Cinema

“jinn the pet” திரை விமர்சனம்.

மலேசியாவில் உள்ள ஹோட்டலில் முகின் ராவ் தனது நண்பர்களோடு சேர்ந்து மியூசிக் குரூப்பில் பாடகராக இருந்து வருகிறார். முகின் ராவுக்கு மலேசியாவில் வேலை பார்ப்பதற்கு விசா முடிந்ததால் அங்கிருந்து தனது சொந்த ஊரான சென்னைக்கு வருகிறார்.சென்னைக்கு கிளம்பும் சமயத்தில் மலேசியாவில் உள்ள பழங்கால பொருட்கள் விற்கும் கடைக்கு செல்கிறார்பெட்டி ஒன்றை பார்க்கிறார்.அந்த பெட்டியில் ஜின் ஒன்றை அடைத்து வைத்திருப்பதாகவும் இது மனிதர்களைப் போலவே, ஆனால் அவர்களுக்குத் தெரியாத ஒரு வேறுபட்ட உலகத்திலிருந்து வந்தவை.நல்ல ஜின் எடுத்துக் கொண்ட முகேன் ராவ் அதை வாங்கிக் கொண்டு சென்னைக்கு திரும்பிக்கிறார்.

சென்னைக்கு வந்ததும்பவ்யா தரிகாவை சந்திக்கிறார் முகேன் ராவ் கதாநாயகி பவ்யா தரிகாவை காதலிக்க தொடங்குகிறார். இவர்களின் காதல் திருமணத்தில் முடிவடைகிறது.

முகேன் ராவ் மலேசியாவில் இருந்து எடுத்து வந்த ஜின்’னை, அவருடைய வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை.

இந்த வீட்டிற்கு ஜின் வந்ததில் இருந்து அபசகுணங்கள் நடந்து கொண்டே இருக்கிறது என வீட்டில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.வீட்டில் தனியாக இருக்கும் பவ்யா தரிகா தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடக்கிறார்.

பவ்யா தரிகாவின் இந்த நிலைக்குக் காரணம், இந்த ஜின் தான் என்று வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கூற, கோபத்தில் ஜின்’ஐ தூக்கி வெளியே வீசி விடுகிறார்.

அதன்பிறகு, முகேன் ராவின் வாழ்க்கையில் என்ன நடந்தது.? என்பதுதான் ஜின் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜீன் திரைப்படத்தில் கதாநாயகனாக முகேன் ராவ் நடித்திருக்கிறார்???????????????????

இந்த ஜீன் திரைப்படத்தில் கதாநாயகியாக பவ்யா தரிகா அழகாகவும் அளவாகவும் நடித்து வரும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

பால சரவணனின் காமெடி??????????????????????

ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, வினோதினி வைத்தியநாதன் என அனைத்து சீனியர் நடிகர்களும் தங்களது நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் விவேக் மெர்வின்

அடுத்த காட்சி இதுதான் என எளிதாக திரைப்படத்தின் கதையை யூகிக்கும் வண்ணம் எழுதியிருப்பது திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துள்ளது.

திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு பெண்ணின் உடம்பிற்குள் இருக்கும் ஜின்’னை வெளியேற்றும் காட்சிகள் மிரள வைத்தது போல மற்றும் எந்த காட்சிகள் திரைப்படத்தில் மிரள வைக்கவில்லை.

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’

மாவீரன் “காடுவெட்டி” குரு அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் படையாண்ட மாவீரா – இயக்குநர் வ.கௌதமன் பிரகடனம்.

நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர். ‘படையாண்ட மாவீரா’ இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றன‌ர். ‘பிக் பாஸ்’ புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.

நடிகர் இளவரசு பேசுகையில், “தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்,” என்றார்.

இயக்குநர் வி.சேகர் பேசுகையில், “இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பலம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.”

வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், “கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது ‘சந்தனக்காடு’ தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், “அண்ணன் கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது ‘படையாண்ட மாவீரா’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். ‘படையாண்ட மாவீரா’ படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்,” என்றார்.

சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், “இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், “படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், “தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், ‘படையாண்ட மாவீரா’ பிரம்மாண்டத்தின் உச்சம், ‘புஷ்பா’ படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும்,” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், “நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கிவிடக்கூடாது, மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது ‘படையாண்ட மாவீரா’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், “அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார்.

நீதிபதி கலையரசன் பேசுகையில், “அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமன் அவர்களை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ‘படையாண்ட மாவீரா’ படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்,” என்றார்.

‘படையாண்ட மாவீரா’ படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், “இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் ‘படையாண்ட மாவீரா’.

இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார்.

இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி.

எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் ‘சந்தனக்காடு’ எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.

இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.

என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “தம்பி கெளதமன் மிகுந்த‌ உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் ‘படையாண்ட மாவீரா’ என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார்.

கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். ‘சந்தனக்காடு’, ‘மகிழ்ச்சி’ அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான‌ ‘படையாண்ட மாவீரா’ மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. ‘படையாண்ட மாவீரா’ மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’

ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என். பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கியுள்ளார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைக்க, மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்ய, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்திற்கு ஆனந்த் மணி பொறுப்பேற்க, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ‘அக்யூஸ்ட்’ இசை வெளியீட்டு விழாவில் திரையுலக முன்னணியினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், “அக்யூஸ்ட் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்திருக்கும் திரையுலக முன்னணியினர், ஊடக நண்பர்கள், மற்றும் படக்குழுவினரை வரவேற்கிறேன். இந்த படம் நல்லபடியாக நிறைவடைந்ததற்கும் இன்றைய நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் உதயா தான் முக்கிய காரணம். திரைப்படம் மிகவும் அருமையாக உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி,” என்றார்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் பேசுகையில், “உதயாவின் தந்தை ஏ.எல். அழகப்பன் அவர்களும் நானும் நீண்டகால நண்பர்கள். எனவே உதயாவை எனக்கு சிறுவயது முதலே தெரியும். திரையுலகில் நீண்ட காலமாக போராடி வருகிறார். ‘அக்யூஸ்ட்’ காட்சிகள் பார்த்தேன், உதயாவின் திறமை பளிச்சிடுகிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. இப்படம் உதயாவின் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனையாக திகழும். படக்குழிவினருக்கு வாழ்த்துகள்,” என்றார்.

‘அக்யூஸ்ட்’ படத்தில் நடித்துள்ள பவன், பிரபாகர், ஓ மரியா புகழ் டானி, சுபத்ரா, தீபா பாஸ்கர் ஆகியோர் பேசுகையில் இப்படத்தில் பங்காற்றியதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, அனைவரின் ஒத்துழைப்போடு ‘அக்யூஸ்ட்’ மிகவும் சிறப்பாக உருவாகியிருப்பதாக கூறினர். படக்குழுவினர் அனைவரும் ஒரு குடும்பம் போல பழகியதாக அவர்கள் தெரிவித்தனர்.

‘அக்யூஸ்ட்’ படத்தின் இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் பேசுகையில், “திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இங்கு இருக்கிறீர்கள், அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை உதயாவிடம் கொடுத்த சிறிது நேரத்திலேயே அவர் அதை முழுவதும் படித்து ஓகே சொன்னதோடு, அவரது வேறு சில படங்களையும் இதற்காக தள்ளி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை தந்தனர்.

படம் தொடங்கிய முதல் நாளிலிருந்து படப்பிடிப்பு நிறைவடையும் வரை உதயா தந்த ஒத்துழைப்பு அலாதியானது. அவர் மற்றும் அனைத்து குழுவினரின் ஒத்துழைப்போடு பிரேக்கே இல்லாமல் தொடர் படப்பிடிப்பை நடத்தினோம். இப்படத்தில் இடம்பெறும் பஸ் சண்டைக்காட்சி மிகவும் பேசப்படும். ஒட்டுமொத்த படமும் ரசிகர்களை கவரும், நன்றி,” என்றார். அவரைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளர் மருதநாயகம்.ஐ மற்றும் கலை இயக்குநர் ஆனந்த் மணி பேசுகையில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், “என் குழுவில் பணியாற்றிய அனைத்து இசை மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்துள்ள அனைவரும் பாடலை பாராட்டினார்கள். அதற்கு முக்கிய காரணம் எனது குழுவினர் தான். ‘அக்யூஸ்ட்’ படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்தோம். எனவே உங்கள் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் மிகவும் எளிமையானவர்கள், இயக்குநர் நட்பானவர், உதயா மிகவும் இனியவர். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி, வணக்கம்,” என்றார்.

வீடியோ அழைப்பில் பேசிய நடிகர் யோகி பாபு, “வேறொரு இடத்தில் இரவு படப்பிடிப்பில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த படத்தில் நான் பணியாற்றியது சிறப்பான அனுபவம். வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

பாடலாசிரியர் பத்மஜா ஸ்ரீராம் பேசுகையில், “இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் மிகுந்த சுதந்திரம் அளிப்பார். இப்படத்தில் பணியாற்றியது ஒரு மிக நல்ல அனுபவம். குழுவினர் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள், கடவுளுக்கு நன்றி,” என்றார்.

பாடலாசிரியர் ஹைட் கார்த்தி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். நரேன் பாலகுமாரும் நானும் நீண்ட நாளாக ஒன்றாக பணியாற்றி வருகிறோம். இப்படத்தில் சுடச்சுட பிரியாணி என்ற பாடலை நான் எழுதியுள்ளேன், அதற்கு கிடைத்து வரும் வரவேற்புக்கு நன்றி. இந்த பாடலுக்கு நான் நடனமும் ஆடியுள்ளேன். டிரெய்லர் பார்க்கும் போதே ‘அக்யூஸ்ட்’ பெரிய ஹிட் ஆகும் என்று தோன்றுகிறது. பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும்,” என்றார்.

அடுத்ததாக, தயாரிப்பாளர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் அழகன் தமிழ்மணி, செந்தாமரை கண்ணன், ஜெயசீலன், ஜி.எஸ். முரளி, ராமச்சந்திரன், அன்பு, சுரேஷ், சாலை சகாதேவன், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சண்டைக் காட்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், “உதயா அவர்களின் குடும்பத்தில் ஒருவன் நான். அவர், அவரது தந்தை ஏ.எல். அழகப்பன் சார், சகோதரர் விஜய் ஆகியோர் எனக்கு மிகவும் நெருக்கம். உதயா சாரின் விடாமுயற்சி எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது. படமும் நன்றாக வந்துள்ளது. எனவே, ‘அக்யூஸ்ட்’ மாபெரும் வெற்றி பெறும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை,” என்றார்.

நடிகை ஜான்விகா பேசுகையில், “என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் உதயா சாருக்கு நன்றி. சிறப்பான பாடல்களை தந்துள்ள இசையமைப்பாளருக்கு நன்றி. திறமைகளுக்கு தவறாமல் ஆதரவளிக்கும் தமிழ் ரசிகர்கள் எனக்கும் ஆதரவளிப்பாளர்கள் என்று நம்புகிறேன். ‘அக்யூஸ்ட்’ படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வாய்ப்புக்கு நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன், விரைவில் முழுவதும் தமிழில் பேசுவேன்,” என்றார்.

நடிகர் அஜ்மல் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் உதயாவுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி திரையில் தெரியும். அவரை பார்த்து நிறைய கற்றுக்கொள்ளலாம். படத்தை சிறப்பாக உருவாக்கிய இயக்குநர் பிரபுவுக்கு நன்றி. நல்ல கன்டென்ட் உள்ள படம் இது. கட்டாயம் ஜெயிக்கும்,” என்றார்.

இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் பேசுகையில், “கஷ்டப்பட்ட அனைவரும் வெற்றி பெற்றதில்லை, ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தவர்களே. உண்மையாக, நேர்மையாக கஷ்டப்பட்டால் நிச்சயம் வெல்லலாம், அப்படிப்பட்ட குழு இது, அனைவரும் மிகவும் திறமையானவர்கள். இவர்கள் வெற்றியடைந்தால் சினிமா மேலும் வெற்றி பெறும். ‘அக்யூஸ்ட்’ வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் ஆனந்த்பாபு பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம். உதயா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஏ.எல். அழகப்பன் எனது தந்தையை போன்றவர். உதயாவின் 25வது ஆண்டு படமான ‘அக்யூஸ்ட்’ வெற்றி விழா கொண்டாடும், நன்றி,” என்றார்.

பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “அக்யூஸ்ட் படவிழாவின் அழைப்பிதழே அருமை, உதயாவின் உழைப்பு அதிலேயே தெரிகிறது. அவருக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அனைவரும் ஒற்றுமையாக இங்கு இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் உதயா மீதும் அவரது தந்தையார் மீதும் நாம் வைத்துள்ள அன்பு தான். உதயாவை எந்த அவமானமும் பாதிக்காது, சிரித்த முகத்துடன் இருப்பார். விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது, மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி பேசுகையில், “இந்தப் படம் எப்படி தொடங்கியது, எப்படி உருவானது என்பது எனக்கு தெரியும். இவ்வளவு கஷ்டப்பட்டு இதை கட்டமைத்த சகோதரர் உதயாவுக்கு பாராட்டுகள். செல்வமணி சார் சொன்னது போல உதயாவுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது, இதை அவர் பிடித்துக்கொள்ள வேண்டும். திறமையான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது, டிரெய்லரும் பாடல்களும் அருமை. படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசுகையில், “எனது மகன்களின் முயற்சிகளுக்கு நான் ஆதரவாக நின்றாலும், அவர்களின் முடிவுகளில் நான் தலையிட மாட்டேன். உதயா அவரது உழைப்பு மூலம் சொக்கத்தங்கமாக ஜொலிக்கிறார். அவரது தாயார் இன்று இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், அதே மகிழ்ச்சி எனக்கும் இருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி,” என்றார்.

நடிகர் உதயா பேசுகையில், “எனது தாயார் கடவுளாக இருந்து என்னை வழிநடத்துகிறார். என்னை அவர் எங்கிருந்தோ பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார், ஆசீர்வதித்துக் கொண்டே தான் இருக்கிறார். திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன், ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

‘அக்யூஸ்ட்’ படம் எனது மிக முக்கிய படம். எனது 25வது ஆண்டில் இப்படி ஒரு படம் கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்திற்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார், அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் அவர். நரேன் பாலகுமார் இசை அருமை. உடன் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய அனைவருக்கும் மிகுந்த நன்றி. இவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் மாதிரி தான். எங்கள் அனைவரின் உழைப்பில் சிறப்பாக உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ படம் வெற்றி பெறும் என மனமார நம்புகிறேன். உங்கள் அனைவரின் வாழ்த்தையும், ஆதரவையும் கோருகிறேன்,” என்றார்.

கத்தார் அரசு விருதை வென்ற ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் !!


வரலாற்றை திருப்பி எழுதும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன்! தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக உருவெடுத்த அவர், தற்போது கத்தார் அரசு விருதை வென்று சாதனை படைத்துள்ளார். !!

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில், இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.

தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம், முழுமையாக அவர் தன் இரத்தமும், வியர்வையும் செலுத்தி எழுதிய வரலாறாகும்.

ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இந்திய திரையுலகின் உண்மையான ‘ஐகான்’ ஆக விளங்குகிறார்.

இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் தனது அடுத்த திரைப்படமான AA22xA6 மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜூனின் திரை வருகைக்காக உலகமே காத்திருக்கிறது.

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’

வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது..
இந்தப்படம் எடுத்து முடித்த பிறகு தான் என்னைப் பாடல் எழுதக் கூப்பிட்டார்கள், காளி வெங்கட் நாயகன் என்றார்கள் அவர் எந்தப்படத்திலிருந்தாலும் அதில் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவர் மிகச்சிறந்த நடிகர். இந்தப்படம் பார்க்கப் போகும் போது வியாபாரத்திற்கு ஏதாவது இருக்க வேண்டுமே என நினைத்தேன் ஆனால் அதையெல்லாம் படம் மறக்கடித்துவிட்டது. அதன் பிறகு தான் இந்தப்பாடல் எழுதினேன். வடிவேலு பாடிய அந்தப்பாடலை நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள். இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் பாலசாரங்கன் இருவருக்கும் நன்றிகள். இந்தப்படத்தில் நானும் இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. காளி வெங்கட் பசிக்கும் இன்னும் நிறையத் தீனி வேண்டும். இந்தப்படம் அதில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள். ரொம்ப சின்ன படம் ஆனால் ரொம்ப வலிமையான படம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி

ஒளிப்பதிவாளர் ஆனந்த் ஜி. கே. பேசியதாவது..
ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிக்கையாளனாகத் தொடங்கிய பயணம், 15 வருடங்கள். இங்கு இருக்க ஒளிப்பதிவாளராக ஆனதற்குக் காரணமான, இப்படத்தின் வாய்ப்பைத் தந்த கார்த்திகேயன் அண்ணாவிற்கு நன்றி. இப்படம் கார்த்திக் உடன் இணைந்து 3 வருடங்கள் முன்பு தொடங்கியது. இப்படம் உருவாகத் தயாரிப்பில் உறுதுணையாக இருந்த மோனிகா, ஷான், வீரமணி, ஆகியோருக்கு நன்றி. மெட்ராஸ் மேட்னி வாழ்க்கையை உண்மையாகச் சொல்லும் படம், நீங்கள் கவனிக்க மறந்த, தவறவிட்ட தருணங்களை உங்களுக்கு இப்படம் ஞாபகப்படுத்தும். அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் பாலசாரங்கன் பேசியதாவது…
இயக்குநர் கார்த்திகேயன் அண்ணாவுடன் மூன்று வருடம் முன்பு ஒரு குறும்படத்தில் ஆரம்பித்த பயணம், அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் இந்தப்படம். முதல் படத்திலேயே வடிவேலு முதல் பல ஜாம்பவான்களுடன் பணியாற்றும் வாய்ப்பு. நான் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நிர்வாகத் தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் பேசியதாவது…
இந்தப்படம் செய்யக்காரணமான வாய்ப்புத் தந்த கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி, தயாரிப்பாளராக அவர் எனக்கு பெரும் சுதந்திரம் தந்தார், அவர் இயக்குநராகத் தான் செயல்பட்டார், படம் நன்றாக வந்துள்ளது. இப்படத்தை எங்கு கோண்டு செல்வது என்று யோசித்த போது தான் ட்ரீம் வாரியர்ஸ் வந்தார்கள் அவர்களுக்கு நன்றி அனைவருக்கும் நன்றி.

எடிட்டர் சதீஷ்குமார் பேசியதாவது…
இந்தப்படம் செய்தது மிக மகிழ்ச்சி.குழந்தை பிறக்கும் முதல் தடவை ஒரு பெண் குழந்தையாக இருந்தால் எவ்வளவு சந்தோசமோ அவ்வளவு சந்தோசம். படம் திரையிட்ட இடங்களிலிருந்து நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.

நடிகர் சாம்ஸ் பேசியதாவது…
சின்னப்படம் பெரியபடம் என்பதெல்லாம் மக்கள் தீர்மானிப்பது தான். 20 கோடியில் எடுத்து வசூலில் மிரட்டும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் தான் பெரிய படம். ஒரு சில படங்களில் தான் நாம் நடிக்கும் பாத்திரம் நமக்குத் திருப்தி தரும். அந்த வகையில் இந்தப்படம் மிகுந்த திருப்தி தந்த படம். ஊறுகாய் விற்கும் என் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு மெனக்கெட்டார்கள், அது எனக்கு மிகவும் பிடித்தது. இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு என எல்லோரும் வந்தது மிகப்பெரிய விசயம். சத்யராஜ் படம் பார்த்து உள்ளே வந்துள்ளார். வடிவேலு சார் வரக்காரணம் மோனிகா மேடம் தான். நாம் ஆசைப்பட்டால் கேட்டுவிட வேண்டும். கேட்டால் ஆமாம் இல்லை ஆனால் கேட்காதவர்களுக்கு இல்லை மட்டும் தான். கார்த்திகேயன் இதில் ஆசைப்பட்டதெல்லாம் நடந்துள்ளது. படத்தை நம்பி ட்ரீம் வாரியர்ஸ் வந்தது பட வெற்றிக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ் வரட்டும். காளி வெங்கட் நான் பொறாமைப்படும் நடிகர், அவருடன் நடிக்கும் போது, அவர் நடிப்பதே தெரியாது, அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் அதிகம் உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகை கீதா கைலாசம் பேசியதாவது…
என்னை இதற்கு முன் எமகாதகி பிரஸ்மீட்டில் கோடம்பாக்கத்து அம்மாவாக அழகாக கொண்டாடுனீர்கள், ஆனால் அப்போது நான் உங்களிடம் வித்தியாசமான கதாப்பாத்திரம் செய்ய ஆசை என சொல்லியிருந்தேன் . இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது, இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த கார்த்திகேயன் மணிக்கு நன்றி. ரொம்ப சின்ன பாத்திரம் தான் என்றாலும் மிக நிறைவான பாத்திரம், இப்படத்தில் நடித்த அனுபவம் மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

நடிகர் விஷ்வா பேசியதாவது…
இது என் முதல் மேடை, எனக்கு வாய்ப்பு தந்த கார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி, என்னை நானே நம்பமுடியாத அளவு அழகாக காட்டியதற்கு நன்றி. இசையமைப்பாளர் பாலசாரங்கன் அண்ணா அவர் இசையுடன் என் நடிப்பை பார்க்க எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ட்ரீம் வாரியர்ஸ் பெயருடன் என் பெயரைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. காளி வெங்கட் மிகச்சிறந்த நடிகர், அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். ஷெல்லி மேம் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். ரோஷிணி அக்காவுக்கும் எனக்கும் கம்மியான சீன் தான், அவர் என்னுடன் இயல்பாகப் பேசினார், இந்தப்படம் செய்தது இன்னும் கனவு போல் உள்ளது. அனைவருக்கும் நன்றி, படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகை ஷெல்லி பேசியதாவது…
நான் மலையாளி எனக்குத் தெரிந்த தமிழில் பேசுகிறேன். இந்தப்படம் மிக சிறந்த அனுபவம், இப்படத்தில் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டார்கள் அது சினிமாவில் அரிதான விசயம், அதற்காக இயக்குநர் கார்த்திகேயன் மணிக்கு நன்றி. அவர் மிக அமைதியாக, பொறுமையாக அனைவரையும் பார்த்துக்கொண்டார். அவரது எழுத்துக்கு நன்றி. இந்தப்படத்தில் காளி வெங்கட் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். அவரும் நானும் இந்த படக் கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளோம். இந்த புரடக்சன் சினிமாவுக்கு புதுசு, எல்லோரும் ஐடி வேலை பார்த்தவர்கள் யாருக்கும் சினிமா தெரியாது ஆனால் மிகச்சிறப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார்கள், ரோஷினி, விஷ்வா எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இது நிஜமான வாழக்கையை சொல்லும் படம், கண்டிப்பாக இந்தப்படம் உங்களை மகிழ்விக்கும், இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் கலையரசன் பேசியதாவது…
நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை ஆனால் நான் நடித்த மாதிரி சந்தோசமாக உள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் ரிலீஸ் வரை மட்டும் தான் அதன்பிறகு கண்டென்ட் தான் முடிவு செய்யும். இது ரொம்ப நல்ல படமா தெரிகிறது. நான் ரெண்டு மூன்று தடவை பாக்க வாய்ப்பு கிடைத்தும் மிஸ் பண்ணிட்டேன் சாரி. ஒரு நல்ல படம் வந்தால் எப்படியாவது இண்டஸ்ட்ரிக்குள் எங்கேயாவது அதைப் பற்றி பேச்சு வந்துவிடும், இப்படம் பற்றியும் நிறையப் பேர் சொல்கிறார்கள் மகிழ்ச்சி. பிரபு சார் திரைத்துறையில் நிறையப் பேரை உருவாக்கியுள்ளார், நிறையச் சின்ன படங்களுக்கு ஆதரவு தருகிறார். ஒரு கதைக்கு வந்து முகங்கள் கதாபாத்திரங்கள் ரொம்ப முக்கியம். அதுக்கேத்த மாதிரி முகங்களை நடிக்க வைப்பது தான் நல்ல படமாக இருக்குமென்று நம்புகிறேன். இந்தப்படத்தில் எல்லோரும் கதைக்கான முகங்களாக இருக்கிறார்கள். காளி வெங்கட் கலைத்துறை தந்தை, அவருக்குள் நிறையக் கதைகள் இருக்கு ஷீட்டிங்கில் இருக்கும் போது,ஆறு மணிக்கு மேல பாடுவாரு, ஆடுவாரு, மிமிக்ரி பண்ணுவாரு, ஏதோதோ சொல்லுவாரு, நிறைய பேசுவாரு, ஜெபம் பண்ணுவார், அதே மாதிரி நிறையக் கதைகள் சொல்லுவார். அவர் ஊர்ல இருக்க ஒரு வளையல் தாத்தான்னு ஒரு கதை சொல்லியிருக்காரு, எனக்கு அதைப் படமா பண்ண ஆசை, அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவருக்குள்ள அழகா ஒரு பெரிய லைப் இருக்கு. இப்போதே அவருக்குள் 60 வயதுக்கான ஞானம் இருக்கிறது. இந்தப்படத்தில் எல்லோருமே ரொம்ப அழகா நடித்திருக்கிறார்கள். எல்லோரும் உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. கார்த்திகேயன் இந்த மாதிரி புதுமையா இன்னும் நிறையப் படங்கள் செய்யுங்கள், படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

நடிகர் ரமேஷ் திலக் பேசியதாவது…
டூரிஸ்ட் ஃபேமிலி பட சக்சஸ் மீட்டுக்கு வரவில்லை, அதற்குக் காரணம் காளி வெங்கட் தான் அவருடன் தான் ஷீட்டில் தான் இருந்தேன், நீங்கள் தந்த பாராட்டுக்கள் என் 15 வருட சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிதாக இருந்தது. இந்த மேடையைக் காளி வெங்கட் எனக்குத் தந்திருக்கிறார் நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் அதற்கு நான் மூன்று காரணங்கள் சொல்கிறேன் முதலி எஸ் ஆர் பிரபு சார் இந்தப்படத்தை வாங்கியுள்ளார், இரண்டாவது டிரெய்லரும் பாடலும் அவ்வளவு நன்றாக உள்ளது, மூன்றாவது ஒரு படம் முடித்துவிட்டு டப்பிங்க் எல்லாம் முடித்து படம் நன்றாக வந்திருந்தால் அது நம் நடவடிக்கையில் தெரிந்து விடும், காளி வெங்கட் அண்ணாவுடன் தான் மூன்று மாதமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன் ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார் அப்படியெனில் கண்டிப்பாகப் படம் ப்ளாக்பஸ்டர் தான். இவர் வாழும் இந்த நாட்டில் நானும் வாழ்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ப்ளாக் அன் ஒயிட் காலத்திலிருந்து, டிஜிட்டல் வரை, சினிமாவில் எல்லா அறிவுரைகளும் எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் காளி வெங்கட் அவர்களுக்கு நன்றி. நான் இது மூலமா ஐநா சபைக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த வருஷத்துக்கான நோபல் பிரைஸ் காளி அண்ணாவிற்குக் கொடுத்தே ஆகவேண்டும். உங்கள் குழுவிற்கு மிகப்பெரிய வாழ்த்துக்களும் நன்றிகளும். அனைவருக்கும் நன்றி.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது…
எல்லாருக்கும் வணக்கம். மெட் ராஸ் மேட்னி படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமா வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைக்கு மொத்த இந்திய சினிமாவும் ஒரு முக்கியமான ஒரு காலகட்டத்தில இருக்குன்னு நினைக்கிறேன். சினிமாவின் மார்க்கெட் முழுக்க மாறியிருக்கு, கடைசி ஒரு வருடத்தில் என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது, ஆனால் மக்கள் இன்னும் தியேட்டருக்கு நிறைய வந்து படம் பார்க்கறாங்க. நல்ல படங்களை சப்போர்ட் பண்றாங்க. எல்லாரும் ஒரு படம் ஆரம்பிக்கிறப்போ, இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறணும். நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும். நம்முடைய கனவு நிறைவேறணும். நிறைய பணம் சம்பாதிக்கணும். பேர சம்பாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்தோட ரொம்ப பாசிட்டிவாதான் ஆரம்பிக்கிறோம். ஆனால் ஆரம்பிக்கிற எல்லா படங்களும் அதே மாதிரியான அவுட்புட்டோட வந்து முழுமை பெறறது இல்ல. அது ரொம்ப சிக்கலான ஒரு விஷயம். நிறைய வெவ்வேறு விதமான கலைஞர்களுடைய பணிகள் ஒரு படத்துக்கு தேவைப்படுது அது அழகா அமைஞ்ச் படமா மெட்ராஸ் மேட்னி படத்தைப் பார்க்கிறேன். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். சின்ன படம் பெரிய படம் அப்படின்னு, எப்பவுமே நம்மளே வகைப்படுத்திட்டே இருக்கோம். அப்படி இல்லாம பெரும்பான்மையாக இருக்கக்கூடிய ஒரு மிடில் கிளாஸ் லைஃபை, ரொம்ப எதார்த்தமா அதே நேரத்துல ரசிக்கும்படியா இந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டர்ஸும் நம்ம வாழ்க்கையில நம்ம பார்த்த கேரக்டர்ஸ திரும்பி பார்க்கிற மாதிரி இருந்தது. ஒரு மிடில் கிளாஸ் லைஃப் மேட்னி ஷோவா பாக்குற மாதிரியான ஒரு அனுபவம்தான் இந்தப்படம். நிறைய விஷயங்கள் ரொம்ப நாஸ்டாலஜிக்கா இருந்தது. கார்த்திகேயன்மணி மிகச்சிறப்பாக படத்தை தந்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் சினிமாவில் முக்கியமான ஆளாக வருவார், எல்லா நடிகர்களும் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். இசையமைப்பாளர் பாலசாரங்கன் இசை மிகச்சிறப்பாக இருந்தது. காளி வெங்கட்டை வைத்து ஒரு ஆக்சன் படமே எடுக்கலாம் அவர் நடிப்பு அவ்வளவு சிறப்பாக இருந்தது. இப்படத்தை ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமாவாகத்தான் நான் பார்க்கிறேன் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை ரோஷினி பேசியதாவது…
ஆனந்த சார் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு வந்தது அவருக்கு நன்றி, நாங்க எந்த ஒரு இடத்திலும் மேக்கப் போடாம அவ்வளவு அழகா நான் இருக்கிறேன் என்பதை இவரோடு பிரேம்ல தான் பார்த்து தெரிந்துகொண்டேன். நன்றி ஆனந்த் சார். கார்த்திக் சார் கதை சொன்னபோதே என் வீட்டு ஞாபகங்கள் வந்தது, படம் பார்க்கும் போது உங்கள் எல்லோருக்கும் உங்கள் வீட்டுச் சம்பவங்கள் ஞாபகம் வரும். எனக்கு வயதானால் கூட இப்படி ஒரு படம் நான் நடித்திருக்கிறேன் எனப் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன், அந்தளவு மனதுக்கு நெருக்கமான படம் இது. காளி வெங்கட் சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம், அவர் நடிப்பு பயங்கர அமேசிங்கா இருக்கும். ஸ்விட்ச் போட்ட மாதிரி ஒரு கேரக்டர்ல இருந்து வேற கேரக்டர்ல அவ்ளோ அழகா பண்ணுவார், இந்தப்படத்தில் அவர் தான் எனக்கு அப்பா. இந்த படத்தில் ஒரு அப்பாவுக்கும் ஒரு பொண்ணுக்கமான ரிலேஷன்ஷிப் தான் படம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஷெல்லி மேடம் மிக அழகா நடித்திருக்கிறார்கள். படத்தில் எல்லோரும் மிகச்சிறப்பா வேலை பார்த்திருக்கிறார்கள், இந்தப்படம் பார்க்கும் போது உங்களுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வரும். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் கார்த்திகேயன் மணி பேசியதாவது…
என் அம்மா நிறைய இலக்கிய வட்டம் போவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை பற்றி நிறைய சொல்லுவார்கள், உண்மையிலேயே தமிழ் எவ்வளவு பழமை வாய்ந்தது என்ற கேள்வி எனக்குள் வந்தது, அதன் பிறகு நிறையப் புத்தகங்கள் படித்தேன். நம்மளோட வரலாறு இப்ப இருக்கங்களுக்கு யாருக்குமே தெரியலைன்றது எனக்கு மிகப்பெரிய வருத்தமா இருந்தது, ஒரு சில கவிதைகள வச்சே நாலு படம் எடுக்கலாம் கிட்டத்தட்ட புறநானூறே 400 கவிதை இருக்கிறது. 300ன்னு ஒரு படம் வந்திருக்கும். நீங்க எல்லாம் பார்த்திருப்பீர்கள் ரொம்ப பிரபலமான படம். எனக்கு தெரிஞ்சு அந்த படம் தமிழ் படமாகத்தான் எடுத்திருக்கவேண்டும். ஏன்னா அந்த மாதிரி கதை இங்க எவ்வளவோ இருக்கிறது. அந்த மாதிரி கதைகள் நமக்கே தெரியவில்லை. அது வந்து உண்மையிலேயே வருத்தத்துக்கு ஒரு விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன், ஏன் மத்தவங்க எடுக்கலன்றத கேக்குறத விட்டுட்டு, நான் ஏதாச்சும் பண்ணனும்னு தான் இந்தப்படம் எடுக்க முயற்சி செய்தேன். நான் ஐடில இருந்தாலும் எனக்கு வந்து சினிமா மேல பயங்கரமான பேஷன் உண்டு. அதன் தொடக்கமாகத் தான் இந்தக்கதை எழுதினேன், நான் வாழ்க்கையில் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் தான் இந்தப்படம், ஒரு அப்பா பசங்களுக்காக நாய் மாதிரி ஓடுறாரு. திடீரென்று பார்த்தா பசங்களுக்கும் அவருக்கும் ஒரு கேப் இருக்கு. அந்த அப்பாவிற்கு எவ்வளவு வலிக்கும். இந்தக் கதையை நான் எழுதி முடித்த பிறகு, ஒரு நல்ல அப்பா கிடைக்கவேண்டுமென்று நான் வலைவீசி தேடிட்டு இருந்தேன். சரியான அப்பா கிடைக்கலைனா இந்தப்படம் எடுக்க வேண்டாமென்று முடிவு செய்திருந்தேன் அப்போதுதான் காளி சார் இந்த கதைக்கு ஓகே சொன்னார், காளி வெங்கட் நடிப்பைப் பற்றி சொல்லத் தேவையில்லை, காளி வெங்கட் சாரோட நடிப்பு எல்லாமே ரொம்ப உண்மையா இருந்தது, ஷெல்லி, விஷ்வா, ரோஷினி எல்லோரும் உங்க வாழ்க்கையைப் பார்ப்பது போலவே நடிப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் சார் கேரக்டர் இந்த டிரெய்லர்ல மிடில் கிளாஸ் லைஃப்ல என்ன இருக்கும் நோ ஆக்ஷன், நோ அட்வென்சர், நோ ரொமான்ஸ், சோ சேட், அப்படின்னு சொல்லுவார். ஆனால் இதில் எல்லாமே இருக்கும். அது உங்க லைஃப்லயும் இருக்கு. இந்த படம் மூலமா உங்களுக்கும் உங்கள் வாழ்க்கை ஞாபகம் வரும். எடிட்டர் சதீஷ், ஹரிகிருஷ்ணன் இல்லையென்றால் இந்தப் படம் நடந்திருக்காது இருவருக்கும் நன்றி. எங்களை நம்பி இந்தப்படத்தை எடுத்துக்கொண்ட ட்ரீம் வாரியர்ஸ் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி. இப்படம் ஜூன் 6 ஆம் தேதி வருகிறது, எல்லோரும் ஆதரவு தாருங்கள், நன்றி

காளி வெங்கட் பேசியதாவது…
முதலில் எஸ் ஆர் பிரபு சாருக்கு நன்றி, ஒரு படம் எப்படிப்பட்ட படம் என்பது நீங்கள் வாங்கும்போது தெரிந்துவிடும், அதற்காக அவருக்கு நன்றி, சத்யராஜ் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. படம் முடியற ஸ்டேஜ்லதான் இயக்குநர் அவரை அணுகினார் ஆனால், எந்த தயக்கமும் இல்லாமல் படம் செய்து தந்தற்கு நன்றி. வடிவேல் சாருக்கு மிக்க நன்றி. அபிஷேக் மூலம் தான் இயக்குநரைச் சந்தித்தேன், வீட்டுக்கு கூப்பிட்டு கதை சொன்னார், அதுவே எனக்குப் புதிதாக இருந்தது, இந்தக்கதை சொன்னவுடனே எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்தது. எல்லோர் வாழ்க்கையிலும் இதை உணர்ந்திருப்பீர்கள், ஒரு கட்டத்தில் எல்லா அப்பாவும் தன் பிள்ளைகள் தன்னிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள், நான் அதிகம் சொல்லவில்லை படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள். ஆனந்த் கேமரா ஒர்க் மிகச்சிறப்பாக இருந்தது.ஷெல்லி உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, மிகச் சிறப்பாக நடித்துள்ளார். விஷ்வா, ரோஷினி எல்லோருக்கும் நன்றி. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!

இந்தியாவில் முதன்முறையாக ஒரு அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான “மிராய்” படத்தோடு வந்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கும், இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். காட்சியமைப்பிலும், ஃபேண்டஸி கதைக்களத்திலும் பிரம்மாண்டத்திலும் அசத்தும்,
டீசர் இந்தியா முழுவதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டீசரில் ஒரு முனிவரின் குரல், கலியுகக் களத்தில் பிறந்த கட்டுப்பாடற்ற சக்தியின் எழுச்சியைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கிறது. அந்த இருண்ட சக்தி தான் தி பிளாக் ஸ்வார்ட் The Black Sword (மனோஜ் மாஞ்சு), மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை கொண்டவர், அழிவுக்கான பயணத்தை தொடங்குகிறார். ஆனால், இந்த முறை கடவுள்கள் அல்ல; அவர்களின் ஆயுதமே எதிர்விளைவு தருகிறது. அதுதான் மிராய்.

தேஜா ஒரு எளிய வீரராக அரங்கேற்றமாகிறார் — ஒரு மர்ம வாய்ந்த சக்தி மிக்க ஆயுதத்துடன், அதன் பலம் குறித்த கேள்விகளுடம் தனது பயணத்தை தொடங்குகிறார். இருளுக்கு எதிரான போரில் தன்னுடைய சக்தியை வலிமையை கண்டடைகிறார், நியாயத்திற்கு உண்மைக்கு ஆதரவாக அவர் எழும் தருணமே கதையின் மையம்.

இந்தியாவின் இளம் பான் இந்தியா நட்சத்திரமான தேஜா சஜ்ஜா, ஒரு சாதாரண மனிதனில் இருந்து சூப்பர் யோதாவாக மாறும் ஹீரோவாக வெளிப்படுகிறார். ரயிலின் மேலே செய்யும் சாகசம் உட்பட, பல உயிர் அபாயம் நிறைந்த சாகசங்களை துணிவுடன் செய்து, அவர் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரம் என்பதை நிரூபிக்கிறார்.

மனோஜ் மாஞ்சு ஒரு படு பயங்கர எதிர் நாயகனாக திகழ்கிறார். அவரது சக்தி வாய்ந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரிதிகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் கட்டமனேனி இயக்குநராக மட்டுமல்ல, மிரட்டலான உலகை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். அவரது காட்சியை உருவாக்கும் திறமை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், அதிரடி சண்டைகள் — இவை அனைத்தும் திரைக்கதையை சிறப்பிக்கின்றன. டீசரின் கடைசி நிமிடத்தில், இராமர் வரும் தருணத்தில் குரங்குகள் தலைவணங்கும் காட்சி, நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கிறது.

கேமராவை கையாண்டுள்ள கார்த்திக், ஒவ்வொரு பிரேமையும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் இசை அமைப்பாளர் கௌர ஹரி பின்னணி இசை, திரை அனுபவத்தை மேலோங்கச் செய்கிறது. மனிபாபு கரணம் வசனங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா கலை இயக்குநராக, சுஜித் குமார் கொல்லி நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.

கார்த்திகேயா 2 மற்றும் ஜாட் படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் தயாரிப்பில், மிராய் திரைப்படம் இந்திய அளவில் மற்றொரு பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. இப்படம் முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. வெறும் VFX பிரம்மாண்டமாக இல்லாமல் – மிராய் திரைப்படம் அத்தியாவசியமான, கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்களின் பிரமாண்டத்திற்கு இணையாக உள்ளது என்பதுதான் இதன் சிறப்பம்சம். உண்மையான சினிமா தாக்கத்திற்கு எப்போதும் பிளாக்பஸ்டர் செலவு தேவையில்லை, துணிச்சலான கற்பனை மற்றும் கூர்மையான செயல்படுத்தல் மட்டுமே தேவை என்பதற்கு இது உதாரணமாக இருக்கும்.

இந்த டீசர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள “மிராய்” திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடியாக வெளியாகிறது. இந்த திரைப்படம் 8 வெவ்வேறு மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகளவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்: சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு

தொழில்நுட்பக் குழு:
இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி
தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத்
பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி
நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி
இசை: கவுரா ஹரி
கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எழுத்தாளர்: மணிபாபு கரணம்
எடிட்டர் – ஶ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஹேஷ்டேக் மீடியா

ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!

ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம் !!

இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது.

இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது….
“எங்களின் இந்த கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில், நாங்கள் மொழி எல்லைகளைக் கடந்து மக்கள் விரும்பும் கதைகளைச் சொல்லும் நோக்குடன் பயணிக்கிறோம். ஹிர்திக் ரோஷனுடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தக் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கியப் படியாகும். பிரம்மாண்டமான அளவில், மிக ஆழமும் கற்பனையும் ஒன்றிணைக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இது மக்கள் மனங்களில் சக்திவாய்ந்ததும், நிலைத்தும் இருக்கும் ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்.”

இதனைத் தொடர்ந்து நடிகர் ஹிர்திக் ரோஷன் கூறியதாவது….
“ஹொம்பாலே பிலிம்ஸ் பல தனித்துவமான கதைகளின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து ஒரு வெகு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் திரைப்படத்தில் பணியாற்ற மிக ஆவலாக உள்ளேன். நாங்கள் பெரிய திரைக்கனவுகளைக் காண்கிறோம் மற்றும் அதை நனவாக்க உறுதியாக இருப்போம். ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்.”

கடந்த சில ஆண்டுகளில், பான்-இந்தியா அளவில் பெரும் வெற்றிப் படங்களை வழங்கி, ஹொம்பாலே பிலிம்ஸ் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகப் பெயர் பெற்றுள்ளது. கேஜிஎப்: பார்ட் 1 மற்றும் 2, சலார்: பார்ட் 1 – சீஸ்‌ஃபயர், மற்றும் காந்தாரா போன்ற வெற்றிப் படங்களை வழங்கி, அவர்கள் கதைக்களத்திலும், வசூலிலும் புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளனர்.

மற்றொரு புறம், ஹிர்திக் ரோஷன் இந்தியாவின் மிகவும் பிரபலமான சூப்பர்ஸ்டார்களில் ஒருவர். அவரது தனித்துவமான நற்சிறப்பும், மாபெரும் திரை நேர்த்தியும், சிறந்த நடிப்பும் அவரை உயரத்தில் நிறுத்தியுள்ளன. வார் 2 மற்றும் க்ரிஷ் 4 போன்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களுடன், அவர் மிக வலுவான வருங்கால திரைப்பட வரிசையைக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஹொம்பாலே பிலிம்ஸும் ஹிர்திக் ரோஷனும் இணைகிறார்கள் என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு புதிய உச்சத்துக்கே சென்றுள்ளது!

‘இராமாயணா’ படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – நமித் மல்ஹோத்ராவின் ‘இராமாயணா’ படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

‘இராமாயணா’ படத்திற்காக யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும் – பிரம்மாண்ட ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியது !!

இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான ‘இராமாயணா’ படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: Fury Road, The Suicide Squad புகழ்) மற்றும் இந்தியாவின் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கைகோர்த்துள்ளார்கள்.

நடிகர் யாஷ், ராவணனாக நடிப்பதோடு, இப்படத்தின் இணை-தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம், பரந்த எதிர் நாயகனாக ராவணனை மிக பிரம்மாண்டமாகக் காட்டும். ஹாலிவுட் தரத்திலான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கும் நோக்கில், கய் நோரிஸ் இந்தியா வந்து வேலை செய்யும் நிலையில், யாஷ் இதில் நேரடியாக ஈடுபட்டு, இந்திய ஆக்சன் சினிமாவின் தரத்தை புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.

இராமாயணா பாகம் 1 க்காக யாஷ் 60–70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சமீபத்தில் வெளியான படப்பிடிப்பு புகைப்படங்களில், யாஷ் தனது உடல் அமைப்பை மாற்றி, ராவணனாக ஒரு வித்தியாசமான, மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்தத் தோற்றம், இந்திய ஹீரோக்களை உலகளவில் புதிய பார்வையில் காணச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தினை நிதேஷ் திவாரி இயக்குகிறார், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்கள். உலகத் தரத்தில் இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட் தர VFX, பிரம்மாண்டமான செட்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்களை ஒன்றிணைத்த ஒரு காட்சித் திருவிழாவாக உருவாகிறது.

‘இராமாயணா பாகம் 1’ – தீபாவளி 2026, மற்றும் பாகம் 2 – தீபாவளி 2027 வெளியாகவுள்ளது.

அருண் விஜய் வெளியிட்ட விக்ராந்த் நடிக்கும் ‘வில்’ பட டீஸர்

விக்ராந்த் – சோனியா அகர்வால் கூட்டணியில் உருவான ‘ வில் ‘பட டீஸர் வெளியீடு

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான விக்ராந்த்- சோனியா அகர்வால் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் ‘வில் ‘எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான அருண் விஜய் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன் , ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். டி. எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார். நீதிமன்ற பின்னணியில் நடைபெறும் இந்த திரைப்படத்தை ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் கோத்தாரி மெட்ராஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்.. இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

டீஸர் குறித்து இயக்குநர் பேசுகையில், ”
வில் படத்தின் டீஸரில் ஒரு கதாபாத்திரம் சனாதனம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா? இந்த இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக விமர்சிக்கும் வகையில் உரையாடல் ஒன்று இடம் பிடித்திருக்கிறது. இதற்கு தணிக்கை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் சர்ச்சையை ஏற்படுத்தும் அந்த இரண்டு சொற்களையும் நீக்க வேண்டும் என்றார்கள். இதற்கு உரிய விளக்கம் அளித்த பிறகு, மும்பையில் உள்ள தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து டீஸரில் இடம் பிடிப்பதற்கு அனுமதி அளித்தனர்.

‎மேலும் இந்தத் திரைப்படத்தில் தற்போதைய நீதிமன்றத்தின் நடைமுறைகளை யதார்த்தமாகவும், இயல்பை மீறாமலும் பதிவு செய்திருக்கிறோம்.

‎உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதால்.. மக்களுக்கு நன்மை செய்வதில் நீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்த விவரங்களை முழுமையாக விவரித்திருக்கிறேன்.

‎நீதி மன்றத்தில் பரபரப்பாக நடைபெறும் வழக்கு குறித்த விவரங்களை விவாதமாகவும், விமர்சனமாகவும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சுதந்திரத்தின் அடிப்படையில் முன் வைத்திருக்கிறோம்.

‎சொத்து வைத்திருப்பவர்கள் உயில் எழுதும் போது ‘வில்’ என்ற நீதிமன்ற மற்றும் சட்டப்பூர்வமான விசயத்தை மேற்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்திருக்கிறோம்.

‎சொத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சட்டத்திற்கு உட்பட்ட முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தெளிவு படுத்தி இருக்கிறோம்.

‎ஒரு தலைமுறையினருக்கான சொத்து.. அடுத்த தலைமுறைக்கு எப்படி சட்டபூர்வமாக உரிமையாகிறது என்பது தொடர்பான சட்ட நுணுக்கங்களையும் இடம்பெறச் செய்திருக்கிறோம்.

‎ஒருவர் தன்னுடைய சொத்தை.. தன் விருப்பத்திற்குரிய ஒருவருடைய பெயருக்கு எழுதி வைக்கிறார் என்றால்… அது அவருக்கு சட்டபூர்வமாக எப்படி சென்று சேரும் என்பது குறித்த குழப்பத்தை நீக்கும் வகையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

‎இதனை நேரடியாக விவரிக்காமல் .. ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உணர்வு பூர்வமான சம்பவங்கள் மூலம் கமர்சியல் அம்சங்கள் கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்.

‎இதில் நீதியரசர், சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு புலன்விசாரணை மேற்கொள்ளும் விசயம் ரசிகர்களுக்கு புதுவித திரை அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த டீஸர்- படத்தின் கதை அம்சத்தை முழுவதுமாக பிரதிபலிக்கிறது.” என்றார்.

இப்படத்தின் டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.

Teaser Link :
https://youtu.be/EyP3xI3JaW8

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் ‘மெட்ராஸ் மேட்னி’

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.