நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள்.
இளம் நாயகன் விராட் கர்ண் – பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் நாமா பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் நானக்ராம்குடா ராமாநாயுடு ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாயகன் விராட் கர்ண், நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பாடலை படமாக்கி வருகின்றனர். இதற்காக ஏராளமான பொருட்செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் அபே ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த பாடலில் பின்னணி பாடகர்களான காலா பைரவா – அனுராக் குல்கர்னி மற்றும் மங்லி ஆகியோரின் துடிப்பான குரல்கள் இடம் பிடித்திருக்கிறது. பாடலாசிரியர் காசர்லா ஷ்யாம் அற்புதமான பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
இந்தப் பாடலுக்கு மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகள் சிறப்பாக இருக்கும். இதனால் படத்தில் இடம்பெறும் நடன காட்சிகள் ரசிகர்களை வசீகரிக்கும் என உறுதியளிக்கிறது.
‘தி சீக்ரெட் ட்ரெஷர் ‘ எனும் வாசகத்துடன் ‘நாக பந்தம்’ ஒரு சாகச காவிய படைப்பாக தயாராகி வருகிறது. அபிஷேக் நாமா கதை மற்றும் திரைக்கதை என இரண்டிலும் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி இந்த திரைப்படத்தை NIK ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் வழங்குகிறார்கள்.
இந்த திரைப்படத்தில் இளம் நாயகன் விராட் கர்ண் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதிபாபு, ரிஷப் சஹானி , ஜெயபிரகாஷ், ஜான் விஜய், முரளி சர்மா, அனுசுயா, சரண்யா, ஈஸ்வர் ராவ், ஜான் கொக்கன், அங்கீத் கோய்யா , சோனியா சிங் , மேத்யூ வர்கீஸ், ஜேசன் ஷா, பி. எஸ். அவினாஷ் மற்றும் பேபி கியாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
‘நாக பந்தம்’ திரைப்படம் – பண்டைய புராணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு கதையை ஆன்மீகமும், சாகசமும் கலந்த கருப்பொருள்களுடன் இணைத்து, அனந்த பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகன்னாதர் ஆலயங்களில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மறைக்கப்பட்ட பொக்கிஷங்களில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகிறது. ‘நாக பந்தம்’ இந்த புனித தலங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்தியாவில் விஷ்ணு கோயில்களை சுற்றியுள்ள மர்மங்களை சுவராசியத்துடன் முன் வைக்கிறது.
இந்த திரைப்படத்தில் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பு தரம், அதிநவீன வி எஃப் எக்ஸ் காட்சிகள் ஆகியவை இடம் பிடித்திருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இது ஒரு ஹை ஆக்டேன் ஆக்சன் படமாகவும் அமைந்திருக்கிறது. எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். உரையாடல்களை கல்யாண் சக்கரவர்த்தி எழுத படத்தொகுப்பு பணிகளை ஆர். சி. பிரணவ் கவனிக்க தயாரிப்பு வடிவமைப்பை அசோக் குமார் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை ஷ்ரா 1 மற்றும் ராஜீவ் என். கிருஷ்ணா ஆகியோர் மேம்படுத்தி இருக்கிறார்கள்.
‘நாக பந்தம்’ 2025 ஆம் ஆண்டில் தமிழ் , தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.
நடிகர்கள் :
விராட் கர்ண், நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ரிஷப் சஹானி, ஜெயப்பிரகாஷ், ஜான் விஜய், முரளி சர்மா, அனுசுயா , சரண்யா, ஈஸ்வர் ராவ், ஜான் கொக்கன், அங்கித் கோய்யா, சோனியா சிங் , மேத்யூ வர்கீஸ், ஜேசன் ஷா, பி. எஸ். அவினாஷ், பேபி கியாரா, கல்யாணி ,கேசவ் தீபக் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு :
தயாரிப்பு நிறுவனம் : NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ்
வழங்குநர் : லக்ஷ்மி ஐரா & தேவன்ஷ் நாமா
கதை -திரைக்கதை -இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர் : கிஷோர் அன்னபுரெட்டி
ஒளிப்பதிவு : எஸ். சௌந்தர்ராஜன்
இசை : அபே
தலைமை நிர்வாக அதிகாரி : வாசு பொதினி
தயாரிப்பு வடிவமைப்பு : அசோக்குமார்
வசனம் : கல்யாண் சக்கரவர்த்தி
படத்தொகுப்பு : ஆர்.சி. பிரணவ்
ஆடை வடிவமைப்பு : அஸ்வின் ராஜேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் : அபிநேத்ரி ஜக்கல்
நடனம் : பிருந்தா, கணேஷ் ஆச்சார்யா
சண்டை பயிற்சி : வெங்கட் – விளாட் ரிம்பெர்க் – லீ விட்கர்
ஸ்கிரிப்ட் டெவலப்மெண்ட் : ஷ்ரா 1 & ராஜீவ் என். கிருஷ்ணா
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முகை மழை..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய்சங்கர் ,கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பரத் விக்ரமன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க ராஜ்கமல் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் , யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான காணொளி வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, படத்தை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘முகை மழை’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுத, இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான ஷான் ரோல்டன் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் அனைத்து தரப்பு இசை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் பிரிட்டோ J B இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், நிவாஸ் ஆதித்தன், சல்மா, சுரேஷ் மேனன், ‘ஆடுகளம்’ நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ் காந்த், ரிஷி காந்த், கனிகா, ஆதிரா , காவ்யா அறிவுமணி, துளசி, ஐரா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, நமோ நாராயணன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஏகன், விஜித், ஜீவா சுப்ரமணியம், திண்டுக்கல் சரவணன், பாலாஜி தயாளன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மல்லிகார்ஜுன்- மணிகண்ட ராஜா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராம் – தினேஷ் – சுபேந்தர் – ஆகிய மூவர் கலை இயக்குநர்களாக பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் கவனித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் பிரபலமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பட குழுவினருடன் ‘பிக் பாஸ்’ முத்துக்குமரன் , தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் தயாரிப்பாளர் பாலா சீதாராமன் வரவேற்று பேசுகையில், ” திரையுலகில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடும்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு தொழில்நுட்ப கலைஞராக அனைத்து பிரிவுகளிலும் தேர்ச்சிப் பெற்று வாய்ப்பு தேடிய போதும் கலைத்தாய் எங்களுக்கு சரியான வாய்ப்பை வழங்கவில்லை. இந்த தருணத்தில் என்னுடைய நண்பர்களுடனும், என்னுடைய சகோதரர்களுடனும் இணைந்து வாய்ப்பை உருவாக்குவோம் என எண்ணியும், மற்றவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என தீர்மானித்தும் தயாரிப்பாளராக மாறினோம். எங்களுடைய ஜி எஸ் சினிமாஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், சிக்னேச்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘நிறம் மாறும் உலகில்’ எனும் இப்படத்தை தயாரித்திருக்கிறோம். இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பிரிட்டோவையும் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் ,தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் , மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நாங்கள் தொடர்ந்து புதிய இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்க காத்திருக்கிறோம். ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம் மார்ச் 7ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் தேவ்பிரகாஷ் பேசுகையில், ”இது என்னுடைய முதல் படம். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் வியப்பாகவும் , மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒவ்வொரு கலைஞர்களுக்கும் சிறப்பு என்னவென்றால் அவர்களுடைய முதல் திரைப்படம். என்னுடைய முதல் திரைப்படமாக ‘நிறம் மாறும் உலகில்’ அமைந்ததில் மிகவும் சந்தோஷம். இதில் நடித்திருக்கும் பாரதிராஜா ஐயா , ரியோ அண்ணன், சாண்டி அண்ணன், நட்டி சார் உள்ளிட்ட பலருக்கும் இசையமைப்பேன் என நான் கனவில் கூட நினைத்ததில்லை. இதனை சாத்தியப்படுத்திய இயக்குநருக்கும் ,, தயாரிப்பாளருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னிடம் இருக்கும் இசைத் திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்திய நடிகர் ரியோ ராஜுக்கு நன்றி. இயக்குநர் பிரிட்டோ என்னுடைய நண்பர். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது அவரிடம் சில இசையமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் இசையமைத்தால் சிறப்பாக இருக்கும் என ஆலோசனை கூறிக் கொண்டே இருந்தேன். அனைத்தையும் கேட்டுவிட்டு, இறுதியில் ‘நீ தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்’ என சொன்னார். அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நடிகை ஜீவா சுப்பிரமணியம் பேசுகையில், ” இது என்னுடைய 25 ஆவது படம். இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக இயக்குநர் பிரிட்டோவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் போது எனக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எமக்கும் முக்கியத்துவம் கொடுத்ததற்கு தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.
இந்தத் திரைப்படம் சொல்ல முடியாத ஒரு ரணத்தை சொல்ல முயற்சிக்கிறது. அது என்ன? என்பதை மார்ச் ஏழாம் தேதி என்று அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இயக்குநர் பிரிட்டோ தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார். இப்படத்தில் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நடிகை ஆதிரா பேசுகையில், ” இந்தப் படத்தில் நான் ரியோ ராஜின் தாயார் பரிமளம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் பிரிட்டோவின் அன்பிற்காக அனைத்து நட்சத்திரங்களும் இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பொறுமையுடன் அனைவரையும் மதித்து நடந்து கொண்டார். இதற்காகவே அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் ஒரு ஆண் இருப்பார். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னாலும் ஒரு பெண் இருப்பார். இதைத்தான் இந்த திரைப்படம் வலியுறுத்துகிறது” என்றார்.
நடிகை விஜி சந்திரசேகர் பேசுகையில், ” இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் மகள் மூலமாக கிடைத்தது. இந்தப் படத்தில் என் மகள் லவ்லின் நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக நடிக்கிறீர்களா? என கேட்டார்கள். இந்தப் படத்தில் நானும், என் மகளும் நடித்திருக்கிறோம்.
இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் எதிர்பாராத விசயங்கள் நிறைய இருக்கிறது. உங்கள் வாழ்க்கையில் மிகவும் நெருக்கமாக பார்த்த பல விசயங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கிறது. ” என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில், ” நண்பர்களாக இணைந்து திரைப்படத்தில் பணியாற்றுவது உண்டு. இந்த திரைப்படத்தில் அனைவரும் சகோதரர்களாக இணைந்து பணியாற்றிருக்கிறோம். சகோதரர்களாக இணைந்து பணியாற்றினால்.. அது அம்மாவை பற்றிய படமாக தான் இருக்கும். இது அம்மாவை பற்றிய படம். மார்ச் ஏழாம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் தனஞ்ஜெயன் பேசுகையில், ” இந்தப் படத்தின் முன்னோட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக நட்டி நட்ராஜ் பின்னணி குரல் கம்பீரமாகவும், புது வடிவத்தையும் கொடுத்திருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் அவர் காந்த குரலில் அட்டகாசமாக கதையை சொல்லி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கு ஏதாவது ஒரு விசயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அது இதுவாக இருக்கும் என்று நம்புகிறேன். இதற்காக நட்டி நட்ராஜ்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் ரியோ ராஜுக்கும் நன்றி. சாண்டி மாஸ்டர் நடனத்தில் மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிப்பிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். ‘மதிமாறன்’ எனும் திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன். ” என்றார்.
நடிகை காவ்யா அறிவுமணி பேசுகையில்,” இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான தருணம். ஆம்பூர் எனும் ஊரிலிருந்து நன்றாக படிப்பதற்காக ஒரு பெண் சென்னைக்கு வருகிறாள். சென்னையில் அரசு பேருந்தில் அந்தப் பெண் பயணித்துக் கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் விளம்பரத்தை பார்க்கிறாள். அந்த விளம்பரத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா இருக்கிறார். அந்த நகைக்கடை விளம்பரத்தை பார்த்த பிறகு, நாமும் ஏன் இது போன்ற விளம்பரங்களில் தோன்றக் கூடாது? என அந்தப் பெண் நினைத்தாள். அதன் பிறகு அதற்காக அந்தப் பெண் தன்னை தயார்படுத்திக் கொண்டாள். அதன் பிறகு குறும்படங்கள், பைலட் படங்கள், விளம்பர படங்கள், தொலைக்காட்சி தொடர்கள்.. என நடித்து ரசிகர்களின் கவனத்தையும், அன்பையும் சம்பாதித்தாள். அந்தப் பெண் நான்தான்.
முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் இயக்குநர் பிரிட்டோவிடமிருந்து அழைப்பு வந்தது. இந்தப் படத்திற்கு தேர்வு செய்யும்போது ‘இந்தப் படத்தில் நீங்கள் கதாநாயகி இல்லை. ஆனால் இந்த படம் வெளியான பிறகு உங்களுடைய நடிப்புத் திறமை பேசப்படும் ‘ என இயக்குநர் வாக்குறுதி அளித்தார். அவருடைய வாக்குறுதி மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் கடினமாக உழைத்தார் இயக்குநர் பிரிட்டோ. இந்தப் படம் வெளியான பிறகு அனைவரின் மனதிலும் என்னுடைய கதாபாத்திரம் இடம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ” என்றார்.
‘பிக் பாஸ்’ முத்துக்குமரன் பேசுகையில், ” இசை வெளியீட்டு விழா என்று சொன்னார்கள். இங்கு இசை வெளியீட்டு மாநாடாக இருக்கிறது. இந்தப் படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்கு ஏற்படுகிறது என்றால்… இப்படத்தின் கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொள்ளும் நடிகர்களின் பட்டியலை பார்க்கும்போது ஏற்படுகிறது. பாரதிராஜா, நட்டி நட்ராஜ், ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், லிஸி ஆண்டனி.. என நீளும் பட்டியலே இதற்கு சாட்சி. ஒரு படத்தில் கதை நாயகர்கள் இருப்பார்கள் கதையின் நாயகர்களால் நிரம்பி வழிகிற திரைப்படமாக இது இருக்கிறது. இதனை உருவாக்கிய இயக்குநர் பிரிட்டோவின் ஆளுமையை நினைத்து பிரமிக்கிறேன். இந்த கதையில் எப்படி பிரபலங்கள் நிரம்பி வழிகிறார்களோ… அதே போல் இப்படம் வெளியான பிறகு திரையரங்கிலும் ரசிகர்கள் நிரம்பி வழிய வேண்டும் என நான் விரும்புகிறேன். இதற்கு ஊடகங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் கேத்ரின் ஷோபா பேசுகையில், ”நிறைய நட்சத்திரங்களை நடிக்க வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் பிரிட்டோவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த குழுவினர் வெற்றி பெறுவதற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் பிரிட்டோ பேசுகையில், ” இது என்னுடைய முதல் திரைப்படம். நான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதற்காக நிறைய கதைகளையும் எழுதினேன். இருந்தாலும் இந்த கதையை தான் முதலில் இயக்க வேண்டும் என்று தீர்மானித்தேன் காரணம் அம்மா. அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்வதற்கான எல்லா விசயங்களும் அடங்கிய படமாக இது உருவாகி இருக்கிறது. அம்மாவை பற்றி இதற்கு முன் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கலாம். ஆனால் இது தனித்துவமானது. இது எல்லோருக்கும் பிடிக்கும். மார்ச் ஏழாம் தேதி படம் வெளியாகும் போது திரையரங்குகளில் வருகை தந்து பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும்.
இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நான் இந்த திரைப்படத்திற்காக பிரபலமான நட்சத்திரங்கள் வேண்டும் என கேட்ட போது எந்தவித தயக்கமும் இல்லாமல் என் அனுபவத்தை பற்றி கூட கேள்வி கேட்காமல் ஒத்துழைப்பு வழங்கினார்கள். முதலில் தயங்கினாலும் பிறகு பணிகள் நடைபெற நடைபெற என் மீதான நம்பிக்கை அவர்களுக்கு அதிகரித்தது.
எனக்கு நடிகர் ஜெய்வந்த் நண்பர். அவர் மூலமாக பாரதிராஜாவை சந்தித்தேன். அவரிடம் கதை சொன்ன போது முழுவதையும் கேட்டுவிட்டு மனதார பாராட்டினார். வயதான தம்பதிகளை கதையின் நாயகனாகவும், நாயகியாகவும் உருவாக்கி கதை எழுதி இருக்கிறாய். இதனாலேயே நீ வெற்றி பெறுவாய் என ஆசீர்வதித்தார். அந்தத் தருணத்தில் தான் இந்த படத்தின் வெற்றியை உணர்ந்தேன். அவரை இயக்கியதற்காகவும், அவரிடம் வாழ்த்து பெற்றதற்காகவும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நட்டி நட்ராஜ் இந்தப் படத்திற்காக பெரிய ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார். மும்பை பின்னணியாக கொண்ட பகுதியில் அவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரத்தை பற்றி நான் இப்போது முழுமையாக விவரிக்க இயலாது. நான் கேட்டுக் கொண்டதற்காகவே முன்னோட்டத்திற்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். அதுவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரியோ என் நண்பன். அவருடன் இன்றும் இணைந்து பயணிக்கிறேன். இப்படத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘லியோ’விற்கு பிறகு சாண்டி மாஸ்டரை இந்த திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமாக காண்பீர்கள். உற்சாகமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கதை நரேட்டிவ் ஸ்டோரி. யோகி பாபுவில் தொடங்கி வித்தியாசமான உச்சகட்ட காட்சி வரை பயணிக்கும். இது அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும்.. இந்த கதை அம்மாவை பற்றிய கதை என்பதால் தான்…அதன் மீதான ஈர்ப்பின் காரணமாகவே நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய அம்மாவுடனான கனெக்சனை திரையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீங்கள் அதனை பார்த்து ரசிப்பீர்கள்.
மார்ச் எட்டாம் தேதி சர்வதேச மகளிர் தினம். இதற்குள் இந்த படத்தை ரசிகர்களிடம் சென்றடைய செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் மார்ச் 7ஆம் தேதியை தேர்வு செய்தோம். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
நடிகர் சாண்டி மாஸ்டர் பேசுகையில், ” இங்கு வருகை தந்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் நடிப்பில் ஜாம்பவான்கள். நான் மட்டும்தான் நடிப்பை பொறுத்தவரை பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் கலைஞர். கொரோனா காலகட்டத்தின் போது தான் நடிகர் மைம் கோபி எனக்கு நடிப்பு பயிற்சியை வழங்கினார். அவர் வழங்கிய சின்ன சின்ன குறிப்புகளை வைத்துக்கொண்டு தான் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
நண்பர் ரியோ தான் பிரிட்டோவிடம் கதை இருக்கிறது. அதை நீங்கள் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் நடிக்கலாம் என ஆலோசனை சொன்னார். பிரிட்டோ என்னிடம் கதை சொன்ன போது அவர் கதை சொன்ன விதமும், கதையும் நன்றாக இருந்தது. ஏனெனில் ‘லியோ’விற்கு பிறகு என்னை தொடர்பு கொள்ளும் இயக்குநர்கள் அனைவரும் சைக்கோ வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத்தான் அணுகினார்கள். அதனால் அதற்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டேன். இந்தப் படத்தின் கதையில் என் கதாபாத்திரம் ஜாலியானது. எனக்கு பாடல் இருக்கிறதா? எனக் கேட்டேன் இருக்கிறது என்று சொன்னார். இன்னும் உற்சாகமடைந்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகை ஐரா கிருஷ்ணன் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
‘நிறம் மாறும் உலகில்’ மார்ச் 7ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் ரியோ ராஜ் பேசுகையில், ” நானும் இப்படத்தின் இயக்குநரான பிரிட்டோவும் திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்புகளை ஒன்றாகத்தான் தேடத் தொடங்கினோம். அதன் பிறகு திடீரென்று ஒரு நாள் நான் இயக்குநராக போகிறேன் என்று சொன்னார். நண்பரான எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு கதையை எழுதி சொன்ன பிறகு உண்மையிலேயே வியந்தேன். அவர் இயக்கும் முதல் திரைப்படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடித்த முதல் மியூசிக் ஆல்பத்தின் இயக்குநரும் அவர்தான். அறிமுக இசையமைப்பாளரும் , என்னுடைய நண்பருமான தேவ் பிரகாஷின் திறமை – இந்த படம் வெளியான பிறகு பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன்.
ஒரு நல்ல திரைப்படத்திற்கான அடையாளமாக நான் எதனை பார்க்கிறேன் என்றால் திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கான பங்களிப்பை முழுமையாக செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது தான். அதனால் இந்த படத்தில் படத்தொகுப்பாளரும் கடுமையாக உழைத்திருக்கிறார்.
நானும், சாண்டி மாஸ்டரும் எப்போதும் ஜாலியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்போம். அது இந்த படத்தில் சாத்தியமாகி இருக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து இன்னும் பல படங்களில் பணியாற்றுவோம்.
இந்த திரைப்படத்தில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ” அறிமுக இயக்குநர்கள் என்னிடம் கதையை சொல்வார்கள். கதையை கேட்டு விட்டு இரண்டு நாள் கழித்துதான் சொல்கிறேன் என்று தான் பதிலளிப்பேன். ஆனால் இயக்குநர் பிரிட்டோ இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது… கதையை கேட்டவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன்.
இந்தப் படத்திற்காக நான் முதல் நாள் கலந்து கொண்ட போது, இயக்குநர் அதற்கு முன் படமாக்கிய காட்சிகளை என்னிடம் காண்பித்தார். அது அவர் இயக்கத்தில் உருவாகும் முதல் படம் போல் இல்லை. நேர்த்தியாக உருவாக்கி இருந்தார்.
இயக்குநர் பிரிட்டோ விரைவில் பான் இந்திய இயக்குநராக உயர்வார். அந்த அளவிற்கு சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் பாரதிராஜாவும் வடிவுக்கரசியும் இணைந்து நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய காட்சியிலும் இயக்குநர் தன் தனித்திறமையை காண்பித்து இருக்கிறார். அதை அனைவரும் ரசிப்பார்கள்.
நான் மும்பையில் சுற்றித் திரியாத தெருக்களே இல்லை. அந்த அளவிற்கு மும்பை எனக்கு பரிச்சயம். ஆனால் இந்தப் படத்தில் நான் மும்பை போல் வடிவமைக்கப்பட்ட அரங்கத்திற்கு சென்றவுடன் வியந்து போனேன். ஒவ்வொரு சிறிய விசயத்தையும் கலை இயக்குநர் நேர்த்தியாக உருவாக்கி இருந்தார். அவருக்கும் இந்த தருணத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படத்தில் என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்ச் 7ஆம் தேதி ‘ நிறம் மாறும் உலகில்’ வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’. இப்படத்திற்காக ‘தமுகு’ எனும் சிறப்பு பாடல் உருவாக்கப்பட்டு சரிகம தமிழ் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி. இமான் இசையில், ராகேண்டு மெளலி வரிகளில் உருவான இப்பாடலை பிரபல நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளதோடு இமானுடன் சேர்ந்து நடனமும் ஆடியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழி வரிகளைக் கொண்டு உருவாகியுள்ள இந்த பிரத்யேகப் பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாடலை பற்றி பேசிய இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “பரபரப்பான கிரைம் திரில்லரான ‘லெவன்’ படத்தின் கதைக்கேற்றவாறு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ளதால், தமிழ் மற்றும் தெலுங்கு வரிகளைக் கொண்டு பாடலை உருவாக்கியுள்ளோம். இதன் காரணமாகவே இதற்கு தமுகு என்று பெயரிட்டுள்ளோம்,” என்றார். கோடை விடுமுறையின் போது ‘லெவன்’ படத்தை திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரித்துள்ளனர். இயக்குநர் சுந்தர் சி யிடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். ‘சரபம்’, ‘சிவப்பு’, ‘பிரம்மன்’,’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை கவனித்திருக்கிறார். படத்தொகுப்பை தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. கையாண்டுள்ளார். ‘லெவன்’ திரைப்படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அவர்களுக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றி. அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.
ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படமான ‘லெவன்’ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா நடிப்பில் பா. விஜய் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி வெளியாகும் ‘அகத்தியா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பாடலாசிரியர் – நடிகர் – இயக்குநர் பா. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அகத்தியா’ திரைப்படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, எட்வர்ட், மெடில்டா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை சண்முகம் மேற்கொண்டிருக்கிறார். ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் ‘அகத்தியா’ திரைப்படம் பிப்ரவரி 28ம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய இந்திய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இயக்குநர் பா.விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நடிகை ராஷி கண்ணா பேசுகையில், ”நான் ஏற்கனவே ‘அரண்மனை 3’ , ‘அரண்மனை 4’ போன்ற ஹாரர் படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இந்தத் திரைப்படத்தில் ஹாரருடன் புதிய எலிமெண்ட்டும் இருக்கிறது. அதற்காக இயக்குநர் பா. விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் பா விஜயை பாடலாசிரியராக தெரிந்திருக்கும். ஆனால் இந்தப் படம் வெளியான பிறகு அவர் இயக்குநராகவும் வெற்றி பெறுவார். படத்தில் புது எலிமெண்ட் கிளைமாக்ஸில் இடம் பிடித்திருக்கிறது. புது தொழில்நுட்பத்துடன் இணைந்து அது உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த படத்தின் தரத்திற்காக தயாரிப்பாளர் கணேஷ் சார் அர்ப்பணிப்புடன் கூடிய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். இப்படம் அவருக்கும் வெற்றி படமாக அமையும். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜீவா உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியான அனுபவம். அவருடன் தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
என் மீது அன்பு செலுத்தி வரும் தமிழ் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன்.
இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயமாக கவரும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநரும், நடிகரும், பாடலாசிரியருமான பா. விஜய் பேசுகையில், ”அகத்தியா- வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மதிப்புமிகுந்த திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்நிறுவனத்துடன் வேம் இந்தியா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.
இது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கொண்ட தருணம். இந்தப் படத்தின் கதை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து மிகப்பெரிய தேடல் இருந்தது. முதலில் இந்த கதையை எப்படி ஜனரஞ்சகமாக சொல்ல வேண்டும். அப்படி வெகுஜன ரசனையுடன் சொல்ல வேண்டும் என்றால் வலிமையான தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணி தேவை என்பதை உணர்ந்தேன். அதனால் கதை எழுத தொடங்கும் போது இது வழக்கமான ஹாரர் படமாக இல்லாமல், அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு ஹாரர் ஃபேண்டஸியாகவும் உருவாக்க வேண்டும் என எழுதத் தொடங்கினேன். ஏனெனில் நான் சொல்லவரும் கன்டென்ட் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும் என விரும்பினேன். இதனால் கதையின் ஒரு மிகப்பெரிய பகுதியை பீரியட் ஃபிலிமாக காட்ட வேண்டிய சூழல் கதை களத்தில் ஏற்பட்டது.
திரைக்கதையை எழுதி முடித்த பிறகு இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் பிரம்மாண்டமான பொருட்செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளர்கள் தேவை. மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனம்- நட்சத்திர நடிகர்களின் பிஸினஸைப் பற்றி கவலைப்படாமல் சொல்லவரும் கன்டென்ட்டை புரிந்து கொண்டு தயாரிக்கும் தயாரிப்பாளர்களால் மட்டுமே இதனை தயாரிக்க இயலும். அப்படி ஒரு தயாரிப்பாளரை நானும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரும் தேட தொடங்கினோம்.
இந்தத் தருணத்தில் தான் நடிகர் ஜீவாவின் தொடர்பு கிடைத்தது. அவருடன் ஏற்கனவே ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். அந்த நட்பின் காரணமாக அவரிடம் இந்தப் படத்தின் கதையை விவரித்தேன். ஜீவாவும், ‘ஹாரர் படமா.. வேண்டாமே..!’ என தயங்கினார். ஆனால் நானோ, ‘இது ஹாரர் படம் இல்லை. ஹாரர் ஃபேண்டஸி படம். இந்த திரைப்படத்தில் நல்ல விஷயம் இருக்கிறது. அது மக்களிடம் சென்றடைய வேண்டும். இது ஒரு ஹாரர் அட்வென்ச்சர் படமும் கூட’ என்றேன். அதன் பிறகு அவரும் தயாரிப்பாளரை தேடுகிறேன் என்றார்.
பின்னர் இந்த கதையை நம்பி தயாரிக்கும் ஒரு தயாரிப்பாளர் இருக்கிறார், வாருங்கள் அவரை சந்திப்போம் என்று அழைத்துச் சென்ற இடம் தான் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அவரை அவருடைய வீட்டில் சந்தித்தோம். கதையை முழுவதுமாக கேட்டதும் தயாரிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்தார். நாங்கள் கேட்டது, கேட்க நினைத்தது, கேட்கத் தயங்கியது, இதையெல்லாம் கேட்கலாமா என்று யோசித்தது என அனைத்தையும் அவராக முன்வந்து செய்து கொடுத்தார். இந்த திரைப்படத்தில் பான் இந்திய நட்சத்திர நடிகையான ராஷி கண்ணா இடம் பிடித்தார். அதன் பிறகு மற்றொரு அழுத்தமான வேடத்தில் நடிக்க அர்ஜுன் பொருத்தமாக இருப்பார் என்று சொன்னோம். அவர் இந்தப் படத்தில் இணைந்தார். அதன் பிறகு சில ஹாலிவுட் நட்சத்திர நடிகர்கள் நடித்தால் கதையில் நம்பகத்தன்மை அதிகம் இருக்கும் என்று சொன்னேன். மெடில்டா எனும் ஹாலிவுட் நடிகையும், ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் நடித்த எட்வர்ட் சொனன் பிளேக் என்ற நடிகரும் இணைந்தார்கள். அதன் பிறகு யோகி பாபு, வி டி வி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி , ராதாரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் பணியாற்றினர். இந்தப் படத்தின் கதைகளத்திற்காக ஏராளமான அரங்குகள் அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அனைத்தும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்க வேண்டியதாக இருந்தது. அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்.
டாக்டர் ஐசரி கணேஷின் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றும் இயக்குநர்களுக்கு மிகப்பெரிய படைப்பு சுதந்திரம் கிடைக்கும். இயக்குநர்கள் ஒரு காட்சிக்கு மயில் தோகை வேண்டும் என கேட்டால்.. தயாரிப்பாளர் மயில் ஒன்றை கொண்டு வந்து தருவார். இதுதான் அவரின் பண்பு. இதுதான் அவர் சினிமா மீது வைத்திருக்கும் கட்டற்ற நேசம், அளவற்ற காதல். இதை பார்த்து நான் பல தருணங்களில் வியந்து இருக்கிறேன்.
65 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். படத்தொகுப்பு பணிகளை நிறைவு செய்த பிறகு 90 நிமிடங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்காக ஓராண்டு காலம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டு ஒத்துழைப்புடன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. அந்தப் பணிகளையும் அண்மையில் நிறைவு செய்தோம். உச்சகட்ட காட்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த காட்சிக்கான பணிகளை ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு வி எஃப் எக்ஸ் பணிகளை மேற்கொண்ட முன்னணி நிறுவனத்திடம் வழங்கினோம். இந்த இறுதிக் காட்சியில் அனிமேஷன் கதாபாத்திரங்களுடன் கூடிய சண்டைக் காட்சியை பிரம்மாண்டமாக அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அந்தக் காட்சி படத்திற்கு வலிமை சேர்க்கும் என நம்புகிறேன்.
‘ஒரு இயக்குநர் எழுதிய திரைக்கதை முழுவதுமாக காட்சி வடிவில் செதுக்கப்பட்டிருந்தால், அந்தப் படம் இயக்குநருக்கு திருப்தி அளித்தால், அதுதான் நல்ல படைப்பாக உருவாகும்’ என என்னுடைய குருநாதர் கே பாக்யராஜ் சொல்வார். இந்த படத்தின் முதல் பிரதியை பார்வையிடும் போது எனக்கு அந்த மனநிறைவு ஏற்பட்டது. இதற்கு காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் தான். அவருக்கு வானில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையின் அளவில் நன்றியை சொன்னாலும் போதாது.
நடிகர் அர்ஜுன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குநரும் கூட அவருடைய இயக்கத்தில் உருவான படத்திற்கு பாடல்கள் எழுதுவது என்பதே சவாலான பணி. அவரை வைத்து இயக்குவது என்பது இன்னும் கூடுதலான சவால் மிக்கது. படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது அன்றைய தினம் படமாக்கப்படும் காட்சிகளின் முழு விவரத்தையும் கையில் வைத்திருப்பார். அவரிடம் படம் தொடர்பான காட்சி தொடர்பான ஆரோக்கியமான கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டால் அவர் தன் பங்களிப்பை முழுமையாக அளித்து விடுவார். படப்பிடிப்பிற்கு முதல் நாள் வரும் போது தான் இத்தகைய வினாக்களை கேட்பார். அதற்கு நாங்கள் பதில் அளித்து விட்டோம் என்றால் முழு படப்பிடிப்பிற்கும் அவருடைய ஒத்துழைப்பு சிறப்பானதாக இருக்கும். இந்தப் படத்தில் கதையின் வேர் பகுதியில் இடம்பெறும் கதை களத்தில் அழுத்தமான வேடத்தில் அர்ஜுன் நடித்திருக்கிறார். அவருக்கு நான் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் இந்தப் படத்தில் திறமை மிக்க தொழில்நுட்ப கலைஞர்களின் கூட்டணியும் அமைந்தது. ஒளிப்பதிவாளர் தீபக் குமார், படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ், கலை இயக்குநர் சண்முகம், சண்டை பயிற்சி இயக்குநர் கணேஷ், ஆடை வடிவமைப்பாளர் சாய், பல்லவி, டீனா ரோசாரியோ என பலரும் எனக்கு பக்க பலமாக இருந்து பணியாற்றினார்கள். இவர்களுடன் யுவன் ஷங்கர் ராஜாவும் எனக்காக சிறப்பான பின்னணி இசையை அமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக அவருடைய பிரத்யேகமான தீம் மியூசிக் இடம் பிடித்திருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும்.
‘அகத்தியா’ இரண்டேகால் மணி நேரம் மனதை ரிலாக்ஸாக வைக்கும் ஜனரஞ்சகமான படம் என்பதுடன் குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையில் தயாராகி இருக்கிறது. அழகான தமிழ் வசனங்கள்- இனிமையான பாடல்கள்- அனைத்து தரப்பினரும் தற்போது ரசிக்கும் ஹாரர் எலிமெண்ட்ஸ்கள்- இத்துடன் ஃபேண்டஸி என்ற புதிய எலிமெண்ட்டையும் இணைத்து உருவாகியிருக்கிறோம். அதனால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்பது என்னுடைய அழுத்தமான நம்பிக்கை.
படைப்பாளியின் ஒவ்வொரு படைப்பும் மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன் அளிக்க வேண்டும் என கருதுகிறேன். இதுதான் படைப்பின் இலக்கணமும் கூட. அத்தகைய முயற்சியில்தான் ‘அகத்தியா’ உருவாகி இருக்கிறது. அழகானதொரு கருவை சுமந்து உங்களை நோக்கி வரும் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
நான் திரைத்துறைக்கு பாடல் ஆசிரியராக அறிமுகமாகி, நடிகராகி, இயக்குநராகி, தயாரிப்பாளராகி என 27 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்ட விஷயம் ஒன்றுதான். சினிமாவில் வெற்றி என்பது கூட்டு முயற்சி. சினிமாவில் தனிப்பட்டவர்களின் வெற்றி சாத்தியமில்லை. கூட்டு முயற்சியில் தான் ஒரு கலைஞரின் வெற்றி அடங்கியிருக்கிறது,” என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில், ”இந்த படத்தின் கதையை இயக்குநர் பா விஜய் என்னிடம் சொல்லும் போது அவரிடம் ‘சங்கிலி புங்கிலி கதவை திற’ என்ற ஒரு ஹாரர் படத்தில் நடித்து விட்டேன்’ என சொன்னேன். கதையை முழுவதும் கேட்ட பிறகு ஹாரர் என்பது கதை சொல்வதற்காக பயன்படும் ஒரு கருவியாக மட்டுமே இருந்தது. இந்தியாவில் மட்டும் தான் இது போன்ற மிக்ஸ்டு ஜானரில் படங்கள் உருவாகும். வெளிநாடுகளில் ஹாரர் படம், ரொமான்டிக் படம் என ஒவ்வொன்றும் ஜானர் அடிப்படையில் இருக்கும். பா. விஜய் ‘அகத்தியா’ படத்தை இந்திய ரசிகர்கள் ரசிக்கும் வகையில் மிக்ஸ்டு ஜானரில் தான் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு நல்லதொரு மெசேஜும் இருக்கிறது. இந்த விஷயம் மக்களை சென்றடைந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினோம். அதற்காக ஹாரர் – திரில்லர் – காமெடி – ஆக்ஷன்- அனிமேஷன்- ஃபேண்டஸி- இவற்றின் கலவையாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் குறிப்பாக குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படம் உருவாகி இருக்கிறது. குழந்தைகள் முதன்முறையாக தமிழில் இப்படி ஒரு சர்வதேச தரத்துடன் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளையும் அனிமேஷன் கதாபாத்திரங்களையும் கண்டு ரசிப்பார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் முக்கியமானதாக இருக்கும். ஒரு வருடம் காத்திருந்த பிறகு அண்மையில் தான் அந்த கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்தோம். உண்மையில் வியந்து போனோம். இயக்குநர் பா. விஜய் கடினமாக உழைத்திருக்கிறார். அவருடைய விடாமுயற்சிக்காக அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.
இது போன்ற பிரம்மாண்டமான பொருட்செலவில் படத்தை தயாரிக்க வேண்டும் என்றால் நாங்கள் உடனடியாக வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களை தான் சந்திப்போம். அந்த வகையில் இந்த படத்தின் கதையை அவரை வீட்டில் சந்தித்து சொன்னோம். கதையை முழுவதுமாக கேட்டு உடனே தயாரிப்பதற்கும் ஒப்புக் கொண்டார். அந்தத் தருணத்திலேயே இந்த படத்திற்காக நாங்கள் படமாக்கியிருந்த காட்சிகளை அவருக்கு காண்பித்தோம். எங்களுடைய இந்த அணுகுமுறையும் அவருக்கு பிடித்திருந்தது. உண்மையிலேயே ஏராளமாக பொருட்செலவு செய்து தான் படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் உருவாக்கத்தின் போது எந்த சமரசம் இல்லாமல் இயக்குநருக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்தின் விதை. அவரைச் சார்ந்து தான் இப்படத்தின் கதை நகரும். நாங்கள் தற்காலத்திலும், அவர் 1940களிலும் இருப்பார். அவர் உருவாக்கிய ஸ்கேரி ஹவுஸ் மூலமாகத்தான் கதை பயணிக்கும்.
நானும், நடிகர் ராஷி கண்ணாவும் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். அவர் எனக்கு இந்தி திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்களித்து இருக்கிறார்.
இந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாகி இருக்கிறது,” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் பேசுகையில், ”இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஜீவா – இயக்குநர் பா. விஜய்யையும், ஒளிப்பதிவாளர் தீபக் குமாரையும் அழைத்து எங்கள் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். இப்படத்தின் கதையை சொன்னார்கள். எனக்கு பிடித்திருந்தது. அப்போது கதைக்கு டைட்டில் வைக்கவில்லை. படத்தில் ஹீரோவுக்கு அகத்தியன் என பெயர். அதனால் படத்திற்கு ‘அகத்தியா’ என பெயர் சூட்டினோம்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றார்கள். அதன் பிறகு இயக்குநரிடம் படத்தை எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன். கிராபிக்ஸ் வேலைகள் முடிந்தவுடன் பார்க்கலாம் என்றார். இந்தப் படத்தில் சி ஜி மட்டுமே ஒன்றரை மணி நேரம். 14 தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டது படக்குழு. இரண்டு மாதத்திற்கு முன்புதான் அனைத்து பணிகளும் முடிவடைந்தது. அதன் பிறகு படத்தை பார்த்தோம். பார்த்தவுடன் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டது. சந்தோஷமாகவும் இருந்தது. எங்கள் நிறுவனம் இதுவரை 25 படங்களை தயாரித்திருக்கிறது. அதில் இந்த படம் தான் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படம் எங்கள் நிறுவனத்திற்கு ஸ்பெஷலானது. படத்தை பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் பா விஜய்யிடமிருந்து இப்படி ஒரு படைப்பா என வியப்படைவீர்கள். இதற்காக இயக்குநர் பா விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 780க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 28ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. பி வி ஆர் மற்றும் சினி பொலிஸ் ஆகிய திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அகத்தியா’ திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி இருப்பதால் இந்தியா முழுவதும் வெளியாகிறது.
என்னுடைய திரைப்பட தயாரிப்பு அனுபவத்தில் இந்தப் படத்தின் இயக்குநரையும் , ஒளிப்பதிவாளரையும் தான் அதிக முறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன். இவர்கள் பட உருவாக்கத்தின் போது நடைபெறும் அனைத்து விஷயங்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்தத் திரைப்படத்தில் கிட்டத்தட்ட 25 நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அத்துடன் இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு எம்முடைய தயாரிப்பில் உள்ள படங்களை குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதில் வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பும் இடம்பெறும்.
என்னுடைய எல்லா திரைப்படத்தின் இந்தி மொழி உரிமையை வேம் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், எனது இனிய நண்பருமான அனீஷ் அர்ஜுன் தேவ் தான் வாங்குவார். இந்தத் திரைப்படம் இந்தியிலும் வெற்றி பெறும் என்பதால் இந்தப் படத்தின் இந்தி பதிப்பு உரிமையை வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தும் போது படத்தைப் பார்த்துவிட்டு, படத்திற்கு இணை தயாரிப்பாளராக வர விருப்பம் தெரிவித்தார். அவர் இணைந்த உடன் இந்த படம் இன்னும் பிரம்மாண்டமானதாக மாற்றம் பெற்றது. இந்த தருணத்தில் அவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை கருத்தரங்கின் பின்னணியில் டாக்டர் B. ராமமூர்த்தி நினைவுச் சொற்பொழிவை திரு. கோபாலகிருஷ்ண காந்தி வழங்கினார்
ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை (AASNS – Asian Australasian Neurosurgery) கருத்தரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் டாக்டர் B. ராமமூர்த்தி சொற்பொழிவில், முன்னாள் ஆளுநரும், இராஜதந்திரியும், சிறந்த நிர்வாகியுமான திரு. கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள், ஞாயிற்றுக்கிழமை 23 ஃபிப்ரவரி 2025 அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றினார்.
காவேரி மருத்துவமனையின் வழிகாட்டியும், நரம்பியல் இயக்குநரும் மருத்துவருமான கிரிஷ் ஸ்ரீதர் பேசுகையில், “டாக்டர் B. ராமமூர்த்தி இந்தியாவின் முன்னோடி நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், இந்திய நரம்பியல் சங்கம் (NSI – Neurological Society of India) & ஆசிய – ஆஸ்திரலேசியன் சங்கத்தின் நிறுவன உறுப்பினராவர். அவர் குருவாகவும், வழிகாட்டியாகவும், நண்பராகவும் பலருக்கு வழிகாட்டியுள்ளார்” என்றார். திரு. கோபாலகிருஷ்ண காந்தி, ‘கோபத்தின் தந்திரமான வழி (The Wily way of Anger)’ எனும் தலைப்பில், கோபமுறும் மனிதனுக்கு ஏற்படும் தாக்கத்தையும், அதன் விளைவுகளையும் பற்றிச் சுட்டிக் காட்டினார். மேலும், “கோபம் என்பது ஒரு உலகளாவிய மனிதப் பண்பு, எந்த மனிதனும் அதிலிருந்து விடுபட முடியாது. இது, அவ்வப்போது நம்மை வெல்லும் ஒரு உயிரினத்துடன் வாழ்வதைப் போன்றது. நாம் வெட்கப்பட வேண்டிய விஷயங்களைச் சொல்லவும் செய்யவும் நம்மை ஆட்படுத்தி விடுகிறது” என்றார்.
AASNS-இன் சர்வதேச சந்திப்பில், 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20க்கும் மேற்பட்ட சர்வதேச ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர். தலை மற்றும் முதுகுத்தண்டு காயம், முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை மற்றும் மூளைக் கட்டி அறுவைச் சிகிச்சை குறித்த ஆலோசனைகள் 2 நாட்கள் நடந்தன. இச்சந்திப்பில், இளம் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பு இருந்தது.
AASNS கல்விக் குழுவின் துணை தலைவரும், NSI இன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர், “எந்தவொரு நரம்பியல் அறுவைச் சிகிச்சை சமூகத்திற்கும் கல்வி எப்போதும் ஒரு முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. மூத்த மற்றும் திறன் வாய்ந்த நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் அனுபவமும் நிபுணத்துவமும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது முக்கியம். டாக்டர் ராமமூர்த்தி இளம் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்களின் கல்வி மற்றும் வழிகாட்டுதலுக்கு முன்மாதிரியாக இருந்தார். இத்தகைய கல்வித் திட்டத்தின் பின்னணியில் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது மிகப் பொருத்தமானது” என்றார்.
₹30 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் தற்போது அமெரிக்காவில் இறுதிக்கட்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட் ஃப்ளவரின் விஷுவல் எஃபெக்ட்ஸ் இயக்குனர் என். பிரபாகரின் வழிகாட்டுதலின் கீழ், புகழ்பெற்ற ஹாலிவுட் VFX நிபுணர்களான டேவிட் டோஸெரோட்ஸ் மற்றும் டாம் கிளார்க் ஆகியோரால் VFX கண்காணிக்கப்படுகிறது. ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ், தயாரிப்பாளர் கே. மாணிக்கம், உயர்தர சினிமா வுக்கான தனது மகத்தான பார்வை மற்றும் அர்ப்பணிப்பிற்கு பெயர் பெற்றவர், ரெட் ஃப்ளவர் பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிராத சர்வதேச தொழில்நுட்பம் சார்ந்த சினிமா அனுபவத்தை, ஆழமான உணர்ச்சிகள் மற்றும் உயர் ஆக்ஷனுடன் கலந்திருக்கும் என்று கூறினார். “உலக சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் ஒரு உண்மையான பிரமாண்டமான உணர்ச்சிகரமான காட்சி விருந்தாக இருக்கும் என்று தயாரிப்பாளர் கே. மாணிக்கம் தெரிவித்தார். இப்படத்தில் ஹீரோ விக்னேஷ் மற்றும் ஹீரோயின் மனிஷா ஜஷ்னானி நடிக்க, மற்றும் முக்கிய வேடங்களில் நடிகர்களான நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், யோக் ஜேபி, நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், மோகன் ராம், சுரேஷ் மேனன் நடித்துள்ளனர். இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் நடிகர்களின் நடிப்பில் நம்பிக்கை தெரிவித்து, உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அனைத்து கலைஞர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர் என்று கூறினார். ரெட் ஃப்ளவர் படம், காட்சிக்கு காட்சி. உணர்ச்சி – உந்துதல் ஒளிப்பதிவு மற்றும் ஹைப்பர்-ரியலிஸ்டிக் கிராபிக்ஸ் பார்வையாளர்கள் மனதை கவரும் மெய்நிகர் படம். ஒளிப்பதிவாளர் தேவ சூர்யாவின் அற்புதமான ஒளிப்பதிவில், பிரான்சிஸ் சேவியரின் அட்டகாசமான கலர் கிரேட்டிங் ஆகியவற்றின் கீழ், ஒவ்வொரு பிரேமும் டிஜிட்டல் கதை பரிணாமத்திற்கு ஒரு சான்றாகும், சந்தோஷ் ராமின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஒவ்வொரு காட்சியையும் உயர்த்துகிறது, ஆர்கெஸ்ட்ரா பிரம்மாண்டத்தை ஃப்யூட்ரஸ்ட்டிக் ஒலிக் காட்சிகளுடன் கலக்கிறது. மணி அமுதவனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சி ஆழத்தை பெருக்கி, ஒவ்வொரு தருணத்தையும் மறக்க முடியாததாக ஆக்குகிறது, ஸ்டன்ட் மாஸ்டர் இடி மின்னல் இளங்கோவின் விறுவிறுப்பான சண்டை காட்சிஅமைப்பு வியக்க வைக்க, அரவிந்தின் கூர்மையான எடிட்டிங், வேகத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது, ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் சுவாரஸ்யமான சினிமா பயணத்தை உறுதி செய்கிறது என்கிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். ஃப்யூட்ரஸ்ட்டிக் கதைக்களம், அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளுடன், ரெட் ஃப்ளவர் திரைப்படம், இந்தியாவின் சினிமா வரலாற்றில், ஒரு புதிய அளவுகோலை அமைக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் 2025 இல் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரெட்ப்பிளார் திரைப்படம் வெளியாகவுள்ளது…
Komala Hari Pictures & One Drop Ocean Pictures தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, சமூகத்தில் குடும்ப அமைப்பை பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜென்டில்வுமன் ”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர் பேசியதாவது… ஸ்கூலில் பேசக் கூப்பிட்டாலே ஓடிப்போயிடுவோம் இந்த மேடை பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தின் கதை கேட்டவுடனே படு இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. இயக்குநர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்தார். எந்த செலவும் இழுத்து விடவில்லை, மிக அழகாக படத்தை எடுத்துள்ளார். எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
One Drop Ocean Pictures சார்பில் தயாரிப்பாளர் லியோ பேசியதாவது.. ஜென்டில்வுமன் கதையை ஜோஷ்வா சொன்ன போது, இப்படத்தில் அழுத்தமான கதை இருப்பது புரிந்தது. மிகத் தெளிவாக சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்து கதையிலிருந்தது. இந்தக்கதை பிடித்து எதையும் யோசிக்காமல் தயாரிக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் நன்றி. இப்படத்தைப் புரிந்து கொண்டு, உழைப்பைத் தந்த கலைஞர்கள், நடிகர்கள் லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் அனைவருக்கும் நன்றி. லிஜோமோல் ஜெய்பீமில் பார்த்ததை விட, மிகச்சிறப்பாக நடித்துள்ளார். லாஸ்லியாவுக்கு மிக அழுத்தமான பாத்திரம், ஒரு காட்சியில் லிஜோமோல், லாஸ்லியா இருவரும் கலக்கியிருக்கிறார்கள். வசனம் பாடல் வரிகள் யுகபாராதி அண்ணா, அவர் இப்படத்திற்குக் கிடைத்தது வரம். எந்த சாதியிலும் ஆணாதிக்கம் இன்றும் இருக்கிறது, அதைச் செருப்பால் அடித்த மாதிரி மிக அழுத்தமாகச் சொல்லியுள்ளார் இயக்குநர். ஹரி பிரதர் என்ன கேரக்டர் கொடுத்தாலும் தனித்துவமாகச் செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்படத்தில் கண்ணிலேயே நடித்துள்ளார். படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் , படத்தை வெளியிடும் உத்ரா புரடக்சனுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.
எடிட்டர் இளையராஜா சேகர் பேசியதாவது… இயக்குநர் ஜோஷ்வாவை இந்தப்படத்திற்குப் பிறகு அனைவருக்கும் தெரியும். தயாரிப்பாளர் ஹரி சார், இன்று தான் அவரை நேரில் பார்க்கிறேன், படத்திற்காகக் கேட்ட அனைத்தையும் தந்துள்ளார். லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் மூவருடைய நடிப்பையும் திரையில் பாருங்கள், அசத்தியிருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். ஒளிப்பதிவாளர் காத்தவராயன் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். யுகபாரதி அண்ணா வசனங்கள் படத்திற்கு பலம். படம் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும், அனைவருக்கும் நன்றி.
நடிகை தாரணி பேசியதாவது… எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு என் நன்றி, என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் கோ ஆக்டர்ஸ் லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் மூவருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம், மூவருக்கும் நன்றி. படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் காத்தவராயன் பேசியதாவது… எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. லிஜோமோல் ஜோஷ், ஹரி கிருஷ்ணன் இருவரும் நடிப்பார்கள் எனத் தெரியும், அவர்களுடைய படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் லாஸ்லியா எப்படி நடிப்பார் எனத் தயக்கமாக இருந்தது, ஆனால் படம் பார்த்த பிறகு தான் தெரிந்தது, மூன்று பேரும் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா 96 பார்த்த போதே பிடிக்கும், இப்படத்தில் இன்னும் அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பாடல் வரிகள், வசனம் மிக அருமையாகத் தந்த யுகபாரதி அண்ணாவுக்கு நன்றி. இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் உதவி இயக்குநராக இருக்கும் போதே, நிறைய டார்ச்சர் செய்வான், இப்போது என்ன பண்ணப் போகிறானோ? என நினைத்தேன், ஆனால் இப்படத்தை மிக அமைதியாக அழகாக எடுத்துள்ளான். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
உத்ரா புரடக்சன்ஸ் சார்பில் ஹரி உத்ரா பேசியதாவது… எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து வெளியிட்டு வரும் அனைத்து படங்களுக்கும், நல்ல ஆதரவு தந்து வருகிறீர்கள், ஜென்டில்வுமன் இதுவரை நாங்கள் வெளியிட்ட படத்திலிருந்து, வித்தியாசமான படமாக இருக்கும். இந்த படத்தை வெளியிட எங்களுக்கு வழி ஏற்படுத்தித் தந்த, ரிஸ்வான் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் மற்றும் நேதாஜி சார் ஆகியோருக்கு நன்றி. இயக்குநர் ஜோஷ்வா எந்தவொரு விசயத்தையும் மிக எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார், எந்த விஷயமாக இருந்தாலும், மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். இந்த படத்தின் ரிலீஸுக்கு அவரும் நானும் இணைந்து, நிறைய ஐடியாக்கள் ரெடி செய்து வைத்திருக்கிறோம். மார்ச் ஏழாம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது… இயக்குநர் ஜோஸ்வா எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம், உதவி இயக்குநர்களாக நிறையப் பேர் என்னிடம் கதை சொல்லி இருக்கிறார்கள், ஆனால் அதைச் சாத்தியமாக்குவது எத்தனை பெரிய கஷ்டம் என எனக்குத் தெரியும். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியில் அதைச் சாத்தியம் ஆக்கி இருக்கிறார். என்னை நானே நம்மால் முடியும் என தட்டிக் கொடுத்துக் கொண்டது, ஜோஷ்வாவைப் பார்த்துத் தான். 19 நாளில் அவர் இந்தப்படத்தை எடுத்துள்ளார், சினிமாவில் சிலருக்கு எல்லாமும் கிடைக்கும் ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஜோஷ்வா அதில் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு இந்த மொத்த டீமும் தான் காரணம். அனைத்து நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள், எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். ஜோஷ்வா மாதிரி இயக்குநர்கள் சினிமாவுக்கு வந்தால், சினிமா இன்னொரு தளத்திற்குச் செல்லும். கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் லெனின் பாரதி பேசியதாவது… யுகபாரதி தான் இவ்விழாவிற்கு என்னை அழைத்தார். டிரெய்லர் மிக அற்புதமாக இருந்தது. 19 நாட்களில் எடுத்ததாகச் சொன்னார்கள், அப்படி எடுக்கும் போது போதாமையால், பல தவறுகள் காட்சிகளில் தெரியும், ஆனால் இந்தப்படம் படு கச்சிதமாக இருந்தது. அதிலிருந்த அடர்வு மிக அருமையாக இருந்தது. பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. ஜோஷ்வாவை பார்த்தால், நம்மாலும் முடியும் எனும் நம்பிக்கை வருகிறது. பல கோடி போட்டு எடுக்கும் படங்களை விடக் கச்சிதமாக இருக்கிறது. லிஜோமோல் பலர் தயங்கும் பாத்திரங்களை எடுத்து நடிக்கிறார். ஹரி, லாஸ்லியாவுக்கும் வாழ்த்துக்கள். மனித வரலாற்றில் அன்பைப் பேசும் யுகபாரதி எழுத்தில் படம் உருவாவது பெருமை. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது… இயக்குநர் ஜோஷ்வா யுகபாரதி அண்ணன் மூலமாகத்தான் பழக்கம், அவர் முதலில் இந்தக் கதையைச் சொன்ன போது இந்த படத்தின் பெயரே வேறு, ஆனால் அதைவிட ஜென்டில்வுமன் டைட்டில் மிக பொருத்தமாக உள்ளது. ஜென்டில்மேன் பற்றி மட்டும் பேசும் உலகில், ஜென்டில்வுமன் பற்றியும் பேச வேண்டும் அதை ஜோஷ்வா செய்துள்ளான். சென்சாரில் இருந்து ஒரு நாள் போன் செய்தான், இத்தனை கட் என்ன செய்வது என்றான், சென்சாரால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் தான், அதனால் இதையெல்லாம் செய் என சொல்லித் தந்தேன். இன்றைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. இங்கு எல்லாவற்றையும் புனிதப்படுத்துவது தான் மிகப்பெரிய பிரச்சனை, புனிதப்படுத்த நீ யார் ?. பலர் நம் காலத்துக்கு முன்பே வழக்கத்தை உடைத்து, என்னென்னவோ செய்து விட்டார்கள் ஆனால் நாம் அதைத் தாண்டவே இல்லை. இப்படியான உலகில் புனிதப்படுத்துவதைக் கட்டுடைப்பது முக்கியம். பெண்களை சக மனுஷியாகப் பார்க்காமல் கடவுளாகப் பார்க்கும் சமூகம் தான் மிக ஆபத்தான சமூகம் என நினைக்கிறேன். பெண்களை சக மனுஷியாகப் பார்த்து, அவர்களோடு அவர்கள் மொழியில் பேசுவது தான் இந்த ஜென்டில்வுமன். இது போன்ற படத்தைத் தயாரித்து திரைக்குக் கொண்டு வரும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் த செ ஞானவேல் பேசியதாவது… நடிகை லிஜோவுக்காகத் தான் வந்தேன், அவர் மிகச்சிறந்த ஆர்டிஸ்ட், அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் பிரமிப்பைத் தருகிறது. இயக்குநரிடம் ஏன் ஜென்டில்வுமன் எனப் பெயர் வைத்தீர்கள் எனக் கேட்டேன். இந்த மாதிரியான தலைப்புகளில் ஒன்று ஏதாவது கருத்து இருக்க வேண்டும், இல்லை எனில் கவன ஈர்ப்பு இருக்க வேண்டும். அவர் மிக அற்புதமான பதில் ஒன்றைத் தந்தார். சராசரி வழக்கத்தை உடைப்பது, இதுவரை ஜென்டில்மேன் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம் அதை மாற்ற ஜென்டில்வுமன் வைக்கலாம் என வைத்தேன் என்று சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு ஸ்டீரியோ டைப்பை உடைப்பது சமூகத்தில் மிகவும் முக்கியம் என நான் கருதுகிறேன். கலைஞனாக ஸ்டீரியோ டைப்பை உடைப்பது மிகவும் முக்கியம். ஸ்டீரியோ டைப்பை உடைத்துத் தான் அனைத்து மாற்றங்களும் வந்துள்ளது. அதனால் இன்றைய சமூகத்தில் அந்த முயற்சியில் வரும் அனைத்து படைப்புகளையும் நாம் வரவேற்க வேண்டும். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கும், உழைத்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பாடலாசிரியர் வசனகர்த்தா யுகபாரதி பேசியதாவது… 25 ஆம் ஆண்டுகால திரை வாழ்வில் நிறையத் தம்பிகளை நான் சந்தித்திருக்கிறேன், அவர்களில் சிலரைச் சந்திக்கும் போது, இவர்கள் கண்டிப்பாக இயக்குநர் ஆகி விடுவார்கள் என நினைப்பேன், அப்படியான தம்பிதான் ஜோஷ்வா. இந்த படத்தைப் பற்றி நிறையப் பேசக்கூடாது, இந்த படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் அனைவரும் அதிகம் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நல்ல படத்திற்கு நீங்கள் எப்போதும் பெரும் ஆதரவு தருவீர்கள், உங்கள் தோள் மீது வைத்துக் கொண்டாடுவீர்கள். இந்த படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். அதைத் தாண்டி இந்த திரைப்படத்தில் உள்ள கலைஞர்கள், நடிகர்கள் பற்றிச் சொல்ல வேண்டும், எல்லோரும் ஜோஷ்வா மீது வைத்த அன்பு தான் இந்த திரைப்படம். அவர் எப்போதும் தன் வேலை மீது கவனமாக இருப்பார். அவர் 19 நாளில் இப்படத்தை முடிக்க முடியும் எனச் சொன்ன போது, நான் நம்பவில்லை, ஆனால் அடுத்தடுத்து நல்ல கலைஞர்கள் நம்பி வந்த போது அது நடந்தது. ஜோஷ்வாவிற்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் பேசியதாவது… சினிமா மீது நான் வைத்த காதல்தான் இந்தத் திரைப்படம். 19 நாளில் படத்தை முடிக்க முடியும் எனத் திட்டமிட்டது நான் அல்ல, அது என் திட்டம் அல்ல, அது நடக்கக் காரணம் என்னுடைய படக் குழுவினர் தான், எனக்காக என்னை நம்பி உழைத்தார்கள். அதனால் தான் இது நடந்தது. சென்சாரின் போது, ராஜுமுருகன் அண்ணன் தான் அறிவுரை சொன்னார், அவர் அறிவுரையால் தான் சென்சார் முடித்தேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைப் பற்றிச் சொல்ல வேண்டும், அவரது இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும், கிட்டத்தட்ட 20 நிமிட காட்சிகள் வெறும் இசையில் மட்டுமே நகரும். அற்புதமாக இசையமைத்துள்ளார். ஆர்ட் டைரக்டர் அமரன் 20 நாட்களும் என்னுடன் இருந்தார். எடிட்டர் இளையராஜா சேகர், அவரை நான் நிறைய டார்ச்சர் செய்துள்ளேன், ஆனால் அதைத்தாண்டி என்னுடன் நின்றார். இந்தக்கதை எழுதியவுடன் இதை லிஜோ மோலிடம் சொல் என்றார் யுகபாரதி அண்ணன். அவரிடம் இந்த கதையைச் சொன்ன போது, அவர் ஒரு கேள்வி கேட்டார் அந்த கேள்விதான் படம் பார்க்கும்போது ரசிகர்கள் கேட்பார்கள், அதன் பதில் சொன்னவுடன் அவர் ஒத்துக்கொண்டார். லாஸ்லியா எனக்குப் பழக்கம். நான் இந்தக்கேரக்டர் சொல்லி அனுமதி எல்லாம் கேட்காமல், நடிக்கக் கூப்பிட்டேன், அவர் என்னை நம்பி வந்தார். ஹரியைப் படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் முன் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். தயாரிப்பாளர்கள் பற்றி சொல்ல வேண்டும், என்னிடம் இந்தப்படத்தில் காமெடி கமர்ஷியல் இருக்கிறதா? என எதுவும் கேட்கவில்லை நான் கேட்ட அனைத்தும் தந்தார்கள். நேதாஜி அண்ணன் மூலம் தான் தயாரிப்பாளர்கள் அறிமுகம், அவருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் ஹரி கிருஷ்ணன் பேசியதாவது… சினிமாவில் எனக்குப் பிடித்த அனைவரும் இங்கு வந்துள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தத் திரைப்படம் ஆரம்பிக்க மூன்று நாட்கள் இருக்கும்பொழுது தான் ஜோஷ்வா என்னை அழைத்தார், அவர் இந்த கதை சொன்ன போது, எப்படி இந்த கேரக்டர் செய்யப் போகிறேன் எனப் பயமாக இருந்தது. அவர் சொல்லும் கதைகள் எல்லாமே கொஞ்சம் பயமாகவே தான் இருக்கும். ஜோஷ்வா எனக்கு நல்ல நண்பர், அவரும் நானும் அயனாவரத்தைச் சேர்ந்தவர்கள். என் அப்பா ஆபாவாணன் படங்கள் பற்றிச் சொல்வார், அந்த படங்கள் எல்லாம் ஒரு இம்பாக்ட் கிரியேட் செய்யும். அது போலத் தான் நான் ஜோஷ்வாவை பார்க்கிறேன். இந்தப்படம் எப்படி வரும் எனப் பயம் இருந்தது, தினமும் ஜோஷ்வாவை கேட்டுக் கொண்டிருப்பேன். இந்த மாதிரி கதைகள் கண்டிப்பாகத் திரையில் பேசப்பட வேண்டும். யுகபாரதி அண்ணன் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். லிஜோ மோல் ஜெய்பீம் படத்திலேயே பிடிக்கும், அவருடன் நடிக்க ஆவலாக இருந்தேன், ஆச்சரியமாக லாஸ்லியாவும் இருந்தார், அவரும் அட்டகாசமாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. 19 நாளில் படத்தை முடித்தது சாதனை தான். இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை லாஸ்லியா பேசியதாவது… தயாரிப்பாளர்கள் ஹரி பாஸ்கர், கோமளா மேடம் இருவருக்கும் என் நன்றிகள். எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர் ஜோஷ்வாவிற்கு நன்றி. அவர் நினைத்தது போல், இந்தக் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன், லிஜோ மோல் உடன் நடித்ததைப் பெருமையாக நினைக்கிறேன். அவர் நடிப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஹரி உடன் நடித்தது நல்ல அனுபவம், இருவருக்கும் நன்றி. ஃபிரேம் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக இருக்கும் ஒளிப்பதிவாளர் காத்தவராயனுக்கு நன்றி. கோவிந்த் வசந்தா இசை சூப்பராக இருக்கும். யுகபாரதி சாரின் வசனங்கள் அற்புதம். படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் ஆதரவு தாருங்கள் நன்றி
நடிகை லிஜோமோல் ஜோஷ் பேசியதாவது… ஜென்டில்வுமன் டைட்டில் போலவே நிறையப் பேரின் பார்வையை மாற்றுகின்ற படமாக இப்படம் இருக்கும், இந்தக் கேரக்டருக்கு என்னைத் தேர்ந்தெடுத்த ஜோஷ்வாவிற்கு நன்றி. யுகபாரதி அண்ணாவிற்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து இயக்குநர்களுக்கும் நன்றி. என் கோ ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. அனைவரும் மிக ஆதரவாக இருந்தார்கள். இந்த அற்புதமான படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி. 19 நாளில் இவ்வளவு குவாலிட்டியாக படத்தை முடிப்பது அத்தனை எளிதில்லை. இதைச் சாதித்த படக்குழுவினருக்கு நன்றி. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.
Komala Hari Pictures & One Drop Ocean Pictures நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன், PN நரேந்திர குமார் & லியோ லோகேம் நேதாஜி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் இப்படம் திரைக்கு வருகிறது.
இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம் !!
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.
இந்நிகழ்வினில்…
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். இந்தப்படத்தின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சுசீந்திரன் சாருக்கு நன்றி. இப்படத்திற்கு எங்களுடன் உறுதுணையாக நின்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு நீங்கள் தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. படம் மிக நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு இதே ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…
நிறையப் பத்திரிக்கை நண்பர்கள், இந்தப்படம் பார்த்து, சுசீந்திரன் கம்பேக் எனப் பாராட்டினார்கள், அனைவருக்கும் எனது நன்றி. இந்த படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன், அவர் தந்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி, தயாரிப்பாளர் தனஞ்செயன் சார், இந்தத் திரைப்படத்தை 200 தியேட்டர்களுக்கு மேல் கொண்டு சேர்த்தார், அவருக்கு என் நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமான், அவர் தந்த அருமையான பாடல்களுக்கும், இசைக்கும் நன்றி. நிறையப் பேர் ஒளிப்பதிவு, விளம்பர படம் போல் உள்ளதாகப் பாராட்டினார்கள், ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. ஒரு உதவி இயக்குநர் போல என்னுடன் உழைத்த எடிட்டர் தியாகுவுக்கு நன்றி. போஸ்டர் வடிவமைப்பாளர் கார்த்திக்கு நன்றி. இப்படம் நடக்கக் காரணமாக இருந்த திருப்பூர் தமிழ் மணி அண்ணாவுக்கு நன்றி. புதுமுக நாயகன் ஜெகவீர் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடிப்பார். என் நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
நடிகர் ஜெகவீர் பேசியதாவது….
இந்த நல்ல திரைப்படத்தைப் பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. என்னைப் புதுமுகமாக இருந்தாலும் என்னை வரவேற்று வாழ்த்திய அன்பு ரசிகர்களுக்கு நன்றி. என் குரு, என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் சுசீந்திரன் சாருக்கு நன்றி. என் தயாரிப்பாளர் நண்பர் விக்னேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. எங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவியாக இருந்த, தனஞ்செயன் சாருக்கு நன்றி. அற்புதமான இசையைத் தந்த இமான் சாருக்கு நன்றி. படம் பார்த்து ஊக்கம் தந்து பாராட்டிய இயக்குநர் பிரபு சாலமன் சாருக்கு நன்றி. சுமார் மூஞ்சி குமாரான என்னையும், எங்கள் அனைவரையும் அழகாகக் காட்டிய ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்காக உழைத்த அனைவருக்கும், படம் பார்த்துத் தொடர்ந்து பாராட்டி வரும் அனைவருக்கு நன்றி.
நடிகை லத்திகா பேசியதாவது….
“2K லவ்ஸ்டோரி” படத்திற்கு தந்து வரும் ஆதரவுக்கு நன்றி. இந்தப்படத்தில் பவித்ரா கேரக்டருக்கு தந்து வரும் பாராட்டுக்களுக்கு நன்றி. முதல் படத்தில் அழகான கேரக்டர் மூலம், அறிமுகப்படுத்திய சுசி சாருக்கு நன்றி. என் கோ ஆக்டர் ஜெகவீருக்கு நன்றி. இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் நன்றி. எங்கள் அனைவரையும் அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளர் ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. எங்கள் அனைவருக்கும் இதே ஆதரவைத் தொடர்ந்து தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
நடிகை ஹரிதா பேசியதாவது….
இந்தப்படத்தின் வெற்றிக்குக் காரணமான பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி. இங்கே குண்டாக இருப்பது பற்றியும், ஃபிட்டாக இருப்பது பற்றியும், ஒரு கருத்து இருக்கிறது. என் உடலை வைத்து சினிமாவில் நிறைய கமெண்ட்கள் கேட்டிருக்கிறேன், அது மாதிரியான இடத்தில் என்னை மதித்து, எனக்கு சுதந்திரம் தந்து, இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி. இந்தப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம். என் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. நாயகன் ஜெகவீர் முதல் படம் போலவே இல்லை, அவ்வளவு நன்றாக நடித்துள்ளார். எங்கள் எல்லோரையும் அழகாகக் காட்டிய ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் லத்திகா, ஹரிதா, பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தொழில் நுட்ப குழு
இயக்கம் – சுசீந்திரன் ஒளிப்பதிவு -V.S.ஆனந்த கிருஷ்ணன் இசை – டி.இமான் பாடல் வரிகள். – கார்த்திக் நேத்தா எடிட்டர் – தியாகு கலை – சுரேஷ் பழனிவேலு நடனம் – ஷோபி, பால்ராஜ் மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM) ஆடை வடிவமைப்பாளர் – மீரா போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக் தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன் தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்
முற்போக்குச் சிந்தனையாளர்களான இரட்டையர்கள் புஷ்கர் & காயத்ரி எழுத்தில் உருவான இந்த சீசன், பிரம்மா & சர்ஜுன் இயக்கத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடரில், கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்களுடன் இணைந்து லால், சரவணன், கௌரி கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், மோனிஷா பிளெஸ்ஸி ரினி, ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், கலைவாணி பாஸ்கர், மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் நடிகர் கயல் சந்திரன் ஆகியோர் கௌரவ வேடத்தில் தோன்றுகின்றனர்
சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாகத் திரையிடப்படத் தயாராக உள்ளது.
மும்பை, இந்தியா—பிப்ரவரி 19, 2025— இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற பார்வையாளர்களை புயலின் மையத்துக்குள் கடத்திச் சென்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இரண்டாவது சீசன் இன் மனதைக் கொள்ளை கொள்ளும் டிரெய்லரை வெளியிட்டது. புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி (Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிரம்மா (Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில், கதிர் (Kathir) மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க, இவர்களுடன் லால் Lal, சரவணன் Saravanan, கௌரி கிஷன் Gouri Kishan (முத்து), சம்யுக்தா விஸ்வநாதன் Samyuktha Vishwanathan (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி Monisha Blessy (முப்பி), ரினி Rini (காந்தாரி), ஷ்ரிஷா Shrisha (வீரா), அபிராமி போஸ் Abhirami Bose (செண்பகம்), நிகிலா சங்கர் Nikhila Sankar (சந்தனம்), கலைவாணி பாஸ்கர்Kalaivani Bhaskar (உலகு), மற்றும் அஸ்வினி நம்பியார் Ashwini Nambiar ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, மஞ்சிமா மோகன் Manjima Mohan மற்றும் கயல் சந்திரன் Kayal Chandran ஆகியோர் கௌரவ வேடங்களில் தோன்றுகின்றனர். சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆங்கில வசனங்களுடன் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக ஒளிபரப்பாக உள்ளது.
விருது வென்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசன், தமிழ்நாட்டின் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருவிழாவின் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் மூத்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான செல்லப்பா (லால்) மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட அந்தச் சம்பவம், கிராம மக்களை திடுக்கிடச் செய்து முழு கிராமத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது அந்த இருண்ட சூழல் அந்த கிராமத்தையும் அந்த கிராம மக்களையும் தாண்டி எல்லைகளைக் கடந்து வெகுதூரம் அதிவேகமாகப் பரவுகிறது. மர்மங்கள் நிறைந்த இனம் புரியாத இந்தக் குற்றத்தின் புதிரை விடுவிக்கும் பணியில் சக்கரை (கதிர்) ஈடுபட, நந்தினியின் (ஐஸ்வர்யா ராஜேஷ்) இன் இருண்ட கடந்த கால வாழ்க்கை நிகழ்வுகள் ஒரு நிச்சயமற்ற எதிர்கால சிறை வாழ்வை நினைவூட்டி அவளை ஆட்டிப்படைக்கிறது. இந்த விசாரணை நடவடிக்கைகள் அவர்கள் இருவரையுமே நய வஞ்சகம், மர்மம், குற்றம், சதி மற்றும் மரணங்கள் நிறைந்த ஒரு சிக்கலான புதிருக்குள் சிக்கவைத்துவிடுவதோடு ஒருவருக்கொருவர் சம்பந்தப்படாத 8 இளம் பெண்கள் இந்த கொலைக் குற்றம் தொடர்பாக முக்கிய குற்றவாளியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழ, இந்தச் சிக்கலை கட்டவிழ்க்கமுடியாத ஒன்றாக மேலும் தீவிரப்படுத்துகிறது. இந்த இருண்ட கொடூரமான கொலை நிகழ்வு அவரை முற்றிலும் அழித்துவிடும் முன்பாக இந்தக் குற்றத்தை புலன் விசாரணை செய்து தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடும் சக்கரை, வெளிப்படையான உள் நோக்கங்கள் தனிப்பட்ட பழி வாங்கல்கள், மற்றும் கடந்த கால செயல்பாடுகளை கடந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்
“சுழல் – தி வோர்டெக்ஸ் முதல் சீசனுக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது சீசன் பார்வையாளர்களை இன்னும் கூடுதலாக கவர்ந்திழுப்பதை உறுதி செய்ய எங்களது திறனளவு குறியெல்லையை இன்னும் சற்று உயரே அமைத்து அதை நோக்கிப் பயணித்தோம்,” என்று இயக்குநர்கள் பிரம்மா மற்றும் சர்ஜுன் KM. கூறினார்கள். “புஷ்கரும் காயத்ரியும் மேலும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடிய கதையை உருவாக்கி, அதனை அற்புதமாக வடிவமைத்து வழங்கியுள்ளனர் அதற்கு உயிரோட்டம் அளிக்கும் வகையில் நாங்கள் கவனமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இயக்கியுள்ளோம். ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் இணைந்து கதிர் மற்றும் ஐஸ்வர்யா, மீண்டும் ஒரு மனதை மயக்கும் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில், இயக்குநர்களாக எங்கள் பணி மிகவும் எளிதாகிவிட்டது. சுழல் – தி வோர்டெக்ஸ் உலகில் பார்வையாளர்கள் மீண்டும் ஒருமுறை தங்களை மூழ்கடித்துக்கொண்டு பரவசமடைவதை காண நாங்க ஆவலோடு காத்திருக்கிறோம் மற்றும் இந்த இரண்டாவது சீசன் அவர்களை நம்பமுடியாத அளவிற்கு ஈர்ப்பதாக உணருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.”
“தமிழ் கதைசொல்லலில் புரட்சிகரமான ஒரு புதிய பாணியை கடைப்பிடித்து நமது கலைத் துறையை உலகளவில் புகழ் பெறச்செய்து, தேசிய அளவில் பல விருதுகளை பெற்ற சூழல் – தி வோர்டெக்ஸ் தொடரின் இரண்டாவது சீசனில் சப்-இன்ஸ்பெக்டர் சக்கரையாக மீண்டும் தோன்றி நடிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இரண்டாவது சீசனுக்காக மேலும் ஒரு ஆர்வத்தை தூண்டும் பரபரப்பான பொழுதுபோக்கு கதையை வடிவமைத்த புஷ்கர் மற்றும் காயத்ரி.. இருவரும் உண்மையிலேயே தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு புரட்சிகரமான படைப்பாளிகள் . இதன் முதல் சீசன் மற்றும் அதில் நான் வெளிப்படுத்திய நடிப்பு இரண்டுக்கும் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு உண்மையிலேயே மனதளவில் என்னை உற்சாகமடையச் செய்துவிட்டது, மேலும் அனைவரும் அதே அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாக இரண்டாவது சீசனையும் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்று கதிர் கூறினார்.
“சுழல் – தி வோர்டெக்ஸ் என் மனதுக்கு நெருக்கமான பெருமைக்குரிய மறக்கமுடியாத ஒரு படைப்பாக எப்போதும் நிலைத்திருக்கும். மேலும் தொடரின் முதல் சீசனில் எனது நடிப்பிற்காக ரசிகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பு மற்றும் பாராட்டுகளில் இருந்து இன்னும் நான் மீள முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். தனது தங்கையைத் தேடிச் செல்வது தொடங்கி மறக்க நினைத்த நினைவுகளை சுமந்து மீண்டும் வாழ்க்கையை தொடர்ந்து தனக்கும், தன் சகோதரிக்கும் எதிராகச் செய்யப்பட்ட கொடூரமான குற்றத்திற்குப் பழி வாங்கியது வரையிலான நந்தினியின் பாத்திரத்தில் நடித்தது… நடிப்பது…. ஒரு முழுமையான ரோலர் கோஸ்டர் பயணமாக எளிதில் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது. இரண்டாவது சீசனிலும் அந்த பயங்கரம் அவளை விட்டு விலகுவதாக இல்லை, அவள் மற்றொரு மர்மம் நிறைந்த கொடூரமான கொலைக்கு மத்தியில் தான் சிக்குண்டுள்ளதை காண்கிறாள். முதல் சீசன் உற்சாகமளித்ததாக, பார்வையாளர்கள் கருதியிருந்த நிலையில் இந்த இரண்டாவது சீசன் அவர்கள் எதிர்பாராத அளவு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் அளிக்கும். இது உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் திரையிடப்படுவதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.” என கூறினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.