Breaking
September 26, 2026

Coca-Cola India launches “Honest Tea” an Iced Green Tea

Made from Organic Green Tea, the green tea is sourced from the Makaibari Tea Estate, owned by the Luxmi Group.

Chennai-25.11.2023-In an endeavour to provide consumers with wider beverage options Coca-Cola
India enters the world of ready-to-drink tea beverages with the launch of Honest Tea, a brand
owned by Honest, Inc. a subsidiary of The Coca-Cola Company. Honest Tea is a refreshing, Organic
Green Tea based drink. The Organic Green Tea for Honest Tea is being exclusively sourced from
Luxmi Tea’s renowned Makaibari Tea Estate.
Situated on the steep slopes located at the foothills of the Himalayas, Makaibari is the oldest Organic
Darjeeling Tea plantation. At Makaibari, the tea is meticulously handpicked in a biodynamic
agricultural environment, famed for its rare moonlight plucked tea.
“There is no greater tea estate in Darjeeling than Makaibari; it is the last word among teas, whether
in Japan, or England, royal houses,” says Rudra Chatterjee, Managing Director of Kolkata-based
Luxmi Group. “It is also the choice of tea Satyajit Ray decided for his fictional detective character
Feluda.”
Commenting on the launch Karthik Subramanian, Director, Marketing – Hydration, coffee and tea
category, Coca-Cola India and Southwest Asia said, “We are thrilled to introduce our new ready-to-
drink iced green tea. With Honest Tea, we are offering consumers a unique experience of a great
tasting green tea based beverage. Whether one is on the go or is simply seeking a moment of
tranquillity, ‘Honest Tea’ is the perfect companion offering refreshment and goodness.”
Honest Tea comes in two refreshing flavours, Lemon-Tulsi and Mango, to suit the varied tastes of the
consumers. Meant for the modern women and men of today who wish to live a balanced lifestyle,
the newly launched beverage provides a ‘Moment of Good’ with every sip of the iced green tea.
Made from Organic Green Tea grown in harmony with nature, Honest Tea not only tastes great but
is made with the best quality tea leaves.
Honest Tea has been launched exclusively on E-Commerce in Bangalore, Mumbai, Hyderabad,
Chennai and Pune and will be available at the price point of Rs 50. For more details visit Honest Tea’s
Instagram page – @honestteaindia

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘hi நான்னா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகிறது

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற‌து. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் நாயகன் நானி இன்று சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாள‌ர்களை சந்தித்தார்.

இந்நிகழ்வினில் நடிகர் நானி பேசியதாவது…

‘நான்னா’ என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை ‘நான்னா’ என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். டிசம்பர் 7 திரையரங்குகள் கொண்டாடும் படமாக இது இருக்கும். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என‌ கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும். டிசம்பர் 7 உங்களை திரையரங்குகளில் சந்திக்கிறேன், நன்றி.

மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நானி பதிலளிக்கையில்…

அம்மா செண்டிமெண்ட், அப்பா செண்டிமெண்ட் என பிரிக்க முடியாது. அன்பு ஒன்று தான். அம்மா படங்கள் எல்லாம் நிறைய வந்துவிட்டன‌, இப்போது அப்பா படங்கள் வர ஆரம்பித்துள்ளன‌. அது நல்லது எனறே நினைக்கிறேன்.

எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன்.

ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால் அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் ‘பாகுபலி’, ‘காந்தாரா’ போன்ற‌ படங்கள் வந்த பிறகு தமிழ் நடிக‌ர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும்.

நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார்.

ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குநர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும்.

காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால் அதை விட பெரிய ஆக்சன் திரில்லர் எல்லாம் கிடையாது. அது பயங்கரமாக இருக்கும். அதை இந்தப்படம் பார்க்கும் போது உணர்வீர்கள்.

எனக்கு இந்தப்படத்தில் சவாலாக இருந்தது என்னவெனில், நான் ஏற்கனவே ‘ஜெர்ஸி’யில் அப்பாவாக நடித்துவிட்டேன் அது மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர், மீண்டும் அதே போல் ஆனால் அதிலிருந்து மாறுபட்டு நடிப்பது தான் சவாலாக இருந்தது.

முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023ல் கிஸ் பெரிய விசயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது, முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.

நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி.

இந்தப்படம் ஆண் பெண் உறவை மிகச்சிறப்பாக பேசும் படமாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் சிறப்பான படைப்பாக இருக்கும்.

இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று ‘hi நான்னா’ வெளியாகிறது.

படக்குழுவினர்:

நடிகர்கள்: நானி, மிருணால் தாக்கூர், பேபி கியாரா கண்ணா

இயக்கம்: ஷௌர்யுவ்
தயாரிப்பு: மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா
தயாரிப்பு நிறுவனம்: வைரா என்டர்டெயின்மென்ட்ஸ்
ஒளிப்பதிவு: சானு ஜான் வர்கீஸ்
இசை: ஹேஷாம் அப்துல் வஹாப்
தயாரிப்பு வடிவமைப்பு: அவினாஷ் கொல்லா
படத்தொகுப்பு: பிரவீன் அந்தோணி
நிர்வாகத் தயாரிப்பாளர் – சதீஷ் ஈ.வி.வி
ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

‘அனிமல்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை.

‘அனிமல்’ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான ‘அனிமல்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை கண்டிராத காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பிடித்திருந்ததால் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்பதால் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கு கிடைத்த அமோகமான வரவேற்பே இந்த உற்சாகத்திற்கு மிகப்பெரும் ஆதாரம். பூஷன் குமார் தயாரிப்பில் உருவான ‘அனிமல்’ எனும் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதன் பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது.

மிகச் சில இந்திய திரைப்படங்களின் முன்பதிவுகள் இந்த வகையான வரவேற்பைப் பெற்றிருக்கும். அதனால் இந்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். ‘அனிமல்’ திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதை மட்டுமே இந்த டிக்கெட் முன்பதிவு நிரூபிக்கிறது. பூஷன் குமார் மற்றும் கிரிஷன்குமாரின் டி சீரீஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து ‘அனிமல்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். கிரைம் டிராமா ஜானரிலான இந்த திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, பார்வையாளர்களை பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும் என உறுதியளிக்கிறது.‌

பிரபாஸின் ஸ்பிரிட் 2024 ல் வெளிவருகிறது

அனிமல் திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் படக்குழு எட்டுதிக்கும் பறந்து புரமோசனில் ஈடுபட்டு வருகிறது. நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபிள் வித் என்பிகே படக்குழு கலந்துகொண்டபோது, அவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிராபாஸை வைத்து இயக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட் குறித்து கேட்டது தற்போது வைரலாகி வருகிறது.

அன்ஸ்டாப்பபிள் வித் என் பி கே நிகழ்ச்சியில், தொகுப்பாளராக இருக்கும் நந்தமுரி பாலகிருஷ்ணா, சந்தீப் ரெட்டி வாங்காவிடம், “எனது பேரன் தேவன்ஷ் பிரபாஸின் ஸ்பிரிட் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார். படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது ?” எனக்கேட்க, அதற்கு இயக்குநர், “ ஸ்பிரிட் படம் செப்டம்பர் 2024ல் திரைக்கு வரும்” என்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பத்திரிக்கையிடம் பேசிய தயாரிப்பாளர் பூஷன் குமார், “இப்போது, பார்வையாளர்களுக்கு அனிமல் படத்தை நல்ல முறையில் தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதன் பிறகே, நாங்கள் ஸ்பிரிட் படத்தை தொடங்குவோம், ஐந்து முதல் ஆறு மாதங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, பிறகு ஸ்பிரிட்டைத் தொடங்குவோம். என்றார். மேலும் இந்த பேட்டியின் போது, ரன்பீர் கபூர் பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் பங்குபெற வேண்டும் என்ற தனது விருப்பர்தையும் தெரிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ரன்பீர்கபூர் , “அவரது (சந்தீப் ரெட்டி வங்கா) அடுத்த படம் பிரபாஸுடன், அப்படத்தில் அவர் எனக்காக ஒரு சிறிய பாத்திரம் உருவாகினால், நான் அதன் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன். என்றார்.

பிராபஸின் பிரம்மாண்டமான ஸ்பிரிட் படத்தின் புதிய அப்டேட்களால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நடிகர் ராஜ்குமாரின் திருமணம்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூரை சேர்ந்த சஜு என்ற பெண்ணிற்கும் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருமணத்தை நடத்தி வைத்த பிறகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பேசுகையில், ”
”திருமங்கலம் கோபால் அவர்களின் மனைவியார் சரோஜினி அவர்கள்
நன்றி உரை ஆற்றுகையில் சில செய்தியினை சொன்னார். அதாவது திருமங்கலம் கோபாலின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். அவரது மூன்று பிள்ளைகளின் திருமணத்தையும் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது என்று குறிப்பிட்டார். அவரது நான்காவது மகனான ராஜ்குமாரின் திருமணம் என் தலைமையில் நடைபெறுகிறது. இனி அவரது வாரிசுகளுக்கு பேரனோ.. பேத்தியோ.. அவர்களுக்கும் என் தலைமையில் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அந்த அளவிற்கு நாங்கள் உரிமை பெற்றவர்கள். அந்த அளவிற்கு எங்கள் மீதும் கழகத்தின் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் திருமங்கலம் கோபால் குடும்பத்தினர். திருமங்கலம் கோபால் கட்சிக்காக பாடுபட்டு அரும் தொண்டாற்றியவர். அவர் எப்போதும் மிடுக்காகவே இருப்பார்.

தலைவர் கலைஞர் அவர்களும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் திமுகவின் துணை அமைப்பாக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அதற்காக நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ..ஏறத்தாழ 30 சதவீத அளவிற்கு எனக்கு பாதுகாப்பாக என்னுடன் பயணித்தவர் தான் திருமங்கலம் கோபால்.

மதுரை திருமங்கலம் கோபால் மற்றும் திருமதி சரோஜினி தம்பதியினரின் இளைய வாரிசான ராஜ்குமாருக்கும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது மற்றும் ஷகிலா பானு தம்பதியரின் மகள் சஜு என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் நிச்சயித்தனர். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது தமிழக முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, டி. ஆர். பாலு, சேகர் பாபு, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, திமுகவின் செய்தி தொடர்பாளர் டி. கே. எஸ். இளங்கோவன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் -காயத்ரி, பாலாஜி தரணிதரன், டெல்லி பிரசாத் தீனதயாள், நடிகர் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், நடிகை காயத்ரி, இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் சரஸ் காந்த், இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ், படத்தொகுப்பாளர் கோவிந்த், இயக்குநர் அமிர்தராஜ் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி….

பிரைம் வீடியோவில் தமிழ் திகில் திரைப்படமான தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி சென்னையில் நடைபெற்றது !!

புஷ்கர்-காயத்ரி முதல் சுதா கொங்கரா வரை, தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் வரை பலர் கலந்துகொண்டனர் !!

பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் தமிழ் திகில் ஒரிஜினல் சீரிஸான, தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சியைச் சென்னையில் நடத்தியது. இந்நிகழ்வில் நடிகர்கள் மற்றும் படைப்பாளர்களுடன், தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த பிரபல முகங்களும் கலந்து கொண்டனர், அவர்கள் இந்த திகில் தொடரைப்ப்பார்த்து முழு மனதுடன் தங்கள் ஆதரவையும் அன்பையும் தெரிவித்தனர்.

தி வில்லேஜ் சீரிஸை மிகவும் ரசித்து, முதல் 3 எபிசோட்களைப் பார்த்த திரை படைப்பாளிகள் புஷ்கர்-காயத்ரி …“தி வில்லேஜின் முதல் மூன்று எபிசோட்களை நாங்கள் பார்த்துவிட்டோம், இது மிகவும் சுவாரஸ்யமான படைப்பு. இப்போது பிரைம் வீடியோவில் எல்லா எபிசோட்களும் இருப்பதால், உடனடியாக மீதமுள்ளவற்றைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளோம், இதுவே இதைப் பற்றிச் சொல்லக்கூடிய சிறந்த விஷயம் !”

இயக்குநர் சுதா கொங்கரா, சீரிஸ் இயக்குனர் மிலிந்த் ராவைப் பற்றிய ஒரு வேடிக்கையான விசயத்தைப் பகிர்ந்துகொண்டார், “மிலிந்துக்கு திகில் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும், அவர் நடு இரவில் தான் எப்போதும் திகில் படங்களைப் பார்ப்பார்! அவன் திகில் படைப்புகளை கண்டிப்பாக சிறப்பாக தருவான் என்று எனக்குத் தெரியும்!” என்றார்.

நடிகர் சிபி சத்யராஜ் கூறுகையில், “இந்தத் சீரிஸ் மிகவும் சிறப்பான தமிழ் சீரிஸாக உள்ளது. மிலிந்தின் முதல் படமான அவள் திகில் ட்ரெண்ட் செட்டராக இருந்தது. அதே போல் இந்தத் சீரிஸை நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்.

நடிகரும் பாடகருமான விஜய் யேசுதாஸ் கூறுகையில், மிலிந்தின் இயக்கம் குறித்துப் பாராட்டினார், “இந்த கதையை 6 அத்தியாயங்களில் எடுப்பது எளிதான விஷயம் அல்ல, மிலிந்த் அதை நன்றாகச் செய்துள்ளார். முழு குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ”

தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “தி வில்லேஜ் ஒரு புது யுக அனுபவம். OTT இல் மிகவும் தனித்துவமான ஒன்றைக் கொண்டு வந்த பிரைம் வீடியோவிற்கு வாழ்த்துகள்.” என்றார்

தி வில்லேஜ் சிறப்புத் திரையிடலில் படக்குழுவினருடன் புஷ்கர்-காயத்ரி, சுதா கொங்கரா, ஆண்ட்ரூ லூயிஸ், கார்த்திக் சுப்பராஜ், சிபிராஜ், இயக்குநர் பிரியா, விஜய் யேசுதாஸ், குமரன் தங்கராஜன், சாருகேஷ் சேகர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

MSME Minister Thiru. T.M. Anbarasan Launches ‘Startup Tamizha’ Reality TV Showfor a Wide Range of Startups


. This novel initiative has already garnered funding commitment to the tune of Rs. 200 crore
from reputed entrepreneurs, and angel investors
.To be broadcast on a premier TV channel, this show will host the pitches of 50 finalists
per season, who will be selected by an eminent jury
Chennai, November 24, 2023
Thiru. T.M. Anbarasan, Hon’ble Minister for MSME, launched ‘Startup Tamizha’, Tamil Nadu’s first
Business Pitch Reality TV show, which aims to identify 50 promising startups from across the state and to
facilitate funding for their ventures from reputed entrepreneurs, and angel investors.
Startup Tamizha has already generated a funding commitment to the tune of Rs. 200 crore from reputed
entrepreneurs and angel investors. Refex Group has committed to invest Rs. 100 crore, while Dr.
Velumani of Thyrocare and Pontaq are investing Rs. 50 crore and Rs. 25 crore respectively. Besides,
Native Lead Angels is bringing in Rs. 10 crore – and the rest comes from other investors.
A novel initiative of StartupTN, the Government of Tamil Nadu’s nodal agency for Startup and
innovation, the show will have three seasons. The first season is set to go into production by February
2024, and will be telecast on a popular Tamil TV channel. The show will be produced and managed by
Brand Avatar, Blue Koi, and Refex Capital.
The launch event witnessed the special addresses by Tmt. Archana Patnaik, I.A.S., Secretary to
Government, MSME Department, Mr. V. Arun Roy, I.A.S., Secretary to Government, Industries
Department, and Mr. V. Vishnu, I.A.S., MD & CEO of Guidance Tamil Nadu. Thiru. Sivarajah
Ramanathan, Mission Director & CEO, StartupTN, set the tone for the initiative and the event. Dr. A.
Velumani, Founder, Thyrocare, delivered the keynote address. Among the dignitaries who took part in
the event were Mr. Hemachandran L., Founder & CEO, Brand Avatar, Mr. Balachandar R., Founder,
Blue Koi, and Mr. Dinesh Kumar Agarwal, Group CEO, Refex Group.
Commenting about the initiative, Mr. Sivarajah Ramanathan said, “Startup Thamizha exemplifies the
collective commitment of the Tamil Nadu Government through StartupTN in fostering a thriving startup
ecosystem, fostering economic growth and realising the Hon’ble Chief Minister’s vision for a prosperous
Tamil Nadu. A pioneering initiative, the Startup Thamizha platform aims to augment a conducive
ecosystem for grassroots level, impact, and women entrepreneurship and to bring together founders,
investors, mentors and support system partners for a synergised growth.”
Aspiring entrepreneurs who are interested in being a part of this transformative journey can
visit www.startupthamizha.tv and register their names. The applying startups will undergo a rigorous
five-stage screening process, engaging industry experts, investors and key ecosystem members. From
this pool, 50 startups will be shortlisted, each poised for mentorship and training on presenting their
ideas on mainstream television to primetime audiences.

பிரவீன் கிரி இயக்கத்தில் ‘மான்குர்த்’

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில் அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மும்பையை பின்னணியாக கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் ‘மான்குர்த்’ வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

பல்வேறு விருதுகளை பெற்ற குறும்படங்களை இயக்கியுள்ள பிரவீன் கிரி, இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் பணியாற்றி இருக்கிறார்.

அவரது ‘மான்குர்த்’ திரைப்படம் மும்பையின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் இரண்டு சாதாரண சிறுபான்மையினர் ஒரு அசாதாரண அரசியல் விளையாட்டில் அவர்களுக்கே தெரியாமல் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இடைத்தேர்தலை முன்னிட்டு ஒரு அரசியல் கட்சி செய்யும் சதியில் முகமதும் அவரது மகள் நிஷாவும் பலிகடா ஆகிறார்கள். என்ன செய்வது என்று அவர்கள் தவிக்கும் நிலையில், நல்லெண்ணம் கொண்ட தலைவர் ஒருவர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். வஞ்சகர்கள் வலையில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதை பரபரப்பாக சொல்லும் வகையில் ‘மான்குர்ட்’ உருவாகி உள்ளது.

மதங்களை தாண்டிய மனிதநேயத்தை பேசும் இப்படத்திற்கு ஹரிஷ் ராஹித்யா இசையமைத்துள்ளார், விஷ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார், ப்ரியன் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்க, ரிகேஷ் குமார் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ‘மேதகு’ புகழ் ராஜா, சௌந்தர்யா மனோகரன், சையத் பாஷா மற்றும் அல்கா சக்சேனா ஆகியோர் நடித்துள்ளனர். பாரதி கோலப்பன், எம்.ராஜா மற்றும் அம்மு பைரவி ஆகியோர் முக்கிய பங்களித்துள்ளனர். பன்முகத்தன்மை மிக்க ‘மான்குர்த்’ கதையில் தமிழ், இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழியினர் நடித்துள்ள நிலையில் பன்மொழித் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்களிப்போடு சுயாதீன திரைப்படமாக தயாராகியுள்ள ‘மான்குர்த்’, உலகெங்கும் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடபட இருக்கிறது.

Witness Magic Of Love- Theatrical Trailer Of Natural Star Nani, Mrunal Thakur, Shouryuv, Vyra Entertainments Hi Nanna is out now

The day has arrived. The theatrical trailer of Natural Star Nani’s highly anticipated Pan India film Hi Nanna directed by debutant Shouryuv with Vyra Entertainment bankrolling it has been unleashed just a while ago.

The trailer opens with Nani narrating a tale of a king, and when there’s no mother character in it, the girl requests him to narrate her mother’s story. He narrates everything but hides something about her mother. There is so much emotion in the story, thus the girl doesn’t want to stress his father about her mother. The intriguing factor in the story is she imagines the new friend Yashna (Mrunal) as her mother. However, Shruti Haasan was later revealed as Viraj’s wife and Mahi’s mother.

As the trailer divulges, there are many layers in the story. There is magic in the love story, whereas the father-daughter emotion will make everyone sentimental. Director Shouryv checked all the boxes of a wholesome family entertainer. He presented the story in a very new pattern, which sets it apart from regular family entertainers.

It’s again new to see Nani in a completely family man role, after a mass character in Dasara. The actor scores more than distinction for the character arc as a loverboy to a father of a kid. His brilliant performance makes this extra appealing. Mrunal Thakur has given a soulful performance, whereas Shruti Haasan is a surprise package. Baby Kiara Khanna is a doll and her expressions are just adorable.

Be it romantic sequences or emotional episodes, you will find some top-notch camera angles as well as lighting, thanks to cinematographer Sanu Varghese. The picturesque locations of Goa, Coonoor, etc. are presented in the most beautiful possible way. Hesham Abdul Wahab’s background score definitely adds to the class as well as the emotional connection elegantly. The production values of Vyra Entertainments are exceptional. The production deign of Avinash Kolla is another positive aspect.

On the whole, Hi Nanna trailer offers an emotional ride with some great performances and superlative technical work with a mix of commercial elements. Surely, Hi Nanna is going to shake the box office when it arrives in cinemas.

Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala produced the movie on a high budget. Praveen Anthony is the editor and Satish EVV is the executive producer.

Hi Nanna is slated for release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages on December 7th.

Cast: Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna

Technical Crew:
Director: Shouryuv
Producers: Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala
Banner: Vyra Entertainments
DOP: Sanu John Varughese ISC
Music Director: Hesham Abdul Wahab
Production Designer: Avinash Kolla
Editor: Praveen Anthony
Executive Producer – Satish EVV
Costume Designer: Sheetal Sharma
PRO: Nikil Murukan

அமீர் அறிக்கை.

சென்னை
24.11.2023

மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும், பரப்பிய அவதூறுகளுக்கும், என்னைப் பற்றிக் கூறிய வரம்புமீறிய வார்த்தைகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கை.
”பருத்திவீரன்” தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன். இதில், வேறு எந்த காரணமும் கிடையாது. இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்னை ”YOUTUBE” உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன்.
“பருத்திவீரன்” தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே.
”பருத்திவீரன்” திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர்.
அதன் பின்னரே, நான் எனது “TEAMWORK PRODUCTION HOUSE” நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன்.
மேலும், “பருத்திவீரன்” படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்னையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.

”பருத்திவீரன்” திரைப்படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும், எனக்கு வாக்கு கொடுத்து ”படத்தை நீங்களே வெளியிடுங்கள்” என்று சொன்னவர்களும்,
அன்றும் வேடிக்கை பார்த்தார்கள்.! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.!
”பருத்திவீரன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட பஞ்சாயத்தை, நடத்தியவர்களும், முடித்து வைத்தவர்களும், சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இன்றளவும் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், 17 வருடங்களுக்கு முன்பு என் கை பிடித்து வாக்கு கொடுத்தவரின் அன்புக்கு கட்டுப்பட்டு வேலை செய்த நான், இன்று சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன்.
நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்ற காரணத்தினாலும், ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல.!
உண்மை இப்படியிருக்க, ஞானவேல் என்னைப் பற்றி கூறிய விசயங்களால் நான் அடைந்த மன உளைச்சலை விட, என் குடும்பத்தாரே அவரால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற போதிலும், நானும், என் குடும்பத்தாரும் இதையெல்லாம் கடந்து வந்து விடுவோம், துளியும் அவரது சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம் என்பதைத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரை வழிநடத்தும் பெரியவர்கள், ”இதுபோல் யாரையும் அவதூறாக பொதுவெளியில் பேச வேண்டாம்,” என அவருக்கு அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பூமியில், “அநியாயமும், அக்கிரமங்களும், அநீதியும் தலை விரித்தாடுகின்ற போது கண்ணன் அவதாரம் எடுப்பார்..” என்ற கீதையின் வாசகத்தைப் போல, தமிழகத்தில் நடக்கும் இந்நிகழ்வுகளுக்கு, அமெரிக்காவில் இருந்து நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமாகிய திரு.கணேஷ் ரகு அவர்களுக்கு என் உளப்பூர்வமான, கோடானகோடி நன்றிகள்.!

“பருத்திவீரன்” தொடர்பான வழக்கு மற்றும் விபரங்கள் அனைத்தும் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாலும், அதில் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கிற நிலையில், என் பக்கம் நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எனக்கு ஆதரவளித்து, எனக்காக குரல் கொடுத்த, என்னைத் தெரியாத, என்னோடு உறவாடாத அனைத்து செய்தியாளர்களுக்கும், என் மீது அன்பு கொண்ட பொதுமக்களுக்கும் நிச்சயமாக நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். என்றென்றும் அவர்களுக்கு நன்றி.!
”பருத்திவீரன்” பட பிரச்னை மீண்டும் மீண்டும் ’YOUTUBE” உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.
நான், “மாயவலை” படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதால், இனியும், இந்த பிரச்னை தொடர்பாக என்னை யாரும் அணுக வேண்டாம் என்று பணிவோடு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.!
”வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்..”
”இறைவன் மிகப் பெரியவன்”

அன்புடன்,

அமீர்.