ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார்.
பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயாரித்திருப்பதோடு ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். புதுவையின் பின்னணியில் நடக்கும் கதையாக இது உருவகிக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை, போளூர் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜனனி கதாநாயகியாக நடிக்க, சிங்கம்புலி, மதுமிதா, ரமா, முனார் ரமேஷ், முருகதாஸ், வந்தனா, ஃபெரோஸ் கான், சுகன்யா, கௌசல்யா , சித்தார்த் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
சதீஷ் எஸ். இப்படத்திற்கு இசையமைப்பதோடு பாடல்களையும் எழுதியுள்ளார். தேவசூர்யா கே. ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரஞ்சித் குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் (Post-Production) தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து – இயக்கம் – தயாரிப்பு: ஏ.எஸ். ரவிச்சந்திரன்.
ஒளிப்பதிவு (DOP): தேவசூர்யா கே.
இசை (Music): சதீஷ் எஸ்.
படத்தொகுப்பு (Editor): ஜி. ரஞ்சித் குமார்.
சண்டைக் காட்சிகள் (Stunt): இடிமின்னல் இளங்கோ.
உடை வடிவமைப்பு: லட்சுமிநாராயணன்.
பாடல்வரிகள்: சதீஷ் எஸ்.
மேக்கப்: மணி.
சிஜி (CG): பிரபா.
ஒலி வடிவமைப்பு: சதீஷ் எஸ்.
ஸ்டில்ஸ் & பப்ளிசிட்டி டிசைன்: வேலு
தயாரிப்பு நிறுவனம்: ஏ.எஸ்.ஆர். பிலிம்ஸ் (ASR FILMS)
நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” – சாய் அபயங்கர் உருவாக்கத்தில், கலாச்சாரமும் நவீன இசையும் கலந்த இசை அனுபவம்!!
நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசைமைத்துள்ளார்.
இந்த பாடலின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்துள்ளது ஸ்ருதிஹாசனின் குரல். அவரது குரல் பாடலுக்கு ஒரு தனித்துவமான கவர்ச்சியையும் ஆழமான உணர்ச்சியையும் அளிக்கிறது. மணமகன்–மணமகள் இடையே நடைபெறும் சுவாரஸ்யமான ஊடலை மையமாகக் கொண்டு, கேள்வி–பதில் பாணியில் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மணமகளின் பதில்கள் ஸ்ருதிஹாசனின் குரலில் இனிமையாக ஒலித்து பாடலுக்கு மேலும் உயிரூட்டுகின்றன.
காதல் வளர வளர, இந்தப் பாடலின் இசையும் பல உணர்வுகளைக் கடக்கிறது. இடையில் ஒரு மயக்க நிலைக்குச் சென்றுவிட்டு, பிறகு கலாச்சாரம் நிறைந்த ஒரு வலிமையான இசைப் பகுதிக்குத் திரும்புகிறது. இந்த இசை மாற்றங்களை ஸ்ருதிஹாசனின் குரல் மேலும் அழகாக இணைக்கிறது.
பாடலின் கவிதைத் தன்மையை உயர்த்தும் வரிகளை கவிஞர் விவேக் எழுதியுள்ளார். அவரது வரிகள் கொண்டாட்டத்தின் உணர்வை நுட்பமாகவும் கவிதை நயத்துடனும் வெளிப்படுத்துகின்றன.
மொத்தத்தில், ஸ்ருதிஹாசன் குரலில் ஒலிக்கும் “பவழ மல்லி” பாடல் பாரம்பரியமும் நவீன இசை முயற்சிகளும் இணையும், கலாச்சார மணம் மிக்க வித்தியாசமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகும்
ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமான ரொமான்டிக் காமெடி திரைப்படமான ‘பூக்கி’படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது. இந்தப் படம் மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் ஆகும்.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கீழ் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் அஜய் திஷான் மற்றும் R.K. தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை மற்றும் எடிட்டிங்கை விஜய் ஆண்டனி மேற்கொண்டுள்ளார்.
‘பூக்கி’ திரைப்படம், பிரிவை விரும்பும் நிலையில் இருந்தும் ஒருவரை ஒருவர் இன்னும் நேசித்து கொண்டிருப்பதை உணர்ந்து, குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் ஒரு காதல் ஜோடியின், நகைச்சுவையுடன் கூடிய உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது. நவீன உறவுகளின் குழப்பம், பாசம் மற்றும் முரண்பாடுகளை இந்தப் படம் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.
படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் எடிட்டரான விஜய் ஆண்டனி கூறுகையில், “‘பூக்கி’ வெளிப்படையாக ஒரு எளிய கதையாக தோன்றினாலும், இன்றைய உறவுகளில் உள்ள உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இயக்குநர் கணேஷ் சந்திரா இந்த படத்திற்கு புதிய உற்சாகத்தையும் உண்மையான உணர்வுகளையும் கொண்டு வந்துள்ளார். நகைச்சுவையும் உணர்ச்சியும் ஒன்றாக கலந்து, அனைவரும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இந்த படம் உருவாகியுள்ளது” என்றார்.
நடிகை லட்சுமி மஞ்சு கூறுகையில், “‘பூக்கி’ படத்தில் ஒரு அழகான எளிமை இருக்கிறது. காதல் ஜோடிகள் அனுபவிக்கும் சங்கடம், மென்மை மற்றும் எதிர்பாராத தருணங்களை இந்த படம் அழகாக பதிவு செய்கிறது. இந்த படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் ZEE5 பார்வையாளர்கள் இந்த படத்தின் உணர்வுகளை நிச்சயம் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
‘பூக்கி’ திரைப்படத்தை மார்ச் 13 முதல் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் காண தவறாதீர்கள்!
Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது !!
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K., கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. பணியாற்றுகின்றனர். இணை தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இயற்கை அழகும், நகர வாழ்க்கையின் நிஜங்களும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமூகப் பொறுப்புணர்வும், விறுவிறுப்பும் இணையும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’ தமிழ் காமெடி-டிராமா தொடர் உலகளாவிய வெளியீடு — கலகலப்பான டிரெய்லருடன் அறிவிப்பு
ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 13 அன்று வெளியாகும் ‘லோக்கல் டைம்ஸ்’, பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார், அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே,தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது தமிழ் ஒரிஜினல் காமெடி-டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை மார்ச் 13 அன்று அறிவித்துள்ளது. சிரிக்க வைக்கும் அதே சமயம் மனதை தொடும் டிரெய்லருடன் வெளியிடப்பட்ட இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழைப் பின்னணியாகக் கொண்டது. Anekdotes உருவாக்கிய இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார்; Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார். ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரவீன் முத்துரங்கன் எழுதிய இந்த சீரிஸை அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி. இணைந்து உருவாக்கியுள்ளனர். ‘லோக்கல் டைம்ஸ்’ மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன், பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக வெளியாகிறது.
ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான, ஒரு காலத்தில் பெருமை பெற்ற பிராந்திய பத்திரிகையான ‘நம்ம செய்தி’ பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் போராடுகின்றனர். இந்த நால்வரின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்தத் துடிக்கும் ஒரு பலமான எதிரி ஆகியவற்றைச் சுற்றி இத்தொடரின் கதை நகர்கிறது.பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்.., “லோக்கல் டைம்ஸ் என்பது உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
தயாரிப்பாளர் ஜித்தின் துரை கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்..,
“ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.
இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள். அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ் இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”
இந்த சீரிஸ் மார்ச் 13 முதல் இந்தியா மற்றும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திய பிரதேசங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகும்.
புதுமையான கதைக்களத்தில், கொண்டாட்டமான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டைட்டில் டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நகர வாழ்க்கையில் கடனில் போராடும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு ஆரம்பிக்கும் டைட்டில் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் தரும் காட்சிகளால் அதிர வைக்கிறது. அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின், பட்டன் தட்டினால் கொட்டும் பணம் என கண்கள் விரிய ஒரு புதுமையான கதைக்களத்திற்குள் நம்மை இழுத்து செல்கிறது. உணர்வுப்பூர்வமாக ஆரம்பிக்கும் இந்த டைட்டில் டீசர் காமெடி டிராக்கில் மாறி, வெகு சுவாரஸ்யமாக நிறைவு பெறுகிறது.
இந்த படத்தில் முன்னணி இளம் நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாளத்தின் பிரபல நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகி பாபு, மூத்த நடிகை வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் (Power House Pictures) தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். படப்பிடிப்பு மங்களூர், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் நகர வாழ்க்கையின் நிஜங்களை இணைத்து உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டைட்டில் டீசர் , இந்த படம் ஒரு முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் ஆக இருக்கும் எனும் நம்பிக்கையை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.
தொழில்நுட்ப குழு
இயக்கம்: ஹரிஷ் துரைராஜ் தயாரிப்பு: Power House Pictures ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன் எடிட்டிங்: அருள் மோசஸ் இசை: ஷான் ரோல்டன் கலை இயக்கம்: ராஜ் கமல் உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார் ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ் மக்கள் தொடர்பு: யுவராஜ்
ஒரு விபத்தில் தனது பெற்றோர்களை பறிகொடுத்த பாவனாவும் அவரது தம்பியும் தனிமையில் வசிக்கிறார்கள் பாவனா ஒரு தடவியில் நிபுணராக வேலை செய்கிறார் ஆனாலும் அவரது தம்பி தனது பெற்றோரின் மரணத்திலிருந்து வெளியில் வர முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு அதற்கானஉலகில் சிகிச்சையில் இருக்கிறார் இந்த நிலையில் அந்தப் பகுதியில் விசித்திரமான முறையில் பல தற்கொலைகள் நடக்கின்றன, அந்த தற்கொலைகளை தடவியல் நிபுணரான பாவனா அங்கு இருக்கும் நிகழ்வுகளை பார்வையிடுகிறார். அதே நேரத்தில் பாவனாவின் தம்பியும் அதே முறையில் தற்கொலை செய்து கொள்ள அதை விசாரிக்க இறங்குகிறார் பாவனா, அதே நேரத்தில் மற்றொரு பக்கம் காவல்துறை அதிகாரியாக ரகுமான் அவருக்கு காவல்துறையில் ஏதோ ஒரு மன உளைச்சலில் இருந்து சரிவர வேலை செய்யாமல் இருக்கிறார்.இந்த நிலையில் அவரது உயர் அதிகாரிகள் கூப்பிட்டு அவருக்கு நேர கெடு வைத்து இதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள்.
அதே நேரத்தில் பாவனா தனது தம்பியின் மரணத்தில் சந்தேகப்பட்டு நீதிமன்றத்தில் பல தடயங்களை சமர்ப்பித்து எனது தம்பி தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை தான் செய்து கொண்டிருக்கிறார் என அது குறித்து விசாரிக்க வேண்டி மனு தாக்கல் செய்கிறார். கோர்ட்டும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறது, இந்த நிலையில் ரகுமானும் பாவனாவும் இணைந்து நடந்த அத்தனை தற்கொலைகளும் தற்கொலை அல்ல கொலை தான் என்பதை எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறார்கள் என்பதை இந்த அனோமி படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தின் மிகப்பெரிய வளமை திரைக்கதை தான் அந்த சைக்கோ கொலைகாரன் ஏன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்கிறான் அதற்குப் பின்னணி என்ன என்பதை சொல்ல வரும்போது நமக்கே சற்று பயமாக தான் இருக்கிறது ஆனாலும் அந்த விஷயத்தை திரைக்கதையில் இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் திரைக்கதை ஒரு முழுமையான ட்ரெயின் திரில்லராக இருந்திருக்கும் அந்த விஷயத்தில் இயக்குனர் சற்று தொய்வடைந்து இருக்கிறார்
படத்தில் பாவனாவின் நடிப்பு அளவாக இருக்கிறது ரகுமானின் நடிப்பை வீணடித்திருக்கிறார்கள் மற்றும் பாவனாவின் தம்பி கொலைகாரர்கள் என அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்கள் இந்த மாதிரியான கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு இசையமை மிகவும் பலமாக இருக்கும் ஆனால் இது அதுவும் சற்றே தொலைவாக தான் இருக்கிறது மேற்கண்ட பல விஷயங்களை இயக்குனர் சிறப்பாக கவனித்து இருந்தால் அனோமி ஒரு உணர்வுபூர்வமான க்ரைம் திரிலராக வந்திருக்கும்
‘லீடர்’ டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி
லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘லீடர்’ வெளியாகிறது.
ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடக தளங்களில் பலத்த பாராட்டுகளை குவித்துள்ளன. படத்தின் மீதான எதிர்பார்ப்பை டீசர் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார், “அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. ‘லீடர்’ அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்,” என்றார்.
இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடிக்கிறார், ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் வைபோதாவின் இதயம் தொடும் இசை, ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷின் அற்புதமான கேமரா கோணங்கள், பிரதீப் இ. ராகவின் விறுவிறு படத்தொகுப்பு மற்றும் மகேஷ் மேத்யூவின் பரபரப்பான சண்டை காட்சிகளுடன், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக, ‘லீடர்’ இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட ‘லீடர்’ ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இணையத்தை கலக்கும் அசத்தலான இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !!
நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் #சூர்யா46 தற்போது அதிகாரப்பூர்வமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. பெயரே சொல்வது போல், இப்படம் ஒரு அழகான, உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் சூர்யா ஒரு குழந்தையுடன் தோன்றும் காட்சி, ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை எழுப்பும் வகையில் நெகிழ்ச்சியும், நம்பிக்கையும் கலந்த இனிய உணர்வை தருகிறது.
முன்னதாக ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் வெம்கி அட்லூரி (Venky Atluri) இந்தப் படத்தை இயக்குகிறார். உணர்வுப்பூர்வமான கதை சொல்லலில் வல்லவரான இவர், இந்தப் படத்திலும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான திரை அனுபவமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கான இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்கிறார். எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை பங்களான் மேற்கொள்கிறார்.
தயாரிப்பாளராக சூர்யதேவர நாக வம்ஷீ, சாயி சௌஜன்யா இணைந்து இந்தப் படத்தை உருவாக்குகின்றனர். சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas ) நிறுவனங்களின் தயாரிப்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இப்படம், தமிழ்நாட்டில் திங்க் ஸ்டுடியோஸ் ( Think Studios) மூலம் வெளியிடப்படுகிறது.
குடும்ப உணர்வுகளும், நெகிழ்ச்சியும், வெகுஜன அம்சங்களும் கலந்த ஒரு பிரம்மாண்ட குடும்பக் கதை – ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை ஜூலை மாதம் திரையரங்குகளில் கொண்டாடலாம் !
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம், கேஜிஎஃப் சாப்டர் 1 (KGF Chapter 1), கேஜிஎஃப் சாப்டர் 2 (KGF Chapter 2), காந்தாரா (Kantara), காந்தாரா: சாப்டர் 1 (Kantara Chapter 1), சலார் (Salaar) மற்றும் மஹாவதார் நரசிம்மா Mahavatar Narasimha போன்ற மைல்கல் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது.
இப்போது, இந்நிறுவனம் தனது வளர்ச்சிப் பயணத்தில் புதிய முக்கியமான படியாக வெளிநாட்டு (Overseas) விநியோகத் துறையில் அதிகாரப்பூர்வமாக களமிறங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த விரிவாக்கம், இந்திய சினிமாவை உலகளாவிய ரசிகர்களிடம் கொண்டு செல்லும் தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல மொழிகளையும், பல்வேறு கலாச்சாரங்களையும் தாண்டி ஒலிக்கும் திரைப்படங்களை உருவாக்கிய அனுபவத்துடன், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இப்போது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தெளிவான நோக்கத்துடன் சர்வதேச விநியோக வலையமைப்பை உருவாக்க முனைகிறது.
குறிப்பாக, இந்த முயற்சி ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களுக்குள் மட்டுமே அடங்கிவிடாது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, பல்வகை இந்தியக் கதைகளை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் இலக்காகும்.
வெளிநாட்டு விநியோகத் துறையில் கால் பதிப்பதன் மூலம், இந்திய சினிமாவின் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தும் தனது உறுதிப்பாட்டை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் மேலும் வலுப்படுத்துகிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்திய சினிமாவை இன்னும் நெருக்கமாக கொண்டு செல்லும் புதிய அத்தியாயம் இதுவாகும்