இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.
இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்
உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார். அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும், அதன் பதிலும், இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கி நம்மை அந்த உலகிற்குள் இழுத்துக்கொள்கிறது.
தமிழில் வெளியாகும் க்ரைம் கதைகளிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான திரில்லர் சீரிஸாக, கதைக்களத்திலும், உருவாக்கத்திலும் புதுமையான அனுபவம் தரும் இந்த சீரிஸ், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.
ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான, மண் சார்ந்த சிறப்பான படைப்புகளை, பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான சட்டமும் நீதியும் சீரிஸ், மாமன் திரைப்படம், மக்களின் பேராதாரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
தற்போது ரேகை சிரீஸும், பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மாறுபட்ட திரில்லர் அனுபவத்தை தரும் “ரேகை” சீரிஸை, ZEE5 தளத்தில் கண்டுகளியுங்கள்.
ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து உருவாகிய இருண்ட, அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை’, நவம்பர் 28-ல் வெளியாகிறது!!
ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, “ரேகை” சீரிஸ் நவம்பர் 28-ல் ஸ்ட்ரீமாகிறது!!
~ புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ~
இந்தியாவின் முன்னணி தேசீய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும், நாம் கண்டுபிடிக்க முடியாத, ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது.
இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய ஒரிஜினல் படைப்பாகும். ராஜேஷ் குமார் உலகின் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிகலாக ஒரு புதிய தீவிரத்தை அவர் இந்தக் கதைக்கு வழங்கியுள்ளார்.
உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?
S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார். அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும் அதன் பதிலும் இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.
இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்
எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது.., “ஒவ்வொரு குற்றக்கதையும் முதலில் மனித மனதில் தான் பிறக்கிறது. ‘ரேகை’யில் என்னை ஈர்த்தது – சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறு ஐடியா எவ்வாறு சமூகத்தின் இருண்ட மூலைகளுக்கு இழுத்துச் செல்கிறது என்பதே. என் உலகிலிருந்து ஒரு ஐடியாவை புதிய படைப்பாளர் எடுத்து, முற்றிலும் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கும்போது, அந்தக்கதை இன்னும் உயிர்ப்புடம் இருக்கிறது என்பதற்கான சான்று இந்த சீரிஸ்.”
எழுத்தாளர் / இயக்குநர் தினகரன் M கூறியதாவது.., “நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையைக் குறித்து இந்தத் சீரிஸ் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அந்த அசௌகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். ராஜேஷ் குமார் சார் கருவிலிருந்து தொடங்கியதாக இருந்தாலும், இந்த கிரைம் உலகின் சம்பவங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன. அதை பார்வையாளர்களும் உணர்வார்கள்”
முன்னணி நடிகர் பாலஹாசன்.., “வெற்றி கதாப்பாத்திரம் எப்போதும் பதில்களைத் தேடி அலையும் ஒரு மனிதன். ஆனால் அவன் கண்டுபிடிக்கும் உண்மைகள் அவனையே பயமுறுத்துகின்றன. அந்த பயத்தை வெளிப்படுத்தாமல் உள்ளே வைத்துக்கொண்டு நடிப்பது சவாலானது. ‘ரேகை’ எனக்கு மனித உணர்வுகளின் பலவீனத்தை சுமந்து பார்க்கும், அவற்றை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.”
ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் – வணிகத் தலைவர் & SVP South Marketing – லாய்டு C சேவியர் கூறியதாவது.., “‘ரேகை’ ஒரு திரில்லர் மட்டுமல்ல, நம் பூர்வீகக் கதைகள் ஏன் முக்கியம் என்பதற்கான நினைவூட்டல். இது மர்மத்தின் பின்னால் இருக்கும் மௌனங்களை வெளியில் கொண்டுவருகிறது. மனிதர்களைக் காக்க வேண்டிய அமைப்புகள், சில சமயம் அவர்களை பகடையாக பயன்படுத்தும் உண்மையைத் தட்டி எழுப்புகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய சக்திகளிடம் சிக்கிக்கொள்ளுகிறது என்பதை இந்தத் சீரிஸ், மிக நிஜமாக காட்டுகிறது. உண்மை, நேர்மை, எமோசன் மூன்றும் கலந்த கதைகளைத் தருவதே எங்களின் முக்கிய நோக்கம். ‘ரேகை’ சீரிஸ் அதைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது.”
ஒருமுறை நீங்கள் ‘ரேகை’யின் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டால், அதில் குற்றம் உங்களை பயமுறுத்தாது — குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை தான் மிகப்பெரிய பயத்தைத் தரும்.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)” பாடலின் ஆங்கில பதிப்பை புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். வலிமையான குரல், உணர்ச்சிபூர்வமான நடிப்பு மற்றும் பன்மொழி இசை திறமைக்காக பெயர் பெற்ற ஆண்ட்ரியா, இந்த உலகளாவிய கீதத்துக்கு தனது குரல் மூலம், தனித்துவமான ஆன்மீகத் தொனி, உற்சாகம் மற்றும் நவீன மெருகை வழங்கியுள்ளார்.
பெரும் ஆற்றல், அசத்தும் ராகம் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த “ப்ரிங் இட் ஹோம்” பாடல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒருமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தைரியம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை கொண்டாடுகிறது. பாடலை நகுல் அபயங்கர் (Nakul Abhyankar) இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் நஸீப் முகம்மது எழுதியுள்ளனர். ஆங்கில வரிகளுடன் இணைந்த “தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தோம்” ( Tarikita Tarikita Tarikita Dhom ) என்ற இந்திய பாணி ஹுக் மற்றும் “தக் தக், வீ ப்ரிங் இட் ஹோம்” (Dhak Dhak, we bring it home) என்ற உருக்கமான பல்லவி இவை அனைத்தும் விளையாட்டின் இதயத் துடிப்பையும், வீராங்கனைகளின் உறுதியையும் பிரதிபலிக்கின்றன.
ஆண்ட்ரியாவின் துடிப்பான குரல் மற்றும் நவீன பாப்-ராக் பாணி, இந்த பாடலுக்கு உலகளாவிய அழகை அளிக்கின்றன, அதேசமயம் இந்திய வேர்களும் வலுவாக இணைந்திருக்கின்றன. அவரது குரலில் கிரிக்கெட்டின் உறுதியும் அழகும் வெளிப்படுகின்றன — விளையாட்டரங்கிலும் அதற்குப் பின்னாலுமான கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. வெற்றி, நோக்கம் மற்றும் கனவுகளை நனவாக்கும் முயற்சியை கொண்டாடும் பாடல் வரிகள், ஆண்ட்ரியாவின் நுணுக்கமான குரல் ஆற்றலால் மேலும் அழகாகியுள்ளது.
இந்த பாடலின் வெளியீடு விளையாட்டு உலகில் ஒரு முக்கியமான கொண்டாட்டக் கணமாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), 2025 செப்டம்பர் 30 அன்று “ப்ரிங் இட் ஹோம்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நவம்பர் 2, 2025 அன்று நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான தயாரிப்பில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கீதம் போட்டிக்கும், மேலும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் மரபுக்கும் உலகளாவிய அங்கீகாரத்திற்கும் கௌரவம் சேர்க்கிறது.
இந்த பாடலை பாடியது குறித்து ஆண்ட்ரியா ஜெரேமியா கூறும்போது.., “இது ஒரு பாடல் மட்டுமல்ல — பெரிய கனவு காணும், கடினமாகப் போராடும், வெற்றியை வீட்டுக்கு கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணிற்குமான கொண்டாட்டம்.” என்றார்.
“ப்ரிங் இட் ஹோம்” பாடல் இப்போது கிரிக்கெட்டின் கீதமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார்.
இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில் பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை, ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளது!
இது குறித்து இயக்குநர் அட்லீ கூறுகையில்..,
“அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம். சிங்ஸ் இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை, இந்திய மக்கள் பார்த்தவுடன் விரும்பும் வகையிலான ஒன்றை உருவாக்கவே நினைத்தார்கள். அதனால்தான் நான் என் முதல் விளம்பரத்துக்கு ஒப்புக்கொண்டேன். ரன்வீரின் அசரவைக்கும் துறுதுறுப்பு, பாபி சார் மாயம், ஸ்ரீலீலாவின் ஃப்ரெஷ்னெஸ் — இதையெல்லாம் நாங்கள் மிகச்சிறப்பாக ஒன்று சேர்த்தோம். இனி அதை பார்வையாளர்கள் ரசிக்கட்டும்.”
புதிய சிங்ஸ் தேசி சைனீஸ் விளம்பரம் விளம்பரத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலான எல்லையை முற்றிலும் அழித்துவிட்டது. இது ஒரு 8 நிமிட கதை வடிவிலான அனுபவமாக, டிராமா, நகைச்சுவை, ஆக்ஷன், இசை, மசாலா என அனைத்தையும் ஒருங்கே வழங்குகிறது.
இந்த விளம்பரம் ஸ்ரீலீலாவின் கவர்ச்சியாலும், “லார்ட்” பாபி தியோல் அவர்களின் அதிரடியிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது அனிமல் மற்றும் தி பா**டட்ஸ் ஆஃப் பாலிவுட் போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளில் அசரவைத்த பாபி தியோல் மீண்டும் சிங்ஸ் மூலம் தனது ஸ்வாக் ஸ்டைலில் கலக்குகிறார்.
தீபிகா பான், தலைவர் – டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், கூறியதாவது..,
“சிங்ஸில் ஒவ்வொரு உணவும் ஒரு ப்ளாக்பஸ்டர் போல இருக்க வேண்டும் — மிக உறுதியானதாகவும், சுவைமிக்கதாகவும், மறக்க முடியாததாகவும் இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். ரன்வீர் சிங் மீண்டும் ஆக்ஷனில் களமிறங்கியிருப்பதால் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது. ஐந்து படங்களுப்பின், அவரின் எனர்ஜி இன்னும் உச்சத்தில் இருக்கிறது. இது எங்கள் மிகப்பெரிய, மிகுந்த உற்சாகமான தேசி சைனீஸ் கொண்டாட்டம், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்!”
இந்தப் படத்தில் ஷங்கர்–எசான்–லாய் இசையமைப்பில் உருவான புகழ்பெற்ற “மை நேம் இஸ் ரன்வீர் ஜிங்” என்ற ஆந்தம் இடம்பெற்றுள்ளது. அர்ஜித் சிங் குரலில், குல்சார் சாஹப் எழுதிய பாடல் இப்போது சாய் அப்யங்கர் மூலம் மறுபதிப்பாக உருவாக்கப்பட்டு, தற்போது எங்கெங்கும் ஒலிபரப்பாகி வருகிறது.
சிங்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் சிங் அட்டாக்ஸ்” படம் நிச்சயமாக #AagLagaaDe என்கிற ஹாஷ்டேக்குக்கு ஏற்ப ஒரு தீப்பற்றி எரியும் அனுபவத்தை தருகிறது.
டாடா கன்சூமர் புராடக்ட்ஸ் லிமிட்டெட் நிறுவனம், டாடா குழுமத்தின் முக்கிய உணவு மற்றும் பானத் துறைகளின் பிராண்டுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருகிறது. அதன் பரந்த வரிசையில் டீ, காஃபி, நீர், உப்பு, பருப்பு, மசாலா, ரெடி-டூ-ஈட் உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் ஆகியவை அடங்கும். டாடா டீ, டெட்லி, டாடா காஃபி கிராண்ட், ஹிமாலயன், டாடா சால்ட், டாடா சம்பன்ன், டாடா சோல்ஃபுல், சிங்ஸ் சீக்ரெட், ஸ்மித் & ஜோன்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளை உடைய இந்நிறுவனம், வருடாந்திர ரூ.17,618 கோடி வருவாயுடன், 275, மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்றடைகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் உலகளவிலும் மிகப்பெரிய அளவில் கோலோச்சி வருகிறது.
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 பாடகர் சரணுக்கு, இளையராஜா டீசர்டை பரிசளித்த யுவன்சங்கர் ராஜா !!
இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் கலந்துகொண்ட இளையராஜா ஸ்பெஷல் சூப்பர் சீனியர் சீசன் 11 !!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின், 11 வது சீசன் வெகு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் இந்த வாரம் இசைக்கடவுள் இசை ஞானி இளையாராஜாவை கொண்டாடும் விதமாக ‘Celebrating இசை’ என்ற தலைப்பில் அடுத்த மூன்று எபிசோடுகள் நடைபெறவுள்ளது. முழுக்க முழுக்க இளையராஜா பாடல்களை பங்கேற்பாளர்கள் பாடவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் கங்கை அமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டு பாடகர்களை ஊக்குவித்தனர்.
அச்சு அசல் இளையராஜாவின் பிரதி போலவே பாடும் பாடகர் சரணுக்கு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் புகைப்படம் பதித்த டீசர்டை பரிசளித்து வாழ்த்தியது மிக நெகிழ்வான தருணமாக அமைந்தது.
தமிழக மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இளையராஜாவின் இசையை கொண்டாடும் வகையிலும், அவரின் தீவிரமான ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. வழக்கத்தை விடவும் இந்த வாரம் நிகழ்ச்சி பெரிய அளவில் களைகட்டும் என ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.
பல இளம் திறமையாளர்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது.
சூப்பர சிங்கர் சீனியர் 11 நிகழ்ச்சியை சனி, ஞாயிறு கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டுகளியுங்கள்.
ZEE5 தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” டிரைலர் வெளியீடு – அக்டோபர் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது !!
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது புதிய தமிழ் ஒரிஜினல் வெப்சீரிஸ் “வேடுவன்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 10 முதல் பிரீமியர் ஆகும் இந்த சீரிஸ், அதன் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆர்வத்தை உருவாக்கிய நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இருன்மை நிறைந்த, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் திகில் நிறைந்த கதையம்சத்தில் பரபர திரில்லராக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
வேடுவன் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். மேலும் சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ், ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இசை – விபின் பாஸ்கர்.
கதையில் சூரஜ் (கண்ணா ரவி), முன்னேற போராடும் நடிகராக வாழ்ந்து வரும் போது, “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்” என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவற்றின் உலகில் ஆழமாக இழுத்துச் செல்கிறது. சினிமா கதையும் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான திரில்லராக இந்த கதை நகர்கிறது.
நடிகர் கண்ணா ரவி கூறுகையில்: “வேடுவன் எனக்கு மிக நெருக்கமான படைப்பு இது ரீல்-ரியல் கலந்த ஒரு வித்தியாசமான வாழ்க்கைப் பயணம். சூரஜாக நடித்தது மிக மகிழ்ச்சியான அனுபவம், ஒரு நடிகனின் போராட்ட வாழ்க்கையை மட்டும் அல்லாமல், அருணின் சவால்கள், முடிவுகள், தியாகங்களை வாழ்ந்தது போன்ற உணர்வைத் தந்தது. கடமைக்கும், காதலுக்கும், மக்கள் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதை சொல்லும் கதை இது. ஒரு நடிகனாக, இது எனக்கு வித்தியாசமான சவாலை அளித்தது.”
ZEE5 தமிழ் & மலையாளம் பிஸினஸ் ஹெட்அான லாய்ட் C சேவியர் தெரிவித்ததாவது.., “வேடுவன் மூலம், வேர்களோடு பிணைந்த, துணிச்சலான, உணர்ச்சிப்பூர்வமான கதைகளை எங்கள் தமிழ் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். வலுவான நடிகர்கள், உணர்ச்சி மிக்க கதை, அருமையான விஷுவல் மூன்றும் இணைந்திருப்பதால், இது சாதாரண டிராமாவாக இல்லாமல், ரசிகர்களுக்கு பிரத்தியேகமான அனுபவத்தை தரும். மனித உணர்வுகளின் உறுதியைப் பற்றிய சக்திவாய்ந்த கதையாக, பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவம் தரும் என்று நம்புகிறோம்.”
இயக்குநர் பவன் கூறுகையில்.., “வேடுவன் எனது கண்ணோட்டத்தில், காதல், கடமை, துரோகம் ஆகியவை மனித உணர்வுகளின் ஆழத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஆழமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு பெரிய விலை கொடுக்கிறார்கள். பொழுதுபோக்கைத் தாண்டி சிந்திக்க வைக்கும், பார்வையாளர்கள் தங்களும் இத்தகைய சூழலில் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுப்பும் கதையாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இப்படியான கதைக்கு துணிச்சலாக ஆதரவளித்த ZEE5-க்கு நன்றி. பார்வையாளர்கள் ‘வேடுவன்’ உலகத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
காதல், துரோகம், மீட்பு நிறைந்த பயணம் அக்டோபர் 10 முதல், உங்கள் ZEE5-இல்!
“ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!
30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், தனது முதலாவது தேசிய விருதை இப்போது வென்றிருப்பது, அவரது வாழ்க்கைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, மிகப்பெரும் கௌரமாக அமைந்துள்ளது.
“ஜவான்” படத்தில் தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 71வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற ஷாரூக்கான், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். ஆக்சன் காட்சிகளிலிருந்து உணர்ச்சிபூர்வமான நடிப்புவரை, பல்வேறு விதமான வேடங்களில் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்திய ஷாரூக், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மனதையும் கவர்ந்திழுத்துள்ளார். இவ்விருது அவரது திரைப்பயணத்திற்கு மிக உரிய பெருமையாகும்.
சமீபத்தில், தனது மகன் ஆர்யன் கானின் இயக்கிய அறிமுகப்படைப்பு The Ba***ds of Bollywood சீரிஸில், சிறப்பு தோற்றத்தில் நடித்தார் ஷாரூக்கான். அடுத்ததாக, சித்தார்த் ஆனந்த் இயக்கும் King திரைப்படத்தில் மகள் சுஹானாகானுடன் இணைந்து நடிக்க உள்ளார். 2026-இல் வெளியாகவுள்ள இந்தப் படத்தில், ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே இணையும் காட்சிகளும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் தேசியவிருது பெற்றதை, ரசிகர்கள் மிக உற்சாகமான கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது.
தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது அதே போல ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது.
பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த இரண்டு நிழச்சிகளின் பங்கேற்பாளர்களும் ஒன்றாக பங்கேற்க, “சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்” எனும் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.
சூப்பர் சிங்கரின் பிரபல பாடகர்களும், குக் வித் கோமாளியின் கோமாளி நகைச்சுவை வித்தகர்களும், ஒன்றாக வந்து கலக்கும் புரமோ வீடியோக்கள், இப்போது இணையமெங்கும் வைரலாக பரவி, பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
குக்வித் கோமாளியில் செய்ய வேண்டிய டிஷ்சை, பாட்டுப்பாடி அதிலிருந்து போட்டியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும், போட்டியாளர்களோடு சூப்பர் சிங்கர் போட்டியாளர்களின் அடாவடியும் அடங்கிய புரமோ மற்றும் சூப்ப சிங்கர் போட்டியின் ஜட்ஜான இயக்குநர் மிஷ்கினின் பிறந்த நாளை, அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி அவரை நெகிழ வைக்கும் புரமோ என, இந்த வீடியோக்கள் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.
பல பல புதுமைகளை படைத்து வரும் விஜய் தொலைக்காட்சி இப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த சங்கமத்தை முன்னெடுத்து, அசத்தியுள்ளது.
இனிமையான இசையும், நகைச்சுசை சரவெடியும் ஒன்றாக கலக்கும் சங்கமத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
“சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்”, வரும் செப்டம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் சனி, ஞாயிறு கிழமைகளில், மாலை 6.30 மணிக்கு, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள் !!
Promo Link 🔗 https://youtu.be/hwX4EWZVvyw?si=pE7TcK68O-EAj-rCv
Promo Link 🔗 https://youtu.be/CsbJWJDnAIQ?si=IxlaU9Sq5cHorcOr
சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது.
வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளது. புதிய முயற்சிகள், தரமான விநியோகம், புதுமுக இயக்குநர்களுக்கு ஆதரவு ஆகியவற்றின் மூலம், நிறுவனம் உலகளாவிய தமிழ் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கையான பெயராக திகழ்கிறது.
வித்துர்ஸ் மற்றும் லிஷா தங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த நேரத்தில், அகிம்சா என்டர்டெயின்மென்ட் தமிழ் சினிமாவின் சர்வதேச செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து செயல்படும்.
மார்க் ஸ்வர்ணபூமியில்,( MARG Swarnabhoomi ) ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’ (Hukum) உலக சுற்றுப்பயணத்தின் பிரமாண்ட நிறைவு விழா, வரலாறு படைத்தது
ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரின் “ஹுக்கும்”(Hukum)உலக இசைச் சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்ட கச்சேரி, 2025 ஆகஸ்ட் 23-ஆம் தேதி, குவாத்தூர்(Kuvathur), ECR-ல் உள்ள மார்க் ஸ்வர்ணபூமியில் நடைபெற்றது. 50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று, சென்னை கண்ட மிகப்பெரிய, சிறப்பாக திட்டமிடப்பட்ட இசை நிகழ்வுகளில் ஒன்றாக, இந்த இசை நிகழ்ச்சி புதிய வரலாறு படைத்திருக்கிறது.
பரந்த வாகன நிறுத்துமிடம், உணவு மற்றும் குடிநீர் அரங்குகள், அனைத்து பகுதிகளிலும் கழிப்பறைகள், மருத்துவ மையங்கள், வலுவான உள்கட்டமைப்பு மற்றும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நிகழ்ச்சி எந்த தடங்கலும், இடையூறுகளும் இல்லாமல் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. பெருமளவிலான காவல்துறை மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியிலும் போக்குவரத்து மற்றும் ரசிகர்கள் பாதுகாப்பு மிகச்சிறப்பாக கையாளப்பட்டது.
ராக் ஸ்டார் அனிருத் மேடையை அதிர வைத்தார். ஹிட் பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாடி ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்தார். குறிப்பாக வானத்தில் காட்சியளித்த ட்ரோன் (drone) நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, நிறைவு நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக அனைவரையும் ஈர்த்தது. ரசிகர்கள் பலருக்கு இது அவரது சிறந்த கச்சேரியாக நினைவில் நிறைந்தது.
“ஹுக்கும்” Hukum உலக சுற்றுப்பயண இறுதிக்கட்ட கச்சேரி, பிராண்ட் அவதார் நிறுவனத்தால் உலகத் தரத்தில் நடத்தப்பட்டு, சென்னை நேரடி இசை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிந்துள்ளது.