Breaking
November 25, 2024

Cinema

‘அர்ஜுன் சக்ரவர்த்தி – ஜர்னி ஆஃப் அன் சங் சாம்பியன்’ திரைப்படத்தின் முதல் பார்வை.



ஸ்ரீனி குப்பலா தயாரிப்பில் விக்ராந்த் ருத்ரா எழுத்து மற்றும் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படமான ‘அர்ஜுன் சக்ரவர்த்தி, ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) வெளியாகி உள்ளது.

விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ திரைப்படம் 1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.

இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் அர்ஜுன் சக்ரவர்த்தி ஸ்டேடியத்தின் நடுவில் கையில் பதக்கத்துடனும் முகத்தில் பெருமிதத்துடனும் இருப்பதைக் காணலாம். இந்திய கபடியில் அர்ஜுன் சக்ரவர்த்தியின் தாக்கம் 1980களில் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவின் தாக்கத்திற்கு இணையாக உள்ளது என்ற வாசகம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய ராமராஜு இந்த பாத்திரத்திற்காக தன்னுடைய உடலை சிறப்பாக கட்டமைத்துள்ளார்.

சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். விக்னேஷ் பாஸ்கரன் இசையமைக்க, ஜெகதீஷ் சீக்கட்டி ஒளிப்பதிவு செய்ய, சுமித் படேல் கலை இயக்கத்தை கவனிக்க பிரதீப் நந்தன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ குறித்து பேசிய தயாரிப்பாளர் ஸ்ரீனி குப்பலா, “இது ஒரு திரைப்படமாக  மட்டுமில்லாமல், சவால்களை தாண்டி நம் அனைவரையும் ஊக்குவிக்கும் மனிதர்களின் அசைக்க முடியாத மன உறுதிக்கான எடுத்துக்காட்டாக அமையும். கனவை நனவாக்க முழு மூச்சாக உழைத்தால் இலக்கை எட்டிவிடலாம் என்பதை இப்படம் வெளிப்படுத்தும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு குழுவாக இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள இப்படம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக அயராது பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கையை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், இந்த பயணத்தில் எங்களுடன் சேர அனைவரையும் அழைக்கிறோம். இது சொல்லப்பட வேண்டிய கதையாகும்,” என்று தெரிவித்தார்.

இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறுகையில், “‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் அன்சாங் சாம்பியன்’ படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது. அர்ஜுன் சக்கரவர்த்தியின் கதையை திரையில் உயிர்ப்பிக்கும் பயணம் சவாலாக இருந்தது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெற்றி பிறக்கிறது என்ற பழமொழிக்கு அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கை ஒரு சான்றாகும். எங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

“அர்ஜுன் சக்ரவர்த்தியாக விஜய் ராமராஜூவின் உழைப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. அர்ஜுன் சக்ரவர்த்தியின் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் எட்டு விரிவான உடல் மாற்றங்களுக்கு தன்னை அவர் உட்படுத்திக் கொண்டார். அவரது நடிப்பால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மன உறுதி, உழைப்பு மற்றும் ஒருவரின் கனவுகளின் அசைக்க முடியாத நாட்டம் ஆகியவற்றின் கதை இது. இந்த சினிமா பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து எங்களை ஆதரிக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறினார்.

“‘டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி கொண்டேன்” ; கத்ரீனா கைப்

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களில் முதன் பெண் உளவாளியான, கத்ரீனா கைப் நடிக்கின்ற சோயா என்கிற கதாபாத்திரம் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவல் ஒவ்வொரு ஒரு அடியிலும் ஆணுக்கு சமமாக காட்டப்பட்டு வருகிறது.. சண்டை என வந்துவிட்டால் எந்த அளவுக்கும் இறங்கி ஒரு கை பார்க்கும் அளவுக்கு அவள் கடுமையான, புத்திசாலித்தனமான மற்றும் கொடுமையான உளவாளி.

கத்ரீனா சோயா கதாபாத்திரத்தை தானாகவே சொந்தமாக உருவாக்கியிருக்கிறார் என்பதுடன் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு டைகர் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை தவறாமல் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறார்கள். நம்பமுடியாத சண்டை காட்சிகளை செய்துள்ளதற்காக கத்ரீனா கைப் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒத்தைக்கு ஒத்தை மோதும் ஆக்சன் காட்சிகளையும் செய்திருக்கிறார். ‘டைகர் 3’யில் இந்த மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு தயாராவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை அவர் பயிற்சியும் ஒத்திகையும் எடுத்துக்கொண்டு தயாராகியுள்ளார்.

கத்ரீனா கூறும்போது, “தன்னுடைய குடும்பத்தையோ அல்லது நாட்டையோ அல்லது மனித நேயத்தையோ காப்பாற்றவேண்டும் என்கிற நிலை வரும்போது ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என எதுவுமில்லை என்பதைத்தான் ‘டைகர் 3’ காட்டுகிறது. வளர்ப்பவர்களாக மட்டுமல்ல கடுமையான பாதுகாவலர்களாகவும் பெண்களால் இருக்க முடியும் என்பதை மக்களிடம் சொல்வதற்கு சோயா போன்ற ஒரு கதாபாத்திரம் முக்கியமானது மற்றும் அவசியமானதும் கூட.. என்னுடைய திரையுலக பயணத்தில் சோயா அதிகப்படியாக போற்றப்படக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “ அவளது மன உறுதியாலும் தைரியத்தாலும் எந்த ஒருவருடனும் அவள் எப்படி பொருத்திக்கொள்ள முடிகிறது என்பதை நான் ரசிக்கிறேன். அவள் ஒரு சண்டையிலிருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை. ஆக்சன் என வரும்போது ஆணை விட மிகச்சிறப்பாக அவளால் செயல்பட முடியும். சோயாவின் ஆக்சன் ஸ்டைல் என்பது தனித்துவமானது. இந்த டிரைலரில் நீங்கள் பார்த்த சில காட்சிகளை போல மிகவும் சிக்கலான சண்டைக்காட்சிகளை கூட அவளால் எளிதாக மேற்கொள்ள முடியும். சோயா மொத்த எதிரி படைகளையும் எதிர்ப்பவள் மட்டுமல்ல, அவளே அனைவருடன் தானாகவே சண்டையிட கூடியவள்” என்கிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு படத்திலும் மிகவும் கடுமையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்கிற உண்மையை கத்ரீனா ரசிக்கிறார். அவர் கூறும்போது, “ஒரு ஜானராக ஆக்சனை நான் விரும்புவதுடன் ஒரு உளவாளியாக நடிக்கவேண்டும் என்கிற என் கனவும் நனவாகியுள்ளது. என்னுடைய பெருமையான அடையாளங்களில் ஒன்றாக இது இருக்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதனால் என்னுடைய 200 சதவீத உழைப்பை இந்த மூன்றாம் பாகத்திற்கு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு டைகர் படமும் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு கட்டமாக உச்சத்திற்கு எடுத்து செல்கிறது. அதற்காக அவள் கடுமையாக போராடி இருக்கிறாள் என்பதுடன் அது ரத்தக்களறியாகவும் இருந்திருக்கிறது. அது தான் நான் எப்போதும் நேசிக்கின்ற இந்த கதாபாத்திரத்தின் உயிர்மூச்சு” என்கிறார்.

கத்ரீனா கூறும்போது, “’டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக குறைந்தது இரண்டு மாதங்களாவது என்னை தயார்படுத்திக்கொண்டேன். ஒரு சுறுசுறுப்பானவளாக, அதிவேகம் கொண்டவளாக, மிகப்பெரிய பலம் கொண்டவளாக சோயா இருக்கவேண்டும் என நாங்கள் விரும்பினோம். சோயா செய்திருக்கும் ஆக்சன் காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது உண்மையிலேயே நானும் அதனுடன் சேர்ந்து சுழல வேண்டி இருந்தது என்பதையும் என்னுடைய திரையுலக பயணத்திலேயே மிகவும் கடினமான பயிற்சியாகவும் அது இருந்தது என்பதையும் இதுபோன்ற காட்சிகள் இதற்கு முன்னாள் எந்த ஒரு பெண்ணும் முயற்சித்ததில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்” என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, “உலகிலேயே மிகச்சிறந்த சண்டைப்பயிற்சி குழுவால் செயல்படுத்தப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளை பெரிய திரையில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க இருப்பதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்கிறார்.

ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டு, மனீஷ் சர்மாவால் இயக்கப்பட்டுள்ள இந்தப்படம் வரும் தீபாவளி வெளியீடாக நவ-12 ஞாயிறன்று வெளியாக இருக்கிறது. தனது அடையாள கதாபாத்திரமான யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘ஓஜி’யான சூப்பர் ஏஜென்ட் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா நடித்துள்ளார்.

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. மலையாளத்தில் ’பதினெட்டாம் பாடி’, ’வாலாட்டி’, ’பிரார்த்தனா சாப்ரியா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ’போர்தொழில்’ படப்புகழ் லிஷா சின்னு, ’சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 – காலை எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விவேக் ராஜாராம் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்குவது மற்றும் டிசைனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறும்போது, “எங்கள் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம். எங்களின் முதல் தயாரிப்பான ’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதுபோலவே, ‘சிரோ’ திரைப்படமும் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்தப் படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம்” என்றார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:
ஒளிப்பதிவு: கிஷன் சி.வி,
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா,
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சிவகுமார்,
நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான்,
விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்

‘கூழாங்கல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்ஜர் ராஜா இசையில் ‘கூழாங்கல்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன், “’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் ‘கூழாங்கல்’தான். இயக்குநர் ராம் சார் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது. எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. அதேபோல, ஸ்பிரிட் அவார்டிலும் இந்தப் படம் நாமினேட் ஆனது. இப்படி பலவற்றை இந்தப் படம் சாதித்துக் கொடுத்தது. எங்கள் முதல் படத்திற்கே இத்தனை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குநர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி. பல திரைப்பட விருது விழாக்களுக்கும் சென்ற பிறகே வெளியிட வேண்டும் என முடிவு செய்திருந்தோம். திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அதற்கான நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் சோனி லிவ் ஓடிடியில் இப்போது வெளியிடுகிறோம். மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் அறிமுகம் கிடைக்கவும் இந்தப் படம் உதவியது. இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த இயக்குநர் வினோத்திற்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்” என்றார்.

இயக்குநர் வினோத்ராஜ் பேசியதாவது, “’கூழாங்கல்’ படத்தை முடித்து விட்டு அடுத்து இதை எப்படி எடுத்து செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, ராம் அண்ணன் கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன் மேம் விக்னேஷ் சிவன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் படம் பிடித்துப் போய் பல உயரங்களுக்கு ‘கூழாங்கல்’லை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம். நன்றி!” என்றார்.

‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியீடு

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘துருவ நட்சத்திரம்’, ‘தங்கலான்’ ஆகிய படங்களின் புதிய அப்டேட்டுகளால் உற்சாகமடைந்திருக்கும் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு, ‘சீயான் 62’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் காணொளி வெளியாகி இருப்பது மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

‘லேபில்’ நவம்பர் 10 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்தில் வெளியான “லேபில்” சீரிஸின் டிரெய்லர் திரை ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன், பொதுப்பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

‘மார்கழி திங்கள்’ திரைவிமர்சனம்

பாரதிராஜா, ரக்ஷனா மற்றும் ஷியாம் செல்வம் அறிமுகத்தில் சுசீந்திரனின் திரைக்கதையில்,மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்திருக்கும் படம் மார்கழி திங்கள்.


கதை சுருக்கம்,

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் நடக்கும் கதை. பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வாழும் கவிதா. பத்தாம் வகுப்பு படிக்கும் இவருக்கும் அவருடன் படிக்கும் மாணவரான வினோத்திற்கும் படிப்பில், போட்டி வந்து, அந்த போட்டியே காதலாக மாறி நிற்கிறது ,தாத்தாவிற்கு தான் தான் உலகம் என்று நினைக்கும் கவிதா, தாத்தாவிடம் தன் காதலை சொல்ல அந்த காதலை தாத்தா சேர்த்து வைத்தாரா, அல்லது அல்லது தன் சமூகத்தின் மீதான பயத்தில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை படத்தின் திரை கதை.
தாத்தாவாக பாரதிராஜா, வயது முதிர்ந்த தனது தளர்ந்த உடலாலும், குரலாலும் அந்த தாத்தாவின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிரூட்டி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் பாரதிராஜா. பேதியாக வரும் நடிகை ரக்ஷனா, கவிதாவாக வாழ முயற்சி செய்திருக்கிறார். தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அந்த வயதிற்கே உரிய காதல் ஏமாற்றம் இயலாமை ஆகியவற்றை தன் நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலனாக வரும் ஷியாம் செல்வம் எனும் மனதில் நிற்க மறுக்கிறார், காதல் காட்சிகளிலும் உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் தன்னை படத்தில் வில்லனாக காட்டிக் கொள்ள மிகவும் மெணக்கெடுக்கிறார் .,ஆனால் அவர் வில்லன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவருக்கு அந்த கதாபாத்திரம் ஒட்டவில்லை.
அப்புகுட்டி படம் முழுவதும் வருகிறார் ஒரு சில வசனங்கள் மட்டும் பேசுகிறார் இன்னும் அவரை ஆழமாக அழுத்தமாகவும் காட்டி இருந்தால் அவரது நடிப்பு படத்திற்கு பலமாக இருந்திருக்கும்.


கவிதாவின் தோழியாக வரும் நக்க்ஷா படம் முழுவதும் வருகிறார் அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு இன்னும் அழகு ஊட்டி இருக்கலாம். கிராமத்தின் அழகை எடுத்துக் காட்டி இருக்கலாம். படத்தொகுப்பு இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இசை இளையராஜா ஆனால் இளையராஜாவை இசை நமக்கு ஞாபகப்படுத்தவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் கதை நடக்கும் களம் அந்த கதைகளத்தை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறார்கள் திரைக்கதையில். ஒரு சில காட்சிகள் நாடக பாணியில் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் அந்த காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு கிராமத்தின் சூழலை கையில் எடுத்த இயக்குனர் அந்த கிராம மக்களின் வாழ்க்கையை காட்டி இருக்கலாம் அந்த கிராமத்தில் கதாபாத்திரங்கள் மட்டுமே இருப்பதாக காட்டி இருப்பது சற்று நெருடலாக உள்ளது.
கடைசியில் வரும் 20 நிமிட படத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம் மனதை விட்டு நீங்காமல் இருந்திருக்கும் கண்கலங்க வைத்திருக்கும்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத ஒன்று மிகவும் வலியான ஒன்று.

மார்கழி திங்கள் காதலுக்கும் சாதிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காதல் நெஞ்சங்கள்

OVEREALL RATTING——–3/5

படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகளுக்காக மட்டுமே இந்த மதிப்பெண்

‘துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers

‘துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் முதல் பதிப்பில், DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா மற்றும் பாலிவுட் நடிகை த்ரஷ்தி தாமி ஆகியோர் பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டனர்.

ZEE5 தளம் அதன் உள்ளடக்கத்தில் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் அயலி, ஜன்ஹித் மெய்ன் ஜாரி, சத்ரிவாலி, ஹெல்மெட், அபார் ப்ரோலாய், அர்த் போன்ற பல படைப்புகளைக் கொண்டுள்ளது.

ZEEL இன் OTT பிரிவின் ஒன்றாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த #ZEE5GameChangers நிகழ்வை அறிவித்துள்ளது. புது தில்லி தலைமையகத்தில் பெண் காவல் துறையுடன், ‘துரங்கா சீசன் 2’ இன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து இந்த பிரச்சார நிகழ்வைத் தொடங்கினர். இந்நிகழ்வில் பிரபல நடிகர்களான அமித் சாத், த்ரஷ்தி தாமி, முன்னணி இயக்குநர் ரோஹன் சிப்பி மற்றும் ZEE5 இன் AVOD மார்க்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட அமலாக்கத் துறையில் பெண்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஆலோசித்து உரையாடினர்.

ஒரு பெண் காவலரின் கதையுடன் அடையாள திருட்டு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, வரவிருக்கும் உளவியல் த்ரில்லர் ‘துரங்கா 2’ சீரிஸ் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மாதிரியான கதைகளுடன், பல்வேறு மொழிகளில் மற்றும் வடிவங்களில் இன்றைய சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் படைப்புகளை, பொழுதுபோக்கின் வழியே ZEE5 எப்போதும் வழங்கி வருகிறது. ரசிகர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் #ZEE5GameChangers நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக அழுத்தமான தைரியமான மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லல் மூலம் மாற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், பொருத்தமான கருப்பொருள்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ZEE5 முயல்கிறது. காவல்துறைப் பணியாளர்களின் அனுபவங்களையும் பயணத்தையும் பகிர்ந்து கொண்ட DCP PRO சுமன் நல்வா, துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமியுடன் இந்நிகழ்வில் இது குறித்த உரையாடலில் ஈடுபட்டார்.

டெல்லி காவல்துறை DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா கூறுகையில்..,
“சமூக அக்கறையுடன் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்புகளை ZEE5 வழங்கி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, பார்வையாளர்களை மிக ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் திறனை ZEE5 கொண்டுள்ளது. ZEE5 பெண் காவலர்களின் பணியை அங்கீகரித்துப் பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தில்லி காவல் படையின் பெண் காவலர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் அதைக் கடந்து சவாலான பணிகளைச் செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் இம்மாதிரியான பாராட்டுக்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் நகரத்திற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அதிகரிக்கிறது.

ZEE5, AVOD மார்கெட்டிங் தலைவர் திரு. அபிரூப் தத்தா கூறுகையில்..,
“ZEE5 இல், கல்வி மற்றும் சமூக அக்கறைமிக்க புதுமையான படைப்புகளில் முதலீடு செய்வதே எங்கள் முக்கிய நோக்கமாகும். கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், நுகர்வோரை மையமாகக் கொண்ட பிராண்டாக நிஜ வாழ்க்கை சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போதைய மாறிவரும் சமூகத்தில் கதைசொல்லலின் உருமாறும் சக்தியை நாங்கள் நம்புகிறோம், மாறுபட்ட கதை சொல்லலின் வழியேவும், அதனைச் சந்தைப்படுத்தும் முயற்சிகள் மூலமாகவே நாம் பரந்த பார்வையாளர்களை இணைத்து, அவர்களிடம் கல்வி மற்றும் பல கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை அங்கீகரிக்கிறோம். #ZEE5GameChangers மூலம், தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எங்கள் பார்வையாளர்களுடன் இணைந்து, அனைவரும் தொடர்புகொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது போன்ற ஒவ்வொரு முயற்சியிலும், முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை உருவாக்குவதையும், எங்கள் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் தரமான கதைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமி கூறுகையில்..,
“துரங்கா சீரிஸில் எனக்கு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி, தற்போது #ZEE5GameChangers முயற்சியால் டெல்லி படையில் உள்ள இந்த துணிச்சலான நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் / பெண் போலீஸ் அதிகாரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி. இந்த விதிவிலக்கான பெண்களின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உத்வேகப் பயணங்களைச் சுற்றியுள்ள முக்கியமான உரையாடல்களைத் தூண்டும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான கருத்துகளை உடைத்து, குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துவது, சமூகத்திற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் அவர்களின் கதைகள் கேட்கப்பட வேண்டும் மற்றும் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.”

ZEE5 சமூ விழிப்புணர்வு கொண்ட அழுத்தமான கதைகளை அனைத்து மொழிகளிலும் வழங்கி வருகிறது உள்ளடக்கத்தை வழங்கி, ஒரே மாதிரியான கருத்தாக்கத்தை உடைத்து, பார்வையாளர்களை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தைத் தூண்டுவதற்கும் முக்கியமான உரையாடல்களைத் தொடங்குகிறது. அந்த வகையில் துரங்கா முதல் சீஸனானது 8 எபிசோடுகள் கொண்ட வெப்-சீரிஸ் ஆக ஆகஸ்ட் 2022 இல் வெளியிடப்பட்டது. இதனை ரோஸ் ஆடியோ விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த சீரிஸில் அமித் சாத், த்ரஷ்தி தாமி மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர். இது மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து தொகுக்கப்பட்ட ஒரு வசீகரமான காதல் கதையை வழங்குகிறது. ரோஹன் சிப்பி இயக்கியுள்ள, துரங்காவின் சீசன் 2 அக்டோபர் 24, 2023 அன்று திரையிடப்பட்டது. இந்த சீசனில், இன்ஸ்பெக்டர் ஐரா தனது கணவரின் இருண்ட கடந்த காலத்தை ஆராய்வதால், ரசிகர்கள் மேலும் பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் எதிர்பார்க்கலாம்.

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!

பள்ளி மாணவனின் வாழ்வினை எளிமையான கதையில் அழகாகச் சொல்லிய “ரங்கோலி” திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக வெளியான திரைப்படம் “ரங்கோலி”.

திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் 24 அக்டோபர் 2023 அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. அனைவரின் பள்ளி ஞாபகங்களைக் கிளறும் இப்படம் குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருவதுடன், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்று வருகிறது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியிலிருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.
பள்ளி மாணவர்களின் வாழ்வை மட்டுமல்லாது ஒரு எளிமையான குடும்பத்தின் வாழ்வியலையும் அழகாக இந்தப்படம் சொல்கிறது.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார்.

பள்ளிக்கால வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லும் இந்த அழகான டிராமா திரைப்படத்தினை அமேசான் ப்ரைம் தளத்தில் கண்டுகளியுங்கள்

தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது, சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த கிடா (Goat) திரைப்படம் !!

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக்கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதில் படக்குழு பெரும் உற்சாகமாக உள்ளது.

உலகளவில் பாராட்டுக்களை குவித்த இப்படம் இறுதியாக, நம் தமிழக ரசிகர்களை தீபாவளி திருநாளில் மகிழ்விக்கவுள்ளது.

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்
கலை இயக்கம் : K.B.நந்து
பாடல்கள் : ஏகாதசி
எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்
இயக்கம் : ரா. வெங்கட்