தேஜா சஜ்ஜா நடிப்பில், “மிராய்” திரைப்படம் – உலகளவில் 100 கோடி வசூல், அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து சாதனை !!
தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த “மிராய்” திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் – கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
“மிராய்” வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்கு பிறகு, இந்த மைல்கல்லை எட்டிய தேஜாவின் இரண்டாவது படமாகும். புக் மை ஷோ பிளாட்ஃபார்மில் தொடர்ந்து இப்படம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
அத்துடன், அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $2 மில்லியன் கிளப்பைத் தாண்டியுள்ளது. ஹனுமேனுக்குப் பிறகு, இந்த சாதனையை எட்டிய தேஜாவின் இரண்டாவது படம் இதுவாகும்.
சவாலான ஆக்ஷன் கதாப்பாத்திரத்தில் மீண்டும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள தேஜா சஜ்ஜாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வில்லனாக நடித்த மனோஜ் மாஞ்சு மற்றும் தாயாக நடித்த ஷ்ரேயா சரண் ஆகியோரும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். கதாநாயகியாக நடித்த ரித்திகா நாயக், தனது வலுவான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு – மூன்று முக்கிய பங்குகளை ஒரே நேரத்தில் வகித்த கார்த்திக் கட்டமனேனியின் உழைப்பு இப்போது மிகப்பெரிய வெற்றியாக மாறியுள்ளது. தயாரிப்பாளர்கள் தரத்தில் உலகத் தரத்திற்கு இணையான படைப்பை வழங்கியுள்ளனர். இசையமைப்பாளர் கௌரா ஹரியின் அதிரடி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பெரிய திரையில் காண வேண்டிய கதை சொல்லலும், கண்கவர் காட்சிகளும் கொண்ட மிராய், மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் ரசிகர்களை ஈர்க்கிறது. மேலும், இரண்டாவது வாரத்தில் பெரிய போட்டி எதுவும் இல்லாததால், வரும் நாட்களில் படத்தின் வசூல் சாதனைகள் இன்னும் அதிகரிக்கும் என வணிக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.
கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது.
மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஒரு சாதாரண டிராமா மட்டுமல்ல, வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும்.
“வேடுவன்” சீரிஸ் பற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட கண்ணா ரவி கூறுகையில்.., “வேடுவன் கதை சொன்ன அந்த நொடியிலேயே இது எனக்கு மிக முக்கியமான படைப்பாக இருக்குமெனத் தோன்றியது. இது ஒரே ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி-தவறு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும்கூட. நடிகராக, இந்த பாத்திரம் என்னை என் கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே கொண்டு சென்று, கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ வைத்தது. வெடுவன் ஒரு சீரிஸ் மட்டும் அல்ல, நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.”
“வேடுவன்” சீரிஸை வரும் அக்டோபர் 10 முதல், உங்கள் ZEE5 இல் கண்டுகளியுங்கள் !
கலிங்கத்து நாட்டின் போருக்குப் பின் பேரரசன் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய மிக பெரிய ரகசியத்தை 9, புத்தகங்களில் மறைத்து வைக்கிறார்.மிகப்பெரிய தீய சக்திகளை இந்த 9. புத்தகங்களில் கைபற்றாமல் இருக்க 9 . வீரர்களை நியமிக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 . புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார்.மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களத்தில் இறங்க, அதை அவர் எப்படி செய்கிறார் ? என்பதை மிக பிரமாண்டமாக சொல்வது தான் “மிராய்”. கதைக்களம்.
பொருந்தியுள்ளார். தன்னிடம் இருக்கும் மிராயின் சக்தி என்ன ? என்று தெரியாமல் இருப்பவர், அது தெரிந்ததும் எடுக்கும் விஸ்வரூபமும் திரையரங்கில் நிச்சயம் கைதட்டல் பெறுகிறார்.வில்லனாக நடித்து ள்ள மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்கள் மூலம் சாகாவரம் பெற்று,உலகத்தை ஆளும்கதாபாத்திரத்தின் ஏற்ப நடித்துள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக்,தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும் ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அனைவரும் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி கேமரா பிரமிக்க வைக்கிறது .மணிபாபு கர்ணம் கடவுள் ராமரையும், அவர் வில்லையும் மையமாக கொண்டு ஒரு ஃபேண்டஸி ஜானரை சொல்லியிருக்கிறார்கள்
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10.09.2025 அன்று சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். இப்படத்தை அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி நடிகையாக அறிமுகமாகிறார். இந்த விழாவிற்கு விஜய் ஆண்டனியை இயக்குனர்கள் திரளாக வந்து தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், இவ்விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது,
பாடகி ஷோபா சந்திரசேகர் பேசுகையில்,
விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர். நான் இன்று வேறு ஒரு இடத்தில் இருந்தேன். அவர் என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தார், உடனே நான் வந்து விட்டேன். முதன் முதலாக சுக்ரன் படத்தில் என்னுடைய கணவர் தான் இவரை அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்போது வேறு பெயரை வைத்துக் கொண்டு வந்தார். என்னுடைய கணவர் தான் விஜய் ஆண்டனி என்று பெயர் வைத்தார். என் கணவர் ராசியானவர் என்று எல்லோருக்கும் தெரியும். இவரும் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இன்று வரை ராசியாக தானே இருக்கிறார், இவருக்கு என்ன குறைச்சல்? 2005 ஆம் ஆண்டு அறிமுகமாகி இன்றுவரை 24 படங்கள் முடித்து இது 25வது பட விழாவில் இருக்கிறோம். இசை அமைத்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று நடிக்கும் ஆசை வந்தது. அவர் ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அவருடைய முதல் படத்தை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் பார்த்தேன். அவருடைய ஒவ்வொரு படமும் வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கும். ஏற்கனவே அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இருப்பினும் இன்னும் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மேலும், இந்த விஜய் சார் பற்றி கூறிவிட்டீர்கள். அந்த விஜய் சார் எப்படி இருக்கிறார்? என்ற கேள்விக்கு ரொம்ப நன்றாக இருக்கிறார் என்று பதில் அளித்தார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில்,
விஜய் ஆண்டனியின் 25 படங்களில் நான் 7 படங்களில் பணியாற்றி இருக்கிறேன் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் பல படங்களில் பயணிப்போம். சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ், விஜய் சார் தமிழ் சினிமாவில் ஒரு பெரிய நிறுவனம் என்று கூறினார். அதுபோல, அவருடைய அப்பா எஸ் சி சந்திரசேகர் சார் அறிமுகப்படுத்திய விஜய் ஆண்டனி சாரும் ஒரு நிறுவனம் தான். இவர் தனி ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் இன்றைய காலகட்டத்தில் சினிமாத்துறை என்பது மிகவும் சவாலாகவும் பிரச்சினையாகவும் இருக்கும் போது அடுத்தடுத்து படங்களை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அனைத்து படங்களும் வெற்றி அடைந்து கொண்டும் இருக்கிறது என்பது ஆச்சரியமான விஷயம். அதேபோல் இவர் சோர்வடையாமல் உழைத்துக் கொண்டே இருக்கிறார். நாங்கள் சிங்கப்பூர் செல்லும்போது விமானத்தில் நான் தூங்கி விட்டேன். ஆனால், அவர் தூங்காமல் அடுத்தடுத்த பட வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார். அப்துல் கலாம் ஐயா கூறியது போல அவருடைய கனவு அவரை தூங்க விடாமல் செய்கிறது. அவருடைய கனவுகள் 2026 ஆம் ஆண்டு வெற்றிபெறும், அது பற்றி பிறகு பேசுவோம். சினிமாவில் பல புதுமைகளை கொடுக்க வேண்டும் என்று கனவுகளோடு பயணித்துக் கொண்டே இருக்கிறார். இன்று காலை திட்டமிட்டது போல் நூறு சாமி படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார். பிச்சைக்காரன் மற்றும் மார்கன் படம் எப்படி பெரிய அளவில் வெற்றி பெற்றது அதேபோல இந்த படத்தையும் அவருக்கு வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதோடு இன்னும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துக் கொண்டே இருக்கிறார். நான் மட்டும்தான் அவரை கொஞ்சம் மெதுவாக இயங்குங்கள் என்று கூறினேன். அவர் எதற்கும் பயப்படவே மாட்டார். நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டால் அதை ஆய்வு செய்யும்போது பயம் வரும். ஆகையால், நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளாதீர்கள் என்று கூறுவார். ஓடிடி-யில் ஜெண்டில் உமன் படம் பார்க்கிறார், உடனே ஜோஷ்வாவை அழைத்து கதை கூறுங்கள் என்று கேட்கிறார். உடனே லாயர் என்று செய்து வெளியிட்டு விட்டார். நான் அப்போதுதான் ஜோஸ்வாவிடம் அடுத்து என்ன படம் என்று கேட்டபோது, அடுத்த படத்தை விஜய் ஆண்டனி சார் உறுதி செய்து விட்டார் என்றார். இந்த அளவிற்கு வேகமாக செயல்படுகிறார் இன்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மார்கன் படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. காலையில் எழுந்ததுமே இந்த படத்தை, சென்ற படத்தை விட வியாபார ரீதியாக வெற்றி பெற வைப்பது எப்படி? என்று தான் கேட்பார். நான் கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என்பேன். ஆனால், அக்டோபர் மாதம் அடுத்த படத்தை பற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய வேகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் மூலமாக பல தயாரிப்பாளர்கள் உருவாக வேண்டும். அதன் மூலம் பலரும் பயனடைய வேண்டும். இந்த சினிமாத் துறையும் மிகவும் வளர்ச்சி அடைய வேண்டும். சக்தி திருமகன் 25வது படம், இது ஒரு துவக்கம்தான். 50-வது படத்திலும் இது போல் பேசுவேன் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல் அருண் பிரபுவை விஜய் ஆண்டனி போல் ஆராதிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அருண் பிரபு சார் ஏன் வரவில்லை என்று கேட்டால் அவருக்கு வேலைகள் நிறைய இருக்கிறது என்று சென்ற இடமெல்லாம் பாராட்டிக் கொண்டே இருந்தார். ஒரு இயக்குனர் வரவில்லை என்ற எண்ணம் தோன்றாத அளவிற்கு அவரைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டே இருந்தார். நான் கூட இது போல இயக்குனர்களை பாராட்டி பேசியது இல்லையே என்று யோசித்தேன். இந்தியாவிலேயே ஒரு உச்ச இயக்குனர் மற்றும் தமிழ் சினிமாவில் ஐந்து சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்று பெயர் எடுக்கும் அளவிற்கு இந்த படத்தை கொடுத்திருக்கிறார் அருண் பிரபு. இந்த படத்தில் நடித்த நாயகி மற்றும் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
நடிகர் / தயாரிப்பாளர் / இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில்,
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வருகை தனத அனைவருக்கும் நன்றி. இப்போது தான் 25 படங்கள் நடித்தது போல் இல்லை, நேற்று தான் “நான்” படத்தில் நடித்தது போல் உள்ளது. 25 படங்கள் என்பது நான் நாயகனாக நடித்த படங்களை மட்டும் குறிப்பிடவில்லை, நான் சிறு கதாபாத்திரங்களில் நடித்த படங்களையும் சேர்த்து தான் 25 வது படம் என்று குறிப்பிட்டுள்ளோம். அருண் அவர்களின் இயக்கத்தில் நடிப்பேன் என்று தெரியாமலே எனக்கு பிடித்த படம் “அருவி” என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், நீங்கள் எனக்கு மெசேஜ் செய்யும் போது நான் நம்பவே இல்லை. அவர் கதை சொல்லும் பொது அவரை மலைத்து பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் பாதி சொல்லும் போது இப்படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்று உணர்ந்தேன். நான் எப்போதும் மீடியம் பட்ஜெட் படங்களை தான் நடித்து வந்துள்ளேன். ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாதியை கேட்டவுடன் பிரமித்துவிட்டேன். ஏனென்றால், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க அரசியல் களத்தில் உள்ளது. பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்று யோசனை வந்தாலும், இப்படத்தை நடித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். 4 வருடம் எனக்காக காத்திருந்து ஒரு கதை அமைத்ததற்கு பிரபுவிற்கு நன்றி. இப்படத்தை என் சில நண்பர்களுக்கு காட்டினேன், அவர்களிடம் இவர் மறைமுகமாக ஏதேனும் குறியீடு வைத்திருக்கிறாரா? என்று கேட்டேன். அவர்கள் அப்படி ஒன்றும் இல்லை, நேரடியாகவே சொல்லியிருக்கிறார் என்றார்கள். அது எந்தக் கட்சியாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன், எப்படி இருந்தாலும் இப்படம் ஒரு கலை வடிவத்தில் தானே உள்ளது என்றேன். அந்த அளவிற்கு அழுத்தமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரபு. பிரபு மற்றும் ஷெல்லியின் காம்பினேஷன் இப்படத்தை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியுள்ளது. அவர்கள் இருவரும் இணைந்து பல படங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேடுகொள்கிறேன். நூறு சாமி படம் மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகும். அப்படம் பிச்சைக்காரன் படத்தை விட பெரிய ஹிட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட் – ஆக இருந்த இந்த நிறுவனம் 2027 ஆம் ஆண்டு முதல் பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக மாற உள்ளது. அனைவரும் செப்டம்பர் 19 ஆம் தேதி சக்தித் திருமகன் படத்தை பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன், நன்றி என்றார்.
இயக்குனர் அருண் பிரபு பேசுகையில்,
இங்கு பேசிய அனைவரும் பெரிய வார்த்தைகள் கூறினார்கள், அவர்களுக்கு நன்றி. இப்படத்தை 19ம் தேதி திரையரங்கிற்கு வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். இது மக்கள் சார்ந்த ஒரு அரசியல் படம். நீங்கள் எந்த மாறியான எதிர்பார்ப்பில் வந்தாலும், இப்படம் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். விஜய் ஆண்டனி சார் நடித்த மற்ற படங்களை இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மாறுபட்டு இருக்கும்.
நடிகர் அஜய் தீஷன் பேசுகையில்,
சிறு வயதிலிருந்து விஜய் ஆண்டனி சாரை பார்த்து வளரக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அப்படி இருக்க, அவரின் 25 வது படத்தின் மேடையில் நான் நிற்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. பொதுவாக நான் விஜய் ஆண்டனி சார் நடிக்கும் படங்களை பார்த்துவிடுவேன். அதே போல் சக்தித் திருமகன் படத்தை பார்த்துவிட்டு, “என்ன சார் பண்ணிருக்கீங்க” என்று கேட்டேன். அவர் ஒன்றும் புரியாமல் என்னை பார்தார், நான் நன்றாக உள்ளது என்கிறேனா? இல்லையா? என்று அவருக்கு புரியவில்லை. விஜய் ஆண்டனி மிகவும் சாதுவான ஒருவர், அவர் இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்றால் அதை என்னால் நம்பவே முடியவில்லை. அருண் பிரபு சாருக்கு நான் மிகப்பெரிய ரசிகன், அருவி படத்தை நான் பள்ளியில் படிக்கும் போது பார்த்தேன், வாழ் படத்தை சென்ற வருடம் பார்த்தேன். இரண்டு படங்களும் என்னை ஏதோ செய்துவிட்டது. அவர் விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்சியாக உள்ளது. விஜய் ஆண்டனி சாரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், நான் இந்த துறைக்கு புதிது, 5 வருடங்களாக தான் திரைத்துறையில் இருக்கிறேன். சாருடன் இணைந்து பணியாற்றி, உதவி இயக்குனராக பணிபுரிந்து, இப்போது நடிகராகியுள்ளேன். ஆனால், இந்த துறையில் பலரால் சாதிக்க முடியாமலும், இயக்கிய படங்களை வெளியிட முடியாமலும், அதை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியாமலும் தவிக்கும் கஷ்டத்தை சமீபமாக தான் புரிந்துக் கொண்டேன். ஆனால், அதை தனது 25 படங்களுக்கும் சரியாக செய்து வரும் விஜய் ஆண்டனி அவர்களை பார்கும் போது பிரம்மிப்பாக உள்ளது. அவர் ஒரு படத்தை பொருளாக பார்க்காமல், குழந்தையாக பார்ப்பார், அதை சுமக்கும் இயக்குனரை தாயாக பார்ப்பார். அப்படிபட்ட ஒரு தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து இன்னும் பல படங்களில் நான் பணியாற்ற வேண்டுமென விரும்புகிறேன். சக்தித் திருமகன் சிறப்பாக வந்துள்ளது, இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும், நன்றி என்றார்.
கதாநாயகி திருப்தி பேசுகையில்,
நான் சென்னை வரும்போது ஒரு வீடு போன்ற உணர்வு கிடைக்கும் இப்போதும் அப்படி தான். சக்தித் திருமகன் என்னுடைய முதல் படம், என்னை நம்பிய விஜய் ஆண்டனி சார் மற்றும் அருண் பிரபு சாருக்கு நன்றி. மருது பாடல் சிறப்பாக வந்துள்ளது, இனி வரும் காலங்களில் மருது பாடல் தான் என்னுடைய ரிங்டோன். இன்னும் பல படங்களில் நடிக்க வாய்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி என்றார். நடிகை ரியா பேசுகையில், இப்படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இப்படம் வெற்றியடைய வேண்டுமென்று வேண்டுகிறேன் என்றார்.
நடிகை ரினி பேசுகையில்,
நான் இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் நடித்துள்ளேன். தனது 25 வது படத்தில் நடிக்க வாய்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. அருண் சாரின் அருவி படம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க செய்தது. அவரின் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். இயக்குனர் சசி பேசுகையில், சக்தித் திருமகன் படத்தின் மூன்று ட்ரெய்லரில் ஒன்றரை நிமிடம் கழித்து தான் ஹீரோ விஜய் ஆண்டனி வருகிறார். அந்த துணிச்சல் யாருக்கும் எளிதில் வந்துவிடாது, அதுவே இப்படம் வழக்கமான ஒரு பொலிட்டிகள் திரில்லர் படம் இல்லை என்பதை உணர்த்துகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை என் மனைவி உடன் பார்த்தேன், அவரின் ரியாக்ஷனை கவனித்தேன் பின்னர் அவர் ட்ரெய்லர் முடிந்தபின் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். நான் எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவர் யார் இயக்குனர் என்றார்? நான் அருவி, வாழ் படத்தின் இயக்குனர் அருண் என்றேன். அவர் “அதான்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அங்கு தான் உங்களின் வெற்றி உள்ளது. நீங்கள் நிச்சயம் சாதரண இயக்குனர் இல்லை. நான் இப்படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறேன். ட்ரெய்லரில் கிடைத்த அதே உணர்வு படத்திலும் இருக்கும் என்று நம்புகிறேன். இப்படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றார்.
இயக்குனர் சுசீந்திரன் பேசுகையில்,
தனஞ்செயன் சார் சொன்னது போல் அனைத்து வேலையையும் எடுத்து செய்பவர் விஜய் ஆண்டனி, நிறைய புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரும் அவரை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். நல்ல கதை இருந்தால் விஜய் ஆண்டனியின் அலுவலகம் எப்போதும் திறந்து இருக்கும். அவருக்கு எல்லா வகையான வெற்றியும் கிடைக்க வேண்டுமென நான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன் நன்றி என்றார்.
இயக்குனர் மித்ரன் ஜவஹர் பேசுகையில்,
விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து நான் 15 ஆண்டுகளுக்கு முன் உத்தம புத்திரன் படத்தில் பணியாற்றியுளேன். அப்போது எப்படி இருந்தாரோ அதே போல் தான் அவர் இப்பொழுதும் இருக்கிறார், சினிமாவில் அப்படி இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அவரின் 25 படங்களும் மிகவும் தனித்துவமாக இருக்கும். கதை படத்தின் டைடில் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். தமிழ் சினிமாவில் இருக்கும் பல முக்கியமான படங்களை கொண்டாடக் கூடியவர் விஜய் ஆண்டனி அதனால் தான் அவரின் படங்களும் கொண்டாடும் வகையில் அமைந்து வருகிறது. 25 படங்கள் என்பது மிகவும் கம்மி, நீங்கள் இன்னும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும், வாழ்த்துக்கள் என்றார்.
பாடகர் வாகீசன் பேசுகையில்,
நான் இப்படத்தின் பாடலை ரெக்கார்ட் செய்யும் போது, என் அண்ணனுடன் என்ன உணர்வு கிடைத்ததோ, அதே மாதிரியான உணர்வு தான் விஜய் ஆண்டனி சாரிடம் இருந்தும் கிடைத்தது. நான் சரியாக பாடினாலோ, அதில் பிழை இருந்தாலோ அது அவரின் முகத்தில் தெரியாது. ஆனால், எது தேவையோ அதை எடுத்துக் கொள்வார். எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்ததற்கு விஜய் ஆண்டனி அண்ணாவுக்கு மிக்க நன்றி என்றார்.
இயக்குனர் பிரதீப் பேசும்போது,
முதல் படத்தில் இருந்தே விஜய் ஆண்டனி சாரை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த படமும் பிளாக் பஸ்டர் தான். அவரிடம் ஏன் நீங்கள் தூங்கவே மாட்டேன் என்கிறீர்கள்? என்று கேட்டேன். தயாரிப்பாளராக இருந்து பார் என்று கூறினார். இயக்குனர் ஆனந்த் பேசும்போது, எனக்கு பிடித்த துறையில் இயக்குனராக உருவாகி இருப்பதற்கு காரணம் விஜய் ஆண்டனி சார் தான். அவர் எப்போதுமே தெரியாது என்று தான் கூறுவார். ஆனால், எல்லா விஷயத்தையும் மிகுந்த நம்பிக்கையாக செய்வார். அவரை இயக்கிய இயக்குனர்கள் இந்த மேடையில் குறைவாகவே வந்திருக்கிறார்கள். பலரால் வர இயலவில்லை, 50வது படத்திற்கும் நாங்கள் அனைவரும் வருவோம் என்றார்.
இயக்குனர் ஆண்ட்ரோ பேசும்போது,
விஜய் ஆண்டனியின் கல்லூரியின் வகுப்பு தோழன் நான். பிச்சைக்காரன் படத்தின் சமயத்தில் விபத்தை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்த அவருடைய சக்தியை கண்டு வியந்தேன். 4 நாட்கள் கோமாவில் இருந்து மருத்துவர் பைக் ஓட்டக் கூடாது என்று கூறியும், தன்னம்பிக்கையோடு பைக் ஓட்டினார். அதன் பிறகு சுக்ரன் படத்திற்காக இசையமைத்தார். அதன்பிறகு நடித்தார், இயக்கினார் அடுத்தடுத்து ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் ராஜா என்றார்.
இயக்குனர் அனந்த கிருஷ்ணன் பேசும்போது,
படத்தைப் பற்றி அனைவரும் நன்றாக இருக்கிறது என்று கூறும்போதும், சென்சார் பிரச்னை என்று ஒருசில பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் மிகவும் தோய்ந்து போயிருந்தேன். அப்போது, விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து ஒரு போன் வந்தது. படத்தைப் பார்த்து நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். சாருடைய இடத்தில் இருந்து எந்த பெரிய நடிகர்களும் ஒரு படத்தைப் பார்த்து இயக்குனரை அழைத்துப் பாராட்டுவார்களோ என்று தெரியாது. ஆனால், அன்று முதல் இன்று வரை அனைவரையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார். கொரானா காலத்தில் கோடியில் ஒருவன் படத்தின் சமயத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல், இருப்பினும் விரைவாக படத்தை முடித்து அது வெற்றிப் பெறுவதற்கான அனைத்தையும் செய்தார்.
இயக்குனர் ஜோஷ்வா பேசும்போது,
என்னுடைய அப்பாவுடன் நான் பார்த்த கடைசி படம் சுக்ரன். 25 படங்கள் நடித்தும் இதுவரை ரசிகர் மன்றமே இல்லாத ஒரு நடிகர் என்றால் அவர் விஜய் ஆண்டனி சார் தான். இயக்குனர் விநாயக் பேசும்போது, என்னுடைய ரோமியோவைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிறது, லவ் யூ சார். மனிதர்களை மனிதர்களாகவே நடத்துவது விஜய் ஆண்டனி சார். ஒரு மனிதனாக இருப்பது எப்படி என்று சாரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். அவர் என்னுடைய கதாநாயகன். அருண் படத்தில் நடிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். அருவி படம் போல சக்தி திருமகன் படத்திலும் நிச்சயம் ஏதாவது சொல்வீர்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அருண், விஜய் ஆண்டனி சார் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் பெப்பின் பேசும்போது,
டிரைலர் மிகவும் நன்றாக இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அருவி படத்தை சென்னையில் உள்ள பல திரையரங்கிலும் பார்த்தேன், எனக்கு மிகவும் பிடித்த படம். அதேபோல், சக்தி திருமகன் படத்தையும் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்கிலும் பார்ப்பேன் என்றார். எழுத்தாளர் பருதி பேசும்போது, சாருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்த பிறகு, அவர் மாபெரும் அப்பாவி என்பதை உணர்ந்தேன். வெளியே பார்க்கும் போது தெரியாது, நெருங்கி பழகும் போது, சிறு சிறு விஷயங்களுக்கும் ஆச்சரியமடைவார். உதாரணத்திற்கு, பூக்கி பட பூஜையில் தேங்காய்க்குள் படத்தின் பெயரை எழுதி போட்டு உடைத்தோம். அதைப் பார்த்து ஏம்பா தேங்காய்க்குள் இருந்து ஏதோ விழுகிறது என்று கூறினார். பின்பு அதை எடுத்து இது தான் பூக்கி என்று அனைவரிடமும் காட்டினார். அப்போது நீங்கள் தான் பூக்கி என்று கூற வேண்டும் போல இருந்தது. மேலும், நான் மேஜை மீது காலை தூக்கி மேலே வைத்திருக்கும் போது கூட பெரிதாக கண்டுகொள்ளமாட்டார். பூக்கி பூஜையின் போது 10 நிமிடம் நேரம் இருந்தது, அந்த நேரத்தில் கதையை கூறுங்கள் என்று கேட்டார். எப்போதும் வேலை செய்துக் கொண்டேயிருப்பார். இந்த விழாவிற்கு வரும்போது கூட ஒரு கதையை கொடுத்துவிட்டு தான் வந்தேன். வேலை செய்வது அவருக்கு போதையான விஷயம், அனைவருக்கும் அந்த போதையை ஏற்றி விடுவார். அவரிடம் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்றார். அருணை அருவி படத்தின் பிரிமியர் காட்சியில் தான் முதன்முதலாக சந்தித்தேன். மிகவும் அற்புதமான அரசியல் படத்தை கொடுத்திருக்கிறீர்கள் அருண். சாருடைய பின்னணி இசையை கேட்டிருக்கிறேன், தெறிக்க விடும்படியாக இருந்தது என்றார்.
நடிகர் செல் முருகன் பேசும்போது,
விஜய் ஆண்டனி சாரின் 25வது படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார், அவருக்கு நன்றி. அவருடைய கடின உழைப்பு பற்றி தனஞ்செயன் சார் கூறினார். இந்த படத்தில் அதை நான் நேரிலேயே பார்த்தேன். அவர் எப்போதும் லேப்டாப் வைத்திருப்பார். கிளௌடில் வேலை செய்கிறோம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு அது புரியாது. இந்த படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே மார்கன் படம் வெளியாகிவிட்டது. இப்போது லாயர் படமும் முடிந்துவிட்டது. அடுத்து நூறு சாமி படத்தையும் அறிவித்துவிட்டார்கள். அடுத்த படமும் தயாராகிவிட்டது. அவர் வேலை செய்வதைப் பார்க்கும்போது நமக்கு குற்ற உணர்வாக இருக்கும். ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு அடுத்து அதிகமாக கணிணியை உபயோகிப்பது விஜய் ஆண்டனி சார் தான். இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரம் என்று கூறினார். ஷெல்லி சாரின் ஒளிப்பதிவைப் பற்றி அனைவரும் பேசுவார்கள். ஷெல்லி சாருக்கும் அருண் சாருக்கும் இருக்கும் பிணைப்பைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். இருவரும் மொழிகள் இல்லாமல் பார்வையாலேயே விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றார்.
நடிகை ராதா பேசுகையில்,
அனைவருக்கும் வணக்கம், பத்திரிகையாளர்கள் இல்லாமல் நாங்கள் இல்லை. இந்த சினிமா துறையும் இல்லை. இந்த விழாவின் நாயகன் விஜய் ஆண்டனி சார், “சக்தித் திருமகன்” என்ற டைட்டிலுக்கு பொருத்தமான ஒருவர் இவர். ஊரில் இருந்து சென்னைக்கு வந்து, இசையமைபாளராக இருந்து, நடிகராக மாறி தற்போது தயாரிப்பாளர்க இருப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். இதில் பலரின் வாழ்க்கை அடங்கியுள்ளது. பலரின் வாழ்கையில் நீங்கள் ஒளியேற்றி வைத்துள்ளீர்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். முன்பெல்லாம், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் படங்களை தான் விரும்பி பார்போம், அவர்களின் படங்கள் அனைத்துக் சிறப்பாக இருக்கும். அதே போல் விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் நிறுவனமும் இப்போது படங்களை தயாரித்து வருகிறது. பல வெற்றிப்படங்களை தொடர்ந்து “சக்தித் திருமகன்” படமும் பிரம்மாண்ட வெற்றியடைய வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன், நன்றி என்றார்.
தயாரிப்பாளர் மனோஜ் பெனோ பேசுகையில்,
விஜய் ஆண்டனியின் நண்பராக நான் பல மேடைகளை பார்த்துவிட்டேன், பல விஷயங்களை பகிர்துள்ளேன், அதனால் நான் பேசிய விஷயங்களை மீண்டும் மீண்டும் பேச விரும்பவில்லை. அதே சமயம், நான் எனக்கு மட்டும் தெரியும் என்று நினைத்த ஒரு விஷயம் இன்று இங்கு வருகை தந்திருக்கும் பலருக்கு தெரிந்துள்ளது. அதை தான் இங்கு பலரும் பேசினார்கள். இதை வைத்தே விஜய் ஆண்டனி அவர்கள் எவ்வளவு நண்பர்களை சம்பாதித்து வைத்துள்ளார் என்பதும் அவர் எந்த உயரத்தை அடைத்திருக்கிறார் என்பதும் தெரிகிறது. நான் மருத்துவராக இருந்தாலும் சினிமா துறைக்கு வருவதற்கு முதல் காரணம் விஜய் ஆண்டனி. அதே போல், சிறு வயதிலிருந்தே பொய் சொல்ல கூடாது, ஏமாற்ற கூடாது என்றெல்லாம் நமக்கு சொல்லி கொடுத்து வளர்பார்கள். அப்படி நேர்மையாக வளர்ந்த ஒருவர் தான் விஜய் ஆண்டனி. அதற்கு, விஜய் ஆண்டனி அவரின் மனைவி பாத்திமா மற்றும் அவரது தாயார் மூவருக்கும் பெரும் பங்கு உள்ளது. மேலும், விஜய் ஆண்டனி வேறு யாரையும் அவருக்கு போட்டியாக நினைப்பது கிடையாது, அவருக்கு அவர் தான் போட்டி என்று நினைப்பவர். அது தான் அவரின் வளர்ச்சிக்கு காரணம். விஜய் ஆண்டனியை நினைக்கும் போது பெருமையாக உள்ளது அவருக்கு வாழ்த்துகள் என்றார். நடிகர் சுனில் பேசுகையில், படத்தை பற்றி நான் பெரிதாக பேச மாட்டேன், அது ரகசியமாக இருக்கட்டும். 42 ஆண்டுகளுக்கு பின் நான் சென்னை வந்திருந்தேன், அப்போது சித்ரா லக்ஷ்மணன் சார் அவர்களுடன் ஒரு நேர்காணல் செய்திருந்தேன் அதை பார்த்துவிட்டு அருண் சார் என்னை அழைத்திருந்தார். நான் அமெரிக்காவில் இருக்கும் ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தேன், இப்போது 42 ஆண்டுகளுக்கு பின் கேமராவுக்கு முன் வந்திருக்கிறேன். இப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு தந்த அருண் பிரபு மற்றும் விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி என்றார்.
மாஸ்டர் கேசவ் ராஜ் பேசுகையில்,
இப்படத்தில் விஜய் ஆண்டனி சாரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் என்னை சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள். அருண் சார் மிகவும் பொறுமையாக பேசுவார், நான் அவரின் அருகில் சென்று தான் பேச வேண்டியிருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி என்றார்.
ஒரு வீட்டில் மர்மமான முறையில் குமரவேல் இறந்து கிடக்க அந்த வீட்டின் உரிமையாளரின் பேரனான குமரனை விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள்.அந்த விசாரணையில் குமரவேல் ஒரு சமூகப் போராளி என்றும் அதனால் அவருக்கு யாராவது சமூக விரோதிகள் நிறைய பேர் இருப்பார்கள் என்றும் காவல்துறை நினைக்கிறது அதை வைத்து அந்த விசாரணையை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.அவ்வாறு செல்லம் அந்த விசாரணையானது அந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களில் பார்வையில் ஒவ்வொரு கதையாக சொல்லப்படுகிறது.அந்த கதையில் முக்கியமாக குமரன் திரைப்படம் இயக்க முயற்சிப்பதும் அதற்கான ப்ரொடியூசர் தேடி கிடைக்காததால் தனது வீட்டை விட்டுக் கொடுக்கும்படி தாத்தாவிடம் கேட்பதும் அந்த தாத்தா அந்த சொத்தை சரிசமமாக பிரித்து அதில் ஒரு பங்கை தனது வளர்ப்பு மகனாக நினைக்கும் குமரவேலுக்கும் சேர்த்து எழுதி வைத்திருக்கிறார் இந்த கோணத்தில் பார்க்கும்போது குமரன் தான் அந்த கொலையை செய்திருப்பார் என்று நினைக்கிறார்கள் காவல்துறையினர். இப்படி சீரியஸாக செல்ல வேண்டிய கதையை ஒரு ஜாலியான கதையாக எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். இந்த படத்தின் நாயகனாக சின்னத்திரை இருந்து பெரிய திரை காரிமுகம் ஆகிறார் குமரன் தாத்தாவாக ஜி எம் குமார் நாயகியாக பாயல் ராதாகிருஷ்ணன் போராளியாக குமரவேல் இப்படி பலரும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் தங்கள் முதலிய பதித்திருக்க இயக்குனரோ தனது திரைக்கதையில் சற்றே கோட்டையை விட்டு இருக்கிறார்.என்றால் இதை ஒரு முழு நீள காமெடி திரைப்படமாக எடுக்க முயற்சித்து தடுமாறி இருக்கிறார் ஏனென்றால் படத்தின் கிளைமாக்ஸ் அந்த அளவுக்கு சொதப்பலாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.படத்தின் இரண்டு பலங்கள் ஒளிப்பதிவு மற்றும் இசை
குமார சம்பவம் படம் பார்க்கும் நமக்கும் சற்றே சம்பவம் தான்
யோலோ என்ன யூடியூப் சேனல் வைத்து அதில் பேய் வேடம் போட்டு பிராங்க் வீடியோக்களை நடத்துபவர் நாயகன்,இவருக்கும் நாயகிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள் ஆனால் அது நாயகி மறுக்க மற்றவர்கள் அதை விசாரிக்கும் போது இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும் அவர்கள் இருவரும் தேனிலவுக்கு வெளிநாட்டிற்கு சென்று வந்தார்கள் என்று இருபது பாஸ்போர்ட்டிலும் ஆதாரம் இருப்பது போல் காட்டுகிறார்கள் இது உண்மையா இல்லையா என நாயகனும் நாயகியும் குழம்ப தங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்புகிறார்கள் ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியை நான் காதலிக்க அவர்களுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதுதான் கதை இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் இயக்குனர் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல முயற்சிக்கிறார் ஒரு வித்தியாசமான கதைக்களமாக ஆரம்பித்து அதில் பேய் கதை என்று ஒன்றை கொண்டு வந்து அமானுஷ்ய சக்தி என்று ஒன்றை கொண்டு வந்து அதை சரிவர கையாளாமல் சற்றே குழப்பமாகத்தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தில் காமெடி இருந்தாலும் அங்கங்கே நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் ஆனால் அது முடியாமல் தான் போகிறது இந்த இந்த திரைப்படத்தை அந்த பிராங்க் ஸ்டைலிலேயே கொண்டு இருந்தால் நிச்சயம் திரைக்கதை காமெடியாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் இதற்குள் அமானுஷ்ய சக்தியை கொண்டு வந்தது சொதப்பலாக தான் உள்ளது
காளகம்மாய் பட்டி என்னும் கிராமத்தில் ஒரு எரிகல் விழுந்து இரண்டாகப் பிரிந்து இரண்டு பக்கமும் விழுகிறது. அந்த ஊரில் உள்ள மக்கள் தங்கள் ஊர் பக்கம் உள்ள கல்லை இருவரும் தனித்தனியாக கடவுளாக கும்பிடுகிறார்கள். அதுவரை ஒற்றுமையாக இருந்த அந்த ஊர் பிரிகிறது. அவ்வாறு அந்த ஊர் காளப்பட்டி என்றும் கம்மாபட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
காலப்போக்கில் அவர்களது அந்த பிரிவு மிகப்பெரிய சண்டையாக மாறுகிறது பல வருடங்கள் கழித்து அந்த ஊரில் உள்ள மக்களை ஒன்று சேர்க்க போராடும் மனிதராக காளி வெங்கட் அந்தப் போராட்டத்தில் அவர் தோல்வி அடைந்து ஒரு கட்டத்தில் மரணம் அடைகிறார். அவரது உடலை தூக்க அந்த ஊர் மக்கள் முயற்சிக்கும் பொழுது முடியாமல் போக ,படத்தின் நாயகன் அர்ஜுன் தாஸ் தன்னந்தனியாக அவரை தூக்கிக் கொண்டு செல்கிறார் மேலும் அவரது உடலில் இருந்து காற்று வெளியேற அவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்புகிறார் அர்ஜுன் தாஸ் .
ஆனால் அந்த ஊரில் உள்ள ஒரு வயதான அம்மாவோ அது மனித உடலில் உள்ள வாயு அது இறந்த பிறகு வெளியேறும் என்று கூற, ஆனாலும் மக்கள் அனைவரும் அந்த காளிவெங்கட்டின் மேல் சாமி வந்திருப்பதாக நம்புகிறார்கள்.அந்த புரளியை வைத்துக்கொண்டு அது உண்மையா இல்லையா என்று புரியாமல் குழம்ப ஆனாலும் அந்த உடம்பை தூக்க முடியாமல் இருக்க அர்ஜுன் தாஸ் மட்டும் தூக்க, அர்ஜுன் தாஸ் தான் அந்த சாமியின் மறு அவதாரம் என்று நம்பி அவர் மட்டும்தான் காளிவெங்கட்டின் தூக்கி அடக்கம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். இதில் அர்ஜுன் தாஸ் அவரது குலத்தொழிலாக மாட்டிற்கு லாடம் மற்றும் வேலையை செய்து ஒதுக்கப்பட்டவராக இருக்கிறார்,இப்போது ஊரே அவரை கடவுளாக பார்க்கிறது இந்த சூழ்நிலையில் காளிவெங்கட்டின் உடலை அடக்கம் செய்கிறார்களா இரண்டு ஊர் மக்களும் ஒன்று சேர்கிறார்களா என்பது தான் படத்தின் திரைக்கதை.
இயக்குனர் விஷால் வெங்கட்டிற்கு இது இரண்டாம் திரைப்படம் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து ஒரு வித்தியாசமான கதைகளத்தில், காலகட்டத்தில் நடப்பது போல் காட்டியிருக்கிறார். தனது திரைக்கதையை தெளிவாக எழுதி இருக்கிறார், படம் ஆரம்பித்து ரொம்ப நேரத்திற்கு கதை ஒரே இடத்தில் இருப்பது போல் இருந்தாலும் இடைவேளைக்கு சற்று முன் ஒரு விறுவிறுப்பாக வித்தியாசமான கதைகளை காட்டி நிமிர வைக்கிறார் இயக்குனர், அதன் பிறகு அந்த போக்கிலேயே படமும் செல்கிறது அது படத்திற்கு நிச்சயம் போரடிக்காமல் செல்ல உதவுகிறது.
படத்தின் மிகப்பெரிய பலம் காலி வெங்கட், அர்ஜுன் தாசின் நடிப்பு காளி வெங்கட் பிணமாக அவ்வபோது தனது உடலில் இருந்தும் காற்றுக்கு அந்த உடல் அசைவை கொடுப்பதும் அந்த முகபாவணையை சிறப்பாக வைத்துக் கொண்டு பிணமாக நடிப்பதும் ரசிக்கும் படியாகவும் காமெடியாக உள்ளது.
அர்ஜுன் தாசின் நடிப்பு அளவாக அந்த கதாபாத்திரத்தில் எண்ண தேவையோ எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது மேலும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வரும் கதாபாத்திரங்களை சிறப்புடன் செய்து இருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை இயக்குனர் விஷால் வெங்கட் ஒரு தெளிவான திரைக்கதையில் இந்த பாம் திரைப்படத்தை இயக்கிஇருக்கிறார்.
பாம் திரைப்படம் கடவுள் நம்பிக்கை இருப்பவனுக்கு கடவுள் இருக்கு, இல்லாதவனுக்கு இல்லை என்பதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக எடுத்திருக்கிறார்
அர்ஜுன் தாஸ் 2012ல் தமிழில் பெருமான் என்னும் திரைப்படத்தின் அறிமுகமாகிறார் .இவரது குரலைக் கொண்டு இவரது நடிப்பு நிச்சயம் பிற்காலத்தில் பேசப்படும் என்று இந்த திரைப்படத்தின் மூலம் நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப அந்தகாரம் என்னும் படத்தில் ஒரு கதாபாத்திரம் நடிக்கிறார். அதன் பிறகு சிறிது காலம் ஒரு ரேடியோ எஃப் எம் இல் டிரைவ் என்னும் வானொலி நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார்.
இவ்வாறு சென்று கொண்டிருக்க 2017ல் ஆக்சிஜன் என்னும் தெலுங்கு படத்தில் கோபிசந்த் சகோதரராக நடிக்கிறார். இந்த சூழ்நிலையில் 2019 லோகேஷ் கனகராஜன் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியில் வந்த கைதி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று வில்லனின் வலது கரமாகநடித்திருக்கிறார். இந்த படத்தின் அன்பு என்னும் கதாபாத்திரம் இவரது குரலால் மிகவும் பெரிதாக பேசப்படுகிறது. இந்த படத்தின் திரைக்கதையின் வெற்றிக்கு இவரது குரலும் இவரது நடிப்பும் உடல் மொழியும் ஒரு முக்கியமான பங்காற்றுகிறது.
அதன் விளைவாக லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக விஜயை வைத்து இயக்கிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதை பாத்திரத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறார் .அந்த படத்திலும் தாஸ் என்னும் கேரக்டர் மிகவும் பேசப்படுகிறது .அதன் பிறகு விக்ரம் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார் அந்த திரைப்படமும் லோகேஷ் கனகராஜ்அவர்கள் இயக்கப்படுகிறது ,அவரால் மீண்டும் நடிக்க வைக்கப்படுகிறார்.
அதேபோல் புட்டபொம்மா என்னும் திரைப்படத்தில் 2023 மீண்டும் தெலுங்கு மொழியில் கால் பதிக்கிறார். அதே நேரத்தில் தமிழில் அநீதி திரைப்படத்தில் ஒரு மிகச்சிறந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அர்ஜுன் தாஸ் அதன் பிறகு.
2024 இல் போர் என்னும் திரைப்படத்தில் நடித்து அந்த படமும் அவரது நடிப்பால் பேசப்படுகிறது இந்த சூழ்நிலையில் பல திரைப்படங்களில் வில்லனாகவே நடித்து வந்த அர்ஜுன் தாஸ் அவர்களை ரசவாதி என்னும் திரைப்படத்தில் காதல் காட்சிகளில் நடிக்க வைக்கிறார்கள் .அந்த காட்சிகளில் அவரது குரலுக்கும் எதிர்மறையாக என்று நினைத்து பார்த்தால், என்னால் செய்ய முடியும், அந்த ரொமான்ஸ் பண்ண முடியும் என்று அதிலும் நிமிர்ந்து நிற்கிறார் அர்ஜுன் தாஸ்.தன்னால் காதல் கட்சியும் பண்ண முடியும் என்பது ரசவாதி படத்தின் மூலம் நிரூபிக்கப்படுகிறது.
இப்படி சூழ்நிலையில் குட் பேட் அக்லி யில் இரட்டை கதாபாத்திரத்தில், அஜித்துக்கு வில்லனாக ஒரு மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து நடிக்க அந்த திரைப்படமும் அந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரமும் மிகவும் பேசப்படுகிறார் அந்த இரண்டு கதாபாத்திரம் இரண்டு பேர் உடல் மொழிகளை கொடுத்து அந்த நடனம் ஒரு காமெடி கலந்த அந்த வில்லத்தனம் நிச்சயம் அவரது நடிப்பில் ஒரு மைல்கல்லாக அமைந்தது .
இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் பாம் என்னும் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான ஒரு கதையின் நாயகன் என்று சொல்ல முடியாமல் கதைக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரமாக ஏற்று நடித்திருப்பது மிகப்பெரிய ஒரு நடிப்பை அவருக்கு தந்திருக்கிறது. அந்த திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் காலி வெங்கட்டும் அந்த கிராமத்தில் மாட்டிற்கு லாடம் கட்டும் கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாசும் அவரது நடிப்பு நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார்
அர்ஜுன் தாஸ் தனது குரல் வளர்த்தால் தனித்துவமான குரலால் தனது கதாபாத்திரங்களை மேலும் வலுப்படுத்தி தனக்கான ஒரு ஆயுதமாக அதை பயன்படுத்தி நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்
இனிவரும் காலங்களிலும் தனது ஆழமான நடிப்பினாலும் தன் குரல் வளத்தினாலும் நிச்சயமாக ரசிகர் மனதில் மேலும் மேலும் இடம் பிடித்து ஒரு முன்னணி நாயகனாக வந்து நிற்பார் என்பது நமக்கு சந்தேகம் இல்லை
மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமலேயே கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு ஒரு வணிக பரப்பை எட்டி உள்ளன.அந்த வகையிலான வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்கோடு’.
ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை;இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள்.ஆண் அழகை குணமாகப் பார்க்கிறான். பெண்ணோ குணத்தை அழகாகப் பார்க்கிறாள்.இப்படி ஆண், பெண் இடையே பார்வையில் எண்ணங்களில் வேறுபாடு உண்டு. இப்படி பெண்களுக்கு என்று பிரத்தியேகமான சில எண்ணங்கள் உள்ளன.அவர்களுக்கு என்று குறியீடுகள், சங்கேதங்கள், சமிக்ஞைகள் உள்ளன. அவற்றை அவர்களின் உலகத்தில் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் உருவாகி இருப்பது தான் இந்த ‘பெண்கோடு’
மலையாளப் படக்குழுவினர் உருவாக்கி உள்ள இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பரபரப்பான க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை அருண் ராஜ் பூத்தணல் எழுதி இயக்கியுள்ளார்.
ஆஸ்த்திரியா மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் JNKL கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரவிதா ஆர் பிரசன்னா, ஜெய் நித்ய காசி லட்சுமி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஜீத்து ஜோசப்பின் லைஃப் ஆஃப் ஜோசக்குட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அருண் சாக்கோவும், இமை , மதர், வின்சென்ட் செல்வா இயக்கிய கம்மாட்டிக்களி திரைப்படத்தில் அறிமுகமான சரீஷ் தேவும் இப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். லட்சுமி சாந்தா மற்றும் சோனா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர். இவர்களைத் தவிர, ஓச்சாயி பட தயாரிப்பாளரும் நடிகருமான திரவிய பாண்டியன் அவர்கள்,கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவியா, எபின் வின்சென்ட், ஷம்ஹூன், ஜார்ஜ் தெங்கனாந்தரத்தில், ஜோஸ் நடத்தி பறம்பில், பேபி அதிதி , சந்தீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அருண் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் பாண்டியன் இசையமைத்துள்ளார். அர்ஜுன் ஹரீந்திரநாத் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குநராக உன்னி கோவளமும், தயாரிப்பு மேலாளராக எபின் வின்சென்ட்டும் பணியாற்றியுள்ளனர்.
வயநாடு, ஊட்டி, திருவனந்தபுரம் ஆகிய கேரளாவின் பசுமை சூழ்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.படப்பிடிப்பு முடிந்து மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக்கை ஜித்தன் ரமேஷ் வெளியிட்டார். அப்போது படக்குழுவினரைப் பற்றி விசாரித்தறிந்ததுடன் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் .
நவம்பர் முதல் வாரத்தில் JNKL ரிலீஸ் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும்.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதுசூதன் ராவ், ‘நிழல்கள்’ ரவி , ‘தலைவாசல்’ விஜய், சாய் தீனா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த ‘காடுவெட்டி’ குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.
வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் இப்படத்தை உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடுகிறார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வ. கௌதமன், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வசனகர்த்தா பாலமுரளி வர்மா பேசுகையில், ”ஒரு திரைப்படம் வெள்ளை தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது. இந்த திரைப்படத்தின் பணிகளை தொடங்கிய போது பல கேள்விகளை எதிர் கொண்டோம். அதில் ஒன்று எதற்காக இந்த வேலை? ஏனெனில் நாம் இப்போது நரேட்டிவ் சொசைட்டியில் (Narrative Society) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு ஏற்கனவே என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, எதை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறோமோ, அதன் அடிப்படையில் தான் நாம் எல்லாவற்றையும் அணுகுகிறோம். இன்னும் சொல்லப்போனால் காதுகளில் வழியாகத்தான் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறோம். அதன் அடிப்படையில் தான் இந்த இனம் பிரச்சாரப் போரில் வீழ்த்தப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழர் தலைவர் உருவாகி வரும் போதெல்லாம் மிக எளிதாக அவர்களை பல்வேறு அவதூறுகளால் வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி வீழ்த்தப்பட்ட உண்மையான மக்கள் தலைவர் ஒருவர் தான் அண்ணன் காடுவெட்டி குரு. அவர் வீழ்ந்தாரா என்றால் வீழவில்லை. ஆனால் அவரைப் பற்றி இன்றைக்கு எல்லோர் மனதிலும் எம்மாதிரியான பிம்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தால்…! அதை திருத்தி உண்மையான காடுவெட்டி குரு யார், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பவர் எப்படி செயல்பட வேண்டும், தான் நேசித்த மக்களுக்காக ஒரு தலைவன் எப்படி இயங்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய கடமை ஒரு படைப்பாளியாக எமக்கு இருக்கிறது.
நாங்கள் மக்கள் தொலைக்காட்சிக்காக ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றையும், மாவீரன் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றையும் படைப்பாக உருவாக்கிய போது சென்னையில் உள்ள அலுவலகத்தில் மருத்துவர் ஐயா ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு ஆகியோரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு அவரைப் பற்றி கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பத்திற்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஒரு குழந்தை போன்றவர். நகைச்சுவை உணர்வு கொண்டவரும் கூட. இவரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை பற்றி நாங்கள் அந்த தருணத்திலேயே சிந்தித்தோம். ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் மக்களுக்காக எப்படி செயல்பட வேண்டும் என்பது மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சுரங்கம் தோண்டுவதற்கான பணிகளை திட்டமிட்ட போது அதனை எதிர்த்து தீரமுடன் போராடி, வரவிடாமல் தடுத்தவர் காடுவெட்டி குரு. அரியலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்துவேன் என்று பேசியவர் காடுவெட்டி குரு. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் நலனுக்காக செயல்படவில்லை என்று அந்த அலுவலகத்தை பூட்டு போட்டு சாவியை எடுத்துச் சென்றவர் காடுவெட்டி குரு. அழகாபுரத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலையை அமைத்தார். ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் மாலை போட்டு அழைத்து சென்றார். வயல்வெளிகளில் மின் கோபுரம் அமைக்கப்பட்ட போது அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகளுக்காக எதிர்த்துப் போராடினார். இப்படி மக்களுக்காக வாழ்ந்த தலைவர் காடுவெட்டி குரு. மக்களுக்காக வாழ்ந்த காடுவெட்டி குருவின் இந்த முகம் மறைக்கப்பட்டிருக்கிறது. இதனை திட்டமிட்டு மறைத்தார்கள். 37 ஆண்டுகள் அரசியல் களத்தில் தீவிரமாக பணியாற்றிய அவர் தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. சேர்த்துக் கொள்ளவில்லை. தன்னிடம் உள்ளதை விசுவாசம் உள்ள தலைமைக்கும், மக்களுக்கும் செலவழித்தார். மறைந்த புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் பணத்தால் விலைக்கு வாங்க முடியாத தலைவராகவும் திகழ்ந்தார். இவ்வளவு நேர்மையான ஒரு தலைவரின் அசலான பிம்பம் மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. திட்டமிட்டு அவர் மீது வேறொரு பிம்பத்தை உருவாக்கினார்கள்.
இன்றைக்கு நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு நுரையீரல் தொற்று நோய்கள் அதிகம். சிறுநீரக செயலிழப்புகளும் அதிகம். இதற்குக் காரணம் அரியலூரில் இயங்கி வரும் சிமெண்ட் ஆலைகள். இதனால் அப்பகுதியில் காற்று இயல்பை விட அளவுக்கு அதிகமாக மாசுபட்டிருக்கிறது. அங்குள்ள நீரில் பாதரசமும், செலினியமும் இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. அனுமதிக்கப்பட்ட அளவைவிட எட்டு மடங்கு அதிகமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடு கலந்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே தெரிவிக்கிறது. நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் இப்படி உடல் உறுப்பு பாதிப்புகளுடன் தான் அப்பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த சூழலில் தான் காடுவெட்டி குரு அவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்ளாமல் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தார். தினமும் மக்கள் அங்கு மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து யாராவது போராடினார்களா? இதை எதிர்த்து போராடியவர் தான் காடுவெட்டி குரு. இதை படைப்பின் மூலமாக சொல்ல வேண்டிய கடமை எங்களுக்கு இருந்தது. அதனால் தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். அதே தருணத்தில் இந்த படம் கருத்துகளை மட்டுமே பேசுகிற படமாக இல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாகவும் உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் இளவரசு பேசுகையில், ”விருத்தாசலம் என்பதை அம்மண்ணின் மக்கள் ‘விருதாசலம்’ என்று பேசுவதை தங்கர் பச்சான் மூலம் தான் முதன்முதலில் கேட்டேன். தங்கர் பச்சான் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்தவர் தான் கௌதமன். இந்தத் திரைப்படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பிற்காக ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சென்றபோது அங்கு ‘கடலை ‘விவசாயம் இன்னும் இருப்பதை பார்த்து மகிழ்ந்தேன். இயக்குநர் கௌதமனின் உண்மையான உழைப்பும், அவருடைய ஆத்மார்த்தமான ஈடுபாடும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு ஊடகங்களும், ரசிகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ”செப்டம்பர் 19ம் தேதி அன்று காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக வெளியிடுகிறோம். இந்தப் படத்தின் தயாரிப்பில் பங்களிப்பு செய்ய ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால், காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர்.
கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களை பார்வையிட்டு வருகிறேன். அதில் இடம்பெறும் கமெண்ட்டுகள் மோசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனிந்த சாதிய வன்மம் என புரியவில்லை,” என்றார்.
தயாரிப்பாளர் குறளமுதன் பேசுகையில், ”நான் அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர். எனக்கும், சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குநர் கௌதமன் என்னை சந்தித்து சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த மாவீரர் காடுவெட்டி குருவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அந்த கதையை சொல்லும்போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். அதன் பிறகு இதனை எப்படி தயாரிப்பது என திட்டமிட்டோம். இந்த படைப்பு மிகப்பெரும் வரலாறாக இருக்க வேண்டும் என்றும், மண்ணை காக்கவும் பெண்ணை காக்கவும் குருவைப் போன்ற ஒரு தலைவர் இருந்தார் என்பதை பதிவு செய்வதற்காகவும் இதை உருவாக்க தீர்மானித்தோம். இதனால் திரள் நிதி (கிரவுட் ஃபண்டிங்) முறையில் இப்படத்திற்காக நிதி திரட்ட தொடங்கினோம்.
நாங்கள் வட தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் விகே சூப்பர் ஸ்டோர் என்ற பெயரில் வணிகத்தை நடத்தி வருகிறோம். இதன் உரிமையாளரான நீலமேகம் இதற்கு முழுமையான ஆதரவை வழங்கினார். கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் அளவில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டோம். அத்துடன் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகமானது. இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுடன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சரவணன் ராஜும் ஆதரவு தெரிவித்தார்.
இந்தப் படத்தை ஒதுக்கிட வேண்டாம். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். தமிழகத்தில் உள்ள இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்குநர் கௌதமன் இயக்கியிருக்கிறார். மூன்றாண்டுகள் தவமிருந்து இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பாகுபாடும் பார்க்காமல் இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் உமாதேவன் பேசுகையில், ”படையாண்ட மாவீரா என்ற எங்களது முதல் குழந்தையை நாங்கள் பிரசவித்திருக்கிறோம். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கௌதமன் எங்களிடம் விவாதித்த போது எங்களால் முடியுமா? என்ற சந்தேகம் தான் எழுந்தது.
இன்று நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் முக்கியம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை போல பொருளாதாரமும் முக்கியமாகிறது. இதன் அடிப்படையில் வி கே வணிக குழுமம் இப்படத்தின் தயாரிப்பில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவரின் வரலாற்றை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம். இப்படத்தின் பாடல்களுக்காக முதன்முதலாக கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்தபோது எங்களுக்கு தெரியாத, எங்கள் சமுதாயம் கண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் சொல்லி, அந்த சமுதாயத்தை உயர்த்துகின்ற பாடல்களை எழுதி தருகிறேன் என்று சொன்னார். இதை இங்கு சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு பெரும் சமுதாயங்களாக பிரிந்து கிடக்கும் தமிழகத்தில், இவர்கள் தமிழ் சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் வ. கௌதமன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதனால் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்களின் பொன்னான கடமை,” என்றார்.
தயாரிப்பாளர் அய்யனார் கண்ணன் பேசுகையில், ”தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். அத்தகைய மாமனிதனாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை, இந்த தமிழ் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கிற மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அத்தனை சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை, நல்ல செயல்களை இப்படம் பேசுகிறது. இப்படத்தை அவருடன் இணைந்து பயணித்த இயக்குநர் வ. கௌதமன் உருவாக்கியிருக்கிறார். இது மிகப்பெரிய கூட்டு முயற்சி. நல்ல சினிமாவை தயாரிப்பதற்கு பெரும்பான்மையான நேரத்தில் தயாரிப்பாளர்கள் முன் வர மாட்டார்கள். சினிமாவிற்கு சம்பந்தமில்லாத வேறு துறைகளில் உழைப்பால் முன்னேறியவர்கள் இப்படத்திற்கு உறுதுணையாக நின்றார்கள். இந்த திரைப்பட தயாரிப்பில் மாணவ மாணவிகள் உட்பட பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு மெனக்கடல் என்றால், சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒரு தலைவரை, அனைத்து சமுதாயத்திற்கும் தலைவராக திகழ்ந்தவரின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடத்தில் எடுத்து சொல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
குடிதாங்கி எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவரின் சடலத்தை ஒரு வீதி வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த தருணத்தில் மருத்துவர் ஐயாவின் கட்டளையை ஏற்று காடுவெட்டி குரு அவர்கள் அந்த சடலத்தை தனது தோளில் சுமந்து அந்த வீதி வழியாக சென்றார். அதனால் தான் அவரை மக்கள் மாவீரன் என்று போற்றுகிறார்கள். அத்துடன் அந்த கிராமப் பகுதிகளில் நடைமுறையில் இருந்த இரட்டை குவளை முறையையும் ஒழித்துக் கட்டினார் காடுவெட்டி குரு. அந்த வகையில் சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரு தலைவராகத்தான் காடுவெட்டி குரு திகழ்கிறார்.
இப்படத்தில் இடம்பெறும் பாடல்களும், படமும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும். மக்கள் தலைவராக மறைந்த காடுவெட்டி குருவை நாம் கொண்டாட வேண்டும்,” என்றார்.
தயாரிப்பாளர் ‘கிரியாடெக்’ பாஸ்கர் பேசுகையில், ”இயக்குநர் கௌதமனை 2021ம் ஆண்டில் சென்னையில் உணவகம் ஒன்றில் சந்தித்த போது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க வேண்டும் என தனது படைப்பை பற்றி பேசினார். அப்போது நான் தொழில் முனைவோராகவும், கல்வியாளராகவும் இருந்தேன்.
அப்போது தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து மறைக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் பற்றிய ஆய்வினை சமர்ப்பிக்கலாம் என்ற ஒரு செய்தி கிடைத்தது. சுதந்திர போராட்ட காலத்தை கடந்து சமகாலத்தில் மக்களுக்காக பணியாற்றிய ஏராளமான அரசியல் தலைவர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கண்டறிந்தோம். இவரைப் போன்ற மக்களுக்காக பாடுபட்ட அரசியல் தலைவர்கள் அனைத்து சமூகங்களிலும் இருப்பதையும் கண்டறிந்தோம். இப்படிப்பட்ட தலைவர்களைப் பற்றி மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படத்தை உருவாக்கினோம்.
அரசியல்வாதி என்றால் பகட்டு அரசியல் செய்கிற அரசியல்வாதியாக தான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தலைவர்கள் எளிமையாக தான் வாழ்ந்திருக்கிறார்கள்.
2023ம் ஆண்டில் இப்படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கடும் போராட்டத்திற்குப் பிறகு தற்போது இப்படம் வெளியாகிறது. இந்தத் திரைப்படம் வாழ்வியலை பேசுகிறது. ஒரு சாமானிய மனிதன் எந்த நிலைக்கு உயரலாம், எப்போது உயரலாம், எப்போது மக்களால் போற்றப்படலாம் என்றால் அவர் மக்களுக்காக சுயநலமில்லாமல் சிந்தித்து களத்தில் இறங்கி போராடும் போது தான்.
இந்த திரைப்படத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது எதற்காக சினிமா, உங்கள் துறை இதுவல்லவே எனக் கேட்டனர். அவர்களிடம் ஒருவரை பற்றி அரசியல் காரணங்களால் தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவரைப் பற்றிய நிஜமான முகத்தை – எல்லா மக்களையும் நேசித்த ஒரு தலைவரைப் பற்றி- மக்களிடத்தில் சொல்ல வேண்டியது எங்களது கடமை. ஒரு குடிமகனாக எங்களுடைய பொறுப்பு என்றும் எடுத்துரைத்தேன். அத்துடன் மறைக்கப்பட்ட காடுவெட்டி குரு போன்ற மக்கள் தலைவர்களைப் பற்றிய வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.
இந்தத் திரைப்படம் ஆபாசம் இல்லாமல், வன்முறை இல்லாமல் உருவாகி இருக்கிறது. அதனால் இப்படம் குடும்பத்தினருடனும் பெண் பிள்ளைகளுடனும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் வகையில் தயாராகி இருக்கிறது,” என்றார்.
கவிப்பேரரசு வைரமுத்து பேசுகையில், ”கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன உணர்வோடும், மொழி உணர்வோடும் இயங்குகிற சிலரில் இவரும் ஒருவர். அவர் என் இளைய தம்பி என கொண்டாடுவேன். எனவே கௌதமன் இயக்கியிருக்கும் படைப்பு வெற்றி பெற வேண்டும். அவருடைய படைப்பு மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என வாழ்த்துவதற்காக வருகை தந்திருக்கிறேன்.
இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களின் நோக்கும், போக்கும் துன்பப்படுகிற நிலையில்தான் இருக்கிறது. இன்றைக்கு 200 திரைப்படங்கள் வெளியானால் அதில் 10 படங்கள்தான் வெற்றிக்கு அருகில் வருகின்றன என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
படையாண்ட மாவீரா படத்திற்கு மிகப்பெரிய பலம் இருக்கிறது. நம்மிடம் மிகப்பெரும் நடிகர்கள் இருக்கிறார்கள், மிகப்பெரும் தயாரிப்பாளர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள், மிகப் பெரிய ஒளிப்பதிவாளர்கள் இருக்கிறார்கள், மிகப் பெரிய தொழில் நுட்ப வல்லுனர்கள் இருக்கிறார்கள். ஆசியாவின் சிறந்த திரையரங்குகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு இருந்தும் தமிழகத்தில் படங்கள் ஏன் வெற்றி பெறவில்லை என்றால், இவர்கள் வாழ்க்கையைப் பார்த்து படம் எடுக்காமல் படத்தை பார்த்து படம் எடுக்கிறார்கள். படம் என்பது பிம்பம். வாழ்க்கை என்பது நிஜம். ரத்தமும், கண்ணீரும், வியர்வையும் கலந்த ஒரு உண்மையான பிம்பம். அந்த வாழ்க்கையில் இருந்து கடந்து சென்ற வாழ்க்கை, தொட்ட வாழ்க்கை, துன்புற்ற வாழ்க்கை, துன்பப்படுத்திய வாழ்க்கை, சக மனிதனை துன்புறுத்தி சென்ற வாழ்க்கை இவற்றை நீ படமாக எடுத்தால்.. பார்வையாளர்களுக்கும், படைப்புக்கும் ஒரு தொடர்புத் தன்மை ஏற்பட்டிருக்கும். இந்த தொடர்பு தன்மையற்று போனதால் பல திரைப்படங்கள் ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டு போயின என நான் நினைக்கிறேன்.
எட்டு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இந்த தமிழகத்தில் சினிமாவை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 35 லட்சமாக சுருங்கி விட்டார்கள். இதற்கு காரணம் என்ன என்று பார்த்தோமானால் சினிமா தொழில்நுட்பத்தால் துண்டாடப்பட்டு விட்டது. தொழில்நுட்பத்தால் வளர்ந்த சினிமா, இன்று அதே தொழில்நுட்பத்தால் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை வருந்தத்தக்கதாகவே கருதுகிறேன்.
அதிலும் தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்? திரைக்கதை ஆசிரியர் என்று ஒருவர் இருந்தார், அவரை அழித்தது யார்? வசனகர்த்தா என்று ஒருவர் இருந்தார், அவரை மழித்து வழித்தெடுத்தது யார்?
மகாபாரதத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. ராமாயணத்தை நூறு பேர் எடுத்தால், அதை சரியாக எடுத்தால் வெற்றி. இந்த இரண்டு இதிகாசங்களின் கதையும் மக்களுக்கு தெரிந்ததுதான்.
படையாண்ட மாவீரா படத்தை பொருத்தவரை இது வாழ்க்கை, ரத்தம், கண்ணீர், வியர்வை என ஒரு உண்மையான போராளியின் போராட்ட கதையாக இருப்பதால், இதில் கற்பனைகளுக்கு இடமில்லை. விதண்டாவாதங்களுக்கு இடமில்லை. இதில் இருக்கும் நிஜம் படத்தின் பலம் மட்டுமல்ல, வெற்றி பெறுவதற்கான விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தை காண வரும் ரசிகர்களை பொறுத்தது. தமிழர்களை பொறுத்தது என நான் கருதுகிறேன்.
மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், சந்தனக் காட்டு வீரப்பன் போன்ற வாழ்ந்த வீரர்களின் அசகாய சூரத்தனத்தை மக்கள் கொண்டாடுவார்கள், ரசிப்பார்கள். அந்த வரிசையில் இந்த படையாண்ட மாவீரா படத்தையும் மக்கள் ரசிப்பார்கள். கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்,” என்றார்.
நடிகர் ஏகன் பேசுகையில், ”என்னுடைய இனிய நண்பரான தமிழ் கௌதமன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் நடித்திருக்கிறார். அவன் மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் தமிழ் கௌதமன் பேசுகையில், ”இது என்னுடைய முதல் படம். முதல் படத்திலேயே சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். செப்டம்பர் 19ம் தேதியன்று படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், ”இப்படத்தின் திரைக்கதையை முதலில் கௌதமன் என்னிடம் கொடுத்தார். தமிழ் தேசிய அரசியல் குறித்த பயணத்தை தொடங்கும் போது அண்ணன் கௌதமன் உள்ளிட்ட பலர் எனக்கு அறிமுகமானார்கள். எந்தவித பிரதிபலனும் இல்லாமல் தமிழக மக்களின் நலன்களுக்காக கௌதமன் களத்தில் இறங்கி போராடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தப் படத்தின் திரைக்கதையை கொடுத்தவுடன் என் நிறுவனத்தின் கொள்கையை அவரிடம் தெரிவித்தேன். அதாவது எந்த சாதியை பற்றிய படத்தையும் நான் தயாரிப்பதில்லை என சொன்னேன். இருந்தாலும் அண்ணன் மீதான அன்பின் காரணமாக அந்த திரைக்கதையை முழுமையாக வாசித்தேன். நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு காடுவெட்டி குரு பற்றிய பிம்பம் வேறானதாக இருந்தது. மகாபலிபுரத்தில் அவர் பேசிய காணொலிகள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டிருந்தன. அதனை பார்த்து நான் அவரை ஒரு சாதி தலைவராகத்தான் அவதானித்திருந்தேன். அவரைப் பற்றிய புரிதல் அவ்வாறானதாகவே இருந்தது.
இந்த திரைக்கதையை வாசித்தவுடன் இவர் உண்மையை எழுதி இருக்கிறாரா, அல்லது மிகைப்படுத்தி எழுதி இருக்கிறாரா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள என் நண்பர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அவர்கள் காடுவெட்டி குருவைப் பற்றி உண்மையான வரலாறை சொல்ல சொல்ல எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஆனால் அவரைப் பற்றிய பிம்பம் இங்கு வேறு மாதிரியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதிக்கு பிறகு தான் நான் தமிழர்கள் என்றால் யார், தமிழ் தேசியம் என்றால் என்ன என்பது குறித்த அரசியல் ரீதியான புரிதல் ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும் தலைவர் என்றால் அது மேதகு பிரபாகரன் மட்டும் தான்.
காடுவெட்டி குரு பற்றிய வாழ்க்கையை படித்ததும் அவரைப் பற்றி எப்படியெல்லாம் தவறாக கட்டமைத்திருக்கிறார்கள் என வருத்தப்பட்டேன். இப்படி தமிழ் சமூகத்தில் மறைக்கப்பட்ட தலைவர்களின் வரலாறு ஏராளமாக இருக்கிறது.
இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். இந்த படம் சாதிய படம் அல்ல. காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு. ஒரு மனிதன் நேர்மையாக எப்படி வாழ்ந்திருக்கிறான் என்பதையும், நேர்மையாக வாழ்ந்ததற்காக அவன் எப்படி வஞ்சிக்கப்பட்டிருக்கிறான் என்பதையும், தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாத, தன் குடும்பத்திற்கு என்று எதுவும் விட்டுச் செல்லாத, தன் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவனை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதையும் கடந்து இப்படத்தில் இடம்பெறும் உரையாடல்களும், பின்னணி இசையும் படத்தின் பலம் என்றே சொல்வேன்,” என்றார்.
தயாரிப்பாளர் – இயக்குநர் – நடிகர் தங்கர் பச்சான் பேசுகையில், ”வ. கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. கௌதமன் தமிழனாக இருப்பதால்தான் சினிமாவை தேர்வு செய்திருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும், அடக்கு முறையாகட்டும், வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழன் கௌதமன்.
இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.
தமிழர் அல்லாதவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் அறிந்து கொண்டு தமிழர்களிடையே பாகுபாட்டை,. விரோதத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் கமெண்டுகள், ஃபாலோயர்கள் என்ற பெயரில் ஏராளமான மன நோயாளிகள் வலம் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு அரசியல் கட்சியின் கொத்தடிமைகளாக- கைக்கூலிகளாக இருக்கிறார்கள். இவர்களை வைத்துதான் இன்றைக்கு அரசியல் கட்டமைக்கப்படுகிறது.
பத்து முதன்மையான பத்திரிகைகள், ஐந்து ஊடகங்கள் சொன்ன செய்திகளை மட்டுமே கேட்டு வந்த நமக்கு சமூக வலைதளங்கள் மிகப்பெரிய மாற்றமாக தெரிந்தது. ஒவ்வொரு தனி மனிதனும் சமூக வலைதளங்கள் மூலமாக தங்களுடைய கருத்துக்களை பதிவிடலாம். பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலை உருவானது. இதன் மூலமாக நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தால், என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இந்த சிக்கலுக்கு இடையே தான் உண்மையான செய்திகள் வெளிவர வேண்டியதிருக்கிறது.
மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாக பழகி இருக்கிறோம். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர்.
1990களில் இந்திய சினிமாவில் வணிக எல்லைக்குள் நின்று கொண்டு ஆக சிறந்த படைப்பாக வெளியானது மறுமலர்ச்சி. அதில் நான் பணியாற்றிருக்கிறேன். அது ஒரு ஊரில் உள்ள தலைவரைப் பற்றி பேசும் படம். அந்தப் படத்தில் தமிழ் மண்ணின் ஒட்டுமொத்த கலாச்சாரமும், பண்பாடும் இடம் பிடித்திருக்கும். யாருக்குள்ளும் எந்த பகைமையும் இல்லாமல் மனிதர்களையும், மக்களையும், பெண்களையும், மதிக்கிற ஒரு தலைவனை பற்றிய படம். இந்தத் திரைப்படம் யாருடைய மனதையும் காயப்படுத்த வில்லை. ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கு பிடித்த மக்கள் தலைவனை பற்றி படம் எடுத்தால்.. அது சாதி படம் என்று குறிப்பிடக் கூடாது. இதை இப்படி வகைப்படுத்துபவர்கள் யார்? என்று தெரியவில்லை.
இந்த திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தப் படத்தை பார்த்த பிறகு மக்களிடத்தில் ஒரு தாக்கம் ஏற்பட வேண்டும். ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், ”என்னை வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திரைப்படத்திற்கு தயாரிப்பாளரான வி கே குழுமத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பில் பங்களிப்பு செய்த கர்நாடகத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கும் நன்றி. இறுதிக்கட்டத்தில் கரம் கொடுத்து ஆதரவு தரும் தயாரிப்பாளர் சரவண ராஜுக்கும் நன்றி. படத்தின் பணிகளின் போது தடங்கல் ஏற்படும் போதெல்லாம் அதனை அகற்ற உதவிய தயாரிப்பாளர் சுந்தரவரதனுக்கும் நன்றி. தொடர்ந்து தோள் கொடுத்து வரும் சகோதரர் கண்ணனுக்கும், சகோதரர் சுரேஷ் காமாட்சி, தங்கர் பச்சானுக்கும் நன்றி. இவர்களுடன் இப்படத்திற்காக உழைத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழ் குடிகளில் நான் உயிராக நேசிக்கின்ற அத்தனை தமிழ் சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தையும் பரிசாக அளித்தன. அந்த வலியையும், வேதனையும் நான் இன்றும் மனதளவில் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை . தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் ‘படையாண்ட மாவீரா’.
இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த இனத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்.
என்னுடைய தந்தையும், அவருடைய (காடுவெட்டி குரு) தந்தையும் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு மட்டுமல்ல, புரிதல் மட்டுமல்ல, பேரன்பும் இருக்கிறது. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்.
படைப்புகளையும், படைப்பாளிகளையும் வீழ்த்த நினைத்து மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் அருவருப்பானவை. அதனைத் தவிர்த்து விடுங்கள்.
தமிழரசனின் வாழ்க்கை வரலாறை படைப்பாக உருவாக்க வேண்டும். மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றை படைப்பாக உருவாக்க வேண்டும். ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும். தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்ய வேண்டும்.
இந்தப் படத்தின் பாடல்களில் நெருப்பு பொறி பறந்தது போல் படத்திலும் அனல் பறக்கும். இந்தப் படத்திற்காக பின்னணி குரல் கொடுத்த கலைஞர்களுக்கு படத்தின் உச்சகட்ட காட்சியை திரையிட்டு காண்பித்தேன். அவர்கள் அனைவரும் கண்ணீருடன் என்னை கட்டி அணைத்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும், ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்த படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.