முன்னணி நடிகர் தனுஷ் “DCutz By Dev” சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார் !!
DCutz By Dev” சலூனை திறந்து வைத்த முன்னணி நடிகர் தனுஷ்
முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் , “DCutz By Dev” எனும் பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார். இந்த சலூனின் திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்களும், தொழில்முறை நிபுணர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தேவ், தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்குத் தனி ஸ்டைலை கட்டமைத்தவர். தனிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவரது திறமை மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது, தனது திறமையையும், தனித்த ஸ்டைலையும் “DCutz By Dev” மூலம், பரந்த அளவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறார்.
DCutz By Dev அதன் அதிநவீன வசதிகள், நிபுணத்துவ ஸ்டைலிஸ்டுகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புடன் சிகை அலங்காரம் மற்றும் அழகுபடுத்தலை இன்னும் விரிவாகக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த சலூன் இப்போது பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்
சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், துள்ளலான காதல் பாடலாக, இப்பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வேகத்தில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
இறுதி கட்டப் பணிகள் முடிந்த நிலையில், படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்
ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசியதாவது… கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. செருப்புகள் ஜாக்கிரதை மிக வித்தியாசமான சீரிஸ், மத்த வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் எழுதவே மிகவும் அதிக டைம் எடுத்தது. 2 மணி நேரத்தை ஒரு சீரிஸாக கொடுக்கும் முயற்சி தான் இது. இனி தொடர்ந்து ZEE5 ல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி சீரிஸ் வரும். அந்த வகையில் செருப்புகள் ஜாக்கிரதை முதல் புராஜக்ட். மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம், ராஜேஷ் சூசைராஜ் ஐந்தாம் வேதம் முதலே தெரியும் மிகத் திறமைசாலி, இந்த சீரிஸை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அரவிந்தன், ராஜேஷ் சூசை ராஜ் ஆகியோருக்கு நன்றி. இந்த மாதிரி கதை நீங்கள் தான் நடிக்க வேண்டும், என்றவுடன் உடனே ஓகே சொன்ன சிங்கம்புலி அண்ணாவுக்கு நன்றி. ஐந்தாம் வேதம் சீரிஸில் என்னை ரொம்பவும் இம்ரெஸ் செய்தவர் விவேக் ராஜகோபால், மிக எளிதாக நடிப்பால் நம்மை அவர் பக்கம் ஈர்த்து விடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். ஐரா அகர்வால் மொழி தெரியாமலே டப்பிங் செய்துள்ளார், வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி. வேற வேற ஜானர்களில் ZEE5லிருந்து பல படைப்புகள் வரவுள்ளது. உங்களுக்குப் பிடித்தமாதிரி படைப்புகள் தொடர்ந்து வரும். ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது… முன்னதாக மதில் எனும் ஓடிடி படைப்பைத் தயாரித்துள்ளோம், இப்போது செருப்புகள் ஜாக்கிரதை உருவாக ஆதரவாக இருந்த ZEE5 கௌசிக் நரசிம்மனுக்கு நன்றி. இந்தக் கதை சிறப்பாக வர வேண்டும் என்றால் சிங்கம் புலி தான் வேண்டுமென நினைத்தோம், எங்களை நம்பி வந்த சிங்கம்புலி சாருக்கு நன்றி. இந்த அருமையான கதையைத் தந்த எழுச்சூர் அரவிந்தன் அவர்களுக்கு நன்றி. இந்த கதையைத் திரையில் உயிர்ப்பித்த ஒளிப்பதிவாளர் கங்காதரனுக்கு நன்றி. இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் மிக அற்புதமாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் கங்காதரன் பேசியதாவது… இந்த வாய்ப்பைத் தந்த ராஜேஷுக்கு நன்றி, ராஜேஷ் மிக நெருங்கிய நண்பர், இதை ஒப்புக்கொண்ட கௌஷிக் சார், சிங்கார வேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி அண்ணா முழு ஒத்துழைப்புத் தந்தார், அவருக்கு என் நன்றிகள். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. அனைவரும் இந்த சீரிஸ் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர்கள் எல் வி முத்து & கணேஷ் பேசியதாவது… இந்த வெப் சீரிஸ் ZEE5 உடன் இரண்டாவது படைப்பு, அவர்களுக்கு எங்கள் நன்றி. இதில் வாய்ப்புத் தந்த சிங்காரவேலன் சாருக்கு நன்றி. நண்பர் ராஜேஷ் அருமையான காமெடி டைரக்டர். சிங்கம்புலி அண்ணாவைத் திரையில் பார்த்தாலே சிரிப்பு வரும், அருமையாக நடித்துள்ளார். விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் எல்லோருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அவர்கள் நடிப்புக்கு இசையமைப்பது எளிதாக இருந்தது. ராஜேஷ் அருமையாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். இந்த சீரிஸ் வெளியாகியுள்ளது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
கதை வசனகர்த்தா எழுச்சூர் அரவிந்தன் பேசியதாவது… நண்பர் கௌஷிக்கும் நானும் 22 வருட நண்பர்கள். நல்ல காமெடி கதை வைத்திருக்கிறீர்களா எனத் திடீரென கேட்பார், அடுத்த விவாதத்தில், 2 வாரத்தில் துவங்கி விடும். கே எஸ் ரவிக்குமார் நடிப்பில், மதில் ZEE5 க்காக எழுதினேன், உடனே கே எஸ் ரவிக்குமார் டீமில் எழுத்தாளாராக சேர்ந்து விட்டேன், அடுத்து இந்த சீரிஸில் நடித்த விவேக் ராஜகோபால் நண்பர் படத்தில் இப்போது வேலை செய்கிறேன். இப்படி புதுப்புது வாய்ப்புகள் ZEE5 மூலம் கிடைத்துள்ளது. எப்போதும் எனக்கு உதவும் குணமுள்ளவர் தயாரிப்பாளர் சிங்காரவேலன், என்ன வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஒரு போன் செய்தால் செய்து விடுவார். ராஜேஷ் மகா உழைப்பாளி, மிக அருமையாக உழைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இந்தக்கதையின் முக்கிய தூண் சிங்கம்புலி அண்ணன், அவர் நடிப்பைப் பார்த்தாலே சிரிப்பு வரும். இதில் எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார். எல்லா நடிகர்களும் மிக நன்றாக நடித்துள்ளனர். இந்த படைப்பில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ZEE5 ல் இன்னும் தொடர்ந்து நிறையக் கதைகள் செய்ய ஆசைப்படுகிறேன், நன்றி
ஐரா அகர்வால் பேசியதாவது… மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது நான் நடித்த வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. ZEE5 கௌசிக் நரசிம்மன் சார், தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. வாய்ப்பு தந்த ராஜேஷ் சாருக்கு நன்றி. நான் நடித்ததில் எந்த படத்திலும் இந்தளவு சந்தோஷமாக இருந்ததில்லை, இந்த ஷூட்டிங் ஸ்பாட் வெகு கலகலப்பாக இருந்தது. டைரக்டர் ராஜேஷ் மிகமிக அமைதியானவர், அற்புதமாக உருவாக்கியுள்ளார். சிங்கம் புலி சார் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். கங்காதரன் சார் எனக்கு முழு ஆதரவு தந்தார். எல்லோரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் விவேக் ராஜகோபால் பேசியதாவது… முதலில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி, மதில் படைப்புக்கு முழு ஆதரவு தந்தீர்கள், அதனால் தான் இங்கு நான் நிற்கிறேன். செருப்புகள் ஜாக்கிரதை படைப்புக்கும் முழு ஆதரவு தாருங்கள். ZEE5 க்கு நன்றி. முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி சார் அவ்வளவு சேட்டை, லவ்லி ஹியூமன், எல்லோரையும் சிரிக்க வைப்பார் என்ன கேட்டாலும் சொல்லித் தருவார். இயக்குநர் ராஜேஷ் என்னிடம் நிறையக் கதை சொல்லியுள்ளார், எனக்கு வாய்ப்பு வந்தால் உன்னைக் கூப்பிடுவேன் என்றார். மை டார்லிங்க் ராஜேஷ் சாருக்கு நன்றி. இதில் நடித்த அனைவருக்கும் நன்றி. இந்த படைப்பிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் பேசியதாவது… முதல் நன்றி ZEE5 கௌசிக் நரசிம்மன் சாருக்கு தான், அவர் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது, ஐந்தாம் வேதம் மூலம் தான் அவர் அறிமுகம் கிடைத்தது. அவரது சினிமா அனுபவம் கற்றுக்கொள்ள வேண்டியது, என்ன சந்தேகம் கேட்டாலும் எளிதாகத் தீர்த்து விடுவார். அவருக்கு என் நன்றி. அவர் தான் சிங்காரவேலன் சாரிடம் அனுப்பி வைத்தார், தயாரிப்பைத் தாண்டி மிக நல்ல மனிதர். கௌசிக் சார், சிங்காரவேலன் இருவரால் தான் நான் இயக்குநர் இருவருக்கும் நன்றி. சிங்கம் புலி சார் டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள், ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை, மிக மிக இனிமையான மனிதர், மிக அருமையாக நடித்துள்ளார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண், ஷூட்டிங்கில், எங்களை விட அவர் நிறைய ரீல்ஸ் எடுத்துள்ளார். டார்லிங்க் விவேக், ஐந்தாம் வேதத்தில் அவர் நடிப்பு பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தக்கதை ஒகே ஆனவுடன் அவரைத்தான் அழைத்தேன், நன்றாக நடித்துள்ளார். நான் அசோஷியேட்டாக வேலை பார்த்த போது, கங்காதரனும் அசோஷியேட், நான் இயக்குநர் ஆனால் நீ தான் கேமராமேன் என்றேன் ஆக்கிவிட்டேன். இதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த சீரிஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் சிங்கம்புலி பேசியதாவது… ZEE5 நிறுவனத்திற்கு முதல் நன்றி. தயாரிப்பாளார் சிங்காரவேலன் அவர்களுக்கு நன்றி. அரசாங்கம் எல்லோரையும் மொத்தமாகப் பால் வாங்கி வைக்கச் சொன்னார்கள் அல்லவா? அப்போது ஆரம்பித்தது இந்த சீரிஸ். எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தன் பேச பேச காமெடியாக இருக்கும் அவரிடம் அத்தனை கதை இருக்கிறது. அவர் இன்னும் உயரம் தொட வேண்டும். தயாரிப்பாளர் இன்னும் அப்பாவியாக இருக்கிறார், கங்காதரன் நான் கருப்பன் செய்யும் போது, அவர் அஸிஸ்டெண்ட், இதில் அவர் ஒளிப்பதிவு எனும் பொது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதன். விவேக் ராஜகோபால் மிகப்பெரிய திறமைசாலி. மிக நன்றாக நடித்துள்ளார். ஐரா மிக அழகானவர் மிகத்திறமைசாலி. இந்த சீரிஸில் நடித்த அனைவரும் மிகத் திறமையானவர்கள் நன்றாகச் செய்துள்ளார்கள். ZEE5 எங்கள் எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செருப்பு, டெட்பாடி, இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதையை எழுதியுள்ளார்கள். ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த டீமுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் எம் ராஜேஷ் பேசியதாவது… புதிய இளமையான டீம், செருப்புகள் ஜாக்கிரதை டைட்டிலே மிக அழகாக இருக்கிறது. ZEE5 அடுத்தடுத்து நிறைய புராஜக்ட் செய்யப்போவதாக கௌஷிக் சொன்னார், அது நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பைத் தரும் அதற்காக அவருக்கு நன்றி. சிங்காரவேலன் என் நெருங்கிய நண்பர், அவருக்கு வாழ்த்துக்கள். சிங்கம்புலி அண்ணாவுடன் கடவுள் இருக்கான் குமாரு வேலை பார்த்தேன், ஆனால் மாகாராஜா பார்த்து அவர் மீது பயமே வந்து விட்டது, அவர் வந்து பேசியபிறகு தான், நம்ம அண்ணன் என்ற உணர்வு வந்தது, இப்படி ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்தது அருமை, அவர் திறமை பெரிது. அவருக்கு வாழ்த்துக்கள். விவேக் ராஜகோபால் நன்றாக நடிக்கிறார். இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சீரிஸ் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.
ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், இரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சேவல் ராம், டாக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
28 மார்ச் முதல் ZEE5 ல், செருப்புகள் ஜாக்கிரதை சீரிஸை பார்த்து மகிழுங்கள்!!
‘மாடர்ன் மாஸ்ட்ரோ ‘ யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான ‘ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு வழங்கி வருகிறார்கள்.
உறவுகள் குறித்த உளவியல் சிக்கலில் தவிக்கும் காதலர்- அவரை காதலிக்கும் காதலி- இந்த ஜோடி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ரசனையாகவும், உணர்வுபூர்வமாகவும் விவரிக்கும் படைப்பாக ‘ஸ்வீட் ஹார்ட்’ இருந்ததால்… ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து தங்களது ஆதரவினை வழங்கி வருகிறார்கள். அதிலும் யுவன் சங்கர் ராஜாவின் வசீகரிக்கும் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவரப்பட்ட ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையரங்கத்திற்கு வந்து தங்களின் மகிழ்ச்சியை உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
ரசிகர்களின் வரவேற்பினை கண்டு சந்தோஷமடைந்த படக் குழு, கடந்த 19 ஆம் தேதியன்று ஈரோடு – ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும், சேலம் – டி என் சி திரையரங்கத்திற்கும், கோவை – பிராட்வே திரையரங்கத்திற்கும், திருப்பூர் – ஸ்ரீ சக்தி திரையரங்கத்திற்கும் நேரடியாக சென்று ரசிகர்களின் வரவேற்பினை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அத்துடன் படக் குழுவினரை நேரில் சந்தித்த ரசிகர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டு, படத்தைப் பற்றிய தங்களுடைய எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து படக்குழு இருபதாம் தேதியன்று மதுரை – வெற்றி திரையரங்கத்திற்கும், திருச்சி – எல்.ஏ சினிமாஸிற்கும் சென்று ரசிகர்களை சந்தித்தனர். இந்நிகழ்வுகளில் ரசிகர்கள் பலரும் கதையின் நாயகனான ரியோ ராஜையும், நாயகி கோபிகா ரமேஷையும் வெகுவாக பாராட்டினார்கள். அதிலும் ஒரு ரசிகை ரியோ ராஜை கண்கலங்க பாராட்டியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.
தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால்.. படக்குழு மகிழ்ச்சியடைந்திருக்கிறது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை கருவுறுதல் மையங்கள் பற்றி நமக்கு அதிக அளவில் தெரியாது.
ஆனால் இன்று பல இடங்களில் செயற்கை கருவுரு மையங்கள் அதிக அளவில் இருக்கிறது.
இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கறுவுரு மையங்களுக்கு சென்றால்தான் குழந்தை பெத்துக்க முடியும் என்ற நிலை உருவாகி விடுமோ?
செயற்கை கருவுறுதல் என்ற விஷயத்திருக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் க்ரைம் அம்சத்தை சொல்லி இருக்கிறது இந்த ட்ராமா திரைப்படம்.
கதாநாயகன் விவேக் பிரசன்னா, கதாநாயகி சாந்தினி தமிழரசன், இருவரும் திருமணம் நடந்து பல ஆண்டுகள் பிறகு கர்ப்பம் அடையும் நிலையில் மிக சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், ஒரு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை உன் கணவர் கதாநாயகன் விவேக் பிரசன்னா கிடையாது, என்ற உண்மை கூறி வருவதோடு, அதே போன் கால் மூலம் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று அனுப்பி 50 லட்சம் பணத்துடன் வரவேண்டும் என அந்த மர்ம நபர் மிரட்டுகிறார். ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து மகள் பூர்ணிமா ரவி, தனது காதலன் பிரதோஷ் மூலம் கர்ப்பமடைந்து ஏமாற்றப்பட்டு காதலன் பிரதோஷின உண்மையான முகம் பற்றி தெரிந்து கொண்டு தன் காதலன் பிரதோஷ் உடன் சேர்ந்து வாழவே கூடாது, என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த இரண்டு கதைகளிலும் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அதில் இருந்து மீண்டார்களா?, மீளவில்லையா?, இந்த இரண்டு பெண்கள் வாழ்க்கையில் நடந்த பாதிப்புக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதுதான் இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தில் கதாநாயகனாக விவேக் பிரசன்னா, நடித்திருக்கிறார்.
கதாநாயகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பை கொடுத்து பல உணர்வுகளை மிக அருமையாக நடித்திருக்கிறார்.
தன்னால் தன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கொடுக்க முடியாது என தன்னிடம் உள்ள குறைபாடு தான் காரணம் என்பது தெரிந்திருந்தாலும், அதை தன் மனைவியிடம் இருந்து மறைப்பது, அதனால் தன் மனைவிக்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு ஆகியவற்றை எண்ணி வருந்துவது என தனது நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
இந்த ‘ட்ராமா’ திரைப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி தமிழரசன், நடித்துள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் சாந்தினி தமிழரசன், குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம், குழந்தை இல்லாத ஏக்கம், தன் கர்ப்பமடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம், அதன் பிறகு கர்ப்பத்தால் மிகப்பெரிய அளவில் உருவாகும் பிரச்சனை என பல காட்சிகளில் மிக அழுத்தமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
மற்றொரு இளம் ஜோடி நடித்திருக்கும் பிரதோஷ், அவரது காதலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணிமா ரவி இருவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகன் விவேக் பிரசன்னாவின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்த் நாக் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்ஜீவ் நடிப்பிலும் எந்த ஒரு குறையில்லாமல் நடித்திருக்கிறார்.
மறைந்த மாரிமுத்து, பிரதீப் கே.விஜயன், ரமா என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையோட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு மிகப்பெரிய அளவில் திரைப்படத்தின் தரத்தை உயர்த்துள்ளது. இசையமைப்பாளர் ஆர்.எஸ். ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக பயணித்திருக்கிறார்.
மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக கதையை வைத்து திரைக்கதை சுவாரஸ்யமாக அமைத்து, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன்,
மூன்று கதைகள் மூலம் தான் சொல்ல வந்த கருத்தை மிக வித்தியாசமாகவும் அருமையாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்,
ZEE5 தளம் மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில், பிரம்மாண்டமான காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது!
~ “சங்கராந்திகி வஸ்துனம்” அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான இப்படத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் வெங்கடேஷ் டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி, மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் ~
~ இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பை குவித்த பிறகு ZEE5 இல் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. அதே நேரத்தில், ZEE தெலுங்கு தொலைக்காட்சியில் மார்ச் 1, 2025 அன்று மாலை 6 மணிக்கு முதன்முதலில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட்டது ~
இந்தியா, 1 மார்ச் 2025: ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, அற்புதமான காமெடி, பழைய நினைவுகள், ஞாபகங்கள் மற்றும் குடும்ப உறவுகளை கொண்டாடும் அருமையான கதை ஆகியவற்றிற்காக பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில், வெங்கடேஷ் டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்கள் பெற்றது.
இந்தத் திரைப்படம் ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை அழுத்தமான காமெடியுடன் பரபரப்பான ரோலர் கோஸ்டராக சொல்லியது. “YD ராஜு” என்ற ஓய்வு பெற்ற காவலர் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டகுபதி, “பாக்யலக்ஷ்மி” (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் அவரது முந்தைய காதலியாக “மீனாட்சி” (மீனாட்சி சௌத்திரி) கதையின் மைய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒரு பிரபல பிஸினஸ்மேன் கடத்தப்படுகிறான், இதனால் ராஜு மீண்டும் தனது கடந்தகால ஆக்சன் அவதாரத்தில் இறங்கி, அந்த பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. குடும்பம், காதல், காமெடி அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்து பரபரப்பான திரைக்கதையுடன் அருமையான என்டர்டெயினராக இப்படம் உருவாகியிருந்தது.
“சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி கூறுகையில்.., “இந்தப் படத்தை ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சி, அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது, மிகுந்த உற்சாகம் தருகிறது. இந்த படம் ஒரு முழுமையான காமெடி ரோலர்கோஸ்டர் அனுபவத்தை வழங்கும். மிகச் சிறந்த நடிகர்களின் நடிப்பில் இது அருமையான என்டர்டெயினராக இருக்கும். திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடப்பட்டதைப் போலவே, இந்த டிஜிட்டல் வெளியீட்டிலும் மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
வெங்கடேஷ் டகுபதி கூறுகையில்.., “இந்தப் படத்தில் ‘ராஜு’ பாத்திரத்தை செய்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. குடும்ப சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு முழிக்கும் நாயகனின் கதை, காதல், காமெடி என பரபரவென பல திருப்பங்களை கொண்டிருந்ததது. இந்த கதாப்பாத்திரத்தை திரையில் கொண்டு வந்தது மிக இனிமையான அனுபவம். ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சி வெளியீட்டின் மூலம், அனைத்து மக்களும் இப்படத்தை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.”
ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது.., “‘பாக்யலக்ஷ்மி’ எனும் கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் ஆர்வமுள்ள, இனிமையான ஒரு குடும்பப்பெண். அவளது இன்னொசென்ஸையும், பொஸஸிவ்னெஸையும் திரையில் கொண்டு வந்தது மிக அற்புதமான அனுபவம். குறிப்பாக வெங்கடேஷ் சார் போன்ற ஆளுமையுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நடிகர்களின் கெமிஸ்ட்ரி ஒவ்வொரு காட்சியிலும் பெரும் சிரிப்பை வர வைத்தது. இத்திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடமிருந்து பெரும் பாராட்டுக்களை குவித்தது. இந்த படத்தை தொலைக்காட்சி மற்றும் ஓடிடி மூலம் அனைத்து ரசிகர்களும் ரசிக்கவுள்ளது பெரும் உற்சாகத்தை தருகிறது. இப்படம் உங்களை சிரிக்க வைக்கும், அழைக்க வைக்கும், மற்றும் படம் முடியும் வரை உங்களை அசைய விடமால் உற்சாகப்படுத்தும் !”
மீனாட்சி சௌத்திரி கூறியதாவது.., “‘மீனாட்சி’ என்பது பல பரபரப்பான மாற்றங்களை கொண்ட ஒரு வலிமையான, ஆளுமைமிக்க கதாபாத்திரமாகும். அவள், ராஜு மற்றும் பாக்யலக்ஷ்மி ஆகியோருக்கு இடையே உள்ள காட்சிகள், இந்த படத்தில் நகைச்சுவை மிகுந்த மற்றும் எதிர்பாராத தருணங்களை உருவாக்குகின்றன. தியேட்டர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, அவர்கள் கதாபாத்திரங்களை எந்தளவு ரசித்தார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தப் படம் நகைச்சுவையுடன், மனதை இலகுவாக்கும் ஒரு அற்புதமான படமாகும்!”
கொண்டாட்டத்திற்கு தயாராக இருங்கள், நகைச்சுவையுடன் கூடிய அதிரடி ரோலர்கோஸ்டர் அனுபவத்திற்கு தயாராகுங்கள் —“சங்கராந்திகி வஸ்துனம்” ZEE5 இல் மார்ச் 1, 2025 அன்று மாலை 6 மணிக்கு ஐந்து மொழிகளில் ஒளிபரப்பாகிறது. கொண்டாட்டத்தை தவறவிடாதீர்கள்!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ‘பறந்து போ’ திரைப்படத்தின் முதல் உலக ப்ரத்யேக காட்சி 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்டது. ‘பறந்து போ’ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பை உறுதிப்படுத்தும் விதமாய் முதல் காட்சி இருந்தது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் அரங்கம் நிரம்பியது, மேலும் திரைப்படத்தின் இறுதியில் எழுந்த அரங்கம் அதிர்ந்த கைதட்டல்கள் பார்வையாளர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததை உறுதிபடுத்தியது.
இத்திரையிடலை இயக்குநர் ராமுடன், நடிகர் சிவா, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தமிழ் தலைமை பொறுப்பாளர் ப்ரதீப் மில்ராய், குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நகைச்சுவையை மையமாக கொண்ட எளிமையான கதையமைப்புடன் உருவாகி இருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. படம் நெடுக கைதட்டியும் கரகோஷத்தை எழுப்பியும் உற்சாகத்துடன் பார்வையாளர்கள் இத்திரைப்படத்தை கண்டுகளித்தனர். திரையிடலின் முடிவில் நடைபெற்ற கலந்துரையாடலில் படக்குழுவினரை பார்வையாளர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
‘பறந்து போ’ திரைப்படம் கோடை விடுமறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் எனவும் இத்திரையிடலில் இருந்தது போல திரையரங்குகளில் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் எனவும் இயக்குநர் ராம் கலைந்துரையாடலின் போது தெரிவித்தார்.
ஒட்டுமொத்தத் திரைப்படக் குழுவினர் அனைவருக்கும் பெருமிதமும், மகிழ்ச்சியும் தந்த தருணமாக ‘பறந்து போ’ திரைப்படத்தின் சர்வதேசத் திரையிடல் நிகழ்ச்சி அமைந்தது.
Chennai, 31st January 2025: Kauvery Hospital Vadapalani is thrilled to announce that it has received the esteemed Joint Commission International (JCI) accreditation, World’s First Hospital for earning the distinguished Gold Seal of Approval® for its firm resolve towards patient safety, quality healthcare, and continuous improvement in medical practices. This accreditation recognizes the hospital’s dedication to upholding the highest standards of care and operational excellence, setting it apart as one of the leading healthcare providers in the region.
JCI accreditation is widely regarded as a global benchmark for excellence in healthcare. The Gold Seal of Approval®, awarded to healthcare institutions that demonstrate superior performance in patient care, safety, and organizational effectiveness, is an indication of Kauvery Hospital Vadapalani’s ongoing efforts to deliver the best possible outcomes for its patients. The hospital’s achievement of this prestigious recognition is because of its focus on maintaining high-quality care in every aspect of its operations, from patient treatment to administrative practices.
The most recent revision of JCI’s 8th Edition Accreditation Standards for Hospitals, which took effect on January 1, 2025, introduces several significant advancements aimed at addressing the evolving needs of modern healthcare. Among the key updates are the introduction of a new Global Health Impact chapter, which emphasizes on environmental sustainability and the role of healthcare organizations in reducing their ecological footprint. A dedicated Healthcare Technology chapter also addresses critical topics such as the integration of electronic health records, the growing use of telehealth services, and the importance of cybersecurity to protect patient data.
Additionally, the revised standards place a stronger emphasis on Patient Safety, advocating for a non-punitive approach to event reporting that encourages transparency and continuous learning. Other notable improvements include enhanced protocols for organ and tissue transplant programs and strengthened guidelines for the care of vulnerable patient populations, ensuring that healthcare organizations are better equipped to meet the needs of diverse patient groups.
Kauvery Hospital Vadapalani’s achievement of JCI accreditation highlights the promise of meeting these rigorous standards, reinforcing its dedication to providing the highest level of care to patients while also striving for excellence in all areas of healthcare service delivery. This accomplishment highlights the hospital’s focus on improving patient outcomes, advancing medical practices, and adopting the latest technological innovations to enhance overall healthcare quality.
Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Group of Hospitals, expressed his pride in the hospital’s achievement, stating, “We are truly honored to receive the JCI Gold Seal of Approval® , which proves that we are providing exceptional, patient-centered care. This accreditation reflects the hard work and expertise of our entire team and strengthens our resolve to continuously improve and meet global standards in healthcare. At Kauvery Hospital Vadapalani, we believe in staying ahead of the curve and delivering care that not only meets but exceeds patient expectations. As we move forward, we will continue to focus on advancing our services to ensure that every patient receives the highest quality of care possible.”
ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன்.
ரஜினிகாந்த் – அஜித் – விஜய் – விக்ரம் – சூர்யா – தனுஷ்- சிலம்பரசன் டி. ஆர்.- பிரபாஸ் – ரவி தேஜா – சித்தார்த் – கார்த்தி – ஆர்யா- விஷால் – ஜெயம் ரவி- சிவ கார்த்திகேயன் – துல்கர் சல்மான் – ராம் பொத்தனேனி – அதர்வா- ராகவா லாரன்ஸ் – அருண் விஜய் – பரத் – பசுபதி- என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன். இதற்காக இப்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் வசந்த பாலன், ஏ.எல். விஜய், புஷ்கர்- காயத்ரி, பி. வாசு, வெற்றி மாறன், செல்வராகவன், தனுஷ் – சுதா கொங்காரா – பாரதிராஜா, அட்லீ, ஹரி, சிம்புதேவன், பாலா, சேரன், சமுத்திரக்கனி, முத்தையா , ஆதிக் ரவிச்சந்திரன், மணிகண்டன், சாம் ஆண்டன், பா. ரஞ்சித், எம். ராஜேஷ், மித்ரன் ஆர் ஜவஹர் , தங்கர் பச்சன், ஏ. கருணாகரன், வெங்கி அட்லூரி , அருண் மாதேஸ்வரன், ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்கள் K. பாலசந்தர், கலைப்புலி எஸ். தாணு, ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம் , ஃபைவ் ஸ்டார் கதிரேசன், சுரேஷ் பாலாஜி, பிரகாஷ்ராஜ், ஆஸ்கார் வி. ரவிச்சந்திரன், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அருண் பாண்டியன், கருணா மூர்த்தி, புஷ்பா கந்தசாமி, ஆர். ரவீந்திரன், ஏ. ஆர். முருகதாஸ், எஸ். ஆர். பிரபு, டி. சிவா, எஸ். மைக்கேல் ராயப்பன், டி. ஜி. தியாகராஜன்- பி வி எஸ் என் பிரசாத், சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நாக வம்சி, மைத்திரி மூவி மேக்கர்ஸ் ரவி – நவீன், அபிஷேக் அகர்வால், லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன், ஆர். சந்திர பிரகாஷ் ஜெயின், ஆர். சரத்குமார்- திருமதி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களுக்கும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இயக்குநர் & நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் , இசை கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் கமல்ஹாசன் சார் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் தருணத்தில். அவரது தயாரிப்பில் உருவான ‘அமரன்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் பாடல்களையும், இசையையும் கேட்டு கமல்ஹாசன் சார் பாராட்டியது எனக்கு மேலும் உற்சாகமூட்டியது.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பின்னணி பாடகராகவும் பல பாடல்களை பாடி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், சக இசை கலைஞர்களுக்கும், இந்தப் பாடல்களை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம் 2024 ஆம் ஆண்டில் நூறாவது திரைப்படத்திற்கு இசையமைக்கும் நல்ல வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். ‘சூரரைப் போற்று’ எனும் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதினை வெல்வதற்கு காரணமாக இருந்த இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் நூறாவது திரைப்படம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறேன். 19 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான இந்த பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ,முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ,இசைக்கலைஞர்கள், பாடகர்கள், பாடகிகள், பாடலாசிரியர்கள், தற்போது வரை தொடர்ந்து ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலும்.. நடிப்பதிலும். பின்னணி பாடல்களை பாடுவதிலும் கடுமையாக உழைக்க திட்டமிட்டிருக்கிறேன். இதற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தருணத்தில் என் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
In Chennai, the first copy of the book ‘Currency Kanavugal’, written by Motivational Author Mr. Ramkumar Singaram and published by Yaa Publications, was released by Dr. N. Arul, Director of the Tamil Development Department, TN Govt, and received by Film lyricist and Poet Mr. Nellai Jayantha. The event was attended by Mr. A. Madhivanan, Retd Jt Director of the College Education Department, and Mr. S.P. Annamalai, owner of Yaa Publications.
This is the ninth Tamil book written by Journalist, Author and CEO of Catalyst PR Mr. Ramkumar Singaram. The book contains 60 articles focused on self-motivation.
This book will be very useful for young people striving for growth and enthusiastic middle-aged individuals. Mr. Ramkumar Singaram has shared his thoughts in a simple writing style through various practical examples, stories, and incidents.
The book, consisting of 144 pages, is priced at Rs. 200. For enquiries, contact: 98409 96745.