நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்ஜர் ராஜா இசையில் ‘கூழாங்கல்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.
இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன், “’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் ‘கூழாங்கல்’தான். இயக்குநர் ராம் சார் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது. எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. அதேபோல, ஸ்பிரிட் அவார்டிலும் இந்தப் படம் நாமினேட் ஆனது. இப்படி பலவற்றை இந்தப் படம் சாதித்துக் கொடுத்தது. எங்கள் முதல் படத்திற்கே இத்தனை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குநர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி. பல திரைப்பட விருது விழாக்களுக்கும் சென்ற பிறகே வெளியிட வேண்டும் என முடிவு செய்திருந்தோம். திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அதற்கான நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் சோனி லிவ் ஓடிடியில் இப்போது வெளியிடுகிறோம். மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் அறிமுகம் கிடைக்கவும் இந்தப் படம் உதவியது. இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த இயக்குநர் வினோத்திற்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்” என்றார்.
இயக்குநர் வினோத்ராஜ் பேசியதாவது, “’கூழாங்கல்’ படத்தை முடித்து விட்டு அடுத்து இதை எப்படி எடுத்து செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, ராம் அண்ணன் கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன் மேம் விக்னேஷ் சிவன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் படம் பிடித்துப் போய் பல உயரங்களுக்கு ‘கூழாங்கல்’லை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம். நன்றி!” என்றார்.
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘துருவ நட்சத்திரம்’, ‘தங்கலான்’ ஆகிய படங்களின் புதிய அப்டேட்டுகளால் உற்சாகமடைந்திருக்கும் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு, ‘சீயான் 62’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் காணொளி வெளியாகி இருப்பது மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.
வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சமீபத்தில் வெளியான “லேபில்” சீரிஸின் டிரெய்லர் திரை ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன், பொதுப்பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.
லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.
யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
பாரதிராஜா, ரக்ஷனா மற்றும் ஷியாம் செல்வம் அறிமுகத்தில் சுசீந்திரனின் திரைக்கதையில்,மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்திருக்கும் படம் மார்கழி திங்கள்.
கதை சுருக்கம்,
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் நடக்கும் கதை. பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வாழும் கவிதா. பத்தாம் வகுப்பு படிக்கும் இவருக்கும் அவருடன் படிக்கும் மாணவரான வினோத்திற்கும் படிப்பில், போட்டி வந்து, அந்த போட்டியே காதலாக மாறி நிற்கிறது ,தாத்தாவிற்கு தான் தான் உலகம் என்று நினைக்கும் கவிதா, தாத்தாவிடம் தன் காதலை சொல்ல அந்த காதலை தாத்தா சேர்த்து வைத்தாரா, அல்லது அல்லது தன் சமூகத்தின் மீதான பயத்தில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை படத்தின் திரை கதை. தாத்தாவாக பாரதிராஜா, வயது முதிர்ந்த தனது தளர்ந்த உடலாலும், குரலாலும் அந்த தாத்தாவின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிரூட்டி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் பாரதிராஜா. பேதியாக வரும் நடிகை ரக்ஷனா, கவிதாவாக வாழ முயற்சி செய்திருக்கிறார். தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அந்த வயதிற்கே உரிய காதல் ஏமாற்றம் இயலாமை ஆகியவற்றை தன் நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலனாக வரும் ஷியாம் செல்வம் எனும் மனதில் நிற்க மறுக்கிறார், காதல் காட்சிகளிலும் உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் தன்னை படத்தில் வில்லனாக காட்டிக் கொள்ள மிகவும் மெணக்கெடுக்கிறார் .,ஆனால் அவர் வில்லன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவருக்கு அந்த கதாபாத்திரம் ஒட்டவில்லை. அப்புகுட்டி படம் முழுவதும் வருகிறார் ஒரு சில வசனங்கள் மட்டும் பேசுகிறார் இன்னும் அவரை ஆழமாக அழுத்தமாகவும் காட்டி இருந்தால் அவரது நடிப்பு படத்திற்கு பலமாக இருந்திருக்கும்.
கவிதாவின் தோழியாக வரும் நக்க்ஷா படம் முழுவதும் வருகிறார் அனைவரையும் கவனிக்க வைக்கிறார். வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு இன்னும் அழகு ஊட்டி இருக்கலாம். கிராமத்தின் அழகை எடுத்துக் காட்டி இருக்கலாம். படத்தொகுப்பு இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இசை இளையராஜா ஆனால் இளையராஜாவை இசை நமக்கு ஞாபகப்படுத்தவில்லை.
படத்தின் மிகப்பெரிய பலம் கதை நடக்கும் களம் அந்த கதைகளத்தை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறார்கள் திரைக்கதையில். ஒரு சில காட்சிகள் நாடக பாணியில் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் அந்த காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு கிராமத்தின் சூழலை கையில் எடுத்த இயக்குனர் அந்த கிராம மக்களின் வாழ்க்கையை காட்டி இருக்கலாம் அந்த கிராமத்தில் கதாபாத்திரங்கள் மட்டுமே இருப்பதாக காட்டி இருப்பது சற்று நெருடலாக உள்ளது. கடைசியில் வரும் 20 நிமிட படத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம் மனதை விட்டு நீங்காமல் இருந்திருக்கும் கண்கலங்க வைத்திருக்கும். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத ஒன்று மிகவும் வலியான ஒன்று.
மார்கழி திங்கள் காதலுக்கும் சாதிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காதல் நெஞ்சங்கள்
OVEREALL RATTING——–3/5
படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகளுக்காக மட்டுமே இந்த மதிப்பெண்
CHENNAI, India, Oct 27, 2023— In a remarkable display of talent and determination, NS Akshaya and V Divya, both hailing from Tamil Nadu, achieved international recognition by representing India at the prestigious Asia Rugby U18 Sevens Championship 2023. Their exceptional performance at this global sporting event earned them a well-deserved silver medal, highlighting the excellence of Indian rugby on the world stage.
Akshaya and Divya’s journey into rugby began with their participation in the transformative Sports for Change initiative, a program under HCLFoundation, which delivers the corporate social responsibility agenda of HCLTech in India. The duo made the transition to rugby from kho-kho under the coaching of Guna Sekaran Kumar, a certified rugby coach. Their performance at national tournaments representing Tamil Nadu between 2021 and 2023 caught the attention of selectors, earning them places among the top 27 rugby players in India.
“Making it to the national team was an exceptional feat and hearing our national anthem play during the award ceremony was a moment I’ll forever hold dear,” said V Divya,who playsas the fly-half for the team and is pursuing Bachelor of Science in Sports Biomechanics and Kinesiology.
“Empowering lives through education, sports and holistic development is not merely our mission, but a steadfast commitment to creating a brighter, more inclusive future. At HCLFoundation, we believe in the transformative power of education and sports to uplift communities and foster sustainable growth. Through innovative initiatives, we strive to address critical social challenges, ensuring that individuals have the tools and opportunities they need to thrive and no one is left behind,” said Dr. Nidhi Pundhir, Vice President, Global CSR, HCLFoundation.
Ahead of the Asia Rugby U18 Sevens Championship 2023, Akshaya and Divya underwent a rigorous 45-day training program at KIIT University, Bhubaneshwar, which helped them earn spots in the national rugby team.
From tailored nutrition plans to logistical assistance on and off the field, HCLFoundation’s holistic approach ensured that Akshaya and Divya had every opportunity to excel.
Aims to cover 25,000 ha of land and reach 35,000 farmers across India by 2025.
Engineered with revolutionary TurbuNext™ Technology for multi-season and multi-crops applications.
Mumbai, 27 October 2023: Netafim India, a leading smart-irrigation solution provider, has launched its groundbreaking product, Toofan, an innovative irrigation technology that promises to transform farming for growers of all scales. Through this product, the company aims to cover 25,000 ha of land and reach 35,000 farmers by 2025 across India to revolutionize sustainable farming. The innovative system with best-in-category anti-clogging technology ensures optimal delivery of water and nutrients. The drip line is 40% more strong with greater tensile strength. Toofan by Netafim India is 20% more affordable than the existing and available thin wall, non-pressure-compensated (NPC) drip lines in the Indian market.
Toofan by Netafim India not only makes modern, efficient irrigation accessible to all but also offers a simplified buying process that transcends subsidy limitations. The cost-effective drip technology is now available to farmers of all scales, from large to small holdings, regardless of subsidy eligibility. The drip line is engineered for swift deployment, allowing farmers to cover up to 10 acres in a single day. This revolutionary feature saves both time and resources.
The digital launch concluded on the social media platforms of Netafim India and witnessed the interest of 10 Lakh farmers and dealers. Mr. Randhir Chauhan, Managing Director, Netafim India and Senior Vice President, Netafim Ltd., unveiled the product during the virtual launch. Toofan by Netafim India is an economical choice engineered with revolutionary TurbuNext™ technology and offers unparalleled durability, thus helping farmers achieve better crop yields. The technology is available for any row crops on flat topographies.
Speaking about the launch, Mr. Randhir Chauhan, Managing Director Netafim India and Senior Vice President Netafim Ltd., said, “Netafim India aims to provide an affordable, high-performance micro irrigation system that not only ensures consistent and uniform yields but also aids in reducing the operational costs of farmers. As a farmer’s anthropologist, we understand the dynamics of Indian agriculture and continuously work to bring solutions that meet the evolving needs of our growers. We are proud to be a part of India’s agricultural growth story and committed to bring innovations that transform the lives of farmers. We are delighted to set new standards in clog resistance and enhance Agri performance with Toofan driplines. Netafim’s Toofan is set to reshape the agriculture landscape, empowering farmers to embrace modern irrigation practices without subsidy constraints and offering an unprecedented installation speed. Our revolutionary patented technology is a testament to our commitment to support one of the largest sectors contributing to Indian GDP”.
Regardless of the water quality, Toofan by Netafim India provides lower flow rates with a large filtration area and ensures a consistent water flow to the crops. The TurbuNext™ dripper labyrinth moves the debris out of the dripper, thus preventing clogging. It maintains a unique geometric tooth-shaped structure that increases turbulence. The lower flow rates allow longer lateral lengths and fewer sub-main pipes and connectors. Thus, ultimately saving on system and labor costs per hectare by 20% and 25%, respectively.
This multi-seasonal system is useful for surface or subsurface (SDI) applications. It promises to usher in a new era of agricultural efficiency and empower Indian farmers for sustainable and quality cultivation. This revolutionary product is available in a convenient 600-meter bundle with a 16 mm diameter and dripper flow rates ranging from 1.0 L/H to 2.2 L/H. With Toofan, farmers will experience a remarkable 40% increase in strength, heightened tensile strength, crack resistance, high elongation properties, and enhanced UV resistance, which extends the product’s lifespan.
OCTOBER, CHENNAI: Super Star Academy, a premier educational institution at Agaram, Chennai, held the Convocation function recently with a big gathering of academicians and students gracing the event. Dr P Umamageswari, Principal & Founder, gave an overall view of the academic activities of the Super Star Academy and outlined the future course of action going forward. R Nagalingam, Correspondent, Super Star Academy, also spoke on the academic and other related activities of the institution. M V M Velmurugan, Chief Executive Officer, Velammal Educational Trust, who was the chief guest, also chaired the function. R L Arun Prasad, IRS, Joint Commissioner, Income Tax Department, Government of India, who was also another chief guest, presented the keynote address. R Chandrasekaran, MD, RC Golden Granites Private Ltd, Treasurer-IMPA, Founder & President-IBN, was the guest of honour. The academy, run by Dhivya Educational and Charitable Trust, is known for imparting quality training in Montessori methods of education through offline and online. This is a very economical international course where students learn how to educate children in Montessori schools armed with a strong and comprehensive course material and expert faculty. With almost two decades of rich experience in the field of preschool education and teachers’ training, the academy has trained thousands of teaching professionals till now. Indeed, the academy boasts of getting placements for thousands of students who have undergone training there in educational bodies in India and across the globe. The Education Management Course of Super Star Academy is backed by job-oriented and professional certificates apart from offering a rich guidance to the students to chart out a rewarding career in the academic world.
“Plastic has become an immortal material in the environment and inevitable one in day to day life. As a need of the hour this exhibition would be the first of its kind where live demo of making of plastic products would be facilitated and best practices in recycling each product would also be explained to visitors to bring awareness.” Says Dr.Asutosh Gor, Co –Chairman PVI 2023 in the press meet of PLASTIVISION INDIA 2023 organized by THE ALL INDIA PLASTICS MANUFACTURERS ASSOCIATION (AIPMA). Plastic is a harmless substance by itself. But the littering of plastic is dangerous in many ways which has to be managed by people. It is worth to mention that our country is recycling nearly 75% of plastic and is setting a good example to others. This makes India rich in raw materials for plastic manufacturing. “Although India has abundance of raw material and potential in manufacturing plastics, there is still an import of finished plastic products of worth nearly 35,000 crores. This importing has to be eradicated so that we can promote ‘Make in India’ and create more sustainable market. AIPMA, a strong association with more than 25000 members are keen in achieving it” he added “The GDP of our nation is 8% and within that 16% is contributed by plastic industries. Many MSME’s are mostly plastic industries. This is only because of flexibility in investment. Anyone with 2 lakh can start a plastic company meanwhile one can invest in crores as either has got a market and demand in specific. There are around 1.25 lakhs of plastic industries with nealy 52 lakhs of employees. Plastivision India 2023 is a platform for developing global business for large corporate companies and also MSME & Start-ups. “Says Shri M Babu, President ,All Pondicherry Plastics Traders and Manufacturers Association.
PLASTIVISION INDIA 2023 exhibition will be held between 07 th to 11 th of December 2023 at the Bombay Exhibition Centre, Goregoan, Mumbai. The venue is very well connected with Metro, local train and surface transport. Hence more than 2.50 lakhs visitors from across the world are expected for this exhibition This 12th edition of the plastic exhibition, considered as one of the top 5 exhibitions in the world has fully booked for stall slots before 6 months. More than 30 countries have confirmed their participation in this five day exhibition which will also witness new technology and live machinery. More than 1500+ exhibitors from different segments of the industry have booked their stalls in the well facilitated modern fairground occupying the entire premises consisting of 125,000 sq.mtrs . During the exhibition period, a number of technical conferences & B2B meetings have been organized which will offer new trends and technologies being used by market leaders. PLASTIVISION INDIA 2023 has specialized pavilions with focused exhibitors:- Plastics in Agriculture, Automation, Die & Mold, Recycling (Waste To Wealth), Plastics in Medical & Health Care, Finished Products, Job-Fair Consultants Clinic
Team PLASTIVISION INDIA has rolled out a huge visitor promotion campaign all over India and in foreign countries by organizing more than 40+ road shows to attract more than 250,000 business visitors.
Recognized by UFI, an international exhibition apex body, and approved by the Government of India, PLASTIVISION INDIA 2023 is also approved Ministry of Chemical & Fertilizers – Department of Chemical & Petrochemical, Ministry of Micro, Small & Medium enterprises, Government of Maharashtra and Make In India. PLASTIVISION INDIA 2023 will propel growth in plastic industry, bring technology, promote exports, promote employment and create awareness of plastics recycling and waste management and contribute in nation building. More Details on www.plastivision.org.
Chennai, 27 st October 2023: BNI (Business Network International), the world’s leading business referral organization hosted SYNERGY 23, the biggest networking event in Chennai.
This is the 9th edition of SYNERGY, and this edition themed as ‘Giving Direction to Life’ signified the beautiful transformation that entrepreneurs and their businesses undergo during the most challenging times. The event registered a strong attendance of 1500 plus entrepreneurs primarily BNI members from Tamil Nadu and other business owners including industry stalwarts from across the country. Eminent Entrepreneurs were also recognized during the event including Speaking at the event, Mr. Sunil Sethia, Executive Director BNI Chennai South & Chennai CBDB said, “Entrepreneurs are the Engines of the Economy” The opportunity to network and collaborate was the principle focus at SYNERGY 23. The business expo had 102 Engagement Booths that helped BNI members and visitors to experience the products and services presented with increased opportunities for referral exchange. With 11092 chapters across 79 countries, BNI members generated 20.06 Billion USD in 2022. BNI provides a global business network that remains unmatched with the members getting increased business through quality referrals. Chennai region with 20 chapters and 1050+ members is one of the fastest growing region both in business terms and categories of business. Regional Director Mr. Ajeeth Nahar, who has been at the forefront of increasing the footprint of BNI in Chennai and beyond, pointed the opportunities and business growth in the suburbs of mega-cities. This has prompted BNI to launch new chapters in the months to come where local business can attain global reach. The Mission of BNI is to help BNI members increase their business through a structured, positive and referral marketing program that enables them to develop long term, meaningful relationships with quality business professionals. The evening at SYNERGY 2023 showcased the recognition that BNI members received for their outstanding contributions as entrepreneurs and innovative thinkers. There were 150 awards presented across 20 categories that set new benchmarks of innovative thinking and leadership.
‘துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வின் முதல் பதிப்பில், DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா மற்றும் பாலிவுட் நடிகை த்ரஷ்தி தாமி ஆகியோர் பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டனர்.
ZEE5 தளம் அதன் உள்ளடக்கத்தில் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் அயலி, ஜன்ஹித் மெய்ன் ஜாரி, சத்ரிவாலி, ஹெல்மெட், அபார் ப்ரோலாய், அர்த் போன்ற பல படைப்புகளைக் கொண்டுள்ளது.
ZEEL இன் OTT பிரிவின் ஒன்றாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த #ZEE5GameChangers நிகழ்வை அறிவித்துள்ளது. புது தில்லி தலைமையகத்தில் பெண் காவல் துறையுடன், ‘துரங்கா சீசன் 2’ இன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து இந்த பிரச்சார நிகழ்வைத் தொடங்கினர். இந்நிகழ்வில் பிரபல நடிகர்களான அமித் சாத், த்ரஷ்தி தாமி, முன்னணி இயக்குநர் ரோஹன் சிப்பி மற்றும் ZEE5 இன் AVOD மார்க்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட அமலாக்கத் துறையில் பெண்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஆலோசித்து உரையாடினர்.
ஒரு பெண் காவலரின் கதையுடன் அடையாள திருட்டு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, வரவிருக்கும் உளவியல் த்ரில்லர் ‘துரங்கா 2’ சீரிஸ் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மாதிரியான கதைகளுடன், பல்வேறு மொழிகளில் மற்றும் வடிவங்களில் இன்றைய சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் படைப்புகளை, பொழுதுபோக்கின் வழியே ZEE5 எப்போதும் வழங்கி வருகிறது. ரசிகர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் #ZEE5GameChangers நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக அழுத்தமான தைரியமான மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லல் மூலம் மாற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், பொருத்தமான கருப்பொருள்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ZEE5 முயல்கிறது. காவல்துறைப் பணியாளர்களின் அனுபவங்களையும் பயணத்தையும் பகிர்ந்து கொண்ட DCP PRO சுமன் நல்வா, துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமியுடன் இந்நிகழ்வில் இது குறித்த உரையாடலில் ஈடுபட்டார்.
டெல்லி காவல்துறை DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா கூறுகையில்.., “சமூக அக்கறையுடன் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்புகளை ZEE5 வழங்கி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, பார்வையாளர்களை மிக ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் திறனை ZEE5 கொண்டுள்ளது. ZEE5 பெண் காவலர்களின் பணியை அங்கீகரித்துப் பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தில்லி காவல் படையின் பெண் காவலர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் அதைக் கடந்து சவாலான பணிகளைச் செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் இம்மாதிரியான பாராட்டுக்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் நகரத்திற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அதிகரிக்கிறது.
ZEE5, AVOD மார்கெட்டிங் தலைவர் திரு. அபிரூப் தத்தா கூறுகையில்.., “ZEE5 இல், கல்வி மற்றும் சமூக அக்கறைமிக்க புதுமையான படைப்புகளில் முதலீடு செய்வதே எங்கள் முக்கிய நோக்கமாகும். கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், நுகர்வோரை மையமாகக் கொண்ட பிராண்டாக நிஜ வாழ்க்கை சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போதைய மாறிவரும் சமூகத்தில் கதைசொல்லலின் உருமாறும் சக்தியை நாங்கள் நம்புகிறோம், மாறுபட்ட கதை சொல்லலின் வழியேவும், அதனைச் சந்தைப்படுத்தும் முயற்சிகள் மூலமாகவே நாம் பரந்த பார்வையாளர்களை இணைத்து, அவர்களிடம் கல்வி மற்றும் பல கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை அங்கீகரிக்கிறோம். #ZEE5GameChangers மூலம், தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எங்கள் பார்வையாளர்களுடன் இணைந்து, அனைவரும் தொடர்புகொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது போன்ற ஒவ்வொரு முயற்சியிலும், முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை உருவாக்குவதையும், எங்கள் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் தரமான கதைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமி கூறுகையில்.., “துரங்கா சீரிஸில் எனக்கு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி, தற்போது #ZEE5GameChangers முயற்சியால் டெல்லி படையில் உள்ள இந்த துணிச்சலான நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் / பெண் போலீஸ் அதிகாரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி. இந்த விதிவிலக்கான பெண்களின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உத்வேகப் பயணங்களைச் சுற்றியுள்ள முக்கியமான உரையாடல்களைத் தூண்டும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான கருத்துகளை உடைத்து, குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துவது, சமூகத்திற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் அவர்களின் கதைகள் கேட்கப்பட வேண்டும் மற்றும் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.”
ZEE5 சமூ விழிப்புணர்வு கொண்ட அழுத்தமான கதைகளை அனைத்து மொழிகளிலும் வழங்கி வருகிறது உள்ளடக்கத்தை வழங்கி, ஒரே மாதிரியான கருத்தாக்கத்தை உடைத்து, பார்வையாளர்களை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தைத் தூண்டுவதற்கும் முக்கியமான உரையாடல்களைத் தொடங்குகிறது. அந்த வகையில் துரங்கா முதல் சீஸனானது 8 எபிசோடுகள் கொண்ட வெப்-சீரிஸ் ஆக ஆகஸ்ட் 2022 இல் வெளியிடப்பட்டது. இதனை ரோஸ் ஆடியோ விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த சீரிஸில் அமித் சாத், த்ரஷ்தி தாமி மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர். இது மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து தொகுக்கப்பட்ட ஒரு வசீகரமான காதல் கதையை வழங்குகிறது. ரோஹன் சிப்பி இயக்கியுள்ள, துரங்காவின் சீசன் 2 அக்டோபர் 24, 2023 அன்று திரையிடப்பட்டது. இந்த சீசனில், இன்ஸ்பெக்டர் ஐரா தனது கணவரின் இருண்ட கடந்த காலத்தை ஆராய்வதால், ரசிகர்கள் மேலும் பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் எதிர்பார்க்கலாம்.
ZEE5 பற்றி ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.