Cinema

நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் – ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இவ்விழாவில் படக் குழுவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் முருகானந்தம் பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், அதற்கு காரணமாக திகழ்ந்த ஊடகத்தினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட நாட்கள் கழித்து நான் நடித்த இந்த திரைப்படத்தை குடும்பத்தினருடன் சென்று பார்க்கும்படி என்னுடைய உறவினர்களிடம் சொன்னேன். அவர்களும் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக நல்லதொரு படத்தில் நடித்திருக்கிறீர்கள் என பாராட்டினார்கள். இதற்கு காரணமாக இருந்த இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தில் மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் ஐயா செய்திருந்த மேஜிக் என்னை பிரமிக்க வைத்தது.

இந்தப் படத்தில் அருள் தாஸும், நானும் நடித்திருக்கும் காட்சிகளுக்கு ரசிகர்களின் வரவேற்பினை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தத் திரைப்படத்தில் விக்ரம் பிரபு மொட்டை மாடியில் இருந்து ஒரு வசனம் பேசுவார். ‘கடைசியில் இரண்டு பக்கமும் பாதிக்கப்பட்டது நான்தான்..’ என்று பேசும்போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருந்தது. ஆக்ஷனும், மென்மையும் கலந்த அவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினர்.

பெரிய படம் ஓடும்… சின்ன படம் ஓடாது… என்ற கருத்து வேறுபாடுகள் இருக்கும் தருணத்தில் நல்ல படம் ஓடும் என்று நிரூபித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” அண்மையில் இப்படக்குழுவினருடன் மதுரைக்கு பயணித்த போது தான் நடிகர் அருள்தாஸின் நெருக்கமான நட்பு கிடைத்தது. அற்புதமான மனிதர். அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களை பார்த்து அவரைப் பற்றி தவறாக நினைத்து இருந்தேன். அவருடன் பழகும் போது தான் அவருடைய மற்றொரு முகம் தெரிந்தது.

இயக்குநர் சண்முக பிரியன் தன்மையான ஆத்மார்த்தமான படைப்பாளி. இந்தப் படத்தின் மூலம் ஷான் ரோல்டன் என்ற கலைஞன் அவருக்கு நண்பனாக கிடைத்திருக்கிறார். திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தபோது ஷான் ரோல்டனை பற்றி இயக்குநர் விவரித்த தருணங்கள் மறக்க முடியாதவை.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுடன் இணைந்து இந்த ஆண்டு விகடன் விருதினை பெற்றதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இன்னும் அவருடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

விக்ரம் பிரபு உடன் நான் பணியாற்றும் மூன்றாவது படம் இது. இந்த படத்தில் அவர் மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார். உங்களுடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன். விக்ரம் பிரபு உடன் இணைந்து பணியாற்றுவதை என் தந்தையார் உயிருடன் இருந்திருந்தால் மனதார பாராட்டிருப்பார். தற்போது அவருடைய ஆத்மா என்னை பாராட்டும் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் நான் பணியாற்றுவதற்கு தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தான் முதன்மையான காரணம். இந்தப் படத்தின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

நடிகை மீனாட்சி தினேஷ் பேசுகையில், ” நீண்ட நாட்களாக தமிழில் நல்லதொரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். இந்தப் படத்தில் ராதா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த கதாபாத்திரத்தை உணர்ந்து மகிழ்ச்சியுடன் நடித்தேன். படப்பிடிப்பு அனுபவம் முழுவதும் மறக்க முடியாததாக இருந்தது. இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் இசை என் கதாபாத்திரத்தை மேம்படுத்துவது போல் இருந்தது. விக்ரம் பிரபு மற்றும் சுஷ்மிதா பட் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி ” என்றார்.

நடிகை சுஷ்மிதா பட் பேசுகையில், ” இந்தத் திரைப்படம் வெளியான பிறகு நிறைய திரையரங்குகளுக்கு நேரில் சென்ற போது ரசிகர்களின் வரவேற்பு எங்களை சந்தோஷப்படுத்தியது. படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் கழித்து ஒரு குடும்பத்தினருடன் அனைவரும் சந்தோஷமாக பொழுதைக் கழித்தோம் என்று உற்சாகத்துடன் சொன்னார்கள். அத்துடன் நீங்கள் காட்டியது போல் எங்களுடைய குடும்பத்திலும் சில உறவினர்கள் இருக்கிறார்கள் என்று உரிமையுடன் குறிப்பிட்டார்கள்.

நான் நடித்திருந்த அம்பிகா கதாபாத்திரத்திற்கு எப்படி வரவேற்பு அளிப்பார்கள்? என்று பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் இந்த கதாபாத்திரத்தை இயக்குநர் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். அதற்கான வரவேற்பும் நான் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருந்தது. இதற்காகவும், என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்காகவும் இந்த தருணத்தில் இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை மீனாட்சி தினேஷ் அற்புதமாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் ராம் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விக்ரம் பிரபுவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த படத்தின் வெற்றிக்கு ஷான் ரோல்டனின் இசையும் ஒரு காரணம். அத்துடன் இந்த படத்தின் பாடலுக்கான வரிகளை கேட்கும்போது புரிந்து ரசித்தனர். இந்தப் படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கும் , உழைத்த படக் குழுவினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி படமாக்கிய ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் நன்றி.

இந்தத் தருணத்தில் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய நண்பன் சண்முக பிரியன் முதல் முதலாக ‘லவ் மேரேஜ் ‘ படத்தை இயக்குகிறார். அந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தினர். இதற்காக படத்தின் பட்ஜெட்டை விட கூடுதலாக செலவழித்தார்கள். பஸ், ரயில், பஸ் ஸ்டாண்ட் என இந்த படத்தை எங்கெங்கு விளம்பரப்படுத்த முடியுமோ அங்கெல்லாம் விளம்பரப்படுத்தி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர்.

சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கடினம் என்ற சூழலில் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலனின் ஆதரவு இருந்ததால் இந்த திரைப்படம் நிறைய திரையரங்குகளில் திரையிட முடிந்தது. இந்தத் திரைப்படத்தை அவர்களால் எந்த அளவிற்கு பெரிய அளவில் திரையரங்குகளில் திரையிடப்பட முடியுமோ.. அந்த அளவிற்கு வெளியிட்டு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் இயக்குநர் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் இயக்குநர் சண்முக பிரியனுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் சண்முக பிரியனின் வெற்றியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் அவர் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

விநியோகஸ்தர் – தயாரிப்பாளர் சக்திவேலன் பேசுகையில், ” இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும், படக் குழுவினருக்கும் விநியோக நிறுவனம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பு நிறுவனத்தினர்… படக் குழுவினர்.. என அனைவரும் பட வெளியீட்டுக்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இவர்கள் அனைவருக்கும் சினிமா நன்றாக தெரிந்திருப்பதால்.. அவர்களுடைய திரைப்படத்தை சரியான முறையில் விளம்பரப்படுத்தி ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தனர்.

ஒரு படம் உருவான பிறகு அந்த படம் வெளியிடும் போதும்.. வெளியீட்டிற்கு பின்னரும் அதனை விளம்பரப்படுத்துவதற்கு ஏராளமான எனர்ஜி தேவை. அதை இந்த குழுவிடம் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன்.

இயக்குநர் சண்முகப்பிரியன் அவருடைய முதல் படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறார் அவர் எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக உயர்வார். அதற்கான முழுமையான முன் தயாரிப்புடன் அவர் களமிறங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தை வெற்றி பெற செய்ததில் ஊடகத்தினருக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது. அவர்கள் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடம் சேர்ப்பித்த காரணத்தினால் தான் நாங்கள் எதிர்பார்த்த ரசிகர்களை விட கல்லூரி மாணவர்களும், குடும்பத்தினரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை வெற்றி பெறச் செய்தனர். இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ‘பராசக்தி’, ‘பருத்தி வீரன்’ ‘கும்கி’ போன்ற படங்களில் அறிமுகமான நடிகர்களுக்கு தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது என திரையுலகினர் சொல்வார்கள். அந்த வகையில் கலை உலகில் மூன்றாம் தலைமுறை சார்ந்த இந்த படத்தின் நாயகனான விக்ரம் பிரபுவுக்கு இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அவருக்கும் என்னுடைய நன்றிகள்” என்றார்.

இயக்குநர் சண்முக பிரியன் பேசுகையில், ” இந்தப் படத்தை வெற்றி படமாக்கிய ஊடகத்தினருக்கும் , ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. இப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் காட்சி திரையிட்ட பிறகு உங்களிடம் இருந்து கிடைத்த வாழ்த்துகளும், அன்பும்.. எனக்கு குழந்தை பிறந்த போது கிடைத்த சந்தோஷத்தை விட அதிகம்.

முதல் படமாக குடும்ப படத்தை இயக்க வேண்டும் என்று தீர்மானித்த போது இந்த கதையை தேர்ந்தெடுத்தேன். அக்காவை கல்யாணம் செய்து கொள்வதற்காக வரும் ஒருவர் தங்கச்சியை திருமணம் செய்து கொள்கிறார். இதை கேட்கும் போது கொஞ்சம் கொச்சையாக இருக்கும். பெண்களை எப்போதும் அழகாக தான் காட்சிப்படுத்த வேண்டும் என என்னுடைய இயக்குநர் ரா. கார்த்திக் சொல்லிக்கொண்டே இருப்பார். இந்தக் கதையில் பெண்ணை இன்னும் அழகாக காட்சிப்படுத்தலாம் என்று அவர்தான் சொன்னார்.‌ அதற்குப் பிறகுதான் இப்படத்தின் திரைக்கதை முழுமையானது. இந்த கதையை எந்தவித மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்ட என் ஹீரோ விக்ரம் பிரபுவிற்கு முதல் நன்றி.
படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டன் கொடுத்த ஆதரவு எல்லையற்றது. அவருக்கும் என் நன்றி.

நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான திரையரங்குகளில் வெளியிட்டதற்காக விநியோகதஸ்தர் சக்திவேலனுக்கும் நன்றி.

படத்தின் பணிகள் நடைபெறும் போது தயாரிப்பாளரும், தொழில்நுட்பக் கலைஞர்களும், நான் எதிர்பார்த்ததை விட கூடுதலான ஒத்துழைப்பை வழங்கினர். படம் வெளியான பிறகு ஊடகத்தினரும், ரசிகர்களும் பேராதரவு அளித்து வருகிறார்கள். இதை பார்க்கும் போது எனக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்காக நான் இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்திற்காக நடிகை சுஷ்மிதாவிடம் பேசும்போது படத்தின் முதல் பாதியில் நீங்கள்தான் ஹீரோயின். அதன் பிறகு படத்தினை விளம்பரப்படுத்தும் போதும் உங்களுடைய பங்களிப்பு தேவை என்று சொன்னேன்.

அதன் பிறகு மீனாட்சியிடம் பேசும்போது நீங்கள் இரண்டாம் பாதியில் இருப்பீர்கள். படத்தினை விளம்பரப்படுத்தும் போது நீங்கள் இடம் பெற மாட்டீர்கள் என்று சொன்னேன்.

முதலில் தயக்கம் காட்டினார்கள். அதன் பிறகு என் மீது நம்பிக்கை வைத்து நடித்தார்கள். அதற்காக இருவருக்கும் நன்றி.

இந்தப் படத்தை நடிகர் பிரபு பார்த்துவிட்டு, விக்ரமை நன்றாக நடிக்க வைத்திருக்கிறாய் என்று பாராட்டினார். இது எனக்கு கிடைத்த சிறந்த பாராட்டாகவே கருதுகிறேன்.

இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளருக்கும் நண்பன் யுவராஜுக்கும் நன்றி ” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இயக்குநர் சண்முகபிரியன் எனது சிறந்த நண்பர் ஆகிவிட்டார். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சற்று கூடுதலாக இந்த படத்தில் உழைத்தோம். வெற்றி பெறுவதற்கான எல்லா அடையாளங்களும் இயக்குநரிடத்தில் இருக்கிறது. இன்னும் அவர் பெரிய வெற்றிகளை தொடுவார்.‌ வர்த்தக ரீதியிலான திரைப்படங்களிலும் அவர் கொடிகட்டி பறப்பார் என்று சொல்லலாம்.
இது போன்ற கதையை தேர்ந்தெடுத்து அதனை முதல் படமாக இயக்குவது சவாலானது. கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் இப்படத்தின் கதையை அவர் நேர்த்தியாக சொல்லியிருந்தார். திருமண விசயத்தில் உள்ள சிக்கல்களை புரிந்து கொண்டு அதனை நல்ல கதாபாத்திரத்தின் மூலமாகவும், அதற்கு பொருத்தமான நட்சத்திர முகங்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருந்தார்.

இப்படத்தில் நடித்த நடிகர்களில் அருள்தாஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்காகவே பிரத்யேகமாக பின்னணி இசையமைத்தேன். அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பது சவாலானதாக இருக்கும். ஒரே மாதிரியான உணர்வை சிறிய சிறிய வேறுபாட்டுடன் அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

எனக்கும் பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் இடையேயான உறவு கலாபூர்வமானது. இந்த உறவு தொடரும்.‌ தமிழ் ரசிகர்களுக்காக கேளிக்கையான பாடல்களை மட்டும் அல்லாமல் வாழ்க்கைக்கான பாடலையும் நாங்கள் இணைந்து வழங்குவோம் என உறுதி கூறுகிறேன்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுக்கும், இயக்குநர் சண்முக பிரியனுக்கும் இடையேயான நட்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன்.

விக்ரம் பிரபு இது போன்ற யதார்த்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருப்பதை பாராட்டுகிறேன். ” என்றார்.

விக்ரம் பிரபு பேசுகையில், ” இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. இப்படம் வெளியான பிறகு திரையரங்கத்திற்கு சென்று ரசிகர்களை சந்திக்கும் வாய்ப்பு இப் படக்குழு மூலம் கிடைத்தது. நீண்ட நாள் கழித்து மதுரைக்கு சென்றிருந்தேன். பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு என்னுடைய பணி நிறைவடைந்தது என்று மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் இந்த படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரை உள்ள திரையரங்கத்திற்கு சென்று ரசிகர்களை சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. சென்னையில் நாங்கள் குழுவாக திரையரங்கத்திற்கு சென்ற போது மிகப்பெரும் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை அவர்கள் எந்த அளவிற்கு அனுபவித்து ரசித்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்கள் இந்தப் படக் குழு மீது காட்டிய அன்பிற்கும் இந்த படத்தின் மீது ஊடகத்தினர் காட்டிய அன்பிற்கும் நன்றி.

நான் ஷான் ரோல்டனின் ரசிகன். இந்தப் படத்திற்கு அவருடைய இசை ஆன்மாவாக இருந்தது. இந்த படத்தின் மூலம் நல்லதொரு ஆல்பத்தை கொடுத்து இருக்கிறீர்கள்.

இந்தப் படத்திற்கு ஹீரோயின்ஸ் இருவரும் இரண்டு பில்லர்கள். அற்புதமாக நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு அப்பா சண்டைக் காட்சிகள் நன்றாக நடித்திருக்கிறாய் என பாராட்டினார். இதுவே எனக்கு மிகப்பெரிய விசயம். இந்தத் திரைப்படத்தை திரையுலகினர் பலரும் பார்த்து ரசித்து விட்டு என்னை பாராட்டினார்கள். இந்த படத்தின் மூலம் ஏராளமானவர்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறேன்.

‘இறுகப்பற்று’ படத்தை பார்த்த பிறகு தான் எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததாக இயக்குநர் சொன்னார். அதற்காக அவருக்கும் நன்றி. எனக்கும் விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நிரூபித்த பிறகு தான் அடுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஏனெனில் டைப் காஸ்ட் என்ற பிரச்சனையில் சிக்கியிருக்கும் நடிகர்களில் நானும் ஒருவர். அதையெல்லாம் உடைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடன் இணைந்து வெளியான அனைத்து திரைப்படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஏனெனில் இது என்னுடைய துறை. சேர்ந்து ஓடினால் நன்றாக இருக்கும். ” என்றார்.

ஜெய் நடிப்பில், “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

BV Frames தயாரிப்பில், பாபு விஜய் இயக்கத்தில், ஜெய் நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் “சட்டென்று மாறுது வானிலை” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

BV Frames சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை” புதிய படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய சமூகத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்சனை ஒன்றை மையமாக வைத்து, காதலும் திரில்லரும் கலந்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.

காவல்நிலையத்தில் காவலர்கள் தாக்க, நாயகன் ஜெய் அடிவாங்கி கதறுவதையும் காட்டும் ஃபர்ஸ்ட் லுக் தற்போதைய சமூகத்தின் நிலையை அப்படியே பிரதிபலித்து, மனதை உருக்குகிறது. மிக ஆழமான வலியைப் பிரதிபலிக்கும் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

பிரபஞ்சம் அடுத்தடுத்து ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். ஒருவன் வாழ்வில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியம், ஆனந்தம், அதிர்வுகள் தான் இக்கதையின் மையம். நம் நாட்டில் நிகழ்கின்ற, தொடர்ந்து நிகழப்போகிற ஒரு பெரும் ஆபத்தினை பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசியுள்ளது. காதலும் களவும் என அன்பின் ஐந்திணையைக் கொண்டு, அழகான ரொமாண்டிக் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரம் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட் சன், கலை இயக்கம் S கண்ணன், தயாரிப்பு மேற்பார்வை V. சிவராமன், உடை வடிவமைப்பு கமலி S மற்றும் P. செல்வம், மேக்கப் அப்துல் ரசாக் மற்றும் அப்துல் ரஷீத், ஸ்டண்ட் மாஸ்டர் முரளி ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.

விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில்  படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.  

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் B.T. அரசகுமார் பேசுகையில், ”இங்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு முதலில் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  
அண்ணன் கே. ராஜன் இங்கு வந்தவுடன் ‘கயிலன்’ படத்தின் கதை என்ன? கிரைம் ஸ்டோரியா? ஃபேமிலி ஸ்டோரியா? எனக் கேட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்கு சென்றேன்.

இந்த படத்தை பற்றி நான் சிந்திப்பதை விட அன்புத்தம்பி அருள் அஜித் சிறப்பாக சிந்தித்திருக்கிறார். மிக சிறந்த திரை காவியமாக கொண்டு வர வேண்டும் என அவர் கடினமாக உழைத்து இருக்கிறார். ‌ அதை நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். உங்களுடன் இணைந்து தான் நானும் இந்த படத்தின் முன்னோட்டத்தை இங்கு பார்த்தேன்.

இந்தப் படத்தின் நாயகி ஷிவதா தங்கமான சகோதரி. ஒவ்வொரு முறையும் பணிவாக நடக்கும் அவருடைய நடவடிக்கைகள் போன்று சினிமாவில் காண்பது அரிது. அவர் இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

நாடக குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவன் நான். எனது தாய் மாமன் வி கே சக்திவேல் மணப்பாறையில் மிகப்பெரிய நடிகர். கலைஞானத்தின் தம்பி போல் பணியாற்றியவர். ‘பெரிய மருது ‘, ‘மிருதங்க சக்கரவர்த்தி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

எனது தாத்தாவும் நாடக நடிகர் தான். அந்த வகையில் என்னுடைய ரத்தத்திலும் கலை உணர்வு ஊறி இருக்கிறது. என்றாவது ஒருநாள் திரைத்துறையில் சாதிக்கலாம் என காத்திருந்தேன்.

1988-89 ஆண்டுகளில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகை தந்த என்னை இயக்குநர் டி. ராஜேந்தர் தான் திசை திருப்பினார். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன்.  ஆனால் இந்த ஆசையை அப்போது கே.பாக்யராஜிடம் தெரிவித்திருந்தால் நடிகராகி இருப்பேன்.  89ம் ஆண்டிலிருந்து தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறேன். ஆனால் தற்போது தான் முதல் முறையாக ‘கயிலன்’ திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும்,  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசுகையில், ”என்னை நம்பி இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி.‌ இந்த திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. எல்லா பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. இப்படத்தின் பின்னணி இசையை ஹரி அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஜூலை 25 வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

பின்னணி இசையமைப்பாளர் ஹரி பேசுகையில், ”இப்படத்தின் கதை சுவராசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. வெளியான பிறகு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். கலைஞர்கள் தங்களுடைய அற்புதமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள்.  அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ”இந்தப் பட முன்னோட்டத்தின் இறுதியில், ‘போராட வேண்டும். போராடினால் தான் அனைத்தும் கிடைக்கும்’ என்ற செய்தி இடம்பெறுகிறது. சினிமாவில் கதையை உருவாக்குவதற்கும் போராட வேண்டும். அந்தக் கதைக்கு ஒரு நாயகனை தேடுவதற்கு ஒரு போராட்டம் வேண்டும். அதை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டும் . அதற்கும் போராட வேண்டும். இதையெல்லாம் கடந்து படத்தின் வெளியீட்டிற்காகவும் போராட வேண்டும்.

நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் இயக்குநர் அஜித் இந்த மேடையில் இருக்கிறார். முதல் காதல், முதல் முத்தம் மறக்க முடியாதது. அது போல் முதல் படமும் முதல் மேடையும் மறக்க முடியாதது.  பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனின் மனநிலையை போன்றது இது. அவருக்குள் இருக்கும் தவிப்பை நான் உணர்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று பெரிய படம் எது சின்ன படம் எது என்று மக்கள் முடிவு செய்கிறார்கள். ஊடகத்தினர் முடிவு செய்கிறார்கள். அதே தருணத்தில் ‘கன்டென்ட் வின்ஸ்’ என்று சொல்வேன். கன்டென்ட் நன்றாக இருந்தால் மக்கள் மிகப் பெரும் அளவில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு கன்டென்ட், அதற்கான ஆய்வு மற்றும் நியாயமான உழைப்பு இருந்தால் மக்களின் ஆதரவு உறுதி. அண்மையில் வெளியான ‘டி என் ஏ’, ‘மார்கன்’ ஆகிய படங்களுக்கும் இது சாத்தியமானது.  

இன்றைய தேதியில் இயக்குநர்களை விட பார்வையாளர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். முதல் காட்சியை இயக்குநர் சொல்லத் தொடங்கியதுமே பார்வையாளன் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என சொல்லி விடுகிறான். அதனால் எந்த இயக்குநர் ரசிகர்களை சிறந்த அறிவாளியாக நினைத்து அவர்களை விட அறிவுபூர்வமாக சிந்தித்து படத்தை இயக்குகிறாரோ அவரது திரைப்படங்கள் தான் வெற்றி பெறும். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இது திரில்லராக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த திரில்லர் அர்த்தமுள்ள திரில்லராக இருக்கும் பட்சத்தில் 200 சதவீதம் மிகப்பெரிய வெற்றியைத் தரும்,” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”இவ்விழாவிற்கு வருகை தருவதற்காக இயக்குநர் அருள் அஜித் எனக்கு விடுத்த அழைப்பு கவர்ந்ததால் இங்கு வருகை தந்தேன். அதுவும் இல்லாமல் கார்ப்பரேட் துறையில் 25 ஆண்டு காலம் பணியாற்றிய பிறகு, நான் தனியாக 2016ம் ஆண்டில் திரைப்பட வணிகத்தில்  ஈடுபட்ட போது வாங்கிய முதல் திரைப்படமான ‘ஜீரோ’ படத்தின் நாயகி ஷிவதா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் வருகை தருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.  அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அவர் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.  கம்பீரமான, ஸ்டைலிஷான போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். அவருக்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.  

இந்தப் படத்தின் தயாரிப்பாளரை வாழ்த்த வேண்டும். நாங்களெல்லாம் காலை  எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தொடங்கி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதற்காகவே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம். நானும் இயக்குநர் கௌரவ் நாராயணனும் இணைந்து ‘சிகரம் தொடு’ எனும் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நான் ஏழு முப்பது மணிக்கு எல்லாம் சென்று விடுவேன். எட்டு மணிக்கு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பேன். இப்படி செய்தால் தான் குறைந்த நாட்களில் படத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியும். மலையாளத்தில் இப்படித்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்துவார்கள்.

ஒரு படம் பரவலான மக்களை சென்றடைந்தாலே வெற்றி பெறும். அந்த வகையில் இந்த’ கயிலன்’ திரைப்படமும் வெளியாகி, மக்களை சென்றடைந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் பிரஜின் பேசுகையில், ” இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த ஆண்டின் எனது நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

தற்போது சினிமாவில் நாம் நல்ல கன்டென்டுகளை கொடுத்தாலும் அதனை முறையாக விளம்பரப் படுத்துவதில் கோட்டை விடுகிறோம். சில படங்கள் மட்டும் தான் வேர்ட் ஆப் மௌத்தின் மூலம் வெற்றி பெறும். ‘கயிலன்’ நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

இயக்குநர் அருள் அஜித் தொடர்ந்து படங்களை இயக்கினாலும் வளரும் நடிகர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் சொன்னதைப் போல போராட வேண்டும். போராடினால் தான் வெற்றி கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்,” என்றார்.

பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தம் பேசுகையில், ”இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் புது முகம் தான்.‌ ‘விருமாண்டி’ படத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதும் போது அதில் மதுரை மண்ணின் பேச்சு வழக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு உதவினேன். திடீரென்று அவர் என்னைப் பார்த்து நடிக்கிறீர்களா? எனக் கேட்டார்  நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் அது மாடு பிடிக்கும் படம்.‌ இருந்தாலும் கமல் நான் மாட்டை பிடிக்கிறேன் நீங்கள் மைக்கை பிடியுங்கள் என்றார். இது எனக்கு பொருத்தமாக இருக்கவே ஒப்புக்கொண்டேன். தற்போது வரை ஐம்பது திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

இயக்குநர்கள் கதை செல்ல வரும்போது எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்பதை சொல்லி விடுவேன். இந்த படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னை அருமையாக கவனித்தார்கள்.

நான் முதலில் ஒரு சினிமா ரசிகன். அதனால் நான் பார்க்கும் எந்த படங்களையும் யாருடைய மனதும் காயப்படுத்தும் நோக்கத்தில் விமர்சிக்க மாட்டேன். சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது வருத்தம் அடைவேன்.

தற்போது மக்கள்தான் தேர்தலைப் போல் திரைப்படங்களையும் தீர்மானிக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே முன் கதை சுருக்கம் இருக்கிறது. யார் அந்த கயிலன்? அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  அந்த காலத்தில் பாட்டு புத்தகத்துடன் அந்தப் படத்தின் முன் கதை சுருக்கம் இருக்கும் .அதை பார்த்துவிட்டு தான் படத்திற்கு செல்வார்கள்.

இந்தப் படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், நன்றி,” என்றார்.

நடிகை ஷிவதா பேசுகையில், ”’நெடுஞ்சாலை’ படத்திலிருந்து ‘கயிலன்’ படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் பணியாற்றுகிறேன், இருந்தாலும் தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.  இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”’கயிலன்’ என் பிள்ளை அரசகுமார் தயாரித்த படம். அது என் படம் தான். அரசகுமார் 1991ம் ஆண்டில் நான் நடத்தும் வண்ணாரப்பேட்டை காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது நான் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் தலைவர். என்னை சந்தித்து ‘புதுக்கோட்டையில் இருந்து வருகை தந்திருக்கிறேன். சங்கத்தில் இணைய வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். அப்போது அவரை பேச அனுமதித்தேன் அவரது பேச்சில் தீப்பொறி பறந்தது. அப்போதே இவர் மிகப்பெரிய ஆளாக வருவார் என கணித்தேன்.

தொடர்ந்து கடுமையாக உழைத்தார், துணிச்சல் மிக்கவர். வறுமையில் வாடினாலும் சிறிது பணம் சேர்ந்தவுடன் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் என்று ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். நர்சரி பள்ளியையும், அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்தினார். அதன் பிறகு அவரை சந்தித்து அரசியல் கட்சி வேண்டாம், ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொள் என  அறிவுறுத்தினேன். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அவரை சேர்த்து விட்டேன். மயிலாப்பூரில் ஒரு விழா எடுத்து தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார்.‌ அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத்தலைவரானார்.

அதன் பிறகு புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழகத்தை ஆளக்கூடிய முதல்வர் பதவிக்கு தகுதி பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களே என பேசினார். உடனே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் மு.க. ஸ்டாலினிடமிருந்து அழைப்பு வந்தவுடன் திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவின் செய்தி தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இன்று ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய வலது கரமாகவும் செயல்பட்டு வருகிறார். பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்.

2001ம் ஆண்டில் நான் சின்ன திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது, ‘என்னையும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்குங்கள். நானும் படத்தை தயாரிக்கிறேன்’ என்றார். நான் தான் கொஞ்சம் பொறுத்திரு என்றேன்.‌  

அதனைத் தொடர்ந்து நான் விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்.

25 ஆண்டுகளுக்கு முன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்த அரசகுமார் இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். இன்று ஒரு திரைப்படத்தை இயக்குநரை நம்பி அளித்து தயாரிப்பாளராகி இருக்கிறார்.

தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் ‘கயிலன்’ என அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கிறார். கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் பெயர்கள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்த இயக்குநரை பாராட்டுகிறேன்.

இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில படத்தை போல் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இதன் ரீ-ரிக்கார்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், எடிட்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், கேமரா ஃபர்ஸ்ட் கிளாஸ். இப்படி எல்லா ஃபர்ஸ்ட் கிளாஸ்சும் இருப்பதால், மக்களும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் சாய்ஸாக பார்ப்பார்கள்.  

தமிழ் பண்பாடு குறையாத, தமிழ் கலாச்சாரம் மிக்க திரைப்படங்களை உருவாக்குங்கள் என இளம் இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இன்று திரைப்படங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளை இயக்குநர்கள் இடம்பெறச் செய்கிறார்கள். இதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் பெண்கள் தான் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.

300 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கான திரையரங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் ஏழைகள் திரையரங்கத்திற்கு வருவார்கள். திரைப்படங்கள் வெற்றி பெறும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதற்கு ஆவண செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்,” என்றார்.

இயக்குநர் அருள் அஜித் பேசுகையில், ”உதவி இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை. அந்த வகையில் என்னை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி. அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இறுதி வரை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வரவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் எங்களுடைய வற்புறுத்தலுக்காக வருகை தந்தார்.  எனக்கு அந்த அளவிற்கு முழு சுதந்திரம் அளித்தார். நானும், என்னுடைய குழுவினரும் இணைந்து பணியாற்றி படத்தை நிறைவு செய்து விட்டோம். தயாரிப்பாளருக்கு இன்னும் நான் திரையிட்டு காண்பிக்கவில்லை, விரைவில் காண்பிப்பேன். அப்படியொரு நம்பிக்கையை என் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.

நான் என்றைக்குமே தயாரிப்பாளர்களின் இயக்குநராக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் அவர்கள் தரும் வாய்ப்பு நம் வாழ்க்கை. அதை நாம் சரியாக காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் ஏனைய தயாரிப்பாளர்களும் நம் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வார்கள். இதன் பிறகு தான் நாம் நல்ல படங்களை வழங்க முடியும்.

‘கயிலன்’ என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.

இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், ‘நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜை சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்’ என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.

என்னுடைய பார்வையில் திரில்லர் திரைப்படங்களில் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டடிவ் திரில்லர் படங்களில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக நாங்கள் முதலில் தேர்வு செய்தது நடிகை ஷிவதாவை தான், அவர் நடிப்பில் வெளியான ‘அதே கண்கள்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது.

நாங்கள் இப்படத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஷிவதாவின் பங்களிப்பு அதிகம். அற்புதமான மனிதநேயம் மிக்கவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அனைவரையும் அரவணைத்து செல்வார்.

இவரைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவரும் திறமையான நடிகை தான்.

மேலும் இப்படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நிதி அமைச்சராக நடித்திருக்கிறார். மனோபாலா, கோபிநாத், அனுபமா குமார் என பலரும் நடித்திருக்கிறார்கள்.  

இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம். ஜூலை 25ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்”என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

கே ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் நான் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில் ஒரு படத்திற்கு ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் ‘டாடி டாடி’ என்று பாடலையும் வைத்திருந்தேன். அத்துடன் ‘பேட்டா பேட்டா மேரா பேட்டா’ என இந்தியையும் வைத்திருந்தேன். இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதை தவிர்த்து தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்கு தமிழ் தான் சோறு போடுகிறது.

நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அதை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.  இதற்கு சிறந்த உதாரணம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இந்தப் படத்தின் இயக்குநரை நான் மனதார பாராட்டுகிறேன்.  

இந்தப் படத்தின் பெயர் ‘கயிலன்’ என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு இயக்குநர் ‘கயிலன்’ பெயருக்கான பொருளை சொன்னார்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய குருநாதருடன் இணைந்து பணியாற்றிய முதல் படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவருடைய மயிலு என்ற கதையை வைத்துக்கொண்டு ஏறாத கம்பெனிகளே இல்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.

கமல்ஹாசனின் கால்ஷீட் இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான ’16 வயதினிலே ‘படம் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்திலும் போராட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு தான் வெற்றி பெற்றோம்.  

இயக்குவர் பாலச்சந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகு தான் அவர் தன்னுடைய அரசாங்க வேலையை விட்டார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் வேலையை திடீரென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஆதரவு அளித்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன்,” என்றார்.

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் நீ Forever விரைவில் திரையில்

ZHEN STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் வழங்கும், இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில், GenZ தலைமுறை ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை பேசும், காமெடி கலந்த அழகான லவ் டிராமாவாக உருவாகியுள்ள படம் “நீ Forever”.

இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை.

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் சவுத் இந்தியா அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ZHEN STUDIOS நிறுவனம் தருணம் வெற்றிப்படத்திற்கு பிறகு, இரண்டாவது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்துள்ளது.

32 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 27 நாட்களில் முடித்துள்ளது படக்குழு. இப்படம் சென்னையின் இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20 முக்கிய டிரேட் மார்க் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், படத்தின் திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்: புகாஜ் & ஈடன்
எழுத்து மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி
இசை: அஸ்வின் ஹேமந்த்
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி
எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்
கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்
ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்
ஒப்பனை: கலைவாணி பாலன்
பாடலாசிரியர்: கு.கார்த்திக்
ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்
ஒலி கலவை: அரவிந்த் மேனன்
VFX: Hocus Pocus
DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட்
நடனம்: விஜயராணி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்
டப்பிங்: டி-ஸ்டுடியோஸ்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: வியாகி, மேக்ஸ் பிரதர்ஸ்

டைரக்ஷன் டீம் : விக்னேஷ் குமார், பி.கே.தினேஷ் பாபு, கார்த்திகேயன், ஹரிஹரசுதன்.

கேமரா குழு: கௌதம் சேதுராமன், சதீஷ்குமார், சாய்
எடிட் டீம் : ஹரிஹரன்.வி, தனச்செழியன்.எஸ்
மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)

ZEE5 தளத்தில், Deleted Scenes உடன், “டிடி நெக்ஸ்ட் லெவல்”….

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமான ZEE5 தென்னிந்திய ரசிகர்களுக்கு, பிரத்தியேகமாக அவர்களுக்கு விருப்பமான மொழியில், பல சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. சமீபத்திய வெளியீடான “டிடி நெக்ஸ்ட் லெவல்” வெளியீட்டின் வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் புது வெர்ஷன்
ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ZEE5 இல் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்களைக் கவரும் வகையில், படத்தில் இடம்பெறாமல் நீக்கப்பட்ட பல காட்சிகள் இணைக்கப்பட்டு, புதிய வெர்ஷன் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. திரையரங்குகளில் கண்டிராத புதிய காட்சிகளுடன் இந்த எக்ஸ்டெண்டட் வெர்ஷன், முழுமையான புது அனுபவமாக, ரசிகர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“டிடி நெக்ஸ்ட் லெவல்” நீக்க்ப்பட்ட காட்சிகளுடனான புது வெர்ஷன் திரைப்படத்தினை ZEE5 தளத்தில் விரைவில் கண்டுகளியுங்கள் !!

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும், பான் இந்தியா திரைப்படம்……

பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளனர், முக்கிய நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, படத்தை சுற்றிய ரசிகர்களின்  எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.  

மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ்  நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார், மேலும் JB மோஷன் பிக்சர்ஸின் ஜேபி நாராயண் ராவ் கோண்ட்ரோலா  இணைந்து வழங்கிறார். JB மோஷன் பிக்சர்ஸுடனான இந்தக் கூட்டணி, படத்தின் தொலைநோக்குப் பார்வையிலான முயற்சியையும், பிரம்மாண்டத்தையும் மேலும் அதிகப்படுத்தும்.

இயக்குநர் பூரி ஜெகநாத், படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார். திரைக்கதை எழுதுவதிலிருந்து நடிகர் தேர்வு வரை, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை ரசிக்கும் வகையில், இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செதுக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், தபு மற்றும் விஜய் குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்திய முழுவதுமுள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான படைப்பாக  உருவாகும், இந்த பான் இந்தியஎண்டர்டெயினர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படாம்  மற்ற தகவல்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார்.

தொழில்நுட்பக் குழு

எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
CEO : விசு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

ஹிர்து ஹாரூன் நாயகனாக “டெக்ஸாஸ் டைகர்”!!

ஃபேமிலி படம் இயக்குநர் செல்வகுமார் திருமாரன் இயக்கத்தில், ஹிர்து ஹாரூன் நடிக்கும் “டெக்ஸாஸ் டைகர்”!!

கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

“ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து “டெக்சாஸ் டைகர்” படத்தையும் தயாரிக்கின்றனர்.

படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி

ஹைதராபாத்தில் நாற்பது நாட்கள் நடைபெறும் ஸ்ரீகாந்த் ஓடேலா – சுதாகர் செருகுரி- SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி இணைந்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படம்- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ‘ தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுகிறது. ‘ தசரா’ படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானி- இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால்.. திரையுலகினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதியன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது படக்குழுவினருக்கு மேலும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.

கடந்த ஒரு வாரமாக இன்றியமையாத குழந்தை பருவ காட்சிகளை படக்குழுவினர் படமாக்கினர். தற்போது படக் குழுவினர் தங்களது கவனத்தை நானி பக்கம் திருப்பி உள்ளனர். அவரது வருகையை *’தகாத் ஆகயா'” என ஜொலிக்கும் சொற்றொடரை பிரத்யேகமாக அறிவித்தனர். மேலும் இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்- கரடு முரடான பார்பெலுடன் நானி கதாபாத்திரத்தின் கால் மட்டும் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதாகவும், நானி இதற்கு முன் எப்போதும் நடித்திராத அளவிற்கு மூர்க்கமாக தோன்றுகிறார் என்பதையும் உறுதி செய்கிறது.

ஹைதராபாத்தில் நடைபெறும் நாற்பது நாட்கள் கொண்ட இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான மற்றும் கரடு முரடான பின்னணியில் அரங்குகள் கவனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் உருவான ‘தசரா ‘ திரைப்படம் இந்திய அளவில் இருந்தால்… தற்போது உருவாகும் தி பாரடைஸ் உலகளாவியதாக இருக்கும். தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என பன்மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

இப்படத்தின் டைட்டிலுக்கான போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ்… படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. குறிப்பாக வசனங்களும், அதிர்ச்சியூட்டும் காட்சிகளும், ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் அதிரடி இசையும் , நானியின் திரை தோற்றமும்.. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அத்துடன் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.

2026 மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று ‘தி பாரடைஸ் ‘ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

‘சேரிகளின் ராஜா’ ரசிகர்களை சந்திக்க வருகிறார்… காத்திருங்கள்! இந்த முறை இவரை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நடிகர்கள் : நானி

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓட்டேலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
ஆடியோ : சரிகம மியூசிக்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழ

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் – கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான ‘டிராகன்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.



இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர்.  

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க அதிபர்கள்,  விநியோகஸ்தர்கள், பிரதீப் ரங்கநாதன், ஜார்ஜ் மரியான்,
ரோஹந்த் உள்ளிட்ட நடிகர்கள்,  இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தொழிலாளர்கள் என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

இந்நிகழ்வில் குரோம்பேட்டை வெற்றி திரையரங்க அதிபர் ராகேஷ் பேசுகையில், ”மிகவும் சந்தோஷமான நாள் இது. ‘டிராகன்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா. பொதுவாக தமிழ் திரையுலகில் பிப்ரவரி மாதம் குறைவான வசூல் இருக்கும் என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது. பிப்ரவரியில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் அது வெற்றி பெறாது என்ற கட்டுக்கதையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘டிராகன்’. இந்த ஆண்டு தமிழக திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை ‘ டிராகன்’ பிடித்திருக்கிறது. இப்படத்தின் நாயகனான பிரதீப் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ திரைப்படமும் சிறந்த படம் தான். அவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

கமலா சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு பேசுகையில், ”குழுவாக இணைந்து இந்த படத்தை வழங்கி வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்று படக்குழுவினர் எங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். அப்போது நான் ‘இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நிச்சயமாக சந்திப்போம்’ என்று தான் சொல்லி இருந்தேன். அது இன்று உண்மையாகி இருக்கிறது. தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2024ம் ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட ‘கோட்'( GOAT) திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில் ‘டிராகன்’ திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினை வாங்கி இருக்கிறோம். அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினையும் வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து அவர் நடிக்கும் ‘DUDE’ படத்திற்கும் விருதினை வாங்குவோம். ஏஜிஎஸ் -அஸ்வத்- பிரதீப்- கூட்டணி மீண்டும் இணையும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி,” என்றார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”இந்த நான்கு மணி நேரத்தை நான் ஒரு அழகான தருணமாக கருதுகிறேன். படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று எண்ணிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே தயாரிப்பாளர்கள் கையாலோ அல்லது இயக்குநர் கையாலோ அல்லது நாயகன் கையாலோ விருது வாங்குவதுதான். இதனை சாதித்து காட்டிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் ‘நான் ஹீரோவாக போகிறேன்’ என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் ‘டிராகன்’ என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.  

‘லவ் டுடே’ படத்தை விட ‘டிராகன்’ படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகவும் காத்திருக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”ஒரு படம் நன்றாக இருக்கும் போது அந்தப் படத்திற்கான வேர்ட் ஆஃப் மவுத் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பாராட்டினீர்கள். அதை ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தீர்கள். இதற்காக இந்த தருணத்தில் ஊடகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ”இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘ஓ மை கடவுளே’ படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், ‘இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?’ என கேட்டார். அதற்கு நான் ‘நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்’ என்று பதிலளித்தேன். அப்போது நான் ‘கோமாளி’ படத்தையும் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.

அதன் பிறகு ‘லவ் டுடே’ படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்கு திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார். நானும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான்.

‘டிராகன்’ படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.  

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. ‘லவ் டுடே’ படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் அஸ்வத்தும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. அப்படித் தான் ‘டிராகன்’ அமைந்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடனான மகிழ்ச்சி நிரம்பிய இந்தப் பயணம் தொடரும்.

‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் ‘டிராகன்’ படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் ‘கோமாளி’, ‘லவ் டுடே’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக ‘டிராகன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

என்னுடைய வெற்றிக்கு பின்னணியில் அஸ்வத், ஏஜிஎஸ் நிறுவனம், ரசிகர்கள் இருக்கிறார்கள். ‘டிராகன்’ படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.  

இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நூறாவது நாள் வெற்றி விழாவில் ‘டிராகன்’ பட உருவாக்கத்திற்காக படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்யேக காணொலி திரையிடப்பட்டது என்பதும், இயக்குநர் மிஷ்கின் காணொலி வாயிலாக வாழ்த்தினையும், அன்பினையும் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“குட் டே” திரைவிமர்சனம்

அரவிந்தன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், மைனா நந்தினி, காளி வெங்கட் ,மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் குட் டே.


திருப்பூரில் ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை செய்யும் நாயகன், அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணை அந்த கம்பெனியின் மேனேஜர் தொல்லை செய்ய அதை தட்டி கேட்கிறார். அந்த மேனேஜரோ அந்த கம்பெனி ஓனருக்கு மச்சான் இருவரும் சேர்ந்து நாயகனுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிக்கிறார்கள். நாயகனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் சம்பளம் இல்லாமல் டென்ஷனில் இருக்கும் அவனிடம் மனைவி பணம் கேட்டு நச்சரிக்க, அந்த டென்ஷனில் வீட்டுக்கு வரும் நாயகன் நன்றாக குடிக்கிறான் .குடித்துவிட்டு போதையில் இருக்கும் பொழுது அந்த வீட்டின் ஓனரோ வந்து வாடகையுடன் வீட்டுக்கு முறை வாசல் செய்ய 300 ரூபாய் கேட்டு வருகிறார்,அவரிடம் உங்கள் வீட்டில் கோலம் போட நான் எதற்கு 300 ரூபாய் தர வேண்டும் என்று போதையில் தகராறு செய்து அவரது தலையை உடைத்து, அங்கிருந்து போதையில் வெளியில் வந்து அடுத்தடுத்து பல குற்ற செயல்களில் ஈடுபடுகிறார். பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளர் அறையில் தகராறு, தன்னுடன் கல்லூரியில் படித்த பெண்ணிற்கு தற்பொழுது கல்யாணம் செய்து குடும்பத்துடன் வாழும் பெண்ணிற்கு ஃபோன் செய்து அவரை தொந்தரவு செய்து குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார், மேலும் காளி வெங்கட்டின் ஆட்டோவில் ஏறி அவரை அடிக்கிறார் அவருடன் வம்பு வளர்க்கிறார். இப்படி போகின்ற வழி எல்லாம் வம்பு வளர்க்கும் இவரை காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வருகிறது .

அங்கும் அவர் போதையில் இன்ஸ்பெக்டரின் சட்டையையும், வாக்கி டாக்கியையும் எடுத்துக் கொண்டு தப்பித்து ஓடுகிறார். அவரை இரவு முழுவதும் காவல்துறை தேட இதே நேரத்தில் திருப்பூரில் ஒரு குழந்தை கடத்தல் நடைபெறுகிறது அதை த் தேடும் காவல்துறை இவரையும் ஒரு பக்கம் தேடுகிறது. ஒரு கட்டத்தில் அதிகாலையில் நாயகனுக்கு போதை தெளிய, அந்த குழந்தையை கடத்தலை இவர் இவர் கண்டுபிடித்து காவல்துறைக்கு தர, இரவு முழுவதும் போதையில் செய்த தவறுகள் அனைத்தும் அந்த ஒரு நல்ல காரியத்தால் மறைந்து போகிறது அவரை காவல்துறை விட்டு விடுகிறது இதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
இந்த திரைப்படத்தின் நாயகனாக பிரிதிவராஜு ராமலிங்கம் இரவு முழுதும் குடிகாரனாக அவர் செய்ய அலப்பறைகள் நமக்கே ஒரு கட்டத்தில் எரிச்சல் ஊட்டுகிறது என்னடா இப்படி போதையில் ஓவர் அலப்பறை செய்கிறானே என்று.

மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் மைனா நந்தினி ஒரு காமெடி கலந்த, தன் கணவரிடமும் தன்னை ஒரு தலையை காதலித்த நாயகனிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது, கோபம் உள்ளது என்று ரசிக்கும் படியாக செய்துள்ளார் மைனா நந்தினி .

மேலும் இந்த படத்தில் காளி வெங்கட்,ஆடுகளம் முருகதாஸ்,பகவதி பெருமாள் (பக்ஸ்),வேல ராமமூர்த்தி,போஸ் வெங்கட்இப்படி பலர் வந்து போகிறார்கள் அவர் அவர்களுக்கு ஒரு ஒரு சீன் அவர்களும் அவர்களுக்கு தந்த வேலையை சிறப்பாக செய்கிறார்கள் .

இயக்குனர் அரவிந்தன் இந்த படத்தின் திரைக்கதையை எழுதும்போது இன்னும் சிறப்பாக ஒரு இரவில் அந்த திருப்பூரில் நடக்கும் அந்த குழந்தை கடத்தல் மையப்படுத்தி எழுதி இருக்கும்போது இன்னும் விறுவிறுப்பாக காட்டி இருக்கலாம், படம் பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்கும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கும்
ஒளிப்பதிவு திருப்பூரின் இரவு அழகை அழகாக காட்டுகிறது என்று கூறலாம்

இசை கோவிந்த் வசந்தா


குட் டே படத்தின் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாகி இன்னும் சிறப்பாக செய்திருந்தால் கண்டிப்பாக படம் பார்ப்பவர்களுக்கு படம் எடுத்தவர்களுக்கும் அந்த டே டுடேவாக இருந்திருக்கும்