Cinema

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’

இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்

நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ பதிவு அமைப்பான‌ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அலுவலர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ படக்குழுவினர் உற்சாகமாகக் கொண்டாடி, இமான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இமானின் தந்தை ஜெ. டேவிட், மனைவி அமேலியா மற்றும் மகள் நேத்ரா ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இமான், இன்ப அதிர்ச்சிக்கு பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது 23 வருட சினிமா பயணத்தில் இந்த பிறந்தநாள் மறக்க முடியாததாக இருக்கும் என்றார். “இத்தனை வருடங்களில் நான் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருக்கிறேன். சில பிறந்தநாள்கள் மகிழ்ச்சியாக இருந்தன, சில அப்படி இருந்ததில்லை, ஆனால் இந்த பிறந்தநாள் என் இதயத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பார்த்திபன் சாருடன் பணியாற்றுவது கடினம் என்று பலர் சொன்னார்கள், ஆனால் அவர் மிகவும் கூலாக‌ இருக்கிறார். சினிமா மீதான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் அசாதாரணமானது. ‘டீன்ஸ்’ படத்திற்கு ஓரிரு பாடல்கள் மட்டும் போதும் என்று முதலில் நினைத்தோம், கடைசியில் எட்டு பாடல்களை உருவாக்கி உள்ளோம். அவற்றில் பெரும்பாலானவை பார்த்திபன் சாரே எழுதியவை. நாங்கள் இருவருமே வித்தியாசத்தை விரும்புவர்கள், எனவே நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் இணைந்து பணியாற்றினோம். சில பாடல்களில் அவர் திருப்தி அடைந்த பிறகும், நான் அவற்றை மேலும் மேலும் மெருகேற்றுவேன். பத்திரிகையாளர்கள் தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பாராட்டுகளால் இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்து வருகிறார்கள். ‘டீன்ஸ்’ படத்திற்கு ஆதரவு தருமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

உலக சாதனைகள் அமைப்பின் அலுவலர் ஷெரிபா கூறுகையில், “திரைப்படத்துறையில் புதிய சாதனையை ‘டீன்ஸ்’ படைத்துள்ளது. இதற்காக படக்குழுவினரை மனதார வாழ்த்துகிறோம். இது ஒரு பெரிய சாதனை,” என்றார்.

உலக சாதனை அமைப்பின் பிராந்திய தலைமை அலுவலர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் கூறுகையில், “இந்த சாதனைக்கான சான்றிதழை ‘டீன்ஸ்’ குழுவினருக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உலகத்திலேயே முதல் முறையாக இத்தகைய ஒரு முயற்சியை ‘டீன்ஸ்’ குழு வெற்றிகரமாக‌ மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

‘டீன்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித் தண்டபாணி, இசையமைப்பாளர் இமானுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் உலக சாதனை படைத்ததற்காக‌ ‘டீன்ஸ்’ குழுவுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் கால்டுவெல் வேள்நம்பி பேசுகையில், “இமானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘டீன்ஸ்’ படத்துக்கு சிறப்பான பங்களிப்பை அவர் அளித்துள்ளார். பார்த்திபன் மற்றும் அவரது குழுவினர் 10 படங்களுக்கு தேவையான உழைப்பை இந்த ஒரு படத்திற்கு கொடுத்துள்ளனர். அவரது கடின உழைப்பு என்றென்றும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்,” என்றார்.

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது உரையில், “நான் கடந்த 33-34 வருடங்களாக சினிமா துறையில் இருக்கிறேன். வித்தியாசமான படங்களை உருவாக்குகிறேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள். சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்கிறேன். அதனால், ‘ஒத்த செருப்பு’, ‘இரவின் நிழல்’ படங்களுக்குப் பிறகு இப்போது ‘டீன்ஸ்’ செய்கிறேன். இந்தப் படத்தின் முதல் பார்வையை திரையரங்குகளில் வெளியிட நினைத்தேன், ஆனால் அதற்கு சென்சார் சான்றிதழ் தேவைப்பட்டது. சென்சார் அதிகாரிகளை நான் அணுகியபோது, ஒரு படத்தின் முதல் பார்வைக்கு சான்றிதழ் அளிப்பது இதுவே முதல்முறை என்றார்கள். உடனடியாக நான் அதை பெறுவதற்கான வேலையை செய்தேன், இப்படித்தான் இது சாத்தியமானது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தான் ‘டீன்ஸ்’ உருவாவதற்கு முக்கிய காரணம். ‘இரவின் நிழல்’ படத்தை அவர்கள் தான் தயாரித்தனர். முதல் நான்-லீனியர் சிங்கிள்-ஷாட் படம் என்ற அங்கீகாரத்தை அது எனக்குக் கொடுத்தாலும், அவர்களுக்கு அதிகப் பணத்தை ‘இரவின் நிழல்’ ஈட்டித் தர‌வில்லை. ஆனாலும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ‘டீன்ஸ்’ படத்தைத் தயாரிக்க முன்வந்தார்கள். இந்தப் படம் அவர்களுக்கு லாபம் தரும் என்று நம்புகிறேன். ஏனென்றால் 13 குழந்தைகளை முக்கிய வேடத்தில் நடிக்க‌ வைத்து குழந்தைகளுக்காக இந்தப் படத்தைத் உருவாக்கியுள்ளேன்.
இந்தப் படம் சோதனை முயற்சியாக‌ இருக்காது, அதே சமயம் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இளையராஜா சார், ஏ.ஆர். ரஹ்மான் சார் மற்றும் சி. சத்யா சார் ஆகியோருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். இமானுடன் நீண்ட காலமாக பணியாற்ற விரும்பினேன், அது இப்போது தான் நடந்துள்ளது. ‘மைனா’ நாட்களில் இருந்து அவரை நான் ர‌சிக்கிறேன். பாடல் வரிகளுக்கு அதிக முக்கியத்துவத்தை இமான் கொடுக்கிறார். ‘டீன்ஸ்’ படத்தின் தூண்களாக‌ ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரியும் மற்றும் இமானும் திகழ்கிறார்கள். முதல் பார்வையில் அசத்தலான காட்சிகளை பார்த்திருப்பீர்கள். ஏழு சிறந்த பாடல்களை இமான் கொடுத்துள்ளார். பின்னணி இசையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க ஆவலாக உள்ளேன். எனது அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற நினைத்தேன், ஆனால் இப்போது இமானுடன் தொடர்ந்து பணிபுரிய‌ முடிவு செய்துள்ளேன். அவருடைய அர்ப்பணிப்பு அவ்வாறனது. இத்தனை ஆண்டுகளில் எனது ஒவ்வொரு முயற்சியையும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறார்கள். ‘டீன்ஸ்’ படம் வெளியாவதற்கு முன்பே உலக அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.”

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் முதல் முறையாக முருகன் பாடல்

யோகிபாபு மற்றும் நட்டி வெளியிட்ட பக்தி பரவசமூட்டும் ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது

சமீபத்தில் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, முருகப்பெருமான் குறித்த பக்தி பரவசமூட்டும் பாடல் ஒன்றுக்கு முதல் முறையாக இசையமைத்துள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குந‌ர் பவண் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலை தைப்பூசத்தை முன்னிட்டு வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. முன்னதாக, ஆடியோவாகவும், வீடியோவாகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ள இந்த பாடலை பிரபல நடிகரும் முருக பக்தருமான யோகிபாபுவும், பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டியும் வெளியிட்டனர்.

‘சூப்பர் சிங்கர்’ வெற்றியாளர் ஸ்ரீநிதா மற்றும் சூப்பர் சிங்கர் ‘செல்லக்குட்டி பேபி’ அக்ஷரா லஷ்மி பாடியுள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடல் உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் மெய் சிலிர்த்து கொண்டாடும் வகையில் உருவாகியுள்ளது.

இந்த பாடலைப் பற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறுகையில், “வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் மூலம் வெளியாக உள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடல் முருக கடவுளின் பாடல்களில் வரும் காலங்களில் முக்கிய இடத்தை பெறும். முருகப்பெருமானைப் பற்றி குழந்தைகள் கூட பக்தியோடு பாட வேண்டும் என்ற நோக்கத்தில் எளிய மெட்டில், எளிய தமிழில் இதை உருவாக்கியிருக்கிறோம். இந்த பாடலை கேட்டு தைப்பூசத்தில் முருகனை தரிசனம் செய்து, முருக பக்தியில் எந்நாளும் திளைத்திடுவோம்,” என்றார்.

பாடலை எழுதிய இயக்குநர் பவண், “இந்த வாய்ப்பை மிகப்பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். சொல்ல சொல்ல இனிக்கும், அள்ள அள்ள அருளும் முருகப்பெருமானை பற்றிய அருமையான பாடல் அவன் அருளாலே மிகவும் சிறப்பாக உருப்பெற்றுள்ளது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,” என்றார்.

நடிகர் யோகிபாபுவும், நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டியும் வர்ஷேனியம் ரிகார்ட்ஸ் லேபிளில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள ‘முருகனே செல்ல குமரனே’ பாடலை வெளியிட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொங்கல் விழாவில் உசிலம்பட்டி மக்களை மகிழ்வித்த இசையமைப்பாளர் இமானுக்கு 6 இயக்குநர்கள் இணைந்து வழங்கிய நினைவுப் பரிசு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த FRIENDS FILM FACTORY & BUTTERFLY NETWORK இணைந்து நடத்திய BUTTERFLY CARNIVAL விழாவிற்கு வருகை தந்து உசிலம்பட்டி கிராம மக்களை சந்தோஷப்படுத்தி விருதுகள் வழங்கி ஊர் மக்களை மகிழ்ச்சியடைய செய்தார் இசையமைப்பாளர் D.இமான்.

அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று தைப்பூச திருநாளில் இயக்குநர் ராஜேஷ்.M, பொன்ராம், செல்லாஅய்யாவு, குருரமேஷ், ஆனந்த் நாராயண், M.P.கோபி ஆகிய 6 இயக்குநர்கள் சேர்ந்து ஆறு படை முருகனை வேண்டி FRIENDS FILM FACTORY TEAM சார்பாக அவருக்கு நன்றி தெரிவித்து நினைவு பரிசு கொடுத்தார்கள்.

இதை பெற்று கொண்ட இசையமைப்பாளர் D.இமான் அவர்கள், “என் அம்மா இப்போது எங்களுடன் இல்லை, ஆனால் இந்த நினைவு பரிசு மூலமாக என் அம்மா என் குடும்பத்தார்களுடன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பது போல் உணர்கிறேன்” என்று நெகிழ்ந்து பெருமிதம்கொண்டார், மேலும் நினைவு பரிசு கொடுத்த 6 இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  “ஆத்மா”!!

இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் திரில்லர் “ஆத்மா”!!

KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.  

ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார்.  K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார்  நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய   வேடங்களில் நடிக்க,  ஃபிலிப்பினோவைச் சேர்ந்த  நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

இப்படம் முழுமையாக துபாய் நாட்டில்  படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்  இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE. நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.

முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

தொழில் நுட்பக் குழு
இயக்கம் –  சுகீத்
கதை திரைக்கதை –  ராகேஷ் N சங்கர் ,
வசனம் –  K சந்துரு
இசை – மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார்
ஒளிப்பதிவு – விவேக் மேனன்
எடிட்டிங் – நவீன் விஜயன்
தயாரிப்பு – நஜீப் காதிரி
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – பதேருதீன் பனக்கட்
மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5 !!

அற்புத அனுபவத்திற்குத் தயாராகுங்கள் :

~ ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் மற்றும் சாம் பகதூர் கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார்.

~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று ஜனவரி 26 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, விக்கி கௌஷல் நடித்த, சாம் பகதூர் படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்திருக்கிறது. இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படத்தை, ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP production நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் சாம் மானெக்ஷாவின் அசாதாரண வாழ்க்கையை, அவரின் நம்ப முடியாத போர் சாகசங்களை விவரிக்கிறது, அவரது ஆரம்ப நாட்களில் இராணுவத் தளபதியாக இருந்து, அவரது ஓய்வு வரை, அவரது புகழ்பெற்ற பயணத்தின் மைல்கற்கள் மற்றும் வெற்றிகளை இப்படம் விரிவாக சொல்கிறது. விக்கி கௌஷலுடன் பாத்திமா சனா ஷேக், ஷான்யா மல்ஹோத்ரா, முகமது போன்ற நட்சத்திர நடிகர்களுடன் ஜீஷன் அய்யூப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சாம் பகதூர் திரைப்படம் சாம் மானெக்ஷாவின் புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய இராணுவ அதிகாரியாக அவர் ஆவதற்கான, அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை, உண்மையாக ஆராய்கிறது. இப்படம். 75வது குடியரசு தின நன்நாளில், ஒரு அஞ்சலியாக இந்த சினிமா உருவாகி வந்துள்ளது. ஒரு தலைசிறந்த படைப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் ஒரு உண்மையான ஹீரோவின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தும் அஞ்சலியாக இப்படம் இருக்கும். நான்கு தசாப்தங்களில் ஐந்து போர்களில் கலந்துகொண்டு சேவை செய்த, இந்திய இராணுவத்தின் ஒரு அடையாளமான சாம் மானெக்ஷாவின் பிரமிப்பான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.

இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மானெக்ஷாவின் இணையற்ற இராணுவ பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அவரது வீரம், புத்திசாலித்தனம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்தத் திரைப்படம் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளின் சிக்கலான இயக்கங்களையும் கூடவே ஆராய்கிறது. தேசத்திற்காக சாம் மானெக்ஷா தந்த பங்களிப்புகளைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது. விக்கி கௌஷலின் மிகச்சிறப்பான நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

ஒரு திரைப்படத்தின் வெற்றி பல்வேறு முனைகளில் அதன் ஒட்டுமொத்த ஈர்க்கும் தரம், ஆகிய அனைத்தையும் கொண்டுள்ள இப்படம், வரலாற்றினை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறனில் அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. இப்படம் பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக அமையும். சாம் பகதூர் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியராக ZEE5 இல் ஜனவரி 26 ஆம் தேதி பிரத்தியேகமாக வெளியாகிறது. ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் குடியரசு தினம் என்பது ஒரு ஆழமான உணர்வைத் தரக்கூடியது. இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு நன்நாளில் சாம் பகதூர் படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நம் தேசத்தின் உணர்வோடு எதிரொலிக்கும் இதுபோன்ற சொல்லப்படாத கதைகளை, எங்கள் பார்வையாளர்கள் விரும்புகிறார்கள், மேலும் அவர்களுக்குப் பொருத்தமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுதுபோக்குகளை வழங்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தப் படம் ஒரு உண்மையான நிஜவாழ்வு ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்தும் படம். ரோனி ஸ்க்ரூவாலா புரொடக்‌ஷன்ஸ் உடனான எங்கள் கூட்டணி மிகவும் மகிழ்ச்சிகரமானது. அவர்களுடனான கூட்டணி, தேஜஸ் மற்றும் சாம் பகதூர் போன்ற தேசபக்தி திரைப்படங்களை மீண்டும் வழங்க எங்களுக்கு உதவியது. சாம் பகதூர் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, பார்வையாளர்கள் எங்கள் தளத்திலும் இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா கூறுகையில், “சாம் பகதூர் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் இண்டஸ்ட்ரியில் இருந்து ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் ஐடியா எனக்குள் வந்தது, இப்போது இந்த திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது, எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. ஐகான்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், அவர்களின் கதைகளைக் கொண்டாட நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். துணிச்சலான ஹீரோவான சாம் மானெக்ஷாவின் உத்வேகம் தரும் கதையை வெளிக்கொணரவும், அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் எனது தாழ்மையான முயற்சி தான் இந்த படம். ZEE5 உடன் இணைந்து இந்த அழகான கதையை, உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சி. இந்த படத்தின் மூலம் நாங்கள் மேற்கொண்ட பயணத்தை, பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

இயக்குநர் மேக்னா குல்சார் கூறுகையில், “இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்குவது எனக்கு ஒரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது, அதை நான் ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். சாம் பகதூர் கதை பார்க்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே, விக்கி கௌஷல் அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நான் அறிந்தேன். ஈடு இணையற்ற நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் தந்துள்ளார். இலட்சியங்களும் அதை வாழ்ந்து காட்டும் முன்மாதிரிகளும் காலத்தைக் கடந்தவர்கள், யாராவது ஒருவர் உண்மை மற்றும் நேர்மையுடன் வாழ்ந்தால், அது காலத்தைக் கடந்து நிற்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ZEE5 மூலம் இந்த சொல்லப்படாத கதையை இன்னும் அதிகமான பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படம் என்னையும் சாம் பகதூரின் ஒட்டுமொத்த குழுவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியதைப் போல், பார்வையாளர்களின் மனதிலும் ஆழமாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.

நடிகர் விக்கி கௌஷல் கூறியதாவது.., “சாம் மானெக்ஷாவின் கதாபாத்திரத்தில் நடித்தது, மிகவும் பெருமையும் மரியாதையும் நிறைந்த ஒரு நம்பமுடியாத பயணமாகும். அத்தகைய துணிச்சலான மற்றும் புகழ்பெற்ற ஆளுமையைத் திரையில் பிரதிபலிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்காகக் கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்படத்தின் திரையரங்க வெளியீட்டின் போது ரசிகர்கள் கதாபாத்திரத்தின் மீது பாச மழை பொழிந்தனர்.

ZEE5 இல் நிகழும் இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர், இக்கதையைப் பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல உதவும். எனவே 75வது குடியரசு தினத்தில் சாம் பகதூர் படம் மூலம் நம் தேசத்திற்கு அழியாத அஞ்சலி செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இது ஒரு படம் மட்டுமல்ல; இது பார்வையாளர்களுடன் பகிரப்படும் ஒரு பெரும் பயணம், இப்படம் மூலம் பார்வையாளர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.” 26 ஜனவரி 2024 முதல் ZEE5 இல் சாம் பகதூர் ஸ்ட்ரீமிங்கைப் கண்டுகளிக்கலாம்.

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியீடு

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் இடம் பெறும் வசனங்களும், அதிரடி காட்சிகளும், ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ஆக்சன் அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

‘பதான்’- ஓராண்டு நிறைவு ! ‘ஜவான்’- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான ‘டங்கி’ திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்…2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.!

ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத்தொடர்ந்து ‘ஜவான்’, ‘டங்கி’ என பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து இந்த ஆண்டு முழுவதும் திரையுலகில் ஆட்சி செய்து ஆதிக்கம் செலுத்தினார்.

இந்நிலையில் ‘பதான்’ வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும், ஷாருக்கானின் ‘ஜவான்’, ‘டங்கி’ என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை வழங்கியதால் அவரது ரசிகர்கள் ஷாருக்கின் படங்களை நினைவுக்கூறுகிறார்கள்.

பதானுக்கு பிறகு ஷாருக்கான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவானை வழங்கினார். இது ஒரு மெகா பான் இந்திய பிளாக் பஸ்டராக மாறியது. பவர் பேக் ஆக்ஷனுடன் கூடிய ஷாருக்கானின் கதாபாத்திரத்தையும் அவரது திரை தோற்றத்தையும் இதற்கு முன் ரசிகர்கள் பார்த்ததில்லை. ஜவானும் பல சாதனைகளை முறியடித்தது. ₹1,148.32 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அதிக அளவில் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.

தொடர்ந்து இரண்டு அதிரடி ஆக்சன் பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய பிறகு ஷாருக்கான் மனதைக் கவரும் மகத்தான படைப்பான ‘டங்கி’யை வழங்கினார். இந்த படத்தின் மூலம் மில்லியன் கணக்கிலானவர்களின் இதயங்களை தொட்டார். திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்களின் பெருங்கூட்டத்தை ஈர்த்தார். அத்துடன் வெளிநாட்டில் வாழும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை தாயகம் திரும்பும் உணர்வையும் தூண்டினார். இத்திரைப்படம் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் இது வரை 450 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ ஆகிய படங்களின் மூலம் ஒரே வருடத்தில் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து ஷாருக்கான் சாதனை படைத்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கான் நடிப்பில் வெளியானவை. இத்தகைய சாதனையை படைத்த ஒரே நடிகர் ஷாருக்கான் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இதன் மூலம் நடிகர் ஷாருக்கான், தனக்கு தான் தான் மிகப்பெரிய போட்டியாளர் என்பதை மீண்டும் நிரூபித்து, புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.

விஷ்ணு விஷால் & இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி!!

கட்டா குஸ்தி திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி!! விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், இந்த புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது தயாரிப்பாக (VVS11) உருவாகிறது.

குடும்ப பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “கட்டா குஸ்தி” திரைப்படம், கடந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தின் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. மேலும் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இந்தியாவில் கடந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படமாகவும், தமிழ் மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய வெற்றியைத் தந்த, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் என மாறுபட்ட களங்களில், தரமான வெற்றிப்படங்களைத் தந்து வரும், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது படைப்பாக, இப்படம் உருவாகிறது.

மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும்.

இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘ஹார்ட் பீட் – ரிதம் ஆஃப் லைஃப்’ சீரிஸை அறிவித்துள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான “மத்தகம் மற்றும் லேபிள்” சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸுக்கு, ரசிகர்களிடம் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சீரிஸின் டைட்டிலை ஒரு அழகான சிறிய வீடியோவில், டைட்டில் தொடரின் பெயர் மற்றும் அதன் கவர்ச்சியான, ‘ரிதம் ஆஃப் லைஃப்’ எனும் டேக் லைனுடன் வெளியிட்டது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது

“ஜெய் ஹனுமான்”

இயக்குநர் பிரசாந்த் வர்மா, ராமர் கோவில் திறப்பு விழாவினை முன்னிட்டு இந்த அற்புத சந்தர்ப்பத்தில், PVCU யுனிவர்ஸிலிருந்து மற்றொரு காவிய, சாகசத்திரைப்படமான, “ஜெய் ஹனுமான்” படத்தின் முன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளார் !!

ராமர் கோவில் திறப்பு நன்நாளில், PVCU யுனிவர்ஸிலிருந்து, அடுத்த அதிரடியாக “ஜெய் ஹனுமான்” பட முன் தயாரிப்பு பணிகள் துவக்கம் !!

பிரசாந்த் வர்மா ஜெய் ஹனுமான் எனும் அடுத்த படத்தின் தலைப்பை தற்பொது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின் முடிவில் அறிவித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஹனுமான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை இயக்குநர் ஏற்கனவே முழுமையாக தயார் செய்துவிட்டார். பிரமாண்டமான ஃபேண்டஸி உலகில், சூப்பர்மேன் சாகஸ கதைகளைச் சொல்லும் இப்படம், மிகப்பெரும் பட்ஜெட்டில் உலத்தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன், முன் எப்போதும் இல்லாத, புதுமையான திரை அனுபவத்தை வழங்கும்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இப்படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷனைத் தொடங்க, அற்புதமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் முக்கிய நாளில், பிரசாந்த் வர்மா ஹைதராபாத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்றார். படத்தின் ஸ்கிரிப்ட் அனுமன் சிலையின் முன் வைக்கப்பட்டு, இத்திரைப்படத்திற்காக ஆசீர்வாதம் வாங்கப்பட்டது. முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்க, இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதில், படக்குழு உற்சாகமாக உள்ளனர்.

இந்நிகழ்விலிருந்து ஒன்றிரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அப்புகைப்படங்களில் ஒன்று, பிரசாந்த் வர்மா தெய்வத்தின் முன் நின்று ஸ்கிரிப்டை வைத்திருப்பதைக் காட்டினால், மற்றொன்று அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமான்’ படத்தின் கடைசி காட்சியைக் காட்டுகிறது.

இப்பிரம்மாண்ட படைப்பினை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும்.