Breaking
June 5, 2026

Entertainment

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்களின் மூலம் ராகங்களை ரசிகர்களுக்கு எட்டச் செய்யும் புதிய முன்னெடுப்பு

துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது மகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். ‘தங்க மீன்கள்’ படத்தில் நடித்து சிறு வயதிலேயே பாராட்டுகளை வென்ற சாதனாவின் தந்தையான வெங்கடேஷ் சங்கர், இசை மீது கொண்ட தீராக்காதலின் விளைவாக முற்றிலும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

பாரம்பரிய இசையின் ராகங்களையும் அவை திரைப்பட பாடல்களில் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பதையும் பாமர ரசிகர்களுக்கும் சுவாரசியம் குன்றாமல் விளக்கும் வகையில் துபாயில் RRR (ரீல் ரியல் ராகா) என்ற இசை நிகழ்ச்சியை நடத்திய வெங்கடேஷ் சங்கர், அதன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்நிகழ்ச்சியை சென்னையில் நடத்துகிறார். உலகெங்கிலும் உள்ள திறமைகளைக் கண்டறிந்து கொண்டாடுவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் தளமான தி சென்டர்ஸ்டேஜுடன் இணைந்து இதை அவர் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்காக வெங்கடேஷ் சங்கர் உடன் இணைந்திருப்பது குறித்து சென்டர்ஸ்டேஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திருமதி அன்ஷு கபூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 16ம் தேதி மாலை 6:00 மணி முதல் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர் ஆர் சபா மெயின் ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். அழைப்பிதழ் உடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். பாலக்காடு ஸ்ரீராம், சத்யபிரகாஷ், சங்கர் கணேஷ் என்கிற பாலாஜி, வாவ் கார்த்திக், கண்ணன் எஸ்.கே., கோகுல் பிரசாத், அசோக் ராமமூர்த்தி, வெங்கடேஷ், திஷா பிரகாஷ், மது ஐயர் உள்ளிட்ட பாடகர்களும் பிரம்மாண்ட 12 பீஸ் இசைக்குழுவும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்கள் அவற்றின் ராக விளக்கங்களுடன் இசைக்கப்படும்.

RRR (ரீல் ரியல் ராகா) நிகழ்ச்சி குறித்து பேசிய வெங்கடேஷ் சங்கர், “மொழிகளை கடந்து சில திரைப்பட பாடல்கள் ஒரே மாதிரி இருப்பது ஆரம்ப காலத்தில் எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து முறையான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பிறகு தான் அந்தப் பாடல்களின் ராகங்களே அவற்றின் ஒற்றுமைக்கு காரணம் என்று எனக்கு தெரியவந்தது. இதை என்னளவில் வைத்துக் கொள்ளாமல் அனைவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆசையின் விளைவே இந்த நிகழ்ச்சி,” என்று கூறினார்.

சென்னையில் ஆகஸ்ட் 16 அன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதியோர் இல்லங்களை சேர்ந்த சுமார் 200 பேர் உணவு உபசரிப்புடன் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறிய வெங்கடேஷ் சங்கர், சென்னையை தொடர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் RRR (ரீல் ரியல் ராகா) நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். முதியோர் இல்ல உறுப்பினர்களின் பயண மற்றும் உணவு செலவை சென்னை டவர்ஸ் ரோட்டரி சங்கம் ஏற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு இசை ரசிகர்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கூலி படத்தின் கொண்டாட்டம், Sun NXT ல் முன்னதாகவே துவங்குகிறது !!

இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் – கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம். கூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது.

இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது.

ரெட் கார்பெட் துவங்கிய தருணத்திலிருந்தே, உற்சாகம் துவங்கி விட்டது. ரசிகர்களின் காதைப் பிளக்கும் ஆரவாரத்துடன் நட்சத்திரங்கள் விழா அரங்கிற்குள் நுழைந்தனர். இசை அரங்கம் முழுக்க அதிரும் பலத்துடன் ஒலித்தது, மேலும் கூலி படத்தில் உழைத்த பிரபலங்கள் கலைஞர்கள், கூலி படத்தின் இசை மற்றும் படத்தின் மாயாஜாலத்தைக் கொண்டாட மேடை ஏறியதும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ருதி ஹாசன் படத்தில் பணிபுரிந்த தருணங்களை மற்ற நடிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் சத்யராஜ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியா முழுவதும் ஏற்கனவே இசை தரவரிசையில் முன்னணி இடம்பிடித்த அனிருத்தின் கூலி ஆல்பம், அரங்கை அதிர வைத்தது. சௌபின் ஷாஹிர் மோனிகா பாடலுக்கு நடனமாட, கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பியது. தெலுங்கு ஐகான் நாகார்ஜுனா, ஒரு ஹீரோவின் வரவேற்போடு அரங்கில் நுழைந்து ரசிகர்களைக் கவர்ந்தார். பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் சாரின் இதயப்பூர்வமான பேச்சு, ரஜினிகாந்த் வெறும் நட்சத்திரம் அல்ல – அவர் நம்மில் நிறைந்திருக்கும் ஒரு உணர்வு என்பதை நமக்கு நினைவூட்டின.

நீங்கள் தமிழ் பிளாக்பஸ்டர்கள், தெலுங்கு ஆக்‌ஷன் படங்கள், மலையாள கிளாசிக் படங்கள் அல்லது கன்னட வெகுஜன பொழுதுபோக்குப் படங்கள் என எதன் ரசிகராக இருந்தாலும் சரி, இந்த நிகழ்வு, வேறு எந்த நிகழ்ச்சியிலும் இல்லாத வகையில், அகில இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக, உங்களை மகிழ்விக்கும்.

இவ்விழா தனித்துவமான, உணர்ச்சிவசமான, மிகப்பெரிய நிகழ்ச்சி. இவ்விழா ஆகஸ்ட் 10, காலை 10 மணிக்கு, சன் NXT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ நேரம் மற்றும் தேதி: 10 ஆகஸ்ட், காலை 10 மணி Sun NXT இல் ஒளிபரப்பாகிறது ஆனால் அது மட்டும் இல்லை.

அதே நாள் மாலை 6:30 மணிக்கு, சன் டிவியில் முழு நிகழ்ச்சியையும் பாருங்கள், இது சன் NXT இன் நேரடி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது.

கூலி அன்லீஷ்ட் நிகழ்வின் முழு நிகழ்வையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள் -, தடையற்ற மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுங்கள். Sun NXT கூலி கொண்டாட்டத்தைத் தொடங்குகிறது – முதல் காட்சியைத் தவறவிடாதீர்கள்.

Watch on – https://www.sunnxt.com/home

இப்போதே Sun NXT-க்கு சந்தா செய்து, திரையை தீப்பிடிக்க வைக்கும் தருணத்தைக் காணுங்கள். ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொண்டாட்டம் தொடங்குகிறது. அது தொடங்கும் போது, அங்கே இருங்கள்.

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

இசை ரசிகர்களுக்கு கூடுதலான வசதிகளுடன் பிரமாண்டமாக அரங்கேறும் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி

‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்… பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.

பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் – ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.

பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அனிருத் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை District எனும் பிரத்யேக ஆப்( App)பில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.‌

இசை ரசிகர்கள் இதற்கு முன் இப்படியொரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அனுபவத்தை அனுபவித்திராத வகையில் பிரத்யேக ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏராளமான இசை ரசிகர்களின் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி விசாலமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இசை ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி – இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

‘ராக்ஸ்டார்’ அனிருத் – பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் – பிரம்மாண்டமான மற்றும் கூடுதலான வசதிகள் – ஒப்பற்ற இசை அனுபவம் – ஆகியவை ஒன்றிணைந்திருப்பதால் அனிருத்தின் #Hukum மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பல உலக நாடுகளில் நடைப்பெற்ற ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் #Hukum இசை நிகழ்ச்சியின் ஃபைனல் சென்னையில் நடைபெறுவதால் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ இசை ஆல்பம் !!

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் பாடலை திரு. கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில்
தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, ‘ச்சீ ப்பா தூ…’ பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த திரு. கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை அழைத்து பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். திரு. கமல்ஹாசனின் பாராட்டினால் இக்குழுவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார்.

இப்பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வாஹீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு சக்திவேல் நடன அமைப்பை செய்துள்ளார், மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இசை ஆல்பத்தை இயக்குநர் அனந்து இயக்கியிருக்கிறார்.

தரண் குமரின் தனித்துவமான இசை, அற்புதமான பாடல் வரிகள், ராப், துடிப்பான நடனம் என இப்பாடல் இசை ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இசை ரசிகர்கள் இப்போது இப்பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் 72 மணிநேரத்தில் 51 மில்லியன் நிமிடங்களை கடந்து சாதனை !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில் அடுத்தடுத்து பல தரமான படைப்புகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. ZEE5 வெளியீடாக 2025 ஜூலை 18 ல் வெளியான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ்,fசீரிஸில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் சரவணன்.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

கடந்த ஜூலை 18 ஆம் தேதி வெளியான இந்த சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் வெளியான வேகத்தில் … மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மக்களை பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை, இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் சந்தாதரர்கள் அல்லாத அனைவரும் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் எபிஸோடை கண்டுகளிக்கலாம்.

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

சட்டமும் நீதியும் சீரிஸை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக கண்டுகளியுங்கள்.

அதிரடி மாற்றங்களுடன் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11.

தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர்.

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சியில், இந்த சீசனில் ரசிகர்களுக்கான பெரிய சர்ப்ரைஸ் ஒன்றும் இருக்கிறது. முதன்முறையாக யாருமே எதிர்பாராத ஒரு புதிய செலிபிரிட்டி நடுவர், இந்த பிரபலமான சூப்பர் சிங்கர் நடுவர்கள் குழுவில் இணைகிறார். மேலும் இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமைய இருக்கிறது.

இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் இந்த முறை பங்கேற்பாளர்கள் மண்டல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த பாடகர்களும், தங்கள் இசைத்திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும் களமிறங்கவுள்ளனர்.

பல அதிரடி மாற்றங்கள், முற்றிலும் மாறிய வடிவம், புதிய ஜட்ஜ், வேற லெவல் சர்ப்ரைஸ்கள் என இந்த சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11
வெறும் பாடல் போட்டி அல்ல – இது மண்டல வாரியான போட்டியாளர்களின் மாபெரும் இசையுத்தம்!

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு

இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், ‘ச்சீ ப்பா தூ…’ சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !!

சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.

இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து, அவருடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார். ‘ச்சீ ப்பா தூ…’ பாடலை எழுதியிருப்பதோடு அதில் ராப் வடிவத்தையும் அமைத்துள்ளார் வாஹீசன் ராசய்யா.

இப்பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வாஹீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு சக்திவேல் நடன அமைப்பை செய்துள்ளார், மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இசை ஆல்பத்தை இயக்குநர் அனந்து இயக்கியிருக்கிறார்.

தரண் குமரின் அற்புதமான இசை, பாடலைக் கேட்டவுடன் ஈர்க்கும் வரிகள், இடையில் வரும் அசத்தலான ராப் என இந்த தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் இப்பாடலை, இசை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

NIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !!

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது.

இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த வீடியோ கேமராமேன் | சிறந்த நகல் எடிட்டர் | சிறந்த குரல் ஓவர் கலைஞர் | சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

TNIT குழுமத்தின் CEO ரகுபட் இந்த விருது விழாவை நடத்துகிறார்.

இந்த விழாவினை பற்றிய அறிமுகத்தை மீடியா நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக TNIT சார்பில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்,
நடிகர் சரவணன், நாகேதிர பிரசாத், மீடியாவிலிருந்து கௌஷிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருது விழா குறித்து பத்திரிக்கை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் சரவணன் பகிர்ந்துகொண்டதாவது…
திரைத்துறையில் நடிகர், இயக்குநர், கேமராமேன், எடிட்டர் என எல்லோருக்கும் விருது வழங்குவதைப் பார்த்துள்ளேன் ஆனால் முதல் முறையாக ஊடக நண்பர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. இதை நடத்தும் ரகுபட் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இந்த விழா தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

நடன கலைஞர் நாகேந்திர பிரசாத் பகிர்ந்துகொண்டதாவது….
ஊடக துறையில் இருப்பவர்களுக்கு இவ்வளவு பெரிய விருதுகள் வழங்குவதை இப்போது தான் பார்க்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஊக்கம் என்பது மிக முக்கியம் அதை செயல்படுத்தும் ரகுபட் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ரகுபட் அவர்களை எனக்கு நெருக்கமாக தெரியும் அவர் எந்தவித பிரதிபலனும் இல்லாமல் இதைச் செய்கிறார். இது இன்னும் ஆயிரம் வருடம் தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.

ஜூரி மெம்பர் மற்றும் பத்திரிக்கையாளர் கௌஷிக் பகிர்ந்துகொண்டதாவது…
முதன் முதலாக இந்த விருது பற்றி ரகுபட் சொன்ன போது, மிகவும் சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்தது. மீடியா உலகில் அனைவரும் எந்தளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு இது மிகச்சிறப்பான அங்கீகாரமாக இருக்கும். இது 8 வது வருடம், இது போல இன்னும் பல வருடங்களுக்கு இந்த விழா நடக்க வேண்டும் வாழ்த்துக்கள்.

TNIT குழுமத்தின் CEO ரகுபட் பகிர்ந்துகொண்டதாவது…
மீடியா உலக நண்பர்களுக்கான அங்கீகாரம் இது. இது எட்டாவது வருடமாக நடக்கிறது. முதலில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா தொடர்ந்து இப்போது இங்கு நடத்துகிறோம். அடுத்து கேரளவிலும் நடத்த திட்டமிட்டுள்ளோம். மீடியா நண்பர்கள் எப்போதும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், மக்களுக்காக கடுமையாக உழைக்கிறார்கள், அவர்களை கௌரவபடுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இந்த விழாவிற்கு வருகை தந்து ஆதரவளித்த, நடிகர் சரவணன், நாகேதிர பிரசாத், கௌஷிக் ஆகியோருக்கு நன்றி.

TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ், சாஸ்தா புரொடக்ஷன்ஸ் வழங்கும் முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் அக்டோபர் 4 அன்று ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த ‘யுவன் 360’, ‘சோனு நிகம் லைவ்’, ‘விஜய் ஆண்டனி 3.0’, ‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’, உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ஏற்பாடு செய்யவுள்ளது.

‘ராக் ஆன் ஹாரிஸ் 3.0’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் அக்டோபர் 4 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் டிஸ்டிரிக்ட் பை சொமாட்டோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.

இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சி குறித்து பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், “ரசிகர்கள் முன் இசைப்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சி. அதுவும் தாய் மண்ணான சென்னை ரசிகர்கள் முன் இசை நிகழ்ச்சியை வழங்குவது மறக்க முடியாத அனுபவம். நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் மற்றும் சாஸ்தா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து ரசிகர்களை சந்திப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது” என்றார்.

‘ராக் ஆன் ஹாரிஸ் 3.0’ நிகழ்ச்சியில் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைந்து ரசிகர்களின் இதயம் கவர்ந்த‌ பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் வழங்குவார்கள்.

இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷம்மியா பங்குபெறும் துடிப்பான‌ இசை நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 16 அன்று

சென்னை நேரு விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது

இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த ‘யுவன் 360’, ‘சோனு நிகம் லைவ்’, ‘விஜய் ஆண்டனி 3.0’, ‘டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்’, உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து, பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷம்மியா சென்னையில் முழுக்க பங்குபெறும் நிகழ்ச்சியை நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் முன்னணி இசை நிறுவனமான சரிகம உடன் இணைந்து வழங்க உள்ளது.

பாலிவுட்டில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள ஹிமேஷ் ரேஷம்மியா, தமிழில் கமல் ஹாசன் நடித்த ‘தசவாதாரம்’ வெற்றிப் படத்திற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

‘ஹிமேஷ் ரேஷமிய்யா கேப்மேனியா டூர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 16 சனிக்கிழமை மாலை ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது, இதற்கான நுழைவுச் சீட்டுகள் புக் மை ஷோ இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும்.

இசை ரசிகர்களின் இதயத்துடிப்பை புரிந்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை சிறப்பாக திட்டமிட்டு அரங்கேற்றி வரும் நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தினர், பிரபல பாலிவுட் இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷமிய்யா சென்னையில் பங்கு பெறும் இசை நிகழ்ச்சியை சரிகம உடன் இணைந்து நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய ஹிமேஷ் ரேஷமிய்யா, “இசைக்கு இன்றியமையாத இடம் கொடுத்துள்ள சென்னை ரசிகர்களை நேரில் சந்திப்பதற்கு காத்திருக்கிறேன். ஆகஸ்ட் 16 அன்று உங்கள் முன் இசைக்க‌ ஆவலாக உள்ளேன்,” என்றார்.

‘ஹிமேஷ் ரேஷமிய்யா கேப்மேனியா டூர்’ நிகழ்ச்சியில் ஹிமேஷ் ரேஷமிய்யா உடன் இணைந்து பிரபல பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் பங்கேற்று மெல்லிசை மற்றும் துள்ளலிசை பாடல்களை ரசிகர்களுக்காக மேடையில் இசைப்பார்கள்.