Breaking
June 5, 2026

Entertainment

ZEE5 இன் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லர் …..

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், தனது அடுத்த அதிரடி சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ் வரும் ஜூலை 18, 2025 அன்று முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

புதுமையான களத்தில், வக்கீலாக சரவணன் கலக்கும் இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் நடிகர் சரவணன், 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ..

45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது.

தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் – ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

சர்வதேச அளவிலான இவரது இசைப் பயணம் ரசிகர்களிடத்தில் பிரபலமாக இருக்கும் தருணத்தில் எதிர்வரும் 26 ஆம் தேதி அன்று கிழக்கு கடற்கரை சாலையில் அமையப்பெற்றிருக்கும் திருவிடந்தை எனும் இடத்தில் #Hukum எனும் பெயரில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பல்லாயிர கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையானது.

இந்திய அளவிலான இசையமைப்பாளர்கள் தலைமை ஏற்று நடத்தும் இசை நிகழ்ச்சி ஒன்றின் டிக்கெட் இவ்வளவு குறைவான நேரத்தில், அதிவேகமாக விற்பனையாகி புதிய சாதனை படைத்திருப்பது இதுதான் முதன்முறை என திரையிசை ரசிகர்கள் அனிருத்தை கொண்டாடுகிறார்கள்.

இதனிடையே டிக்கெட்டுகள் விற்பனை நேரலையில் வெளியானவுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பதிவு செய்ய விரைந்தனர். சில நிமிடங்களிலேயே மிகப்பெரிய வரிசை காணப்பட்டது. இதில் பல ரசிகர்களுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. மேலும் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள்.. கூடுதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலமாக தங்களின் விருப்பத்தை பதிவிட்டனர். இதன் மூலம் சென்னைவாசிகள் அனிருத் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதும், அவருடைய இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு உற்சாகமாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ் ‘சட்டமும் நீதியும்’

ZEE5 இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ வரும் ஜூலை 18 முதல் ஸ்ட்ரீமாகிறது !

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங்க் தளமான ZEE5 தமிழில், விலங்கு, அயலி, கூசே முனுசாமி வீரப்பன், ஐந்தாம் வேதம் போன்ற ஹிட் தமிழ் ஓரிஜினல்களுக்குப் பிறகு, தனது அடுத்த அதிரடி கோர்ட் டிராமா சீரிஸான ‘சட்டமும் நீதியும்’ சீரிஸை வரும் ஜூலை 18, 2025 அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, சென்னை மாநகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

திரையுலகில் 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்த சீரிஸ் மூலம் ஹீரோவாக திரும்பியிருக்கிறார் நடிகர் சரவணன், தமிழ் திரைத்துறையில் 35வது ஆண்டைக் கடந்திருக்கும் அவரது சாதனை இந்நிகழ்வினில் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஹீரோவாகவும், பின்னர் பல வலிமையான கேரக்டர் ரோல்களால் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்தவர் சரவணன், தற்போது தீவிரமும், உணர்வுகளும் கலந்த நுணுக்கமான நடிப்புடன் மீண்டும் நாயகனாகத் திரும்புகிறார். நடிகர் சரவணனுடன் உறுதியும், உணர்ச்சிகளும் நிறைந்த சக்திவாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா MV நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இந்த சீரிஸை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

ZEE5 தென்னிந்திய உள்ளடக்கத் தலைவர் கவுஷிக் நரசிம்மன் கூறியதாவது…
“ZEE5 எப்போதும் சமூக உண்மைகளைப் பிரதிபலிக்கும் துணிச்சலான கதைகளைத் தேர்வு செய்து வருகிறது. ‘சட்டமும் நீதியும்’ என்ற இந்த சீரிஸில், நீதியும், மனச்சாட்சியும், துணிச்சலும் எவ்வாறு ஒன்று சேரும் என்பதை, உணர்வுப்பூர்வமாக, நம் வாழ்க்கையோடு இணைந்து காணலாம்.”

சட்டமும் நீதியும் சீரிஸ் “குரலற்றவர்களின் குரல்” எனும் கருத்திலிருந்து உருவானது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

இந்த சீரிஸ், மனதை உலுக்கும் நீதிமன்ற காட்சிகள், உணர்வுகள் சூழ்ந்த கதாபாத்திரங்கள், மற்றும் சமூக ரீதியாக முக்கியமான ஒரு மெசேஜ் ஆகியவற்றுடன், இந்த ஆண்டின் மிக முக்கியமான தமிழ் ஓரிஜினல் படைப்பாக வெளிவரவுள்ளது.

ZEE5-ல் வரும் ஜூலை 18 முதல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 இல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படத்தை, ZEE5 தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ~

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சி, விரைவில் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் திரைப்படமான “மாமன்” திரைப்படத்தை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. ஃபேமிலி எண்டர்டெயினரான மாமன் படம், குடும்ப உறவுகளின் உணர்வுகளை அழகாகப் பேசியுள்ளது. இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் லட்டுவாக குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் கலக்கியுள்ளார்.

மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது ZEE5 மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாக உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடப்பட உள்ளது.

இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும் மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது. பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில், இன்பா (சூரி), மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது.

குடும்ப உறவுகளின் எல்லா பக்கங்களிலும் கோபங்கள் வெடிக்கும்போது, திருமணத்தில் மட்டுமல்ல, முழு குடும்பத்திலும் விரிசல்கள் தெரியத் தொடங்குகின்றன. திருமணத்தில் மட்டுமல்லாது, மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. மாமன் குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம்.

மாமன் திரைப்படம் விரைவில் ZEE5 தளம் மற்றும் ZEE தமிழ் தொலைக்காட்சியில், பிரத்தியேகமாகப் பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இப்படத்தின் பிரீமியர் தேதி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

ஏழு திரைப்படம் – ஒரு பிரபஞ்சம் – எல்லையற்ற புராணக் கதைகள் – கொண்ட ‘மகாவதார்

மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படைப்பான ‘ மகாவதார் நரசிம்மா’ 2025 ஜூலை 25ஆம் தேதியன்று வெளியாகிறது

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார் நரசிம்மாவுடன் தொடங்கி, 2037 ஆம் ஆண்டின் மகாவதார் கல்கி பார்ட் 2 உடன் நிறைவடைகிறது. மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்த படைப்புகள் தயாராகி இருக்கின்றன.

இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில்

  • மகாவதார் நரசிம்மா (2025 )
  • மகாவதார் பரசுராம் (2027 )
  • மகாவதார் ரகுநந்தன் (2029 )
  • மகாவதார் துவாரகாதீஷ் (2031 )
  • மகாவதார் கோகுல நந்தா (2033 )
  • மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035 )
  • மகாவதார் கல்கி பார்ட் 2 (2037)
    ஆகிய வரிசையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக இயக்குநர் அஷ்வின் குமார் பேசுகையில், ” க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், ஆற்றல்மிக்க ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, பாரதத்தின் பாரம்பரியத்தை இதுவரை அனுபவித்திராத வகையில் பெரிய திரைக்கு கொண்டு வந்து, சினிமா அனுபவத்தை தருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் மூலம் தசாவதாரத்தின் வித்தியாசமான அனுபவம் தொடங்குகிறது. இனி பாரதம் கர்ஜிக்கும் ” என்றார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷில்பா தவான் பேசுகையில், ” சாத்தியங்கள் முடிவற்றவை. எங்கள் கதைகள் திரையில் உயிர்பெற்று கர்ஜிப்பதை காண நான் ஆவலாக இருக்கிறேன். மேலும் ஒரு காவிய சினிமா அனுபவத்திற்கும் தயாராகுங்கள் ” என்றார்.

தொடர்ந்து ஹோம்பாலே பிலிம்சின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், ” ஹோம்பாலே பிலிம்சில், நாங்கள் காலத்தையும், எல்லைகளையும் கடந்த கதை சொல்லலை நம்புகிறோம். மகாவதார் உடன் விஷ்ணுவின் புனித அவதாரங்களை வியக்க வைக்கும் அனிமேஷன் மூலம் உயிர்ப்பிக்கும் ஒரு சினிமாடிக் யுனிவர்சல் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது ஒரு திரைப்பட தொடரை விட அதிகம். மேலும் இது இந்தியாவின் ஆன்மீக மரபிற்கான எங்கள் அஞ்சலி ” என்றும் குறிப்பிட்டார்.

மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் திரைப்படத்திற்காக மட்டும் அல்லாமல் இது பல தள கலாச்சார நிகழ்வாக கருதப்படுகிறது. காமிக்ஸ் – வீடியோ கேம்ஸ் – டிஜிட்டல் முறையிலான கதை சொல்லல் – சேகரிக்க கூடிய அனுபவங்களாக விரிவடைந்து… இந்த சினிமாடிக் யுனிவர்ஸ் – ரசிகர்களுக்கு காவியத்துடன் கூடிய பல வழிகளை வழங்கும். கிராபிக் நாவல்களும், தழுவல்கள் முதல் ஊடாடும் சாகசங்கள் வரை… மகாவதார் பண்டைய கதைகளை ஊடகங்கள் மூலம் முழுவதும் உயிர்ப்பிக்கும். இன்றைய பார்வையாளர்களுடன் வயது மற்றும் பல்வேறு தளங்களில் எதிரொலிக்கும் ஒரு வளமான உலகத்தையும் உருவாக்கும்.

‘மகாவதார் நரசிம்மா’வை இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இதனை க்ளீம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷில்பா தவான் -குஷால் தேசாய் மற்றும் சைதன்யா தேசாய் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இதனுடன் திரையுலகில் நற்பெயரை பெற்றுள்ள ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த கூட்டணி பல்வேறு பொழுதுபோக்கு தளங்களில் அற்புதமான ஒரு சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன் ஒப்பிட இயலாத காட்சி பிரம்மாண்டம் – கலாச்சார செழுமை – திறமையான கலைஞர்கள் – மற்றும் ஆழமாக கதை சொல்லும் ஆற்றல் – ஆகியவற்றுடன் இந்த திரைப்படம் 3 D எனப்படும் முப்பரிமான தொழில்நுட்பத்துடன் ஐந்து இந்திய மொழிகளிலும், ஜூலை 25 ஆம் தேதியன்று வெளியாகிறது.

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’

தயாரிப்பாளர்,நடிகர் பிரித்விராஜ் ராமலிங்கம் பேசியதாவது.., ஒரு படம் செய்வதாக இருந்து திடீரென அது ரத்து ஆனபோது, கையில ₹1000 தான் இருந்தது. அந்த நேரத்தில் நண்பர் அரவிந்த் ‘படம் பண்ணலாமா?’ என்றார். அப்படியே அந்த நம்பிக்கையில் ஆரம்பமானது ‘குட் டே’. அன்று நாங்கள் பேசிய ஒரு உரையாடல் தான் இந்த படத்துக்கு விதையாக அமைந்தது. பணம் இல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையால், உருவானது தான் இந்தப்படம். உருவாக்கப்பட்டது. சிலர் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார்கள், சிலர் சம்பளம் வேண்டாமென நடித்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். என் நண்பர் கவிஞர் கார்த்திக் நேதாவின் வாழ்க்கை, அவர் சொன்ன குடிப்பழக்கம், மனநிலை பற்றிய உண்மையிலிருந்துதான் இந்தக் கதைக்கரு பிறந்தது. 40–50 மணி நேரம் அவருடன் பேசியதிலிருந்து இப்படம் உருவானது. நான் சினிமாவுக்கு நடிகனாகவே வந்தேன். ஆனால் இந்தப் படம் என் …

Read more

12:53 pm

Good Day -Trailer | Prithiviraj Ramalingam, Kaali Venkat, Myna Nandhini | Govind Vasantha

The wait is over! Here’s the official trailer for #goodday , from New Monk Pictures, music by #govindvasantha . Starring: Prithiviraj Ramalingam, Kaali Venk…

youtube.com

12:53 pm

Dear Media Friends, We Cordially Invite You To the Press Show of the movie ‘Good Day’ Starring – Prithiviraj Ramalingam, Kaali Venkat, Myna Nandhini, Bose Venkat, Bhagavathi Perumal, Aadukalam Murugadoss, Vela Ramamurthy and Others Produced By Prithiviraj Ramalingam Directed By Aravindhan Date : 23.06.2025 (Monday, Tomorrow) Time : 3 PM Location : Prasad Lab, Saligramam Thanks & Regards Team Good Day Team AIM

7:10 pm

Monday

Gentle Reminder :Dear Media Friends, We Cordially Invite You To the Press Show of the movie ‘Good Day’ Starring – Prithiviraj Ramalingam, Kaali Venkat, Myna Nandhini, Bose Venkat, Bhagavathi Perumal, Aadukalam Murugadoss, Vela Ramamurthy and Others Produced By Prithiviraj Ramalingam Directed By Aravindhan Date : 23.06.2025 (Monday, Today) Time : 3 PM Location : Prasad Lab, Saligramam Thanks & Regards Team Good Day Team AIM

9:30 am

“குட் டே” பட இசை வெளியீடு !! –

New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் […]

deccannews.co.in

10:39 am

குபேரா திரைவிமர்சனம் –

மும்பையில் கடலில் கச்சா எண்ணெய் இருப்பதை கண்டுபிடிக்கும் இந்திய நிறுவனத்தை சேர்ந்த ஒரு விஞ்ஞானி அதை ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ரகசியமாக அந்த தகவலை விற்க, அதை கையகப்படுத்த அந்த கார்ப்பரேட் கம்பெனி அந்த எண்ணெய் ஆராய்ச்சி கம்பெனியில் போலியான ஒரு வெடி விபத்தை ஏற்படுத்தி அதில் பலரைக் கொன்று அதை கையகப்படுத்த நினைக்கிறது. அவ்வாறு நினைக்க அதற்கு தேவையான பணத்தை இந்திய அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக கொடுக்க சுமார் ஒரு லட்சம் கோடியை கைமாற்ற ஒரு […]

deccannews.co.in

10:40 am

“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி !! பேய் உலாவும் பஸ் மூலம் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 !! வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. சந்தானம் நடிப்பில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து, படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது. முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும், கிண்டி சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ரசிகர்களும், பொதுமக்களும் படத்தின் தீமில் வடிவமைக்கப்பட்ட பஸ்ஸை பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கினர். பஸ்ஸை பார்வையிட்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் கூறியதாவது… எங்களுடைய “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், Zee5 மூலம் உலகளவில் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. இப்படம் வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் படத்தை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 முன்னெடுத்துள்ள இந்த வித்தியாசமான புரமோசன் நிகழ்ச்சி, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பஸ்ஸின் வடிவமைப்பை, பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டேன். இந்நேரத்தில் எங்கள் படக்குழுவினருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் Zee5 நிறுவனத்திற்கும் என் நன்றி. படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி. இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படித் தப்பி வெளியில் வருகிறான்? என்பது தான் இப்படத்தின் கதை. நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆர்யா தனது The Show People நிறுவனம் சார்பில், இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் S. பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ZEE5 இல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம் !

12:02 pm

12:02 pm

Sandy Cine Pro Aim

“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி !! பேய் உலாவும் பஸ் மூலம் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 !! வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. சந்தானம் நடிப்பில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

Kindly post this news and share Link

12:05 pm

Sandy Cine Pro Aim

“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தினை விளம்பரப்படுத்த ZEE5 நடத்திய “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி !! பேய் உலாவும் பஸ் மூலம் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை விளம்பரப்படுத்திய ZEE5 !! வித்தியாசமான புரமோ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ZEE5 !! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5. சந்தானம் நடிப்பில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

Kindly post this news share Link , Ignore the message if you already sent

7:51 pm

Yesterday

“Good Day” நடிகர்கள் : பிரித்திவிராஜ் ராமலிங்கம் காளி வெங்கட் மைனா நந்தினி ஆடுகளம் முருகதாஸ் பகவதி பெருமாள் (பக்ஸ்) வேல ராமமூர்த்தி போஸ் வெங்கட் விஜய் முருகன் (கலை இயக்குனர்) ஜீவா சுப்பிரமணியம் பாரத் நெல்லையப்பன் படக்குழுவினர் : தயாரிப்பு நிறுவனம் : நியூ மாங்க் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் : பிரித்திவிராஜ் ராமலிங்கம் இயக்குனர் : N அரவிந்தன் திரைக்கதை | வசனம் : பூர்ணா ஜெஸ் மைக்கேல் கேமரா & படதொகுப்பு : மதன் குணதேவ் பாடலாசிரியர் & கூடுதல் வசனம் : கார்த்திக் நேத்தா இசை : கோவிந்த் வசந்தா கதை கரு : பிரித்திவிராஜ் ராமலிங்கம் இணை இயக்குனர் : பூர்ணா ஜெஸ் மைக்கேல் சவுண்ட் டிசைன் : s.அழகிய கூத்தன் சுரேன்.G சவுண்ட் மிக்ஸிங் : சுரேன்.G ஸ்டண்ட் இயக்குனர் : ஓம் பிரகாஷ் டைட்டில் ரிவீல் & டீஸர் & ட்ரைலர் இசை : லியோன் & டார்வின் துணை இயக்க…

Read more

9:13 am

+8

9:13 am

ZEE5-ல் வெளியான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’

ரசிகர்களின் விருப்பத் தேடலில் Google டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது ZEE5 வெளியீடான ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, கடந்த ஜூன் 20-ஆம் தேதி, மலையாள முன்னணி நடிகர் திலீப் நடித்த ‘பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி’ திரைப்படத்தைத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியிட்டது. திரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், Google இல் ரசிகர்களின் விருப்பத் தேடலில் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் திலீப்பின் 150வது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நவீன கால குடும்ப உறவுகளின் விசித்திரங்களையும், டிஜிட்டல் சோஷியல் மீடியா குடும்பங்களில் எவ்வளவு தாக்கத்தை உருவாக்குகிறது என்பதையும், நகைச்சுவை கலந்து, ஒரு அருமையான ஃபேமிலி எண்டர்டெயினராக சொல்லும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் பாராட்டுச்செய்திகளைத் தொடர்ந்து, ரசிகர்கள் இணையத்தில் படத்தைப் பற்றி அதிகம் தேட, Google டிரெண்டிங்கில் இப்படம் முதலிடத்தைப் பிடித்தும் சாதனை படைத்துள்ளது.

எழுத்தாளர் ஷாரிஸ் முகமது எழுதியுள்ள இப்படத்தை ,அறிமுக இயக்குநர் பிண்டோ ஸ்டீபன் இயக்கியுள்ளார்.

பிரைடல் பொட்டிக் வைத்திருக்கும் 40 வயது முதிரிளம் இளைஞனான பிரின்ஸ் சக்கலக்கல் (திலீப்), இன்றைய ZenG தலைமுறை இளைஞியை (சஞ்சு) மணக்கிறார். இதனால் அவர் வாழ்விலும், குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகள் தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் திரைக்கதை
பரபர சம்பவங்களுடன், பார்வையாளர்களை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்படி, வெகு சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், சோஷியல் மீடியா, குடும்பங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை, அழகாக பிரதிபலித்திருக்கும் இந்தப்படம், தமிழக மக்களின் வாழக்கையையும் பிரதிபலிப்பது போல அமைந்திருப்பதால், இப்படத்தின் தமிழ் பதிப்பும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி படத்தில் தியான் ஸ்ரீனிவாசன், சித்திக், பிந்து பணிக்கர், ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன், நடிகை ஊர்வசி சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனைத்து வயதினரும் கொண்டாடும் ஃபேமிலி எண்டர்டெயினரான இப்படம், ஜூன் 20 முதல், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

Google-ல் ரசிகர்களின் விருப்பத் தேடலில், டிரெண்டிங்கில் #1 இடத்தைப் பிடித்திருக்கும் இப்படத்தை, ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தவறாமல் கண்டு ரசியுங்கள்!

“டிடி நெக்ஸ்ட் லெவல்” “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5.

சந்தானம் நடிப்பில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து, படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது.

முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும், கிண்டி சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ரசிகர்களும், பொதுமக்களும் படத்தின் தீமில் வடிவமைக்கப்பட்ட பஸ்ஸை பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கினர். பஸ்ஸை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் கூறியதாவது…
எங்களுடைய “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், Zee5 மூலம் உலகளவில் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. இப்படம் வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் படத்தை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 முன்னெடுத்துள்ள இந்த வித்தியாசமான புரமோசன் நிகழ்ச்சி, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பஸ்ஸின் வடிவமைப்பை, பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டேன். இந்நேரத்தில் எங்கள் படக்குழுவினருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் Zee5 நிறுவனத்திற்கும் என் நன்றி. படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி.

இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படித் தப்பி வெளியில் வருகிறான்? என்பது தான் இப்படத்தின் கதை. நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆர்யா தனது The Show People நிறுவனம் சார்பில், இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் S. பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ZEE5 இல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம் !

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2

ஹாட்ஸ்டார் மலையாள ஸ்பெஷல் வெப் சீரிஸ் வகையில், முதல் படைப்பாக பெரும் வரவேற்ப்பை பெற்ற கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீரிஸின், பெரிதும் எதிர்பார்க்கபடும் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸின் அதிரடியான இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், வரும் ஜூன் 20ஆம் தேதி முதல், இரண்டாவது சீசன் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 தி சர்ச் ஃபார் CPO அம்பிலிராஜு எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய சீசன், ஒரு சிவில் போலீஸ் அதிகாரியான அம்பிலி ராஜு காணாமல் போன, மர்ம வழக்கை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 1 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இரண்டாவது டிரெய்லர், கதையின் களத்தையும் அதன் தீவிரதன்மையையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அஹம்மது கபீர் இயக்கியுள்ள இந்த சீரிஸின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை பஹுல் ரமேஷ் எழுதியுள்ளார். ஹாசன் ரஷீத், அஹம்மது கபீர் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோர் மங்கீ பிசினஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்த சீரிஸை தயாரித்துள்ளனர்.

இந்த சீரிஸில் அர்ஜுன் ராதாகிருஷ்ணன், அஜு வர்கீஸ், லால், இந்திரன்ஸ், ஹரிச்ரீ அசோகன், ரெஞ்சித் சேகர், சஞ்சு சனிசென், சுரேஷ் பாபு, நவாஸ் வல்லிக்குன்னு, நூரின் ஷெரீஃப், ஜியோ பேபி, ஷிப்லா ஃபாரா, பிலாஸ் சந்திரஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸுக்கு, ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேஷ் புவனேந்திரன் எடிட்டிங் செய்துள்ளார், ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இந்த அதிரடி திரில்லர் சீரிஸுன் இரண்டாவது சீசன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என ஏழு இந்திய மொழிகளில் ஜூன் 20 முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

🔗https://www.youtube.com/watch?v=3j9tDsk2xco

சின்ன மருகள் சீரியல் வெற்றியை, ரசிகர்களுக்கு மொய் விருந்து வைத்து கொண்டாடிய விஜய் டிவி !!

தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி.

பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாகப் பரபரப்பான கதைக்களத்தில் நகரும் இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் ஒரு கட்டமாக, மதுரையில் ஜுன் 13 மற்றும் விருதுநகரில் ஜூன் 14 தேதிகளில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காலை பிரத்தியேகமாக, சின்ன மருமகள் சீரியல் ரசிகர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். பெண்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்கால பிரச்சனைகள், அவர்களுக்கு வரும் தடங்கல்கள், குடும்ப சிக்கல்கள் என சீரியலில் வருவது போலவே, தங்களின் சொந்தக் கதைகளை, குழுவினருடன் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொண்டனர். சீரியல் குழுவினர் ரசிகர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்களோடு மகிழ்வோடு உரையாடி மகிழ்ந்தனர். இந்த மொத்த நிகழ்வும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது.

மதியம் சின்ன மருமக்கள் தொடரின் தற்போதைய பரபரப்பான மொய் விருந்தை அடையாளப்படுத்தும் விதமாக, ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. ரசிகர்களுடன் படக்குழுவினரும் உணவருந்தி மகிழ்ந்தனர்.

மாலை, விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகையர்கள், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் முதலான விஜய் டிவி நிகழ்ச்சியின் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள, 4000 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் கொண்டாட்டத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா விஜய் டிவி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

விஜய் டிவியின் சின்ன மருமகள் தொடர் முதலாக அனைத்து நிகழ்ச்சிகளையும், விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!

தமிழ்செல்வி தன் கனவை வெல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!

அதிர வைக்கும் சம்பவங்கள், பரபரக்கும் திருப்பங்களுடன், “சின்ன மருமகள்” நெடுந்தொடர், உங்கள் விஜய் டிவியில் !!

தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் “சின்ன மருமகள்”. பெண் ரசிகர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த வாரம், வீட்டை விட்டு வெளியே வந்து, கணவனையும் தகப்பனையும் உதறி, தன் கனவைச் சாதிக்க தமிழ்செல்வி மேற்கொண்ட பயணம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த வார தொடரில், தமிழ்செல்வி மருத்துவராகும் தன் கனவை நிறைவேற்ற, அவளுக்குத் தேவைப்படும் 1 லட்சம் ரூபாயைத் திரட்ட, மொய் விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். அவளின் திட்டத்தை உடைக்க சாவித்திரி, கிடா விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். சாவித்திரியை எதிர்த்து தமிழ்செல்வி ஜெயிப்பாளா? தன் கனவைச் சாதிக்க 1 லட்சம் அவளால் திரட்ட முடியுமோ? என பரபரப்பு திருப்பங்களுடன், இந்த தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்செல்வி தற்போது ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக மாறியுள்ளார். தமிழக மக்கள் அவளை தங்கள் வீட்டுப் பெண்ணாகப் பார்க்கிறார்கள். அவளது கனவு ஜெயிக்குமா ? என ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

தமிழசெல்வியின் இந்த பரபரப்பான பயணத்தைத் தெரிந்து கொள்ள, இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் 9.30 மணிக்கும் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.