தமிழ் திரையுலகில் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ள நிலையில், அவருக்கு திருமணப் பரிசாக ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசளித்துள்ளார் MRP Entertainment தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான்.
இலங்கை வாழ் மக்களின் கதைக்களத்தில், எளிமையான திரைக்கதையில், மனித உணர்வுகளின் குவியலாக, அசத்தலான ஃபேமிலி எண்டர்டெயினராக, இந்த ஆண்டில் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினர் என அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் “டூரிஸ்ட் ஃபேமிலி”.
குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி என தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், இயக்குநர் அபிஷன் ஜீவிந்தின் கல்யாணத்திற்கு பரிசாக, ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் தற்போது, Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், ஒரு புதிய படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இயக்குநராக முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்து, தற்போது ஹீரோவாகவும் மாறியிருக்கும் அபிஷன் ஜீவிந்த் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, தன் காதலியை கரம்பிடிக்கிறார்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்திற்கு கார் வழங்கிய புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, Incredible Productions தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இத்திரைப்படத்தின் மூலம் ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில்: “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது,” என தெரிவித்தார்.
இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ் (HeartBeat புகழ்), வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
தொழில்நுட்பக் குழு தயாரிப்பு : சிவநேசன் S (Incredible Productions) இயக்குநர்: சிவநேசன் S (காளிதாஸ் 1 தயாரிப்பாளர்) இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா படத்தொகுப்பு: புவன் சீனிவாசன் கலை இயக்குனர் – M.மணிகண்டன் B.F.A., புரொடக்ஷன் எக்ஸிகூயுடிவ் – V.முத்துகுமார் புரொடக்ஷன் மேனேஜர் – I. ரமீஸ் ராஜா காஸ்டுயும் டிசைனர் – கிஷோர் ஸ்டில்ஸ் – ஜெயராமன் மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
சுவாரஸ்யமான கதை, திறமையான நடிகர்கள், திறம்பட பணிபுரியும் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாகும் இந்த திரைப்படம், திரைத்துறையில் புதிய அணுகுமுறையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & கான்சப்ட் வீடியோ வெளியானது !!
அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யா அவர்களுக்கு தனியே அறிமுகம் தேவையில்லை. அடித்தட்டு மக்களுக்காக அரசியலில் தன்னை அர்ப்பணித்த இவர், 1983 முதல் 1994 வரையிலும், பின்னர் 1999 முதல் 2009 வரையிலும், யெல்லந்து தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக, பலமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். சாதாரண மக்களின் நலனுக்காக தன்னலமின்றி உழைத்த இவர், தனது உறுதி தவறாத நேர்மைமிகு வாழ்க்கையால், மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்றார்.
இந்த மகத்தான நபரின் வாழ்க்கையை, பெரிய திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக உருவாகியுள்ளது ‘கும்மடி நரசைய்யா’ எனும் வாழ்க்கை வரலாறு திரைப்படம். இந்தப் படத்தில் தலைசிறந்த கன்னட நடிகர் டாக்டர் சிவராஜ்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திய பரமேஷ்வர் ஹிவ்ராலே, இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம், தயாரிப்பாளர் N.சுரேஷ் ரெட்டி (NSR) அவர்களின் முதல் தயாரிப்பாகும்.
இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், டாக்டர் சிவராஜ்குமார் எளிமையான அதே நேரம், வலிமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கண்கண்ணாடி அணிந்து, வெள்ளை குர்தா –பைஜாமா மற்றும் தோளில் சிவப்பு துண்டு போர்த்திய நிலையில், சைக்கிளை தள்ளிச்செலும் காட்சியில், பின்னணியில் சட்டமன்றம் தெரிகிறது. சைக்கிளில் தொங்கும் நெல் மற்றும் சுத்தியல் சின்னம் கொண்ட சிவப்புக் கொடி, அவரது இடதுசாரி சிந்தனையையும், அரசியலின் தன்மையையும் வெளிப்படுத்துகிறது. கும்மடி நரசைய்யாவின் பணிவு மற்றும் உள்மன வலிமையை சிவராஜ்குமார் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
கான்சப்ட் வீடியோவில், நாயகப் பெருமையோ ஆடம்பரமோ இன்றி சைக்கிளில் சட்டமன்றத்திற்குள் நுழைவது எளிமையாக காட்டப்படுகிறது. பின்பக்க இருக்கையில் சில புத்தகங்கள் கட்டப்பட்டிருக்கும் அந்தக் காட்சி, அவரின் அறிவார்ந்த தன்மையையும், நிலைகுலையாத பணிவையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
இயக்குநர் பரமேஷ்வர் ஹிவ்ராலே அவர்களின் கதை சொல்லும் நேர்மையும், உண்மைத்தன்மையும், ஒவ்வொரு ஃபிரேமிலும் வெளிப்படுகிறது. இந்த வாழ்க்கை வரலாறு படத்தை, மிகுந்த மரியாதையுடனும் நம்பிக்கையுடனும் உருவாக்கியிருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.
இப்படத்தில் தொழில்நுட்பக் குழுவும் மிக வலுவாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் சதீஷ் முத்யலா, கிராமியத்தின் பசுமையையும், உண்மையையும் துல்லியமாகப் படம் பிடித்துள்ளார். இசையமைப்பாளர் சுரேஷ் பாபிலி, கதையின் உணர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். எடிட்டிங் செய்துள்ள சத்யா கிதுதுரி, இந்த வீடியோவை, வெகு சுருக்கமாகவும், தாக்கத்துடனும் கொண்டுவந்துள்ளார். அன்றைய காலகட்டத்தை முழுமையாக மீண்டும் உருவாக்கியுள்ள தயாரிப்பு வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது.
இந்த பான்-இந்தியா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ‘கும்மடி நரசைய்யா’ திரைப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. நேர்மை, தியாகம், மக்களுக்கான சேவை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தக் கதை, எல்லா மாநில மற்றும் எல்லா மொழி பார்வையாளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்மடி நரசைய்யாவின் வாழ்க்கை ஒரு அரசியல் கதை மட்டுமல்ல — அது ஒரு மனிதனின் ஆழமான பயணம். இந்த வாழ்க்கை வரலாறு திரைப்படம், மக்களுக்காக வாழ்ந்த ஒரு மனிதனின் மரியாதைக்குரிய வாழ்க்கையை, பெரிய திரையில் கொண்டுவரும் ஒரு நெகிழ்ச்சியான கலைவிழாவாக அமையும்.
நடிகர்கள் : டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் பலர்
தொழில்நுட்பக் குழு : எழுத்து, இயக்கம் – பரமேஷ்வர் ஹிவ்ராலே தயாரிப்பு – N.சுரேஷ் ரெட்டி (NSR) தயாரிப்பு நிறுவனம் – பிரவல்லிகா ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் ஒளிப்பதிவு – சதீஷ் முத்யலா எடிட்டிங் – சத்யா கிதுதுரி இசை – சுரேஷ் பாபிலி மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது
ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், கும்கி அஸ்வின் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன
‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு சமீர் அலி கான் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் கலகலப்பான காதல் கதையான ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை அறிவிக்கும் விதமாக படத்தின் இரண்டாம் பார்வையை (செகண்ட் லுக் போஸ்டர்) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
படத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ செகண்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார்.
“ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்தை தமிழில் மட்டுமே உருவாக்கியுள்ளோம்,” என்று சமீர் அலி கான் தெரிவித்தார்.
திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்த சமீர் அலி கான், “இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம்,” என்று கூறினார்.
‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்யன்”.
இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் சிங்கிள் பாடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் படம் குறித்த பல தகவல்களை ஊடக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்,
எழுத்தாளர் இயக்குநர் மனு ஆனந்த் பேசியதாவது:
எனக்கு எப்படி எஃப்.ஐ.ஆர் எவ்வளவு முக்கியமான படமோ, அதே போல் ஆர்யன் முக்கியமான படம். பிரவீன் என் நண்பர் அவர் தான் இயக்குநர், விஷ்ணு என் முதல் ஹீரோ, இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஹீரோ அவர்தான். பிரவீனும் நானும் கௌதம் மேனனிடம் ஒரே நாளில் வேலைக்கு சேர்ந்தோம். சினிமாவை ஒன்றாக விவாதிப்போம். விஷ்ணு விஷால் கதை கேட்ட போது நான் தான் பிரவீனை சிபாரிசு செய்தேன். இந்தக் கதையை திரைக்கதையாக எழுத பிரவீன் அணுகிய போது மகிழ்ச்சியாக இருந்தது. மிக நல்ல திரைக்கதை. அக்டோபர் 31 படம் பார்க்கும் போது பிரவீன் திறமை உங்களுக்கு புரியும். எஃப்.ஐ.ஆர் படத்தை பலர் தவிர்த்த போது துணிந்து நடித்து தயாரித்தவர் விஷ்ணு விஷால். அவர் இந்தப் படத்தையும் நம்பி தயாரித்துள்ளார். போலீசாக கலக்கியிருக்கிறார். செல்வா சார் இப்படத்தில் மிரட்டியிருக்கிறார்! ஷ்ரத்தாவும் சிறப்பாக செய்துள்ளார். ஜிப்ரான் சார் அருமையான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் திரையரங்கில் பாருங்கள் உங்களுக்கு இப்படம் நல்ல அனுபவமாக இருக்கும்.
கலை இயக்குநர் ஜெயச்சந்திரன் பேசியதாவது..,
இந்தப்படத்தில் மிக முக்கியமான சீக்குவன்ஸ்க்காக ஒரு பெரிய செட் போட்டுள்ளோம். அனைவரும் பார்த்து விட்டு கருத்து சொல்லுங்கள். நன்றி.
எடிட்டர் ஷான் லோகேஷ் பேசியதாவது..,
ஆர்யன் மிக முக்கியமான படம், இதுவரை வந்த க்ரைம் சைக்கோ கில்லர் படங்களின் வழக்கத்தையே உடைத்து, புதிதாக ஒன்றை செய்துள்ளது. வில்லனின் ஆர்க்கையே முழுதாக மாற்றியுள்ள படம். விஷ்ணு சார் ஒரு நாள் ராட்சசன் ஷீட்டில் பார்த்த போது ஒரு ஷாட்டில் கண் சிமிட்டியிருக்கிறேன் அதைப் பார்த்து எடிட் செய்யுங்கள் என்றார். அவரது அப்சர்வேசன் அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. அவர் பணத்தை பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டார். படம் சரியாக வர வேண்டும் தான் என்பதில் கறாராக இருப்பார். சினிமாவை உண்மையாக காதலிக்கும் ஒருவர். ஜிப்ரான் சார் எங்களுக்கு கிடைத்த வரம். செல்வா சாரின் காதல் கொண்டேன் படம் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் அவர் கண்ணே பல விசயங்கள் பேசும். படம் பார்த்தால் புரியும் அருமையாக நடித்துள்ளார், படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,
எல்லோரிடமிருந்தும் ராட்சசன் மாதிரி இருக்குமா என்ற கேள்வி வந்துகொண்டே இருக்கிறது. ராட்சசன் எனக்கு முக்கியமான படம். ராட்சசனில் வில்லன் யார் என்பது தான் முக்கிய கேள்வியாக இருக்கும். அது இசையில் சவாலாக இருந்தது. இதில் வில்லன் யார் எனத் தெரிந்துவிடும், ஆனால் அதன் பிறகு தான் கதை தொடங்கும். செல்வா சார் நடிப்பிற்கு மியூசிக் செய்தது சந்தோசமாக இருந்தது. மியூசிக் நன்றாக தெரியக் காரணம் எடிட்டர் ஷான் தான். எடிட்டிங்கில் இசைக்கு நன்றாக இடம் கொடுப்பார். ரொம்ப கடினமான திரைக்கதையை மிக அழகாக சொல்லியுள்ளார் பிரவீன். வாய்ப்புத் தந்த விஷ்ணு விஷால் சாருக்கு நன்றி. இந்தப்படத்துக்கு ஒரு சவுண்ட் செய்துள்ளேன், ராட்சசனில் இருந்து முற்றிலும் வேறு விதமாக இருக்கும். இப்படம் ஒரு முழுமையான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.
நடிகர் கருணாகரன் பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். ஓஹோ எந்தன் பேபி படத்தின் பாராட்டுக்களுக்கு நன்றி. ஆர்யன், ராட்சசன் கம்பேரிங்கை தடுக்க முடியாது. ஆர்யன் எனக்கு பிடித்த படம். பிரவீன் ரொம்ப காம்ப்ளிகேடட் கதையை பிரில்லியண்டாக எடுத்துள்ளார். விஷ்ணு விஷால் போலீஸ் கதாப்பாத்திரத்தை மிக அட்டகாசமாக செய்துள்ளார். அவர் கடினமான உழைப்பாளி. தயாரிப்பது எவ்வளவு கடினம் என்பதை விஷ்ணுவுடன் இருந்து பார்த்தேன். இந்தப்படத்தில் நியூஸ் ரீடர் ரோல் செய்துள்ளேன், இருப்பதிலேயே கஷ்டமான ரோல். செல்வா சாரின் மிகப்பெரிய ஃபேன். அவர் மிகப்பெரிய ரோல் செய்துள்ளார். எல்லோரும் மிகச்சிறப்பாக செய்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.
நடிகை மானசா சௌத்திரி பேசியதாவது.., ஆர்யன் எனக்கு மிக முக்கியமான படம். ஜிப்ரான் சார் ரசிகை நான். அவர் பாடல்களை தான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஹரீஷ் அட்டகாசமான விஷுவல்ஸ் தந்துள்ளார். செல்வா சார் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். ஷ்ரத்தா நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. பிரவீன் சார் எனக்கு நல்ல ரோல் தந்ததற்கு நன்றி. விஷ்ணு விஷால் சாரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் நன்றி. படம் அனைவரும் பாருங்கள் நன்றி.
நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசியதாவது..,
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். அக்டோபர் 31 எங்கள் படம் வருகிறது. என் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் சாருக்கு முதல் நன்றி. அவரை தயாரிப்பாளராகத்தான் முதலில் சந்தித்தேன். அவர் இவ்வளவு உழைப்பைப் போட்டு இந்தப்படத்தை எடுத்துள்ளார். அவர் தந்த ஊக்கத்திற்கும் என்னை தேர்ந்தெடுத்ததிற்கும் நன்றி. அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. செல்வா சாருடன் ஷீட்டில் எதிரில் உட்கார்ந்திருந்ததே பயமாக இருந்தது. அவர் மீது பெரும் மரியாதை உள்ளது. பிரவீன் அற்புதமான கதை சொல்லி. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். ஜிப்ரான் சாரிடம் பெரிய திறமை உள்ளது. அவர் பாடல்களை நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருப்பேன். ஹரிஷ் நல்ல விஷுவல்ஸ் தந்துள்ளார். இது ஒரு க்ரைம் ஸ்டோரி, ஷான் சிறப்பாக எடிட் செய்துள்ளார். மானசா உங்களுக்கு அழகுடன் திறமையும் இருக்கிறது வாழ்த்துகள். உங்களுடன் நானும் இப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.
இயக்குநர் பிரவீன் K. பேசியதாவது..,
இன்று நான் நானாக இருக்க காரணமான என் அப்பா அம்மா மற்றும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் எழுத்தாளர் மனு ஆனந்திற்கு நன்றி. எஃப் ஐ ஆர் படப்பிடிப்பின் போது உருவான கதை இது. எந்த ஒரு இயக்குநருக்கும் முழுதாக புரிந்து கொண்ட ஒரு நடிகன் கிடைப்பது வரம். எனக்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விஷ்ணு விஷால் கிடைத்தது வரம். இந்தப்படத்தின் கதை கேட்ட தருணத்திலிருந்து அவர் இந்த கேரக்டரை, படத்தை எடுத்துச் சென்ற விதம் பிரமிப்பானது. இந்தக்கதையை ரவிதேஜா சார், அமீர் சார் என பல நடிகர்களிடம் எடுத்து சென்றோம். இதை இந்தியிலும் செய்வதாக இருந்தது. பல தடைகள் வந்த போதும் அவர் இப்படத்தை தாங்கினார். இதற்காக அவர் தந்த உழைப்பு மிகப்பெரியது. இந்தப்படத்தை முழுதாக வேறுமாதிரி அணுகியிருக்கிறோம். ஷ்ரத்தா மிக திறமையானவர், அவர் தான் இந்த ரோலுக்கு ஃபர்ஸ்ட் சாய்ஸாக இருந்தார். சிறப்பாக செய்துள்ளார். மானசா நல்ல திறமைசாலி அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் மிகப்பெரிய பிளஸ் இதன் தொழில்நுட்ப கலைஞர்கள். மிக திறமையானவர்களை தேர்ந்தெடுத்தேன், அவர்கள் அற்புதமான உழைப்பை தந்துள்ளனர். ஜிப்ரான், ஷான், ஹரீஷ், ஜெயச்சந்திரன் என எல்லோரும் அட்டகாசமாக செய்துள்ளனர். எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்கு சிறப்பான அனுபவம் தரும்.
இயக்குநர் செல்வராகவன் பேசியதாவது..,
விஷ்ணு விஷால் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அவரைச் சந்தித்ததில்லை. அவர் என்னை சந்தித்து, படம் செய்ய வேண்டும் என அணுகி, அவருடன் வேலை பார்த்த போது தான், அவரை பார்த்து பிரமித்தேன். அவர் வீட்டுக்கே போக மாட்டார். எப்போதும் சினிமா தான். சினிமாவை காதிலிக்கிற நேசிக்கிற, மதிக்கிற, ஹீரோ. அதே போல் இயக்குநர் பிரவீன், அவரும் அப்படித் தான். உங்களின் நேசிப்புக்கு நல்லதே நடக்கும். நன்றி.
விஷ்ணு விஷால் பேசியதாவது..,
எனக்கு இந்த இடம் கிடைக்க காரணம் பத்திரிக்கை நண்பர்கள் தான் நன்றி. க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக ராட்சசன் உடன் கம்பேர் செய்வார்கள் அதை தடுக்க முடியாது. எல்லா மொழியிலும் திரில்லர் வந்தால் ராட்சசன் படத்தோடு ஒப்பிடுவார்கள். நானே ராட்சசனை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். அதை மீற முடியாது. ஆனால் நாங்கள் வேறொரு அனுபவம் தர முயற்சி செய்துள்ளோம். கோவிட் சமயம் ஆரம்பித்த படம் இது. ஐந்து வருடம் ஒரு படத்திற்காக பிரவீன் உழைத்துள்ளார். இந்தப்படத்தின் இந்தி வெர்ஷனில் அமீர் சார் நடிப்பதாக இருந்தது. அவரே கதை கேட்டு பாராட்டிய போது, எங்களுக்கு பெரிய உற்சாகம் வந்தது. இந்தப்படம் தமிழிலேயே எடுப்போம் என முடிவு செய்தேன். பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது. ரூட்டடாக எடுத்த படங்கள் தான் பான் இந்திய படமாக மாறியுள்ளது. அதனால் தமிழ் ஆடியன்ஸுக்கு எடுக்கலாம் என எடுத்துள்ளோம். இப்படத்தில் எனக்காக எல்லோரும் உழைத்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் 200 சதவீத உழைப்பை தந்துள்ளனர். என் மனைவி ஜிவாலாவிற்கு நன்றி. ஒரு புது விஷயம் முயற்சி செய்துள்ளோம். நீங்கள் தரும் பாராட்டுக்கள் தான் எனக்கு புது விஷயங்கள் செய்ய ஊக்கமாக உள்ளது. இந்தப்படம் பொறுத்த வரை செல்வா சார் தான் ஹைலைட். இப்படத்தில் நடித்தற்கு நன்றி சார். தனுஷ் இவ்வளவு பெரிய நடிகராக, உங்கள் உழைப்பும் ஒரு காரணம். இப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ஷ்ரத்தா, எனக்கும் பிரவீனுக்கும் இந்த ரோலுக்கு அவர் தான் மனதில் வந்தார். படத்தின் முதல் 30 நிமிடம் அவர் தான் தாங்கியுள்ளார். மானசா லேட்டாக வந்தார், சிறப்பாக செய்துள்ளார். எல்லாப்படத்திலும் முத்தக்காட்சியில் நடிக்கிறேன் இதில் வேண்டாம் என்றார், அதை ஏற்று ஒரு பாடல் செய்தோம் சிறப்பாக வந்துள்ளது. கருணாகரன் என் புரடக்சனில் ஒரு பார்ட்னராகடாக ஆகிவிட்டார். ஆர்யன் என் பையன் பேர். அவர் பேரில் நல்ல படம் தந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நன்றி.
நடிகர் விஷ்ணு விஷால் மகன் ஆர்யன் பேசியதாவது.., என்னுடைய அப்பா என் பெயரில் படமெடுத்துள்ளார். என் பெயரில் படம் வருவது எனக்கு பெருமையாக உள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் திரையரங்கில் படம் பாருங்கள். உங்கள் எல்லோருக்கும் இப்படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பிரவீன் K. விஷ்ணு விஷால் நடித்த “எஃப்.ஐ.ஆர்” படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான இன்வஸ்டிகேடிவ் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்ப குழு விபரம் தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்) எழுத்து இயக்கம் – பிரவீன் K மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, கிஷ்கிந்தாபுரி திரைப்படத்தை அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியிட உள்ளது. கௌசிக் பெகல்லபாட்டி இயக்கத்தில், சைன்ஸ்கிரீன்ஸ் சார்பில் சாகு கருப்பதி தயாரித்த இந்த படத்தில் பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ், அனுபமா பரமேஸ்வரன், மகரந்த் தேஷ்பாண்டே மற்றும் தனிக்கெல்லா பரணி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கு மொழியில் அக்டோபர் 17 அன்று ZEE5-இல் வெளியானது, மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இப்போது திரைப்படம் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது.
இந்த கதை, ஆமானுஷ்ய சுற்றுலாவுக்காக ஒரு பழமையான வானொலி நிலையத்திற்கு சென்ற குழுவைத் தொடர்ந்து உருவாகிறது. அவர்கள் தெரியாமலே ஒரு நின்றுபோன ஆவியை எழுப்பிவிடுகிறார்கள். ஆர்வத்துடன் தொடங்கிய பயணம், விரைவில் ஒரு பயங்கரமான அனுபவமாக மாறுகிறது. குழுவினர் அங்கு சிக்கிக்கொண்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இயக்குநர் கௌசிக் பெகல்லபாட்டி கூறுகையில்: “கிஷ்கிந்தாபுரியின் மூலம், சாதாரண ஜம்ப் ஸ்கேர் பயங்களைத் தாண்டி, நம்முடைய நாட்டில் வேரூன்றிய உணர்வுகளோடு ஒரு உண்மையான திகில் அனுபவத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணமே இருந்தது. அந்த பழைய வானொலி நிலையம் ஒரு கதாபாத்திரமாகவே நடிக்கிறதுபோல உணர்ந்தேன். உள்ளூர் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு உளவியல் மையமான திகில் கதையாக அமைத்திருக்கிறோம். அந்த உலகத்தில் நுழைந்து, ஒவ்வொரு காட்சியிலும் நாம் உருவாக்கிய பதட்டத்தை அனுபவிக்க, பார்வையாளர்களை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.”
பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் கூறுகிறார்: “இது எனது மிக சவாலான வேடங்களில் ஒன்றாக இருந்தது. திகில் படம் என்பதனால், நேரில் இல்லாத விஷயங்களுக்கு நாம் எதிர்வினை காட்ட வேண்டிய நிலை உருவாகும். அந்த பயம் மற்றும் குழப்ப நிலையை தொடர்ந்து உணர வேண்டிய சூழல், என்னை என் கம்ஃபர்ட் ஸோனிலிருந்து வெளியே இழுத்தது. படப்பிடிப்பின்போதும், அந்த வானொலி நிலையத்தின் சூரியஒளி இல்லாத அமைதியான சூழல் என்னை பாதித்தது. இந்த படம் பார்வையாளர்களை தொடர்ந்தும் குழப்பத்தில் வைக்கும் வகையில் உருவாகியுள்ளது என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.”
அனுபமா பரமேஸ்வரன் கூறுகையில்: “கிஷ்கிந்தாபுரியில் என்னை மிகவும் கவர்ந்தது, அனைத்தும் உண்மையாகவே உணரப்பட்டது என்பதுதான். என் கதாபாத்திரம் ஒரு வழக்கமான ‘திகில் கதையின் நாயகி’ அல்ல; அவள் பயப்படுகிறாள், உடைந்து போகிறாள், சந்தேகிக்கிறாள், ஆனால் அதே நேரத்தில் எதிர்பாராத தருணங்களில் தன்னலம் தாங்குகிறாள். அந்த மனிதரீதியான பிழைத்தலை தான் மக்கள் தொடர்புபடுத்திக்கொள்வார்கள் என நம்புகிறேன். அந்த பயங்கரமான இடங்களில் நடிப்பது ஒரு தனி அனுபவமாக இருந்தது. அந்த சூழ்நிலைதான் நம்மை கதாபாத்திரத்துக்குள் இன்னும் ஆழமாக இழுத்தது.”
பயங்கரமான காட்சிகள், மனதை உலுக்கும் நடிப்புகள், மற்றும் முழுக்க முழுக்க பரபரப்பில் ஆழ்த்தும் திரைக்கதை ஆகியவற்றோடு, கிஷ்கிந்தாபுரி ஹாரர் ரசிகர்களுக்கு தவறவிடக்கூடாத ஒரு படமாக இருக்கப் போகிறது.
அக்டோபர் 24 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் “கிஷ்கிந்தாபுரி” – ZEE5-இல் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகிறது!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான “பெத்தி” படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றது. இயக்குநர் புச்சி பாபு சானா (Buchi Babu Sana) இயக்கும் இப்படத்தில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ் (Vriddhi Cinemas) சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு ( Venkata Satish Kilaru) தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கை தீவின் பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் பங்குபெறும், ஒரு அழகான பாடல் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற, மேஸ்ட்ரோ A.R. ரஹ்மான் இசையைமைக்கிறார்.
“பெத்தி” படம், இயக்குநர் புச்சி பாபு சானாவுக்கு மிகவும் பெருமைக்குரிய முயற்சி ஆகும். இதில், ராம் சரணை இதுவரை காணாத புதிய தோற்றங்களிலும் பல்வேறு வித்தியாசமான லுக்குகளிலும் காட்டத் திட்டமிட்டுள்ளார். தனது கதப்பாத்திரத்திற்காக முழு அர்ப்பணிப்புடன், கடின உழைப்புடன், அதிரடி காட்சிகளில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் ராம் சரண்.
கருநாடக சக்கரவர்த்தி சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். R ரத்னவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணிபுரிகிறார்.
“பெத்தி” படம் வரும் 2026 மார்ச் 27 அன்று பான் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக திரையிடப்பட உள்ளது.
நடிகர்கள் : குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா
தொழில்நுட்பக் குழு : இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சானா வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ் தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா இசை: A.R. ரஹ்மான் ஒளிப்பதிவு: R. ரத்னவேலு கலை இயக்கம்: அவினாஷ் கொல்லா படத்தொகுப்பு: நவீன் நூலி நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார் மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ மக்கள் தொடர்பு : யுவராஜ்
பிரபாஸின் திரை ஆளுமையும், திரையை புயல் போல் ஆக்கிரமிக்கும் ஆற்றலும், திரைக்குப் பின்னால் அவரின் எளிமையான பண்பும், இந்தியா முழுக்க அவரை ரசிகர்களின் மனதில் நங்கூரமாய் பதிய வைத்திருக்கிறது. தொடர் வெற்றிப் படங்களும், உலகளாவிய ரசிகர் வட்டாரமும் இணைந்து, அவருக்கு “இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார்” என்ற பட்டத்தை தந்துள்ளன. ஒவ்வொரு படமும் ஒரு கொண்டாட்டமாக மாறும் அளவுக்கு, அவரின் ஒவ்வொரு தோற்றமும் ஒரு கொண்டாட்டமாக மாறிவிடுகிறது. இந்த மாதம் அவர் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள்.
இதோ அந்த அபாரமான ரெபெல் ஸ்டாரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள்!
இந்தியாவின் தடுக்க முடியாத ரெபெல் ஸ்டார் பிரபாஸ் “ரெபெல் ஸ்டார்” எனப் போற்றப்படுவதற்குக் காரணம் வெற்றிப் படங்கள் மட்டும் அல்ல — அவரின் நேர்மை, பணிவு, மற்றும் சர்ச்சைகளற்ற வாழ்வும் தான். தயாரிப்பாளர்களுக்குப் பிரபாஸ் ஒரு நம்பிக்கையின் அடையாளம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே வெற்றி உறுதியானது எனக் கருதப்படுகிறது.
இந்த மாதம் பிரபாஸின் மாதம்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பிரபாஸின் ரசிகர்களுக்கே சொந்தம்! அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பழைய படங்கள் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டும் அதே உற்சாகம் — சலார், ஈஸ்வர், பௌர்ணமி அக்டோபர் 23 அன்றும், மேலும் பாகுபலி: தி எபிக் (இரு பாகங்களும் சேர்ந்து) அக்டோபர் 31 அன்றும் மீள்பதிப்பாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்துகின்றன!
திரைக்குப் பின்னால் அமைதியான மனிதநேயம் மிக்க பிரபாஸ்.
பிரபாஸ் தனது தன்னார்வச் செயல்களை எப்போதும் விளம்பரம் செய்வதில்லை. அவர் புகழை நாடாமல் வெகு அமைதியாக பலருக்கு உதவி செய்து வருகிறார். இது தான் அவரை மற்ற ஸ்டார்களிடமிருந்து தனித்துவப்படுத்துகிறது. திரையில் அவர் ரெபெல் ஸ்டார், திரைக்குப் பின்னால் உன்னதாமான மனிதர்.
மெகா லைன்அப் மற்றும் அடுத்தடுத்த தொடர் வெளியீடுகள்
பிரபாஸ் பல்வேறு வகை படங்களில் நடித்து தனது மாறுபட்ட நடிப்புத் திறமையை நிரூபித்திருக்கிறார். அவரின் அடுத்த படங்களாக தி ராஜா சாப் (ஜனவரி 9, 2026), சலார்: பாகம் 2 – ஷௌர்யாங்க பர்வா, போலீஸ் டிராமா ஸ்பிரிட், கல்கி 2898 AD: பாகம் 2, மற்றும் வரலாற்று டிராமா திரைப்படம் ஃபௌஜி ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. கல்கி 2898 AD மற்றும் சலார்: பாகம் 1 – சீஸ்ஃபயர் ஆகியவை ஒரே ஆண்டில் வெளியானது, அவரின் நிலைத்தன்மை மற்றும் உறுதியைக் காட்டுகிறது.
1000 கோடி வசூல் சக்தி! பாகுபலி போன்ற படங்கள் பிரபாஸை உலகளவில் அறிமுகப்படுத்தின. மிகப்பெரிய கனவுகளைக் கொண்ட எந்த இயக்குநருக்கும் முதலில் நினைவில் வருவது பிரபாஸ்தான். கல்கி 2898 AD, பாகுபலி போன்ற படங்கள் தொடர்ந்து ₹1000 கோடியை தாண்டி வசூலை பதிவு செய்துள்ளதால், அவர் “மெகா விஷன்” கொண்ட படங்களுக்கு இயல்பான தேர்வாக மாறியுள்ளார்.
ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபுடி, பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் – “ஃபௌசி” டைட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியானது !
ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !! அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
“ஃபௌசி” (Fauzi) எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. உறுதியான, அழகிய வடிவமைப்பில் இருக்கும் தலைப்பு டிசைன், வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர்களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன. போஸ்டரில் பின்னணியில் காணப்படும் சமஸ்கிருத சுலோகங்கள் மற்றும் குறியீட்டு வடிவங்கள், இந்தக் கதையில் உள்ள புராண மற்றும் வரலாற்று அடுக்குகளைக் குறிக்கின்றன. குறிப்பாக மகாபாரதத்தில் கர்ணன் பற்றிய குறிப்புகள், விசித்திரமான விதியை எதிர்கொள்ளும் நாயகனின் பாத்திரத்தை வலியுறுத்துகின்றன.
அந்த சுலோகங்கள் அவர் பார்த்தா (அர்ஜுனன்) போல பத்மவ்யூஹத்தை வென்றவர், கர்ணன் போல வீரத்துடன் இருந்தாலும் பாண்டவர்களின் பக்கத்தில் நிற்பவர், ஏகலைவன் போல குருவின்றி பிறந்த இயற்கை வீரன் எனக் கூறுகின்றன. அவர் ஒரு பிராமணனின் ஞானத்தையும், ஒரு சத்திரியனின் தர்மத்தையும் இணைத்து நிற்பவர் — இதுவே நாயக கதாப்பாத்திரத்தின் உண்மையான குணம்.
பிரபாஸ் குளோசப் ஷாட்டில், கடும் உறுதியான பாவனையில் வீரத்தை வெளிப்படுத்துகிறார். அவரது கண்களில் தெரியும் தீவிரம், கூர்மையான மீசையுடன் கூடிய தோற்றம், தன்னுடைய கடமைக்காக உயிர் அர்ப்பணிக்கும் வீரனின் உருவத்தை எடுத்துக்காட்டுகிறது. “A Battalion Who Walks Alone” எனும் டேக்லைன், ஒரு தேசத்தின் போராட்டத்தை தனியாக சுமக்கும் வீரனின் தனிமையும், அதே சமயம் அவனது உறுதியையும் பிரதிபலிக்கிறது.
““ஃபௌசி” போஸ்டர் எதிர்பார்ப்பைத் தாண்டி, ஒரு மாபெரும் திரை அனுபவத்திற்கான ஆவலைத் தூண்டுகிறது. உணர்ச்சியும் பிரமாண்டமும் கலந்த ஹனு ராகவபுடியின் தனித்துவமான பாணியில், இந்த படம் பிரபாஸை இதுவரை இல்லாத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் காண்பிக்கவுள்ளது.
இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமன்வி ( Imanvi ) நடிக்கிறார். மேலும் மிதுன் சக்ரபோர்த்தி (Mithun Chakraborty) , அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். நவீன் எர்நேனி மற்றும் Y. ரவி சங்கர் தயாரிப்பில் உருவாகும் “ஃபௌசி” , திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டுள்ளது – ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜீ (ISC) செய்கிறார்.விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அநில் விலாஸ் ஜாதவ் புரடக்சன் டிசைன் பணிகளை கவனிக்க, கோதகிரி வெங்கடேஸ்வரராவ் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.
அதிரடி போஸ்டருடன், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஃபௌசி”, ஒரு சாதாரண பான்-இந்தியா படம் அல்ல, பிரபாஸின் சினிமாப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கவுள்ள காவியம்!
ஃபௌசி திரைப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் வங்காள மொழிகளில் வெளியாகவுள்ளது.
நடிப்பு : பிரபாஸ், இமன்வி, மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : ஹனு ராகவபுடி தயாரிப்பு நிறுவனம் : மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்கள் : நவீன் எர்நேனி, Y. ரவி சங்கர், பூஷன் குமார் ஒளிப்பதிவு : சுதீப் சட்டர்ஜீ (ISC) இசை : விஷால் சந்திரசேகர் புரடக்சன் டிசைனர் : அனில் விலாஸ் ஜாதவ் எடிட்டிங் : கோதகிரி வெங்கடேஸ்வரராவ் பாடல் வரிகள் : கிருஷ்ணகாந்த் நடன அமைப்பு : பிரேம் ரக்ஷித் உடை வடிவமைப்பு : ஷீதல் இக்பால் சர்மா, T.விஜய் பாஸ்கர் VFX : RC. கமலக்கண்ணன் பப்ளிசிட்டி டிசைனர்கள் : அனில் – பானு மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ (First Show)
காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.
ரிஷப் ஷெட்டியின் இந்த ஆன்மீகப் பயணம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தொடங்கியது. அங்கு அவர் சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து தனது நன்றியைத் தெரிவித்தார். பின்னர் அவர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் — “தக்ஷன காசி” என்று அழைக்கப்படும் தலத்திற்கு சென்று, அமைதி, வளம், மற்றும் அருள் வலிமைக்காக பிரார்த்தனை செய்தார்.
அதன் தொடர்ச்சியாக, ரிஷப் ஷெட்டி இந்தியாவின் மிகப் புனித நகரங்களில் ஒன்றான காசிக்கு (வாரணாசி) பயணம் செய்து, அங்கு கங்கா ஆரத்தியில் பங்கேற்று, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.
தக்ஷன காசியிலிருந்து காசிவரை அவரின் இந்த ஆன்மீகப் பயணம், பக்தி, நன்றியுணர்வு மற்றும் நம் மரபை போற்றும் வெளிப்பாடாக திகழ்கிறது — இது காந்தாரா சேப்டர் 1 திரைப்படம் பிரதிபலிக்கும் அதே ஆன்மீக சாரத்தையும் இந்தப்பயணம் வெளிப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் இருந்து இப்படத்தின் மீது காட்டப்படும் அன்புக்கும் ஆதரவுக்கும் காந்தாரா குழுவினர் பெரும் மகிழச்சியோடு, இந்தச் சினிமாவை ஒரு கலாச்சார மற்றும் ஆன்மீக நிகழ்வாக மாற்றியதற்கு, மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறார்கள்.