி கதாபாத்திரம் இந்தப் படத்தில் இருக்கிறது. தற்போது வரை மீம்ஸ் கிரியேட்டர்கள் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்தப் படத்தை நீங்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது நிறைய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தும் என நம்புகிறேன். தற்போதுள்ள இளம் தலைமுறை ரசிகர்கள் இதை ஒதுக்குவார்கள், அதை ஒதுக்குவார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. அவர்கள் அனைத்தையும் ரசிக்கிறார்கள். இந்தப் படம் அவர்களுக்கு வேறு ஒரு அனுபவத்தை வழங்கும். இந்தக் குழுவினருக்கு வாழ்த்துகள்,” என்றார்.

இயக்குநர் கணேஷ் பாபு பேசுகையில், “நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்பது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா என நிறைய ஹீரோக்கள் உள்ளனர். படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் இவர்கள் அனைவருக்கும் இடையே ஒரு போட்டி இருக்கும்.  இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குஷால் தாஸ் கார்டன் மற்றும் ஒய் எம் சி ஏ மைதானத்தில் தான் நடைபெற்றது. குஷால் தாஸ் கார்டன் என்பது சினிமாவிற்கு கோயில் போன்றது.  அவை எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்,” என்றார்.

இயக்குநர் பொன் குமரன் பேசுகையில், “ஆண்பாவம் பொல்லாதது எனும் படத்தை அண்மையில் திரையரங்கம் ஒன்றில் குடும்பத்தினருடன் பார்த்தேன். பார்த்துவிட்டு வெளியே வரும்போது அங்கு ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. என் மனைவி இந்த படம் எப்போது வருகிறது, என்று உற்சாகத்துடன் கேட்டார். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது என்று சொன்னேன். அவருடைய உற்சாகம் காரணமாக இந்தப் படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்ப்பார்கள் என்று நம்பிக்கை ஏற்பட்டது.

தற்போது கடந்த காலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தை டெக்னிக்கலாக நல்ல குவாலிட்டியுடன் உருவாக்கி இருக்கிறார்கள். நாம் திரையரங்கத்திற்கு செல்லும் போது அதில் ஓடும் படங்கள் காட்சியாகவும், ஓசையாகவும் நல்லதொரு தரமான அனுபவத்தை கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள். அது போன்றதொரு முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர் வினோத் ஜெயின் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன்.

நான் கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கி விட்டு தமிழில் இயக்குவதற்காக அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அப்போது அவர் மற்றொரு கதையை சொல்லி இந்த கதையை திரைப்படமாக உருவாக்கலாம் என சொன்னார். அந்த கதை மிகவும் அதிகம் செலவாகுமே என்று சொன்னதற்கு பரவாயில்லை என்று சொல்லி, தற்போது ‘கோல்மால் ‘ என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். அதே அளவிற்கான நேரத்தையும், பொருளையும் செலவு செய்து ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை புதுப்பித்திருக்கிறார். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு தரமான படத்தை தர வேண்டும் என்ற அவருடைய எண்ணம் உயர்வானது,” என்றார்.

நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களை தவிர வேறு எந்த வசனங்களையும் நடிகர்கள் பேச அனுமதிக்க மாட்டார். நான் அவருடன் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறேன். ஸ்கிரிப்டில் இருக்கும் டயலாக்கை தவிர வேறு ஒரு வசனத்தை நடிகர்கள் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆணியே புடுங்க வேணாம்’ எனும் டயலாக் கோகுல கிருஷ்ணாவும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதிய டயலாக் தான்.

இந்தப் படத்தில் நான் பேசும் ‘ஆடு நடந்தது… மாடு நடந்தது..’ என்ற வசனம் மட்டும் தான் அவர் அனுமதித்த எக்ஸ்ட்ரா டயலாக். அதற்கும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு இது ஒரு கல்ட் கிளாசிக் டயலாக் என நான் விளக்கம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்.

ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பு நடந்த போது நானும், சூர்யாவும் கலகலப்பாக பழகினோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவரும், ஜோதிகாவும் காதலித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் தூது சென்றிருக்கிறேன்.  

ப்ரண்ட்ஸ் படத்தை பொருத்தவரை இயக்குநர் ரசித்து ரசித்து உருவாக்கினார். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அது போன்றதொரு சிறந்த இயக்குநர் தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்புதான். நேசமணி அவர் உருவாக்கிய அற்புதமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருப்பார்.

இந்தப் படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது அதற்கு ஒரு ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றால் நமக்கெல்லாம் ஆண்டவனின் ஆசி இருக்கிறது என்றுதான் அர்த்தம்.  

நாங்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது எங்களுக்கு பிடித்த காமெடி படம் எது, என்று கேட்டால்.. நாங்கள் ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’ ஆகிய படங்களை சொல்வோம். இந்தப் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். அதேபோல் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இதனால் இந்த படம் ரீ ரிலீசிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.

இந்தப் படத்தில் இடம்பெறும் கடிகாரம் உடையும் காட்சியை படமாக்கும் போது விஜய்யும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த காட்சியை படமாக்குவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகும். மீண்டும் படமாக்கும் போது ‘ஐயோ நான் பிடிக்கலடா’ என்ற டயலாக் சொல்லும்போது மீண்டும் விஜயும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். படத்தை நீங்கள் உற்றுப்பார்த்தால் விஜயும், சூர்யாவும் திரும்பி நின்று கொண்டு சிரிப்பார்கள்.

விஜய் படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்தால் அமைதியாக இருப்பார். ஆனால் நடிக்கும் போது அற்புதமாக நடித்து அசத்தி விடுவார். அது அவருக்கான கடவுள் கொடுத்த பரிசு. அதேபோல் டப்பிங்கிலும் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை தான் பார்ப்பார். அதன் பிறகு எந்த ஒரு பிசிறு இல்லாமல் கச்சிதமாக பேசி விடுவார். எனக்குத் தெரிந்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இது போல் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை பார்த்துவிட்டு டப்பிங்கில்  முதல் முறையிலேயே கச்சிதமாக பேசி விடுவார். அந்த வகையில் விஜய் அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதே போல் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ என்ற பந்தா எதுவும் இல்லாமல் எங்களுடன் சகஜமாக பழகுவார்.

இந்தப் படத்தில் தேவயானி கதாபாத்திரத்திற்காக முதலில் ஜோதிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு சிம்ரனிடம் பேசினார்கள். இறுதியில் தேவயானி தான் நடித்தார்.‌ அப்போது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. ‘காதல் கோட்டை’ படத்திலிருந்து அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி.‌ அவர் சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “ரமேஷ் கண்ணாவை பற்றிய பல ரகசியங்கள் இப்போதுதான் தெரிகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிக்காமல் பல வேலைகளையும் பார்த்திருக்கிறார். சூர்யா-  ஜோதிகா காதலுக்கு உதவி இருக்கிறார்.

சூர்யா- விஜய் இருவரும் முதலில் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்தார்கள். அதில் இருவரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். இந்தப் படத்தில் இணைபிரியாத நண்பர்கள்.‌ இந்தப் படத்தை நான் கல்லூரியில் படிக்கும் போது பார்த்தேன்.‌

விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, சூர்யா நடித்த ‘நந்தா’ என எந்த படத்தை பற்றி பேசினாலும்.. அப்படத்தின் கதை நினைவுக்கு வரும். ஆனால் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை பற்றி பேசும்போது அதன் கதை நினைவுக்கு வராது. அதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான் நினைவுக்கு வரும்.

என்னை பொருத்தவரை சித்திக் மிகப்பெரும் இயக்குநர். ஆக்ஷன் படத்தை இயக்கலாம், லவ் சப்ஜெக்ட்டை இயக்கலாம், சென்டிமென்ட் படத்தை எடுத்து, மக்களை அழ வைத்துவிடலாம், ஆனால் காமெடி படத்தை இயக்குவது என்பது கடினம்.‌ ஏனெனில் காமெடி படத்திற்கு டைமிங் ரொம்ப முக்கியம்.‌ ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் காமெடி காட்சிகளில் ஐந்து, ஆறு நடிகர்கள் இருப்பார்கள். அனைவரும் டைமிங் உடன் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.

இந்தப் படத்தில் யார் ஹீரோ என்று தெரியாது. விஜயா, சூர்யாவா, வடிவேலா, ரமேஷ் கண்ணாவா என தெரியாது. இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு காட்சியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

மலையாள இயக்குநர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள். திரைக்கதையில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே படமாக்குவார்கள். நான் மலையாள திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.  

இந்தப் படத்திற்குப் பிறகு நேசமணி என்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது.

நான் ‘திருப்பாச்சி’ படத்தில் பணியாற்றும்போது விஜய் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து விட்டார்.‌ அந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லும்போது ஆடு வெட்டும் காட்சியில் பெஞ்சமினை வைத்து தான் கதை சொன்னேன். ஏனெனில் அவர் காமெடியன். அதனால் காட்சியை அப்படி உருவாக்கினேன். படப்பிடிப்புக்கு செல்லும் முன் மீண்டும் விஜயிடம் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அப்போது அவர் தயக்கத்துடன் அந்த ஆடு வெட்டும் காட்சியில் நான் நடித்தால் நன்றாக இருக்குமா எனக் கேட்டார். அந்தக் காட்சியில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது. ஆனால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டதால் அந்த காட்சி அவருக்கு பொருத்தமானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அவர் கேட்டவுடன் ‘ஓகே சார் நீங்கள் நடிக்கலாம்’ என்று சொல்லிவிட்டேன். விஜய் இன்று மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக முன்னேறி விட்டாலும் அவருக்குள் ஒரு அற்புதமான காமெடி சென்ஸ் இருக்கிறது. என்னுடைய ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய இரண்டு படங்களிலும் முதல் பாதி காமெடியாக தான் இருக்கும்.  

ஒரு நடிகருக்கு காமெடி சென்ஸ் இருந்தால் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து விடுவார். அப்போதுதான் நீண்ட காலத்திற்கு திரை உலகில் நட்சத்திரமாக வளர முடியும். சூர்யாவும் ‘பிதாமகன்’ படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார்.

தற்போதுள்ள சூழலில் புதிய படங்களை வெளியிடுவதில் சவால்கள் உள்ளது. இந்நிலையில் ஒரு படத்தை ரீ ரிலிஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும். அதற்கான தகுதி இந்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்திற்கு இருக்கிறது.  தினமும் வெளியாகும் குண்டு வெடிப்பு, வன்முறை, உயிர் பலி போன்ற செய்திகளால் மக்கள் மனதளவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ரிலீஃபாக இந்த ‘ப்ரண்ட்ஸ்’ படம் அமையும். அதனால் இந்தப் படம் வெளியாகும் போது எந்த அளவிற்கு வெற்றியை பெற்றதோ, அதே அளவிற்கு இந்த படம் மீண்டும் வெளியாகும் போதும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

Ramraj Cotton Marks Presence at South India Natural Farming Summit 2025 Led by Prime Minister Narendra Modi

Coimbatore, 19 th November 2025: Ramraj Cotton participated in the South India Natural Farming
Summit 2025, an event graced by the presence of Hon’ble Prime Minister Shri Narendra Modi, who
inaugurated the summit and addressed key stakeholders in the natural farming ecosystem. The three-day
event focused on strengthening sustainable agricultural practices, improving soil health, and empowering
farmer-led innovations across South India.
Representing Ramraj Cotton at the summit were Founder & Chairman Shri K.R. Nagarajan, Director Mrs.
Sumathi Nagarajan, Managing Director Shri B.R. Arun Eashwar, and Joint Managing Director Shri S.
Aswin. The leadership showcased the brand’s sustainable product portfolio, featuring pure cotton garments,
bamboo fibre towels, and silkworm-cultivated Silk Dhotis, all reflecting Ramraj’s commitment to eco-friendly
production rooted in India’s farming heritage.
Ramraj Cotton also highlighted the initiatives it supports, including the World Coconut Farmers Producers
Organisation, which works towards uplifting coconut farmers and promoting the natural beverage
Thenneera. The Vanam India Foundation, another agriculture-focused initiative associated with the brand,
participated in the summit to spread awareness on natural farming and reinforce community-driven
agricultural systems across Tamil Nadu.
Speaking about this, Ramraj Cotton Founder & Chairman Shri K.R. Nagarajan said: “What began as a
humble journey in handloom weaving has today grown into a movement that embraces our farmers and our
soil, creating meaningful change for the future. Through garments made from pure cotton, towels crafted
from bamboo fibre, and silkworm-cultivated dhotis, Ramraj Cotton continues to champion natural farming
and uphold our Swadeshi values. Our goal is simple: to support our farmers, protect our soil, and promote a
healthier way of living. This recognition reinforces our commitment to continue walking the path of
sustainability with sincerity and responsibility.”

“சர்வம் மாயா” புதிய போஸ்டர்

“சர்வம் மாயா” புதிய போஸ்டர் வெளியானது !! கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு !

நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான உலகை அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

“சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார் என்பதையும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது.

அட்டகாசமான காமெடியுடன், கொண்டாட்ட உணர்வை பதிவு செய்யும் இந்த படம், இந்த ஆண்டின் சிறந்த விடுமுறை கொண்டாட்ட படமாக இருக்கும். மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகனான அகில் சத்யன் இயக்கத்தில், ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “சர்வம் மாயா”, 2025-ன் மிகப்பெரிய பண்டிகை வெளியீடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.