Cinema

சிலம்பரசன் டி. ஆர் – யுவன் சங்கர் ராஜா இணைந்து வெளியிட்ட ‘ஸ்வீட் ஹார்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் திரையில் லவ் மேஜிக் நிகழ்த்தும் இளம் காதலர்களான ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் ஆகியோரின் இளமை துள்ளலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் 183வது இசை ஆல்பம் ‘ஸ்வீட் ஹார்ட்’ என்பதால்.. இப்படத்தின் பாடலுக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் ‘சொர்க்கவாசல்’

இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா ச‌க்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார். சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன‌. உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள்.

வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தினை உலகம் முழுவதும் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். ஆர். பிரபு , திங்க் ஸ்டுடியோஸ் சந்தோஷ், படத்தின் நாயகன் ஆர். ஜே. பாலாஜி, நாயகி சானியா ஐயப்பன், நடிகர் ஹக்கீம் ஷா, இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத், ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன்,  கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இதர‌ படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

முன்னோட்டத்தை வெளியிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். முதலில் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். முன்னோட்டம் மிகவும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இப்படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். அப்போது ‘ஆர்.ஜே பாலாஜி எனும் நடிகர் வருகை தருகிறார்’ என குறிப்பிட்டேன். படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படம் வெளியான பிறகு தான் என்னுடைய ‘கைதி 2’ படத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா, இல்லையா என்பது தெரியவரும் . ஏனெனில் படத்தின் முன்னோட்டம் உணர்வுப்பூர்வமானதாகவும், மனதிற்கு நெருக்கமானதாகவும் இருந்தது,” என்றார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “சொர்க்கவாசல் படத்தின் தயாரிப்பாளர்களான சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் எங்கள் குழுவுடன் பதினோரு ஆண்டுகளாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு திரைப்படம் தயாரிப்பதில் பெரு விருப்பம் உண்டு. அந்த வகையில் அவர்களுடைய ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸின் முதல் திரைப்படமாக சொர்க்கவாசலை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் எனக்கு நெருக்கமான நண்பர்கள் தான். ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரின்ஸ் ஆண்டர்சன் மும்பையில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனின் மகனான சாண்டோவின் உதவியாளர். அவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் படம் இது. அற்புதமாக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது, அதற்காக மனதார வாழ்த்துகிறேன். எங்களுடைய குழுவில் ஒலி கலவை பொறுப்பினை பத்தாண்டுகளாக சிறப்பாக செய்து வரும் கலைஞர் வினய் ஸ்ரீதர் இதில் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பில் இணைந்திருக்கும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. திரைப்படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் அவரர்களுடைய அனுபவத்தால் இந்த படத்தை உலகம் முழுவதும் சிறப்பாக வழங்குவார்கள். இதற்காக அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பள்ளியில் எனக்கு இரண்டு வருட ஜூனியர். அந்தத் தருணத்தில் அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து திரைப்பட இயக்குநராக வேண்டும் என தெரிவித்தார். அதன் பிறகு ஒரு இயக்குநரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று திரைப்படங்களில் பணியாற்றி ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதையை முழுவதுமாக விவரித்துவிட்டு, யார் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கேட்டார். நான் அப்போது இதற்கு என்னுடைய நண்பரான ஆர். ஜே. பாலாஜி தான் பொருத்தமானவராக இருப்பார் என்று மனதில் பட்டதை உடனே சொன்னேன். இந்த படத்தினை பார்த்து விட்டேன், என்னுடைய நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன். நான் இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கும் போது ஆர். ஜே. பாலாஜி பண்பலை வானொலியில் தொகுப்பாளராக புகழ்பெற்று இருந்தார். அப்போது அவருடன் பேசுவது எங்களுக்கெல்லாம் பெருமிதமாக இருக்கும். ஆர் ஜே வாக கலை உலக பயணத்தை தொடங்கி இன்று நடிகராக உயர்ந்திருக்கிறார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் கமர்ஷியலாக வெற்றி பெற்று இருக்கின்றன‌. அவர் நடிக்கும் படங்களுக்காக‌ கடினமாக உழைப்பார். காமெடியனாக நடித்திருக்கிறார், கமர்ஷியலாக நடித்திருக்கிறார், ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் ஒரு அற்புதமான நடிகராக உருமாற்றம் பெற்றிருக்கிறார். செல்வராகவன் இந்தத் திரைப்படத்திற்கு ஒரு தூணாக இருக்கிறார். என்னுடைய கலை உலக பயணத்தையும், இசைப்பயணத்தையும் நேர்த்தியாக வடிவமைத்ததில் செல்வராகவனுக்கும் கணிசமான பங்கு உண்டு. இந்த படத்தில் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அனைவரது வாழ்விலும் சொர்க்கவாசல் திறக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

கதாசிரியர்-எழுத்தாளர் தமிழ் பிரபா பேசுகையில், “உறக்கத்திலிருந்து எழுந்து விட்டார் நீதிபதி…
வாக்கிங் புறப்பட்டு விட்டார் வக்கீல்…சீருடை அணிந்து விட்டார் போலீஸ்காரர்…நான் இன்னும் என்னுடைய குற்றத்தை செய்ய துவங்கி இருக்கவில்லை…’ என கவிஞர் பிரான்சிஸ் கிருபா எழுதிய கவிதை தான் இந்த தருணத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்த கவிதையை தான் இந்த படமாக நான் பார்க்கிறேன்.
இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் நான் எழுதிய முதல் திரைப்படமான ‘சார்பட்டா பரம்பரை’ படம் வெளியாகியிருக்கவில்லை. அந்தத் தருணத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் என்னை தொடர்பு கொண்டு என் உதவியாளர் சித்தார்த் ஒரு கதையை வைத்திருக்கிறார். அவருடன் இணைந்து பணியாற்று என கேட்டுக்கொண்டார். அந்த கதையை கேட்டவுடன் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது.

என்னுடைய வீடு சென்னை மத்திய சிறைக்கு அருகே உள்ளது. சிறையில் நடைபெற்ற கலவரத்தை நான் சிறிய வயதில் இருக்கும்பொழுது நேரில் பார்த்திருக்கிறேன். அந்த கலவரத்தை தழுவிய திரைப்படம் என்றவுடன் எனக்கு திரைக்கதை எழுதுவது ஆர்வமாகிவிட்டது. அருண் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து பணியாற்றினேன்.

திரைக்கதை எழுதுவது என்பது எளிதில் சோர்வடைய வைக்கும் பணி. ஆனால் மற்றவர்களுடன் இணைந்து உருவாக்கும் போது ஆற்றலுடன் விரைவாக செயல்பட முடிகிறது. இந்த கதையை பொருத்தவரை பன்முகத் தன்மைமிக்க கதாபாத்திரங்கள் ஏராளமாக இருக்கின்றன‌. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவம் உண்டு.

இந்தப் படத்தில் நடித்த ஆர். ஜே. பாலாஜியை எப்போதும் எனக்கு ஒரு முன்னூதாரண நாயகனாக பார்க்கிறேன். ஏனெனில் பண்பலை வானொலியில் சென்னை தமிழில் பேசினார். அதுவே எனக்கு உந்துதலாக இருந்தது. இதனால் நானும் இரண்டு ஆண்டுகள் பண்பலை வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றினேன்.

நான் திரைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை எந்த நட்சத்திரத்துடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை விரும்பியதில்லை. அப்படி நான் விரும்பிய ஒரே= நடிகர் – படைப்பாளி செல்வராகவன் தான். ஏனெனில் அவருடைய திரைப்படங்களில் கதாபாத்திர வடிவமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். ‘புதுப்பேட்டை’ படத்தில் நாயக பிம்பத்தை பத்து பேர் அடித்தாலும் வலியை தாங்கக்கூடிய கதாபாத்திரமாக வடிவமைத்திருப்பார். இது என்னை பெரிதும் கவர்ந்தது.  இயக்குநரை தொடர்பு கொண்டு செல்வராகவனுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற என் விருப்பத்தை தெரிவித்தேன். அதன் பிறகு சில நாட்கள் கழித்து செல்வராகவன் என்னை சந்திக்க விரும்பினார். அவரை நேரில் சந்தித்த பொழுது திரைக்கதை நேர்த்தியாக எழுதி இருக்கிறாய் என பாராட்டினார்.

மேலும் இந்த திரைப்படத்தில் தமிழ் இலக்கியத்தில் முக்கியமான ஆளுமையாக திகழும் எழுத்தாளர் ஷோபா ச‌க்தி ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு புதிதாக முயற்சித்து இருக்கிறோம். கிரைம் ஆக்ஷ‌ன் திரில்லர் கதை என்றாலும், சர்வைவல் திரில்லர் வகைமையை சார்ந்தது என குறிப்பிட விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை அனைவரும் கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

கதாசிரியர் அஸ்வின் ரவிச்சந்திரன் பேசுகையில், “சிறைக்குள் நடைபெறும் கதையை எழுதலாமா என என்னுடைய நண்பரான இயக்குநர் சித்தார்த் கேட்டார். அது கொரோனா காலகட்டம் என்பதால் எழுதுவதற்கு சம்மதம் தெரிவித்தேன். அதன் பிறகு சிறையை பற்றிய படங்களை பார்த்தோம், அது தொடர்பாக எழுதி வெளியான புத்தகங்களையும் வாசித்தோம்.

இந்தத் தருணத்தில் எங்களுக்கு உதவிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படம் வட சென்னையை களமாகக் கொண்டது. நானும், இயக்குநர் சித்தார்த்தும் தென் சென்னையை சார்ந்தவர்கள். இதனால் வடசென்னையை சார்ந்த எழுத்தாளர்-கதாசிரியர் தமிழ்பிரபாவை அழைத்து, அவருடன் இணைந்து பணியாற்றினோம். தற்போது இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்து காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கிறது என்றால் அதன் பின்னணியில் தமிழ் பிரபாவின் உழைப்புதான் அதிகம். கதையின் நாயகனான பார்த்தி கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியதும் அவர்தான். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் பேசுகையில், “இந்த திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு இயக்குநரிடம் நீங்கள் தான் எழுதினீர்களா, இதை யார் எழுதினார்கள் எனக் கேட்டேன். இதனை படப்பிடிப்பு நிறைவு செய்யும் வரை கேட்டுக் கொண்டே இருந்தேன். ஏனெனில் இப்படி ஒரு திரைக்கதையை எழுத முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதை நான் இந்த தருணத்தில் சொல்வது சற்று மிகைப்படுத்தலாகவே இருக்கும், இருந்தாலும் படம் வெளியான பிறகு நீங்கள் அதை உண்மை என்று ஒப்புக் கொள்வீர்கள். இது போன்றதொரு திரைக்கதையை எழுதுவது சாதாரணமான விஷ‌யம் அல்ல, வாசிக்கும் போது எனக்கு சற்று பொறாமையாகவே இருந்தது.

நல்ல படம் வரவேண்டும் என்று நிறைய பேசுகிறோம். ஆனால் அது குறித்து யாரும் முயற்சி செய்வதில்லை. இந்த படம் நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். இந்தத் திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்கு நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.” என்றார்.

ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ் ஆர் பிரபு பேசுகையில், “இந்தத் திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய முதல் நன்றி. இப்படத்தை உருவாக்கத்தின் தொடக்க நிலையில் இருந்து எனக்கு தெரியும். இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் நெருக்கமான நண்பர்கள். நண்பர்கள் ஒன்றிணைந்து உருவாக்கும் படைப்பு என்பது வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் நண்பர்களாக இருந்து படைப்பை உருவாக்கும் போது அவர்கள் எந்த சவாலையும் எளிதாக எதிர்கொள்வார்கள். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நாங்களும் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறோம். இக்கதை நம்மில் பலரும் கேட்டு பார்த்த சம்பவங்களுடன் தொடர்புடையது. படம் பார்க்கும்போது அந்த சம்பவத்துடன் எளிதில் தொடர்பு படுத்திக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது. இன்றைய சூழலில் அனைவரும் ரசிக்கும் வகையிலான திரில்லர் ஜானரில் இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் வெற்றி பெறும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

நடிகை சானியா ஐயப்பன் பேசுகையில், “ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இதுவரை இது போன்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததில்லை. அற்புதமான வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. 29ம் தேதி முதல் படம் திரையரங்குகளில் வெளியாகிறது, அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் பேசுகையில், “அறிமுக இயக்குநருக்காக இப்படி ஒரு பிரம்மாண்டமான மேடையை வழங்கிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பற்றி அதிகம் பேசாமல் இதில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றி பேசுவதற்கு முன் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி- செல்வராகவன் -பாலாஜி சக்திவேல்- கருணாஸ் -நட்டி- என பத்திற்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் பணியாற்றினார்கள். அவர்கள் அறிமுக இயக்குநர் என்று எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

நைஜீரிய நாட்டில் இருந்து சாமுவேல் ராபின்சன் என்ற நடிகர் இங்கு வருகை தந்து நடித்தார். கேரளாவில் இருந்து ஷஃரப் உதீன் -ஹக்கீம் ஷா- சானியா ஐயப்பன்- என மூன்று நட்சத்திரங்கள் இந்த படத்தில் பணியாற்றினார்கள்.

இந்த மேடைக்காக… மேடைக்கு வருவதற்காக வழி அமைத்துக் கொடுத்தவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவரிடம் ஆறு ஆண்டுகள் பணியாற்றினேன். நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டேன். அதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சொர்க்கவாசல் படத்தின் கதையை மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுத திட்டமிட்டோம். ‘வடசென்னை’, ‘விருமாண்டி’ என இதற்கு முன் வெளியான கல்ட் திரைப்படங்களை பார்த்தோம். அதன் பிறகு இந்த படைப்பை வித்தியாசமான கோணத்தில் வித்தியாசமாக வழங்கலாம் என தீர்மானித்தோம். இதற்காக ராஜமுந்திரியில் உள்ள சிறைக்குச் சென்று சிறை கைதிகளுடன் பேசினோம். அந்தத் தருணத்தில் தவறே செய்யாமல் ஏராளமானவர்கள் சிறையில் இருப்பதை கண்டோம்.  அவர்களை விசாரணை கைதி என குறிப்பிடுவார்கள். இந்தியாவில் 70 சதவீதத்திற்கு மேல் சிறையில் விசாரணை கைதிகள் தான் இருக்கிறார்கள் என்ற ஒரு தகவலும் கிடைத்தது. இவர்களுக்கு நீதிமன்றம் இதுவரை எந்த தண்டனையும் வழங்கவில்லை. இருந்தாலும் இவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.  அவர்களிடம் உரையாடும்போது அவர்களிடம் இருந்த ஒரே விஷ‌யம் நம்பிக்கை. அவர்கள் என்றாவது ஒருநாள் இந்த சொர்க்கவாசல் திறந்து வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் வாழலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த விஷ‌யம் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கிறது. இது பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் என நம்புகிறேன். எமோஷனல் வித் ஆக்ஷ‌ன் திரில்லராக இந்த திரைப்படம் இருக்கும். இர‌ண்டு மணி நேரம் பத்து நிமிடம் அளவிற்கு இந்த திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்த படைப்பை ரசிகர்களாகிய நீங்கள் எப்படி வரவேற்பு அளிப்பீர்கள் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும், மக்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் ஆர். ஜே. பாலாஜி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். பிரதம மந்திரி- ஜனாதிபதி -முதலமைச்சர் – ஆகிய மூவரைத் தவிர அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டோம். இந்த குழுவுடன் எனக்கு ஒன்றரை ஆண்டு கால பயணம் இருக்கிறது. இந்தப் படத்தில் நிறைய அறிமுக கலைஞர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். நான் கீழே அமர்ந்திருக்கும் போது மேடையில் பேசிய அனைவரின் பேச்சையும் ரசித்து கேட்டேன். அதேபோல் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இவர்கள் படத்தை ரசித்து ரசித்து எடுப்பதையும் பார்த்து இருக்கிறேன். நான் நடித்த ஒரு படத்தை ரிலீஸிற்கு நான்கு நாள் இருக்கும் இந்த தருணத்திலும் நான் இதுவரை பார்க்கவில்லை. அதற்கு காரணம் நான் இவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக இயக்குநர் சித்தார்த்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னிடமிருந்து நடிப்பை அவர் வாங்கினார். அவரிட‌த்தில் எழுத்து வடிவத்தில் முழு திரைக்கதையும் இருந்தது. இதற்காக உழைத்த எழுத்தாளர்கள் தமிழ் பிரபா – அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் சித்தார்த்துக்கு நன்றி.

இந்தப் படத்தில் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள் இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் படம் வெளியான பிறகு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் அவருடைய குழுவினரை நான் கலாய்த்து இருக்கிறேன். ஏனென்றால் அவர்கள் எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் – இந்த படத்தில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் குழுவினரும் திறமையானவர்கள். அவளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களிடமிருந்து நிறைய விஷ‌யங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த திரைப்படங்களிலேயே இந்த படத்தில் தான் போட்டோகிராபி சிறப்பாக இருக்கிறது. மிகப்பெரிய வேலையை எளிதாகவும், சிரமமின்றியும் செய்பவர் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ். அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

இப்படத்தின் எடிட்டர் செல்வாவுடன் இணைந்து ‘எல்கேஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷங்க’, ‘சிங்கப்பூர் சலூன்’ என அனைத்து படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அவருடன் இந்த படத்திலும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கடவுள் புண்ணியத்தில் இந்த படத்தில் அவருக்கு தேசிய அளவில் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனை  பிரார்த்திக்கிறேன்.

கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கும் சானியா ஐயப்பன்.. இந்த  திரைப்படத்தின் விளம்பர நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். படத்திற்கும் சிறப்பாக புரொமோஷன் செய்து வருகிறார். அவர் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் அவரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

செல்வராகவன்  திரையில் தோன்றினாலே பெரிய நட்சத்திர நடிகர் போல் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். அவருக்கு நண்பர்களும் குறைவு. படபிடிப்பு தளத்தில் மிக குறைவாகவே பேசுவார். மிகப்பெரிய ஸ்டார் இந்த படத்தில் இருக்கிறார் என்ற உணர்வே எங்களுக்கு இருந்தது.

மேலும் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.

நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அவருடைய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் பெற்றதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஸ்வரூப். எல் கே ஜி படம் வெளியான தருணத்திலிருந்து என்னுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த படத்தின் கதையை இரவு 10 மணி அளவிற்கு கேட்டுவிட்டு அடுத்த நாள் காலையில் இணைந்து பணியாற்றலாம் என சம்மதம் தெரிவித்தார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படம் வெளியான தருணத்திலிருந்து இதுவரை 13 ஆண்டுகள் கடந்து விட்டது. என்னுடைய மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான்.

சொர்க்கவாசல் படத்தை பற்றி பேசுவதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தின் டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது. ஆனால் நான் தற்போது என்ன நினைக்கிறேன் என்றால்.. பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும்.

நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்து சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது.
இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள்.

ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்… ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை.

சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.  இவர்கள்தான் என்னுடைய அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள்.

போட்டிகள் நிறைந்த சூழலில் ஓடிடி எனப்படும் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பது கடினமாக இருக்கும். ஆனால் நல்ல தொகையை கொடுத்து இப்படத்தின் உரிமையை வாங்கி இருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எங்கள் குழு மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

தற்போதெல்லாம் பயம் அதிகமாக ஏற்படுகிறது. வெளியில் தேசியக்கொடி ஒன்றினை கையில் ஏந்தி கொண்டு இந்தியன் என்ற உணர்வோடு இருந்தால் அதற்கும் ஏதாவது விமர்சனம் செய்வார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.

நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐ டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன‌. திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்.

அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் அதாவது ரஜினி ரசிகர்கள் -கமல் ரசிகர்கள்- விஜய் ரசிகர்கள்- அஜித் ரசிகர்கள்- என  எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களை பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை.  ஆனால் அவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் இவர்கள் படம் வந்தால் அடிக்க வேண்டும் என்றும் வேலை செய்யாதீர்கள். டார்கெட் செய்து விமர்சனம் செய்யாதீர்கள். இதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்காதீர்கள்.

நாங்கள் ஒரு நல்ல படத்தை எடுத்து இருக்கிறோம். அனைவரின் ஆதரவு இருந்தால் தான் இந்தத் திரைப்படமும் ஒரு லப்பர் பந்து போன்றோ அல்லது வாழை படம் போன்றோ வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரும். 29ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது. புதுமுக கலைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு படைப்பினை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும்

மக்களின் மனங்களை வென்ற, ஸ்டார் விஜய் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் மீண்டும் முழு நீள வெப் சீரிஸாக வெளிவரவுள்ளது !!

வெப் சீரிஸாக மீண்டும் வரும் ‘ஆஃபீஸ்’ தொடர், ஹாட்ஸ்டாரில் விரைவில் !!

‘இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தமிழ் தொலைக்காட்சியின் மிகவும் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘ஆஃபீஸ்’ தொடரை, முழு அளவிலான வெப் சிரீஸாக விரைவில், வெளியிடவுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று இந்தத் வெப் சீரிஸின் தலைப்பை சமூக ஊடகம் வழியே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு, பார்வையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக உருவாகவுள்ள இந்த சீரிஸ், 2013 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியான, ஒரு ஆபிஸில் நடக்கும் காதல், காமெடிகளை மையமாக கொண்ட ‘ஆஃபீஸ்’ தொடரின் மறுவடிவமாகும்.

கனா காணும் காலங்கள் சீரிஸின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தொலைக்காட்சித் தொடரை, இந்த கால ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு, ஒரு வெப் சீரிஸாக மாற்றுவது, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

சமீப காலங்களில் வெளியான ஹாட்ஸ்டாரின் வெப் சீரிஸான ‘கனா காணும் காலங்கள்’ மட்டுமல்ல, ‘ஹார்ட் பீட்’ மற்றும் ‘உப்பு புளி காரம்’ போன்ற சீரிஸ்களும் மகத்தான வெற்றியை ருசித்துள்ளன. இதனைத் தொடர்ந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸாக ஆஃபீஸ் சீரிஸை வெளியிடவுள்ளது.

தமிழ் தொலைக்காட்சியின் முதல் ஆஃபீஸ் நிகழ்வுகளை பற்றிய தொடராக வெளியான ஆஃபிஸ் தொடரில், நடிகர்கள் கார்த்திக் ராஜ், ஸ்ருதி ராஜ், விஷ்ணு, மதுமிளா, உதயபானு மகேஸ்வரன், சுசேன் ஜார்ஜ், சித்தார்த் மற்றும் அன்பழகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இயக்குநர் ராம் விநாயக் இயக்கிய இந்தத் தொடர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து, மக்களின் இதயங்களை வென்ற தொடராக வெற்றி பெற்றது.

562-எபிசோட் கொண்ட இந்த தொடர், ஒரு ஐடி நிறுவனத்தின் ஊழியர்களைச் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவானது. இப்போது, அதே தொடர், வெப் சீரிஸாக, புத்தம் புதிய நடிகர்கள் மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட அமைப்புடன் உருவாக்கப்பட உள்ளது. இது முந்தைய தொடரின் அடிப்படை அம்சங்களுடன், ஆஃபீஸ் களேபரங்களை நவீனமாக எடுத்துச் சொல்லும்.

ஆஃபீஸ் வெப் சீரிஸாக ரீமேக் செய்யப்படுகிறது என்ற செய்தி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

நடிகர் வருண் தவான் நடித்துள்ள ‘பேபி ஜான்’

நடிகர் வருண் தவான் நடித்துள்ள ‘பேபி ஜான்’ படத்தின் முதல் பாடலான ‘நைன் மடாக்கா’, குளோபல் சென்சேஷன்ஸ் தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீ குரலில் நவம்பர் 25 அன்று வெளியாகிறது!

‘பேபி ஜான்’ படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. படத்தின் முதல் பாடலான ’நைன் மடாக்கா’ பாடல் நவம்பர் 25, 2024 அன்று வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

முராத் கெடானி, ப்ரியா அட்லீ மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் ‘பேபி ஜான்’ படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான ‘நைன் மடாக்கா’ நிச்சயம் டான்ஸ் ஆந்தமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இர்ஷாத் கமில் எழுதிய இந்தப் பாடலுக்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற பாடகர்களான தில்ஜித் தோசன்ஜ் மற்றும் தீக்ஷிதா வெங்கடேசன் என்கிற தீ ஆகிய இருவரும் முதல்முறையாக இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளனர்.

வருண் தவான் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோருக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை வெளிக்கொண்டு வரும் வகையில் அதிரடி பெப்பி பாடலாக இது இருக்கும். தில்ஜித்தின் வைப்ரண்ட் குரலும் தீயின் மாயாஜால குரலும் நிச்சயம் பாடலை ஹிட்டாக்கி விடும். அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பாடகிகள் குரல் மற்றும் இசையமைப்பாளர்களில் தீயும் ஒருவர். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்போது, இசையும் படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

வருண் தவான், ஜாக்கி ஷெராஃப், வாமிகா கபி, மற்றும் இந்தியில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அட்லீ மற்றும் சினி1 ஸ்டுடியோஸுடன் இணைந்து ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும் ’பேபி ஜான்’ படத்தை, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படம் டிசம்பர் 25, 2024 அன்று வெளியாகிறது.

“மகாராஜா” படத்தினை, நவம்பர் 29, 2024 அன்று, சீனா முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது !!

Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான மஹாராஜா படத்தினை, சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை, பேஷன் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

மஹாராஜா திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடியான இசை, அற்புதமான காட்சியமைப்பு, என அனைத்து தரப்பிலும் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது. Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ், இந்திய கலாச்சார பன்முகத்தன்மையை, உலகமெங்கும் அறிமுகப்படுத்தும் வகையில், சீனா முழுதும் திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிடுகிறது. சீனா வெளியீட்டில், Home Screen Entertainment மற்றும் Nine
Knots Entertainment மிக முக்கிய பங்காற்றி, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.

அலெக்ஸி வூ, Yi Shi Films கூறியதாவது… “மகாராஜாவை சீனாவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படம் மூலம் சீனாவில் தமிழ் சினிமாவின் கலைத்திறனை, புதிய பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து, உலகின் சிறந்த சினிமாக்களை, உலகம்
முழுக்கவுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில்.. “மகாராஜா எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியான படைப்பாகவும், பெருமையின் அடையாளமாக மாறியது. சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை, பல்வேறு பின்னணியில் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும்படியான படங்களை, உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். மகாராஜா பெரும் அன்பையும், வரவேற்பையும் பெற்றது. தற்போது இப்படம் சீனாவில் உள்ள ரசிகர்களைக் கவரும் வகையில், நவம்பர் 29 ஆம் தேதி வெளியாவது மகிழ்ச்சி. மகாராஜா படத்தினை சீனாவில் மிகப்பெரிய அளவில் வெளிடுயிடும் Yi Shi Films மற்றும் Alibaba Pictures நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்றி. உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்களுடன் இப்படம் சீனா ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். சீன ரசிகர்களது வரவேற்பைக் காண ஆவலுடன் உள்ளோம். இந்த நேரத்தில் இப்படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கிய விஜய் சேதுபதி, இயக்குநர் நித்திலன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.

ஹோம் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் அனிஷ் வாத்வா, கூறியதாவது.. “சீனாவில் உள்ள திரையரங்குகளுக்கு மகாராஜாவைக் கொண்டு வருவதில் மகிழ்ச்சி. தமிழ் சினிமாவின் துடிப்பான மற்றும் தனித்துவமான உலகத்தை புதிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. உலகளவில் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை, Yi Shi Films மற்றும் Alibaba Pictures உடன் இணைந்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

மகாராஜா திரைப்படம் நவம்பர் 29, 2024 அன்று சீனா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. திரைப்பட ஆர்வலர்கள் உள்ளூர் ரசிகர்களைக் கவரும் வகையில், சிறப்பு விளம்பரங்கள் மற்றும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் !

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் நடத்திய இரத்த தான முகாமில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய் !

கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2024 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார்.

அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாமில் கலந்து கொண்டார். அங்கு ரசிகர்களுடன் இணைந்து தானும் இரத்த தானம் செய்தார்.

அதன்பின் நடிகர் அருண் விஜய் கூறியதாவது,
அனைவருக்கும் வணக்கம் , என்னுடைய பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் என் ரசிகர்கள் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவர்களோடு நானும் இணைந்து செய்வதில் மிகவும் சந்தோஷம், இதை பார்த்து மற்ற அனைவரும் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும் அதற்கான விழிப்புணர்வு தான் இது. இந்த முகாமை சிறப்பாக நடத்திய என் ரசிகர்களுக்கு நன்றி.

நடிகர் அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில், இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் நவம்பர் 29 ‘பாராசூட்’

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘பாராசூட்’ டிரெய்லரை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த சீரிஸ், இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமாகும் என்றும் அறிவித்துள்ளது.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான பாராசூட் சீரிஸ், இரண்டு இளம் சிறார்களின் உலகை பற்றியதாக உருவாகியுள்ளது. குழந்தைகளின் மீது பெரும் அன்பை வைத்திருக்கும் பெற்றோர்கள், அவர்கள் நன்றாக வளர வேண்டுமென அவர்கள் மீது கண்டிப்பு காட்டுகிறார்கள். இரு சிறுவர்களும் பெற்றோருக்கு தெரியாமல், பாராசூட் எனும் மொபட் பைக்கை எடுத்துக்கொண்டு பயணம் செல்கிறார்கள். அப்போது என்ன நடக்கிறது என்பதுதான் ‘பாராசூட்’.

இயக்குநர் ராசு ரஞ்சித் இயக்கியுள்ள இந்த சீரிஸில், தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் கிஷோர் குழந்தைகளின் தந்தையாகவும், பிரபல நடிகை ‘குக்கு வித் கோமாளி’ புகழ் கனி குழந்தைகளுக்கு அம்மாவாகவும், நடிகர் கிருஷ்ணா குலசேகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணா குலசேகரன் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதோடு, இந்தத் சீரிஸின் தயாரிப்பையும் கையாண்டுள்ளார்.

இந்த சீரிஸில் நடிகர்கள் காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன் மற்றும் பாவா செல்லதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஶ்ரீதர் K எழுதியுள்ள ‘பாராசூட்’ சீரிஸிற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த சீரிஸிற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவும், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பும் செய்துள்ளார்கள். இந்த சீரிஸிற்கு கலை இயக்கம் ரெமியன், ஸ்டண்ட் மற்றும் உடைகளை டேஞ்சர் மணி மற்றும் ஸ்வப்னா ரெட்டி ஆகியோர் செய்துள்ளனர்.

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’.

இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம் முருகன்.

‘லாரா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது,

“எனது நண்பர் மூலம் இந்தப் படத்தின் இயக்குநர் அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் தயாரிப்பாளரை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தானே உருவாக்கிக் கொண்ட பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி “
என்றார் .

படத்தில் நடித்திருக்கும் நடிகர் மேத்யூ வர்கீஸ் பேசும்போது,

“முதலில் என்னைத் தயாரிப்பாளர் தான் சந்தித்தார். வழக்கம் போல யூனிபார்ம் போடும் பாத்திரங்கள் தருவார்களோ என்று எனக்கு ஒரு தயக்கம்.இதைப் பற்றிக் கேட்டபோது இதில் அப்படி இல்லை நீங்கள் கதாநாயகனுக்கு அப்பாவாக நடிக்கிறீர்கள் என்றார். அப்போதே நான் சம்மதித்தேன் .முதல் படம் தயாரிக்கும் அவரது தைரியமும் தெளிவும் பெரிய விஷயமாக இருந்தது. படம் எடுப்பது பெரிய விஷயம். செலவுகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் அதைச் சரியாகச் செய்து முடிப்பது அதைவிட பெரிய விஷயம். படப்பிடிப்பில் நமது சௌகரியங்களைப் பார்த்து நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகி, தயாரிப்பு உதவியாளர், தயாரிப்பாளர் என்று எல்லா மும் அவராகவே இருந்தார். இந்தப் படத்திற்காக அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார்கள். அதற்குப் பலனாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

இசையமைப்பாளர் ரகு ஸ்ரவன் குமார் பேசும்போது,

“இது எனக்கு மூன்றாவது படம். நான்கு பாடல்கள் இந்தப் படத்தில் உள்ளன . நாலைந்து நாட்களில் பின்னணி இசை சேர்ப்புப்பணியை முடித்து விட்டேன் .அந்த அளவிற்கு எனக்கு ஆர்வம் ஏற்படுத்திய படம் “என்றார்.

தயாரிப்பாளர்,நடிகர் கார்த்திகேசன் பேசும்போது,

“நான் ஒரு சிக்கலான மனிதன். என்னைச் சகித்துக் கொண்டு படம் எடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதை இந்த இயக்குநர் செய்து முடித்திருக்கிறார். கோடம்பாக்கத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு நான்சினிமா வாய்ப்புக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு அலைந்து திரிந்து வாய்ப்பு கேட்டு,ஒரு கட்டத்தில் மனம் வருந்தி கோயம்புத்தூருக்குச் சென்று விட்டேன். போன இடத்தில் என்னை வளர்த்துக்கொண்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். நமக்கு கனவுகள் இருக்கலாம், கற்பனை இருக்கலாம் .அதனை செயல்படுத்துவது முக்கியம். என்னைப் பொறுத்தவரை பணம் சம்பாதிப்பதை விட நான் நண்பர்களை அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். தனிமரம் தோப்பாகாது என்பது போல் பல பேர் சேர்ந்து உழைத்ததால் தான் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. நான் ஆண்டுக்கு ஒரு படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறேன்.
நான் மனிதர்களைச் சம்பாதித்ததால் தான் உள்ளூரில் 500 ரூபாய் கடன் கொடுக்கத் தயங்குகிற இந்த உலகத்தில் எனக்கு 5 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு நண்பர்கள் ஆதரவு இருக்கிறது “என்றார்.

படத்தின் நாயகி அனுஸ்ரேயா ராஜன் பேசும்போது ,

“நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தமிழ் சினிமாவில் நான் அறிமுகமாக ஆகியிருக்கிறேன் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .படத்தின் வெளியீட்டுத் தேதிக்காக நான் காத்திருக்கிறேன்.எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி” என்றார் .

கதாநாயகன் அசோக் குமார் பேசும்போது,

” நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதங்களுடன் இந்தப் பட விழா இங்கே தொடங்கி இருக்கிறது. இன்று என்னுடன் இருக்கும் இந்தப் பெரியவர்களின் ஆசீர்வாதம் பெரிய பலமாக எனக்குப் பக்க பலமாக இருக்கிறது.லாரா படத்தின் வாய்ப்பு ஆல்பர்ட் என்கிற நண்பர் மூலம் இயக்குநர் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் இந்தப் பட வாய்ப்பு வந்தது. என்னிடம் வருபவர்கள் ஒரு லோ பட்ஜெட் படம் இருக்கிறது என்றுதான் ஆரம்பிப்பார்கள். அப்படி ஆரம்பிப்பதை எல்லாம் நம்ப முடியாது . ஏனென்றால் கதைக்கேற்ற செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டி இருக்கிறது. அப்படி இந்தப் படத்தில் தயாரிப்பாளர் அமைந்தார். கதைக்கேற்ற செலவுகளை முழுமையாகப் பூர்த்தி செய்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது .அழுத்தமான படைப்பில் நான் இருப்பதற்காக மகிழ்ச்சி செய்கிறேன். இது ஒரு இன்வெஸ்டிகேஷன் கிரைம் த்ரில்லர் .இதில் நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள் .ஆனால் அனுபவசாலிகள் போல் நடித்திருக்கிறார்கள். பிரபலமானவர்கள் நடித்திருந்தால் இந்த அளவுக்கு வந்திருக்குமா என்று தெரியாது ,அந்த அளவிற்கு நடித்திருக்கிறார்கள். அதில் ஒரு புதுமை தெரிகிறது.

என்னைப் பற்றி இவன் நன்றாக ஆடுகிறான்,நன்றாக நடிக்கிறான்,நன்றாக ஃபைட் செய்கிறான் இவனுக்கு ஒரு நல்ல ஒரு எதிர்காலம் வர வேண்டும் என்று பார்க்கிறவர்கள் சொல்வார்கள். இந்தப் படம் நன்றாக வர வேண்டும். ஒரு நல்ல கதையை வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.கதாநாயகனை வைத்து அல்ல. கதையை மட்டுமே நம்பி வந்திருக்கிறார்கள் .
அப்படித் தயாரிப்பாளரின் ஒரு கதையைத் தத்தெடுத்து இயக்குநர் லாராவை உருவாக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டிலை சத்யராஜ் சார் பெரிய மனதுடன் வெளியிட்டார். அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி சார் அறிமுகம் செய்தார் .அந்த நல்ல மனிதர்களுக்கு இப்போது என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அப்போதுதான் மேலும் நல்ல படங்கள் உருவாகும். அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் “என்றார்.

இயக்குநர் மணி மூர்த்தி பேசும்போது,

“இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப்பாளரும் முன்பாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நன்றாகத் திட்டமிட்டும் அதன்படி எடுத்தோம் .எப்போதுமே எங்குமே தேங்கி நிற்கவில்லை. கதை எழுதியது அவர் என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் முழுமையான படைப்பு சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர்,இசையமைப்பாளர் என்று நாங்கள் எல்லாம் வா டா போடா என்று பேசிக்கொள்கிற அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். அப்படி இந்தப் படத்தில் நடித்த நடிகர்களும் நண்பர்களாக மாறி ஒரு நட்புக் கூட்டணியாக உருவாகி இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம். அனைவரும் கடுமையான உழைப்பைப் போட்டாலும் அதை மகிழ்ச்சியாகக் கொடுத்தார்கள்.அதனால்தான் குறுகிய காலத்தில் நிறைய வேலை செய்ய முடிந்தது . அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது .சினிமாவில் எத்தனை படங்கள் வருகின்றன, எத்தனை படங்கள் தயாரிப்பாளரைக் கரை சேர்க்கின்றன என்று சொல்ல முடியாது. ஆனால் எது பற்றியும் கவலை இல்லாமல் என்னை நம்பி இந்தப் படத்தை ஒப்படைத்தார். நான் சரியாக வேலை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.படப்பிடிப்பு இடங்களில் பெரிய வசதிகளை எதிர்பார்க்காமல், அடிப்படை வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.அவர்களுக்கு நன்றி”சென்றார் .

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் .கே ராஜன் ,பேசும்போது

” இந்தத் தயாரிப்பாளரை நான் மனமார வரவேற்கிறேன். சென்னையில் வந்து கஷ்டப்பட்டு பசியால் வாடி, முடியாமல் கோயம்புத்தூர் சென்று அங்கு முன்னேறி சம்பாதித்து வெற்றி பெற்றிருக்கிறார் .இவர் நட்பு வட்டத்தைப் பெரிதாகச் சம்பாதித்துள்ளார் .நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும். இந்த படம் வெற்றி பெறாவிட்டால் கூட இந்தத் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.ஏனென்றால் இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்குத் தேவை.

லாரா படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருந்தது. இஸ்லாமிய திருமணம் சார்ந்து ஒரு பாடல் வருகிறது. எம்மதமும் சம்மதம் என்பதுதான் நமது கொள்கை. எல்லா மதங்களும் நல்லவற்றையே சொல்கின்றன.

குறுகிய நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள். ஒரு திரைப்படத்திற்குக் கதை தான் முக்கியம். ஹீரோவுக்கு கொட்டிக் கொடுத்தால் .அவர்கள் நன்றாக இருப்பார்கள், தயாரிப்பாளர்கள்தான் நடுத்தெருவுக்கு வருவார்கள் இன்று இருநூறு தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள். முன்னூறு நானூறு படங்கள் வெளியிட முடியாமல் இருக்கின்றன .

இது சின்ன படங்களின் காலம். இன்று சின்ன படங்கள் ஓடுகின்றன. இந்த ஆண்டு நல்ல கதை உள்ள சின்ன படங்கள் எல்லாம் ஓடி இருக்கின்றன. பல கோடிகளில் எடுக்கப்படுவது எல்லாம் ஓடுவதில்லை. சின்ன படம் வாழை, லப்பர் பந்து போன்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

படத்துக்கு விமர்சனம் தேவைதான். நல்லது நன்றாக இருந்தால் நல்லதாக எழுதுங்கள் .குறை இருந்தால் குறைவாக எழுதுங்கள். சின்ன படங்களைக் காப்பாற்றுங்கள்.

ஒரு கதாநாயகன் நடிகர் ஒன்பது பேரிடம் பல கோடிகள் முன்பணம் வாங்கி இருக்கிறார். அதும் போதாது என்று இன்றைக்கு இந்திக்கு நடிக்கச் சென்று விட்டார். இப்படி இருக்கிறது நிலைமை.

இந்தப் படத்திற்கு மூன்று கதாநாயகிகளும் படத்தை விளம்பரப்படுத்தும் இந்த பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள்.மகிழ்ச்சி. இப்போது எல்லாம் நடித்த நடிகைகளே அவர்கள் படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை .அதற்குத் தனியாகப் பணம் தர வேண்டும் என்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்து நல்லதை எழுதுங்கள், உள்ளதை எழுதுங்கள், குறைகளை குறைத்து எழுதுங்கள்” என்றார்.

இயக்குநர் ஆர் அரவிந்தராஜ் பேசும்போது,

” திரைப்படமே ஒரு கூட்டு முயற்சி தான். இங்கே ஒரு வேடிக்கையான அனுபவத்தைக் கண்டேன். தயாரிப்பாளர் என்னைச் சகித்துக் கொண்டிருப்பது சிரமம் என்றார். ஆனால் இயக்குநரோ தயாரிப்பாளரின் நல்ல குணங்களை எடுத்துக் கூறினார். நாங்கள் தாய்நாடு படம் எடுத்த போது சத்யராஜ் சார் நடித்தார். அப்படி அவர் நடித்த போது நாங்கள் படக்குழுவினர் பழகுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்,பாராட்டினார். ஏனென்றால் நான் கேமரா மேன் எல்லாம் வாடா போடா என்று பேசிக் கொண்டிருப்போம்.இது சரியாக வரும், வராது என்று எங்களுக்குள் கருத்து மோதல் வரும். இருந்தாலும் அப்படி ஒரு நட்பாக இருந்தோம்.
அதேபோல் இந்தப் படத்தின் குழுவினரைப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் அசோக்குமார் அடைய வேண்டிய உயரத்தை இன்னமும் அடையவில்லை. அடைய வேண்டிய வெற்றியை அடையவில்லை. அவர் நடித்த இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும். ஒரு ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டு, சாப்பாடு சரி இல்லை என்றால் கூட வாசலில் நின்று அந்த இந்த ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்று கூற முடியாது.விடமாட்டார்கள். ஆனால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கு வாசலில் நின்று கொண்டு இந்தப் படம் நல்லா இல்லை போகாதீர்கள் என்று சொல்கிற நிலை இப்போது உள்ளது. சினிமாவுக்கு மட்டும் தான் இந்த அவல நிலை இருக்கிறது. இது ஏன் ?ஒரு படத்திற்குப் பலரும் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். அது அவர்களுக்கு புரிவதில்லை ” என்றார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் ஆர். வி உதயகுமார் பேசும்போது,

“ஒரு நல்ல படத்திற்குக் கதை வேண்டும், நல்ல கதை வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது தேவையில்லை என்பேன். ஏனென்றால் ஒரு மொக்கை கதையை வைத்துக் கொண்டு நான் சிங்காரவேலன் படத்தை எடுத்தேன். கலைஞானி கமல்ஹாசனை வைத்துக்கொண்டு இப்படிக் கதை இல்லாமல் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்? எவ்வளவு லொள்ளு வேண்டும்?
சின்ன வயதில் ஜட்டி பனியனோடு காணாமல் போன ஒரு சின்னப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கின்ற கதாநாயகன் என்பது தான் கதை . இதைச் சொன்னால் இப்போது ஒப்புக் கொள்வார்களா? அப்படி எடுத்த படம் தான் அது. கதைக்கான காட்சிகள் எல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை.போகிற போக்கில் போகிற வழியில் எழுதியவை தான். இந்தப் படத்தின் விளம்பரத்தின் போது நான் மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வாருங்கள் என்று விளம்பரம் செய்தேன் .அப்படி ஒரு நம்ப முடியாத கதை அது. பொள்ளாச்சியில் இருந்து ஒருவன் கருவாடு எடுத்துகொண்டு சென்னைக்கு வருவான். சென்னையில் கிடைக்காத கருவாடா என்று அப்போது யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது அந்த கேள்வி எழாத அளவிற்கு அப்போது ரசிகர்கள் இருந்தார்கள்.

என்னிடம் வாய்ப்பு கேட்டு பலரும் வருவார்கள் .எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது ஏதோ சிலருக்குக் கொடுப்பதுண்டு. இதனால் சிலர் பிறகு கோபித்துக் கொள்வதுண்டு.அவர்களை
எனக்கே தெரியாது மறந்து இருப்பேன் .

ஒரு படத்தில் சிலருக்கு மட்டுமே கொடுக்க முடியும் . பலருக்குக் கொடுக்க முடியாத நிலை இருக்கும். அப்படி என்னிடம் வாய்ப்பு கேட்டு ஒருவர் வந்திருக்கிறார்.என்னால் முடியவில்லை.அவர் ஒரு நாள் என்னை நேரில் சந்தித்தபோது நான் வாய்ப்பு கேட்டு வந்தேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள்,நான் சினிமாவை விட்டே போய்விட்டேன் என்று கூறினார். அப்போது அவரைச் சந்தித்தபோது அவர் 15 கல்லூரிகளுக்கு முதலாளியாக இருந்தார். நல்ல வேளை அவருக்கு நான் வாய்ப்பு தரவில்லை என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் படத்திற்காக ஒரு குடும்பமாக உழைத்து உள்ளார்கள். இந்தப் படம் ஓடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும்.
இவர் எங்கள் கோயமுத்தூர்காரர். இவர் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தப் படத்தை விட ஒரு கோடி குறைத்துக் கொண்டு நான் படம் எடுத்துக் கொடுக்கத் தயார்.

என்னைச் சந்திப்பவர்கள் எப்படி பீக்கில் இருந்தீர்கள் இப்போது ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்பார்கள். நானா முடியவில்லை என்கிறேன், யாரும் தருவதில்லை.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளையராஜா, ஏவிஎம் என்று எவ்வளவோ உயரத்தைப் பார்த்து விட்டேன்.உச்சியில் ஏறி விட்டால், அந்த இடம் சிறியது நீண்ட நேரம் அங்கே இருக்க முடியாது. கீழே இறங்கித்தான் வரவேண்டும் .இப்படித்தான் ஒவ்வொரு பெரிய இயக்குநரும் மேலே சென்று இறங்கியதால் தான் அடுத்தடுத்து வந்தவர்கள் மேலே ஏற முடிந்தது.

இப்போது விமர்சனங்கள் என்கிற பெயரில் நிறைய போலிகள் சுற்றுகிறார்கள். அவர்கள் உண்மையான விமர்சகர்களா ?நானும் 40 ஆண்டுகளாக கத்திரிகையாளர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை உயர்த்தி வைத்தார்கள், இன்றும் என் நண்பர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அப்படிப் புண்படுத்தும் படியோ, இழிவாகவோ ஒரு நாளும் எழுதியதில்லை.
விமர்சனம் எழுதும் போது காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

” இந்தத் தயாரிப்பாளரின் நட்பு பலத்தை இங்கே பார்க்க முடிகிறது .அவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறார்கள். உறவுகளை விட நட்பு முக்கியம் .இந்தத் தயாரிப்பாளர் சினிமாவை நேசித்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநர் தனது சொந்தக்கதையை இயக்குவதில் பிரச்சினை இல்லை. ஓர் எழுத்தாளர் எழுதிய கதையை இயக்குவதில் கூட பிரச்சினை இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கதையை இயக்குவது என்பது பிரச்சினையான ஒன்று. அதுவும் படப்பிடிப்பில் கூடவே இருந்து நடித்துக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர் என்றால் மேலும் சிரமமாக இருக்கும், பயமாக இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் நம் படைப்பு சுதந்திரம் அதில் இருக்குமா என்பது சந்தேகம். எனவே தயாரிப்பாளர் கதையை இயக்கி இருக்கும் இயக்குநருக்கு பெரிய நம்பிக்கை இருந்திருக்க வேண்டும் .இந்த சினிமாவில் மதம் கிடையாது, ஜாதி கிடையாது .வெளியில் போனால் தான் மதம் ஜாதி என்று வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.

லாரா படத்தின் கதாநாயகன் அசோக்குமார் சினிமாவின் ஒரு கஜினி முகம்மது என்று சொல்வேன். அவர் தோல்விகளைச் சந்திக்கவில்லை, வெற்றிக்கான பயணத்தில் முயற்சியில் இருக்கிறார் .நான் புதிய கதாநாயகர்களுக்குச் சொல்லிக் கொள்வேன் .ஒரு படத்தில் 25 லட்சம் சம்பளம் வாங்கினால் அடுத்த படத்தில் 50 அடுத்த அடுத்த படங்களில் என்றால் உயர்த்தி ஒரு கோடி வரை செல்லலாம். ஆனால் 25 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் அடுத்த படத்திலேயே மூன்று கோடி கேட்பார்கள் என்றால் அது அநியாயம். பேராசைப்பட வேண்டாம் படிப்படியாக உயர்த்தி வளருங்கள். அநியாயமாக உயர்த்த வேண்டாம் ” என்று கூறிப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

விழாவில் இயக்குநர்கள்
காளி ரங்கசாமி, வீராயி மக்கள் படத்தின் கதாநாயகன் சுரேஷ் நந்தா, பாடகர் முகமது ரிஸ்வான்.
கதாநாயகிகள் வெண்மதி, வர்ஷினி வெங்கட், ஒளிப்பதிவாளர்
ஆர்.ஜே.ரவீன்,கலை இயக்குநர் முருகன்,
எடிட்டர் வளர் பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

, J S K இயக்கி, நடித்த FIRE திரைப்படத்தின் பெண்களுக்கான பிரத்யேக காட்சி NFDC திரையரங்கில் திரையிடப்பட்டது.

பெண்கள் கலந்துகொண்டு இத்திரைப்படத்தை பார்த்தார்கள். முக்கியமாக ஆட்டோ ஓட்டும் பெண்களும், மற்றும் பலதுறைகளில் பணிபுரியும் பெண்களும், இத்திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ரசித்து பாராட்டினார்கள். முக்கியமாக இத்திரைப்படம் இந்த சமுதாயத்திற்கு, அதிலும் பெண்களுக்கு தேவையான கருத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறது என்று மனப்பூர்வமாக கூறினார்கள்.

அதற்கும் ஒருபடி மேலே, இத்திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பாதிப்பால், ஒரு பெண் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, இது திரைப்படம் என்பதையும் மறந்து, கதாநாயகன் பாலாஜி முருகதாசின் சட்டையைப் பிடித்து, கோபத்தின் உச்சிக்கு சென்று தாறுமாறாக பேசி தாக்குவதற்கு முற்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

படத்தை ரசித்து பாராட்டிய நடிகை ஷகிலா, அந்த பெண்ணை சமாதானப்படுத்தி, இது திரைப்படம் என்பதை நினைவூட்டியும், அந்த பெண் அடங்கவில்லை, பின்னர் படக்குழுவினர் தலையிட்டு அந்த பெண்ணின் உண்மையான உணர்வை மதித்து, பாராட்டி அனுப்பி வைத்தனர்.

திரைப்படத்தைக் கண்டு களித்த அத்தனை பெண்களும், படத்தைப்பற்றி சிலாகித்து பேசியது இந்த திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்வதாக இருந்தது. பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள் உணர்வுப்பூர்வமாக பேசியது, இத்திரைப்படத்திற்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது.

இத்திரைப்படம் புலனாய்வு கலந்த திகில் (INVESTIGATION THIRLLER) திரைப்படமாக ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற எதிர்ப்பார்ப்புடன் அமைந்திருப்பதாக அனைவரும் பாராட்டினார்கள்.

விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’

தனித்துவமான திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் விமலின் 35வது படமாக ‘பெல்லடோனா’ யூபோரியா பிலிக்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரைப்படம் உருவாகி வருகிறது.

தேஜஸ்வினி ஷர்மா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக மணிப்பூரை சேர்ந்த மேக்சினா பவ்னம் நடிக்கிறார். இதுவரை இல்லாத வகையில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, ஏசி ஜான் பீட்டர் இப்படத்திற்கு இசையமைக்கிறார், தீபக் எடிட்டிங் செய்கிறார். அனைத்து பாடல்களையும் இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமியே எழுதி இருக்கிறார் சண்டைக் காட்சிகளை டேஞ்சர் மணி கையாண்டுள்ளார்.

இயக்குநர் சந்தோஷ் பாபு முத்துசாமி கூறுகையைல், “இந்த படம் விமல் சாருக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு நன்றாக வந்துள்ளது. இந்த கதைக்கு ஏற்றார் போல் சக நடிகர்களும் அமைந்துள்ளனர். கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவரும் மிக பக்கபலமாக இருந்து உழைத்து வருகின்றனர்,” என்றார்.

யூபோரியா பிலிக்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கத்தில் உருவாகும் விமலின் 35வது திரைப்படம் ‘பெல்லடோனா’ தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மணிப்புரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாக உள்ளது.

‘பெல்லடோனா’ திரைப்படத்தின் இதர விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.