Cinema

“கெவி” திரைவிமர்சனம்

பொதுவாக கெவி என்னும் வார்த்தை மலைப்பிரதேசங்களில் உள்ள பள்ளத்தாக்கை குறிக்கும் வார்த்தை.

இந்த கெவி திரைப்படமானது கொடைக்கானலில் வெள்ளக் கெவி என்னும் கிராமம், பல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு கொடுங்கோல் மன்னர் ஆட்சியில் இருந்து தப்பித்து வரும் மக்கள், அந்த பள்ளத்தாக்கில் கெவி என்னும் கிராமத்தை உருவாக்கி வாழ்கிறார்கள்.

பல வருடங்கள் கழித்து இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட பொழுது அவர்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், மலைப்பிரதேசங்களில் தங்க முடிவு செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு தேடி செல்லும் ஒரு மலையில் கெவி என்னும் கிராமத்தை அடைகிறார்கள் .அந்த மக்களை டோலி கட்டி சுமக்கும் மக்களாக பயன்படுத்தி அந்த பள்ளத்தாக்கிலிருந்து மேலே சென்று ஒரு நகரத்தை உருவாக்குகிறார்கள். அந்த நகரம் தான் இப்பொழுது பிரபலமாக இருக்கும் கொடைக்கானல்.

காலங்கள் எவ்வளவு கடந்தாலும் இந்த கெவி பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் இன்னமும் டோலி சுமந்து கொண்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகள் ஏதும் இன்றி வாழும் வழியினை கூற வருவதுதான் இந்த கெவி படத்தின் திரைக்கதை.
பல தலைமுறைகளாக வாழ்வாதாரத்திற்கு போராடி வரும் இந்த கிராமத்து மக்களுக்கு அரசின் எந்த திட்டங்களும் முழுமையாக இன்னமும் சென்று சேராத சூழல்தான் இருக்கிறது .இப்படி இருக்கும் சூழலில் இதற்கு முந்தைய காலகட்டங்களில் எத்தனை வருடங்களாக அவர்கள் எவ்வாறு வாழ்ந்திருப்பார்கள் என்பதை நம் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் இந்த படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள். இந்த கெவியில் வாழும் ஆதவன், ஷீலா கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் ஒரு நாள் இரவில் ஒரு மண் சரிவில் பலர் இறந்து விட அவர்களில் சிலரை காப்பாற்ற டோலி கட்டி தூக்கிச் செல்லும் பொழுது எதிரில் வரும் அந்த ஊரின் அரசியல்வாதியை எதிர்த்து கேள்வி கேட்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறான் நாயகன். அந்த சூழலில் அந்த அந்த சூழலில் அரசியல்வாதியை அடித்து விடுகிறான் காவல்துறையினர் மீது செருப்பும் வீசப்படுகிறது. இதை வஞ்சம் வைத்துக் கொண்டு காவல்துறை நாயகனை கொல்ல துடிப்பதும் ,,அதே நேரத்தில் பிரசவ வழியில் துடிக்கும் அவரது மனைவி ஷீலாவை அங்கே இருக்கும் மக்கள் டோலிகட்டி பல கிலோமீட்டர் பயணம் செய்த மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள், இடையில் அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர் அந்த கிராமத்திற்கு எல்லாம் வந்து என்னால் வைத்தியம் பார்க்க முடியாது உயிரோடு இருந்தால் கொண்டு வாருங்கள் ,இல்லை வரும் வழியில் செத்தால் புதைத்து விடுங்கள் என்று திமிராக பேசுகிறார் இந்த சூழ்நிலையில் அந்த குழந்தை பிறந்ததா? காவல்துறையின் தாக்குதலில் இருந்து ஆதவன் தப்பித்தாரா? அவர்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்ததா? என்பதுதான் இந்த கெவி படத்தின் திரைக்கதை
இதுவரை நாம் எவ்வளவு மலை சார்ந்த படங்களை பார்த்திருந்தாலும் இந்த படம் முழுக்க முழுக்க இரவில் படமாக்கி இருப்பது இந்த படத்தின் சிறந்த சாரம்சம் .இதுவரை நாம் பகலிலேயே மலையின் அழகு ரசித்தோம் இரவில் மலையின் துயரத்தை நாம் இதுவரை அனுபவிக்கவில்லை அதை இந்த திரைப்படம் நம் ரத்தத்தை உரையை செய்யும் வகையிலும் வந்துள்ளது,அந்த இரவு காட்சிகளை படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நிச்சயம் பாராட்டுக்கள்
படத்தில் சில விஷயங்கள் உடன் படாமல் இருந்தாலும் சில முக்கியமான காட்சிகளில் சில பரபரப்பான காட்சிகளில் அந்த கதாபாத்திரங்கள் நின்று நிதானமாக வசனங்கள் பேசிக் கொண்டிருப்பது அந்த பரபரப்பை சற்றே துவள செய்கிறது அது இல்லாமல் இருந்தால் இன்னும் திரைக்கதை வேகமாக இருந்திருக்கும்.
நிச்சயம் இந்த கெவி திரைப்படம் அந்த மலைவாழ் மக்களின் வலியை வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதை எந்த சந்தேகமும் இல்லை .

நிச்சயம் இந்த அரசியல் ஒரு புரியாத புதிரே

நடிகர் உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகர்கள் உதயா – அஜ்மல் – யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் – சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா – ‘தயா’ என். பன்னீர்செல்வம் – எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், ”இப்படத்தின் பணிகளை இந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் தேதியன்று தொடங்கி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறோம். ஒரு படத்தை இவ்வளவு விரைவாக நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முழு ஒத்துழைப்பினை வழங்கிய நடிகர் உதயாவிற்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் கதையை இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், உதயா மூலமாக எங்களை சந்தித்து சொன்னார். அவர் சொன்ன கதை பிடித்துப் போனதால், அடுத்த நாளே படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கினோம். உதயாவை தொடர்ந்து கதையில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் அஜ்மல் மற்றும் யோகி பாபு ஒப்பந்தமானார்கள். இவர்களைத் தொடர்ந்து நாயகி ஜான்விகா, பவன், பிரபாகர், பெங்களூரூ டானி, சுபத்ரா என அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களை இயக்குநரும் உதயாவும் தேர்வு செய்தனர்.

குறிப்பாக யோகி பாபு தலைவர் ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக பதினான்கு நாட்களை ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, எடிட்டர் ஷ்யாம் என திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கினார்கள். இவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் உதயாவின் கடும் உழைப்பை இந்த படத்தில் நாங்கள் நேரில் பார்த்திருக்கிறோம். அவருடைய கடும் உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

படத்தொகுப்பாளர் ஷ்யாம் பேசுகையில், ”எடிட்டர் போன்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு திரில்லர் ஜானர் ஆக்ஷன் ஜானர் படங்களுக்கு படத்தொகுப்பு செய்ய வேண்டும் என்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்க கூடியது. அந்த வகையில் அக்யூஸ்ட் திரைப்படத்தின் திரைக்கதை படத்தொகுப்பின் போது உற்சாகத்தை அளித்தது. இந்த திரைப்படம் சீட் எட்ஜ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் உதயாவும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸும் ஒன்றிணைந்து பணியற்றிருக்கிறார்கள். நாங்கள் இந்தப் படத்தின் திரைக்கதையின் வேகத்தை குறைப்பதற்காக சில உத்திகளை கையாண்டிருக்கிறோம். ஏனெனில் இந்தப் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும். இது போன்றதொரு படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை செய்வதற்கு வாய்ப்பளித்த எடிட்டர் பிரவீண் சாருக்கும், உதயா சாருக்கும், இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சாருக்கும் நன்றி. இப்படத்தின் இசையும் மிகப் பிரமாதமாக இருக்கிறது. இந்தப் படம் உங்கள் அனைவரையும் கவரும் வகையிலான டீசன்டான சீட் எட்ஜ் திரில்லர் படம். அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் டானி பேசுகையில், ”ஓ மரியா பாடலில் நடிகை ரம்பாவுடன் நடனமாடிய பாடல் 1999ம் ஆண்டில் வெளியானது. அதன் பிறகு மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் சினிமா வேண்டாம் என்று அமெரிக்காவிற்கு சென்றார். அவரிடம் கேட்டபோது சின்ன பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார். ஆனால் நான் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டேன். அதன் பிறகு அவர் எனக்கு போன் செய்து உதயா நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு வந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில் விஜய் டிவியில் ‘ஓ மரியா..’ பாடலை ரீ கிரியேட் செய்தனர். அதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்து நடனம் ஆடினேன். அந்தத் தருணத்தில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸிடமிருந்து அழைப்பு வந்தது. நான் நேராக இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கு எனக்கு உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என சொன்னார்.

ஒவ்வொரு கலைஞனுக்கும் விமான நிலையத்தில், பொதுவெளியில், வணிக வளாகத்தில் ரசிகர்கள் சந்தித்து, ‘உங்கள் படத்தை நான் பார்த்திருக்கிறேன்’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், அது அந்த கலைஞனுக்கு மிகப்பெரிய போதையை தரும். ஆனால் என்னை யாரும் அங்கீகரிக்கவில்லை, அடையாளப்படுத்தவில்லை. அதற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இந்த தருணத்தில் உதவி காவல் ஆய்வாளர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால் தலை முடியை கட் செய்ய வேண்டும் என்று சொன்னார். நான் யோசித்தேன்.

‘மின்னலே’ படத்தில் நாகேஷ் உடன் நடித்தேன். ‘காதலர் தினம்’ படத்தில் கவுண்டமணியுடன் நடித்திருக்கிறேன். ‘கவிதை’ படத்தில் வடிவேலுவுடன் நடித்தேன். பல காமெடி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். அந்த வகையில் யோகி பாபு உடன் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காகவும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். யோகி பாபு உடன் மட்டுமல்லாமல் அஜ்மல் – உதயா என அனைவரிடமும் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால் இந்தப் படத்தில் நடித்தால் மீண்டும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தலைமுடியை கட் செய்யவும் சம்மதித்தேன். இந்தப் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இது எங்களுக்கு முக்கியமான நாள். படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் சேது பேசுகையில், ”நாங்கள் பெரிதாக எதிர்பார்த்து முதல் முதலாக தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் படம் இது. இதற்கு உதயா தான் காரணம்.‌ அவருடன் நடைபெற்ற ஒரு சாதாரண சந்திப்பு தான் இப்படத்தில் எங்களை இணைய வைத்தது. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ் எங்களிடம் என்ன கதையை சொன்னாரோ, அதை அப்படியே எடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு எல்லாம் பாசிட்டிவ் ஆகவே அமைந்தது. இந்தப் படத்தின் கதை தனக்கு என்ன தேவையோ,பாஅதை அதுவே இழுத்துக் கொண்டது . நாங்கள் எதையும் செய்யவில்லை. அதை என்ன கேட்டதோ அதை நாங்கள் செய்து கொடுத்தோம். படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் பேசுகையில், ”அக்யூஸ்ட் படத்தில் பணியாற்றியது எனக்கு நல்லதொரு அனுபவம். ஜனவரியில் தான் இப்படத்திற்கான பாடல்களை உருவாக்கினோம். ஆறு மாதத்திற்குள் ஃபர்ஸ்ட் காப்பி ரெடி ஆகிவிட்டது. நான் இந்த குழுவில் இணைந்ததற்கு முக்கியமான காரணம் உதயா தான். அவருக்கு என்னுடைய முதல் நன்றி.
இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. இந்தப் படத்தின் திரைக்கதையை மேம்படுத்தும் வகையில் பின்னணி இசை அமைத்திருக்கிறேன் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் ஆகஸ்ட் முதல் தேதியன்று இப்படத்தை திரையரங்குகளில் பார்த்து உங்களது விமர்சனத்தை முன்வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் பிரபாகர் பேசுகையில், ”கன்னடத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நான் நடித்திருக்கும் முதல் படம் இது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான கன்னட திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர்தான் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கினார். அவர் உன் திறமையை வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். இப்படத்தின் கதையை அவர் சொன்னதும் சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் இங்கு வந்த பிறகு தமிழைக் கற்றுக் கொண்டேன். அத்துடன் இப்படத்தில் தமிழக-கர்நாடக எல்லையோரத்தில் உள்ள கதாபாத்திரம் என்பதால் படத்திலும் நான் நடித்த காட்சிகளுக்கு சொந்தக் குரலில் பின்னணி பேசவும் வாய்ப்பளித்தனர். இதற்காக நடிகர் உதயாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பஸ், கார், ஓட்டம் என சேசிங்கிலேயே இருக்கும். இதனால் நான் மிகவும் விரும்பி நடித்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம். இந்த அனுபவம் மறக்க இயலாது,” என்றார்.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ”கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை தமிழில் தான் தொடங்கியது. சுந்தர் சி – தனுஷ் – அர்ஜுன் – ஆகியோர் நடித்த படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 400 பாடல்களுக்கு மேல் நடன இயக்குநராக பணியாற்றிவிட்டு, கன்னடத்தில் திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் அங்கு சென்று படத்தை இயக்கினேன். ஒரே தயாரிப்பாளருடன் தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை இயக்கினேன். அதன் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து இயக்கினேன். இது என்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம். ஆனால் தமிழில் முதல் படம்.

கன்னடத்தில் ஆக்ஷன் ஃபிலிம் டைரக்டர் என்ற பெயரை சம்பாதித்து இருக்கிறேன். தமிழில் அறிமுகமாகும் போது மிக பிரம்மாண்டமான படத்தை இயக்க வேண்டும் என்று தான் எண்ணியிருந்தேன். இதற்காக லாரன்ஸ், விஷால் போன்ற சில ஹீரோக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறேன். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. இந்தத் தருணத்தில் என் குடும்ப உறுப்பினர்கள் ‘நீங்கள் அப்படி நினைக்க கூடாது. நீங்கள் கன்னடத்தில் படத்தை இயக்கும் போது சின்ன படமாகத் தான் இருந்தது. ஆனால் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் நீங்கள் இயக்கும் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து உருவாக்குங்கள்’ என ஆலோசனை சொன்னார்கள். அதன் பிறகு ஆறு மாதம் அமெரிக்காவிற்கு சென்று விட்டேன்.

அதன் பிறகு பிஆர்ஓ நிகில் முருகன் தான் இந்த அக்யூஸ்ட் படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அவர்தான் உதயா கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரை சந்தித்து கதையை சொல்லுங்கள் என்றார். அதன் பிறகு அவரை சந்தித்து கதையைச் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு, கதை நன்றாக இருக்கிறது. குறிப்பாக என்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. நாளை தயாரிப்பாளரை சந்திக்கிறோம் என்றார். அடுத்த நாள் தயாரிப்பாளர்கள் பன்னீர்செல்வம் – தங்கவேல்- உதயா – ஆகியோர் இருந்தனர். தயாரிப்பாளர்களுக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால் அனைவரும் பட்ஜெட் அதிகம் என சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு நடைபெற்ற 60 நாட்களிலும் எந்த குழப்பமும் இல்லாமல் நான் கேட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து படப்பிடிப்பை நிறைவு செய்தனர். எனக்கு கிடைத்த தொழில்நுட்ப கலைஞர்களும் திறமையானவர்கள். அதனால் படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு பஸ் ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை படப்பிடிப்புக்கு பயன்படுத்திய பின் ஸ்கிராப்பிற்கு அனுப்பினோம். இதற்கும் உதயா தான் முழு காரணம்.

இந்தக் கதையில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்தார். அவருக்கு கதை சொன்ன தருணத்திலிருந்து தற்போது வரை முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

கதையில் இடம்பெறும் மற்றொரு கதாபாத்திரத்திற்கு யோகி பாபு விடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் கதையைக் கேட்ட அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து 14 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒத்துழைப்பு அளித்தார்.

இந்தப் படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். என்னுடைய உறவினர் இசையமைப்பாளராக இருந்தாலும் இந்தப் படத்திற்கு புது இசையமைப்பாளர் வேண்டும் என விரும்பினேன் இதற்காக உதயா அவருடைய ‘உத்தரவு மகாராஜா’ படத்திற்கு இசையமைத்த நரேன் பாலகுமாரை அறிமுகப்படுத்தினார். அவரது பாடலைக் கேட்டவுடன் பிடித்து விட்டது. இந்தப் படத்தில் அவரின் இசையில் உருவான பாடல்கள் எனக்கும் பிடித்தது. என் மகன்களுக்கும் பிடித்தது. ஒரு பாடலை சிறிய வயதில் இருக்கும் பிள்ளைகள் பாடினால் அந்தப் பாட்டு ஹிட் ஆகும். பாடல்களைப் போல் பின்னணி இசையிலும் நரேன் மெஸ்மரைஸ் செய்திருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றி நான் எதையும் மிகையாக சொல்லவில்லை, நீங்கள் படம் பார்த்தால் புரியும்.

இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும். இந்த படத்தைப் பற்றிய ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்தால் அதைவிட அதிகமாகவே இருக்கும். திரைக்கதையில் யாரும் யூகிக்காத திருப்பங்கள் இருக்கும். படம் தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும் படி இருக்கும்,” என்றார்.

நாயகி ஜான்விகா பேசுகையில், ”இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம். ‘அக்யூஸ்ட்’ ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் தேவை.
இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கும் , இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.

இந்தப் படத்தில் அழகான காதல் கதை இருக்கிறது. அற்புதமான பாடல்கள் உள்ளன. சில்வா மாஸ்டர் அமைத்த சண்டை காட்சிகளும் உள்ளன. யோகி பாபுவின் காமெடி இருக்கிறது. அத்துடன் இந்தத் திரைப்படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அதனால் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் அஜ்மல் பேசுகையில், ”ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று துணிந்து செயலில் ஈடுபட்டால், அவருக்கு இந்த உலகமே துணை நிற்கும் என்பார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணம் உதயா. அவர் இந்த படத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதை படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து எனக்குத் தெரியும்.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். இந்தப் படத்திற்கு கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இருக்கிறது. அந்த ஆசி இன்று வரை தொடர்கிறது.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் என் கதாபாத்திரத்தை மட்டுமல்ல மலர் என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தையும் உதயாவின் கதாபாத்திரத்தையும் நன்றாக செதுக்கியிருந்தார். படத்தில் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருக்கிறார்கள்.

‘அஞ்சாதே’ படத்தில் பணியாற்றிய போது எனக்கு ஒரு பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது. ‘கோ’ படத்தில் பணியாற்றிய போதும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்தது அதேபோன்று பாசிட்டிவ் எனர்ஜி இந்தப் படத்தில் பணியாற்றிய போதும் எனக்கு கிடைத்தது. அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஊடகங்களில் பேராதரவு தேவை. அதை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நாயகன் உதயா பேசுகையில், ”மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அக்யூஸ்ட் ‘ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன்.
சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ஊடகங்களுக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மேடை எனக்கு மிகவும் பிடித்த மேடை. நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சினிமாவை நிறைய நேசித்ததன் காரணமாக இங்கு நின்று கொண்டிருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டு காலத்தில் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறேன். அதன் பிறகு மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் பயணிக்க தொடங்கிய போது கேட்ட கதை தான் இந்த அக்யூஸ்ட் படத்தின் கதை.

இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம். அதற்காக நல்ல கன்டென்டுக்காக காத்திருந்தேன். நான் இன்று வரை எந்த படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பவன். எது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது, பிடிக்கும் என்பதனை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தான் கதையை கேட்கத் தொடங்கினேன்.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் முதலில் கன்னடத்தில் வெளியான படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்யலாம் என்று சொன்னார். அது டார்க் காமெடி, எனக்கு ஒத்து வராது என்று சொல்லி புதிதாக கன்டென்ட் இருந்தால் அதை சொல்லுங்கள் என்றேன் . அத்துடன் எனக்கான பட்ஜெட் இதுதான் என்றும் சொன்னேன். ஆனால் அவர் சொன்ன அக்யூஸ்ட் கதை பெரிய பட்ஜெட் படம். இதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவர்கள் தான் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். அதனால் தான் இந்த படம் உருவானது.

இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் கிளாரிட்டியான டைரக்டர். அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. அத்துடன் பிரபு ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர்களின் இயக்குநராகவும் இருக்கிறார்.

இந்தப் படத்தினை பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பார்த்து பாராட்டு தெரிவித்து விட்டால், தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற செய்து விடுவார்கள்.

இன்றைய சூழலில் ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் அவசியம் தேவை. சினிமாவிற்கு மூன்று நாட்கள் விமர்சனம் தேவையில்லை என்று சொன்னாலும் கூட சினிமா என்றால் விமர்சனம் வரத்தான் செய்யும். அதனால் ஒவ்வொரு சினிமாவிற்கும் விமர்சனம் அவசியம் தேவை தான். அவை ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் என் குடும்பத்தை போன்றவர்கள் தான். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்விற்கு வருகை தந்த எடிட்டர் ஷியாம், எஸ்கியூடிவ் புரொடியூசர் சிவசங்கரன், இயக்குநர் ராஜா, நடிகர்கள் பெங்களூர் டானி, பிரபாகர், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஹீரோ அஜ்மல், ஹீரோயின் ஜான்விகா, தயாரிப்பாளர் – தம்பி பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் – தம்பி சேது, நடிகை சுபத்ரா, ஒளிப்பதிவாளர் மருதநாயகம், ரங்கோலி படத் தயாரிப்பாளர் சதீஷ், தயாரிப்பாளர் -‌ நடிகர் டி. சிவா ஆகியோருக்கும் நன்றி.

இந்த படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, யோகி பாபு, எடிட்டர் பிரவீண் , இயக்குநர் பிரபு சாலமன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் 2 மணி நேரம் 10 நிமிடம் வரை ரசிகர்களை உற்சாகமாக வைத்திருக்கும். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நல்ல கன்டென்ட், நல்ல படமாக வழங்கியிருக்கிறோம். நீங்கள் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இதனிடையே இந்நிகழ்வில் சண்டை கலைஞர் எஸ் மோகன்ராஜ் – மூத்த நடிகை சரோஜாதேவி – இயக்குநர் வேலு பிரபாகரன் ஆகியோரின் மறைவிற்கு உதயாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“ட்ரெண்டிங்” திரைவிமர்சனம்

கலையரசன் பிரியாலயா .மற்றும் பல நடிப்பில் வெளி வந்திருக்கும் திரைப்படம் ட்ரெண்டிங்

இன்றைய காலகட்டத்தில் ட்ரெண்டிங் என்ற போதையில் சிக்கி கோடி கோடியாக பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒரு இளம் தம்பதியினரின் வாழ்க்கை தான் இந்த ட்ரெண்டிங் படத்தின் கதை.

அர்ஜுன், மீரா இருவரும் காதல் தம்பதிகள் இன்ஸ்டாகிராமில் தாங்கள் காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை அனைத்து நிகழ்வுகளையும் ரீல்ஸ்கலாக செய்து போட்டு லட்சங்களின் பணம் சம்பாதித்து கோடிகளில் வீடு வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கென்று நிலையான ஒரு வேலையும் இல்லை. இந்த நேரத்தில் திடீரென்று அவர்களது instagram பக்கம் ஹேக் செய்யப்படுகிறது .அதை சற்றும் எதிர்பாராத அவர்கள் அதிலிருந்து வரும் பணத்தை வைத்து தான் மாதாமாதம் இஎம்ஐ உட்பட அனைத்திலும் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்று நினைத்து யோசிக்கிறார்கள். புதியதாக ஒரு பக்கத்தை ஓபன் செய்தாலும் விரைவில் பணத்தை சம்பாதிக்க முடியாதுஎன்பதால் கொஞ்சம் துவண்டு போகிறார்கள்.

அந்த நேரத்தில் கடனுக்கு பணம் கொடுத்தவர்கள் வந்து வட்டி கேட்டு மிரட்டி விட்டு செல்கிறார்கள் இந்த நிலையில் அவர்களுக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது. அதில் உங்களுக்கு நாங்கள் பணம் தருகிறோம் ஒரு கேம் விளையாடுவோம் என்று கூறுகிறார்கள். முதலில் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பிறகு ,அவர்கள் கூறும் கண்டிஷன்களை கேட்டு இந்த கேம் நம்ம வீட்டுக்குள்ளே தான் நடக்கிறது நாம் இருவர் மட்டும்தான் இருக்கிறோம் பெரிதாக பிரச்சனை இல்லை பணம் வந்தால் தொடர்வோம், ,இல்லை என்றால் அந்த கேமில் இருந்து வெளிவந்து விடுவோம் என்று அந்த விளையாட்டிற்கு அடிபணிகிறார்கள் .ஆனால் போகப் போக அது அவர்களுடைய ஆரம்பகால வாழ்க்கையும், நிகழ்கால வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை உண்டு செய்கிறது. அவர்களுடைய பழைய காதலகள் துவங்கி அனைத்து பிரச்சினைகளிலும் சிக்கி அவர்கள் அதிலிருந்து மீண்டார்களா? இல்லை மீண்டும் அந்த விளையாட்டில் தொடர்கிறார்களா ?அல்லது பணம் சம்பாதித்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதை.

இப்படி ஒரு வித்தியாசமான கதை கையில் எடுத்த இயக்குனர் படத்தில் இந்த இரண்டு கேரக்டர்களை மட்டுமே முன்வைத்து அனைத்து காட்சிகளையும் எடுத்திருக்கிறார்.

2 மணி நேரம் இவர்கள் இருவரது முகத்தை மட்டுமே பார்க்க முடியவில்லை அட்லீஸ்ட் அந்த விளையாட்டை நடத்தும் முகத்தை யாவது நமக்கு காட்டி இருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கும். அதுவும் யார் என்று தெரியவில்லை, திரைக்கதையில் ஆரம்பத்தில் தோசை சுடுவது போல் சாதாரணமாக அந்த விளையாட்டு ஆரம்பித்தாலும் ,பின் செல்லச் செல்ல அவர்களுக்கு பல சிக்கல்களை கொண்டு செல்கிறது அவர்களுக்குள் பல ஈகோ உருவாக்கிறது, ஒருவரை பற்றி ஒருவருடைய நிஜ உருவங்களை தெரிந்து கொள்ள நேர்கிறது .அவ்வாறு நிஜ உணர்வை தெரிந்து கொள்ளும்போது இது ஏதோ பழிவாங்கும் கதையாக யாரோ இவர்களை இயக்குகிறார்கள் என்று நமக்கு தோன்றுகிறது. இதையெல்லாம் தெளிவாக எடுத்து இயக்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் இந்த ட்ரெண்டிங் திரைப்படம்


இதில் அந்த இருப்பது 2 கேரக்டர் மட்டுமே என்பதால் பெரிதாக நாம் எதுவும் சொல்ல தேவை இல்லை கலையரசன் கணவனாகவும் பிரியாலயா மனைவியாகும் நடித்திருக்கிறார்கள் அவ்வளவுதான் இசையும் நம் இந்த மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது

ட்ரெண்டிங் புதிதாக ஏதோ ட்ரெண்டிங் செய்ய நினைத்திருக்கிறார் இயக்குனர்

“சட்டம் நீதியும்” விமர்சனம்

பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில் சரவணன்,நம்ரிதா மற்றும் பலரது நடிப்பில் Zee 5OTT தளத்தில் வெளிவந்திருக்கும் வெப் சீரியஸ் சட்டமும் நீதியும்.

கோர்ட்டில் சாதாரண நோட்டரி ஆக இருக்கும் சரவணன் அவருடைய சிபாரிசின் பெயரில் பல வக்கீல்களிடம் ஜூனியர் ஆக சேர முயற்சிக்கிறார் நம்ரிதா. ஆனால் யாரும் அவரை ஜூனியராக சேர்த்துக் கொள்ளாத நிலையில் ,மீண்டும் சரவணன் இடமே வந்து உங்களிடமே ஜூனியர் ஆக சேருகிறேன் என்று கூறுகிறார்.ஆனால் அவர் எனக்கே வேலை இல்லை இதில் நீ எங்கே எனக்கு ஜுனராக என்று நிராகரிக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த கோர்ட் வளாகத்தில் குப்புசாமி என்பவர் தன் மகளை காணவில்லை அவரை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கு நீதி வேண்டும் என்று கூறி தீக்குளித்து இறக்கிறார்.

அந்த வழக்கை பொதுநல வழக்காக தொடர்கிறார் சரவணன் .அந்த வழக்கை விசாரிக்க செல்லும் போது அவருக்கு பல திடக்கிடும் தகவல்கள் வருகிறது,ஏனென்றால் குப்புசாமி 20 வருடங்களாக மனநல காப்பகத்தில் இருந்து வெளிவந்தவர் என்றும்,அவருடைய மகள் காணாமல் போய் 20 ஆண்டுகள் ஆகிறது என்றும் தெரிய வருகிறது, இந்த மாதிரி பல இடியாப்ப சிக்கல்கள் கொண்ட வழக்கில் பல வருடங்கள் கழித்து வழக்கிற்காக அங்கிஅணியும் சரவணன் இந்த வழக்கில் ஜெயிக்கிறாரா? அந்த சாதாரண குப்புசாமிக்கு நீதி கிடைக்கிறதா? என்பதுதான் இந்த தொடரின் கதை சாராம்சம்,

பாலிவுட்டில் இதே மாதிரி பல டைப்பான ஹிந்தி வெப் சீரியஸ்கள் பல வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தமிழில் ஒரு கோர்ட் தொடர்பான ஒரு நெடுந்தொடர் வந்திருப்பது இதுவே முதல் முறை .

இது எப்படி இருக்கிறது இந்த கதையை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் பல இடங்களில் கதையில் ஏதோ ஒரு குறை தெரிகிறது கதையை இன்னும் பலமாக அமைத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் .வக்கீலாக நடித்துள்ள சரவணன் தன் உடல் மொழியை அதற்கு ஏற்றார் போல் மாற்றி நடித்திருக்கிறார் நம்ரிதாவின் நடிப்பும் எங்கும் ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே நேர்கோடாக தான் செல்கிறது.

சரவணனுக்கு ஆப்போசிடாக வாதாடும் அருள் டி தாஸ் அவருடைய நடிப்பு வீணடிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம் படத்தில் பல கேரக்டர்கள் இருந்தும் சரவணன் நடிப்பு மட்டுமே பார்க்க வைக்கிறது இந்த வெப் சீரியஸில் மிகவும் பலமான விஷயம் என்றால் ஒவ்வொரு தொடரும் 20 நிமிடங்களில் முடிவடைகிறது மொத்தம் ஏழு எபிசோடுகளும் கிட்டத்தட்ட2.45 மணி நேரத்துக்குள் முடிந்து விடுவதால் எந்த ஒரு தொய்வும் இல்லாமல் படம் பார்க்க நேர்கிறது OTT தளம் என்பதால் சற்று போர் அடிக்காமல் ஓடும் என்பது தான் நிச்சயம்

“மனிதர்கள்” திரைப்படம், சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஒடிடி தளங்களில்

புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில், மனித குணத்தின் விசித்திரங்களை அழுத்தமாக பேசி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைக் குவித்த “மனிதர்கள்” திரைப்படம், ஜுலை 17 இன்று முதல், சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், உருவான “மனிதர்கள்” திரைப்படம், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியானது.

ஒரு இரவில் ஒன்று சேர்ந்து, மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் அசத்தலான திரில்லராக, சொன்ன இப்படம், திரை ஆர்வலர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.

தற்போது இப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா என இரண்டு ஓடிடி தளங்களில், ஸ்ட்ரீமாகி வருகிறது. இப்படத்தினை திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள், இப்போது வீட்டிலிருந்தே பார்த்து ரசிக்கலாம்.

இப்படத்தினை Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures சார்பில் இராஜேந்திர பிரசாத், ஜெ.நவீன் குமார், மு.கி.சாம்பசிவம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில் ஒளிப்பதிவு – அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ், இசை – அனிலேஷ் எல் மேத்யூ , படத்தொகுப்பு – தின்சா, கலை – மகேந்திரன் பாண்டியன், பாடல் – கார்த்திக் நேத்தா, ஒப்பனை – அ சபரி கிரிசன், துனைத்தயாரிப்பு – தரணிதரன் பரிமளா குலோத்துங்கன், நா யுவராஜ், உதவி இயக்கம் – லோகேஷ் க கண்ணன், சண்டை பயிற்சி – வின் வீரா, ஒளிக்கலவை – ஆனந்த் இராமச்சந்திரன்,
சப்தம் – சதீஷ், வண்ணம் – வசந்த் செ கார்த்திக், வரைகலை – ஆன்டனி பிரிட்டோ, விளம்பர வடிவமைப்பு – ரிவர் சைடு ஹவுஸ் மக்கள் தொடர்பு : AIM சதீஷ், சிவா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

அருமையான திரை அனுபவமான “மனிதரகள்’ திரைப்படத்தை, சன் நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் கண்டு ரசியுங்கள் !.

https://www.sunnxt.com/movie/detail/227466
https://www.aha.video/movie/manidhargal

விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்”

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ஃப்ளவர்” (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குனர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

ரெட் ஃப்ளவர் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது:

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸின் முதல் மற்றும் மிக பிரமாண்டமான தயாரிப்பு இந்த ரெட் ஃப்ளவர். மேடையில் இருப்பவர்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் அல்ல, இங்கு வந்திருக்கும் எல்லோருமே என்னுடைய சிறப்பு விருந்தினர்கள் தான். இந்த படம் தொடங்கிய நாளில் இருந்து இந்த நொடி வரை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு படங்கள் எடுத்து முடித்தும் இதுவரை ரிலீஸ் செய்யவில்லை. முதல் படமாக இந்த படம் தான் ரிலீஸாக வேண்டும் என்பது தான் என் ஆசை. இது ஒரு காதல் கதையோ, குடும்பக் கதையோ அல்ல. இந்தியாவை உயர்த்தி சொல்லும் ஒரு படம். இந்தியா வல்லரசு என்று சொன்னால் யாராலும் அதை மறுக்க முடியாது. இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இந்த தலைமுறையின் ஒரு சிறந்த இயக்குனராக வருவார்.

நடிகை காவ்யா பேசியதாவது:

2047ல் ஒரு மூன்றாம் உலகப் போர் நடந்தால் எப்படி இருக்கும், போர் நடக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர். 2047 காலகட்டத்தில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். கிரீன் மேட் காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் முழுக்க முழுக்க ரியல் லொகேஷன்களில் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்”.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசியதாவது:

மேடையில் இருக்கும் அனைவருமே ஜாம்பவான்கள். இந்த படம் வெற்றி அடைந்தால் அதற்கு ஒரே காரணம் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். அவருக்கு பக்கபலமாக தயாரிப்பாளரும், நடிகர் விக்னேஷூம் இருக்கிறார்கள். இது ஒரு Futuristic பாகுபலி. future-ல் நடக்கும் கதை என்பதால்  பாகுபலியை விட இது தான் கஷ்டம். மிஷன் இம்பாஸிபிள், மேட்ரிக்ஸ் படங்களைப் போல இந்த படம் இருக்கும். நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரத்தை எனக்கு தந்திருக்கிறார். 2047-ல் இந்தியாவின் பிரதமர் கதாபாத்திரம். நேதாஜி கனவு கண்ட இந்தியா வந்து கொண்டிருக்கிறது. இந்த படம் இளைஞர்களை கவரும், அதே சமயத்தில் நாடு நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்”.

தலைவாசல் விஜய் பேசியதாவது:

இந்த படத்துக்கு தேவையான இசையை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ். இந்த படத்தின் வில்லன் நீங்க தான் என சொன்னார் இயக்குனர். என் 32 வருட சினிமா கேரியரில் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தது இல்லை. இந்த வாய்ப்பை தந்த இயக்குனருக்கு நன்றி. அவரின் விஷனை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.

நடிகர் ஜான் விஜய் பேசியதாவது:

கல்லூரியில் ஒன்றாக என்னுடன் படித்தவர் விஷால், இந்த மேடையில் ஒன்றாக அவருடன் இருப்பது மகிழ்ச்சி. விஷால் எப்போதுமே எல்லோருக்காகவும் வந்து நிற்பவர். ஆத்தங்கரை மரமே பாடல் கேட்டிருப்போம், அன்று முதல் இன்று ரெட் ஃப்ளவர் வரை அதே இளமையுடன் இருக்கும் ஒரு ஹீரோ விக்னேஷ். மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு தந்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசியதாவது:

2047-ல் மால்கம் வரி செலுத்த மறுக்கும் நாடுகளின் மீது போர் தொடுக்கிறது, நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். அதை இந்தியா எப்படி அணுகுகிறது. இந்தியா எப்படி அதை முறியடிக்கிறது. கேமரா மேன் ஒரு நாளைக்கு 300 முதல் 350 ஷாட்ஸ் எடுப்பார். அவ்வளவு வேகமாக வேலை செய்பவர். எடிட்டரின் பங்கு அபரிமிதமானது.

நடிகர் அஜய் ரத்னம் பேசியதாவது:

இயக்குனரின் கனவு திரையில் வந்திருக்கிறது. நம்பிக்கை எப்போதுமே வெற்றியைடையும். ரெட் ஃப்ளவர்னா சிவப்பு மலர், சிகப்பு ரோஜாக்கள் போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடையும்.

நடிகர் விக்னேஷ் பேசியதாவது:

எனக்கு இயக்குனர் பாரதிராஜா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அவருக்கு இணையாக பி.வாசு சாரை பிடிக்கும். புரட்சித் தளபதி விஷால் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். மனிதாபிமானம் மிக்கவர். நடிகர் சங்கத்தில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும், உதவி தேவைப்பட்டாலும் உடனே இறங்கி வேலை செய்பவர். ஒய்ஜி மகேந்திரன் அவர்களின் ஆர்வம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை பற்றி தினமும் கேட்டுக் கொண்டே இருப்பார். ஜான் விஜய், அஜய் ரத்னம், சுரேஷ் மேனன் என அத்தனை நடிகர்களும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களை பொறுத்தவரை எல்லோருமே இளைஞர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இயக்குனர் ஆண்ட்ரூ நல்ல மனிதர், நேர்மையான உழைப்பை தந்துள்ளார். நிறைய பேர் விக்னேஷை வைத்து படம் எடுக்காதீர்கள் என தயாரிப்பாளரை தடுத்தனர். ஆனால் மாணிக்கம் சார் பின்வாங்காமல் படத்தை முடித்திருக்கிறார். அவர் சினிமாவில் சம்பாதிக்க வரவில்லை. சினிமா மீது பற்று வைத்துள்ளார். அவருக்காக மிகப்பெரிய வெற்றி அடையும். இந்த படம் வெற்றி அடைந்தால் அவர் அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பார்.

30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எவ்வளவோ உழைத்திருக்கிறேன். சினிமா தான் எனக்கு எல்லாமே. சினிமாவை அவ்வளவு பிடிக்கும். அதனால் தான் இவ்வளவு நாள் கழித்தும் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். நான் தோற்கலாம், ஆனால் என் முயற்சி தோற்கக்கூடாது.

முன்பெல்லாம் முதல் வாரம் கூட்டமே இல்லாமல் இருந்தால் கூட, ஓரிரு வாரங்கள் கழித்து லேட் பிக்கப் ஆகி வெற்றி பெறும். என்னுடைய சின்னத்தாயி, ராமன் அப்துல்லா போன்ற படங்கள் எல்லாமே லேட் பிக்கப் தான். ஆனால் இப்போது முதல் நாளே நன்றாக ஓடினால் தான் படம் வெற்றி அடையும். அதனால் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என நினைக்காதீர்கள். தியேட்டரில் சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இயக்குனர் சுராஜ் பேசியதாவது:

நான் ஏற்கனவே விஷாலை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். எங்கள் படப்பிடிப்பில் பலர் அவரைத் தேடி, அவரின் உதவி நாடி வருவார்கள். அத்தனை பேருக்கும் உதவி செய்வார். அவர் இந்த விழாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. நடிகர் விக்னேஷ் உங்கள் கஷ்டத்துக்கும், கடின உழைப்புக்கும், நீங்கள் பட்ட அவமானங்களுக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளர் மாணிக்கம் என் உறவினர், என் மாப்பிள்ளை. ஒரு படம் எடுக்க வேண்டும் எனறார், சின்ன பட்ஜெட்டில் எடுப்பார் என நினைத்தால் மிக பிரமாண்டமாக எடுத்து வைத்திருக்கிறார். 9 கோடி பட்ஜெட்டில் 2.5 கோடி சிஜிக்கு மட்டுமே செலவு செய்திருக்கிறார்.

இதற்கு முன் இரண்டு படங்களை அவர் தயாரித்துள்ளார், ஆனாலும் அதை ரிலீஸ் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால் முதல் படம் பெரிய படமாக இருக்க வேண்டும் என்றார். இந்த படம் வெற்றி பெற்றால் அவர் இன்னும் பல படங்களை தயாரிப்பார், அதற்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.

இயக்குனர் திருமலை பேசியதாவது:

மாணிக்கம் ஆர்வத்தில் சினிமாவிக்கு வந்தாரா? ஆரவக்கோளாறில் வந்தாரா? என நினைத்தேன். அவரிடம் பேசும்போது தான் அவரின் சினிமா ஆர்வம் புரிந்தது. இந்த ரெட் பிளவர் படத்தை பெரிய இயக்குனர்களிடம் கொடுத்திருந்தால் 50 கோடி செலவு செய்திருப்பார்கள். ஆனால் ஆண்ட்ரூ பாண்டியன் 9 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடித்திருக்கிறார். அவர் இன்னொரு படத்தையும் எடுத்து வைத்திருக்கிறார். அதை நான் பார்த்திருக்கிறேன், சிறப்பாக எடுத்திருந்தார். அந்த அளவுக்கு ஒரு சிறப்பான திட்டமிடல். அவர் இந்த படத்தை இயக்கியிருப்பது சிறப்பு. அவருக்கு பக்கபலமாக முழுக்க இளைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். இது இந்திய தேசத்துக்கான படம்”.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது:

ரெட் ஃப்ளவர் திரைப்படம் முழுக்க முழுக்க புது தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட படம். இவ்வளவு பெரிய பொருட்செலவில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை விநியோகிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். 2047-ல் அது மீண்டும் வந்தால் என்னவாகும் என்பது தான் கதை. அட்வான்ஸ் சிஜியை இந்த படத்தில் பயன்படுத்திருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வந்திருக்கிறது.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி படம் வெளியாகிறது, திரையரங்குக்கு வந்து பாருங்கள்.

இயக்குனர் பி. வாசு பேசியதாவது:

விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு முன்பு  இயக்குனரை அழைத்து வந்து கதையை சொன்னார். அதை எப்படி படமாக்கப் போகிறார்கள் என்ற வியப்பு எனக்கு இருந்தது. அதீதமான தொழில்நுட்ப விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. சிஜி என்பது சாதாரண விஷயம் இல்லை, பல பேரின் உழைப்பு அடங்கியது. ஒரு சாதாரண விஷயத்தை செய்யவே மிகப்பெரிய உழைப்பு தேவை. இந்த படத்தில் 90 நிமிட சிஜி காட்சிகள் இருக்கிறது என சொன்னார்கள். விக்னேஷ் ரொம்ப துறுதுறுவென இருப்பவர். கடின உழைப்பாளி.  உங்கள் உழைப்பு நிச்சயம் வீண் போகாது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். சினிமா இன்று ரொம்பவே போட்டி நிறைந்த ஒரு துறையாக மாறி விட்டது. இளம் இயக்குனர்க்ள் எல்லாம் மிக மிக திறமையானர்வர்கள். ஓடிடி வந்த பிறகு பல மொழி படங்களையும் பார்க்க தொடங்கியபோது அவர்களின் கண்டெண்ட் மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்களுக்கு இணையாக, போட்டியாக நாமும் படங்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நடிகன் பல விதமான கதாபாத்திரங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வேலையை இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மிகச்சிறப்பான செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

விஷால் வீட்டில் தான் வால்டர் வெற்றிவேல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அவரின் தந்தை ஜிகே ரெட்டி சினிமாவின் மிகச்சிறந்த ஒரு ரசிகர். அவரின் வாரிசு விஷால் எப்படி சோடை போவார். அவர் அடுத்தவர்களின் வெற்றியை பார்த்து மகிழ்பவர்.

இயக்குனரின் முதல் வேலை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி சம்மதிக்க வைப்பது. பின் படத்தை எடுத்து முடித்து தயாரிப்பாளரை திருப்திப்படுத்துவது. அதன் பின் விநியோகஸ்தர்களை மகிழ்விப்பது.  ஆண்ட்ரூ அந்த வகையில் இந்த கதையை ரிலீஸ் கட்டம் வரை மிகச்சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.

சந்திரமுகி படத்தில் காத்தாடி பாடலில் சிஜி செய்திருப்போம். அதற்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால் இந்த படத்தில் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் சிஜி. இயக்குனரின் தெளிவு தான் இந்த படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது”.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:

விக்னேஷ் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு மிக முக்கியமான படமாக, வெற்றிப்படமாக அமையும். தயாரிப்பாளர் விக்னேஷ் மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் நடிகர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளருக்கு நன்றியாக இருப்பதில்லை.  விக்னேஷ் தயாரிப்பாளரை என்றும் மதிக்க வேண்டும்.

பி வாசு சார், கேஎஸ் ரவிக்குமார் சார் எல்லாம் தயாரிப்பாளர்களின் இயக்குனர்களாக இருந்தார்கள். சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தனர். தற்போது இயக்குனர்கள் சொன்ன பட்ஜெட்டில் படங்களை எடுப்பதில்லை. தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தின் பட்ஜெட் அதிகமாகும்போது நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கிறார்கள். நலிந்து போன பல தயாரிப்பாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள்.

ஓடிடி நிறுவனங்கள் படத்தை பார்த்து விட்டு தான் வாங்குகிறார்கள். அதனால் ஷூட்டிங்குக்கு முன்பே கொஞ்சம் திட்டமிட்டு படத்தை எடுங்கள்.

நடிகர் விஷால் பேசியதாவது:

பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால் அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்பு. இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள், ஆனால் சுராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் தரணும். அவர் இயக்கிய படங்கள் பல பேருக்கு மெடிஷன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய நகைச்சுவை காட்சிகள் தான் இன்றும் பலருக்கும் மருந்தாக இருக்கிறது.

இந்த அரங்கம் நிறைந்து இருப்பது போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக இந்த படம் ஓடணும். இங்கு சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. இந்த படத்தின் விழாவுக்கு வருவது என் கடமை. என் நண்பன் போராளி விக்னேஷூக்காக நான் வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவர் கஷ்டம், அவமானங்களை தாண்டி இங்கு வந்திருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும். மாணிக்கம் என்ற ஒரு பொக்கிஷம் உங்களுக்கு தயாரிப்பாளராக கிடைத்திருக்கிறார்.

2025-ல் என்ன நடக்கிறது என்பதை படமாக எடுக்கவே இன்று பல இயக்குனர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குனர் ஆண்ட்ரூ 2047-ல் என்ன நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி படமாக எடுத்துள்ளார். எனக்குப் பிடித்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், நேதாஜி. அதில் நேதாஜிக்கு இந்த படத்தில் Tribute செய்தது மகிழ்ச்சி.

திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது, எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை. அதனால் ரிலீஸை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும்.

விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க வேலைகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 29 என் பிறந்த நாள்.  கண்டிப்பாக நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன்.

ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் நடிகர் விக்னேஷூக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். ஆகஸ்ட் 8ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ரெட் ஃப்ளவர்.

பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2

தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரவி மோகன் – ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , ‘சிங்கம்’ ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் கவனிக்க, கலை இயக்கத்தை துரைராஜ் கையாள, நிர்வாக தயாரிப்பு பணியை எஸ். பழனியப்பன் மேற்கொண்டார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் , தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் , அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், மயக்கும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இணைந்து நடிக்கும் புதிய படம்

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

காமெடி நடிகராக பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகரான எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடிகை ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , அஞ்சலி ராவ் , அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவாகர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரேம் கவனிக்கிறார் . சண்டை காட்சிகளை பீனிக்ஸ் பிரபு அமைக்க, ஷிஜூ அலெக்ஸ் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். காமெடி வித் ஹாரர் ஃபேண்டஸி ஃபிலிமாக தயாராகும் இந்த திரைப்படத்தை குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி மற்றும் மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகி இருக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழாவும் , படப்பிடிப்பும் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

‘பார்க்கிங் ‘ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் – இணைய தள பிரபலமான நடிகர் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்முதலாக கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா – தீக்ஷித் ஷெட்டி நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” படத்தின் முதல் பாடல் “நதிவே”

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஜோடியாக நடிக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம், கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் இப்படத்தினை வழங்குகிறார். இயக்கும் பணியை நடிகராகவும், இப்போது இயக்குநராகவும் செயல்படும் ராகுல் ரவீந்திரன் மேற்கொள்கிறார்.

முழுமையான காதல் படைப்பாக உருவாகி வரும் இப்படத்திலிருந்து முதல் இசை வெளியீடாக “நதிவே” எனும் பாடல் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

ஹேஷம் அப்துல் வாஹாப் இசையமைத்துள்ள இந்த பாடல், மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், ஈர்க்கும் குரலும் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக உள்ளது. தமிழ் பாடல்வரிகளைக் கவிஞர் ராகேந்து மௌலி எழுதியுள்ளார். அவருடைய வரிகள், இசையுடன் நெருக்கமாக இணைந்து, காதல் உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கின்றது.

ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி இடையிலான வசீகரிக்கும் கெமிஸ்ட்ரி பாடலின் வசீகரத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. விஸ்வகிரண் நம்பி நடன அமைப்பில், நேர்த்தியான நடன அசைவுகள், ராஷ்மிகாவின் அழகான முகபாவங்கள் மற்றும் தீக்ஷித்தின் அழகான நடிப்பு ஆகியவை உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இசை, பாடல் வரிகள் மற்றும் காட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு ஆழமான, நெகிழ்ச்சியுடன் கூடிய மயக்கும் அனுபவத்தை உருவாக்குகின்றன.

தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் “தி கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது.

நடிகர்கள்: ரஷ்மிகா மந்தனா, தீக்ஷித் ஷெட்டி மற்றும் பிறர்

திரைப்படக் குழு விவரம்:
இசை: ஹேஷம் அப்துல் வாஹாப்
உடை வடிவமைப்பு : ஷ்ராவ்யா வர்மா
தயாரிப்பு வடிவமைப்பு : எஸ். ராமகிருஷ்ணா, மௌனிகா நிகோட்ரி
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ
வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பு நிறுவனம்: கீதா ஆர்ட்ஸ், தீராஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் : தீராஜ் மோகிலினேனி, வித்யா கோப்பிநீதி
கதை மற்றும் இயக்கம் : ராகுல் ரவீந்திரன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், 96 பிரேம்குமார் இயக்கும் புதிய படம் !!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. இந்திய திரைப்பட உலகின் பெருமைமிகு நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 96, மெய்யழகன் புகழ் இயக்குநர் பிரேம் குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

உணர்வுப்பூர்வமான அம்சங்களுடன் சிறப்பான கதைகளை வழங்கும் திறமை கொண்ட இயக்குநர் பிரேம் குமார், பன்முக திறமை கொண்ட நடிப்புக்காக பெயர் பெற்ற சீயான் விக்ரம் ஆகியோர் இணைந்து தமிழ் சினிமாவிற்கு தனித்தன்மை வாய்ந்த ஒரு சினிமா அனுபவத்தை வழங்கவிருக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட்டின் தலைவர் டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிக்கிறார். இப்படம், நம் மனதை ஆழமாக தொடும் கதைக்களத்துடன், பரவசமான நடிப்பை கலந்துசேர்த்த, ஒரு புதிய முயற்சியாக உருவாக உள்ளது.

இத்திரைப்படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் பல ஆச்சரியமான தகவல்களுக்கு காத்திருங்கள்!