முதல்முறையாகக் குழந்தைகள் கொண்டாட Sofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் !!
Bereadymusic தயாரிப்பில், சமீபத்திய சென்ஷேசன், குட்டி ஸ்டார் Sofa Boy நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது .
சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க ஃபேமஸானவர் குட்டி ஸ்டார் Sofa Boy. கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய Sofa விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீனா இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் Bereadymusic நிறுவனம், Sofa Boy நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், சார்ட்பஸ்டரில் இடம்பிடித்து வைரலாகி வருகிறது.
Bereadymusic தயாரித்துள்ள இந்த வீடியோ ஆல்பம் பாடலை எழுதி இசையமைத்துள்ளார், இசையமைப்பாளர் சுதர்ஷன். பல வெற்றிபெற்ற ஆல்பம் பாடல்களை உருவாக்கிய டோங்லி ஜம்போ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். பல டிரெண்டிங் ஆல்பம் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ள நடன இயக்குநர் ரிச்சி ரிச்சர்ட்ஸன் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.
இப்பாடலை இங்கே ரசிக்கலாம் லிங்க் : https://bit.ly/4adhGjH
இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர் ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்- இவர் ‘டான்’, ‘தலாஷ்’, மற்றும் ‘அந்தாதூன்’ போன்ற வெற்றி பெற்ற பாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்தி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘மகரிஷி’ திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ எனும் திரைப்படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை பரசுராம் பெட்லா இயக்கியிருக்கிறார். வாசு வர்மா இப்படத்திற்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன் பகிர்ந்து கொண்டார்.
” சினிமா பள்ளியில் ஒளிப்பதிவினை கற்றுக் கொண்டேன். கேமராவை பயன்படுத்துவதற்கான அனைத்து பயிற்சிகளையும் முறையாக பெற்றிருக்கிறேன். மேலும் கூடுதலான சில விசயங்களை உலக சினிமாக்களை பார்வையிடுவதன் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறேன். பல வருடங்களாக தெலுங்கு சினிமாக்களை பார்த்து வருகிறேன். கிருஷ்ணாவின் திரைப்படங்களையும், புராண கதைகளைக் கொண்ட படங்களையும் தான் அதிகமாக பார்ப்பேன். நாம் அனைவரும் அடிப்படையில் வணிகத்தனம் கொண்டவர்கள். அதனால் தான் வாழ்க்கையை விட திரைப்படங்கள் பெரிது என நினைக்கிறோம். அதனால் தான் ஒளிப்பதிவின் அடிப்படையில் காட்சிகள் மிகவும் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஒளிப்பதிவு என்பது ஒரு திறமை. அதற்கென்றொரு அழகியல் உணர்வு உள்ளது. காட்சியியல் உணர்வும் உண்டு. இதனை நாங்கள் எங்களுக்கான படைப்புகளில்… திரைப்படங்களில் பயன்படுத்துகிறோம். ஒரு திரைப்படத்திற்கு தேவையானது என்றால் மட்டுமே புதிய உபகரணங்களை பயன்படுத்துகிறேன். இந்த புதிய லென்ஸை பயன்படுத்தினேன். இந்த புதிய கேமராவை பயன்படுத்தினேன் என்று சொல்ல முயலவே இல்லை. எந்த மாதிரியான காட்சிகள் தேவைப்படுகிறதோ.. அதை மட்டுமே எடுக்கச் சொல்கிறார்கள். அந்தப் படம் மற்றும் அதற்கு என்ன உபகரணங்கள் தேவையோ.. அதை மட்டுமே பயன்படுத்துகிறேன்.
‘ஃபேமிலி ஸ்டார்’ படம் ஒரு அழகான திரைப்படம். ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனின் கதை. குடும்பத்திற்காக அவர் ஆற்றும் கடமையை நல்ல மெசேஜுடன் சொல்லி இருக்கிறோம். காலனி போன்ற ஒரு அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினோம். கதை மற்றும் கதாபாத்திரங்கள் இயல்பானவை என்பதை பிரதிபலிக்கும் வகையில் காட்சி அமைப்பை உருவாக்கியுள்ளேன். ட்ரோன் காட்சிகள் இல்லை. ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்திற்கு தேவையில்லாத எந்த பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளும் இல்லை. படத்தை இயற்கையான ஒளி அமைப்பில் படமாக்கி இருக்கிறோம். அதனால் படம் பார்க்கும் பொழுது காட்சிகள் அழகாக இருப்பதை காண்பீர்கள். நடுத்தர வர்க்கத்து வீட்டின் அமைப்பை நீங்கள் திரையில் பார்த்தால்… உங்களுடைய வீடு போல் தெரியும். இந்தப் திரைப்படத்தின் கதை கள பின்னணியை எளிமையான அமைப்பில் இயக்குநர் பரசுராம் உருவாக்கி இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவும் மிருனாள் தாக்கூரும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். படத்தில் இணைந்து பணியாற்றிய நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் எங்களுக்கு நிறைவான பங்களிப்பை வழங்கினர்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ” ஃபேமிலி ஸ்டார் நாம் மறந்துவிட்ட…. புறக்கணித்து விட்ட.. கூட்டுக் குடும்பத்தின் மதிப்புகளையும், குடும்ப அமைப்பின் விழுமியங்களையும் பேசும் திரைப்படம். இந்தியா முழுவதும் கூட்டுக் குடும்பம் என்பது மறைந்து தனிக்குடித்தனம் என்பது அதிகரித்து விட்டது. குடும்ப உறுப்பினர்களின் சங்கமம் என்பதும் நடைபெறவில்லை. ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் மறைந்துவிட்ட குடும்பத்தின் கூட்டுக் குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், குடும்ப உறுப்பினர்களின் ஒன்று கூடலையும் நினைவுபடுத்தும் வகையில் உருவாகி இருக்கிறது. இது ஒரு இந்திய குடும்பங்களின் கதை. அத்துடன் நல்லதொரு காதல் கதையும் கூட. இயக்குநர் பரசுராம் தெளிவான சிந்தனைகளுடன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சில புதிய விசயங்களை அவர் முயற்சித்துள்ளார். இதனுடன் கமர்சியல் விசயங்களை இணைத்துள்ளார். இயக்குநர் பரசுராம் என்னுடைய பாணியிலான பணியை மிகவும் ரசித்தார். பாராட்டினார். இந்தத் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று என்னால் தற்போது நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எப்படிப்பட்ட வரவேற்பினை அளிப்பார்கள் என்பதனை எளிதாக கணிக்க முடியாது. சில சாதாரண படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. சில சிறந்த படங்கள் தோல்வி அடைந்தும் இருக்கிறது.
நான் இதற்கு முன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறேன். தயாரிப்பாளர் தில் ராஜுவின் தயாரிப்பின் தரம் குறித்தும் அந்த நிறுவனத்தின் மதிப்பு குறித்தும் தெரியும். மீண்டும் இந்த நிறுவனத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியை அளிக்கிறது. விஜய் தேவரகொண்டா நல்ல திறமையான நடிகர். அவருடைய நடிப்பில் செயற்கை இருக்காது. அவர் நடிப்பை வெளிப்படுத்துவதில் தனித்துவம் மிக்கவர்.
என் மகள் மாளவிகா- தனக்கென ஒரு நற்பெயரை சம்பாதித்துள்ளார். நான் எந்த திரைப்படத்திற்கும் அவரது பெயரை பரிந்துரைப்பதில்லை. அப்படி செய்வதும் சரியல்ல என்று நீங்கள் நினைத்தால்.. அவர் நடிகையாக தனது திறமையை நிரூபிக்க வேண்டும். இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் ‘தங்கலான்’ திரைப்படம் மாளவிகாவிற்கு நல்ல பெயரை பெற்று தரும். பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் உருவான ட’ தி கோட் லைஃப் -ஆடு ஜீவிதம்’ திரைப்படத்தில் நான் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றதால் அதிலிருந்து விலகி விட்டேன்” என்றார்.
தெலுங்கிலும், தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘ தி ஃபேமிலி ஸ்டார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மிருனாள் தாக்கூர் நடிக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதை முன்னிட்டு படக்குழுவினர் தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது விஜய் தேவரகொண்டா, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் தில் ராஜு பேசுகையில், ” விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு பிறகு, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தை இரண்டாவது படமாக தயாரித்திருக்கிறேன். இந்த திரைப்படம் நடுத்தர வர்க்கத் இளைஞரின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களுடைய குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் தான் ‘தி ஃபேமிலி ஸ்டார். இதை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ‘கீதா கோவிந்தம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பரசுராம் பெட்லாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காபி இருக்கிறது. இட்லி சாம்பார் இருக்கிறது. தாலி இருக்கிறது. .ஃபுல் மீல்ஸ் ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து மக்களின் பொருளாதார ஸ்டேட்டஸ் உயரவும், குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் போராடும் ஒரு இளைஞனின் கதை தான் இப்படத்தின் கதை. இந்தப் படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என கமர்சியல் விசயங்கள் இடம் பிடித்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும். என்னுடைய நண்பரும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்வரூப் – இந்த படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறார். விஜய் தேவரகொண்டாவும் – பரசுராமும் இணைந்து நிகழ்த்தி இருக்கும் மேஜிக்கைக் காண ஏப்ரல் ஐந்தாம் தேதி திரையரங்கத்தில் வருகை தந்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா பேசுகையில், ” தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த போது அந்தப் பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். கடந்த முறை ஊடகவியலாளர்களை சந்தித்தபோது.. தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஊடகவியலாளர்கள் விளக்கினர். நானும் அதற்கு பதிலளித்தேன்.
என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் ‘அர்ஜுன் ரெட்டி’க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். இயக்குநர் பரசுராமுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்த படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன். இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு பிரமிப்பாக இருந்தது. இதே போல் இந்த படத்திற்கும் உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்கத்தை இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும் … காதலிப்பதிலும்… நேசிப்பதிலும்… கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன்தான் இப்படத்தில் நாயகன். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
படத்தின் நாயகியான மிருனாள் தாக்கூர் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கிய சக கலைஞர். மும்பையில் வேறு ஒரு பணியில் இருப்பதால், அவரால் இங்கு வர இயலவில்லை. இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்திருக்கிறார். அவருக்கும் படக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அன்று தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது.” என்றார்.
படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் பேசுகையில், ” தயாரிப்பாளர் தில் ராஜு அருமையான நண்பர். இந்தப் படம் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு படக்குழுவினர் பதிலளித்தனர்.
“வல்லவன் வகுத்ததடா” படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டனர் !!
Focus Studios சார்பில் விநாயக் துரை தயாரித்து இயக்க, ஹைப்பர்லிங்க் திரைக்கதையில் க்ரைம் டிராமா படமாக உருவாகியிருக்கும் “வல்லவன் வகுத்ததடா” திரைப்படத்தின் டிரெய்லரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் வெளியிட்டனர்.
முன்னதாக வெளியான டீசர் படத்தின் களத்தை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக அமைந்துள்ளது.
5 கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள், பரபரப்பான திருப்பங்களுடன் ஹைப்பர்லிங்க் திரைக்கதையில் சொல்லும், க்ரைம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த டிரெய்லர் 5 கதாபாத்திரங்களின் பின்னணியை காட்டுவதுடன், பணத்திற்காக அவர்களின் உணர்ச்சிகரமான போராட்டத்தை பரபரப்பாகக் காட்டுகிறது. படபடக்கும் எடிட்டிங் கட் , கதாபாத்திரங்களின் தவிப்பு, சிந்தனையைத் தூண்டும் வசனங்கள் என டிரெய்லர், இப்படம் மிக வித்தியாசமான களத்தில் ஒரு அருமையான திரை அனுபவம் தரும் என்பதை உறுதி செய்கிறது.
பணம் தான் உலகின் மனித வாழ்வை தீர்மானிக்கிறது. பணம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இடையில் நடக்கும் போராட்த்தை பரபர திருப்பங்களுடன் சொல்கிறது இப்படம்.
இப்படத்தில் தேஜ் சரண்ராஜ் நாயகனாக நடித்துள்ளார். ராஜேஷ், பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாக்ஷி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Focus Studios சார்பில் விநாயக் துரை இப்படத்தைத் தயாரித்துள்ளதுடன், இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
தொழில் நுட்ப குழு தயாரிப்பு நிறுவனம் : Focus Studios தயாரிப்பாளர்: விநாயக் துரை இயக்குநர்: விநாயக் துரை ஒளிப்பதிவு : கார்த்திக் நல்லமுத்து இசை: சகிஷ்னா சேவியர் எடிட்டர்: அஜய் சண்டைக்காட்சி: மகேஷ் மேத்யூ மக்கள் தொடர்பு : சதீஷ்-சிவா (AIM) https://youtu.be/KjXFrKTH34I
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார். இதை கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த சந்தோஷம்.கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது ,அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது..மேலும் தயாரிப்பாளர், மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது, எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம், 4, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் இந்த அணுகுமுறை படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது. இந்த மகிழ்வான செய்தியை , ஊடகங்களுக்கு தெரிய படுத்துவதில், படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
Behindwoods தனது அடுத்த முயற்சியாக திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது. எங்களது முதல் தயாரிப்பில் பிரபு தேவா கதாநாயகனாக நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த பெரும் நட்சத்திரங்கள் இணையும் படத்தை, Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.
இந்திய திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைத்துள்ளோம். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும்.
இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இப்படத்தில் பங்காற்றுவது குறித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், “சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும், அதை இப்போ செய்யலாம் பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும், இந்த திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்கிறார்.
நடனப்புயல் பிரபு தேவா கூறியபோது, “நடன இயக்குனர்களை ஊக்கப்படுத்திய இசைப்புயல் ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.
மனோஜ் NS கூறுகையில், “இந்தத் திரைப்படம் இந்தியாவின் இரண்டு மாபெரும் கலைஞர்களான ஏ.ஆர் ரஹ்மான், பிரபு தேவா இருவரையும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
காமெடி நடிப்பில் உச்சம் தோட்ட யோகி பாபு ஒரு வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.”
இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு சில மாதங்களில் தலைப்பை வெளியிடுவோம். தமிழில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா அவர்களின் 6-வது கூட்டணியைப் குறிக்கும் வகையில் #arrpd6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டு பான் – இந்தியா படமாக திரைக்கு வர திட்டமிட்டு உள்ளோம். எங்களின் புதிய முயற்சிக்கு அனைவரும் உளமார ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Pavaki Entertainment Pvt Ltd சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’. வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்
தயாரிப்பாளர் இயக்குநர் பாலாஜி மாதவன் பேசியதாவது… பி.வாசு அங்கிள் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் வந்துள்ளோம். சினிமாவுக்குள் அறிமுகமாக வேண்டும் என நினைத்த போது, மிஷ்கின் சாரிடமிருந்தது தான் என் திரைப்பயணம் ஆரம்பமானது. அவரிடம் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தேன். பின்பு மாதவன் சாரிடம். அவரை நடிகராகத் தான் அணுகினேன், ராக்கெட்டரி ஸ்கிரிப்ட் தந்தார். அப்போது அவர் இயக்குநர் என்பதே தெரியாது. ஆனால் பிறகு அந்தப்படத்தில் இணைந்தேன். அந்தப்படம் என்னை மாற்றியது. அவர் இயக்குநராகப் பிரமிப்பைத் தந்தார். அந்தப்படம் மிகப்பெரிய அனுபவம். மிஷ்கின் சாரிடமும், மாதவன் சாரிடமும் முழுமையாக முழுப்படத்திலும் வேலை பார்த்தேன். பின் என் திரைக்கதையை எழுத ஆரம்பித்த போது, என் நண்பன் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒளிப்பதிவாளர் பெரும் துணையாக இருந்தார். அவர் தான் நாமே பண்ணலாம் என சொன்னார் அங்கிருந்துதான் எங்கள் பாவகி கம்பெனி உதயமானது. அந்த ரெண்டு பேருக்கும் இந்நேரத்தில் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். அந்த நிலையிலிருந்து பலரும் எங்களுக்கு உதவினார்கள். யாருமே உங்களால் முடியுமா? எனக் கேட்கவில்லை முழு ஆதரவு தந்தார்கள். ராதாரவி சார், பாலாஜி சக்திவேல் சார், ஆண்டனி சார் எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். இந்தப்படத்தின் கதை முடிந்த போது, சிபியை அணுகினேன். அவர் கதை மட்டுமல்ல, திரைக்கதையும் கொடுங்கள் படிக்கிறேன் என்றார். அங்கிருந்தே அவரை எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இசையமைப்பாளர் சாம். மாதவன் சாருக்கு செய்த கதைக்கும் சாம் தான் மியூசிக் என்று இருந்தது. இப்போதும் அவர் அந்தப்படத்தை நாம் கண்டிப்பாகச் செய்கிறோம் என்று சொல்வார். இந்தப்படத்தில் அசத்தலாக மியூசிக் தந்துள்ளார். நாங்கள் எடுத்துக் குடுத்த விஷுவலுக்கு மியூசிக் போட்டு அசத்தினார். ஒரு பாடல் எழுத மிஷ்கின் சாரை அணுகினேன், ஆனால் அவர் கபிலன் தான் இதற்கு சரியாக வருவார் என்றார். கபிலன் சாருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப்படத்தில் எல்லோரும் படத்தை நம்பி படத்திற்காக வேலை பார்த்தார்கள். படத்தில் நிறைய செட் இருக்கிறது, பாலசுப்பிரமணியம் படத்தின் புரடக்சன் டிசைனை மிக அருமையாகச் செய்து தந்தார். அவருக்கு நன்றி. காக்கா முட்டை வசனகர்த்தா ஆனந்த முருகேசன் ராக்கெட்ரியில் பழக்கம். அவர் தான் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அவரை நடிக்கவும் வைத்துள்ளேன் அவருக்கு நன்றி. முழுப்படமும் பார்த்தாகிவிட்டது எல்லோருமே அற்புதமாக நடித்துள்ளார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். என் மாமா இயக்குநர் வாசு எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். ஒரு நல்ல படம் தந்துள்ளோம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
தயாரிப்பாளர் ஜெயச்சந்தர் பேசியதாவது… பாலாஜியே எல்லாம் பேசி விட்டார். இது எங்கள் கனவு. இந்தப்படத்திற்காக எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். எங்கள் குடும்பம் எங்கள் கூடவே இருந்தது. மிக முக்கியமாக ட்ரீம் வாரியர்ஸ் படம் பார்த்ததிலிருந்து எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள். இப்படம் கதையை நம்பி எடுத்த படம். மார்ச் 29ம் தேதி படம் வெளியாகிறது. படத்திற்கு உங்கள் ஆரவைத் தாருங்கள் நன்றி.
எழுத்தாளர் ஆனந்த் குமரேசன் பேசியதாவது… பாலாஜி ஒரு டெக்னீஷியனாக அறிமுகமாகி பின் நண்பரானவர். தயாரிப்பாளராக அவரே களமிறங்கியுள்ளார், அவர் நம்பிக்கை ஜெயிக்க வாழ்த்துக்கள். நன்றி.
நடிகை யாஸ்மின் பேசியதாவது… பாலாஜி மற்றும் ஜெயச்சந்தர் இருவருக்கும் என் நன்றி. படத்தில் ரோல் பத்தி சொல்ல மாட்டேன் நீங்களே படம் பார்த்து சொல்லுங்கள். ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளேன். படத்திற்கு உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் வின்சென்ட் நகுல் பேசியதாவது… என் சினிமா கனவுக்கு விதை போட்ட பிரபு சாலமன் சாருக்கு முதல் நன்றி. இயக்குநர் பாலாஜி கதை சொன்னார். மிகப்பெரிய நடிகர்கள் நடிப்பதாக இருந்தது என சொன்னார். நான் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கா என்றேன். இருக்கு என்றார். படம் முடித்த பின் எந்த பாத்திரம் என்றாலும் நடிக்கலாம் என என் மீதே நம்பிக்கை வந்துள்ளது. நல்ல படம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் பேசியதாவது… இயக்குநர் பாலாஜியை மிஷ்கின் சாரிடம் வேலை பார்த்த காலத்திலிருந்து தெரியும். மிஷ்கின் சார் எனக்கு இரண்டு கிஃப்ட் கொடுத்துள்ளார். அதில் ஒன்று தான் பாலாஜி. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
நடிகை பவ்யா பேசியதாவது… இடி மின்னல் காதல் பெயரிலேயே மிக பெரிய அர்த்தம் இருக்கிறது. படம் வந்தபிறகு உங்களுக்கும் அந்த அர்த்தம் புரியும். பாலாஜி, பாலசுப்ரமணியம் இருவரும் எப்போதும் கூலாக இருப்பார்கள், எவ்வளவு பிரஷர் இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு நன்றி. நடிகர் சிபி சூப்பர் கோ ஸ்டார். மிக ஆதரவாக இருந்தார். யாஸ்மின் மிக அழகாக நடித்துள்ளார். ஜெகன் எனக்கு ஒர்க்ஷாப் எல்லாம் எடுத்தார், அவர் ரொம்ப புரபஷனல். அவரால் எனக்கு நிறைய கான்ஃபிடண்ட் வந்துள்ளது. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் ஜெகன் பேசியதாவது… இந்த விழாவிற்கான மெனக்கெடலே மிகவும் அருமையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக மீடியா தரும் ஆதரவிற்கு நன்றி. பாலாஜி தேர்ந்த அரசியல்வாதி அளவு, மிக தேர்ச்சிபெற்ற பேச்சாளர் போலப் பேசி விட்டார். ஒரு படத்தை எப்படி விளம்பரப்படுத்த வேண்டுமென பாலாஜியிடம் கற்றுக்கொள்ளலாம். அவ்வளவு மெனக்கெடுகிறார். தமிழ் சினிமாவின் இரண்டு ஆளுமைகள், பி வாசு சார், இயக்குநர் உதயகுமார் அவர்கள், வாழ்த்த வந்துள்ளனர் அவர்களுக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் உங்களுக்குப் பிடித்தால் ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியதாவது… பாலாஜி வேறொரு கதை தான் முதலில் சொன்னார். அப்புறம் தான் இந்தப்படம் வந்தது. ராக்கெட்ரி படத்திலிருந்தே அவரைத் தெரியும். அதில் நடித்திருப்பார். இவர் எப்படி படம் இயக்குவார் என நினைத்தேன், ஆனால் முதலில் அவர் இயக்குநர் தான் என்பது பின் தான் தெரிந்தது. அவர் இப்படத்தை எப்படி செய்துள்ளார், என்பது இங்கு பேசியவர்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். எல்லோரும் இவ்வளவு கான்ஃபிடண்டாக பேசுகிறார்கள் என்றால் கதை அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எல்லோருமே அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். இயக்குநர் பாலாஜிக்கும் எனக்கும் சண்டை வந்து கொண்டே இருக்கும். போகப்போக, அவர் என்னைப் புரிந்து கொண்டார். பாலாஜி கதைகள் நிறைய வைத்துள்ளார் எல்லாமே அருமையாக இருக்கும். தமிழில் சிறப்பான கதைகள் இருக்கிறது ஆனால் ஒரு ஹீரோ இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இங்கு கடந்த வருடம் ஜெயித்த படங்கள் எல்லாம் கண்டண்ட் நன்றாக இருந்த படங்கள் தான். இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்
நடிகர் சிபி பேசியதாவது… இந்தப்படத்தின் கதை கேட்டபோது எனக்கு முக்கியமாகப் பட்டது. மெண்டல் ஹெல்த். நமக்கு மெண்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். அதைப்பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது. பிக்பாஸ் முடித்து வெளியில் வந்தவுடன் மூன்று மாதம் தான் அந்த பிரபலம் இருக்கும் என எனக்கு முன்னமே தெரியும். அதன் பிறகு நம் உழைப்பு தான் பேசும். பிக்பாஸ் வந்தபிறகு பல கதைகள் வந்தது, ஆனால் நாம் ஒரு படத்திற்குள் போகிறோம் என்றால் அது கண்டிப்பாக ஒரு சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். நமக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். பாலாஜி அந்தளவு உண்மையான மனுஷன். அவர் எத்தனை வலிகளை அனுபவித்து வருகிறார் என்று தெரியும். எல்லோருமே உண்மையாக நேர்மையாக நம்பிக்கையுடன் உழைத்துள்ளோம். எல்லோரும் இன்னும் நிறையப் படம் செய்ய வேண்டும். வெற்றி பெற வேண்டும் கண்டிப்பாக எல்லோரும் படம் பாருங்கள் பிடிக்கும் நன்றி.
இயக்குநர் பேரரசு பேசியதாவது… ஹீரோ மிகத்தெளிவாகப் பேசினார். பிக்பாஸ் பற்றி அவர் சொல்லியது உண்மை. இசையமைப்பாளர் சாம் அற்புதமாக இசையமைத்துள்ளார். இயக்குநர் பாலாஜி எல்லோரையும் பற்றி மிக அன்போடு குறிப்பிட்டுப் பேசினார். படம் டிரெய்லர் மிக நன்றாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக ஜெயிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் இயக்குநர் வாசுவிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே இயக்குநரின் திறமை புரிந்தது. அத்தனைப் புகழ்ந்தார். டிரெய்லர் பார்த்தவுடன் அவரது திறமையின் மேல் நம்பிக்கை வந்தது. நான்கைந்து பாத்திரங்களை வைத்து நல்ல திரைக்கதை அமைத்துள்ளார். இப்படத்தில் இணைத் தயாரிப்பாளர்கள் என்று 11 பெயர் வந்தது. இயக்குநருக்கு ஆதரவாக இருந்த அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சாம் சிஎஸ் இசை மிக அருமையாக உள்ளது. படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இயக்குநர் வாசு பேசியதாவது… பாலாஜி என்னிடம் கதையே சொல்லவில்லை ஆனால் சைக்கலாஜிகலாக இருக்குமென்பது, இங்கு பேசியவர்களை வைத்துத் தெரிகிறது. ஒரு நல்ல கதையை எடுத்துள்ளனர். இங்கு எல்லோருமே இப்படத்தின் அனுபவம் பற்றி அதன் கஷ்டம் பற்றிப் பேசினார்கள். இதைக்கேட்ட பிறகு தான் பல படங்கள் எடுத்த எங்கள் அனுபவங்கள் பிரமிப்பு தருகிறது. இசையமைப்பாளர் சாம் மிக அருமையாகப் பேசினார். பல விசயங்கள் குறித்துத் தெளிவாகப் பேசினார். யார் ஹிரோ எனக்கேட்காமல் என்ன கதை எனக்கேட்க வேண்டும் எனச் சொன்ன போது, எனக்குக் கைதட்டத் தோன்றியது. நாங்கள் ஒரு பொற்காலத்தில் படம் எடுத்தோம். சின்னத்தம்பி படத்தில் பிரபுவிற்குக் கதையே தெரியாது. ரஜினி சாரும் அப்படித்தான் ஒரு முறை கதை கேட்டால் அதன் பிறகு எதுவும் கேட்க மாட்டார். இன்று நிலைமை மாறிவிட்டது. பாலாஜி என்ன கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக சினிமாவை விட்டுப் போக மாட்டார் அவரிடம் திறமை இருக்கிறது. என் மகன் இந்தப்படம் பார்த்து அழுதுவிட்டேன் எனச் சொன்னான். மாமாவாக பாலாஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சிபி பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு நல்ல கதைக்கு மீடியா எப்போதும் முழு ஆதரவைத் தரும். எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். நன்றி
இப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது
மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குப் பிறகு, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘இளையராஜா’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, சென்னையில் இன்று காலை நடைபெற்றது. நடிகர் தனுஷ் இளையராஜாவாக தோற்றமளிக்கும் அழகான போஸ்டரை வெளியிட்டு, உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை துவக்கி வைத்து, வாழ்த்து தெரிவித்தார். கேப்டன் மில்லர் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தினை இயக்குகிறார்.
கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை வழங்குகின்றன. ஸ்ரீராம் பக்திசரண் சி.கே. பத்ம குமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் இப்படத்தினை தயாரிக்கின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.
இந்த நிகழ்வில் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோருடன் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவினில் நடிகர் தனுஷ் கூறுகையில்.., “இது எனக்கு உண்மையிலேயே நிறைவான தருணம். எனது சிறுவயதிலிருந்தே, மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் மயக்கும் மெல்லிசைக்கு நான் ரசிகன். நம் எண்ணங்களே நம்மை வடிவமைக்கப்படுகின்றன என்று கூறுவார்கள். அது தான் உண்மை, நாம் முழு மனதுடன் நம் கனவை நோக்கி நம்மை அர்ப்பணிக்கும் போது, அவை நிறைவேறும். பலர் தங்கள் மன அமைதிக்கு இளையராஜாவின் பாடல்களை நாடுகிறார்கள். பலர் உறக்கத்திற்காக அவரது பாடல்களில் மூழ்குவார்கள், நான் என் பல இரவுகளை அவரது இசையுடன் கழித்துள்ளேன். வெள்ளித்திரையில் அவரது பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இப்போது அது நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. எனது திரை வாழ்க்கையில் ஆரம்பம் முதல் இப்போது வரை, ஒரு நடிகனாக உண்மையிலேயே சிறப்பான நடிப்பை வழங்க வேண்டிய தருணத்தில் எல்லாம், எனது இயர்போன்கள் மூலம் அவரது இசையமைப்பில் மூழ்கி, அதன் மூலமே என் நடிப்பை வெளிப்படுத்துவேன். இன்று வரை எனக்கு நடிப்பு சொல்லித்தருவது அவரது இசை தான். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் பெருமையாக உணர்கிறேன். இளையராஜா சாரின் உண்மையான அபிமானியான மாண்புமிகு கமல்ஹாசன் சாரின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருண் மாதேஸ்வரன் ஒரு மகத்தான பொறுப்பின் கனத்தை உணர்கிறார் என்பது புரிகிறது. ஆனால் இந்த திரைப்படத்தை மிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் உருவாக்கலாம் என அவரை ஊக்குவிக்கிறேன். ஏனெனில் இது கலையின் மீதான காதல் இளையராஜாவின் மீதான காதல். அனைவருக்கும் என் நன்றிகள்.
மேஸ்ட்ரோ இளையராஜாவுடன் பல தசாப்தங்களாக தனது நட்பை தொடர்ந்து வரும் உலகநாயகன் கமல்ஹாசன், ஒட்டுமொத்த குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்.., “இந்த திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் மகத்தான பொறுப்பு மற்றும் அழுத்தத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உணரக்கூடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாரத ரத்னா விருது பெற்ற “மேஸ்ட்ரோ இளையராஜா” பற்றிய அவரது தனித்துவமான கண்ணோட்டத்தை அவர் ரசித்து முன்வைக்கலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன். இந்த ஒரு ஐகானின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு திரைப்படம். பல பாகங்களைக் கொண்டிருக்கலாம். மக்களின் வாழ்வோடு இணைந்திட்ட அவரது இசை தரும் தாக்கம் தனித்துவமானது. எனவே, இசைத்துறைக்கு பெருமை சேர்க்கும் இந்த இசைப் பேரறிஞரைப் பற்றிய தனது தனிப்பட்ட பார்வையை அருண் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். குணா திரைப்படத்தின் “கண்மணி அன்போடு காதலன்” என்ற பாடலில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்த கமலஹாசன் அவர்கள்.., அந்தப் பாடல் எங்கள் இருவருக்கும் இடையிலான காதல் மற்றும் உணர்ச்சிகளின் அழகான பரிமாற்றம் என்றார். இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அழகாகவும் நேர்த்தியாகவும் சித்தரிக்க நடிகர் தனுஷுக்கு கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் கையால் எழுதப்பட்ட இசைக் குறிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட ரெட்ரோ போஸ்டரை, உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கியது சினிமாவில் ஒரு வரலாற்றுத் தருணமாக அமைந்தது.
Chennai , 20th March 2024 : Marking a significant milestone in healthcare advancement in Chennai, Kauvery Hospital proudly unveiled its latest quaternary facility at Arcot Road, Vadapalani . The inauguration ceremony was graced by distinguished Chief Guest, Thiru Rajinikanth, acclaimed Indian Cine Actor, alongside our esteemed luminaries including Dr. S. Chandrakumar, Founder and Executive Chairman of Kauvery Group of Hospitals, Dr. S. ManivannanSelvaraj, Founder and Managing Director, and Dr. AravindanSelvaraj, Co-founder and Executive Director of KauveryGroup of Hospitals. Alongside this grand launch, we introduced 9 Centres of Excellence, further elevating our commitment to delivering unparalleled healthcare excellence.
Quaternary care, epitomized by Kauvery Hospital, Vadapalani, represents the highest level of specialized medical care, encompassing advanced treatments and innovative procedures aimed at addressing complex health conditions with precision and compassion.
The new Kauvery Hospital Vadapalani stands as a cornerstone of advanced medical care, symbolising the institution’s unwavering dedication to providing the highest quality healthcare possible. Featuring a meticulously crafted 250-bedded hospital, the facility also features a 75-bedded Critical Care Unit, a 30-bedded Transplant ICU and 6 modular Operation Theatre with laminar flow.
“With specialized centers of excellence in Heart and Lung Transplants, Orthopaedics and Spine Surgery, Kidney and Liver Transplants, Cardiac Sciences, Neurosciences, Fertility Treatments, Diagnostic & Interventional Radiology and Emergency Care, we stand prepared to address the most complex medical challenges with precision, expertise and compassion”, affirms Dr S Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Group of Hospitals.
“Highlighting Kauvery Hospital Vadapalani’s role as a quaternary care provider underscores its dedication to delivering advanced medical services at the highest level, emphasized Thiru Rajinikanth, Indian Cine Actor and Chief Guest at the Inauguration. “Its commitment to excellence in specialized treatment and cutting-edge healthcare solutions solidifies its position as a beacon of innovative care,” he added.
In our commitment to delivering affordable healthcare that is accessible to all, we strive to provide unparalleled medical care with compassion and integrity. With trust at our core, we are committed to provide compassionate, high-quality care to all, regardless of circumstances. Together, we are reshaping healthcare, embodying the essence of a quaternary care institution, and making a tangible difference in people’s lives.
‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் ‘RC 16’ படத்தின் தொடக்க விழா, சர்வதேச அளவில் பாராட்டினைப் பெற்ற தொழில்நுட்ப குழுவுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் காவியப்படைப்பான ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க நடிப்பிற்குப் பிறகு, உலகளாவிய நட்சத்திர நடிகரான ராம் சரணின் ரசிகர்கள் பட்டாளமும், நட்சத்திர அந்தஸ்தும் உலகம் முழுவதும் உயர்ந்துள்ளது. இவர் தற்போது பிரபல திரைப்பட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அரசியல் திரில்லர் திரைப்படமான ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.
ராம்சரண் – இப்படத்தை தொடர்ந்து நட்சத்திர இயக்குநரான புச்சி பாபு சனாவுடன் ‘RC16’ எனும் திரைப்படத்தில் இணைகிறார் என்பது அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாறு சர்வதேச தரத்தில் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகிறது. விருத்தி இன்ஃப்ரா எனும் நிறுவனத்தின் உரிமையாளரான வெங்கட சதீஷ் கிலாறு திரைப்படங்கள் மீதான அவரது பிரத்யேகமான ஆர்வத்திற்காக நன்கு அறியப்பட்டவர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் நெருங்கி பழகிய பிறகு, அவர் ஒரு உயரிய தயாரிப்பு தரத்துடன் திரைப்பட தயாரிப்பில் களமிறங்கும் தனித்துவமிக்க முடிவை மேற்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராம் சரணின் அடுத்த படமான ‘RC 16’ படத்தின் முக்கிய நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரும் இணைந்தனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் முன்னிலை வகித்தனர்.
இப்படத்தை தனது முதல் திரைப்படமான ‘உப்பென்னா’ படத்திற்காக தேசிய விருதை வென்ற இயக்குநரும், பிரபல இயக்குநர் சுகுமாரின் உதவியாளருமான புச்சி பாபு சனா இயக்குகிறார்.
‘RC16’ – கிராமப்புற பின்னணியில் உணர்ச்சிகரமான.. உணர்வுபூர்வமான.. பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிக்கிறது.
மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ராம்சரணின் தந்தை ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி ஆகியோருக்கு இடையேயான வெற்றிகரமான கூட்டணிக்கான ஏக்கத்தை தூண்டும் வகையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
‘RC16’ படத்தின் தொடக்க விழாவில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி, நட்சத்திர இயக்குநர் ஷங்கர், பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான சுகுமார், பிரபல தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், தில் ராஜு, சிரீஷ், போனி கபூர், சாஹூ கராபதி, ராம் அச்சந்தா, எம்எல்ஏ ரவி கோட்டிபட்டி, சித்தாரா நிறுவனத்தின் வம்சி, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் வம்சி கிருஷ்ண ரெட்டி மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
காலை 10 :10 மணிக்கு பிரம்மாண்டமான முறையில் பாரம்பரிய பூஜையுடன் விழா தொடங்கியது. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் படத்தின் ஸ்கிரிப்டை இயக்குநர் புச்சி பாபு சனாவிடம் ஒப்படைத்தார். ராம்சரணின் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கும் நட்சத்திர இயக்குநர் ஷங்கர் முதல் காட்சியை இயக்க, போனி கபூர் மற்றும் அன்மோல் சர்மா கேமிராவை சுவிட்ச் ஆன் செய்ய, மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் அடிக்க, ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்தனர்.
இயக்குநர் புச்சி பாபு சனா பேசுகையில், ” மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இவ்விழாவிற்கு வருகை தந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். மதிப்புக்குரிய விருந்தினர்கள் மற்றும் எனது மரியாதைக்குரிய வழிகாட்டிகளால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். எனது இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அதன் போது ராம்சரணின் அறிமுகமும், நட்பும், அன்பும் கிடைத்தது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக ராம்சரணுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன்.
ரூபன் போன்ற புகழ்பெற்ற திறமையாளர்கள் என்னுடன் இணைந்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான் என்னுடைய இரண்டாவது படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் என்னுடைய ஒரு கனவு நனவானது. ராம் சரண், சுகுமார், நவீன் மற்றும் சதீஷ் ஆகியோருக்கும் நன்றி. மேலும் இந்த திரைப்படத்தில் நாயகியாக ஜான்வியை கற்பனை செய்ததும், அதை நிறைவேற்றியதற்காக என்னுடைய குரு சுகுமாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநரும், தயாரிப்பாளருமான சுகுமார் பேசுகையில், ” புச்சி பாபுவின் இலட்சியத்தையும், உறுதியையும் பாராட்டுகிறேன். விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதிலும், ராம்சரண் மற்றும் ஏ ஆர் ஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதிலும், அவருடைய துணிச்சலான முடிவுகளை பாராட்டுகிறேன். சில கணக்குகளை சொல்லிக் கொடுத்ததால் நான் குருவானேன் என்று நான் அடிக்கடி கேலி செய்திருக்கிறேன். ஆனால் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால்.. புச்சி பாபு என்னிடம் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் திறமையுடனும் எப்போதும் பணிவுடனும் பணியாற்றுபவர். புச்சி பாபுவின் ஸ்கிரிப்ட் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அவரது விடாமுயற்சியையும் பாராட்டுகிறேன்” என்றார்.
ஏ. ஆர். ரஹ்மான் பேசுகையில், ”புச்சி பாபுவின் சினிமா ஆர்வத்தை பாராட்டுகிறேன். இந்த திரைப்படத்தில் பாடல்களுக்கான சூழலை அவர் விளக்கிய விதம் உற்சாகமாக இருந்தது. மேலும் இப்படத்தில் பணியாற்றும் அனைவருக்கும், ராம் சரணுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார்.
ராம் சரண் பேசுகையில், புச்சி பாபுவின் சினிமா மீதான அதீத காதலை பாராட்டி அவருடனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடனும் இணைந்து பணிபுரிவது, தனக்கு கிடைத்த பெருமை எனத் தெரிவித்துள்ளார். மேலும் முதல் முறையாக ஜான்வி கபூருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ராம் சரண், அவரது தந்தை சிரஞ்சீவியும், ஜான்வி கபூரின் தாயார் ஶ்ரீதேவியும் இணைந்து நடித்த “ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி” படத்தினை நினைவு கூர்ந்தது, நானும் ஜான்வி கபூரும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள் இப்போது அது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.
ஜான்வி கபூர் பேசுகையில், ” இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகிய இயக்குநர் புச்சிபாபுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். பட குழுவினரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி” என்றார்.
தயாரிப்பாளர் போனி கபூர் பேசுகையில், ” ராம் சரண் கொடுத்த வாய்ப்பின் மூலம் தெலுங்கு படங்களை தயாரிக்கும் ஆர்வத்தை பெற்றிருக்கிறேன். புச்சிபாபுவின் ‘உப்பென்னா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் நவீன் பேசுகையில், ” இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு நன்றி. இயக்குநர் புச்சி பாபுவின் கதை சொல்லும் திறனால் இப்படம் வெற்றி பெறும் என்ன உறுதியாக சொல்லலாம்” என்றார்.
‘RC 16’ படம் சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற தொழில்நுட்ப குழுவினரை கொண்டுள்ளது. இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரஹ்மான், இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்திற்கு மீண்டும் இசையமைக்கிறார். விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ராம்சரணுடன் இணைந்திருக்கிறார்.
அகாடமி விருதுகள், விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது, கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது, நந்தி விருது உட்பட்ட ஏராளமான விருதுகளை பெற்ற பாடலாசிரியர் சந்திரபோஸ் இப்படத்தின் பாடல்களை எழுதுகிறார். படத்தொகுப்பில் மேஸ்ட்ரோவாக திகழும் ஆண்டனி ரூபன் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். அதிரடி சண்டை பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கிறார்.
கலை இயக்குநர் அவினாஷ் கொல்லாவின் பிரத்யேகமான அரங்க அமைப்பு… காட்சியின் பிரம்மாண்டத்தை அதிகரிக்கும். இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளரான தீபாலி நூர் இப்படத்தின் தொழில்நுட்ப குழுவில் இணைந்திருக்கிறார். தீபாலி நூரின் டிசைன்கள்- நடிகர்களின் உடையில் தனித்துவமான மற்றும் நாகரீகமான தோற்றத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தின் விளம்பர வடிவமைப்பை பிரபல விளம்பர வடிவமைப்பாளரான கபிலன் மேற்கொள்கிறார்.
‘ரங்கஸ்தலம்’, ‘புஷ்பா’ படங்களில் பணியாற்றியதற்காக புகழ்பெற்ற நட்சத்திர இயக்குநர் சுகுமார்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுகுமார் ரைட்டிங்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் ‘RC 16’ என்ற படத்தை வழங்குகிறார். விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் வெங்கட சதீஷ் கிலாறு இப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் தயாரிப்பு தரம் சர்வதேச அளவிலானது. மேலும் இப்படத்தைப் பற்றிய புதிய அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருங்கள்.