ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி டிராப் 1’ வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது_
டங்கி திரைப்படத்தின் முதல் பார்வையான, “டங்கி டிராப் 1” வெளியான வேகத்தில், மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இந்த வீடியோ, ராஜ்குமார் ஹிரானி வடிமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.
சோனு நிகாமின் மாயாஜாலக் குரல், ராஜ்குமார் ஹிரானி மற்றும் படக்குழுவினருடன் இணைந்த SRK வின் மயக்க்கும் வசீகரம், என இப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். நட்பு, நகைச்சுவை, சிரிப்பு ஒரு துளி கண்ணீர் என அனைத்து உணர்வுகளாலும் நம்மை மூழ்கடித்து, நம் இதயங்களில் உண்மையிலேயே ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது “டன்கி டிராப் 1”!
மனதைக் கவரும் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் சினிமாவின் அழகை எடுத்துக்காட்டி, ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட மிகவும் திறமையான நடிகர்களின், வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், உங்களை ஒரு ரோலர்-கோஸ்டரில் பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது
தங்கலான் படத்தில் பழங்குடிப்பெண்ணாக கலக்கும் மாளவிகா மோகனன்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.
சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள “தங்கலான்” திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான “பியாண்ட் தி க்ளவுட்ஸ்”, படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.
தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா ரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிவது, சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். “தங்கலான்” படத்தில் தீவிரமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.
திரைப்படத் துறையில் பல்வேறு பாத்திரங்களில் அசத்தி வரும், மாளவிகா மோகனனின் திறமை அவரது ரசிகர்கள் பாராட்டக்கூடிய ஒன்றாகவுள்ளது, மேலும் இது அவரது வரவிருக்கும் திரைப்படங்களுக்குப் பார்வையாளர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது
அகாடமி விருதுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்குவதற்கான மற்றும் அதனை மேற்பார்வையிடும் பொறுப்பு மிக்க அமைப்பான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் குழுவில், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் இணைந்திருக்கிறார்.
அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் அண்மையில் புகழ்பெற்ற பான் இந்திய சூப்பர் ஸ்டாரான ராம்சரண், மதிப்புமிக்க நடிகர்களின் பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சினிமா துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புக்காக கொண்டாடப்படும் வகையில் ராம் சரண் ஆஸ்கார் விருதுகளை வழங்கும் பொறுப்பு மிக்க அகாடமி விருதுகளை மேற்பார்வையிடும் நடிகர்களுக்கான அணியில் இணைகிறார்.
94 ஆவது அகாடமி விருதுகளில் ‘ஆர் ஆர் ஆர் ‘ எனும் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தின் சமீபத்திய வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘நாட்டு நாட்டு..’ என்ற மறக்க முடியாத பாடலுக்காக… சிறந்த அசல் பாடலுக்கான ஆஸ்கார் விருதை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த முக்கிய அறிவிப்பு வெளியானது. திரைப்பட துறையில் அவரது விதிவிலக்கான திறமைகள் மற்றும் ஈர்க்கக்கூடிய பணியை அங்கீகரிப்பதற்காக ராம் சரண்- தற்போது நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
அகாடமி தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இதற்கான உற்சாகமான செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ராம்சரணின் அறிமுகத்தை கொண்டாடுவதுடன் மட்டுமல்லாமல் மோஷன் பிக்சர் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது. இது தொடர்பாக அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ” அவர்களின் நுணுக்கமான சித்தரிப்பு மற்றும் நம்பகத் தன்மைக்கான அர்ப்பணிப்பு மூலம் இந்த நடிகர்கள் நம் இதயங்களிலும், மனதிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை நமக்கு பரிசளிக்கிறார்கள். அவர்களின் கலை வடிவத்தின் தேர்ச்சி சாதாரண தருணங்களை கூட.. ஆசாதாரணமான சினிமா அனுபவங்களாக மாற்றுகிறது. மனித உணர்ச்சிகளின் ஆழம் மற்றும் சிக்கலான தன்மைக்கான நமது பாராட்டுகளை வளப்படுத்துகிறது. மேலும் அகாடமியில் நடிகர்கள் பட்டியலுக்கு இந்த திறமையான கலைஞர்களை வரவேற்பதில் தாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என குறிப்பிட்டிருக்கிறது.
மேலும் இந்த நடிகர்களின் குழுவில்…
லஷானா லிஞ்ச் ராம் சரண் விக்கி க்ரிப்ஸ் லூயிஸ் கூ டின்-லோக் கேகே பால்மர் சாங். சென் சகுரா ஆண்டோ ராபர்ட் டேவி மற்றும் பலர்.
இது தொடர்பானப் பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ள கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும். https://www.instagram.com/p/CzHvIyzv7KQ
பதினாறு ஆண்டுகளுக்கும் மேலான திரைத்துறை வாழ்க்கையில் ராம் சரண் தனது குறிப்பிடத்தக்க நடிப்பு, திறமை மற்றும் தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தொடர்ந்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார். அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் & சயின்ஸ் நடிகர்களின் பிரிவில் அவர் இணைக்கப்பட்டிருப்பது… உலகளாவிய திரையுலகில் அவருடைய செல்வாக்கிற்கு சான்றாக திகழ்கிறது.
அடுத்தடுத்து சிறந்த நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தும் ராம் சரண் தற்போது ‘கேம் சேஞ்சர்’ எனும் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பாளரான எஸ். ஷங்கர் இயக்கியிருக்கிறார். மேலும் ராம்சரணுடன் கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ராம்சரணின் திரையுலக பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என உறுதியாக தெரிய வருகிறது.
எழுத்தாளர் பாஸ்கர்சக்தி இயக்கத்தில் வடக்கன் இசையமைப்பாளர் ஜனனியின் இசையமைப்பில் ‘தேனிசைத் தென்றல்‘ தேவா அவர்கள் பாடினார்
எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல் முறையாக எழுதி இயக்கும் திரைப்படம் `வடக்கன்’
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெரு நகரம் துவங்கி குக்கிராமங்கள் வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான, நகைச்சுவை கலந்த, பொழுது போக்குத் திரைப்படமாக ‘வடக்கன்’ உருவாகியுள்ளது.
அழகர்சாமியின் குதிரை, மேற்குத் தொடர்ச்சி மலை, தரமணி, பேரன்பு, கர்ணன், நண்பகல் நேரத்து மயக்கம், மாமன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் வடக்கன் திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
புத்தகப் பதிப்புத் துறையில் புகழ் பெற்று விளங்கும், முன்னணிப் பதிப்பாளர் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் அவர்கள் முதல் முறையாக வடக்கன் திரைப்படத்தை தயாரித்து வழங்குகிறார்.
கூத்துப் பட்டறை மாணவரான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும், ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும், இன்னும் பல புதுமுகங்களின் சிறந்த நடிப்பில் உருவாகி இருக்கிறது ‘வடக்கன்’
கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், வெஸ்டர்ன் க்ளாஸிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், தனிப் பாடல்கள் மற்றும் இசைஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான S.J. ஜனனி ‘வடக்கன் ‘ திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார்.
படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை கவிஞர் ரமேஷ் வைத்யா அவர்கள் எழுத, “தேனிசைத் தென்றல்’ தேவா அவர்கள் பாடினார்.
பாடலைப் பாடி முடித்ததும் தேவா அவர்கள் காட்சியின் ஆன்மாவைக் கடத்தும் இசையையும், அதற்கு ஒத்திசைந்து உயிரூட்டும் பாடல் வரிகளையும் உருவாக்கிய இசையமைப்பாளர் ஜனனியையும், கவிஞர் ரமேஷ் வைத்யாவையும் மனதாரப் பாராட்டினார்.
சிறந்ததொரு திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும்
விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ரெய்டு’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்வில் முதலாவதாக பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, “இயக்குநர் முத்தையா இந்தப் படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா இதற்கு முன்பு இணைந்து நடித்தப் படங்கள் வெற்றி பெற்றது போல இதுவும் ஹிட்டாகி தயாரிப்பாளருக்கு லாபம் தரக்கூடியதாக அமையும். சாம் சி.எஸ். இசையில் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. திரையரங்குகளில் பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்றார்.
எடிட்டர் மணிமாறன், “என்னை நம்பி வாய்ப்புக் கொடுத்த இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நன்றி. படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள்”.
ஒளிப்பதிவாளர் கதிரவன், “இந்தப் படத்தில் நான் வேலை செய்ய முக்கிய காரணமாக இருக்கும் முத்தையா அண்ணனுக்கு நன்றி. இன்று தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது. உணர்வுகளை சரியான விதத்தில் வெளிப்படுத்துவதுதான் ஒளிப்பதிவாளருக்கு இருக்கும் பெரிய சவால் என்று நினைக்கிறேன். முடிந்தளவு அதை சரியாக இந்தப் படத்தில் கையாண்டுள்ளேன். என்னுடைய பார்வையில் எல்லா கலைஞர்களையும் வேறு விதமாக காட்ட முயற்சித்துள்ளேன். படத்தில் என்னை ஊக்குவித்து ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி”.
ஸ்டண்ட் மாஸ்டர் கணேஷ் பேசியதாவது, ” கமர்ஷியல் படத்துக்கு ஏற்ற ஆக்ஷன் விஷயங்களை இதில் கொடுத்துள்ளோம். விக்ரம் பிரபு சார் அருமையாக செய்துள்ளார். இயக்குநர் முதல் படத்திற்காக கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். ரெய்டு தீபாவளிக்கு சரவெடியாக இருக்கும்”.
கலை இயக்குநர் வீரமணி கணேசன், “இயக்குநரான பின்பு கார்த்தி இதில் இரண்டு மடங்கு உழைப்பைக் கொடுத்துள்ளார். ரெய்டு ஒரு மாஸான படம். அதற்கேற்ப அனைவரும் உழைத்துள்ளனர்”.
நடிகர் ரிஷி, “முத்தையா, விக்ரம் பிரபு சாருக்கு நன்றி. சண்டைக் காட்சிகளை முடிந்தளவு சிறப்பாக செய்துள்ளேன். எல்லோருக்கும் நன்றி”.
நடிகர் செளந்தரராஜன், ” நாளைக்கு ஷூட்டிங் எனும் போது என்னை அதற்கு முந்தைய நாள் அழைத்தார்கள். முத்தையா அண்ணனிடம் படம் நடிக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. ‘குட்டி புலி’ படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போனது. அதனால் இந்தப் படத்தின் வாய்ப்பு வந்தபோது கதை கேட்காமல் ஒத்துக்கொண்டேன். இயக்குநர் கார்த்தி சிறப்பாக செய்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளோடு இளைஞர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என அனைவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்”.
இயக்குநர் வேலு பிரபாகரன், “இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்திக், விக்ரம் பிரபு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. என்னை ஒரு இயக்குநராக அறிமுகப்படுத்தியதில் நடிகர் பிரபுவுக்கு முக்கிய பங்குண்டு. அப்படியானவரின் மகனுடன் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. இந்த நாட்டை கீழான நிலையில் இருந்து மீட்க கலைஞர்கள் முக்கியம். சாதி ஒழிப்பு, சனாதனத்தை கலை மூலம் முன்னெடுக்க வேண்டும். வாய்ப்புக்கு நன்றி”.
நடிகர் கண்ணன் பொன்னையா, ” முத்தையா சாரின் வசனத்தில் நடித்தது எனக்கு பெருமை. இயக்குநர் கார்த்தி சின்ன பையனாக இருந்தாலும் சிறப்பாக வேலை பார்த்துள்ளார். சூர்யாவுக்கு ‘காக்க காக்க’ போல, விக்ரமுக்கு ‘சாமி’ போல, விக்ரம் பிரபுவுக்கு ‘ரெய்டு’ ஒரு பிராண்டாக அமையும்”.
நடிகர் செல்வா, “‘வலிமை’ படத்தில் இருந்து தொடர்ந்து நான்காவது போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் அப்பாவுக்காக போலீஸ் கதாபாத்திரங்கள் செய்வேன். போலீஸ் பற்றி நிறைய நெகட்டிவான விஷயங்கள் வருகிறது. அவர்கள் பற்றி நல்லது வைரல் ஆவதில்லை. அப்பாவின் நினைவாக என் சம்பளத்தில் இருந்து சில நல்ல விஷயங்கள் செய்ய இருக்கிறேன். ரெய்டு படம் வெற்றி பெற வாழ்த்துகள்”.
நடிகை அனந்திகா, ” இது எனக்கு முதல் படம். நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.
இயக்குநர் கார்த்தி, “இது என்னுடைய முதல் படம். இந்த சந்தோஷத்தைக் கொடுத்த முத்து மாமாவுக்கு நன்றி. விக்ரம் பிரபு எனக்கு அண்ணன் போல. அந்த அன்பு கடைசி வரை இருக்கும். ஸ்ரீதிவ்யா சிரித்த முகமாகவே இருப்பார். என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்த அனைவருக்கும் நன்றி. படம் 10ஆம் தேதி வெளியாகிறது”.
இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா, “‘கொம்பன்’, ‘மருது’ போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என ‘ரெய்டு’ படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் ‘டாணாக்காரன்’ நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. ‘ரெய்டு’ படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்”.
நடிகை ஸ்ரீதிவ்யா, “‘ரெய்டு’ படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். ‘மருது’ படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்”.
நடிகர் விக்ரம் பிரபு, ” நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார்” என்றார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் ’பார்க்கிங்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ள பாராட்டிற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகர் ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்க படத்தினை பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் ‘பிளாக்பஸ்டர் இயக்குநரான’ லோகேஷ் கனகராஜ் படம் வெற்றிப் பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ’’பார்க்கிங்’ படம் பற்றி நிறைய நேர்மறையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். மேலும், படத்தின் ஒன்லைனும் சுவாரஸ்யமாக உள்ளது. சினிஷ், சுதன் சுந்தரம், ராம்குமார் பாலகிருஷ்ணன், ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனது சகோதரர்களான சாம் சிஎஸ் மற்றும் எடிட்டர் பிலோமின் ஆகியோருக்கு சிறப்பு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.
‘பார்க்கிங்’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலிக்கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்பு), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
இந்த கிறிஸ்துமஸ் நன்நாளில் அன்பையும் நட்பையும் கொண்டாடும் ஒரு அற்புதத்தை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி!!
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட பல அற்புதமான திரைப்படங்களை வழங்கியுள்ளார், தற்போது ரசிகர்களின் மனதை இலகுவாக்கும் மற்றுமொரு அற்புதமான நகைச்சுவை திரைப்படைப்பான டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.
டங்கி திரைப்படம், இந்த தலைமுறையில் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும், இரண்டு மிகப்பெரும் திரைக் கலைஞர்களான SRK மற்றும் ராஜு ஹிரானி ஆகிய இருவரும் இணையும் திரைப்படமாகும்!. நமக்குள் அன்பான நினைவுகளைத் தூண்டி, சினிமாவின் இனிமையையும், அதைக் கண்டுகளிக்கும் ஏக்கத்தையும் நம்முள் திரும்பக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்படம்.
இன்று வெளியிடப்பட்ட ‘டங்கி டிராப் 1″, ராஜ்குமார் ஹிரானி அமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.
இந்த வீடியோ ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட மிகவும் திறமையான நடிகர்களின், வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், உங்களை ஒரு ரோலர்-கோஸ்டரில் பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
மனதை மயக்கும் ஒரு தனித்துவமான கதையுடன், திரையில் சாகசமிக்க ஒரு பயணத்தை, இந்த கிறிஸ்துமஸில் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக வழங்கவுள்ளது!
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.
1974 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக தெலுங்கு சினிமாவில் வளர்ச்சி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் திரைத் துறை சார்ந்த தொழில்துறையில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஒத்துழைத்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பல திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் தொழில்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிறுவனம். இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவனம் புதிதாக ‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. 50 ஆண்டுகள் நிறைவடையொட்டி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2024 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ‘கல்கி 2898 கி.பி.’ என்ற பிரம்மாண்ட இலட்சிய படைப்பின் வெளியீட்டிற்கு முன்னதாக அவர்கள் இந்த வைஜெயந்தி மியூசிக் எனும் இசை நிறுவனம் தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மேலும் ‘எங்கள் இசையை உங்கள் வாழ்வில் கொண்டு வருவோம்’ என்பதுதான் வைஜெயந்தி மியூசிக் எனும் மியூசிக் பிராண்டின் நோக்கம் என இந்நிறுவனம் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் பிரமிக்க வைக்கும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங்க் வீடியோ பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்குத் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வினில் கலந்துகொண்டு….
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா பேசியதாவது… சீயான் விக்ரம் சாருக்கு ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் நிறுவனத்துடன் முதல் படம், மிகவும் அன்பானவர், கடின உழைப்பாளி தன் வேலையை மிக அர்ப்பணிப்புடன் செய்பவர். நானும் பா ரஞ்சித்தும் விக்ரம் சாரை சந்திக்கச் சென்ற போது என்ன தேதிகள் வேண்டும் என்றார், அந்த தேதிகள் தள்ளிப்போனபோது கூட அதே கெட்டப்பில் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இந்தப்படத்துக்காக காத்திருந்து உழைத்தார். அவர் அர்ப்பணிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டோம். அவரது உழைப்பு மிகப்பெரிது. இந்தப்படத்திற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ரஞ்சித் சார் எப்படிப்பட்ட படம் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் முதல் படத்திலிருந்து இது தான் செய்ய வேண்டும் என முடிவு செய்து மிகச்சரியாகச் செய்து வருகிறார். அதற்கான வெற்றியையும் அவர் பெற்று வருகிறார். இந்தப்படம் அவருக்கு இன்னும் பெரிய இடத்தைப் பெற்றுத்தரும். ஜீவி பிரகாஷ் எங்கள் வீட்டுப் பிள்ளைபோல இந்தப்படத்திற்காகச் சிறந்த இசையைத் தந்துள்ளார். கிஷோர் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார், எல்லோரும் விஷுவல் பார்த்து அவரைப்பற்றிக் கேட்டார்கள். அவர் மட்டுமில்லாமல் கலை இயக்கம், ஸ்டண்ட் என எல்லாத் துறையும் இந்தப்படத்தில் பேசப்படும். இந்த மாதிரியான ஒரு படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. இது உலக அளவில் அனைவரும் ரசிக்கும்படியான படமாக இருக்கும். நம் தமிழ் சினிமாவின் பெயரை உலகம் முழுக்க இந்தப்படம் சொல்லும். ஸ்டூடியோ க்ரீன் பிலிம்ஸ் ஆரம்பித்த போது பாலா சாரை வைத்து படம் எடுப்பதாக இருந்தது, அப்போது ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போது, சீயான் சாரை சொன்னார். விக்ரம் சாருக்கு அது தெரியாது. அவரை வைத்து முதல் படம் தயாரிக்க இந்த நிறுவனத்திற்கு சூர்யா சார் வைத்த பெயர் தான் ஸ்டூடியோ க்ரீன். சூர்யா சார் விக்ரம் சாருக்காக வைத்த பெயர் தான் இது. அப்போது அது நடக்கவில்லை, இப்போது நடப்பது மகிழ்ச்சி.
எடிட்டர் RK செல்வா பேசியதாவது.. என் கரியரில் இது மிக முக்கியமான படம். இது விஷுவலாக பேசும் படம் அதனால் டீசரில் அதைக்காட்டலாம் என நினைத்துத் தான் டயலாக் இல்லாமல் எடிட் செய்தோம். எனக்கு நீண்ட காலமாக வரலாற்றுப் படத்தில் வேலை பார்க்க ஆசை இருந்தது. அது இந்தப்படத்தில் அமைந்தது மகிழ்ச்சி. பா ரஞ்சித் அண்ணா, ஒவ்வொரு படத்திலும் அவருடன் எங்களையும் வேறு உயரத்திற்கு அழைத்துச் செல்கிறார். விக்ரம் சாரை விஷுவல்களில் பார்த்து நிறைய முறை பிரமித்திருக்கிறேன். எப்படி இந்த மனுசன் இவ்வளவு உழைக்கிறார் எனத் தோணும். இந்தப்படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி
கலை இயக்குநர் SS மூர்த்தி பேசியதாவது… கல்லூரி காலத்திலிருந்தே பா ரஞ்சித் சார் எனக்குப் பழக்கம். அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சி. எனக்கு முழு சுதந்திரம் தந்தார். ஒரு வேலையைச் சொல்லிவிட்டால் முழுதாக என்னிடம் விட்டுவிடுவார். அதைப்பற்றிக்கேட்க மாட்டார். விக்ரம் சாருடன் பணிபுரிந்தது மிகச் சந்தோஷமாக இருந்தது. என்னுடன் இணைந்து உழைத்த இந்தப்படத்தின் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
பாடலாசிரியர் உமாதேவி பேசியதாவது.. இலக்கியப் பரப்பிலிருந்து எனது கவிதைகளைத் திரை உலகிற்குக் கொண்டு சேர்க்க எனக்கு உறுதுணையாக இருக்கும் தாயுமானவன் ரஞ்சித் சாருக்கு நன்றி. ஸ்டூடியோ க்ரீனில் என் முதல் பாடல் அமைந்தாலும், இந்த தங்கலான் மிக முக்கியமான படமாக உள்ளது. பா ரஞ்சித் மிக உறுதுணையாக இருந்தார். தங்கலான் இரண்டு பாடல்களும் அட்டகாசமாக வந்துள்ளது எல்லோருக்கும் நன்றி.
உடை வடிவமைப்பாளர் ஏகாம்பரம் பேசியதாவது…. நான் படித்த படிப்பிற்குக் கிடைத்த முழுமையான வேலையாக தங்கலானைப் பார்க்கிறேன். 10 வருடங்களாக நேச்சுரல் டை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இந்தப்படத்தில் அதைப்பயன்படுத்த முடிந்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ஸ்பாட்டிலேயே நேச்சுரல் டை தயாரித்து, அங்கு உடைகள் தயாரித்து ஆர்டிஸ்டுக்கு தந்தேன், பா ரஞ்சித் அண்ணா என்னிடம் இந்த வேலையைக் கொடுத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் இயற்கையோடு இணைந்து உடைகளை உருவாக்கியுள்ளோம். பா ரஞ்சித் இயற்கையை நேசிப்பவர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றிகள்.
எழுத்தாளர் தமிழ்பிரபா பேசியதாவது… என் முதல் சினிமா மேடை இது தான். பா ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதும் இரண்டாவது படம் இது என்றாலும், அது ஓடிடி போய்விட்டது இது தான் என் கன்னிப்பேச்சு. பொதுவாக எழுத்தாளர்களைத் தமிழ் சினிமாவில் மதிப்பதில்லை, மலையாளத்தில் மரியாதை தருகிறார்கள் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அதை ரஞ்சித் உடைத்துத் தொடர்ந்து முழு மரியாதை தந்து வருகிறார் அதற்காக எழுத்தாளர்கள் சார்பில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஒரு திரைக்கதையாக இந்தப்படம் தனித்துவமாக எப்படி இருக்கப்போகிறது என்பதில் ரஞ்சித் அவர்களுடன் இணைந்து எழுதியது மிக உற்சாகமாக இருந்தது, சவாலாக இருந்தது. இந்தப்படம் உங்களை பல்வேறு வகையான சிந்தனைக்குள் கொண்டு செல்லும் எல்லோருக்கும் நன்றி.
நடிகர் முத்துக்குமார் பேசியதாவது… இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. சர்பட்டாவிற்கு பிறகு மிக முக்கியமான ஒரு ரோல் தந்துள்ளார், அவர் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறேன். டீசர் பார்த்து விட்டு மிரண்டுவிட்டேன். விக்ரம் சாருக்கு நன்றி, மகானுக்குப் பிறகு அவர் உழைப்பைப் பார்த்துப் பிரமிப்பாக இருக்கிறது. இங்குள்ள அனைவருக்கும் என் நன்றிகள்
ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் பேசியதாவது.. என்னைத் தொடர்ந்து மேடை ஏற்றும் ஒரே கலைஞர் ரஞ்சித் அண்ணா. சினிமாவை நேசிப்பவர் நிறையப் படங்கள் பற்றி அவருடன் பேசுவேன். இடங்களை அப்படியே அதன் பிரமிப்பைத் திரையில், அதே ஒளியில் கொண்டு வர ஆசைப்படுவார், என்னைப்பார்த்து என் வேலையைப் பார்த்து உடனுக்குடன் பாரட்டுவார். முடிந்தளவு இயற்கை ஒளியோடு திரைக்கு இந்தக்கதையைக் கொண்டு வந்துள்ளோம். நான் முதன் முதலில் கல்லூரியில் பார்த்து ரசித்த ஹீரோ விக்ரம் சார் அவரை நான் படம்பிடிப்பேன் என நினைக்கவில்லை. அப்போதிருந்த அதே எனர்ஜியோடு இப்போதும் மிரட்டுகிறார். டீசரில் நீங்கள் என்ன பார்த்தீர்களோ, அதை விடப் பிரமிப்பான விசயங்கள் படத்தில் இருக்கும் அனைவருக்கும் நன்றி.
ஸ்டன்னர் சாம் பேசியதாவது.. இந்தப்படம் மிக வித்தியாசமான படம். ஸ்டண்ட் காட்சிகள் மிகக் கடினமான பணியாக இருந்தது, மற்ற படங்கள் போல கேமராவை நினைத்த மாதிரி வளைக்க முடியாது. எல்லாமே ஒரே ஷாட்டாக இருக்கும் ஆனால் எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து, விக்ரம் சார் கலக்கியிருக்கிறார். அவருக்கு இந்தப்படத்தில் அடிபட்டது ஆனால் அதையும் தாண்டி வந்து ஆக்சன் காட்சிகளில் நடித்தார் அவரிடம் சாரி கேட்டுக்கொண்டே இருப்பேன் அந்த அளவுக்கு அடிபட்டிருக்கிறார். இந்தப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும், தங்கலான் உங்கள் மனதில் தங்குவான். நன்றி.
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது… எனக்கு மிக முக்கியமான, வித்தியாசமான படம் தங்கலான். இப்படத்தின் இசையை இண்டியன் டிரைபலையும் இண்டர்னேசனலையும் மிக்ஸ் பண்ணி புதுமையாகச் செய்துள்ளோம், அதை எல்லோரும் கவனித்துப் பாராட்டுகிறார்கள். தங்கலான் ஒரு கோல்டன் டீம், எல்லோரும் அவ்வளவு உழைத்திருக்கிறார்கள். எல்லோரும் அவர்களுடைய பெஸ்ட்டை தந்துள்ளார்கள். விக்ரம் சார் இந்தப்படத்தில் மிகப்பெரிய உழைப்பைத் தந்திருக்கிறார், ஒவ்வொரு படத்திலேயும் அவர் பாத்திரத்திற்காக மெனக்கெடுவார் ஆனால் இந்தப்படத்தில் கதையும் அவருக்கு வித்தியாசமாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் கிறிஷ்டியன் பேர்ல் போல உழைத்திருக்கிறார். என்ன கஷ்டப்பட்டாலும் அதை வெளிக்காட்டமாட்டார். ஒவ்வொரு படத்திலும் பா ரஞ்சித் வேறு உயரத்தைத் தொடுகிறார், அவர் படத்தை வடிவமைக்கும் விதம் பிரமிப்பாக இருக்கிறது. அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்கும் எப்போதும் கேப்டன் கூல் மாதிரி கூலாக இருக்கிறார். கலை இயக்குநர் SS மூர்த்தி இந்தப்படத்தில் அட்டகாசமாக உழைத்திருக்கிறார். எடிட்டர் மிகச்சிறப்பாக எடிட் செய்திருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் அருமையாக வந்திருக்கிறது. இந்தப்படம் உங்கள் எல்லோரையும் அசரவைக்கும் அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது… டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும் இது டீசர் வெளியீடு தான் இன்னும் பல மேடைகள் இருக்கிறது. இந்தப்படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்று வரை அதைப்பற்றி ஒரு கேள்வி கூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கு எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலானது. அட்டகத்தியில் இருந்து இப்போது வரை தொடர்கிறது. அவர் கமர்ஷியல் தயாரிப்பாளர் ஆனால் அவர் ஆர்டிஸ்டிக் படம் எடுக்கிறார் என்றால் என் கூடத்தான் செய்வார். அந்தளவு என்னை நம்புகிறார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன் என நினைக்கிறேன் அவரைத் திருப்திப்படுத்துவது கஷ்டம், இந்த டீசருக்கு கூட நிறையக் கட் கேட்டார். கடைசியாக அவர் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன் திருப்தியாக இருந்தது. விக்ரம் சார், ஒரு நடிகனாக அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அவருடன் இணைந்து வேலைப் பார்க்க வேண்டும் என்று எனக்கே ஆசை இருந்தது. சர்பட்டாவிற்கு பிறகு அவருடன் இணைகிறோம் என்ற போது, என்ன மாதிரி இருக்க வேண்டும் என்று நிறைய யோசித்தோம். இந்தக்கதை சொன்ன போது அந்தக் கதாபாத்திரமாகவே மாறி வந்தார். பொதுவாக நான் என் நடிகர்களின் கதாப்பாத்திர லுக்கை மாற்ற நிறைய உழைப்பேன், சின்ன சின்னதாக நிறைய வேலை பார்ப்போம் ஆனால் முதல் முறையாக விக்ரம் சார் எனக்கு நிறைய சாய்ஸ் தந்தார். அவர் அந்த கதாபாத்திரமாக முழுதாக மாறிவிட்டார். இந்தப்படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் பெரியது, இத்தனை வருடத்திற்குப் பிறகும் இத்தனைப் படத்திற்குப் பிறகும் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என ஆச்சரியமாக இருக்கும் அவரிடமே கேட்பேன், நடிப்பு தான் அவருக்கு எல்லாமே. அவருக்கு அடிபட்டு விட்டது ஆனால் அதற்கப்புறம் ஒரு ஆக்சன் காட்சி எடுக்க வேண்டி இருந்தது. காட்சி எடுக்கும் போது அவரால் முடியவில்லை என எனக்குத் தெரியும், என்ன சார் வலிக்கிறதா சார் என்றால் ஆமா என்பார், ஆனாலும் ரீடேக்கில் நடிப்பார். அவர் உழைப்பு பிரமிப்பானது. அவர் தான் இந்தப்படத்தைத் தாங்கியிருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர்கள் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். பார்வதி வித்தியாசமான ஒரு ரோலில் அசத்தியிருக்கிறார். பசுபதியை அவரது கேரக்டரை நீங்கள் எல்லோருமே ரசிப்பீர்கள். இந்தப்படத்தில் எல்லோருமே மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். ஜீவியை எனக்கு ரொம்பப் பிடிக்கும் இந்தப்படத்திற்கு அவர் இசையமைக்கிறார் என்ற போது, நடிக்கப் போய்விடுவாரே என்று பயமாக இருந்தது. ஆனால் அதைத்தாண்டி ஒவ்வொரு முறையும் அவர் இசையை என்னிடம் காட்டும் போது பிரமிப்பாக இருந்தது. அவர் கையில் தான் இந்தப்படம் மொத்தமும் உள்ளது. எடிட்டர் செல்வா பார்த்து, எனக்கே பயம் விஷுவல் பார்த்து என்ன சொல்வார் என நினைப்பேன், அவர் வேலை எப்போதும் சிறப்பாக இருக்கும் இந்தப்படத்திலும் மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டண்ட் சாம் மிரட்டியிருக்கிறார். கிஷோர் விஷுவல்கள் கண்டிப்பாகப் பேசப்படும். இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்கு இந்தப்படம் பிடிக்கும் நன்றி.
நடிகர் சீயான் விக்ரம் பேசியதாவது… வரலாற்றில் நடக்கும் நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது என்று என் தந்தை என்னிடம் சொல்லியிருந்தார். எல்லா நாட்டிலும் அவர்கள் வரலாற்றைக் கொண்டாடுகிறார்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தியாவில் அது போல் நிறைய விசயங்கள் நடந்துள்ளது ஆனால் இப்போதைய தலைமுறைக்கு அது தெரியவில்லை. டைட்டானிக் காதல் கதை என்றாலும், அதன் பின்னணி, அந்த கதை நடக்கும் இடம் கப்பல், அதன் வரலாறு அது தான் முக்கியம், அது போல் நம் வரலாற்றில் நடந்த நிகழ்வை அந்த காலகட்டத்தை அவர்கள் வாழ்க்கையைச் சொல்கிற படம் இது, இந்தப்படத்தைத் திரையில் கொண்டு வருவது அத்தனை கடினமாக இருந்தது. இந்தப்படம் செட்டுக்குள் எடுக்கவில்லை கேஜிஎஃப்பில் போய் அங்கு தங்கி எடுத்தோம், தேள் பாம்பு எல்லாம் சர்வசாதாரணமாக இருக்கும். கல் முள்ளில் வெறும் காலில் நடந்து, அவர்கள் உடை போட்டுக்கொண்டு நடித்தேன். முதல் முறை லைவ் சவுண்டில் நடித்திருக்கிறேன் அது இன்னும் கஷ்டம். டப்பிங்கில் நான் நிறைய மாற்றி விடுவேன், அந்நியனில் ரெமோ எல்லாம் டப்பிங்கில் மாற்றியது தான் ஆனால் இந்தப்படத்தில் அது நடக்காது. லைவ்வில் கச்சிதமாக அதே டோனில் பேச வேண்டும். கேமராவும் ஷாட் கட்டாகுது ஒரே ஷாட்டில் சுற்றி வரும், ரெஸ்ட்டே இருக்காது. ஆனால் எத்தனை கஷ்டப்பட்டாலும் மறுநாள் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் நான் இது மாதிரி உணர்ந்ததே இல்லை, ரஞ்சித்திற்கு நன்றி. ரஞ்சித் சார்பட்டா படத்தை விட 100 மடங்கு உழைத்திருக்கிறார். நான் முன்னமே எந்தப்படத்திலும் இல்லாத மாதிரி இருக்க வேண்டும் என முடிவு பண்ணித்தான் இந்தப்படம் செய்தேன் ரஞ்சித் மிக அற்புதமான இயக்குநர் அதை இப்படத்தில் நிரூபித்திருக்கிறார். ஜீவி இந்தப்படத்தில் அட்டகாசமாக இசையமைத்திருக்கிறார். அவர் நடிக்க வந்தபோது வேண்டாம் நடிக்காதே, இயக்குநர்கள் இசையமைப்பாளர்கள் நடித்தால் எனக்கு வாய்ப்பு வராதே என நகைச்சுவையாகச் சொன்னேன், ஜீவி நடிப்பதால் இசை நன்றாக வருமா ? என நினைத்தேன் ஆனால் நடித்துக்கொண்டே எப்படி இப்படி பிரமாதப்படுத்துகிறார் என்று தெரியவில்லை, அவர் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் பெரிய படங்களில் அசத்துகிறார். ஞானவேல் ராஜாவுடன் முன்பே படம் செய்யப் பேசினோம், இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. இது எல்லோருக்கும் மிக முக்கியமான படமாக இந்திய சினிமாவில் ஒரு நல்ல படமாக இருக்கும் நன்றி.
இதனிடையே ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதியன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
யஷ்ராஜ் பிலிம்ஸ் இந்த பண்டிகை சீசனில் தங்களது லேட்டஸ்ட் ஸ்பை யுனிவர்ஸ் படமான ‘டைகர் 3’யை வழங்குவதன் மூலம் கட்டண கவுன்டர்களை நிறைக்க தயாராகிறது. சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடித்துள்ள ‘டைகர் 3’ தீபாவளி பண்டிகையில் நவ-12 ஞாயிறன்று வெளியாகிறது. ‘டைகர் 3 வெளியாகும்’ தினத்தன்று காலை 7 மணியில் இருந்து காட்சிகள் திரையிடப்பட துவங்குகிறது என்கிற செய்தியை தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்தியாவில் நவ-5ல் இருந்து ‘டைகர் 3’க்கான முன்பதிவை யஷ்ராஜ் பிலிம்ஸ் துவங்க இருக்கிறது. தீபாவளி விடுமுறையில் இப்படம் வெளியாவதால் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களுக்கென்றே இருக்கும் ரசிகர்கள், படம் குறித்த தேவையற்ற தகவல்கள் வெளியாவதை தவிர்ப்பதற்காக திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிகாலை காட்சிகளை நடத்துமாறு கூறியதால் திரையரங்குகளும் முன்கூட்டியே காட்சிகளை திரையிட வேண்டுகோள் வைத்திருக்கின்றன.
ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் படங்களை தொடர்ந்து யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வெற்றிப்படங்களின் வரிசையில் 5வது படமாக ‘டைகர் 3’ உருவாகியுள்ளது. யஷ்ராஜ் பிலிம்ஸின் ஆதர்ஷ இயக்குனரான மனீஷ் சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.
மல்டிபிளக்ஸ் பிரிமியம் திரையரங்குகளில் ‘டைகர் 3’யை கீழ்க்கண்ட வடிவமைப்புகளில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கமுடியும்
2D
IMAX 2D
4DX 2D
PVR P[XL]
DBOX
ICE
4DE Motion
யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களிலேயே மிகப்பெரிய வெளியீடாக இருக்கும் விதமாக ‘டைகர் 3’யை வெளியிடும் பணியில் யஷ்ராஜ் பிலிம்ஸ் இறங்கியிருக்கிறது. ஹிந்தி மட்டுமல்லாது, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் வெர்ஷன்களிலும் இப்படத்தை பார்த்து ரசிக்க முடியும்.