Breaking
March 7, 2026

Cinema

“பூக்கி” திரைவிமர்சனம்

இன்றைய காலகட்டத்தில் இளம் காதலர்கள் தங்களுக்குள் அர்த்தமில்லாமல் ஏதாவது ஒரு பெயரை வைத்து எப்படி செல்லமாக கூப்பிட்டு கொள்வார்களோ அப்படி ஒரு வார்த்தை தான் “பூக்கி”இந்த வார்த்தையை வைத்து வெளி வந்திருக்கும் திரைப்படம் தான் இந்த படம்.
அஜய் திஷன்,ஆர் கே தனுஷா இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து ஒரு சிறு பிரச்சனையில் சாலையில் ஒருவரை ஒரு அடித்துக் கொண்டு பிரிந்து போகிறார்கள். இதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப, அது தீயாக பரவுகிறது இருவரும் தங்கள் காதல்களை மறக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நாயகன் ஒரு பக்கம் ஜிம்முக்கு செல்வதும், குடிப்பதும் இப்படி பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். நாயகி ஒருபுறம் ஆன்மீகம், வேலை , வேறு ஒரு லவ் என்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் .

இவர்களது முயற்சி வெற்றி பெற்று இருவரும் பிரிந்தார்களா? இல்லை தங்கள் பழைய காதலை மறக்க முடியாமல் ஒன்று சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் திரைக்கதை

இந்தப் படத்தின் கதை கரு சிறியதாக இருந்தாலும் ஆனால் இதற்காக இவர்கள் வடிவமைத்திருக்கும் திரைக்கதை,இன்றைய இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக், யூடியூப் போன்றவற்றில் வரும் ரீல்களை வைத்து அதை திரை கதையில் கொண்டு வந்திருப்பது இன்றைய இளைய தலைமுறை பசங்களை ரசிக்க வைக்குமாறு எடுத்திருக்கிறார் இயக்குனர் அது அவருக்கு வெற்றியும் கூட தரும்.

அஜய் திஷன் இது இவருக்கு இரண்டாவது படமாக இருந்தாலும் தனது நடிப்பில் மிக பலமாக நிற்கிறார் எதார்த்தமாகவும் நடித்திருக்கிறார். நாயகியும் அவருக்கு ஈடாகவே நடித்து இருக்கிறார்
படத்தில் பாண்டியராஜன், சுனில்,லட்சுமி மஞ்சு, மற்றும் விவேக் பிரசன்னா பலர் காட்சிகளை நகர்த்த ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த படத்தின் தயாரிப்பு மற்றும் இசை விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி இசை அவரது ஸ்டைலயே உள்ளது படத்தில் பெரும்பான்மையான பாடல்களை அவரே பாடியுள்ளார்
இயக்குனர் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களை மனதில் வைத்து களம் இறங்கி அதில் வெற்றியும் காண முயற்சித்திருக்கிறார்.


“பூக்கி”சமூக வலைத்தளங்களில் இருந்து மொத்த பூக்களையும் எடுத்து தொடுத்த ஒரு பூ மாலை

‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வை

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

‘நாய் சேகர்’ புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கிறார்

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்திற்கு ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் முதல் பார்வையை காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல இயக்குநரும் கோயம்புத்தூர் மண்ணின் மைந்தருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் சார் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கையாள்கிறார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய ‘நாய் சேகர்’ படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கலகலப்பான பாடல் ஒன்றுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்குநர் ஆவார். ஆடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு – எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘அரிசி ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் – இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘அரிசி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரிசி’ எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும் , விவசாயிகளையும் மையப்படுத்திய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, ‘அரிசி ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவரான வைகோ பெற்றுக்கொண்டார்.

திரு. வைகோ பேசுகையில், ” அரிசி உயிரின் மறு பெயர் எனும் இந்த திரைப்படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவரான இரா முத்தரசன் உழவனாகவே மாறி இருக்கிறார். அவர் நடிப்பு கலையை பயின்றவர் அல்ல ஆனால் இயற்கையாக அவர் கட்டியிருக்கும் தலைப்பாகையுடன் தொலி உழவு செய்யப்பட்ட வயலில் நெற்கதிரை லாவகமாக வீசுகிறாரே.. அது நெடுங்காலமாக வயலில் நெற்கதிரை வீசி இருந்தால் மட்டுமே அப்படி நெல்லை வீச முடியும்.

அண்ணன் முத்தரசன் கலை உலகில் பிரவேசித்திருக்கிறார். எந்த பயிற்சியும் முன் அனுபவமும் கிடையாது. ஆனால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்பதை இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த சில நிமிடங்களிலேயே உணர முடிந்தது.

அரிசி திரைப்படத்தில் சிம்பொனி இசை அமைத்து உலகப் புகழ் பெற்றாரே.. அண்ணன் கலைஞரால் இசைஞானி என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மாமேதையினுடைய இசையமைப்பிலே வெளியான உருவான பாடல்கள் பின்னணி இசை இதயத்தை கவர்வதாக அமைந்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவரும் என்பதை நான் அறிந்தேன் அது மக்களின் ஆதரவை பெறும் என்று நான் நம்புகிறேன். விவசாய மக்களுக்கு உழவர் பெருங்குடி மக்களுக்கு ஒரு அரிசி தான் உலகத்தை காப்பாற்றுகின்ற உயிர்கருவி என்கின்ற தத்துவத்தை தருகின்ற இந்த திரைக்காவியம் மகத்தான வெற்றி பெறுவதற்கு தமிழகத்தில் வாழும் கோடான கோடி விவசாய பெருமக்கள்.. நான் இதுவரை எந்த மேடையிலும் திரைப்படங்களை பாருங்கள் என்று விளித்ததில்லை. ஆனால் மண்ணை நம்பி கலப்பையை நம்பி விதைக்கும் விதைகளை நம்பி உலகத்தை வாழ்வித்து கொண்டிருக்க கூடிய பசிப்பிணி போக்குகின்ற மருத்துவர்களாக திகழ்கின்ற விவசாய பெருமக்கள் நீங்கள் திரையரங்கங்களுக்கு வர வேண்டும். அரிசி உன்னதமான வெற்றியை பெற்றது என்ற நிலையை விவசாயிகள் உருவாக்க வேண்டும். உங்கள் துயரங்கள் போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் கலை உலகம் அரசியலையும் நாட்டின் தலை விதியையும் தீர்மானிக்கின்ற இடத்தில் ..வேளாண்மை இருப்பதால் விவசாயம் இருப்பதால் இந்த காவியம் வெற்றி பெறும். இதில் பங்கெடுத்து இருக்க கூடிய அனைத்து நடிகர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய சமுத்திரக்கனி அவர்கள் இன்னும் உயர்ந்த விருதுகளை அவர் நடித்த திரைப்படங்களின் மூலமாக பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். என்னை உயிராக நேசிக்கும் முத்தரசனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து, அரிசி திரைப்படத்தில் மட்டுமல்ல.. எதிர்கால தேர்தல் களத்திலும் நாங்கள் தான் வெல்வோம் எனக் கூறி விடைபெறுகிறேன் நன்றி. ” என்றார்.

திரு. உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ” அண்ணன் இரா முத்தரசன் – சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகி இருக்கும் அரிசி திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் திரு. செல்வ பெருந்தகை- திரு. வைகோ- திரு. திருமாவளவன் – திரு. வீரபாண்டியன் – திரு. பேராசிரியர் காதர் மைதீன்- திரு. புதுமடம் அலி- திரு. பழ. ஆசைத்தம்பி- திரு. செல்வராஜ் – திரு. சண்முகம் – திரு. வன்னியரசு – திரு. எஸ். எஸ். பாலாஜி- திரு. மாரிமுத்து – திரு. ரூபி மனோகரன் – திரு. கனகராஜ் – திரு. திருமுருகன் காந்தி- மருத்துவர் ஷர்மிளா- திரு. சிற்றரசு- திரு. முகமத் அபுபக்கர் – தயாரிப்பாளர் சண்முகம்- இயக்குநர் விஜயகுமார்- திரு ஆர் கே செல்வமணி- மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் காலை வணக்கம்.

முதலில் இந்த திரைப்பட குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இது போன்ற திரைப்படங்களின் இசை மற்றும் முன்னோட்ட விழாவை மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடத்துவார்கள். மிகப்பெரிய திரையரங்கத்தில் நடத்துவார்கள். ஆனால் அரிசி திரைப்படக் குழுவினர் இந்த நிகழ்ச்சியை கலைஞர் கட்டிய இந்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியதற்கு முதலில் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சராக பொறுப்பேற்ற இந்த நான்காண்டு காலங்களில் திரைப்படம் தொடர்பான எந்த நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. இது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்கு தெரியும். யார் கேட்டாலும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று உறுதியாக சொல்லிவிடுவேன். ஆனால் அண்ணன் முத்தரசன் கேட்கும்போது என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை. நீங்கள் தேதியை சொல்லுங்கள் நான் உறுதியாக வந்து விடுகிறேன் என்று சொன்னேன். அதன் பிறகு நேரம் கேட்டார். அதையும் நீங்களே சொல்லுங்கள் என்று சொன்னேன்.

பல வருடங்களாக கொடுக்காமல் இருந்த திரைப்படத் துறையினருக்கான தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக குழு அமைக்கப்பட்டது . 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திரைப்பட விருதுகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

நான் திரை துறையில் இருந்து வெளியேறி, மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அண்ணன் முத்தரசன் அவர்கள் மக்கள் பணியில் இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் சினிமா துறைக்கு வந்திருந்தாலும் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் அவர் மக்கள் பணிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அவர் சினிமாவில் உச்சத்திற்கு போனாலும் அவர் எப்போதும் விரும்புவது மக்களோடு மக்களாக இருப்பதைத்தான். இது தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கும் அண்ணன் முத்தரசனுக்கு திரைத்துறையில் முன்னால் இருந்தவர் என்ற வகையில் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மக்களுக்காக பல்லாண்டு காலம் களத்தில் போராடியவர் தான் அண்ணன் முத்தரசன். திரையிலும் மக்களுடைய உரிமைகளை.. உரிமையுடன் பேச வந்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அவர் விவசாயியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டர் ,ட்ரெய்லர், பாடல்களை பார்க்கும் போது அவர் விவசாயியாக நடித்திருக்கிறார் என்பதை விட விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.

முத்தரசன் மட்டுமல்ல அண்ணன் சமுத்திரக்கனியும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை தொடர்ந்து பேசக்கூடியவர். விவசாயிகளுகாக கம்யூனிஸ்ட்கள் களத்தில் இறங்கி போராடினால் நிச்சயம் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த முறையும் வெற்றி பெறுவார்கள். அதேபோல் இந்த படமும் நிச்சயமாக வெற்றி படமாக அமையும்.

இந்தப் படத்தின் தலைப்பு அரிசி உயிரின் மறு பெயர் என வைத்திருக்கிறார்கள். இந்த அரிசிக்காக ஒரு காலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். பண்ணையார்களிடம் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்தார்கள். காலமெல்லாம் வயலில் வேலை பார்த்தாலும் அவர்களுக்கு என்று ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக களத்தில் இறங்கி கம்யூனிஸ்டுகள் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

அதனால் டாக்டர் கலைஞர் அடிக்கடி சொல்வார். நான் மட்டும் தந்தை பெரியாரையும், அண்ணாவையும் என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால்… நானும் ஒரு கம்யூனிஸ்ட் தோழனாக மாறி இருப்பேன் என அடிக்கடி சொல்வார்.

அப்படிப்பட்ட கலைஞர் தான் 1969 ஆம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகு ஏழைகளுக்கு அரிசி கிடைப்பதற்கான எல்லா வழிவகைகளையும் செய்து கொடுத்தார். ஒரு படி அரிசிக்காக யாரும் மற்றவர்களின் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கக் கூடாது எனும் நிலைமையை தமிழகத்தில் ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2006 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்தார். 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என முதன் முதலில் அறிவித்தார். இது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏனெனில் அந்த காலத்தில் பல குடும்பங்களுக்கு அரிசி சோறு என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்கியவர் டாக்டர் கலைஞர் . பின்னர் அந்த ரெண்டு ரூபாயை ஒரு ரூபாயாக குறைத்தார். அதற்கு அடுத்த கட்டமாகத்தான் இன்று விலையில்லா அரிசியும் வந்திருக்கிறது. மக்களுடைய அடிப்படைத் தேவையான இந்த அரிசி பிரச்சனையை போக்கியவர் டாக்டர் கலைஞர்.
அந்த வகையில் விவசாயிகளின் உரிமையை பேசும் இந்த படம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அண்ணன் முத்தரசனின் அரசியல் களப்பணியும், கலைப் பணியும் மென்மேலும் சிறக்கட்டும் என உங்கள் அனைவரின் சார்பாக நான் வாழ்த்துகின்றேன். ” என்றார்.

திரு. செல்வ பெருந்தகை பேசுகையில், ” இந்தத் திரைப்படம் ஒரு வெற்றி பெற்ற திரைப்படமாக மாற வேண்டும். இந்த காலகட்டத்திற்கு எது தேவையோ அதை தோழர் முத்தரசன் அவர்கள் முன்னெடுத்திருக்கிறார். நேற்று நான் ஒரு வேளாண்மை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்ட போது இந்தியாவில் 53.8 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி பற்றாக்குறை இருக்கிறது. கடந்த 2023 -24 ஆண்டு ஒப்பிடும் போது ஒவ்வொரு ஆண்டும் அரிசியின் உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மை திட்டங்கள் இந்தியாவில் சரியாக செயல்படவில்லை. ஒரு பக்கம் இயற்கையின் சீற்றம் ( பருவமழை மாறி பொழிவது – வறட்சி ஏற்படுவது- தட்பவெப்ப நிலை மாறுவது- மண்ணின் தரம் – வளம் ஒவ்வொரு முறையும் மாறுவது.. ) இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைந்து கொண்டே இருக்கிறது.

வேளாண்மை துறை இந்தியாவில் தினம் தினம் அழிந்து வருவதற்கு காரணம் ஒரு நேர்மையற்ற ஆட்சி கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே வேளாண்மை குடிமக்களுக்கு எதிராக மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் வாக்கெடுப்பும் இல்லாமல் பாஜக அரசு நிறைவேற்றியது. இந்தியாவில் உள்ள அனைத்து வேளாண்மை குடிமக்களும் விவசாய பெருங்குடி மக்களும் ஒன்று திரண்டு புது டெல்லியை முற்றுகையிட்டு 13 மாதங்கள் போராடினர். இந்தப் போராட்டத்தில் பல உயிர்களை பலி கொடுத்தனர். அதற்குப் பிறகு மோடி அவர்களுக்கு தெளிவு பிறந்து, எப்படி இரவோடு இரவாக எந்த விவாதமும் இல்லாமல் மூன்று கருப்பு சட்டத்தை கொண்டு வந்தார்களோ.. அந்த மூன்று வேளாண் சட்டத்தையும் திரும்ப பெற்றுக் கொண்டார்கள்.

அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய வேளாண்மை குடிமக்களின் வாழ்வாதாரத்தை அடகு வைத்திருக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் அரிசி என்ற இந்த திரைப்படம் திரைப்படமாக வருவதை விட பாடமாக எடுத்துக் கொண்டு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். விவசாய மக்களுடைய வாழ்வாதாரத்திற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆகவே இந்த திரைப்படம் வெற்றி திரைப்படமாக மாற வேண்டும். எல்லோரும் பார்க்க வேண்டும். ஏற்கனவே இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிடும் என்று அறிவிப்பு செய்திருந்தோம். அதற்குரிய செலவையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்கும். இப்படிப்பட்ட திரைப்படங்களை ஊக்கவிக்க வேண்டும். ஆகவே இந்தத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநருக்கும் நடிகர் நடிகர்களுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொது வாழ்க்கையில் இருந்து கொண்டே திரைப்படத்திற்கு வருகை தந்திருக்கும் முத்தரசனுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

திரு. தொல் திருமாவளவன் பேசுகையில், ” இந்தத் திரைப்படம் பொருத்தமான கால சூழலில் வெளி வருகிறது. அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கும் இந்திய பிரதமர் மோடி அவர்கள் அல்லது பாஜக அரசு 20 ஆண்டுகளுக்கு வரி இல்லாமல் அமெரிக்காவிடமிருந்து கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனைத்தையும் இறக்குமதி செய்வதற்கு உடன்பட்டு இருக்கிறார்கள். எந்த பொருளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தாலும் வரி இல்லை என்ற நிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இது உழவர்கள் – விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று அதாவது பன்னிரண்டாம் தேதி இடதுசாரி இயக்கங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணி எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தியா முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்தினர். விடுதலை சிறுத்தைகளும் அதில் இணைந்து பங்கேற்றியது. விவசாயிகள் இனி உற்பத்தியே செய்ய முடியாது என்கிற நிலையை நாம் எதிர் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

இந்தப் படத்தில் நான் அரிசியை உற்பத்தி செய்கிறேன். அதற்கான விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லையா? என கேள்வி கேட்கிறார்கள்.

நாம் இந்த கேள்வியில் உள்ள ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் ஆதார விலையை நிர்ணயிப்பதற்கான சட்டத்தை கொண்டு வர முடியவில்லை. மற்றவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலையை நிர்ணயிக்க முடிகிறது. ஆனால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களுக்கு ஆதார விலையை கூட நிர்ணயிக்க முடியாத சூழல் இருக்கிறது. இது எங்கே கொண்டு போய் முடியும். விவசாய உற்பத்தி எதிர்காலத்தில் என்னவாக இருக்கப் போகிறது என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. சென்னையை ஒட்டியுள்ள பயிர் நிலங்கள் அனைத்தும் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் விவசாய நிலங்கள் அனைத்தும் தற்போது பிளாட்டுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. நமக்கான தேவைக்கு நாமே உற்பத்தி செய்யக்கூடிய நிலை அருகி வருகிறது. ஒரு காலத்தில் நமக்கான காய்கறிகளை நம்மூர் சந்தையில் உள்ளூர் சந்தையில் பெற முடிந்தது. கம்பு வரகு சோளம் போன்ற நமக்கான தானியங்களை நம்மால் உற்பத்தி செய்து கொள்ள முடிந்தது. இன்றைக்கு அந்த விவசாயம் இருக்கிறதா என்றால் இல்லை. நம்முடைய வீட்டில் இருக்கும் ஆடு மாடுகளின் கழிவுகளை சேகரித்து அதனை எருவாக மாற்றி விவசாய நிலத்தை பண்படுத்துவதற்கு நாம் பயன்படுத்தி வந்தோம். அக்காலமும் உண்டு. அரசாங்கம் இதைத்தான் பயிரிட வேண்டும் என்று வற்புறுத்திய நிலை அன்று இல்லை. ஆனால் இன்று உலக சந்தைக்கான உற்பத்தி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். கரும்பு உற்பத்தி ,மக்காச்சோள உற்பத்தி அதற்கு அவன் உரம் கொடுக்கிறான். அவனே பூச்சி மருந்து கொடுக்கிறான். விவசாயிகள் தமக்கான உற்பத்தியில் சுதந்திரமாக ஈடுபட முடியாத நிலை..

உலக சந்தைக்கன உற்பத்தியும் கூட அவன் விரும்புகிற வகையில் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறான். அதிலும் விவசாயிகளுக்கு சுதந்திரம் இல்லை. நிலங்கள் பறி போய்க்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் விவசாய கூலி தொழிலாளர்களாக மாறியுள்ளனர். விவசாயிகள் வேறு விவசாயக் கூலி தொழிலாளர்கள் வேறு விவசாயக்கூலிகளுக்கு நிலம் வேண்டும் என்ற போராடிய காலம் போய் தற்போது விவசாயத்திற்கே நிலமில்லாத சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் நெல் உற்பத்தி அரிசி போன்றவற்றை குறித்து நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம்.

விவசாயம் பால் பட்டு போனால் எதிர்கால சந்ததியினரின் நிலை கவலைக்குரியதாக மாறும். வேளாண் சட்டங்கள் எந்த அளவிற்கு உழவர்களுக்கு எதிராக விவசாயிகளுக்கு எதிராக விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது என்பதை நாம் அறிவோம். பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் வராது இருந்தால் அந்த சட்டங்களை திரும்ப பெற்று இருக்க மாட்டார்கள். ஆனால் விவசாய சட்டங்களை திரும்பப் பெற்ற அரசு தொழிலாளர்களுக்கான தொகுப்பு சட்டங்களை இன்னும் திரும்பப் பெறவில்லை. 44 சட்டங்கள் இருந்தன. அவை அனைத்தையும் நான்காக தொகுத்து விட்டார்கள். தொழிலாளர்கள் சங்கம் அமைக்க முடியாத நிலை… தங்களுடைய ஊதியத்தை கூலியை கோரிக்கையாக கூட வைக்க முடியாத நிலை.. இதெல்லாம் எங்கே கொண்டு போகும் என்ற கவலை இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் இடதுசாரி இயக்கங்களின் தலைவர் மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடி மக்களுக்காக தன் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்ட ஒரு தலைவர் இன்றைக்கு திரைத்துறையில் ஒரு நாயகனாக பாத்திரமென்று நடித்திருக்கிறார் என்பது ஒரு திரை கவர்ச்சிக்கான அணுகுமுறை அல்ல. அதிலும் ஒரு அரசியல் அதுவும் நமக்கான அரசியல் இருக்கிறது. இடது சாரி அரசியல் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

சமுத்திரகனி சொன்ன விசயங்களை நான் வழிமொழிகிறேன்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் கலைத் துறையும் அரசியல் துறையும் பின்னிப் பிணைந்தாக இருக்கிறது. தனக்கான முதலமைச்சரை திரையில் தேடுபவன் ஆக தமிழர்கள் இருக்கிறார்கள் என பேசுவதை நாம் பார்க்கிறோம்.

இங்கு கருத்தியலுக்கு போராட்டங்களுக்கு தியாகங்களுக்கு முற்போக்கு சிந்தனைகளுக்கு தரப்படுகிற முக்கியத்துவத்தை விட.. இத்தனை கோடி வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் எங்கள் தலைவர் ஆகவே அவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலை தமிழகத்தில் இருக்கிறது.

ஊரு ஊராய் செல்ல வேண்டாம் மக்களுக்காக போராட வேண்டாம் வழக்குகளை சுமக்க வேண்டாம் தடியடி வாங்க வேண்டாம் சிறைக்கு செல்ல வேண்டாம் திரையில் தோன்றினால் தமிழகத்தில் முதலமைச்சராகி விட முடியும். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்று.

இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் நடிகர்கள் இருக்கிறார்கள், இயக்குனர்கள் இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சன் முதலமைச்சராக விரும்பியதில்லை. கேரளாவில் மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். அவர்களும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. ஆந்திராவிலும் உண்டு கர்நாடகத்திலும் உண்டு ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்தால் போதும் அடுத்து தமிழகத்தில் முதலமைச்சர் ஆகலாம் என்கிற நிலை.

ஜனநாயகத்தில் எல்லோருக்கும் அந்த உரிமை உண்டு நான் அதை மறுக்கவில்லை. ஆனால் இந்த சிந்தனை போக்கு இருக்கிறதே இந்த உளவியல் இருக்கிறதே இந்தத் திரைத்துறை தமிழக அரசியலில் ஏற்படுத்தியிருக்கிற தாக்கம் இருக்கிறதே அது பிற்போக்கானதாக இருக்கிறது என்ற கவலை இருக்கிறது. சமுத்திரக்கனி இங்கு இடதுசாரிகள் கலைத்துறையில் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதை முன்மொழிந்திருக்கிறார் என நான் நம்புகிறேன். திரை துறையில் பல கம்யூனிஸ்ட் தோழர்கள் இருக்கிறார்கள்.

தோழர்களே இன்று வலது சாரிகளின் அரசியல் மேலோங்கி இருக்கிறது. எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி விட முடியும் என்ற உத்திகளை அவர்கள் கையாளுகிறார்கள். மாநிலத்திற்கு மாநிலம் அவர்கள் உத்திகளை மாற்றுகிறார்கள்.

தமிழகத்தில் சிவபெருமானை சொல்லியோ அல்லது மகாவிஷ்ணுவை சொல்லியோ ராம பிரானை சொல்லியோ அரசியல் செய்து வெற்றி பெற முடியாது ‌ முருகப் பெருமானை சொல்லிப் பார்த்தார்கள். வேலை தூக்கிப் பார்த்தார்கள் அது எடுபடவில்லை. திருப்பரங்குன்றத்தையும் கையில் எடுத்துப் பார்த்தார்கள் அவர்களின் அரசியல் இங்கே வெற்றி பெறவில்லை.

ஆகவே திரைத்துறை சார்ந்தவர்களை வளைத்து போட்டு அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி.. டெல்லியை போல் தமிழகத்திலும் ஒரு உத்தியை கையாளுகிறார்கள்.

ஆட்சி மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இன்றைக்கு இருக்கும். நாளைக்கு செல்லும். ஆனால் யார் எந்த சிந்தனை உள்ளவர்கள் என்ன அரசியல் பேசக்கூடியவர்கள் எந்த நிலைப்பாட்டை கையில் எடுக்கிறவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற பார்வை நமக்குத் தேவைப்படுகிறது வலதுசாரிகளின் கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவது ஒட்டுமொத்த தேசத்திற்கே தீங்கு விளைவிப்பதாகும். அமெரிக்காவுடன் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தம் இதற்கு ஒரு சான்று.

விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் விவசாய கூலி தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்திய மண்ணில் இடதுசாரி அரசியல் இன்னும் வலுப்பெற வேண்டும். அனைத்து தளங்களிலும் அது விரிவடைய வேண்டும். தமிழ்நாட்டில் அது திராவிடம் என்ற பெயரில் இயங்குகிறது என்பதால்தான் இடதுசாரிகள் திராவிட கட்சிகளுடன் குறிப்பாக இன்று மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று இயங்கி வருவதை நாம் பார்க்கிறோம்.

பெரியாரிய அரசியலும் மார்க்சிய அரசியலும் அம்பேத்காரிய அரசியலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க கூடியது. முதன்மைப்படுத்துவதில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் இடதுசாரி அரசியல்தான். எனவே நாம் அந்த புரிதலுடன் திரைத்துறையையும் கையாளுவோம் என்ற நம்பிக்கையில் தான் அண்ணன் முத்தரசன் அவர்கள் இந்தப் படத்தில் நாயகனாக தோன்றி இருக்கிறார் என்று நம்புகிறேன்.

அவர் இந்த கலை துறையை இடதுசாரி மயப்படுத்துவதற்கு பொறுப்பு இருக்கிறது பண்பு இருக்கிறது நானும் உணர்கிறேன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தை இயக்கி இருக்கிற இயக்குனருக்கும் பணியாற்றியிருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில்,
” நிறைய மேடைகளில் ஏறி இருக்கிறேன். இது எனக்கு ஸ்பெஷலான மேடை. படைப்பாளிகளை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். சமூகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த படைப்பை வழங்குபவர்கள் ஒருவகை. இந்த சமூகத்திற்கு தேவையான படைப்பை கொடுப்பவர்கள் மற்றொரு வகை. இது சமூகத்திற்கு தேவையான படைப்பு.

இப்போது இருக்கும் சூழலில் மருத்துவம் போல் படைப்புகள் எப்பவாவது வரும். இதனை அப்படிப்பட்டதொரு படைப்பாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் விஜயகுமாருக்கு மனமார்ந்த நன்றி.

பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு போன் கால் வந்தது. முத்தரசன் என்ற பெயரை சொன்னவுடன் எதுவும் பேசாமல் வாருங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம் என்று கூறினேன். இது சிவப்பு வண்ண துண்டிற்கு நான் கொடுக்கும் மரியாதை.‌ இந்த சிவப்புத் துண்டில் அனைத்தும் அடங்கும் பேரன்பு இருக்கும். பெரும் கருணை இருக்கும் பெரும் கோபம் இருக்கும் மக்களுக்கான அர்ப்பணிப்பு இருக்கும் இப்படித்தான் நான் சிவப்பு வண்ணத்தை பார்க்கிறேன்.‌
அவருடன் நிற்கும்போது அவருடன் பணியாற்றும் போது.. இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்களா..! என்ற ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்தார். அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். மிக்க மகிழ்ச்சி.

அவருக்குத் துணையாக ஒரு பெண்மணி நடித்தார். அவரது பெயர் ரஷ்யா என்றார்கள். அதுவும் எனக்கு வியப்பாக இருந்தது. அவரிடம் கேட்டபோது எங்கள் ஊரில் நிறைய பேருக்கு அவருடைய பெயருக்கு முன்னால் ரஷ்யா இருக்கும் என்றார்.‌

இப்படி இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பேரன்பு கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய படைப்பு தான் இது.‌

இனி வரும் காலங்களில் உணவுக்காக தான் சண்டை. காசு பணத்திற்காக அல்ல. நல்ல உணவை வைத்திருப்பவன் பெரும் செல்வந்தனாக இருப்பான். பணக்காரன் வேறு. செல்வந்தன் வேறு.

நல்ல காற்று நல்ல குடிநீர் நல்ல உணவு வைத்திருப்பவன் தான் செல்வந்தன். இதை நோக்கித்தான் இந்த சமூகம் ஓடும் அவரிடம் சென்று தான் கைகட்டி நிற்க வேண்டும். அந்த சூழல்தான் வரப்போகிறது. இதற்கு முந்தைய தலைமுறை பாதுகாத்துக் கொடுத்த இயற்கை வளங்களை நாம் பத்திரமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். அந்த பொறுப்பு நமக்கு நிறைய இருக்கிறது. அப்படிப்பட்ட பொறுப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அரிசி . இது அடுத்த தலைமுறையினருக்கு பெரிய ஆவணமாக இருக்கும். காலம் காலமாக பேசப்படும். இதை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து நல்ல ஒரு அங்கீகாரம் கொடுத்தீர்கள் என்றால் இதுபோன்ற நல்லதொரு படைப்பு உங்களை தேடி வரும். வெல்வோம். ” என்றார்.

இயக்குநர் விஜயகுமார் பேசுகையில்,

” இந்தப் படம் நீண்ட கால ப்ராஜெக்ட். இதை கஷ்டப்பட்டு உருவாக்கினோம் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு உதவி செய்த தயாரிப்பாளர்கள் சண்முகம் – பிரபாகரன் – மகேந்திரன்- ஆகியோருக்கு நன்றி. இந்த விழா இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது நடைபெற்றதற்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

இதில் நடித்த இரா முத்தரசன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி.

இந்த திரைப்படம் ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்கும். இந்த திரைப்படம் எனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

நாங்கள் நெய் குப்பை எனும் கிராமத்திற்கு சென்ற போது கிடைத்த அனுபவத்தால் தான் இந்தப் படம் உருவானது ”என்றார்.

தயாரிப்பாளர் சண்முகம் பேசுகையில்,
” இந்த படத்தின் கதையை இயக்குநர் விஜயகுமார் என்னிடம் சொல்லி முதலில் ஒரு மேக்கிங் வீடியோ செய்ய வேண்டும் என்று தான் சொன்னார். அதற்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டேன் ஒரு தொகையை சொன்னார் அதை கொடுத்தேன். அதன் பிறகு முத்தரசன் அவர்களை சந்தித்து அவருடைய ஒப்புதலுடன் மேக்கிங் வீடியோவை உருவாக்கினோம்.‌ இதைப் பார்த்த பிறகு இதை இன்னும் விரிவுபடுத்தலாம் விரிவு படுத்தலாம் என்று சொல்லி சொல்லி பேசி பேசி இவ்வளவு பெரிய படமாக உருவாகி இருக்கிறது. இது இவ்வளவு பெரிய படமாக வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

திரு. இரா. முத்தரசன் பேசுகையில்,

” இயக்குனர் விஜயகுமாரும் இளங்கோவும் முதலில் என்னை சந்தித்து விவசாயம் தொடர்பான ஆவணப்படம் ஒன்று உருவாக்குகிறோம் அதில் நீங்கள் இரண்டு நாட்கள் வந்து வருகை தந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நான் உடனடியாக கையைக் கூப்பி நான் வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டேன். அதன் பிறகு கதையை சொன்னார்‌. கதை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. கிராமத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்துங்கள். எங்களுடைய தோழர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள் என்று சொன்னேன்.

இயக்குனர் விஜயகுமார் மிகப்பெரிய கெட்டிக்காரர். சாதிக்க கூடிய ஆற்றல் படைத்தவர்.

அதன் பிறகு இது குறித்து தோழர் வீரபாண்டியனிடம் விவாதித்தேன். ஆவணப்படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன். இதைக் கேட்டதும் வீரபாண்டியன் இது ஒன்றும் தப்பில்லை தாராளமாக நடிக்கலாம். அதை விருதிற்காக அனுப்புவார்கள். என்றார்.

அதன் பிறகு தோழர் பெரியசாமி இடமும் இதைப்பற்றி சொன்ன போது அவரும் நடிக்கலாம் என்று சொன்னார்.

அதன் பிறகு இரண்டு நாள் என்பதை மூன்று நாளாக நான் கணக்கிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். எனக்கு அப்போது ஆவணப்படம் என்றால் என்ன? நீண்ட படம் என்றால் என்ன? எதுவும் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

அதன் பிறகு உங்களுக்கு எப்போது ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போது சொல்லுங்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என மெதுவாக இயக்குநர் சொன்னார்.

அதன் பிறகு 40 நாட்கள் ஆனது. அதன் பிறகு உங்களுடன் சமுத்திரக்கனியையும் சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது என்னுடன் சமுத்திரக்கனி நடிக்கவில்லை சமுத்திரக்கனியுடன் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன்.‌

இது என்ன ஆனது என்றால் அரசியலை விட்டு நான் சினிமாவுக்கு சென்று விட்டேனோ.. என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் உண்மையை சொல்கிறேன் இது ஒரு விபத்து போன்றது தான் .என்னுடைய முழு நேரமும் அரசியல் தான். அதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.

விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். அனைவரும் பார்க்க வேண்டும். படம் எப்படி என்பதை உங்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நெய் குப்பை கிராம மக்களுக்கும் நன்றி” என்றார்

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல்

ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார்த்தமான குரல்கள்.. இசையமைப்பின் உணர்ச்சி ஆழத்தையும், வசீகரத்தையும் ஒன்றிணைக்கின்றன.

இந்த படத்தில் தென்னிந்திய திரைப்படத் துறையை சார்ந்த பல முக்கிய நடிகர்களும் இடம் பெற்றுள்ளனர். மலையாள பதிப்பிற்கு கிடைத்த வலுவான வரவேற்பை தொடர்ந்து தமிழ் பதிப்பும் பார்வையாளர்களிடையே பரவலாக எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையை ஈர்க்கும் பாடல் வரிசையில் டொவினோ தாமசுடன் முன்னணி நாயகியான கயாடு லோஹரும் இடம் பிடித்துள்ளார். இது பாடலின் காதல் மற்றும் உணர்வுபூர்வமான ஈர்ப்பினை அதிகரிக்கிறது.

தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக ஜேக்ஸ் பிஜாய் தற்போது திகழ்கிறார்.

சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்பீர் கபூர் ரசிகர்களுடனான உரையாடலின் போது, ஜேக்ஸ் பிஜாயின் ‘லோகா’ படத்திற்கான இசையை பாராட்டினார். பள்ளிச்சட்டம்பி படத்தின் மூலம் டொவினோ தாமசுடன் தனது வெற்றிகரமான பங்களிப்பை தொடர்கிறார். இந்தப் படம் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் ஜேக்ஸ் பிஜாய் ஆகியோர் இணைந்து பணியாற்றும் நான்காவது படமாகும். அவர்கள் இதற்கு முன் ‘குயின்’, ‘ஜன கன மன’ போன்ற படங்களின் சார்ட் பஸ்டர் ஆல்பங்களை வழங்கிய கூட்டணியாகும்.

வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர் எஸ். சுரேஷ் பாபு எழுதி, ஒளிப்பதிவாளர் டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்த ‘பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம்- வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் (Worldwide Films) சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் மற்றும் பிரிஜீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள பீரியாடிக் திரைப்படமாகும்.சானுக்யா – சைதன்யா சரண் தலைமையிலான சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் (C Qube Bros Entertainment) நிறுவனத்துடன் இணைந்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் உலக அளவில் ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது.

“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.

இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது.

அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

எடிட்டர் சுரேஷ் பேசியதாவது..,

இந்த திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி படக்குழுவுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது..,

மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும், இது நல்ல படம் – ன்னு நீங்கள் நம்பினால், அதை முழு மனதோடு தூக்கிக்கொண்டு போய் ஒரு வெற்றிப் படமாக மாற்றுவதற்கு உங்களுக்குப் பெரிய பெரிய நன்றிகள். இப்படத்தில் தயாரிப்பாளராக சௌந்தர்யா மேம் எங்களுக்கு கிடைத்தது, ஒரு பெரிய வரம்னு தான் நினைக்கிறோம். உண்மையிலேயே, நான் நீண்ட நாளா மனசுக்குள்ள வைத்திருந்த ஆசை – ரஜினி சாரை நேரில் சந்திக்கணும்ன்னு. அதை மகேஷ் ஐயாவிடம் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். சௌந்தர்யா மேடமிடம் சொன்னேன். அது இப்படத்தில் நடந்தது மகிழ்ச்சி.

ரஜினி சாரை பார்க்கும் போது வைரமுத்து சார் போல எப்படியாவது ஒரு கவிதை சொல்லி, சாரை இம்ப்ரெஸ் பண்ணணும்னு நினைச்சேன். உண்மையிலேயே அந்த கவிதை அவருக்கு ரொம்ப பிடிச்சது. என்னோட வாழ்நாள் கனவு நிறைவேறிச்சு.

இந்த படத்தில் ஒர்க் பண்ணிய ஒவ்வொருத்தருக்கும் நான் மனசார நன்றி சொல்லணும். மதன் – அடுத்த படம் இன்னும் கவனமா பண்ணணும். அபி – இது உன்னோட முதல் படம். அது ஜெயிக்கணும்னு நானும் ஷான் ஐயாவும் அடிக்கடி பேசிக்கிட்டே இருப்போம். அது இப்போ நடந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. அனஸ்வராவுக்கு வாழ்த்துக்கள் , கடைசியாக, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் பெரிய நன்றி.

நடிகர் சரவணன் பேசியதாவது..,

இந்த படத்தில் நான் நடிக்கக் காரணமாக இருந்தது முதலில் இயக்குநர் மதன். அதே மாதிரி மகேஷ் சார், மேலும் இந்த படத்தின் முழு குழுவுக்கும் நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.இந்த படத்தில் என்னோட கேரக்டர் உண்மையிலேயே ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனாலும் அந்த சின்ன கேரக்டரையும் அழகாக எழுதி, அதைப் பாராட்டி, நிறைய ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் மனசார எழுதியிருந்தார்கள். என்னைப் பாராட்டிய எல்லாருக்கும் நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லக் கடன்பட்டிருக்கிறேன். இந்த படம் இன்னும் நல்ல படியாக, இன்னும் அதிக மக்களைச் சேரும் வகையில் பயணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகை ஆனந்தி பேசியதாவது..

நான் இந்த படத்தைப் பற்றி பேசும்போது, ஒரு நடிகராக இல்லாமல், ஒரு ஆடியன்ஸாக பேசணும்னு ஆசைப்படுறேன். நேத்து நைட்டுதான் இந்த படம் பார்த்தேன். ஒரு நல்ல படத்தில் நானும் ஒருத்தராக இருப்பது மகிழ்ச்சி.
இன்றைய தலைமுறை பற்றி ஒரு தவறான எண்ணம் நம்மிடம் இருக்கிறது அதை மாற்றி வேறு பார்வையில் இப்படம் நம்மிடம் காட்டுகிறது.

இந்த படம் அந்த Human Nature-ஐ ரொம்ப அழகாக, ரொம்ப மென்மையாக சொல்லுகிறது. “There are no bad people.But we all do bad things sometimes.”

அது நம்ம எல்லாருக்கும் நடந்திருக்கலாம்.ஆனா அதே சமயம், நம்மளுக்குள்ள வளர வாய்ப்பு இருக்கிறது அப்படிங்கிற கருத்து இந்த படத்துல ரொம்ப அழகா ஒரு காதல் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு படத்தில் ஒரு பங்காக இருந்தது மிகுந்த மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

நடிகை காவ்யா பேசியதாவது..,

ஒரு புதுமுகமாக என்னை என் பெயர் சொல்லி பாராட்டிய அனைவருக்கும் நன்றி. என் கதாப்பாத்திரத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. இப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. தயாரிப்பாளர் படக்குழுவுக்கு என் நன்றி.

நடிகர் சச்சின் பேசியதாவது..,,

இப்படத்தில் பங்கு கொண்டது மிக மகிழ்ச்சி. இந்த மொத்தக்குழுவுக்கும் என் நன்றி. அபி மற்றும் அனஸ்வராவுக்கு நன்றி. இந்தப்படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

நடிகை அனஸ்வரா பேசியதாவது..,

இந்த படம் ரொம்ப ரொம்ப அன்போட உருவக்கிய படம். அந்த அன்பை ஆடியன்ஸ் அப்படியே ஏற்றுக்கிட்டது தான் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்.

“இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக மதனுக்கு மனப்பூர்வமான நன்றி. அபியுடன் பணியாற்றிய அனுபவம் மிகச் சிறப்பாக இருந்தது என தெரிவித்தார். அபியுடன் உள்ள கெமிஸ்ட்ரியை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் ரசித்தது ரொம்ப மகிழ்ச்சி. சௌந்தர்யா மேடம், மகேஷ் அண்ணா, காவ்யா மற்றும் முழு நடிகர்–தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி.

இரண்டு நாட்களுக்கு முன் ரஜினி சாரை சந்தித்த தருணம் வாழ்வில் மறக்க முடியாதது. அவர் படம் பார்த்து சொன்ன ரெஸ்பான்ஸ் எங்களுக்கெல்லாம் ரொம்ப அர்த்தமுள்ளதா இருந்தது. எங்கள் படத்தை இவ்வளவு அன்போட ஏற்றுக்கொண்ட எல்லாருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,

இந்தப்படத்துக்கு பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது. அபியை முதல் படம் செய்ய கஷ்டபட்ட காலத்திலிருந்து பார்க்கிறேன். அவனுடைய உழைப்பு 200 சதவீதம் இருந்தாலும் நீங்கள் அவனுக்கு முழு ஆதரவு தந்திருக்கிறீர்கள் நன்றி. அபி மிக அழகான மனது கொண்டவர் அவர் மாற மாட்டார் என நம்புகிறேன். எனது கூட்டாளி மோகன்ராஜனுடன் தொடர்ந்து படங்கள் செய்கிறேன் அவருக்கு என் நன்றி.

இயக்குநர் மதன் இந்தக்கதை சொன்ன போதே இது வெற்றிப்படம் என்பது தெரியும், கதை சொல்லும் போது தடுமாறினாலும் படத்தில் மிக அழகாக அதை நிறைவு செய்துவிட்டார். அனஸ்வரா கேரக்டரை எழுதிய விதமும், அதை எடுத்த விதமும் அத்தனை அழகாக இருந்தது. அனஸ்வராவுக்கு படத்தில் நான் கை தட்டினேன் அவர் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளர் மகேஷ் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. அவரைப் பார்த்தால் என் பையன் தான் ஞாபகம் வரும். குழந்தை மனது கொண்டவர். கண்டிப்பாக இன்னும் 3 படங்கள் ஹிட் தந்துவிடுவார். எங்களுக்கு முழு ஆதரவு தந்ததற்காக நன்றி. சௌந்தர்யா மேம், அவர் மிகத்தெளிவான சிந்தனை கொண்டவர். அவரிடம் நிறைய திட்டமிடல் இருக்கும். அவர் இன்னும் நிறைய சாதிப்பார் அதைக் காண ஆவலாக இருக்கிறேன்.

படத்தில் உழைத்த அத்தனை நடிகர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.இந்தப்படத்தை ஏற்றுக்கொண்டு கொண்டாடிய மக்களுக்கு நன்றி.

இயக்குநர் மதன் பேசியதாவது..,

எல்லாருமே“இந்த படம் கண்டிப்பா ஒரு வெற்றி படம்” என சொன்னார்கள். அதே போல படம் வெற்றியடைந்தது உண்மையிலேயே எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.மகேஷ் சார், சௌந்தர்யா மேடம், இருவருக்கும் பெரிய நன்றி. அதே மாதிரி சரவணன் சார் டீம் உட்பட, இந்த படத்துக்காக உழைத்த எல்லாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். தூக்கமில்லாமல் இப்படத்திற்காக உழைத்த என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் பேசியதாவது..,

“நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.”நீங்கள் எல்லாரும் இல்லாம இந்த டீமும் இல்லை. அதனால ரொம்ப சந்தோஷம். பிரஸ் ஷோ முடிந்த பிறகு,நீங்கள் தந்த பாராட்டுக்களில் இருந்து தான் இந்த படம் உண்மையிலேயே take off ஆனது. இப்படத்தை மக்கள் மனதளவில் நெருக்கமாக கொண்டாடுகிறார்கள்.

மதன் எனக்கு ரொம்ப நாளா தெரிஞ்ச பையன். லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் அவன் வேலை பற்றி எனக்கு தெரியும். இந்தக் கதை சொல்லும்போதே, “இந்த படம் ஹிட்” எனத் தோன்றியது. அவன் கண்டிப்பாக அனஸ்வரா வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அனஸ்வரா நடிப்பை பார்த்த பிறகு அவர் எவ்வளவு பெரிய பலம் என்று புரிந்தது. அபி எனக்கு சொந்த தம்பி. அபியை நீங்கள் எல்லாரும் உங்கள் வீட்டுப் பையன் மாதிரி
பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். ஷான் தான் என் மூன்று படத்திற்கும் இசையமைப்பாளர். இதில் அனீஷா கேரக்டருக்கு அவரின் இசை அற்புதமாக இருந்தது. எங்கள் சின்ன டீமை பாராட்டி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூப்பர்ஸ்டாருக்கு நன்றி.

சௌந்தர்யா அக்காவுடனான உறவு 10 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அவர் எனக்கு எப்போதும் அக்கா தான். எங்களால் முடியாத பல விஷயங்களை ஒரு போன் கால்லஅவங்க முடிச்சு கொடுத்து விடுவார்கள்.அக்கா – ஒரு பெரிய சப்போர்ட். எங்கள் டீமின்தூண். அவருடன் இன்னும் நிறைய படம் செய்வேன். இந்தப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் பெரிய நன்றி.

தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது..,

“ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சி என்ற வார்த்தை கூட இந்த உணர்வுக்கு சரியாக இருக்காது”ப்ரீமியர் ஷோவில் அப்பா படம் பார்த்து தான் படத்தை அடுத்த கட்டதிற்கு எடுத்துச் சென்று விட்டார்.

“படம் முடிந்ததும், வீட்டிற்கு சென்றபோது அப்பா–அம்மா இருவரும் என்னை கட்டிப்பிடித்து சிரித்தார்கள். அப்போது தான் ‘இதுதான் சக்ஸஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்பாவின் சிரிப்பை நான் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். 16–18 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் இருந்தாலும், இந்த படத்தின் மூலமாக தான் ‘வெற்றி’ என்பதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இது தான் முதல் சக்சஸ் மீட்.

“அபி எனக்கு ஒரு பேபி பிரதர். அந்த மனதிலிருந்து வரும் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இங்கே நீண்ட காலம் நிலைத்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று நம்பிக்கையுடன் கூறினார். அனஸ்வராவை எங்கே இருந்தீர்கள் இவ்வளவு நாள் என்று கேட்கத் தோன்றியது. இந்த படத்தில் அவர் மிக அழகாக நடித்துள்ளார். குறிப்பாக இறுதிக் காட்சியில் வரும் அமைதியும், மழையை பார்த்து அவர் சிரிக்கும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த தருணம்”

இயக்குநர் மதன் கதை சொன்னபோதே இது வெற்றி படம் என்ற நம்பிக்கை வந்தது. இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளும், இறுதியில் நான்கு கதாபாத்திரங்களும் ஒரே ஷாட்டில் சந்திக்கும் காட்சியும் முழுமையான டைர்கடர்ஸ் டச். அவரது அடுத்த படத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அனீஷா பாத்திரத்திற்கு போட்டது பத்து நிமிடத்தில் உருவான இசை என்பது நம்ப முடியாத மாயை. அந்த மேஜிக் அவரால் மட்டுமே முடியும். பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், பிரஷாந்த் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினருக்கு மனப்பூர்வமான நன்றி. இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்டஸை தாண்டி, மக்கள் தங்கள் படமாக கொண்டாடுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” அனைவருக்கும் நன்றி.

நடிகர் அபிஷன் ஜீவிந்த் பேசியதாவது..,

“ரஜினி சார் சொன்ன அந்த ஒரு வார்த்தை தான் என்னை ஹீரோவாக இந்த முடிவை எடுக்கவும், அதில் நம்பிக்கை வைக்கவும் காரணமாயிருந்தது. இப்போ அவரை மீட் பண்ணும்போது, ‘ஹீரோ ஆகிட்டீங்க’ன்னு அவர் திரும்ப சொன்னது… அந்த சர்கிள் கம்ப்ளீட் ஆன மாதிரி சந்தோஷமாக இருந்தது,”

நீங்கள் படத்தை அழகாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தீர்கள். நல்ல ரிவ்யூஸ், நல்ல வார்த்தைகள் – அதுதான் இந்த வெற்றிக்கு காரணம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி.

“என்னை ஹீரோவாக நம்பி இந்த இடத்துல நிற்க வைத்ததுக்கு மதனுக்கு ரொம்ப பெரிய நன்றி. உன்னை இந்த மேடையில் பார்க்க பெருமையாக இருக்கிறது. இந்த பயணம் இன்னும் பெரியதாக இருக்கும் வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் குறித்து,“எப்போதும் எனக்கு கூடுதலாக வேலை செய்வார். ‘அபிக்காக இதை இன்னும் நல்லா பண்ணலாம்’ன்னு சொல்ற அந்த மனசு ரொம்ப ஸ்பெஷல். புகழை கூட அழகாக, ஈகோ இல்லாமல் கொடுக்கத் தெரிந்தவர், அவருக்கு நன்றி. பாடலாசிரியர் மோகன், எடிட்டர் சுரேஷ், ஸ்ரேயாஸ், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. அனஸ்வரா எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ரொம்ப அழகாக ஒர்க் ஆனது. ஆடியன்ஸ் அதை ரொம்ப ரசிக்கிறார்கள். இந்த கூட்டணி அடுத்தும் தொடரும். காவியா, சச்சின், தேனி முருகன், சரவணன், ஆனந்தி உள்ளிட்ட நடிகர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் மகேஷ் அண்ணா படம் ஹிட் ஆன பிறகும், ‘நான் எதாவது தவறு பண்ணினேனா ? ன்னு கேட்கும் அந்த மனசு எல்லாருக்கும் கிடைக்காது. அவர்கிட்ட பேச எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. அது தான் இந்த உறவின் அழகு,” அவருக்கு என் நன்றிகள்.

சௌந்தர்யா மேம் படம் வெளியான பிறகு“‘சக்ஸஸ் இப்படித்தான் இருக்குமா என்று அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு ரொம்ப சந்தோஷம் கொடுத்தது. மகேஷ் அண்ணா சௌந்தர்யா மேம் நான் மூன்று பேரும் இணைந்து அடுத்து ஒரு பெரிய படம் செய்கிறோம். இந்த படம் இன்றைக்கு மக்கள் மனசுக்குள்ள ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதுவே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த பயணத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி

ரசிகர்களை நேரில் சந்தித்த “மை லார்ட்” படக்குழு !!

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நேற்று ஆயிரக்கணகான ரசிகர்கள் முன்னிலையில்,  பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர்  ரசிகர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, பாடல் பாடி, பட வசனங்கள் பேசி, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் மை லார்ட் படம் குறித்த தகவல்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில்

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது.., 

மை லார்ட் ரசிகர்களுக்கு  ஒரு முழுமையை கொடுக்கும் படமாக இருக்கும்.
ஒரு சாப்பாடு சாப்பிட்டால் நமக்கு  என்ன ஒரு திருப்தி, ஒரு நிறைவு கிடைக்குமோ, அதுபோல தான் இந்த மை லார்ட் திரைப்படம்.  

சாப்பாட்டில் சுவை முக்கியம் தான், ஆனால் உடம்புக்கு கெடுதல் என்றால் சுவையாக இருந்தாலும் அதை சாப்பிடக் கூடாது.

“மை லார்ட்”  படம், எல்லாருமே ரசித்து, சந்தோஷமாக, ரொம்ப என்ஜாய் பண்ணி, எண்டர்டெயின் ஆகி பார்க்குற சுவையுடன் கூடிய  படமாக இருக்கும். ஆனால்  அதே நேரத்தில்,  மனிதர்களாக நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தும்  படமாகவும் இருக்கும்.

சசி சாருக்கு  “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்திற்கு பிறகு “மை லார்ட்”  மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும். ராஜுமுருகனுக்கு இது பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் நன்றி.

இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது.., 
மை லார்ட்  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அதாவது வேலண்டைன்ஸ் டே சமயத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் பலர், “வேலண்டைன்ஸ் டேக்கும் ‘மை லார்ட்’ என்ற டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டார்கள். உண்மையில் இந்த படத்துக்கும் வேலண்டைன்ஸ் டேவுக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஏனென்றால் மை லார்ட் என்பது சசிகுமார் மற்றும் சைத்ரா (முத்துசிற்பி, சுசீலா) ஆகியோரின் காதல் நிறைந்த ஒரு தம்பதியரை மையமாக கொண்ட படம்.

ஒரு அழகான கணவன்–மனைவி.அவர்களுக்கிடையிலான அன்புதான் இந்த படத்தின் மையம். கணவன்–மனைவிக்கிடையில் இருக்கும் ஆழமான அன்புதான், உலகத்திலேயே மிகப் பெரிய காதல். அதனால் மை லார்ட்  வேலண்டைன்ஸ் டே சமயத்தில் வெளியாகிறது.  இதைவிட பொருத்தமான நேரம் இருக்க முடியாது. என்னுடைய படங்களில் பொதுவாகவே காதலுக்கு நான் மிக முக்கியத்துவம் கொடுப்பேன். காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டுமல்ல.
நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களை நேசிக்கும் மனநிலையே காதல் என்று நான் நம்புகிறேன். அந்த வகையில், இந்த படம் கணவன்–மனைவிக்கிடையிலான காதலை பேசுகிறது. அதே நேரத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் சொல்லும் படமாக இருக்கும்.

இப்படியான அன்பையும் மனிதநேயத்தையும் பேசும் படத்தை சசிகுமார் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும் — சசிகுமார் என்றாலே அன்பும் மனிதநேயமும் கொண்டவர் அது சினிமாவில் மட்டுமல்ல; சினிமாவுக்கு வெளியிலும் அவர் அப்படியே வாழும் மனிதர். அதனால் முத்துசிற்பி கதாபாத்திரத்திற்கு அவரைவிட சிறந்த ஆள் யாரும் இல்லை.

அதேபோல் சைத்ரா இந்த படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். மை லார்ட்  மூலமாக அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.கர்நாடகாவிலிருந்து ஒரு சிறந்த நடிப்புத் திறன் கொண்ட நடிகை நமக்கு கிடைத்துள்ளார். தமிழ்நாடு எப்போதுமே வந்தாரை வாழவைக்கும் பூமி. அந்த வகையில், அவரையும் தமிழ்நாடு வாழ வைக்கும்.

என்னுடைய ஆத்மார்த்தமான இசை நண்பர் ஷானுக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அற்புதமான இசையைத் தந்துள்ளார்.

பெரும் உழைப்புடன், முழுக்க முழுக்க மக்களுக்கான படமாக மை லார்ட்  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு நீங்கள் தரும் அன்புதான் எங்களைப் போன்ற கலைஞர்களை வாழ வைக்கும். அனைவருக்கும் நன்றி.  பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பாருங்கள்.

நடிகை சைத்ரா பேசியதாவது.., 
இந்தப்படம் மிக மிக இனிமையான அனுபவம், இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமைகள் பங்குபெற்ற படத்தில் நானும் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஷான் ரோல்டன் இசை அனைவருக்கும் பிடிக்கும். இப்பட பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப்படத்தில் காதல் இருக்கிறது. சசிகுமார் மிக ஜாலியானவர். அவர் இயக்குநர் என்பதால்,  அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் இன்னும் நிறைய படம் நடிக்க ஆசை. பொலிடிகல் டிராமாவும் இருக்கிறது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு பயனுள்ள படமாக இருக்கும். 
எல்லோரும் கண்டிப்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் ‘மை லார்ட்’ கண்டிப்பாக பார்த்து ஆதரவு தாருங்கள்.

நடிகர் சசிக்குமார் பேசியதாவது…, 
டூரிஸ்ட் ஃபேமிலியில் மனிதநேயத்தைப் பற்றி சொன்ன மாதிரி, இந்த படமும் உங்களுக்கு அன்பையும், மனிதநேயத்தையும் போதிக்கும் படம். என்னுடைய படங்கள் எப்போதுமே ஃபேமிலிக்கான படங்கள். உங்கள் குடும்பத்தோட, குழந்தைகளோட நிச்சயமாக வந்து பார்க்கலாம். இளம் தலைமுறைக்கும் ஏற்ற ஒரு படம். இப்போ உள்ள ஜெனரேஷன், வேகமா கோபப்படுற சூழ்நிலைக்கு நடுவில்,
“பொறுமையா இருங்க, மனிதநேயமா இருங்க” என்று சொல்கிற படம். ராஜுமுருகன் சார் ஸ்டைலில், கலகலப்பான காமெடியோட படம் நகரும். உங்களை சோகப்படுத்த மாட்டோம். அழ வைக்க மாட்டோம். சிரிக்க வைப்போம்… சிந்திக்க வைப்போம்.

நாயகி சைத்ரா, கர்நாடகாவிலிருந்து வந்து தமிழில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். “கன்னடத்தில் சிறந்த நடிகையாக இருப்பதுபோல, தமிழிலும் அவர் ஒரு முக்கிய நடிகையாக வளர்வார். மை லார்ட் அவருக்கான சிறந்த அறிமுகமாக இருக்கும்.

படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எதிர்பாராத சூழ்நிலையில் படக்குழுவில் இணைந்த அவர், எந்த தயக்கமும் இன்றி வந்து கதாபாத்திரத்திற்கு முழுமையான உயிர் கொடுத்தார்.
இசையமைப்பாளர் ஷான் குரல் எல்லோரையும் கவரும் தன்மை கொண்டது. காதல், சோகம், சந்தோஷம் – எந்த உணர்வாக இருந்தாலும் அவரது குரல் மனதில் நிற்கும். டூரிஸ்ட்  ஃபேமிலிக்குப்  பிறகு மீண்டும் இணைவது மிகுந்த சந்தோஷம்.  பிப்ரவரி 13-ஆம் தேதி, சமயத்தில் மை லார்ட் படம் வருகிறது அனைவரும் பார்த்து கொண்டாடுங்கள்.
ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன்,  அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.

இப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் . இதனை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.

“மை லார்ட்” திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை!

‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது. பான்-இந்திய சினிமாவின் விதிகளையே மாற்றியமைக்கும் வகையில், ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம், தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையில், ரூ.120 கோடி (கமிஷன் அடிப்படையிலான முன்பணம்) செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத ஒரு திரைப்படத்திற்கான மிகப்பெரிய விநியோக ஒப்பந்தமாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.

டாக்ஸிக் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான KVN Productions மற்றும் Monster Mind Creations ஆகியவற்றுக்கும், SVC-க்கும் இடையே ஏற்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம், இந்தப் படத்தின் மீது திரைத்துறை வைத்திருக்கும் அளவிட முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. AP–TG உரிமைக்காக மூன்று முன்னணி நிறுவனங்கள் கடும் போட்டியில் ஈடுபட்ட நிலையில், இறுதியில் SVC வெற்றி பெற்று, சமீபத்திய இந்திய சினிமாவின் மிக முக்கியமான விநியோக ஒப்பந்தங்களில் ஒன்றை உறுதி செய்துள்ளது.

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் டாக்ஸிக், மொழி எல்லைகளை உடைக்கும் உண்மையான நட்சத்திர சக்தியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பிலிருந்தே, உலகம் முழுவதும் ரசிகர்களிடையே அபார வரவேற்பும், இயல்பான ரசிகர் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில், யாஷ் “அவர்களில் ஒருவராக” ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். KGF Chapter 2க்குப் பிறகு அவரின் அடுத்த படத்துக்கான நான்கு ஆண்டுகால எதிர்பார்ப்பு, இப்போது டாக்ஸிக் மீது உருவான மாபெரும் முன் வெளியீட்டு வரவேற்பாக வெளிப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து தில் ராஜு கூறியதாவது:

“யாஷ் இன்று இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் சக்தி. KGF 2வுக்குப் பிறகு அவரது மார்க்கெட் உலகம் முழுவதும் மேலும் வளர்ந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப் பெரியதாக உள்ளது. நான்கு ஆண்டுகள் கழித்து வரும் இந்தப் படத்தை SVC சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். யாஷுடன் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.”

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்திருப்பது, டாக்ஸிக் படத்தின் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது. தேசிய விருது பெற்ற படங்கள் மற்றும் பல மெகா ஹிட்களை உருவாக்கியுள்ள இந்த நிறுவனம், படத்தின் உள்ளடக்கம், அளவு மற்றும் நீண்டகால வசூல் திறன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.

இந்த கூட்டணி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு வெளியீடு, பரவலான புரமோஷன்கள் மற்றும் “அசாதாரணமான, மாபெரும் சினிமா அனுபவம்” இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி – தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) – தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.

கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, விழாக்கால கொண்ட்டாட்டமாக வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில்

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஜன கன மன’ ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ – சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். பள்ளிச்சட்டம்பி அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைகிறது.மேலும் இது அவரது இயக்கத்தில் வெளியாகும் முதல் பீரியாட்டிக் ஃபிலிம் என்பதால்.புதிய வகைகளையும், சினிமாவின் பரிமாணங்களை ஆராய வேண்டும் என்ற அவரது இலக்கையும் பிரதிபலிக்கிறது.

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஷிகார் ‘( Shikkar) எனும் ஒரே படத்தின் மூலம் தனது திறமைக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற திரைக்கதை ஆசிரியர் எஸ். சுரேஷ் பாபு – ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவருடைய செழுமை மிக்க சினிமா பயணத்தில் மோகன்லால் – மம்மூட்டி – ஜெயராம் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கும், ஷைன் டாம் சாக்கோ ( Shine Tom Chacko) சௌபின் ஷாஹிர் ( Soubin Shahir) மற்றும் விநாயகன் போன்ற புதிய தலைமுறை நடிகர்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.

தொடர்ந்து வெற்றி படங்களையும் , இசை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் பாடல்களையும் வழங்கி வரும் ஜேக்ஸ் பிஜாய் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1950 – 60 கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் மூலம் ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) இடமிருந்து மற்றொரு வெற்றிகரமான இசை ஆல்பத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

‘பள்ளிச்சட்டம்பி’ ஒரு பீரியட் சினிமா என்பதால் ஆடை வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரள மாநில அரசின் விருது பெற்ற மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். பல மொழிகளில் படங்களை தொகுத்த அனுபவம் கொண்ட ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி கையாண்டுள்ளார்.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் (Worldwide Films) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh )ஆகியோருடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் (C Qube Bros Entertainment) சார்பில் தயாரிப்பாளர் சானுக்யா – சைதன்யா சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள் டொவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றாத வகையில் புதிய தோற்றத்தில் காணப்படுவார். இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.

அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’

ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!

~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.

‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியாத நகரத்தில், தன்னையே தேடும் அவரது பயணம் தான் இப்படத்தின் மையம்.

படத்தில் ராகுல் பட் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார், சன்னி லியோனே, மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கென்னடியின் இருண்ட, பிளவுபட்ட உலகத்திற்குப் பல அடுக்குகளைச் சேர்க்கிறார்கள்.

கென்னடி டிரெய்லர், மௌனம், கோபம், உயிர்தப்புதல் ஆகிய உணர்வுகளால் நிரம்பிய கதையைக் சொல்கிறது. வெடிச்சிதறல்கள், மிரட்டல் வலையங்கள், அதிகார மையங்கள் எனும் அபாயகரமான சதியில் கென்னடி சிக்க வைக்கப்படும்போது, உண்மை, பழிவாங்கல், இறுதிக்கட்ட மீட்கும் முயற்சி என வன்முறையுடன் கூடிய தேடலுக்கு தள்ளப்படுகிறார். ஸ்டைலிஷ் ஆக்ஷன், அச்சமூட்டும் காட்சிகள், அனுராக் காஷ்யப்பின் முத்திரைமிக்க நாயர் கதையாக்கம் இவை அனைத்தும் இணைந்து, தனிமை, நீதி, சமரசமற்ற தேர்வுகளின் விலையை ஆராயும் உணர்ச்சிமிக்க திரையனுபவத்துக்கான மேடையை அமைக்கின்றன.

டிரெய்லர்: https://youtu.be/ZNZuX5zSHYw

படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறியதாவது..,
“‘கென்னடி’ நான் உருவாக்கிய மிகவும் தனித்துவமான படங்களில் ஒன்று. இந்த படத்தின் பயணம் மிக நீண்டது. ஆனால் திரைப்பட விழாக்களில் கிடைத்த ஒவ்வொரு கருத்துக்களும், நான் இந்த படத்தை உருவாக்கியதற்கான அர்த்தத்தைத் தந்தது. டிரெய்லர், வெளியில் வன்முறையுடன் இருந்தாலும் உள்ளே ஆழமாக காயமடைந்த ஒரு மனிதனின் உலகத்துக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. எந்த சமரசமும் இன்றி, படத்தை அதன் மூல வடிவிலேயே ZEE5 பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.”

நடிகர் ராகுல் பட் கூறியதாவது..,
“கென்னடி பாத்திரத்தில் நடித்தது என்னையே மாற்றியது. கென்னடி தனிமையானவன், கோபமிக்கவன், பலவீனமானவன் எப்போதும் கடந்த காலத்திலிருந்து ஓடிக்கொண்டிருப்பவன். அவனின் மௌனத்திலும், கோபத்திலும் வாழ்வது மனதளவில் சோர்வூட்டினாலும், அந்த காதாப்பாத்திரம் எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. திரை விழா பார்வையாளர்கள் படத்தைக் கொண்டாடியது பெரும் நம்பிக்கையளித்தது. இப்போது இந்தியப் பார்வையாளர்கள் கென்னடியின் பயணத்தையும், வலியையும், அனுபவிப்பதைக் காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.”

சன்னி லியோன் கூறியதாவது..,

“‘கென்னடி’ படம் நடிகையாக என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி வெளிக்குள் தள்ளியது. சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளின் பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவைத் தருவதுமான அனுபவம். அனுராக் காஷ்யப்புடன் பணியாற்றியது, உரையாடலை விட மௌனத்தை கொண்டாடக் கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இந்த படம் எனக்கு பெரிய சவால்களைத் தந்தது. அதற்காக அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. பார்வையாளர்கள் இந்த இருண்ட, அழகான உலகத்தை அனுபவிப்பதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

20-ஆம் தேதி பிப்ரவரி முதல், ஒரு அதிரடியான திரில்லர் பயணம் ‘கென்னடி’ படத்தை ZEE5 ல் காணத் தயாராகுங்கள்.

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா



தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.


#AazhiTrailer https://www.youtube.com/watch?v=bq5Gu1HktK0

மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித் ஜெகன், தேவிகா சதீஷ், வையாபுரி, தாமரைச்செல்வி, ஸ்ரீ ஜித் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் என். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் இசையமைத்திருக்கிறார் ஆஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஒலி வடிவமைப்பினை மேற்கொண்டிருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உத்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

பிப்ரவரி 27ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரான ரவி கொட்டரக்கரா, இயக்குநர் உதய சங்கரன், விநியோகஸ்தர்கள் அப்பாஸ் ஏ. ஜெ, ஹரி உத்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ரவி கொட்டரக்கரா படத்தின் இசையை வெளியிட.. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், ”இன்றைய தேதியில் நல்ல படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு பல சவால்கள் இருக்கின்றன. நல்ல கன்டென்ட் கிடைப்பதும் பெரிய விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் ஆழி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என நம்புகிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத்குமாரின் ரசிகர். அவருடைய படங்களை பார்த்து வளர்ந்திருக்கிறேன். அவர் நடித்த இந்த திரைப்படத்தை விநியோகம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன். குறைந்த பட்ஜெட்டிலான படங்கள் வெளியாவதிலும் அவற்றை விற்பனை செய்வதிலும் பெரும் போராட்டம் இருக்கிறது. தமிழ் திரையுலக நலனுக்காக போராடும் அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து வியாபார வழிமுறையை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை தாமரை செல்வி பேசுகையில், ”இது எனக்கு முதல் மேடை. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. நான் மேடை நாடகத்தில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது சரத்குமாரை சந்தித்தேன். அதன் பிறகு இப்போது தான் அவரை சந்திக்கிறேன். அவருடைய படத்தில் நடித்திருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. என்னை படபிடிப்பு தளத்தில் மலையாளத்தில் பேச வைத்த இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி,” என்றார்.

நடிகர் வையாபுரி பேசுகையில், ”சரத்குமாருடன் 2001ம் ஆண்டிற்கு முன்னர் நடித்துள்ளேன். அதன் பிறகு இப்போது தான் அவருடன் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்த படத்தில் அப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நடிப்பதற்காக இயக்குநர் என்னிடம் இரண்டு நாள் கால்ஷீட் கேட்டார். ஆனால் ஒரே நாளில் அனைத்து படப்பிடிப்பையும் நிறைவு செய்துவிட்டார். மலையாள இயக்குநர்கள் தமிழில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று என ஆசைப்படுகிறார்கள். அதற்காக இயக்குநர் உருவாக்கிய கதைதான் ‘ஆழி’ . இப்படம் பிப்ரவரி 27ம் தேதி அன்று வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை தேவிகா சதீஷ் பேசுகையில், ”தமிழில் நான் நடிக்கும் மூன்றாவது படம் ‘ஆழி’. நான் இந்தப் படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்திருக்கிறேன். நான் சின்ன வயதில் இருந்தே சரத் குமார் சார் நடித்த படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். படத்தில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பு தளத்திலும் ஒரு அப்பாவை போல் அறிவுரை கூறி அன்பாக அக்கறையுடன் நடத்தினார். என்னுடைய ஆசிரியர்களுக்கும் இயக்குநர் மாதவ் ரமா தாஸ் இயக்கிய படங்கள் பிடிக்கும். இந்தப் படத்தில் ஆஸ்கார் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனிங் செய்திருக்கிறார். அதனால் படத்தின் தரம் அனைவருக்கும் பிடிக்கும்.‌‌ படத்தின் பணியாற்றிய சக நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர் அனைவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் இந்திரஜித் ஜெகன் பேசுகையில், ” இப்படத்தில் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சரத்குமார் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. திரைக்கு முன்னாலும்… திரைக்குப் பின்னாலும்… அவர் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதில் அவருடைய அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. பின்னணி இசையில் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கும். ஆழி படக்குழுவில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது,” என்றார்.

தயாரிப்பாளர் ரவி கொட்டாரக்கரா பேசுகையில், ”படத்தின் டைட்டில் ஆழி. ஆழி என்றால் கடல். உங்களில் யாருக்காவது கடலின் ஆழம் என்ன என தெரியுமா? தெரியாது. அதேபோலத்தான் என்னுடைய நண்பர் சரத்குமாரின் நடிப்பின் ஆழம். இன்னும் அவர் புதிதாய் நடித்துக் கொண்டே இருப்பார். அவர் முதலில் ஏற்று நடித்த கேரக்டர்கள் வேறு. வில்லன், ஹீரோ, லவ்வர் பாய், ஃபாதர்- ஃபேமிலி மேன் டு எவரிதிங். ஆனால் இதில் அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்றைய இளம் கலைஞர்கள் அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கதையைக் கேட்கும் போது அவரது கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இதனை இன்றைய 85 சதவீத நடிகர்கள் செய்வதில்லை. அவர் இன்று வரை படித்துக் கொண்டிருக்கிறார் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பற்றியும் சிந்திக்கிறார். அண்மை காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்று நடித்திருக்கும் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இதே போல் தான் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

கடல் அலையின் ஓசையை கேட்டிருப்பீர்கள். கடல் – ஆழியின் ஒலியை கேட்டிருக்கிறீர்களா?  அதனை இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி கேட்க வைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநர் மாதவ் ரமா தாசன் வித்தியாசமான திரைக்கதையில் கதையை சொல்லி இருக்கிறார்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன் எனது தயாரிப்பில் வெளியான மலையாள படத்தை 26 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வெளியிட்ட விநியோகஸ்தர். சிறந்த அனுபவசாலி. அவர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜூன் மாதத்திற்கு பிறகு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கட்டிடம் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கும். அனைவரும் வருகை தாருங்கள். சினிமாவை மேலும் வளப்படுத்துவோம்,” என்றார்.

இயக்குநர் மாதவ் ரமா தாசன் பேசுகையில், “நான் தமிழில் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இதற்கு முன் மலையாளத்தில் ‘மேல் விலாசம்’, ‘அப்போதகேரி ‘, ‘இளையராஜா ‘ என மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். இதில் ‘இளையராஜா’ படத்தை தமிழில் உருவாக்க எண்ணினேன். தமிழில் படத்தை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் விருப்பம்.  அதற்கான நேரம் இப்போது அமைந்து ஆழி  உருவாகியுள்ளது.  70 சதவீதம் கடலில் நடைபெறும் இந்த கதைக்கு சவுண்ட் அவசியம். இதற்காக சர்வதேச அளவில் அனுபவம் உள்ள ரசூல் பூக்குட்டியிடம் கேட்டோம்.  அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு தற்போது வரை படத்தின் தரமான ஒலி அமைப்பிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடித்திருக்கிறது. அதனுடைய ஒலிக்காக கஷ்டப்பட்டு உழைத்தார். நாயின் குரைப்பு ஒலியை துல்லியமாக பதிவு செய்யும்போது அவருடைய மைக் ஒன்றும் சேதமடைந்தது. அந்த அளவிற்கு நேர்த்தியாக உழைத்திருக்கிறார். இந்த படத்தில் நாயின் கதாபாத்திரமும், அதனுடைய ஒலி அமைப்பும் ரசிகர்களை கவரும். இந்தப் படத்தை பார்த்த பிறகு அனைவருக்கும் கடலுக்குள் நிஜமாகவே சென்று வந்த ஒரு உணர்வு ஏற்படும்.

இந்தக் கதையை முதலில் சரத்குமாரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய கதாபாத்திரத்தில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய கேரக்டரில் நிறைய வேரியேஷன்ஸ் இருக்கிறது. படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் தருணத்தில்  அதிகாலை 3 மணி அளவில் கூட என்னை தொடர்பு கொண்டு அவரது கதாபாத்திரம் குறித்த கேள்விகளை கேட்பார். அதற்கு நான் விளக்கம் அளிப்பேன். இந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தின் மீது ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் சரத்குமார்.‌ இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடிலும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த வையாபுரி, இந்திரஜித், தேவிகா மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நிகில் முருகனும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்,” என்றார்.

சவுண்ட் என்ஜீனியர் ரசூல் பூக்குட்டி பேசுகையில், ”சரத்குமார் நடித்த பல படங்களை என்னுடைய கல்லூரி காலங்களில் பார்த்து ரசித்து கொண்டாடி இருக்கிறேன்.  அவரை மீண்டும் இந்த படத்திற்காக திரையில் பார்த்தபோது அவர் அதே இளமையுடன் இருப்பதை பார்த்து வியந்து போனேன். இவர் எப்படி இளமைக் குன்றாமல், வயதே ஆகாமல் தோன்றுகிறார் என ஆச்சரியப்படுகிறேன். நடிகர், பாசமுள்ள தந்தை, நிறுவனத்தின் தலைவர் என அவர் எப்போதும் இயல்பாக சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டே இருக்கிறார். அவர் எதையும் ‘டேக் இட் ஈஸி’யாக எடுத்துக் கொள்கிறார். இதைத்தான் அபிஷேக் பச்சன், ஷாருக்கான், கமல்ஹாசன் ஆகியோரும் பின்பற்றுகிறார்கள்.
சரத்குமாரை பற்றி இந்திரஜித் குறிப்பிட்டது போல் அவரிடம் இருக்கும் ஒழுக்கத்தை இன்றைய இளம் தலைமுறையை சேர்ந்த கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு, உடற்பயிற்சி, அர்ப்பணிப்பு, உழைப்பு, மரியாதை, நேரம் தவறாமை, கேமரா முன்னால் நடிப்பு என ஒரு தவத்தை போல் தன்னுடைய பணியை செய்கிறார். அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மூலம் கதையை வழி நடத்துகிறார்.

நான் இதுவரை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மனிதர்களிடத்தில் பழகி பணியாற்றி இருக்கிறேன். இந்தி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன், தென்னிந்திய சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறேன். இரண்டிலும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் தென்னிந்திய சினிமாவில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். சினிமாவைப் பற்றி அக்கறையுடன் இருப்பார்கள். நான் இந்தப் படத்தை மூன்று முறை மிக்ஸ் செய்திருக்கிறேன். இது போன்ற துணிச்சலான அணுகுமுறை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குதர்களுக்கும் தான் இருக்கிறது. இங்குள்ள தயாரிப்பாளர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இயக்குநரை கொண்டாடுகிறார்கள். இயக்குநருக்கு ஆதரவு தருகிறார்கள்.

அத்துடன் இவர்கள்தான் மெயின் ஸ்ட்ரீம் ரசிகர்களின் மனநிலையை கணிக்கிறார்கள். தொழில்நுட்பம், கலை அழகு, கதை, கதாசிரியர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் மீது நம்பிக்கை கொள்கிறார்கள்.  இந்த காரணத்தினால் தான் தமிழ் சினிமா, மலையாள சினிமா, மராத்தி சினிமா,.வங்காள சினிமா ஆகியவை வளர்ச்சி அடைந்து வருகின்றன.  இதற்கு நானே மிகச் சிறந்த உதாரணம்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை தேவிகாவின் புன்னகை நன்றாக இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில், ”இந்தப் படத்தின் இயக்குநர் மாதவ் ரமா தாசன் கதை சொல்ல வந்தார். அவர் வருவதற்கு முன் அவர் இயக்கத்தில் வெளியான ‘மேல் விலாசம்’ படத்தை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அவர் கதை முழுவதும் சொன்னார். அது வித்தியாசமான கதை . பெரும்பாலும் மீன்பிடி படகு ஒன்றில் நடைபெறும் கதை. பெரும்பாலும் கடல் தான் திரைக்கதையில் இருக்கிறது. இதை எப்படி நீங்கள் திரையில் காட்சிப்படுத்துவீர்கள் என கேட்டேன். அது குறித்து நாங்கள் முழுமையாக திட்டமிட்டிருக்கிறோம் என சொன்னவுடன் அதிலேயே அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரிந்தது. ஒரு மீன்பிடி கப்பல் அளவிற்கான கப்பல் ஒன்றை அரங்கத்திற்குள் உருவாக்கி, அதனை இயக்குவதற்காக ஹைட்ராலிக் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தினார். அதனால் இந்த படத்தை நான் ஒரு வித்தியாசமான படமாக தான் பார்க்கிறேன்.

பல படங்கள் ஆடல், பாடல், பிரம்மாண்டம் என கமர்ஷியல் அம்சங்களுடன் இருக்கும். ஆனால் இதில் ஆடல் பாடல் போன்ற பிரம்மாண்டங்கள் இல்லை. ஆனால் கதை பிரம்மாண்டமானதாக இருக்கும்.

இன்றுள்ள ரசிகர்கள் பலவிதமான படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். செல்போனில் வெளியாகும் ஷார்ட்ஸ், ரீல்ஸ் இதிலெல்லாம் நடிக்கிறார்கள். இதனால் நடிகர்களுக்கு ரீல்சில் நடிப்பதா, ஷார்ட்ஸில் நடிப்பதா, வெப்சீரிஸில் நடிப்பதா, டெலிவிஷனில் நடிப்பதா, பெரிய ஸ்கிரீனில் நடிப்பதா என்ற குழப்பம் இருக்கிறது. ஆனால் இந்த வகையான குழப்பம் எந்த நடிகர்களுக்கும் தேவையில்லை. ஏனெனில் எதில் நடித்தாலும் நடிப்பு நடிப்புதான். அதனால் எதில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஏந்த குழப்பமும் தேவையில்லை. காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப நாம் மாறிக்கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றம் ஒன்றே மாறாதது.

மாதவ் ரமா தாஸின் வித்தியாசமான படம் என்று தான் இதை சொல்வேன். அதனால் இந்த படம் வெற்றி பெறும். இதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இந்தப் படத்திற்கு என்னுடைய நண்பர் ரசூல் பூக்குட்டியின் பங்களிப்பு வலிமையானது என்றே சொல்லலாம். இது சவுண்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம். அவருடைய அர்ப்பணிப்பு உணர்விற்காக அவருக்கு மேலும் பல ஆஸ்கார் விருதுகள் கிடைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் பெல்ஜியம் மலினாய்ஸ் வகையை சேர்ந்த நாய் ஒன்று நடித்திருக்கிறது. நாயின் குரலை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இரண்டு நாள் அவரது குழுவினருடன் ரசூல் பணியாற்றினார். இந்தப் படத்தில் நாயுடனும் ஒரு சண்டைக் காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பானதாக இருக்கும்.

தயாரிப்பாளர் சஜித் கிருஷ்ணன், விநியோகஸ்தர் ஹரி உத்ரா, பாடலாசிரியர் நவீன், வையாபுரி, தாமரைச்செல்வி, தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், நடிகர் நிகில் முருகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்தின் கிளிம்ப்ஸை பார்க்கும் போது நான் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பது தெரியும். இன்று நெகட்டிவ் கேரக்டருக்கு தான் வரவேற்பு இருக்கிறது. இன்று கதாநாயகன் என்று சொன்னால் நல்லவனாக இருந்தால் மட்டும் கதாநாயகன் ஆக முடியாது. தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்.‌ புஷ்பா 2 படத்தில் ஹீரோ செம்மரம் கடத்துகிறார். ஆனால் அவர் தானே ஹீரோ. அதனால் இன்றைக்கு காலங்கள் மாறிவிட்டன. இன்றைக்கு வித்தியாசம் தேவைப்படுகிறது. வித்தியாசத்திற்கு தேவைப்படும் நெகடிவ் ஷேடு – தவறு என்றும் உணர்த்தப்படுகிறது. அதனால் தவறாமல் டிஸ்க்ளைமரும் இடம் பிடிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை இந்த படம் நல்ல கதை. சிறந்த இயக்குநர். மீன்பிடி படகிற்குள் இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் உணர்வுபூர்வமான விஷயங்கள் தான் முக்கியமானது. ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். வித்தியாசமான அனுபவமாக இருக்கும்,” என்றார்.