The day has arrived. The theatrical trailer of Natural Star Nani’s highly anticipated Pan India film Hi Nanna directed by debutant Shouryuv with Vyra Entertainment bankrolling it has been unleashed just a while ago.
The trailer opens with Nani narrating a tale of a king, and when there’s no mother character in it, the girl requests him to narrate her mother’s story. He narrates everything but hides something about her mother. There is so much emotion in the story, thus the girl doesn’t want to stress his father about her mother. The intriguing factor in the story is she imagines the new friend Yashna (Mrunal) as her mother. However, Shruti Haasan was later revealed as Viraj’s wife and Mahi’s mother.
As the trailer divulges, there are many layers in the story. There is magic in the love story, whereas the father-daughter emotion will make everyone sentimental. Director Shouryv checked all the boxes of a wholesome family entertainer. He presented the story in a very new pattern, which sets it apart from regular family entertainers.
It’s again new to see Nani in a completely family man role, after a mass character in Dasara. The actor scores more than distinction for the character arc as a loverboy to a father of a kid. His brilliant performance makes this extra appealing. Mrunal Thakur has given a soulful performance, whereas Shruti Haasan is a surprise package. Baby Kiara Khanna is a doll and her expressions are just adorable.
Be it romantic sequences or emotional episodes, you will find some top-notch camera angles as well as lighting, thanks to cinematographer Sanu Varghese. The picturesque locations of Goa, Coonoor, etc. are presented in the most beautiful possible way. Hesham Abdul Wahab’s background score definitely adds to the class as well as the emotional connection elegantly. The production values of Vyra Entertainments are exceptional. The production deign of Avinash Kolla is another positive aspect.
On the whole, Hi Nanna trailer offers an emotional ride with some great performances and superlative technical work with a mix of commercial elements. Surely, Hi Nanna is going to shake the box office when it arrives in cinemas.
Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala produced the movie on a high budget. Praveen Anthony is the editor and Satish EVV is the executive producer.
Hi Nanna is slated for release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages on December 7th.
Cast: Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna
Technical Crew: Director: Shouryuv Producers: Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala Banner: Vyra Entertainments DOP: Sanu John Varughese ISC Music Director: Hesham Abdul Wahab Production Designer: Avinash Kolla Editor: Praveen Anthony Executive Producer – Satish EVV Costume Designer: Sheetal Sharma PRO: Nikil Murukan
மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.! கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும், பரப்பிய அவதூறுகளுக்கும், என்னைப் பற்றிக் கூறிய வரம்புமீறிய வார்த்தைகளுக்கும், உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கும் பதிலளிக்க கோரி என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்க கூடிய அனைத்து ஊடக நண்பர்களுக்காகவே இந்த அறிக்கை. ”பருத்திவீரன்” தொடர்பான வழக்கு, இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், வழக்கறிஞரின் அறிவுறுத்தலின் பேரிலேயே நான் இன்னும் பதிலளிக்காமல் இருக்கிறேன். அதன் காரணமாகவே, ஊடக நண்பர்களைச் சந்திக்காமலும் இருக்கிறேன். இதில், வேறு எந்த காரணமும் கிடையாது. இருந்தாலும், தொடர்ச்சியாக இப்பிரச்னை ”YOUTUBE” உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சென்று கொண்டிருக்கின்ற காரணத்தினால், சில விளக்கங்களை அளிக்க நான் விரும்புகிறேன். “பருத்திவீரன்” தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள். இது முழுக்க முழுக்க சமூகத்தில் எனக்கு இருக்கும் கண்ணியத்தைக் குறைக்கும் நோக்கத்தோடும், திரைத்துறையில் என்னுடைய பயணத்தை தடைசெய்யும் நோக்கத்தோடும் திட்டமிட்டு நடத்தப்படும் பொய்ப்பிரசாரமே. ”பருத்திவீரன்” திரைப்படம் தொடர்பாக, எனக்கும் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் இடையே எந்த ஒரு ஒப்பந்தமும் போடப்படவில்லை. எனவே, இல்லாத ஒப்பந்தத்தை நான் மீறவும் இல்லை. படத்தின், முதல் கட்டப் படப்பிடிப்புக்கு அவர் வழங்கிய தொகையைத் தவிர அடுத்தடுத்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கான தொகையைத் தராமல் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு காணமல் போனவர் அவர். அதன் பின்னரே, நான் எனது “TEAMWORK PRODUCTION HOUSE” நிறுவனத்தின் மூலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி முடித்தேன். மேலும், “பருத்திவீரன்” படப்பிடிப்புச் சூழல் முழுவதையும் முற்றாக அறிந்த, இன்றைக்கு திரைத்துறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் என் சகோதரர்களும், பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இப்பிரச்னையில், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கிறது.
”பருத்திவீரன்” திரைப்படம் எந்த சூழலில் தொடங்கப்பட்டது? தொடங்குவதற்கான காரணம் என்ன? என்ற உண்மையை அறிந்த பெரிய மனிதர்களும், எனக்கு வாக்கு கொடுத்து ”படத்தை நீங்களே வெளியிடுங்கள்” என்று சொன்னவர்களும், அன்றும் வேடிக்கை பார்த்தார்கள்.! இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.! ”பருத்திவீரன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட பஞ்சாயத்தை, நடத்தியவர்களும், முடித்து வைத்தவர்களும், சாட்சிக் கையெழுத்திட்டவர்களும் இன்றளவும் அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், 17 வருடங்களுக்கு முன்பு என் கை பிடித்து வாக்கு கொடுத்தவரின் அன்புக்கு கட்டுப்பட்டு வேலை செய்த நான், இன்று சமூகத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கிறேன். நடந்த உண்மைகளைச் சொல்வதற்கு எனக்கு சில மணி நேரங்களே போதுமானது. ஆனால், அது பலருடைய வாழ்க்கையில் புயலைக் கிளப்பி விடும் என்ற காரணத்தினாலும், ஒட்டு மொத்த திரையுலகத்தையும் திசை திருப்பி விடும் என்ற காரணத்தினாலுமே நான் அமைதி காக்கிறேன். வேறு எதற்காகவும் அல்ல.! உண்மை இப்படியிருக்க, ஞானவேல் என்னைப் பற்றி கூறிய விசயங்களால் நான் அடைந்த மன உளைச்சலை விட, என் குடும்பத்தாரே அவரால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற போதிலும், நானும், என் குடும்பத்தாரும் இதையெல்லாம் கடந்து வந்து விடுவோம், துளியும் அவரது சூழ்ச்சிக்கு பலியாக மாட்டோம் என்பதைத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவரை வழிநடத்தும் பெரியவர்கள், ”இதுபோல் யாரையும் அவதூறாக பொதுவெளியில் பேச வேண்டாம்,” என அவருக்கு அறிவுறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பூமியில், “அநியாயமும், அக்கிரமங்களும், அநீதியும் தலை விரித்தாடுகின்ற போது கண்ணன் அவதாரம் எடுப்பார்..” என்ற கீதையின் வாசகத்தைப் போல, தமிழகத்தில் நடக்கும் இந்நிகழ்வுகளுக்கு, அமெரிக்காவில் இருந்து நடந்த உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமாகிய திரு.கணேஷ் ரகு அவர்களுக்கு என் உளப்பூர்வமான, கோடானகோடி நன்றிகள்.!
“பருத்திவீரன்” தொடர்பான வழக்கு மற்றும் விபரங்கள் அனைத்தும் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாலும், அதில் தொடர்புடைய ஒரு சிலருக்கு மட்டுமே உண்மை தெரியும் என்கிற நிலையில், என் பக்கம் நியாயம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு எனக்கு ஆதரவளித்து, எனக்காக குரல் கொடுத்த, என்னைத் தெரியாத, என்னோடு உறவாடாத அனைத்து செய்தியாளர்களுக்கும், என் மீது அன்பு கொண்ட பொதுமக்களுக்கும் நிச்சயமாக நான் நன்றிக்கடன் பட்டவனாக இருக்கிறேன். என்றென்றும் அவர்களுக்கு நன்றி.! ”பருத்திவீரன்” பட பிரச்னை மீண்டும் மீண்டும் ’YOUTUBE” உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான், “மாயவலை” படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதால், இனியும், இந்த பிரச்னை தொடர்பாக என்னை யாரும் அணுக வேண்டாம் என்று பணிவோடு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.! ”வீழ்ந்து விடாத வீரம், மண்டியிடாத மானம்..” ”இறைவன் மிகப் பெரியவன்”
The soulful vocals by Arijit and music by Pritam brings back the magic of falling in love!
Dunki Drop 2 – Lutt Putt Gaya is the new melody of love that is ruling the hearts of the audience. Bringing back the innocence of love in a song that is bound to be n your playlist.
Garnering 30 million views in just 24 hours, the first song from the film has indeed come as an absolute treat for the audiences who have been eagerly looking forward to seeing more of the endearing world of Rajkumar Hirani.
The loved song left fans with a lot of curiosity around the film and their favourite superstar SRK, and it was certainly witnessed on the #AskSrk session conducted post the launch , where the fans were seen expressing their love for the song to the superstar.
Dunki features an ensemble cast, with colourful characters portrayed by exceptionally talented actors, Boman Irani, Taapsee Pannu, Vicky Kaushal, Vikram Kochhar, Anil Grover, starring along with Shah Rukh Khan. A JIO Studios, Red Chillies Entertainment, and Rajkumar Hirani Films presentation, produced by Rajkumar Hirani and Gauri Khan. Written by Abhijat Joshi, Rajkumar Hirani, and Kanika Dhillon, Dunki is a Christmas release, hitting theatres on the 21st of December 2023.
ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா, பாபி தியோல், பூஷன் குமார், சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் அனிமல் படக்குழுவினர், டெல்லி தெருக்களில் மக்கள் கூட்டத்தோடு இணைந்து பிரமாண்டமான முறையில் அனிமல் டிரெய்லர் வெளியீட்டு விழாவினை கொண்டாடினர்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் அனிமல் திரைப்படம், ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளது. இதுவரை வெளியான பாடல்கள் மற்றும் டீசர் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அனிமல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது. அனிமல் பட டிரெய்லர் வெளியீட்டு விழா, டெல்லி இதுவரை கண்டிராத மிகப்பெரிய நிகழ்வாக நடந்தேறியுள்ளது.
ஒரு பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வின் மூலம் டெல்லி தெருக்களை புயலாய் தாக்கி கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது அனிமல் படக்குழு. ரன்பீர் கபூர், ரஷ்மிகா மந்தனா, பாபி தியோல், பூஷன் குமார், சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் படக்குழு 11 சகோதரர்களுடன் டெல்லி தெருக்களில் நுழைந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளினர் . இது மட்டுமல்ல, ரன்பீரும் பாபியும் திடீரென மேடையில் நுழைந்து ரசிகர்களுடன் உரையாட, அங்கு கூடியிருந்த பெரும் கூட்டம் கூக்குரலிட்டது. அனிமல் டிரெய்லர் வெளியீட்டு விழா டெல்லி நகரம் கண்ட மிகப்பெரிய நிகழ்வாகும். 100 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் அனிமல் டிரெய்லர் வெளியிடப்பட்டது. முழுக் குழுவும் கருப்பு உடையில் இருந்தது, வெளியீட்டு நிகழ்வில் அனிமல் போட்டோ ஆப் அங்கு அமைக்கப்பட்டிருந்தது சிறப்பம்சமாக இருந்தது.
பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியோர் இணைந்து அனிமல் படத்தை தயாரித்துள்ளனர். க்ரைம் டிராமா வகையைச் சேர்ந்த இப்படம், டிசம்பர் 1, 2023 அன்று பார்வையாளர்களை நெஞ்சம் அதிரும் பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும்.
தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணனின் ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் ‘தி வில்லேஜ்’. இந்திய அளவிலான ஸ்ட்ரீமிங்கில் இதுவரை கண்டிராத திகில் ஜானரிலான படைப்பை இந்த தொடர் ஆராய்கிறது.
‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான தமிழ் ஒரிஜினல் திகில் இணையத் தொடரில் நடிகர் ஆர்யா முதன் முதலாக அறிமுகமாகிறார். இவருடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ‘ஆடுகளம்’ நரேன், எம். ஜார்ஜ், ‘பூ’ ராம், முத்துக்குமார், கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நவம்பர் 24ஆம் தேதி முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் ‘தி வில்லேஜ்’ திரையிடப்படவுள்ளது.
கோவா -இந்தியா- நவம்பர் 22 2023- இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுது போக்கு தளமான பிரைம் வீடியோ, இன்று நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 54ஆவது பதிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரின் முதல் அத்தியாயம் திரையிடப்பட்டது. ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஆர்யா, திவ்யா பிள்ளை, இயக்குநர் மிலிந்த் ராவ், பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைவரான அபர்ணா புரோகித் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் இந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிர்வாக இயக்குவரான ஸ்ரீ பிருதுல் குமார் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இணை செயலாளர் (திரைப்படங்கள் பிரிவு) இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆகியோருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ”இந்திய கதைகள் மற்றும் கதை சொல்லிகள் தங்கள் திறமையையும், பணியையும் வெளிப்படுத்த ஒரு அற்புதமான தளத்தை உருவாக்கியதற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழா அமைப்பாளர்களுக்கு சிறப்பு நன்றி”யை தெரிவித்து பிரத்யேக அமர்வை அபர்ணா புரோகித் தொடங்கி வைத்தார். அதனுடன் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் அவர் வழங்கினார்.
இதனையடுத்து விறுவிறுப்பான ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. அதனுடன் இந்த இணையத் தொடரின் முதல் அத்தியாயமும், பிரத்யேக ஸ்னீக் பிக்கும் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதனைக் கண்டு ரசித்த திரை ஆர்வலர்கள் கரவொலி எழுப்பி தங்களது பாராட்டை தெரிவித்தனர். மேலும் இந்தத் தொடர் பார்வையாளர்களிடையே திகிலான அனுபவத்தை வழங்கியது என்பதற்கு சான்றாகவும் இருந்தது.
இத்தொடரை பற்றிய எதிர்பார்ப்பை உற்சாகத்துடன் அதிகரிக்க படக்குழுவினர் பிரத்யேக உரையாடலிலும் ஈடுபட்டனர். இதன் போது இந்தியாவில் இதுவரை ஸ்ட்ரீமிங் தளத்தில் முயற்சிக்கப்படாத ஒரு உயிரின திகில் தொடரில் பணிபுரிந்த சவால்கள் மற்றும் அனுபவங்கள் பற்றி பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். பிறகு கோவாவின் என்டர்டெய்ன்மென்ட் சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரியான அங்கிதா மிஸ்ரா ஐஏஎஸ் அவர்களாலும் இந்த தொடர் பாராட்டப்பட்டது.
‘தி வில்லேஜ்’ எனும் இந்த தமிழ் ஒரிஜினல் திகில் தொடர் குறித்து பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைவரான அபர்ணா புரோகித் பேசுகையில், ” தி வில்லேஜ் வழக்கமான திகில் நிகழ்ச்சிகளை கடந்து, யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகத்தை உருவாக்குகிறது. அதிலும் அதிவேகமான உலகத்தை உருவாக்குகிறது. அழுத்தமான கதை… சிறந்த ஒளிப்பதிவு… மற்றும் இணையற்ற நிகழ்ச்சிகள்… இதில் இடம் பிடித்திருக்கிறது. இயக்குநர் மிலிந்த் ராவ் உண்மையான தொலைநோக்கு பார்வையுடையவர். அவருடன் இணைந்து திரைக்கதையை உயிர்ப்பித்தது விதிவிலக்கான அனுபவமாக இருந்தது. நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பொழுதுபோக்கு துறைகளை சேர்ந்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து இந்த நீண்ட வடிவிலான ஒரிஜினல் தொடரில் அவர் அறிமுகமானது வரவேற்கத்தக்கது. எங்களின் தொடக்க தமிழ் ஒரிஜினல் திகில் தொடரான ‘தி வில்லேஜை’ எழுச்சியூட்டும் வகையில் திரையிடுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், அமைப்பாளர்களுக்கும் நன்றி. உலகெங்கிலும் உள்ள சினிமா கலைஞர்களின் பார்வையாளர்கள் எங்கள் வாடிக்கையாளர்கள். இந்த தனித்துவமான திகில் தொடரை ரசிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நாங்கள் பிரைம் வீடியோவில் உங்கள் அனைவருக்கும் இந்த தொடரை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
‘தி வில்லேஜ்’ மூலம் ஒரிஜினல் ஸ்ட்ரீமிங் தளத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகர் ஆர்யா இது தொடர்பாக பேசுகையில், ” இந்த தொடரின் மூலம் நீண்ட வடிவத்திலான ஓ டி டி எனும் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாவதில் நான் பெருமிதம் அடைகிறேன். திறமையான இயக்குநர் மிலிந்த் ராவ் மற்றும் பிரைம் வீடியோவின் குழுவினருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ‘தி வில்லேஜ்: எனக்கு ஒரு தொடர் அல்ல. கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒரு புதிய வகையிலான ஜானரை ஆராயவும், சிறந்த நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றவும் எனக்கு வாய்ப்பளித்தது. இந்தத் தொடரில் ஒருவரை அச்சத்தில் உறைய வைக்கும் தருணங்கள் நிறைய உள்ளன. ஆனால் அது ஒரு உணர்ச்சி ஆழத்தையும், அடிப்படையான சமூக செய்தியையும் கொண்டிருக்கிறது. ஒரு நடிகராக எல்லைகளைக் கடந்து மக்களுடன் இணைந்திருக்கும் மற்றும் நீடித்த நினைவுகளை உருவாக்கும் கதைகளின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாங்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள். இது நாம் அனைவரும் நம்ப முடியாத அளவிற்கு பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகும். நாங்கள் அதை உருவாக்கி மகிழ்ந்ததை போலவே…. நீங்களும் இந்த தொடரை திரையில் காணும் போது பார்த்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
இந்த தொடர் குறித்து நாயகியாக நடித்திருக்கும் நடிகை திவ்யா பிள்ளை பேசுகையில், ” திறமையான நடிகரான ஆர்யாவுடன் இணைந்து இயக்குநர் மிலிந்த் ராவ் வழிநடத்தும் இந்த திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘தி வில்லேஜ்’ என் இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. பணக்கார… நடுத்தர… மற்றும் ஆழமான மனித கதாபாத்திரங்களை ஆராய்வதற்கான கதை சொல்லலின் நுணுக்கங்களை ஆராய… இந்த படைப்பு எங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. எங்கள் இயக்குநர் மிலிந்த் ராவை பற்றி நான் அதிக அளவு பேச இயலாது. இந்த திட்டத்திற்கான அவரது பார்வையும், ஆர்வமும் உண்மையிலேயே வியப்பளிக்கிறது. அவர் கருணையுடனும், அசையாத அர்ப்பணிப்புடனும் எங்களை எல்லாம் வழிநடத்திச் சென்றுள்ளார். ஒவ்வொரு நாளும் நம்முடைய திறமைகளின் எல்லைகளை மறு வரையறை செய்வதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுக்கிறார். ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் இணையத் தொடரில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இதன் முதல் அத்தியாயத்தை காண்பது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் நவம்பர் 24ஆம் தேதி அன்று இதனை காண்கிறார்கள். ” என்றார்.
இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மிலிந்த் ராவ் பேசுகையில், ” இந்த தனித்துவமான கதையை உலகிற்கு கொண்டு வந்ததற்காக நான் பெருமிதம் கொள்கிறேன் மற்றும் நன்றி உணர்வை உணர்கிறேன். ‘தி வில்லேஜ்’ ஒரு கிரியேச்சர் ஹாரர் தொடர். இது இந்தியாவில் மிக அரிதாகவே அலசப்படும் ஒரு வகையான ஜானர்.
ஒரு தந்தை தனது குடும்பத்தை சொல்லொணாக் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற பாடுபடும் ஒரு பயங்கரமான இரவில் இந்த தொடர் நடைபெறுகிறது. இந்த முன் கணிப்புதான் என்னை கதைக்குள் ஈர்த்தது. மேலும் அது ஆழமான உலக கட்டமைப்பையும், நுட்பமான கதையையும் அனுமதித்தது. நீண்ட வடிவிலான கதை சொல்லலுக்கு இது சிறந்ததாக இருக்கும் என உணர்ந்தேன். நிச்சயமாக ப்ரைம் வீடியோ மற்றும் ஸ்டுடியோ சக்தியின் ஆதரவு இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை. அவர்கள் முதல் நாளிலிருந்து எனது பார்வையை முழுமையாக ஆதரித்தனர். மேலும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தனர். திறமையான நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் அனைவரும் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த தொடரின் முதல் அத்தியாயத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.
இந்தத் தொடர் தமிழில் பிரத்யேகமாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் சப் டைட்டில்களுடன் நவம்பர் 24ஆம் தேதியன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த தொடர் திரையிடப்படவுள்ளது.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரைம் வீடியோ பங்கேற்பது இந்தியாவின் ஆக்கபூர்வமான பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவதில் வீடியோ ஸ்ட்ரீமிங் துறையின் முக்கிய பங்கிற்கு ஒரு சான்றாகும். மேலும் இந்தியக் கதைகள், திறமைகள் மற்றும் திறமையான படைப்பாளிகளை உலக அரங்கில் வெளிப்படுத்த ஒரு வலுவான தளமாகவும் செயல்படுகிறது.
அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனி – சந்து மொண்டேட்டி – பன்னி வாசு – கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும் ‘தண்டேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் #NC23 எனும் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்குகிறது. திறமை வாய்ந்த நட்சத்திர நடிகரான நாக சைதன்யா நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். அதே தருணத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி, ‘கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் பான் இந்திய பிளாக் பஸ்டரை வழங்கியவர். மேலும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல வெற்றிகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இதுவரை கண்டிராத தோற்றத்தில் நடிக்கும் நாக சைதன்யாவிற்கு இந்தத் திரைப்படம், இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் திரைப்படமாக இருக்கும்.
நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார். இருப்பினும் அவரது பிறந்த நாளுக்காக ஒரு நாள் முன் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய பரிசினை வழங்கி இருக்கிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு ‘தண்டேல்’ எனும் ஆற்றல் மிக்க தலைப்பினை அறிவித்து, அதனுடன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர்… கவர்ச்சியானவர்… லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர்… ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால் அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம்.
நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார். இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டிருக்கிறார். கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கும் நாக சைதன்யா- வேட்டி அணிந்து, தனது செதுக்கப்பட்ட உடலமைப்பை கதாபாத்திர தோற்றத்திற்காக தீவிரமாக பார்ப்பது போல் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – படத்தின் தலைப்பை போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் படப்பிடிப்பு பெரும்பாலும் அசலான இடங்களில் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான ‘லவ் ஸ்டோரி’க்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இரண்டாவது படம் இது. ‘தண்டேல்’ என்பது முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட காதல் கதை.
இப்படத்தின் கதையில் இசைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த காதல் கதைக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார். ஷாம் தத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
படப்பிடிப்பிற்கு முன்னதான பணிகளில் படக் குழு போதுமான நேரத்தை செலவிட்டுள்ளதால்..இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.
ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டியின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல்.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் அற்புதமான இயக்கத்தில், அட்டகாச படைப்பாக உருவாகியுள்ள “டங்கி” படத்தின் இசைப்பயணத்த்தை, படைப்பாளிகள் படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா” டிராப் 2 – வை வெளியிடுவதன் மூலம் தொடங்கியுள்ளனர். ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதையாக பாடல் முழுதும் நிரம்பியிருக்கிறது.
மேஸ்ட்ரோ ப்ரீதம் உடைய மெல்லிசை விருந்தில், அரிஜித் சிங்கின் ஆத்மார்த்தமான குரலில், ஸ்வானந்த் கிர்கிரே மற்றும் ஐபி சிங் பாடல் வரிகளில் இந்த மெலோடி மனதைக் கவர்கிறது. புகழ்மிகு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், அற்புத நடன அசைவுகளுடன், காதல் மேஜிக்குடன் ஒரு துள்ளலான உணர்வைத் தருகிறது இந்தப்பாடல்.
ஒரு தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, பல காவியப்படைப்புக்களை வழங்கியுள்ளார். இந்த முறை மனம் நிறைந்து, புன்னகை பூக்கும் மற்றுமொரு அழகான ரத்தினமான படைப்பாக டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கத் தயாராக உள்ளார்.
இதயம் வருடும் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. வெளிநாட்டுக்கு செல்லும் தங்கள் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 21 – 2023 இல் வெளியிடப்பட உள்ளது.
நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘G2’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ‘குடாச்சாரி 2’ எனும் இந்த படத்தில் நாயகன் அதிவி ஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார் என்ற செய்தியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
‘மேஜர்’, ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் உருவாகும் ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் தான் ‘ஜி2’. இது போன்ற திறமையான நடிகர்களுடனும் இணைவதால் படம் பிரம்மாண்டமாகவும், தரமுடனும் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ‘அக்டோபர்’, ‘சர்தார் உத்தம்’ போன்ற படங்களில் நடித்து, பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை பனிதா சந்து. இது மட்டுமின்றி அவர் தற்போது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராக இருக்கிறார்கள்.
இது தொடர்பாக நடிகை பனிதா சந்து பேசுகையில், ” இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும். ” என்றார்.
இது தொடர்பாக நடிகர் அதிவி சேஷ் பேசுகையில், ” G2 உலகிற்கு பனிதாவை அன்புடன் வரவேற்கிறேன். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புகிறேன் ” என்றார்.
இந்தத் திரைப்படத்தை மக்கள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ கே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வினய் குமார் சிரிகிடினி இயக்குகிறார்.
தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.
இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார்.
கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர்.
வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர்.பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர்.நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர்.இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவுப் பணி செய்து வருகிறார்.
அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர். ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ் இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ளவர்.
படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.
படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.இப்படிப் பல்வேறு திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் அறிமுக விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில்,இரட்டை இயக்குநர்களில் ஒருவரான யுவராஜ் கண்ணன் பேசும்போது,
“இதில் பணியாற்றிய பலருக்கும் இது முதல் படம் என்பதால் தங்களது சொந்தப் படம் போலவே உணர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ”தம்பிகளா நல்லா பண்ணுங்க” என்று ஊக்கப்படுத்துவார். எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்று நினைக்கிறேன்.படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
இன்னொரு இயக்குநர் ராஜசேகர் என் பேசும்போது,
” நானும் யுவராஜும் 2013ல் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து அறிமுகமாகி நண்பர்களாக இருக்கிறோம். நான் எந்தக் கதை சொன்னாலும் பொறுத்துக் கொள்பவர் யுவராஜ்.நாங்கள் சில ஆண்டுகளாகக் குறும்படங்கள் ,முயற்சிகள் என்று செய்து திரை உலகில் நுழையப் போராடிக் கொண்டிருந்தோம் .இந்த தயாரிப்பாளரைச் சந்தித்தபோது அவர் கேட்டபடி கதையை 20 நாளில் தயார் செய்து கொடுத்தோம் .அப்படித்தான் இந்தக் கதை உருவானது..அவர் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார் .அதை நாங்கள் வீணாக்கவில்லை. அவர் செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் உழைத்தோம். அது நல்ல படமாக வந்துள்ளது.இதில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நாயகன் விக்னேஷ் சண்முகம் பேசும்போது ,
” எனக்கு முதலில் யுவராஜ் அறிமுகமானார்.இயக்குநர் ராஜசேகர் எனது குறும்படங்கள் போஸ்டர் வந்துவிட்டால் கூட அதைப் பார்த்துப் பாராட்டி வாழ்த்துபவர். அது எனக்கு அவரது நல்ல பண்பைக் காட்டியது. ஒருநாள் கதை சொல்லப் போவதாக கூறினார் .ஏதோ ஒரு கதையை நன்றாக இருக்கிறதா என்று கேட்பதற்காக சொல்வதாக நினைத்தேன். ஆனால் என்னை வைத்து இயக்குவதாகச் சொன்ன போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் வந்து நடித்திருக்கிறேன். இதற்கு முன் நான் நடித்த இறுதிப்பக்கம் ,கள்ளச்சிரிப்பு போன்ற படைப்புகள் கொடுத்த இயக்குநர்கள் வழியாகத்தான் இந்த மேடையை நான் அடைந்திருக்கிறேன். அப்படி வாய்ப்பு கொடுத்த அவர்களுக்கு என் நன்றி”என்றார்.
கதாநாயகி நிரஞ்னி அசோகன் பேசும்போது,
“எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுத் தான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட போது முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால் நிறைய போலிகள் உலா வருகிற காலம் இது. உண்மையாக இருக்குமா என்று நான் சந்தேகப்பட்டேன். அவர்களின் அலுவலகம் சென்றபோது எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்தன .ஒன்று அவர்கள் கதை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவ்வளவு அருமையாக இருந்தது. அடுத்தது முதல் படத்திற்காக அவர்களது முன் தயாரிப்பு ஆச்சரியப்பட வைத்தது. எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அதேபோல் தான் படப்பிடிப்பும் நடந்தது .படம் திறந்தவெளியில் படமாக்கப்படுகிற போது கூட பருவ கால நிலை மாற்றத்தால் திடீரென்று மழை வரும். ஆனால் அதைக் கண்டு மிரண்டு விடாமல் அதற்கு ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருந்தார்கள். இப்படி மிகவும் சரியாகத் திட்டமிட்டு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது.
எல்லோருக்கும் முதல் படம் என்கிற போது ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தம் தெரியாத அளவிற்கு அவர்கள் துல்லியமாகத் திட்டத்துடன் இருந்தார்கள் .ஒளிப்பதிவாளர் தாஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் நான் திரையில் நன்றாகத் தெரிய வேண்டும் என்று கவனத்துடன் அறிவுரைகள் சொல்வார்..
ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் இதில் ஒரு பாம் ப்ளாஸ்ட் காட்சி எடுக்கும் போது ரியலாக எடுத்தார். ஆனால் அதை எடுக்கும்போது பாதுகாப்பு விதிகளைச் சரியாகக் கடைபிடித்தார். யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக மிகவும் அக்கறையாக செயல்பட்டார் .பாம் சப்தம் வந்து காது பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளச் சொன்னார்.நாயகன் விக்னேஷ் சண்முகம் உடன் நடிக்கும் சக நடிகராக எனக்கு செளகரியமாக இருந்தார்.படக்குழுவினர் யாரும் ஈகோ பார்க்கவில்லை.
இந்தப் படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் நான் ஒருத்தி மட்டும் தான் பெண். இருந்தாலும் அந்த பாலினபேதம் ஏதும் உணரத் தோன்றாமல் சௌகரியமாக பாதுகாப்பாக உணர்ந்தேன். இப்படி ஒரு நல்லதொரு அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள். இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் இதை சரியான முறையில் விநியோகம் செய்யும் ஜெனிஷ் அவர்களுக்கும் நன்றி” என்றார்.
விழாவில் படத்தின் ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட, உதவி இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.படம் முழுக்க உழைக்கும் உதவி இயக்குநர்கள் மீது பாராமுகம் காட்டும் திரையுலகில் இது ஒரு புதிய முன்னுதாரணமாக இருந்தது.
3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் நடிகர் கார்த்திகேயன் பேசியதாவது… சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார். பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்திய எங்கள் டீமுக்கு ஆதரவாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி
கலை இயக்குநர் தினேஷ் மோகன் பேசியதாவது… இது என்னுடைய நான்காவது திரைப்படம். இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. அவரும் நானும் நீண்ட நாள் நண்பர்கள், அவரிடம் இந்தக் கதையைக் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. இதற்காக மற்ற பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிகக் கவனமெடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி பேசியதாவது.. வாய்ப்பு தந்த இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் முழு உழைப்பைத் தந்து, டூப் இல்லாமல் நடித்த கார்த்திகேயன் தோழருக்கு நன்றி. அவரது உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தயாரிப்பு தரப்பில் இப்படத்தில் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். விஷுவல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தில் அனைவரும் மிகக் கஷ்டப்பட்டு வேலை பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை சுபிக்ஷா LA பேசியதாவது… இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஹீரோ கார்த்திகேயன் மிகப்பெரிய ஆதரவு தந்தார். மிகக்கடினமான உழைத்துள்ளார். இது அற்புதமான டீம். இவர்கள் உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தியேட்டரில் போய்ப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை தியா பேசியதாவது.. இந்த படத்தில் சின்ன ரோலாக இருந்தாலும் மிக முக்கியமான ரோல் தந்துள்ளனர். என்னுடைய ரோல் தான் கதையின் திருப்புமுனையாக இருக்கும். வாய்ப்பு தந்த இயக்குனருக்கு நன்றி. ஷுட்டிங்கில் அனைவரும் எனக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தினர். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
நடிகர் வின்சென்ட் அசோகன் பேசியதாவது.. சூரகன் படத்தில் ஒரு வில்லன் ரோல், இயக்குநர் கதை சொல்லும்போதே, தெளிவாக இருந்தார். இப்போது வரும் இயக்குநர்கள் வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சதீஷ் எனக்கு இந்த பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அவர் க்ளீன் ஷேவ் தான் வேண்டும், நீங்கள் இப்படித் தான் இருக்கனும், என ஒவ்வொன்றிலும் தெளிவாக எல்லாம் சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ ஃபைட் செய்ததை பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சதீஷ் கீதா குமார் பேசியதாவது.. இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது. டேஞ்சர் மணியும் ஆக்சன் நன்றாகப் புரிந்து கொண்டதால், இந்த படம் எளிதாக நடந்தது. அச்சு ராஜாமணி கதை சொன்ன போதே உற்சாகமாக ஒப்புக்கொண்டு 4 பாடல்களை தந்துள்ளார். சுபிக்ஷா நல்ல ரோல் செய்துள்ளார். வின்சென்ட் அசோகன் வித்தியாசமான வில்லன் ரோல் செய்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., கார்த்திகேயன் ரொம்ப ஆக்டிவாக இருப்பார், எதையுமே சுறுசுறுப்பாகச் செய்வார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள். நல்ல படம் கொடுப்பது மட்டுமே நம் கடமை. அதை மட்டும் நாம் செய்தால் போதும். இந்தப் படம் டிரெய்லர் பார்க்கவே நன்றாக இருக்கிறது படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். கார்த்திகேயன் முதன்முதலில் ஆக்சனில் இறங்கியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.